திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மறையாய நால்வேதத்
துள்நின்ற மலர்ச்சுடரே!
முறையால்இவ் வுலகுஎல்லாம்
படைத்துஇடந்துஉண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறைஏறு சடையானும்
நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்துஏத்த
வீற்றிருத்தல் இதுவியப்பே!

பொ-ரை : ‘மறையாயிருக்கின்ற நான்கு வேதங்கட்கு உட்பொருளாய் நின்ற பரந்த ஒளியுருவனே! அவ்வக்காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் உண்டாக்கி, பிரளயத்தில் புக்கு இடந்து எடுத்து, பின்னர் மஹாபிரளயத்தில் புசித்து, பிரளயம் நீங்கிய பின்னர் வெளியில் உமிழ்ந்து, திருவடிகளால் அளந்தவனே! பிறைச்சந்திரனைத் தரித்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் ஆகிய இவர்கள், நீ தலைவனாக இருத்தலையறிந்து ஏத்தும்படி வேறொருவர்க்கு இல்லாத பெருமையோடு எழுந்தருளியிருத்தலாகிய இது ஆச்சரியமோ!’ என்கிறார். ‘இன்று’ என்றபடி.

    வி-கு : மறை – தன் பொருளை மறைத்து வைத்திருப்பது. வேதம் – தன் பொருளையறிவிப்பது. வீற்றிருத்தல் – வேறு ஒருவர்க்கில்லாத பெருமையோடு எழுந்தருளியிருத்தல்.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1வேதங்களாலே அறியக்கூடியவனாய்ச் சர்வேசுவரனாயிருக்கிற உனக்கு, உன்னாலே படைக்கப் பட்டவர்களாய் உன்னாலே ஞானத்தைப் பெற்றவர்களாயுள்ள பிரமன் முதலான தேவர்கள், ‘ஈசுவரன்’ என்று அறிந்து ஏத்த இருக்குமது ஆச்சரியமோ!’ என்கிறார்.

    மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே – வேதங்களிலே எல்லாரைக்காட்டிலும் அதிகனாகவும் நிரதிசய போக்கியனாகவும் பிரகாசிக்கின்றவனே! புறம்பானவர்களாய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலே, ‘மறை’ என்றும், ‘ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் பொருளை வெளியிட்டுக் காட்டுகையாலே ‘வேதம்’ என்றும் இரண்டு படியாகச் சொல்லப்படுதலின் ‘மறையாய நால்வேதம்’ என்கிறார்: முற்பகுதி – ஆராதன சொரூபத்தைச் சொல்லுகிறதாய், பிற்பகுதி – ஆராதிக்கப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைச் சொல்லுகிறதாய், 2’பூர்வபாகம் என்றும், உத்தரபாகம் என்றும் பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுபவன்,’ என்கிறபடியே, எல்லா வேதங்களும் தன்னையே சொல்லும்படி இருக்கையாலே உண்டான புகரையுடை

யவனாதலின் ‘உள் நின்ற மலர்ச்சுடரே’ என்கிறார். 1பகவானே! வேதங்களானவை முதலிலே வேறொரு பிரமாணத்தை விரும்பாமலே தாமாகவே பிரமாணங்கள் ஆகின்றன; மநு முதலான ஸ்மிருதிகளானவை இதிகாசங்களோடு கூடிய புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சைகளோடும் கூடி அந்த வேதங்கட்குப் பொருள் விவரணம் செய்வதில் உதவியாய் இருக்கின்றன; வேதங்களில் முற்பகுதியானது தேவரீருடைய திருவாராதன முறைமையைச் சொல்லும் வகையில் முடிகின்றது; பிற்பகுதியோ என்னில், தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது; ‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் நானே!’ என்று தேவரீர் அருளிச்செய்ததுமுளது,’ என்றார் பட்டர்.

    முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – கரண களேபரங்கள் அற்றனவாய்ப் போக மோக்ஷங்களில்லாதனவாய்க் கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி, படைத்த உலகத்தைப் பிரளயங்கொள்ள மஹா வராகமாய் இடந்து, மீண்டு பிரளயம் வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி, பின்னர் வெளிநாடு காண உமிழ்ந்து, மஹாபலி போல்வார் பருந்து 2இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு, இப்படி எல்லா விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘முறையால்’ என்றதற்குப் பொருள், ‘உடையவன் உடைமை என்ற சம்பந்தத்தால்’ என்னுதல்; ‘மாறி மாறி’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ பல படியாகப் படைத்தல் இருப்பது?’ எனில், படைத்தல் கர்மங்களைக் கடாக்ஷித்தேயாகிலும் ஒரே காலத்தில் ஒரு சேரப்படைத்தல் அநுக்கிரகத்தின் காரியம்.

    பிறை யேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – சடை கழற்றாமல் சாதக வேஷத்தோடேயிருந்தும், கலா மாத்திரமான சந்திரனைத் தரித்துக்கொண்டு சுகத்தையே பிரதானமாகக் கொண்டுள்ள முதன்மை பெற்றவனாயிருக்கிற சிவனும், அவனுக்குங்கூடத் தந்தையான பிரமனும், இவர்களோடு ஒக்க எண்ணலாம்படியிருக்கிற இந்திரனும், நீ ஸ்வாமியான முறையறிந்துஏத்த, அதனாலே உன்னுடைய வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ! அதாவது, ஒருவன் ஒரு 1குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று, 2’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும், அவனாலே உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த, அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ! நகையாய் முடியுமத்தனையன்றோ!’ என்றபடி.வேதைக சமதைகனாய் -சர்வேஸ்வரன்
உன்னாலே படைக்கப் பட்ட உன்னாலே ஞானம் கொடுத்த
வேதம் அறிவிக்கும்
மறை மறைக்கும்
இரண்டுமே –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருபாருக்கு மறைக்கும்
ஆராதனா ஸ்வரூபம்
ஆராத்ய பகவான் ஸ்வரூபம்
அஹமேவ வேதே வேதம் பாகம் எல்லாம் அவனை சொல்லும்
சகல வேதங்களும் தன்னை பிரதிபதிக்கும்
வேதாக ஏவ நான்குவித அந்வயம்
மலர் சுடர் புகழ்
சர்வாதிகன் நிரதிசய
முறையால் -வேதங்கள் பிரதிபதிப்பது இவனுடைய ரஷகத்வம்
முறை ஸ்வாமித்வம்
படைத்தது கரண களேபரங்கள் உண்டாக்கி
ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கோல இடர்ந்து உண்டு உமிழ்ந்து
பருத்து போலே அபகரிக்க எல்லை நடந்து மீட்டு கொண்டு
சர்வவித ரஷணம் செய்து
இரண்டு வித சிருஷ்டி -விஷம சிருஷ்டி கர்மம் அடியாக -பிரம்மா
சம சிருஷ்டி -கிருபாகார்யம் -முறையால் படைத்து
சடையனும் -சாதக வேஷத்துடன் இருக்க செய்தே பிறை சந்தரன் போக
சுக பிரதனாமாக
சும்மாட்டில் பூ வைத்து கொண்டது போலே
ஜனகன் சதுர்முகன்
இந்திரன் இவர்களோடு எண்ணலாம் படி
பொம்மை செய்து காக்காய் சரிகை செய்து -இது என்னை வணங்கிற்று என்னுமா போலே
இவர்கள் ஏத்தினால் ஹாஸ்யமாக தலைக்கட்டுமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading