திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வாழ்த்துவார் பலராக;
நின்னுள்ளே நான்முகனை
‘மூழ்த்தநீர் உலகுஎல்லாம்
படை’என்று முதல்படைத்தாய்;
கேழ்த்தசீர் அரன்முதலாக்
கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து
சூழ்த்துஅமரர் துதித்தால்உன்
தொல்புகழ்மா சூணாதே?

    பொ-ரை : வாழ்த்துகின்றவர் பலர் ஆயிடுக; அதனால் வந்தது என்? தண்ணீராற்சூழப்பட்ட உலகங்களையெல்லாம் உண்டாக்குவாய் என்று பிரமனை நின்னுள்ளே முதலில் உண்டாக்கினாய்; ஒளி மிக்க சிறப்பினையுடைய சிவபிரான் முதலாக விளங்குகின்ற தேவர் அனைவரும் கூடி ஒளி மிக்கவர்களாகி மனவெழுச்சியோடு சூழ்ந்துகொண்டு துதித்தால், உனது பழமையான நற்குணம் மாசு ஏறாதோ? ‘மாசு ஏறும்’ என்றபடி.

    வி-கு : மூழ்த்த – சூழ்ந்த. கேழ் – ஒளி. தெய்வமாய் -ஒளியுடையவர்களாகி. ‘கேழ்த்த சீர் அரன் முதலா அமரர் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்ந்து துதித்தால்’ எனக் கூட்டுக. சூழ்த்து – சூழ்ந்து : வலித்தல் விகாரம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1’வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே? அவர்கள் நம்மை ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு,’ என்கிறார்.

    வாழ்த்துவார் பலராக – வாழ்த்துவார் பலர் ஆயிடுக; ‘ஆனால் தான் வந்தது என்? வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்று 2பட்டர் அருளிச்செய்வர். நின்னுள்ளே

நான்முகனை மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய் – உன்னுடைய சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே பிரமனை, ‘கடல்சூழ்ந்த பூமியையெல்லாம் உண்டாக்கு,’ என்று முதல் படைத்தாய்; ஆதலால், உன்னாலே படைக்கப்பட்டவனான பிரமனாலே படைக்கப்பட்டவர்கள் உன்னை ஏத்த என்று ஒரு பொருளுண்டோ?’ என்றபடி. இனி, ‘வாழ்த்துவார் பலராக’ என்பதற்கு, 1’வாழ்த்துகின்றவர் பலர் உண்டாகைக்காக’ என்றும், ‘மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்’ என்பதற்குப் ‘பிரளய வெள்ளத்திலே உலகங்களை உண்டாக்கு’ என்று பிரமனை உண்டாக்கினாய் என்றும் பொருள் கூறுவாரும் உளர். மூழ்த்த நீர் – ஏகார்ணவம்.

    ‘ஆயின், இவர்களையொழிய ஞானத்தில் மேம்பட்டவர்களான சிவபிரான் முதலானவர்களையும் கூட்டிக்கொண்டாலோ?’ என்ன, ‘அவர்களுக்கும் நிலமன்று’ என்கிறார் மேல்: அதாவது, 2’இப்பங்களத்தை விட்டுக் கால் கடியரானவர்கள் ஏத்தப் புக்கால்தான் எல்லை காணப் போமோ?’ என்கிறார் என்றபடி. கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசு உணாதே – கிளர்ந்த ஞான முதலான குணங்களையுடையனான சிவபிரான் தொடக்கமாக, சர்வேசுவரனோடு மசக்குப்பரலிடலாம்படி கிளர்ந்த தேவதைகள், முசு வால் எடுத்தாற்போன்று கிளர்ந்து 3ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல் ஒரோ பிரயோஜகங்களிலே மிகைத்த ஆயுள்களை உடையராய் இருக்கிறவர்கள் துதி செய்தால், உன்னுடையசுபாவிகமான கல்யாண குணம் மாசு உண்ணாதோ! 1’இவர்கள் ஏத்துமளவேயோ இவன் குணங்கள்!’ என்ற அவ்வழியாலே தாழ்வாய்த் தலைக்கட்டாதோ?’ என்றபடி.

வேதங்கள் கிடக்கட்டும்
வைதிக புருஷர்கள் ஸ்தோத்ரம் செய்கிறார்களே அது போலே பண்ணுமே
வாழ்த்துவர் பலர் ஆக
ஆகும்படி சிருஷ்டித்து
நின்னுள்ளே நான் முகனை படைத்தாய் –
புகழ் உடைய ருத்ரன்
அமரர் ஸ்தோத்ரம் செய்தால் புகழ் குறையாதோ
வாழ்த்துவர் பலராகட்டும் அதனால் வந்தது என்ன பட்டர்
வேதங்கள் விட புதிதாக என்ன
அன்றிக்கே வாழ்த்துவார் பலர் உண்டாக என்றும் அர்த்தம் கொண்டு
உன்னுடைய சங்கல்ப ஏக தேசத்தில் சதுர முகனை படைத்த
கடல் சூழ்ந்த பூமி எல்லாம் படை என்று
நீரில் நீ இருந்து கொண்டு
ஏகார்ணவத்தில் நீ இருந்து கொண்டு
உன்னால் சிருஷ்டித பிரமனால் சிருஷ்டிக பட வர்கள் எதினால்
ருத்ராதிகளுக்கும் நிலம் இல்லை
பங்களம் குப்பை செத்தை விட்டு
பங்களம் – பதர்க்கூட்டம். கால் கடியர் – சத்திமான்கள். மசக்குப் பரலிடல் –
ஐயப்படுதல். முசு – கொண்டை முசு. ‘கோலாங்கூலம்’ என்பர்
அரும்பதவுரைகாரர்.
ருத்ரன் ஞானம் அதிகம் –
அவனோடு மசகு படல் -duplicate -சமமாக என்று சொலும் படியான தேவர்கள்
போலி -போலே இருந்தாலும் அதுவாகைல்லை -மயக்குகின்ற பரல் -சதங்கை உள்ளே ரத்னம் மாணிக்கம்
முசுகு வாழ் எடுத்தால் போலே கிளர்ந்து
முசுகு கொண்டை முசுகு -கூத்தாடுவது போலே
குரங்குகள் ஒன்றாக காச்சு மூசச்சு கத்துவது போலே
தேவதைகள் ஸ்தோத்ரம்
முசுகு -முசு -குரங்கு முசுவும் படையா முசுக் கணங்கள்
குவால் எடுக்க சந்தோஷம்
முசு –குவால் எடுத்தாள் போலே -தப்பாக முசுகு வாழ் எடுத்தாள் போலே
வ்யாக்யானர் போலே அரும் பத அர்த்த காரர் காஞ்சி ஸ்வாமி காட்டி அருளி
படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் எடை கெடுத்தான் –
கிளர்ந்து
புகழ்வோம் பழிப்போம் போலே
மாசூணாதோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading