ஓதுவார் ஓத்துஎல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதுஇல்லை;
போதுவாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய்! என்சொலியான் வாழ்த்துவனே!
பொ-ரை : புனங்களிலே இருக்கின்ற பூக்களையுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனே! தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார் வாழ்கின்ற மார்பையுடையவனே! எல்லா உலகங்களிலும் ஓதுகின்றவர்களாலே ஓதப்படுகின்ற பல்வேறு வகைப்பட்டிருக்கின்ற வேதங்கள் முதலான எல்லாச்சாத்திரங்களும், சாதுவான நின்னுடைய கல்யாணகுணங்களின் தன்மையே அல்லாமல் வேறில்லை; அங்ஙனமிருக்க, யான் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்?
ஈடு : ஆறாம் பாட்டு. 1எங்குலக்க ஓதுவன்?’ என்றார்; ‘வேதங்கள் நம்மைப் பேசாநின்றனவே, உமக்குப் பேசத் தட்டு என்?’ என்ன, ‘அவையும் இவ்வளவன்றோ செய்தது?’ என்கிறார்.
ஓதுவார் ஓத்து எல்லாம் – ஓதுவார் என்கையாலே, அதிகாரிகளின் பாகுபாட்டினைச் சொல்லுகிறது. ஓத்தெல்லாம் என்கையாலே, இருக்கு முதலான நான்கு வேதங்களையும் குறிக்கிறார். ஆக, ஓதுவார்கள் பேதத்தாலே பல வகைப்பட்ட கிளைகளாய்ப் பிரிவுண்ட வேதங்களெல்லாம் என்றபடி. 2எவ்வுலகத்து எவ்வெவையும் – எல்லா உலகங்களிலுமுண்டான எல்லாம். சுவர்க்க லோகத்திலும் பிரஹ்மலோகத்திலும் அங்குள்ள புருஷர்களுடைய ஞானத்தின் மேம்பாட்டிற்குத் தக்கபடியே அவையும் பரந்திருக்குமேயன்றோ? ஸ்ரீராமாயணம் என்றால் பிரஹ்மலோகத்தில் அநேகம் கிரந்தங்களாக இருக்கவும், இங்கே இருபத்து நாலாயிரமாய் இருக்கின்றது; ஆதலின், ‘எவ்வுலகத்து எவ்வெவையும்’ என்கிறார். சாதுவாய் – சொற்களுக்குச் சாதுத்தன்மையாவது, பொருளைக் காட்டவற்றாயிருக்கை. அன்றி, ‘சாதுவான புகழ்’ என்று குணங்கட்கு அடைமொழியாக்குதலும் ஆம். சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிதில்லை – உன்னுடைய கல்யாண குண விஷயமான இத்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை;
கல்யாண குணங்களை எங்குமொக்க 1விளாக்குலை கொண்டதுமில்லை. ‘கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால், கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை,’ என்றபடி.
போது வாழ் புனந்துழாய் முடியினாய் – பூவையுடைத்தாய், தன்னிலத்திலே நின்றாற்போன்று செவ்வி பெற்று வாழாநின்றுள்ள திருத்துழாயைத் திருமுடியில் உடையவனே! 2’திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’ என்றபடி. இவ்வொப்பனை என்னால் பேசலாயிருந்ததோ! பூவின்மேல் மாது வாழ் மார்பினாய் – தாமரைப்பூவை இருப்பிடமாக உடைய பெரியபிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வசிக்கின்ற மார்வையுடையவனே! இவ்வொப்பனையை ஒப்பனையாக்கும் அவளுடைய சேர்த்திதான் என்னாலே பேசலாயிருந்ததோ! ‘பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்குமன்றாயிற்று, இவளும் இம்மார்வைவிட்டுப் பிறந்தகமான தாமரையை நினைப்பது’ என்பார், ‘பூவின்மேல் மாதுவாழ் மார்பினாய்’ என்கிறார். ‘பிராட்டி பிரிந்திருக்கிலன்றோ வைத்த வளையம் சருகாவது?’ என்றபடி. என் சொல்லி யான் வாழ்த்துவன் – ‘வேதங்களுங்கூட ஏங்குவது இளைப்பதாகாநிற்க, இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னால் பாசுரமிட்டுச் சொல்லலாயிருந்ததோ!’ என்கிறார்.
1. விளாக்குலை கொள்ளுதல் – எங்கும் ஒக்க நிறைதல். ‘விளாக்குலை
கொண்டதுமில்லை, புறம்பு போயிற்றதுமில்லை,’ என்றபடி. ‘ஆனால்,
சம்பந்தத்திற்குப் பயன்தான் யாது?’ என்ன, அதற்கு விடையாகக் ‘கடலிலே’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அதாவது, “தனக்குச் சத்தை
சித்திப்பதே பலம்,’ என்றபடி. இந்தச் சுலோகம். ஸ்ரீரங்கராஜ ஸ்தவம். 1 : 12.
ஆக, ‘சாதுவாய்’ என்றதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்
செய்தபடி. ஒன்று, பொருளை இருந்தபடியே காட்டுதல்; இரண்டு சாதுவான
புகழ் என்று புகழுக்கு அடைமொழி; மூன்று, சத்தை பெறுகைக்காக என்றபடி.
சத்பாவம் – உண்மை.
2. ‘திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’ என்பது ரசோக்தி.
வேதம் சொல் லிற்றே என்றானாம்
வேதங்களும் -எதோ வாசா நிவர்த்தந்தே மீண்டதே என்கிறார் –
ஓதப்படுவதாலே வேதம் என்ற பெயர்
சாதுவாய் உனது புகழை
பூ வின் மேல் மாது வாழும் மார்பினான்
ஒதுவார் -அதிகாரி வாசி வைவித்யம் வித விதமான
ஒத்து எல்லாம் ரிக்யாதி சதுர வேதம் -சாகைகள் பலவும் உண்டே
சுக்ல தத்ரிய யஜுர் வேதம்
சாமம் சாந்தோக்ய -ஜைமினிய சாமம் –
தளவதான சாமம் கேரளா
எவ்வுலகுத்து உள்ளவை எல்லாம் 1008 சாகை உண்டாம்
ஸ்ரீ ராமாயணம் ஸ்வர்க்க லோகத்தில் லஷம் ஸ்லோகங்கள் உண்டே
இங்கு 24000 ஸ்லோகங்கள்
சாதுவாய் சப்தத்துக்கு சாது எனபது அர்த்தத்துக்கு போகதமாய்
அன்றியே சாதுவான புகழ் குணவிசேஷங்கள் -இத்தை தவிர வேறு எங்கும் போகாமல்
புகழ் முழுவதும்பேசி முடிக்காதே –
எல்லை இலா வேதங்களும் -சமுத்ரம் மழை பெய்து நிறையாதே பெய்யா விடில் குறையாதே ஆம்னாயானாம் அசீம்னாம் வர்ஷ பிந்து -போலே பட்டர் சம்பந்தாது ச்வார்த்த லாபா
சத்தை பெற -விழாக் கொலை கொள்ளுதல்
விள்ளாமல் குலை சாப்பிட முடியாதே –
தன்னுடைய சத்பாவதுக்கு புகழும்
போது வாழ் புனம் துழாய் -தன்னிலத்தில் உள்ளது போலே இருக்குமே திரு மேனியில்
வேதம் கூட இளைக்க சேர்த்திக்கு -எப்படி
பூவை உடைத்தாய் செவ்வி பெற்று பசுக்கு பசுக்கு என்று இருக்கும் முடியினாய்
திருத் துழாய் பூ முடி சூடி வாழா நின்றது -ஒப்பனை அழகை பேசி முடிக்க முடியுமா –
பூவின் மேல் மாது வாழ் மார்பினை
பிராட்டி பிரிந்து இருக்காததால் -குளிர்ந்து சருகு ஆகாமல் குறி அழியாமல் இருக்கிறது
ஒப்பனை ஒப்பனையாக்கும் அவளோட்டை சேர்த்தி பேச முடியுமா
தாமரை பூவை இருப்பிடமாக உள்ள பெரிய பிராட்டியார் பூ அடிக் கொதித்து போந்து
இங்கே வர்த்திக்கும் திரு மார்பு
பிராட்டி பெருமாளை கை பிடித்த பின்பு பிறந்தகமான திரு மிதிலை நினைத்தால் அன்றோ பூவை நினைப்பாள்
வைத்த இடத்தில் இருந்து பாரதந்த்ர்யம் காட்டி –
வாழ் மார்பினான் -ஒப்பனைக்கும் செர்திக்கும் பாசுரம் இட்டு பேச முடியுமா
வேதங்களும் முடியாமல் மீண்டன
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply