34-நாராயணனே -திருப்பாவை -1-
பாற் கடலுள் பையத் துயின்ற -திருப்பாவை –2-
மன்னு வட மதுரை மைந்தனை -திருப்பாவை –3-
விண்ணோர் தலைவா -கேசவா -ஆயர் குல முதலே -திருவாய் மொழி -1-5-6-
பர வ்யூஹ விபவ நிலைகள் மூன்றையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உதசருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம்
பர வ்யூஹ விபவ ஆத்மாநா த்ரிவிதம் பரஹம இதி பாகவத சித்தாந்த -பராசர பட்டர்
க -பிரமன் -ஈச சிவன் இவர்களுக்கு உதபாதகனாய் ஆஸ்ரயநீயனான ஷீராப்தி சாயீ கேசவன்
35-நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-
நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்
36-மலரிட்டு நாம்முடியோம் -திருப்பாவை -2-
இனிப் பிறவி யான் வேண்டேன் -திருவாய்மொழி -10-6-1-
அவன் தானே வந்து சூட்டில் செய்யல் ஆவது இல்லை என்பதால் நாம் விசேஷித்து அருளுகிறாள் –
ஆழ்வாரும் என் புத்தியால் விட்டேன் -அவன் இருத்தலில் செய்யல் ஆவது இல்லை -ஈட்டு திவ்ய ஸ்ரீ ஸூக்தி
37-தூயோமாய் -திருப்பாவை -5–தூயோமாய -திருப்பாவை -16
ஆசற்றார் மாசற்றார் -திருமாலை -22
பிரயோஜனாந்தர பரத்வமும் -உபாயாந்தர -பரத்வமும் -இல்லாத தூய்மை
ஆசு -மாசு -குற்றம் –
பகவானே உபய உபேயங்கள் என்று அறிந்த தூய்மை –
38-நாராயணன் மூர்த்தி கேசவன் -திருப்பாவை -7–வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்
39-மாமாயன் மாதவன் வைகுந்தன் -திருப்பாவை -9-
தீ வினைக்கு அரு நஞ்சே -தேவி மணாளனை -ஆயனை -திரு விருத்தம்-89-
சௌலப்யம் பரத்வம் இரண்டுக்கும் மூல காரணம் ஸ்ரீ மத் வத்வம் -மத்ய மணி ந்யாயம் –
40-சினத்தினால் -திருப்பாவை -12
உகிரால் கீண்டான் சினம் -பேயாழ்வார் -42
சீற்றம் ஓன்று உண்டு -கலியன் -5-8-3-
ஆஸ்ரித சத்ருக்கள் சக்கரவர்த்தி திரு மகனுக்கும் விரோதி –
அருள் அன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சீற்றம் உத்தேச்யம்
அச் சினத்தை தெரி -அனுசந்தி
தரித்ரனாவன் தணிகனை அடையுமா போலே -சீற்றமும் உண்டு -என்று இறே இவர் பற்றுகிறது
ஆஸ்ரியருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌசீல்யாதி கள்
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்
41-பொல்லா அரக்கனை -திருப்பாவை -13
சுரி குழல் –அரக்கன் -கலியன் -5-7-7-
முன் பொலா இராவணன் -திருக் குறும் தாண்டகம் -15
பொல்லாங்கே வடிவு எடுத்தவன் இராவணன் -ஆண்டாள் கலியன் -பிராட்டியை பிரித்த பொல்லாங்கு –
42-பொல்லா அரக்கன் -திருப்பாவை -13
பொல்லா ஆக்கை -திரு வாய் மொழி -3-2-3-
விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டு
துரியோதனன் பிரதி கூலனாய் தோன்றினான் -ஆக்கை அநு கூலமாக போலே
ஆயிற்று இருந்து பிரதி கூல்யம் ஆயிற்று –
43-கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
அவுணன் உடல் கீண்ட -அமலன் -8
கல் எடுத்து கல் மாரி காத்தாய்-கலியன் -திரு நெடும் தாண்டகம் -13
வீர பத்னி ஆகையாலே கல் எடுத்து என்னுமா போலே கிள்ளி களைந்தான் என்கிறாள்
தோஷம அசத்தி கிள்ளிப் பொகட்டிய படி
உலர்ந்த தாழை நாரை கிழித்தால் போலே அஹங்கார ஹேதுவான தேகத்தை பொகட்டான்
சோலை சூழ் குன்று எடுத்தான் -கல் எடுத்தான் என்றது அனாயசேன எடுத்தமை காட்ட
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே -என்று இருக்குமவள் இறே
44-சங்கொடு சக்கர பங்கயக் கண்ணன் -திருப்பாவை -14-
வெள்ளச் சுரி -தாமரைக் கண்ணன் -திருவாய்மொழி -7-3-1-
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்கள்
திருமேனிக்கு திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாக இருப்பது போலே
திருக் கண் நோக்கு ஆத்ம குணங்களுக்கு பிரகாசகமாய் -அகவாயில் தண் அளிவு கண் வழியே
தோற்றுமே -பிரதி கூலருக்கு திவ்ய ஆயுதங்களும் திருக் கண்களும் விரோதியாய் தோற்றும்
அநு கூலருக்கு அழகுக்கு உடலாய் தோன்றும் -தோற்பித்த படிக்கு இரண்டுமே சேருமே -ஜிதம் தே –
பண்ண வைக்குமே -செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வலலானே -கலியன் -7-7-1-என்னக் கடவது இறே-
45-நாயகனாய் நின்ற -திருப்பாவை -16
தெருள் கொள் -திருவாய்மொழி -5-7-3-
நாயணன் -நந்தகோபனுக்கும் -கோயில் காப்பானுக்கும் அந்வயம்
தெருள் கொள் -அடை மொழியை நான்மறைக்கும் -வல்லவா -இரண்டுக்கும் அந்வயம் –
46-அம்பரம்–உம்பர்கோமானே எழுந்திராய் -திருப்பாவை -17
நல்கி ..பொழில் ஏழும் வினையேற்கே -திருவாய்மொழி -1-4-5-
அகலிடம் படித்து –வாரான் -திருவாய்மொழி -9-9-2-
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு -கலியன் -9-4-9-
ஆண்டாளும் -பராங்குச பரகால நாயகிகளும் வருந்த ஒரே காரணம்
நாட்டுக்கு உள்ள நியாயம் அந்த புரத்துக்கு இல்லையாய் யாயிற்றே
சாமான்யத்தில் பண்ணும் ரஷணம் விசேஷத்தில் இன்றிக்கே இருப்பது என்று –
47-பஞ்ச சயனம் -திருப்பாவை -19–அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் தாவள்யம் -மெத்தன என்றது மார்தவம் விசேஷித்த படியால்
அஞ்ச லோதியை -திருவாய்மொழி -10-2-4-இருண்ட கூந்தலுக்கு ஐஞ்சு லஷணங்கள் -அல் -கருமை -விசேஷித்து அருளி –
ஐம்பால் ஓதியை -கலியன் திரு எழு கூற்று இருக்கை –கூந்தலுக்கு -மார்த்வம் சைத்யம் பரிமளம் கருமை நீட்சி
48-கப்பம் தவிர்க்கும் -திருப்பாவை -20-கப்பம் -கம்பம் என்றபடி
இரு கூறா நகந்தாய் -திருவாய்மொழி -9-4-7-நகந்தாய -நகத்தாய என்றபடி
வல்லொற்று மெல்லொற்றாக மாறிய இடங்கள்
நகத்தை தாவும்படி பண்ணின விசேஷ அர்த்தமும் பன்னீராயிரப்படியில் அருளி உள்ளார்-
49-பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -திருப்பாவை -21
அடியோமுக்கே எம்பெருமான் -கலியன் -4-9-5-
உன்னை நீ உணர வில்லை -உன் பிறவியைப் புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
பரம பதத்தில் வந்தோமோ -ஷீராப்திக்கு வந்தோமோ -எங்களைத் தேடி நீ திருவாய்ப்பாடிக்கு அன்றோ
வந்தாய் -இங்கே உறங்கலாமோ -ஆண்டாள் –
எங்களைத் தேடி திரு இந்தளூர் எழுந்து அருளிய ஸ்ரீ பரிமள ரெங்க நாதனே உணராய் –
50-அன்று இவ் உலகம் போற்றி -திருப்பாவை -24
அருகலிலாய –நம் –திருவாய்மொழி -1-9-3-
அடி போற்றி -திறல் போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-
51-கன்று குணிலா எறிந்தாய் -திருப்பாவை -24-விளங்கனிக்கு எறிந்த விஷயம் அஸ்பஷ்டம்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -கலியன் -9-10-7-அஃது ஸ்புடமாகிறது இதில் –
52-தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து நோக்கின குணம் -உண்பது கொண்டால்
உகிர் கொண்டு தலையை அறுக்கவோ -என்று மலையை எடுத்த ஆந்ரு சமசய குணம்-
53-கன்று –குன்று -திருப்பாவை -24
கன்று ஆநிரைக்கு –மா மழை நின்று காத்து -கலியன் -9-10-7-
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும்
கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –
54-ஒருத்தி மகனாய் -திருப்பாவை -25
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய் வளர்ந்ததும் –
கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-
55-ஒருத்தி மகனாய் பிறந்து வளர -திருப்பாவை -25
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-
56-தான் தீங்கு நினைந்த -திருப்பாவை -25
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த -திருவாய்மொழி -2-6-6-
நினைந்த -மனஸ் சஹ காரம் உண்டாவதே
உக்தி மாதரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் ஆய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்து கழுத்துக்கு மேலும் அமையும் –
கைவிடும் இடத்தில் அக வாயிலும் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான் –
அவன் விடுவது புத்தி பூர்வம் பிரதி கூல்யம் பண்ணினவரை
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும் –
57-தீங்கு -திருப்பாவை -25
பொல்லா -திருப்பாவை -13
இன்னது என்று சொல்ல மாட்டாமையாலே தீங்கு பொல்லா என்கிறார்கள்
இராவணன் பொல்லாங்குக்கு பாசுரம் இட்டு சொல்ல முடியாமல் -பொல்லா -என்னும் அளவே சொல்கிறார்கள்
கம்சனுடைய தீமையும் வாசாம் அகோசரம் -என்றபடி
58-மாலே -திருப்பாவை -26
நெடுமாலே -திருவாய்மொழி -5-8-1-
இருவரும் ஆஸ்ரித வ்யாமோகத்தை அருளுகிறார்கள் –
சம புத்தியால் மாலே இடைப்பென்கள் வார்த்தை மால் வியாமோகம்
நெடுமால் மிக வியாமோகம் -நீராய் அலைந்து கரைய என்கிற அடைவு
59-சூடகமே -திருப்பாவை -26
கை வண்ணம் -திரு நெடும் தாண்டகம் -21
இருவரும் அடைவு கெட அனுபவம்
-பிடித்த கைக்கும்
அணைத்த தோளுக்கும்
அணைத்த விடத்தே உருத்தும் அதுக்கும்
ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் துறைக்கு ஆபரணம் –
அம்மி மிதித்த காலத்திலேயே என் காலைப் பிடித்த கை –
ஆதி ஷடேமம அசமாநம ஆசமேவ த்வம சத்திரா பவ -என்று அப்போதே மந்த்ரம் சொன்ன வாய் –
இமாம் சமேத பச்யதே -அப்போதே காலே பிடித்து கரிய குழல் அளவும் பார்த்த கண்
பின்பு சப்தபதீ பர கரணத்தில் நடந்த திருவடிகள் –
60-கூடாரை வெல்லும் கோவிந்தா -திருப்பாவை -27
பருப்பதத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-7-
அத்வேஷ மாதரத்தை பற்றாசாக கொண்டு அவன் அருளும் தன்மை இரண்டாலும் அருளப்படுகிறது –
கூடுவோம் அல்லோம் என்று அபிசந்தி இல்லாத மாதரத்தில் ரஷித்த படி
பொருந்தோம் என்று துர் அபிமானம் இன்றிக்கே -ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும்
பசுக்களோடு பொருந்துமவன் கோவிந்தன்
பருப்பத்தது -விலக்காமை ஒன்றே வேண்டுவது
வருவானும் -விரோதிகளை போக்குவானும் -தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் தானே
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி –
ஸ்வ சாசநாதி வரு ததி வ்யவசாய நிவ்ருத்தி மாத்ரேண -ரசன அநு பபத்தி அதிகரண ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார் ஸ்ரீ ஸூ க்தி —
விலக்காமை ஆத்ம ஞானம் -பிரளயத்தில் மோஷ பிரதானம் பண்ண இதுவே ஹேது
ததேக சேஷத்வ ததேக ரஷ்யத்வ ஞானம் இல்லை பிரளயத்தில் -தத் கார்யமான விலக்காமை அப்போது இல்லையே –
61–குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -திருப்பாவை -28
நம்பீ -திருமாலை -25
குண பூர்த்தி -அனுபவம் இருவரும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் -நைச்ய அநு சந்தானம் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அவன் மேன்மை அனுசந்தானம் –
அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் -என் கண் இல்லை -நின் கணும் பக்தன் அல்லேன் -நைச்ய அநு சந்தானம் –
62–நாராயணன் -திருப்பாவை 1-7-10-ஸ்வாமித்வம் வாத்சல்யம் -வ்யாபகத்வம் –
கோவிந்தா -திருப்பாவை -27-28-29-
அபிசந்தி இல்லாத மாத்ரத்தில் ரஷித்த படி–
மாம் ஏகம் -என்ற -அவன் பாசுரம் அன்றோ -கடையாவும் -கழி கோலும் -கையிலே பிடித்த
கணணிக் கயிறும் -கற்றுத் தூளியலே தூ ஸரிதமான திருக் குழலும் -மறித்து திரிகிற போது
திருவடிகளிலே கிடந்தது ஆரவாரிக்கிற கழல்களும் சதங்கைகளும் -குளிர் முத்தின் கோடாலுமாய
நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா –
பாவ ஞானம் இல்லாத ஜன்மம் இறே பசுக்களின் பின்னே திரிவார்க்கு
பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே
63-கறைவைகள் -திருப்பாவை -28 -த்வய பூர்வ வாக்யார்த்தம் –
அகலகில்லேன் -திருவாய்மொழி -6-10-10–த்வய பூர்வ வாக்யார்த்தம்-
64-சிற்றம் -திருப்பாவை -த்வய உத்தர வாக்யார்த்தம் –
ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி –த்வய உத்தர வாக்யார்த்தம் –
65-கறவை -திருப்பாவை -28–த்வய பூர்வ வாக்யார்த்தம் –
சிற்றம் -திருப்பாவை -த்வய உத்தர வாக்யார்த்தம் –
மேம்பொருள் -திருமாலை -38-த்வ்யார்த்தம் –
66-வங்கக் கடல் கடைந்த மாதவனை -திருப்பாவை -30
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –
கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –
67-மாதவனை திருமாலால் -திருப்பாவை -30-
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீ ய பதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி
68-தண் தெரியல் -திருப்பாவை -30
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் -அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இ றே
69-முதலில் அருளியதே விவரித்து மேல் 29
பாசுரங்களும் நாராயணனே நமக்கே பறை தருவான் -பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்
இது தன்னையே மேலில் பாட்டில் விபரிக்கின்றான –
70-முதலில் அருளியதே முப்பதிலும்
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
71-முதலில் அருளியதே முப்பதிலும் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –
72-முதலில் அருளியதே முப்பதிலும்
முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –
73-முதலில் அருளியதே முப்பதிலும்
முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி
இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல்
ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –
74-1-7-10 மூன்றிலும் நாராயண குண த்ரயம் அருளி காட்டுகிறாள்
75-1-28-29-
முதலில் அருளிய -பறை தருவான் -என்றதை -பிராப்ய பிராபகங்களை
சிற்றம் -கறவைகள் -விவரித்து அருளுகிறாள் –
பறை என்று பிராப்யம் சொல்லி -தருவான் பிராபகமும் –
பிராப்யம் முன்னாக அருளி -பிராபகம் பின்னாக அருளி -வயுத் பத்தி வேளையிலே -இப்படி –
சப்த த்வயத்திலே அருளியதை காதா த்வயத்தாலே விவரிக்கும் இடத்து
கறவை -என்று பிராபகம் முன்னாக -சிற்றம் என்று பிராப்யம் பின்னாக -அனுஷ்டான வேளையிலே இப்படி மாறாடி தான் இருக்கும் –
76-முதலும் 29 பாசுரமும்
முதலில் பிராப்ய பிரதிக்ஜை
29 பாட்டில் பிரப்யத்தை -கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –
என்று நிஷ்கர்ஷிக்கிறாள் –
முதல் பாட்டில் -பறை -என்று மறைத்து கூறப்பட்டு -அதை இங்கே வ்யக்தமாக்கப்பட்டது –
77-முதலும் இரண்டாவதும் -முதல் பாசுரத்தில் நாராயணனே -ஏவகாரம் -மாமேகம் என்றால் போலே
உபாய நைர பேஷ்யம் -நிர பேஷ உபாய பூதன் இ றே பரமாத்மா –
இரண்டாம் பாட்டில் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -சில வியாபாரங்களை கர்தவ்யங்களாக கூறுவது -நிர பேஷ உபாயத்வ பஞ்சகம் ஆகாது –
உபாயத்வேன துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லை
கைங்கர்ய ரூபேண சாஸ்திர விஹிதங்களை கர்தவ்யங்கள் என்றபடி –
78- முதல்-26-30
முதல்-29-30-
முதல் பாட்டில் மூல மந்த்ரார்த்தையும் –
26 பாட்டில் சரம ச்லோகார்த்தத்தியும் –
30 பாட்டில் த்வயார்த்தத்தையும் அனுபவிக்கலாம் -29 பாட்டில் மூல மந்த்ரார்தம் வியக்தம் –
79- இரண்டும் முப்பதும்
இரண்டாம் பாசுரத்தில் -பையத் துயின்ற பரமன் -பாற்கடல் கிடக்கை
30 பாசுரத்தில் கடைந்த -கடல் கடைந்த சரித்ரம்
பௌ வ நீர் கிடந்தது –கடைந்த பெற்றியோய் -திருச் சந்த விருத்தம் -28
80-இரண்டும் -29 th பாசுரமும்
அடி பாடி -திருப்பாத கமலங்களின் அனுபவம் -தொடங்கி
அடியே போற்றும் -திருவடிகளின் அனுபவம் முடிக்கிறாள் –
81-இரண்டும் முப்பதும் –
அடி பாடி -திருவடிகளை பிரஸ்தாபித்து கேசவனை -திருக் குழல் அனுபத்தில் முடிக்கிறாள்
பெரியாழ்வார் திருமொழி 1-2- போலே பாதாதி கேசம் அனுபவம் –
82-இரண்டும் 29 th பாசுரமும் –
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
29th பாட்டில் கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –
83-மூன்று-17-21-
மூன்றிலும் திரி விக்கிரம அனுபவம்
அவனே திரி விக்ரமன் இ றே
84- நான்கு -23 th பாசுரம் –
நான்காவது பாசுரத்தில் மேகத்துக்கு ஆண்டாள் நியமனம்
23 th பாசுரத்தில் மேக வண்ணனுக்கு நியமனம் –
85-நான்காம் பாசுரமும் 16th பாசுரமும்
வருண தேவனை அழைக்கும் ஆய்ச்சியர் ஆழி மழைக் கண்ணா -என்கிறார்கள் –
இது இ றே ஸ்ரீ வைஷ்ணவ திரு நாமம் –
ஏகாந்தீ வயப தேஷ் டவ்ய நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவய தஸய சர்வம ஸ ஏவ ஹி -என்னக் கடவது இறே –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் அடியான் என்று இறே —
இந் நியாயம் பதினாறாம் பாட்டிலே- கோயில் காப்பானே -வாசல் காப்பானே -என்ற இடத்திலும் ஒக்கும் —
86-ஐந்தாம் -16 th -28 th -29 th பாசுரங்கள்
ஐந்திலும் 16 th பாசுரத்திலும் -தூயோமாய் -தூயோமாய் -என்று கூறப் பட்டது இறே – சுத்தி
அறிவு ஒன்றும் இலாத ஆய்க் குலத்து பெண்களுக்கு சுத்தியாகச் சொல்லப் பட்டது -ஸ்ரீ வைஷ்ணத்வம் இறே-
அது ஆகிறது -அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் இறே
ஆத்ம யாதாத்மய ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு இந்த அசுத்தி இல்லாமை
இரண்டு பாசுரங்களிலும் சுருங்க கூறப்பட்டு -இது தன்னை 28 th -29 th பாசுரங்களில் விஸ்தரிக்கிறாள் ஆண்டாள் –
87-ஐந்து -21-25
பகவத் அவதாரத்தை மக ரிஷிகள் வசன அநு குணமாக -தோன்றும் -தோற்றம் -என்று வர்ணித்த ஆண்டாள்
25 பாசுரத்தில் ஆழ்வார்கள் திரு உள்ளப்படி பிறந்து என்கிறாள் -சம்சாரி தான் தாய் வயிற்றில் பத்து மாசம்
தங்கி பிறக்கிறான் -அவன்- பிறப்பை அறுப்பானான பகவான்– பன்னிரு திங்கள் தாய் வயிற்றில் தங்கிப் பிறக்கிறான் –
இது இறே அவன் அவதார ரகசியம் -தத ச த்வாதசே மாசே -பன்னிரு திங்கள் வயிற்றில் என்னக் கடவது இறே
88- ஐந்து -15
இவ்விரண்டு பாசுரங்களிலும் மாயனை -என்ற சொல் உள்ளது
அர்த்த பேதம் காண்க
89-ஆறாம் பாசுரம் -13 th பாசுரம்
இரண்டிலும் -புள்ளும் சிலம்பின -சொற்றொடர் இருப்பினும் பொருளில் வேற்றுமை உள்ளது
முதலில் கூட்டில் நின்றும் சிலம்பின படியை சொல்லிற்று –
மேலே கூட வழியே போகும் இடம் எல்லாம் ஆகாரார்த்தமாக சிதறின படியைச் சொல்லுகிறது –
இது கால பேதத்தை அநு சரித்து சிஹ்ன பேதம் கூறின படியாம் –
90-எழும் எட்டும்
ஏழாம் பாசுரத்தில் கேசவன் என்ற சப்தத்தைக் கூறி
எட்டாம் பாசுரத்தில் -மாவாய் பிளந்தான் -என்று அதன் பொருளை ஆண்டாள் கூறுகிறாள் –
கேசி ஹந்தா -கேசவன் -என்றபடி –
91-ஒன்பதும் பத்தும்
ஒன்பதாம் பாசுரத்தில் -அனந்தல் -என்றும்
பத்தாம் பாசுரத்தில் ஆற்ற அனந்தல் உடையாய் –
இதன் மர்ம அர்த்தத்தை வியாக்யானம் கொண்டு தெளிக
92-ஒன்பதும் -20 th பாசுரமும்
ஒன்பதாம் பாசுரத்தில் மா மாயன் -மாதவன் -வைகுந்தன் -என்று திரு நாம த்ரயத்தில் மத்யத்தில் மாதவன் –
அருளி -மத்ய மணி நியாயத்தை கொண்டு அர்த்த நிர்வாஹம் பண்ண பாங்காக அமைந்து உள்ளது –
மாதவன் ஆகையாலே மா மாயன் சுலபன் –
மாதவன் ஆகையாலே வைகுந்தன் பராத்பரன் -என்றபடி
பரதவ சௌலப்யங்களுக்கு நிதானம் ஸ்ரீ ய பதித்வம் -என்றபடி –
இருபதாம் பாட்டிலும் இதே நியாயத்தை கொண்டு வியாக்யானம் –
உக்கமும் தட்டொளியும் தந்து -உன் மணாளனையும் தந்து -என்றது ஆய்த்து
93-பத்தும் பதினொன்றும்
பத்தாம் பாட்டில் புண்ணியன் என்று பகவான உபாய பூதன் -என்று கூறி
அடுத்து -அவனை முகில் வண்ணன் -என்று கூறியதின் கருத்து –
புண்ணியன் -தர்மம் என்றபடி ஷ்ரேயஸ் சாதனமான சாஷாத் தர்மம் அவன் இ றே –
அந்த புண்ணியத்தை தர வல்ல உதாரனும் அவனே
-பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -தந்தனன் தன் தாள் நிழலே -என்னா நின்றது இறே
முகில் வண்ணன் -என்று மேகம் போல் உதாரன் -என்றபடி –
94-பத்தும் -19th பாசுரமும் –
பத்தாம் பாட்டில் -மாற்றமும் தாராரோ -என்று கோபிகையை குறித்து கூறியது –
ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கண்ணனுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் அவளே
மாற்றமும் தாராரோ -உடம்பு அவனுக்கு தந்தால் வாய் வார்த்தை எங்களுக்கு தரலாகாதோ -என்கிறாள் –
19 th பாசுரத்தில் வாய் திறவாய் -என்று கண்ணனை குறித்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா -நப்பின்னை பிராட்டி
ஆலிங்கனத்தாலே மலர்ந்த மார்பு படைத்தவனே -வாய் திறவாய் -மார்பை அவளுக்கு கொடுத்தால்
பேச்சை எங்களுக்கு தந்தால் ஆகாதோ -என்றபடி -அனன்யா என்று ஏக த்ரவ்யம் போலே இருப்பவர்களை
புறப்படச் சொலுவார் ராவணாதி களோ பாதி இ றே -ஆகையால் -எழுந்திராய் -என்கிறி லர்கள் –
இவ்வர்த்தம் இரண்டு பாசுரங்களுக்கும் ஒக்கும்
95-பதினோராம் பாசுரம் -20 th
பதினோராம் பாட்டில் -செற்றார் -பதம் பாகவதர்கள் உடைய சத்ருக்களைக் குறிக்கிறது –
சர்வம் விஷ்ணு மயம் -என்று இருக்கும் பாகவதர்களுக்கு நேராக சத்ருக்கள் இல்லை –
பகவத விரோதிகளையே தங்கள் விரோதிகளாக நினைக்கிறார்கள் –
நின்பால் பொறுப்ப அரியன கள் பேசில் —-ஆங்கே தலையை அறுப்பதே கருமம் -என்னா நின்றது இறே –
இருபதாம் பாட்டில் -செற்றார் -பதம் பகவத் விரோதிகளைக் குறிக்கிறது
தன்னை ஒழிந்த அனைத்தையும் தனக்கு விபூதியாக கொண்டஸ்ரீ மன் நாராயணனுக்கு – விபூதிமானுக்கு
நேராக சத்ருக்கள் இருக்க பிராப்தி இல்லை -ஆயினும் பாகவத அபசாரம் பட்டவர்களை தனது சத்ருக்களாக
நினைக்கிறான் -ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ கதி-
96-பதினொன்றாம் பாசுரமும் பன்னிரண்டாம் பாசுரமும்
பதினோராம் பாட்டில் கர்ம அனுஷ்டான தத்பரர் களுடைய பெண்ணை எழுப்புவதையும் –
அடுத்து -ஸ்வ தர்மத்தை காற் கடை கொண்டவனுடைய தங்கையை எழுப்புவதாகவும்
சொற் தொடர் அமைந்து உள்ளது -இது தன்னை பூர்வர்கள் நன்கு விளக்கி அருளி இருக்கிறார்கள் –
கர்மம் உத்தேச்யமா த்யாஜ்யமா -என்று விசாரம் செய்து நிஷ்கர்ஷித்தார்கள் -வியாக்யானம்
கண்டு தெளியவும் –
97- 12 th /21 th பாசுரங்கள்
12 th பாசுரத்தில் எருமை விருத்தாந்தம் -தனது கன்றுக்கு பால் கொடுக்காத நிலையில்
எருமை கனைக்கிற இது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்க பெறாத காலத்தில் பகவன்
குமிறின குமிறலுக்கு ஸ்மாரகம் -என்றவாறு –
21 th பாசுரத்தில் வள்ளல் பெரும் பசுக்கள் விருத்தாந்தம் -பாகவத ஸ்மாரகம் -பகவத்
விஷயத்தை வாரி வாரி வளங்கும் வள்ளல்கள் -தவ கதாம்ருதம் –க்ருண நதி யே பூரிதா ஜநா –
என்று இறே கோபிகா கீதம் -ஆழ்வாரும் பதிகம் தோறும்வண் குருகூர் சடகோபன் -என்று
தன்னை அருளிச் செய்து கொண்டார் இறே-அதிதி சப்த வாசயர் இறே பாகவதர்கள் -அதிதிகள்
திதி பார்த்து வருவது இல்லை -அவர்கள் வந்து நம்மிடம் பெற்று போகிறார்கள் –
இவர்கள் வந்து தம்முடைய பகவத் ஞானத்தை வழங்குகிறார்கள் -இதுவே வாசி –
98-13th /22 nd பாசுரங்கள்
13 th பாசுரத்தில் போதரிக் கண்ணினாய் -ஒரு பக்த சிகாமணியின் கண்ணழகு கூறப்பட்டது
22 nd பாசுரத்தில் -அம் கண் இரண்டும் -என்று பகவானுடைய கண் அழகு கூறப்பட்டது –
99-14 th /23 rd பாசுரங்கள்
14th -தங்கள் திருக் கோயில்
23 rd -உன் திருக் கோயில் –
வியாக்யானம் கண்டு கொள்க
100-15 th /29 th பாசுரங்கள்
இரண்டும் திருப்பாவை சாரம் பாசுரங்கள்
15 th -வ்யாக்யானத்தில் திருப்பாவை யாகிறது இப்பாட்டு –
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையில் சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது -அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்ரீ ஸூ க்தி –
101-15 th /23 rd பாசுரங்கள்
15 th பாசுரத்தில் நீ போதராய் -என்று பாகவத சிகாமணியின் நடை யழகு காண ஆசைப்பட்ட படி –
23 rd பாசுரத்தில் -போந்தருளி -என்று பகவானுடைய நடை அழகு காண ஆசைப்பட்ட படி –
102- 16 th /23 rd பாசுரங்கள்
16 th -நந்தகோபனுடைய கோயில் /23 rd -உன் கோயில் என்றது
இவ்விரண்டுக்கும் முரண்பாடு இல்லை -வாஸ பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து
இருப்பது -இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய பிரதாந்யம் கோலக் கடவது இ றே –
பிரணவம் போலேயும் -ஹிருதய கமலம் போலேயும் -திருவரங்கம் நம்மூர் -என்னக் கடவது இ றே –
103-17 th /24 th பாசுரங்கள்
17 th கழல் -பாகவத ஸ்ரீ பாத சம்பந்தம் பெற்ற வீர கழல் அனுபவிக்கப்பட்டது –
24th -கழல் போற்றி -பகவத் ஸ்ரீ பாதம் பெற்ற வீரக் கழலுக்கு பல்லாண்டு பாடப்படுகிறது –
104-18th /29 th பாசுரங்கள்
18 th பாசுரத்தில் நந்தகோபாலன் மருமகளே -என்றும்
29 th பாசுரத்தில் -பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த -கோவிந்தா -என்ற சொல் தொடரால் –
பெருமானும் பிராட்டியாரும் இருவரும் ஆய்க்குலத்தையும் ஆயர் சம்பந்தத்தையும் விரும்புகிறார்கள் என்று அறியல் ஆகிறது –
105-19 th /30 th பாசுரங்கள்
19 th பாசுரத்தில் -நப்பின்னை திருமேனி சம்ச்லேஷத்தால் விளைந்த கண்ணன் உடைய
திருமேனி விகாசத்தை -மலர் மார்பா -என்று கூறினார்கள் கோபிகைகள் –
30 th பாசுரத்தில் திருப்பாவை கேட்ட காலத்தில் கண்ணன் உடைய திருமேனி
விகாசத்தை ஈரிரண்டு மால் வரைத் தோள் -என்று ஆண்டாள் கூறுகிறாள் –
106-22nd /23rd பாசுரங்கள்
22nd -வந்து தலைப் பெய்தோம் -என்று அவனுக்கும் தங்களுக்கும் உள்ள பிராப்தி
சம்பந்தத்தை சொல்லி -23rd பாசுரத்தில் பிராப்தி பலமானவற்றை பிரார்த்திக்கிறார்கள் –
அவனுடைய நடை அழகு காண இ றே கண் படைத்தது –
நம் ஆழ்வாரும் கொண்ட பெண்டிர் -9-1-பதிகத்தில் பிராப்தியை சொல்லி –
அடுத்த பதிகம் பண்டை நாளாலே -9-2-பிராப்தி பலத்தை வேண்டினார் -என்று இ றே நம்பிள்ளை அருளிச் செய்து உள்ளார் –
107-19th /23rd பாசுரங்கள் –
19th -கிடந்த -என்று அவன் கிடந்ததோர் கிடை அழகு அனுபவிக்கப்பட்டது –
23rd -இங்கனே போந்தருளி -என்று அவன் நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் காண ஆசைப் -படுகிறாள்
திருப் புளிங்குடி கிடந்தானே -என்று அவன் கிடந்தவாற்றை கண்ட ஆழ்வார் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
மூ யுலகும் தொழ இருந்து அருளாய் –
காண வாராயே –
நின்று அருளாய்
இருந்திடாய் –
என்று நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் பிரார்த்தித்தால் போலே ஆண்டாளும் பிரார்த்திக்கிற படி –
108-26th /27th பாசுரங்கள் –
26th பாசுரத்தில் நோன்புக்கு உபகரணம் வேண்டிய ஆயர் -சிறுமியர்
அடுத்து -27th பாசுரத்தில் -நோன்பு முடிவு பெற்ற பிறகு -பெற வேண்டிய சம்மானத்தை பிரார்த்திக்கிறார்கள் –
109- 2nd /26th பாசுரங்கள்-
2nd -செய்யாதன செய்யோம் -என்று பூர்வர்கள் செய்யாத கார்யங்களை செய்வது இல்லை
என்று பிரதிக்ஜை செய்தார்கள் -தத் அநு குணமாக அனுஷ்டாநத்தைக் கூறுகிறது 26th பாசுரம் –
மேலையார் செய்வனகள் -என்று தங்களுடைய நோன்பு சிஷ்டாசார சித்தம் -ஆகையால் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகிறார்கள் –
110-27th /28th /29th பாசுரங்கள் –
கோவிந்த நாம த்ர்யார்த்தம்
111-28th /29th
கறவை -என்ற 28th பாசுரத்தில் -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –
என்று பிராப்தியை சொல்லி -சிற்றம் -29th பாசுரத்தில் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று
பிராப்தி பலமான கைங்கர்யத்தை பிரார்த்தித்த படி –
112-1st /30th பாசுரங்கள் –
மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு
அநுபவ ரசிகர்களுக்கு பெரு விருந்து –
113-பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –
11-வைகுந்தன் -13-புண்ணியன் -14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –
16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -18-மணி வண்ணன்
19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்
30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இ றே பிறந்து படைத்த ஐ ஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இ றே -இவனே ஸ்ரீ ய பதி என்றபடி –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .