Archive for December, 2012

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -97-108–அரும் பத விவரணத்துடன்–

December 14, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

தொண்ணூற்று ஏழாம் வார்த்தை

ப்ராப்யாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் சாஸ்திரம் சிலுகிடும் -(வருந்தி சண்டை இடும்)சாதனாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் பாரதந்த்ர்யம் சிலுகிடும் –சித்தோ உபாய ஸ்வீகாரத்தில் கை வைத்தான் ஆகில் ஸ்வரூபம் சிலுகிடும் –

(பாரர்த்த அனுபவ கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -ஸ்ருதி சிரஸ் -இவற்றையே சொல்லும் -ஐஸ்வர்யம் கைவல்ய ஸ்வார்த்த கைங்கர்யங்கள் கூடாதே -நம் ப்ரவர்த்தி நிவ்ருத்தி அவன் ஆதீனம் என்பதே பாரதந்தர்யம் -நம் பற்றும் பற்றும் கார்யகரம் அல்லவே -இசைவித்து தன் தாளிணைக்கீழ் வைத்தான் என்பதை உணர வேண்டுமே)

———————————————————-

தொண்ணூற்று எட்டாம் வார்த்தை

பிள்ளை திரு நறையூர் அரையரும் நம்பி திரு வழுதி வளநாடு தாசரும் –
வேம்பு முற்ற முற்ற கைக்குமா போலே
இவ் வாத்மாவும் ஒரு நாளைக்கு ஒரு நாள் விஷயாந்தரங்களிலே மண்டா நின்றது –
இதுக்கு பகவத் பிராப்தி கூடுமோ -என்று -பட்டரைக் கேட்க –

சரீர வியோக சமயத்திலே யாகிலும் இஸ் சரீரத்தில் உபேக்ஷையை பிறப்பிக்கையாலும் –
ஸ்ரீ மாலாகாரருக்கு தன் வடிவு அழகைக் காட்டினால் போலே –
இவனுக்கும் வடிவு அழகை காட்டுகையாலும் -அது கூடும் -என்று அருளிச் செய்தார் –

இதுக்கு பிரமாணம் –
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி – (பகவத் பக்தர்கள் யமனுடைய நாட்டுக்குச் செல்ல மாட்டார்கள் அன்றோ)

(ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி -என்று சாஸ்திரம் சொல்லுகையாலும்-வேண்டாமை நமன் தமர் என்றமரை வினவப் பெறுவார் அலர்-(பெரிய திருமொழி 10-6-5 )என்கிற பகவத் யுக்தியாலும்-உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -(பெரிய திருமொழி -8-10-7)என்று அபியுக்தர் சொல்லுகையாலும் பரிஹர மதுசூதன ப்ரபன்னான்-என்று எமன் தானே சொல்லுகையாலும் – பாகவதர் ஆனவர்களுக்கு யமவச்யத்தை வரக் கூடாது என்னும் இடம் பிரசித்தம்)

(அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் —55)

——————————————————

தொண்ணூற்று ஒன்பதாம் வார்த்தை –

சம்சார பீதியும் –
ப்ராப்ய ருசியும் –
ஆகிஞ்சன்யமும் –
அநந்ய கதித்வமும் –
ஸ்வ தோஷ ஞாபனமும் – –
ஸ்வரூப பிரகாசமும் –
ஸ்வரூப ஞானமும் –
இவை இறே அதிகாரிக்கு ஸ்வரூபம் –

ஸ்வரூபஞ்ஞன் ஸ்வரூப நிரூபணம் பண்ணுகையாவது –
ஸ்வதஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான நித்ய கைங்கர்ய அந்விச்சா விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி –

(ஞாத்ருத்வம் என்றாலே போக்த்ருத்வம் தானே வருமே -அது நீங்க வேண்டுமே-தன்னுடைய அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்தையும் -ப்ராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கிற எம்பெருமான் ஸ்வரூபத்தையும் அறிந்தவன் தனது ஸ்வரூபத்தை நன்கு ஆராய்ந்தால் ஸர்வஞ்ஞனான எம்பெருமான் விஷயத்தில் ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்யும் போது அந்த அடிமை தனது ஆனந்தத்துக்கு உறுப்பாகும் என்னும் எண்ணம் நீங்கப்பெறுவான் – இந்த எண்ணம் நீங்கப்பெறாதவனாகில் இவன் ஸ்வரூபஞ்ஞனாக முடியாது -ஸர்வஞ்ஞனான சர்வேஸ்வரன் இவனது உள் மனதை அறிந்து மோக்ஷ நிலையிலும் ஸ்வார்த்த கைங்கர்யத்தை அருளி விடுவான் -)

————————————————————

நூறாம் வார்த்தை

உபாசகனை ஈஸ்வரன் புஜிப்பிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –
பிரபன்னரை ஈஸ்வரன் புஜிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –

(ஸ மஹாத்மா ஸூ துர்லப-பெறற்கரிய அவனைப்பெற்று தான் அனுபவிப்பதில் ஊற்றமுடையவனாய் இருப்பான் அன்றோ-என்னையும் முற்றப்பருகினான் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -)

—————————————————–

நூற்றோராம் வார்த்தை –

அவித்யை அந்தர்பூதனான சேதனனுக்கு அநுபாவ்யமான போகம் (சப்தாதி போகங்கள் -விஷயாந்தரங்கள்)-அவித்யை நிவ்ருத்தி பூர்வகமான அநுபவேச்சை உடையவனுக்கு அநுபாதேயம் (பொருத்தமில்லாதது)-

அநுபாதேய போக ஸித்திக்கு காரணமான கர்ம காரணம் த்ரி விதம் –
ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –
தேகாத்ம அபிமானம் –
அந்ய சேஷத்வம் –

அதில் சிறிது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம்-சிர காலத்தோடே கூட-அவித்ய நிவ்ருத்தியை பிறப்பிக்க கடவதாய் இருக்கும்

அல்லாதவை –
தேகாத்ம அபிமானம் –
அந்ய சேஷத்வம் —
அவித்ய வர்த்தகங்களாய் இருக்கும்

(ஸ்வா தந்தர்யத்தில் ஒரு சிறிய ஸூஷ்ம அம்சம் -தன்னை ரஷித்துக் கொள்ள தானே முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பக்தி யோகம் போன்ற உபாயாந்தரங்களிலே மூட்டி பிராரப்த கர்மம் முடியும் வரையில் எண்ணிறந்த ஜென்மங்கள் எடுத்து முயற்சி செய்யும்படி பண்ணி அஞ்ஞானத்தைப் போக்கி இவன் விரும்பிய ஸ்வார்த்த மோக்ஷத்தைச் சாதித்துத் தரும் -என்றவாறு)

————————————————————–

நூற்று இரண்டாம் வார்த்தை

எம்பார் வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணுமதிலும்
ஸ்வயம் ஸ்வ தோஷ தர்சனம் பண்ணுகை ஸ்வ சாமர்த்யம் –

ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனுக்கு கூட கூடாத படியான ஸ்வபாவம் உண்டாய் இருக்கும் –

(சேஷத்வ பாரதந்தர்ய பெருமை அவனாலும் முழுவதாக உணர முடியாதவையாய் இருக்கும் -ஆகவே நம் தோஷங்கள் -மலைபோல் இருக்கவே -இவற்றை ஆராய்ந்து விண்ணப்பம் செய்யவே பேற்றை அடையலாம்)

புருஷனுக்கு பும்ஸ்த்வ நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த நிரூபணம் பண்ணுமதிலும்
புருஷ தேக நிரூபணம் பண்ணுகையே புருஷார்த்தம் –

(புருஷோத்தமன் தேஹமான பாகவதர்கள் உலாவும் பெருமாள் -சங்கம பரதேவதை அறிவது எளிது அன்றோ)

ஸ்வரூபஞ்ஞனுக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச விசேஷத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

(அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஆர்த்தி ஹரத்வம் முக்கியம்)

ஸ்வரூப வைசைத்ய தசையாவது –
பர ஸ்வரூப விசேஷத்தில் ஸ்வீகார  பிரதிபத்தி பிரவ்ருத்தி நிவ்ருத்தியில் அவ்யவசிதனாய் போருகை –

ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்தூல தேகாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக(அப்ராக்ருத -அங்கு சென்று பெறப்போகும்)ஸ்வ தேக பரிக்ரஹ இச்சாதிசயமும் தேக போக்யதையும் சத்ருசம் –

ஸ்வ ஸ்வரூப விஷய ஞான பூர்த்தி நிஷ்டையாவது —
பர ஸ்வரூப விஷய தர்சநாதி பிரகார பிரதிபத்தி பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
பர ஸ்வரூபத்தில் ஆர்த்தி விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி விசேஷ நிஷ்டை –

ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமாவது
பர ஸ்வரூப வைசைத்ய ஸ்மரண பூர்வகமாக-
பர ஸ்வரூப விஷய வ்யதிரிக்த விஷய கைங்கர்ய ருசி நிவ்ருத்தி பிறக்கை(உண்டியே உடையே என்று உகந்தோடும் –இம்மண்டலுடன் கூடாமல்) ஸ்வகத ஞானம் 

ஸ்வரூபம் -பர கத ஞானம் -உபாயம் –

இதர பல போக்த்ருத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி பூர்வகமான சம்யக் பல போக்த்ருத்வ பிரதிபத்தி விசேஷ நிஷ்டனானவன் –
சர்வோத்க்ருஷ்ட ஜாதனுமாய் (விண்ணுளாரிலும் சீரியர்)-சர்வ விஸஜாதீயனுமாய் –
சர்வ உபாய நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாயாந்தர்க்க தனானவன் –
சஜாதீத்வ பிரதிபத்தியும் -சஜாதீத்யத்வ வ்யாவ்ருத்தி விசேஷ நிஷ்டையும் உண்டு என்று –
புத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இவ்வார்த்தையால் அஞ்சர்த்தம் பிரதிபாதிகப் படுகிறது —
1-இதர விஷய ராக நிவ்ருத்தியும் –
2-விகித விஷய ராக பிரவ்ருத்தியும் –
3-இதர உபாய த்யாகமும் –
4-சித்தோ உபாய ஸ்வீகாரமும் —
5-ஹித பரன் பக்கல் யதா பிரதிபத்தியும் –

(சேஷத்வ பாரதந்தர்யமாகிற ஸ்வரூபம் ஆராய்ந்து நிரூபணம் பண்ணுவதே சால அரிதாகும் -ஸ்வ தோஷம் நிரூபணம் அறிந்து எம்பெருமான் திரு முன்பே விண்ணப்பம் செய்வது எளிது -அதுவே அவன் இரக்கத்துக்கு ஹேதுவாகும் –
எம்பெருமான் உகந்த வாழும் தேஹங்களான பாகவதர்கள் பெருமைகளை ஆராய்வது மிகவும் எளிதாகும் -மோக்ஷ ப்ராப்தியில் ஆசையைவிட அஞ்ஞானம் ப்ராக்ருத தேகம் நீங்க த்வரையே பிரதானம் -பரார்த்த அனுபவ கைங்கர்யங்களே பரம புருஷார்த்தம் என்றும் இருக்கும் – ஞானீ த்வாத்மைவ மே மதம்
வானவர்க்காவர் நற் கோவையே –
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –
சீதனையே தொழுவார் விண்ணுள்ளாரிலும் சீரியரே -பிரமாணங்கள் அனுசந்தேயம்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும் -)

————————————————————————

நூற்று மூன்றாம் வார்த்தை

நஞ்சீயர்  சரம தசையில் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வ விஷயமான வியாதி சாந்த்யர்த்தமான பிரபதநமும் ஸ்வரூப ஹானி —
இது தான் பாரதந்த்ர்யத்துக்கு தூஷணம்

பர விஷய வியாதி சாந்த்யர்த்தமான சாங்க பிரபதநமும் ஸ்வரூப ஹானி –
இது ஈஸ்வரனுடைய பர ரஷண விஷயமான சர்வஞ்ஞத்வாதிகளுக்கு தூஷணம்

(ஹித பரனான எம்பெருமான் நம்முடைய கர்மம் கழிவதற்கும் ஆத்மாவின் நன்மையின் பொருட்டும் இந்த நோயை அளித்திருக்கிறான் -இதை நீக்குவதும் அவன் பொருப்பே என்றும் இருக்காமல் கால்கட்டி அவனை நிர்பந்திப்பது பாரதந்தர்யத்துக்கு முரணாகுமே -பிறர் நோயைப் பரிஹரிக்கவும் அவனை வேண்டுவது அவன் ஸ்வரூபத்தை அழிப்பதாகும்)

—————————————————

நூற்று நாலாம் வார்த்தை –

அனந்தாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
இது என் ஜீயா -ஸூகுமாரராய் இருக்கிற நீர் –
வேர்த்த போது நீராடி -பசித்த போது அமுது செய்து -பட்டரை சேவித்து இருந்தால் –
சந்யசித்து வந்திலீர் என்று உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளுவார் உண்டோ –
இனி என் என்று பார்த்து மந்த்ராந்தரங்களை அடைய விட்டு –
திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து  -த்வயைக நிஷ்டர் ஆவீர் -என்று வாழ்த்தி –பின்னை அருளிச் செய்த வார்த்தை

த்ருஷ்டத்தில் உள்ளது எல்லாம் பட்டருக்கு ஆக்கினோம் –
த்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் என்று இருப்பதோர் இருப்பு உண்டு
அது பூர்வ தசையிலும் அநர்த்தாயவாம் (கீழ் நின்ற வேதாந்தி தசையை விட அநர்த்தமாகும்)-என்று பார்த்து –த்ருஷ்டதுக்கு கடவார் பெருமாள் – அத்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் -என்று இரும்

த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்
த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில்
ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது –
பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –

(தேஹ யாத்ரையாய் பெரிய பெருமாள் பொறுப்பு -ஆத்மயாத்ரை ஆச்சார்யர் பொறுப்பு என்றும் இருக்க வேண்டும் -தேஹ யாத்திரையில் கர்மம் அனுகுணமாக குறைகள் ஏற்படுவதற்கு ஆச்சார்யர் ஹேதுவாக மாட்டாரே -தேஹ யாத்திரையும் ஆச்சார்யர் என்றும் நினைப்பவனுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படலாம் -ஆச்சார்யராக வெறுத்தவனுக்கு பெருமாள் கை கொடுக்க மாட்டார்-பெருமாளை வெறுத்தால் ஆச்சார்யர் புருஷகாரம் செய்து கோபத்தை தணித்து கதி அருளப் பண்ணுவார் என்பதே இவ் வார்த்தையின் கருத்து -)

—————————————————

நூற்றஞ்சாம் வார்த்தை

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை (த்வைதி -சேஷி மிதுனம் இல்லை -சரீராத்ம பாவமும் இவர்களுக்கு இல்லை)சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று –
பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அவனும் அங்கே சந்நிஹிதனாக –
வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் –
இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து (நின் ஆணை திருவாணை அருளிச் செய்து)அருளினார் –அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –

——————————————————————

நூற்று ஆறாம் வார்த்தை

பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி
சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ –
என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –

அதுக்கு குறை இல்லை –
ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம்
வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –

(ஷட் பதம் சேர்த்துப் பார்த்தால் -பிரித்து பார்த்தால் அஷ்ட பதம் -25 அக்ஷரங்கள் -மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய பரிஹீருதம்)

——————————————————————-

நூற்று ஏழாம் வார்த்தை

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –

திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் –
த்வயம் சிஷ்ய வாக்கியம் –

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால்
ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை –

உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை
மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –

(எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் த்வய சரீரத்தை வெளியிடாமல் அத்ர த்வயம் என்றும் சாதித்து அருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது-ஸூவ ரக்ஷண நிவ்ருத்தியும் வேண்டும் -கைங்கர்ய த்வரையும் வேண்டுமே -)

————————————————————–

நூற்று எட்டாம் வார்த்தை –

பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் -ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண அதிகாரியான -பிரபன்னனுக்கு
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –

உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப ஹானி –
உபேயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –

(ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -இரண்டும் கொத்தை -யாவையும் யாவரும் தானாய் -உபாயமாக தேவதாந்த்ர சம்சர்க்கம் ஹானி தானே-உபாயத்துக்கு இரண்டுக்கும் பிராட்டி த்ருஷ்டாந்தம் -உபேயத்துக்கு இரண்டுக்கேமே இளையபெருமாள் திருஷ்டாந்தம் -நில் என்றாலும் வந்ததார்- வந்து பெருமாள் உகப்பாகாக கைங்கர்யம் செய்தார் அன்றோ)

இவ்விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் –
ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தே –
ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து –
அசோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும் –

பெருமாள் -நில் -என்னச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி –
அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து
காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளும் –

சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் -த்வயத்தில் இரண்டு கண்டத்தில் அர்த்தத்தையும் கொண்டு -பிரபன்னனாவன் கால ஷேபம் பண்ணும்படி –
(த்வய பதார்த்தங்கள் அழகாக அருளிச் செய்கிறார் மேல்)பெரிய பிராட்டியாரை பின் செல்லும் -ஸ்வபாவன் ஆகையாலே
இவள் புருஷகாரமாக கொண்டு ஆஸ்ரயிக்கிற நம் பெரும் பிழைகள் பாராதனுமாய் –
ஆஸ்ரயிப்பாருக்கு மிகவும் எளியனான நாராயணனுடைய திருவடிகள் இரண்டையும் –
எனக்கு அத்யந்தம் அநிஷ்டமாய் அநாதியாக இன்றளவும் வர வடிம்பிட்டு வருகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கி
எனக்கு இஷ்ட தமமாய் -நிரதிசய ஆனந்தவஹமாய் -அனந்தமாய் -அபுநாவ்ருத்தி லஷணமான மோஷத்தை பெறுகைக்கு அவ்யஹித சாதனமாகப் பற்றி நின்றேன் –(இதுவரை பூர்வார்த்தம் -மேல் உத்தரார்த்தம்)

பெரிய பிராட்டியாரோடு கூடி -சர்வ ஸ்வாமி யான நாராயணன் திருவடிகளிலே –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த  உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேன் ஆகவுமாம் –

அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்கள் தவிருவதாகவும் –
இதனுடைய அநுக்ரமணம் -இருக்கும்படி(கீழ் சொன்னதை விளக்கிச் சொல்வது)
சாபராதானனான சம்சாரி சேதனனுக்கு சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனைக் கிட்டும் இடத்தில் –இவனுடைய அபராதம் அவன் திரு உள்ளத்தில் படாதபடி –
அழகாலும் குணங்களாலும் -அவனைத் துவக்கி இவனை திருவடிகளில் சேர விடுகைக்கு –
கண் அழிவு அற்ற புருஷகாரமான பிராட்டி ஸ்வரூபம் சொல்லி –

மதுப்பாலே –
இவளுக்கு அவனைப் பிரிய சம்பாவனை இல்லாதா மகா சம்பத்தான நித்ய யோகம் சொல்லி –

நாராயண பதத்தாலே –
இவள் புருஷகாரமும் மிகை யாம் படியாக –
அவன் ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –

சரணவ் -என்கிற பதத்தாலே –
இவன் குற்றங்களை இட்டுக் கை விடும் என்று -வரையாதே மேல் விழுந்து
ஸ்வீகரிக்கும் திருவடிகளினுடைய சேர்த்தி அழகைச் சொல்லி –

சரணம் -என்கிற பதத்தாலே –
அவை தான் இவனுக்கு
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -சாதனம் என்னும் இடம் சொல்லி -ப்ரபத்யே என்கிற வர்த்தமானத்தாலே –
சேதனன் நெடும் காலம் பண்ணின பராதி கூல்யம் தவிர்ந்து -இன்று இசைந்து பற்றுகிற பற்றைச் சொல்லி –

உத்தர கண்டத்திலே
ஸ்ரீமத் பதத்தாலே –
உபேயத்திலும் பிராட்டி புருஷகார பூதையுமாய் (இங்கும் ஒன்றைப் பத்தாக்க புருஷகாரம் வேண்டுமே)ஸ்வாமிநியுமாய்க் கொண்டு –
அவனோடே நித்ய வாசம் பண்ணுகிற படியை சொல்லி –

நாராயண பதத்தாலே
அவனுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –

ஆய -என்கிற சதுர்த்தியாலே –
இவ்விருவருமான சேர்த்தியிலே இப் ப்ரபன்னனான சேதனன் –
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பிரார்த்தித்து –

அத்யாஹார்யமான ஸ்வ சப்தத்தாலே
பெற்றபடி சொல்லி –

நமஸ் ஸாலே
அடிமை செய்யும் இடத்து அவன் உகந்த உகப்பைக் கண்டு
உகக்கும் அது ஒழிய தன் உகப்பு தவிர்ந்தபடி சொல்லித் தலைக் கட்டுகிறது

(பாரதந்தர்ய அனுரூபமான ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கீழ் -இங்கு சேஷத்வ அனுரூபமான ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ வித கைங்கர்யங்களைப்பண்ண வேண்டுமே
புகளின்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் -பூர்வ வித அத்யாஹாரம்
அடிமை செய்ய வேண்டும் நாம் உத்தர வாக்கியத்தில் அத்யாஹாரம் -கைங்கர்யம் பெற நம்மையும் சேர்த்துக்கொள்ளுவார்)

(பற்றும் பற்றில் உபாயத்வ புத்தி வைப்பது அநந்ய சரணத்வமாகிய சேதன ஸ்வரூபத்துக்கு முரண்பட்டதாகும் -கைங்கர்ய அனுபவ போக்யதையை அறிந்து வைத்தும் அதில் நின்றும் மீள்வது ப்ராப்ய ருசியோடு முரண்படும் -பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகளே விடாது திண் கழலாய் இருக்கும் -முமுஷுப்படி -146-)

———————————————–——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி நூற்றந்தாதி -13/14/15/16/17/18–ஸ்ரீ M. A. V.சுவாமிகள்

December 13, 2012

அந்தஸ்த சர்வ ரசம் -அம்புஜா லோசனன் –
சுகம் அமுத வெள்ளம் கொடுத்தான்
கூடி கழித்து முழுகி அனுபவித்தார்
தேசிகர் -வல்லவர் -ஆசார்யர் பரியாய சப்தங்கள் —
அனுபவ சாமர்த்தியம் பிரதம நித்ய சூரிகள் சங்கம் உண்டாக பாரித்து
அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ –
ஒவ்வொரு ரசமும் -மதுரங்களான -தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்த
பிரீத்தி உடன் உபகாரம்
மாதா பிதா ஆச்சார்யா
தாஸ்யம் அறிவித்து சுவாரஸ்யம் ஹேது
நயாச -ஆத்மா சமர்ப்பணம் செய்ய
பகவத் அமிர்த ரசம் -என்  கடல் படா அமுதா
அஷம்-இந்திரியங்கள்-அனுபவிக்க தக்கனே கண்ணுக்கு காதுக்கும் –
குறிக் கொள் ஞானங்களால் -சில காலத்தில் -அருளி –
அத்யந்த சீலம் படிந்து குடைந்து ஆடி பருகி களிக்க
சபை உடன் கூடி அனுபவிக்க –
நித்ய சூரிகள் உடன் சேர்ந்து அனுபவிக்க –
ஏக தத்வம் என்னும்படி சம்ச்லேஷிக்க
பகிர்ந்து கொள்ள சஹாகாரி தேட –
வாயும் -பிரார்த்திக்க -கலந்தான் -பரத்வம் திண்ணன் வீடு பிராசன்கித சங்கதி-
ஆர்த்தி தீர கலந்த -தெரிவிக்க –
பெருமாள் சீதை உடன் கலந்த படியும் –
ஜீரணிக்க முடியாமல் துணை தேட்டமாய் -பகவத் சம்ச்லேஷம் –
லோகத்தில் சப்தாதி விஷயம்
நிலை நின்ற நித்ய சூரிகள் திரளில் போய் புக்கு –
ஊனம் அறவே வந்து -நித்ய சம்சாரி என்றி சந்கொசியாமல்
உள் கலந்த -யானும் தான் தம்முள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் அமுதம் ஒத்து
கனிவார் வீட்டு இன்பமே
சர்வ ரசங்களும் உண்டாகும் படி அந்தரங்க கலவி இனிமை
வானில் அடியார் குழாம் -வையத்து அடியார் குழாம் இல்லை
அபிநிவேசத்தில் ஊறிய
மாறன் அடியார் உடன் நெஞ்சே கூடி ஆடு -கூத்தாடி –
ஆடு -முழுகி அனுபவித்தல்
அடியீருடன்  கூடி நின்று ஆடுமினே ஆழ்வார் போல்

———————————————————————————————————————————–

ஆடி ஆடி -நாயகி பாவம் -தாயார் பேச்சாக
பிரார்த்திக்க -அனதிகமென கிடைக்காமல் சமுச்தித்த ஆர்த்தி பெருக
நிர்வேதனம் -தெரிவிக்க -முனி மூர்ச்சை அடைந்து –
பிரகலார்த்தனுக்கு அனுக்ரகித்த நரசிங்கன் –
ஷபித  உஷா வல்லபன் -விறல் வாணன் ஆயிரம்
இலங்கை அழித்தவன்
வைனதேயன் –
ஸ்ர்மஹர துழாய் மாலை தரித்து
அமுதே
ரஷிக்க கவனம் -திரு பாற்கடல் யோகு -கிடந்தது
விரோதி விறல் காஞ்சனை வஞ்சனை செய்து
தீர்த்த ஹெதி -திருவாழி தரித்து
பிரசித்த வைபவனை அனுபவித்து –
தாய் பேச்சால்-
எம்பெருமானை பிரிந்தது அன்றிக்கே -பிராண பூதரான நித்ய சூரிகளை பிரிந்தத்தால் –
விரக பரவச வியாபார உக்திகளை அனுகரித்து தாயார் பேச்சாலே அருளி செய்து –
வானில் -அடியார் -கூடி இன்பம் எய்தாத குறையால்
மிக ஆடி
அன்புற்றார் -மதுரகவி போல்வார்
தன நிலைமை ஆய்ந்து உரைக்க
அந்தோ
ஆடி மகிழ் -ஹ்ருஷ்டராவது
கூத்தாடி நிர்தயந்த -கேசிது மது வனம் –
பாடி ஆடுமின் -குதித்து பஜனை சம்ப்ரதாயம்
முழுகி அனுபவித்தல் மனசாலும் உடம்பாலும்
நீராடுதல் சப்தம்
அவர்கள் சங்கமத்தில் –
மிக வாடி -வாடி வாடும் –
அன்புற்றார் தன நிலைமை -முயல்கின்றேன் உன் மொய் கழல்
விஞ்ஞாபிக்கிற படியை –
பிறர் பேசும்படி மோகித்து –
அற்ற பற்றறும் இரங்கும் படி -ஆழ்வார் நிலைமை ஐயோ
எங்கும் நாடி நாடி நரசிங்கா –என்று வாடும்
உம்மை காண நீர் இரக்கம் இலையே
துன்புற்றார்
தம் தசை தமக்கும் வாசாம் அகோசரம்
கண்டார் எல்லாம் இரங்கும் படி –

—————————————————————————————————————————-

அம்தாமத்து அன்பு செய்து –
ஆழ்வார் ஆசைப் பட்ட படி சூரிகள் உடன் கலந்தார்
ஆழ்வார் உடன் கலந்தத்தால் தேஜஸ் பெற்றனர்
இரண்டு நிர்வாகம் –
மரகத மலை போல்
ஈச செங்கனி வாய் -பிரபுல்ல கமலாஷி –
சந்தோஷத்துடன் ஆழ்வார் அருளி செய்த –
சு பிராப்த்யா -நிரதிசய கீர்த்தி உக்தன் –
பிராட்டி -வாசச்தானம்
மலை போல் திரு மேனி
ப்ரீத்தி மிக்கு
கார் முகில் போல் ஏன் அம்மான் கண்ணன்
நைக பூஷணம் பல பலவே ஆபரணம்
ஆஸ்ரித விஷயத்தில் -கிடைக்க அரிய ரசம்
அசந்கேய கல்யாண குண உக்தன்
விசித்ரமானவன் -ஆண் அல்லன் பெண் அல்லன்
விரஜை கோபிகள் -நிறம் பெற்றது போலே அனுபவித்து அருளினார் –
விடாய் தீர ஆர்த்தி தீர கலந்து வாட்டமில் புகழ் வாமனன்  ஆனவன் –
சடக்கென -வந்து சம்ச்லேஷித்து -அடியார் குழாம் களுடன் வந்து புது கணிப்பு மண்டி அனுபவித்து –
அந்தாமத்து அன்பால்-பரம பத்து ப்ரீத்தியை தம்மிடம் வைத்து –
அடியார்களோடு -அஸ்த்ர பூஷண -சுத்த சத்வ மயம்
அசெதனத்திலும் ஜீவன் அபிமானியாக உண்டே இங்கு கூட –
ச பரிகாரமாய் –
சர்வ ஸ்மாத் பரன் -கஜேந்திர ஆழ்வான் போல் -வள்ளல் தனம் -சந்தாபம் தீர்ந்து -துக்கம் போக
ஜடை முடி நீக்கி தீர்த்தம் ஆடி பெருமாள் -பரதனுடன் சேர்ந்து மகிழ்ந்தது போல்
திரு உடம்பு வான் சுடர்
என்னுள் கலந்தான் -செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர்
மரகத மலை
வாட்டமில் வாமனன்
சவாசனமாக சந்தானம்போக
துக்கம் -ஆடி வாடி வாடுதல் இரக்கம் -உள்ளம் உருகி நெஞ்சம் வேக
இவை அனைத்தும் போக –
அல்லாவி உள்  கலந்து –
உள்ளுள் ஆவி உலர்ந்தது இருந்தது ஆவி உள் கலந்து
உன் தன் மொய் கழல் -நித்யமாக
நிதியை அடியில் இட்டு வைப்பாரை போல் அன்பை ஆழ்வார் திருவடிகளில் வை

———————————————————————————————————————————————

நீசன் -அல்லாவி உள் கலந்து -என் முடிவு காணாதே
நைச்ய பாவம் தலை எடுக்க –
நிரஷ்ய திட சங்கம் சொல்லிய சடாரி ஆறாவது பதிகத்தில்
அவனை ஆச்வசிப்பித்தார் –
வைகல் தோறும் அமுதாய வானேறே
எங்கும் பக்க நோக்கு அறியான்
உள்ளி வணங்கி மகிழ்ந்து ஆட
உன்னை எங்கனம் விடுகிறேன்
அந்தமில் அடியை அடைந்தேன் –
முடியாதது இனி எனக்கு எது
விரக பயம் -உண்டாக்கி –
உன்னை என்னுள் நீக்கேன்
ஆத்மாவுடன் எகதத்வம் போல் கலந்து
நித்ய அநேக உபகாரகன் –
சு விரக சகிதம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதன்
அதிசங்கை  அவன் பண்ண –
என் முடிவு காணாதே வள வேழு உலகு தலை எடுக்க
பாரதந்த்ர்யா வாத்சல்யம் -விச்மிதராய்
அதி சங்கை தீர்த்து –
வைகுந்தன் வந்து கலந்ததன் பின்
செய்கின்ற நைசயம் சிந்தித்து அவன் நைய மாசுச சொல்லி
வன்மை அடைய வைத்தார் -ஒவ்தார்யம் இல்லை-பலிஷ்டன் ஆனான்
ஒரு நீராக கலந்ததால் வாழ் மாறன் -சத்தை பெற்ற ஆழ்வார்
செய்கின்ற நைசயம் -அல்லாவி -போலே
எண்ணாக முடியுமோ விசாரித்து சிதிலமாக
என்  விச்லேஷத்தில்
உன்னை எங்கனம் விடுவேன் –
விடுவேனோ -அருளிச் செய்ய
விஜ்ஜுர -போலே -கிருத கிருத்திய தரித்தார் பெருமாள் –
எங்கும் பக்கம் நோக்கு அறியாத மரகத மலை -ச்தைர்யத்தை உறுதியாக -ஏற்படுத்தி –
———————————————————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி நூற்றந்தாதி -9/10/11/12–ஸ்ரீ M. A. V.சுவாமிகள்

December 13, 2012

சாத்விக போக பிரதத்வம் -பொறுக்க பொறுக்க -கொடுக்கிறான் –
நவமே சடாரி -ருசி அப்யதிகாம் ததானா க்ரம -அகிலாங்க –
பர்யந்தே -அருகில் –
சஷூர் மத்யே
சாத்ம்ய போக பிரதாநாத்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி கொள்கிறான் -ஆர்ஜவம்
சூர்பணகை  கேட்டதுக்கும் முழுதும் சொல்லி அருளிய பெருமாள் ஆர்ஜவ குணம் –
இன்று ஆஸ்ரயிக்கிறவர் உடனே நித்ய சூரிகள் போலே புள்ளேறி ஓடும்
திருத் துழாய் சூடும் -அனைவர் உடன் ஒவ் ஒரு முறையில் பரிமாறி
சர்வ இந்த்ரியங்களாலும் -சர்வ காத்ரயங்களாலும் பரிமாறி –
இவை அறிந்தோர் -அர்ஜவத்தை அறிந்தோர்
ஈசன் உவந்து ஆர்த்த அவயவம் தோறும் -அணையும்
சம்ச்லேஷிக்கும் -சாத்மிக்க சாத்மிக்க –
சுக்ரீவன் பிரசாதம் எதிர்பார்த்து இருந்த பெருமாள் –
என்னுடை சூழல் உளானே -அருகில் ஒக்கலை தோளில் நாவின் உளானே கண்ணின் நெற்றில் உச்சி உளானே –
பசியர் -உட்கார்ந்து -படுத்து –
அணையும் சேவை யாவது அருகலில் அறு சுவை –
பன்னீராயிரப்படி -மூன்றாவது பாசுரம் வியாக்யானம்
ஹேய பிரத்யநீயணன் ஸ்வரூப -புண்டரீ காஷத்வம் -பரத்வம்
உபய லிங்க விசிஷ்டன் -நித்ய சூரி நிர்வாகத்வம்
விக்ரக யோகம்தாமரைக் கண்ணன் கருட வாகனத்வம் ஸ்ரீ ய பதித்வம் –
பிராட்டி திருவடி திரு அனந்த ஆழ்வான் -அனைவர் ரசமும் ஆழ்வார் இடம் காட்டி
ஆர்வத்தால் -மாறன் அருளிய ஸ்ரீ ஸூக்தி -நாம் கேவலம் வாயாலே சொன்னால் மால் பொன் தாழ் நம் தலை
ஆஸ்ரித வ்யாமுக்தன் -சப்ரஹநீயம் -சரணங்கள் -ஹிரண்ய மசறு-மீசை ஹிரண்ய கேசம் உபநிஷத் –
பொரும் -சேரும்  நீள் கழல் சென்னி பொரும் –

—————————————————————————————————————————————-

இத்தம்
பக்தி போல் எண்ணிலும் வரும் -ஸ்வ சமஸ்த தேக சம்ச்லேஷ
சவ கண்ணே -நிர்ஹெதுகத்வ கிருபை –
விகணன் சுலபன்
வ்யக்த பூர்வாக உபகாரகன் -பூர்வ பூர்வர் பர்யந்தம் -எந்தை தந்தை தம்பிரானை
பந்த மாத்திர உபாதேயம்
தர்சித்த அர்ச்சம்
சர்வ ஸ்மாத் பரன் -சர்வ சமன் -பஜநீயத்வம் ஈட்டில்
பாக்த சௌலப்ய சீமா
சர்வ அபராத சகத்வம்
ஸூ சீல்யன்
சுவாராதன்
சுக ரூபா உபாசனத்வன்
ருஷு பிரக்ருதி
சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்கையாலும்
நிர்ஹெதுக கிருபை –
சர்வ அங்க ஆலிங்கனம்
பரதவன் பஜநீயன் -சௌசீல்யம் -சுலபன்
சர்வ அபராதசகன் -நீசன் -விரும்பி -பற்றுவது ஆச்ராயண சௌகர்யம் -ஆர்ஜவம் -சாதிவிக போக பிரதன்
சங்கதி விசேஷம் -வியாக்யானங்களில் –
உகப்புடன் -நம்மால் செய்ய ஒன்றும் இல்லை
புத்தியை நியமிக்கறதும் அவனே
அத்வேஷம் தொடங்கி -பரிகரணை -பரம பக்தி அனைத்துக்கும் நிர்ஹெதுக  உபகாரத்தை அனுபவித்து –
தானே உபாயம் உபேயம் –
பக்திக்கும் பரிகணைக்கும் -அதுக்கும் மேல் எண் தான் இன்றிக்கே
ஸ்திரமாக தர்சித்து –
பிரகாரத்தை அருளி செய்த ஆழ்வார்
திருவடிகளை -சிரசானது வகுத்திடுக
திரு குருகை பெருமாள் வாக்கு மங்களாசாசனம் பண்ணுக
தலையே தரிக்கவும் வாக்காலே சொல்லு –

——————————————————————————————————————————————————

முராரி குண அநுபவத்தி -பாஹ்ய சங்கம ருசி -பெருக
அலாப -துக்கப்பட்டு
கண்ணால் பார்ப்பவை துக்கம் படுவது போலே –
த்வதீய சதகத்தில் ஆதியில் –
மட நாராய் -நித்ராதி நிவாரகன்
சைதில்யம் உண்டாக்கி
சர்வ காலமும் ஏங்க
திவா ராத்திரி விபாகம் அற
முடியும் ஆர்த்தி பண்ணுகை
பிரிந்தவரை மெலிய வைக்கை
மதி மயக்கம் உண்டாக்கி –
ஆத்மாவை உலர்த்தி –
ஷன விரக தசை துச்சகத்வம்
சகல பதார்த்தங்களையும் சக துக்கி
பாரித்த படி -பெரும் நலம் நல்லடி போது அனுபவிக்க பெறாமையாலே
ஷட் குண சாம்யம் -கடி மா மலர் பாவை உடன் சாம்ய ஷட்கம் -ஆச்சார்யா க்ஹிருதயம்
அனந்யார்ஹம் அநந்ய சரணத்வம் அநந்ய போகத்வம் ததேக நிர்வாகத்வம்
பிரிந்தால் தறியாமை கூடி இருந்தால் தரித்து –
தாமான தன்மை குலைந்து பிராட்டி தசை தரித்து
மேன்மை நீர்மை சௌந்தர்யம் -நம்பி -திருக்குறுங்குடி
அர்ச்சாவதார ஆசைப் பட்டு-
கண்ணான்சொலை இட்டு -சுழன்று –
நாரை அன்றில் –இருள் களி -ஒன்பது விஷயம்
அவற்றுக்குமாகதான் நோவு பட்டு சொல்லுகிற அன்யாபதேச பேச்சால்

திருமால் மறைய நிற்க ஆற்றாமை போய் விஞ்சி நிற்க -அழுத மாறன் –
திணிந்து நோக்கும்
அனுபவ யோக்யமாகும் படி கிட்டுகைஎச்வாபம் =வாயும்
ஸ்ரீ ய பதி
போகம் தரிக்க கொஞ்சம் மறைந்து நிற்க -புக சாத்ம்ய ஹேது –
கொபிகளுக்கும் மறைந்தது போலே
மைந்தனை -மலராள் மணவாளனை -திருமால்
நீயும் திருமாலால் கொட்பட்டாயே
மணி -நீர்மை
வானவர் கண்ணனை
தன்னதோர் அணியை –
ஆற்றாமை -ஆறாத காதல் கை கழிய போய் நிற்க –
பெருமாள் சீதை இளைய பெருமாளை கட்டி அழுதது போல்
ஆராய அரிய –
ஆற்றாமை சொல்லி
காற்றும் கழியும் கட்டி அழ –
செறிவார் செறிந்து இருப்பார் அநந்ய பிரயோஜனராய்
திணிந்து -தாம் பட்ட துக்கம் பட வேண்டாதபடி ஆக்கிகொடுப்பார் –
ஆதேச உபநிஷத் சாயை பாசுரம் நிழல் –

————————————————————————————————————————————

திண்ணன் வீடு –
பரத்வம் -விபவத்தில் –
கண்ணனே சிருஷ்டித்தவன் -பீஷ்மர் வார்த்தை –
ராம கமலா பத்ராஷார -தாமரைக் கண்ணன்
பர உபதேச பிரகாரம் –
ஆழ்வார் இடம் அற்று தீர்ந்து அவர் அடிக்கே உற்றாரை ஊன் மேல் இடாது
மாமிச தேகம் கிட்டாது –
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது

————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி நூற்றந்தாதி -5/6/7/8–ஸ்ரீ M. A. V.சுவாமிகள்

December 13, 2012

ஸ்ரீ ய பதியால் அருளப் பெற்ற மாறன் அடி பணிந்து உய்ந்த யதீந்திர பிரவணர் இன் அருளால் பெற்றோம் –
1-அகில ஜகத் காரண பூதனை -அயர்வறும் அமரர்கள் அதிபதியான அவனை -வெண்ணெய் களவு கண்டு
அமுது செய்த க்ருத்ரிமனே –
2-இமையோற்பளரும் இத்யாதி பிரமாதி சகல பதார்த்தங்களையும் சங்கல்பத்தாலே சிருஷ்டித்த ஆஸ்ர்யமான
தன மகிமைக்கு அவத்ய  அவஹமான பிரமாதிகள் செய்கிற பூஜநத்தாலே ப்ரீதான் ஆகையாலும் –
3-திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் –
4-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
5-நீ யருளாய் உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு
6-விண்ணோர் தலைவா -இத்யாதி -நித்ய சூரிகள் நாயகன் கோப ஜாதிகள் உடன் பொருந்தி நிற்க்கையாலும்
7-அடியேன் காண்பான் அலற்றுவன் –
8-உண்டாய் வெண்ணெய் -பக்த வஸ்து பிரசக்தே
9-அம்மா மூர்த்தியை சார்ந்தே மாயோம் –
10-சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து
சௌ சீல்யத்தை உடையவன் -வள வேழு உலகு -தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் .

வள மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்ந்தான் பரிந்து -5-
அவதாரிகை –
இதில் சர்வ சமாஸ்ர்யணத்துக்கு உறுப்பாக சௌசீல் யத்தை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் -அஞ்சிறைய மட நாரையில் -தூத பரேஷன வ்யாஜத்தாலே தம் ஆற்றாமையை அவனுக்கு
அறிவித்த அநந்தரம் -அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அவன் பெருமையையும் தன் சிறுமையையும்
நினைத்து -ஸூரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி தூஷிப்பதில் அகன்று போகை நன்று -என்று தாம்
அகலப்புக -ஆழ்வீர் -உம்முடைய பொல்லாங்கைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்ய லோகன் -என்கிறபடியே திரிவிக்கிரம ஆபதான சித்தமான தன் செல்லாமையும் காட்டித் தம்மை அவன்
சேர்த்துக் கொள்ள -அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தினபடியை அருளிச் செய்கிற -வள வேழு உலகில்
அர்த்தத்தை -வளம் மிக்க -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
வியாக்யானம் –

வள மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை -அதாவது -அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான
நித்ய ஸூரி  நிர்வாஹகத்வாலே வந்த சர்வேஸ்வரனுடைய பெருமையையும் –
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹமாய் அணு பரிமாணமாய் இருக்கிற
ஆத்மாவினுடைய தண்மையையும் -என்கை -வள வேழு  உலகின் முதலாய வானோர் இறையைக்
கள வே ழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா  என்பன் -அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை
அடி ஒற்றின படி –
உளமுற்று -எம்பெருமானுடையவும் தம்முடையவும் உத்கர்ஷாப கர்ஷங்கள் திரு உள்ளத்தில் பட்டு –
அங்கூடுருவ ஓர்ந்து -இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில் நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து –
அருவினையேன் -என்று தொடங்கி -அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் ஆராய்ந்து -இப்படி
தீர்க்க தர்சியாக தர்சித்து –
தளர்வுற்று -மிகவும் அவசந்னராய் -ந கல்வத்யைவ –ய தி ப்ரீத்தி -இத்யாதிப்படியே
நீங்க நினை மாறனை -அகன்று அத்தலைக்கு அதிசயத்தை பண்ண வெண்ணுகிற ஆழ்வாரை
நீங்குகை -ஸ்வ விநாசம் ஆகிலும் ஸ்வாமிக்கு  அதிசய அவஹராய் விச்லேஷிக்க ச்மரிக்கிறவரை –
மால் -தன் செல்லாமையைக் காட்டி ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் -நெடுமாலே -10-
மாலே மாயப் பெருமானே -11-என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி-ஏவம் வித வ்யாமுக்தனானவன்
நீடிலகு சீலத்தால் -நெடுகிப் போருமதான நித்ய விசத சீல  குணத்தாலே –அதாவது –
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -3-என்றும் -உண்டாய் உலகு ஏழு முன்னமே -8-என்று தொடங்கி
நெய் யூண் மருந்தோ மாயோனே -8-என்றும் -இப்படி சௌசீல் யாதிகளாலே வசீகரித்தபடி என்கை –
பாங்குடனே சேர்ந்தான் பரிந்து -பரிந்து பாங்குடனே செர்க்கையாவது -இவரை ச்நிக்தனோபாதியாக
ச்நேஹித்து மங்க விடாமல் -அலப்ய லாபமாக ஹர்ஷத்துடனே சங்கதராகப் பண்ணினான் –
திருவாய்ப் பாடியில் வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய்  கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -1-8-5-என்னக் கடவது இறே –

சூத்திர ரூபமாக ஆச்சார்யா ஹிருதயம் சூர்ணிகை –
ஸ்லோகம் பாசுர ரூபமாக இவை –
இராய்த்து அகலப் பார்த்தார் -சௌசீல்ய குணம் காட்டி –
ஸ்வ ஆலிங்கனாதி  சபலே –புருஷோத்தமேசபி
ஸ்வ அயோக்யாயோக்யதாமாபி
சரீரம் தொட்டால் தீட்டு -வார்த்தை சொன்னாலே தீட்டு –
அவன் மேன்மை எங்கே -வானோர் இறை
அருவினையேன் -தீர்க்க சிந்தனை -செய்து –
அவனுக்கு அதிசயம் -பெருமை உண்டாக்க -கிட்டாமல் இருப்பதே பெருமை –
சேர்த்து கொண்டவன் மால் -கருமை பெருமை மையல் மால் -ஆஸ்ரித வ்யாமுக்தன் அன்பை காட்டி –
நீடு இலகு விளங்குகிற –
சம்வாதம் ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் -நினைவு கொள்க –
-பரிந்து பாங்குடனே -மங்க விடாமல் –
வெண்ணெய் போல் ஆழ்வார் திருமேனி –
வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

————————————————————————————————————————-

தாச்யேஷு -தேச சமய அங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமச்ய
பக்தி பரம் பஹூமதா தத் ஏவ சோயம்
ச்வராத இத் யுபதி தேச முநிச்து ஷஷ்டே
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகலேசரணம்
சீலவான் -ஸ்ரீ ய பதி பரி பூரணன் -குற்றம் பாராமல் கொடுத்ததை கொண்டு சந்தோஷிக்க
பரிவதில் ஈசன் –
ஆராதனைக்கு அரியன் அலன் -என்று
பண்புடனே பேசி -இட்டது கொண்டு த்ருப்தனாம் -எம்பெருமான் பண்புடன்
அவனது ச்வராதையை சொல்லி அல்லது நிற்க மாட்டாத தம் ச்வபாவத்தால் சொல்லி
சபர்யா பூசித சமயக் -உரிமையுடன் ஓதி அருள் மாறன் –
ஒழிவித்தான் -இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –

————————————————————————————————————————-

பிறவித் துயர் பற்றுதலே இனிமை யானது –
சுசுகம் கர்த்தம் -ஆனந்தம் விளைவிக்கும் நினைக்கையே அபிமத விஷய ஸ்மரணம் போல்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பெரிய பெருமாள் கண் அழகு –
நிரவத்ய கந்தாத் –
தத் செவனம் சரசம்
புருஷார்த்த சீம்னோ
பும்ச ஸ்ரீ ய பிரணாயினி
வாதி கேசரி  அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –

—————————————————————————-

இதில் ஆச்ராயண ரச்யதையை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
பிறவியை போக்கி நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலப் பெருமாள்
திருமால்-திருமகளார் தனிக் கேள்வன் –
அறவினியன்  பற்றும் அவர்க்கு என்று –
பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு -முன்புற்ற நெஞ்சே –

——————————————————————

நேத்ரா நேதா நிர்வாகன் -கண்ணாவான் –
நிருபாதிக ஆர்ஜவத்வம்
ஓடு மனம் -ஆர்ஜவ குணா யுக்தன் -நாடறிய ஓர்ந்து -உரை செய்த –
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை

————————————————————————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

மனக்கே ஆட்செய்எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்துஇடை வீடுஇன்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

    பொ-ரை : ‘எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய்வாய்,’ என்று என் மனத்தின்கண் வந்து பிரிதலின்றி நிலை பெற்று நின்று, தனக்கே நான் உரியவனாம்படி என்னை ஏற்றுக்கொள்ளுமிதுவே, தனக்குத் தகுதியாகக் கிருஷ்ணனிடத்தில் யான் விரும்பிக் கொள்ளுகின்ற பயனாகும்.

    வி-கு : ‘எனக்கே தனக்கே’ என்பனவற்றிலுள்ள ஏகாரங்கள்; பிரிநிலைப்பொருளில் வந்தன. ‘மனக்கு’ என்பது ‘மாடக்கு’ என்பது போன்ற விகாரம். ‘என்று, வந்து, மன்னி, கொள்ளும் ஈதே சிறப்பு’ என முடிக்க. ‘கொள்சிறப்பு’ – வினைத்தொகை. கண்ணனை-வேற்றுமை மயக்கம்; ‘கண்ணனிடத்தில்’ என்பது பொருள்.ஈடு : நான்காம் பாட்டு. 1இத்திருவாய்மொழியில், இவர் அறுதியிட்ட பிராப்பியமாவது, 2மலர்மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று ‘தனக்கேயாக என்னைக்கொள்ளும் ஈதே’ என்பதே அன்றோ? அதனை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். 3‘சர்வேஸ்வரன் மூன்று விதமான சேதநரையும் சொரூபத்திற்குத் தகுதியாக அடிமை கொள்ளுகின்றான்; நாமும் அப்படியே சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெறுவோமே!’ என்று அருளிச்செய்கிறார் என்று இவ்விடத்திலே எம்பார் அருளிச்செய்வர். 4‘முத்தரும் நித்தியரும், தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பிப்பார்கள்; பத்தர், தாங்கள் ஆனந்தியாமல் அவனை ஆனந்திப்பிப்பர்; ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ அன்றே? மயர்வு அற மதி நலம் அருளப் பெற்றவர்கள், ‘இறைவன் திருவுள்ளமானபடி செய்கிறான்’ என்று

இராமல், ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்று பிரார்த்தித்தல் என்?’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் எம்பாரைக் கேட்க, ‘அது கேளீர்; முன்பு பிரிந்து அன்று; பின்பு பிரிவிற்குக் காரணமுண்டாய் அன்று; இரண்டும் இன்றி இருக்கச்செய்தே, 1‘அகலகில்லேன் அகலகில்லேன்’ என்று கூறும்படி செய்வது விஷயத்தின் தன்மையே அன்றோ? அப்படியே, பேற்றிலே உள்ள ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறதுகாணும்’ என்று அருளிச்செய்தார்.

    2எம் மா வீட்டில் எம் மா வீடாய், வைஷ்ணவர்கள் அனைவர்க்கும் செல்வமுமாய், உபநிடதத்தின் இரகசியப் பொருளாய், சர்வேஸ்வரன் பக்கலிலே விரும்பிப் பெறுமதாய், இவ்வாத்துமாவுக்கு வகுத்ததுமான பாரதந்திரியத்தை அவன் பக்கலிலே விரும்புகிறார்.

    எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – முதலிலே ‘ஆள் செய்’ என்னவேண்டும்; இதனால்,  ஸ்வாதந்திரியத்தை வேறுபடுத்தி நீக்குகிறார்; ‘எனக்கு ஆள் செய்’ என்ன வேண்டும்; இதனால்,  அடையத் தகுதி இல்லாத மற்றையோரை வேறுபடுத்தி நீக்குகிறார்; ‘எனக்கே ஆள்செய்’ என்ன வேண்டும்; இதனால், தனக்கும் அவனுக்கும் பொதுவான நிலையைத் தவிர்க்கிறார். இதுதான் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்க வேண்டியதாதலின், ‘எக்காலத்தும்’ என்கிறார். 3’எனக்காக இதனைச் செய் என்று கூறுக, என்கிறபடியே, ‘இன்னதைச் செய்’ என்று ஏவிக்கொள்ள வேண்டியிருத்தலின், ‘என்று’ என்கிறார். ‘இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது; என்னுடைய மனத்திலே வந்து புகுதல் வேண்டும்’ என்பார், ‘என் மனக்கே

வந்து’ என்கிறார். ‘புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது, நிலையியற்பொருள் போன்று எழுந்தருளியிருக்க வேண்டும்’ என்பார், ‘இடைவீடின்றி மன்னி’ என்கிறார். ‘இருந்து கொள்ளும் காரியம் என்?’ எனின், ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே’ என்கிறார்; அதாவது, மலர் மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று கொள்ள வேண்டும். ‘அவை, பிறர்க்கேயாக இருக்கும் பொருள்களாமோ?’ எனின், அவை, சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய், மிகுதியைக் கழித்துப் போகடுமித்தனையே அன்றோ?’ ஆயின், அடிமையாய் உள்ள ஒருவனுக்கு, தான் ஒன்றை விரும்பிக் கேட்பதற்கு இடம் உண்டோ?’ எனின், ‘இருவர் கலக்குமிடத்துக் கலவியால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்குமன்றே? அங்ஙனம் என்னுடைய பிரீதிக்கு நான் சேர்ந்தவனாக ஒண்ணாது,’ என்கிறார் என்றபடி.

    ‘இதுகாறும், ‘அம்மா’, ‘நின்’ என்பன போன்று முன்னிலையாகக் கூறிவந்தவர், இப்பாசுரத்தில், ‘தனக்கே’ என்றும், ‘கண்ணனை’ என்றும் படர்க்கையாக அருளிச்செய்வதற்குக் காரணம் என்?’ எனின், ‘பேற்றினை அறுதியிடும் சமயத்தில் திருமுகத்தைப் பார்க்கில் உறுதி குலையும்’ என்று கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்.

    1மேல் ‘தனக்கேயாக’ என்ற பின்புத்தை ‘எனக்கே’ என்ன வேண்டுமன்றே? ஆதலின், ‘எனக்கே’ என்கிறார். இனி, புருஷார்த்தம் ஆகைக்காகச் சொல்லுகிறார் எனலுமாம். 2‘விரும்பிப் பெறவேண்டியவன் ஒரு சேதநனே ஆவன். நீர் விரும்புகிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேண்டுங்காணும்’ என்ன, ‘யான் கொள்’ என்கிறார்; அதாவது, ‘சொரூப ஞானத்தை நீ பிறப்பிக்க, அதனாலே சொருப ஞானமுடைய நான் ஒருவனும் பெறும்படி செய்யவேண்டும்’ என்றபடி. ‘உமக்கும் நம்மால் எப்போதும் செய்யப்போகாது’ என்ன, ‘சிறப்பே’ என்கிறார்;அதாவது 1பலகால் வேண்டா; ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைக் காப்பிட்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாவது, ஏற்றம். அதாவது, புருஷார்த்தம். ‘சொரூபத்திற்குத் தக்கதான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேண்டும்’ என்றபடி. ‘இனி, சிறப்பாவது, முத்தியும், செல்வமும், நன்றியும்’, என்றது, ‘நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே’ என்னுதல்; அன்றிக்கே, ‘உன் பக்கல் கொள்ளும் செல்வம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே’ என்னுதல்; அன்றிக்கே, நன்றி உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே’ என்னுதல் என்றபடி.

. இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார்.
‘இத்திருவாய்மொழியில்’ என்று தொடங்கி.

2. ‘பலவுறு நறுஞ்சாந்தம் யடுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

  ‘சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;                        

  ‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.’                  

(கலித். 9)

  என்னும் தாழிசைகள் ஈண்டு ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

3. ‘சர்வேஸ்வரன் மூன்று வகைப்பட்ட சேதனரையும் தங்களுக்கு அனுபவத்தின் பயன்
இன்றிக்கே தனக்கே உறுப்பாம்படி ஸ்வரூப அநுரூபமாக அடிமை கொள்ளாநின்றான்
அன்றோ? நாமும் அப்படியே ஸ்வரூப அநுரூபமான பேறு பெறுவோமே!’ என்று
அருளிச்செய்கிறார் என்றபடி.

4. மூன்று வகைப்பட்ட சேதனரும் அத்தலைக்கு உறுப்பாம் படியை விரிக்கிறார், ‘முத்தரும்
நித்தியரும்’ என்று தொடங்கி. முத்தரும் நித்தியரும் ‘அஹமந்நம் அஹமந்நம்’ என்று
அவனை ஆனந்திப்பித்து, அவன் உகந்த அவ்வழியாலே ‘அஹமந்நாத’ என்று
தாங்களும் ஆனந்திப்பர்கள் என்றபடி. பத்தர், ‘அறிவில்லாத சம்சாரிகள் தங்களுடைய
சுக துக்கங்களுக்குத் தாம் காரணர்  அல்லர்; ஈஸ்வரனாலே ஏவப்பட்டே
சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடைகிறார்கள்;’ என்கிறபடியே, தாங்கள்
ஆனந்தியாமல் அவனுக்கு லீலா விஷயமாய்க்கொண்டு அவனை ஆனந்திப்பிப்பர்கள்
என்றபடி. பத்தர்கள் ஈஸ்வரனுடைய ஆனந்தத்திற்குக் காரணமாயிருப்பர்கள் என்பதற்குக்
காட்டும் மேற்கோள் ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ என்பது. இப்பாசுரம்,
திருவாய். 3. 10 : 7. பத்தர் – கட்டுப்பட்டவர்.

2. ‘எம் மா வீட்டில் எம் மா வீடாய்’ என்றது முதல் ‘விரும்புகிறார்’ என்றது முடிய,
பாசுரத்திற்கு அவதாரிகை. ‘எம் மா வீட்டில் எம் மா வீடாய்’ என்றது. திருவாய்மொழி
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு பேற்றினை அறுதியிடுதலைப் பற்றிக் கூறுகின்ற ‘எம்
மா வீடு’ பத்துப் பாட்டும் சாரமாயிருக்கும்; அவற்றில் இது நிதானமான பாசுரமாகையாலே
சார தமமாயிருக்கும் என்றபடி. ‘வைஷ்ணவர்களனைவர்க்கும் செல்வமாய்’ என்றது. ‘ஸ்ரீ
வைஷ்ணவ அதிகாரிக்கு இப்பாசுரப்பொருள் அவசியம் அபேக்ஷிதம’ என்றபடி.
‘உபநிடதத்தின் இரகசியப்பொருளாய்’ என்றது, கடவல்லியுபநிக்ஷத்துச் சித்தமான
துவயத்தில் ‘நம்:’ என்னும் பதத்தின் பொருள் இங்குக் கூறப்படுகின்றது என்றபடி.

’எனக்கே’ என்று அகங்காரம் தோன்றச் சொல்லுதல் குற்றம் அன்றோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக, ‘மேல் ‘தனக்கேயாக’ என்றார்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.

2. ‘புருஷார்த்தமானால், ‘எனக்கு’ என்னவேண்டுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
‘விரும்பிப் பெற வேண்டியவன்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ஆக, ‘எனக்கு’
என்பதற்குப் பொருள், ‘உனக்கே உறுப்பான எனக்கு’ என்பதாம்.

. ’சிறப்பு’ என்பது, ஒருகால விசேஷத்திலே ஒருகால் செய்யப்படுவதாதலின், ‘பலகால்
வேண்டா; ஒருகால் அமையும்,’ என்கிறார். ‘கண்ணனை யான்’ என்ற ஒருமைக்கு பாவம்,
‘அதுதன்னிலும்’ என்று தொடங்கும் வாக்கியம்.

நிதான பாசுரம் –
நிஷ்கரிஷித்த பிராப்யம் -செய்கிறார் இதில் –
மாலை சந்தனாதிகளோ பாதி -அவன் ஆனந்ததுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிறார் –
நிலா தென்றல் சந்தனம் புஷ்பம் போலே –
சைதன்யம் இருந்தாலும் –
தனக்கே யாக
எம்பார் அருளிச் செய்த வார்த்தை -திரிவித செதனரை -பக்த முக்த நித்ய -மூன்று வித கைங்கர்யம்
முக்தரும் நித்தியரும் தாங்களும் ஆனந்தம் அவனும் ஆனந்தம் அடைய செய்பவர்கள்
இன்புறும் விளையாட்டு உடையவர் -அவன் மட்டும் ஆனந்தம் கேவல லீலை -பக்தர்
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை -சிருஷ்டியாகிற வியாபாரத்துக்கு பிரயோஜனம் –
எப்படி ஆனந்தம் நாம் சம்சாரத்தில் உழன்றால் -கரண களேபரங்கள் கொடுத்து –
குழந்தை ரூபாய் நோட்டை கிழிக்கும் பொழுது வேடிக்கை உண்டாக்கி ஆனந்தம் –
முக்தர் -கேவலர் -எம்பெருமானை ஆனந்திக்காமல் தாங்கள் மட்டும் -ஆனந்திக்க –
ஆழ்வார் நித்யர்  இருக்க ஆசைப்படுகிறார் –
தனக்கே யாக எனைக் கொள்ளும்
பிள்ளை திரு நறையூர் அரையர் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் தனியாக பிரார்த்திக்க வேண்டுமா -என்று கேட்க
எம்பார் -பேறு உயர்ந்தத்தால் -மீண்டும் சொல்லி
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்து அருளி இருக்கச் செய்தேயும் -அகல கில்லேன் இறையும் -சொல்வது போலே –
விஷய வை லஷண்யம் -முன்பு பிரிந்து அன்றும் பிரிய பிரசக்தி இன்றி இருந்தும் பிராட்டி அருளுவது போலே –
இட்ட படி பண்ணிக் கொள்ள பிரார்த்திக்கிறார் பிராப்ய ருசியில் ஈடுபாடு -அதிகம் இருப்பதால்
எ ம்மா வீட்டில் எ ம்மா வீடு பாசுரம்
சார திருவாய் மொழியில் சாரம் பாசுரம் –
அஹம் அன்னம் -உபநிஷத்குஹ்யம் சாரம் -புசிக்கும் ஆனந்தம் அவனது தானே –
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய முழு விஷயம் இது தானே –
வகுத்த பாரதந்த்ர்யம் பிரார்த்தி பெற வேண்டியது –
எனக்கே ஆட் செய்யும் எக்காலத்தும் என்று சொல்ல வேண்டும்
மனத்தே வந்து இடை வீடு இன்றி மன்னி –
நான் பெற வேண்டிய சிறப்பு இது தான்
முதலிலே ஆட் செய் -ஸ்வா தந்த்ர்யம் வ்யாவர்த்திக்கிறது
அடுத்து எனக்கு ஆட் செய் -அந்ய சேஷத்வம் அபிராப்த விஷயம் வ்யாவர்த்திக்கிறது
எனக்கே ஆட் -தனக்கும் எனக்கும் பொதுவான நிலை தவிர்ந்து -என்னுடைய ஆனந்ததுக்கே மட்டுமே –
என்னுடைய பிரயோஜனத்துக்கு மட்டுமே கைங்கர்யம் செய் -சொல்ல வேண்டும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இல்லா அடிமை
உமக்கு எது இஷ்டமோ அங்கு பர்ண சாலை அமையும் -சொல்லி ஏவி கார்யம் கொள்ள வேண்டும் –
கூவிப் பணி கொள்ளாய் -அருளிப்பாடி -இன்றும் –
சாதித்து அருள -எம்பெருமான் பிரதி நிதியாக சொல்லி -சேவ காலம் சாதிக்க நியமித்து –
ஆக்ஞை பின் பற்ற வேண்டும்
இந்த வார்த்தை அருளிச் செய்து நெடும் கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து
புகுந்தாலும் போக்கு வரத்து இன்றி ஸ்தாவர பிரதிஷ்டை மூலவர் போல்
இருந்து கொள்ளும் கார்யம்
தனக்கே யாக எனைக் கொள்ளும்
சூடுவாருக்கும் -பூசிக் கொள்வாருக்கும்
மாலை சந்தானம் -போலே
மிதுனமாக -பேற்றுக்கு இனிமை இரண்டு தலைக்கும் ஒக்கும் பார்த்தா பார்யை
என் ப்ரீதிக்கு அந்வயம் இன்றி -உனக்கே யாக
முன்னிலையாக பேசிய ஆழ்வார் நின் செம்மா பாதம் -நின் கழல் –
அம்மா என்றும் சம்போதித்து -இங்கே தனக்கேயாக -உனக்கேயாக சொல்லாமல் –
படர்க்கையில் -சொல்லி –
திரு முகம் பார்த்தால்  வ்யாவச்யம் குலைந்து அப் பாஞ்ச ஜன்யம் போலே –
தலை குனிந்து -பாசுரம் -கையும் பாஞ்ச ஜன்ய பர பாக அழகை பார்க்க மாட்டாமல் –
உறுதி குலையுமே பார்த்தால்
தளிகை மூக்கை மூடிக் கொண்டே போய் சமர்ப்பிக்க வாசனை கூட முகரக் கூடாது
புஷ்பம் திருவரங்கத்தில் இன்றும் இப்படி எழுந்து அருளிக் கொண்டு போவார்கள் –
திரு முகம் அழகின் காரணமாக உறுதி குலையும் -கவிழ்ந்து இருந்து பாசுரம் அருளுகிறார் –
கையோலை செய்து கொடுக்கிறார்
எனக்கே கண்ணனை –
தனக்கே பின்புத்தல் அந்த ஆனந்தம் தமக்கு
அஹம் அன்னம் -அஹம் அன்னாதாக புஜிக்க படுகிறேன் –
அன்னம் சைதன்யம் பிரவசிக்க வில்லையே –
ஆனந்தம் மேலும் வளர்க்கும் –
முந்திரி பருப்பு சக்கரைப் பொங்கலில்  போடுவது போலே
எதிர் விழி கொடுத்து –
தொடர்ந்து போகும் தொல்லை இன்பம் chain action
மற்றை நம் காமங்கள் மாற்று -நீக்கு இல்லை -போக்கு இல்லை மாற்று –
அனைவருக்கும் கொடுக்கிறாயோ
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே
ஸ்வரூப ஞானத்தை பிறபித்த பின்பு கொடுத்து தான் வேண்டும்
சிறப்பே பல கால் வேண்டும் ஒரு தடவை திருக் காப்பு சாத்தி ஒருவரும்
அறியாதபடி ஏகாந்தமாக ஊமை தலையில் எம்பெருமானார் திருவடி சிறப்பாக
புருஷார்த்தம் ஸ்வரூப அனுரூபமாக
முக்தி செல்வம் – யாக
சிறப்பாக அருள வேணும் –

இந்த அர்த்தம் திருப்பாவை சாரம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் –
விபரமாக திருப்பாவை சாரம் பார்ப்போம் –

திருப்பாவை சார அர்த்தம் உபநிஷத் உக்ய தம அர்த்தம் –
அவனது ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யமும் அவன் அருளாலே -பெற -பெறுவோம் –
அவன் ஆனந்தம் கண்டு நாம் ஆனந்தம் பெற சைதன்யம்
திருவாய் மொழியின் எம்மா வீட்டு அர்த்தம்
எம்மா வீட்டில் எம்மா வீடு -பாசுரம் இது –
எஞ்ஞான்றும் -ஐயார் கண்டம் அடக்கிலும் இதே வேண்டுவது –
நிஷ்கரிஷித்த -பிராப்யம் -நிலா சந்தானம் போலே அசித் பதார்த்தம் போன்ற
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
த்ரிவித சேதனரையும் பக்தர் முக்தர் நித்யர் -எம்பார் பணிப்பர்
அவனை ஆனந்திப்பித்து தாங்கள் ஆனந்தம் முக்தர் நித்யர்
பக்தர் தாங்கள் ஆனந்தியாதே அவனை ஆனந்தித்து லீலா கைவல்யம் –
ஸ்வா தந்த்ர்யமும் கொடுத்து -அது தான் லீலை -சம்சாரிகள்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான் –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பிரார்த்திப்பது எதற்கு –
பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரை கேட்க -உயர்ந்த புருஷார்த்தம் என்பதால் பிரார்த்திக்கிறார் –
அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி சொல்வது போலே –
சமுத்திர ராஜ புத்ரி பிராட்டி -அவதாரத்தில் பிரிந்தது –
ஸ்வாபாவிகமாக பார்த்தால் பிரிவே இல்லையே -பிரிவதற்கு பிரசங்கமும் இல்லை –
விஷய வை லஷன்யத்தால் -அருளிய வார்த்தை -பிராப்ய ருசியால் –
கிடைத்தா ல் அல்லது தரிக்க முடியாதே –
எம்மா வீட்டில் எம்மா வீடு -அமுதில் வரும் பெண்ணமுது போலே -இந்த பாச்ய்ரம்
உபநிஷத் குக்யம் அஹம் அன்னம் வார்த்தையால் -ரத்ன ஹாரம் -பாதுகாத்து வைத்து –
சர்வேஸ்வரன் பக்கலில் அபெஷித்து பெறுவது ஆத்மாவுக்கு இது தான் வகுத்தது
உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று -அவனுக்கு சொல்லி கொடுக்கிறார்
ஆட்  செய் ஸ்வா தந்த்ர்யம் தவிர்த்து
எனக்கு  ஆட செய் /-அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது அந்ய சேஷத்வம் கழித்து
எனக்கே ஆட்  செய் -தனக்கும் எனக்கும் பொதுவான நிலை கழித்து -அவனுடைய ஆனந்துக்கு மட்டுமே
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -எக்காலத்தும் வேண்டும் என்கிறார் –
ஏவிப் பணி கொள்ள வேண்டும் -பிரியதாம் மாம் வத -காட்டி நியமிக்க வேண்டும்
இப்படி வார்த்தை அருளி நெடும் கை நீட்டாமல் -மனக்கே வந்து ஹிருதயத்தில் புகுந்து
போக்கு வரத்து இன்றி -இடைவீடு இன்று மன்னி ஸ்தாவர பிரதிஷ்டை போலே எழுந்து அருளி இருக்க வேண்டும்
இருந்து கொள்ளும் கார்யம் என்னது -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
மாலை சந்தனம் சூடிக் கொள்ளும் ஆனந்தம் -மிகுதி கழுத்து வலிக்கும் இத்தனை இ றே
சேதனர் -என்பதால் -மிதுனமாய் பரிமாறா நின்றால் -இன்பம் இருவருக்கும் இருக்கும்
உனக்கே யாக இருக்க வேண்டும் –
நின் செம்மா பாதம் முன்னிலை சொல்லி –
நின் கழல் யான் எய்த -இரண்டாம் பாட்டில்
நின் கழல்-மூன்றாவது
பிரத்யஷ உத்தேச்யம் -உனக்கேயாக சொல்லாமல் தனக்கே யாக -படர்க்கையில் சொல்லுவான் என் என்னில்
திரு முகம் பார்த்தால் வய்வசாயம் குறையுமே -உறுதியை குலைக்குமே என்று பயந்து
பிராப்ய நிஷ்கர்ஷம் கவிழ்ந்து கை யோலை செய்து கொடுக்கிறார் –
அப்பாஞ்ச ஜன்யம் போலே -தனது கண் எச்சில் படாமல் இருக்க -கவிழ தலை
இட்டு எனக்கே கண்ணனை -தனக்கே யாக என்று பின்புத்தை  எனக்கே என்பதால் –
புருஷார்த்தம் ஆக்குவதற்காக சொல்லுகிறார்
புருஷனால் ஆர்த்திக்க பட வேண்டுமே -சேதனன் தான் அபேஷிக்க வேண்டும் –
எல்லாருக்கும் செய்ய வேண்டுமே சர்வ முக்தி பிரசங்கம்
யான் கொள்ளும் சிறப்பே -ஸ்வரூப ஞானம் நீ பிறப்பிக்க அத்தாலே
ஸ்வரூப ஞானம் உடைய நான் பெற வேண்டுமே
பல கல் வேண்டா ஒரு கால் அமையும்
அது தன்னிலும் யாவரும் அறியாமல் ஏகாந்தமாக அருளினால் போதும்
சிறப்பே -புருஷார்த்தம் கொண்டு அருள வேண்டும் -கொடுத்து அருள வேண்டும் சொல்ல வில்லை
சிறப்பு -முக்தி சம்பத் நன்றி -மூன்றும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-3–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

செய்யேல் தீவினை என்றுஅருள் செய்யும்என்
கய்யார் சக்கரக் கண்ண பிரானே!
அய்யார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே.

    பொ-ரை : ‘கொடிய பாவங்களைச் செய்யாதே’ என்று திரு அருளைச் செய்கின்ற, கையிலே தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய என் கண்ணபிரானே! கோழையானது கழுத்தை அடைக்கின்ற அக்காலத்திலும் நின் திருவடிகளை மறவாமல் ஏத்தும்படி எனக்கு அருள் செய்க.

    வி-கு : கய் -கை, ‘அய் – ஐ’ எனபன. ஐகாரத்திற்கு அகரயகரங்கள் எதுகை நோக்கிப் போலியாய் வந்தன; ‘அகரத் திம்பர் யகரப்புள்ளியும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்    ( தொல். எழுத்) ஐ-கோழை. ‘ஆர்’ விகுதி இழிவின் கண் வந்தது. அன்றி, ‘ஆர் ஐ’ என்று மாற்றிப் பொருள் கோடலுமாம். எய்த்தல் -இளைத்தல்; எய்யாது – இளையாமல்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1இப்பாசுரத்தில் வாயினாற்பெறும் பேற்றை விரும்புகிறார்.

    ‘செய்யேல் தீவினை’ என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரானே –2‘கையும் திருவாழியும் பொருந்தி இருக்கிற இருப்புக் கண்டாயே, நம் பவ்யதை கண்டாயே; நம்மை நுகர்தல் அழகியதோ? சிற்றின்பங்களிலே ஈடுபாடு உள்ளவனாய்க் கேட்டினை அடைதல் அழகியதோ?’ என்று கையில் திருவாழியையும் பவ்யதையையும் காட்டி இவருடைய தீவினைகளைத் தவிர்த்தான் என்றது, ‘சாஸ்திரங்களை உபதேசித்து அன்று’ என்றபடி. ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த – செறிந்த கோழையானது கண்டத்தை அடைக்கிலும், உன்னுடைய எல்லையற்ற இனிமைப் பொருளான திருவடிகளை நான் மறவாமல் ஏத்வல்லனாம்படி பண்ணியருள வேண்டும். 1‘துன்பத்தை நீக்க வேண்டும்’ என்கிறேன். அல்லேன்; 2‘துன்பம் வந்த காலத்திலும், உன்னை அடைந்திருக்கிற என்னுடைய எண்ணமானது கேட்டை அடையாமல் இருந்ததே ஆனால், அதைக்கொண்டு எப்பொழுதும் பேறு பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறபடியே, ‘ஏதேனும் 3உத்கிரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி செய்தருளவேண்டும்’ என்றபடி. இனி, ‘ஐயார் கண்டம் அடைக்கிலும்’ என்பதற்கு, 4‘உக்கிரமண தசையைப் பார்த்துக் கோழைப் பையலார் வந்து மிடறு பிடிக்கினும்’ என்று பொருள் கூறலுமாம். ‘அது, ஒரு நல்வினையின் பலம் அன்றோ?’ என்ன, ‘அருள் செய்’ என்கிறார், ‘இவன் பெற்றிடுவான்’ என்று இரங்கியருளவேண்டும் என்கிறார் என்றபடி. ‘ஆயின், இது எல்லார்க்கும் செய்யவேண்டி வாராதோ?’ என்ன, ‘எனக்கே’ என்கிறார்; ‘உன் முன்னிலையில் வேண்டிக்கொள்ளுகின்ற என் ஒருவனுக்குச் செய்தருள வேண்டும்’ என்றபடி.

ஏத்த அருள்செய் எனக்கே’ என்றதனைக் கடாட்சித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘கையார் சக்கரம்’ என்றதனை நோக்கிக் ‘கையும் திருவாழியும்‘ என்ற  வாக்கியத்தை
அருளிச்செய்கிறார். ‘கண்ணபிரானே’ என்றதனை நோக்கி, ‘நம் பவ்யதை கண்டாயே’
என்கிறார். ‘சிற்றின்பங்களிலே’ என்றது, ‘தீவினை’ என்றதன் பொருள்.

1. ’ஐயார் கண்ட மடைக்கிலும்’ என்பதற்கு பாவம், ‘துன்பத்தை நீக்க வேண்டும்’ என்று
தொடங்கும் வாக்கியம்.

2. ஜிதந்தா ஸ்தோத்திரம்.

3. உத்கிரமணசமயம் – உயிர் வெளிக்கிளம்புகிற சமயம்: இறக்கும் சமயம் என்றபடி.

4. ‘உத்கிரமணதசையைப் பார்த்து’ என்று தொடங்கி, ரசோக்தியாகப் பொருள்
அருளிச்செய்கிறார்.

வாசிகமான பேற்றை பிரார்த்திக்கிறார் இதில் –
ஏத்த அருள் செய்
துஷ் கர்மங்களை  செய்யாதே –
அருள் செய்யும் கை யார் சக்கரக் கண்ணபிரான்
ஐ யார் -கோழை -கண்டம் அடை க்கிலும் –
ஸ்தோத்ரம் செய்யும் படி அருள் செய் –
செய்யேல் தீ வினை -கையும் திரு ஆழியும் கண்ட அழகை கண்டவாறே
விஷய பிராவண்யம் தவிர்ந்து -காண்தகு தோள் அண்ணல் –
கண்ண பிரான் -பவ்யதையும் காட்டி -பின்பு -விஷயாந்தரம் பக்கம் போக மாட்டோமே
நம்மை அனுபவிக்க அழகியதோ -அநர்த்த படுக்கை அழகியதோ –
சாஸ்திர பிரதானாதிகளால் அன்று
துயர் அரு சுடர் அடி முதலில் ஈடு பட்டவர் தானே –
தீ வினை இத்தால் தவிர்த்து அருளி –
துக்க நிவ்ருத்தி வேண்டும் என்று அபெஷிக்கிறேன் அல்லேன்
துர் கதி தசையிலும் உன்னை நினைந்து இருக்க -அருளுவாய் –
இளையாதே -கை வாங்காமல் உன்னை ஏற்றும் படி அருள வேணும் –
செறிந்த ச்லேஷ்மா கபம் தொண்டையை அடைத்தாலும் –
கோழை -சப்தம் கொண்டு -உகரம தசை பார்த்து இருப்பாரே கோழை பையலார் மிடறு பிடிப்பார் –
அந்திம ஸ்ம்ருதி கிடைப்பது கஷ்டம் –
பெரியாழ்வார் -ஆடி கருடன் -P B A சுவாமிகள் -தாகமாக இருக்கிறது -கிரகத்துக்கு உள்ளே புறப்பாடு சேவிக்க போக –
கோஷ்டியை செவித்ததே இல்லை முன்னே வந்ததால் –
தரையிலே படுக்க -பரம பதம் -பல்லாண்டு பாடணும் -நினைவுடனே சென்றார் –
பா க்யவானுக்களுக்கு தான் கிட்டும்
வேளுக்குடி சுவாமிகளுக்கும் திருவாராதனம் செய்த பின்பு கிட்டியதாம் –
அருள் செய் -இவனுக்கு கிடக்க வேண்டும் என்று அனுக்ரகனம் செய் என்கிறார் –
இரங்கி அருள வேணும்
எனக்கே -மற்றவருக்கு செய்கிறாயோ இல்லை எனக்கு அருள வேணும் என்கிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

2இஃதே யான்உன்னைக் கொள்வதுஎஞ் ஞான்றும்;என்
மய்தோய் சோதி மணிவண்ண! எந்தாய்!
எய்தா நின்கழல் யான்எய்த, ஞானக்
கய்தா; காலக் கழிவுசெய் யேலே.

பொ-ரை : கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய என் எந்தையே! எப்பொழுதும் யான் உன்னிடத்தில் கேட்பது இஃதேயாம்; ‘எஃது?’ என்னில், தனது முயற்சி கொண்டு அடைய முடியாத உன் திருவடிகளை யான் அடையும்படி ஞானமாகிய கையைக் கொடு; காலம் நீட்டித்தல் செய்யாதே.

    வி-கு : எந்தாய் – விளிப்பெயர். ‘எஞ்ஞான்றும் யான் உன்னைக் கொள்வது இஃதே’ என மாற்றுக. செய்யேல் – எதிர்மறை முற்று.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1முதற்பாட்டில், உடலால் அமையும் பேற்றை விரும்பினார்; இப்பாட்டில், மானசமான பேற்றை விரும்புகிறார்.

    முதற்பாசுரத்தில் ‘இஃதே’ என்று கூறியிருந்தும் 2’ஒரு பொருளையே பலகால் கேட்பின் மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமாதலின், இதிலே நிலை நின்றமை அறிய வேண்டும்’ என்று நினைத்து ‘இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான் ஈஸ்வரன்; ‘இஃதே’ என்கிறார். ‘நீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும்படி யாங்ஙனம்?’ என்ன யான் உன்னைக் கொள்வது – 3இருவருடையவும் தர்மியே இதில் பிரமாணம். அதாவது, 4ஸ்வாமியான உன் பக்கல் அடியவனான நான் கொள்ளுமது. இதுவே ‘நம்முடைய ஸ்வாமித்துவமும் உம்முடைய சேஷத்துவமும் கிடக்கச்செய்தே அன்றோ நெடுநாள் இழந்து போந்தீர்? ஆன பின்னர் நமக்கு இதில் ஐயம் தொடர்கின்றதுகாணும்; 5இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் இறைவன். ‘எஞ்ஞான்றும்’ என்கிறார்; அதாவது, ‘உயிர் உள்ள அளவும் இதுவே எனக்கு வார்த்தை’ என்றபடி. ‘ஆயின் இதிலே நிலை நிற்கும்படி உமக்கு இக்கெட்ட நெறியைக் கற்பித்தவர் யாவர்?’ என்றான் இறைவன்; இப்படிக் கற்பித்தார் யாவர்? மற்றும் உளரோ? தேவர் வடிவழகே அன்றோ!’ என்கிறார் மேல்: என் மை தோய் சோதி மணிவண்ண எந்தாய் – மை தோய்ந்துள்ள ஒளியை உடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திருநிறத்தைக் காட்டி என்னை உனக்கே உரியவனாக்கி உன் சேஷித்துவத்தை அறிவித்தவனே!

    ‘அழகிது, உமக்குச் செய்யவேண்டுவதுதான் என்?’ என்ன, எய்தா நின் கழல் யான் எய்த – தன் முயற்சியால் ஒருவர்க்கும் அடைய ஒண்ணாத திருவடிகளை ‘உன்னாலே பேறு’ என்று இருக்கிற நான் அடையும்படி செய். ‘அது, மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அன்றே பெற்றிலீரோ?’ என்ன, ஞானக் கைதா – இது நினைத்திருக்கும் அளவு போதாது; அது நான் ‘பெற்றேன்’ என்று 1தெளியும்படி செய்யவேண்டும்.  அமிழ்ந்தினார்க்குக் கைகொடுத்தாற்போன்று இருக்கையாலே ஞான லாபத்தை ‘ஞானமான கை’ என்று உருவகப்படுத்துகிறார். இங்கே, ‘ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால், எடுக்கமவர்களுக்கும் எளிதாய், ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்குமன்றோ? அப்படியேயாகிறது’ என்று 2எம்பார்க்கு ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது. இனி, 3’எய்தா நின் கழல் யான் எய்த’ என்று நீர் கூறுவது, பரபத்தி பரஞான பரமபத்திகளையுடையார் பெறும் பேறு அன்றோ?’ என்ன, ஞானக் கை தா -‘அவற்றையும் தேவரீரே பிறப்பித்து, தேவர் திருவடிகளைப் பெறும்படி செய்யவேண்டும்’ என்கிறார் எனலுமாம். ‘அப்படியே செய்கிறோம்’ என்ன, ‘காலக் கழிவு செய்யேல்’ என்கிறார்; அதாவது, ‘ஒல்லை என்றதுதானே அன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை’ என்கிறார் என்றபடி.

1. மேற்பாசுரத்தில் ‘தலைசேர்த்து’ என்றதனைக் கடாட்சித்தும், இப்பாசுரத்தில் ‘ஞானக் கை
தா’ என்றதனைக் கடாட்சித்தும் அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. இவ்விடத்தில், வேதத்திற்கூறப்பட்டுள்ள நசிகேதன் கதையைக் குறிப்பிடுவர்
அரும்பதவுரைகாரர்.

3. ‘இருவருடையவும் தர்மியே இதில் பிரமாணம்’ என்றது, சேஷ சேஷித்துவ ரூபமே இதில்
பிரமாணம் என்றபடி.

4. மேல் வாக்கியத்தை விரிக்கிறார், ‘ஸ்வாமியான உன் பக்கல்’ என்று தொடங்கி.
இவ்வாக்கியம் ‘அம்மா அடியேன்’ என்றதனை நோக்கி எழுகின்றது.

5. ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றது, ‘எத்தனை ஸ்நானத்துக்கு நிற்கும்?’ என்றபடி.
பூசப்படுகின்ற வாசனைத் திரவியங்களின் நறுமணம் நாலு மூன்று ஸ்நானத்துக்குப்
போகாது.

தெளியும்படி செய்யவேண்டும்’ என்றது, ‘மானஸ சர்க்ஷாத்காரம் போராது;
பிரத்யக்ஷமாம்படி செய்யவேண்டும்’ என்றபடி.

2. ஞானத்தைக் கையாகச் சொன்னதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார். ‘ஒரு கிணற்றிலே’ என்று
தொடங்கி. எம்பார்; ஆண்டான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஒருவரை அறியாமல் பகவச்
சம்பந்தத்தைப் பண்ணி, ஆண்டான் திருவடிகளில் ஆஸ்ரயித்தவர் என்று அறிந்த பின்
பயப்பட. அப்போது ஆண்டான் அருளிச்செய்த வார்த்தை என்றபடி.

3. ’ஞானக் கை தா’ என்பதற்கு இரு பொருள் அருளிச் செய்கிறார்; ஒன்று, ‘நான்
பெற்றேன் என்று தெளியும்படி செய்ய வேண்டும்’ என்று முன்னர்க்கூறியது. மற்றொன்று,
‘பரபத்தி பரஞான’ என்று தொடங்கி இங்கு அருளிச்செய்வது. முன்னைய பொருளில்,
‘ஞானம்’ பிரத்யக்ஷரூப ஞானம்; இரண்டாவது பொருளில், பத்திரூப ஞானம்.
இவ்விருபொருள்களினும் சங்கதி பேதம் ஒழிய அர்த்த பேதம் இல்லை.

பிராப்ய நிஷ்கர்ஷம் உறுதி பட அருளுகிறார்
கைங்கர்யம் அவன் ஆனந்தத்துக்கு -த்வய உத்தர கண்ட நம பத அர்த்தம்
திரு மந்திர நம மத்யம பதத்தாலும் -கைங்கர்யத்தில் களை  -தனக்கு என்ன பண்ணுவது அறுக்கிறது –
நாலாவது பாசுரம் நிதானம்
நின் பாத பறப்பு தலை சேர்த்து காயிக பேற்றை
இதில் மானச பேற்றை அபேஷிககிறார் –
ஞானக் கை தா –
ஈதே நான் உன்னைக் கொள்வது –
என்நான்றும் என்றும் இதையே கேட்ப்பேன்
காரணம் மை தாய் சோதி கருத்த திருமேனி அனுபவம்
எய்தா நின் கழல் -ஸுய முயற்சியால் எய்த முடியாத –
ஞானக் கை தா கால கழிவு செய்யாமல்
முன்பு ஒல்லை -போலே
கீழில் பாட்டில் ஈதே சொல்லி -மீண்டும் -ஈதே -சொல்வது -பல கால் கேட்டவாறே –
நிலைத்து நின்றமை அறிய வேணும் -இதுவும் இன்னம் என்ன வேண்டும் கேட்டானாம்
இது ஓன்று மட்டுமே வேண்டும் –
நிலை நின்றீர் என்ற இடம் அறிய -யான் உன்னைக் கொள்வது
இரண்டு பேரின் தரமி -ஸ்வரூபம் -பிரமாணம் இதற்க்கு
யான் அடியவன் உன்னை சேஷி இதுவே போராதா –
கொள்வது -இது ஓன்று தான் இருக்க முடியும் –
காலடியில் கொள்வது ஸ்வரூபம் அவனுக்கு கிடப்பது ஸ்வரூபம் இவனுக்கு
அநாதி காலமும் உண்டே இது நிலைத்து நிற்குமா -நெடு நாள் இழந்து போனோமே –
அதி சங்கை வர்த்தியா நிற்க எத்தை குளிக்கைக்கு நிற்கும்
என் நான்றும் -யாவதாத்மபாவி
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –
ஞானம் ஏற்பட காரணம் -துஸ் சிஷ்யை பண்ணினது யார் வேடிக்கை வார்த்தை –
தேவரீர் வடிவு அழகு இறே -வேறு யார்
மை தோய்ந்த தேஜஸ் -மணி போன்ற திரு நிறத்தைக் காட்டி –
நீல ரத்னம் -கருப்பாக இருக்க பெருமை -நீல நாயகம் -சாத்திக் கொண்டு நம் பெருமாள் –
கரு நீலம்  -கார் மேகம் போல் -கார் மேனி -நீல மேனி அன்றோ பச்சை மா மலை போல் மேனி
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -கரும் பச்சை –
இதை காட்டி என்னை அனந்யார்ஹை ஆக்கி சேஷித்வம் அறிவித்தவன் -எந்தாய் -ஸ்வாமி –
அழகு இது சரி சரி செய்ய வேண்டுவது என்
எய்தா நின் கழல் -ஸு யத்னத்தால் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை
உன்னாலே பேரு என்று இருக்கும் யான் எய்த
மாயவர மதி நலம் அருளிய போதே கொடுத்து விட்டேன்
நின் நினைவு மட்டும் போதாதே நான் அறிய வேண்டுமே –
ஞானக் கை தா –
தபால் போட்டு மறுபடியும் பேசி வந்து சேர்ந்ததா பார்க்க வேண்டாமா
நான் பெற்றேன் என்று நான் தெளியும் படி வேண்டாமா –
மானசா பூதமாக பெற்றார் சாஷாத்காரம்
ஞானக் கை -அமிழ்ந்தாருக்கு கை கொடுத்து தூக்குவது போலே –
ஞான லாபம் ஞானக் கை
ஐ திஹ்யம் ஆண்டான் வார்த்தை எம்பாருக்கு -அருளியது –

முதலி ஆண்டான் திரு நாராயண புரம் எழுந்து அருளி இருக்க கோயிலிலே எம்பார்
இடம் கைங்கர்யம் செய்த ஸ்ரீ வைஷ்ணவர் -ஒரு கிணற்றில் விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால்
வார்த்தை அருளி -இருவருக்கும் லாபம் தானே -ஞானக் கை -தா சொன்னது பொருந்தும் –
அங்கன் அன்றிக்கே –
திருவடிகளை அடைய பர பக்தி பரஞானம் பரம பக்தி வேண்டுமே –
ஞானக் கை தா அவற்றையும் நீயே அருளு -என்கிறார் –
நின் கண் பக்தன் அல்லேன் -அத்தையும் அருளி என்னைக் கொள்ளும் –
தேவரீர் அவற்றையும் பிறப்பித்து திருவடிகளில் சேர்த்து கொள்கிறேன்
காலக் கழிவு செய்யேல் உடனேசெய்து அருள் என்கிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

ஒன்பதாம் திருவாய்மொழி

‘எம் மா வீடு’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாழியிலே, ‘நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்’ என்று இவர்தாமும் அருளிச்செய்து, 1சர்வேஸ்வரனும் இவர்க்கும் இவர் உறவினர்கட்கும் 2பரமபதம் கொடுப்பானாகப்பாரிக்க, அதனைக் கண்டு, ‘தேவரீர் எனக்குப் பரமபதம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது; அதாவது, ‘உமக்காக மோக்ஷம் கொடுக்கிறோம் கொள்ளும்’ என்று எனக்காகத் தருகை அன்றி, ‘நமக்காகக் கொள்ளும்’ என்று தேவரீருக்கே ஆகும்படியாகத் தரவேண்டும்,’ என்று 3தாம் நினைத்திருந்தபடியை அவன் திருமுன்னர்ப் பிரார்த்திக்கிறார். ‘ஆயின், இதனை இத்தனை நாள் அறுதியிடாது ஒழிவான் என்?’ என்னில், அவன் மேலும் மேலும் குணங்களை நுகர்விக்கையாலே அதற்குக் காலம் போந்தது இத்தனை அல்லது, இதனை அறுதியிடுவதற்குக் காலம் பெற்றிலர். ‘ஆயின், 4இப்பொழுதும் குணானுபவமே அன்றோ பண்ணுகிறது?’ என்னில், ஆம், அப்படியே; இறைவன் தம் பக்கல் மேலும் மேலும் செய்கிற விருப்பத்தைக் கண்டு, ‘இவனுக்கு இந்தக் காதற்பெருக்கு முடியத் தொடர்ந்து செல்லுவது ஒன்றாய் இருந்தது; நாம் இவனை மீட்டாகிலும்

நம்முடைய பேற்றினை அறுதி இடுவோம்’ என்று பார்த்து, 1‘நீ இங்ஙனே நில்’ என்று அவனை நிறுத்தி வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.

    2எம்பார், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, மிக இரகசியமாக அருளிச்செய்வர்.

    ‘நன்று; 3பெறத் தகுந்த பேறு என்பது இப்படி அன்றோ இருப்பது? இவர் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில், சர்வேஸ்வரன் இவ்வாத்துமாவுக்குத் தலைவனாய், இவனும் அடியவனாய், அவனுடைய உபாய பாவமும் நித்தியமாக இருக்கச் செய்தே அன்றோ இவனுக்கு இன்று 4ஸ்வீகாரம் வேண்டுகிறது? அப்படியே, அவன் ஸ்வதந்தரன் ஆகையாலே, 5நினைத்தபோது நினைத்தபடி கொள்வான் ஒருவன் ஆகையாலே, பேற்றினைப் பெறும் சமயத்தில் அனுபவம் இருக்கும்படியையும் அறுதியிட்டுப் பெறவேண்டும் என்க.

1பின் வாக்கியத்திலும் இவ்வர்த்தத்தைச் சொல்லாநின்றதே என்க ‘துவயந்தன்னில் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில், முன் வாக்கியத்தால் சொன்ன சாதனம், எல்லாப்பலன்களையும் கொடுக்கக் கூடியது ஆகையாலே, வேறு பலன்களை விரும்பி அடைக்கலம் புகுவார்க்கும் அவற்றைக் கொடுத்துவிடுவான் ஒருவன் அன்றோ சர்வேஸ்வரன்? ஆதலால், அறுதி இடுகிறது என்க

    ‘நன்று; இத்திருவாய்மொழியில் அறுதியிடும் பேறு என்?’ என்னில், 2‘முத்தனாய்த் தனக்கு மேல் ஒன்று இல்லாததான சுகானுபவத்தைப் பண்ணவுமாம்; ஆத்மப்பிராப்தியைப் பெறவுமாம்; ஆத்துமவிநாசமே ஆகவுமாம்; நரக அனுபவம் பண்ணவுமாம்; இவற்றில், எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை; உனக்காக வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம்; எனக்காக வருமன்று இவை இத்தனையும் வேண்டா; ஆன பின்னர், தேவர்க்கு உறுப்பாமிதுவே எனக்கு வடிவாம்படி பண்ணியருள வேண்டும்’ என்று, தம்முடைய பேற்றினை அறுதியிடுகிறார்.

    இப்படிப்பட்ட செயல்தான் உலகத்தில் நடைபெறுவது ஒன்று அன்று; இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல்; இராமாயண புருஷர்களில் ஸ்ரீபரதாழ்வான், இளையபெருமாள் இவர்கள் பக்கலிலேகாணுதல் செய்யுமித்தனை. கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ? 2‘விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – 5அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை

அபகரித்து, அவரைப் பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

    ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல

காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

    ‘இதுதான் ஒருவர் விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

201

        எம்மா வீட்டுத் திறமும் செப்பம்;நின்
செம்மா பாதபற் புத்தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே2.

    பொ-ரை : கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கிய உபகாரகனே! ஸ்வாமியே! எத்தகைய பெரிய மோக்ஷத்தின் தன்மையைப் பற்றியும் பேசோம்; நினது சிவந்த பெருமை பொருந்திய திருவடித் தாமைரைகளை என் தலையின்மீது விரைவில் சேர்க்கவேண்டும்; அடியேன் விரும்புவது இப்பேறேயாகும்.

    வி-கு : ‘எம்மா’ என்பதனை, எ-மா என்றும், எம்-மா என்றும் இருவகையாகவும் பிரித்தல் தகும். ‘ஒல்லை’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டி இடைநிலைத் தீவகமாகப் பொருள் கொள்க. செப்பம் – தனித்தன்மைப் பன்மை. ‘பத்மம்’ என்ற சொல், ‘பற்பம்’ எனத் திரிந்தது.

ஈடு : முதற்பாட்டில், 1‘எவ்வகையாலும் வேறுபட்ட சிறப்பினையுடைய மோக்ஷத்திலும் எனக்கு விருப்பம் இல்லை; உன் திருவடிகளை என் தலையிலே வைக்கவேண்டும்,’ என்கிறார்.

    2‘ஆழ்வீர்! மோக்ஷத்தைக் கொள்ளும்,’ என்றான் இறைவன்; ‘வேண்டா’ என்றார்; ‘மா வீடு – வேறுபட்ட சிறப்பினையுடைய மோக்ஷங்காண்’ என்றான்; ‘அதுவும் வேண்டா’ என்றார்; ‘எம் மா வீடுகாண் – செல்வம், ஆத்ம லாபம் என்று இருக்கவேண்டா; பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷங்காண்’ என்றான்; ‘அதுவும் எனக்கு வேண்டா’ என்கிறார். எம் மா வீட்டுத் திறமும் செப்பம் – எவ்வகையாலும் நன்றான மோக்ஷத்தைப் பற்றிய வார்த்தையும் பேசோம்.  நீ அதனைப் பற்றிப் பேசவும் உரியவன் அல்லை; நான் மறுக்கவும் உரியவன் அல்லேன் என்றபடி. இனி, ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்பதற்கு, ஒரு புலவர் எம் மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம் என்று பொருள் கூறினர். அப்பொருளில், வீட்டு விகல்பமாவது – சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் என்கிற இவை. செவ்விய ஆகையாவது, சாலோக்யம் முதலானவைகள் எல்லாம்3 இம்மோக்ஷத்திலே உண்டாகை.

    ‘ஆயின், உமக்கு வேண்டுவது என்?’ என்னில், ‘நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து – மலர்ச்சி, செவ்வி, குளிர்த்தி, நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி என்னலாம்படி இருக்கிற உன்னுடைய திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேண்டும். செம்மா பாதம் – செம் என்று சிவப்பாய், மா என்று கறுப்பாய், அகவாய் சிவந்து புறவாய் நீலமாய் இருக்கிற திருவடி என்றபடி. இனி, செம், மா பாதம் – என்பதற்குச் செம்மையால் நினைக்கிறது – செவ்வையாய், அடியார்கட்கு வருந்த வேண்டாதபடியான ஆர்ஜவத்தையுடைத்தாய் என்றும், மா என்று பெருமையாய் பூசிக்கத்தக்க மிக உயர்ந்த திருவடிகள் என்றும் பொருள் கூறலுமாம். சேர்த்து – சேர்க்க வேண்டும்; அதாவது, 1‘கொக்கு வாயும் படுகண்ணியும் போன்று, உன் திருவடிகளும் என் தலையும் சேரவேண்டும்,’ என்றபடி. ‘சேர்த்து’ என்பது வினையெச்சம் அன்று; வேண்டிக்கோடற்பொருண்மையின்கண் வந்த வியங்கோள் வினைமுற்று. ‘சேர்த்துக’ என்பது ஈறுகெட்டு நின்றது. 2‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

    ‘அப்படியே செய்கிறோம்’ என்றான்; அம்முறை பற்றாது. ஒல்லை -‘செய்துகொடு நின்று ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்; ‘இப்படி விரைய வேண்டும் இடம் உண்டோ?’ என்ன, கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது – வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே – 1‘நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.          

பெருமாள் ‘நில்’ என்ன, இளையபெருமாள், குருஷ்வ மாம் அநுசரம் – நான் பின்
தொடர்ந்து வருவேனாகச் செய்ய வேண்டும்’ என்று சொன்னார் என்றபடி.

2. ’நீருள எனின்உள் மீனும் நீலமும்;
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளுவாய்’ என்றான்.                     

(கம்ப. நகர் நீங். 157)

  என்ற செய்யுளைச் ‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய’ என்று தொடங்கும்
வாக்கியத்தோடு ஒப்பு நோக்குக.

3. ஒருவன் ஒரு தொழிலைச் செய்தால், அத்தொழிலால் உண்டாகும் பயன் தன்னைச்
சார்வதாக இருந்தால், அத்தொழிலை உணர்த்துகின்ற சொல்லின் உறுப்பை ‘ஆத்மநே
பதம்’
என்றும், பயன் பிறன் ஒருவனைச் சார்வதாக இருந்தால் அத்தொழிலை
உணர்த்தும் சொல்லின் உறுப்பைப் ‘பரஸ்மை பதம்’ என்றும், கூறுப. அங்குக் ‘குரு’
என்பது பரஸ்மை பதம்;’ ‘குருஷ்வ’ என்பது ஆத்மநே பதம். ஆத்மநே பதமான
‘குருஷ்வ’ என்றதனை நோக்கி, ‘யாருடைய பிரயோஜனத்துக்காக யார் தான் இருக்கிறார்?
உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்று அருளிச்செய்கிறார். ‘சேதனன்
அடிமை செய்வதால் உளதாய பயன் இறைவனுக்கு’ என்னும் சாஸ்திரப் பொருளை இங்கு
நினைவு கூர்க. இங்கு, ‘உனக்கேநா மாட்செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்று’ என்று
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் திருவாக்கின் சீரிய பொருளைச் சிந்தை செய்க.

4. ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்றதற்கு பாவம் ‘நீர்தாம்’ என்று
தொடங்கும் வாக்கியம். அந்தச் சுலோகத்தை முற்றும் ஈண்டுத் தருகிறேன்: –

  ‘குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’

      ‘சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்
என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;
தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால்
வந்த கைங்கர்ய பலத்தை  அடைந்தவனாகப் போகிறேன்’ என்பதாம்.

பரவாநஸ்மி’ என்ற தலைப்பையுடைய சுலோகம் முழுதும் வருமாறு; –

  ‘பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’

      ‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்
நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,
‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.

எ ம்மா வீடு திருவாய் மொழி
உயர்ந்த -சாரம் மிகுந்த
எம்மா வீட்டில் எம்மா வீடு நான்காவது பாசுரம்
இதுவாயிற்று திருவாய் மொழி
நலம் அந்தமில் நாடு புகுவீர் -உபதேசித்து –
இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாய் பாரிக்க வந்து
அத்தை கண்ட ஆழ்வார்
இங்கனே தரப் பார்க்கிறது –
அதாகிறது உனக்கு மோஷம் கொள் என்று எனக்காக தராமல் தனக்காக எனைக் கொள்ளும் ஈதே –
எனக்கே  கண்ணனை யான் கொள் சிறப்பே –
மோஷம் கேட்கும் பொழுதே –இனி யாம் உறாமை -அங்கெ கேட்காமல் இப்படி இங்கே கேட்க காரணம் –
கொஞ்சம் கொஞ்சமாக கடைசியில் கேட்க காரணம் –
இத்தனை நாள் நிர்ணயம் பண்ணாமல் இருக்க காரணம் –
அவன் மென்மேலும் குண அனுபவம் கொடுக்கையாலே -இதை சொல்ல காலம் இல்லை –
இதிலும் குணம் சொல்ல -அனுபவம் தானே
அது அப்படியே –
இவன் மென்மேலும் காட்டும் விருப்பம் கண்டு வியாமோகம் முடிய அனுபவிக்க முடியாதே
இவனை மீட்டாகிலும் பிராப்ய நிஷ்கர்ஷம்
கொஞ்சம் நிறுத்தி சொல்லி -அப்புறம் குண அனுபவம் செய்ய
இங்கனே நில் என்று நிறுத்தி வைத்து பிராப்ய நிஷ்கர்ஷம் அருளிச் செய்கிறார் –
எம்பார் -இந்த திருவாய் மொழியை அனுசந்திக்கும் பொழுது –
இருந்தவர்களை யார் என்று கேட்டு -கதவுகளை அடைத்து குக்ய த மமாக –
பக்தி -அந்வயம் அதிகாரி நிஷ்டை உண்டே
பிரபத்தி அந்வயம் அதிகாரி நிஷ்டை இல்லையே இருந்தும் -மறைத்து
வீடு முன் முற்றவும் பக்தி -விசுவாசம் அனைவருக்கும் உண்டாகாது
உய்யக் கொண்டாருக்கு உடையவர் அருளிச் செய்த வார்த்தை
உபேய கௌ ரவம் -வித்வான் அர்த்தம் அறிந்தீர் பாக்ய ஹீனர் ஈடுபாடு இல்லை –
அப்படி உள்ளவருக்கு உபதேசம் கூடாதே
திருக் கோட்டியூர் நம்பி அதனால் தான் பரிட்ஷை
தமிழன் வேதார்த்தி பலரும் கேட்க வருவார்கள் திரு வாய் மொழி கால ஷேபம் கேட்க –
தகுதி உண்டா என்று பார்த்து –
கைங்கர்யம் அவன் ஆனந்தத்துக்கு என்பது -குக்ய தமமான அர்த்தம் -திருவடி சம்பந்தம் -கேட்டு –
எம்பார் -கதவுகளை அடைத்து -வெளியில் போக விடாமல் அரை குறையாக கேட்டு போகாமல் இருக்க
அருளிச் செய்வது -சாரம் –
நிஷ்கரிஷிக்க வேண்டியது எதற்க்காகா -பிராப்யம் என்றாலே இது தானே
சர்வேஸ்வரன் சேஷி -இவரும் சேஷ பூதர் அநாதி -உபாய பாவமும் நித்யம்
ச்வீகாரம் செய்த பின்பு தான் கார்யகரம் ஆகும் –
ஞானம் ஏற்பட்ட பின்பு தான் பலன் –
அவன் ஸ்வ தந்த்ரன் -நினைத்த பொழுது வேண்டியதை கொள்வான்
பிராப்தி சமயத்தில் இப்படி கொடு சொல்ல வேண்டுமே
உத்தர அர்த்தத்திலும் இந்த அர்த்தம் –
உத்தர கண்டம் -த்வயத்தில் –
பூர்வ அர்த்தம் -சர்வ பலனுக்கும் சாதனம் –
பல நியமனம் இல்லையே எதற்கும் சரணாகதி செய்யலாமே
சர்வ பல பிரதானம்
பிரயோஜனாந்தர பரரும் சரண் அடையலாமே
ஸ்ரீ மதே நாராயண நம -அதுவும் அவன் ஆனந்தத்துக்கு
முக்தனாய் நிரதிசய ஆனந்தம் –ஆத்மா பிராப்தி கைவல்யமோ -ஸ்வர்க்கம் அனுபவம் –
நரகமோ -உனக்காய் வந்தால் இத்தனையும் பெறுவேன் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –
எனக்காக ஒன்றும் வேண்டும்
தேவரீர் ஆனந்தத்துக்கு மட்டுமே –
எய்தாலும் எய்தாவிடிலும் -கீழே பாசுரம் வரும்
எம்மா வீட்டு திறமும் செப்போம் –

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார் -பிராப்ய நிஷ்கர்ஷம் செய்து அருளுகிறார்

சம்சாரம் நிவ்ருத்தி கழிந்து -பகவத் கைங்கர்யம் செய்து அவனை ஆனந்திப்பிக்க
நிர்ணயித்து -அருளுகிறார் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
ஆம் பரிசு அறிந்து -தொண்டர் அடி பொடி ஆழ்வார்
மற்றை நம் காமங்கள் மாற்று
பிதிதாக நிஷ்கர்ஷம் செய்ய வேண்டியது எதற்கு
பிரபத்தி சொல்ல வேண்டியது போல் -கார்ய கரம் இல்லை
நித்யமாக இருந்தாலும் -உணர்ந்து இருக்கிறபடியே பேசினால் தான்கார்யகரம் ஆகும் –
உன் ஆனந்தமே முக்கியம் –
மோஷமோ நரகமோ உனக்காக என்றால் உத்தேச்யம் –
ஸ்ரீ பரத ஆழ்வான் -இளைய பெருமாள் -திரு உள்ளம் அநு சரித்து –
ஜலான் மஸ்த்யா போல் –
இழந்த வச்துவ்வுக்கு தக்கபடி கூப்பீடு -புரோகிதர் -வசிஷ்டர் பார்த்து பரதன –
நன்மையை பார்க்காமல் ஸ்வரூபம் அறியாமல் –
ஆசார்யர் இடமஏகாந்தமாக சொல்லாமல் –
ராஜ்யம்  பரிபாலிக்க வேண்டுமே –
அத்யந்த பாரதந்த்ர்யம்-ராஜ்யஞ்ச அஹமஞ்ச -ராமஸ்ய ராமனின் உடைமை –
பொகட்டு போன ராஜ்யத்தை தலையிலே கட்ட -ராஜ்ஜியம் என்னை ஆளலாமே –
இரண்டு வஸ்து செஷமானால் -ஒன்றை ஓன்று நிர்வகிக்குமோ –
ராஜ்ய தர்மம் பார்த்தீர் -என் தர்மம் பார்க்க வில்லையே
நின்றார் பிரதானர் தலையில் வைக்க பார்த்தீர்
விஷய பூதனரான என்னை பார்க்க வில்லையே
பிரிந்த அடுத்த ஷணம் முடிந்த தசரதர் பிள்ளையாக ஆவேனோ ராஜ்ஜியம் சூடினால்
அபகரித்தேன் என்ற பேர் வருமே -ராஜ்ய அபகாரி –
பிரிந்து 14 ஆண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தது திரு உள்ளம்
இளைய பெருமாளை நில் என்றால் -குருஷ்வ மாம் அனுசரம் -என்றார் இறே
அன்வயத்தாலே தான் தரிக்கும் வஸ்துவை நில் என்றால் அழியுமே
உன்னை பின் தொடர்ந்தவனாக நீ செய்வாய் -குரு என்னாதே  –
மோஷயிஷ்யமி பிரயோஜன கர்த்ருத்வம் இச்சாலே –
தொண்டையர் கோன் செய்த கோயில் சிற்பி கட்டினாலும் -குருஷ்வ பிரயோஜன
பலம் யாருக்கோ அவன் தான் -பிரயோஜன கர்த்தா –
அனுபவம் யாருக்கோ -பிரயோஜன கர்த்ருத்வம் –
ஆனந்தம் உனக்கு –
உம்முடைய இழவுக்கு நீ பதறாமல் இருப்பது ஏன் -என்கிறார் –
அடிமை கொள்வது தான் சேஷி ஸ்வரூபம் அது அழிய கூடாதே –
கொடி மூக்கும் இரா விடுத்தான் பெருமாள் நியமனத்தாலே -மூத்தானை வென்னகரம் சேர விடுத்தான்
ஒரு சேர அருளி –
குருஷ்யாமி உனக்கு -தனக்கேயாக எனைக் கொள்ளும் இதே
அநுசரம் -குருஷ்யாமி -நிற்கச் சொல்லுகைக்கு யோக்யதை
நிழலை பார்த்து சொல்ல முடியுமா -நில் என்று
அது போல் இல்லாம தனி வ்யக்தியாக இருப்பது என் குற்றம் தானே
எம்பார் -ராமானுஜா பத சாயா –
நிழல் போல் ஆக்கி பண்ணி அருளும்
சேஷத்வம் இளைய பெருமாள் -வற்புறுத்தி கொண்டார் மேல் எழுந்த பார்வை
பாரதந்த்ர்யா காஷ்டை -அத்யந்த  பாரதந்த்ர்யம் –
திருமேனி காவலுக்கு போக வேண்டுமே
ஸ்வரூபம் அழிந்தாலும் -பின் தொடர்ந்து போனது அத்யந்த பாரதந்த்ர்யம்
தன்னை அழித்துக் கொண்டு பெருமாளுக்கு கைங்கர்யம் இட்ட வழக்காய் இல்லாமல் –
காவலுக்கு போக வேண்டுமே
பரத ஆள்வான் பாரதந்த்ர்யம் -இளைய பெருமாள் அத்யந்த பாரதந்த்ர்யம்
துர்வாசர் விட்டது -விடாவிடில் குல நாசம் என்பதால்
தம்மை அழித்து கொண்டு உள்ளே போக விட்டாரே –
தண்ட காரண்யம் -நீரும் நிழலும் உள்ள இடத்தில் பர்ண சாலை அமையும்
நம் தலையில் ஸ்வா தந்த்ர்யம் காட்டி பெருமாள் கை விட்டார் அழ ஆரம்பித்தான்
பரதந்திர வஸ்து -சுயம் ருசி காட்டி -மாம்வாத –
ராமோ து நீ கூட சொல்லி பாவம் -லஷ்மன கைங்கர்ய லஷ்மி சம்பந்தம் அடையாளம் –
அஞ்சலி -ஷிப்ரம் தேவ பிரசாதம்
பண்ணின பாபம் விடுவிக்க
இங்கே எம்பெருமான் பண்ணின தப்புக்கும் அஞ்சலி செய்து –
அவனே தம் ஸ்வரூபம் அளிக்க பார்த்ததுக்கும் அஞ்சலி செய்து குறை தீர்க்க
ஸ்வரூபத்தை காப்பாற்ற கடவது
சர்வ அபிமத சாதனம் அஞ்சலி –
சீதா -பண்ணின அஞ்சலிக்கு தலை திருப்பிக் கொண்டால் திருப்பி விட அவள் உண்டே –
அந்ய பரதை பாவிக்க ஒண்ணாது
கோதா ஸ்துதி -பெரிய பிராட்டியார் -பூமிப்பிராட்டி -இரண்டு பக்கமும் திருப்ப ஒட்டாமல் –
காகுஸ்தன் -வம்சம் குடி பிறப்பும் சரண் அடைந்த –
புறாவுக்கு சிபி -சக்ரவர்த்தி -சிபார்சும் வேண்டாமே
உன்னுடைய அஸ்மி இருப்பை போல் இல்லை என்னுடைய அஸ்மிதி
அஹம் கிருகே அஸ்மி
இருப்பே பரதந்த்ர்யம் தானே நாம்
இப்படி பட்ட பாரதன்ர்யம் ஆழ்வார் ஆசைப்படுகிறார்
புதிசான வார்த்தை இல்லை
யாரும் அபேஷிப்பதும் இல்லை -கொடுத்து போனதும் இல்லை பெருமாள் வார்த்தை
அவன் அநாதரித்து இருக்க -புருஷன் ஆர்த்திக்க வருவது இறே புருஷார்த்தம் –

செப்போம் சொல்ல மாட்டோம் –
ஏம்மா வீட்டு திறமும்
பன்மையில் சொல்லி உன் திருவடி சீக்கிரம் சேர்த்து ஒல்லை –
கைம்மா துன்பம் கடிந்தாயே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –
மோஷத்தை கொள்ளும் வேண்டாம் என்றார்
மா வீடு கொள்வீர் அதுவும் வேண்டாம்
ஏம்மா வீடு ஐ ஸ்வர்யம் கைவல்யம் இல்லை
பரம புருஷார்த்த லஷண மோஷம் வேண்டாம்
இடையாட்டமும் வேண்டாம்
நீ பிரதி சந்கிக்கவும் வேண்டாம் நா தடுக்கவும் வேண்டாம்
விகல்பமும் -வீட்டு விகல்பம் -ச்சாலோக்யாதிகள் -போல்வன –
சாலோக்யம் -கைவல்யமும் சாலோக்யம் தாஎ
சாரூப்யம் -அவன் போலே ரூபம் சாமீப்யம் சமீபத்தில் –
சாயுஜ்யம் –சேர்ந்து அனுபவம்
நாலும் வேண்டாம் என்கிறார் –
திறம் விகல்பம் செப்பம் செம்மை அர்த்தம் தமிழன் அர்த்தம்
நின் செம்மா பாத
சிகப்பாய்
மா கருப்பு
பத்மம் போல் விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -பாத பறப்பு
செம்மை செவ்வையாய் ஆஸ்ரிதர்க்கு வருந்தாமல் தானே வந்து
சிகப்புதேக குணம்
மா மகத்தை
சேர்த்து கொக்கு வாயும் படி கண்ணியம் போலே
கொக்கி -ஆபரணம்
உன் திருவடி தலையில்
சேர்த்து -சேர்க்க வேணும் விதி -கட்டளை இடுகிறார் வினை எச்சம் இல்லை
சரணவ் பிராது -வெஞ்சனங்கள் -பரத ஆழ்வான் சிரசா தாங்கி –
ஜனனி -கண்டு -இத்தை பண்ணினால் தீரும் உள் வெதும்பு ஆறுவது இத்தால்
பிள்ளாய் -கேட்க -எனக்கு வகுத்த முடி சூடி
அரசு சுமந்தான் அடி சூடும் இது அல்லால்
மயிர் கழுவி பூ சூடி -ஈறில் இன்பத்து -பிரகிருதி கழித்து பற்ற –
காலம் -ஆகட்டும் பார்க்கலாம்
அந்த க்ரமம் -பார்த்து இருக்காது
ஒல்லை
செய்து கொண்டே -கொடு நின்று –
த்வரிகை -கைம்மா துன்பம் -த்வரித்து வந்து ரஷித்தாய்
சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து -அரை குலைய தலை குலைய வந்து காத்த இடம் உண்டே
மனசால் சிந்தித்து
காத்த சக்தி இல்லை
துதிக்க -துதிக்கை மேலே வைத்து அதுவும் முழுகும் ஆபத்து
மூக்கு கீழ் மூச்சு விட முடியாதே
கைம்மா துன்பம் யானையின் -பெரியவன் துக்கம் பெரிய துக்கம் –
துதிக்கை மூழ்கின ஆபத்து
உமக்கு அது போல் உண்டோ
அங்கு ஓன்று எனக்கு ஐந்து முதலை அளித்து உண்ட
1000-தேவ சம்வச்த்ரம் இங்கே அநாதி காலம்
பிறவி என்னும் பெரும் கடல் -அங்கெ சிறு குழி
ஆத்மா நாசம் அங்கெ சரீர நாசம்
அங்கு காலை பற்ற -இங்கே நெஞ்சை பற்ற
பிரானே -கைம்மா துன்பம் கடிந்தது தமக்கு செய்த உபகாரம்
உமக்கு என்
அம்மா சுவாமி தேவரீரோட்டை சம்பந்தம் உண்டே
கஜேந்த்திரன் போல்
நீர் யார்
அடியேன் ஸ்வரூபம் சேஷ பூதன் இருவர் ஸ்வரூபத்தையும் பற்றி தவிர ஒண்ணாது

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-8-11–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

கண்தலங்கள் செய்ய கருமேனி அம்மானை
வண்டுஅலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்
விண்தலையில் வீற்றிருந்து ஆள்வார்எம் மாவீடே.

பொ-ரை : சிவந்த கண்களையும் கரிய திருமேனியையுமுடைய இறைவனை, வண்டுகள் அலைகின்ற சோலைகளையுடைய திருவழுதிவள நாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்களிலே வைத்துப் பாடிய ஆயிரம் தமிழ்ப்பாசுரங்களிலே இப்பத்துப் பாசுரங்களையும் வல்லர்கள், பரமாகாசத்தில் சிறப்போடு இருந்து எனக்கும் என் சம்பத்திகளுக்கும் தருவதாக இருக்கிற அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டிலே இன்பத்தினை அனுபவிப்பார்கள்.

    வி-கு : அலம்புதல் – ஒலித்தலுமாம். ‘வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர்’ என மாற்றுக. ‘வீற்றிருத்தல் – வேறு ஒன்றற்கு இல்லாத சிறப்போடு தங்கியிருத்தல்’ என்பர் நச்சினார்க்கினியர்.

    ஈடு : முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்கவல்லவர்கள் இத்திருவாய்மொழியிற்சொன்ன முத்தப் பிராப்பிய போகத்தைப் பெறுவர் என்கிறார்.

    கண் தலங்கள் செய்ய கருமேனி அம்மானை – 2‘பூதலங்கள்’ என்னுமாறு போலே திருக்கண்களின் பரப்பைச் சொல்லுகிறது. பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும், அவற்றுக்குப் 3பரபாக மாம்படி கருமை நிறைந்த திருமேனியையுமுடைய சர்வேஸ்வரனை. வண்டு அலம்பும் சோலை வழுதி வளநாடன் பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் – வெள்ளத்திலே அலைவாரைப் போலே, தேன் வெள்ளத்திலே வண்டு அலையாநின்றுள்ள சோலையையுடைய திருவழுதி வளநாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்ணிலே சொன்ன தமிழ் ஆயிற்று இப்பிரபந்தந்தான்; இதன் பாசுரங்கள் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். பண் தலையிற் சொன்ன – பண்ணின் மேலே சொன்ன என்று பொருள் கூறலுமாம். விண் தலையில் வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர் – பரமபதத்திலே தங்கள் வேறுபாடு தோன்ற இருந்து எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷமானது தங்களுக்கு

உரிமையாம்படி பெறுவர். விண்தலை – தலையான விண்ணிலே என்னுதல்; விண்ணின்மேலே என்னுதல். அங்குள்ளார் தங்கள் ஆணையைப் பின் பற்றும்படியாகப் பெறுவர் என்றபடி. ஆத்தும இலாபத்து அளவே அன்றி, பரம்புருஷார்த்த இலட்சண மோட்சத்தை ஆளப் பெறுவராதலின், ‘எம் மா வீடு ஆள்வர்’ என்கிறார். தொடர்ந்து வருகிற பிறவிகளாய் உண்டான துன்பங்கள் எல்லாம் தீரும்படி வீறுபட்டு இருப்பராதலின், ‘வீற்றிருந்து’ என்கிறார். இனி, ‘எம் மா வீடு ஆள்வர்’ என்பதற்கு, 1‘தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’ என்கிறபடியே, 2‘எனக்கும் என் சம்பந்திகட்கும் தருவானாகச் சமைத்து நிற்கிற பரமபதத்தை ஆளப் பெறுவர்’ எனலுமாம்.            

(11)

    முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்யாநின்றுகொண்டு, ‘சம்சாரமாகிற இக்கடலைக் கடக்க வேண்டும்’ என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்; இரண்டாம் பாட்டில், ‘அவன் வேண்டுமோ? அவனுடைய சம்பந்தமே கடத்தும்’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் எங்கும் காணலாம்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அந்தம் இல் பேரின்பத்தைப் பெறவேண்டும் என்றிருப்பீர்! அவனைப் பற்றுங்கோள்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், மேல் ‘இணைவன் ஆம் எப்பொருட்கும்’ என்றதனை விவரித்தார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வுயர்வுகள் எல்லாம் அவனுக்கு உண்டோ?’ என்ன, ‘நாம் ஆராய வேண்டாதபடி அருச்சுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான்’ என்றார்; எழாம் பாட்டில், ‘ஒருவன் 3அநுவர்த்தனம் கொண்டு அறிய வேண்டுமோ? அவன் விரும்பிச் செய்கிற எல்லாக் காரியங்கட்கும் உரியதாக அன்றோ இவ்வுலகம் இருக்கிறது?’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘எங்கும் பரந்திருத்தல் தொடக்கமான அவனுடைய செயல்கள் ஒருவரால் அளவிட முடியாது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘அவனுடைய எங்கும் பரந்திருக்கும் தன்மையை இசையாதார் இரணியன் பட்டது

படுவர்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘இந்த விதமானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்காட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        அணைந்தவர்கள் தம்முடனே ஆயன்அருட்கு ஆளாம்
குணந்தனையே கொண்டுஉலகைக் கூட்ட – இணங்கிமிக
மாசில்உப தேசம்செய் மாறன் மலர்அடியே
வீசு புகழ்எம்மா வீடு.

1. ‘விண்தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே’ என்றதனைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2 ‘கண்’ என்னாது, ‘கண் தலங்கள்’ என்றது, திருக்கண்களின் பரப்பைச் சொல்லுதற்கு
என்று திருவுள்ளம் பற்றி, அதற்கு மேற்கோள் காட்டுகிறார். ‘பூதலங்கள்’ என்று.
‘அரங்கத்து அமலன் முகத்து, கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட
அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்றார் பாண் பெருமாள்.

3. பரபாகம் -வண்ணப்பொயிவு; வர்ண உத்கர்ஷம்.

இங்கு ‘எம்’ என்பதற்கு ‘எங்கள்’ என்பது பொருள்; இந்தப் பொருளையே ‘எனக்கும்
என் சம்பந்திகட்கும்’ என்று விரித்து அருளிச் செய்கிறார். முன்னைய பொருளுக்கு ‘எ,
மா, வீடு’ எனப் பிரிக்க.

நிகமத்தில் -முக்த பிராப்ய போகத்தை பெறுவார் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார் –
கண் தளங்கள் செய்ய -சிவந்த திருக் கண்கள்
கரு மேனி அம்மான்
வண்டுகள் ரீங்காரம் -சோலைகள்
பண  உச்சத்தில் உள்ள பாசுரங்கள்
விண் தலையில் இருந்து உபய விபூதியும் ஆள்வார்
தளங்கள் -பூதலங்கள் போல் விசாலமான கரிய வாகி புடை பரந்து
பரபாகமான திரு மேனி கருத்தும்
வெள்ளத்தில் அலைவாரைப் போலே தேன் வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்றுள்ள சோலைகள்
பண -தலையில் -ஒவ் ஒரு பத்துக்கும் ஒரு பண உண்டே –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
வேத சாம்யம் போல் மூன்று சுரம் -சப்த சுரங்களும் உண்டே -பண தலை -உண்டே
விண் தலை -பரம பதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோன்ற அங்குள்ளார் இவர் சொன்னதை கேட்கும் படி
நியமிக்கும்படி -பரம புருஷார்த்த லஷணம்
சம்சார சந்கொசங்கள் தீர்ந்து வீற்று இருப்பார்கள் –
வீடு திருத்த -தம் பால் மனம் வைக்க -வீட்டைத் திருத்த தொடக்கி
கேசவ தமருக்கு அப்புறம் ஆழ்வார் தனியார் அல்லர்
பத்து பாசுர அர்த்தம் இதுக்கும் அருளி –
முதல்பாட்டில் சந்க்ரேகென அருளி
அவன் சம்பந்தமே போதும் –
வ்யாப்தி தொடக்கமான அவனது -சொல்லி முடிக்க முடியாதே

அணைந்தார்கள் தம்முடனே –
கேசவ தமர் சம்பந்தம்
ஆயன் அருளுக்கு ஆளாகி
உலகை கூட்ட இணங்கி
உபதேசம் செய்தார் –
மாறன் மலர் அடியே நமக்கு மோஷம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-8-10–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகுஈறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற்று எப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன்என் கண்ணனைநான்
கண்டேனே.

    பொ-ரை : சிறப்பினைக் கொண்டுள்ள பரமபதம் சுவர்க்கம் நரகம் முடிவாக, அன்பினைக் கொண்டுள்ள தேவர்கள் நடுவாக, மற்றும் உண்டான எல்லாப்பொருள்கட்கும் வேராகி முதலாகி வித்து ஆகிப் பரந்து தனித்து நின்ற கார்காலத்து மேகத்தைப் போன்ற வண்ணத்தை உடையவனான என் கண்ணபிரானை நான் கண்டேன்.

    வி-கு : வீடு முதலானவற்றை முடிவாகவும், தேவர்களை நடுவாகவும் ஓதியதனால் ‘எப்பொருட்கும்’ என்றதனை முதலாகக் கொள்க. நல்வினை தீவினைகளைச் செய்பவை உயிர்கள் ஆதலின், அவற்றை முதலாகவும், அக்கருமங்கட்குப் பலன்களைக் கொடுப்பவர்கள் தேவர்கள் ஆதலின், அவர்களை நடுவாகவும், அப்பலன்களை அனுபவிக்கும் இடங்கள் வீடு சுவர்க்கம் நரகங்கள் ஆதலின், அவற்றை ஈறாகவும் ஓதினார்ஈடு : பத்தாம் பாட்டு.  1‘இவர்களை விடீர், நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே அவனை அனுபவிக்கப் பெற்றோமே!’ என்று தமது இலாப அநுசந்தானத்தாலே மகிழ்ந்தவர் ஆகிறார்.

    சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறு ஆக ஈர்மை கொள்தேவர் நடுவாக மற்று எப்பொருட்கும் – எல்லா வகையாலும் நன்றான பரமபதம் அளவுக்குட்பட்ட இன்பத்தையுடைய சுவர்க்கம் கலப்பு அற்ற துக்கமேயான நரகம் இவை முடிவாக, ஈரப்பாடு உடையவர்களான தேவர்கள் நடுவாக, மற்றும் உண்டான விலங்கு முதலானவற்றிற்கும். வேர் முதலாய் வித்தாய் –2மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து –3‘உயிர்களைப் படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள் ஆனார்’ என்கிறபடியே, முந்துற இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. தனி நின்ற கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேன்-‘இப்படி, உலகமே உருவமாய் நின்ற அளவே அன்றி, தன்னுடைய சிறப்புத் தோன்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே மழை பெய்யும் மேகம் போலே இருக்கிற அழகிய திருமேனியையுடையனாய் இருந்தும், கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாள் ஆனவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்கிறார்.

1. சம்சாரிகளுக்கு உபதேசித்த இடத்தில் அவர்கள் திருந்தாமையாலே ‘இவர்களை விடீர்’
என்கிறார். ‘கண்ணனை நான் கண்டேனே’ என்றதனை நோக்கி, ‘நாம் முந்துற முன்னம்’
என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

2. மூன்று விதமான காரணங்கள்: முதல் துணை நிமித்த காரணங்கள். வேர் –
துணைக்காரணம்; முதல் – நிமித்தகாரணம்; வித்து – முதற் காரணம்.
ஞானசத்தியாதிகளோடு கூடிய வேஷத்தால் துணைக்காரணமும், சங்கல்பத்தோடு கூடிய
வேஷத்தால் நிமித்தகாரணமும், சூஷ்ம சித்து அசித்துகளோடு கூடின தன்மையால்
முதற்காரணமும் கொள்க.

மோஷ பிரதத்வம் –
சர்வ வ்யாபகத்வம் சொல்லி -எங்கும் உளன் கண்ணன் மகனைக் காய்ந்து
ஹிரண்யன் பட்டது படுவார்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள்
பர தத்வம் ஒவ் ஒரு தத்வத்திலும் பரி பூர்ணம் இல்லை என்று சொல்வாரும் இப்படி
பல தூணுக்கு ஒரு உத்தரம் போலே -பரவி இருக்கிறான் என்பாரும் இப்படியே –
உத்தரம் பாகம் தான் ஒரு தூணில் உள்ளது –
ஒரே வஸ்துவில் பரி பூர்ண வ்யாப்தி ஒத்துக் கொள்ளாதவர்
அணு உள்ளேயும் -மகதோ மகியான் -அந்தர் பஹி -உள்ளும் வெளியிலும்
அணு -உள் பாகம் இல்லாதது தானே -மேலே வெட்ட முடியாது –
சதபாகச்ய ஏ கோ பாக நெல்லின் வால் நுனி நூறு துண்டாக்கி அதை மேலும் நூறு பங்காக்கி –
இப்படி போட்டு கொண்டே போய் துண்டு போடா முடியாத அணு ஆத்மா என்பதால் -அதற்குள்ளும் உள்ளான்
விபு தத்வம் பரந்து -வெளி பிரதேசம் இல்லாதது -அதையும் பரந்து உள்ளான் –
ஒவ் ஒரு வஸ்துவிலும் பரி பூரணன் அகடிகடன் சாமர்த்தியம்
மந்த புத்தியால் அறிய முடியாது –
சாந்க்யன் -ஈஸ்வரன் ஒத்துக் கொண்டவன் -வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறான் –
யஜமான் என்று பெயருக்கு சாங்க்ய புருஷர் என்பர் -family head பெயருக்கு -என்பர் –
நியாய சாஸ்திரம் -பசுவுக்கு லஷணம் கோத்வம் உடையது கோ –
பசுத் தன்மை உடையது பசு –
கோத்வம் பூரணமாக உள்ளது ஒவ் ஒரு பசுவிலும் -அசேதன தத்வம் இப்படி இருக்க
சர்வ சக்தன் இருக்க கேட்க வேண்டுமா –
பரிசமான்ய பூர்த்தி ஒத்துக் கொள்ளாதவன் ஹிரண்யன் பட்டது படுவான்
சர்வேஸ்வத்வம் -உண்டே -நெஞ்சே இவர்களை விடும்
ச லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டர் ஆகிறார் –
சீர்மை கொள் வீடு -மோஷம்
ஸ்வர்க்கம்  நரகம்
எல்லா பொருள்களுக்கும் வேர் முதலாய் வித்தாய் திரி வித காரணன்
எம்பெருமான் கண்ணனை நான் கண்டேன் –
சர்வ பிரகாரத்தாலும் நன்மை கொண்ட சீர்மை கொள் மோஷம் –
அந்தமில் பேர் இன்பம்
ஸ்வர்கம் -அளவு பட்ட இன்பம் -ஷீணே புன்யே -கழிந்ததும் தள்ளி விட –
புண்யம் தீர்ந்ததும் -அதே கதி -என்று தெரியாது –
இங்கு புண்யம் பாப்பம் சேர்ந்து -ஸ்வர்கத்தில் புண்யம் -நரகத்தில் பாப்பம் அனுபவம் –
நிஷ்க்ருஷ்ட துக்கமே யான நரகம்
ஈதா இவை முடிவான லோகங்கள் -லோகங்களில் உள்ளவரைகளையும் சேர்த்து
ஈரப்பாடு உடைய தேவர்கள் நடுவாக
திர்யக் யாதிகளுக்கும்
வேர் முதலா வித்தாய் -மூன்று வித
உபாதான நிமித்த சக்காரி காரணங்கள் -மூன்று பதங்கள் மூன்றுக்கும் –
பரந்து -பரவி தத் ஸ்ருஷ்டா அதற்குள் அநு பிரவேசம் –
வஸ்து ஆவதற்கு ஒரு அநு பிரவேசம்
ஜீவத்வாரா அநு பிரவேசமும் உண்டு –
உண்டாக்கி -வச்துத்வ நாம பாகதவமும் ஆக்கி –
ஸ்ருஷ்டிக்கு பூர்வ காலத்தில் சூஷ்ம தசை ரூபம் நாமம் இன்றி -இருக்குமே-
சத்தாக இருக்க -ஜகத் ஆகாரமாக நின்ற நிலையை காட்டி
தனி நின்ற -தன்னுடைய வ்யாவர்த்தி தோன்றும்படி ஸ்ரீ வைகுண்டத்தில் கார் முகில் போல் வண்ணன்
மழை பொழியும் மேகம் -போல் இருக்கும் அழகிய திருமேனி -ஸ்ரமகரமான திருமேனி –
கிரிஷ்ணனாக வந்து அவதரித்து
எனக்கு கையாளாக இருந்தான் –
தம்மைப் போல் நின்ற கோபிகளுக்கு செய்தது தனக்கு போலே
பெரிய பெருமாள் வஸ்த்ரம் -வைஷ்ணவ வண்ணாத்தான் -ஐ திஹ்யம் –
ஜனங்கள் நடையாடாத இடத்தில் -ஆச்சாரமாக -அனுஷ்டானம் உடையவன்
அப்படியே சாத்துவார்களாம் -எம்பெருமானார் கைங்கர்யம் கண்டு உகந்து –
இவனுக்குகாக கம்சனின் ஈரம் கொல்லி அபசாரம் பொறுத்தோம் -பெரிய பெருமாள் –
கீழும் மேலும் போகுமே கிருபை பிரவாகம் –
அர்ஜுனனுக்கு கையாளாக இடையருக்கு கையாளாக இருந்தது தமக்கு என்று கொள்கிறார் ஆழ்வார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.