ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
————
நூற்று முப்பத்து மூன்றாம் வார்த்தை
இதர உபாயங்களில் காட்டில் பிரபத்திக்கு வாசி பத்து –
இதர உபாயங்கள் –
1-அதிக்ருதாதிகாரமாகை –
2-விதி பரதந்த்ரனாய் செய்கை –
3-பிராரப்த கர்ம அவசாநத்திலே பலமாகை –
4-அந்திம ஸ்ம்ருதி வேணும் என்கை –
5-அசேதனமாகை –
6-சாத்யமாகை –
7-பலம் கூட துணை வேணும் என்கை –
8-பல ப்ராப்திக்கு ஈஸ்வரனை அபேஷிக்கை –
9-ஸ்வரூப விரோதியாகை –
10-பிரப்யத்துக்கு விசத்ருசமாகை –
இது
1-சர்வாதிகாரமாகை –
2-ஆசார்ய ருசி பரிக்ரஹமாகை –
3-தேக அவசாநத்திலே பலமாகை –
4-அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாகை –
5-பரம சேதனமாகை –
6-சித்த உபாயமாகை –
7-சஹாயாந்தர நிரபேஷமாகை –
8-ஒன்றாகை –
9-ஸ்வரூபத்தொடு சேருகை –
10-பிராப்யதுக்கு சத்ருசமாகை –
(கஜேந்த்ரனும் பேற்றை பெற்றான் அன்றோ-பசுர் மனுஷ்ய பஷீரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -மரணமால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் – இதர உபாயங்கள் சர்வேஸ்வரனை பற்ற வேண்டும் -ஈஸ்வரனோ சஹாயாந்தர உபாயம் –பல கரணனும் பல பிரதனனும் அவனே-ஒன்றாகை -பிராப்தி –ஆத்ம நிலை நின்ற பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபம் -ப்ராப்யமான அவனுக்கு ஸத்ருசம் இதுவே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அன்றோ -)
——————————————————————-
நூற்று முப்பத்து நாலாம் வார்த்தை
கர்மம் கைங்கர்யமாய் இருக்கும்
ஞானம் ஸ்வரூபமாய் இருக்கும் –
பக்தி போக பரமாய் இருக்கும் -ப்ராப்யம் (கைங்கர்யம்)தாரகமாய் இருக்கும்
உக்தி (த்வயம்)கால ஷேபமாய் இருக்கும்-
(கர்மம் கைங்கர்யத்திலே புகும்-ஞானம் ஸ்வரூப பிரகாசத்திலே புகும் – பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –சூரணை-271-
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும் கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்–நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே- ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும்-பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே – போஜனத்துக்கு ஸூத்து போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான ருசியிலே அந்தர்பவிக்கும் –சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே –அத்யந்த பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-)
உபாயத்தில் அனுஷ்டானம் சக்ருத் –இதில் அத்யவசாயம் -யாவச் சரீர பாதம்-உபேயத்தில் ருசி யாவதாத்மபாவி –
ஓரொன்றில் அநுக்தமாய் -அவஸ்யம் ஞாதவ்யங்களான(சொல்லப்படாததாய் -ஆனால் அவஸ்யம் அறிந்து கொள்ள வேண்டியதாய்) அர்த்த விசேஷங்களுக்கு
விவரணம் ஆகையாலே -ரஹஸ்ய த்ரவ்யமும் ஒருவனுக்கு ஞாதவ்யமாக கடவது –
எத்தை எது விவரிக்கிறது -என்னில்
ச விபக்திகமான அகாரத்தை உகார மகார அஷர த்வயமும் விவரிக்கிறது -(அகாரத்தை உகாரமும் லுப்த சதுர்த்தியை மகாரமும் விவரிக்கும்)
அவ் அஷர த்வயத்தையும் -மந்திர சேஷ பத த்வயமும் விவரிக்கிறது -(உகாரத்தை நமஸ்ஸும் மகாரத்தை நாராயணாயா விவரிக்கும்)
அப் பத த்வ்யதையும் த்வயத்தில் வாக்ய த்வயம் விவரிக்கிறது –
அவ் வாக்ய த்வயதையும் ஸ்லோகத்தில் அர்த்த த்வ்யமும் விவரிக்கிறது –
அதில் அகாரத்தை அஷர த்வயத்தில் பிரதம அஷரம் விவரிக்கிறது –
விபக்தியை மகார அஷரம் விவரிக்கிறது –
இதில் பிரதம அஷரத்தை பிரதம பதம் விவரிக்கிறது –
அனந்தர அஷரத்தை அனந்தர பதம் விவரிக்கிறது –
இதில் பிரதம பதத்தை பிரதம வாக்கியம் விவரிக்கிறது –
அனந்தர பதத்தை அனந்தர வாக்கியம் விவரிக்கிறது –
இதில் பூர்வ வாக்யத்தை பூர்வ அர்த்தம் விவரிக்கிறது –
உத்தர வாக்யத்தை உத்தர வாக்கியம் விவரிக்கிறது –
இதில் சேஷத்வ பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற அகாரத்துக்கு
அநந்ய சேஷத்வ வாசகமான உகாரம் விவரணமாகிற படி என் என்னில் –
அகார வாச்யனுடைய சேஷித்வம் ஆஸ்ரயாந்தரங்களிலும் கிடக்குமோ –
அநந்ய சாதாரணமாய் இருக்குமோ -என்று சந்திக்தமானால் –
அதனுடைய அநந்ய சாதாரணத்வ பிரகாசம் ஆகையாலே –உகாரம் அகார விவரணம் ஆகிறது -எங்கனே என்னில் –
உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சித்திப்பது –
அதுக்கு பிரதி சம்பந்தியான சேஷித்வம் ஓரிடத்தில் இளைப்பாறில் -(திருச் சங்கு சக்கரத்தாழ்வார் அவன் திருக்கைகளிலேயே இளைப்பாறி இருக்குமா போல்)
அங்கன் அன்றியிலே அநேகம் சேஷிகள் ஆகில் அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாது –
அந்யராய் இருப்பார் சில சேஷிகள் உண்டாகில்
அந்ய சேஷத்வம் சித்திப்பது ஒழிய அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாதே –
ஆகையாலே அகார வாச்யனுடைய சமாப்யதிக தாரித்ர்யத்தை சொல்லிற்றாயிற்று –
சதுர்த்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு
ஆஸ்ரய விசேஷ பிரகாசகமாய்க் கொண்டு விவரணம் ஆகிறது மகாரம் –
நிராஸ்ரயமான ஸ்திதி இல்லையே –
பகவத் வியதிரிக்தரை தன்னோடு பிறரோடு வாசி யற அந்யராகச் சொல்லி –
அவர்களுக்கு அனன்யார்ஹன் இச் சேதனன் என்கிறது உகாரம் –
இதில் கழி யுண்கிற தேவதாந்தராதி மாத்ரத்தாலே அந்ய சப்தத்துக்கு பூர்த்தி இல்லாமையாலே
அவ்வன்ய சப்தத்தில் அந்விதமான தன்னையும் கழித்து
அனன்யார்ஹதையை பூரிக்கிற முகத்தாலே உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் -(அந்நியரில் அந்நிய தமராக தன்னையே நினைக்க வேண்டுமே -அதுவே – -நமஸ் -நான் எனக்கு அல்லன்) அஹமபி ந மம -என்கிறபடி
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யத்தை சொல்லுகிறது நமஸ் சப்தத்திலே இறே – ஆகையாலே உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் –
சேஷத்வத்துக்கு ஆஸ்ரய விசேஷ பிரகாசகமான மகார வாச்யனுடைய சேஷத்வ பூர்த்தி பிரகாசிப்பது – அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வ அநுபபத்தி -என்கிறபடியே
கிஞ்சித்காரத்தாலே யாதல் – ஆகையால் கிஞ்சித்கார பிரகாசகமாய்க் கொண்டு மகார விவரணம் ஆகிறது நாராயண பதம் -(கைங்கர்யம் செய்யாமல் சேஷத்வம் ஸித்திக்காதே -கைங்கர்யம் பண்ணப் பெருவேனாக என்பதே நாராயணாயா)
1-அத்யந்த பாரதந்த்ர்ய பிரயுக்தமாய் வருகிற உபாய விசேஷத்தினுடைய ஸ்வரூபம் என்ன -2-இதில் இழிகைக்கு ஏகாந்தமான துறை என்ன -3-அவ் வுபாய விசேஷமாய் செய்ய வேண்டிய அம்சம் என்ன –இவற்றை பிரகாசிப்பிக்கையாலே
நமஸ் சப்த விவரணம் ஆகிறது த்வயத்தில் பூர்வ வாக்கியம் -(லஷ்மீ விஸிஷ்டமாய் குண விஸிஷ்டமாய் உபாயம் இருக்கும் என்றும் -இழியும் திருவடிகள் என்றும் -ப்ரபத்யே -என்று புத்தியும் பண்ண வேண்டுமே -இவற்றை விவரிக்க வேண்டுமே)
கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்கிற இடத்தைக் காட்டி –
அதுக்கு களையான அம்சத்தையும் கழித்து தருகையாலே
நாராயண சப்தத்துக்கு விவரணம் ஆகிறது உத்தர வாக்கியம் -(ஸ்ரீ மதே நாராயணாய நம -அவர்கள் -மிதுனம் ஆனந்தத்துக்காகவே)
அவ் உபாய ஸ்வீகாரம் சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகம் ஆகையாலே –
தத் பிரகாசகமாய்க் கொண்டு -பூர்வ வாக்யத்துக்கு விவரணம் ஆகிறது பூர்வார்த்தம் –
உத்தர வாக்யத்தில் சொன்ன பிராப்ய ஸித்தி விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக கடவது
என்று விவரிக்கிறது உத்தரார்த்தம் –
சர்வாதிகாரமாயும் -அதிக்ருதாதிகாரமாயும் (அத்யந்த பாரதந்தர்யம் உணர்ந்து அனுஷ்ட்டிக்கவும் வேண்டுமே)-ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாயும்
இருந்துள்ள வாக்ய த்வயத்தில்
பூர்வ வாக்கியம் பிராபகமாயும் –
உத்தர வாக்கியம் பிராப்யமாயும்
இருந்ததே யாகிலும் –
பூர்வ வாக்கியம் பத த்ர்யாத்மகமாயும் -அர்த்த த்ர்யாத்மகமாயும் இருக்கும் –
இதில் 1-ஸ்ரீ மத் -என்கிற பிரதேசம் புருஷகாரம்-3- சரணம் பிரபத்யே -என்கிற பதம் அதிகாரி கிருத்தியம் – 2-நடுவு நாராயண சரணவ் -என்கிற பதம் உபாயம் –
உபாயம் புருஷகார சாபேஷமாயும் அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –
பலத்தில் வந்தால் அந்ய நிரபேஷமாய் இருக்கும் –
உத்தர வாக்யமும் பத த்ரயாத்மகமாய் இருக்கும் –
இதில் 2-ஆய -என்கிற இடம் கைங்கர்யத்தை சொல்லுகிறது –
இதுக்கு கீழ்1- கைங்கர்ய பிரதி சம்பந்தியை சொல்லுகிறது –
மேலில் பதம்-3 கைங்கர்யத்தில் களையை சொல்லுகிறது
———————————————————————————–
நூற்று முப்பத்தஞ்சாம் வார்த்தை
நம் ஆச்சார்யர்கள் திரு மந்தரத்தையும் சரம ஸ்லோகத்தையும் த்வயத்திலே
அனுசந்திக்கும் படி –
இது தான் உபாயம் உபேயம் இரண்டையும் சொல்லுகையாலே த்வயம் என்கிறது –
(விதிப்படி அனுஷ்டிக்கிறோம் என்ற அனுசந்தானம் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணுபவனாக ஆக்கி அருள வேண்டும் -என்பதும் உண்டே-)
திரு மந்த்ரத்தில் உபேய பிரதான்யேன சொல்லுகிற அர்த்தத்தையும் –
சரம ஸ்லோகத்தில் உபாய பிரதான்யேன சொல்லுகிற அர்த்தத்தையும் -(இரண்டிலும் இரண்டுமே இருந்தாலும் பிரதானம் நோக்கம் இதில் தானே)
இதில் பூர்வ வாக்யத்தாலும் உத்தர வாக்யத்தாலும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
அகாரத்தில் -ஸ்வரூப அநு பந்தித்வத்தால் சொல்லுகிற (ஸ்வரூப நிரூபகமான )லஷ்மீ சம்பந்தத்தையும் –
நாராயண பதத்திலே பிராட்டிக்கும் அந்தர்பாவம் உண்டாகையாலே –
அவ்வழியாலே வருகிற லஷ்மீ சம்பந்தத்தையும் –
த்வயத்தில் உத்தர வாக்யத்தில் -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே சொல்லுகிறது –
அகாரத்தில் சொல்லுகிற சர்வ ரஷகத்வத்தையும் –
இதன் விவரணமான நாராயண சப்ததார்த்தத்தையும் –
உத்தர வாக்யத்தில் நாராயண பதத்தால் சொல்லுகிறது –
அகாரத்தில் சொல்லுகிற தாதர்த்த்யத்தையும் –
மகாரத்தில் சொல்லுகிற ஜீவ ஸ்வரூபத்தையும் –
அவதாரணத்தாலே சொல்லுகிற அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் –
இதின் விவரணமான நமஸ் ஸில் சொல்லுகிற அத்யந்த பாரதந்த் ர்யத்தையும்
தத் பிரவ்ருதியை பிரார்திக்கிற சதுர்த்தி யர்த்தத்தையும் –
உத்தர வாக்யத்தில் சதுர்தியாலே சொல்லுகிறது –
(வ்யக்த சதுர்த்தி பிரார்த்தனாயாம் சதுர்த்தி -கைங்கர்யம் செய்பவனாக வேண்டும் என்கிற பிரார்த்தனை உண்டே)
திரு மந்த்ரத்தில் நமஸ் சப்தார்தமான அஹங்கார மமகார நிவ்ருதியை
உத்தர வாக்யத்தில் நமஸ் ஸாலே சொல்லுகிறது –
(மூன்று அஹங்கார மமகாரங்கள்-ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் மூன்றும் இருக்குமே – -ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயம் இல்லாதை திருமந்திரம் காட்டும் -கைங்கர்யத்தில் களை அறுப்பதை த்வயத்தில் உத்தர வாக்கியம் காட்டும்)
ஆக திரு மந்த்ரம் த்வயத்தில் உத்தர வாக்யத்திலே அந்வயித்தது –
இனி சரம ஸ்லோகம் பூர்வ வாக்யத்தில் அந் வயிக்கும் படி சொல்லுகிறது –
மாம் -என்கிற பதத்தில் ஸ்வரூப அநு பந்தித்வத்தாலே சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும் –அஹம் என்கிற ஸ்வரூப அநு பந்தித்வத்தாலே சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும்
த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மத் சப்தத்தாலே சொல்லுகிறது-
மாம் என்கிற பதத்தில் சௌலப்யத்தையும்
அஹம் என்கிற பதத்தில் சொல்லுகிற ஸ்வாமித்வத்தையும்
இதில் நாராயண -பதத்தாலே சொல்லுகிறது –
(ஆஸ்ரயண சவுகர்ய ஆபாத குணங்களும் ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்களும் நாராயண பதம் காட்டும் -ஸ்வாமித்வம் இரண்டிலும் இருக்குமே -கைவிடாமைக்கும் பிராப்திக்கும் உறுப்பு -)
மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற -சேநா தூளியும் -சிறுச் சதங்கையும் -தாங்கின உழவு கோலும் பிடித்த சிறுவாய்க் கயிறும் -நீட்டின திருவடிகளுமாய் நிற்கிற விக்ரஹத்தை
த்வயத்தில் சரணவ் என்கிற பதத்தால் சொல்லுகிறது –
(கையும் உழவு கோலும்–பிடித்த சிறு வாய் கயிறும்–சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும் தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –குதிரைகளை பிரேரித்து நடத்துகைக்காக திருக் கையிலே தரித்த உழவு கோலும்-அவற்றை இடவாய் வலவாய் திருப்புகைக்காகவும் நிறுத்தருள வேண்டும் இடத்தில் தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறு வாய் கயிறும் – திருமுடியில் ஓன்று ஆச்சாதியாமல் நிற்க்கையாலே சேநா தூளியாலே புழுதி படைத்த திரு குழலும்
தேர் தடவிய பெருமான் கனை கழல் -திரு வாய் மொழி -3-6-10–என்கிறபடியே
சாத்தின சிறு சதங்கையும் தானுமாக தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை-என்னை-என்று காட்டுகிறான்-என்கை –)
(கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் – கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –நாயனார்)
ஏக சப்தத்தால் சொல்லுகிற அவதாரண அர்த்தத்தையும் –
சரண -சப்த அர்தத்தையும் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கிற விரோதி நிவ்ருதியையும் –
த்வயத்தில் சரண சப்தத்தாலே சொல்லுகிறது –
(நாம் பண்ண வேண்டியதை -சப்தமாகவே -வியக்தமாக -அருளிச் செய்து -அவன் கிருத்யத்தை ஆர்த்தமாக அநேக இடங்களிலே அருளிச் செய்வர்கள் –அங்கு அப்பறை கொண்டவாற்றை –நாச்சியார் தெளிவாக அருளிச் செய்துள்ளார்)
வ்ரஜ என்கிற இடத்தில் அர்த்தத்தையும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற அர்த்தத்தையும் –
த்வா -என்கிற இடத்தில் சொல்லுகிற அதிகாரி யையும் –
பிரபத்யே -என்கிற கிரியா பதத்தாலே சொல்லுகிறது-
தர்ம த்யாகம் அங்கே உண்டோ என்னில் –
உபாய ஸ்வீகாரம் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக அல்லது நில்லாமையாலே –
ஸ்வீகாரம் சொன்ன இடத்தில் த்யாகம் சொல்லிற்று ஆயிற்று
ஆக சரம ஸ்லோகம் த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் அந் வயித்தது –
ஆக திரு மந்த்ரத்திலும் -சரம ஸ்லோகத்திலும் சொல்லுகிற அர்த்தம் த்வயத்தில் சேர அந்வயிக்கும் படி சொல்லிற்று –
(முமுஷுப்படி மட்டுமே திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் -விவரண கிரமப்படியும் மற்றவற்றில் திருமந்திரம் சரமஸ்லோகம் த்வயம் -ஸ்வரூப விதி அனுஷ்டான கிரமப்படி அருளிச் செய்துள்ளார்)
சரம ஸ்லோகத்தாலே பூர்வ கண்டத்தை விசதீ கரிக்கிறது –
திரு மந்த்ரத்தாலே உத்தர கண்டத்தை விசதீ கரிக்கிறது –
மாம் -அஹம் -என்கிற பதங்களில் லஷ்மீ சம்பந்தத்தை –
பூர்வ கண்டத்தில் ஸ்ரீ மத் பதத்தாலே சொல்லுகிறது –
மாம் -அஹம் -என்கிற பதங்களில் -சௌசீல்ய சர்வஞ்த்வாதிகளை
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் நாராயண பதத்தாலே சொல்லுகிறது –
மாம் -என்கிற பதத்தில் விக்ரஹத்தையும் –
ஏகம் -என்கிற பதத்தில் அர்த்தத வந்த அவதாரண த்தையும் -(பற்றும் பற்றும் உபாயமில்லை -ஸ்வ கதம் இல்லை -என்பதையே ஏக பதம் காட்டும்)
சரணவ் என்கிற பதங்களின் அர்த்தைத்தையும் –
பிரபத்யே என்கிற பதத்தாலே சொல்லுகிறது –
(உபாயாந்தரங்கள் தேவதாந்தரங்கள் நாம் பற்றும் பற்று மூன்றுமே உபாயம் அல்ல -நீயே உபாயம் என்றும் உணர்வது இசைவித்து என்னையே உன் தாளிணைக்கீழ் இருத்தும் அம்மான் என்பதையே பிரபத்யே காட்டும்)
சரம ஸ்லோகத்தில் சரண சப்தத்தில் இங்குத்தை சரண சப்தத்தாலே சொல்லுகிறது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -வ்ரஜ -த்வா
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – மாசுச -என்கிற பதங்களின் அர்த்தங்களை
பிரபத்யே என்கிற பதத்தாலே சொல்லுகிறது –
(பிரபதனம் பண்ணின உடனே சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி யம் மா ஸூச என்றும் அருளிச் செய்வான் தன்னடையே என்றும் தேறும்)
அகாரத்தில் ஸ்வரூப அநு பந்தியான லஷ்மீ சம்பந்தத்தையும் –
நாராயண பதத்தில் நார சப்தத்தில் லஷ்மீ சம்பந்தத்தையும் –
உத்தர கண்டத்திலே ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே சொல்லுகிறது –
அகாரத்தின் அர்த்தத்தையும் –
நாராயண சப்த அர்த்தத்தையும் —
இங்குத்தை நாராயண சப்தத்தால் சொல்லுகிறது –
அகாரத்தில் சதுர்தியையும் –
பிரணவத்தில் மகாரத்தையும் –
உத்தர கண்டத்தில் சதுர்த்தியாலே சொல்லுகிறது
பிரணவத்தில் மத்யம அஷரத்தையும் -நமஸில் அர்த்தத்தையும் –
உத்தர கண்டத்திலே நமஸ்ஸாலே சொல்லுகிறது –
————————————————————————————
நூற்று முப்பத்தாறாம் வார்த்தை
மத்ஸ்யத்தினுடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்கிறாப் போலே
ஸ்ரீ மான் உடைய வடிவு இத்தனையும் ஸ்ரீ மயமாய் இருக்கும் என்று
பெரிய முதலியார் -(ஸ்ரீ நாத முனிகள் )-அருளிச் செய்வர் –
ஆசார்யன் பிரமாதா என்றும் –
அர்ச்சாவதாரம் பிரமேயம் என்றும் –
த்வயம் பிரமாணம் என்றும்
அருளிச் செய்வர் -உய்யக் கொண்டார் –
(அநந்த வேதா -த்வயம் அனைத்தையுமே காட்டுமே –ப்ரஹ்மம் -ஆச்சார்யர் உலாவும் பெருமாள் அன்றோ -)
சம்சார விஷ தஷ்டனுக்கு த்வயம் ரசாயநமாய் இருக்கும் என்று
அருளிச் செய்வர் மணக்கால் நம்பி
அதனனுக்கு -குருடனுக்கு -த்வயம் மஹா நிதி போலே என்று
அருளிச் செய்வர் பெரிய முதலியார் -(ஆளவந்தார் -கீழே நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்த்தி பார்த்தோம்)
ஷூ தார்த்தனுக்கு -(பசியால் வருந்தினவனுக்கு) -அம்ருத பானம் போலே என்று
அருளிச் செய்வர் திருமாலை யாண்டான் –
ஸ்த நந்தய பிரஜைக்கு ஸ்தன்யம் போலே என்று
அருளிச் செய்வர் திருக் கோட்டியூர் நம்பி –
பதி விரதைக்கு மங்கள ஸூ த்ரம் போலே என்று
அருளிச் செய்வர் பெரிய நம்பி –
ராஜ குலத்துக்கு (அரசமர்ந்தான் அடி சூடிய அரசர்கள் பிரபன்னர்கள்)முடியும் மாலையும் போலே இப் பிரபன்னனுக்கு த்வய உச்சாரணம் என்று
அருளிச் செய்வர் -ஸ்ரீ பாஷ்ய காரர்
சம்சாரத்தில் இவ் உபாய விசேஷம் -விலங்கை விட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே-என்று அருளிச் செய்வர் எம்பார்
ராஜ குமாரனுக்கு கர்ப்பூர நிகரம் போலே -பிரபன்னனுக்கு பிரபத்தியை விடில் நாக்கு
வற்றும் என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை
எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யம் பெறுவாரைப் போலே -என்று பணிப்பர் திருக்
குருகை பிரான் பிள்ளான் –
குரு பரம்பரையை ஒழிந்த பிரபத்தியும் சாதநாந்தரத்தோடு ஒக்கும் என்று அருளிச்
செய்வர் முதலி யாண்டான் -(ஸ்வரூப விருத்தம் அன்றோ)
அந்தன் -குருடன் -கையிலே சிந்தாமணி வந்தால் போலே என்று அருளிச் செய்வர்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ந வேதாந்தாத் சாஸ்திரம் –ந த்வயம் ஷேம கரம் -தேசிகன்)
—————————————————
நூற்று முப்பத்து ஏழாம் வார்த்தை –
பிரதம பதத்திலே பாணிக் ரஹணம் –
மத்யம பதத்தாலே உடன் மண நீர்
த்ருதீய பதத்திலே சதுர்த்தி படுக்கையுமாய் இருக்கும் –
(பாணிக் க்ரஹணமும் உடன் மண நீரும் சதுர்த்தி கலவியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —வார்த்தா மாலா -36-மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும் நமஸ் பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் –சம்பந்தம் உணர்த்தும் பிரணவம் -நமஸ் மூன்று விரோதிகள் தொலைய வேண்டும் –)
—————————————————-
நூற்று முப்பத்து எட்டாம் வார்த்தை
ஷேத்ரஜ்ஞ க்ருத்யமான வரம்பை இட்டுக் கொடுக்கிறது பிரதம பதம் –
இடைஞ்சல் வராமல் களை பறித்துக் கொடுக்கிறது மத்யம பதம் –
விளைந்து ஸ்வாமி போகம் கொடுக்கிறது த்ருதீய பதம் –
(பிரணவம் காட்டும் அநந்யார்ஹ சேஷத்வம் கைங்கர்யமாகிற பயிர் விளைய சேதனனுக்கு வரப்பிடுவது போல் இருக்கும் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் -அந்நிய உபாயத்வம் -அந்நிய போக்யத்வமாகிய ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி த்ரயங்களாகிற களைகளைப் பறித்துக் கொடுக்கும் -கைங்கர்யமாகிற பயிர் விளைந்து ஸ்வாமியாய் எம்பெருமானுக்கு போகம் அளிப்பதைக்காட்டும் நாராயணா த்ருதீய பதம்-பக்தி உழவனின் கிருஷீ பலன்)
————————————————————
நூற்று முப்பத்து ஒன்பதாம் வார்த்தை –
திருமந்த்ரத்துக்கு-
தாத்பர்யம் ஏது –
வாக்யார்த்தம் ஏது –
பிரதான அர்த்தம் ஏது –
அநு சந்தானம் ஏது –
என்னில் –
தாத்பர்யார்த்தம் -சகல வேத சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் -பிராப்ய ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம்-ஆத்ம ஸ்வரூப நிரூபணம் –
அநு சந்தானம் -சம்பந்த அநு சந்தானம் –
(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-
1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி – 2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி – 3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி – 4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி – 5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி – 6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி – 7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி 8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி – 9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி-திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.-நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள்)
த்வயத்துக்கு –
தாத்பர்யம் ஏது –
வாக்யார்த்தம் ஏது –
பிரதான அர்த்தம் ஏது –
அநு சந்தானம் ஏது –
என்னில் –
தாத்பர்யார்த்தம் ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் பிராப்ய பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் மிதுன கைங்கர்ய பிரதான்யம் –
அநு சந்தானம்-ஸ்வ தோஷ அநு சந்தானம்-
(புகல் ஒன்றுமில்லா அடியேன் ஆழ்வார் வியக்தமாக அருளிச் செய்துள்ளார்)
சரம ஸ்லோகத்துக்கு –
தாத்பர்யம் ஏது –
வாக்யார்த்தம் ஏது –
பிரதான அர்த்தம் ஏது –
அநு சந்தானம் ஏது –
என்னில் –
தாத்பர்யார்த்தம் சரண்ய ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் -ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம் –
அநு சந்தானம் -சௌலப்யம்
————————————————————————
நூற்று நாற்பதாம் வார்த்தை –
ஆஸ்ரயணம் சொல்லி —
ஆஸ்ரயிதாவை சொல்லி –
ஆஸ்ரயணீயன் வேஷம் சொல்லி –
அப்ருதக் ஸ்திதி த்யோதன நித்ய யோகம் சொல்லி –
தஸ்மின் நேவ பராதிசயம் சொல்லி –
பிரபா ப்ரபாவ தோரிவ சேஷ சேஷித்வம் சொல்லி -(அநந்யா ராகவேணாம் பாஸ்கர பிரபா ஏவ)
சதா பூர்த்தி சொல்லி -(ஸ்ரீயப்பதியாய்-அத ஏவ- அவாப்த சமஸ்த காமனாய்)
ஆக லஷ்மீ விசிஷ்டன் பிரபத்தவ்யன் என்னும் இடம் சொல்லி –
சித் அசித் ஸ்வரூபம் சொல்லி –
உபயமும் பரமனுக்கு சரீரத்வார சேஷம் என்று சொல்லி –
தேஹவத் தேஹி நாநாத்வம் சொல்லி -(உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் உளன்)
தேஹிநோ ஞானதைக ஆகாரதயா சமர் என்று சொல்லி –
ஆகையாலே
ஸ்வபாப ஐக்யம் சொல்லி –
ஸ்வரூப ஐக்யத்தை நிஷேதித்து –
பஞ்ச அவஸ்தையிலும் சந்நிக்ருஷ்ட அவஸ்த அவஸ்திதத்தில் பிரபத்தி என்று சொல்லி -(அர்ச்சாவதாரத்தில் பிரபத்தி ஆழ்வார்கள் –)
ஆத்மன பரஸ்ய ச பிராப்தி சொல்லி –
குண குணி பேதம் சொல்லி -(நாரங்கள் அயனம் -குணங்கள் குணி)
கல்யாண குணை கதாநத்வம் சொல்லி –
ஹேய குண நிஷேதம் சொல்லி -(அனைத்துக்கும் ஆஸ்ரயம் அவனே -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக ஸ்தானம்)
ஷட் விம்ஸ கத்வம் சொல்லி -(எண்ணிலும் வரும்)
புருஷகார நிரபேஷ மாம்படியான வாத்சல்யாதி குணங்கள் சொல்லி -(என்னடியார் அது செய்யார் -இத்யாதி)
நித்யத்வம் சொல்லி –
தத் அப்ராக்ருத த்ரவ்ய ஆஸ்ரயம் என்று சொல்லி –
பர பூர்த்தி சொல்லி –
சந்நிதி சொல்லி -(ஆவிர் பூதம்-அர்ச்சாவதார)
வடிவு அழகு சொல்லி –
சர்வ சாமாநாதி கரண்யம் (சமாஸ்ரயணீயத்வம் )சொல்லி -(நாரங்களுக்கு அயனம் -ஆஸ்ரயம் -உபாயம்-அச்சித்துக்கு பிரயோஜனம் இல்லையே -அர்த்த சங்கோசம் இதுக்குக்nகொள்ள வேணும் -ப்ராப்யம் -ஆதாரம் -)
சௌலப்யம் சொல்லி –
பிரபத்தா ஆர் என்று சொல்லி –
பிரபதவ்யன் ஆர் என்று சொல்லி –
அநந்ய (பர) உபாயத்வம் சொல்லி –
அஸ்மை என்று சொல்லி –அஸ்மாத் என்று சொல்லி -அஸ்ய-என்று சொல்லி -அஸ்மின் -என்று சொல்லி –(அவனுக்காக -அவனால் சத்தை-அவனுடைய உடைமை – அப்ருதக் ஸித்த விசேஷணம் நான்கும் சொன்னவாறு )
பிராப்யம் சொல்லி -பிராபகம் சொல்லி –
கத்யர்த்த த்வாரா புத்யர்த்தம் சொல்லி –
மானஸ பிரபத்தியினுடைய முக்யதை சொல்லி -(திருட அத்யாவஸயம் முக்கியம்)
ஸ ப்ரகார சரணாகதி உபாயம் என்று சொல்லி -(நெல்குத்த வேர்வை வருமா போல் சம்பாவித ஸ்வாபாவங்கள் -அனுகூல்ய சங்கல்பாதிகள் -தன்னடையே ஏற்படும்)
ஸ ப்ரகார லஷ்மீ சஹ சரமான வஸ்துவினுடைய உபாயத்வம் சொல்லி –
பர விசேஷணங்கள் அடைய ப்ராப்யம் என்று சொல்லி –
விசேஷ்ய பிரதிபத்தியிலும் விசேஷண பிரதிபத்தி பரஸ்ய ப்ரீதி ஜனகம் என்று சொல்லி -(ஸ்வரூபத்தை விட திவ்ய மங்கள விக்ரஹமும் குணங்களும் பிரதானம்) ஸ ப்ரகார நாராயணனுக்கு என்று சொல்லி –
ஏவம் விதனுக்கே (லஷ்மீ விக்ரஹ குண விஸிஷ்ட வஸ்து)அஹம் அர்த்த பூதனான நான் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித சர்வ வித கைங்கர்யத்தையும் பண்ணுகிறேன் என்று –ப்ரத்யகாத்மன பலம் சொல்லி –
பிரபத்தியிலே உபாய புத்தி -உபசார சித்தை என்று சொல்லி –பரனே பரம உபாயம் என்று சொல்லி –பிரபத்தி உபாயம் என்று சொல்லி –
இவை உபாயமாம் போது பர ஸ அபேஷம் என்று சொல்லி –
நிரபேஷ உபாயம் அவனே என்று சொல்லி –அத ஏவ உபாய அநவத்யதை சொல்லி -(இதனாலே தான் குற்றமல்லாத உபாயம் அவனே)
ஒன்றுக்கே உபாய உபேய ஆகாரத் த்வயம் கடிக்கும் என்று சொல்லி –
தயா ஷாந்த்யாதி குணங்களாலே சந்நிஹதனுக்கு உபாயத்வம் சொல்லி –
தேச விசேஷ நிலயனுக்கு (ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு)உபேயத்வம் சொல்லி –
உபய விபூதியும் அவனதாய் இருக்க –
ஒரு விபூதியில் நின்றும் ஒரு விபூதிக்கு போகை மோஷம் என்பான் என் என்னில் –
அது மஹாநஸ ஸ்தான(சமையல் அறையிலே) -போக ஸ்தான (பள்ளி அறை)ஸ்தித பர்த்ரு பார்யா சம்யோக ந்யாயம் என்று -சொல்லி –
அவனே பிராபகன் ஆனால்
பாப விதூநந த்வாரா தான்(கர்மம் ஜென்மம் சரீரம் போய்) பிரபத்தி என் என்னில் –
மஹாநசத்திலே (சமையல் அறையிலே) புஜிக்கும் போது பழைய வேஷமே போக்யம் –
போக ஸ்தானத்திலே -(பள்ளி அறை) –புஜிக்கும் போது உடுத்த புடைவையை அவிழ்த்து புஜிக்க வேண்டும் என்று சொல்லி –
ரத்ன ஸ்வீகாரம் பண்ணும் போது ருஷிகையில் நின்றும் வாங்கி
மஞ்சூஷா காந்தரத்திலே (தோஷமில்லா ரத்னம் பெற காய்ச்சும் பாத்திரத்தில் வைத்து அழுக்கு நீக்கி -பேழையில் இடுமா போல்)இட வேண்டும் என்று சொல்லி –
த்ரிவித பிரபன்னனுக்கும் (அஞ்ஞானம் ஞானாதிகர் பக்தி பரவஸ்யர்)தேக பாத சமநந்தரம் பரம புருஷார்த்த லஷண மோஷம் சொல்லி –மற்றை இருவருக்கும் (உபாயாந்தரர்)விளம்ப பலம் சொல்லி –
ராஜா அக்ருத ஆபரணங்கள் தன்னதான போது எடுத்து பூணும் அத்தனை என்று சொல்லி –இச்சா பிரவர்தகம் சொல்லி –அல்லாத போது ஈஸ்வரத்வம் தான் இல்லை என்னும் இடம் சொல்லி -(பட்டத்துக்குரிய யானையும் அரசனும் செய்யுமவற்றை ஆராய முடியாதே-நிரங்குச ஸ்வ தந்த்ரன் -அவன் அத்யந்த பரதந்த்ரர்கள் நாம் -)
இத் தலையிலே கைமுதல் அறுகை அவன் கடாஷத்துக்கு அடி என்று சொல்லி –
இத் தலையிலே விஸ்வாசம் பிறக்கை யாவது –
அருள (ஒரே ஹேது)அவனுடைய கிருபையே —
கிருபை பிறப்பது துதிக்கை அழுந்தினால் என்று சொல்லி –
கர்ம அனுபவம் அவனுடைய சிஷை என்று சொல்லி –
சிஷிதன் ஆனவாறே பித்ரு பிரசாதம் பிறக்குமா போலே -தாது பிரசாதாத்-என்கிற பேறு சொல்லித் தலைக் கட்டுகிறது பிரபத்தி வாக்யத்தால் –
—————————————————————————–
நூற்று நாற்பத் தோராம் வார்த்தை –
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்தை விசதமாக அனுசந்திக்கும் படி த்வயம் –
இது த்வயம் -என்று திரு நாமமாக வேண்டிற்று –உபாய உபேய வாசகமான வாக்யத் த்வயத்தை உடைத் தாகையாலே –
இதில் பூர்வ வாக்கியம் உபாய பரமாய் இருக்கும் –
உத்தர வாக்கியம் உபேய பரமாய் இருக்கும் –
பூர்வ வாக்கியம் மூன்று பதமாய் இருக்கும் –
உத்தர வாக்கியம் மூன்று பதமாய் இருக்கும் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்றும் –
சரணம் -என்றும் –
பிரபத்யே -என்றும் -பூர்வ வாக்கியம்
(பிரித்தால் அஷ்ட எட்டாகும்-தவ சொல்லை அத்யாஹாரம் -அகலகில்லேன் பாசுரம் கூப்பிட்டு உன்னடிக்கீழ்)
ஸ்ரீ மதே -என்றும் –
நாராயணாய -என்றும் –
நம என்றும் -உத்தர வாக்கியம்
இதில் ஸ்ரீ என்கிற திரு நாமம் –
ஸ்ரிஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே ஆதல் –
ஸ்ரயதே ஸ்ரீ யதே இதி ஸ்ரீ –என்கிற வ்யுத்புத்தி த்வயத்தாலே –
சேவிக்கும் -சேவிக்கப்படும் -என்கிறது இவ் வர்த்தம் சாபேஷம் ஆகையாலே
யாரை (சேவிக்கும்)யாராலே (சேவிக்கப்படும்)என்ன வேண்டி வரும் –
அவை (சேஷ சேஷித்வம்)தான் அவளுக்கு ஸ்வரூப அநு ரூபமாய் இறே இருப்பது –
எங்கனே என்னில் –
சர்வ பூதானாம் ஈஸ்வரி ஆகையாலே-த்ரிவித சேதனராலும்(பத்த முக்த நித்யர்கள்) சேவிக்கப் படும் –
விஷ்ணு பத்நி ஆகையாலே தான் அவனை சேவிக்கும் என்கிறது –
ஆகையாலே தன்னை ஒழிந்த சகல ஆத்மாக்கள் உடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள்(சத்தா-இருக்கை – ஸ்திதி -இருக்கையில் தொடர்வது -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள்)தன்னுடைய கடாஷ அதீநமாய் இருக்கும் –
தன்னுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் அவனுடைய கடாஷ அதீநமாய் இருக்கும் –
ஆகையாலே தன்னை ஒழிந்தாருக்கு தான் ஸ்வாமினி யாய் –
அவனுக்கு பரதந்த்ர்யையாய் இருக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லுகிறது –
இது தான் வ்யுத்பத்தி சித்தமே அன்று -பிரமாண சித்தமும் –
இப்படி வ்யத்பத்தி த்வயத்தாலும் -உபய சம்பந்தமும் சொல்கிறது –
இது தான் புருஷகாரத்திலே நோக்காய் இருக்கும் –
புருஷகாரம் செய்கைக்கு இத் தலையில் பந்தமும் –
அது வாய்க்கைக்கு அத் தலையில் சம்பந்தமும் சொல்லுகையாலே –
வரிக்கும் அவனை –(நம்மிடம் பந்தம் அவனிடம் சம்பந்தம் -நல்ல தொடர்பு)
இவனைக் கைக் கொண்டு அருளும் -என்னும் பிராட்டி –
கைக் கொண்டு அருளுகையாவது என் -என்னுமே அவன் –
ஆபி முக்யம் பண்ணினான் என்னுமே இவள் –
ஆகில் அபராதம் செய்ய பார்த்த படி என் -என்னுமே அவன் –
அது என் இனி -என்னுமே இவள் –
அது என் என்றதுக்கு பொருள் என் -என்னுமே அவன் –
பொருளைக் கேளீர் –
திருவடி திரு வனந்தாழ்வானோபாதி உம்மை அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்து வைத்து –
உம்முடைய பக்கல் விமுகனாய் –
சப்தாதி விஷய பிரவணனாய் –
அதன் காரணமான ஜநநாதி களிலே புக்கு –
அநாதி காலம் கிலேசப்பட்டு போரா நிற்க –
உம்முடைய பாக்யத்தாலே (உம்முடைய பேறாக கைக் கொள்ள வேணும் என்கிறாள்)இற்றை யளவும் சித்தியாத ஆபி முக்யம் இன்று ஒருபடி சித்தித்தால் –
அபராதத்தை உம்முடைய கிருபைக்கு விஷயமாக்கி
உம்முடைய சீலாதி குணங்களையே கிட்டுக்கைக்கு உறுப்பாகும் யோக்யதை சொல்லுகிறது
எம்பெருமான் பக்கல் யோக்யதை (ஒழிக்க ஒழியாத நவவித ஸம்பந்தத்தால்)இறே உபாய வரணம் பண்ணுகிறது –
இப்படி வரணீய ஸ்வரூபத்தில் புருஷகார பாவத்துக்கு அனுஷ்டானம் உண்டோ என்னில் –
ஸ்ருணோதீதி ஸ்ரீ -ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்னும் இவ் விரண்டாலும் –
ஸ்வரூபத்தில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஸ்ருணோதி -என்கிறது கேட்கும் என்றபடி –கேட்கிறது என் என்னில் –
ஆஸ்ரயிக்கிற இழிகிற அதிகாரி தன்னுடைய அபராதங்களையும் –
எம்பெருமானுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து –
அவனைக் கிட்டுகை என்பது ஓன்று இல்லை யாகாதே -என்று இவன் பிற்காலித்தில் –
நீ பிற்காலிக்கிறது என் –
உனக்கு ஆபிமுக்யம் அன்றோ வேண்டுவது –
அபராதங்களைப் பொறுப்பிக்கைக்கு நான் இருந்தேன் –
நீ அஞ்சாதே -என்று சொல்லுகை -(இது பிராட்டி நமக்கு அருளிச் செய்யும் மா ஸூச)
ஸ்ரா வயதி -என்கிறது கேட்பிக்கும் என்றபடி –
அதாவது
இவனுடைய அபராதங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக் கதவு அடைத்தால் –
இவனுக்கு வேறொரு புகல் உண்டோ –
உமக்கும் இவனுக்கும் உண்டான சம்பந்த சம்பந்த விசேஷத்தைப் பார்த்தால் –
உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -என்கிறபடி
குடநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ –ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -என்று –
————————————————————
நூற்று நாற்பத்து இரண்டாம் வார்த்தை –
விஷயம் -ஆத்மா
விஷயீ -ஈஸ்வரன்
விஷய ஸூத்தி கர்த்தா -ஆசார்யன்
விஷய அனுபவ வர்த்தகை -பிராட்டி
விஷய அனுபவ சஹாய பூதர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
(அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ–ஆத்மாவை போக்கியப்பொருளாக அனுபவிப்பதால் ஆத்மாதானே விஷயம் -போக்தா அனுபவிக்கும் விஷயீ ஈஸ்வரன் -குற்றங்களைப் போக்கி-அல்வழக்குகளைப் போக்கி அருளி அவனுக்கு உகந்ததாக ஆக்குபவர்களே ஆச்சார்யர்கள் -ஒன்றைப் பத்தாக்கி வளர்ப்பவள் பிராட்டி-அனுபவத்துக்கு ஸஹாய பூதர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள்)
—————————————————–
நூற்று நாற்பத்து மூன்றாம் வார்த்தை
1-அதிகாரி க்ருத்தியம் –
2-ஆசார்ய க்ருத்தியம் –
3-புருஷகார க்ருத்தியம் –
4-உபாய க்ருத்யம் -என்று நாலு –
இதில்
அதிகாரி க்ருத்யம் ஆவது –
1-ஆசார்ய ஸுஸ்ருஷ்யமும் –
2-க்ருதஜ்ஞதையும் –
3-உபாயத்தில் அத்யாவச்யமும் –
உபாய க்ருத்யம் யாவது –
1-விரோதி நிவர்த்தகத்வமும் –
2-பிராப்ய ஸித்தி கரத்வமும் –
புருஷகார க்ருத்யம் ஆவது –
1-அபராத ஷாமகத்வமும் -(பொறுப்பித்தல்)
2-கைங்கர்ய வர்த்த கத்வமும் –
ஆசார்ய க்ருத்யம் ஆவது –
1-அஜ்ஞாத ஜ்ஞாபனமும் –
2-ருசி பிரவர்த்த கத்வமும் –
——————————————————
நூற்று நாற்பத்து நாலாம் வார்த்தை
எம்பெருமான் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு பிரயோஜனம் –
சேதனருக்கு மோஷத்தில் இச்சை பிறக்கை -(இன்புறும் இவ்விளையாட்டுடையனாய் -சோம்பாது படைப்பது நன்மை உஜ்ஜீவிப்பதற்காகவே –)
அவதாரங்களுக்கு பிரயோஜனம் -மோஷ பிரதானம் பண்ணுகை –(பதினெட்டு நாடார் பெரும் கூட்டம் -உதாரணம் காட்டி அருளி -பவித்ராணம் -இத்யாதிகள் மட்டுமே அல்லவே-)
மோஷ பிரதானம் பண்ணுவது -ஜ்ஞான பிரதானம் பண்ணினால் –
ஜ்ஞான பிரதானம் பண்ணுவது -ஆசார்ய உபதேச முகத்தாலே –
ஆசார்யன் இருவருக்கும் உபகாரகன் -எங்கனே என்னில் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –
சேஷிக்கு சேதனனை உபகரித்தான் –
இப்படி இருக்கிற ஆச்சர்யனுக்கு பிரத்யுபகாரம் பண்ணலாவது –
விபூதி சதுஷ்ட்யமும்
ஈஸ்வரத் த்வயமும் உண்டாகில் –
ஆசார்யன் ஆவான் –
அர்த்த காமங்களில் நசை யறுத்து –
பகவத் பாகவத விஷயங்களில் மிகவும் நசை உண்டாக்கும் அவன் –
(ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —-428--ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –-429—மேன்மேலும் சிருஷ்டி அவதாரங்களைப் பண்ணி வசீகரிக்க பார்த்த இடத்திலும் – ஓர் ஆத்ம வஸ்துவும் எட்டுப் படாமையாலே -இழவாளனாய் இருக்கிற ஈஸ்வரனுக்கு – சேஷமான ஆத்ம வஸ்துவை அஜ்ஞாத ஜ்ஞாபன முகேன திருத்தி -இஷ்ட விநியோக அர்ஹமாமாம் படி கை படுத்தினான் –பகவத் ஜ்ஞான அபாவத்தாலே அசத் கல்பனை கிடந்த சேதனனுக்கு – பகவத் சம்பந்தத்தை அறிவித்து -இச் சேஷியான அவனை காட்டிக் கொடுத்தான் –ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது- விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –432-யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –இத்தால் ஆசார்யனுடைய பிரத்யுபகார அவகாச ரஹித மகா உபகாரத்வம் ஆகிற வைபவம் சொல்லிற்று ஆயிற்று-)
——————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .