அர்த்த பஞ்சகம் ஸ்ரீ M,A.V. ஸ்வாமிகள் ..

ஸ்ரீ வைஷ்ணவ மதம்
பல பிரிவுகள் -விஷ்ணுவே பர தெய்வம் –
ஸ்ரீ உடன் கூடியே நாராயணன் -மிதுனமே உத்தேச்யம் –
ஏகோ நாராயண -அநாதி வேத பிரமாணம் -ந தைவம் -வேதாத் பரம் நாஸ்தி சத்யம் –
விஷ்ணு பரம தேவா -அக்நி தாழ்ந்த தேவதை -ரிக் வேதம்
வ்யாபனே தாது -விஷ்ணு -எங்கும் பரந்து உளன் -நாராயண வாசுதேவ வ்யாப்ய மந்த்ரங்கள்
வைஷ்ணவம் இல்லாத விஷயம் இல்லை -ஹிரன்யனும்  வைஷ்ணவன் தான் ஞானம் இல்லை கார்ய கரம் இல்லை –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும் -அடிப்படை –
மிக்க இறை நிலையும் -மெய்யாம் உயிர் நிலை தக்க நெறி -தடையாகி தொக்கி இயலும்
ஊழ் வினையும் வாழ்வுயையும் ஓதும் குருகையர் -கோன் யாழின் இசை வேதத்து இயல் –
பிராப்யச்ய பிரமனோ ரூபம்
பிரத்யக் ஆத்ம -உயிர் நிலை
பிராப்யு உபாயம் வழி
பலனும் விரோதியும் -பதந்தி சகலா வேதா -புராண முனைய மகாத்மா -அனைவரும் சொல்லுவார்கள் –
முனி -ரிஷிகள் மகாத்மா ஆழ்வார்கள் -வாசுதேவ சர்வம் இதி மகாத்மா எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் –
சுகம் -அர்த்த பஞ்சக ஞானம் -சம்சாரமே துக்கம்
துக்கம் -அர்த்த பஞ்சக அஞ்ஞானம்
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இதில் உண்டு -அதாவது ஐஞ்சு அர்த்தம் –
பரன் -மேன்மை ஸ்வாமி -ஸ்வம் சொத்து வஸ்து உடையவன் -ஜீவாத்மா –
அவன் அனுக்ரகணம் ஒன்றே வழி –
தகுதி உண்டாக்கிக் கொள்ள நாம் செய்வது -இசைவே வேண்டும் -விலக்காமை -ஒன்றுமே வேண்டும் –
வித்யாப்யாசம் சாதனமா தனத்துக்கு -qualification -தான் -means இல்லை -போலே –
சாதனம் பகவத் பிராப்தோ -சாத்திய பக்தி பிரபத்தி
நிரதிசய சுகம் பலன் –
தாக த்ரயங்கள் ஆத்யாத்மிக -ஆதி பௌ திகம் -ஆதி தெய்விகம் –
சம்சார ஆனந்தம் கீழே பாம்பு மேலே புலி தேனை அருந்துவது போலே விதுரர் கதை –
எல்லை இல்லா ஆனந்தம் -தொல்லை இன்பம் இறுதி கண்டாள் –
பிரகிருதி சம்பந்தமே விரோதி —
அர்த்த பஞ்சக ஞானம் இருந்தால் மோஷம் செல்ல வாய்ப்பு உண்டு –
ஐந்தும் ஐந்து படி பட்டு இருக்கும் -பிள்ளை லோகாச்சார்யர் அருளி –
தத்வ ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கும் பொழுது அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும் –
உத்க்ருஷ்ட ஜீவனம் உஜ்ஜீவனம் சிறந்த வாழ்வு –
சம்சார சாகரம் தாண்ட நீச்சல் தெரிய வேண்டுமே –
முமுஷு வான சேதனனுக்கு மோஷம் உண்டாம் பொது -தத்வ த்ரய ஞானம் வேண்டும் –
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயம்
உபாயம் பலம் சேர்த்து -அர்த்த ஞானம் –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூப -புருஷார்த்த ஸ்வரூப –உபாய ஸ்வரூபம் -விரோதி ஸ்வரூப –
இவற்றை உள்ளபடி அறிகை –
ஸ்வரூப =தன்மை
புருஷனால் அர்த்திக்கப் படுவது புருஷார்த்தம்
ஒவ் ஒன்றும் ஐந்து படியாக இருக்கும் –
ஸ்வ ஸ்வரூபம் ஆத்ம ஸ்வரூபத்தை -நித்யர் -முக்தர் பத்தர் கேவலர் முமுஷுக்கள்
பர ஸ்வரூபம்-பரத்வம் -வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
உபாய ஸ்வரூபம் -கர்ம ஞான பக்தி பிரபத்தி -ஆச்சார்யஅபிமானம்
விரோதி ஸ்வரூபம் -ஸ்வரூப விரோதி -பரதவ ஸ்வரூபம் புருஷார்த்த ஸ்வரூபம் உபாய ஸ்வரூபம் பிராப்திச்வரூபம் –

அணு ஸ்வரூபம் -ஜீவாத்மா –
பிளக்க முடியாது
நெல் நுனி கிள்ளி -அத்தை நூறாக்கி -ஒன்றை நூறாக்கி -சதபாகம் ஆக்கி –

கரந்த சில் இடம் தொறும் -தூசு மண்டலம் -இமையோடி இமையோடு பொருந்தும்
பொழுது வரும் கற்றால் அழியும் –
சம்சாரிகள் முமுஷு புபுஷூ -இரண்டு வகை -போகம் இச்சை புபுஷு மோஷம் இஷூ முமுஷு
கேவலன் -மட்டும் -மட்டம் இல்லை -ஆத்மாவிலே நின்றவன் பகவத் அனுபவமின்றி –

நித்யர் ஆவார் -ஒரு நாளும் சம்சார சம்பந்தம் ஆகிற அவத்யம் இன்றிக்கே நிரவத்யராய் -பகவத் அனுபவ
அனுகூல்ய ஏகைக போகராய் வாநிளவரசு வைகுண்ட குட்டன் வாசுதேவன் -என்கிற ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு
விண்ணாட்டவர் -மூதுவர் என்கிறபடியே பட்டம் கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரனா மத்ரிகளாய்
ஈஸ்வர நியோகாத் ஸ்ருஷ்டி  ஸ்திதி சம்ஹாரங்களை பண்ணவும் சக்தராய்
பர வ்யூஹாதி சர்வ அவச்தைகளிலும் தொடர்ந்து அடிமை செய்யக் கடவராய் கோயில் கொள்
தெய்வங்களான சேனை முதலியார் தொடக்கமான -அமரர்கள்

முக்தர் ஆவார் -பகவத் பிரசாதத்தாலே பிரகிருதி சம்பந்தத்தாலே வந்த கிலேச மலங்கள் எல்லாம் கழிந்த
பகவத் ஸ்வரூப ரூபா குண  விபவங்களை  எல்லாம் அனுபவித்து அவ் அனுபவ ஜனித ப்ரீதி உள்
அடங்காமையாலே  வாயாரப் புகழ்ந்து -மீட்சி இன்றி வைகுண்ட மா நகரத்திலே களித்து  ஆனந்திக்கிற முனிவர்கள்
ப்ரீதி ரூபமாக கைங்கர்யம் -பேற்றுக்கு அடி கிருபை தானே -இரவி மண்டலத்து –ஏற்றி வைத்து ஏணி வாங்கி –
எணிலேன்  இருந்தேன் ஏணி =உபாயம் -ஆகாரம் மாறி உபேய ஆகாரம் -அமரர்கள் நித்யர் முக்தர் முக்தர்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் -குண அனுபவ நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்

பத்தர் ஆவார் புபுஷூ -தேக ஆத்மா அபிமானி -தேக பஞ்ச பூதங்களால் ஆனா -அநித்தியம் -ஆத்மா விச்லேஷத்தில்
தர்சன ஸ்பர்சன  யோக்கியம் அல்லாதபடி -அசுத்த அஸ்பதமாய் -அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ஜனகமான
ஸ்வ தேஹமே ஆத்மாவாகவும் -சப்தாதி விஷய அனுபவ ஜனிதமான ஸ்வ தேக  போஷணமே புருஷார்த்த மாகவும் –
சப்தாதி விஷய அனுபவத்துக்கு உறுப்பாக வர்ண ஆஸ்ரம தர்மங்களை அழிய மாறியும் -அசேவ்ய சேவை
பண்ணியும் -பூத ஹிம்சை பண்ணியும் பர தார பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியும்
சம்சார வர்த்தகராய் பகவத் விமுககரான செத்தனர் –

கேவலன் ஆவான் -தனி இடத்தில் மிகவும் ஷூத் பிபாசைகளாலே நலிவு பட்டவன்
பாஹ்ய அபாஹ்ய விவேகம் பண்ண மாட்டாதே -தன உடம்பைத் தானே ஜீவித்து –
பிரசன் னமா போலே சம்சார தாவ அக்நியாலே தப்தனானவன் சம்சார துக்க நிவ்ருத்திக்கு
உறுப்பாக சாஸ்திர ஜன்ய ஞானத்தாலே ப்ரக்ருத் ஆத்ம விவேகம் பண்ணி -பிரகிருதி
துக்க ஆஸ்ரயமாய் -ஹேய பதார்த்த சமுதாயமாய் இருக்கிற ஆகாரத்தையும் –
ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -பஞ்ச விம்சகனாய் -ஸ்வயம் பிரகாசனாய் -ஸ்வ தஸ் ஸூ கியாய்
நித்யனாய் அப்ராக்ருதனாய் இருக்கிற ஆகாரத்தையும் அனுசந்தித்து முன்பு தான் பட்ட துக்கத்தின் கனத்தாலே
இவ் அல்ப ரசத்தில் கால் தாழ்ந்து –
முழு உணர்வு முழு  ஞான ஆனந்தம் உடையவன் -பரமாத்ம விவேகம் பண்ண மாட்டாதே
அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு அவ் ஆத்ம பிராப்திக்கு சாதனமான ஞான யோகத்தில்
நிஷ்டனாய் யோக பலமான ஆத்ம  அனுபவ மாதரத்தையே புருஷார்த்தமாக அனுபவித்து பின்பு
சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று -யாவதாத்மா பாவி அசரீரி யாய்க் கொண்டு
திரிவான் ஒருவன்
மோஷத்தில் இச்சை உடையவர்களுக்கு முமுஷுக்கள் என்று பேராக் கடவது
இது தான் முமுஷுக்களாய் -உபாசகராய் இருப்பாரும்

-ஈஸ்வர விஷயத்தில் பரத்வமாவது பரம பதத்தில் அவாக்ய நாதர -என்று எழுந்து அருளி இருக்கிற
ஆதியம் சோதி உருவான பர வாசுதேவர்
வ்யூஹமாவது -ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாக்களான சங்கர்ஷன பிரத்யுமன
அநிருத்தர்கள்
விபவமாவதி ராம கிரிஷ்ணாதிகள்
அந்தர்யாமித்வம் இரண்டு படிப்பட்டு இருக்கும்
அதாவது அடியேன் உள்ளான் -என்றும் -எனதாவி என்றும் -என்னுயிர் என்றும்
சொல்லுகிறபடியே ஆத்மாவுக்குள்ளும்
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து என்றும் –
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து என்றும்
புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் என்றும் –
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறிதி -என்றும்-சொல்லுகிறபடியே லஷ்மீ சஹிதனாய்
வி லஷண விக்ரஹஉக்தனாய் கொண்டு -ஹிருதய கமலத்துக்கு உள்ளே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் சதா அவலோகனம் பண்ணி கொண்டும்
எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

அர்ச்சாவதாரம் ஆவது -தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்ததுஎப்பேர் மற்றப்பேர் -என்கிற படியே தனக்கு என ஓர் உருவும் ஓர் பெயரும்
இன்றிக்கே -ஆசீதர் உகந்த வடிவே வடிவாகவும் -அவர்கள் இட்ட பெயரே பெயராகவும் –
சர்வஞஞனாய்  இருக்கச் செய்தே அஞ்ஞனை போலேயும் –
சர்வ சக்தனாய் இருக்கச்செய்தே அசக்தனைப் போலேயும் –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கச் செய்தே சா பேஷனைப் போலேயும் –
ரஷகனாய் இருக்கச் செய்தே ரஷ்யம் போலேயும் –
ஸ்வ  ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு
கோயில்களிலும் க்ருஹங்களிலும் -தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் நிலை –

புருஷார்த்தங்களில் தர்மம் ஆவது பிராணி ரஷனத்துக்கு உறுப்பாக
பண்ணும் வருத்தி விசேஷங்கள்
அர்த்தம் ஆவது -வர்ண ஆஸ்ரம அநு ரூபமாக தன தான்யங்களை ஸந்க்ரஹித்து
தேவதா விஷயங்களிலும் பைத்ரு கமான கர்மங்களிலும் பிராணிகள் விஷயமாகவும் உத்க்ருஷ்டமான தேச
கால பாத்ரன்களை அறிந்து தர்ம புத்தா வ்யயிக்கை
காமமாவது-ஐஹ லவ்கிகமாகவும் பார லவ்கிகமாயும் த்விவிதமாய் இருக்கும்
இஹா லோகத்தில்காமம் ஆவது – பித்ரு மாத்ரு ரத்னா தான தான்யா வஸ்த்ர பாமா புத்திர
மித்ரா
பர லோக இன்பம் -ஸ்வர்க்காதி லோகங்களில் சென்று –
அறம் பொருள் இன்பம் -மூன்று அன்றே சிறிய திரு மடல் -அம்மூன்றும் ஆராய –
ஆரார இவற்றின் இடை -அதனை இன்பத்தை எய்துவார் சீரார் இருகரையும் -அறம் பொருளையும் எய்துவர் –
இன்பம் தான் பிரதம -புருஷார்த்தம்
கைவல்யம் துக்க நிவ்ருத்தி மாதரம் -கேவல ஆத்ம அனுபவம் -மட்டும் –
பகவத் அனுபவ ரூபமான பரம புருஷார்த்த மோஷம்
புண்ய பாபங்கள் நசிந்து -கர்மம் அடியாக -பிறந்து கிருபை அடியாக –
அநாதி -பிரவாகம் போல் நித்யம் -ஜன்மமும் அநாதி கர்மமும் அநாதி –
மரம் விதை போலே -கர்மம் பிறவி –
புண்யம் பாப்பம் அடியாக தேவ மனுஷ்ய சங்கம ஸ்தாவர யோனி –
ஏகலைவன் கதை த்ரோனாசார்யர் -சத்ரியனுக்கு தான் சொல்லித் தருவேன்
– தபஸ் சித்து ஷத்ரியனாக பிறக்க -துரோணர்-பிறக்க -college professor -forward community admission
அசதி ஜாயதே பரிணமதே விவர்த்ததே அபஷீயதே விநச்யதி ஆகிய ஷட் பாக விகார அஸ்பதமாய்
வாலிப தேகம் வயோதிக சரீரம் -தேகம் -வளரும் -சரீரம் -தேயும் –
தாபத்ரய ஆஸ்ரயமாய் -பகவத் ஸ்வரூபத்தை மறைப்பித்து
விபரீத ஞானத்தை ஜனிப்பக் கடவதாய் –
சம்சார வர்த்தகமான ஸ்தூல சரீரம் உபேஷையோடே பொகட்டு –
சூஷ்ம்னா நாடியாலே சிர கபாலத்தை பேதித்து புறப்பட்டு ஸூ ஷம சரீரத்தோடே வானேற வழி
பெற்று -மன்னும்  கடும் கதிரோன் -முக்தி மார்க்க தலை வாசல் –
விரஜா ஸ்நானம் -சூஷ்ம சரீரம் வாசனா ரேணு கழித்து –
ஜீவாத்மா அரிசி போல் -நெல்லைஉரித்து -ஜலத்தில் அலம்பி போக்கி-polish பண்ணி –
சகல தாபங்களும் மாறும்படி அமானவன் கர ஸ்பர்சம் பெற்று –
சுத்த சத்வாத்மகமாய் பஞ்ச உபநிஷன் மயமாய் -ஞானாந்த ஜனகமாய்
பகவத் அனுபவ ஏக பரிகரமாய் -ஒளிக் கொண்ட சோதி யுமாய் இருக்கிற அப்ராக்ருத
விக்ரஹத்தைப் பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள நிரதிசய ஆனந்த மயமான திரு மா மணி
மண்டபத்தை ப்ராபித்து -லஷ்மி சஹிதனாய் பூமி நீளா நாயகனாய்
வி லஷண விக்ரஹ உக்தனாய் -குழுமித் தேவர் குழாம் கள் கை தொழ சோதி
வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உருவான ஸ்ரீ வைகுண்ட நாதனை நித்ய அனுபவம் பண்ணி
நித்ய கிங்கர ஸ்வபாவன் ஆகை –
இதுவே பரம புருஷார்த்தம் –
நாஸ்திகன் -ஆஸ்திகன் -ஆக்கி நம்பிக்கை கொடுக்க சாஸ்திரம் -சேனை யாகம் செய்து விரோதிகள் போக்கி –
பலன் பெறப் பெற்று நம்பிக்க துளிர் விட -வேற என்ன சாஸ்திரம் -வாயவ்ய யாகம் பணம் காசு வர –
ஸ்வர்க்கம் போகஜோயிதிஷ்ட ஹோமம் -நிரந்தர சுகம் போக -அப்போது சொல்லி பகவத் பிராப்தி –
அதிகாரி பேதம் உண்டே -தர்மம் அர்த்தம் காமம் சொல்லி பரம புருஷார்த்த லஷண மோஷம் -அதிகாரி குறைவு
பரிட்ஷை எழுதுவார்கள் பள்ளி -கல்லூரி -maaster -phd –
உபாய ஸ்வரூபம் –
கர்மம் ஞானம் பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபஈமானம்
கர்ம -யஞ்ஞா தான த்யான சந்த்யாவந்தன பஞ்ச மகா யஞ்ஞ அக்னி ஹோத்ர
தீர்த்த யாத்ரா -புண்ய ஷேத்ரவாச க்ருச்சர
சாந்த்ராயன புண்ய நதி ஸ்நானம்-விரதம் -சாதிர்மாச்யம் பல மூலாசன சாஸ்திர அப்யாச
சாமாராதன -ஜப -தர்பனாதி  தர்ம அனுஷ்டானத்தால் வந்த காய சொஷணத்தாலே  பாப நாசம் பிறந்து –
அத்தாலே இந்திரியத்வாரா பிரவசிக்கிற தர்ம பூத ஞானத்துக்கு சப்தாதிகள் விஷயம் அல்லாமையாலே
விஷய சாபேஷை  பிறந்து -யம நியம ஆசன ப்ராணாயாம ப்ரத்யா ஹாரத்யான-11 இந்திரியங்களையும் அடக்கி –
த்யான தாரண சமாதி ரூபமான
அஷ்டாங்க யோக க்ரமத்தாலே யோக அப்யாச காலத்தளவும் ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை –
இதுதான் ஞான யோகத்துக்கு சஹகாரியாய் ஐ ச்வர்யத்துக்கு பிரதான சாதனமுமாய் இருக்கும் –
எம்பெருமானார் ஆறு -வார்த்தைகள்
வார்த்தை ஸ்ரீ பாஷ்யம் கால செபம் கற்று கற்ப்பித்து
அசத்தி ஆழ்வார் திருவாக்கு –
திவ்ய தேசங்களில் கைங்கர்யம் –
த்வய அர்த்தம் அனுசந்தானம் –
பிரபன்னர் அடியவர்கள் -அபிமானத்தில்ஒதுங்கி
திரு நாராயண புரம் வாழ்ந்து –
ஒன்றால் மேலே மலே போக வழி உண்டே –
ஞான யோகமாவது -இப்படி யோக ஜன்யமான ஞானத்துக்கு ஹிருதய கமலம் ஆதித்ய மண்டலம்
தொடக்கமான ஸ்தல விசேஷங்களில் எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனை விஷயமாக்கி –
அவ் விஷயம் தன்னை சங்க சக்ர கதா தரமாய் பீதாம்பர உக்தமாய் க்ரீடாதி நூபுராந்த திவ்ய
பூஷன அலங்க்ருதமாய்  லஷ்மீ சஹிதமாகவும் அனுபவித்து -யோகப்யாச க்ரமத்தாலே
அனுபவ காலத்தைப் பெருக்கி அநவரத  பாவன ரூபம் ஆக்குக்கை –
இது தான் பக்தி யோகத்துக்கு சஹாரியுமாய் கைவல்ய மோஷத்துக்கும் பிரதான சாதனமாயுமாய் இருக்கும் –
பக்தி யோகமாவது -இப்படி தைல தாராவத விச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான
அனுபவம் ப்ரீதி ரூபா பன்னமாகையும் அது தன்னை அறிய பார்த்தால் பிராரப்த கர்மம் கழிகையும்
சாதனா சாத்தியங்களை அனுசந்தித்து அதினுடைய சங்கோச விகாசமாம்படி பரிணமிப் பிக்கையும்-

பேற்றின் பெருமை நினைத்து பார்த்தால் சாதனம் ஒன்றுமே இல்லை -சங்கோசம்
அனுஷ்டிக்கும் பொழுது பக்தி கஷ்டமாக இருந்தாலும்
சாத்தியம் விகாசமாக இருக்கும்

மனசு அடக்க கஷ்டம் -நினைக்காமல் இருக்க வைப்பது கஷ்டம் –
அசக்தர்க்கு -பிரபத்தி -அப்ராப்தம் ஸ்வரூப பரதந்த்ரம் பட்டு இருப்பது தானே
சர்வ தரமான் பிரத்யஜ்ய -விட்டு -தென் கலை வடகலை பேதம் -இங்கே –
விட்டே பண்ண -வேண்டும் ஸ்நானம் செய்து உண்ண -ஸ்நானம் செய்தே உண்ண –
விட்டு இருப்பன் ஆனால் -அவசியம் இல்லை வட கலை -சக்தி இருப்பவன் பண்ணலாம் அர்த்தம் கொண்டார்கள்
நமக்கு பகவானே சாதனம் -ஸ்வரூப விருத்தி சாதனாந்தரங்கள் –
பிரபத்தி உபாயமாவது -இப்படி கர்ம ஞான சஹக்ருதையான பக்தி யோகத்தில் அசக்தருக்கும்
அப்ராப்தருக்கும் ஸூ கரமாய் சீகர பல பிரதமுமாய் உபாயம் சக்ருத்தையாகையாலே
உபாய அனுஷ்டான சமனந்தரம் உண்டாக கடவதான பகவத் விஷய அனுபவங்கள் எல்லாம்
ப்ராப்ய கோடிகடிதங்கள் ஆகையாலே ஸ்வரூப அநு ரூபமாய் இருக்கும் -இது தான் ஆர்த்த ரூப பிரபத்தி என்றும் -த்ருப்த ரூப பிரபத்தி என்றும்
இரண்டு படிப் பட்டு இருக்கும் –

வட கலை -ஆசார்யன் மந்திர உபதேசம் முதல் பிரபத்தி இல்லை
சுய நிஷ்டை /ஆச்சார்யா நிஷ்டை /சொல்லசொல்ல திருப்பி சொல்வது
ஆச்சார்யா நிஷ்டை இவனுக்காக ஆசார்யன் செய்வது மூன்றும் உண்டு
பிராயச்சித்த பிரபத்தி -பாபங்கள் போக்கிக் கொள்ள –
அறியாமல் செய்யும் பாபம் போக்கிக்கொள்ள-
பரன் நியாசம் செய்ய வேண்டும்
மோஷ பிரபத்தி வேற பிராயச்சித்த பிரபத்தி
நாமோ ஒரு தடவை நம்ஜீயர் -சங்கை இருந்தால் பிரபத்தி பலன் கொடுக்காது –
பிரபத்யன் சர்வ சக்தன் -எல்லா பாபங்களையும் போக்கடிப்பான் –
பிரசாதகம் இல்லை பிரசாதம் -அனுக்ரகம் –
ஆர்த்த ரூப பிரபத்தி யாவது -நிர்ஹெதுக பகவத் கடாஷம் அடியாக சாஸ்திர அப்யாசத்தாலும்
சதாசார்யா உபதேசத்தாலும் யதா ஞானம் பிறந்தவாறே பகவத் அனுபவத்துக்கு விபரீதமான
விபரீதமான தேக சம்பந்தமும் தேச சம்பந்தமும் தேசிகருடைய சகவாசமும் துஸ் சகமாய்
பகவத் அனுபவத்துக்கு ஏகாந்தம் ஆம்படி வி லஷணமான தேஹத்தையும் தேசத்தையும் தேசிகரையும்
பிராபிக்கையில் த்வரை -விஞ்சி ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தான்
ஆகையாலே -திருவேங்கடத்தானே புகல்  ஓன்று இல்லா அடியேன் -என்றும் –

வேங்கடத்து உறைவாருக்கு நம -என்று பூர்ண பிரபத்தி பண்ணி என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ என்றும் -இன்னம் கெடுப்பாயோ என்றும் –
இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் என்றும் –
அயடையவருளாய் என்றும் -திரு வாணை நின் ஆணை கண்டாய் என்றும்
இனி நான் போகல ஒட்டேன் -என்றும் தடுத்தும் வளைத்தும் பெறுகை –
த்ருப்த பிரபத்தி யாவது -சரீராந்தர பிராப்த்யிலும்- ஸ்வர்க்க நரக அனுபவங்களிலும் விரக்தியும் பீதியும் பிறந்து
அதனிடுடைய நிவ்ருத்திக்கும் -பகவத் பிராப்திக்கும் உறுப்பாக சதாசார்யா உபதேச க்ரமத்தாலே
உபாய ச்வீகாரம் பண்ணி -விபரீத பிரவ்ருத்தி நிவ்ருதராய் வேத விஹிதமான வர்ண ஆச்ரமான அனுஷ்டானமும்
பகவத் பாகவத கைங்கர்யமும் மானச வாசிக்க காயிகங்களாலே யதா பலம் அனுஷ்டித்து ஈஸ்வரன் -சேஷியாய்
நியந்தாவாய் -ஸ்வாமி யாய் -சரீரியாய் வ்யாபகனாய் தாரகனாய் ரஷகனாய் போக்தாவாய் சர்வஞ்ஞானாய்
சர்வ சக்தியாய் சர்வ சம்பூர்ணனாய் -அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற ஆகாரத்தையும் -தான் -அவனுக்கு
சேஷமாய் நியாம்யமாய் -ஸ்வம்மாய் -சரீரமாய் வ்யாப்யமாய் தார்யமாய் ரஷ்யமாய் போக்யமாய் அஞ்ஞனாய்
அசக்தனாய் அபூர்ணனாய் சாபேஷனாய் இருக்கிற ஆகாரத்தையும் அநு சந்தித்துக் கொண்டு
களைவாய் துன்பம் களையாது  ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று உபாயத்தில்
சர்வ பரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு  நிர்பரனாய் இருக்கை –

கோவிந்த சுவாமி க்கு அருளிய அருளை கொடு
இது கொண்டு தப்பாக திருப்த பிரபன்னர் என்பர் திருமங்கை ஆழ்வார்
அவருக்கு அருளியது போல் ஏன் மனம் அறிந்து உடனே கொடு

நாடு நச்சுப் பொய்கை ஆகாமல் இருக்க –
பிரபத்தி பண்ணி அடுத்த ஷணம் மோஷம் என்று இல்லாமல்
கோரின காலத்தில் அருளுவான்

ஆழ்வார்கள் அனைவரும் ஆர்த்தி பிரபன்னர்
பிரஜைகளை பட்டினி போட்டு விருந்து அளிப்பாரை போலே
சம்சாரிகளை திருத்த வைத்து பாசுரம் பாட அருளினான் –

பகவத் கடாஷம் -நிர்ஹெதுகம் நம் கொள்கை
சஹேதுகம் வட கலை -இவர்கள் கொண்டு உலகை திருத்தும் காரணம் –

முதுகு கடுக்கும் இங்கே கைங்கர்யம் செய்யும் பொழுது
அதனால் பரம பதம் -கைங்கர்யம் -அசித்ரை இன்றி –
தேக சம்பந்தம் விரோதி கைங்கர்யம் அதுக்கு காரணம் தேச சம்பந்தம் –
தேசிகன் உடைய சகவாசம் -ஆசார்யர் சகவாசம் –
இந்த லோகத்தில் இருந்து அனுபவிக்கும் தேசிகர் -பகவத் விஷயத்தில் நுழைய விடாமல் இருப்பவர் –
அஹம் உனக்கு அடிமை ரஷனம் பொறுப்பு உன்னுடையது -குழந்தை -தாய் போல் –
ரஷிக்கும்  ஆனந்தமும் உன்னுடையதே -ஆத்மாநாம் சமர்பிப்பதே பிரபத்தி –
சொல்வதும் உபாயம் இல்லை -பிரபத்தி லஷணம் -பிரார்த்தனா மதி -துவமேவ உபாய பூத –
பிரபத்தியில் மகா விசுவாசம் வேண்டும் -கிருபை வெள்ளம் -பிரபத்தி தடுக்கும் –
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -அளியல் நம் பையல் -என்று

ஆச்சார்ய அபிமானம்  ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் அன்றிக்கே இருப்பான் ஒருவனைக்
குறித்து இவனுடைய இழவையும் இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும்
அனுசந்தித்து -ஸ்த நந்த ய பிரஜைக்கு வியாதி உண்டானால் அது தன் குறையாக நினைந்து
ஔ ஷ் த சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்குத் தான் உபாய அனுஷ்டானம்
பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மகா பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல்  அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
அவன் இட்ட வழக்காய் ஆக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய ஸித்த பிராப்யனாய் நிற்கச் செய்தே சகல தேவதாந்த்ர்யாமியாய்க்
கொண்டு ப்ராப்யன் ஆகிறாப் போலே இவ் வாச்சார்ய அபிமானமும்   தனியே உபாயமாக
நிற்கச் செய்தேயும் எல்லா உபாயங்களுக்கும் சஹகாரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் –மாசுசக என்கையாலே சோக ஜனகம் –
பக்தி யோகம் அனுஷ்டிக்க -துஸ் சகாய உபாயம் -ஸ்வரூப விரோதி வேற –
எனக்காக எல்லாம் நீ செய்தால் எதிராசா -மணவாள மா முனிகள் –
வல்ல பரிசு தரிவிப்பரேல் அது காண்டும்
செல்வர் பெரியவர் சிறு மானிடர் நாம் செய்வது என்
பூச்சூட வாராய் நீராட வாராய் -இட்ட வழக்காய் இருப்பானே –
ஆசார்ய அபிமானம் -அவன்சொன்னபடி கேட்டால் -நடக்குமே –
இதுவே மொஷத்துக்கு நேராக -சாதனம்
மலைக்கு தாவ புழு சிங்கம் காலில் ஒட்டிக் கொண்டு -அதன் வியாபாரமே போதுமே –
நம் சிஷ்யன் என்று அபிமானித்து –
கண்டா கர்ணன் -வ்ருத்தாந்தம் -தம்பிக்கும் கேட்டு வாங்கிக் கொடுக்க –
பிரதி பத்தில் இல்லை த்வேஷம் தான் -உன்னிடத்திலும் பிரதி பத்தி இல்லை –
எனக்கு ப்ரீதி உண்டே -எனக்காக கொடு -கேட்டு வாங்கிக் கொடுத்தானே –
குழந்தைக்குயாறு தெரியாவிடிலும் அன்னை –
பக்திக்கு அங்கம் ஞான கர்ம -தனியாக உபாயம்
பிரதி பத்தி பக்திக்கு அங்கமாகவும் உபாயமாகவும் இருக்கும்
கீதா பாஷ்யம் பிரதி பத்தி அங்கமாக -உபதேசித்து -நேராகுபாயமாக அங்கெ சொல்ல வில்லை
சர்வ பலத்துக்கும் பிரதி பத்தி செய்யலாமே –
சர்வ ரோக நிவாரணி போலே -எதோ உபாசனம் பலம் –
ஆசார்ய அபிமானம் இது போல் இரண்டும் -அங்கியாகவும் நேரே உபாயமாகவும் –
நித்ய சித்த உபாயம் -அவன் -சகல தேவாத அந்தர்யாமியாய் இருந்து பலமும் கொடுப்பது போல்
ஆசார்ய அ பிமானமும் -சஹாகாரியுமாய் ஸ்வ தந்த்ரமாயும் இருக்கும் –
சுக ஹேது அர்த்த பஞ்சக ஞானம் –

விரோதி வர்க்கத்தில்
1-ஸ்வரூப விரோதி யாவது தேக ஆத்மா அபிமானமும் அந்ய செஷத்வமும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் –
2-பரதவ விரோதி யாவது -தேவதாந்திர பரதவ பிரதிபத்தியும்
சமத்வ பிரதிபத்தியும்
ஷூத்ர தேவதா விஷயத்தில் சக்தி யோக பிரதிபத்தியும்
அவதார விஷயத்தில் மானுஷ பிரதிபத்தியும்
அர்ச்சாவாதார விஷயத்தில் அசக்தி யோக பிரதிபத்தியும் –
3-புருஷார்த்த விரோதி யாவது -புருஷாந்தரங்களில் இச்சையும்
தான் உகந்த பகவத் கைங்கர்யங்களில் இச்சையும் –
4-உபாய விரோதி யாவது -உபாயாந்தர வை லஷன்ய பிரதி பத்தியும் –
உபாய லாகவமும் -உபேய கௌ ரவமும் -விரோதி பாஹூள்யமும் –
5-பிராப்தி விரோதியாவது -பிராரப்த சரீர சம்பந்தமும் -அனுதாப சூன்யமுமாய் குருவாய் ஸ்திரமாய்
இருந்துள்ளபகவத் அபசார – பாகவத அபசார -அசஹ்யஅபசாரங்களும்
இவை எல்லாவற்றுக்கும் விரோதி என்று பேராக் கடவது
அன்ன தோஷம் -ஞானவிரோதியாக கடவது
சஹவாச தோஷம் -போக விரோதியாகக் கடவது
அபிமானம் -ஸ்வரூப விரோதியாகக் கடவது –
இப்படி அர்த்த பஞ்சக ஞானம் பிறந்து முமுஷுவாய் சம்சாரத்தில்  வர்த்திக்கிற சேதனனுக்கு
மோஷ ஸித்தி யளவும் சம்சாரம் மேளிடாதபடி கால ஷேபம் பண்ணும் க்ரமம் –
வர்ண ஆஸ்ரம அநு ரூபமாகவும்
வைஷ்ணவவத்வா நுரூபமாகவும்
அசநாச்சாதன்களை சம்பாதித்து
யதன்ன புருஷோ பவதி ததன்நாஸ்  தஸ்ய தேவதா -என்கிற படியே
சகல பதார்த்தங்களையும் பகவத் விஷயத்திலே நிவேதித்து யதாபலம் பாகவத கிஞ்சித்காரமும்
பண்ணி -தேக தாரண மாத்ரத்தை  பிரசாத பிரதிபத்தியோடே ஜீவிக்கையும் –
வருந்தியும் -தத்வ ஞானம் பிறப்பித்த ஆசார்யன் சந்நிதியிலே கிஞ்சித்காரத்தோடே
அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கையும் -ஈஸ்வரன் சந்நிதியிலே தன்னுடைய நீசத்வத்தைஅனுசந்திக்கையும் ஆசார்யன்  சந்நிதியில் தன்னுடைய அஞ்ஞதையை அனுசந்திக்கையும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியில் தன்னுடைய பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்கையும் –
சம்சாரிகள் முன்னில் தன்னுடைய வ்யாவ்ருத்தியை அனுசந்திக்கையும் -ப்ராப்யத்தில் த்வரையும்
பிராபகத்தில் அத்யாவச்யமும் -விரோதியில் பயமும் -தேகத்தில் அருசியும் -ஆர்த்தியும் ஸ்வரூபத்தில்
உணர்த்தியும் ..
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் உத்தேச்ய விஷயத்தில் கௌ ர்வமும்
உபகார விஷயத்தில் க்ருதஞ்ஞையும் உத்தாரக பிரதிபத்தியும் அநு வர்த்திக்கையும் -வேணும்
இப்படி ஞான அனுஷ்டானங்களோடு கூடி வர்த்திக்குமவன்
ஈஸ்வரனுக்கு பிராட்டிமாரிலும் நித்ய முக்தரிலும் அத்யந்த அபிமத விஷயமாகக் கடவன் –

விரோதி ஸ்வரூபம் –
பரதவ விரோதி -யாவது தேவதாந்திர பரதவ பிரதிபத்தி –
சமத்தவம் பிரதிபத்தி -அனைத்தும் அவனுக்கு அங்கம் –
தங்கம் குந்துமனிக்கு சமம் என்பதால் வருத்தம் போலே –
வாசுதேவம் பரித்யஜ்ய அந்ய தேவம் -பாப்பம் அடைய கடவேன் -நம்பாடுவான்
சூத்திர தேவதைகள் சக்தி யோகம் சொல்வது -அவஜானந்தி மாம் மூடா -விபவத்தில் மானுஷ்ய பிரதிபத்தி –
ஸ்வரூபம் பார்க்காமல் சரீரம் பார்த்து -அர்ச்சாவாதாரத்தில் உபாதான பிரதி பத்தி –
ஜீவாத்மா -அடிமை பட்டது அறியாமல் -தேகாத்ம அபிமானமும் –
அந்ய சேஷத்வம் -தனக்கு தானே யஜமான் என்ற எண்ணம் வருமே -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் –
புருஷார்த்தம் பகவத் கைங்கர்யமே -மற்றவை விரோதி
உபாய விரோதி -சாதனாந்தரங்கள்
நம்முடைய ஆனந்தம் -என்ற எண்ணம் பிராப்தி விரோதி
புருஷார்த்த விரோதி -கண்டதையும் கேட்டு பெறுவது –
புருஷார்த்தாந்தில் இச்சை -இன்றி -அடியேன் -கைங்கர்ய ஆசை இருக்க வேண்டுமே –
தான் உகந்த கைங்கர்யங்களில் மட்டும் இச்சை
உபாய விரோதி -உபாயாந்தர வை லஷண்யம் பிரதிபத்தி –
உபாய லாகவம் -லகு அல்பம் -என்ற எண்ணம் -மதிப்பு குறைய எண்ணி
உபேய கௌ ரவம்
விரோதி பாஹுள்யம் -அஹங்கார மமகார –
ஆசார்யனையும் தன்னைப் போல் நினைக்கை –
பிராப்தி விரோதி -சரீர சம்பந்தம் -விரோதி விரோதி சொல்லாமல் பிராப்ய விரோதி என்று அருளுகிறார் –
பகவத் பாகவத அசஹ்யா அபசாரங்கள் –
அன்ன தோஷம் -ஞான விரோதியாக கடவது
கீரை உண்டு -மணவாள மா முனிகள் -நாய் எலும்பு இருந்த இடம்
சுத்த அன்னமே உண்டாராம் அது முதல் –
கோபம் வராதா உப்பு புளி காரம் போட்டு -சாப்பிடுகிறேன் –
சஹாவாச தோஷம் போக விரோதி
அபிமானம் ஸ்வரூப விரோதி
ஆழ்வார்கள் அனைவரும் அர்த்த பஞ்சகம் அருள
அருளினான் -அவனே உபாய ஸ்வரூபம்
அயர்வு அற -மயர்வு விரோதி
நாராயணனே நமக்கே பறை தருவான் நான்கு சப்தத்தால் அர்த்த பஞ்சகம் அருளி –
பறை -ஆள் செய்கை கைங்கர்யம் புருஷார்த்தம்
தருவான் -உபாய ஸ்வரூபம்
நமக்கே -ஜீவா
நாராயணனே -பர
ஏ வகாரத்தால் -அந்ய விரோதிகள் கழித்து
சம்சாரத்தில் வர்த்திக்கிற முமுஷோ ஜீவிக்கிற படியை மேலே அருளுகிறார்
யது அன்னம் ஆகிறதோ தத் -நிவேதனம் செய்து –
ஆசார்யனுக்கு அபிமதமாக வர்த்திகையும் –
நீசத் தன்மை அனுசந்தித்தும் –
பாரதந்த்ர்யம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம் அனுசந்தித்தும்
சம்சாரிகள் விட வ்யாவ்ருத்தியையும்
பிராப்யத்தில் தவரையும் துடிப்பும்
உருதியீடுபாடு கொண்டு –
பிராபகத்தில் அத்யவச்யமும்
விரோதியில் பயமும் -தேகத்தில் ஆசை இன்றியும் –
ஆர்த்தி -சம்சாரத்தில் துக்கம் –
பிறப்பும் இறப்பும் கையில் இல்லை போலே நடுவில் உள்ள ரஷணமும் நம் கையில் இல்லை –
ரஷணம் எது என்ற உணர்வும் வேண்டும் -உத்தேச்ய விஷயம் -கௌ ரவமும்
உபகார விஷயத்தில் கிருதஞ்ஞையும்
மாணிக்க மாலை ஆசார்யன் யார் -மந்த்ரம் உபதேசித்து
பஞ்ச சம்ஸ்காரம்செய்தவர் -வெறும் தரையில் உள்ளவனுக்கு
யோக்யதைஅருளி -ஆத்மா விஷயம் அருளியவர்கள் ஆசார்யர்
பிதரம் மாதரம் குரு -விட சொல்லி-
ஞான அனுஷ்டானங்கள் உடன் கூடி வர்த்திக்குமவன் –
ஈஸ்வரனுக்கு -இங்கே ப்ரீதி –பிராட்டிமார் விட -நித்யர் முக்தர் விட -அத்யந்த அபிமத விஷயமாகக் கடவன் –
விண்ணுலாரிலும் சீரியர்
சாதிக்கும் பொழுதும் -வைராக்கியம் -முதலில் வேணும் அப்யாசம் வேண்டும்
பாவே வைராக்கியம் இருக்கும் பொழுதே வைராக்கியம்
அதனால் அனைத்தையும் சாதித்து சாதம் சாதிப்போம்
வட கலை அன்னம் சாதித்து பின்பு மற்றவை -சாதிக்க -வைராக்கியம் காட்ட விஷயம் இல்லையே –
சம்சாரத்தில் இருந்தும் இப்படி இருப்பவரை அபிமத விஷயமாக ஈஸ்வரன் -கொள்வான்

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading