Archive for April, 2012

ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை–217/218/219/220/221/222-/223/224/225/226–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 10, 2012

இவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி-எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-
உத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரமியுமாய்  இருந்தானே ஆகிலும்
பகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று
வர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாகச் சொல்லுகையாலே –
பிரம சம்பாவனாதிகளாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து
இங்கன் அன்றாகில் -கீழ்ச் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே

——————————————

ஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜன்மங்கள் இன்னது என்று நிரூபிக்கப் பட்டது கீழே-
அதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் மேலே –

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்தத்தாலே-

அதாவது
அஹங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது  – ஜன்ம சித்தமான நைச்யத்தை உடையவராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த ரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை-(தர்சித்து ஸ்பர்சித்து கைங்கர்யம் பண்ண தோஷங்கள் விலகும்)

——————————————-

தத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது ஜன்ம கொத்தை போக வேணும் –

அதாவது
அவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு -அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது
தன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி

————————————-

ஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்கு பரிகாரம் ஏது ?-என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

அதாவது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர நெடுகப் போகிற வம்ச பிரவாஹத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  யாகிலும்
என்னோடு உண்டான அசாதாரண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்துச் சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என் மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழிப் போகுங்கோள் என்ற இந்தப் பரம ரகஸ்யத்தை –
பக்திர் அஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்று பரம ஆப்தரான தேவர் அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ ?
இப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்
தலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் வர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –
இப் பாட்டிலே அபிஜனாத்ய  அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத
விலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்குப் பரிஹாரம் என்று ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை-

(1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும் தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர் இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-)

—————————————-

ஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே
இவனும் விலக்ஷணனாய் விடுமோ என்ன அருளிச் செய்கிறார் —

சூரணை -221–

வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

வேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளிச் செய்கிறார்-
வேதகப் பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு  -பல கால் உருக்கி குளியையாகப் பண்ணி  ரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பைப் பொன்னாக்குமாம் போலே ஆய்த்து–
ஜன்ம சித்தமான நைச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தைப் போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –

—————————————————

ஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி இருக்க வேணும் என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும்  ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —

இவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும்  ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் என்று

——————————————-

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈஸ்வரனிலும்
அதிகர் என்றும் நினைக்கை-

ஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிப் படியே-
தனக்கு சர்வ பிரகார  உத்தேஸ்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –
சம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே  ஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
தன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே -அத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
ஈஸ்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே -கர்ம அனுகுணமாக லீலையிலும் (உம்மைத் தொகை போகத்திலும் -ஆழ்வார்கள் )விநியோகம் கொள்ளக் கடவனாய்- ஸ்வ சரண கமல சமாஸ்ராயண தசையில்  புருஷகாரம் வேண்டும் படியாய் -உகந்து அருளின நிலங்களிலே – சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே இருக்கும் அவனைப் போல் அன்றியே -ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் (அவன் கர்ம அனுகுணமாக நன்மை விநியோகம் கொள்ளுகிறான் அன்றோ -ஸ்வரூபம் ஸ்வா தந்திரமாக இருக்க இப்படி இருப்பது ஸ்வரூப விருத்தம் அன்றோ-பரதந்த்ரமாய் இருந்து வைத்தும் தமது ஆச்சார்யருக்கு கைங்கர்யமாக நம்மை விநியோகம் கொள்ளும் ஆச்சார்யர் )-ஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு போரும் அவர்கள் ஆகையாலே -ததிகர் என்று பிரபத்தி பண்ணுகை-

————

ஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –
ஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

அதாவது ஆச்சார்ய சாம்ய பிரபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று உபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-

————————————

இப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

அதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை அபசாரம் ஆனாப் போலே –
இப்படி கௌரவித்து நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி

————————————–

இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -226-

இவ் வர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

இவ் வர்த்தம் என்று -கீழ் விஸ்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –

மகா பாரதத்தில் -மத் பக்தம் ஸூத்திர சாமான்யத் அவமன்யந்தி யே நரா நரகேஷ்வ வதிஷ்டந்தி வர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும்

ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணேஷு தே ஸூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –

மத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-ஸூயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம் மத் கதா ஸ்ரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ஸ்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோப ஜீவதி- பக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித
நமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ஸ்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ  யதாக்யகம்-இத்யாதியாலும் –
பல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்

இதிகாச உத்தமத்தில் -ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வபசம் ததா வீஷதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் – பாகவத பிரபாவம் பிரகீர்திதம் –

இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது

ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம்  ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே  நரா:, பத்மகோடி  சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்

ஸ்ரீ பாகவதத்திலே – “ஸ்வபசோபி  மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி  விகீநஸ்து  யதிச்ச  ஸ்வபதாசம :”.
“விப்ராத்  த்விஷட் குணயுதாத்   அரவிந்த நாப பாதார விந்த  விமுகாஸ் ஸ்வபசம் வரிஷ்டம்–
மந்யே  ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த  ப்ராண: புநாதி ஸகலம்  நது பூரி மாந:” இத்யாதிகளாலே  பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –

லைங்கத்திலும் “வைஷ்ணவானாம்  விசேஷோஸ்த்தி விஷ்ணோ ராயாதனம்  மஹத
ஜங்கம ஸ்ரீ  விமாநாநி ஹிருதயாதி மநீஷிணாம் . ய: பஸயதி ஸூபாசாரம்  வைஸ்ணவம்
வீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குலேஜாதம்  பிரணமேத்  தண்டவத்புவி ” இத்யாதியாலே  – பாகவத வை பவம்  ப்ரதிபாதிதம்-

இப்படி  பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம்  பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-

இதிகாசாதிகளில் உபாதித்த வசனங்களிலே–
1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –
2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –
3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்களுமாய் -பரம சேஷியான ஈஸ்வரனோபாதி பூஜ்யரும் ஆவர்கள் என்னும் இடமும் –
4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –
5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர்  அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –
6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –
7–அவர்களைக் கண்டால்  தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச  புராணங்களிலும் –

நம் ஆழ்வார்
பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –
பகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே தமக்கு சேஷிகள் என்னும் இடத்தை பிரதி பாதித்து அருளும் இடத்தில் –
யவரேலும் அவர் கண்டீர் –
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் –
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று
ஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு மிகவும் உத்தேஸ்யர் என்று அருளிச் செய்த -பயிலும் சுடரொளி யிலும் –

கொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு என்பது என் அந்தோ -என்று தொடங்கி –
பாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –
சயமே அடிமை தலை நின்றார் –
அவன் அடியார் –
மணி மலை போல் கிடந்தான் தமர்கள் –
கோதில் அடியார் –
நீக்கமில் அடியார் –
என்று பகவத் ஸூவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு ) தோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –

திரு மங்கை ஆழ்வார் –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே ) அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் (கீழே பயிலும் சுடரொளி ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு )எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -ஸூரிகளிலும் கைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –அவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும்  இனியதாக  நின்றது –அவர்களைக் கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –அவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –
அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –
என்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும் ஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் –(நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே)

கடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று
ஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை
அனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மைக் கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –
அவர் எங்கள் குல தெய்வமே -என்று –
உகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று
அருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
மெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –
இத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை  பிரதிபாதிக்கிற அளவில் –
ஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவஸ்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
த்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் – எத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –
1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் – திரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸா  வாஹ்யர் என்றும் –
2-ஜன்மத்தால் வந்த தண்மையே  அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்
உடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –
3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு
சம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ஸ்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –
4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-ஜன்ம விருத்தாதிகளால்  உயர்ந்தவர்களுக்கு ஸர்வேஸ்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதி க்ரஹங்களுக்கு  அர்ஹர் ஆவார் என்றும் –
5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை -பகவத் பிரபாவத்தால் வந்த வைலஷண்யத்தைப் புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி தாழ நினைத்தார்கள்  ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –
6-இப்படி பிரசாதித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம்  ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை திர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -(கஜேந்திர ஆழ்வான்) -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –
விசத தமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–198/199/201/202/203/204/205/206/-207/208/209/210/211/212/213/214/215/216–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 10, 2012

இவ்வாபசாரத்துக்குப் பலம் தக்த படம் போலே நஷ்ட கல்பனாய் இருந்து தேக அவஸானத்திலே வுருமாய்ந்து போம் அளவே அல்ல -இவ்வபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் -திரிசங்குவைப் போலே-என்று தொடங்கி –

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட
யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

அதாவது -இஷ்வாகு வம்சனாய் இருக்கிற திரிசங்குவாகிற ராஜா -தன் குல குருவாய் இருக்கிற வசிஷ்ட மகரிஷியை -ச சரீர ஸ்வர்க்க அவாப்த அர்த்தமாக என்னை யஜிப்பிக்க வேணும் -என்று அபேக்ஷிக்க –
மஹரிஷி நமக்கு அசக்யம் -என்ன –
அங்கு நின்றும் தத் புத்திரர்கள் தபஸ்ஸூ பண்ணுகிற இடத்திலே சென்று இச் செய்தியைச் சொல்லி அவர்களை மிகவும் அநு வர்த்தித்து –
நீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் -என்று நிர்பந்திக்க
நீ துர் புத்தியாய் இருந்தாய் -மஹரிஷி போகாது என்றத்தை எங்களால் செய்யப் போமோ என்ன
தேஷாம் தத் வசனம் ஸ்ருத்வா க்ரோத பர்யாகுலா ஷரம் ச ராஜா புநேரேவைதா நிதம் வசந அப்ரவீத் ப்ரத்யாக்கயாதோ பகவதா குரு புத்ரைஸ் தத்தைவ ச அந்யாம் கதம் கமிஷ்யாமி ஸ்வஸ்தி வோஸ்து தபோதநா -என்று அவன் க்ருத்தனாய்
குருவானவரும் -தத் புத்ரர்களான நீங்களும் மாட்டோம் என்றிகோள் ஆகில் நான் மற்றொர் இடத்தில் போகிறேன் நீங்கள் ஸூகமாய் இருங்கோள் -என்ன ருஷி புத்ராஸ்து தஸ் ஸ்ருத்வா வாக்கியம் கோராபி சம்ஹிதம் சோபு பரம சங்க்ருதாச் சண்டாளத்வம் கமிஷ்யசி -என்று ஸ்வாச்சார்யனையும் தத் புத்ரர்களான தங்களையும் இவன் அவமதி பண்ணிச் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவர்கள் மிகவும் க்ருத்தராய் நீ சண்டாளனாகக் கடவாய் -என்று சபிக்க
அத ராத்ரியாம் வ்யதீதாயாம் ராஜா சண்டாள தாங்கத நீல வஸ்திர தரோ நீல புருஷோ த்வஸ்த மூர்த்தஜ சித்ர மால்யாங்க ராகாச்ச ஆயாசா பரனோ பவேத் -என்கிறபடியே
அநந்தரம் அவன் கர்ம சண்டாளனாய் விட்டான் இறே
அப்படியே பாகவத அபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் ப்ரஹ்ம வர்ச்சஸ்வத்துக்கு உறுப்பாக மார்பிலிட்ட யஜ்ஜோபவீதம் தான் சண்டாள வேஷத்துக்கு அடைத்த வாராய் விடும் என்கை –
அங்கு சாப சித்தமாகையாலே ப்ரத்யக்ஷமாய்த்து -இங்கு சாஸ்த்ர சித்தமாகையாலே ஞான த்ருஷ்ட்டி விஷயமாக இருக்கும்
அநாசாராந் துராசாராந் அஞ்ஞாத்ருந் ஹீந ஜன்மன -மத் பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் சத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் –(ப்ரஹ்மாண்ட புராணம் )என்னக் கடவது இறே

——————————————————–

சண்டாளனோபாதி யாகிலும் இவனும் ஒரு காலத்திலே ஈடேறும் என்று நினைக்கைக்கு அவகாசம் இல்லாதபடி – ஜாதி சண்டாளனில் கர்ம சண்டாளனுக்கு உள்ள தண்மையை அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –
அதுவும் இல்லை இவனுக்கு –

அதாவது ஜாத்ய சண்டாளனுக்கு தஜ் ஜென்மத்தில் யாதல் ஜன்மாந்தரத்திலே யாதல் பகவத் கடாக்ஷம் உள்ளதொரு கால விசேஷத்திலே நாம ரூபங்களை யுடையவனாய் பகவத் சம்பந்த நிருபிதனாகைக்கு யோக்யதை யுண்டு
அந்த யோக்யதையும் இல்லை -பாகவத அபசார ரூப கர்மத்தால் சண்டாளனான இப் பாபிஷ்டனுக்கு-

——————————————–

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

அதுக்கடி பாகவதத்வமாகிற உயர்ந்த நிலத்திலே ஏறி -பத்ம கோடி சதே நாபி ந ஷாமாமி என்னும்படி அதி குரூரமான பகவத் நிக்ரஹத்துக்கு ஹேதுவான பாகவத அபசாரத்தாலே பாற வடியுண்டு அதி பதித்தவனாகையாலே

—————————————–

இது தான் ஜென்மாதிகளாலும் ஞானாதிகளாலும் அபக்ருஷ்டரானவர்கள் உத்க்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலேயே அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலே ஒக்குமோ என்ன அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

அதாவது பாகவத அபசாரத்துக்கு அப்படி இருபதொரு அதிகாரி நியமம் இல்லை என்கை –

——————————————————–

இது தனக்கு பிரமாணம் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே

அதாவது –ச அங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் இருந்தார்களே யாகிலும் தேவரீர் திருவடிகளில் சம்பந்த ஏக நிரூபகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில்
காலாந்தரே தேசாந்தரே அன்றிக்கே -அப்போதே அவ்விடம் -தன்னிலே அவர்கள் தாங்கள் சண்டாளரும் – இவர்களுக்கு ஒரு போலி மாத்திரம் என்னும் படி அவர்களில் காட்டில் அத்யந்த நீசராவார் என்று தத்வ யாதாம்ய தர்சிகளான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்கையாலே என்கை –

————————————————–

இவ் வார்த்தை விஷயமாக இரண்டு ஐதிக்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் –

சூர்ணிகை -203-

இவ்விடத்தில் வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது

வைநதேய விருத்தாந்தமாவது –விஸ்வாமித்ரன் பக்கலிலே வித்யைகள் எல்லாம் அதிகரித்த காலவன் என்கிற ப்ராஹ்மணன் குரு தக்ஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ் வித்யைகள் நிலை நில்லாது என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தக்ஷிணையாகத் தரத் தக்கது ஏது-என்று கேட்க
நீ நமக்கு ஒன்றுமே செய்ய வேண்டா -நாம் உன்னுடைய ஸூஸ்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதரானோம்-இனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று பலகாலும் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே ஸர்வதா என் பக்கலில்
தக்ஷிணை வாங்கிக் கொள்ள வேணும் என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே
கிஞ்சிதா கத சம்ரம்போ விஸ்வாமித்ரோ பிரவீதிதம் ஏகதஸ் ஸ்யாம கர்ணாநாம் சதான் யஷ்டவ் து தேஹி மே ஹயா நாம் சந்த்ர ஸூப்ராணம் கச்ச காலவ மா சிரம் -என்று
அவன் குபி தானாய் இவனைப் பார்த்து -உடம்பு எங்கும் சந்த்ர மண்டலம் போலே வெளுத்து ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா
என்ன -இத்தைக் கேட்டு மஹா வ்யாகுலனாய் -இதுக்கு இனிச் செய்வது என் -என்று பஹு முகமாக விசாரித்து சர்வ அபேக்ஷித பிரதானனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் என்று
உத்யோகிக்கிற அளவிலே முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற பெரிய திருவடி நாயனார் இவனுக்கு முன்னே வந்து நிற்க அவரை ஸ்தோத்ரம் பண்ணி
இதுக்கு செய்ய அடுத்து என் என்று கேட்க
அவர் – உன்னை நான் இப் பூமி எங்கும் கொண்டு போகிறேன் இருவரும் கூட ஆராய்வோம் வா என்று இவனை இடுக்கிக் கொண்டு திரிகிற அளவிலே
இளைப்பானவாறே -இங்கே இளைப்பாறிப் போகக் கடவோம் என்று மேல் சமுத்ரத்திலே ரிஷபம் என்கிற பர்வதத்தின் மேலே வசியா நிற்பவளாய்
ஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாதநாதிகளைப் (ஆதி நமஸ்காரம் போல்வன)பண்ண -அவள் அத்யாதரத்தோடே மிகவும் சத்கரிக்க
அநந்தரம் விஸ்ராந்தராய் சயிக்கிற அளவிலே -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற இவள் ஒரு விலக்ஷண தேசங்களிலே வசிக்கப் பெற்றதில்லையே என்று
பெரிய திருவடி நாயனார் விசாரித்து இவளை இங்கு நின்றும் நாம் ஒரு திவ்ய தேசங்களிலே கொண்டு போய் வைக்கக் கடவோம் என்று
நினைத்துக் கொண்டு கிடக்கச் செய்தே அந்த பாகவதை இருந்த தேசத்தைக் குறைய நினைத்த இவ் வாபசாரத்தாலே சிறகுகளும் உதிர்ந்து நிஸ் சேஷ்டராய் விட
இத்தைக் கூடப் போன ப்ராஹ்மணன் கண்டு -கிந்னு தே மனசா த்யாதம் அஸூபம் பததாம் வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று
ஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தால் தீங்கு நினைத்தது உண்டோ -தேவரீருக்கு அல்பமும் வியபிசாரம் வருகைக்கு யோக்யதை இல்லை என்ன
உண்டாய்த்து காண் -என்று தாம் அந்த பாகவதை விஷயத்தில் நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளிச் செய்து –
அநந்தரம் இத்தைப் பொறுக்க வேணும் என்று  அவளைச் சென்று வர்த்தித்து அவள் அனுக்ரஹத்தாலே அவ் வபசாரம் நீங்கி முன்பு போலே ஆனார் என்கிறது
இது தான் கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளினை போது நாரதாதி மஹரிஷிகள் பலரும் வந்து இருக்கிற அளவிலே கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை பின் செல்லுகைக்கு உறுப்பாக த்ருதராஷ்ட்ரனைக் குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்திலே
ஸ்ரீ நாரத பகவான் அனுக்ரஹித்ததாக உத்யோக பர்வதத்தில் யுக்தமாகையாலே வேதாந்த உப ப்ரும்ஹண சித்தம் இறே(ஸ்ம்ருதி வேதத்துக்கு  உப ப்ரும்ஹணம் -இதிஹாச புராணம் வேதாந்தத்துக்கு உப ப்ரும்ஹணம் )

பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை யாவது
பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை அங்கீ கரித்து நாளிலே -இவர் ஆபிஜாதியாதிகளாலே உத்க்ருஷ்டராகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக
வர்த்தித்திக் கொண்டு போகிறபடியைக் கண்டு –
இவருக்கு இப் பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் கீழ்ப் படுத்தி தானே மேலாய் விநாச பர்யந்தம் ஆக்கி விடும்
அதுக்கு வேலியிட்டு வைக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவிலே இவரைப் பார்த்து
எல்லாரும் தானம் பண்ணுகிற காலத்தில் நீரும் நமக்கு ஒரு தானம் பண்ண மாட்டீரோ என்ன -அடியேன் எத்தைத் தானம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே என்ன
அர்த்த ஸ்திதி அன்றோ ஆவது -அவ்வளவும் போராது-கரணத் த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வர்த்திக்கக் கடவன் என்று நம் கையிலே உதகம் பண்ணித் தர வேணும் என்ன –
அப்படியே இவரும் உதகம் பண்ணிக் கொடுத்த அநந்தரம் -ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து நாம் இனி முடிந்தோம் என்று பயப்பட்டு
மூடிக் கொண்டு தன் திரு மாளிகையில் கண் வளர- இவர் முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திரு மாளிகையில் எழுந்து அருளி
ஏன் தான் முசிப்பு என் என்று வினவி அருள -தான் மனத்தால் நினைத்ததை விண்ணப்பம் செய்து -கரணத் த்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி
இத் தேகத்தோடே வர்த்திக்கை அரிதாய் இரா நின்றது – என் செய்யக் கடவேன் என்று திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிலேசிக்க
இத்தனை அனுதாபம் இவருக்கு உண்டாகப் பெற்றோமே -என்று உகந்து அருளி மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே ஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது –(நலிய மாட்டீர் என்றபடி )
ஆன பின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் -இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு (அடக்கிக் கொண்டு )வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –

——————————————

பகவல் லாப ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பரிபூர்ணனாய் யுடையான் ஒருவனுக்கு பாகவத அபசாரம் யுண்டாய்த்தாகிலும் பகவான் அதுக்கு லகுவானதொரு தண்டனைகளைப் பண்ணிக் கூட்டிக் கொண்டு விடானோ
அவை இரண்டும் அசத் சமமாய் அபசாரம் பிரபலமாய் எம்பெருமானை இழந்தே போய் விடும் என்னலாமோ என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

அதாவது -உபாப்யாம் ஏவ பஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்க்கு எளிது-திரு விருத்தம் -54- -என்றும் சொல்லுகிறபடியே
பகவல் லாப ஹேதுவான தத்வ ஞானமும் தத் அனுரூப அனுஷ்டானம் இன்றிக்கே ஒழிந்தாலும்
பகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ ஸம்ஸரயா தேநைவ தே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -(பாரத்வாஜ ஸ்ம்ருதி )-என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பஸ்யதி சஷூஷா ஸ்தாவராண்யபி முஸ்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா -(பராசர ஸ்ம்ருதி )-என்றும் சொல்லுகிறபடியே
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனம் ஆகிறாப் போலே அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற யுண்டாய்த்தாகிலும்
பகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாகப் போரும் என்றபடி –

———————————————-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் யுண்டோ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை

இதில் என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும் என்று சொன்ன இவை இரண்டிலும் -என்றபடி –
ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோடு யுண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேதுவாவது
அவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற நியமுமம் –
ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது
அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற நியமுமம் இல்லை என்றபடி –

———————————-

இவ்வர்த்தம் காணலாம் இடம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –206–

இவ்வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

அதாவது -சரக குலோத்பவனான சோம சர்மாவாகிற ப்ராஹ்மணன் யாகத்தைச் செய்வதாக உபக்ரமித்து -யதா க்ரமம் அனுஷ்டியாமல்
அது சமாபிப்பதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே ப்ரஹ்ம ராக்ஷசனாய் பிறந்து திரியா நிற்க
மத் பக்தம் ஸ்வ வசம் வாபி-என்கிறபடியே ஜென்ம ஸித்தமான நைச்யத்தை யுடையராய் -பகவத் பக்தியே நிரூபகமாம் படி இருப்பார் ஒரு பாகவதர்
உத்தான ஏகாதசி யன்று ராத்திரி சித்தாஸ்ரமமான திருக் குறுங்குடியிலே நம்பியைப் பாடிப் பறை கொள்வதாக வீணா பாணியாய்க் கொண்டு போகா நிற்கச் செய்தே
அவரை பஷிப்பதாக வந்து அடர்க்க அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான அநேக சபதங்களைப் பண்ணிக் கொடுத்து தத் அனுமதி கொண்டு போய்
யதா மநோ ரதம் சேவித்து ஹ்ருஷ்டராய் அந்த ப்ரஹ்ம ராஷசன் நிற்கிற இடத்தில் மீளவும் விரைந்து வந்து யதேஷ்டம் இனி என் சரீரத்தை நீ புஜி என்ன
அவன் அவருடைய சத்யத்வாதி வைபவத்தைக் கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தைத் தா -நான் உன்னை பிராணனோடு போகவிடும்படி என்ன
அவர் அதுக்கு இசையாது ஒழிய -அர்த்த ராத்ரத்தில் பலம் -ஏக யாமத்தில் பலம் (த்ரியாமம் ஒரு இரவு )என்றால் போல் சொல்லிக் கொண்டு வந்த அளவிலும்
நான் அது செய்வது இல்லை -முன்பு நீ சொன்ன படியே என்னை பஷிக்கும் அத்தனை -என்று ஒரு நிலை நின்ற படியால்
த்வம் வை கீத பிரபாவேந நிஸ் தாரயிதும் அர்ஹஸி ஏவம் உக்த்வாத சண்டாள ராக்ஷஸம் சரணம் கத -என்கிறபடியே
நீ உன்னுடைய கீதா ப்ரபாவத்தாலே என்னை இப் பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேன்டும் என்று சரணம் புகுர-அந்த பாகவதர்
யன்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிமம் உத்தமம் -இத்யாதி படியே தாம் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தைக் கொடுத்து
கர்ம தோஷத்தால் வந்த ராக்ஷஸ வேஷத்தை கழித்து முன்பு போலே ப்ராஹ்மணனாய் -அதுக்கும் மேலே பாகவதனுமாய்
உஜ்ஜீவிக்கும்படி பண்ணினார் என்கிற கைசிக வ்ருத்தாந்தத்திலே -ஜென்மாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோட்டை சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது வாவது –
அவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேதுவாகாது -என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம்

ரிஷிகளும் தேவர்களும் தன் பக்கலிலே தர்ம சந்தேகம் கேட்க்கும்படி வித்யாதிகனுமாய் -ஸ்வ வரண அனுரூப மாத்திரம் அன்றிக்கே
ஸாத்வத தந்த்ர ( பாஞ்சராத்ர )நிஷ்ணாதனாய்-பாகவத ஆராதன தத் பரனாய்க் கொண்டு போருகையாலே வந்த வ்ருத்தாதிகனுமாய்
ஸ்வ தபோ பலத்தால் ச வாஹன பரிவாரனாய்க் கொண்டு அந்தரிக்ஷ சரனாய் திரியும் உபரி சரவஸூ என்கிற மஹா ராஜாவானவன்
யாகார்த்தமான பசு நிமித்தமாக ரிஷிகளும் தேவர்களும் தங்களிலே விவாதம் பண்ணுகிற அளவில்
மார்க்கா கதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம் தேசம் ப்ராப்தவான் வஸூ -அந்தரிக்ஷ சரஸ் ஸ்ரீ மான் சமக்ர பல வாஹன
தம் த்ருஷ்ட்வா ஸஹாஸ யாந்தம் வஸூம் தேவந்தரிக்ஷகம் ஊசுர் த்வி ஜாதயோ தேவா ஏஷச் சேத்ஸ்யதி சம்சயம் -என்று
ஆகாசத்தில் போகா நின்ற இவனைக் கண்டு இவன் நம்முடைய ஸம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு இவனைச் சென்று கிட்டி செய்ய வடுப்பது ஏது என்று கேட்க –
அவன் உம் தாமுடைய மதங்களைச் சொல்லுங்கோள் என்ன
தாந்யைர் யஷ்டவ்ய மித் யேஷ பஷ அஸ்மாகம் நராதிப தேவதா நாம் ஹி பசுபி பஷோ ராஜன் வதஸ் வன என்று
தான்யங்களாலே யஜிக்கப்படும் என்று எங்களுக்கு பக்ஷம் -பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பக்ஷம் -நாங்கள் செய்வது என் சொல் என்று ரிஷிகள் கேட்க
தேவா நாத்து மதம் ஸ்ருத்வா வஸூநா பக்ஷ ஸம்ஸரயாத் சாகேந அஜேந யஷ்டவ்யமேம்வ யுக்தம் வசஸ் ததா என்கிறபடியே
அவன் தேவர் அளவில் பக்ஷபாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் என்ன
குபிதாஸ் தே ததா சர்வே முனயஸ் ஸூர்ய வர்ச்சச ஊசுர்வஸூம் விமாநஸ்த்தம் தேவ பஷார்த்த வாதிநம்
ஸூர பஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத அத்ய ப்ரப்ருதி தே ராஜன் ஆகாஸே விஹதா கதி அஸ்மச் சாபாபி காதேந மஹீம்
பித்த்வா பிரவேஷ்யஸி விருத்தம் வேத ஸூத்ராணாம் யுக்தம் யதி பவேந் ந்ருப வயம் வ்ருத்த வசநா யதி ததா பதா மஹே-என்று
ரிஷிகள் எல்லாம் குபிதராய்-தேவ பாஷபாதியாய் வார்த்தை சொன்ன நீ த்யவ்வில்  (ஆகாசத்தில் )நின்றும் அதர்பதியாய்-இப்போது தொடங்கி யுன்னுடைய ஆகாச கமனமும் மாறி
பாதாளத்தில் விழக் கடவை-நாங்கள் தான் வ்ருத்த வசனம் சொன்னோமாகில் அப்படியே பாதாளத்தில் விழக் கடவோம் என்று சொல்லி சபிக்க
ததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததோ அதோவை சம்ப பூவாசு பூ மேர் விகரகோ ந்ருப -என்கிறபடியே –
அப்போதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற உபரி சரவஸூ வ்ருத்தாந்தத்தில் ரிஷிகளும் தர்ம சந்தேகங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளில்
அவர்களிலும் உத்க்ருஷ்டனாவான் அவர்கள் திறத்தில் அபசாரத்தால் அதிபதித்தமை காண்கையாலே
ஜென்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது –
அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில் பண்ணும் அபசாரம் இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் என்கை –
ஜென்ம ஆதிக்யம் ரிஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆதிக்யம் இவனுக்கு உண்டாகையாலே அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை
ஜென்மமும் ஞானாதிகளும் ஒரு தலையானால் ஞானாதிகள் பிரபலங்களாய் இறே இருப்பது

கைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராஹ புராணத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது ஆகையாலும்
உபரி சரவஸூ விருத்தாந்தம் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே மோக்ஷ தர்மத்தில் தர்ம புத்ரர்க்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்டது ஆகையாலும்
இவை தான் ஆப்த பிராமண சித்தம் இறே

———————————————-

இப்படி ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷத்தில் பசை இல்லை என்று சொல்லாமோ –சாஸ்திரங்கள் எல்லாம் பிராமணியத்தை அத்யாதரம் பண்ணி சொல்லா நிற்கச் செய்தே என்ன -அருளிச் செய்கிறார் -மேல் –

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-
வேதாத்யயநாதி முகத்தாலே-
பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –
த்யாஜ்யமாம் இறே —

விலை செல்லுகையாவது -விருப்பத்துக்கு விஷயமாகச் செல்லுகை –
வேதாத்யயநாதி முகத்தாலே பகவல் லாப ஹேது ஆகையாவது –
சர்வ வேதா யத் பத மாமநந்தி -என்றும் –
வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்யே -என்றும் சொல்லுகிறபடியே –
ஆராதன ஸ்வரூபத்தையும் -ஆராத்ய ஸ்வரூபத்தையும் -பூர்வோத்தர பாகங்களாலே
பிரதிபாதியா நின்று கொண்டு -பகவத் ஏக பரமாய் இருக்கிற வேதத்தை – ஸ்வத்யாயோ அத்யேதவ்ய-என்கிற விதி பரதந்த்ரனாய் -அத்யயனம் பண்ணி -மீமாம்சாதிகளாலே ததர்த்த நிர்ணயம் செய்து –பகவத் உபாசனாதிகளில் இழிந்து பகவத் விஷயத்தைப் பெருகைக்கு உறுப்பாகை-
அது தானே இழவுக்கு உறுப்பாகில்-என்றது -அந்த ப்ராஹ்மண்யம் தானே
அஹங்கார ஹேதுவாய் கொண்டு -மத் பக்தான் ஸ்ரோத்ரியோ  நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத் -என்கிறபடியே –பகவத் அத்யந்த நிக்ரஹ ஹேதுவான பாகவத அபசாரத்தைப் பண்ணி – பகவத் விஷயத்துக்கு அசலாய் போகைக்கு உறுப்பாகில் என்றபடி 
த்யாஜ்யமாம் இறே -என்று பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது –
யாதொன்று பகவல் லாபத்துக்கு உறுப்பு அது உபாதேயம் –
யாதொன்று தத் அலாபத்துக்கு உறுப்பு அது த்யாஜ்யம் ஆய்த்த பின்பு
இதுவும் இழவுக்கு உறுப்பான போதே அப்படியாகக் குறை இல்லை என்கிற நிச்சயத்தாலே –

——————————————-

இப்படி உத்க்ருஷ்ட ஜன்மாதிகள் இழவுக்கு உறுப்பாகில்-அபக்ருஷ்ட ஜன்மாதிகள் பேற்றுக்கு உடலாமோ என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய
உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும்
அப்ரயோஜகம் –

அதாவது –
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷமும் இவை இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று -என்கை –
அன்றிக்கே –
இதில் ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை (205)என்பது  இழவுக்கு உறுப்பமாகில் த்யாஜ்யம் இறே (207)என்பதாகா நின்றீர் -இங்கனே சொல்லலாமோ –
வேதத்யாயநாதி முகத்தாலே பகவல் லாப ஹேதுவாகையாலே-ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு உடலாகவும் –அவற்றினுடைய அபகர்ஷம் அத்யய நாதிகளுக்கு அனர்ஹம் ஆகையாலே இழவுக்கு உடலாகவும் கொள்ள வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார் -ஜன்ம விருத்தங்களினுடைய -என்று -தொடங்கி-
அதாவது
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷம் இழவுக்கு பிரயோஜகம் அன்று என்கை –
பேறு இழவுகள் ஆவன -பகவல் லாப -தத் அலாபங்கள் – பிரயோஜகம் ஆவது -பலிக்குமது
உத்க்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களில் சிலர் இழப்பாரும் – சிலர் பெறுவாருமாக காண்கையாலும் -அபக்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களிலும் அப்படியே
இரண்டு வகையும் உண்டாகக் காண்கையாலும் இவை இரண்டும் இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று என்னும் இடம் பிரத்யஷ சித்தம் இறே

——————————————

ஆனால் பேறு இழவுகளுக்கு பிரயோஜகம் ஆவது என்ன -என்ன அருளி செய்கிறார் –

சூரணை-209–
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்-
தத் அசம்பந்தமும் –

அதாவது –
பகவல் லாபமாகிற பேற்றுக்கு பிரயோஜகம் -நாம் பகவத் அனந்யார்ஹ சேஷ பூதர் என்று இருக்கை யாகிற பகவத் சம்பந்தம் –
தத்  அலாபமாகிற இழவுக்கு பிரயோஜகம் -தத் அனந்யார்ஹ சேஷத்வ ஞான  அபாவம் ஆகிற தத் சம்பந்த அபாவம்  என்றபடி –

————————————-

உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களில் இருவருக்கும் பகவத் சம்பந்தம் உண்டானால் பாகவதத்வ சாம்யம் அன்றோ உள்ளது -அத்தோடு ஜன்ம உத்கர்ஷமும் உடையவன் மற்றை அவனைப் பற்ற விசிஷ்டன் அன்றோ என்று நினைத்து பண்ணுகிற பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

சூரணை -210-

பகவத் சம்பந்தம்
உண்டானால்
இரண்டும் ஒக்குமோ என்னில் –

பகவத் சம்பந்தம் உண்டானால் இரண்டும் ஒக்குமோ என்னில் -என்று -இரண்டும் -என்று
உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மங்களைச் சொல்லுகிறது –

——————————————–

சூரணை -211-

ஒவ்வாது –

ப்ருஷ்டாவானவன்  உத்க்ருஷ்டமாக நினைத்ததை அபக்ருஷ்டமாகவும்  அபக்ருஷ்டமாக நினைத்ததை உத்க்ருஷ்டமாகவும் திரு உள்ளம் பற்றி அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் -ஒவ்வாது -என்று –

————————————-

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-
பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

ஆபிஜாதி யாதிகளாலே -அஹங்கரித்து நசிக்கைக்கு உறுப்பு ஆகையாலே -அபக்ருஷ்டமாக இருக்கிற இத்தை -உத்க்ருஷ்டமாக நினைத்து -பிரஸ்னம் பண்ணிற்று -அதஸ்மின் தத் புத்தியாலே -என்னும் இடம் தோற்ற – உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் -என்கிறார் –

பிரசம்ச  சம்பாவனையாவது –உபாயாந்தரங்களில் அன்வயத்தாலே அநந்ய உபாயத்வம்
வதிகாரத்தின் நின்றும் நழுவதல் வருகைக்கு யோக்யமாய் இருக்கை –
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –என்றது -காலேஷ் வபிச சர்வேஷு -என்று தொடங்கி –
உபாயாந்தர அனுஷ்டானந்தத்துக்கு யோக்யங்கள் ஆகையாலே -பய ஹேதுக்கள்  ஆனவற்றைச் சொல்லி வருகிற அடைவிலே -அவை எல்லா வற்றிலும் பிரதானமாக -சரீரேச வர்த்ததே மே மகத் பயம் -என்று சொல்லுகிற படியே
ஸ்வரூப யாதாத்ம்ய வித்துகளாய்-உபாயாந்தர கந்த அசஹயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு இது இருக்க -இருக்க- என் செய்யத் தேடுகிறதோ -என்னும் பயத்தை விளைக்குமதாய் இருக்கும் என்ற படி–

——————————————–

இன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளிச் செய்கிறார் –

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நையம் பாவிக்க வேணும் –

அதுக்கு -என்று கீழ்ச் சொன்ன ஜென்மத்தை பராமர்சிக்கிறது – ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும் –என்றது-பாகவத அனுவர்த்த நாதிகளில் வந்தால் சேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு தகுதியான தாழ்ச்சி -பிறர் செய்கிறது கண்டு அனுகரித்து கற்க வேணும் என்ற படி –

—————————————-

ஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய தோஷ பாவத்தை அருளிச் செய்கிறார்-

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த
உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

ஆபிஜாத்யாதிகளால் -வரும் அகங்கார யோக்யதை இன்றிக்கே -சேஷத்வ அனுகூலமாய் இருக்கையாலே – உத்க்ருஷ்டமாய் இருக்கிற இத்தை அபக்ருஷ்டமாக நினைத்ததும் அதஸ்மிம்ஸ்தத் புத்தி என்னும் இடம் தோற்ற – அபக்ருஷ்டமாக பிரமித்த உத்க்ருஷ்ட ஜென்மம்-என்கிறார்-
இரண்டு தோஷமும் இல்லை -என்றது பிரமச சம்பாவனையாலே வரும் பய ஜனகத்வமும் –
ஸ்வரூப பிராப்தமான நைச்யம் பாவிக்க வேண்டுகையும் ஆகிற தோஷ த்வயமும் இல்லை என்ற படி-
——————————————

பிரசம்ச சம்பாவனை அன்றோ இல்லாதது -நைச்ய பாவனை இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -215-

நைசயம் ஜன்ம சித்தம்-

அதாவது பாகவத அனுவர்தனாதிகளுக்கு உறுப்பான தாழ்ச்சி பிறந்து உடைமையாய் இருக்கையாலே – பாவிக்க வேண்டாதே பள்ள மடையாய் இருக்கும் என்ற படி-

——————————————–

இவ் வர்த்தத்தை நிகமிக்கிறார்-

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

ஆகையால் -என்றது இப்படி அது ச தோஷமும் இது நிர் தோஷமும் ஆகையால் என்ற படி –
உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம் -என்றது – சேஷத்வ உசிதமாய் கொண்டு உத்க்ருஷ்டமாய் இருக்கிற இந்த  ஜன்மமே ததுநிசித ஜென்மத்தைப் பற்ற ஸ்ரேஷ்டம் என்ற படி

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் —-/198/199/200/201/202/203/204/205/206-

April 9, 2012

சூரணை -198

திரு சங்கு வை போலே கர்ம சண்டாளனாய் மார்வில் இட்ட யஞ்ஜோ  பவீதம் தானே வாராய் விடும் –198
இவ் அபசாரத்துக்கு பலம் தக்த படம் போலே -வெந்த புடவை போல் –,நஷ்ட கல்பனாய் இருந்து ,தேக அவசானத்திலே உரு
மாய்ந்து  போம் அளவே அல்ல ,–இவ் அபசாரம் பண்ணின போதே ,கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் திரி சங்கு வை போலே என்று தொடங்கி

அதாவது இஷ்வாகு வம்சனாய் இருக்கிற திரி சங்கு என்னும் ராஜா
தன் குல குருவாகிய வசிஷ்ட மக ரிஷியை -ச சரீர சொர்க்க ஆப்த அர்த்தமாக என்னை
யஜிப்பிக்க  வேணும் என்று பிரார்த்திக்க -மகர்ஷி -அது நமக்கு அச்யம் என்ன –
அணு நின்று தத்புத்ரர்கள் தபஸ் செய்யும் இடம் சென்று இச் செய்தியை சொல்லி அவர்கள் மிகவும் அனுவர்தித்து
நீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் என்று நிர்பந்திக்க
-நீ துர் புத்தியாய் இருந்தாய் மக ரிஷி ஆகாது என்பதை எங்களால் செய்ய புகுமோ என்ன –
நீ சண்டாளன் ஆக கடவை என்று சபிக்க -அந்தணரை நிந்தித்தால் சண்டாளன் ஆகிறான்

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதன் ஆகுகைக்கு யோக்யதை உண்டு
சூரணை -199
அதுவும் இல்லை இவனுக்கு –199
பகவத் கடாஷம் அடியாக அவன் பெறலாம் அதுவும் இல்லை இவனுக்கு
சூரணை -200
ஆரூட பதிதன் ஆகையாலே –200
மேலே ஏறி கீழே விழுந்தவன் ஆகிறான்
பத்ம கோடி சதேனாபி  ந ஷமாமி-நூறு கோடி பத்மத்தால் அர்ச்சித்தாலும் மன்னிக்க மாட்டேன்-வராக புராணம்
சூரணை -201
இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –201
பாகவத அபசாரத்துக்கு அதிகாரி நியமனம் இல்லை
சூரணை -202
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் எழும் என்கையாலே–202
–தொண்டர் அடி பொடி ஆழ்வார் -திரு மாலை -43
சூரணை-203
இவ்விடத்திலே வைநதேய விருத்தாந்தையும்
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த
வார்த்தையும் ஸ்மரிப்பது-
இவ்வர்த்த விஷயமாக இரண்டு ஐதிகத்தை ஸ்மரிப்பிக்கிறார் —
வைநேத விருத்தாந்தம் ஆவது -விஸ்வாமித்திரன் பக்கலிலே விதைகள் எல்லாம் அதிகரித்த
காலவன் என்கிற பிராமணன்-குறு தஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ் வித்யைகள் நிலை நில்லாது
என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தஷிணையாக தரத் தக்கது ஏது -என்று கேட்க –
நீ நமக்கு ஒன்றும் செய்ய வேண்டா -நன் உன்னுடைய சுஸ்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதர் ஆனோம் -இனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று
பலகால் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே -சர்வதா என் பக்கலிலே தஷிணை
வாங்கி கொள்ள வேணும் -என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே –
கிஞ்சிதாகத ச்ம்ரம்போ விச்வமித்ரோ ப்ரவீதிதம் ஏக தச்ச்யாம கர்ணா நாம்
சதான் அஷ்ட ஒவ்து தேஹி மே–ஹயானாம் சத்திர சுப்ராணம் கச்ச காலவ  மாசிரம்-என்று –
அவன் குபிதனாய் -இவனை பார்த்து -உடம்பு எங்கும் சத்திர மண்டலம் போல் வெளுத்து
ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா -என்ன –
இத்தை கேட்டு மகா வ்யாகுலனாய் -இதுக்கு இனி செய்வது என் -என்று பகு முகமாக விசாரித்து –
சர்வ அபேஷித பிரதனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் -என்று உத்யோக்கிகிற அளவில் –
முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற -பெரிய திருவடி நாயனார் -இவனுக்கு வந்து
முன் நிற்க -அவரை ஸ்தோத்ரம் பண்ணி இதுக்கு செய்ய அடுப்பது என் -என்று கேட்க -அவர் நான் உன்னை இப் பூமி எங்கும் கொண்டு போகிறேன் -இருவரும்
கூட ஆராய்வோம் வா என்று -என்று இவனை இடுக்கி கொண்டு திரிகிற அளவிலே –
இளைப்பானவாறே -இங்கு இளைப்பாற போக கடவோம் என்று மேல் சமுத்ரத்தில்
ருஷபம் என்கிற பர்வதத்தின் மேல் வாசியா நிற்பா ளாய்  -ஞானாதிகையாய் இருக்கிற
சாண்டிலி என்கிற பாகவதையை சென்று கண்டு -அபிவாதநாதிகள் பண்ண –
அவள் அத்யாதரத்தொடே மிகவும் சத்கரிக்க -அநந்தரம்-விஸ்ரந்தராய் சயிக்கிற அளவிலே
இப்படி விலஷனையாய் இருக்கிற இவள் ஒரு விலஷன தேசங்களிலே வசிக்க பெற்றது இல்லையே என்று
பெரிய திருவடி நாயனார் விசாரித்து -இவளை இங்கு நின்றும் நாமொரு திவ்ய தேசங்களிலே
கொண்டு போய் வைக்க கடவோம் -என்று நினைத்து கொண்டு கிடக்க செய்தே -அந்த பாகவதை இருந்த தேசத்தை குறைய நினைந்த இவ் அபசாரத்தாலே
சிறகுகளும் உதிர்ந்து நிச்செஷ்டராய் விட -இத்தைகூட போன பிராமணன் கண்டு –
கிந்து தேமனஸா த்யாத மாசுபம் பததாம்வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ
வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று ஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தாலே தீங்கு
நினைத்தது உண்டோ -தேவரீருக்கு அல்பமும் வ்யபிசாரம் வருகைக்கு
யோக்யதை இல்லையே என்ன -உண்டாய்த்து காண் என்று -தாம் அந்த பாகவதை விஷயத்தில்
நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளி செய்து -அநந்தரம் -இத்தை பொறுக்க வேணும் என்று
அவளை சென்று அனுவர்தித்து -அவள் அனுக்ரகத்தாலே அவ்வபசாரம் நீங்கி முன்பு போலே
ஆனார் என்கிறது –
இது தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-நாரதாதி மக ரிஷிகள் பலரும்
வந்து இருக்கிற அளவில் கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை பின் செல்லுகைக்கு உறுப்பாக
த்ருத்ராஷ்ட்ரனை குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்தில் -ஸ்ரீ நாரத பகவான்
அனுக்ரகிததாக -உத்தியோக பர்வதத்திலே -உக்தம் ஆகையாலே -வேதாந்தோ உப  ப்ரக்மன சித்தம் இறே–
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை யானது –
பிழை பிள்ளை ஆழ்வானை அங்கீகரித்து -நாளிலே -இவர் ஆபிஜாத்யாதிகளாலே
யுத்க்ருஷ்டர் ஆகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக வர்த்தித்து கொண்டு
போகிறபடியை கண்டு -இவர்க்கு இப் பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள்
எல்லாவற்றையும் -கீழ் படுத்தி தான் மேலாய் -விநாச பர்யந்தமாக்கி விடும் -அதுக்கு வேலி இட்டு வைக்க
வேணும் என்று திரு உள்ளம் பற்றி -ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவில் -இவரைப் பார்த்து –
எல்லாரும் தாநம் பண்ணுகிற களத்தில் -நீரும் நமக்கு ஒரு தாநம் பண்ண மாட்டீரோ -என்ன –
அடியேன் எத்தை தாநம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே -என்ன –
அர்த்த ஸ்திதி அன்றோ வது அவ்வளவு போராது-கரண த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல்
வர்த்திக கடவன் -என்று நம்கையில் உதகம் பண்ணி தர வேணும் -என்ன -அப்படியே ஐவரும்
உதகம் பண்ணி கொடுத்த அநந்தரம் -ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து
நாம் இனி முடிந்தோம் -என்று பயப்பட்டு மூடி கொண்டு தன திரு மாளிகையிலே கண் வளர
இவர்முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திருமாளிகை எழுந்து அருளி –
ஏன்தான் முசிப்பென்-என்று வினவி அருள -தாம் மனசால் நினைத்ததை விண்ணப்பம்  செய்து –
கரணத்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி இத் தேகத்தோடே வர்திகை அரிதா இரா நின்றது –
என் செய்ய கடவேன் -என்று திருவடிகளை கட்டி கொண்டு கிடந்தது கிலேசிக்க-
இத்தனை அனுதாபம் இவர்க்கு உண்டாக பெற்றோமே -என்று உகந்து அருளி –
மனசாலே நினைத்ததுக்கு அனுதாபம் உண்டாகவே ஈஸ்வரன் ஷமித்து அருளும் –
பிரத்யஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலிய கூடாது -ஆனா பின்பு
அவை இரண்டும் உனக்கு கழித்து தந்தோம் -இனி வாக்கு ஒன்றையும் நன்றாக
குறிக் கொண்டு வர்த்தித்து போரும் -என்று அருளி செய்தது –
சூரணை -204
ஞானம் அனுஷ்டானங்களை ஒழிந்தாலும்
பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே
அமைகிறாப் போல்
அவை உண்டானாலும்
இழவுக்கு அவர்கள் பக்கல்
அபசாரமே போரும் —
பகவல் லாப ஹேதுவான ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
பரிபூர்ணமாக  உடையான் ஒருவனுக்கு -பாகவத அபசாரம் உண்டாய்த்து ஆகிலும் –
பகவான் அதுக்கு இலகுவான ஒரு தண்டங்களை பண்ணி கூட்டிக் கொண்டு விடானோ –
அவை இரண்டும் அசத்சமமாய்-அபசாரமே பிரபலமாய் எம்பெருமானை இழந்தே
போய் விடும் என்னலாமோ என்ன -அருளி செய்கிறார் –
அதாவது –
உபாப்யமேவ பஷாப்யா மாகாசே பஷிணாம் கதி
ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும் –
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணோடு  உங்கட்கு எளிது -என்றும் சொல்லுகிறபடி
பகவல் லாப ஹேதுவான தத்வ ஞானமும் தத் அநுரூப அனுஷ்டாநாமும் இன்றிக்கே ஒழிந்தாலும் –
பகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீவா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரையா –
தேனைவதே ப்ராயச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும் –
யம் யம் சப்ருசதி பாணிப்யாம் யம்யம் பச்யதி சஷுஷா ஸ்தாவரான்யபி
முச்யந்தே கிம் புனர் பாந்தவ ஜனா -என்றும் சொல்லுகிறபடியே –
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனமாகிறாப் போலே –
அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற உண்டாய்தாலும்
பகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான
அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாய்
போரும் என்றபடி –
சூரணை -205
இதில் ஜன்ம விருத்தாதி
நியமம் இல்லை –
இதில் ஜன்ம விருத்தாதி நியமம் உண்டோ என்னும் மா கான்க்ஷையில்
அருளி செய்கிறார்
இதில்-என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு
அவர்கள் பக்கல் அபசாரமே போரும் -என்று சொன்ன இவை இரண்டிலும்
என்றபடி –
ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான
பாகவதர்களோடு உண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேதுவாவது-அவற்றால்
அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற
நியமும் ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில்
பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது -அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள்
திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற
நியமம் இல்லை -என்றபடி
சூரணை -206
இவ் அர்த்தம் கைசிக விருத்தாந்ததிலும் -உபரிசர விருத்தாந்த்திலும் காணலாம் –
அதாவது சரக குலோத்பவனான சோமசர்மா வாகிற பிராமணன் –யாகத்தை செய்வதாக உபக்ரமித்து –
யதாக்ரமம் அனுஷ்டியாமல் -அது சமாப்பிபதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே –
ப்ரக்ம ராசஷனாய் பிறந்து திரியா நிற்க –
மத் பக்தம்  ச்வபசம் வாபி-என்கிறபடியே -ஜன்ம சித்தமான நைச்யத்தை உடையராய்
 -பகவத் பக்தியே நிரூபகமாய்  இருப்பார் ஒரு பாகவதர் -உத்தான ஏகாதசியின் அன்று
ராத்திரி சித்தாஸ்ரமமான திரு குறும் குடியிலே -நம்பியை பாடி பறை கொள்வதாக –
வீணா பாணியாய் நின்று போகா நிற்க செய்தே -அவரை பஷிப்பதாக வந்து அடர்க்க –
அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான -அநேக சபதங்களை பண்ணி கொடுத்து -தத் அனுமதி
கொண்டு போய் -யதா மனோ ரதம் சேவித்து ஹிருஷ்டராய் -அந்த ப்ரகம ராஷசன் நிற்கிற இடத்திலே –
மீளவும் விரைந்து வந்து -யதேஷ்டம் இனி  நீ என் சரீரத்தை புஜி -என்ன – அவன்
அவருடைய சத்யத்வாதித்வாதி வைபவத்தை கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தை தா –
நானுன்னை பிராணனோடு போக விடும்படி  என்ன -அவர் அதர்க்கு இசையாது ஒழிய –
அர்த்த ராத்ரத்தில்  பலம் -ஏக யாமத்தில் பலம் -என்றார் போலே சொல்லி கொண்டு வந்த அளவிலும்-
நான் அது செய்வது இல்லை-முன்பு நீ சொன்னபடிபஷிக்கும் அத்தனை-என்று ஒரு நிலை நின்ற படியாலே –
த்வம் வை கீதபிரபாவேன நிஸ்தாரயிது   மர்ஹசி
ஏவமுக்த்வாது சண்டாளம்  ராஷசத் சரணம் கத -என்கிறபடியே –
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே -என்னை பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேணும் –
என்று சரணம் புகுர -அந்த பாகவதர் -யன்மயா பச்சிமம்  கீதம் ஸ்வரம் கைசிகமுத்தமம் –
இத்யாதிபடியே -தான் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தை கொடுத்து –
கர்ம தோஷத்தால் வந்த ராஷச வேஷத்தை கழித்து -முன்பு போலே ப்ரக்மனனாய் –
அதுக்கும் மேலே பாகவதனுமாய் -உஜ்ஜீவிக்கும் படி -பண்ணினார்
என்கிற கைசிக விருத்தாந்தத்திலே –
ஜன்மாதிகளாலான உத்க்ருஷ்ட ரான பாகவதர்கள் ஓட்டை சம்பந்தமே உஜ்ஜீவன
ஹேது ஆவது —
அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் ஓட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேது வாகாது
என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் .
ருஷிகளும் தேவர்களும் தம் பக்கலில் தர்ம சந்தேகம் கேட்கும் படி வித்யாதிகனுமாய் –
ஸ்வ வர்ண ஆஸ்ரம விருத்தி மாத்ரம் அன்றிக்கே -சாத்வ  தந்திர  நிஷ்ணாதனாய் –
பகவத் ஆராதன தத் பரனாய்  கொண்டு போருகையாலே -வந்த விருத்தாதிகனுமாய் —
ஸ்வ தபோ பலத்தாலே -ஸ்வாகன பரிவாரானாயனாய் கொண்டு -அந்தரிஷா சரனாய் திரியும் –
உபரி சரவசு என்கிற -மகா ராஜாவானவன் –
யாகார்தமான பசு நிமித்தமாக ருஷிகளும் தேவர்களும் தங்களில் விவாதம்
பண்ணுகிற அளவில் –
மார்க்காகதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம்தேசம் ப்ராப்தவான் வஸூ
அந்தரிஷா சரஸ் ஸ்ரீ மான் சமகர பலவாகன  தம் த்ருஷ்ட்வா
சஹாசாயாந்தம் வஸூம் தேத்வந்தரிஷா  கம் வூசுர் த்விஜாதயோ
தேவா ஏஷச் சேத்யசி சம்சயம்  -என்று ஆகாசத்திலே போகா நின்ற இவனை கண்டு –
இவன் நம்முடைய சம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு -இவனை சென்று கிட்டி

செய்ய அடுப்பது ஏது என்று கேட்க -அவன்-
உம் தம்முடைய மதங்களை சொல்லும் கோள் -என்ன –
தான்யைர் யஷ்டவ்யமித் ஏஷ-பசேஷா ஸ்மாகம் நராதிப
தேவதானாம் ஹி பசுபி பாஷோ ராஜன் வதச்வன -என்று
தான்யங்களாலே யஜிக்க படும் என்று எங்களுக்கு பஷம்–
பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பஷம் –
நாங்கள் செய்யுமது என் ? சொல் -என்று ருஷிகள் கேட்க –
தேவாநாந்து மதம் ச்ருத்வா வசுனா பஷ சம்ஸ்ரயாத்
சாகாநாஜேன யஷ்டவ்யமேவ முக்தம் வசஸ்  ததா -என்கிறபடியே –
அவன் தேவர்கள் அளவில் பஷ பாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் -என்ன –
குபிதாஸ் தே ததா சர்வே முநயஸ் சூர்ய வர்ச்சச
உஊசூர் வஸும் விமானச்தும் தேவ பஷார்த்த வாதிநிம்
சூர பாஷோ   க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத
அத்யப்ரப்ருதி தே ராஜன் ஆகாசே விஹதா கதி
அச்மச்சாபா பிகாதேன மஹீம் பித்வா பிரவேஷயசி
விருத்தம் வேத சூத்ரானாம் உக்தும் யதிபவேன் ந்ருப
வயம் விருத்த வாசனா யதி ததா பதாமஹே-என்று –
ருஷிகள் எல்லாம் குபிதராய் ,தேவ பஷார்த்த வாதியாய் –
விமானச்தனாய் இருக்கிற இவனை பார்த்து
-நீ சொன்னது வேத சூத்தரங்களுக்கு விருத்தம் ஆகில் –    தேவ பஷா
பாதியாய் வார்த்தை சொன்ன நீ -த்யவ்வில் நின்றும்  அதர்பதி யாய் – –
இப்போது தொடங்கி உன்னுடைய வாகாச கமனமும் மாறி பாதாளத்தில் விழ கடவை —
நாங்கள் தாம் விருத்த வசனம் சொன்னோம் ஆகில் அப்படியே பாதாளத்தில் விழ கடவோம் –
என்று சொல்லி சபிக்க –
ததஸ் தஸ்மின் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததா அதோவை சம்பபூவாக
பூமேர் விவரகோ ந்ருப -என்கிறபடி அப்பொழுதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற
உபரிசரவசூ-விருத்தாந்தத்தில் –
ருஷிகளும் தர்ம சந்தேககங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளால் அவர்களில் உத்க்ருஷ்டன் ஆனவன்
அவர்கள் திறத்தில் அபசாரத்தாலே -யத பதித்தமை  காண்கையாலே –
ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே
இழவுக்கு உடலாவது -அவற்றால் உத்க்ருஷ்டர் ஆனவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில்
பண்ணும் அபசாரம் இழவுக்கு    உடலாகாது என்கிற நியாயம் இல்லை என்னுமது
காணலாம் என்கை —
ஜன்மாதிக்யம் ருஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆத்யாதிக்யம் இவனுக்கு
உண்டாகையாலே -அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்ல  குறை இல்லை –
ஜன்மமும் ஞானாதிகளும் ஒரு தலை ஆனால் ஞானாதிகள் பிரபலம் களாய்
இறே இருப்பது —

கைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராக புராணத்திலே -ஸ்ரீ பூமி பிராட்டிக்கு
ஸ்ரீ வராக நாயனார் அருளி செய்தது ஆகையாலும் –
உபரிசரவசு விருத்தாந்தம் பஞ்சம வேதமான மகா பாரதத்திலே
மோஷ தர்மத்திலே தர்ம புத்ரருக்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப் பட்டது ஆகையாலும்
இவை தான் ஆப்த பிரமாண சித்தம் இறே
பிள்ளை லோகாச்சார்யர் திரு வடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-183/184/185/186/187/188/189/190/191/192/193/194/195/196/197–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 9, 2012

ஆக அகங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்தார் கீழ்–விஷயங்களின் கொடுமையை அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே

லோக விருத்தமுமாய் நரக ஹேதுவுமுமாய் இருந்து உள்ள நிஹித்த விஷயம் பிரதி கூல விஷயம்-தத் ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் என்றது -பிரதிகூலமே என்று தோற்ற நின்று  ஸாஸ்த்ர நிஹிதம் என்று பிரஸித்தமாய் -பிராணனையும் ஸ்வரூபத்தையும் முடிக்கும்-
அனுகூல விஷயம் லோக விருத்தமும் அன்றிக்கே நரக ஹேதுவும் இன்றிக்கே விஸிஷ்ட வேஷ அனுகூலமாய் இருக்கும் விஹித விஷயம் -தத் (அனுகூல விஷய )ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே அநந்ய போகத் ரூபமான ஸ்வரூபத்தை அழிக்கும்–
விஷம் உண்டால் தான் முடிக்கும்– இதுவோ நினைத்தாலே முடிக்கும் -விஷயம் அதி க்ரூரம்

———————————————–

இப்படி விநாசகரமான விஷயங்களில் பிரவணனாய் ஸூகிக்க நினைக்குமது -விபரீத ஞான கார்யம் என்னுமத்தை பிரமாண பிரசித்த த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார் –

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பரவண னாய் ஸூகிக்க நினைக்கை —

அதாவது -ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூக சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூகம் நர ந்ருத்யத பணி நச்சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும் சொல்லுகிறபடியே தண்ணீருக்கு விடாய்ப்பட்டவன் விபரீத ஞானத்தால் தாப ஹேதுவான அக்னி ஜ்வாலையை விழுங்கித் தன் விடாய் தீர நிலைக்குமா போலேயும்
ஆதித்ய கிரணங்களாலே அதி மாத்ர தப்தனானவன் அந்த தாபத்தை ஆற்றுகைக்காக நிழல் என்கிற மாத்ரத்தைக் கொண்டு ஆகாம்ய அநர்த்தத்தை நிரூபியாதே
அத்யந்த குபிதமாய் படத்தை விரித்து நின்று ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும் இருப்பது ஓன்று –
பாதக விஷயங்களை ஸூகாவஹமாக பிரமித்து அவற்றில் பிரவணனாய்  அவற்றை அனுபவித்து ஸூகிக்க நினைக்குமது என்றபடி –

—————————————–

விஷய ஸ்பர்சம் ஸ்வரூப நாஸகம் -விஷய ப்ரவணனாய் ஸூகிக்க நினைக்குமது விபரீத ஞான கார்யம் என்று இறே கீழ்ச் சொல்லி நின்றது –
இவ் விஷய ஸ்பர்சம் வேண்டா -பகவத் குணங்களில் நைந்து இருக்குமவன் இவற்றை காணவே முடியும்-என்கிறார் -மேல் –

சூரணை -185–
அசுணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

அசுணமா என்கிற பஷி அதி மதுரமான கான ஸ்ரவணத்தாலே
நெஞ்சு நீர் பண்டம் ஆகி இளகின தசையிலே அதி கடினமான பறையை அடிக்கக் கேட்டு
பட்டு கிடக்கும் போல் ஆய்த்து
பகவத் அனுபவம் ஒன்றிலுமே தத் பரனாய்-தத் குண  ரசத்திலே நைந்து ,
இதர விஷய பேர் கேட்கிலும் மாய்ந்து போம் படி ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன்
பகவத் ஏக போகத்வ ரூப  ஸ்வரூப நாசகங்களான விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும் படி என்கை

———————————————-

ஆப்த வசனத்தாலே இந்த அர்த்தம் இசைவிகிறார்-

சூரணை -186–

காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—

அல்ப ரசங்களாய் அநேக விதங்களாய் இருக்கிற துர் விஷயங்களைக் காட்டி
அவற்றுக்குப் பொருந்தாத படியாய் அவற்றுக்கு பாங்கான நிலத்திலே இருக்கைக்கு ஈடான
பாபத்தைப் பண்ணின என்னை முடிக்கப் பார்கிறோயோ  -என்கிறார் ஆழ்வார்

——————————————-

ஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –
இத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-187–

அஜ்ஞனான விஷய பிரவணன்
கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்
ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –

அஞ்ஞனான விஷய பிரவணன் ஆகிறான் -விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்-
ஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –
கேவல நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்ம பர லோக சேதன ஈஸ்வராதிகளுக்கு
பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாண்ய புத்தி ஒன்றும் இன்றிக்கே –
ஸ்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –
ஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-விஷயங்களினுடைய தோஷ
துஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை
விரும்பி மேல் விழுகிறவன் –
ஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று இசைகையாலே -ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-
அந்த சாஸ்திர மரியாதையில்  (ஸாஸ்த்ர போதித ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளில் )அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக சமனாய் இருக்கும் அவன் –

————————————————————-

த்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை
ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

அதாவது –
சாஸ்த்ரத்தை இல்லை  என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-
சாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –
விதி நிஷேத வஸ்யனாம் படி திருத்தலாம் –
சாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும்
அறிந்து வைத்து -பாப பயம் இன்றியே -நாஸ்திகவத் ஸ்வைரம் சஞ்சரிக்கிறவனை
சொல்லி  அறிவிக்கத் தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும்
திருத்த ஒண்ணாது என்கை –
இத்தால் அஞ்ஞனான விஷய பிரவணனை -விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே
விரக்தனாம் படி திருத்தலாம் -ஞானவானான விஷய பிரவணனை -விஷய தோஷாதிகளை
வ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே -தத் உபதேசத்தால்
ஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-
அஜ்ஞ்ஞஸ் ஸூகமாராத்யஸ் ஸூக தர மாராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவதுர் விதத்தம் பிரஹ்மாபி நரம்  நரஞ்சயதி -என்னக் கடவது இறே-
ஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து –

————————————

தன்னைத் தானே -சூரணை -180 – என்ற வாக்யத்தின் ஸ்வரூப நாசகங்களாகச் சொன்ன
அஹங்காரத்தின் உடையவும் -விஷயங்களின் உடையவும் க்ரௌர்யத்தை தனித் தனியே
அருளிச் செய்தார் கீழ் -உபயத்துக்கும் உள்ளதொரு க்ரௌர்ய விசேஷத்தை தந்த்ரேனே( சேரப் பிடித்து ஒரே வாக்கியமாக ) அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

அதாவது –
உக்த தோஷ யுக்தமான இவ் வ்ஹங்காரமும் விஷய ப்ராவண்யமும் ஆகிய இரண்டும்
தானான ஆகாரத்திலே நின்று நசிப்பிக்கும் அளவு அன்றிக்கே –
பாகவத அபசாரம் ஆகிற மஹா அனர்த்தத்தையும் விளைத்து -ஸ்வரூப நாசத்தையும் பண்ணும் என்கை-
ஸ்வரூபேண என்றது -ஸ்வேன ரூபேண என்றபடி –
அஹங்காராதிகளிலே ப்ரவணனானால் உள்ள அளவு அன்று இறே
பாகவத அபசாரம் பண்ணினால் உள்ள பகவத் நிக்ரஹம்

—————————————

ஆனால் பாகவத விரோதம் விளைந்த போதே ஸ்வரூப நாசம் பிறக்கும் ஆகில்
பாகவத விரோதத்தை பண்ணிப் போரா நிற்கச் செய்தே -ஸ்வரூப அநு ரூபமான
நாம ரூபங்களை உடையராய்க் கொண்டு இருக்கிற படி எங்கனே என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்
தக்த படம் போலே –

அதாவது வைஷ்ணத்வ சிஹ்னமான தாஸ்ய நாமத்தையும் -தத் அநு குணமான ரூபத்தையும் உடையராய்க் கொண்டு -உள்ளொரு பசை இன்றிக்கே -அஹங்காராதி வஸ்யராய் பாகவதர்கள் திறத்தில் விரோதியைப் பண்ணிப் போருமவர்கள் -உருக்குலைய வெந்து இருக்கச் செய்தே உருவுடைத்துப் போலே தோற்று இருக்கும் தக்த படத்தோடு சத்ருசர் என்கை

————————————-

தக்த படத்தின் படி தன்னை தர்சிப்பிகிறார் மேல் -மடி என்று தொடங்கி-

சூரணை -191–

மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்து கிடக்கும் .காற்று அடித்தவாறே பறந்து போம் –

அதாவது தட்டி மடித்து இருக்கிற புடைவை யானது தட்டுருவ மெங்கும் வெந்து இருக்கச் செய்தே-உண்டையும் பாவும் முன்பு போலே ஒத்திருக்கும் ..ஒரு காற்று வந்து சிதறிடித்த வாறே-உருக் காண ஒண்ணாத படி பாறி பறந்து  போம் என்கை ..
அப்படியே அபசார அக்நி தக்தராய்-வைத்து நாம ரூபங்களோடு இருக்கிறவர்களும்-(திருமண் தாசர் அடையாளம் இருந்தாலும் )– பகவத் நிக்ரக விசேஷத்தாலே பாற அடி உண்டு   ,  உருமாய்ந்து போவார்கள் என்று கருத்து

————————————–

பாகவத அபசாரம் பண்ணினால் ஈஸ்வரன் அசஹமானாய் உசித தண்டம் பண்ணும் என்னும் அத்தை ஆப்த வசனத்தாலே அருளிச் செய்கிறார் —

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வார்-

அதாவது சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ,சர்வ சக்தியான சர்வேஸ்வரன் தன்னை- அழிய மாறி  இதர ,சஜாதீயனாய் ,அவதரித்ததும் ,கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபம் இத்யாதி அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகலாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் சகியாமையாலே என்று ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் என்கை –

—————————————

இந்த பாகவத அபசாரத்தின் உடைய க்ரவ்யத்தில் பகவத் யுக்தியை தர்சிப்பிகிறார் இத்தால்-

சூரணை -193–

அவமாந க்ரியா–

யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதா ஸ்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –ஆஸ்வேத்கம பர்வம் மகா பாரதம்-என்று அருளினான் இறே

——————————————-

இப்படிப் பட்ட பாகவத அபசாரத்தின் வைவித்யத்தை அருளிச் செய்கிறார் இத்தால்-

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

அநேக விதம் என்றது –ஜன்ம நிரூபணம் -ஞான நிரூபணம் -விருத்த நிரூபணம்-
ஆகார நிரூபணம்- அவயவ நிரூபணம் -பந்து நிரூபணம்- வாச நிரூபணம் இத்யாதிகளால்- பல படிப் பட்டு இருக்கும்

———————————————————

அவற்றில் வைத்து கொண்டு,ஜன்ம நிரூபணத்தின் உடைய க்ரைர்யத்தை அருளிச் செய்வதாக அத்தை உபாதானம் பண்ணுகிறார் இதில் –

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

ஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை
பகவதீயத்வ பிரயுக்தமான மஹாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை

———————————————–

இதன் உடைய க்ரைர்யம் தன்னை அருளி செய்கிறார் இத்தால்-

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

பாகவத ஜன்ம நிரூபணத்தை பராமர்சிகிறது –ஆஸ்ரிதர் உகந்த ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை
தனக்கு திருமேனியாகக் கொண்டு ,அதிலே அப்ராக்ருத திவ்ய விக்கிரகத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணி எழுந்து அருளி இருக்கும் வைபவத்தை அறியாதே ,நிகர்ஷ புத்தி பண்ணி ,விக்ரக உபாதான த்ரவ்யம் இன்னது அன்றோ என்று சிந்திக்கை–அதிலும் காட்டிலும் க்ரூரம் ஆகையாவது -அத்தைப் பற்றவும் சர்வேஸ்வரனுக்கு அத்யந்த  நிக்ரஹ ஹேது வாகை

—————————————

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

சூரணை -197–

அத்தை மாத்ரு யோனி பர்ஷை யோடு ஒக்கும் என்று சாஸ்திரம் சொல்லும் —

அர்ச்சாவதார உபாதான (சிந்தனம்) வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் -மாத்ரு யோனி பர்ஷாயஸ் துல்யம் ஆஹூர் மனீஷின-என்ன நின்றார் இறே –
இப்படி உபயத்தையும் மாத்ரு யோனி பரிஷா சமமாக சாஸ்திரம் சொல்லிற்றே ஆகிலும் அது அர்ச்சா அவதாரத்தில் உபாதான ஸ்ம்ருத்திக்கு நிதர்சனமாம் இத்தனை
வைஷ்ணவ உத்பத்தி அதிலும் குரூரம் என்று இவர் கருத்து
அந்நிய ஸ்திரீ யோனி வைலஷண்யா வைலக்ஷண்ய நிரூபண வாசனையாலே இத்தையும் அப்படி நிரூபிக்கை
இப்படி நிரூபித்தால், அதுக்கு எத்தனை பாபம் உண்டு–அர்ச்சா அவதார உபாதான சிந்தையிலும் அத்தனை பாபம் உண்டு என்ற படி..

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை -169/170/171/172/173/174/175/176/177/178/179/180/181/182–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 9, 2012

இன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்தில்- அவன் விருப்பத்தை-தர்சிப்பிக்கிறார் –

சூரணை -169–

பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

பரம ஆர்த்தன் ஆகிறான் –
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை -திருவிருத்தம் -1
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -திருவாய்மொழி -3-2-2 –
எங்கு இனி தலை பெய்வன் -திருவாய்மொழி -3-2-9 – – –
நாளேல் அறியேன் -திருவாய்மொழி -9 -8 -4 –
தரியேன் இனி -திருவாய்மொழி – 5- 8- 7-
கூவிக் கொள்ளும்  காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6 -9 -9 – என்று
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
பகவத் அனுபவத்தில் பெரு விடாயாலும் –
இதுக்கும் மேல் இல்லை என்னும்படி ஆர்த்தி விளைந்தவன் -ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திதிக்கு ஹேது- பிராரப்த  கர்மம் என்ன ஒண்ணாது இறே – சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதோடு விரோதிக்கையாலே –
ஆர்த்தாநாம் ஆஸூ பலதா சக்ருதேவ  க்ருதாஹ்யசவ் த்ருப்தாநாம் அபி ஜந்தூனாம் தேஹாந்தர  நிவாரிணீ-ஸ்ரீ பாஞ்சராத்ரம் -என்று இறே பிரபத்தி ஸ்வாபம் தான் இருப்பது –
ஆகையால் இவனுடைய  சரீர ஸ்திதுக்கு ஹேது -இன்னமும் சில நாள் இவனை  இச் சரீரத்தோடே வைத்து அனுபவிக்க வேணும் -என்கிற ஈஸ்வர இச்சை ஒழிய வேறு ஓன்று இல்லாமையாலே -கேவல பகவத் இச்சை இறே -என்கிறார்-
(வர்த்தமான சரீர) பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும் -பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

———————————————————————

இப்படி தன்  விஷயத்துக்கு விருப்பமான இவன் சரீரத்தை அவன் விரும்பும் பிரகாரம் அருளிச் செய்கிறார் மேல் -திருமால் இரும் சோலை மலை-என்று தொடங்கி –

சூரணை -170-

திருமால் இரும் சோலை மலையே -திரு வாய் மொழி – 10- 7- 8-
என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

அதாவது –
தெற்கு திரு மலையும் திரு பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் ஒக்க
விரும்பா நின்றான் –
ஸ்ரீ வைகுண்டத்தையும் வடக்கு திரு மலையையும் என் சரீரத்தையும் ஒக்க
விரும்பா நின்றான் -என்றாரிறே ஆழ்வார் –
இப்படி ஓரோர் அவயவங்களிலே இரண்டு இரண்டு திருப்பதியில் பண்ணும் விருப்பத்தை
பண்ணினான்  என்ற இது -எல்லா திருப்பதிகளிலும் பண்ணின விருப்பத்தை ஓரோர் அவயவங்களிலே பண்ணா நின்றான் என்னும் அதுக்கு உப லஷணம் –
ஆகையால்-அப் பாட்டில் சொல்லுகிறபடியே தனக்கு அபிமதமான திவ்ய தேசங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை -ஜ்ஞாநியான இவனுடைய சரீர ஏக தேசத்திலே
பண்ணும் என்கிறார் –

——————————————–

உகந்து அருளின தேசங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ் விஷயம்
ஒன்றிலுமே பண்ணும் என்றார் கீழ் -இவ் விஷயம் சித்தித்தால் உகந்து அருளின நிலங்களில் ஆதாரம் அவனுக்கு சங்குசிதமாம் என்னும் இடம் அருளிச் செய்கைக்காக -இரண்டு இடத்துக்கும் உண்டான வாசியை அருளி செய்கிறார்-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

உகந்து அருளின நிலங்களில் விரும்பி வர்திக்கிறது -உசித உபாயங்களாலே சேதனரை
அகப்படுத்திக் கொள்ளுகையாலே -அங்குத்தை வாசம் சாதனம் -என்கிறது –
இச் சேதனன் திருந்தி இவன் ஹ்ருதயத்தினுள்ளே தான் வசிக்கப் பெற்ற இது அங்கு நின்று பண்ணின கிருஷி பலம் ஆகையாலே -இங்குத்தை வாசம் சாத்யம் -என்கிறது –
நாகத்தணை குடந்தை -நான்முகன் திரு வந்தாதி – -36 –
மலை மேல் தான் நின்று -திரு வாய் மொழி -10 -4 -4 –
பனிக் கடலில் பள்ளி கோளை -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 -4 -9 –
இத்யாதிகளிலே இவற்றினுடைய சாதன சாத்யத்வங்கள் தோற்றா நின்றது இறே —

————————————————

இந்த சாதன சாத்யத்வ பிரயுக்தமான ஆதர தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம்
மட்டமாய் இருக்கும் –

அதாவது
தன் திரு உள்ளத்தில் புகுந்த பின்பு தனக்கு புறம்பு ஒன்றிலும் ஆதரம் இல்லை என்று தோற்றும்படி அவன் இதிலே அத்ய ஆதரத்தைப் பண்ணி -நித்ய வாசம் பண்ணுகையாலே –
திரு மலையும் -தன் சந்நிதானத்தாலே கோஷிக்கிற திரு பாற் கடலும் – –
ஒருத்தருக்கும் எட்டாத பரம பதமான தேசமும் புல்லிய வாய்த்தினவோ என்றார் இறே ஆழ்வார் –
இப்படியே சாத்தியமான இச் சேதன ஹ்ருதயம் சித்தித்தால் -இதுக்கு சாதனமாக முன்பு விரும்பிப் போந்த திவ்ய தேசங்களில் ஆதரம் சங்குசிதமாய் இருக்கும் என்கை –
சாத்யம் கை புகுரும் அளவும் இறே சாதனத்தில் ஆதரம் மிக்கு இருப்பது –

——————————————–

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

அதாவது-
ஸ்ரீ பூதத்தார் தம்மை பெருகைக்கு உறுப்பாக முன்பு தான் விரும்பின திவ்ய தேசங்களில் முன்புத்தை ஆதரம் இன்றிக்கே -தன் திரு உள்ளத்திலே அத்ய ஆதரத்தை பண்ணிச் செல்லுகிற படியை கண்டு -அவ்வோ திவ்ய தேசங்களில் கை விடப் புகுகிறானோ என்று அதி சங்கை பண்ணி – என் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு பால ஆலயமான திரு பாற் கடலை கை விடாது ஒழிய வேணும் என்றார் இறே –
ஆகையால்-இப்படி இவன் பிரார்த்திக்க வேண்டும்படி ஆய்த்து அவனுக்கு அவற்றில் ஆதரம்
மட்டமாம் படி -என்கை-

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்- உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

———————————————–

இப்படி இவன் அர்த்திததாலும் -சாத்யம் சித்தித்த பின்பு அவனுக்கு அவை
அபிமதங்களாய்  இருக்குமோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

பிராப்ய ப்ரீதி விஷயத்வம் ஆவது -தனக்கு பிராப்ய பூதனான இச் சேதனனுடைய
உகப்புக்கு விஷயமாய் இருக்கை-
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை -திரு குறும் தாண்டகம் – 19-
என்று மண்டி இறே இவன் இருப்பது –
க்ருதஜ்ஜதையாவது -இவ்வோ தேச வாசத்தால் அன்றோ நாம் இவனைப் பெற்றது என்று
அத்தேசம் தமக்கு பண்ணின உபகாரத்தை அநு சந்திக்கை –
இவை இரண்டாலும் சாத்தியமான இச் சேதனன் கை புகுந்து இருக்கச் செய்தேயும்
அவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களாய்  இருக்கும் -என்கை-

(ஆக -11-சூரணை களாலே அருளிச் செய்தவற்றை தொகுத்து அருளிச் செய்கிறார்
குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும் –164-பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை  பண்ணி- தத் உபபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —165-
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் யாதரத்தை பண்ணும் படியையும் -167-
ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும்–168-
(மண் பற்று -ரஹஸ்ய த்ரயம் விளைந்த மண் -என்று மா முனிகள் அபிமதமாய் விடாமல் இருந்தால் போலேயும் –)பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,—169-
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் —-170-
சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்-172-
அதின் எல்லையையும்-173- ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வ சாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும் ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும்–174- அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————–

இப்படி தோஷ நிவ்ருத்தி பர அனுபவத்துக்கு விலக்கு என்னும் இடம் ஸூஸ் ஸ்பஷ்டமாம் படியான ஹேதுக்கள்– பலவற்றையும் அருளிச் செய்கையாலே அத்தை சித்திப்பித்தராய்–அது தன்னை திருஷ்டாந்தம் ஆக்கி-சிம்ஹா அவலோகன நியாயத்தாலே கீழ் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஆத்ம குணத்தின் உடைய பர அனுபவ விரோதித்வத்தை  ஸ்தீரிக்கிறார்—ஆகையாலே என்று தொடங்கி

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே
ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

ஆகையாலே என்று கீழே சித்திப்பித்த அர்த்தத்தை அனுவதிக்கிறார் –தோஷ நிவ்ருத்தி -போலே என்றது-தோஷம் கழிகை  ஸ்வரூப பவ்ஜ்வல்யத்துக்கு உறுப்பாய் இருக்கச் செய்தேயும் தோஷத்தையே போக்யமாய் விரும்புகிற பிரணயியான   அவனுக்கு அபிமதம் ஆகையாலே யாதொரு படி பர அனுபவத்துக்கு விரோதி ஆகிறது–அது போலே என்ற படி ..ஆந்தர குணம் -என்கிறது (கேவல)சேஷத்வ பாரதந்த்ர்யங்களை–இவற்றை ஆந்திர குணம் என்கிறது-ஞான ஆனந்தங்களிலும் காட்டில் ஆத்மாவுக்கு அந்தரங்கம் ஆகையாலே–
இதன் உடைய  பர அனுபவ விரோதி பிரகாரம்  கீழ்ச் சொல்லப் பட்டது இறே–இவ் விடத்திலும் ஆந்தர குணம் என்றது பார தந்த்ர்யம் ஒன்றையுமாம்-

——————————————–

இப்படி சொல்லுகைக்கு தோஷ நிவ்ருத்தியில் வரும் தோஷம் ஏது என்ன ;வேறு ஒரு தோஷமும் வேண்டா- இது தானே தோஷமாம் என்கிறார் –தோஷ இத்யாதியால்-

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

அதாவது காமிநியானவள் தன் உடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அந்வயிக்க இச்சிக்குமா போலே ஸ்வத பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷத்தை கழித்து ஸ்வ சேஷிக்கு  போக்யமாக விநியோகப் பட வேணும் என்ற ஸ்வ நிர்பந்தத்தாலே இவன் பண்ணுவித்துக் கொள்ளுகிற சேஷ நிவ்ருத்தி தானே-காமிநி உடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே தோஷமே அபிமதமாய் இத்தோடே தன்னை புஜிக்க
ஆதரிக்கிற அவன் உடைய போகத்துக்கு விலக்கு ஆகையாலே தோஷம் ஆம் இறே என்கை–அவனுக்கு அநிஷ்டம் ஆவது இறே தோஷம் ஆவது –இறே -என்று பிரசித்தி தோன்ற அருளிச் செய்தது கீழ் உபாதித்ததை எல்லாம் நினைத்து-

——————————————————

ஆக நன்மை தானே தீமை ஆயிற்று என்றும் -தனக்குத் தான் தேடும் நன்மை தீமை யோபாதி விலக்காய் இருக்கும் -என்றும்- தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே -என்றும் –தான் தனக்குத் தேடும் நன்மை ஹேயம் என்னும் இடம் சொல்லுகையாலே அவன் தேடும் நன்மையே உபாயதேயம் என்னும் இடம் பலித்தது இறே —
இப்படித் தான் தனக்குத் தேடும் நன்மை ஹேயம் அவன் தேடும் நன்மை உபாதேயம் என்னும் இடத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிகிறார்  மேல்-தன்னால் -என்று தொடங்கி

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை

தன்னால் வரும் நன்மை யாவது ஸ்வ யத்னத்தாலே தான் தனக்கு உண்டாக்கிக் கொள்ளும் நன்மை -விலைப் பால்-போலே -ஔபாதிகமாய் -விரசமுமாய் -அபிராப்தமுமாய் இருக்கும்
அவனால் வரும் நன்மை யாவது -நிருபாதுக   ஸ்வாமியான அவன் தானே இவனுக்கு இது வேணும் என்று உண்டாக்கும் நன்மை முலைப் பால் போலே என்றது-நிருபாதிகமாய்- சரசமுமாய் – பிராப்தமுமாய் இருக்கும் என்கை-

———————————————–

இவ்வளவு அன்றிக்கே -எம்பெருமானை ஒழிய தான் தனக்கு நன்மை தேட இழிந்தால்
ஸ்வ விநாசமே பலிக்கும் என்னும் இடத்தை சநிதர்சனமாக-அருளி செய்கிறார் –

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே
காட்டிக் கொடுக்குமா போலே –
இருப்பது ஓன்று –

அதாவது –
பிராப்தனுமாய் ஆப்தனுமான அவன் இவனுக்கு நன்மை தேடுமது ஒழிய -அதற்க்கு எதிர்த் தட்டான தான் தனக்கு உஜ்ஜீவன அர்த்தமான நன்மை சம்பாதிகையாவது -ஸ்வ ரக்ஷண உபயோகியான ஞான சக்திகள் ஒன்றும் இன்றிகே -ஸ்வ மாத்ரதிகள்  உணர்ந்து நோக்க வேண்டும்படியான ஸ்த நந்தய பிரஜையை -ரஷகரான மாதா பிதாக்கள் கையில் நின்றும் வலிய வாங்கி – கொலைக்குக் கூசாதே உயிர்க் கொலையாகக் கொன்று மாம்சங்களோடு கலசி விற்று விடும் காதுகனான ஆட்டு வாணியன் கையிலே -இத்தை நோக்கிக் கொள் என்று -காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று என்கை -இத்தால் சர்வேஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் இடம் சொல்லப் பட்டது —

——————————–

இப்படி இவன் தன்னை தானே முடித்து கொள்ளுமோ என்ன – அருளிச் செய்கிறார்-

சூரணை -179-

தன்னைத் தானே இறே முடிப்பான் –

அதாவது –
சர்வேஸ்வரன் இவனை உஜ்ஜீவிப்பிக்கைக்கு அவசர ப்ரதீஷனாய்ப் போரும் அவன் ஆகையாலே – இவனுடைய விநாசதுக்கு ஒரு நாளும் அவன் ஹேது அன்று -இனி -அசந்நேவ  -என்னும்படி தன்னை நசிப்பித்துக் கொள்ளுவான் தானே இறே என்கை –
யானே என்னை-திரு வாய் மொழி -2 -9 -9 – என்கிற பாட்டிலே யானே -என்று என் இழவு பகவத் க்ருதம் அல்ல -அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க நானே கிடீர் விநாசத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார் இறே ஆழ்வார்

———————————

இவன் தன்னை தானே முடிக்கை யாவது ஏது-என்னும் ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

சூரணை -180-

தன்னைத் தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

அஹங்காரம் ஆவது -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வாதந்த்ர்ய அபிமானமும்
விஷயங்கள் ஆவன -விஹித நிஷித்த விஷயங்கள் –
இவற்றை விரும்புகையாவது -இவற்றிலே மிகவும் பிரவண னாய் இருக்கை –
ஆத்ம ஸ்வரூபம் தான் -பகவத் அனந்யார்க்க விசேஷமாய் -பகவத் ஏக போகமாய் இறே இருப்பது –
தாத்ருச ஸ்வரூபத்தை நசிப்பிகை இறே -இவற்றிலே இவன் பிரவணன் ஆகையாவது –

உத்தர வாக்ய நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிறார் ஆகில் -இவை எல்லாம் என் என்னில் –
உத்தர வாக்யத்திலே நமஸ்ஸிலே-புருஷார்ததுக்கு  இடைச் சுவரான விரோதிகள் எல்லாம்
தள்ளுண்ணும் என்னும் இடம் தோற்ற இறே -மநோ வாக் காயை  -என்று தொடங்கி மூன்று
சூர்ணையாலே சகல விரோதி நிவ்ருதியையும் பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
இவர் தாமும் முமுஷுப் படியில் -இந்த நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிற அளவில் –
இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் -என்றார் இறே –

ஆகையால்-இவ் விடத்திலும் -தேகாத்ம அமிமானாதி ரூபமான அஹங்காரம் –
தத் கார்யமான விஷய ப்ராவண்யம் –
தத் உபய கார்யமான பாகவத அபசாரம் –
முதலான விரோதிகள் எல்லாம் பிரசக்த அனுபிரசக்தமாக அருளிச் செய்கிறார் –
ஆகையால் விரோதம் இல்லை-

————————————————

இவ் அஹங்காராதிகளின் கொடுமையை விஸ்தரேண உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்கிறார் –

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

அக்நி ஸ்பர்சம் போலே என்றது -அக்நி ஸ்பர்சம் ஆனது அன்வயித்த இடம் எங்கும்
சுட்டு உரு அழிக்குமா போலே -இதுவும் ஆஸ்ரய அசியாய் ஸ்வரூபத்தை நேராக
உரு அழித்து விடும் -என்கை-

(ஆஸ்ரய அசியாய்-உண்ட வீட்டுக்கு இரண்டகம் -ஆஸ்ரயித்த ஒன்றையே உண்ணும்)

———————————

இவ் வஹங்கரத்தினுடைய க்ரௌர்யத்துக்கு பிரமாணங்கள் காட்டுகிறார் மேல் –

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் -ந பிராணன் 
எம்மா வீட்டு திறமும் –

அதில் பிரதமத்தில் -ருக்வேத கிலமான ஜிதந்தா வசனத்தை அருளி செய்கிறார் –
ந காம கலுஷம் சித்தம் மமதே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத்வந் து  சர்வ ஜன்மஸூ  கேவலம் -இதுக்கு அர்த்தம் –
நிருபாதிக   சேஷியாய் நிரதிசய போக்யரான தேவரீர் திருவடிகளிலே வ்யவஸ்திதமான என் நெஞ்சு ஆனது -ஸ்ரீ வைகுண்டாதிகள் ஆகிற வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்கி இருக்கிற தன்று -சர்வ ஜன்மங்களிலும் தேவர்க்கே ரஸமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றது என்று –
கேவல பதத்தாலே -இத் தலைக்குமாய் இருக்கும் இருப்பை கழிக்கிறது-
து சப்தம் அவதாரண அர்த்தம் –
இத்தால் -மோஷ பர்யந்தமாக தான் உகப்பால் வரும் அது எல்லாம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

அநந்தரம் பிராட்டி வசனத்தை அருளிச் செய்கிறார்
நஹிமே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் ந ச பூஷணை
வஸந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மகா ரதம் -இதுக்கு அர்த்தம்
மகா ரதரான பெருமாளைப் பிரிந்து ராஷசிகள் நடுவே வஸியா நிற்கிற
எனக்கு பிராணனால் ஒரு பிரயோஜனம் இல்லை –
அர்த்தங்கலாளுமொரு பிரயோஜனம் இல்லை –
ஆபரணங்களாலும் ஒரு பிரயோஜனம் இல்லை -என்று –
இத்தால் -பிராணாதிகள் எல்லாம் அத் தலையில் வினியோகத்துக்கான அன்றிக்கே –
தனக்கான போது-அஹங்கார ஸ்பர்சி ஆகையாலே -த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது

அநந்தரம் பரமாச்சார்யான ஆளவந்தார் வசனத்தை அருளிச் செய்கிறார் –
ந தேஹம் ந பிராணான் ந ச சுக மசேஷாபி லஷிதம் நசாத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர் பூதம் நாத
க்ஷணம் அபி சஹே யாது சததா விநாசம் தத் சத்யம் மது மதன விஞ்ஞாபநமிதம்-
இதுக்கு அர்த்தம் -எனக்கு வகுத்த சேஷியானவனே-உன்னுடைய சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யதுக்கு புறம்பான தேகத்தையும் -ஷணமும் சஹியேன் இத் தேகத்துக்கு தாரகங்களானே பிராணங்களையும் சஹியேன் -எல்லாராலும் ஆசைபடப் பட்ட சுகத்தையும் சஹியேன் – புத்திர மித்ர களத்ராதிகளான மற்று ஒன்றையும் சஹியேன் –
இவை இத்தனைக்கும் போக்தாவான ஆத்மா தன்னையும் சஹியேன் –
இது எல்லாம் உருக் காண ஒண்ணாதபடி சததாவாக  நசித்து போக வேணும் –
இந்த விஜ்ஞாபனம் சத்யம் –
இங்கன் அன்றாகில் தேவர்க்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்று –
இத்தால் -இத் தலையில் சேஷத்வத்துக்கு புறம்பானது எல்லாம்
அஹங்கார துஷ்டம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது —

அநந்தரம் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில் தலையானவர் வசனத்தை அருளிச் செய்கிறார் -எம்மா வீட்டு திறமும் -என்று –
அதாவது –
ஆழ்வார் மோஷத்தை கொள்ளும் -என்ன-
என் உகப்புக்காக தரும் மோஷம் -எப் பிரகாரத்தாலும் விலக்ஷணமாய் இருந்ததே ஆகிலும்
அதின் இடையாட்டமும் பிரசங்கிக்கக் கடவோம் அல்லோம் என்கை –
இத்தால் -தன் உகப்பால் வரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
ஐஸ்வர்யாதிகளோபாதி த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -45-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

April 9, 2012

(பக்திப்பெரும் கடல் ஆழ்வார்
தாம் பெற்ற பேற்றினை கீழே அனுபவித்தார்
தம்முடைய தமர்களுக்கு பிறப்பு இனி வராதே
பொசிந்து பொசிந்து அருகில் உள்ள
ஏழு ஏழு பிறவிகளிலும்
நம்மளவும் பேறு வந்ததே
ஆழ்வார் சுற்றத்தார்களில் ஒருவராக ஒதுங்க வேண்டியதே நம் கர்த்தகவ்யம்

மாத பிதா
உரு பெரு செல்வமும் -மாறன் செந்தமிழ் ஆரணமே
ராமானுஜ முனி வேழம் சம்பந்தியாவதே வேண்டும்
இவன் பெருமையைச் சொல்லு பார்ப்போம் -இவன் பெருமையைச் சொல்ல வழி இல்லையே
வாழி மடநெஞ்சமே
அஹம் ஸ்மராமி -மத்பக்தம் நயாமி -ஸ்ரீ வராஹப் பெருமாள்
மொத்தமாக -ஆழ்வார் மேல் கடாக்ஷிக்க –
மலர் புண்டரீகம்-மலர்ந்த- மலர்ந்து கொண்டே மலரப்போகிற -புண்டரீகம்
மன்னனுடைய விபீஷணக்குக்காக மலர்கண் போல்

அகாலம் -பிரளய காலம் -அ இ உ -மூன்றும் இல்லாத இந்தக் காலத்தில் -ஸம்ஸார பிரளயம் அதிலும் மேல் அன்றோ
இப்படி பேறு பெற்றார் நம் போல் யாரும் இல்லையே
மருங்கே -ஆழ்வார் சம்பந்திகள் இடமும் வராதே
உளரே -உளர் அல்ல -வருமே -வராதே -எதிர்மறை எவகாரம்
சொல்லு -என்பதுக்கும் சொல்ல முடியாதே
பேசாமல் இருக்கவே வாழி மடநெஞ்சமே

ஆழி யம் -மண்டலாகாரம் -ஸம்ஸார சூழல் -பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
வாழி யம் சூழ் பிறப்பு -வேதிகேசரி ஜீயர் நிர்வாகம்
வரதராஜ ஸ்தவம் -சங்கிலி தொடர் அருளிச் செய்கிறார்

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சந்தோஷமாக அருளிச் செய்கிறார்
தேனும் பாலும் போல் கலந்தோம் –
அறியாத காலத்து அன்பு செய்து -பஸ்யதோ ஹரத்வம் –
அறியாமை குறளாய் -அவன் அறியாமலே வஞ்சிக்கப்பட்டது போல் -எனது ஸம்ஸாரம் போக்கி
இராமடம் ஊட்டுவரைப் போல் உபகாரகன்
நேரேக் காண நிற்கில் ஆள் இட்டு விலக்குவோமே
அதே போல் இந்தப்பாசுரத்திலும் –

தலைவி தலைவன் இடம் நீரிடை உதவி
பூத்தரு புணர்ச்சி –
புனல் தரு புணர்ச்சி –
களிறு தரு புணர்ச்சி
மூன்றும் உண்டே –
தன்னைக் காத்தவனுக்குத் தன்னைக் கொடுப்பாள் காதலில்
‘இங்கு ஆழ்வார் -தன்னைக் காத்துக் கொண்டால் அதுக்குத் தன்னையே கொடுப்பார்
குவலயா பீடம் தன்னை ரக்ஷித்து கொண்டதுக்கு ஆழ்வார் தம்மையே கொடுப்பார்

மஹா வராஹ -நீரில் விளையாடி -நீரிடை ரக்ஷணம் -நானும் அவர்களில் ஒருவன் தானே –
பூமி -கோட்டிடை நாமும் பூமியில் ஓர் ஏக தேசம் தானே –
முன்பு செய்த உபகாரகம் -நெஞ்சுக்குக் காட்டிக் கொடுக்கிறார் –
ஸம்ஸார பிரளயத்தில் இருந்தும் ரக்ஷிப்பானே
ஊனில் வாழ் உயிர் போல் மகிழ்ந்து அருளிச் செய்கிறார்

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –1-3-1-

ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் -என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே —2-3-2-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள் கலந்தே –2-3-3-

குறிக்கோள் ஞானங்களால் எனை யூழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே 2-3-10-

எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
நான் என்ற தத்வம் இல்லாதது போல்
ஐக்யா பத்தி அல்லவே –
கூடிற்றாகில் நல் உறைப்பு –
எல்லாம் தன்னுள்ளே -அப்ருதக் ஸித்த விசேஷணம் )

கீழே அவன் அருளால் தான் பெற்ற பேற்றை அருளிச் செய்து
இதில் தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும்
சம்சாரம் கிட்ட வற்றோ –
விசேஷ கடாக்ஷ விஷயீ க்ருதரானார்கள் என்று களிக்கிறார்

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்-
தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
ஊனில் வாழ் உயிரே -2-3-

பதவுரை

மட நெஞ்சமே–பேதை நெஞ்சமே!
பெரும் கேழலார்–(பிரளய வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹா வராஹ ரூபியானவனர்
இ அகாலம்–(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம்–தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம்–பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல்–நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார்–ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர்–(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே–வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம்–(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
(அப்படிப்பட்ட நமக்கு)
சூழ் பிறப்பு–விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
காரணம் காரியம் -ஜென்மம் கர்மம் மாறி மாறி வருமே –
மருங்கே வர பெறுமே–அருகிலும் வரக் கூடுமோ?-தனது சம்பந்திகளுக்கும் –
சொல்லு–சொல்லாய்;
வாழி–(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.

வாழி அம் சூழ் பிறப்பு –
ஸ்வரூப ப்ரயுக்தமான வாழ்வைப் பெற்றோம் -என்றுமாம் –
இதுவே வாதி கேசரி ஜீயர் நிர்வாகம்

வியாக்யானம் –

பெரும் கேழலார் –
ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –
ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –

மாசுடம்பில் நீர் வாரா –
ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–
(பரம் சுடர் உடம்பாய் -அழுக்கு பதிந்த சுடர் உடம்பாய் -வ்ருத்த விபூதி ஆகாரகன் )

பன்றியாம் தேசு –
ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜஸ்ஸூக்கு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது  இருக்கை –

(துயின்ற பரமன் -துயிலும் போதே பரமன்
இங்கும் பன்றியால் ஆனதால் வந்த தேஜஸ்ஸூ
அது இருக்கும் தேஜஸ்
இது பிறந்து பெற்ற தேஜஸ்
ஸ்ரேயான் உ தேஜஸ்-உகாரம் ஒவ்வொன்றிலும் வைத்து வியாக்யானம் )

என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ -(3-3)
தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு
தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –

பெரும் கேழலார்-
சிலம்பினிடை இத்யாதி –

தம் பெரும் கண் மலர் –
பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –
கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை
மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –

தம் பெரும் கண் மலர் –
இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து
பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்-
ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –

நம் மேல் –
அவள் பிரஜையான நம் மேல் –

ஒருங்கே –
ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி

பிறழ வைத்தார் –
மிக வைத்தார் –
தம்மால் தரிக்க போகிறது இல்லை

இவ்வகாலம் –
சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும்
முறியுமாய் நிற்குமது போலே –

ஒருவர் நம் மேல் வரும் கேழ்பவர் உளரே –
ஆரேனும் ஒருவர் நம்மை போலே வரும் நன்மை உடையார் உண்டோ –

சர்வேஸ்வரனுக்கு சேஷத்வ ரசம் இல்லாமையாலே  இல்லை –
முக்தரும் நித்தியரும் அவ்வருகில் உள்ளார் ஆகையாலே  அவர்களுக்கு இல்லை –
பக்தர் விஷய பிரவணர் ஆகையால் அவர்களுக்கு இல்லை –
நஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷனாம் -என்கிற
வை லஷண்யத்தை உடையார் ஆகையாலே பிராட்டிமார்க்கு இல்லை –
இவரைப் போலே தாழ நின்று -இப் பேறு பெற்றார் இல்லை -என்றபடி –

தொல்லை இத்யாதி –
பழையதாய் –
ஸ்ம்ருத்தமாய்–
பொல்லாதாய்-
போக்கற வளைப்பதான ஜன்மம்-
என்னோடு சம்பந்தம் உடையார் பக்கல் கிட்டப் பெறுமோ –
மாதா பிதா யுவதயஸ் தனயா ஸர்வம் நியமேன –மதன்வயாநாம்-

சொல்லு வாழி மட நெஞ்சமே –
கண்டதில் எல்லாம்  நாக்கு நீட்டி திரிந்த நீ சொல்லாய்-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–ஸ்ரீ திரு-விருத்தம்-55- என்னுமா போலே –

மட நெஞ்சமே –
எனக்கு பவ்யமாக நீ வாழ்வாயாக –

தாத்பர்யம்

சர்வேஸ்வரன் தன்னுடைய வைபவத்தை பிரகாசிக்க
ஆழ்வார் கண்டு மகிழ
மனஸ்ஸூ -ஸம்ஸாரத்தில் இருந்தும் -உத்தரிப்பத்த அன்று தானே மகிழ வேண்டும்
என்று ப்ரஸ்னம் பண்ண
அவன் நம்மை பூர்ணமாக கடாஷித்த பின்பு இனி ஒரு குறை உண்டோ
அன்று பிரளயத்தில் உத்தரித்த மஹா வராஹ நாயனார்
பூமா தேவியை உத்தரித்து மகிழ்ந்து
மலர்ந்த திருக்கண்கள் கொண்டு கடாஷித்த மாதிரியே –
இன்று நம்மை பூர்ணமாகக் கடாஷித்த பின்பு -வேறே எங்கும் பக்க நோக்கு அறியாமல் -ஒருங்கே கடாஷித்த பின்பு
இனி நமக்கும்
நம்மைச் சேர்ந்தவருக்கும்
துஸ்சரமாய்
அதி குரூரமான ஜென்ம சூழல் இல்லை
ஸ்வத சித்தமான பரமபதமும் அணித்தானதே
நம்மைப் போல் பாக்கியவான்கள் இனி யாரும் இல்லை
நெஞ்சே இதில் சம்சயம் உண்டாகில் சொல்லிக் காண்
என்று மகிழ்ந்து அருளிச் செய்கிறார் –

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை-157/158/159/160/161/162/163/164/165/166/167/168–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 8, 2012

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-

இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு ஸர்வ ஸக்தனான தானும் கைவிட மாட்டான் என்கையாலே அவனாலே இப் பந்தத்தை இல்லை செய்யப் போகாது என்பதற்கு பிரமாணம் -அகல்விக்க தானும் கில்லான் -பெரிய பிராட்டியாருக்கு ஸ்னேஹி -அவள் பரிக்ரமான என் பக்கலிலே அதி ஸ்நேகிதியாய் ––
(அவள் இடம் அன்பு காட்டி என்னிடம் அன்பே உருவாகி -அதி சப்தம் இதனாலே -)
அரியன செய்து-(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -இதனாலே வந்து என்னுடன் கலந்த-என்கிறார் )இனி நான் நழுவ விடுவேனோ -என்கிறார்
புருஷகாரம் முன்னாக வந்த பந்தத்தை சேதனனாலும் இல்லை செய்யப் போகாதே –
அங்கே அவனாலே இல்லை செய்யப் போகாது -இங்கே சேதனலாலேயும் போகப் போகாது –
உம்மைத் தொகை பகவானால் இல்லை செய்யாமல் போகாதே என்பதே முக்கிய அர்த்தம் என்றவாறு –

——————————————–

ஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –
சாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

கர்மணி வ்யுத்புத்தி யாவது -ஸ்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள்  என்று இறே –
இவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன
பரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –
அதாவது –
இரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-
இத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான
பார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –

—————————————-

இப்படி இருக்கையால் இப் புருஷகாரம் பிரபத்தி அதிகாரிகள்  எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல்

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம்
அவர்ஜநீயம் –

அதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் –
இவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு புருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –
அதவா –
இப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்குயேயோ 
பிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-
இவர்கள் மூவருக்கும்  புருஷகாரம் அவர்ஜநீயம்  என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித
சித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக ஸ்வீகரிக்கும் அளவில் -இவர்கள்
அபராதங்களைப் பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –
பூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே – உத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது – பூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –அதில் இவ் அதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –கீழ்ச் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே  இவனுக்கு அபேஷிதமான பல விசேஷத்தைச் சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப்  படியிலும் –
உத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரத்துக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷுப் படியிலும் -இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –
அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து- ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –
அடிமையைப் பேறு என்று கீழ்ச் சொன்ன உபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர்  திருத் தம்பியாரும் அருளிச் செயல் ரஹஸ்யத்தில் அருளிச் செய்தது –

ஆக –
இவன் அவனை  பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –
ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும் பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –
அவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –
இருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –

பிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,
உபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற  பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி  பாதித்த அனந்தரம்-
பிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–பிரபத்யே என்கிற பதத்தால்
சொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-
அதுக்கு விஷயம் சொல்லுகைக்காக  -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி முக்த கண்டமாக மீளவும் நாராயண  -பத அர்த்தத்தையும்-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரியையும்-
பிரபத்தியில் சாதனத்வம்  இல்லாமையையும்-
பிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சம தம அதிசயம் முதலான வற்றையும்
பிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்
தத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர் தோஷ்யாதிகளையும்  –பிரபத்தி பிரசங்கத்தாலே-
முக பேதேன ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் 
தத் பிராபல்யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷகாரத்தை முன் இட்டே ஸ்வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,
உபயரும் புருஷகாரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,
அதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கை யாலே ,இவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-

———————————————————

அவதாரிகை –
இப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது பிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-
அது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின கிரமத்தில் (காலத்திலே ) நம சப்த அர்த்தம் முன்னாக அருளிச் செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் (அந்த பிரணவ நமஸ்ஸு இல்லை )பிராப்ய விரோதி (ஸூ போக்த்ருத்வ புத்தி)நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,பிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி பிரதமம் அவற்றிலே ஒன்றை (சேஷத்வமாகிய ஒன்றை இங்கு)அருளிச் செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–

சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

வியாக்யானம்-
கீழே  ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி
சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக்  கட்டும் படி சொன்ன இத்தாலே உபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய் -இப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம் அருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —

தனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9 என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ என்று ஸ்வ நைச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் ஸ்வதந்த்ரோஹம் என்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —
தீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம்

—————————————————

சேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்
போக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல –161–

அதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் , போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-

——————————————-

அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று

சூரணை -162–

ஹாரோபி—162–

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா –    என்று- சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை-என்றார் இறே (பரம போகியான) பெருமாள் –பீருணா என்கிற லின்கவ்யத்யயம்  ஆர்ஷம் ..
அன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம்
அறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்கவுமாம் –
பீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை (பிரணயித்வத்தால் அவளுக்கு அணிவிக்கவும் இல்லை என்றுமாம்)என்றும் கொள்ளலாம்
பிரதி கூல விஷய   ஸ்பர்சம்  விஷ ஸ்பர்சம் போலே–

————————————————–

ஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவந்துக்கு விலக்கு –

புண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ்ச் சொன்ன படியே ஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும் அப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான கேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-
அன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –
வியாவிருத்தமாய் இருக்கச் செய்தே பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் -அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான சேஷத்வத்தில் காட்டில்  -அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே –வ்யாவிருதமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே -பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமும்மாம்-என்னவுமாம்
இத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே  போக விரோதியாய் நிற்கும்-
பாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை

———————————————————-

இப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்த அநந்தரம் பிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி- பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–

சூரணை -164–

குணம் போலே தோஷ நிவ்ருத்தி –164–

குணம் என்கிறது -கீழ் விரோதியாகச் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-
இவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய்  இறே இருப்பது —
இது போலே தோஷ நிவ்ருத்தி என்றது-இவ் வாத்ம குண த்வயமும் கீழ்ச் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது
அப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் -சரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..
குணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–

—————————————————–

தோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அத்தனை அன்றோ-ஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்கக் கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்- ஆபரணம் என்று தொடங்கி-

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே  –

அதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-

——————————————–

இது தான் லவ்கிகத்தில் அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு ஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –166-

அதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற-தீபோ நேத்ரா துரஸ்யேவ பிரதிகூலாசி மே த்ருவம் –என்கிற வார்த்தையை இவ் வர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-
சபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவைக் காண ஆசைப் பட்டு இருந்தவருக்கு இவள் திரு மஞ்சனம் பண்ணி வந்த இது  ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..
ஆனால் தீர்க்க முஷ்ணம் விநிஸ்வஸ்ய மேதிநீவ மவலோகயன்  உவாச மேக சங்காசம் விபீஷண உபஸ்திதம் –திவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம்  இஹா சீதாம் சிரஸ்ஸ்னாதாம் முபஸ்தாபாய மாசிரம்-என்று இவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்துக் கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..
இப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் ..  நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ என்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராகக் கூடாது இறே அவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,
யாதாஹா ராமோ   பார்த்தா தே ததா தத் கர்த்து மர்கசி–என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —
அவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே
எல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது , திரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே
அது அவ் விருப்பு காண ஆசைப் பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை-
அன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து அருளச் சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே ரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று
பிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ்ச் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்-

——————————————————–

இப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே-ஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை ஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்சக் கள்வன் -இத்யாதியாலே-

சூரணை -167–

வஞ்சக் கள்வன் மங்க ஒட்டு —

அதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே , அத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.
அவ் வளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு போவதாக அவன் அபிவிநிஷ்டனாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப் படி செய்து அருள ஒண்ணாது – என்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது  மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி ,
அவன் இத்தை விடுவித்துக் கொண்டு ,போம் படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–

——————————————————————–

அபிமத விஷயத்தில் –அழுக்கு போலே ஆதரிப்பது மட்டும் இல்லை -கோபம் வரும் -பிடிக்காதது மட்டும் இல்லை –கீழே பார்த்தோம் –ஆதரிப்பது மட்டும் இல்லை –தேகத்தை கழற்ற ஒட்டான்-தேகம் படைத்த அனைவருக்கும் இப்படி பட்ட ஆழ்வாரைக் காண்பது கர்தவ்யம் அன்றோ -ஞான பரிமளம் தோற்றும் இந்த விக்ரஹத்திலே- த்ருஷ்டானத்துடன் தர்சிப்பிக்கிறார்

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

த்யாஜ்ய தேக வியாமோஹம் -மணத்தின் வாசி அறிந்து போகிகள் -மண்ணை உதறினால் மணம் குன்றும் என்னுமா போலே-பரம போகியான எம்பெருமானும் விமல சரம தேகியான ஞானியை -விக்ரஹத்தை விடுவிக்கில் ஞான வாசனை செவ்வி குலையுமே என்று ஆதரிப்பான் –

ஆக- குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும்
பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் தாதாரத்தைப் பண்ணும் படியையும் ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும் பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் ,சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்
அதின் எல்லையையும் ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்
ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும் அருளிச் செய்தார் ஆயிற்று-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை–142/143/144/145/146/147/148/149/150/151/152/153/154/155/156–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 8, 2012

இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் -கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று -(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )

அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று -அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டு இருக்க பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் – அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல் லாப சாதனம் ஆகாது என்றபடி

————————————————-

இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

சூரணை-143-

அவன் இவனைப் பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் – பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்திரபிநோ பதி விபர்யே து நைவாஸ்ய பிரதிஷேதாய   பாதகம் -என்னக் கடவது இறே–

——————————————-

இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –இவை என்று தொடங்கி 

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

———————————————

அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிஸ் ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமை யாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

——————————————–

இவன் பண்ணும் பிரபதனம் -சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது –
அபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –
இது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

அதாவது –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே – சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –
இப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று பண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் -த்வமேவ  மாதாச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –
தஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின இவ் வபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று
ஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –
ஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –
ரிபூணாபி வத்சல –
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்று
இருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு  குறை இல்லை –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால் இவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –

——————————————-

இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் – அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

அதாவது –
நெடும்காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள்  ஒரு பார்யை -இப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல்  சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் -இத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது  நம்மை வந்து இப்படி நம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில்  செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –
அவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் – எத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –
பகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் – ஸ்வ பூர்வ விருத்த அனுசந்தத்தால் வரும் லஜ்ஜையும் –
ஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிக்கே
தத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –

ஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார  உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –

———————————————

இனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –
தந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

அதாவது –
ஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –
தனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் நிர்ஹேதுகமாக சிலரை அங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-
இரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –
இதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும்  கூடும் –
பிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –
ஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –

————————————————-

இவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

இவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ஸ்வீகாரத்தை –
வேதபுருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ஸ்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய தஸ்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
அஸக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –

——————————————-

இத்தலையில் அபேஷை  இன்றிக்கே  இருக்க -இவ் விஷயீகாரம் சித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

அதாவது –
தம் தாம் பக்கல் ( இருவர் உண்டே என்பதால் பன்மை )அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –
பம்பா தீரத்திலும் –
கங்கா கூலத்திலும் –
பெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –
————————————-

இப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –
தமப்யபாஷ ஸௌமித்ரே  ஸூக்ரீவ  ச சிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –
மாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி பெரிய திரு மொழி -5- 8- 1 என்று
இளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்-
அபய பிரதாநத்திலும் காணலாம் –

(உம்மைத் தொகையால் கீழ் குகனை பிராட்டி மூலம்- இங்கு லஷ்மண மூலம் திருவடி -ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருந்தும் அதே ஸ்வா தந்த்ரம் அடியாக இவர்களை வைத்தால் என்றே கொள்ள வேண்டும்)

அதாவது –
இச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை
அவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –
திருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –
எங்கனே என்னில் –
சோஹம் பருஷி தஸ்தேன தாசவஸ் ச அவமானித த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை அபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் – ஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –
திருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை
அல்லாமையாலே அவளை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –
பிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே – திரு ஆபரணங்களைப் பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-
இலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –
பெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள  வேண்டும் –பரதந்த்ரையான அவளுக்கு இத் தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –
ஆகையால் இறே –
பரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது

———————————————–

இவன் நிருபாதிக சேஷ பூதனாய் -அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –
இப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

சேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய்-ததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி    கூடு பூரித்து வைத்த அபராதம்
ஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –
அபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது
இவன் தன் குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-
அவன் தன் குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை

———————————————-

இவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

ஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -தேவும் தன்னையும் என்று-ஆஸ்ரித பாரதந்தர்த்தை இறே-இவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது –
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-
பாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-
இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது , புருஷகார புரஸ் கரணத்தாலே என்கை–

—————————————

கீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

அதாவது சேதனனுக்கு இவ் (பிராட்டி)விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே –ஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —
ஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்–அவ் வுபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–
இருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் வர்த்தத்திலே பிரமாண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-
ஒவ்பாதிகம்-காரணத்தின் அடிப் படையில்-

———————————————–

இவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

அநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–
அதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது-அவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–
ஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –தான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று இவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–
இது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-
இவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையைத் திருத்தியும் ,அவன் முன்னிடும் அளவில் இத் தலையைத் திருத்தியும்
இரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-

——————————————————-

அநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று பிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு  ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான இந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்- நிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம் விநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து முன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன அருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–

சூரணை-156-

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்யப் போகாது —

அதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் (மட்டுமே)அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார ரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–134/134/135/136/137/138/139/140/141..

April 7, 2012

சூரணை -134
பிரபத்தி உபாயத்துக்கு
இக் குற்றங்கள் ஒன்றும் இல்லை –
இப்படி பிராபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்கள் பிரதி பாதித்தீர் –
பிரபத்தி உபாயத்துக்கு ஒரு குற்றமும் தானில்லையோ என்ன -அருளி செய்கிறார் –
இக் குற்றங்கள் -என்று -ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாக –
சொன்னவை எல்லாவற்றையும் பராமர்சிக்கிறது —
ஒன்றும் இல்லை -என்றது -ஒரு தோஷமும் இதன் பக்கல் இல்லை என்றபடி –
இக் குற்றங்கள் ஒன்றும் இல்லை என்கையாலே -மற்று ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் –
தோற்றுகிறது-அதாவது -வஸ்துத உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்க செய்தே -ஆபாத ப்ரதீதியிலே
உபாய பிரபத்திய அர்ஹமாம் படி இருக்கை-
சூரணை -135

ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யம் ஆகையாலே –
ஸ்வரூபதுக்கு உசிதமாய் –
சிற்ற வேண்டா -என்கிறபடியே –
நிவ்ருத்தி சாத்யம் ஆகையாலே –
சூகரமுமாய் இருக்கும் –
இக் குற்றங்கள் இதுக்கு இல்லை என்னும் அத்தை பிரகாசிபிகைக்காக –
இதனுடைய ஸ்வரூப உசிதத்வ சூகரத்வங்களை-அருளி செய்கிறார் –
இப்பிரபத்தி -ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யம் ஆகையாவது -திரு மந்த்ரத்தில் மத்யம பதத்தில் –
சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான பகவத் அத்யந்த பாரதந்த்ர்யத்தை
உணருகையாலே வந்ததே இருக்கை –
ஸ்வரூபதுக்கு உசிதம் ஆகையாவது -அந்த பாரதந்த்ர்யம் ஆகிறது ஸ்வரூபதுக்கு அநு ரூபமாய் இருக்கை –
சிற்ற வேண்டா -என்கிறது -சிற்றுதல்-சிதறுதலாய்-பரக்க வேண்டா என்கை -அதாவது -ஒரு
வியாபாரமும் பண்ண வேண்டா என்றபடி –
நிவ்ருத்தி சாத்யம் ஆகையாலே சூகரமுமாய் இருக்கும் -என்றது -பகவத் பிரவ்ருத்தி
விரோதி ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிறபடியே -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியாலே
சாதிக்க படுமது ஆகையாலே எளிதாக செய்யலுமாய் இருக்கும் என்கை —
இவை இரண்டையும் சொல்லவே -கீழ் சொன்ன தோஷங்கள் ஒன்றும்  இதுக்கு இல்லை என்னும் இடம்
சித்தித்த படி என் என்னில்  –
அபாயத்வ
பய ஜனகத்வ
சோக ஜனகத்வ
அஹங்கார மிஸ்ரதையா
நிஷித்தத்வ அவத்யகர்த்வங்கள் –
ஸ்வரூப விரோதி தவத்தை பற்றி வருகிறவை ஆகையாலும் -பலவிசத்ருசத்வம் –
இது பல சாதனம் அன்றிக்கே -சித்த உபாயமே பல சாதனமாய் -இது தத் வர்ண மாத்ரமாய் -அதிகாரி விசெஷணமாய்-
இருப்பது ஓன்று ஆகையாலே -இதின் பக்கல் வருகைக்கு அவகாசம் இல்லாமையாலும் –
இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமை -ஸ்வரூபதுக்கு உசிதம் -என்றதிலே சித்தமாம்  இறே-
கர்ம சாத்யதையா வரும் துஷ்கரத்வம் இல்லை என்னும் இடம் -நிவ்ருத்தி சாத்யம் ஆகையாலே
சூகரம் -என்றதிலே சூச்பஷ்டம் இறே -ஆகையால் ஸ்வரூப ஒவ்சித்ய சூகரத்வங்கள் ஆகிற இவை இரண்டும்
இதுக்கு உண்டு என்னவே -கீழ் சொன்ன தோஷங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்னும் இடம்
பிரகாசிதம் ஆயத்து –

சூரணை -136
பூர்ண விஷயம் ஆகையாலே –
பெருமைக்கு ஈடாக –
பச்சை இட ஒண்ணாது –
இப்படி உபாயம் அவன் என்று அத்யவசித்து -ஸ்வ பிரவ்ருத்தியில் நிவ்ருத்தனாய்
இருந்து விட அமையுமோ -தத் சந்தோஷம் அர்த்தமாக -இவன் சில பச்சை இட வேண்டாவோ என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது -லோகத்தில் பச்சை இடுவார் அவ்வோ விஷயங்களின் தரத்துக்கு ஈடாக இறே
இடுவது –இங்கும் பச்சை இட பார்க்கில் இப்படி இட வேணும் இறே -அவன் அவாப்த சமஸ்த காமதயா
பரி பூரண னனாய்  இருக்கும் அவன் ஆகையாலே -அவனுடைய வைபவத்துக்கு அநு குணமாக
இவனால் ஒரு பச்சை இட போகாது என்கை –
சூரணை -137
ஆபிமுக்ய சூசக மாத்ரத்திலே
சந்தோஷம் விளையும் –
ஆனால் அவனுக்கு இவன் அளவில் சந்தோஷம் விளையும் படி என்ன -அருளி செய்கிறார் –
அதாவது –
அநாதி காலம் -யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை -திரு விருத்தம் -96 – ஏறிட்டு கொண்டு
தன பக்கல் விமுகனாய் போந்த  இவன் அந்நினைவு குலைந்து -தன் பக்கல் அபிமுகன்
ஆனமைக்கு சூசுகமான ஒரு வியாபாரம் பெற்ற அளவிலே -இத்தனை காலம் விமுகனாய் போந்த இவன்
இன்று அபிமுகனாக பெறுவதே -என்று அவன் திரு உள்ளம் மிகவும் உகக்கும் என்றபடி –

சூரணை -138
பூர்த்தி கை வாங்காதே
மேல் விழுகைக்கு ஹேது
வித்தனை –
அவன் அப்படி இருந்தாலும் -அவன் பூர்த்தியானது-அகிஞ்சநரான நம்மால் அவனை
உகப்பித்து அவனை அணுக போகாது -என்று இவன் கை வாங்கும் படி பண்ணாதோ -என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது -அவனுடைய அவாத சமஸ்த காமத்வம் ஆஸ் ரேயன   உன்முகனான இவன் –
நம்மால் அவனை ஒருபடியாலும் சந்தோஷிக்கப் போகாது -என்று தத் ஆஸ்ரயநீயத்தின் இடம்
மீளுகை அன்றிகே நாம் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டாத பரி பூரணன் ஆகையாலே –
நம் பக்கல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் என்று அபிநிவேசித்து பற்றுக்கைக்கு உடலாம் இத்தனை -என்கை
அன்றிக்கே-
அவன் பூர்த்தி அவனை இப்படி சந்தோஷிக்க ஒட்டுமோ -உபேஷித்து கை வாங்க பண்ணாதோ என்ன –
பூர்த்தி -இத்யாதியாலே -அருளி செய்கிறார் ஆகவுமாம்-அதாவது -அவனுடைய பூர்த்தியானது -இவன்
பச்சை இட்டிலன் -என்று அநாதரித்து-அங்கீகாரத்தின் நின்றும் கை வாங்காதே –
ஆபிமுக்ய சூசுக மாதரத்துக்கு மேற்பட நமக்கு இவன் சில செய்ய வேண்டுவது உண்டோ –
என்று விரும்பி கை கொள்ளுகைக்கு உடலாம் இத்தனை -என்கை –
சூரணை -139
பத்ரம் புஷ்பம் –
அன்யாத்  பூர்ணாத் –
புரிவதும் புகை பூவே –
இப்படி அவன் அல்ப சந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன –
அருளி செய்கிறார் –
பத்ரம்புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுப ஹ்ருத் மஸ் நாமி பிரயதாத்மன–கீதை -9 -26 -என்று
பத்ரத்தை ஆகவுமாம் –
பலத்தை ஆகவுமாம் –
ஜலத்தை ஆகவுமாம் –
யாவன் ஒருவன்  எனக்கு பக்தியாலே தருகிறான் -அநந்ய பிரயோஜனதை யாகிற
சுத்தி யோடு கூடின மனசை உடையனான -அப்படிப்பட்ட பக்தி யோடே தரப்பட்ட
அத்தை -அவாப்த சமஸ்த காமனனாய் இருக்கிற   நான் -அவன் பிரேமத்தாலே கலங்கி
தருமா போலே -வ்யாமோகத்தாலே கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுவான்
என்று தானே அருளி செய்தான் இறே –

அத்யத் பூர்ணா  தபாம் கும்பா தந்யத் பாதாவ நே ஜநாத்
அந்யத் குசல சம்ப்ரச்னான் ந சேச்சதி ஜனார்தனா -அதாவது –
ஸ்ரீ தூது எழுந்து அருளுகிற போது–திருதராஷ்ட்ரன் -பாண்டவ பஷ பாதியாய் இருக்கிற
கிருஷ்ணன் வாரா நின்றான் -அவனுக்கு சில நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து
நமக்கு ஆக்கிக் கொள்கிறோம் -என்றார் போலே சிலவற்றை சொல்ல –
நினைவும் சொல்லும் ஒத்து இராத வஞ்சகனான அவன் கருத்தை அறிந்த சஞ்சயன் –
வருகிறவன் அங்கு ஒத்தவன் அல்ல காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்றான் –
அதாவது -தான் குடிக்கும் தண்ணீரை ஒரு குடத்திலே நிறைத்து குளிர வைக்க
கடவனே -அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும் –
அதுக்கு மேல் ஒன்றும் வேண்டா –
தன் கிருகத்தில் அதிதி வந்து புகுந்தால் -காலை கழுவதாக சாமான்ய சாஸ்திரம்
விதித்து வைத்தது இறே -அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்க அமையும் –
அவனான வாசிக்கு விசேஷித்து ஒன்றும் செய்ய வேண்டா –
நெடும் தூரம் வந்தவனை குசல பிரச்னம் பண்ண கடவது இறே –
அவ்வோபாதி ஓர் இன் சொல் சொல்ல அமையும் -ஏற்றமாக ஒன்றும் வேண்டா –
இவ்வளவுகளை ஒழிய மற்று ஒன்றை இச்சியான்  காண் -என்கை –
இத்தால் நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையும்
அவன் ஒரு சரக்காக நினைத்து இருக்குமோ -வல்லையாகில்
உன் ஆபிமுக்ய சூசகமாக இவ்வளவுகளை செய்யப் பார் என்றபடி —
பரிவதில் ஈசனை பாடி -என்று தொடங்கி -புரிவதும் புகை பூவே –திரு வாய் மொழி -1- 6- 1என்று
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை சம்சார அந்முக்தராய் அனுபவித்து –
அவ அனுபவஜனித ப்ரீதியால் -ஏதத் சாமகாயன் நாஸ்தே -என்கிறபடியே
பாடி விஸ்த்ருதர் ஆகியை பெற வேண்டி இருப்பீர் -உப கரணங்களில் குறைவு பார்த்து
அகலுகை தவிர்ந்து -அசம்ச்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒருபடி பிரயோகித்து –
பின்னை அவனுக்கு அருள் கொடையாக கொடுப்பதுவும் ஏதேனும் ஒரு புடையும்
ஏதேனும் ஒரு பூவும் -இவ்வளவும் அமையும் கிடிகோள் அவனுக்கு -என்று அவனுடைய
ஸ்வ ஆராதையை சூச்பஷ்டமாக ஆழ்வார் அருளி செய்தார் இறே –

சூரணை -140
புல்லை காட்டி அழைத்து
புல்லை இடுவாரை போலே
பல
சாதனங்களுக்கு
பேதம் இல்லை —
பூர்ண விஷயம் -சூரணை – 136-என்று தொடங்கி இவ்வளவும் பராசக்த அநு பிரசக்தமாக
வந்த இத்தனை இறே -பிரபத்தி வை லஷண்யம் இறே கீழ் சொல்லப் பட்டது –
ஆகையால் அதுக்கு இன்னம் ஒரு வை லஷண்யம் சொல்லுகைக்காக –
சித்த உபாயத்துக்கும் பல த்துக்கும் உண்டான ஐ கயத்தை   முந்துற அருளி செய்கிறார் –
அதாவது –
கோவை வரவழைத்து பின்னை அதுக்கு தாரகாதிகளை இட்டு நோக்க நினைப்பார் –
தத் போக்யமான புல்லு தன்னையே தத் வசீகார சாதனமாக முன்னிட்டு அழைத்து கொண்டு
அது தன்னையே மேலிடும் அளவில் பல சாதனங்களுக்கு பேதம் இல்லாப் போலே
வி லஷண குண விக்ரக விசிஷ்டனான தானே -முந்துற இவனை சேர்த்து
கொள்ளுகைக்கு உபாயமாய் -பின்னை என்றும் ஒக்க இவனுக்கு உபேயமாய்
இருக்கையாலே -பல சாதனங்கள் இரண்டும் -ஏக வஸ்துவாய் -இருக்கும் என்கை –

சூரணை -141
ஆகையால் சுக ரூபமாய் இருக்கும் –
இத்தால் பிரபத்திக்கு வை லஷண்யம் பலித்த படியே அருளி செய்கிறார் –
அதாவது -சாத்திய வஸ்து தானே சாதனம் ஆகையாலே -தத் வர்ண ரூபமான இது
தேவையாய் இராதே சுக ரூபமாய் இருக்கும் என்ற படி –
அன்றிக்கே –
இன்னமும் பிரபதிக்கு ஒரு வை லஷண்யம் அருளி செய்கிறார் -புல்லை இத்யாதி யாலே –
அதாவது புல்லை காட்டி தேநுவை அழைத்து கொண்டு பின்னை அப்புல்லையே இடுமளவில் –
பல சாதனங்களுக்கு பேதம் இல்லாதாப் போலே –
சக்ருத் க்ருதோஞ்சலி-
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
அஞ்சல்யாதி ரூபையான பிரபத்தி யை முன்னிட்டு -ஈஸ்வரனை
வசீகரித்தால் -பின்னை அவனுக்கு உகப்பாக செய்யும் அடிமையும் —
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்றும் –
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -திருவாய் மொழி -3 -8 -4 –
-இத்யாதிகளில் சொல்லுகிற படியே –
தன் ஸ்வரூப அநு ரூபமான -அஞ்சல்யாதி விருத்தி  விசேஷங்கள் ஆகையாலே –
பல சாதனங்களுக்கு பேதம் இல்லை -இப்படி பலமானது தானே சாதனம் ஆகையாலே –
இப்பிரபத்தி தானே தேவையாய் இராதே -இவனுக்கு சுக ரூபமாய் இருக்கும் என்கை –
ஆக -பிரபத்தி உபாயத்துக்கு என்று -சூரணை – 134- தொடங்கி -இவ்வளவாக
பிரபத்தியினுடைய தோஷ ராஹித்யமும் -குண சாஹித்யமும் சொல்லப் பட்டது –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை–122/123/124/125/126/127/128/129/130/131/132/133/134/135/136/137/138/139/140/141–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 6, 2012

இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –

சூரணை-122-

திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–என்று-

திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஆகிறார் -சர்வஞ்ஞரான பாஷ்யகாரர் திருவடிகளிலே சேவித்து தத் அபிமத விஷயமாய் -சகல சாஸ்திரங்களும் ஆராய்ந்து அறுதி இட்டு இருக்குமவர் ஆகையாலே -ஆப்த தமராய் இருக்குமவர் அவர் இறே
பணிக்கும் படி என்றது -அருளிச் செய்யும் பிரகாரம் என்ற படி –
மதிரை யாவது -அத்யந்த நிஷித்த த்ரவ்யமாய் – ஸ்வஸ் ஸ்பர்ஸ (பிந்து)-லேசமுள்ள வஸ்துகளையும் தன்னைப் போலே நிஷித்தமாக்குமது இறே –இத்தை அஹங்காரத்துக்கு திருஷ்டாந்தம் ஆக்குகையாலே -அதினுடைய அத்யந்த நிஷித் தத்வமும் – தத் ஸ்பர்ச லேசமுள்ள வஸ்துவும் தத்வத் நிஷித்தம் என்னுமிடமும் தோற்றுகிறது –
சாத கும்ப மய மாவது – ஸூவர்ணம்-தந் மய கும்பம்-என்றது -உள்ளு த்ரவ்யாந்தரமாய் ஸூவர்ணம் மேல் பூச்சாய் இருக்கை-அன்றிக்கே-அது தானே உபாதாநமாகப் பண்ணின குடம் என்றபடி —இத்தால் -பாத்திர சுத்தி சொல்லுகிறது –

தத் கத தீர்த்த ஸலிலம்  என்கையாலே -அதுக்குள் இருக்கிற ஜலத்தின் பாவநத்வம் சொல்லுகிறது –அது போலே அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்கையாலே –இங்கும் பாத்திர சுத்தியும் தத் கத பதார்த்த சுத்தியும் சொல்ல வேணும் -அதாவது – ஆத்மா ஞான மய அமல -என்கிற ஸ்வதோ நிர்மலதையலும் -பகவத் அனந்யார்ஹ சேஷதையாலும் பரிசுத்தமாய் இறே-பகவத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து இருப்பது –தத் கத பக்தியும் பகவத் ஏக ஆகார தயா பரிசுத்தை இறே -அஹங்காரம் கலசிற்றில்லை ஆகில் ஒரு குறை இல்லையே –

ஆக -இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில் –ஸூவர்ண பாத்திர கதமான தீர்த்த ஜலம்- பாத்திர சுத்தியும் உண்டாய் தானும் பரிசுத்தமாய் இருக்க -ஸூரா பிந்து மிஸ்ரதையாலே நிஷித்தம் ஆம் போலே – ஸ்வதா நிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மா வஸ்து கதையாய் -பகவத் ஏக விஷய தயா பரிசுத்தை யாய் இருக்கிற பக்தி தான் -ஸ்வ யத்ன மூலமான அஹங்கார ஸ்பர்சத்தாலே-ஞானிகள் அங்கீகாராதாம் படி நிஷித்தையாய் இருக்கும் என்றது ஆய்த்து –
பணிக்கும் படி -என்றதுக்கு சேர -வாக்யத்தின் முடிவிலே -என்று என்ற இத்தனையும் கூட்டி நிர்வஹிப்பது –

——————————————–

இன்னமும் இதுக்கு பல வி சத்ருசத்வம் என்பதொரு தூஷணம் உண்டு என்கிறார் –

சூரணை -123-

ரத்னத்துக்கு பலகறை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

அதாவது -த்வீபாந்தரந்களிலே சிலர் பல கறையை ஆபரணமாக பூண்கையாலே பலகறையை கொடுத்தவர்களுக்கு ரத்னத்தைக் கொடுப்பார்கள் – உதாரரான ராஜாக்கள் ராஜ்ய அர்த்தியாய் வந்து ஓர் எலுமிச்சம் பழத்தைக் கொடுத்தவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பார்கள் –இப்படிக் கொடுப்பார்கள் என்றால் -மகார்ககமான ரத்னத்துக்கும் மகா சம்பத்தான ராஜ்யத்துக்கும் -பல கறையும் எலுமிச்சம் பழமும்-சத்ருச சாதனம் அல்லாதா போலே –பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா-பகவத் கீதை  -8 -22 -என்றும்
பக்த்யா த்வ அந்ய யா  சக்ய -பகவத் கீதை -11 -54 – என்கின்ற படி
பக்தி சபலனாய் -பரம உதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல் பக்தி மாத்ரமே பற்றாசாக -பரம புருஷார்த்த லஷண மோஷத்தைக் கொடுத்தாலும் -பலத்துக்கு இது சத்ருச சாதனம் அன்று என்கை-

—————————————————–

ஆனால் விசத்ருசமான பலகறையும் எலுமிச்சம் பழத்தையும் -உபகாரமாக் கொடுத்து ரத்னத்தையும் ராஜ்யத்தையும் பெறுகிறவர்கள் தான் பெருகிறபடி என் -என்ன –
அவ்வோபாதி யாகிறது என்ன -அது தனக்கு யோக்யதை இல்லை என்கிறார் –

சூரணை -124-

தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

அதாவது -அங்கு தானும் தனக்கு உரியவனாய் -தனக்கு என்று ஒரு பலகறையும் எலுமிச்சம் பழமும் உண்டாகையாலே அது செய்யலாம் –இங்கு அப்படி இன்றிக்கே –
யானும் நீ என்னுடைமையும் நீயே -திரு வாய் மொழி -2 -2 -9 -என்கிறபடியே ஆத்மா ஆத்மீயங்கள் இரண்டும் அங்குத்தையாய்- தனக்கு என்று ஒன்றும் இல்லாத அகிஞ்சனன் ஆகையாலே -பேற்றுக்கு ஹேதுவாக அவன் விஷயத்தில் தனக்கு சமர்ப்பிக்கல் ஆவது ஒன்றும் இல்லை என்கை –

———————————————

கோ தானத்தில் பிதாவுக்கு புத்திரன் தஷிணை கொடுக்குமா போலே -அவன் தந்தது தன்னை அவனுக்கு கொடுத்தாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -125-

அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –

அவன் தந்ததை கொடுக்கை யாவது –விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா பிரமன் ஹஸ்த பாதாதி சம்யுதா -என்றும் –
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும் -சொல்லுகிறபடியே அடியிலே அவன் தந்த கரண களேபரங்களை –மன்மநா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -என்றும் –
சததம் கீர்த்த யந்தோ மாம் யதந் தச்ச திருட வ்ரதா -என்றும் -சொல்லுகிறபடியே –
த்யான அர்ச்சனா பிரணாமாதிகளாலே தச் சேஷமாம் படி பண்ணுகை-
அடைவிலே கொடுக்கையாவது -ததீயம் என்னும் புத்தியாலே சமர்ப்பிக்கை-
இப்படி கொடுக்கில் -அநு பாயமாம் -என்றது -அவனத்தை அவனுக்கே கொடுத்த இத்தனை ஒழிய -தான் ஓன்று கொடுத்தது ஆகாமையாலே-அது பேற்றுக்கு சாதனம் ஆகாது -என்றபடி –
அடைவு கெட கொடுக்கை யாவது -மதீயம் என்னும் புத்தியாலே சமர்பிக்கை –
இப்படிச் செய்யில் -களவு வெளிப்படும் -என்றது -பகவத் த்ரவ்ய அபஹாரம் பிரகாசிக்கும் என்ற படி –
ராஜ மகேந்தரன் படியை ரஹஸ்யத்தில் களவு கண்டு ஓலக்கத்திலே கொடுக்குமா போலே இறே இவன் கொடை–

————————————————

இன்னமும் உபாயாந்தரதுக்கு ஒரு தூஷணம் சொல்கிறார் –

சூரணை -126-

பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –

அதாவது –
பார்யை ஆனவள் ஸ்வயம் பிரயோஜனமான பர்த்ரு போகத்தை ஸ்வ உதர போஷணதுக்கு- (பக்தியை மோக்ஷத்துக்கு ) சாதனம் ஆக்கி கொள்ளும் அளவில் -தன்னை பார்யை யாக விரும்பின பர்த்தாவுக்கும் – தத் பார்யை என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும் அவத்யம் ஆம் போலே – பகவத் வை லக்ஷண்ய அனுபவத்தாலே விளைந்த போக ரூபை யான பக்தியை
மோஷ சாதனம் ஆக்கும் அளவில் –தன்னை சேஷ பூதனாக விரும்பி தன்னோடு கலந்து பரிமாறின ஈஸ்வரனுக்கும் -தத் சேஷ பூதன் என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும்
அவத்யமாய் தலை கட்டும் என்கை –
ராத்திரி பர்த்தாவோடே சம்ஸ்லேஷித்து விடிவோறே கைக் கூலி தர வேணும் என்று
வளைக்குமா போலே -பக்தியை உபாயமாகக் கொள்ளுகை-என்று இறே பிள்ளானும் அருளி செய்தது –

—————————————————-

சூரணை -127-

வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –

இப்படி ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான இத்தை -ஹிதா தனுசாசனம் பண்ணுகிற வேதாந்தங்கள் –
ஒமித் யாத்மானம் த்யாயதா-
ஆத்மா நமேவ லோக முபாசீத –
ஆத்மாவா ஆர் த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய-என்று
இச் சேதனனுக்கு மோஷ உபாயமாக விதிக்கிறதுக்கு நிதானம் அருளிச் செய்வதாக – தத் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-

——————————————————————

தந் திதானம் தன்னை அருளிச் செய்கிறார் –

சூரணை -128-

ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –

அதாவது –அத்யந்த ருக்ணராய் திரியா நிற்கச் செய்தே -அத்தை அவிளம்பேன போக்கும்
ஆப்தமான மகா ஒவ்ஷதத்தை சேவிக்கச் சொன்னால் –அதுக்கு இசையாத பால புத்ராதிகளுக்கு -அவர்கள் ஆசைப் பட்டு விநியோகம் கொள்ளும் வஸ்துகளிலே அந்த ஒவ்ஷதத்தை கலசி இடும் –வத்சலரான மாத்ராதிகளைப் போலே -சீக்ரமாக சம்சார வியாதியை தீர்க்கும் -சித்தோ உபாயமாகிற நச்சு மா மருந்தை-திரு வாய் மொழி -3 -4 -5 –
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வமாக சேவிக்கச் சொல்லி -முதலிலே உபதேசித்தால் –
அநாதியாய் வருகிற வாசநையால் அதுக்கு இசையாத சேதனரையும் விட மாட்டாமையாலே அவர்களுக்கு அபிமதமான ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கிற உபாசனத்திலே -தத் அங்கத்வேன- சித்தோ உபாயமான ஈஸ்வரனை கலந்து தாத்ருசமான -உபாசனத்தை அவர்களுக்கு மோஷ உபாயமாக விதிக்கிற இத்தனை என்கை –
த்ருஷ்டாந்தத்தில் அபிமத வஸ்து வியாதிகரம் அன்றியே தந் மிஸ்ரமாக பிரயோகித்த ஒவ்ஷதமே வியாதிகரம் ஆகிறது போலே – த்ருஷ்டாந்தகத்திலும் -உபாசனம் அன்றிக்கே -தந் மிஸ்ரமான ஈஸ்வரனே உபாயம் என்னும் இடம் சம்ப்ரதிபந்தம் –
அவ்யவதாநேன சேவிக்கும் அளவில் – அவிளம்பேன வியாதியை போக்கும் ஒவ்ஷதம் அபிமத வஸ்து மிஸ்ரமான போது-விளம்பேன கார்யகரம் ஆகிறாப் போல் ஆய்த்து -உபாசன மிஸ்ரமான போது-ஈஸ்வரன் விளம்ப பல ப்ரதன் ஆகிறதும் –

————————————————

இனி இப்படி இது தன்னை விதித்தது கீழ் நின்ற நிலையைக் குலைத்து -மேலே கொண்டு போகைக்காக இத்தனை என்கிறார் –

சூரணை -129-

இத்தைப் பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

அதாவது சாஸ்திரம் ஆகிறது -த்ரைகுண்யா விஷயா வேதா -என்கிறபடி
பெற்ற தாய் -அந்த பதிராதிகள் ஆன விகல கரணரோடு படு கரணரோடு வாசி அற வாத்சல்யையாய் இருக்குமா போலே -மாதா பித்ரு சகஸ்ரங்களில் காட்டிலும் வத்சல தரம் ஆகையாலே -தம ப்ரசரோடு -ரஜ பிரசரோடு சத்ய பிரசரோடு வாசி அற -அவர்கள் அபேத பிரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே -அவ்வோருடைய குண அநு குணமாக புருஷார்த்தங்களையும் -தத் சாதனங்களையும் உபதேசித்து -கொள் கொம்பிலே ஏற்றுகைக்கு சுள்ளிக் கால் நட்டுவாரோபாதி -இவ்வோ முகங்களால் தன்னுடைய தாத்பர்யாம்சத்திலே-யாரோபிக்கைக்காக ப்ரவர்த்திக்கிறது ஆகையாலே –
சேயேன விதி தொடங்கி-பிரபத்தி பர்யந்தமாக வரும் அளவும் சேதனர்  நின்ற அளவுக்கு ஈடாக உத்தரோத்தர புருஷார்த்த சாதனங்களை ப்ரவர்பித்திப்பித்து பூர்வ பூர்வங்களை நிவர்திப்பிக் கடவதாய் இருக்கும் –ஆகையாலே இவ் உபாசனத்தை பிரவர்த்திப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

பரஹிம்சை -என்றது –மேலான ஹிம்சை என்றபடி -பர தேவதை -பர கதி -என்கிற இடங்களில் -மேலான தேவதை -மேலான கதி -என்று அர்த்தம் ஆகிறது போலே –
அதாவது சேயேன விதிக்கு மேலாக விதிக்கப் பட்ட பசவ அவலம்ப நாதிகளை சொன்ன படி –
அத்தை ஹிம்சை என்னலாமோ என்னில் -விஹித ஹிம்சை என்ன கடவது இறே-
அக்நி ஷோமீயம் பசுமாலபேத -என்கிற இடத்தில் ஆலம்ப சப்தம் -ஆலம்ப ஸ்பர்ச ஹிம்சயோ- என்கையாலே -ஹிம்சா வாசி இறே —இத்தால் காம்ய கர்மத்தை சொன்னபடி -பூர்வ விஹித ஹிம்சை – என்று சேயேன விதியை சொல்லுகையாலும் -தது பரி விஹிதமான காம்யமே இவ்விடத்தில் விவஷிதம் –
அன்றிக்கே –
விஹிதமே ஆகிலும் -பகவத் சேஷத்வ ஜ்ஞான பூர்வகமாக அநந்ய பிரயோஜனாய் கொண்டு -அக்நி-இந்த்ராதி தேவதா அந்தர்யாமி சமாராதனமாகவே பண்ணும் பசவ ஆலம்ப நாதி யுக்த யாகாதி கர்மத்தைப் பற்ற ஸ்வ தந்த்ரனாய் கொண்டு ஸ்வர்க்காதி பல சாதனமாக அக்நி இந்த்ராதி தேவதா மாத்ரங்களை உத்தேசித்து பண்ணும் பச்வாலம்ப நாதி யுக்த காம்ய கர்மம் விசேஷஞ்ஞர்க்கு பர ஹிம்சாப்ராயம் என்னலாம்படி யத்யந்த நிக்ருஷ்டமாய் இருக்கையாலே இவ்வாகாரத்தை இட்டு அது தன்னை பர ஹிம்சை என்று அருளி செய்தார் ஆகவுமாம்–
சாஸ்திர விஹிதமுமாய் -பகவத் ஏக விஷயமுமாய்- இருக்கிற பிரபகாந்தரத்தை ஜ்ஞாநிகளுக்கு அபாயம் என்றவோபாதி -இதுவும் அதிகாரி விசேஷத்தை இட்டு
சொல்லலாம் இறே — அத பாதகபீதஸ் த்வம்-என்று உபாயாந்தரத்தை பாதகமாக சொல்லிற்று இறே-தர்ம தேவதையும் -புபுஷுக்கு உபாதேயமான புண்ணியமும் தானே முமுஷுக்கு பாப சப்த வாக்யமாகா நின்றது இறே —
ஆக -எல்லா வற்றாலும் -இவ்விடத்தில் காம்ய கர்மத்தையே சொல்லுகிறது –இப்படி தான் யோஜிக்கிறது–உபாசன விதிக்கு நிவர்த்யம் காம்ய கர்மமாக இவர் தாமே -பரந்தபடி ரஹஸ்யத்திலே அருளிச் செய்கையாலே —

———————————————————

ஆனால் இப்படி விதித்ததை பின்னை நிஷேதிக்கிறது என் என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை-130-

இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –

இது தான் -என்கிறது –கீழ் சொன்ன உபாசனத்தை –
பூர்வ விஹித ஹிம்சையாவது -ச யே நே நாபி சரன்  யஜதே -என்று பிரதமத்தில்
விதிக்க பட்ட அபிசார கர்மம் –அது -தம பிரசுரராய் -நாஸ்திகராய் இருப்பாரை பற்ற விதிக்கப் பட்டு ஆஸ்திகராய் காரீர்யாதி காம்ய கர்மங்களிலே இழிகைக்கு யோக்யரான ரஜ பிரசுரரைப் பற்ற நிஷேதிக்க படிகிறாப் போலே -உபாசனமும் -ஸ்வ தந்த்ர அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் சேஷத்வத்திலே ஊன்றுவிக்கைக்கு யோக்யரான சத்வ பிரசுரரைப் பற்ற விதிக்கப் பட்டு -பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறந்து பகவத் ஏக உபாயத்வத்திலே ஊன்றுகைக்கு யோக்யரான பரம சத்வ நிஷ்டரைப் பற்ற நிஷேதிக்கப் படவும் குறை இல்லை –

——————————————–

இப்படி நிஷேதிக்க படுமவையான இவை தன்னை அடியிலே எதுக்காக விதித்தது
என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -131-

அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விஸ்வாசத்துக்காக விதித்தது –

அதாவது -சட சித்த சாஸ்திர வசதோ பாயோபிசார சுருதி –என்கிறபடியே அபிசார கர்மத்தை விதித்தது-சாஸ்த்ரத்தை இல்லை என்று இருக்கும் நாஸ்திகனுக்கு சாஸ்திர விஸ்வாசம் பிறக்கைக்காக-உபாசனத்தை விதித்தது-தன்னை ஸ்வ தந்த்ரன் என்றும் அந்ய சேஷ பூதன் என்றும் பிரமித்து போந்த சேதனனுக்கு -அவை இரண்டும் வந்தேறி –பகவத் சேஷத்வமே நிலை நின்ற வேஷம் என்று தன் ஸ்வரூபத்தில் விஸ்வாசம் பிறக்கைக்காக என்கை-

——————————————–

இப்படி ஒரோ விஸ்வாசத்துக்காக விதித்து நிஷேதித்தமை ஒத்து இருந்ததே ஆகிலும் –
இவ் உபாசனத்தை விடாமல் பற்றி நின்றால்-அபிசார கர்மம் போலே க்ரூரம் அன்றே இது என்ன -அதிலும் காட்டிலும் க்ரூரம் என்கிறார் –

சூரணை -132-

அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –

பர ஹிம்சா ரூபமான அந்த அபிசார கர்மம் -தேக ஆத்ம அபிமான செயலாய் –விசிஷ்ட வேஷ விரோதியாய் -அத்தால் வரும் பலமும் -சில துக்க அனுபவ மாத்ரமாய்க் கொண்டு மேல் எழப் போகையாலே–தோல் புரையே போம் -என்கிறது
அஹங்கார கர்பமான இந்த உபாசனம் -ஆத்ம ஞானம் பிறந்தவன் செயலாய் – நிஷ்க்ருஷ்ட வேஷ விரோதியாய் பகவத் ஏக பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப நாசகம் ஆகையாலே -மர்ம ஸ்பர்சி -என்கிறது –

———————————————-

இவ்வளவே அன்று –இது துஷ்கரமும் என்கிறார் –

சூரணை-133-

இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –

இப்படி ஸ்வரூப விரோதியாய் இருக்கிற இவ் உபாசனம் தான் –
-யஜ்ஜேன தாநேன தபஸா அனாசகேன ப்ராஹ்மணா விவிதிஷந்தி–ப்ருஹதாரண்யம் -என்றும் –அவித்யயா அம்ருத்யும்  தீர்த்தவா வித்ய யாம்ருத மஸ்நுதே-என்றும் –
சர்வ அபேஷாச யஜ்ஜாதி ஸ்ருதே ரஸ்வவத் -என்றும் –
கஷாய பங்க்யதே கர்மாணி ஞாநந்து பரமா கதி -என்றும் –
கஷாய கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி –
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே -காய கிலேசகரமான கர்ம அனுஷ்டானத்தாலே சாதிக்கப்படும் அது ஆகையாலே -அசக்தனான இவனால் செய்து தலைக் கட்ட அரிதாய் இருக்கும் என்கை –

ஆக -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -என்றுதொடங்கி-115- -இவ்வளவாக
உபாயாந்தர தோஷம் விஸ்தரேண பிரதி பாதிக்கப் பட்டது –

———————————————–

இப்படி பிரபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்களை ப்ரதிபாதித்தீர் –
பிரபத்தி உபாயத்துக்கு ஒரு குற்றமும் தான் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை – 134–

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை

சர்வேஸ்வரன் மட்டுமே உபாயம் -பிரபத்தி உபாயம் இல்லையே -மேலோட்டமாக பார்க்க தன்னை மோக்ஷ உபாயம் என்று எண்ணுவதற்கு காரணமாக பிரபத்தி இருப்பதால் அந்த தோஷம் உண்டே –

இக்குற்றங்கள் என்று ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாகச் சொன்னவை எல்லாவற்றையும் பராமர்சிக்கிறது
ஒன்றுமே இல்லை என்றது –ஒரு தோஷமும் இதன் பக்கலில் இல்லை என்றபடி
இக்குற்றங்கள் ஒன்றுமே இல்லை என்கையாலே மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது-அதாவது –வஸ்து த உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே ஆபாத ப்ரதீதியிலே உபாய பிரதிபத்ய அர்ஹமாம் படி இருக்கை –

————-

இக் குற்றங்கள் இதுக்கு இல்லை என்னுமத்தை பிரகாசிப்பைக்காக இதனுடைய ஸ்வரூப உசித ஸூ கரத்வங்களை அருளிச் செய்கிறார்

சூர்ணிகை —135-

ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்

இப்பிரபத்தி -ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யமாகை யாவது –
திருமந்திரத்தில் மத்யம பதத்தில் சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை யுணருகையாலே வந்ததாய் இருக்கை –
ஸ்வரூபத்துக்கு உசிதமாகையாவது –அந்த பாரதந்தர்யமாகிற ஸ்வரூபத்துக்கு அனு ரூபமாய் இருக்கை –
சிற்ற வேண்டா -என்கிறது -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை-அதாவது ஒரு வியாபாரமும் பண்ண வேண்டாம் என்றபடி
நிவ்ருத்தி சாத்யமாகையாலே ஸூகரமுமாய் இருக்கும் -என்றது-பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிறபடியே-ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியாலே சாதிக்கப்படுமாதாகையாலே எளிதாகச் செய்யலுமாய் இருக்கும் என்கை –

இவை இரண்டையும் சொல்லவே -கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் சித்தித்தபடி என் என்னில்
1-அபாயத்வ -2- பய ஜநகத்வ 3–சோக ஜநகத்வ 4–அஹங்கார மிஸ்ர தயா நிஷித்தத்வ 6அவத்ய கரங்கள் 5-ஸ்வரூப விரோதத்தைப் பற்றி வருகிறவை யாகையாலும் -6-பல வி சத்ருசம்-இது பல சாதனம் அன்றிக்கே சித்த உபாயமே பல சாதகமாய் -இது தத் வரண மாத்ரமாய் -அதிகாரி விசேஷணமாய் இருப்பது ஓன்று ஆகையால்-இதில் பக்கல் வருகைக்கு அவகாசம் இல்லாமையாலும் இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமை – ஸ்வரூபத்துக்கு உசிதம் -என்றதிலே சித்தமாம் இறே
கர்ம ஸாத்ய தயா வரும் துஷ்கரத்வம் இல்லை என்னும் இடம் -நிவ்ருத்தி சாத்தியம் ஆகையால் ஸூகரம் -என்றதிலே ஸூஸ்பஷ்டம் இறே-ஆகையால் ஸ்வரூப ஓவ்சித்திய ஸூ கரத்வங்கள் ஆகிய இவை இரண்டும் இதுக்கு உண்டு என்னவே-கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் ப்ரகாசமாய்த்து –

—————————————–

இப்படி உபாயம் அவன் என்று அத்யவசித்து – ஸ்வ ப்ரவ்ருத்தியில் -நிவ்ருத்தனாய் இருந்து விட அமையுமோ -தத் சந்தோஷ அர்த்தமாக இவன் சில பச்சை விட வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –136-

பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –

அதாவது லோகத்தில் -பச்சை இடுவார் அவ்வோ விஷயங்களின் தரத்துக்கு ஈடாக இறே இடுவது -இங்கும் பச்சை இடப் பார்க்கில் அப்படி இட வேணும் இறே
அவன் அவாப்த ஸமஸ்த காம தயா பரிபூர்ணனாய் இருக்குமவன் ஆகையால்
அவனுடைய வைபவத்துக்கு அனு குணமாக இவனால் ஒரு பச்சை இடப் போகாது என்கை –

————————————————————————

ஆனால் அவனுக்கு இவன் அளவில் ஸந்தோஷம் விளையும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –137-

ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் (அத்யந்த அபிமதம்)விளையும் –

அதாவது அநாதி காலம் யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு தன் பக்கல் விமுகனாய்ப் போந்தவன் அந்நினைவு குலைந்து தன் பக்கல் அபிமுகன் அணமைக்கு ஸூ சகமான தொரு வியாபாரம் பெற்ற அளவிலே இத்தனை காலம் விமுகனாய்ப் போந்தவன் இன்று அபிமுகனாகப் பெறுவதே -என்று அவன் திரு உள்ளம் மிக உய்க்கும் -என்றபடி –

————————————————

அவன் அப்படி இருந்தாலும் அவன் பூர்த்தியானது அகிஞ்சனரான நம்மால் அவனை யுகப்பித்து அணுகப் போகாது என்று இவன் கை வாங்கும் படி பண்ணாதோ என்ன அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –138-

பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை

அதாவது -அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் ஆஸ்ரயண உன்முகனான இவன்
நம்மால் அவனை ஒருபடியாலும் சந்தோஷிப்பிக்கப் போகாது என்று தத் ஆஸ்ரயணத்தின் நின்றும் மீளுகை அன்றிக்கே நாம் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பரிபூர்ணன் ஆகையால் நம் பக்கல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் என்று அபி நிவேசித்துப் பற்றுகைக்கு உடலாம் இத்தனை -என்கை –
அன்றிக்கே –(நம் நினைவு இது வரை -மேல் அவன் திரு உள்ளம் )
அவன் பூர்த்தி அவனை இப்படி சந்தோஷிக்க ஒட்டுமோ-உபேக்ஷித்துக் கை வாங்கப் பண்ண ஒண்ணாதோ என்ன-பூர்த்தி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
அதாவது அவனுடைய பூர்த்தியானது-இவன் பச்சை இட்டிலன் என்று அநாதரித்து அங்கீ காரத்தின் நின்றும் கை வாங்காதே ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்துக்கு மேற்பட்ட நமக்கு இவன் சில செய்ய வேண்டுவது உண்டோ என்று விரும்பிக் கைக் கொள்ளுகைக்கு உடலாம் இத்தனை என்கை

————————————————-

இப்படி அவன் அல்ப ஸந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

சூர்ணிகை–139—

பத்ரம் புஷ்பம் –அந்யாத் பூர்ணாத்– புரிவதுவும் புகை பூவே –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்று பத்ரத்தை யாகவுமாம் -புஷ்பத்தை ஆகவுமாம்-பலத்தை ஆகவுமாம் -ஜலத்தை ஆகவுமாம் -யாவன் ஒருவன் பக்தியால் தருகிறான் – அநந்ய ப்ரயோஜனதை யாகிற சுத்தியோடு கூடின மனசை யுடையனான அப்படிப்பட்ட பக்தியோடு தரப்பட்ட அத்தை அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிற நான் -அவன் ப்ரேமத்தாலே கலங்கித் தருமாப் போலே வியாமோஹத்தாலே கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுவன் என்று தானே அருளிச் செய்தான் இறே

அந்யத் பூர்ணாதாபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் ந தே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று ஸ்ரீ தூது எழுந்து அருளுகிற போது த்ருதராஷ்ட்ரன் -பாண்டவ பக்ஷபாதியாய் இருக்கிற கிருஷ்ணன் வாரா நின்றான் –
அவனுக்கு சில நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்ளுகிறோம் -என்றால் போலே சிலவற்றைச் சொல்ல நினைவும் சொல்லும் ஒத்து இராத அவன் கருத்தை அறிந்த சஞ்சயன் –வருகிறவன் அங்கண் ஒத்தவன் அல்ல காண்-
அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்றான்
அதாவது -தான் குடிக்கும் தண்ணீரை ஒரு குடத்தில் நிறைத்துக் குளிர வைக்கக் கடவனே-
அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும் -அதுக்கும் மேல் ஒன்றுமே வேண்டா -தன் க்ருஹத்திலே அதிதி வந்து புகுந்தால் காலைக் கழுவதுவதாக சாமான்ய சாஸ்திரம் வித்தித்து வைத்தது இறே-அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்க அமையும் -அவனான வாசிக்கு விசேஷித்து ஒன்றுமே செய்ய வேண்டா –நெடும் தூரம் வந்தவனை குசல ப்ரஸ்னம் பண்ணக் கடவது இறே -அவ்வோபாதி ஓர் இன் சொல் சொல்ல அமையும் -ஏற்றமாக ஒன்றுமே வேண்டா இவ்வளவுகளை ஒழிய மாற்று ஒன்றை இச்சியான் காண் அவன் என்கை
இத்தால் நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையும் ஒரு சரக்காக நினைத்து இருக்குமோ வல்லையாகில் உன் ஆபி முக்ய ஸூசகமாக இவ்வளவுகளைச் செய்யப் பார் -என்றபடி –

பரிவதில் யீசனை யென்று தொடங்கி –புரிவதுவும் புகை பூவே -1-61-என்று ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை சம்சாரன் முக்தராய் அனுபவித்து அவ் வனுபவ ஜனித ப்ரீதியாலே -ஏதத் சாம காயன் நாஸ்தே என்கிறபடியே பாடி விஸ்திருதராகையைப் பெற வேண்டி இருப்பீர்-உபகரணங்களில் குறைவு பார்த்து அகலுகை தவிர்த்து- அசம்ஸ்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒரு படி பிரயோகித்து -பின்னை அவனுக்கு அருள் கொடையாகக் கொடுப்பதுவும் -ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் இவ்வளவும் அமையும் கிடி கோள் அவனுக்கு என்று -அவனுடைய ஸ்வ ஆராதயையை ஸூ ஸ்பஷ்டமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

—————————————

பூர்ண விஷயம்--136- என்று தொடங்கி இவ்வளவும் ப்ரஸ்க்த அனு பிரஸ்க்தமாக வந்த இத்தனை இறே – பிரபத்தி வை லக்ஷண்யம் இறே கீழே சொல்லப்பட்டது
ஆகையால் அதுக்கு இன்னம் ஒரு வை லக்ஷண்யம் சொல்லுகைக்காக சித்த உபாயத்துக்கும் பலத்துக்கும் உண்டான ஐக்கியத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –140-

புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –

அதாவது கோவை வரவழைத்து -பின்னை அதுக்கு தாரகாதிகளை இட்டு நோக்க நினைப்பார் தத் போக்யமான புல்லு தன்னையே தத் வசீகர சாதனமாக முன்னிட்டு அழைத்துக் கொண்டு அது தன்னையே மேலிடும் அளவில் பல சாதனங்களுக்கு
பேதம் இல்லாதாப் போலே –விலக்ஷண குண விக்ரஹ விசிஷ்டனான தானே முந்துற இவனைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு உபாயமுமாய் பின்னை என்றும் ஓக்க இவனுக்கு உபேயமாய் இருக்கையாலே பல சாதனங்கள் இரண்டும் ஏக வஸ்துவாய் இருக்கும் என்கை –

—————————————————–

இத்தால் பிரபத்திக்கு வை லக்ஷண்யம் பலித்த படியே அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –141-

ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –

அதாவது -ஸாத்ய வஸ்து தானே சாதனம் ஆகையால் -தத் வரண ரூபமான இது தேவையாய் இராதே (விதி விதித்தது என்று இல்லாமல் ராக ப்ராப்தையாய் )ஸூக ரூபமாய் இருக்கும் என்றபடி
அன்றிக்கே –இன்னுமும் பிரபத்திக்கு ஒரு வைலக்ஷண்யம் அருளிச் செய்கிறார் -புல்லை -இத்யாதியாலே –அதாவது புல்லைக் காட்டி தேனுவை அழைத்துக் கொண்டு பின்னை அப் புல்லையே இடும் அளவில் பல சாதனங்களுக்கு பேதம் இல்லாதாப் போலே
ஸக்ருத் க்ருத அஞ்சலி -என்றும் -நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அஞ்சலியாதி (ஆதி மானசமும் வாசகமும் )ரூபையான ப்ரபத்தியை முன்னிட்டு ஈஸ்வரனை வசீகரித்தால் பின்னை அவனுக்கு உகப்புக்காகச் செய்யும் அடிமையும் பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந –-என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -(தொழுது இரட்டித்தது சாதனமும் சாத்யமும் )–3–8-4இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியாதி (ஆதி மானசமும் வாசகமும் )வ்ருத்தி விசேஷங்களாலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை – இப்படி பலமானது தானே சாதனமாகையாலே இப் பிரபத்தி தான் தேவை இராதே இவனுக்கு ஸூக ரூபமாய் இருக்கும் என்கை —

ஆக – பிரபத் யுபாயத்துக்கு-134- என்று தொடங்கி இவ்வளவாக ப்ரபத்தியினுடைய தோஷ ராஹித்யமும் குண சாஹித்யமும் சொல்லப் பட்டது

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்