இவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –
சூரணை-217–
ஸ்வசோபி மஹீ பால
ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி-எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-
உத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரமியுமாய் இருந்தானே ஆகிலும்
பகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று
வர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாகச் சொல்லுகையாலே –
பிரம சம்பாவனாதிகளாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து
இங்கன் அன்றாகில் -கீழ்ச் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே
——————————————
ஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜன்மங்கள் இன்னது என்று நிரூபிக்கப் பட்டது கீழே-
அதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் மேலே –
சூரணை -218–
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்தத்தாலே-
அதாவது
அஹங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது – ஜன்ம சித்தமான நைச்யத்தை உடையவராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த ரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை-(தர்சித்து ஸ்பர்சித்து கைங்கர்யம் பண்ண தோஷங்கள் விலகும்)
——————————————-
தத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -219–
சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது ஜன்ம கொத்தை போக வேணும் –
அதாவது
அவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு -அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது
தன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி
————————————-
ஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்கு பரிகாரம் ஏது ?-என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -220–
ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-
அதாவது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர நெடுகப் போகிற வம்ச பிரவாஹத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே யாகிலும்
என்னோடு உண்டான அசாதாரண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்துச் சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என் மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழிப் போகுங்கோள் என்ற இந்தப் பரம ரகஸ்யத்தை –
பக்திர் அஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்று பரம ஆப்தரான தேவர் அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ ?
இப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்
தலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் வர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –
இப் பாட்டிலே அபிஜனாத்ய அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத
விலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்குப் பரிஹாரம் என்று ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை-
(1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும் தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர் இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-)
—————————————-
ஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே
இவனும் விலக்ஷணனாய் விடுமோ என்ன அருளிச் செய்கிறார் —
சூரணை -221–
வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-
வேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளிச் செய்கிறார்-
வேதகப் பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு -பல கால் உருக்கி குளியையாகப் பண்ணி ரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பைப் பொன்னாக்குமாம் போலே ஆய்த்து–
ஜன்ம சித்தமான நைச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தைப் போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –
—————————————————
ஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி இருக்க வேணும் என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -222–
இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —
இவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் என்று
——————————————-
சூரணை-223–
அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈஸ்வரனிலும்
அதிகர் என்றும் நினைக்கை-
ஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிப் படியே-
தனக்கு சர்வ பிரகார உத்தேஸ்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –
சம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே ஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
தன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே -அத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
ஈஸ்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே -கர்ம அனுகுணமாக லீலையிலும் (உம்மைத் தொகை போகத்திலும் -ஆழ்வார்கள் )விநியோகம் கொள்ளக் கடவனாய்- ஸ்வ சரண கமல சமாஸ்ராயண தசையில் புருஷகாரம் வேண்டும் படியாய் -உகந்து அருளின நிலங்களிலே – சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே இருக்கும் அவனைப் போல் அன்றியே -ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் (அவன் கர்ம அனுகுணமாக நன்மை விநியோகம் கொள்ளுகிறான் அன்றோ -ஸ்வரூபம் ஸ்வா தந்திரமாக இருக்க இப்படி இருப்பது ஸ்வரூப விருத்தம் அன்றோ-பரதந்த்ரமாய் இருந்து வைத்தும் தமது ஆச்சார்யருக்கு கைங்கர்யமாக நம்மை விநியோகம் கொள்ளும் ஆச்சார்யர் )-ஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு போரும் அவர்கள் ஆகையாலே -ததிகர் என்று பிரபத்தி பண்ணுகை-
————
ஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –
ஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -224-
ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –
அதாவது ஆச்சார்ய சாம்ய பிரபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று உபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-
————————————
இப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -225-
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –
அதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை அபசாரம் ஆனாப் போலே –
இப்படி கௌரவித்து நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி
————————————–
இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -226-
இவ் வர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –
இவ் வர்த்தம் என்று -கீழ் விஸ்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –
மகா பாரதத்தில் -மத் பக்தம் ஸூத்திர சாமான்யத் அவமன்யந்தி யே நரா நரகேஷ்வ வதிஷ்டந்தி வர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணேஷு தே ஸூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –
மத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-ஸூயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம் மத் கதா ஸ்ரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ஸ்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோப ஜீவதி- பக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித
நமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ஸ்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ யதாக்யகம்-இத்யாதியாலும் –
பல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்
இதிகாச உத்தமத்தில் -ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வபசம் ததா வீஷதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் – பாகவத பிரபாவம் பிரகீர்திதம் –
இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
ஸ்ரீ பாகவதத்திலே – “ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி விகீநஸ்து யதிச்ச ஸ்வபதாசம :”.
“விப்ராத் த்விஷட் குணயுதாத் அரவிந்த நாப பாதார விந்த விமுகாஸ் ஸ்வபசம் வரிஷ்டம்–
மந்யே ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த ப்ராண: புநாதி ஸகலம் நது பூரி மாந:” இத்யாதிகளாலே பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –
லைங்கத்திலும் “வைஷ்ணவானாம் விசேஷோஸ்த்தி விஷ்ணோ ராயாதனம் மஹத
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஹிருதயாதி மநீஷிணாம் . ய: பஸயதி ஸூபாசாரம் வைஸ்ணவம்
வீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குலேஜாதம் பிரணமேத் தண்டவத்புவி ” இத்யாதியாலே – பாகவத வை பவம் ப்ரதிபாதிதம்-
இப்படி பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம் பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-
இதிகாசாதிகளில் உபாதித்த வசனங்களிலே–
1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –
2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –
3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்களுமாய் -பரம சேஷியான ஈஸ்வரனோபாதி பூஜ்யரும் ஆவர்கள் என்னும் இடமும் –
4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –
5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர் அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –
6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –
7–அவர்களைக் கண்டால் தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச புராணங்களிலும் –
நம் ஆழ்வார்
பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –
பகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே தமக்கு சேஷிகள் என்னும் இடத்தை பிரதி பாதித்து அருளும் இடத்தில் –
யவரேலும் அவர் கண்டீர் –
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் –
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று
ஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு மிகவும் உத்தேஸ்யர் என்று அருளிச் செய்த -பயிலும் சுடரொளி யிலும் –
கொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு என்பது என் அந்தோ -என்று தொடங்கி –
பாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –
சயமே அடிமை தலை நின்றார் –
அவன் அடியார் –
மணி மலை போல் கிடந்தான் தமர்கள் –
கோதில் அடியார் –
நீக்கமில் அடியார் –
என்று பகவத் ஸூவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு ) தோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –
திரு மங்கை ஆழ்வார் –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே ) அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் (கீழே பயிலும் சுடரொளி ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு )எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -ஸூரிகளிலும் கைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –அவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும் இனியதாக நின்றது –அவர்களைக் கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –அவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –
அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –
என்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும் ஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் –(நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே)
கடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று
ஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை
அனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மைக் கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –
அவர் எங்கள் குல தெய்வமே -என்று –
உகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று
அருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
மெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –
இத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவஸ்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
த்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் – எத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –
1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் – திரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸா வாஹ்யர் என்றும் –
2-ஜன்மத்தால் வந்த தண்மையே அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்
உடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –
3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு
சம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ஸ்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –
4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-ஜன்ம விருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு ஸர்வேஸ்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதி க்ரஹங்களுக்கு அர்ஹர் ஆவார் என்றும் –
5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை -பகவத் பிரபாவத்தால் வந்த வைலஷண்யத்தைப் புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி தாழ நினைத்தார்கள் ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –
6-இப்படி பிரசாதித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம் ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை திர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -(கஜேந்திர ஆழ்வான்) -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –
விசத தமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply