Archive for April, 2012

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -289/290/291/292/293/294/295/296/297/298/299/300/301/302/303/304/305/306/307–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 20, 2012

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

முன்பு எத்தனை தசை உண்டு என்னும் மா காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

————————————-

அந்த நாலு தசையும் தான் எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

1-ஞான தசையாவது -ஆசார்ய உபதேசத்தாலே தனக்கு ஞானம் பிறந்து செல்லுகிற தசை –
2-வரண தசையாவது -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை தனக்கு உபாயமாக வரிக்கை-
3-பிராப்தி தசை யாவது -சம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை –
4-ப்ராப்ய அனுபவ தசை -யாவது -ப்ராப்ய பூதனான அவனைக் கிட்டு அனுபவிக்கிற தசை –
இவ் அனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் இறே பரம புருஷார்த்தம் –

பிரதம அபேஷிதமான தத்வ ஞானமும் –
ஞான பலமான உபாய வரணமும் –
வரண பலமான பிராப்தியும் –
ப்ராப்தி பலமான அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமுமாய் இறே க்ரமம் இருப்பது –

ஆகையால் கைங்கர்ய தசை சரம தசையாய் –
பூர்வ தசைகள் நாலும் இதிலே வந்து  யேறுகைக்கு இட்ட படி ஒழுங்காய் இருக்கும் –

——————————————————-

இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்கும் படியை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடுகை யாவது -ஆசார்யன் தனக்கு மேன்மேல் அஞ்ஞாத ஞாபனம் பண்ணும்படி -தத்வ ஹித புருஷார்த்தங்களில்  தன்னுடைய அஞ்ஞானத்தை பலகாலம் விஞ்ஞாபிக்கை –

வரண தசையில் அ பூர்த்தியை முன்னிடுகை யாவது-நோற்ற நோன்பு  இலேன் –
ந தர்ம நிஷ்டோஸ்மி –
சத் கர்ம நைவ கில கிஞ்சன சஞ்சி நோமி -(ஸ்ரீ வைகுண்டம் ஸ்தவம் 88)இத்யாதி படியே
பேற்றுக்கு ஹேதுவாகக் கொள்ளலாவதொரு ஸூஹ்ருதாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற -ஆகிஞ்சன்யத்தை புரஸ்கரிக்கை

ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடுகையாவது -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராதே
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் இனி-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -இத்யாதிப் படியே விலம்ப அசஹத்வ நிபந்தனமான தன்னுடைய க்லேச அதிசயத்தை தர்சிப்பிக்கை –

ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடுகை யாவது –
பெரு விடாயனுக்கு கொடுத்த தண்ணீர் ஆராதாப் போலே -அனுபூதாம்சத்தால்
திருப்தி பிறவாதே மென்மேலும் தனக்கு விளைந்து செல்கிற அனுபவ அபிநிவேசத்தை
பிரகாசிப்பிக்கை –

ஆக –
ஞான தசை முதலான நாலு தசையிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குகையாவது –
இவ்வோ ஆகாரங்களை முன்னிடுகை என்று கருத்து –

———————————————-

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் -இவனுக்கு இவை சமிப்பது எத்தாலே என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆச்சார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்த்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

அதாவது –
தத்வ ஹித புருஷார்த்தங்களில் இவனுக்கு உள்ள அஞ்ஞானம் ச வாசனமாக நிவ்ருத்தமாவது -அவற்றை அலகு அலகாக தர்சித்து –
அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகைக்கு ஈடான ஆசார்யனுடைய  ஞானத்தாலே –

பேற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள சத் கர்மாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற அபூர்த்தி சமிப்பது -இத் தலையில் உள்ளது ஒன்றும் அபேஷியாமல்
கார்யம் செய்யும் உபாய பூதனான ஈஸ்வரனுடைய ஸஹகாரி நைர பேஷ்யம் ஆகிற பூர்த்தியாலே-

அவலம்பேன திருவடிகளைப் பெறாமையாலே உண்டான ஆர்த்தி தீருவது – ஆர்த்தி கண்டால் ஆற்ற மாட்டாதே -அப்போதே கார்யம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பான -பர துக்க அசஹிஷ்ணுத்வம் ஆகிற அவனுடைய கிருபையாலே –

அனுபவ தசையில் அநு ஷணம் பிறக்கும் அபிநிவேசம் அடங்குவது -அவ் விஷயத்தை மென்மேலும் அனுபவிக்கையாலே -என்கை –

—————————————————

இவ் அஞ்ஞா நாதி சதுஷ்டயத்துக்கும் ஹேது எது என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

அதாவது –
ஞான தசையில் -முன்னிடுகிற அஞ்ஞானத்துக்கு மூலம் -அநாதி கால க்ருத்ய  அகரண அக்ருத்ய கரண ஆதி ரூபமான அபராதம்

வரண தசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதானம் -பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கலாவது ஒன்றும் தனக்கு இல்லாமையை தர்சிப்பிக்கைக்கு உடலான ஞான பூர்த்தி 

ப்ராப்தி தசையில் முன்னிடுகிற ஆர்த்திக்கு ஹேது -ப்ராப்ய வஸ்துவை சீக்கிரமாகக் கிட்டப் பெறாமை யாகிற அலாபம் –

ப்ராப்ய அனுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசதுக்கு காரணம் அனுபவித்த அளவால் திருப்தி பிறவாதே மேன்மேலும் ஆசைப்படப் பண்ணும் அவன் வடிவழகு -என்கை –

——————————————-

ஆர்த்தி அபிநிவேசம் இருக்கும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று துடங்கி
திருவாணை நின் ஆணை கண்டாய் -என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரம  பக்தி தலை எடுத்தது -என்னும் அளவாக ஆர்த்தி இருக்கும் படியையும் –

செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே
முன்புற்றை அழகை அனுபவித்து -என்று துடங்கி -தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -என்னும் அளவாக அபிநிவேசம் இருக்கும் படியையும்
அந்த பிரபந்தத்திலே ஸூஸ்பஷ்டமான அருளிச் செய்தார் இறே –

ஆக
கைங்கர்ய தசைக்கு முன்னே நாலு தசை உண்டு-289- என்றும் –
அவை தான் இன்னது  290-என்றும் –
அவ் வவ்   தசை அநு குணமான அஞ்ஞா நாதிகளை முன்னிடவே
அவ் வவ் தசைகளில் ஸ்வரூப உஜ்ஜ்வலம் ஆம்-291- என்றும் –
அவ் வஞ்ஞாநாதிகளைப் போக்குமவை ஆச்சார்ய ஞானாதிகள்-292 என்றும்
அவ் வஞ்ஞாநாதிகளுக்கு நிதானங்களும் சொல்லிற்று ஆயிற்று -293

—————————————-

இந்த தசை சதுஷ்டய பிரசங்கத்திலே -இவனுடைய குண சதுஷ்ட்யத்தையும்
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

அதாவது
இவ் வதிகாரிக்கு ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்யதுக்கு உடலாக கீழ்ச் சொன்ன தச சதுஷ்ட்யம் போலே – ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான குண சதுஷ்டயமும் உண்டு என்கை –

——————————————

அவை தான் எவை என்னும் ஆகாங்ஷையிலே எந்த எந்த குணங்கள் என்று அருளிச் செய்கிறார் –

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

—————————————-

இவனுடைய குண சதுஷ்டயம் சொன்ன பிரசங்கத்திலே ஈஸ்வரனுக்கும் இவை உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

இது தான் அவனுக்கும் உண்டு -அவன் -என்று  கீழ்ச் சொல்லிக் கொண்டு வந்த
ஈஸ்வரனை பராமர்சிக்கிறது –

——————————————–

இப்படி இருந்துள்ள இருவருடைய குணங்களுக்கு விஷயங்கள் எவை என்ன அவற்றை விபஜித்து அருளிச் செய்கிறார் –

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

கீழ் எடுத்த அடைவில் அன்றிக்கே  ஈஸ்வர குண விசேஷங்களை  முந்துற அருளிச் செய்தது
சேதன குண விசேஷங்களைச் சொல்லி  முடித்தால்-அதின் தோஷத்தை சிஷிதாதா தசா துர் வித்யத்தை விஸ்தரேண அருளிச் செய்கைக்காக –

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் -என்றது
-யஸ் சர்வஜ்ஞ என்றும் –
சகஸ்ராம்ஸூ -என்றும் -சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனான அவனுடைய திவ்ய ஞானத்துக்கு விஷயம் -அத்வேஷ ஆபி முக்கியம் தொடங்கி-இச் சேதனன் பக்கல் உண்டான ஆத்ம குணம் -என்கை

அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் -என்றது –
அவிஞ்ஞாத   சகஸ்ராம்ஸூ -என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ்ஸூ கமல லேஷணே சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்திதித-என்றும் சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே -அவிஜ்ஞாதாயாவாய் இருக்கும் அவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம்-பிரக்ருதி வஸ்யனான  இவன் (புத்தி பூர்வகமாக)பண்ணும் அக்ருத்ய கரணாதி தோஷம் என்கை –

சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் -என்றது -பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிற படியே சர்வ சக்தியான
அவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் ஆகிற சக்திக்கு விஷயம் –
இவனுடைய சகல அநிஷ்டங்களையும் போக்கி -ஸ்வரூப  அநு குணமான சகல இஷ்டங்களையும் கொடுக்கிற -ரஷணம் -என்கை –

அசக்திக்கு இலக்கு பரித்யாகம் -என்றது
அப்படி சர்வ சக்தியான அவனுடைய அசக்திக்கு விஷயம் துஸ் சஹமாக இவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கை விடுகை -என்கை-

——————————————

இப்படி ஈஸ்வர குணங்களை அருளிச் செய்து -மேல் சேதன குண விஷயங்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் -என்றது –
இச் சேதனனுடைய ஞானத்துக்கு விஷயம் -மகோ உபாகாரனான ஆசார்யனுடைய சத் குண சமூகம் -என்கை —

அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் -என்றது –
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் -ஆசார்யன் திருமேனி ஸ்வபாவமாய் ஆகந்துகமாய் உள்ள தோஷம் என்கை –

சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் -என்றது-
இவன் பிரவ்ருத்தி சக்திக்கு விஷயம் -ஸ்வ ஆசார்யனுக்கு உகப்பாக செய்யும் கைங்கர்யம் என்கை

அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் –என்றது –
இவனுடைய அசக்திக்கு விஷயம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளான (ப்ரபந்ந ) )சாஸ்திர-  நிஷித்தங்களில் இவனுடைய அனுஷ்டானம் -என்கை –

————————————————

இப்படி இருந்துள்ள நிஷித்தத்தின் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

அதாவது
உபாதேயமான குண சதுஷ்டயம் போலே -ஹேயமான நிஷித்தம் தானும் சதுர் விதமாய் இருக்கும் -என்கை –

———————————

அந் நாலு படியான அது தான் எது என்னும் -அபேஷையிலே- அவை தன்னை உத்தேசிக்கிறார் -(நாமங்கள் மட்டுமே பெயர் அளவிலே அருளிச் செய்கிறார் )

சூரணை-301-

அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

———————————————–

இவற்றினுடைய வேஷம் தான் என்னும் ஆகாங்ஷையிலே -இத்தை அடைவே விவரிக்கிறார்

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

பர ஹிம்சை யாவது -ந ஹிம்ஸ்யாத் சர்வ பூதானி -என்கிற விதியை அதிக்ரமித்து பண்ணும் பிராணி பீடை –

பர ஸ்தோத்ரம் ஆவது -ப்ராப்த விஷய ஸ்தோத்ர அர்ஹமான வாக்கைக் கொண்டு – அப்ராப்த விஷயங்களை  ஸ்துதிக்கை –

பர தார பரிக்ரகம் ஆவது -பிறர்க்கு அனந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ஸ்வீகரிக்கை –

பர த்ரவ்ய அபஹாரம் ஆவது -பிறர் உடைமை யானவற்றை -அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க -பிரகாசமாகவாதல் -அப்ராகாசமாகவாதல் -க்ரஹிக்கை-

அசத்திய கதன -மாவது -யாதாத் த்ருஷ்டார்த்த விஷயமும் -பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தைச் சொல்லுகை –

அபஷ்ய பஷணம் ஆவது -ஜாத்ய ஆஸ்ரம நிமித்த துஷ்டங்களாய் கொண்டு -தனக்கு அப்யபஷம் அன்றிக்கே இருக்கும் அவற்றை பஷிக்கை –

துடக்கமானவை -என்றது –
பர த்ரவ்யேஷ வபித்த்யானம்  மனசா அநிஷ்ட சிந்தனம் விததாபி நிவேசஸ் ச த்ரிவிதம் கர்ம மானஸம்
பாருஷ்ய மன்ரு தஞ்சைவ பைசுநஞ்சைவ சர்வச அநீ பத்த ப்ரலாபஸ் ச வான்மயம் ஸ்யாஸ் சதுர்விதம்
அதத்தா நாமு பாதானம் ஹிம்சா சைவ அவிதானத பர தாரா அபஹாரஸ் ச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் -இத்யாதிகளாலே
மனு ஆதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப் படுகிறவை அநேகம் ஆகையாலே-

———————————————

அநந்தரம் பகவத் அபசாரத்தை விவரிக்கிறார் –

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை

தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையாவது –
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி நோஞ்ஞேயா சர்வ கர்ம பஹிஷ் க்ருதா யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபி மன்யதே சயாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்று தேவதாந்தரங்களோடு ஈஸ்வரனை சம புத்தி பண்ணலாகாது என்று சாஸ்திரம் சொல்லா நிற்க –
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜாநாநாம் சர்வாத்மா -தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -நதஸ் சமஸ் சாப்ப் யதிகச்ச த்ருஸ் ஸயதே -என்கிறபடியே ஸ்வ இதர சகல நியாமகனாய் -சமாநாதிக ரஹீதனான -ஈஸ்வரனை -அங்கான் அந்ய தேவதா -என்று -தச் சரீர தயா பிரமாதி தேவதைகளோடு சம புத்தி பண்ணுகை-

ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மனுஷ்ய சஜாதீயதா புத்தி -ஆவது –
அஜோபிசந் நவ்யயத்மா பூதானாம் ஈஸ்வரோபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாமி யாத்மா மாயா -என்கிறபடியே
அஜகத் ஸ்வாபனாய்-அப்ராக்ருத -திவ்ய சமஸ்தானத்தை -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு –
துயரில் மலியும் மனிசர் பிறவி யில் தோன்றி -நிற்கிற நிலை அறியாதே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின
கர்ப்ப வாச -ஜனன -சோக -மோஹாதிகளை இட்டு -கர்ம வஸ்யரான மனுஷ்யரோடு சஜாதீயனாக நினைக்கை –

வர்ண ஆஸ்ரம விபரீதமான  உபசாரம் ஆவது -தத் ஆராதன தசையில் -த்ரை வர்ணிக அர்ஹமான வைதிக மந்தரங்களாலே  சதுர்த வர்ணரானவர்கள் ஆராதித்தல் -உத்தம ஆஸ்ரமிகள் முதலானோர் க்ருஹஸ்தவத் தாம்பூல நிவேதனாதிகளை பண்ணுதல் துடக்கமானவை –

அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் ஆவது -தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -இத்யாதிப் படியே
ஆஸ்ரிதர்க்கு அபிமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை -திருமேனியாக அங்கீகரித்து -அதிலே அப்ராக்ருத விக்கிரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணி எழுந்து அருளி இருக்கிற இத்தை அறியாதே -மாத்ரு யோனி பரிஷிகரைப் போலே -இது இன்ன த்ரவ்யம் அன்றோ என்று விக்ரக உபதானத்தை நிரூபிக்கை-

ஆத்ம அபஹாரம் ஆவது –
யோ அந்யதா சந்த மாத்மான மன்யதா ப்ரதிபத்யதே கிந்தே ந நக்ருதுதம்பம் சோரேணே ஆத்ம அபஹாரிணா –என்று
சகல பாப மூலமாகச் சொல்லப் படுகிற -பகவத் ஏக சேஷ பூதமான ஆத்ம வஸ்துவில் -ஸ்வதந்திர புத்தி –

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றை-பிரகாசமாகவாதல்  -அப்ரகாசமாகவாதல் -தனக்கு ஆக்குகை-

துடக்கமானவை -என்றது –
இன்னும் இப்படி க்ரூரமாக சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவும் உண்டாகையாலே
த்வா த்ரிம்சத அபசாராதிகளும்-(32 அபசாரங்கள் )– உண்டு இறே

———————————————

கீழ் சொன்னவற்றோபாதி -பகவத் த்ரவ்ய அபஹாரமும் பகவத் அநிஷ்டமாய் இருக்குமோ
என்கிற சங்கையில் -தான் அபஹரிக்கிற மாத்திரம் அன்றிக்கே-அபஹரிப்பார்க்கு
சஹகரிக்கை முதலானவையும் அவனுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தல் தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும் அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

தான் அபஹரிக்கையாவது -நேர தானே இதுக்கு கர்த்தாவாகச் செய்கை –

அபஹரிப்பார்க்கு  சஹகரிக்கை யாவது -நாம் அபஹரிக்கிறோம் இல்லை என்று நினைத்து அபஹர்த்தாக்களுக்கு அனுமத்யாதிகளாலே சஹாயம் பண்ணுகை –

அவர்கள் பக்கலிலே யாசிதமாக பரிக்கிரக்கை யாவது -நாம் இவ் அபஹாரத்துக்கு கூட்டு அன்றே என்று நினைத்து தான் அவர்கள் பக்கல் சிலவற்றை அபேஷித்து வாங்கிக் கொள்ளுகை

அவர்கள் பக்கலிலே அயாசிதமாக பரிக்கிக்ரகை யாவது-நாம் அபேஷித்திலோம் என்று நினைத்து அவர்கள் தரும் அவற்றை வாங்குகை

பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும் -என்றது இவை இத்தனையும் -இவனுடைய உஜ்ஜீவ பரனாய் கிருஷி பண்ணிப் போரும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்துக்கு அநபிமதமாய் இருக்கும்  என்கை

——————————————

அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –

அதாவது
பர உத்கர்ஷம் கண்டு சஹியாமைக்கும் ஸ்வ உத்கர்ஷ புத்திக்கும் உடலான அஹங்காரம் அடியாகவும் – அவர்கள் வைஷ்ண ஆகாரத்தைப் புத்தி பண்ணி -இவர்கள் ஆசைப் பட்டது ஒன்றாகில் இவற்றை விட்டுப் பற்றுவோம் என்று இருக்க மாட்டாமல் -அர்த்த காமங்கள் அடியாகவும் – ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் விரோதம் -என்கை —

——————————————

அநந்தரம் அசஹ்ய அபசாரத்தை விவரிக்கிறார் -(பகவானாலும் சஹிக்க முடியாமல் இருப்பது அன்றோ -)

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அல்லாத அபசாரங்களில் காட்டிலும் -ஈஸ்வரனுக்கு இது அத்யந்த அசஹ்யமாய்
இருக்கையாலே -அசஹ்ய அபசாரம் -என்கிறது –

(அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-பவத் அஸஹநீய ஆகஸீ—ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்-)

நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்  அசஹமானனாய் இருக்கை யாவது –
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தனமாக அன்றிக்கே -ஹிரணியனைப் போலே பகவத் விஷயமும் பாகவத விஷயமும் என்றால் காண கேட்க பொறாதபடி இருக்கை-

ஆசார்ய அபசாரம் ஆவது -அவன் அருளிச் செய்த அர்த்தத்தின் படி அனுஷ்டியாமையும் -அவன் உபதேசித்த மந்திர தத் அர்த்தங்களை -அல்ப பிரயோஜனங்களை  நச்சி
அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் -துடக்கமானவை –

தத் பக்த அபசாரமாவது -ஆச்சார்ய பக்தரான ச ப்ரமசாரிகளுடன் ஐக ரஸ்யம் உண்டாய் வர்த்திக்க வேண்டி இருக்க -அது செய்யாமல் –அவர்கள் திறத்தில் பண்ணும் அஸூயையும் அவஞ்சையும்-அவமரியாதையும் – துடக்கமானவை –

————————————————

இப்படி அக்ருத்ய கரணாதி சதுஷ்டைத்தையும் அடைவே விவரித்து அருளி
இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் -இவை தான் இன்னதுக்கு
விரோதியாய் இருக்கும் என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

ஓன்றுக்கு ஓன்று க்ரூரங்களாகையாவது –
அக்ருத்ய கரணத்தில் -பகவத் அபசாரம் க்ரூரமாய் -அதிலும் பாகவத அபசாரம் க்ரூரமாய் -அது தன்னிலும் அசஹ்ய அபசாரம் க்ரூரமாய் இருக்கை-
இதுக்கடி பூர்வங்களில் காட்டில் உத்தர உத்தரங்களில் -பகவன் நிக்கிரஹம் அதிசயித்து இருக்கை –

அக்ருத்ய கரணத்தில் -ஸ்வ ஆஞ்ஞா அதிலங்கனம் அடியான சீற்றம் இறே-

அவ்வளவு அன்றிக்கே -இவ் ஆத்மாவுக்கு ஆத்மாவாய்-அதின் சத்தையே பிடித்துக் கொண்டு போரும் தன் திறத்தில் அபசாரத்தால் வரும் சீற்றம் –

அவ்வளவும் அன்று இறே -ஞாநீத்வாத்மைவ – என்கிற படியே -தனக்கு உயிர் ஆக நினைத்து இருக்கும் பாகவத விஷயங்களில் அஹங்காராதிகள் அடியாக பண்ணும் அபசாரத்தால் வரும் சீற்றம் –

அது தன்னளவும் அன்று இறே நிர் நிபந்தனமாக தன் பக்கலிலும் தன் அடியார் பக்கலிலும் ஆதல் -உபய வைபவ ஞாபகனாய் – உபய அபிமதனான ஆசார்யர் பக்கலிலே ஆதல் -மூவருக்கும் அபிமதரான தத் பக்தர் பக்கலிலே ஆதல் -செய்யும் அபதாரத்தால் வரும் சீற்றம்

ஆகையால் ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாய் இருக்கும் –

அக்ருத்ய கரணத்திலே-பகவத அபசாராதிகளும் அந்தர் பவிக்குமதாய் இருக்க தனித் தனி இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது இவற்றினுடைய க்ரூர விசேஷங்களைப் பற்ற இறே –

உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாய் இருக்கை -யாவது –
இவ் ஆத்மாவினுடைய உஜ்ஜீவனத்தில் ஒருப்பட்டு -மென்மேலும் கிருஷி பண்ணுகைக்கு உறுப்பான எம்பெருமானுடைய கிருபைக்கும் –
எப்போதும் இவனுக்கு பிராப்யமாய் இருந்துள்ள அவனுடைய முகோல்லாசத்துக்கும் இலக்காய் இருக்கை –

இரக்கம் உபாயம்- இனிமை உபேயம்-என்னக் கடவது இறே –

ஆகையால் இவ் வக்ருத்ய கரணாதிகள்-நீரிலே நெருப்பு எழுமா போலே -அவன் திரு உள்ளத்திலே நிக்ரஹத்தைக் கிளப்பி -அவனுடைய கிருபையும் உகப்பும் –
இவன் பக்கல் அறும்படி பண்ணுகையாலே -அவற்றை உபாய உபேய விரோதிகள் என்னத் தட்டில்லை –

தனக்குத் தானே தேடும் நன்மை-160 -என்று துடங்கி நமஸ் சப்தார்த்தை விஸ்தரேண பிரதிபாதிக்கையாலும் –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயமும்-243 -என்று உகந்து அருளின நில பிரசங்கத்தாலும் –
மேலே -பகவத் கைங்கர்யமும்-274 -என்கிற இடத்தில் -பகவத் சப்தத்தாலும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி பிரதிபாதகமான ஸ்ரீ மத் பத நாராயண -பதார்த்தங்களை ஸூசிப்பிக்கையாலும் –
244-258-மங்களா சாசன பிரகரணத்தாலும்-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும்
பகவத் கைங்கர்யமும் -274-என்று துடங்கி கிஞ்சித் கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது-286- -என்னும் அளவும் சதுர்த்த்யர்தத்தை அருளிச் செய்கையாலும் –
நிஷித்த சாதுர்வித்ய பிரதி பாதன முகேன ப்ராசங்கிகமாக-மீளவும் நமஸ் சப்தார்த்தை பேசுகையாலும்-
இவ்வளவும் உத்தர கண்டார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆக-
இப் பிரகரணத்தால்-
கீழ் உக்த உபாயத்தைக் கொண்டு-79-வரை -உபேயத்தை பெரும் சேதனனுக்கு
உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும்-
மேல் 115-133 வரை -பிரபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும் –
பிரபத்தியின் ஸ்வரூப அனுகூலத்வாதியையும் –
ஸ்வ கத ஸ்வீகார அனுபாயத்வத்தையும் –
பரகத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
தத் பிராபல்யத்தையும் –
அவனே ஸ்வீ கரிக்கும் இடத்தில் புருஷகாரத்தை முன்னிடும் படியையும் –
உபயரும் முன்னிடும் அதுக்கு பிரயோஜன விசேஷங்களையும் –
உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலும் -இவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் –
ஸ்வ தோஷ நிவ்ருத்தியும் –
பர அனுபவ விரோதியாம் படியையும் –
மேல் 160-தன்னால் வரும் நன்மை அவனால் வரும் நன்மைக்கும் உள்ள வாசியையும் –
ஈஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் அத்தையும் –
தன்னைத் தான் நசிப்பிக்கும் பிரகாரத்தையும் –
அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்தும்
இவன் ஸ்வரூபத்தை நசிக்கும் படியையும் –
பாகவத அபசார க்ரௌர்யத்தையும் –
தத் பிரசங்கத்திலே பாகவத மகாத்ம்யத்தையும் –
இவன் தினசர்யையும் –
தினசர்யோக்தங்கள் அடைய சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு
அபேஷிதமான வஸ்தவ்யாதியையும் –
தத் சரம உக்த கர்தவ்ய ரூப கைங்கர்ய வேஷத்தையும் –
கைங்கர்ய தத் பூர்வ தசைகளிலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியையும் –
இவனுக்கு உண்டான குண சதுஷ்ட்யத்தையும்-
தத் விஷய விபாகத்தையும் –
அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்யத்தையும்
சொல்லுகையாலே –
அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லப்பட்டது –

ஆறு பிரகரணங்களில் மூன்றாவதான -அதிகாரி நிஷ்டா பிரகரணம் முற்றிற்று –
ஒன்பது பிரகரணங்களில் -ப்ரபந்ந தினசர்ய -ஐந்தாவது பிரகரணம் முற்றிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–275/276/277/278/279/280/281/282/283/284/285/286/287/288–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 19, 2012

இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது  சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

கீழ் -என்றது வஸ்தவ்யாதிகளை சொன்ன இந்த கணனையில் என்றபடி –

பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே -என்றது –
பகவான் இவனுக்கு இப்போது வாய் திறந்து ஒன்றை அருளிச் செய்யாமை யாலே –
தத் பிரதிபாதகமான ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் -என்கை

ஆசார்ய கைங்கர்யம் அறிவது -சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் –என்றது –
ஆச்சார்ய விஷயத்தில் ஸூஸ்ருஷா பிரகாரங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திர முகத்தாலும் –
தனக்கு இஷ்ட அநிஷ்டங்கள் இன்னது என்னும் இடத்தை அவன் அருளிச் செய்த வசனத்தாலும் -என்கை –

———————————————————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

இனி மேல் கைங்கர்யம் தன்னை அறிவிக்கைக்காக -கைங்கர்யம் தான் இரண்டு என்கிறார் 

———————————————-
சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

அது ஆவது என்ன  அதாவது இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்கிறார் –

————————————————

இவை தான் இரண்டும் எத்தை அவலம்பித்து இருக்கும் என்ன அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

அதாவது –
கீழ் சொன்ன கைங்கர்ய பிரதிசம்பந்திகள் இருவருடையவும் இஷ்ட  அநிஷ்டங்கள்
இவ் வதிகாரி உடைய வர்ண ஆஸ்ரமங்களையும் -ஆத்ம ஸ்வரூபத்தையும் -பற்றி இருக்கும் -என்கை –
1-இஷ்ட அநிஷ்டங்கள் வர்ண ஆஸ்ரமங்களை பற்றி இருக்கையாவது –
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான தர்மங்களை- பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை இஷ்டமாய் -ஸ்வார்த்த புத்த்யாய்-அநிஷ்டமாய் இருக்கை-

பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை யாவது -லோக சங்கரஹ தயாவாகவும் –
சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும் ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கை –
இவ் வர்த்தத்தை  இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிற இவை சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் அத்தனை 
இப்படி அனுஷ்டியாத போது -பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாச ஹேது வாகையாலே
ஈஸ்வரனுக்கு அநபிமத பூதனாவன் -ஆகையால் யாதொரு அளவாலே லோக
சங்கரஹம் பிறக்கும் -யாதொரு அளவாலே சிஷ்யர் புத்ரருகளுக்கு உஜ்ஜீவனம் உண்டாம்
அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது ஆயிற்று –

பிரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்த தர்மமோபாதி-இந்த நிவ்ருத்த தர்மமும் பிராப்யமாக கடவது –
இவ்விடத்திலே அகரணே பிரத்யவாயம் -எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது -என்று தனி ஸ்லோகத்தில் இவர் தாமே அருளி செய்தார் இறே-

இனி ஸ்வார்த்ய புத்த்யா அனுஷ்டிக்கை யாவது -ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமாக விஹிதமாகையாலே -நமக்கு இவை அனுஷ்டியாது ஒழியில்-
க்ருத்ய அகரண ரூப பாவம் வரும் என்று நினைத்து அனுஷ்டிக்கை –

இஷ்ட அநிஷ்டங்கள் ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கை யாவது –
இச்சை ஸ்வ ரூபம் -என்கிறபடியே -விநியோக தசையில் -சேஷி உடைய இச்சா அநு குணமாக ஸ்வரூபத்தை விநியோகப் படுத்துகை -இஷ்டமாய் –
தட்டுமாறி விநியோகம் கொள்ளும் அளவில் தன்னுடைய சேஷத்வத்தை இட்டு இறாய்த்தல்-
பாரதந்த்ர்யத்தை இட்டு எதிர் விழி கொடாது ஒழிதல் செய்கை அநிஷ்டமாய் இருக்கை –

அங்கன் இன்றிக்கே –
2-இஷ்ட அநிஷ்டங்கள் -இத்யாதி
ஸ்வ  வர்ண ஆஸ்ரம உசிதங்களைச்  செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களைச் செய்கை அநிஷ்டம்-என்றும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமாகச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களைச் செய்கை அநிஷ்டம் 
என்றும் யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
3-ஒவ்பாதிகமாயுமாய்  அநித்யமுமாய்  வர்ண ஆஸ்ரமங்களிலே ஊற்றி இருக்கை அநிஷ்டம்
நிருபாதிக நித்ய சேஷமான ஆத்ம ஸ்வரூபத்தில் ஊற்றி இருக்கை இஷ்டம் -என்றும்
யோஜிக்கவுமாம் –

இங்கன் ஊற்றத்தைப் பற்றிச் சொல்லுகை அன்றிக்கே அநிஷ்டம் வர்ண ஆஸ்ரமத்தைப் பற்றி இருக்கும் –
இஷ்டம் ஆத்ம ஸ்வரூபத்தை அவலம்பித்து இருக்கும் என்று இங்கனே விபஜித்து -வர்ண ஆஸ்ரமத்தை அநிஷ்ட கோடியாக சொல்லப்  பார்க்கில் –
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஞா ஆஸ்தா முல்லங்க்ய வர்த்த -ஆஜ்ஞாச் சேதி மம த்ரோஹீ மத் பக்தோபி  ந வைஷ்ணவ –என்றும் –
அபிப்லவாய தர்மாணாம் பால நாயகுலசய ச ஸங்கரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ் ததாப நாய ச ப்ரியாய மம விஷ்ணோஸ்ச தேவ தேவஸ்ய சார்ங்கினா மநீஷீ வைதிகாசாரம் மனசாபி நலங்கயேத் யதாஹி வல்லபோ ராஜ்ஞ்ஞோ நதீம் ராஞ்சா ப்ரவர்த்திதாம்
லோகோபயோகி நீம் ரம்யாம் பஹூசஸ்ய விவர்த்திநீம் லங்கயன் ஸூலமா ரோஹேதா அனபேஷாபி தாம்பிரதி–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்– என்றும்
ஏவம் விலங்கயன் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம் ப்ரியோ சன ப்ரியோ ஸௌமே மதா  ஜ்ஞாவ் யதிவர்த்த நாத் உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜே யேன் மனசா ஸூதீ—ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -என்றும்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் அருளிச் செய்த வசனங்களோடும்  பூர்வாச்சார்யர்களுடைய அனுஷ்டானங்களோடும் விரோதிக்கும் இறே-
ஆன பின்பு கீழ்ச் சொன்ன படியே -இவ் வாக்யத்துக்குப் பொருளாகக் கடவது –

—————————————————-

இம் மூன்று யோஜனைக்கும் மேலில் வாக்யத்தோடு சங்கதி என் என்னில் –

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே

பிரதம யோஜனையில்-இப்படி வர்ணாஸ்ரம அனுஷ்டானத்தில் பிரதிபத்தி விசேஷங்களிலும்-ஆத்ம ஸ்வரூபத்தினுடைய விநியோக தசையில் அனுகூல்ய பிரதி கூல்யங் களிலுமாக இஷ்ட அநிஷ்டங்களுக்கு விஷய விபாகம் பண்ண வேணுமோ –
வர்ணாஸ்ரம அனுரூபமாயும் ஆத்ம ஸ்வரூப அனுரூபமாயும் உள்ளவற்றைச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களான அக்ருத்யாதிகளைச் செய்கை அநிஷ்டம் என்றாலோ என்ன
அருளிச் செய்கிறார் -மேல் புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-

த்வதீய யோஜனையில் -இப்படி வர்ணாஸ்ரம விருத்தங்களையும் ஸ்வரூப விருத்தங்களையும் செய்கை அநிஷ்டம் என்று இவனுக்குச் சொல்லித்
தவிர்ப்பிக்கை தான் வேணுமோ என்ன -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-

த்ருதீய யோஜனையில் இப்படி வர்ணாஸ்ரமங்களில் ஊற்றம் அறுத்தால் அக்ருத்ய கரணங்கள் வந்து புகுராதோ என்ன – புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

பகவத் அனுக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சித்தமாக இருக்கச் செய்தேயும் மோக்ஷ விரோதி என்னும் அத்தாலே புண்ணியம் செய்கைக்கு உட்பட அஞ்சுகிற இவ் வதிகாரி
பகவத் நிக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர ஸித்தமாய் நரகாவஹம் என்று சாமான்யரும் உட்படச் செய்யாத பாபத்தை ஒருக்காலும் செய்யான் இறே

————————————————————-

இவன் புண்ணியத்துக்கு அஞ்சும்படியையும் வத்ஸலனான  ஈஸ்வரனுக்கும் இடம் அறும்படி பாப பிரவிருத்தியில்  அந்வயம் அற்று இருக்கும் படியையும் -தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

அதாவது –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கையாலே –
புண்ணியம் பாபங்கள் இரண்டும் மோஷ விரோதி என்று இருக்கும் இவ் வதிகாரி –
நாட்டார்கள் ஹேது என்று  விரும்பி இருக்கும் புண்ணியத்தை -பகவத் பிராப்தி பிரதிபந்தக தயா அநிஷ்டாவஹம் ஆகையாலே  துக்க ஹேதுவான பாபம் என்று நினைத்து -வெருவி இருக்கும் –

ஆஸ்ரிதர் செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளும் அதிமாத்ர வத்சலனான ஈஸ்வரன் –
இவ் வதிகாரி ஏதேனும் ஒரு பாபத்தைப் பண்ணினாலும் -அத்தைக் குற்றமாக நினையாதே நற்றமாக நினைத்துக் கொண்டு இருக்கும் –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -இவ் வதிகாரி பாப பிரவ்ருத்தியில் அந்வயம் அற்று
நியதனாய் வர்திக்கையாலே -பாபத்தை புண்ணியமாகக் கொள்ளும் வத்ஸலனனான அவனுக்கு ஆசைப்பட்டு போம் இத்தனை ஒழிய கிடையாது என்கை –

ஆக –
கீழ் கர்தவ்யமாகச் சொன்ன கைங்கர்யம் அறிவது இன்னத்தாலே–275-  என்றும் –
கைங்கர்யம் தான் த்விவிதம்–276- என்றும் –
அது தான் இன்னது–277-என்றும் –
தத் உபயமும் இன்னத்தை அவலம்பித்து இருக்கும்-278- என்று சொல்லி –
அதில் பிரசங்கிக சங்கா பரிஹாரமும் பண்ணப் பட்டது –

————————————

ஈத்ருச கைங்கர்யம் இவனுக்கு ஏதேனும் ஒரு வழியாலே ஆகிலும் உண்டாக வேணும் -என்று இதனுடைய அவஸ்ய கரணீயத்வத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

பக்தி மூலம் வருகை யாவது -சேஷி உடைய முக மலர்த்திக்கு உறுப்பானவையே செய்து கொண்டு நிற்க வேண்டும்படியான -தத் விஷய ப்ரேமம் அடியாக வருகை –

அல்லாத போது பீதி மூலமாய் வருகை யாவது -அது அன்றிகே ஒழிந்தால் -அகிஞ்சித் கரஸ்யய சேஷத்வ அநுபபத்தி -என்கிறபடியே –
சேஷத்வ விருத்தி இல்லாத போது -சேஷத்வ ஹானி பிறக்கும் என்னும் பீதி அடியாக வருகை –

இதில் பக்தி மூலம் ஆனதுவே முக்கியம் – தத் அலாபத்தில் பீதி மூலம் தாம் ஆகிலும் வேணும் என்றபடி –

———————————————

அது தானும் இல்லா விடில் செய்வது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

அதாவது –
அமுக்யமான பீதி மூல கைங்கர்யம் தானும் இல்லாத போது -கிஞ்சித் கார அபாவத்தாலே -சேஷத்வ ரூபமான அதிகாரத்திலும்  –அதிகாரி சா பேஷமாய் இருந்துள்ள சேஷி உடைய கிருபா ரூபமான உபாயத்திலும் –இவனுடைய அனுகூல விருத்தி சா பேஷமான அவனுடைய முக மலர்த்தி யாகிற உபேயத்திலும்- அந்வயம் அற்று விடும் -என்கை –

————-

ஆக –
கீழ் இரண்டு வாக்யத்தாலும் -கைங்கர்ய அவஸ்ய கர்த்தவ்யமும் -கைங்கர்ய அபாவத்தில்
வரும் அநர்த்த விசேஷங்களும் காட்டப் பட்டது –
ஏவம் வித கைங்கர்யத்தில் சாதன புத்தியைத் தவிர்க்கிறார் மேல் –

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

அதாவது –
இப்படி அவஸ்ய கரணீயமாக -கீழ்ச் சொன்ன கைங்கர்யம் தன்னை பண்ணும் அளவில் –
த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில்-ஏதேனும் ஒன்றுக்கு -சாதனமாக -பிரதிபத்தி பண்ணாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக பிரதி பத்தி  பண்ண வேணும் என்கை –

———————————————

இத்தை விசதீகரிக்கிறார் மேல் –

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

அதாவது -என்றது -இத்தை சாதனம் ஆக்காதே பலம் ஆக்குகை யாவது என்றபடி —
தான் கை ஏலாதே அவனை கை ஏற்கப் பண்ணுகை–யாவது -கைங்கர்யம் பண்ணுகிற தான்  அதுக்கு பலமாக அவன் பக்கலிலே ஒன்றை அர்த்தியாதே -ஸ்வயம் பிரயோஜனமாக
செய்யா நின்று கொண்டு -கைங்கர்யம் கொள்ளுகிற அவனை –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி க்ருணாதிவை ஸ்வயம்-என்கிறபடியே
தன் பூர்த்தி பாராதே -சாபேஷனாய் -விரும்பிக் கைக் கொள்ளும்படி பண்ணுகை –

——————————————-

இவ்வளவும் போராது-தான் கொடுத்ததை அவன் கொண்டதுக்கு பிரத்யு உபகாரம் பண்ணவும் வேணும் என்கிறார் மேல் –

சூரணை -285-

கொடுத்துக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

அதாவது –
தேஹி மே ததாமி தே -என்கிறபடியே -தான் அவனுக்கு ஒன்றை  சமர்ப்பித்து -அவன் பக்கலிலே ஒரு பிரயோஜனம் கொள்ளாதே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்ற
பெரிய ஆழ்வார் திருமகளைப் போலே -தான் சமர்ப்பித்த த்ரவ்யத்தை அவன் அங்கீகரித்த உபகாரத்துக்காக -அப்படி இருந்துள்ளவற்றை –
தன் அபிநிவேச அநு குணமாக நிறையக் கொண்டு வந்து சமர்ப்பியா நின்று கொண்டு -பின்னையும் அடிமை செய்கையும் ஆகிற கைக் கூலி கொடுக்க வேணும் -என்கை –

—————————————–

ஆக இப்படி அநந்ய பிரயோஜனனாய் கிஞ்சித்கரித்தால் ஆயிற்று ஸ்வரூபம்  உஜ்ஜ்வலம் ஆவது என்னுமத்தை -ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

——————————————-

திருஷ்டாந்த பூதரான அவர்கள் கிஞ்சித்கரித்த பிரகாரம் தன்னை அருளிச் செய்கிறார் –

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

1-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு  காசு தரலாகாதோ என்று -மடி சீரைச் சோதிக்கைக்காக
மடியைப் பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –
அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –
புக்தவத்ஸூ த்விஜாக்ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே  ஸூஸீனி குண வந்திச-என்று பாவனத்வ -போக்யத்வ -ப்ரசஸ்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –

2-சுருள் மாறாத பூ ஆவது -அக்நி ஸ்பர்சம் உண்டானால் சுருள் நாறும் படி இறே பூவின் ஸ்வாபம் இருப்பது –
அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற சுருள் நாற்றம் இல்லாதபடி -அநந்ய பிரயோஜனத்வ பரிமள யுக்தமாக இடும் புஷ்பம் –
இப்படி இருந்துள்ள புஷ்பம் இறே -பிரசாத பரமவ் நாதவ் மமஹேக முபாகதவ் தந்யோ அஹம் அர்ச்ச இஷ்யாமீ த்யாக மால்யோப ஜீவன -என்று
விசேஷஜ்ஞர்-(பராசரர்) – ஸ்லாகிக்கும் படி -அத்யாதர பூர்வகமாக ஸ்ரீ மாலா காரர் அவனுக்கு கொடுத்தது –

3-சுண்ணாம்பு தடவாத சாந்தாவது -ஆயிரம் பொன் அழிய கூட்டியும் -சுண்ணாம்பு திவலை பட கெடும் படி இறே -சாந்தின் ஸ்வாபம் -அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற தோஷம் இன்றிக்கே -அநந்ய பிரயோஜனமான சாந்து -இப்படி இருந்துள்ள சாந்து இறே –
ஸூகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர் காத்ர சத்ருசம்  தீயதாம நுலேபனம் -என்று அவன் அர்த்தித்த அநந்தரம்- பூசும் சாந்தாம்படி கூனி கொடுத்தது –

ஆக இப்படி அநந்ய பிரயோஜனமாக கிஞ்சித் கரித்தால் ஆயிற்று -கைங்கர்ய ஆஸ்ரயமான
ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது -என்கை

ஆக –
இவ்வளவும் வஸ்தவ்யாதி கணனையில் -சரம உக்தமான -கர்தவ்ய ரூப கைங்கர்யத்தை
சோதித்து -தாத்ருச கைங்கர்யத்தாலே -ஸ்வரூபம் உஜ்ஜ்வலமாம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

இப்படி அநந்ய பிரயோஜனனாய் கொண்டு கைங்கர்யம் செய்தாலே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது என்று சொன்ன இதிலே – முக்த அவஸ்தையில் -கைங்கர்ய தசையில் ஸ்வரூப உஜ்வல்யமும் அர்த்தாதுக்தம் என்று நினைத்து -இப்படி கைங்கர்ய தசையில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குமோபாதி-ஏதத் பூர்வ தசா விசேஷங்களிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்க வேணும் என்று அருளிச் செய்கிறார் மேல் –

முன்புள்ள தசைகளிலும் -என்றது -கைங்கர்யத்துக்கு பூர்வ தசைகளிலும் -என்ற படி –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -267/268/269/270/271/272/273/274–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 18, 2012

இவர்களுக்கு கர்ம விநாச ஹேது பேதத்தால் வந்த விசேஷங்களை தர்சிப்பிக்கிறார்  மேல்

சூரணை -267-

மூவருடைய கர்மம் அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு பிராயச் சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு புருஷகார விநாஸ்யம் –

அதாவது –
நிக்ரஹத்துக்கு இலக்கான  மூவருடையவும் அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மம் –
அவஸ்யம் அநு போக்தவ்யம் கர்த்தும் கர்ம ஸூபாஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதை ரபி-என்கிறபடியே-அவஸ்யம் தத் பலமுள்ளதை அனுபவித்தால் அன்றி நசியாமையாலே அனுபவ விநாஸ்யம் -என்கிறார்-

அனுக்ரஹத்துக்கு இலக்காகச் சொன்ன இருவரிலும்  வைத்துக் கொண்டு  உபாயாந்தர நிஷ்டனான நாலாம் அதிகாரிக்கு கர்ம ஞான பக்திகள் ஆகிற உபாய விசேஷங்களில் ஒன்றை அனுஷ்டித்தால் அத்தை பிராயச்சித்த ஸ்தாநீயமாக்கி ஈஸ்வரன் சர்வ கர்மங்களையும் கழிக்கையாலே கர்மம் பிராயச் சித்த விநாஸ்யம் என்கிறார் 

பிரபதன நிஷ்டனான ஐஞ்சாம் அதிகாரிக்கு  ஆஸ்ரயண வேளையில் அநாதி கால க்ருத அபராத பீதனாய்  அவற்றை அடைய ஈஸ்வரன் பொறுக்கைக்கு  உறுப்பாக பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே அவளுக்காக இவனுடைய அபராதத்தை எல்லாம் பொறுத்து அங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே புருஷகார விநாஸ்யம்  என்கிறார்-

—————————————–

இப்படி புருஷகார சாபேஷம் என்னில்  உபாயத்தினுடைய நைர பேஷ்ய ஹானி  வாராதோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில்  புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும் –
கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் –

அதாவது
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம்
சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில்  ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –
ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும்  அபேஷித்து இருக்கும் –

ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற கார்ய காலத்தில் 
புருஷனும்  புருஷ காரமும்  ஆகிற உபயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக் கட்டும் என்கை –

கார்ய காலத்தில் ஸஹகாரி சாபேஷம் உண்டாகில் இறே உபாயத்தினுடைய நைரபேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து

——————————————–

ஸ்வ பிரயோஜன பரரை பிரதி கூலர்  என்று அவிசேஷண அருளிச் செய்தார் இறே –
இந்த ஸ்வ பிரயோஜன பரதை அனுகூல அக்ரேசரான ஆழ்வார்கள் பக்கலிலும் தோற்றி இருக்கையாலே தந் நிபந்தனமான பிரதி கூல்யம் அவர்கள் பக்கல் வராதபடி
பரிஹரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி  தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

நமக்கே நலம் ஆதலில் -என்றும் –
நாம் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே -என்றும் –
கண்டு நான் உன்னை உகக்க -என்றும் –
இத்யாதி வசனங்களாலும் –
மடல் எடுக்கை முதலான பிரவிருத்திகளாலும் –
ஆழ்வார்களுக்கும் இந்த ஸ்வ பிரயோஜன பரத்வம் உண்டாகத் தோற்றா நின்றது இறே –
ஆன பின்பு ஸ்வ பிரயோஜன பரரை எல்லாரையும் பிரதி கூலர் என்று சொல்லப் பார்க்கில்
ஆழ்வார்களையும் அப்படி நினைக்க வேண்டி வாராதோ என்று சங்கைக்கு அபிப்ராயம் —

————————————————————-

அத்தை பரிஹரிக்கிறார் –

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

அதாவது –
பிரதி கூலமாக சொல்லுகிற இவ்விடத்தில்  ஸ்வ பிரயோஜனம்  என்கிறது –
அனுபவ கைங்கர்யங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வ பிரயோஜனத்தை என்கை –
இத்தை  ஆஸ்ரய தோஷம் ஜன்யம்  என்று ஒதுக்குகையாலே  ஆழ்வார்களுடைய ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யம் என்று கருத்து –
(இது தன்னை விஷய  தோஷத்தால் வருமவை -சூரணை -272 – என்கிற வாக்யத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார் இறே–)

————————————–

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

அதாவது –
பிரதி கூல்ய ஹேதுவாக சொல்லப் பட்ட  ஸ்வ பிரயோஜனம்  ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் 
ஆழ்வார்கள் பக்கல் ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யமாய் இருக்கையாலே –
அந்த பிரதி கூலம் இவர்கள் பக்கலிலும் வரும் என்கிற தோஷம் இல்லை என்கை –

அன்றிக்கே –
ஸ்வ பிரயோஜன பரரை சாமான்யேன பிரதிகூலர் என்று சொல்லும் அளவில் –
அனுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலும் இந்த ஸ்வ பிரயோஜன பரதை தோற்றுகையாலே –
அவர்களையும் பிரதிகூலர் என்று நினைக்க வேண்டி வருகையாலே -ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்கை தோஷம் அன்றோ என்று நினைத்து பண்ணின சங்கையை அநு வதிக்கிறார்-இங்கு  என்று தொடங்கி அர்த்தம் பூர்வவத் நிகமிக்கிறார் -ஆகையால் தோஷம் இல்லை -என்று –

ஆகையால் என்ற இதுக்கு அர்த்தம் -பூர்வவத் -தோஷம் இல்லை என்றது  ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்று சொன்னதில் தோஷம் இல்லை என்கை  என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

—————————————————–

இப்படி ஆஸ்ரய தோஷ ஜன்யம் அன்றிக்கே  விஷய தோஷ ஜன்யம் ஆனாலும்
ஸ்வரூப விருத்தமானது  த்யாஜ்யமாய் அன்றோ  என்ன  அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம்  துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

அதாவது –
அனுபவ விஷயமான அவனுடைய வயிர உருக்காய் ஆண்களையும் பெண் உடை உடுத்தும் படியான விக்ரஹ வைலஷண்யமாகிற தோஷத்தால் வருகிற  ஸ்வ பிரயோஜன பரதை தத் ஹேதுவான ப்ராவண்யம் தத் சித் யர்த்தமான வியாபாரங்கள் ஆகிற இவை எல்லாம் 
ஸ்வரூப விருத்தம் என்று விடப் பார்த்தாலும்  விட அரிதாய் இறே -இருப்பது என்கை –

விஷய தோஷத்தாலே வருமது  என்ற பாடமான போது ஸ்வ பிரயோஜன மாத்ரத்தையே சொல்லுகிறது –

—————————————-

விஷய தோஷத்தால் வரும் அதின் துஸ் த்யஜ்யத்வத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்யதிச்ச்சதி-

மற்று இருந்தீர்கட்க்கு  என்று தொடங்கி  அத் தலையாலே பேறு என்று அறுதி இட்டால் அவன் வருமளவும் க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண் நீ இங்கனே பதறலாகாது என்ற தாய்மாரைக் குறித்து –
இவ் விஷயத்தில் பிராவண்யமின்றிக்கே என்னுடைய நிலைக்கு வேறாய் இருந்த உங்களுக்கு  எனக்கு ஓடுகிற தசை அறியப் போகாது –
அவன் அவன் என்று வாய் புலத்தும்படி  ஸ்ரீ யபதி  விஷயமான பிராவண்யத்தை மாறுபாடு உருவ உடையளாய் இப்படி அவனை ஒழியச் செல்லாமை உண்டானால்  அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாய் இருக்க  அதுக்கு கால்நடை தாராதபடி  இருக்கிற எனக்கு  நான் அவனோடு சென்று சேராமைக்கு உறுப்பாக நீங்கள் செல்லும் வார்த்தை 
கேட்க்கைக்கு பரிகரம் இல்லாத செவிடரோடே சொல்லுகைக்கு பரிகரமிலாத ஊமைகள் சொன்னால் போலே இருப்பது ஓன்று என்று ஆண்டாள் அருளிச் செய்கையாலும் –

தவாம்ருதச்யந்தினி என்று தொடங்கி வகுத்த சேஷியான தேவருடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளில் போக்யதையில் அழுந்தின நெஞ்சு – மற்றொரு ஸூத்திர விஷயத்தை விரும்பும் படி எங்கனே –
மதுவே ஜீவனமான வண்டு மது பரிபூரணமான தாமரைப் பூ வானது  நில்லா நிற்கச் செய்தே  அதின் சுவடு அறிந்த தான் கிட்டுகை அரிதாய் கிட்டினாலும் நாக்கு நனைக்க போகாதாய் இருக்கிற முள்ளிப் பூவில் சென்று படியாத மாத்ரம் அன்றிக்கே -அத்தை கடாஷிப்பதும் செய்யாதே என்று -ஆளவந்தார் அருளிச் செய்கையாலும் –

விக்ரஹ வைலஷண்யம் கண்டு பகவத் விஷயத்தில் பிரவணரானவர்களை மீட்க அரிது என்று தோற்றுகையாலே விஷய தோஷத்தால் வருமது துஸ் த்யாஜ்யம் என்னுமிடம் சித்தம் -இறே

——————————————

ஆக -தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை விவரித்தார் கீழ் –
சதாசார்ய பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக்  கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜ்யம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —

இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –

1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் ஹிதைஷியாய் உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும்  அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு அவனுக்கு உகந்த விஷயமாய் தன் பக்கலிலே விசேஷ  கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்சயமும்  அன்று – சம விகல்பமும் அன்று- ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே  ஆசார்ய சந்நிதியை முற்பட அருளிச் செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்திதவ் மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –
இனி -வக்தவ்யம் -தொடங்கி -மேல் அடைய -சமுச்சயம் –

2-வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும் –
அதாவது –
இவனுக்கு சர்வ காலமும் வாக்கால் சொல்லப்படுமது துர்கதியே பற்றாசாக தன்னை அங்கீகரித்து அருளின  ஆசார்யனுடைய தயா ஷாண்யாதி வைபவமும் 
எத்தனை யேனும் தயாதி குண பரிபூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அறுவருக்கும் படி நின்ற அநாத்மா குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமும் ஆகிற இவை என்கை –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நன்மையால்-என்ற பாட்டுத் தொடங்கி இவை இரண்டையும் விசதமாக அருளிச் செய்தார் இறே —

3–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
அதாவது -இவனுக்கு கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் உறுப்பாக (ப்ரபன்னனுக்கு இவை சாதனமாக அல்லவே -அனுபவ ரஸத்துக்காகவே)ரகஸ்யமாக அனுசந்தித்துக் கொண்டு போரப்படுமது -ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி -இத்யாதில் படியே சர்வேஸ்வரன் குளிர நோக்குகைக்கு உடலாய் – ஸ்வாச்சார்யவம் சோஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த -என்கிறபடியே-ஸ்வ ஆசார்யாதி பரமாச்சார்ய பகவத் பர்யந்தையான குரு பரம்பரையும் -அந்த குரு பரம்பரா பிராப்தமாய் ஸ்வ ஆசார்யன் தனக்கு  தஞ்சமாக உபதேசித்த த்வயமும் -என்கை-
இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே இவனுக்கு ரகஸ்யமாக அநு சந்தித்துக் கொண்டு போரப்படும் என்றபடி –
பாஷ்யகாரருக்கு காலஷேபம்  பிரகாரம் அருளிச் செய்கிற இடத்தில்  த்வயம் அர்த்த அநு சந்தாநேன சஹசதைவம்  வக்தா  என்று இறே  பெரிய பெருமாள் அருளிச் செய்தது –

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ச ச –அந்த ஆளவந்தார் தாமும் நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-ச ச -அந்த நாதமுனிகளும் பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்–ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும் தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ)

4–பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் -அதாவது –
தனக்கு ஞான அனுஷ்டானங்கள் ஊற்று இருக்கைக்கு உறுப்பாக  கண்ட கண்ட இடங்களில் இவனால் பரிகிரஹிக்கப்படுமது நாத முனிகள் முதலாக இவ் வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசனங்களும் -அந்த வசன அநு ரூபமாக மறுவற்ற அனுஷ்டானங்களும் -என்கை
ஸூவ்யா ஹ்ருதாநி மஹதாம் ஸூக்ருதாநி ததச்ததா-சஞ்சின்வன் தீர ஆஸீத் சில ஹாரி சிலம்யதா -என்னக் கடவது இறே —

5-பரித்யாஜம் அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
அதாவது –
ஞான அனுஷ்டான நாசகம் என்னும் பயத்தாலே இவனுக்கு சவாசனமாக விடப்படுமது வைஷ்ணவ லஷணம் இல்லாதவர்களோட்டை சஹவாசமும் –
அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓர் அன்வயங்களால் தம் திறத்தில் பண்ணும் அபிமானமும் என்கை

6-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -அதாவது-இவனுக்கு ஸ்வரூப அனுகூலமாகவே எப்போதும் செய்யப்படுமது –
மகோ உபாகாரகனான ஸ்வ ஆசார்யன் விஷயத்தில் பிரேம பூர்வகமாய் பண்ணும் கைங்கர்யமும்  தந் நியோக பரதந்த்ரனாய் பண்ணும் பகவத் கைங்கர்யமும் -என்கை –

ஆக
தினசர்யையில் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம் சதாச்சார்ய பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போருகை யாவது –
இப்படி இருந்துள்ள
1-வஸ்தவ்ய
2-வக்தவ்ய
3-ஜப்தவ்ய
4-பரிஹ்ராஹ்ய
5-பரித்யாஜ்ய
6-கர்தவ்யங்களை அறிந்து  இவற்றிலே நிஷ்டனாய் போருகை  என்றது ஆயிற்று –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–257/258/259/260/261/262/263/264/265/266–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 18, 2012

ஆக – மங்களா சாசனத்தில் -பெரிய ஆழ்வாருக்கு உண்டான  அநவரத நிஷ்டையை தர்சிப்பித்தார் கீழ் –
இனி மேல் அவருடைய யாத்ரையே நமக்கு எல்லாருக்கும் யாத்ரையாக வேணும் என்று –
முன்பு தினசரியையில் யுக்தமான மங்களா சாசனத்தினுடைய அவஸ்ய கர்தவ்யதையை அருளிச் செய்கிறார் –

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை
அநு சந்தித்தால்
ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே
நமக்கு எல்லாருக்கும்
யாத்ரையாக வேணும் –

அதாவது –
அத்யந்த ஸூகுமாரனான சர்வேஸ்வரன் -ஆஸ்ரித ஸூலபத் வர்த்தமாக தன்னை அமைத்துக் கொண்டு -தான் உகந்த வூர் என்னும்படி –
தான் அத்ய ஆதாரத்தைப் பண்ணி வர்த்திக்கும் -கோவில் திருமலை முதலான திவ்ய தேசங்களை அநு சந்தித்தால் –
அபாய பஹூள்யமான தேசம் ஆகையாலே இங்கு எழுந்து அருளி நிற்கிற நிலைக்கு
ஏதேனும் ஒரு தீங்குகள் வரில் என்னாகக் கடவதோ என்னும் வயிறு எரிச்சலாலே
ஆகார நித்ரைகளிலும்  அந்வயம் இன்றிக்கே –
நிரதிசய பிரேம யுக்தரான இவ் வாழ்வாருடைய நிரந்தர மங்களா சாசன யாத்ரையே
சேஷ பூதரான நமக்கு எல்லாம் யாத்ரையாக வேணும் -என்கை-

—————————————–

உக்த அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –

சூரணை -258-
ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

அதாவது –
இப்படி சேஷ பூதரான வர்களுக்கு எல்லாருக்கும் அவஸ்ய கர்த்தவ்யமாய் இருப்பது ஓன்று ஆகையாலே – மங்களா சாசனம் ஸ்வரூபதுக்கு சேரும் என்கை –
சேஷ வஸ்து வாகில்-சேஷிக்கு அதிசயத்தை விளைத்தே –தன் ஸ்வரூப சித்தி ஆகையாலே 
சேஷிக்கு அதிசயத்தை யாசாசிக்கிற இது சேஷ பூதனான இவனுடைய ஸ்வரூபத்துக்கு அநு குணம் இறே —

————————————————

இப்படி தினசரியையில் உக்தமான மங்களா சாசனத்தினுடைய ஸ்வரூப விருத்தத்வ சங்கையை பரிகரித்த அநந்தரம்-
அனுகூல சஹவாசம் –என்ற இடத்தில் சொன்ன அனுகூலருடைய லஷணத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப் போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

அனுகூலர் ஆகிறார் -என்றது
ஞானாதி வர்த்தகர் ஆகையாலே  சஹவாச யோக்யராய் கீழ்ச் சொல்லப்பட்ட அனுகூலர் ஆகிறார் -என்றபடி –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆவன –
தத்வ யாதாத்ம்ய ஞானமும் – பகவத் ஏஷ விஷையை யான பக்தியும் –
தத் உபய கார்யமாய் வரும் -பகவத் வ்யதிரிக்த விஷய விரக்தியும் -இவை தான் வைஷ்ணவ அலங்காரங்கள் இறே –
இவற்றை இட்டு இறே வைஷ்ணவர்கள் ஏற்றம் சொல்லுவது –
ஆகை இறே நாத முநிகளுடைய திவ்ய வைபவத்தை அருளிச் செய்கிற ஆளவந்தார் –
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே -என்று அருளிச் செய்தது –

இட்டு மாறினாப் போலே -என்றது
ஒரு பதார்த்தம் இருந்த பாத்ரத்திலே -பதார்த்தாந்தரத்தை இட்டு -முன்பு இருந்ததை மாற்றினால் -அதுவே உள்ளதாய் தோற்றுமா போலே –
இந்த ஞானாதிகள் மூன்றும் -ஏக ஆஸ்ர்ய கதமாய் இருக்கச் செய்தே -இவற்றில் ஒரொன்றை பார்க்கும் அளவில் –
ஒன்றை இட்டு மற்றவற்றை மாற்றினாப் போலே இதுவே இவ் வாஸ்ரயத்தில் உள்ளது என்று தோற்றும்படி இருக்கை–

வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை யாவது –
இவர்கள் வடிவு கண்ட போதே இவற்றோடு இவர்களுக்கு உண்டான சம்பந்தம் க்ரஹிக்கலாம் படி இருக்கை –
த்யாஜ்ய உபாதேய விவேக பூர்வகமான பரிமாற்றத்தாலே ஞானம் வடிவிலே தொடை கொள்ளலாம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -காலும் எழா கண்ணா நீரும் நில்லா -இத்யாதிப் படியே இருக்கையாலே -பக்தி வடிவிலே தொடை கொள்ளலாம் –
இதர விஷயங்களை கடைக் கணியாமல் இருக்கையாலே வைராக்கியம் வடிவிலே தொடை கொள்ளலாம் –

அன்றிக்கே –
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்  நவ நவ உன்மேஷ சாலிகளாய் வருகையாலே அபூர்வமான ஞானாதிகளை இட்டு
பூர்வத்தில் அவற்றை மாற்றினால் போலே – தங்கள் வடிவிலே இவை காணலாம் படி இருக்கும் பரம ஆர்த்தர் என்னவுமாம்-

பரம ஆர்த்தர் -என்றது –
சம்சாரத்தில் பொருந்தாமையாலும் – பகவத் விஷயத்தை கிட்டப் பெறாமையாலும் –
இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படியான ஆர்த்தியை உடையவர்கள் -என்கை –

——————————————

இவர்களோட்டை ஸஹ வாசத்தால் சித்திக்கும் அது எது -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்
தீரக் கடவதாய் இருக்கும்

அதாவது
ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் -நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் -தத் ஆசக்தியால் (தத் அசலாக இருப்பதாலே) வந்த பொசிவாலே வாட்டம் அற்று கிடக்குமா போலே –ஞான பக்தி வைராக்யங்கள் ஆகிய இவை இல்லாமையாலே ஸ்வரூபம் உறாவிக் கிடக்கிறவர்களும் இவற்றால் பரி பூர்ணரான இவர்களோட்டை ஸஹவாச ரூப சம்பந்த்தாலே இவற்றிலே சிறிது அந்வயம் உண்டாய் –இவை நேராக இல்லாமையால் -உண்டான வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்கை

—————————————

ஏதத் சகவாசத்தால் -இப்படி உறாவுதல் தீர்ந்து கிடக்கும் அளவோ என்னில் –
இவ்வளவும் அன்று -இந்த ஸ்வபாவ விசேஷங்கள் பிராப்திக்குமாக விளைந்து அறும் என்கிறார் –

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே இந்த ஸ்வபாவ விசேஷங்கள்  தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

அதாவது –
வற்றிக் கிடக்கிற ஆறு- நீர் வரத்து ஆசன்னவாறே -தத் ஸூசகமான மணல் பொசிகை முதலான அடையாளங்கள் உண்டாமா போலே –
பகவத் பிராப்தி ஆசன்னையான வாறே -தத் ஸூசகமான  இந்த ஞானாதி ஸ்வபாவ விசேஷங்கள் ஸ்வயமேவ  விளையக் கடவதாய் இருக்கும் -என்கை –

——————————————-

இவை இப்படி விளைந்து வரப் புக்கால் -பிராப்தி அணித்தது என்று தோற்றி இருக்குமோ என்ன  அருளிச் செய்கிறார் –

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று
தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

அதாவது –
இப்படி மேன்மேலும் புதுக் கணித்து விளைந்து வருகிற  ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டு இனி நமக்கு ஒரு சரீர பரிக்ரஹம் இல்லை இது சரம சரீரம் என்று தம் மனசுக்கே நிச்சயித்துக் கொள்ளலாய் இருக்கும் -என்கை –

—————————————–

ஆக -இப்படி ஸஹவாச விஷயமாக  தினசர்யையில் சொன்ன அனுகூலருடைய
லஷணத்தையும்-தத் ஸஹ வாச பலத்தையும் -அருளிச் செய்து -தத் -அநந்தரம் –
ஸஹ வாச நிவ்ருத்தி விஷயமாகச் சொன்ன பிரதிகூலர் இன்னார் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

பிரதிகூலர் ஆகிறார் -என்றது -ஞானாதி நாசகர் ஆகையாலே -ஸஹ வாச யோக்யர் அல்லாராக கீழ்ச் சொன்ன பிரதி கூலர் ஆகிறார் என்றபடி –
1-தேகாத்ம அபிமானிகள்-இத்யாதி -தேகாத்ம அபிமானிகள் ஆகிறார் -காண்கின்ற தேகத்துக்கு அவ்வருகு ஓர் ஆத்மா உண்டு என்று அறியாதே -தேகத்தில் அஹம் புத்தியைப் பண்ணி  இத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்கள் –
2-ஸ்வ தந்த்ரர் ஆகிறார்  தேக அதிரிக்தமான ஆத்ம வஸ்துவை அறிந்து இருக்கச் செய்தே அத்தை தனக்கு உரித்தாகவே நினைத்து ஒரு விஷயத்திலும் சேஷத்வத்துக்கு இசையாதவர்கள் –
3-அந்நிய சேஷ பூதராகிறார்  சேஷத்வத்தை இசைந்து இருக்கச் செய்தே அத்தை அபிராப்த விஷயங்களில் விநியோகித்து இருக்குமவர்கள்
4-உபாயாந்தர நிஷ்டராகிறார் -பிராப்த சேஷி விஷய சேஷத்வத்தை யுடையராய் வைத்தே தத் பிராப்தி யுபாயம் தத் சரணார விந்த சரணா கதி என்று இருக்கை அன்றிக்கே கர்மாதி யுபாயங்களைப் பற்றி நிற்கிறவர்கள்
5-ஸ்வ ப்ரயோஜன பரராகிறார் ஆகிறார் -பிராப்த  சேஷி கமலங்களை -உபாயமாகப் பற்றி இருக்கச் செய்தே  தாங்கள் பற்றின பற்றை உபாயமாக நினைத்தும் -உபேயமான கைங்கர்யத்தை ஸ்வ போக்யமாக  நினைத்தும் இருக்கும் அவர்கள் –

இப்படி இருக்கிற இவர்கள் பிரணவத்தில்
1-த்ருதீய அஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –
2-பிரதம அஷரத்தில்  சதுர்தியால்  பகவத் சேஷத்வத்தையும் –
3-மத்யம அஷரத்தில் தத் அனந்யார்ஹத்வத்தையும்-
4-மத்யம பதத்தால் அநந்ய சரண்யத்வத்தையும்-
5-சரம பதத்தால் அநந்ய போக்யத்வத்தையும் தர்சிக்கும் அதிகாரிக்கு -பிரதிகூலர் இறே-

——————————————–

இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி நிபந்தனமான -உத்தேஸ்யாதி பேதங்களை அருளிச் செய்கிறார் –

சூரணை-264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

உத்தேஸ்யர் ஆகிறார் ஆதரணீயர்-
அவர்கள் ஆகிறார் இவ்விடத்தில் ஸ்வ அபிமத பிரதரானவர்கள் –

உபாயங்கள் யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்த சாதனங்கள் –

உபேயங்கள்  யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்தங்கள் –

இவை பேதித்து இருக்கை யாவது –
தத் தத் விப்ரப்ரதிபதி அநு குணமாக வேறு பட்டு இருக்கை —

———————————————————-

அது தன்னை அடைவே உபபாதிக்கிறார் மேல் –

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேஸ்யர் –
தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–
2-ஸ்வ தந்த்ரர்க்கு உத்தேஸ்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-
3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேஸ்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –
4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேஸ்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –
5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேஸ்யன் -நெஞ்சினால் நினைப்பான்  யவன்-என்கிறவன் 
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

அதாவது –
1-தேகத்தையே தானாக அபிமானித்து இருக்கிறவர்களுக்கு உத்தேஸ்யர் –
தாரக  போஷக போக்ய பதார்த்தங்களை இட்டு தேகத்தை நன்றாக வளர்த்துக் கொண்டு போரும் மனுஷ்யர் –
அபிமத சித்திக்கு உபாயம் – ஸ்வர்ணயாதி யான தனம்
அபிமதமான உபேயம் -இஹ லோகத்தில் உண்டான ஸ்த்ரி அன்ன பானாதி விஷய அனுபவம் –

2-தேக அதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா உளன் அவன் தான் ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ  யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை சாஸ்திர முகத்தாலே அறிந்து தங்களை ஸ்வ தந்த்ரராக நினைத்து இருக்கும் அவர்களுக்கு உத்தேஸ்யர் –அனுஷ்டித்த சாதனத்துக்கு அநு குணமாக ஸ்வர்க்காதி ஆமுஷ்மிக போகங்களைக் கொடுக்கும் அக்னி இந்த்ராதிகளான தேவதைகள் -(ஆதி -ஸூர்யன் போல்வார் )
உபாயம்-ஜோயிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -இத்யாதிகளால் சொல்லப்படுகிற பல அபிசந்தி சஹிதமான யாகாதி கர்ம அனுஷ்டானம் – 
உபேயம்–ஐகிக போகாத் விலக்ஷண ஸ்வர்காத்யனுபவம்-

3-ஜகத்து தெய்வாதீனம் என்னுமத்தை சாஸ்த்ரங்களில் கேட்கையாலே சேஷத்வத்தை இசைந்து  வைத்தே அத்தை பர தேவதா பர்யந்தமாக போக வறியாதே ஆபாத பிரதீத சித்தங்களிலே ஒன்றைப் பற்றி நிற்கும்  அந்ய சேஷ பூதர்க்கு உத்தேஸ்யர் –ஜகத் சர்காதி கர்த்ருதையா பரத்வ புத்தி அர்ஹரான பிரம ருத்ராதிகள் –
உபாயம் -துராராதரானவர்கள் பக்கல் பண்ணும் துஷ்கர சமாஸ்ரண்யம் –
உபேயம் அவர்களோடு -சாமான போக்யானாகை ஆகிற சாயுஜ்யம் –
சாயுஜ்யம்  உபயோரத்ர போக்தவ் யஸ்யா   விசிஷ்டதா  சார்ஷ்ட்டி தாததிர போக்யஸ்ய தாரதம்ய விஹீ நதா-என்னக் கடவது இறே-

4-ஆத்ம ஸ்வரூபம்  பகவத் அனந்யார்க்க சேஷம் என்னும் இடத்தை வேதாந்த முகேனே அறிந்து வைத்தே  அபிமத லாபத்துக்கு அவன் தன்னையே உபாயமாக பரிக்ரஹிக்க அறியாதே  உபாயாந்தர நிஷ்டர் ஆனவர்களுக்கு உத்தேச்யன்  அக்னி இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர் யாமியான ஈஸ்வரன் –
இது கர்ம யோகத்துக்கு ஸ்வரசம் –ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும்– கர்மாநுஷ்டானம் தளமாக எழுந்து இருந்தவை ஆகையாலும் கர்ம ஆராத்யனாவனே  ஸ்வ சாதாரண விக்ரஹ விசிஷ்ட வேஷத்தை நமக்கு
பிரகாசிப்பித்தான் என்னும் நினைவு நடக்கையாலும்  தேவதாந்தர அந்தர்யாமியே உத்தேஸ்யனாக சொல்லுகிறது என்று கொள்ள வேணும் –
உபாயம் -தனித்தனியே மோஷ சாதன தயா  சாஸ்திர சித்தங்களான-கர்ம ஞான பக்தி யோகங்கள் –இவை தனித் தனியே உபாயமாம் இடத்தில் -ஓர் ஒன்றுக்கு மற்றவை இரண்டும் அங்கமாய் இருக்கும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருஸ்யதே -கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ராயேன பரதாதிஷூ (ஆதி ஜட பரதர் )-கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-என்னக் கடவது இறே —

அன்றிக்கே –
கர்ம ஞான பக்திகள்-என்கிற இடத்தில் -வேதாந்த மரியாதையால் -கர்ம ஞான அநு க்ருஹீதையான -பக்தியே உபாயமாய் -தத் அங்க தயா கர்ம ஞானங்களை உபாயம் என்று உபசரித்து சொல்லுகிறது ஆகவுமாம்-
உபேயம் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -இத்யாதி ஸ்ருதிகளாலும் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்தகீ மதா -இத்யாதி ஸ்ருதி உப ப்ருஹ்மணங்களாலும் சொல்லப்படுகிற நிரதிசய அதிசய ஆனந்த ரூப பகவத் அனுபவம் –
இந்த ஸ்லோகத்தில் -பகவத் பிராப்தி -என்கிற இது -பகவத் அனுபவகமாக இறே
நம் ஆச்சார்யர்கள் (எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தம் -இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு புராணம் )- ஸ்வ பிரபந்தங்களிலே அருளிச் செய்தது –

5-கர்மாத் உபாயங்களில்  துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு (அனுகூலர் அபிராப்தி என்று விட்டு )ஸூகரத்வ புத்த்யா பிரபத்தியில் இழிந்த -ஸ்வ பிரயோஜன பரர்க்கு-உத்தேஸ்யன் -நெஞ்சினால் நினைப்பான் எவன் – என்கிறபடியே ஆஸ்ரிதர் தங்கள் நெஞ்சால் யாதொரு த்ரவ்யத்தை தனக்கு திருமேனியாக கோலினார்கள் அத்தையே தனக்கு திருமேனியாக  அபிமானித்து அதிலே அப்ப்ராக்ருத விக்ரஹத்தில் பண்ணும் ஆதாரத்தை பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கிற அர்ச்சாவதாரமான சர்வேஸ்வரன்(அனுகூலருக்கு -ஆனவன் என்று இல்லாமல் -அர்ச்சாவதாரமே-அர்ச்சையே உத்தேஸ்யம் )
உபாயம்-அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் அவனை உபாயமாக நினைத்து- தான் பற்றின பற்று –
உபேயம் -தனக்கு உகப்பாக பண்ணும் கைங்கர்யம்-

———————————————

ஆக உத்தேஸ்யாதி பேதத்தாலே அவர்களுக்கு உண்டான அந்யோந்ய விசேஷத்தை தர்சிப்பித்தார் கீழ் –
இவர்களில் பகவத் விஷயத்தோடு ஓட்டற நின்ற மூவருக்கும் பகவத் விஷயத்தையே பற்றி நின்ற இருவருக்கும் உண்டான விசேஷத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும் நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும் அனுக்ரஹத்துக்கு இலக்கு ..

அதாவது –
தேக ஆத்ம அபிமானமும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் –
அந்ய சேஷத்வமும் -ஆகிய இவற்றுக்கு அவ்வருகே ஒன்றும் அறியாமையாலே
பகவத் அன்வய கந்த ரஹிதரான மூவரும் -ஷிபாமி -என்கிற பகவத் நிக்ரஹத்துக்கு விஷயம் 

ப்ரக்ருதே பரமாய்  பகவத் அனந்யார்ஹ சேஷமான ஸ்வரூபத்தை அறிந்து  பகவத் அனுபவ கைங்கர்யங்களை புருஷார்த்தமாகக் கொள்ளுகையாலே –
அநந்ய பிரயோஜனராய் –
கர்ம ஞாநாதிகளான உபாயாந்தரங்களிலும்
பிரபதநத்திலும்-
நிஷ்டரான இருவரும் –
ததாமி –
மோஷ இஷ்யாமி –
என்கிற பகவத் அனுக்ரஹதுக்கு விஷயம் -என்கை-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை -247/248/249/250/251/252/253/254/255/256–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 17, 2012

இவ் விஷய வைலஷண்யம் யாரையும் மங்களா சாசனத்தில் மூட்டும் என்னும் இடத்துக்கு இன்னுமொரு உதாரணம் காட்டுகிறார் –

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குஹப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குஹப் பெருமாள் பரிஹரம் பெருமாளை நோக்கிற்று இறே —

அதாவது –
சுருங்கி பேர புரத்திலே எழுந்து அருளி ஸ்ரீ குகப் பெருமாளை விஷயீகரித்து
அருளின அன்று -பாங்கு அறிந்து இளைய பெருமாள் படுத்து கொடுத்த பர்ண சய்யையிலே  பிராட்டியும் பெருமாளும் பள்ளி கொண்டு அருளா நிற்க -பால்யாத் பிரப்ருதி ஸூஸ்நிக்தர் ஆகையாலே -என் வருகிறதோ என்று அஞ்சி -முதிகில் இட்ட அம்புறாத் துணியும் கட்டின விறல் சரடும் நாண் ஏறிட்டு நடுக் கோத்த வில்லும் தாமுமாக நடையாடும்
மதிள் போலே வளைய வருகிற இளைய பெருமாளைக் கண்டு ஸ்ரீ குகப் பெருமாள் –
ஒரு தம்பி தாயைக் கொண்டு ராஜ்யத்தை வாங்கி கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டான் –இவனும் அவ்வோபாதி ஒரு தம்பி அன்றோ -தனி இடத்திலே என் செய்ய நினைத்து இப்படி யாயத்தமாய் நின்றான் என்று தெரியாது என்று அதி சங்கை பண்ணி அப்படி ஏதேனும் ஒரு தீங்கு நினைக்கில் இவன் தன்னை தீரக் காணக் கடவோம் என்று வில்லும் கோலுமாய்  கொண்டு -இவர் இட்ட அடியிலே அடி இட்டு நிற்க –
ஸ்ரீ குகப் பெருமாள் யேவல் தொழில் செய்து திரியும் பரிஹரம் -அவன் ஜ்ஞாதி- இவன் குறும்பனான அந்நியன்-இவர்கள் இருவருமாக இவ் விஷயத்தை என் செய்யத் தேடுகிறார்களோ என்று -இருவரையும் அதி சங்கை பண்ணி  அப்படி செய்யில் இவர்களை அழியச் செய்தும் -நாம் அத் தலையை நோக்கக் கடவோம் என்று தனித் தனியே கையில் வில்லுமாகக்  கொண்டு பெருமாளை ரஷித்தது இறே என்கை —

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு விசேஷம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ குஹப் பெருமாள்
நியம்ய ப்ருஷ்டேது தலான் குலித்ரவான் சரஸ்ஸூ பூர்ணாமிஷூதிம் பரந்தப
மகத் தநுஸ் சஜ்ய மகோப்ய லஷ்மணோ நிசா மதிஷ்டத்  த்வரிதோ அசய கேவலம் ததஸ்
தவஹந் ஜோத்தம சாப பாண பிருத்  ஸ்திதிதோ பவம் தத்ரஸ் யத்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்ஞாதிபி ஆர்த்த கார் முகைர் மகேந்திர கல்பம் பரிபாலயம் சதா-என்று அந்த ராத்ரியில் விருத்தாந்தத்தைச் சொன்னான் இறே —

—————————————–

ஸ்ரீ குகப் பெருமாளுக்கும் பரிகரத்துக்கும் கண்ட மாத்ரம் ஒழிய -பெருமாள் உடன் முன்பு வாசனை  இல்லை இறே –இப்படி இருக்கச் செய்தே இவர்களுக்கு இவ்வாகாரம் கூடின படி என் -என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

அதாவது –
நெடுநாள் வாசனை பண்ணுகை அன்றிக்கே -ஒருநாள் முக தர்ஸனம் பண்ணினவர்களையும் – அவன் விக்ரஹ வைலஷண்யம் படுத்தும் படி ஆயிற்று இது என்கை– சதா பஸ்யந்தி  பண்ணினாரோபாதி  சக்ருத் தர்சனம் பண்ணினாரையும் 
பிரேமாந்தரராய்  அஸ்தானே பய சங்கையாலே அனுகூலரையும் அதிசங்கை பண்ணி பரிந்து நோக்கும் படி பண்ண வற்றாய் இறே  பகவத் விக்ரக ஸௌந்தர்யம் இருப்பது –

—————————————

இன்னும் இவ் அர்த்தத்துக்கு உதாரணமாக கீழ்ச் சொன்னவர்கள் காட்டில் வ்யாவிருத்தரான
ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே
என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இவர்கள்-என்று சக்கரவர்த்தி முதலாக -கீழ் சொன்ன அதிகாரிகள் அடைய பராமர்சிக்கிறது 
ஆனால் பிராட்டியையும் ஒக்க சொல்லலாமா என்னில் -ஆழ்வார்களில் தலைவரான
நம் ஆழ்வாரைக் காட்டிலும் பெரிய ஆழ்வாருக்கு ஏற்றம் சொல்லுகிறவோபாதி –
போக பரவசையான அவளைக் காட்டிலும் மங்களா சாசனத்திலூற்றத்தாலே
ஆழ்வார்களுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –

ஆனாலும் -நம்முடைய கோடியிலே -என்னலாமோ -என்னில் -இவ் அர்த்த நிஷ்டையில் இவர்களுடைய ஆதிக்யத்தை தர்சிப்பிகைக்காகச் சொன்னது ஆகையாலே விரோதம் இல்லை –

ஆகையால் இவ் விஷய வை லக்ஷண்ய கலுஷ சித்தராய் இதுக்கு என் வருகிறதோ என்று பரிந்து நோக்கினவர்களாகக் கீழ்ச் சொல்லப் பட்டவர்கள் எல்லாரும் என்ற படி –

நம்முடைய கோடியிலே என்னும் படி ஆயிற்று என்றது -இவ் விஷயத்திலே அன்வயித்து இருக்கச் செய்தேயும்  பிரேம பாவத்தாலே மங்களா சாசனத்திலூற்றம் அற்று இருக்கும் நம் போல்வர் மாத்ரம் என்று சொல்லாம் படி ஆயிற்று என்றபடி –

ஆழ்வார்கள் நிலை -என்றது மயர்வற மதி நலம் பெற்றவர்கள் ஆகையாலே நிரதிசய பிரேம யுக்தரான ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டை என்ற படி —

———————————————–

இவ் வாழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால் தங்களில் ஒப்பர்களோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும்
போல் அல்லர் பெரிய ஆழ்வார்-

அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடு வாசி உண்டு என்கை-

—————————————–

அவர்களைப் பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –

அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை  ஒத்து இருக்கச் செய்தே -வைர உருக்காய்- ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் பாகவத விக்ரஹ வைலக்ஷண்யத்தை அநு சந்தித்தால் -உத்தோரத்தர அனுபவ காமரராக இருக்கும்  மற்ற ஆழ்வார்களுக்கு
பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம்  எப்போதும் ஒக்க இன்றிகே எங்கேனும் ஒரு தசையிலே தேடிப் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வை லக்ஷண்யத்தை தர்சன அநந்தரம் தத் அனுபவ பரராகை அன்றிகே  அஸ்தானே பய சங்கை பண்ணி  திருப் பல்லாண்டு பாடும் பிரேம ஸ்வாபரான இவருக்கு இந்த மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை —

————————-

அதுக்கு ஹேது ஏன் என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -252-

அவர்களுடைய ஆழங்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அதாவது –
அனுபவ பரரான அவர்களை  த்ருஷ்டி சித்த அபஹாரம் பண்ணி  ஆழங்கால் படுத்தும் அவனுடைய சௌந்தர்யம் தானே  அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சி  மேன்மேலும் காப்பிடும்படி  மங்களா சாசன பரரான இவர்க்குத் தரித்து நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

————————————-

இவருக்கு பய ஹேது எங்கனே என்னும்  அபேஷையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -253-

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
இவருக்கு உபய விருத்திக்கும் ஹேதுவாய்
ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்தியம பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே 
போகு நம்பீ-
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வென் சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும்   அழித்து –
பர அதிசய கரத்வமே  வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் என்பது  ஓன்று அறியாதபடி தன் பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌந்த்ர்யம் –

அந்த ஸௌந்தர்ய தர்சனத்தில் அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என் வருகிறதோ என்று வயிறு  எரிந்து காப்பிடுமவரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் -ததீய விஷயத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுவிக்கையாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக -அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌந்த்ர்யம் -இவருக்கு இப்படிச் செய்கையாலே அவர்களுடைய ஆழங்கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே  அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிக்கே –
மங்களாசாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

————————————————

மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதாசித்தமாகச் செய்தே -இவர்க்கு நித்யம் ஆகைக்கு -நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இது தான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளிச் செய்கிறார் மேல்

சூரணை -256-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே என்பது –
5-அநிமிஷரைப் பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

அதாவது –
1-தன் ஸௌகுமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிஹரிகைக்காக  மல்ல வர்க்கத்தை அநாயாசேன
அழித்த தோள் வலியைக் காட்ட  இந்த தோள் வலியை நினைத்து மதியாதே  அசூர
ராஷச யுத்தத்தில் புகில் என்னாகக் கடவது என்று -அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது –
உண்டான அவமங்களங்கள் போக்குகைக்கும்  இல்லாத மங்களங்கள் உண்டாக்குகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்–என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று  லஷ்மீ சம்பந்தத்தைக் காட்ட -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது —
இந்த பயத்தை பரிஹரிக்கைகாக  இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி  கல் மதிள் இட்டால் போலே இருக்கிற  இவர்களைப் பாரீர் என்று இரண்டு இடத்திலும் ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட  அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
2-அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை மங்களா சாசனத்துக்குத்  துணையாக கூட்டிக் கொண்ட அளவால் -பர்யாப்தி பிறவாமையாலே பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும்  ஐஸ்வர்யார்த்திகளையும் திருத்தி  மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-இலங்கை பாழ் ஆளாக  படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ்க் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு  பிற் காலத்திலேயே  சம காலத்தில் போல் வயிறு எரிந்து  மங்களா சாசனம் பண்ணுவது –
4-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே  என்று பகவத் பிராப்திக்கு பலமும் அந்த மங்களா சாசனமே என்பது –
5-ஸ்நேஹாத அஸ்த்தாந ரஷா வ்யசநிபி ரபயம் சார்ங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷா வ்யசநிகள் ஆகையாலே  அநிமிஷராய் இருக்கிற திவ்யாயுத ஆழ்வார்கள்
முதலானவரைப் பார்த்து  குண வித்தராய்  நஞ்சுண்டாரைப் போலே உந்தாமை அறியாது இருத்தல்  அனுபவத்திலே அழுந்தி கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே  உணர்ந்து நோக்குங்கோள் என்று பல காலும் சொல்லுவதாய்க் கொண்டு இவ் மங்களா சாசனமே விருத்தியாய்ச் செல்லும் என்கை –

————————————————–

இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர் ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திருப் பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது -மேல் இவர் உபதேசித்த இடங்களில்  அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும் வ்யாவிருத்தி என் என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்
தனிமையைத் தவிர்க்கை அன்றிக்கே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

அதாவது
பரோ உபதேசத்தில் வந்தால்  மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஜ்ஞாநத்தாலே நல் துணையான பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் 
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில்  போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே  சௌகுமார்ய அநு சந்தானத்தாலே வயிறு மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை  தம் வாசி அறிந்து பரிந்து நோக்குகைக்கும்  ஒரு ஆளும் ஆளுகிறிலர் என்று பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்ய யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று இதுவே பிரயோஜனமாக வாயிற்று –பரம காருணிகரான பிராமாணிகரான ஆச்சர்யர்களில் பாஷ்யகாரரும்  மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில்  இவ் வாழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-

ஆகையால் –
இவ் வாழ்வார் பிரதிகூலரை அனுகூலராக-(அனுகூலர் ஆகும்படியாக) – உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –

எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

—————————————

மயர்வற மதி நலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் சத்தா சம்ருத்திகள் பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலேயாக   அன்றோ தோற்றுகிறது-
அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப் போதைக்கு மங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்
பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –

சத்தை யாவது -தாங்கள் உளராகை இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே  தத் தர்சனத்தாலேயாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒரு நாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு ஜாலா கிரந்தரத்திலே ஆகிலும்
ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே ஒருநாள் போக அமையும் என்று சொல்-என்கையாலே  தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–

சம்ருத்தியாவது  -உளராய் இருக்கிற மாத்ரம் அன்றிக்கே மேலுண்டாய் செல்லும் தழைப்பு -அது அவர்களுக்கு
அந்தாமத்து  அன்பு -முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் —
அன்றிகே –
தர்சன  அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் -கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்ய கார்யமான அனுபவம் இல்லாத போது குலையும்  என்று இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும் –
நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில் அழுகவும் கூட சத்தை இல்லை என்று கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன் என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாகவும் தோற்றுகையாலும்-
சத்தைக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –

மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு இவற்றுக்கு என் வருகிறதோ என்று வயிறு எரிந்து மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு  மங்களா சாசன விச்சேதம் வரில் தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக  செல்லுகை தானே தழைப்புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலேயாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -244/245/246–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 15, 2012

மூன்றாம் பிரகரணம்

இந்த திநசர்யையில் சொன்னவற்றை விவரிக்க வேண்டுமவற்றை விவரிப்பதாக
திரு உள்ளம் பற்றி -பிரதமத்தில் மங்களா சாசனத்தை விவரித்து அருளுகிறார் –

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்கும் –

ஹேய பிரத்ய நீகனாய் -கல்யாண ஏக தானனாய் -ஸ்வ இதர சகல ரஷகனாய் இறே
சர்வேஸ்வரன் இருப்பது -இப்படி இருக்கிறவனை தனக்கு உண்டான அமங்களங்களைப் போக்கி -இல்லாத மங்களங்களை உண்டாக்கிக் கொள்ளக் கடவ தத் ரஷய பூதனான இவன்-தனக்கு ரஷகனானவன் அவனுக்கு தான் மங்களங்களை யாசாஸிக்கை-ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தம் அன்றோ என்கிற சங்கையை அநு வதிக்கிறார்-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் -என்று -அத்தை பரிகரிக்கிறார் –
ஜ்ஞான தசையில் -என்று தொடங்கி-

ஜ்ஞான தசை யாவது -சர்வேஸ்வரனே ரஷகனாகவும் 
தான் அவனுக்கு ரஷ்ய பூதனாகவும் -பிரணவத்தில் சொல்லுகிறபடியே (ஜ்ஞான தசையில்) தெளியக் கண்டு அநு சந்தித்து இருக்கும் தசை -அந்த தசையில் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் -இத்யாதிப் படியே
தன்னுடைய அநிஷ்ட நிவ்ருத்யாதிகளுக்கு அவனே கடவன் என்று இருக்கையாலே –
ரஷ்ய ரஷக பாவம் தனக்கடைத்த ஆஸ்ரயத்திலே கிடக்கும் –

பிரேம தசை யாவது -சர்வேஸ்வரனுடைய சௌந்தர்ய சௌகுமார்யங்களை அநு  சந்தித்து இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ என்று –
அஸ்தானே பய சங்கை பண்ணி -அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்க ஷமர் அன்றிக்கே நெஞ்சு மறுகிறபடியான தசை –

அந்த தசையிலே ஈஸ்வரனை ரஷிக்க வழி தேடித் தடுமாறுகையாலே- –
ஈஸ்வரன் பக்கலிலே ரஷ்ய பாவமும் -சேதனன் பக்கலிலே ரஷக பாவமும் -தனக்கடைத்த ஆஸ்ரயத்தில் அன்றிக்கே மாறாடிக் கிடக்கும் என்றபடி-

————————————————-

உக்தார்த்தத்தை விசதீகரிக்கிறார் –

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

அதாவது –
பிரதம அஷரத்தில் சொல்லுகிறபடியே -சர்வஜ்ஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் -சர்வ ரஷகனான -அவனுடைய ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் –
அவனை -தனக்கு அநிஷ்ட நிவாரகனாய்க் கொண்டு -அஞ்ஞனாய் -அசக்தனாய்-பிராப்தனான தன்னை ரஷித்துக் கொள்ளும் –

பேசப் பிசகும் படியான அவன் ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் –
அவனுடைய சர்வ சக்தித்வாதிகளை மறந்து -குழைச் சரக்காக நினைத்து -தன்னை ரஷகனாகக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி அவனை ரஷிக்கும் என்கை-

இவ் விடத்தில் ஸௌந்தர்யம் சொல்லிற்றில்லை ஆகிலும் -அதுவும் மங்களாசாசன ஹேதுவாகையாலும்-மேலே சொல்லுகையாலும் -ஸௌகுமார்யம் இதுக்கும் உப லஷணம்-

————————————————–

இப்படி ஸௌ குமார்யாதிகளைக் கண்டு கலங்கி -ரஷகனான அவனுடைய சர்வ சக்தி வைபவத்தை மறந்து -தான் அவனை ரஷிக்கும்  என்கிற இவ் வர்த்தம் -எங்கே காணலாம் என்கிற அபேஷையிலே-இது சிஷ்டாசார சித்தம் என்னுமிடம் காட்டுகிறார் மேல்

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

சக்கரவர்த்தி -பெருமாள் பிராட்டியை திரு மணம் புரிந்து – மீண்டு எழுந்து அருளா நிற்க –
பரசுராமன் வந்து தோன்றின  அளவிலே -தாடகா தாடகேய நிரசனங்களாலே -இவருடைய சக்தி வைபவத்தை வியக்தமாக அறிந்து இருக்கச் செய்தேயும் –
இவருடைய பால்யத்தையும் ஸௌகுமாரத்தையுமே பார்த்து -என்னாகப் புகுகிறதோ என்று பீதனாய் -தான் முன்னோடியாகச் சென்று –
ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தத்வம் ப்ராஹ்மணஸ்ய மகா

யஸா பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு –
பின்னையும் அவன் பெருமாள் மேலே அடர்ந்து செல்கிறபடியைக் கண்டு -நிஷ் பிராணனாய் நின்று –
கதோ ராம இதி ஸ்ருத்வா ஹ்ருஷ்ட பிரமுதி தோன்ரூப புனர் ஜாதம் ததா மேன ஸூதா நாத்மான மேவச -என்கிறபடியே
அவன் தோற்று மீண்டு போனான் என்று கேட்ட பின்பு -தானும் பிள்ளைகளும் – மறு பிறவி பிறந்தாராக  நினைத்து இருந்தான் இறே–

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -தலை நீர்ப்பாட்டிலே -இவருடைய வைபவம் எல்லாம் அறிந்து இருக்குமவளாய் இருக்கச் செய்தேயும் –
திரு அபிஷேகம் பண்ணுகைக்காக- அலங்க்ருத திவ்யகாத்ரராய் கொண்டு -சக்கரவர்த்தி திருமாளிகைக்கு எழுந்து அருளுகிற போது-
இவர் அழகிலே தோற்று -இதுக்கு என் வருகிறதோ என்று பிரேமத்தால் கலங்கி –
பதி  சம்மாநிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான் யபிதத்த்னுஷீ -என்று
திருவாசல் அளவும் தான் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு பின் சென்று –
பூர்வாம் திசம் வஜ்ர தரோ தஷிணாம் பாது தோயம் வருண பச்சிமா மாசாம் தனச்தூத்தராம் திசம் -என்று
திக்பாலர்களை இவர்க்கு ரஷகராக அபேஷித்தாள் இறே –

ஸ்ரீ ஜனகராஜன் -என்றும் -திரு மகள் -என்றும் பிரித்துச் சொல்லவுமாம்-
அப்போதைக்கு -ஸ்ரீ ஜனக ராஜன் -மகேஸ்வர தனுர் பங்கத்தாலே-பெருமாளுடைய சக்தி வைபவத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் –
இயம் சீதா மம ஸூத சக தர்ம சரீதவ பிரதீச்ச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா -என்று
ஆபி ஜாதியாதிகளால் வீறு உடையவளான இவளைக் கைக் கொண்டு அருளும் என்று காட்டிக் கொடுக்கும் அளவில் –
இவருடைய அழகையும் ஸௌகுமார்யத்தையும் கண்டு கலங்கி இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வாராது ஒழிய வேணும் என்று -பத்ரந்தே -என்று மங்களா சாசனம் பண்ணினான் என்கை–

விஸ்வாமித்திரன் -தன்னுடைய அத்த்வர த்ராணார்த்தமாக பெருமாளை அழைத்துக் கொண்டு போகிற போது –
நடுவே தாடகை பெரிய ஆரவாரத்தோடு ஆக்கிரமித்துக் கொண்டு வருகிற படியைக் கண்டு 
அஹம் வேத்மி மஹாத்மாநாம்  ராமம் சத்ய பராக்ரமம் -என்கிறபடியே
பெருமாளுடைய சக்தி வைபவத்தை அறிந்து இருக்கச் செய்தேயும் -ஸௌகுமார்யத்தைப் பார்த்துக் கலங்கி –
விஸ்வாமித்ரஸ்து ப்ரஹ்ம ரிஷிர் ஹூங்காரேண அபி பர்த்ஸ்யதாம் ஸ்வஸ்தி ராகவ யோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத—என்கிறபடியே
தான் முன்னே நின்று அவளை ஹூங்கரித்து பெருமாளுக்கும் திருத் தம்பியாருக்கும் ஒரு தீங்கு வாராமைக்கு ஆக மங்களா சாசனம் செய்தான் இறே –

ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள்-
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வாவை தர்ம சாரின மங்களாநி பர யுஜ்ஞானா பிரத்யக்ருக்ணன் த்ருட வரதா -என்று
தங்கள் ஆபத் நிவ்ருத்தியையும் -அபிமத சித்தியையும் -பண்ணித் தருவார் இவரே என்று
சாதன அனுஷ்டானம் பண்ணுகிற தாங்கள் -இவர் சந்நிஹிதர் ஆனவாறே -அவற்றை மறந்து -இவர் வடிவு அழகிலே துவக்குண்டு மங்களா சாசனம் பண்ணினார் இறே –

திருவடி -பிரதம  தர்சநத்திலே-
ஆயதாச்ச ஸூவ்ருத்தாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவி பூஷிதா -என்று கணையங்கள் போலே இருக்கிற திருத் தோள்களிலே மிடுக்கைக் கண்டு -நமக்கு இவர் ரஷகர் ஆகக் குறை இல்லை என்று புத்தி பண்ணி நிற்கச் செய்தேயும் –
அவற்றின் அழகைக் கண்டு ஈடுபட்டு -பிறர் கண் எச்சில் படி என் செய்வது என்று அதிசங்கை பண்ணி -திரு ஆபரணங்களாலே இதை மறைத்திட்டு வையாதே
இப்படி வெளி இடக் காரணம் என் என்று வயிறு பிடித்து -பின்பு பெருமாளுடைய சக்தி விசேஷத்தை பஹூ முகமாகக் காணா  நிற்கச் செய்தேயும் –
ஸௌ குமார்ய அநு சந்தானத்தாலே இவர்க்கு என் வருகிறதோ என்று -துணுக்கு துணுக்கு சர்வ தசையிலும் கூட நின்று நோக்கிக் கொண்டு திரிந்தான் இறே –

மகா ராஜர் -வாலி வதாதிகளாலே பெருமாளுடைய சக்தி கௌரவத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் -சௌ குமாரத்தையே பார்த்து கலங்கி -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நாலு பேரும் தானும் வந்து தோற்றின போது –
ஏஷ சர்வாயுதோபேதச் சதுர்பிஸ் சஹா ராஷசை ராஷசோப்யேதி பஸ்யத்த்வம் அஸ்மான்  ஹந்தும் ந சம்சய –
என்று நமக்கு எல்லாம் ஓர் உயிரான  பெருமாளை நலிகிற வழியாலே -நம்மை எல்லாம் முடிப்பதாக வருகிறான் இவன் என்று அறுதி இட்டு முதலிகளுக்குக் காட்டி –
ராகவம்  சரணம் கத – நிவேதயத மாம்  ஷிப்ரம் -என்கிற உக்திகளைக் கேட்டு வைத்தும் –
வத்த்ய தாமேஷ தீவ்ரென தண்டே ந சசிவைஸ் சக ராவணஸ்ய ந்ருசம்சசஸ் யப் ப்ராதா ஹ்யேஷா விபீஷணா -என்று
ராவண சம்பந்த்தையே பார்த்து -இவனைச் சித்ர வதம் பண்ண வேணும் என்பது
ராவணே ந ப்ரணி ஹிதம் தமவேஹி நிசாசரம் தச்யாஹம் நிஹ்ரகம் மந்யே ஷமம் ஷமவதாம்வர -என்று ராவணன் வரவிட வந்தவன் என்றே அவனை திரு உள்ளம் பற்ற வேணும் -அவனைத் தண்டிக்கையே பிராப்தம் என்று புத்தி பண்ணா நின்றேன் என்பதாய்-இப் புடைகளிலே பலவற்றையும் சொல்லி -இவனை சர்வதாகக் கொள்ள ஒண்ணாது என்று ஒரு நிலை நின்று –
பிசாசான் தானாவான் -இத்யாதியாலே தம்முடைய பலத்தையும் காட்டியும்
கபோதோபாக்யானம் கண்டூபாக்யானம் இவை அருளிச் செய்தும் -தெளிவித்து -பயத்தைக் கெடுத்து –
ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட -என்ன எண்ணும் படி -பெருமாளை குழை சரக்காக நினைத்து காத்துக் கொண்டும் போந்தான் இறே –

மகாராஜர் -என்று ஸ்ரீ ஜடாயு மகாரஜரையும் சொல்வார்கள் -அதாவது
ஸ்ரீ ஜடாயு மகாராஜர் பிராட்டிக்காக ராவணனோடு பொருது குத்துயிராக கிடக்கிற தம்மை பெருமாள் வந்து கண்ட அளவிலே –
ஜனஸ்தானத்தில் இருந்த பதினாலாயிரம் ராஷசர்களையும் தனி வீரம் செய்து நின்று கொன்ற தோள் வலியை அறிந்து இருக்கச் செய்தேயும் –
யாமோஷதி மிவா யுஷ்மன் நன்வேஷ சிமகாவனே சாதேவீ மம ச பிராணா ராவணநோ பயம் ஹ்ருதம் -என்று
அருமருந்து தேடுவார் அடவிதொரும் தேடுமாருமாப் போலே -எவள் ஒருத்தியை இந்த பரந்த காட்டிலே தேடிக் கொண்டு திரிகிறீர் -உமக்கு நித்ய பிராண சமையானவளும் என்னுடைய பிராணங்களும் -இரண்டும் -ராவணன் ஆகிற பையலாலே அபயஹ்ருதயமாயிற்று காணும்-என்று சொல்லா நிற்கச் செய்தே -இவருடைய விரஹ கிலேசத்தால் வந்த தளர்த்தியையும் – ஸௌகுமாரத்தையும் -ராஷசரோட்டை வான் பகையையும் நினைத்து -என்னாகத் தேடுகிறதோ என்று அஞ்சி -ஆயுஷ்மன்-என்று ஆயுஸ்ஸை பிரார்த்தித்தார் இறே –

ஸ்ரீ நந்தகோபர் -பூதன நிரசனத்தாலே கிருஷ்ணனுடைய திவ்ய சக்தி யோகத்தை கண்டு இருக்கச் செய்தேயும் -சைசவ பிரயுக்தமான ஸௌ குமாரத்தையே பார்த்து கலங்கி வயிறு எரிந்து –
ரஷது த்வாம ஷோனாம் பூதானாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி சமுத்பூத பங்கஜா தவ வஜ் ஜகத் -என்று சர்வ ஜகத் காரண பூதனாய் –ஸகல விரோதி நிரசன சீலனான   சர்வேஸ்வரன் உம்மை ரஷிப்பான் ஆக என்று ரஷை இட்டார் இறே –

ஸ்ரீ விதுரர் -கிருஷ்ணனுடைய சர்வஞ்ஞத்வ  சர்வ சக்தித்வாதிகளை அறிந்து இருக்கச் செய்தேயும் –துர்யோதன கோஷ்டியில் எழுந்து அருளின போது -பொய்யாசனம் இட்டபடியைக் கண்டு அஞ்சி –ப்ரேமாந்ததையாலே-சம் ஸ்புருசன் னாசனம் ஸௌரேர் விதுரஸ் ச மகா மதி -என்று தம்முடைய திரு மாளிகையிலே -தாம் இட்ட ஆசனத்தையும் அதி சங்கை பண்ணி -தன் கையாலே அமுக்கி பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -அத் தலையில் -ஜ்ஞான சக்தி யாதிகளை எல்லாம் அறிந்து பெருமாளே நமக்கு ரஷகர் என்று அறிந்து நிற்கச் செய்தேயும் -பிரேம பரவசர் ஆகையாலே –
பெருமாள் உலாவி வரும் போது -எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் -நம் பிராணனை விடும் இத்தனை என்று சொட்டையை உருவிப் பிடித்து கொண்டு சேவிப்பார் என்று பிரசித்தம் இறே

துடக்கமானவர்கள் -என்ற இத்தால் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருன்யச் ச சாயம் ப்ரதாச்ச்மாஹிதா சர்வாந் தேவான் நமஸ்யந்தி ராமஸ் யார்த்தே யசஸ்வின-என்ற திரு அயோத்யா வாசி ஜனங்கள் –
யன் மங்கலம் ஸூபர்ணஸ்ய வினதா கல்பயத் புரா அம்ருதம் பிரார்த்தயா நஸ்ய தத் தே பவது மங்கலம் -என்று ஸ்ரீ கௌசல்யார்-
சாதோசி தேவ தேவே ச சங்கு சக்கர கதா தரா திவ்ய ரூபம் இதம் தேவ பிரசாதே நோப சம்கர-என்ற ஸ்ரீ வஸூ தேவரும் –
உபசம்கர சர்வாத்மன் ரூபமே தச் சதுர் புஜம் ஜானாது மாவதாரந்தே கம்சோசயம் திதி ஜன்மஜ -என்று தேவகிப் பிராட்டி
முதலானோரை எல்லாம் நினைக்கிறது –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–237/238/239/240/241/242/243–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 14, 2012

பகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –
தத் சம்பந்த சஹிதமான திர்யக் காதி ஜந்மமும் சத் ப்ரார்த்தநீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

அதாவது –
த்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே பாப யோநிகளாக சொல்லப்  படா நிற்கச் செய்தே –
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே –
மீனாய் பிறக்கும் விதி உடையேன்   ஆவேனே –
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று
திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைப் பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-

—————————————————

இப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -239-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

அதாவது –
இனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ்  ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –
வேதப் பயன் கொள்ள அவர் தம்மைப் போலே பேதைப் பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-
ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
என் மகன் கோவிந்தன் –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –
ஆயர்பாடி செல்வச் சிறுமீர்காள் –
நாமும் நம் பாவைக்கு –
ஆய்க் குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –
தான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –
அறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தைப் புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-

———————————————————–

இப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும் ஒழிய -கந்தல் கழிந்தால்
ஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும் வரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

(நிஸ் க்ருஷ்ட வேஷம் -விஸிஷ்ட வேஷத்துக்கு எதிர்மறை)

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

அதாவது –
ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்துப் போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –
பகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –
சர்வ லஷண சம்பன்னா  நாரீணா முத்தமா வதூ -என்கிறபடியே –
ஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-

——————————————–

அது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி ஸூத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

அதாவது –
1-அனந்யார்ஹ சேஷத்வம் –
2-அநந்ய சரணத்வம் –
3-அநந்ய போக்யத்வம் –
4-ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை –
5-விஸ்லேஷத்தில் தரியாமை-
6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –
நிஸ்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு
பிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நைசர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –
இந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-
கடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளிச் செய்தது ஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-

———————————————-

இனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –
நிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என்  -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-
அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

அதாவது –
ஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
விஸ்வாமித்ராதிகளைப் போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –
சேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
இவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –

——————————————————

இவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

அதாவது –
த்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-
த்வி பரார்த அவாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –
கடிக் கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 -என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –
அஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹிதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-
முக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் இவ் வஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –

இப்படி அஹங்கார தத் ரஹித்யங்கள் அவனை-இழக்கைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அநாதரித்து தத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் என்று கருத்து —

(ஆக இப் பிரகரணத்தால் -ஒன்பதில் இது 4 என்று கொள்ள வேன்டும்-சித்த உபாய நிஷ்டருடைய வைபவம் முற்றும் -மேல் அவர்களின் தினசரியா சொல்லும் பிரகரணம்
ஆறு பிரகரணத்தில் இன்னும் மூன்றாம் பிரகாரணம் -307-வரை தொடரும்)

(பகவத் அங்கீகாரம் -புருஷகாரம் வேன்டும் என்றும் அங்கீ க்ருத – குண விருத்தி– தூஷக அஹங்காராதி -ஆதி -விஷய ஸ்பர்சம் -181-சூரணை பார்த்தோம் –
தத் கார்ய அபசார கோரத்தையும் – நிரஹங்கார–ததீய பிரசித்த பாகவத வைபவத்தையும் –
சரீர ஜென்ம தோஷத்தையும் -சேஷத்வ ஞான ஜென்ம உத்க்ருஷ்டத்தையும் அருளிச் செய்தாரே)

—————————————————-

தன்னைத் தானே முடிக்கை யாவது -(180)என்று தொடங்கி-இவ்வளவாக அஹங்காராதிகளின் தோஷம் உபபாதிக்க ப் பட்டது –
அநந்தரம் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கும் பிரபன்ன அதிகாரி உடைய திநசர்யா விசேஷம் சொல்லப் படுகிறது –

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான் ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து –

அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-காமம் உபேஷிக்கும் அவர்கள்(பைய நடமின் என்னா முன்) பக்கல் அபேஷையும் பிறப்பிக்கும் என்று அஞ்சி –

ஆத்ம குணங்கள் நம்மாலும்  பிறராலும் பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –

7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதன சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-க்ருபா பலம் என்றாதல் பிறக்கும் ப்ரீதியும் (இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும்  மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(45விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி -சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்னும் அளவாக —
இப்படி -என்று கீழ் உக்தமான பிரகாரத்தை பரமார்சிக்கிறது –
சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவாகை யாவது -ஸ்வரூபேண முடித்தும் – பாகவத விரோதத்தை விளைத்து முடித்தும் -பகவல் லாப விரோதியையும் -எல்லாப் படியாலும் -அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பமாம் படி ஸ்வரூபத்தை உருவு அழிய பண்ணுமதாய் இருக்கை-

அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் – தேஹாதிரிக்த  ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகைப் பட்டு இறே இருப்பது –
இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –

அதனுடைய கார்யமான விஷய பிராவண்யத்துக்கும் -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வா தந்திர அபிமானமுமே விஷயங்களை ஸ்வ போக்யத்வேன விரும்புகைக்கு மூலம் ஆகையாலே -விஷய பிராவண்யத்தை அஹங்கார கார்யம் என்கிறது –

விஷய சப்தத்தாலே கீழ் அனுகூலமாகவும் பிரதி கூலமாகவும் சொல்லப்பட்ட -விஹித நிஷித்த தத் ரூப விஷய த்வத்தையும் சொல்லுகிறது –

விளை நிலம் தான் ஆகையாலே -என்றது -இவை இரண்டுக்கும் ஜன்ம பூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளை பண்ணக் கடவ குண த்ரயாத்மாக -பிரகிருதி பரிணாம ரூபமாய் -ஸ்வ கர்ம விசேஷ ஆரப்தமாய் இருக்கிற -சரீர விசிஷ்டனான தான் ஆகையாலே என்றபடி –

கர்ம அனுகுணமாக ரஜஸ் தமஸ்ஸூகளாலே கலங்க வடிக்கும் சரீர விசிஷ்டைதையாலே –
மதி மயங்கி-தான் அல்லாத தேகத்தைத் தானாகவும் -தனக்கு உரியன் அல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவும் அபிமானித்து தனக்கு அநர்த்த கரமான விஷயங்களிலே அத்ய ஆதரத்தைப் பண்ணுவதாம் அவன் தானே இறே –

தன்னைக் கண்டால் -இத்யாதி -இப்படி அநாதி காலம் போந்தவனாய் -இப்போதும் அதுக்கு யோக்யமான சரீர விசிஷ்டனாய் இருக்கிற தன்னை தர்சித்தால்-கொன்று அல்லது விடேன் என்று – ச ஆயுதராய் பல் கவ்வித் திரியும் சத்ருவைக் கண்டால் போலே -குடல் கரித்து -தனக்கு நாசகனாய் நினைத்தும் -தங்களுடைய உக்தி விருத்திகளாலே -துர் வாசனையைக் கிளப்பி -அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் –தத் உபய வஸ்ரான சம்சாரிகளை கண் எதிரே கண்டால்-அணுகில் மேல் விழுந்து அள்ளிக் கொள்ளும் அதிக குரூரமான சர்பத்தைக் கண்டால் போலேயும் அஞ்சி நடுங்கி பிற் காலித்து நமக்கு பாதகர் என்றே நினைத்தும் –

தங்களுடைய உபதேசம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் -அஹங்காராதிகளின் தோஷ தர்சனத்தைப் பண்ணுவித்து -தத் பிரசங்கத்திலே பீத பீதனாம் படி பண்ணி – சவாசனமாக அவற்றை நிவர்திப்பிக்கும் மத்யம பத (-நமஸ்-உகாரம் என்றுமாம்-) நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காணப் பெற்றால்-தன்னுடைய அநர்த்த ஆப்யுதங்கள்
இரண்டும் தங்களதாய்-தீயது விலக்கி-நல்லத்தில் மூட்டி ரஷிக்கும் ஆப்த பந்துக்களைக் கண்டால் போலே அத்ய ஆதரம் பண்ணி நமக்கு நல் துணை யானவர்கள் என்று நினைத்தும் –

அடியிலே கரண களேபரங்களைத் தந்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாமல் நல் வழி நடக்கும் படி சாஸ்த்ரங்களைக் காட்டி -அக்ருத்ய கரணாதிகளில் சிஷித்து சர்வ அவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்து போரும் ஈஸ்வரனை
அர்ச்சா ஸ்தலங்களிலே கண்களாரக் கண்டால் -உத்பாதகனாய் -வித்யா ப்ரதனாய் –
அபேத பிரவர்தகனாதபடி நியமித்து நடத்திக் கொண்டு போரும் ஹிதைஷியான
பிதாவைக் கண்டால் போலே -சிநேக சாத்வச வினயங்களை உடையனாய்க் கொண்டு -நமக்கு ஹித பரன்-என்று நினைத்தும் –

அநாதி காலம் அசந்நேவ என்னும் படி  கிடந்த தன்னை -பகவத் சம்பந்தத்தை அறிவித்து –
சத்தானாக்கி மென் மேலும் தன் உபதேசத்தாலே ஞான வைராக்ய பக்திகளை  விளைவித்து  கையில் கனி என பகவத் விஷயத்தை காட்டித் தரும் -மகா உபகாரகனாய் –
உன் சீரே உயிர்க்கு உயிராய் -என்றும் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்றும்
சொல்லும்படி -குண விக்ரஹங்களாலே தனக்கு தாரக போக்யனுமாய் இருக்கும்
சதாச்சார்யனை  கண்ணுக்கு இலக்காகும் படி கண்டால் -கண்ணாஞ்சுழலை இடும்
பெரும் பசியன் -தாரகமும் போக்யமுமான சோற்றைக் கண்டால் போலே
அத்ய அபிநிவேசத்தோடே அனுபவித்து -நமக்கு தாரக போக்ய விஷயம் என்றே நினைத்தும் 

சாத்யாந்தர நிவ்ருத்தாதி சமஸ்த ஸ்வாபவ  சம்பன்னதயா -சம்யக் ஞான பிரேமவானாய்
இருக்கும் சச் சிஷ்யனைக் கண்டால்-தனக்கு ஆனந்த ஆகவமான அபிமத விஷயத்தைக்
கண்டால் போலே -பகவத் குண அனுசந்தான தசையில் -நாம் சொல்லுகிற பகவத் குணங்களை ஆதரித்துக் கேட்ப்பது -அனுபாஷிப்பது -வித்தனாவதாம் ஆகாரங்களாலே நமக்கு ஆனந்த அவஹன் என்று நினைத்தும் –

அஹங்கார அர்த்த காமங்கள் மூன்றும் -இத்யாதி –
இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு -அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தை பிறப்பிக்கும் –அதாவது சேஷத்வத்தை தன் சன்னிதியில் ஜீவிக்க ஒட்டாத படி இறே அஹங்காரத்தின் பலம் இருப்பது –
அஹங்காரி யானவன் -ந ந மேயம் கதஞ்சன-என்று இருக்குமது ஒழிய ஒரு விஷயத்திலும் தலை சாய்க்க இசையானே –
ஆகையாலே அஹங்காரம் மேல் இடுமாகில் -ஸ்வரூப வர்த்தகராய்க் கொண்டு அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் –
நம்முடைய சேஷிகள் என்று துடை நடுங்கி எழுந்து இருந்து பிரணாமாதி பூர்வகமாக அனுவர்தகங்களைப் பண்ண ஒட்டாதே -தன்னை
அவர்களில் அதிகனாவாதல் -அவர்களை தன்னோடு சமராகவதால் -புத்தி பண்ணி அநாதாரிக்கும் படி பண்ணும் என்கை –

அர்த்தம் பிரதி கூலர் பக்கல் ப்ராவண்யத்தை பிறப்பிக்கும் -அதாவது –
ஆரையாகிலும் சென்று அநு வர்த்தித்து -ஒரு காசு பெற்றதாய் விட வேணும் என்னும் படி இறே அர்த்த ராகம்  இருக்கும் படி –
ஆகையால் அது ஸ்வரூப நாசகத்வேன-பிரதி கூலரான சம்சாரிகளைக் கண்டால் –
வெருவி ஓடிப் போக வேண்டி இருக்க -ஒரு காசை நச்சி அவர்களோடே உறவு பண்ணி –
அவர்கள் இருந்த இடங்களிலே -பல காலம் செல்லுவது -அவர்களை அழைத்து விருந்து இடுவது -அவர்கள் குண கீர்த்தனம் பண்ணுவதாம் படி -அவர்கள் விஷயத்தில் பிராவண்யத்தை  உண்டாக்கும் என்கை-

காமம் உபேஷிக்கும் அவர்கள் பக்கல் அபேஷையை பிறப்பிக்கும் -காமயத இதி காம -என்கிறபடி – காம சப்தத்தாலே விஷய சம்போக சுகத்தை சொல்லுகிறது -அது ஈசி  போமின் – இத்யாதிப் படியே -தாரித்ர்ய வார்த்தகாதிகள் அடியாக தன்னை முகம் பாராமல் தள்ளி -கதவடைத்து -உபேஷாவாதம் பண்ணும் ஸ்திரீகள் பக்கலிலே -ஏழையர் தாம் இழிப்ப  செல்வர் -என்கிறபடியே -அவர்கள் உபேஷாவாதம் முதலானவை தன்னையே உத்தேச்யமாய் கொண்டு செல்லும் படிவிலஷணர் கேட்டால் சிரிக்கும் படியான ஹேய அபேஷையை விளைக்கும் என்கை –

ஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் –
ஸ்வரூப வர்த்தகரை அநாதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகரை ஆதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகதையோடே -உபேஷகருமாய் இருக்கும் அவர்களை அபேஷிக்கும் படியும் –
பண்ணும் என்று அவற்றின் கொடுமைகளை அநு சந்தித்து -என் செய்யத் தேடுகிறதோ -என்று அஞ்சி –

அர்த்த காம அபிமானங்கள் மூன்றும் -என்று பாடம் ஆனாலும்-(கர்வ அபிமான அஹங்காரம் என்றும் உண்டே-) அபிமான சப்தத்தாலே அஹங்காரத்தைச் சொல்லுகிறது ஆகையாலே -அனுகூலர் பக்கல் -இத்யாதியை – நிரை நிரை ஆக்காதே -யதா யோகம் கொண்டு கீழ்ச் சொன்ன பிரகாரத்திலே யோசிக்கக் கடவது –

ஆத்ம குணங்கள் -இத்யாதி -சம தமாதி ஆத்ம குணங்கள் -அநாதி காலம்  அஹங்காராதிகளுக்கு விளை நிலமாய் -அநாத்ம குணங்களைக் கூடு பூரித்துக் கொண்டு -கர்ம பரதந்த்ராய் இருக்கிற நம்முடைய யத்னத்தாலும் -ஆத்ம குண உதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய்- அநாத்ம குண பரி பூரணராய் -கர்ம வஸ்ரராய் -இருக்கிற பிறருடைய யத்னத்தாலும் -பிறப்பித்துக் கொள்ள  ஒண்ணாது -ஆத்ம குணங்களுக்கு எல்லாம் கொள்கலமாய்-அடியிலே தன்னுடைய நிர்கேதுஹ கிருபையாலே நம்மை அங்கீகரித்து அருளி -நமக்கு ஆத்ம குணம் உண்டாவது எப்போதோ என்று பல காலும் கரைவது -பகவானை அர்த்திப்பதாய்க் கொண்டு போரும் சதாச்சார்யன் உடைய பிரசாதம் அடியாக வருகிற நம்முடைய ஆத்ம குண உதய விரோதி பாப ஷயம் பண்ணி -அமலங்களாக விழிக்கும் பகவானுடைய பரிபூர்ண பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று அத்யவசித்து 

தேக யாத்ரையில் உபேஷை யாவது -தேக ரஷண அர்த்தமான வியாபாரத்தில் விருப்பமற்று இருக்கை-

ஆத்ம யாத்ரையில் அபேஷை யாவது -சேஷத்வமே வடிவான ஆத்மாவுக்கு தாகரகாதிகளான குண அனுபவ கைங்கர்ய பிரவ்ருத்தியில் -பெற்ற  அளவால் த்ருப்தனாய் இராதே -மேன்மேலும் ஆசைப் படுகை-

பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தி யாவது -அசந ஆசாதனங்களுக்கு-(உண்ணவும் உடுக்கவும் )உறுப்பான பிராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கு அடியான போக்யத்வ புத்தி தவிருகை –

தேக தாரணம் -இத்யாதி -அதாவது -அந்த பிராக்ருத வஸ்துக்களில் தேகம் தரிக்கைக்கு  தக்க அளவு புஜிக்கை– பரமாத்மாவான சர்வேஸ்வரனுடைய சமாராதனத்தின் சமாப்தி ரூபையான பிரசாத பிரதி பத்தி என்கிற -புத்தி விசேஷமும் என்கை –
அன்றிக்கே -பரமாத்ம சமாராதன சமாப்தி -என்கிற புத்தி விசேஷமும் -தத் பிரசாத பிரதி பத்தி என்கிற – புத்தி விசேஷமும் -என்னவுமாம் –

தனக்கு -இத்யாதி -அதாவது -முமுஷுவாய் -பிர பன்னன் ஆனாலும் -பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் -தாபத் த்ரயம் வருவது தவிராது இறே -ஆகையாலே
இச் சரீரத்தோடு இருக்கிற தனக்கு -தாபத் த்ரயங்களில் -ஏதேனும் ஒரு க்லேசம் உண்டானால் -இது அனுபவ விநாஸ்யமான பிராரப்த கர்ம பலமன்றோ -ஏவம் பூதம் கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ இச் சரீரத்தோடு எம்பெருமான் வைக்கிறது-
பிராப்தி பிரதிபந்தங்களில் ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் -துர் வாசனையாலே இவ் வுடம்பை விட இசையாமல்  பிராக்ருத பதார்த்தங்களையும்
ஜீவித்துக் கொண்டு  சம்சாரத்துக்கு உள்ளே பொருந்தி இருக்கிற நம்மை துக்க தர்சனத்தை
பண்ணுவித்து இதில் பற்று அறுத்துக் கொண்டு போக நினைக்கிற சர்வேஸ்வரனுடைய
கிருபையின் பலம் அன்றோ  இது என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் உண்டாகக் கடவ ப்ரீதியும் என்கை –

பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிறவனுக்கு  வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே –
கர்ம பலமான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் -இத் தேகத்தை விட என்றால்
இசையாத இவனை -நிர் துக்கனாக்கி வைப்போம் ஆகில் -இச் சரீரத்தோடு நெடும் காலம்
இருக்க இச்சித்தல் -இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சிக்குதல் செய்யும் ஆகையால் –
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இருக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆன பின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்தது சம்சாரத்தில் நின்றும் இவனை
கடுக திருவடிகளிலே சேர்த்து கொள்ளுகையில் உண்டான கிருபையாலே ஆனாப் போலே –
இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே  இறே –அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் -பகவன் நிக்ரஹ பலம் -இது அவன் அனுக்ரஹ பலம் -யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்றார் இறே– ஆகையால் இத்தை கிருபா பலம் என்கிறது –

ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தி -யாவது -பிரபன்னனான தன்னுடைய
அதிகார அநு குணமாக அனுஷ்டித்து கொண்டு போரும் நல் ஒழுக்கங்களை-பேற்றுக்கு சாதனமாக நினையாது ஒழிகை —

விலஷணருடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யாவது -நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருக்கையாலே -நிர்மல ஞான பக்திகராய் இருக்கும் -விலஷணரான பூர்வர்களுடைய  விலஷணமான அந்த ஞானமும் அனுஷ்டானமும் நமக்கு உண்டாக வேணும் என்னும் ஆசை –

உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயம் -ஆவது -தான் உகந்த ஊர்  -என்கிறபடியே
சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்ய தேசங்கள் என்றாதல்-
கண்டியூர்  அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் -என்றபடியே
மனஸ் அங்கே மண்டி விழும்படி மென்மேலும் பெருகுகிற  ஆதரம் –

மங்களா சாசனம் ஆவது -அவ்வோ திவ்ய தேசங்களில் விரும்பி வர்திக்கிறவனுடைய சௌகுமாரதையும் -வாசி அறிந்து நோக்கும் பரிவர் இல்லாமையும் –
பிரதிகூலர் வர்க்கங்களின் அதிசயத்தையும் நினைத்து ஏங்கி -என் செய்யத் தேடுகின்றது என்று வயிறு எரிந்து இரவும் பகலும் திருப் பல்லாண்டு பாடுகை –

இதர விஷயங்களில் அருசி யாவது -பகவத் வியதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் -தோஷ தர்சநாதிகளாலே விருப்பம் அற்று இருக்கை –

ஆர்த்தி யாவது -இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான இவ் உடம்போடு இருள் தரும்  மா ஞாலத்தில் இருக்கிற இதில் அடிக் கொதிப்பாலும் –பிராப்ய வைலஷண்ய தர்சனத்தால் வந்த பிராப்தி விளம்ப அசஹத்வத்தாலும் படும் கிலேசம் –

அனுவர்தந நியதி யாவது -பகவத் பாகவத விஷயங்களில் -ஸ்வ சேஷத்வ அநு குணமாக –
நீச உக்தி நீச விருத்திகளாலே பண்ணும் அநு வர்த்தநத்தை -பிராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாது ஒழிகை —

ஆகார நியதி யாவது -ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டங்களாய் -சர்வேஸ்வரனுடையவும் ததீயருடையவும் பிரசாதங்களான வஸ்துக்களையே ஆகாரமாகக் கொள்ளும் அது ஒழிய -தத் இதரங்கள் ஆனவை கொள்ளக் கடவோம் அல்லோம் என்று இருக்கை –

அனுகூல சஹவாசம் ஆவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞானாதிகளை வர்திப்பியா நிற்கும் அனுகூலர் ஆனவர்களுடன் ஷண காலமும் பிரியாதே கூடி வர்த்திகை –

பிரதி கூல சஹவாச நிவ்ருத்தி யாவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞான அனுஷ்டானங்களை நசிப்பியா நிற்கும் பிரதிகூலரானவர்களுடன் ஷண காலமும் கூடி வர்த்தியாது ஒழிகை –

இங்குச் சொன்ன அனுகூலரும் பிரதி கூலரும் இன்னார் என்னும் இடம் மேலே தாமே அருளிச் செய்யக் கடவர் இறே —

சதாச்சார்ய பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -அதாவது –
கீழ்ச் சொன்ன இவை இத்தனையும் – ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணனான சதாச்சார்யன் உடைய சர்வ மங்கள ஆவஹமான பிரசாதத்தாலே தன்னடையே மேன்மேலும்  அபிவிருத்தமாம் படி செய்து கொண்டு போரக்  கடவன் என்றபடி –

சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி இவன் பண்ணிக் கொண்டு போருகை யாவது – தத் பிரசாதகங்களைச்  (ப்ரசாதங்களைத் தூண்டுமவை))செய்து கொண்டு போருகை –

தத் பிரசாதகங்கள் ஆவன -இதனுடைய உபபாதன ஸ்தலத்தில் அருளிச் செய்கிறவை –

போரக் கடவன் -என்று விதி ரூபேண அருளிச் செய்தது -இதனுடைய அவஸ்ய அனுஷ்டேத்யத்வம் தோற்றுகைக்காக-

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜர் பணித்த–ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் – 10–சரம சந்தேசங்கள் -/72- கட்டளைகள்-பிரபன்னாம்ருதம் படி-

April 11, 2012

ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -சரம சந்தேசம் –

1-ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்மயாத்ரை  ஈஸ்வர ஆதீனம் ஆகையால் அதுக்குக் கரைய வேண்டா
2-இனி இவனுடைய தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் இத்தனை –
3- உபயாம்சத்திலே அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து கால ஷேபம் பண்ண வேண்டும்
4-ப்ரபன்ன அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டியது மூன்று விஷயங்கள் உண்டு
அவை யாவன -அனுகூலர் என்றும் ப்ரதிகூலர் என்றும்  அனுபயர்-இரு வகுப்பிலும் சேராதவர் –
அனுகூலராவார் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதிகூலராவார் -பகவத் த்வேஷிகள்
அனுபயராவார் -சம்சாரிகள்
5-இவருள் அனுகூலரைக் கண்டால் சந்தன குசூம தாம் பூலங்களைக் கண்டால் போலேயும்
அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் உகந்து போர்க் கடவன்
பிரதிகூலரைக் கண்டால் சர்பாதிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்க கடவன்
அனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன்
அந்த சம்சாரிகள் அனுகூலித்தார்கள் ஆகில் ஆத்மஜ்ஞானத்தை உபதேசிக்கவும்
அனுகூலியார்கள் ஆகில்  ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்
6-இப்படி செய்ய ஒட்டாது ஒழிகிறது-அர்த்த காம ப்ராவண்யம் –
அர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அனாதரிக்கும் ஆகில் –
சார்வ பௌமனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால் ராஜா வெறுத்து இருக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்
அர்த்த காமம் அடியாக பிரதிகூலரை ஆதரிக்குமாகில் சார்வ பௌமனான ராஜாவின் மகிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடி பிச்சை புக்கால்
ராஜாவுக்கு அவத்யமாகையால் ராஜா வெறுக்குமா போலே
அனுபயரை ஆதரிக்குமாகில் ரத்தத்துக்கும் பல கறைக்கும் வாசி அறியாதா போலே
பியாந்த ஜ்ஞானம் கார்யகரமாய்த்து இல்லை என்று எம்பெருமான் இவனை அநாதரிக்கும்-
7-     பின்பு பட்டரைப் பார்த்தருளி -கூரத்தில் ஆழ்வானையும் கந்தாடை ஆண்டானையும் போலே கூரகுலதிலகரான நீரும்
வாதூலகுல திலகரான கந்தாடை யாண்டானும்  நம்மதியாக யுண்டான
சௌப்ராத்ரத்தை யுடையராய்
மச்சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாக இருக்க அருளிச் செய்தார்
8-ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு யுண்டு –
அவை யாவன –
1-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை
2-அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஒதுவித்தும் போருகை
3-அதற்கும் யோக்யதை இல்லா விடில் உகந்து அருளின நிலங்களில் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றை யுண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –
4-திரு நாராயண புரத்திலே ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை
5-அதற்கும் யோக்யதை இல்லையாகில் த்வயத்தை அர்த்தானுசந்தானம் பண்ணிப் போருகை
6-அதற்கும் யோக்யதை இல்லையாகில் -என்னுடையவன் -என்று அபிமாநிப்பான்
ஒரு பரம  பாகவதன்  -அவனுடைய அபிமானத்தில் ஒதுங்கிப் போருகை –

9-பிரிய பிரியதர பிரியா தாமங்கள் இன்னது என்றும்
ப்ராப்தி பிரதிபந்தகமான பகவத் பாகவத ஆச்சார்யா விஷயங்களில் அபசாரத்தை வருந்தியும் பரிஹரித்து போருங்கோள்-

10-ஸ்ரீ வைஷ்ணவ அதிகாரிக்கு த்வயத்தை ஒழிய மந்த்ரம் இல்லை
ஒரு மிதுனம் ஒழிய பற்றும் வஸ்து இல்லை
கைங்கர்யத்தை ஒழிய புருஷார்த்தம் இல்லை
ஆச்சார்யா அபிமானம் ஒழிய மோஷ யுபாயம் இல்லை
பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-

இவை முதலானவைகளாய் உள்ள அநேக ஹிதங்களையும் பிரசாதித்து உபசம்ஹரித்து அருளினார் –

————————————————————————–

ஸ்ரீ வைஷ்ணவான் சமாஹூய தத்ததத்ர ஸ்திதான் பஹூன்
க்ருபாமாத்ரா பிரசந்தார்யோ யதிராஜோ ஜகத்குரு
சார்வ சாஸ்த்ரார்த்த சாராணி ஸூ வாக்யாநி த்விசப்ததி
சமாஹ்ருத்ய விதாயாசு பூரிதா நம் மகாயஸா
வைஷ்ண வேப்ய ப்ரோவாச சிஷ்யேப்ய கருணார்ணவா-

பிரபன்னாம்ருதம் படி ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த -72 வார்த்தைகள் –

1-ஆசார்யர் திருவடி பணிந்து போவது போல்
அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம் நடக்க வேண்டும் –
2-சம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில்   நம்பிக்கை வேணும் –
3-புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும் –
4-மதசார்பற்ற ஞானம் அறிவுடன் போதும் என்று இராமல் இருக்க வேண்டும்
5 -பகவத் சரித்ரங்கள் சேஷ்டிதங்கள்  வாக்யங்களில்  உகந்த
ஈடுபாடுடன் இருக்க வேண்டும்
6-ஆசார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு -மீண்டும்
புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும் –
7-அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி
இருக்க வேண்டும்
8-சந்தனம் மலர் நறு மணம் இவற்றில் அதிக ஈடுபாடு
கொண்டு இருக்க கூடாது

-9-கைங்கர்ய பரர் திருநாமங்களை  உபயோக்கிக்கும் பொழுது
அவன் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது
அடையும் இன்பம் அடைய வேண்டும் –
10-அடியார் அடியானே அவனை அவன் அடியானை விட
சீக்கிரம் அடைகிறான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும் –
11-ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ
இன்றி அழிவான் –
12-வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும்
உபாயம் என்று கருத கூடாது –
13-அவன் ஒருவனே அடையும் குறிக்கோள் –
14-கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது –
15-ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல்
இருக்க கூடாது –
16-பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும்
ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது-

17-திரு கோவிலை நோக்கியோ -ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ –
கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ -காலை நீட்ட கூடாது –
18-காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும் –
19-பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி
பார்த்ததும் த்வயம்  மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு
சேவிக்கவும் –
20-திருநாம சந்கீர்தனத்தின் நடுவிலோ -கைங்கர்ய பரர் களை   பாராட்டும் பொழுதோ
நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும் -நடுவில் கூட்டத்தில் இருந்து போவது
மிக பெரிய பாவமாகும்
21-உன்னை தேடி ஸ்ரீ வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே
சென்று வர வேற்க வேண்டும் -அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட
செல்ல வேண்டும் -இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்
22-அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள  வேண்டும் -அவர்கள்
திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து -அவர்களை உனக்கு முன் மரியாதையாக நடத்த வேண்டும்
23-திருகோவிலையோ-திரு கோபுரத்தையோ -திரு விமானத்தையோ
கண்டால் கை கூப்பி வணங்க வேண்டும்
24-மறந்தும் புறம் தொழாமல் – அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும்-காணாமல் இருக்க வேண்டும்

25-மற்றை தெய்வ செஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும்
ஈர்க்க கூடாதவை
26-அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ –
அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு
இருக்கும் பொழுதோ நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது

27-ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது –
28-நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும் –
29-நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும் –
30-ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்
அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது -அப்படி நடத்தினால்
மிக பெரிய பாபம் வரும் –
31-ஸ்ரீவைஷ்ணவர் உன்னை  முதலில் வணங்கி -அடியேன் என்றால் –
அவருக்கு அவமரியாதை காட்ட கூடாது -அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும் –
32-ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள்-சோம்பல்தனம் -தூங்கி வழிவது –
தாழ்ந்த பிறவி -போன்றவை -அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்து-கொள்ள வேண்டும் -அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும் –
33- பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில்-சுவீகரித்து கொள்ள கூடாது
34-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம்
சுவீகரித்து கொள்ள கூடாது
35-ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத
தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும் –
36-கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும் –
37-அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத
தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்
38-பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு
கைங்கர்யம் செய்ய வேண்டும் –

39-அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்
நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும் –
40-நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது –
41-அப்படி பட்டவர்கள் வீட்டில் பெருமாளை  சேவிக்க கூடாது-
42-ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும்
பெருமாள் பிரசாதம் ச்வீகரிக்காமல் இருக்க கூடாது-
43-விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால்
மறுக்க கூடாது –
44–பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம்-பாபங்களை போக்கும் –
மறுக்க கூடாது -வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் –
45-ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது –
46-மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது –
47-அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா
பொழுதும் போக வேண்டும் –
48-நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும் –
49-திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல
மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும் –
50-தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம் –
51-வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே
ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது –
52-பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது –
53-மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் –
54-அவன் அடியாரை களங்க படுத்தும் -ஆச்சர்யர்களை இகழும் –
புலி தோல் போத்திய மானிடரை -மதிக்க கூடாது –
55-த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும் –
56-உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும் -57-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும் –
58-ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும் –
59-ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல்  -அவர்களை
பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும் –
60-பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு
பாடு பட வேண்டும் –
61-சரணாகதன்-கைங்கர்ய பரர் விதிக்கும்  கட்டளை படிக்கு மாறாக
-தனக்கு நன்மையே பயத்தாலும் -நடக்க  கூடாது –
62-பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ -பெருமாளுக்கு சாத்தாத
சந்தனமோ -வெத்தலையோ புஷ்பமோ பானகமோ-சுவீகரித்து கொள்ள கூடாது –
63-ஐச்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து
கொள்ள கூடாது –
64-நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே
ச்வீகரிகலாம்
65-சாஸ்திரம் விதித்த ஒன்றையே பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
-கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது –
66-சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும் –
67-பெருமாள் பிரசாதம் -புஷ்பம் -புனிதம் என்ற உணர்வுடன்
சுவீகரிக்க வேண்டும் -போக பொருளாக கொள்ள கூடாது –
68-சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும் –
69-ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால் பேறு  இழப்பு நிச்சயம் –
அவர்கள் அனுக்ரகத்தால் பேறு  சீக்கிரம் நிச்சயம் பெறுவோம் –
70-அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள  வேண்டும் –
அவர்கள் மனம் கோணும் படி நடந்தால் நாம் இழப்போம் –
71-திவ்ய திருமேனியை வெறும்  கல் என்றோ -ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ –
பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ -புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ -திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ -பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று-எண்ணுபவனோ -அகல பாதாள இருட்டு நரகம் புகுவான் –
72-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -பெருமாளை  திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே-நிச்சயம் பேறு பெறுவான் -ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிகாதவனை விட அதிக-பாபம் செய்தவன் ஆகிறான் -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது –
இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கிருஷ்ணன் கதை அமுதம் -567-574-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் …

April 10, 2012

567-

பக்தி ஒன்றாலே அவனை அடைய முடியும்

அறிய காண அடைய பக்தி ஒன்றே வலி -வேறு ஒன்றிலும் ஆசை இன்றி

அவனை -உன் தன்னை பிறவி -புண்ணியம் உடையோம்
உறவேல் நமக்கு இங்கு ஒழியாது மற்றை நம் காமங்கள் மாற்று
பலாத்காரமாக பிடித்து கேட்டு பெறலாம்
பக்தர் பித்தர் பேதையர் -சிறுமிகள் அன்பினால் சிறு பேர் அழைத்தோம் –
கம்ப நாட்டு ஆழ்வான்-பிரகலாதன்-துருவன்-நம் ஆழ்வார் அவன் இடம் பித்தம்
புண்டரீகர் -திரு கடல் மலை-தல சயன பெருமாள்
புண் சிரிப்பு மாறாத திரு கண்கள்-
கடல் நீரை கைகளால் வற்று எடுக்க முயன்றார் -சேவிக்க ஆதரவு ஈடு பாடு –
நிலத்திலே சயனம்-பூதத் ஆழ்வார் திரு அவதாரம்
பூத தனமான சக்தி அவனை பாட
பக்தியால் கலங்கி -அறிவின் முதிர்ந்த நிலையே பக்தி அறிவுடன் அன்பு கலந்து -தாய் குழந்தை விஷயம் நாம் அறிவோம்
அவன் அருள் பெருமை செஷ்டிதம் நினைக்க அறிவுடன் அன்பு கலந்து -பக்தி ஒன்றே ப்ரீத்தி கொடுக்கும்
அதை பகவான் உத்தவருக்கு அருள்கிறார்
பீஷ்மர்-ஷாந்தி தர்மம் -ஆபத்  தர்மம் ராஜ தர்மம்
மோஷ தர்மத்தில் பக்தி -பற்றி
அவன் விஷயத்தில் அறிவும் அன்பும் மற்ற விஷயத்தில் வைராக்யமும்
விரித்து உரைக்கிறேன்
பக்தன் பெருமை
ஸ்ரத்தையால் -ஒன்றை செய்தால் மற்றவை தானாகவே வரும்
அமுத கதைகள் கேட்க விருப்பம் முதல்
மீண்டும்மீண்டும் கேட்க –
குழந்தைக்கு சொல்லி சொல்லி -நிறைய செஷ்டிதங்கள் உண்டு
கதை கேட்க விருப்பம்
திருநாம சங்கீர்த்தனம்
வீர தீர சரித்ரம் பாடி
திரு ஆராதனம் பூஜித்து
தொண்டு புரிதல்-
மத்பக்த -அனைவர் உள்ளும் சம தர்சனம் காண்பான்
 568

ஸ்ரவணம் கீர்த்தனம் -நவ லஷனம்
பிரகலாதன்-பக்தி செய்யும் முறை –
நாரதர் கற்ப வாசத்திலே உபதேசித்து –
பீஷ்மர் -தர்மர் -கண்ணன்-உத்தவர் -11 -20 /21 /22 .23 ஸ்லோகங்கள் முக்கியம் –
விழுந்து அபிவந்தனம்-செருக்கு இன்றி -சாஷ்டாங்க
பக்தர்கள் அனைவரையும் பூஜிக்க
மற்றவர் பூஜிப்பதை அனுமதித்து ஆனந்தம் அடைய வேண்டும் –
சர்வ வியாபி-அவனையே அணைத்து
நெறிமையால் தானும் வியாபித்து
தன்னுள் அனைத்து உலகதுள்ளும் நிற்க –
அங்க செஷ்டிதம்-நம் புலன்கள் அவனுக்கு
அணைத்து செயலும் அவன் இடம் அர்பணித்து
காயென வாச -செயல்பயன்செய்யும் நான் மூன்றும் அவன் இடம்சமர்பித்து
மூன்று வித த்யாகம்-அவன் செய்விக்கிறான் -என்ற எண்ணம்-
உண்ணும் பொழுது -இந்த உணவு அவன் கொடுத்தது –
திரு ஆராதனம் செய்தே
மற்றவை த்ருணம் புல் போல் அவனை  -அனைவரும் இப்படியே எண்ணுவார்
தள்ளி இல்லை யாரும்-நெஞ்சைதொட்டு பார்த்தால் அறிவோம் –
துரி யோதனன் போல்வார் தான்கண்ணன்  வேண்டாம் என்பர்
இஷ்டம் -கோவில் கட்டி குளம் கட்டி அனைத்தும் அவன் விஷயம் என்பர் பக்தர்
கண்ணனுக்கே ஆம் அது காமம் அறம் பொருள்  வீடு அனைத்தும் இதை பின் பற்றி செல்லும்
பிரேமமே உயர்ந்தது  -என்கிறார் எதிராஜரும் -ஞானம் உசந்தது சொல்ல வில்லை
அனைத்தும் மத் அர்த்தம் அவன் விஷயம்-
அன்பு பக்தியாலே அருளி செயல்-
பக்தி பிறக்க இவை அனைத்தும் காரணம்
தன்னடையே வளரும்
ஒன்றை செய்தால் மற்றவை கிட்டும்
வைராக்கியம்-வந்தால் அஷ்ட மகா சித்திகளும் புல்லுக்கு சமம் –
பக்தியாக மலரும் வழிசொல்லி –
எளிதான வழி -கை காட்டி /புஷ்பம் சமர்பித்து –
எளிய இனிமையான பக்தி செய்து –
யம -நியமம்-அஷ்டாங்க யோகம் என்ன கேள்வி கேட்கிறார் உத்தவர்
யமம்-சமம்-தமம்-திருத்தி தானம் தபம்வீரம் எதி சத்யம் -தஷினை பலம்-விதியை எது
வெட்கம் எதை கண்டு -செல்வா செழிப்பு பண்டிதன் நேர் வழி
 ஸ்வர்கம் நரகம் போல் பல கேள்விகள் கேட்கிறார் உத்தவர் நமக்கு அறிந்து கொள்ள
பொருள் அறியோம்-சொல் கேள்வி பட்டு இருக்கிறோம்
569

பாகவதம் ரசம்-வேதம் தேறிய பொருள் காட்டும்-திரட்டு பால் போல்
11 =-19 -இறுதி பகுதி பார்த்து வருகிறோம்
யமம் நியமம் தவம் தூய்மை பல கேள்விகள்-
33 -45 ஸ்லோகம் வரை
யமம்-நியமம்-ஆசனம் பிராணாயாமம் த்யானம் சமாதி -அஷ்ட அங்க யோகம்-
அடிப் படை கட்டுபாடுகள்-யோகத்துக்கு வேண்டும் அதை சொல்கிறார்
12கட்டுபாடுகள் அகிம்சை சத்யம் –
போது இலா -தப்பான புண் படும் வார்த்தை இன்றி -தீ விழி இன்றி -கனிவான பார்வை –
அகிம்சை வார்த்தையாலே கொல்லாமல்-மனசால் கூட இன்றி
சத்யம் -பொய் பேசாமல்
அஸ்தேயம் அசந்கேய -விலகி -உலக விஷயம் -கடமை செய்வதில் ஈடு பாடு வேண்டும்
வேண்டாத விஷயம் பற்று நீங்கி -இறை அன்பு மட்டுமே குறிக் கோள்
தப்புக்கு வெட்க படவேண்டும்-அதுவே பிராயச்சித்தம் –
ஆஸ்திக்யம்-பிரமம் உண்டு அவனால் தான் அனைத்தும் –
அவன் படைத்து ரஷித்து நம்மையும் அவன் காக்கிறான்-நம் நிலை அவன் இட்ட பிச்சை
வேதம் பிரமாணம் -அனைவரும் அவன் அடிமை
பிரமச்சர்யம் முக்கியம்-
கிரகச்தனனும் -பிரமத்தை நோக்கியே தர்ம சாஸ்திரம் படி –
கலக்கம் தடுமாற்றம் இன்றி -ஸ்திர புத்தி
பொறுமை உடன்-இருந்து
தூண்ட பட்ட பொழுதும்
அபயம்-பயம் இன்றி -யாரை பார்த்து நாமும் பயபடாமல் யாரும் நம்மை கண்டு பயப்படாமல்
இனி நியமம்
சுத்த மனச
ஜபம் -ரகஸ்ய த்ரயம்
தபஸ்
ஹோமம்-ஆகுதி -நித்ய பூஜையே ஹோமம் தான்
ஈடுபாடு சரத்தை வேண்டும் ஆர்வம்
ஆகித்யம் விரும்பு
அர்ச்சனம்
தீர்த்த யாத்ரை -அயோதியை முனிவர்கள் இருந்த இடம்
மற்றவர் பொருள் ஆசை இன்றி
நம் பொருள் கொண்டு திருப்தி
ஆச்சர்ய சேவனம்-திரு மாளிகை கைங்கர்யம்
பக்தர்கள் உடன் கூடி இருந்து
ஆக இப்படி 12 யமம்/12 நியமம் அடுக்கி விளக்கி இருக்கிறார்
 570
ஸ்ரத்தையால்-யோகிகள்-சித்தம் அவன் இடம் செலுத்தி –
பெருமாளை த்யாநித்தே யோகம்-
உயர்ந்த ஆனந்த மாயம் அவனை பற்றியே த்யானம்
பாபம் விலகி–11 -19 -33 –
சமம்-மனசை அடக்கி தமம்-புலன் அடக்குதல்
பொருள் சிந்தனை நிறுத்தாமல்-அதற்குள்ளும் அவன் இருப்பதை உணர்ந்து
மனம் ஓடி கொண்டே இருக்கும் –
அவனே லஷ்யமாக கொண்டு இருக்க வேண்டும் –
சிந்தனை அனைத்தும் -பொருள்கள் மக்கள் அனைவரையும்
அவன் அன்பு அறிந்து என் தாய் ஒரு மடங்கு பாசம் அவன் இருப்பதால்
புலன் அடக்குதல்-அவன் இடம் செலுத்தி
அவன் திரு நாமம் கேட்டுபாடி நுகர்ந்து இப்படி
மெதுவாக ஈடு படுத்துதல் மனஸ் தமம் சமம்
கவிழ்த்து வைத்த கூடை கொம்பு போல் இல்லை
அவனுக்கு பயன்  படுத்து அறிவு -வெளி புலன்- உள் புலன்-இரண்டையும் அவன் இடம்
ச்தித்ஷா பொறுமை-துக்கம் வரும் பொழுது
குழந்தை பெரும் தாய் பல்லை கடித்து பொறுமை-நாளை கொஞ்ச போகிறோம்
நல் வாழ்வு வரும் என்று பொறுமை உடன் துக்கம் வரும் பொழுதும் இருக்க வேண்டும் –
த்ருதி-உறுதி நாக்கை அடக்குதல்-காமத்தை அடக்குதல்-
குறைவாக பேசி-நிறைவாக உணர்த்தி-
காம சுகத்துக்கு அலையாமல்-
தானம்-தண்டனை -இன்றி மன்னிப்பதே குற்றம் உணர்ந்தால்
தவம்-அடங்கா ஆசை த்யாகம் செய்வதே -பிடித்த பொருளை யாரோ ஆசை உடன் கடக கொடுப்பதே தபஸ்
வீரம் சௌர்யம் இயல்பான தப்பை தவிர்ப்பது
இயல்வ்பான பழக்கம் மாற்றி -தாண்டி -வீரன்
உண்மை -சத்யம்-சம தர்சனம்-வித்யா வினைய சம்பனவ் பண்டிதன் சம தர்சன்
இவ் ஒன்றையும் எழுதி வைத்து நடை முறை பண்ணினால் முன்னேறலாம்
மெதுவாக  பேசி -இனிமையான வார்த்தை-
தூய்மை-கர்மம் செய்து -நான் செய்தேன் என்ற எண்ணம் இன்றி
த்யாகம் -சன் யாசம் பொறுப்பை அவன் இடம்
சரணா கதி இதுவே
571-
யக்ஜம் ஹோமம் முக்கியம்-எளிமையான பூஜையே யாகம் தான் -தர்மம் இஷ்ட கார்யம் –
கண்ணன் நானே யக்ஜம் போக்தா என்கிறான் -தஷிணை-ஞானம் உபதேசிப்பதே சிறந்த தஷிணை -உபதேசம் படி நடப்பது –
பிராணா யாமம் மூன்று வேளையும் செய்து -ஜீரணம் ஆகவும் ஆரோக்யதுக்கும் உதவும்-ஆசனங்களும் -உதவும் –
ஈஸ்வரன் கிருஷ்ணா பக்தி தான் மேல் நிலை லாபம் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -காலை மாலை கமல மலர் இட்டு –
ஏழு ஆள் காலும் பழிப்பு இலோம் -வித்யை அடைந்தவன் ஆத்மா சமமாக பார்ப்பவன் –
செய்ய கூடாததை செய்தால் வெறுக்க வேண்டும் -வெட்கமும் வேண்டும்
-செல்வம் எதையும் விரும்பாத குணம் –
சுகம் -இரட்டை கடப்பதே -துக்கம் காம சுகத்தில் விருப்பம் கொள்வது –
பண்டிதன் -பந்த மோஷம் அறிந்தவன்
மூர்க்கன் -தேக ஆத்மா ஓன்று என்று இருப்பவன்
அவன் விஷயம் சாஸ்திரம் படிப்பதே மொஷதுக்கு வழி
சத்வ குணம் வளர்ப்பதே சொர்க்கம்
தெளிவு வரும் குழப்பம் நீங்கும் -சாத்விக சரத்தை வேண்டும் –
தமோ குணம் வளர்ப்பதே நரகம்
குரு தான் சிறந்த நண்பன் -கீதா சாரின்
அன்று தேர் கடவிய பெருமான் கழல் காண்பது என்று கொலோ
சிறந்த பண்பு உள்ளவன் செல்வன்
இந்திரியங்கள் வெல்பவன் சிறந்தவன்
இது குணம் இது தோஷம் வேறு படுத்தி பாடுவதே தோஷம் –
19அத்யாயம் முடிகிறது
கர்ம ஞான பக்தி யோகம் இனி விளக்க போகிறார் மேல் .

572-

பக்தி யோகம் -மனம் மொழி மெய் மூன்றும் -கர்ம ஞான யோகம் அங்கம் –
கர்ம யோகம் இன்றியமையாது -உடலில் பிறந்து துக்க படுபவன் ஆத்மா இல்லை -இய்ரர்க்கை
உடல் சம்பந்தம் இல்லை -கர்மம் அடியாக வந்தேறி -பிறவி-கர்மம் அடியாக தானே-நோய் நாடி நோய் முதல் நாடி –
பிறவிக்கு மூலம் வேர் கர்மம் -தொலைக்க வலி கர்ம யோகம் -கடமை உணர்வு விருப்பத்துடன் செய்து
பக்தி செய்ய முற்ற பாபம் தொலையும்
ஞாந  யோகிக்கும் கர்மம் விடாது -உணவு சம்பாதிக்க கர்மம் வேண்டுமே –
மூன்றையும் 11 -20 சொல்கிறார்-வர்ணிக்கிறார்
குணம் தோஷம் வேறு பாடு பார்க்க கூடாது -சொன்னீர் -உத்தவர் கேட்கிறார் –
செய்யும் கிரிசைகள் -நெய் உண்ணோம் -மை இட்டு எழுதோம் -கண்ணன் சூட்டி விட சூடுகிரோமே
செய்வனவும் உண்டு
இதம் குறு வேதம் சொல்லுமே -அனைத்தையும் சமம்
குணா தோஷம் பிரித்து பார்த்தால் தோஷம் என்கிறாயே எப்படி
கங்கை நீராட்டம் சுத்தி
ஏகாதசி சாப்பிட கூடாதே
ஒரே செயல் வெவேறு மாதிரி உள்ளதே -புரிய வில்லை சொல்லு என்கிறார் உத்தவர் –
நமக்காககேட்கிறார் -தகுதி அடிபடியில் கர்ம ஞான பக்தி யோகம் விதிக்கிறார்
சுகர் அனுஷ்டானம் செய்தாரா -பக்தி தலை எடுத்தால்
புலன் அடக்கியவன் ஞான யோகி கட்டு படுத்தாவன் கர்ம யோகம் –
பழுது இன்றி கர்ம செய்ய வேண்டும் –
கர்மம் முக்தி கொடுக்காது –
கர்மங்களில் ஈடுபாடு இருந்தால் கர்ம யோகம் –
இரண்டு அடிப்படை -இத்தால் -கர்ம ஞான யோகி வாசி –
பக்தி பிறப்பது கர்ம ஞான யோகம் மூலம் தான் –
அவன் கைங்கர்யம் கர்மாசெய்த்து கொண்டு -முழுவதும் வெறுக்காமல் –
கர்மம் வெறுத்தவன் ஞான யோகி –
பகவான் இடம் ஆசை கொண்டவன் பக்தன் –

573

அடியார் கூட்டம் ஆசை படுகிறார் குலசேகர ஆழ்வார் –
பக்தி யோக நிஷ்டன்-
11-20 அத்யாயம் 8 /9 /10 ஸ்லோகம் -பார்க்கிறோம் –
ஸ்ரத்தை அவன் கதை கேட்க ஆசை இருக்கிற வரை கர்மம் –
பக்தன் என் பிரிவை சகியான் -அனைத்தும் எனக்கு தான் -என்று இருக்கிறான் –
அவனே கதி -இது ஒரு வர்க்கம் –
நினைத்தாலே உருகி கொண்டு இருப்பார்கள் –
உள்ளத்தில் பக்தி -வெளிபடுத்தாமல் இருக்கலாம் –
மெதுவாக வளர்ந்து -கேட்டு -நினைந்து ஆராய்ந்து இடைவிடாமல் சிந்தித்து –
உண்மையான பக்தி-இங்கிதம் நிமிஷ்தம் -உதட்டை புருவம் அசைப்பே ஆனந்தம் -கூரத் ஆழ்வான்
அறிவு முற்றி பக்தி உண்மையாக –
அழகர் தொட்டி திரு மஞ்சனம் -நிதானமாக சேவிக்கலாம் -பரிவுடன் பரிமாறுவார்கள் –
கர்மம் விடாமல் செய்ய-பாபம் போகும் -பக்தி வளரும் -மெய் மறந்து சேவிக்க பண்ணும் –
வர்ண ஆஸ்ரம கர்மம் விடாமல் செய்து கொண்டு இருக்க-பக்தி மலர ஆரம்பிக்கும் –
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே-கேட்க்கும் பொழுதும் ரசிக்க ஆரம்பிக்கும் –
ரசிகர் மன்றம் வாழ்வில் பார்க்கிறோம் -இந்த உதாரணம்  சிரிப்பது யாரோ விஷயம் என்று காட்ட –
விளையாட்டு ஈடு பட்டு -நினைற விஷயம் முன்பு நடந்தது சொல்லுகிறார்களே –
கண்ணன் இடம் வேண்டும் இந்த ஈடுபாடு -இதுவே பக்தி –
ஞானம் முற்றி பக்தி ஆக மலரும் –
பக்தனுக்கு எப்படி உதவுகிறேன் என்று மேலே அருளுகிறார்

574-

மகாத்மா துர் லபம்-வாசுதேவனே சர்வம் என்று இருப்பார் –
ப;லஜன்மம் ஞானவான் பின்பு பக்தன் -அவனே உண்ணும் சோறு -தாரகம் போஷகம் போக்கியம் –
எல்லாம் கண்ணன் என்று இருப்பவன் பக்தன் –
அன்பு வளர்ந்து முற்றி காதல் -கைங்கர்யத்தில் மூட்டும் –
யாரும் இதற்க்கு தகுதி உடையவர் –
11 /20 /13 ஸ்லோகம் -சொர்க்கம் -புண்ணியம் தீர்ந்த பின்பு மீள வேண்டுமே –
கண்ணன் திருவடிகளே மீளா இன்பம் கொடுக்கும்
சரீரம் கருவி -இதை கொண்டு அதை அடைய வேண்டும் –
பிறவி -கர்ம ஞான பக்தி -சம்சாரம் நெருப்பு-பறவை -மரம் நெருப்பு கதை போல் –
உடம்புடன் வாழ ஆசை பறவை நெருப்பில் நாசம் அடைவது போல் -ரம்பம் மரம் அறுக்க-
அது போல் நாள் கழிய -நினைவு இன்றி கழிக்கிறோம் -ஜீவன் -ஓடம்-உடல் தான் ஓடம் –
ஓடக்காரர் -செலுத்துவது காற்று அனுகூலம் -ஆத்மா பிரயாணி
ஆச்சார்யர் ஓடக்காரர்
பகவத் அருள் காற்று போல் -அழகான உதாரணம் -திரை –புலன்கள் கடிவாளம் -மனம்
ஆத்மா -குதிரை காரர் -பிராணாயாமம் செய்து புலனை அடக்கி
மனத்தில் செலுத்தி அவன் இடம் சேர்க்க வேண்டும்
கர்மம் செய்யசெய்ய பாபம் தொலைந்து பக்தி வளர அவனை அடைவோம்
பக்தி யோகமே பிராயச்சித்தம் ஆக இருக்கும் –
இயற்கையான அன்பு பகவான் இடம் -உறுதியான திட சிந்தனை வேண்டும்
இந்த லோகம் ஆசை பட்டதும் அவன் திருவடியையும் கொடுத்து
உள்ளத்தில் விலகாமல் வசிக்கிறான் -விஷ்ணு பதம் -ஸ்ரீ வைகுண்டம் அடைகிறான் –

11-19

3–jïäna-vijïäna-saàsiddhäù
padaà çreñöhaà vidur mama
jïäné priyatamo ‘to me
jïänenäsau bibharti mäm

Those who have achieved complete perfection through philosophical and
realized knowledge recognize My lotus feet to be the supreme transcendental
object. Thus the learned transcendentalist is most dear to Me, and by his
perfect knowledge he maintains Me in happiness.

4–tapas térthaà japo dänaà
paviträëétaräëi ca
nälaà kurvanti täà siddhià
yä jïäna-kalayä kåtä

That perfection which is produced by a small fraction of spiritual knowledge
cannot be duplicated by performing austerities, visiting holy places, chanting
silent prayers, giving in charity or engaging in other pious activities.

9–täpa-trayeëäbhihatasya ghore
santapyamänasya bhavädhvanéça
paçyämi nänyac charaëaà taväìghridvandvätapaträd
amåtäbhivarñät

My dear Lord, for one who is being tormented on the terrible path of birth
and death and is constantly overwhelmed by the threefold miseries, I do not see
any possible shelter other than Your two lotus feet, which are just like a
refreshing umbrella that pours down showers of delicious nectar.

10–dañöaà janaà sampatitaà bile ‘smin
kälähinä kñudra-sukhoru-tarñam
samuddharainaà kåpayäpavargyair
vacobhir äsiïca mahänubhäva

O almighty Lord, please be merciful and uplift this hopeless living entity
who has fallen into the dark hole of material existence, where the snake of time
has bitten him. In spite of such abominable conditions, this poor living entity
has tremendous desire to relish the most insignificant material happiness. Please
save me, my Lord, by pouring down the nectar of Your instructions, which
awaken one to spiritual freedom.

13–tän ahaà te ‘bhidhäsyämi
deva-vrata-makhäc chrutän
jïäna-vairägya-vijïänaçraddhä-
bhakty-upabåàhitän

I will now speak unto you those religious principles of Vedic knowledge,
detachment, self-realization, faith and devotional service that were heard
directly from the mouth of Bhéñmadeva

14–navaikädaça païca trén
bhävän bhüteñu yena vai
ékñetäthäikam apy eñu
taj jïänaà mama niçcitam

I personally approve of that knowledge by which one sees the combination of
nine, eleven, five and three elements in all living entities, and ultimately one
element within those twenty-eight.

15–etad eva hi vijïänaà
na tathaikena yena yat
sthity-utpatty-apyayän paçyed
bhävänäà tri-guëätmanäm

When one no longer sees the twenty-eight separated material elements,
which arise from a single cause, but rather sees the cause itself, the Personality
of Godhead—at that time one’s direct experience is called vijïäna, or
self-realization

17–çrutiù pratyakñam aitihyam
anumänaà catuñöayam
pramäëeñv anavasthänäd
vikalpät sa virajyate

From the four types of evidence—Vedic knowledge, direct experience,
traditional wisdom and logical induction—one can understand the temporary,
insubstantial situation of the material world, by which one becomes detached
from the duality of this world.

19–bhakti-yogaù puraivoktaù
préyamäëäya te ‘nagha
punaç ca kathayiñyämi
mad-bhakteù käraëaà paraà

O sinless Uddhava, because you love Me, I previously explained to you the
process of devotional service. Now I will again explain the supreme process for
achieving loving service unto Me.

20/21/22/23/24–çraddhämåta-kathäyäà me
çaçvan mad-anukértanam
pariniñöhä ca püjäyäà
stutibhiù stavanaà mama
ädaraù paricaryäyäà
sarväìgair abhivandanam
mad-bhakta-püjäbhyadhikä
sarva-bhüteñu man-matiù
mad-artheñv aìga-ceñöä ca
vacasä mad-guëeraëam
mayy arpaëaà ca manasaù
sarva-käma-vivarjanam
mad-arthe ‘rtha-parityägo
bhogasya ca sukhasya ca
iñöaà dattaà hutaà japtaà
mad-arthaà yad vrataà tapaù
evaà dharmair manuñyäëäm
uddhavätma-nivedinäm
mayi saïjäyate bhaktiù
ko ‘nyo ‘rtho ‘syävaçiñyate

Firm faith in the blissful narration of My pastimes, constant chanting of My
glories, unwavering attachment to ceremonial worship of Me, praising Me
through beautiful hymns, great respect for My devotional service, offering
obeisances with the entire body, performing first-class worship of My devotees,
consciousness of Me in all living entities, offering of ordinary, bodily activities
in My devotional service, use of words to describe My qualities, offering the
mind to Me, rejection of all material desires, giving up wealth for My devotional
service, renouncing material sense gratification and happiness, and performing
all desirable activities such as charity, sacrifice, chanting, vows and austerities
with the purpose of achieving Me—these constitute actual religious principles,
by which those human beings who have actually surrendered themselves to Me
automatically develop love for Me. What other purpose or goal could remain for
My devotee?

40/41/42/43/44/45–bhago ma aiçvaro bhävo
läbho mad-bhaktir uttamaù
vidyätmani bhidä-bädho
jugupsä hrér akarmasu
çrér guëä nairapekñyädyäù
sukhaà duùkha-sukhätyayaù
duùkhaà käma-sukhäpekñä
paëòito bandha-mokña-vit
mürkho dehädy-ahaà-buddhiù
panthä man-nigamaù småtaù
utpathaç citta-vikñepaù
svargaù sattva-guëodayaù
1425
narakas tama-unnäho
bandhur gurur ahaà sakhe
gåhaà çaréraà mänuñyaà
guëäòhyo hy äòhya ucyate
daridro yas tv asantuñöaù
kåpaëo yo ‘jitendriyaù
guëeñv asakta-dhér éço
guëa-saìgo viparyayaù
eta uddhava te praçnäù
sarve sädhu nirüpitäù
kià varëitena bahunä
lakñaëaà guëa-doñayoù
guëa-doña-dåçir doño
guëas tübhaya-varjitaù

Actual opulence is My own nature as the Personality of Godhead, through
which I exhibit the six unlimited opulences. The supreme gain in life is
devotional service to Me, and actual education is nullifying the false perception
of duality within the soul. Real modesty is to be disgusted with improper
activities, and beauty is to possess good qualities such as detachment. Real
happiness is to transcend material happiness and unhappiness, and real misery is
to be implicated in searching for sex pleasure. A wise man is one who knows the
process of freedom from bondage, and a fool is one who identifies with his
material body and mind. The real path in life is that which leads to Me, and the
wrong path is sense gratification, by which consciousness is bewildered. Actual
heaven is the predominance of the mode of goodness, whereas hell is the
predominance of ignorance. I am everyone’s true friend, acting as the spiritual
master of the entire universe, and one’s home is the human body. My dear
friend Uddhava, one who is enriched with good qualities is actually said to be
rich, and one who is unsatisfied in life is actually poor. A wretched person is
one who cannot control his senses, whereas one who is not attached to sense
gratification is a real controller. One who attaches himself to sense gratification
is the opposite, a slave. Thus, Uddhava, I have elucidated all of the matters
about which you inquired. There is no need for a more elaborate description of
these good and bad qualities, since to constantly see good and bad is itself a bad
quality. The best quality is to transcend material good and evil.

11-20

6–çré-bhagavän uväca
yogäs trayo mayä proktä
nèëäà çreyo-vidhitsayä
jïänaà karma ca bhaktiç ca
nopäyo ‘nyo ‘sti kutracit

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, because I
desire that human beings may achieve perfection, I have presented three paths
of advancement—the path of knowledge, the path of work and the path of
devotion. Besides these three there is absolutely no other means of elevation.

7–nirviëëänäà jïäna-yogo
nyäsinäm iha karmasu
teñv anirviëëa-cittänäà
karma-yogas tu käminäm

Among these three paths, jïäna-yoga, the path of philosophical speculation,
is recommended for those who are disgusted with material life and are thus
detached from ordinary, fruitive activities. Those who are not disgusted with
material life, having many desires yet to fulfill, should seek perfection through
the path of karma-yoga.

0–sva-dharma-stho yajan yajïair
anäçéù-käma uddhava
na yäti svarga-narakau
yady anyan na samäcaret

My dear Uddhava, a person who is situated in his prescribed duty, properly
worshiping by Vedic sacrifices but not desiring the fruitive result of such
worship, will not go to the heavenly planets; similarly, by not performing
forbidden activities he will not go to hell.

11–asmiû loke vartamänaù
sva-dharma-stho ‘naghaù çuciù
jïänaà viçuddham äpnoti
mad-bhaktià vä yadåcchayä

One who is situated in his prescribed duty, free from sinful activities and
cleansed of material contamination, in this very life obtains transcendental
knowledge or, by fortune, devotional service unto Me.

20–mano-gatià na visåjej
jita-präëo jitendriyaù
sattva-sampannayä buddhyä
mana ätma-vaçaà nayet

One should never lose sight of the actual goal of mental activities, but rather,
conquering the life air and senses and utilizing intelligence strengthened by the
mode of goodness, one should bring the mind under the control of the self.

21–eña vai paramo yogo
manasaù saìgrahaù småtaù
hådaya-jïatvam anvicchan
damyasyevärvato muhuù

An expert horseman, desiring to tame a headstrong horse, first lets the horse
have his way for a moment and then, pulling the reins, gradually places the
horse on the desired path. Similarly, the supreme yoga process is that by which
one carefully observes the movements and desires of the mind and gradually
brings them under full control.

22–säìkhyena sarva-bhävänäà
pratilomänulomataù
bhaväpyayäv anudhyäyen
mano yävat prasédati

Until one’s mind is fixed in spiritual satisfaction, one should analytically
study the temporary nature of all material objects, whether cosmic, earthly or
atomic. One should constantly observe the process of creation through the
natural progressive function and the process of annihilation through the
regressive function.

27/28–jäta-çraddho mat-kathäsu
nirviëëaù sarva-karmasu
veda duùkhätmakän kämän
parityäge ‘py anéçvaraù
tato bhajeta mäà prétaù
çraddhälur dåòha-niçcayaù
juñamäëaç ca tän kämän
duùkhodarkäàç ca garhayan

Having awakened faith in the narrations of My glories, being disgusted with
all material activities, knowing that all sense gratification leads to misery, but
still being unable to renounce all sense enjoyment, My devotee should remain
happy and worship Me with great faith and conviction. Even though he is
sometimes engaged in sense enjoyment, My devotee knows that all sense
gratification leads to a miserable result, and he sincerely repents such activities.

29–proktena bhakti-yogena
bhajato mäsakån muneù
kämä hådayyä naçyanti
sarve mayi hådi sthite

When an intelligent person engages constantly in worshiping Me through
loving devotional service as described by Me, his heart becomes firmly situated
in Me. Thus all material desires within the heart are destroyed.

30–bhidyate hådaya-granthiç
chidyante sarva-saàçayäù
kñéyante cäsya karmäëi
mayi dåñöe ‘khilätmani

The knot in the heart is pierced, all misgivings are cut to pieces and the
chain of fruitive actions is terminated when I am seen as the Supreme
Personality of Godhead.

32/33–yat karmabhir yat tapasä
jïäna-vairägyataç ca yat
yogena däna-dharmeëa
çreyobhir itarair api
sarvaà mad-bhakti-yogena
mad-bhakto labhate ‘ïjasä
svargäpavargaà mad-dhäma
kathaïcid yadi väïchati

Everything that can be achieved by fruitive activities, penance, knowledge,
detachment, mystic yoga, charity, religious duties and all other means of
perfecting life is easily achieved by My devotee through loving service unto Me.
If somehow or other My devotee desires promotion to heaven, liberation, or
residence in My abode, he easily achieves such benedictions.

34–na kiïcit sädhavo dhérä
bhaktä hy ekäntino mama
väïchanty api mayä dattaà
kaivalyam apunar-bhavam

Because My devotees possess saintly behavior and deep intelligence, they
completely dedicate themselves to Me and do not desire anything besides Me.
Indeed, even if I offer them liberation from birth and death, they do not accept
it.

11-21

ஸ்ரீ வசன பூஷணம் —சூர்ணிகை—227/228/229/230/231/232/233/234/235/236–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 10, 2012

இப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா ச விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் ச யதிஸ் சச பண்டித -என்று சொன்ன விப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் -அந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா அருளிச் செய்கிறார் –

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

அதாவது
ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக – வசிஷ்ட வாக்யத்தாலே ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷியாய் விட்டான் இறே-
ஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் அந்த சரீரம் தன்னோடே
அனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே அத்யந்த உத்க்ருஷ்ட
குலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –
அல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-

(புஷ்ப தியாக போக மண்டபங்களில் பணி பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும் வைதிகோதமரும் மகா முனியும் அனுவர்தித்த க்ரமும் )

————————————————————

இதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —
சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார்  மேல் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே  சிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில் பிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று கீழ்ச் சொன்ன அர்த்தத்தை ஸ்த்ரீகரிக்கைகாக ராவண அனுஜனைக் குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ஸ்யனாக நினைத்து
வார்த்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் குபிதனாய் த்வாந்து திக் குல பாம்ஸ்னம் -என்று இக் குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –
இஷ்வாகு குல நாதனான பெருமாள் -இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-
ஆக்க்யாஹி மம தத்வேந ராஷாஸாநாம் பலாபலம்  என்று ராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும்  என்கையாலே  இவனை ராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதியாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –
இவ் வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே பாகவத அனுகூல்யம் உண்டாகவே -ப்ராக்ருதர் இவன் நமக்கு உடல் அல்லன் என்று கை விடுவார்கள் என்னும் இடமும் – பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும்   என்னும் இடமும் சொல்லப் பட்டது-

——————————————–

இப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –
பெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ-என்கிறபடியே
லோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே
சாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –
ஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு  ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை -அவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத் தம்பியாரும் கூட இருக்கச் செய்தே -தாமே சாதாரமாக பண்ணி அருளினார் இறே –
இத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில் புத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது-

—————————————————–

இவ் வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

பெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –
இவர் செய்தது இறே அரிது –
ஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேஸ்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு
நழுவுதல் வராத படி சாவதானமாக நடத்திக் கொண்டு போரும் அவர் இறே  இவர் –
இப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தைப் பார்ப்பது –ஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுலப் படா நிற்கச் செய்தே –
தர்மராஜஸ்து தத்ரைநம் சஞ்சிஸ் கார யிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ ப்ரவீத்-போபோ ராஜன் ந தக்த வ்யமேதத்  விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ் சனாதய -லோக வைலக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோசவ் ந சோச பரதர்ஷப –என்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான இவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ ப்ரஹ்மேத சம்ஸ்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-

————————————————-

அநந்தரம் ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ரவணம்
பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

சதுர் வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்
வேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி ஸ்ம்ரூதியோடே ஜாதன் ஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமான ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு ஸூஸ்ருஷா விசேஷத்தாலும்-சகல தர்ம ஸூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்ம வ்யாதன் வாசலிலே சென்று – மாதா பித்ரு ஸூஸ்ரூஷை  பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான தர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில் சந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-

கச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யாயீ தபோதன
தபஸ்வீ  தர்ம சீலச்ச கௌசிகோநாம  பாரத ஸாங்கோப நிஷாதான்
வேதான் அதீத த்வீஜா சத்தம ச வ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச் சாரயன் ஸ்தித
உபரிஷ்டாஸ் ச வ்ருஷஸ் ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்
ப்ராஹ்மணஸ்ய ததோரசி-என்று தொடங்கி
கௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய் இருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ  மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு நிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன மார்பிலே பட்டவாறே க்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –
ராக த்வேஷ பலாத்க்ருதராய்க் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று
பல காலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று – பிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்- நில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர ஸூத்தியாதிகளை  பண்ணி பிஷை கொண்டு வருவதாக உத்யோகியா நிற்கச் செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –
பிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை ஸூஸ்ருஷிக்கிற பராக்கிலே –
பிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் -என்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்?-என்று அவன் குபிதன் ஆனவாறே –
அவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தைப் பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –நான் பர்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் ஸூஸ்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை -என்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –என்று வ்யவங்கமாக சொல்லி -க்ருஹ தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-
நான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச் சொல்லிக் காட்டி -இவ் வபராதத்தைப் பொறுக்க வேணும் -பர்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் ஸூஸ்ருஷையிலே பரவசையாய் நின்றேன் இத்தனை -என்னுடைய பதி ஸூஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி – தக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –

குரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய
க்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் விது-என்று தொடங்கி –
காம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –
என்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –
பவநாபி ச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதஸ் ஸூஸி
நது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி
மாதா பித்ருப்யாம் ஸூஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய
மிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி
தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம
வ்யத பரம தர்மாத்மா சதேஸ்  தேச்யதி சம்சயான்-என்று
நீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -ஸூத்தராய் இருக்கச் செய்தேயும் –
தர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –
மாதா பித்ரு ஸூஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய்க் கொண்டு
மிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –
அங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற
அந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்கக் கடவன் -என்ன

அவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –
பஞ்சகாநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகா மதே வ்யாத பரப்ரவீஹி யதா ததம்-என்று -சிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியானவனே – இத்தைச் சொல்ல வேணும்-என்ன –
யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம
பஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று
யஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற பவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும் உளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –
இப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –
உபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயங்கள் தீரப் பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை
தர்ம புத்ரனுக்கு மார்கண்டேயர் அனுக்ஹரித்ததாக ஆரண்ய பர்வதத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி – பதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே

இன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –

இத்தால் ஜன்மாத் யுத்க்ருஷ்டனாவர்களுக்கு  தத் அபக்ருஷ்டரானவர்கள்
ஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————

அநந்தரம் யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை அருளிச் செய்கிறார் –

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பஸ்யன்
கர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தைப் பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை நன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ் யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித மமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன் ஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –
ஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது ஸூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –
உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த
பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-
அத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவஸரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –
விதுரான் நாதி புபுஜே ஸூஸீநி குணவந்திச-என்கிறபடியே அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம் ஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை -அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –

———————————————

ஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

அதாவது –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே குரு ஸூஸ்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆதர அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண – அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-
இத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்ஸம் உள்ளவை ஆத்ம குணைக தர்ஸிகளான விசேஷஜ்ஞர்க்கு அதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————————-

இப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –
இன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-

அதாவது –
அபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையவராய் – அத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார் அபிமானித்து அருளின இத் தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று அதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை  நாய்க்கு இடாதே கிடீர் – என்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள –

பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில் காட்டிக் கொடாதே தாமே பள்ளிப் படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள வேண்டிற்றோ -என்ன –

ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதியோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

——————————————————–

இனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா  கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி

ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச  குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா   அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –
இத்தால் – அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே ஸூர நர சஜாதீயன் ஆகா நிற்கும்-ததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் -இதில் கர்ஹை இல்லை -ஸ்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –
இனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்
விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –

——————————————

பாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்
வ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த
கழுதையோபாதி என்று சொல்லா நின்றது இறே –

அதாவது –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று வேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே அதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும் பரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –
பூர்வோத்தர பாகங்களால் ஆராதன  ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு – பகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு இருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமணக் கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்