சூரணை -157-
என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-
இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு ஸர்வ ஸக்தனான தானும் கைவிட மாட்டான் என்கையாலே அவனாலே இப் பந்தத்தை இல்லை செய்யப் போகாது என்பதற்கு பிரமாணம் -அகல்விக்க தானும் கில்லான் -பெரிய பிராட்டியாருக்கு ஸ்னேஹி -அவள் பரிக்ரமான என் பக்கலிலே அதி ஸ்நேகிதியாய் ––
(அவள் இடம் அன்பு காட்டி என்னிடம் அன்பே உருவாகி -அதி சப்தம் இதனாலே -)
அரியன செய்து-(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -இதனாலே வந்து என்னுடன் கலந்த-என்கிறார் )இனி நான் நழுவ விடுவேனோ -என்கிறார்
புருஷகாரம் முன்னாக வந்த பந்தத்தை சேதனனாலும் இல்லை செய்யப் போகாதே –
அங்கே அவனாலே இல்லை செய்யப் போகாது -இங்கே சேதனலாலேயும் போகப் போகாது –
உம்மைத் தொகை பகவானால் இல்லை செய்யாமல் போகாதே என்பதே முக்கிய அர்த்தம் என்றவாறு –
——————————————–
ஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –
சாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –
சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –
கர்மணி வ்யுத்புத்தி யாவது -ஸ்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள் என்று இறே –
இவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன
பரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –
அதாவது –
இரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-
இத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான
பார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –
—————————————-
இப்படி இருக்கையால் இப் புருஷகாரம் பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல்
சூரணை -159-
அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம்
அவர்ஜநீயம் –
அதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் –
இவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு புருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –
அதவா –
இப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்குயேயோ
பிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-
இவர்கள் மூவருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித
சித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக ஸ்வீகரிக்கும் அளவில் -இவர்கள்
அபராதங்களைப் பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –
பூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே – உத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது – பூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –அதில் இவ் அதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –கீழ்ச் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே இவனுக்கு அபேஷிதமான பல விசேஷத்தைச் சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப் படியிலும் –
உத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரத்துக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷுப் படியிலும் -இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –
அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து- ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –
அடிமையைப் பேறு என்று கீழ்ச் சொன்ன உபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர் திருத் தம்பியாரும் அருளிச் செயல் ரஹஸ்யத்தில் அருளிச் செய்தது –
ஆக –
இவன் அவனை பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –
ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும் பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –
அவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –
இருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –
பிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,
உபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி பாதித்த அனந்தரம்-
பிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–பிரபத்யே என்கிற பதத்தால்
சொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-
அதுக்கு விஷயம் சொல்லுகைக்காக -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி முக்த கண்டமாக மீளவும் நாராயண -பத அர்த்தத்தையும்-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரியையும்-
பிரபத்தியில் சாதனத்வம் இல்லாமையையும்-
பிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சம தம அதிசயம் முதலான வற்றையும்
பிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்
தத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர் தோஷ்யாதிகளையும் –பிரபத்தி பிரசங்கத்தாலே-
முக பேதேன ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும்
தத் பிராபல்யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷகாரத்தை முன் இட்டே ஸ்வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,
உபயரும் புருஷகாரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,
அதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கை யாலே ,இவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-
———————————————————
அவதாரிகை –
இப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது பிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-
அது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின கிரமத்தில் (காலத்திலே ) நம சப்த அர்த்தம் முன்னாக அருளிச் செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் (அந்த பிரணவ நமஸ்ஸு இல்லை )பிராப்ய விரோதி (ஸூ போக்த்ருத்வ புத்தி)நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,பிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி பிரதமம் அவற்றிலே ஒன்றை (சேஷத்வமாகிய ஒன்றை இங்கு)அருளிச் செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–
சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –
வியாக்யானம்-
கீழே ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி
சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக் கட்டும் படி சொன்ன இத்தாலே உபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய் -இப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம் அருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —
தனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9 என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ என்று ஸ்வ நைச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் ஸ்வதந்த்ரோஹம் என்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —
தீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம்
—————————————————
சேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்
போக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-
சூரணை -161—
அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப் போல –161–
அதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் , போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-
——————————————-
அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று
சூரணை -162–
ஹாரோபி—162–
ஹாரோபி நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்று- சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை-என்றார் இறே (பரம போகியான) பெருமாள் –பீருணா என்கிற லின்கவ்யத்யயம் ஆர்ஷம் ..
அன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம்
அறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்கவுமாம் –
பீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை (பிரணயித்வத்தால் அவளுக்கு அணிவிக்கவும் இல்லை என்றுமாம்)என்றும் கொள்ளலாம்
பிரதி கூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே–
————————————————–
ஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளிச் செய்கிறார் மேல்-
சூரணை -163–
புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவந்துக்கு விலக்கு –
புண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ்ச் சொன்ன படியே ஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும் அப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான கேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-
அன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –
வியாவிருத்தமாய் இருக்கச் செய்தே பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் -அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான சேஷத்வத்தில் காட்டில் -அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே –வ்யாவிருதமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே -பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமும்மாம்-என்னவுமாம்
இத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே போக விரோதியாய் நிற்கும்-
பாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை
———————————————————-
இப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்த அநந்தரம் பிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி- பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–
சூரணை -164–
குணம் போலே தோஷ நிவ்ருத்தி –164–
குணம் என்கிறது -கீழ் விரோதியாகச் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-
இவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய் இறே இருப்பது —
இது போலே தோஷ நிவ்ருத்தி என்றது-இவ் வாத்ம குண த்வயமும் கீழ்ச் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது
அப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் -சரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..
குணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–
—————————————————–
தோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அத்தனை அன்றோ-ஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்கக் கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்- ஆபரணம் என்று தொடங்கி-
சூரணை -165–
ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே –
அதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-
——————————————–
இது தான் லவ்கிகத்தில் அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு ஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-
சூரணை -166–
ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது –166-
அதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற-தீபோ நேத்ரா துரஸ்யேவ பிரதிகூலாசி மே த்ருவம் –என்கிற வார்த்தையை இவ் வர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-
சபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவைக் காண ஆசைப் பட்டு இருந்தவருக்கு இவள் திரு மஞ்சனம் பண்ணி வந்த இது ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..
ஆனால் தீர்க்க முஷ்ணம் விநிஸ்வஸ்ய மேதிநீவ மவலோகயன் உவாச மேக சங்காசம் விபீஷண உபஸ்திதம் –திவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம் இஹா சீதாம் சிரஸ்ஸ்னாதாம் முபஸ்தாபாய மாசிரம்-என்று இவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்துக் கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..
இப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் .. நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ என்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராகக் கூடாது இறே அவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,
யாதாஹா ராமோ பார்த்தா தே ததா தத் கர்த்து மர்கசி–என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —
அவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே
எல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது , திரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே
அது அவ் விருப்பு காண ஆசைப் பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை-
அன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து அருளச் சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே ரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று
பிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ்ச் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்-
——————————————————–
இப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே-ஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை ஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்சக் கள்வன் -இத்யாதியாலே-
சூரணை -167–
வஞ்சக் கள்வன் மங்க ஒட்டு —
அதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே , அத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.
அவ் வளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு போவதாக அவன் அபிவிநிஷ்டனாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப் படி செய்து அருள ஒண்ணாது – என்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி ,
அவன் இத்தை விடுவித்துக் கொண்டு ,போம் படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–
——————————————————————–
அபிமத விஷயத்தில் –அழுக்கு போலே ஆதரிப்பது மட்டும் இல்லை -கோபம் வரும் -பிடிக்காதது மட்டும் இல்லை –கீழே பார்த்தோம் –ஆதரிப்பது மட்டும் இல்லை –தேகத்தை கழற்ற ஒட்டான்-தேகம் படைத்த அனைவருக்கும் இப்படி பட்ட ஆழ்வாரைக் காண்பது கர்தவ்யம் அன்றோ -ஞான பரிமளம் தோற்றும் இந்த விக்ரஹத்திலே- த்ருஷ்டானத்துடன் தர்சிப்பிக்கிறார்
சூரணை -168–
வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —
த்யாஜ்ய தேக வியாமோஹம் -மணத்தின் வாசி அறிந்து போகிகள் -மண்ணை உதறினால் மணம் குன்றும் என்னுமா போலே-பரம போகியான எம்பெருமானும் விமல சரம தேகியான ஞானியை -விக்ரஹத்தை விடுவிக்கில் ஞான வாசனை செவ்வி குலையுமே என்று ஆதரிப்பான் –
ஆக- குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ நிவ்ருத்தியும்
பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே அவன் அத் தாதாரத்தைப் பண்ணும் படியையும் ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும் பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் ,சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்
அதின் எல்லையையும் ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்
ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும் அருளிச் செய்தார் ஆயிற்று-
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply