ஸ்ரீ வசன பூஷணம் —-/198/199/200/201/202/203/204/205/206-

சூரணை -198

திரு சங்கு வை போலே கர்ம சண்டாளனாய் மார்வில் இட்ட யஞ்ஜோ  பவீதம் தானே வாராய் விடும் –198
இவ் அபசாரத்துக்கு பலம் தக்த படம் போலே -வெந்த புடவை போல் –,நஷ்ட கல்பனாய் இருந்து ,தேக அவசானத்திலே உரு
மாய்ந்து  போம் அளவே அல்ல ,–இவ் அபசாரம் பண்ணின போதே ,கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் திரி சங்கு வை போலே என்று தொடங்கி

அதாவது இஷ்வாகு வம்சனாய் இருக்கிற திரி சங்கு என்னும் ராஜா
தன் குல குருவாகிய வசிஷ்ட மக ரிஷியை -ச சரீர சொர்க்க ஆப்த அர்த்தமாக என்னை
யஜிப்பிக்க  வேணும் என்று பிரார்த்திக்க -மகர்ஷி -அது நமக்கு அச்யம் என்ன –
அணு நின்று தத்புத்ரர்கள் தபஸ் செய்யும் இடம் சென்று இச் செய்தியை சொல்லி அவர்கள் மிகவும் அனுவர்தித்து
நீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் என்று நிர்பந்திக்க
-நீ துர் புத்தியாய் இருந்தாய் மக ரிஷி ஆகாது என்பதை எங்களால் செய்ய புகுமோ என்ன –
நீ சண்டாளன் ஆக கடவை என்று சபிக்க -அந்தணரை நிந்தித்தால் சண்டாளன் ஆகிறான்

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதன் ஆகுகைக்கு யோக்யதை உண்டு
சூரணை -199
அதுவும் இல்லை இவனுக்கு –199
பகவத் கடாஷம் அடியாக அவன் பெறலாம் அதுவும் இல்லை இவனுக்கு
சூரணை -200
ஆரூட பதிதன் ஆகையாலே –200
மேலே ஏறி கீழே விழுந்தவன் ஆகிறான்
பத்ம கோடி சதேனாபி  ந ஷமாமி-நூறு கோடி பத்மத்தால் அர்ச்சித்தாலும் மன்னிக்க மாட்டேன்-வராக புராணம்
சூரணை -201
இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –201
பாகவத அபசாரத்துக்கு அதிகாரி நியமனம் இல்லை
சூரணை -202
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் எழும் என்கையாலே–202
–தொண்டர் அடி பொடி ஆழ்வார் -திரு மாலை -43
சூரணை-203
இவ்விடத்திலே வைநதேய விருத்தாந்தையும்
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த
வார்த்தையும் ஸ்மரிப்பது-
இவ்வர்த்த விஷயமாக இரண்டு ஐதிகத்தை ஸ்மரிப்பிக்கிறார் —
வைநேத விருத்தாந்தம் ஆவது -விஸ்வாமித்திரன் பக்கலிலே விதைகள் எல்லாம் அதிகரித்த
காலவன் என்கிற பிராமணன்-குறு தஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ் வித்யைகள் நிலை நில்லாது
என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தஷிணையாக தரத் தக்கது ஏது -என்று கேட்க –
நீ நமக்கு ஒன்றும் செய்ய வேண்டா -நன் உன்னுடைய சுஸ்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதர் ஆனோம் -இனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று
பலகால் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே -சர்வதா என் பக்கலிலே தஷிணை
வாங்கி கொள்ள வேணும் -என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே –
கிஞ்சிதாகத ச்ம்ரம்போ விச்வமித்ரோ ப்ரவீதிதம் ஏக தச்ச்யாம கர்ணா நாம்
சதான் அஷ்ட ஒவ்து தேஹி மே–ஹயானாம் சத்திர சுப்ராணம் கச்ச காலவ  மாசிரம்-என்று –
அவன் குபிதனாய் -இவனை பார்த்து -உடம்பு எங்கும் சத்திர மண்டலம் போல் வெளுத்து
ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா -என்ன –
இத்தை கேட்டு மகா வ்யாகுலனாய் -இதுக்கு இனி செய்வது என் -என்று பகு முகமாக விசாரித்து –
சர்வ அபேஷித பிரதனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் -என்று உத்யோக்கிகிற அளவில் –
முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற -பெரிய திருவடி நாயனார் -இவனுக்கு வந்து
முன் நிற்க -அவரை ஸ்தோத்ரம் பண்ணி இதுக்கு செய்ய அடுப்பது என் -என்று கேட்க -அவர் நான் உன்னை இப் பூமி எங்கும் கொண்டு போகிறேன் -இருவரும்
கூட ஆராய்வோம் வா என்று -என்று இவனை இடுக்கி கொண்டு திரிகிற அளவிலே –
இளைப்பானவாறே -இங்கு இளைப்பாற போக கடவோம் என்று மேல் சமுத்ரத்தில்
ருஷபம் என்கிற பர்வதத்தின் மேல் வாசியா நிற்பா ளாய்  -ஞானாதிகையாய் இருக்கிற
சாண்டிலி என்கிற பாகவதையை சென்று கண்டு -அபிவாதநாதிகள் பண்ண –
அவள் அத்யாதரத்தொடே மிகவும் சத்கரிக்க -அநந்தரம்-விஸ்ரந்தராய் சயிக்கிற அளவிலே
இப்படி விலஷனையாய் இருக்கிற இவள் ஒரு விலஷன தேசங்களிலே வசிக்க பெற்றது இல்லையே என்று
பெரிய திருவடி நாயனார் விசாரித்து -இவளை இங்கு நின்றும் நாமொரு திவ்ய தேசங்களிலே
கொண்டு போய் வைக்க கடவோம் -என்று நினைத்து கொண்டு கிடக்க செய்தே -அந்த பாகவதை இருந்த தேசத்தை குறைய நினைந்த இவ் அபசாரத்தாலே
சிறகுகளும் உதிர்ந்து நிச்செஷ்டராய் விட -இத்தைகூட போன பிராமணன் கண்டு –
கிந்து தேமனஸா த்யாத மாசுபம் பததாம்வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ
வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று ஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தாலே தீங்கு
நினைத்தது உண்டோ -தேவரீருக்கு அல்பமும் வ்யபிசாரம் வருகைக்கு
யோக்யதை இல்லையே என்ன -உண்டாய்த்து காண் என்று -தாம் அந்த பாகவதை விஷயத்தில்
நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளி செய்து -அநந்தரம் -இத்தை பொறுக்க வேணும் என்று
அவளை சென்று அனுவர்தித்து -அவள் அனுக்ரகத்தாலே அவ்வபசாரம் நீங்கி முன்பு போலே
ஆனார் என்கிறது –
இது தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-நாரதாதி மக ரிஷிகள் பலரும்
வந்து இருக்கிற அளவில் கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை பின் செல்லுகைக்கு உறுப்பாக
த்ருத்ராஷ்ட்ரனை குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்தில் -ஸ்ரீ நாரத பகவான்
அனுக்ரகிததாக -உத்தியோக பர்வதத்திலே -உக்தம் ஆகையாலே -வேதாந்தோ உப  ப்ரக்மன சித்தம் இறே–
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை யானது –
பிழை பிள்ளை ஆழ்வானை அங்கீகரித்து -நாளிலே -இவர் ஆபிஜாத்யாதிகளாலே
யுத்க்ருஷ்டர் ஆகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக வர்த்தித்து கொண்டு
போகிறபடியை கண்டு -இவர்க்கு இப் பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள்
எல்லாவற்றையும் -கீழ் படுத்தி தான் மேலாய் -விநாச பர்யந்தமாக்கி விடும் -அதுக்கு வேலி இட்டு வைக்க
வேணும் என்று திரு உள்ளம் பற்றி -ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவில் -இவரைப் பார்த்து –
எல்லாரும் தாநம் பண்ணுகிற களத்தில் -நீரும் நமக்கு ஒரு தாநம் பண்ண மாட்டீரோ -என்ன –
அடியேன் எத்தை தாநம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே -என்ன –
அர்த்த ஸ்திதி அன்றோ வது அவ்வளவு போராது-கரண த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல்
வர்த்திக கடவன் -என்று நம்கையில் உதகம் பண்ணி தர வேணும் -என்ன -அப்படியே ஐவரும்
உதகம் பண்ணி கொடுத்த அநந்தரம் -ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து
நாம் இனி முடிந்தோம் -என்று பயப்பட்டு மூடி கொண்டு தன திரு மாளிகையிலே கண் வளர
இவர்முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திருமாளிகை எழுந்து அருளி –
ஏன்தான் முசிப்பென்-என்று வினவி அருள -தாம் மனசால் நினைத்ததை விண்ணப்பம்  செய்து –
கரணத்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி இத் தேகத்தோடே வர்திகை அரிதா இரா நின்றது –
என் செய்ய கடவேன் -என்று திருவடிகளை கட்டி கொண்டு கிடந்தது கிலேசிக்க-
இத்தனை அனுதாபம் இவர்க்கு உண்டாக பெற்றோமே -என்று உகந்து அருளி –
மனசாலே நினைத்ததுக்கு அனுதாபம் உண்டாகவே ஈஸ்வரன் ஷமித்து அருளும் –
பிரத்யஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலிய கூடாது -ஆனா பின்பு
அவை இரண்டும் உனக்கு கழித்து தந்தோம் -இனி வாக்கு ஒன்றையும் நன்றாக
குறிக் கொண்டு வர்த்தித்து போரும் -என்று அருளி செய்தது –
சூரணை -204
ஞானம் அனுஷ்டானங்களை ஒழிந்தாலும்
பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே
அமைகிறாப் போல்
அவை உண்டானாலும்
இழவுக்கு அவர்கள் பக்கல்
அபசாரமே போரும் —
பகவல் லாப ஹேதுவான ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
பரிபூர்ணமாக  உடையான் ஒருவனுக்கு -பாகவத அபசாரம் உண்டாய்த்து ஆகிலும் –
பகவான் அதுக்கு இலகுவான ஒரு தண்டங்களை பண்ணி கூட்டிக் கொண்டு விடானோ –
அவை இரண்டும் அசத்சமமாய்-அபசாரமே பிரபலமாய் எம்பெருமானை இழந்தே
போய் விடும் என்னலாமோ என்ன -அருளி செய்கிறார் –
அதாவது –
உபாப்யமேவ பஷாப்யா மாகாசே பஷிணாம் கதி
ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும் –
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணோடு  உங்கட்கு எளிது -என்றும் சொல்லுகிறபடி
பகவல் லாப ஹேதுவான தத்வ ஞானமும் தத் அநுரூப அனுஷ்டாநாமும் இன்றிக்கே ஒழிந்தாலும் –
பகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீவா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரையா –
தேனைவதே ப்ராயச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும் –
யம் யம் சப்ருசதி பாணிப்யாம் யம்யம் பச்யதி சஷுஷா ஸ்தாவரான்யபி
முச்யந்தே கிம் புனர் பாந்தவ ஜனா -என்றும் சொல்லுகிறபடியே –
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனமாகிறாப் போலே –
அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற உண்டாய்தாலும்
பகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான
அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாய்
போரும் என்றபடி –
சூரணை -205
இதில் ஜன்ம விருத்தாதி
நியமம் இல்லை –
இதில் ஜன்ம விருத்தாதி நியமம் உண்டோ என்னும் மா கான்க்ஷையில்
அருளி செய்கிறார்
இதில்-என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு
அவர்கள் பக்கல் அபசாரமே போரும் -என்று சொன்ன இவை இரண்டிலும்
என்றபடி –
ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான
பாகவதர்களோடு உண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேதுவாவது-அவற்றால்
அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற
நியமும் ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில்
பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது -அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள்
திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற
நியமம் இல்லை -என்றபடி
சூரணை -206
இவ் அர்த்தம் கைசிக விருத்தாந்ததிலும் -உபரிசர விருத்தாந்த்திலும் காணலாம் –
அதாவது சரக குலோத்பவனான சோமசர்மா வாகிற பிராமணன் –யாகத்தை செய்வதாக உபக்ரமித்து –
யதாக்ரமம் அனுஷ்டியாமல் -அது சமாப்பிபதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே –
ப்ரக்ம ராசஷனாய் பிறந்து திரியா நிற்க –
மத் பக்தம்  ச்வபசம் வாபி-என்கிறபடியே -ஜன்ம சித்தமான நைச்யத்தை உடையராய்
 -பகவத் பக்தியே நிரூபகமாய்  இருப்பார் ஒரு பாகவதர் -உத்தான ஏகாதசியின் அன்று
ராத்திரி சித்தாஸ்ரமமான திரு குறும் குடியிலே -நம்பியை பாடி பறை கொள்வதாக –
வீணா பாணியாய் நின்று போகா நிற்க செய்தே -அவரை பஷிப்பதாக வந்து அடர்க்க –
அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான -அநேக சபதங்களை பண்ணி கொடுத்து -தத் அனுமதி
கொண்டு போய் -யதா மனோ ரதம் சேவித்து ஹிருஷ்டராய் -அந்த ப்ரகம ராஷசன் நிற்கிற இடத்திலே –
மீளவும் விரைந்து வந்து -யதேஷ்டம் இனி  நீ என் சரீரத்தை புஜி -என்ன – அவன்
அவருடைய சத்யத்வாதித்வாதி வைபவத்தை கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தை தா –
நானுன்னை பிராணனோடு போக விடும்படி  என்ன -அவர் அதர்க்கு இசையாது ஒழிய –
அர்த்த ராத்ரத்தில்  பலம் -ஏக யாமத்தில் பலம் -என்றார் போலே சொல்லி கொண்டு வந்த அளவிலும்-
நான் அது செய்வது இல்லை-முன்பு நீ சொன்னபடிபஷிக்கும் அத்தனை-என்று ஒரு நிலை நின்ற படியாலே –
த்வம் வை கீதபிரபாவேன நிஸ்தாரயிது   மர்ஹசி
ஏவமுக்த்வாது சண்டாளம்  ராஷசத் சரணம் கத -என்கிறபடியே –
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே -என்னை பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேணும் –
என்று சரணம் புகுர -அந்த பாகவதர் -யன்மயா பச்சிமம்  கீதம் ஸ்வரம் கைசிகமுத்தமம் –
இத்யாதிபடியே -தான் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தை கொடுத்து –
கர்ம தோஷத்தால் வந்த ராஷச வேஷத்தை கழித்து -முன்பு போலே ப்ரக்மனனாய் –
அதுக்கும் மேலே பாகவதனுமாய் -உஜ்ஜீவிக்கும் படி -பண்ணினார்
என்கிற கைசிக விருத்தாந்தத்திலே –
ஜன்மாதிகளாலான உத்க்ருஷ்ட ரான பாகவதர்கள் ஓட்டை சம்பந்தமே உஜ்ஜீவன
ஹேது ஆவது —
அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் ஓட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேது வாகாது
என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் .
ருஷிகளும் தேவர்களும் தம் பக்கலில் தர்ம சந்தேகம் கேட்கும் படி வித்யாதிகனுமாய் –
ஸ்வ வர்ண ஆஸ்ரம விருத்தி மாத்ரம் அன்றிக்கே -சாத்வ  தந்திர  நிஷ்ணாதனாய் –
பகவத் ஆராதன தத் பரனாய்  கொண்டு போருகையாலே -வந்த விருத்தாதிகனுமாய் —
ஸ்வ தபோ பலத்தாலே -ஸ்வாகன பரிவாரானாயனாய் கொண்டு -அந்தரிஷா சரனாய் திரியும் –
உபரி சரவசு என்கிற -மகா ராஜாவானவன் –
யாகார்தமான பசு நிமித்தமாக ருஷிகளும் தேவர்களும் தங்களில் விவாதம்
பண்ணுகிற அளவில் –
மார்க்காகதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம்தேசம் ப்ராப்தவான் வஸூ
அந்தரிஷா சரஸ் ஸ்ரீ மான் சமகர பலவாகன  தம் த்ருஷ்ட்வா
சஹாசாயாந்தம் வஸூம் தேத்வந்தரிஷா  கம் வூசுர் த்விஜாதயோ
தேவா ஏஷச் சேத்யசி சம்சயம்  -என்று ஆகாசத்திலே போகா நின்ற இவனை கண்டு –
இவன் நம்முடைய சம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு -இவனை சென்று கிட்டி

செய்ய அடுப்பது ஏது என்று கேட்க -அவன்-
உம் தம்முடைய மதங்களை சொல்லும் கோள் -என்ன –
தான்யைர் யஷ்டவ்யமித் ஏஷ-பசேஷா ஸ்மாகம் நராதிப
தேவதானாம் ஹி பசுபி பாஷோ ராஜன் வதச்வன -என்று
தான்யங்களாலே யஜிக்க படும் என்று எங்களுக்கு பஷம்–
பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பஷம் –
நாங்கள் செய்யுமது என் ? சொல் -என்று ருஷிகள் கேட்க –
தேவாநாந்து மதம் ச்ருத்வா வசுனா பஷ சம்ஸ்ரயாத்
சாகாநாஜேன யஷ்டவ்யமேவ முக்தம் வசஸ்  ததா -என்கிறபடியே –
அவன் தேவர்கள் அளவில் பஷ பாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் -என்ன –
குபிதாஸ் தே ததா சர்வே முநயஸ் சூர்ய வர்ச்சச
உஊசூர் வஸும் விமானச்தும் தேவ பஷார்த்த வாதிநிம்
சூர பாஷோ   க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத
அத்யப்ரப்ருதி தே ராஜன் ஆகாசே விஹதா கதி
அச்மச்சாபா பிகாதேன மஹீம் பித்வா பிரவேஷயசி
விருத்தம் வேத சூத்ரானாம் உக்தும் யதிபவேன் ந்ருப
வயம் விருத்த வாசனா யதி ததா பதாமஹே-என்று –
ருஷிகள் எல்லாம் குபிதராய் ,தேவ பஷார்த்த வாதியாய் –
விமானச்தனாய் இருக்கிற இவனை பார்த்து
-நீ சொன்னது வேத சூத்தரங்களுக்கு விருத்தம் ஆகில் –    தேவ பஷா
பாதியாய் வார்த்தை சொன்ன நீ -த்யவ்வில் நின்றும்  அதர்பதி யாய் – –
இப்போது தொடங்கி உன்னுடைய வாகாச கமனமும் மாறி பாதாளத்தில் விழ கடவை —
நாங்கள் தாம் விருத்த வசனம் சொன்னோம் ஆகில் அப்படியே பாதாளத்தில் விழ கடவோம் –
என்று சொல்லி சபிக்க –
ததஸ் தஸ்மின் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததா அதோவை சம்பபூவாக
பூமேர் விவரகோ ந்ருப -என்கிறபடி அப்பொழுதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற
உபரிசரவசூ-விருத்தாந்தத்தில் –
ருஷிகளும் தர்ம சந்தேககங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளால் அவர்களில் உத்க்ருஷ்டன் ஆனவன்
அவர்கள் திறத்தில் அபசாரத்தாலே -யத பதித்தமை  காண்கையாலே –
ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே
இழவுக்கு உடலாவது -அவற்றால் உத்க்ருஷ்டர் ஆனவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில்
பண்ணும் அபசாரம் இழவுக்கு    உடலாகாது என்கிற நியாயம் இல்லை என்னுமது
காணலாம் என்கை —
ஜன்மாதிக்யம் ருஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆத்யாதிக்யம் இவனுக்கு
உண்டாகையாலே -அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்ல  குறை இல்லை –
ஜன்மமும் ஞானாதிகளும் ஒரு தலை ஆனால் ஞானாதிகள் பிரபலம் களாய்
இறே இருப்பது —

கைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராக புராணத்திலே -ஸ்ரீ பூமி பிராட்டிக்கு
ஸ்ரீ வராக நாயனார் அருளி செய்தது ஆகையாலும் –
உபரிசரவசு விருத்தாந்தம் பஞ்சம வேதமான மகா பாரதத்திலே
மோஷ தர்மத்திலே தர்ம புத்ரருக்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப் பட்டது ஆகையாலும்
இவை தான் ஆப்த பிரமாண சித்தம் இறே
பிள்ளை லோகாச்சார்யர் திரு வடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading