Archive for December, 2011

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -181/182/183/184/185/186..

December 13, 2011

சூரணை-181-

சரண்ய முகுந்தத்வம்
உத்பலாவதகத்திலே
பிரசித்தம் ..

(உத்பலாவதகம் –உத்பல -அவத்-அகம் / அவத் -காப்பாற்றுதல் -முமுஷுக்களைக் காப்பாற்றும் இடம் )

சரண்ய முகுந்தத்வம்
அதாவது
சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருவாய்-9-10-5-என்று
கீழ் சொன்ன விசேஷத்தாலே எல்லார்க்கும் சரண வர்ண அர்ஹனாய் இருக்கும் அவனுடைய மோஷ ப்ரதத்வம்
உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேஷணம்
சௌரி ராஜம்மஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம் –என்கிற படியே
திருக் கண்ண புரத்தில் – உத்பலாவதகம் என்கிற பேரை உடைத்தான திவ்ய விமாநத்தில்
நிற்கிற நிலையில் எல்லாரும் அறியலாம் படி பிரசித்தம் என்கை ..

முகுந்தத்வம் ஆவது முக்தி பூமி ப்ரதத்வம்
வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்கையாலே -ஆய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது ..
பலம் என்று மாம்சமாய் -உத்பலர் என்று மாம்சல தேகராய் இருக்கை அன்றிக்கே
சரீர சோஷணத்தாலே உத்கத மாம்சராய் கொண்டு -உபேஷித தேகராய் இருக்கும்
முமுஷுக்களாய் -தேஷாம் மமாவதோ வாஸம் உத்பலாவதகம்விது –என்கிறபடியே
அவர்களுக்கு ரஷகன் எழுந்து அருளி நிற்க்கையாலே -உத்பலாவதகம் -என்று அங்குத்தை
திவ்ய விமானத்துக்கு பேர் ஆகையாலே -ஆய்த்து -மோஷ ப்ரதத்வம் அந்த ஸ்தலத்திலே பிரசித்தம் என்றது ..

——————————————

சூரணை-182-

மார்க்க பந்து சைத்யம்
மோகனத்தே
மடு விடும்–

அதாவது
இப்படி மோஷ பிரதனனான தன்னுடைய பிரசாதத்தாலே -மோஷ பூமிக்கு போவார்க்கு –
காள மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதி–திருவாய்-10-1-1 –என்றும் –
ஆப்தன் (ஆத்தன்)- தாமரை அடி இன்றி மற்றிலம் அரணே–திருவாய்-10-1-6-–என்னும் படி
ஆப்தனாய் கூடக் கொண்டு போம் மார்க்க பந்து வானவனுடைய
சுரி குழல் கமலக் கண் கனி வாய் காள மேகம்–திருவாய்-10-1-1 -என்றும் –
அவனடி நிழல் தடம்–திருவாய்-10-1-2 -என்றும்
மரகத மணித் தடம்—திருவாய்-10-1-8 -என்றும்
சொல்லும் படி இருந்துள்ள சம்சாரிக சகல தாப ஹராமான சைத்யம் —
(சைத்யம் -குளிர்ச்சி -காளமேகம்-தடம்-என்பதால் )
அம்ருத பிரதான சமயத்திலே அசுரர்களை மோஹித்த இடம் ஆகையாலே
மோகன ஷேத்ரமான திரு மோகூரிலே நிறைந்து நிலை பெற்று இருக்கும் என்கை ..
மடுவிடும் -என்றது மரகத மணித் தடம்-என்கிற சமாதியாலே ..

——————————————-

சூரணை -183-

ச சைந்ய புத்ர சிஷ்ய
சாத்ய ஸித்த பூ சுர
அர்ச்சனத்துக்கு
முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்
அநந்த சயநத்திலே வ்யக்தம்-

(ச சைந்ய சாத்ய அர்ச்சனத்துக்கு முகத்தையும்- – ச புத்ர -ஸித்த அர்ச்சனத்துக்கு நாபியையும் –
ச சிஷ்ய பூ சுர அர்ச்சனத்துக்கு பாதங்களையும் த்வார த்ரயத்தாலே காட்டும் – சாம்யம் அநந்த சயநத்திலே வ்யக்தம் )

அதாவது
அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் -திருவாய்-10-2-6-– என்கிற
சேநாசகிதரான சேனை முதலியார் ஆகிற -யத்ர பூர்வே சாத்யா-புருஷ ஸூக்தம் –என்கிற
நித்ய ஸூரிகளின் தலைவரான சாத்யர் உடையவும் —
அமரார் திரிகின்றார் கட்கு ஆதி—திருவாய்-10-2-6- -என்கையாலே
புத்ரர்களான ப்ரமாதிகளான சித்தர் உடையவும் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்–திருவாய்-10-2-8- -என்று
இவர் உபதேசம் கேட்ட சிஷ்யர்களான பூ சூரர் உடையவும் –
அர்ச்சனதுக்கு திரு முகமும் திரு நாபியும் திரு அடிகளும் ஆகிய இவற்றை திரு வாசல் மூன்றாலும்
தர்சிப்பிக்கிற நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்று விசேஷம் பாராத சாம்ய குணம்
திரு வநந்த புரத்திலே கண் வளருகிற பிரகாரத்தாலே வ்யக்தமாய் இருக்கும் என்கை —

————————————–

சூரணை -184-

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்
வளம் மிக்க நதியிலே கரை புரளும்

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்
அதாவது
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -திருவாய்-10-6-1-என்றும் –
விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும்
இப்படி சர்வ சமனானவன் ஆஸ்ரிதர்க்கு மோஷ பிரதானம் பண்ணும் அளவில்
அவர்கள் விதித்த படி செய்வானாய் நிற்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம் –
வளம் மிக்க வாட்டாற்றான்–திருவாய்-10-6-3- -என்று ரஷ்ய வர்க்கம் குறைவற்ற தேசம் ஆகையாலே
அவனுக்கு சம்பத்து மிக்கு இருக்கிற திரு வாட்டாற்றிலே அமர்யாதமாக பிரவகிக்கும் என்கை ..
கரை புரளும் என்றது ஆறு என்கிற சமாதியாலே —

————————————–

சூரணை -185-

த்யாஜ்ய தேக வியாமோகம்
மருள்கள் கடியும்
மயல் மிகு பொழிலிலே
தலைக்கும் ..

த்யாஜ்ய தேக வியாமோகம்
அதாவது
முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேகத்திலே –சரம தேகம் ஆகையாலே –
மகிஷி யினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜ புத்ரனைப் போலே –
வஞ்சக் கள்வனாய் நெஞ்சும் உயிரும் உள் கலந்து–திருவாய்-10-7-1 –என்றும் –
மாய வாக்கை இதனுள் புக்கு -திருவாய்-10-7-3–என்கிறபடியே-
இதன் தோஷம் பாராமல் உள் புகுந்து –
திரு மால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருவாய்-10-7-8–இத்யாதிப் படி
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இதில் ஏக தேசத்தில் பண்ணி
மங்க ஒட்டு -உன் மா மாயை -திருவாய்-10-7-10- -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி அவனுக்கு உண்டான வியாமோகம்
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -திருவாய்-10-7-7-என்று
சர்வருடைய அஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்குவதாய் –
மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை–திருவாய்–2-10-3 -என்று
போக்யதா பிரகர்ஷத்தாலே போக்தாக்களை பிச்சேற்ற வற்றான சோலையை உடைய
தெற்கு திருமலையிலே சம்ருதமாய் செல்லும் என்கை ..

பொழில் -என்கிற சமாதியாலே ஆய்த்து -தழைக்கும் -என்றது ..

———————————–

சூரணை -186-

அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும்
ஸ்வாமித்வம்
பெரு நகரிலே
பேர் பெற்றது ..

அதாவது
திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-திருவாய்-10-8-1-என்று
ஸ்வ அங்கீகாரத்துக்கு உடலான ஸூஹ்ருத லவ லேஸம் இல்லாதவரையும் –
மடி மாங்காய் இடும் போலே -என்னூரைச் சொன்னாய் -இத்யாதியான
அஞ்ஞான ஸூஹ்ருதங்களை ஆரோபித்தும் அங்கீகரிக்க இடம் பார்க்கும்
அவனுடைய ஸ்வாமித்வம் –
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல்–பெரிய திருமொழி-5-9-3–என்று
கண் வளர்ந்து அருளுகிற திருப்பேர் நகரில் பிரசித்தம் என்கை …

ஆக திருப் பதிகள் தோறும் ,ஒரோ குணம் பிரத்யேன பிரகாசிக்கும் என்னும் இடம்
இவர் அனுசந்தித்த திருப்பதிகள் எல்லாவற்றிலும் தர்சிப்பித்தார் ஆய்த்து- –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -163/164/165/166/167/168/169/170/171/172/173/174/175/176/177/178/179/180….

December 13, 2011

சூரணை -163-

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள்
பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் –
மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை
ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே
அருளி செய்கிறார் மேல் —

ருசி விவசர்க்குப்
பாதமே சரணம் ஆக்கும்
ஒவ்தார்யம்
வானமா மலையிலே
கொழுந்து விடும் —

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள் )

அதாவது
கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே
பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-திருவாய்-5-7-10- -என்னும்படி
திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம்
ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று
ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -)
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–

——————————————–

சூரணை -164-
களை கண் அற்றாரை
உருக்கும்
மாதுர்யம்
குடமூக்கிலே
பிரவஹிக்கும்–

அதாவது
களைகண் அற்றாரை -இத்யாதி –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்-5-8-8-என்று
ரஷகாந்தர பிரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை
நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற-திருவாய்-5-8-1- -என்று
சிதிலராம் படி பண்ணுகிற ஆராவமுதமான மாதுர்யம் –
குடமூக்குக் கோயிலாகக் கொண்டு -இரண்டாம் திருவந்தாதி –97-என்ற
குடமூக்கு என்னும் கும்பகோணத்தில் மேன்மேலும்
ஆராமல் புசிக்கும் படி பெருகா நிற்கும் என்கை —

————————————-

சூரணை -165-

மெலிவிலும்
சேமம் கொள்விக்கும்
கிருபை
தென்னகரிலே
நித்யம்-

அதாவது
கீழ் சொன்ன நிரதிசய போக்யமான விஷயத்தை சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று
நாள் தோறும் மெலியும் அளவிலும் –
நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று
அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )
சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-
தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —

————————————

சூரணை -166-

வ்யவசாயஜ்ஞர்
ரக்ஷண ஸ்தைர்யம்
பம்போத்தர
தேசஸ்தம்–

(வ்யவசாயஜ்ஞர்-ஆர்த்த ரஷணத்தில் அவனுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்
தேசஸ்தம்-நிலை பெற்று நிற்கும்)

அதாவது
ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய தீ மத நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே –ஸூ ந்தர -16-4–
(ஸ்ரீ ராம லஷ்மணர்களுடைய எண்ணங்களை மழைக்கால கங்கையைப் போன்று அதிகமாக கலங்க வில்லை ) -என்று
சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -திருவாய்-6-1-10-–என்று
ஆர்த்த ரஷணத்தில் தன்னுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்களுடைய ரஷணத்தில் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –யுத்தம் -18-3-
ஏதத் வ்ரதம் மம -யுத்தம் -18-33 -என்கிறபடியே
அனுகூலராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி இருக்கும் அவனுடைய ஸ்தைரிய குணம் –
(திரு வண் வண்டூர் புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு -6-1-5–ரக்ஷணத்துக்கு
அன்றோ தலைமாலை சாத்திக் கொண்டு இருக்கிறான் )
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் -திருவாய்-6-1-10-என்று
பம்பையாகிற ஆற்றுக்கு வடகரையான திரு வண் வண்டூரிலே நிலை பெற்று நிற்கும் என்கை —

—————————————-

சூரணை -167-

விளம்ப விரோதம்
அழிக்கும்
விருத்த கடநா சாமர்த்தியம்
நன்னகரிலே
விஸ்தீர்ணம் —

அதாவது
க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –
போகு நம்பீ -திருவாய்-6-2-1-என்றும் –
கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் –
பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை
அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று
அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –
நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –
தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –
திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி
பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )

————————————-

சூரணை -168-

கடித கடக
விகடநா பாந்தவம்
அவ் ஊரிலே
த்விகுணம்–

(கடிதர் -சேர்க்கப்படுபவர் /-கடகர்-சேர்ப்பவர் / விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை )

அதாவது
பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற
கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் ,
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி
விகடநையை பண்ணுவதான –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னார் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

(இங்கு கடிதர் -ஆழ்வார் -கடகர் -தோழிமார் -/ தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
ஆசையில்லை விடுமினோ -என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்தார் அன்றோ )

(பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்றும் சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் -என்றும் –
அனந்தாழ்வான் -திருவேங்கடமுடையான் என்றும் -பராங்குச நாயகி -தொலை வில்லி மங்கலம் -என்றும் –
பர கால நாயகி -திருக்கண்ண புரம் என்றும் -சொல்லுவதில் உள்ள இனிமை அத்விதீயம் –
திருத்தாயார் அவ்வாறு சொல்ல மாட்டாமையாலே அவ்வூர் என்கிறாள் )

————————————————

சூரணை -169-

கை முதல் இழந்தார்
உண்ணும்
நிதியின் ஆபத் சகத்வம்
புகுமூரிலே சம்ருத்தம்–

கை முதல் இழந்தார்
அதாவது
ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று
பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –
பிராப்ய பிராபக பாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டு கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –
உண்ணும்
அதாவது
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
நிதியின் ஆபத் சகத்வம்-
அதாவது
வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் –
புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)

—————————————–

சூரணை -170-

சென்று சேர்வார்க்கு
உசாத் துணை அறுக்கும்
சௌந்தர்யம்
மா நகரிலே கோஷிக்கும்-

சென்று சேர்வார்க்கு
அதாவது
தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று
பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –
உசாத் துணை அறுக்கும்
அதாவது
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –
சௌந்தர்யம்
அதாவது
செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு
அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –
மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

——————————————–

சூரணை-171-

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும்
ஆநந்த வ்ருத்தி
நீண் நகரிலே ..

ப்ரவண சித்தம்
அதாவது
தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்
என்னும் என் சிந்தனை–திருவாய்-7-10-9–என்று –
அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான
பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி –
அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல்
பிரவணரானவர்கள் சித்தத்தை –

பரத்வ விமுகமாக்கும்
அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –
ஆநந்த வ்ருத்தி-
அதாவது-
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1-
என்கிற ஆநந்த வ்ருத்தி –
நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாரன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

————————————————

சூரணை -172-

சாதரரை
பரிசு அழிக்கும்
சேஷ்ட்டித ஆச்சர்யம்
குளத்தே கொடி விடும் ..

(சாதரரை -அன்பினை யுடையவர்களை /கொடி விடும் -மிக்குத் தோன்றும்
திருக் குளந்தை-இப்பொழுது பெரும் குளம் என்ற திருநாமம் இந்த திவ்ய தேசத்துக்கு )

அதாவது
ஆழி வலவனை ஆதரித்து –கூடச் சென்றேன்–திருவாய்-8-2-4- -என்று
தன் பக்கல் ஆதாரத்தோடு கூடி இருப்பவரை
பரிசு அழிக்கும்-
அதாவது-
பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி
ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்
மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று
கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

——————————————

சூரணை-174-

ஸ்ரம மனம் சூழும்
சௌகுமார்ய பிரகாசம்
ஆய்ச் சேரியிலே-

ஸ்ரம மனம் சூழும்
அதாவது
பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் –
நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக –
தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –
அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7-
படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-
ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –

சௌகுமார்ய பிரகாசம்
அதாவது
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று
பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல்
வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –
ஆய்ச் சேரியிலே-
அதாவது
உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் -—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —

————————————

சூரணை -175-

மஹா மதிகள்
அச்சம் கெட்டு அமரும்
சௌர்யாதிகள்
சிற்றாறிலே கொழிக்கும் ..

மஹா மதிகள்
அதாவது
சம்ஸ்பருசன்னாசனம் ஸௌரே விதுரஸ்ஸ மஹாமதி -பாரதம் -உத்யோக பர்வம் –– என்கிறபடியே –
சௌகுமார்ய அனுசந்தானத்தாலே அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்று –
அஸ்தானே பய சங்கை பண்ணும் மஹாமதிகள்–
அச்சம் கெட்டு
அதாவது
வார் கடா வருவி யானை –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு
எங்கள் செல் சார்வு-திருவாய்-8-4-1
என்று தங்களுக்கு நிர்பய ஸ்தானமான புகலாக நினைத்து பயம் கெட்டு –
(அங்கு அமரர் பேண-அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இல்லை என்று அஞ்ச –
திருவாய் மொழி நூற்று அந்தாதி -73-என்றும்
வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் –
பாரும் என தான் உகந்த மாறன் –திருவாய் மொழி நூற்று அந்தாதி -74-)

அமரும்
அதாவது
திரு சிற்றாற்றங்கரையானை –முக்கண் அம்மானை நான் முகனை அமர்ந்தேன்-திருவாய்-8-4-10–என்று
ப்ரஹ்ம ருத்ரர்களுடைய சத்தாதிகள் ஸ்வாதீனமாம் படி இவர்களை பிரகாரமாக உடைய
பெருமையை உடையவனாய் வைத்து ஸூலபனாய் வந்து நிற்கும் அவனை –
அவனுக்கு என் வருகிறதோ -என்று பட்ட மறுகுதல் தீர்ந்து -கிட்டி அனுபவிக்கப் பெற்றேன்
என்று ஹ்ருஷ்டராம் படியான —
சௌர்யாதிகள்
அதாவது
வார் கடா வருவி-இத்யாதியாலே சொன்ன
குவலயாபீட சாணூர முஷ்டிக கம்சாதி நிரசன பிரகடித ஸௌர்யாதிகள்
சிற்றாறிலே கொழிக்கும் –
அதாவது
திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாறு என்கிற திருப் பதியில்-
திரு ஆற்றுக்குளே மணி முக்தாதிகள் கரையிலே கொழித்து தோற்றுமா போலே பிரகாசிக்கும் என்கை —
ஸௌர்யாதிகள் -என்ற இடத்தில் ஆதி சப்தத்தாலே வீர்ய பராக்ரமங்களை சொல்கிறது —
திருச் சிற்றாறு-ஆறு என்கிற சமாதியாலே கொழிக்கும் என்கிறது ..

———————————

சூரணை -176-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்
சாதனம் ஒருக்கடுக்கும்
க்ருதஜ்ஞதா கந்தம்
தாயப் பதியிலே–

(ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே
திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு-
திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்-
கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் –
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் )

அதாவது
சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று
சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,
இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று
சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் —
திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே ..

——————————————

சூரணை -176-

அவகாஹித்தாரை
அனந்யார்ஹமாக்கும்
நாயக லஷணம்
வளம் புகழு மூரிலே குட்டமிடும்

அவகாஹித்தாரை
அதாவது
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று
தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –
அனந்யார்ஹமாக்கும்-
அதாவது-
அருமாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் –
திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி
அனந்யார்ஹம் ஆக்குமதாய் –
நாயக லஷணம்-
அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..
வளம் புகழு மூரிலே குட்டமிடும்-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..
குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..

அருள் மூழ்கினாரை – என்னாதே -அவகாஹித்தாரை -என்றது கலந்தவர்களை-
அனந்யார்ஹர் ஆக்கும் படி இருக்க வேணும் நாயக லஷணம் என்று –
உத்தம நாயக லஷணத்தை சாமான்யேன தர்சிப்பித்து –
அந்த லஷணம் ஈஸ்வரனுக்கு திருப் புலியூரிலே பூரணமாக பிரகாசிக்கும் என்று அருளிச் செய்தவர் ஆகையாலே ..

———————————————-

சூரணை -177-

போக்ய பாக த்வரை
தெளிந்த சந்தைக்கு
முன்னில் மூன்றிலும்
ப்ரகடம் — .

போக்ய பாக த்வரை
அதாவது
பசி கனத்தவன் அன்னம் பக்குவம் ஆவதற்கு முன்னே பதற்றத்தாலே அதுக்கு அணித்தாக வந்து
கிடப்பது -இருப்பது-நிற்பது -ஆம் போலே –
போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரம பக்தி ஆகிற பாகம் பிறக்கும் அளவுக்கும் அவனுக்கு உண்டான த்வரை –

தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் —
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன
புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று -என்று
கிடப்பது இருப்பது நிற்பதான –
திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை ..

(என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய் -9-6 10—என்று
ஆழ்வாரை போக்யமாக கொண்டமை அருளிச் செய்கிறார் )

———————————

சூரணை -178-

போகத்தில் தட்டு மாறும் சீலம்
காட்கரையிலே கரை அழிக்கும்

போகத்தில் தட்டு மாறும் சீலம்
அதாவது
இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்-9-6-7–என்றும் –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி
அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –

காட்கரையிலே கரை அழிக்கும்-
அதாவது-
திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று
வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை —
கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே ..

—————————————-

சூரணை-179-

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் ..

(இங்கு திவ்யாத்ம ஸ்வரூப மார்த்வம் -கீழே திவ்ய மங்கள விக்ரஹ மார்த்வம்
வளம் -செல்வம் -அடியாருக்கு செல்வம் / கூடு பூரிக்கும் -நிறைந்து இருக்கும் )

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம்
அதாவது
தமரோடு அங்கு உறைவார்க்கு—திருவாய்-9-7-2-என்று
தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறவர்க்கு என்கிற படி –

சக்ருத் த்வதாகார விலோகநாசயா த்ருணீக்ருதா நுத்தம புக்தி முத்திபி மஹாத்மபிர்
மாமவலயோக்யதாம் நய க்ஷணே பிதேயத் விரஹோதி துஸ் ஸஹ -ஸ்தோத்ர ரத்னம் -55- -என்கிறபடியே –
தம்முடைய விக்ரகத்தை ஒருகால் காண வேணும் என்னும் ஆசையினால்-
அநுத்தமான போக மோஷங்களையும் த்ருணீகரித்து இருக்கும் மஹாத்மாகளோட்டை விரஹம் சகியாமை யாகிற மார்த்த்வம்-
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்
அதாவது
மூழிக் களத்து வளத்தினை-பெரிய திருமடல் -129- விளக்கினை -என்றும் பாட பேதம் உண்டு என்பர் இதில் -என்று
ஆஸ்ரிதருக்கு சம்பத்தாய் இருக்கும் ஸ்வபாவம் ஆனவன் திரு மூழிக் களத்தில் கூடுகட்டி நிற்கும் என்கை ..
கூடு பூரிக்கும் என்றது -களம்-என்கிற சமாதியாலே —

———————————

சூரணை -180-

பிரிந்த துன்பக் கடல்
கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம்
நாவாயிலே நிழல் எழும் ..

பிரிந்த துன்பக் கடல்
அதாவது
அன்புடையாரை பிரிவுறு நோய் -நாச்சியார் -5-4–என்றும் –
துன்பக் கடல் புக்கு –நாச்சியார் -5-4-என்றும் சொல்லுகிறபடியே –
எமராலும் பழிப் புண்டு அணி மூழிக் களத்து உறையும் –தம்மால் இழிப்புண்டு இங்கு என்–திருவாய்-9-7-2-என்றும் –
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -திருவாய்-9-7-9–என்றும் ,
மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து என் அகமேனி ஒழியாமே
திரு மூழிக் களத்தார்க்கு தகவன்று என்று உரையீர்–திருவாய்-9-7-10- -என்றும்
இப்படி மென்மேலும் அழ விடும்படி தன்னைப் பிரிகையால் வந்த துக்க சாகரத்தை நிஸ்தரிப்பிக்கும் –

கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம்
அதாவது
விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிற
விஷ்ணு போதமான அவனுடைய
ஆவா அடியான் இவன் என்று அருளாய்–திருவாய்-9-8-7- -என்று
அபேஷிக்கலாம் படி இருக்கும் ஆஸ்ரித விஷய கிருபையாகிற ஆந்ருசம்ச்யம் –
நாவாயிலே நிழல் எழும்-
அதாவது
நாவாய் உறைகின்ற-திருவாய்-9-8-7- -என்று
அவன் நித்ய வாஸம் பண்ணுகிற திரு நாவாயிலே உள்ளு நிற்கிற வஸ்துவின்
ஸ்வபாவம் இதுவோ என்று அறியலாம் படி அவ்வூரின் பேராலே நிழல் எழும் என்கை ..

நாவாய் போலே இருக்கிற அவன் வர்த்திக்கும் தேசம் ஆகையாலே நாவாய் என்று ஊருக்கு பேராய் இருக்கிறது என்று கருத்து ..–
விஷ்ணு போதத்வம் இத்தாலே பிரகாசித்தால் -அதுக்கு உடலான ஆந்ருசம்சயம் தன்னடடையே தோன்றும் இறே..
காருண்யே நான்ரு ஸம்ஸயேன–ஸூந்தர -15-49–( கருணையாலும் அடியார்கள் விஷயத்தில் செய்யும் அருளாலும் )-
கருணை வேறு அருள் வேறு என்பதற்கு பிரமாணம் -என்று விபஜித்துச் சொல்லி –
ப்ரணஷ்டேதி காருண்யம் ஆஸ்ரிதேத் யாந்ருசம்ஸதா –ஸூ ந்தர –15-50–
(பெண் காப்பாற்றப்பட வில்லையே என்ற கருணையாலும் நம்மை ஆஸ்ரிதவர்களைக் காப்பாற்ற வில்லையே
என்கிற ஆந்ர் சம்ஸ்யத்தாலும் ஸ்ரீ ராமபிரான் வருந்தினார் ) -என்கையாலே ..
ஆந்ரு சம்சயம் ஆவது -ஆஸ்ரித விஷய கிருபை-
(நாவாய் உறைகின்ற நாரண நம்பீ ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே -என்பதால் ஆந்ரு சம்ஸ்யம்
துன்பக்கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் -படியே
விஷ்ணு போதம் -விஷ்ணுவாகிற தோணி – )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்- சூர்ணிகை -157/158/159/160/161/162..

December 12, 2011

சூரணை -157-

இப்படி பல இடங்களிலும் தூது விட்டால் ப்ராப்ய வஸ்த்வைக்யம் குலையாதோ
என்கிற சங்கையிலே -பரத்வாதிகளில் ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லை
என்னும் அத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் —

பகல் ஓலக்கம் இருந்து –
கறுப்பு உடுத்து –
சோதித்து –
காரியம் மந்த்ரித்து
வேட்டை ஆடி
ஆராமங்களிலே விளையாடும்
ராஜ நீதி யாதும் சோராமல்
செங்கோல் நடாவுகிற
பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய
இளவரசுக்கு
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்–

(பகல் ஓலக்கம் இருக்கும் ராஜ நீதி-
கறுப்பு உடுத்து சோதிக்கும் ராஜ நீதி –
காரியம் மந்த்ரிக்கும் ராஜ நீதி –
வேட்டை ஆடும் ராஜ நீதி
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -என்று கொண்டு -ராஜ நீதி -முறை பிரகாரம் -என்றபடி
வேறு வேறு காலங்களிலே-செங்கோல் நடாவுகிற- ஒரே அரசன் செய்வது போலே
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்-என்றபடி )

அதாவது
பகல் ஓலக்கம் இருந்து
சகல பரிஜன சேவ்யனாய்க் கொண்டு தம் வீறு தோற்ற பகல் ஓலக்கம் இருக்கையும்
கறுப்பு உடுத்துச் சோதித்து
ராஜ்யத்தில் உள்ளோர் தோஷ குணங்கள் அறிகைக்காக -ராத்ரியிலே
பிறர் அறியாத படி கறுப்பு உடுத்தி நகர சோதனம் பண்ணுகையும் –
கார்யம் மந்த்ரித்து –
ராஜ்யத்தில் சிஷை ரஷைகளுக்காக கார்ய விசாரம் செய்கையும்
வேட்டை யாடி
பின் துஷ்ட சத்வ நிரசன அர்த்தமாக வேட்டை ஆடுகையும் –
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி –
அந்த ஸ்ரமம் தீர பூம் தோப்புகளிலே அபிமத விஷயங்களோடு விளையாடுகிற ராஜ நீதியானது –

ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய இளவரசுக்கு –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திரு அரங்கச் செல்வனார் –நாச்சியார் –11-3-என்றும் –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர்–திருவிருத்தம்-33- -என்றும்
சொல்லுகிறபடி உபய விபூதியிலும் ஏக தேசமும் சேஷியாத படி -தன்னுடைய திவ்ய ஆக்ஜையை நடத்துபவனாய் –
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–திருவிருத்தம்-80- -என்று
சொல்லப்பட்ட -சௌலப்ய -பரத்வ -பிரணயித்வங்களாலே -வந்த மூன்று முடிக்கு-
(பாரளந்த பேரரசே-என்பதால் சௌலப்யம் / எம் விசும்பரசே என்பதால் பரத்வம் /
எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–என்பதால் -பிரணயித்வம் -என்றவாறு )

உரிய வான் இளவரசனான சர்வேஸ்வரனுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் –
விண் மீது இருப்பாய் –திருவாய் -6-9-5–என்று
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பத்தி
ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ-என்கிற படியே
பகல் கண்டேன்–இரண்டாம் திருவந்தாதி-81–என்கிற ஒரு பகலான பரமபதத்திலே –
ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாய்–திருவாய்-4-9-10- நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கையும் –

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்று
யமாத்மா ந வேத -என்கிறபடியே –
வ்யாப்த பதார்த்தங்களுக்கு தெரியாத படி அந்தர்யாமியாய் –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிகையும்-திருமாலை-34 —

கடல் சேர்ப்பாய் -என்று
பாற்கடல் யோக நித்தரை செய்து சேதன ரஷோ உபாயங்களை சிந்திக்கையும் –
(மந்த்ர ஆலோசனையைச் சொன்னபடி ),

அனந்தரம்
மண் மீது உழல்வாய் -என்று ரக்ஷண அர்த்தமாக வந்து அவதரித்து
களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்–நாச்சியார்–14-9–என்கிறபடியே
ஆஸ்ரித விரோதி துஷ்ட சத்வ நிரசனமாகிற வேட்டை யாடுகையும் -(விபவத்தைச் சொன்னபடி)

மலை மேல் நிற்பாய் -என்று –
விரோதி நிரசன ஸ்ரமம் ஆர நிரதிசய போக்யங்களான –
ஆராமம் சூழ்ந்த கோவில்-சிறிய திருமடல் -71- என்றபடி -திரு மலை முதலான தேசங்களிலே ரசோத்தரமாக வசிக்கையும்
ஆகிய இவை ஐந்திலும் காணலாம் என்கை–

இத்தால் பரத்வாதிகளிலே ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லாமை காட்டப் பட்டது–

———————————————

சூரணை -158-

ஆனால் ஐந்திலும் ஒத்து இருக்கை அன்றிக்கே
இவர் அர்ச்சாவதாரத்தில் மண்டி இருப்பான் என் என்னும் ஆ காங்ஷையிலே
இதன் குண பூர்த்தியை அருளிச் செய்கிறார் மேல்–

தமர் உகந்த
அடியோமுக்கே
என்னும்
பின்னானார் வணங்கும் இடத்திலே
எல்லாம் பூர்ணம் —

அதாவது
தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த எப் பேர் மற்று அப் பேர்-முதல் திருவந்தாதி -44 -என்று
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யங்களே தனக்கு திரு மேனியாகவும் –
அவர்கள் உகந்த திரு நாமங்களே தனக்கு திரு நாமமாகவும் -கொண்டு இருக்கும் என்றும் –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -பெரிய திருமொழி-4-9-5 -என்று
தேச கால கரண விப்ரக்ருஷ்டதைகளால் பரத்வாதிகளில் அணுகைக்கு
ஆள் அன்றிக்கே அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு –
ருசி பிறந்த போதே – நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்காக அன்றோ திரு இந்தளூரில் வந்து
நிற்கின்றது என்று சொல்லப்பட்ட- பின்னானார் வணங்கும் சோதிதிரு மூழிக் களத்தனாய் –திரு நெடும் தாண்டகம் -10–என்று
அவதாரங்களுக்கு பிற்பாடர் ஆனவர்களுக்கு அனுபாவ்யமான அர்ச்சா அவதாரத்திலே –
சர்வம் பூர்ணம் சஹோம்-உபநிஷத் -என்கையாலே –
பரத்வாதிகளில் அனுபாவ்யமான குணங்கள் எல்லாம் பூர்ணம் என்கை —

ஆக இப்படி ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகமாய்-அடியோமுக்கே-என்னும் படி –
கறை விழுந்த இடமான – அர்ச்சா அவதாரத்தில் முற்பட்டவற்றில் உள்ளவையும் காணலாம் ஆகையாலே –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்–7-10-10-
என்னும் படி மண்டி இருப்பார் என்று கருத்து–

———————————————————

சூரணை-159-

இப்படி அர்ச்சாவதாரத்தில் எல்லாம் பூர்ணம் ஆகில்
எல்லா திருப் பதிகளிலும் எல்லா குணங்களும் ஒக்க பிரகாசிக்குமோ என்னும் ஆ காங்க்ஷையிலே
பரத்வாதிகளுக்கு அசாதாரணாமாயும் -சாதாரணாமாயும் இருக்கும் குணங்களில்
ஓர் ஒரோ குணம் ஒரோ திருப் பதியிலே பிரதான்யேந பிரகாசிக்கும் படியை –
இவ் ஆழ்வார் அனுபவித்த திருப்பதிகள்-(30 ) தோறும் தர்சிப்பிக்கிறார் மேல்–

அதில் பிரதமத்தில் பரத்வாதிகளுக்கு அசாதாரானாமான ஒரோ குணம் பிரதான்யேந பிரகாசிக்கும்
திருப்பதிகளை அருளிச் செய்யக் கோலி
அகில திவ்ய தேச பிரதானமான கோயிலில் பிரகாசிக்கிற குணத்தை ஆதியிலே அருளிச் செய்கிறார் —

வன் பெரு வானகம் முதல் உய்ய
இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற
திருவாளன் திருப்பதி
வடிவுடை கடலிடம் கட்கிலீ (காகுத்தா)
என்னும் அவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற
வியூஹ சௌஹார்தம் பிரதானம் —

அதாவது
வன் பெரு வானகம் முதல் உய்ய –
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய –பெருமாள் திருமொழி-1-10-என்று
முதலில் ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளி– பின்பு பூ லோகத்தில் எழுந்து அருளிய கட்டளையிலே –
நைத்திக பிரளயத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக இவ் அருகு உண்டான உபரிதன லோகங்களும்
அங்குள்ள ப்ரஹ்மாதிகளும் பூமியும் இங்குள்ள மனுஷ்யரும் உஜ்ஜீவிக்கும் படியாக —

(பிணி யரங்க வினையகலப் பெரும் காலம் தவம் பேணி
மணி யரங்க நெடு முடியாய் மலர் யயனை வழி பட்டுப்
பணி யரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண
அணி யரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் –ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்

கொடியாடு மணிமாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட நெடியோனே–திருவரங்கக் கலம்பகம் -)

இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திரு வாளன் திருப்பதி –
திரு வாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் -பெரியாழ்வார் -4-9-10-என்றும்
திருவாளன் திருப்பதி-பெரியாழ்வார் -4-8-10 -என்றும் சொல்லுகிற படி
திரு உள்ளம் உகந்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதி உடைய திருப் பதியான கோயிலானது-

வடிவுடை கடலிடம் கட்கிலி ( காகுத்தா ) என்னும் அவற்றில் –
வடிவுடை வானோர் தலைவனே (பரத்வ அனுபவமும் ) -என்றும் –
கடலிடம் கொண்ட கடல் வண்ணா (வ்யூஹ அனுபவமும் )-என்றும் –
கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் (அந்தர்யாம்ய அனுபவமும்)-என்றும்
காகுத்தா கண்ணனே ( அவதார விபவ அனுபவம் ) -என்றும்
சொல்லுகிற படி தோன்றும் பரத்வாதிகளில் வைத்துக் கொண்டு-

இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்த்த பிரதானம் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் -என்றும் –
என் கொலோ முடிகின்றது இவட்கே -என்றும் –
இவளுடை ஆட்டத்தில் தேவரீர் சிந்தித்தது என் ?
இவள் கார்யம் என்னாய் முடிய கடவது ?-என்று சொல்லும்படி பண்ணுகிற
பாற் கடல் யோக நித்தரை சிந்தை செய்யும் வியூஹ குணமான சௌஹார்த்தத்தை
பிரதானமாக உடைத்தாய் இருக்கும் என்கை —

இஸ் ஸ்தலத்திலே வியூஹ சௌஹார்த்தமே பிரதான்யேன பிரகாசிக்கும் என்ற படி –

————————————————

சூரணை -160-

இனி கோவிலுக்கு அனந்தரம் சொல்லப் படுவதான திருமலையில் பிரகாசிக்கிற
குணத்தை அருளிச் செய்கிறார் —

மண்ணோர் விண்ணோர் வைப்பில்
போகின்ற ஏழு உலகுக்கு
உயிர் பாசம் வைத்த
நிகரில் வாத்சல்யம்
உஜ்ஜ்வலம்-

( வைப்பு -திருமலை / போகின்ற எழு உலகுக்கு உயிர் -அந்தர்யாமி -அதன் குணம் வாத்சல்யம் –
வாத்சல்யத்துக்கு விசேஷணங்கள் -பாசம் வைத்த என்பதும் நிகரில் என்பதும் –
ஒழிவில் காலம் -உலகமுண்ட பெருவாயா திருவாய்மொழிகளில் இருந்து அருளிய ஸ்ரீ ஸூக்திகள்
வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் என்று அன்வயம் )

அதாவது
மண்ணோர் விண்ணோர் வைப்பில் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு–திருவாய்-1-8-3 -என்றும் –
தண்ணருவி வேம்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன்-45–என்றும் –
உபய விபூதி உள்ளோர்க்கும் சேமித்து வைத்த நிதி போல் பிராப்யமாய் இருக்கிற திரு மலையில் –

போகின்ற ஏழு உலகுக்கு உயிர்ப் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்
போகின்ற காலங்கள் -போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய்–திருவாய்-2-6-10 -என்றும் –
கண்ணா ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை–பெரிய திருமொழி-1-9-10- -என்றும் –
சொல்லுகிறபடி -சர்வ காலமும் சர்வ ஆத்மாக்களுக்கும் சர்வ வித பந்துமாய்க் கொண்டு –
சர்வருக்கும் ஆத்மாவாய் இருக்கிற அந்தர்யாமி உடைய குணமாய் இருப்பதாய் –

என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி—திருவாய்-3-3-4-என்றும் –
நிகரில் புகழாய் -திருவாய்-6-10-10- -என்றும் –
மிகவும் தண்ணியனாய் இருக்கிற என் பக்கலிலே சங்கத்தை பண்ணினான் என்றும் –
ஒப்பில்லா புகழை உடையவனே என்றும் சொல்லப்பட்ட -வாத்சல்யம் –
பரம் சுடர் ஜோதி -என்று வடிவிலே தொடை கொள்ளலாம் படி உஜ்ஜ்வலமாய் இருக்கும் என்கை —

பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் -என்கையாலே
ஒழிவில் காலம் எல்லாம் –
உலகம் உண்ட பெரு மாயன்-
இரண்டையும் சேர்த்துப் பிடித்து அருளிச் செய்தமை தோற்றுகிறது–

கோவிலுக்கு அனந்தரம் திரு மலையை சொல்லுகை தேட்டமாகில் ,இரண்டு திரு மலையையும் ஒவ்வாதோ ?-
தெற்குத் திரு மலை விஷயமான கிளர் ஒளி இளமை-கீழே கிடக்க –
ஒழிவில் காலத்தில் -சொன்ன வடக்குத் திருமலையை அருளிச் செய்வான் என் என்னில் –
பரத்வாதிகளுக்கு அசாதாரணமான குண பிரகாசமான ஸ்தலங்களை அருளிச் செய்கிற பிரகரணமாகையாலே
தெற்கு திரு மலையில் பிரகாசிக்கிற குணம் இதற்குச் சேர்த்தி இல்லாதது கொண்டு –
கிளர் ஒளி இளமை யை -செஞ்சொல் கவியோடு சேர்த்து அருளுவதாக விட்டு வைத்து –
இது முதலாக அருளிச் செய்தார் இத்தனை —

————————————————–

சூரணை -161-

இனி -ஒழிவில் காலத்துக்கு -பின்பு திருப்பதி விஷயமான திரு வாய் மொழி –
ஒன்றும் தேவு -ஆகையாலே ,திரு நகரியிலே பிரகாசிக்கிற குணத்தை அருளி செய்கிறார் .–

உபய பிரதான
பிரணவமான
உறை கோவிலிலே
எத் தேவும் என்னும்
பரே சத்வம் பொலியும்-

(பர ஈசத்துவம் -பரேசத்வம்/பொலியும் என்றது பொலிந்து நின்ற பிரான் உத்சவர் திரு நாமம் என்பதால் )

அதாவது
உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே —
ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத (ஓம் என்று சொல்லி ஆத்மாவைத் தியானம் செய்யக் கடவன் )-என்றும் –
ஒம் காரோ பகவான் விஷ்ணு (ஓம் என்பது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணு)-என்றும் -சொல்லுகிறபடியே
சப்தார்தங்களில் உடைய பிரதான்யத்தாலே ஜீவ ஈஸ்வரர்கள் இருவருக்கும் வாசகமாய் கொண்டு
இருவருடையவும் பிரதானம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே
ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரான் உடையவும் ஆக்ஜை இரு புரிந்து நடக்கையாலே –
உபயர் உடையவும் பிரதானம் தோற்றுவிக்கும் படி இருப்பதாய் –

அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று
பரம பதத்தில் சம்சாரிகள் இழவை நினைத்து உள் வெதுப்போடே இருக்குமா போலே அன்றி –
அவர்களுக்கு அணித்தாக வந்து நிற்கப் பெறுகையாலே
உள் வெதுப்பு அற்று வர்த்திக்கிற ஸ்தலமான திரு நகரியிலே —

எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –
எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நிற்கும் வண்ணம் நிற்கவே –
திரு குருகூர் அதனுள் குரிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தன்–திருவாய்-4-10-10- -என்று
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும்– ஸ்வ அசாதரண விக்ரகத்தோபாதி தனக்கே பிரகாராம் படி
இருக்கிற ஐஸ் வர்யத்தோடு கூட திருக் குருகூரில் சுலபனாய் வந்து நின்றான் என்று சொல்லப்பட்ட
திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,
திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்-
சுலபனான நிலையில் -பிரகாசிக்கிற பரத்வ லஷணமான ஈஸ்வரத்வம் –
பொலிந்து நின்ற பிரான்-என்கையாலே அவிருத்தம் ஆகா (விளங்கா) நிற்கும் என்கை–

————————————————-

சூரணை -162-

இதுக்கு பின் திருப்பதி விஷயமான திருவாய்மொழி -எங்கனயோ -ஆகையாலே –
திருக் குருங்குடியில் பிரகாசிக்கிற குணத்தை அநந்தரம் அருளிச் செய்கிறார் —

வைஷ்ணவ வாமநத்தில்
நிறைந்த நீல மேனியின்
ருசி ஜனக விபவ
லாவண்யம் பூர்ணம் —

அதாவது
திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநத்திலே என்றது ஸாபிப்ராயம்
அதாவது வாமன அவதாரத்திலே தன்னுடைமை பெறுகுகைக்கு அர்த்தி ஆனாப் போலே –
அர்த்தியாய் நின்று ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய் –
நாமும் நம் இராமானுசனை உடையோம் – என்கையாலே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய்-
வாமன அவதார அம்சமாக -புராண சித்தராய் இருக்கிற நம்பி உடைய திருப்தி என்கை —
அன்றிக்கே –
அறியக் கற்று வல்லவர் வைட்டணவர்-என்று இத் தேச விஷயமான திருவாய் மொழியை
கற்றவர்கள் வைஷ்ணவர் என்கையாலே வைஷ்ணவர்கள் உடையதாய் -வாமன ஷேத்ரமாய்
இருக்கும் தேசத்தில் என்னுமாம்-

வாமன அவதார பிரசங்கத்துக்கு பிரயோஜனம் -விபவ லாவண்யம் பூர்ணம் -என்கிறதுக்கு
உடலாக விபவ அன்வயத்தை உணர்த்துகையும் –
குறியவன் குடி குறும்குடி – என்னும் அர்த்தத்தை தெரிவிக்கையும் –

ஆக இப்படி இருந்துள்ள திருக் குறும்குடியுள் –
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும்
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய்-5-5-7-என்றும் ,
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே -திருவாய்-5-5-6-என்றும்
சொல்லுகிறபடியே -இவர் உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி -பிரகாசிக்கிற –
காள மேக நிபச்ஸ்யமமான விஹ்ரஹத்தின் உடைய –
செல்கின்றது என் நெஞ்சம்–திருவாய்-5-5-1-என்கிறபடி –
மேன் மேலும் அனுபவ ருசி ஜனகமாய்
ரூபவான் ஸூபக ஸ்ரீ மான்–ஸூ ந்தர-34-30- -என்றும்
ரூப சம்ஹனனம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூவேஷதாம் தத்ருஸூ விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸின-ஆரண்ய-1-13-என்றும் –
விபவத்தில் பிரகாசிக்குமதாய் சொன்ன -சமுதாய சோபையான -லாவண்யம்-
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த திருவாய்-5-5-7-என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்- சூர்ணிகை -153/154/155/156..

December 12, 2011

சூரணை -153-

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே
அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப் படாதே அகவலைப்பட்டு
வளர்த்து எடுப்பார் கை இருந்து
தயிர் நெய்யமர் பாலமுதுண்டு
ஒரு மிடறாய்ப் போற்றி
ஒரு வண்ணத்து இருந்த
நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே
நல் வளம் துரப்பன் என்னும் அவற்றுக்கு முகந்து
சொல் எடுத்து சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்
கை கூப்பி வணங்கப் பாடி
ஆலியா அழையா பர அபிமாநத்திலே
ஒதுங்கின நம்பிக்கு அன்பர்
தலை மீது அடிப் பொடி உடையவர் உடையார்
போல்வாரைக் கிளி பூவை குயில் மயில் என்னும்-

அதாவது –
கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று
ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

வளர்த்து எடுப்பார் கை இருந்த –
(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞானமூட்டிய ஆச்சார்யர் ஆதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி )
வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,
எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும்
சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு –
இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கைவசமாய்

தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்-
சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே
உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து-
ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

போற்றி ஒரு வண்ணம் திருந்த –
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் –
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் –
திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும்
கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் –
நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று
என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் –
ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் –
இன்னானதான தசையிலும்-

துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று
அநாராதித்த தசையிலும் -சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்-
வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் –
என்னும் நினைவாலே உகந்து —

சொல்லெடுத்து சோர்ந்தவாறே
சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13-
என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்-
அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —

கற்பியா வைத்த மாற்றம்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே ,
முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –

கை கூப்பி வணங்கப் பாடி-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை
கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று
கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

ஆலியா அழையா —
ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–
(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே
இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )

பர அபிமானத்தில் ஒதுங்கின –
தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –
ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –
(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே
அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்று
ஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று
திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே
அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல
பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான
ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –

கிளி பூவை குயில் மயில் -என்னும் –
குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் –
குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி —
பூவையாவது -நாகண வாய்ப்புள் –
மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

————————————————-

சூரணை -154-

நாரை கொக்கு குருகு-என்று சொல்கிறது யாரை என்னும்
அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் –

ஆசறு தூவி என்னும்
பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே
திரை உகளும் வ்யசன வ்யதை யற்றுத்
தாய் வாயில் உண்ணும்
பிள்ளைக்கு இரை தேடி
வைகலுடன் மேய்ந்து
நுங்கால் பைம்கானம் என்று
ப்ரஹ்ம ரதம் பண்ணி கொடுத்தவை கொண்டு
நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும்
தனிப் பெறும் பித்தர் நம் முதலிகள் போல்வாரை
நாரை கொக்கு குருகு என்னும் —

அதாவது
ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே–
ஆசறு தூவி வெள்ளைக் குருகே –திருவாய்மொழி–6-8-8–என்று
பழிப்பு அற்ற சிறகை உடைத்தாய் -உள்ளும் புறமும் ஒக்க -நிர்மலமாய் இருக்கும் குருகே -என்று சொல்லப் பட்ட –
ய ஸ்மரேத் புண்டரீகாஷம் ஸ பாஹ்யாப்யந்தரஸ் சுசி-என்கிறபடி
(செந்தாமரைக் கண்ணனை தியானம் செய்பவன் உள்ளும் புறமும் தூய்மை உள்ளவன் ஆவான் )
பாஹ்யாப்யந்தர சுத்தி யோடு கூட –

திரை உகளும் வ்யசனவ்யதை யற்று-
வாயும் திரை உகளும் கானல் மட நாராய் –திருவாய்மொழி-2-1-1–என்று
ஆமிஷை காக்ரா சித்தத்தையாலே நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே
தாவிப் போகா நிற்கிற கானலிலே சலியாமல் இருக்குமா போலே –
கிரயோ வர்ஷா தாராபிர் ஹன்யமானா ந விவ்யது
அபிபூயமானா வ்யசனைர் யதா தோஷஜா சேதச – –ஸ்ரீ மத் பாகவதம் –10–20-15–என்கிறபடியே
பகவத் ஏகாக்ர சித்தையாலே சம்சார சமுத்திர தரங்கங்களான
தாப த்ரய ரூப வ்யசனங்கள் அஹமஹமிகாய வந்து மேலிடா நின்றாலும் -அதுக்கு இடையாதே-

தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி –
தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் -பெரிய திருமொழி -9–6–1–என்றும் –
பழனக் கழனி அதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் –பெரிய திருமொழி -5–1–2–என்றும் ,
சொல்லுகிற படி கொக்கு தன் வாயாலே எடுத்து கொடுக்க -ஜீவித்து இருக்கும் தன் பிள்ளைக்கு
வாய்க்கு அடங்கும் இரை தேடி இடுமா போலே –
தங்கள் வாக்காலே உபகரிக்கும் பகவத் விஷயத்தை -உப ஜீவித்து இருக்கும் குழை சரக்கான சிஷ்யர்களுக்கு
பாக அனுகுணமாக சாத்ம்யமான பகவத் விஷயார்தங்களை சாஸ்த்ரங்களிலே ஆராய்ந்து உபகரித்து –

வைகலுடன் மேய்ந்து –
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் –திருவாய்மொழி -6-1-1–என்றும் –
காதல் மென் படையோடு உடன் மேயும் கருநாராய் —திருவாய்மொழி –6-11-2-என்றும் –
சொல்லுகிற படி -சர்வ காலமும் -போக ஸ்தலங்களிலே தாங்களே சென்று –
தங்களைப் பிரியில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்கள் உடனே கூடி
பகவத் குண அனுபவம் பண்ணி –

நும் கால் பைம் கானம் என்று ப்ரஹ்ம ரதம் பண்ணி –
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ–திருவாய்மொழி -9-7-1–என்றும் ,
பைம் கானம் ஈது எல்லாம் உனதே யாகி பழன-மீன் கவர்ந்து உண்ணத் தருவன் —திரு நெடும் தாண்டகம் –27- என்றும்
சொல்லுகிறபடி தங்கள் பக்கல் உபஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே
சிரஸா வகிக்கை ஆகிற ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு –
சரீரமர்த்தம் ப்ராணாஞ்ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிற -க்ரமத்திலே
சாதரமாக சமர்ப்பித்தவற்றை அங்கீகரித்து –

நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் -இத்யாதி –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் –திருவாய்மொழி -8-10-11–என்று
பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான கார்ஹஸ்யத்தையும் –
சம்சார வெக்காயம் அடியான பயத்தாலே –
இன்பமரும் செல்வமும் இவ் வரசும் யான் வேண்டேன் –பெருமாள் திருமொழி -3-9–என்று
உபேஷிக்கும் அவர்களாய் உள்ள –
அம் கை ஆழி அரங்கன் அடி இணை தங்கு சிந்தை தனி பெரும் பித்தரான –ஸ்ரீ குலசேகர பெருமாள் –
ஆச்சர்ய பதஸ்தரான நம் முதலிகள் போல்வாரை –
குண சாம்யத்தால் நாரை என்றும் -கொக்கு என்றும் -குருகு என்றும் சொல்லும் என்கை-

நன்னீல மகன்றில்காள் -திருவாய்மொழி -1-4-4—என்று
மகன்றில்களையும் தூது விட்டமை ஒத்து இருக்கச் செய்தே அதுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்யாது ஒழிந்தது –
அதில் இப்படி பரக்கச் சொல்லத் தக்கது இல்லாமையாலும்
இந்த நியாயத்திலே தத் சமான குணரைச் சொல்லிக் கொள்ளும் இத்தனை அன்றோ என்னும் அதைப் பற்றவும்–
மகன்றிலாவது -அன்றிலிலே ஒரு அவாந்தர பேதம் …

ஆக இப்படி தூது பிரகரணத்திலே சொல்லுகிற பஷ்யவாந்தரங்களுக்கு
ஸ்வாபதேசம் அருளி செய்தார் ஆய்த்து —

——————————-

சூரணை-155-

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

வெளுத்து ஒளித்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )
கண்டு உகந்து பர சம்ருத்தியே பேறான –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர வரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

————————————————————

சூரணை–156-

பேற்றுக்கு அடி இவர்கள் ஆகையாலே ப்ராப்யத்தில் த்வரை தோன்ற பல காலும் தூது விடுவர் –
இனி இப்படி இவர் தூது விடும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவையும் —
தூது விடுகைக்கு பற்றாசையும்
அதுக்கு விஷயத்தையும்
தூது நாலுக்கும் –வகை இட்டு அருளி செய்கிறார் மேல் —

தம் பிழையும் -சிறந்த செல்வமும் –
படைத்த பரப்பும் -தமரோட்டை வாசமும் –
மறப்பித்த ஷமா தீஷா சாரஸ்ய சௌந்தர்யங்களை
உணர்த்தும் வியூக பரத்வ, த்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்-

(தம் பிழையை மறப்பித்த க்ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூது-அஞ்சிறைய மட நாராய் –
சிறந்த செல்வம் மறப்பித்த -தீக்ஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூது -வைகல் பூம் கழிவாய்-
படைத்த பரப்பு -மறப்பித்த -சாரஸ்யத்தை உணர்த்தும் -பரதவ த்வய —
பரத்வத்தையும் அந்தர்யாமித்வத்தையும் சொன்னபடி -மூன்றாம் தூது-பொன்னுலகு ஆளீரோ-
தமரோட்டை வாசத்தை மறப்பித்த ஸுந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை-நாலாவது தூது -எம் கானல் அகம் கழிவாய் -என்றபடி )

அதாவது
தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூதுக்கு விஷயம்-
அஞ்சிறைய மட நாரையில் –1-4—
என் பிழையே நினைந்து அருளி –1-4-7–என்று
தன் மேன்மையால் இத் தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான் –கலக்க கொள்ள
நம் தோஷ தர்சனத்தை பண்ணிப் பிரிந்து நம் அபராதத்தை பார்த்து தன் ஷமையை மறக்கையாலே –
இத் தலையை நினையாது இருந்தான் அத்தனை–
அவன் தன்னுடைய அபராத சஹத்வத்தை அறிவிக்க வரும் – என்று அறுதி இட்டு –
என் பிழைத்தாள் திரு அடியின் தகவினுக்கு –1-4-7–என்று
அபராத சஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
கடலாழி அம்மானை கண்டக்கால் இது சொல்லி —1-4-10-என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி யர்தமாக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவனுக்கு
சிருஷ்டி பிரயோஜனம் –விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதம்—ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே
திரு அடிகளில் அடிமை கொள்ளுகை அன்றோ -என்று
இத்தைச் சொல்ல வேண்டும் என்று வியூகத்தில் தூது விடுகையால்
தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தி விட்ட வியூகம் பிரதம தூதுக்கு விஷயம்

சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம் –
வைகல் பூம் கழி வாயில் -6-1-
சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டூர் உறையும் —6-1-3-என்று
ஆர்த்த ரஷணம் பண்ண வாரா நிற்கச் செய்தே -திரு வண் வண்டூரின் ஐஸ்வர்யத்தைக் கண்டு கால் தாழ்ந்து
தன் ஆர்த்த ரஷண தீஷையை மறைக்கையாலே -நம்மை நினையாது இருந்தான் அத்தனை –
ஆர்த்த ரஷணம் ஒரு தலை யானால் மற்று ஒன்றில் கால் தாழும் அவன் அல்லாமையால் –
அத்தை அறிவிக்க வரும் என்று –
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு –6-1-5–என்று
ஆர்த்த ரஷண தீஷத்வம் பற்றாசாக
மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழ செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே –6-1-10–என்று
பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாச பூமியான இலங்கையில் அரணை துகள் ஆக்கின ஏக வீரனான
சக்கரவர்த்தி திரு மகனுக்கு- ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்
என்று விபவத்தில் தூது விடுகையாலே
சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தி விட்ட விபவம்- இரண்டாம் தூதுக்கு விஷயம் .

படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தும் பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம் –
பொன்னுலகு ஆளீரில்-6-8-
முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு –6-8-1-என்று
ஸ்ருஷ்டமான ஜகத்தின் பரப்பை ரஷிக்கிற பராக்காலே ஆஸ்ரிதரோடு தனக்கு உண்டான ஐக ரச்யத்தை மறந்து –
அது கொண்டு தம்மை நினையாது இருந்தான் அத்தனை .
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்-6-8-6–என்று
ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே அத்தை அறிவிக்க வரும் என்று- ஐக ரசம் பற்றாசாக
வானவர் கோனைக் கண்டு யாதும் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும்-6-8-5-என்று
பரத்வத்திலும்

எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மின் –6-8-5-என்று
அதீந்திரிய தயா பரத்வ சத்ருசவான அந்தர்யாமித்வத்திலும் ,தூது விடுகையாலே –
படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தி விட்ட பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம்-

தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்
எம் கானலில் -9-7-
தமரோடு அங்கு உறைவார்க்கு–9-7-2–என்று –
தம்மை உகந்த பாகவதர்களோட்டை சேர்த்தியில் இனிமையாலே-
பிரிந்தார்க்கு பிராணன் கொண்டு இருக்க ஒண்ணாத படியான தன் சௌந்தர்யத்தை மறந்து –
அது கொண்டு பிரித்திட்டு வைத்துப் போய் நம்மை நினையாது இருந்தார் அத்தனை –
இவ் வடிவழகை பிரிந்தார் தரிப்பாரோ என்று அவ் அழகை அறிவித்து விட்டால் வராது இரார் என்று –
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு -தக்கிலமே -கேளீர்கள் -9-7-3–என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவன்று –9-7-9–என்றும்
சௌந்தர்யம் பற்றாசாக -திரு மூழிக் களத்தாருக்கு -என்று ,அர்ச்சாவதாரத்தில் தூது விடுகையாலே
தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்திவிட்ட அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம்-திரு வாய் மொழி நூற்று அந்தாதி -சாரம் …

December 11, 2011
ஸ்ரீ மா முனிகள் அருளிய சார தமம் பிரபந்தம் –
பக்தாம்ருதம்-திராவிட வேத சாகரம்-
நஷத்ரங்கள்-27
நம் சம்ப்ரதாயம்-பூராடம் ஆரம்பம் -சேனை முதலியார் –
ஆழ்வார்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம்-
செய்த முதல் ஆச்சார்யர் –
திரு மூலத்தில் முடியும் –
மூன்று தத்வங்கள்-அசித் சித் ஈஸ்வரன்-
அசித்- 24 கூறாக பிரித்து -காலம் 25 -தத்வ சூன்யம் – என்பர் –
சித் ஜீவாத்மா 26 – பரமாத்மா 27
பூர்வ ஆச்சார்யா பரம்பரை- மதுரம்-மா முனிகள் முடிவு
அது போல் திவ்ய பிரபந்தம்-சமாப்தம் இத்துடன் .
ஆச்சார்யா ஹிருதயம்/திரு வாய் மொழி நூற்று அந்தாதி தனி பெருமை
தங்கள் திரு வாக்கால் இன்றி -பூர்வர் ஸ்ரீ சுக்திகள் கொண்டே அருளி –
ஆழ்வார் கருத்து -வியாக்யானமே திவ்ய பிரபந்தம் –
அனத்யயன காலத்திலும் அனுசந்திக்க கூடிய பெருமை உடைத்தாய் –
திரு வீதி புறப்பாடு -திரு வாய் மொழி -அனுசந்தானம் இல்லை-
சாம வேத சாரம்-ஆர அமர வீற்று இருந்து கேட்க்கும் படி –
அது போல் திரு வாய் மொழி நூற்று அந்தாதி வீதியில் சேவை இல்லை –
அருளி செயல் சாரமே திரு வாய் மொழி
வேதம்-புருஷ சுக்தம்-போலேயும்
தர்ம சாஸ்திரம்-மனு சாஸ்திரம்-
பாரதம்-கீதை
புராணம்-சிஷ்ணுபுராணம்
அருளி செயலில் -திரு வாய் மொழி
அதற்கும் சாரம் இது -சார தமம்-
விண்ணவர் அமுது பெற அமுதில் வரும் பெண்ணமுது கொண்டான்-சாரம் கொள்ள
அல்லல் செய்து அலை கடல் கடைந்து -சாரத்தை கடந்து – சாரம்-பெண்ணமுது -பெற
மன்னு புகழ் சேர் -தனியனில்- ஒருவாது அறுந்து -தேன்-என்கிறார் இதை-
ஆயிரம் பாசுரங்கள்-வாசக மாலை -புஷ்பம் போல்
வண்டு மா முனி தேனை நமக்கு கொடுக்க –
நெஞ்சை குறித்து தேனை அருந்த சொல்கிறார் தனியனில் ..
சமுத்ரம் அறியாதவனை-கூட்டி காண்பிப்பது போல்

ஐந்து நிர்பந்தம் கொண்டு அருளினார் –
ஆரம்ப சொல் முடிக்கும் சொல்
ஆழ்வார் அருளிய கருத்துகள் அனைத்தும்
ஆழ்வார் திரு நாமம் இடம்பெற வேண்டும்
ஆழ்வார் திரு அடியே பேற்றுக்கு உபாயம்-உபேயம்-
வெண்பாவில் அமைத்த பாசுரம் -அந்தாதி தொடையாக .
எதுகை மோனை இரண்டும் வேண்டும்-
பிராசம்-சமஸ்க்ருதம் -கத்ய காவ்யங்கள் குறைவு பத்யங்கள் பல உண்டு –
ரகு வீர கத்யம்/கருட தண்டகம்/கத்ய த்ரயம் போல் சில உண்டு
அர்த்த விசேஷமும் வேண்டும்
சிறப்புடன் பூனை இருக்க பெற்றால் புறப்பட மாட்டார் எலி -அர்த்தம் இன்றி
உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர்வேத நேர் கொண்டு உரைத்து
மயர்வேதும் வாராமல் மானுடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு ..
பரத்வம் தெரிவிக்கும்
ஈட்டின் சங்கதி தொகுப்பு இது -பிரவேசம் முன்னுரை –
சுருதி சாயளாலே -உளன் சுடர் முகி சுருதியுள்-என்பதால்
திண்ணன் வீடு -2 -2 – அவதார பரத்வம்
அணிவது அரவணை மேல் 2 -8மோஷ பிரத்வம்
4 -10 ஒன்றும் தேவு அர்ச்சை பரத்வம் .-
இது போல் 100 பாசுரங்கள் உண்டே –
வீடு முன் -பற்றசொல்லி
சௌலப்யம் -அடுத்து
நல் அடி போது தழுவுவன் வணங்குவன்-ஆசை பட்டார்
துக்கம் அதிகரிக்க தூது விட்டார்
1 -5
ஓடி வந்தான்
உயர்ந்தவன்-நைச்ய பாவனை -நீசன் பாவனை அனுசந்தானம்
கலக்க மாட்டேன்-
வள எழ உலகு தலை எடுத்தது-என்பர் பூர்வர்
யசோதை-கள வேள் வெண்ணெய் -அருவினையேன்-
பின்னைக்காய்- எந்தாய் என்பான்-
நிதான பாசுரம்-கொஞ்சம் நில்லும் -என்றானாம்-சங்கை
பிரளயம்- மண்ணை உண்டேன்-அறிந்தேன்-திருவாஸ்ர்யம் பாடி இருக்கிறேன்
வெண்ணெய் உண்டது அறிவீரோ
பத்துடை -உறவிடை ஆப்புண்டு ஈடு பட்டேன்
சேர்த்தி இதற்க்கு என்ன -கேட்டானாம் –
மண்ணை உண்டு மருந்துக்கு ஒவ்ஷதம்- மாந்தம் சோகைவராமல் இருக்க
வெளியில் கொண்டு வர-அண்டா வண்ணம்-
உண்டாய் உலகு எழு–மண் கக்கிய நெயூண் மருந்தோ மாயோனே –
முன்னமே உண்டாயே -என்றோ –
பின்பு கலி தோள் தீண்டி அன்றி உண்டாயே -ஆழ்வார் மறுத்தாராம்-
நீரே காரணம் சொல்லும் –
தாழ்ந்தவர்கள் கர ஸ்பர்சம் வேண்டும் என்று உண்டாயே –
தொட்டு தொட்டு உண்டாக்க வேண்டும் -வெண்ணெய் -திரளும் பொழுது கையால் எடுத்து உருட்டி-
சங்கை இல்லையே ஆழ்வாரே கேட்டானாம்
நீர் உத்தேசம் தானே -வாரும்-
அகன்றால்- வெண்ணெய் விலக்கினார் புக்க நரகம் புகுவீர்
சௌலப்யம் காட்டி அருளினார் –
வளம் மிக்க மாலின்
மன் உயரின் தன்மை ‘தளர்வுற்று நீங்க நினைந்தார்
-மால்- ஒரே சப்தத்தால் அருளி -கருமை பெருமை மையல்- வியாமோகம்-
நீடிலகு சீலத்தால் பாங்குடன் சேர்த்தான் பரிந்து –
அடுத்து எம்பெருமான் அழ
ஆழ்வார் மாசுச சொல்கிறார்
2 -5 திரு வாய் மொழி
வைகுந்தா மணி வண்ணா –
உன்னை நன் பிடித்தேன் சிக்கெனவே -கவலை படாதே என்கிறார்
இவன் அவனை பற்றும் பற்று அகங்கார கர்ப்பம் என்போமே
குரங்குக்குட்டி/பூனை குட்டி –
பிரார்த்திக்க வேண்டிய ஆழ்வார் இப்படி சொல்கிறார்
அம்தாமத்து -முன்பாக 2 -5 – கலந்தான் -சந்தோஷமாக -அவனுக்கே புகர் வந்ததாம்
அடுத்து ஜுரம் நைச்ய அனுசந்தானம்
சாதுர்ஷ்டிகம்- நான்கு நாள் ஜுரம் போல்
அப்பொழுது அப்பொழுது வரும் .-
அவன் துக்க படுவது அறிந்து -இனி பண்ண மாட்டேன் என்கிறாராம்
வைகுந்தன் வந்து கலந்த
நைச்சியம் -சிந்தித்து நைகின்ற தன்மை உன்னை தான் விடேன்
என்று உரைக்க வன்மை அடைந்தான் கேசனே
தூது நாலுக்கும் விஷயம்-
அம்சிறைய மட நாராய்-வியூகம் தூது
கடல் ஆழி-அம்மானை கண்டக்கால் இது சொல்லி
இவரும் -ஆழியானுக்கு என் செயலை சொல்லும் .
அடுத்து வைகல்- போர் அரக்கன்-ஏறு செவகனார்க்கு
ராமனுக்கு -விபவ தூது .
அடுத்து பொன் உலகு-பரதவ த்வயம்- பரத்வம்-அந்தர்யாமி
வானவர் கோனை கண்டு எங்கு சென்றாலு
மன்னு திரு நாடு முதல்-அந்தர்யாமி இரண்டையும் காட்டி
எம் கானல்- அர்ச்சை அழகில் –
என் காதலுக்கு அடி மாறன் அடி அழகு
செய்ய பரத்வமுமாம் -அர்ச்சை அவதாரம் எளிது
10 -8 பரி பூர்ண அனுக்ரகம்
இன்று வந்தாய் -அன்று புறம் போக புணரத்தான் என் செய்வான்-சாரமான கருத்து
அன்று அகல்விப்பான் என் என்று செய்வான் என் –
கவிழ்தலை இட்டு காலாலே தரை கீறி –
இடர் உற்று நின்றான் துன்னு புகழ் மாறனை தான் சூழ்ந்து –
அழகாக காட்டி- கெட்டி மேளம்-
சூழ் விசும்பு -பர ஞானம்
தனியாக நின்று தளர்ந்து -பரம பக்தி -இனி மேல் கிடைக்காவிடில் இல்லை-
பங்கையத்தால் கோனை சேர்ந்தான் உயர்ந்து -இதிலும் பரம பக்தி வார்த்தை சேர்த்து அருளி இருக்கிறார் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம் -உபதேச ரத்ன மாலை -சாரம் ..

December 11, 2011

ஸ்ரீ வர வர முனி ..அஸ்துமே நித்ய யோகா

ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி ..

அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து வாழி .

.மன் உயிர் காள் இங்கே மணவாள மா முனிகள்

பொன் அடியாம் செம்கமல போதுகளை உன்னி சிரத்தால் தீண்டி -கடன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்மேளனம் நடத்திய பெருமை –

ஆற்றில் கரைத்த புளி போல் ஆகி இருக்குமே மா முனிகள் –

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் நித்யம் சொல்லி கொண்டு இருக்கிறோம்

இந்த உபதேச ரத்ன மாலை தன்னை —

எதிராசர் இன் அருளுக்கு -என்றும் -இலக்குஆகி சதிராக வாழ்வார் – பலன் –

மா முனிகள் சூட்டிய திரு நாமம் .

பிள்ளை உலகாச்சர்யர்-முழுதும் அவையே பொழுது போக்கு ஆக பெற்றோம்

முன்னவராம் நம் குரவர்கள் மொழி -வியாக்யானம்-விசத வாக் சிகாமணி .

மாலை-திரு மாலை/சங்க தமிழ் மாலை முப்பதும் –

சொல் மாலை சூட்டினேன் இடர் ஆழி நீங்க

இரும் தமிழ் மாலை பூதத் ஆழ்வார்

நாள் கமல் மகிழ் மார்பினன்

சொல் இசை மாலை ஏத்திய தமிழ் மாலை

தொண்டர்க்கு அமுதாகிய மாலை

வாசகம் செய் மாலை

மாணிக்க மாலை பெரிய வச்சான் பிள்ளை

நவ ரத்ன மாலை -பிள்ளை உலகாரியர்

தேசிகன்- தாத்பர்ய ரத்னா வளி
ரத்ன மாலை–சரீரத்துக்கு நவ ரத்னங்கள் பல
ஆத்மாவுக்கு ஒவ்ஜல்யமான ரத்னம் -இது
சாஸ்திரம் போல் -சாஸ்த்ரார்த்த ஞானம் சத் கொடுக்க –
ஸ்ரீ வசன பூஷணம்-சீர்மை ஒன்றுக்கும் இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப்பொழுது
அனுசந்தாகளுக்கு ஒவ்ஜல்யாமாக இருப்பத்தால்-பூஷணம்
அவஸ்தைய ஞாதாவ்ய விஷயம் இவை –
அசாரம்-அல்ப சாரம் —சாரம்-சார தரம்-சார தமம் -ஐந்தும் அறிந்து
முக் குணத்தொருக்கும் வேதம் -ஐஸ் வர்யார்த்தி-அசாரம்
அல்ப சாரம்-கைவல்யாதி போன்றோருக்கு
சாரம்-பரமார்த்த பிராப்தி சாதனம்பக்தி
சார தரம்-பகவத் அனுபவம் –
கைங்கர்யத்தில் களை அறுப்பது -ச்வார்த்த கைங்கர்யம் இல்லை நம் ஆனந்தம்
மருந்தே தங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று -தேவர்கள்-ச்வார்தம்-சார தரம்
சார தமம்-பரார்த்த கைங்கர்யம்-அவனுக்கு ஆனந்தம் -கொடுக்கும் -கைங்கர்யமே பலன்-
பஜேது சார தமம் சமுத்திர ரத்னம் போல் –
உபதேசம் -அடை மொழி ரத்ன மாலைக்கு இட்டு –
உபதேசம்-ஞான போதனை/மந்திர உபதேசம்/ரகஸ்யமாக இணங்க வைத்தல் மூன்று அர்த்தம்
உப -சர்க்கம்-அருகில்-
உப நயனம் பிரம விசாரம் கொடுக்கும் கண்
தேசம்-விஷயம்- குறிப்பிட்டு சொல்வது உபதேசம் –
சகல சாஸ்த்ரன்களால் பிறக்கும் ஞானம் சுயம் ஆர்ஜிதம்
திரு மந்த்ரங்களால் வரும் ஞானம் –
சாஸ்திர ஞானம் பகு கிலேசம்
சாஸ்திர தம சாரம் இது தானே
74 மதகுகள் -குறு பரம்பரை ரத்ன ஹாரம்-
எதிராஜ சப்தத்தி 74
நாயகம்-இவர் முடிவு சொல்ல வில்லை-தேசிகன்-
எறும்பி அப்பா மன் உயிர் காள் – சேர்த்து 74 ஆக்கி –
கோவில் கந்தாடை அண்ணன்-காப்பு- தன் நெஞ்சில் தரிப்பவர் தாள்கள் -நமக்கு சரண் .
நேர் தன்னின் படி=தத்வார்தம் -தணவாத ஒழிக்காமல் தன் அன்புடன் செய்-
பின்புள்ளார் இழக்க கூடாது என்ற பரம காருண்யம் -கொண்டு அருளி –
பொய்யில்லாத மணவாள மா முனி -உள்ளத்தை உள்ளபடி மறைக்காமல் எடுத்து சொல்வது
முதல் பாசுரம்-வெண்பாவில் வைத்து -சுலபாமா அருளி-சங்கல்பம்-செய்து கொண்டார்
திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால்-வந்த உபதேச மார்க்கம் –
ஆழ்வார் ஆச்சார்யர் பெருமை-அருளி செயல்வார் அறிவார் யார் -சீர்மை அறிபவர் யார்
நாத முனிகள் அல்லாத தேசிகர் அல்லால் –
சிந்தை செய்து அருளுகிறார் ..
சரயு-தாமிரபரணி நதி இதிகாசம் காட்ட -அவதரித்த நாள் தேசம் -முதலியன இவர் காட்டி –
இவர் சிந்தை செய்து -இவற்றை அருளுகிறார்
பேசுகின்றேன்-சொல்லுகின்றேன் இல்லை-கொடுத்து அல்லது தரியேன்
துர் கதி கண்டு போருக்க முடியாமல்
கற்றோர் தாம் உகப்போர் -கல்வி ஆசை கொண்டவர் பெற்றோம் என உகந்து
மற்றவர்-பொறாமை-ஆழ்வார்கள் பெருமை சொன்னாரே -இகழ்ந்தால் -நமக்கு என்ன –
ஆழ்வார்கள் வாழி-தாழ்வாதுமில்–தாழ்வு-பகவத் விஷயம் அல்லாதவற்றை கொள்ளாமல்-
ஆத்ம ரஷனத்துக்கு இது தானே வேண்டும்.-
அருளி செயலிலே பொழுது போக்கும் குரவர்கள்-முற்பட துவ்யத்தை கேட்டு-
இதிகாச புராணம்-பர பஷம்-மீமாம்சை- அருளி செயலில் பொழுது போக்கும் பூர்வர்கள் –
மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம்
ஐப்பசி ஆரம்பித்து -ஆனி முடிய சஞ்சரிப்பார்கள்-
ஐப்பசி பூராடம் பிரபன்னர் வருஷ ஆரம்பம் -விஷ்வக் சேனர் -மூலத்தில் முடியும் –
பேதை நெஞ்சே -நம் நெஞ்சை பார்த்து -மங்கையோர் கோன்-கார்த்திகை கார்த்திகை –
வீறு சப்தம்-இவருக்கு -விஷ்ணு ஆலயம் கார்த்திகை தீபி -உன் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீரோ -கேட்டாரே
முப்புரி ஊட்டிய நாள்-கார்த்திகை ரோகிணி – -நன்குடனே கொண்டாடும் நாள்
பார்த்த சாரதி/பாணன்/திரு கோஷ்டியூர் நம்பி என்பதால்
நான் மறையோர் கொண்டாடும் நாள்-கேட்டை-தாத்பர்யம்-பெரிய நம்பி அவதாரம் என்பதால்
துய்ய மதி பெற்ற மழிசை பிரான்-நல் தவத்தார்
தேவதாந்திர ஸ்பர்சம் கூடாது பரத்வம் ஒலித்த துய்ய மதி
நல் தவத்தர் -கனி கண்ணன் -பெரும் புலியூர் அடிகள் போல்வார்
நல்லவர் கொண்டாடும் நாள்-பிறர் நன்மை உத்தேசம்-கூடப் பாம்பில் கை இட்ட குணம் தோற்று கொண்டாடும் நாள்
ஆற்றில் ஊரில் உள்ள -ஆச்சர்ய ஹிருதயம் உண்டோ ஒப்பு
-வைகாசி விசாகம்- நின் கண் வேட்கை எழு விப்பேன் –
திரு மாலால் அருளப் பட்ட -யானாய் தன்னை தான் பாடி -உண்டோ திரு வாய் மொழிக்கு ஒப்பு
பெரி ஆழ்வார் பெருமை 5 பாசுரங்கள்
பொங்கும் பரிவால்-பெற்றான் =விசேஷ அர்த்தம் காட்டி –
ஆண்டாள் தந்தை என்பதால்-அமுக்கியம்-மாமனார் -ஜனகன் -கூடவா –
உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் -மங்கலம் ஆனதால்
தனி பிரபந்தம் என்கிற விஷயம் காட்டி .
மூவரையும் சேர்த்து ஆண்டாள்/மதுர கவி/எதிராசர் இவர்கள்
ஏற்றி இருப்பாரை வெல்லுமே -சாற்றி இருப்பாரே தவம்
ஆச்சார்யா நிஷ்டை என்பதால்
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததி-ஆழ்வார் அனைவருக்கும்
அஞ்சுகின்ற குடி
முன் உள்ள ஐவருக்கும்
எமக்காக வன்றோ -பிரஜை கிணற்றில் குதித்தல் ஒக்க விழும் தாய் போல் அவதரித்தார் –
வான் போகம் தன்னை இகழ்ந்து –
பெரி ஆழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே –
அவன் அருளை பெற்று இவளை எடுத்த
ஒரு மகள் -திரு மகள் போல் வளர்த்தேன்-
சீராரும் சித்திரையில் சித்திரை-
நம பத அர்த்தம்-நான் எனக்கு இல்லை-
ஆய் ஜகன்னாதாச்சர்யர் கேட்க போனாரே மா முனிகள்
-ஞான சதுஷ்டிகளுக்க்கு மேல் ஆனந்த சதுஷ்டிகளுக்கு உதயம்
எம்பெருமானை சேர்ந்த அடியாருக்கும் -தாத்பர்யம் அறிந்து இரண்டு பாசுரம்
எம்பெருமானாருக்கு மூன்று பாசுரங்கள்-நால் திசையும் கொண்டாடும் நாள்
சித்தரை-பெருமாள்- புனர் பூசம் அருகில்- ஸ்ரீ மான்-தசரத குமாரன்-ஸ்ரீ மான் இளைய ஆழ்வார்
கைங்கர்ய ஸ்ரீ உடையவர்
ஆழ்வார் அவதரித்த நாள்களை விட -வாழ்வான நாள் நமக்கு சித்திரை செய்ய திரு ஆதிரை
திரு முடி திரு அடி சம்பந்தத்தால் –
பொலிக பொலிக -பொலிக -பாசுரம்-அஞ்சலி ஹஸ்தம் கொண்ட திரு மேனி-மதுர கவி-நாதமுனி மூலம்
ஆ முதல்வன்-இவன் தான் அவர் -பவிஷ்யத் திரு மேனி-சாரமோ உபாய நிர்ணயம்-நாயனார் ஆச்சான் பிள்ளை
எழ பாரும் உய்ய -சர்வ லோகமும் -அனைத்து உலகும் வாழ பிறந்த எதிராசா –
பிரம உபாசனம் விசாரம் பண்ண வேண்டும் எல்லா லோகத்திலும் –
ஸ்ரீ பாஷ்யம் அருளி-தத்வ நூல் கூழ் அற்றதே -தேவர்களும் கை கொள்ளும் படி
சரஸ்வதி தலை மேல் வைத்து கொண்டாட பட்ட பெருமை .
அஸ்துதே -உனக்கும் உன்னை சேர்ந்தவருக்கும் கொடுத்தேன்-அருளினானே அரங்கனும் .
நரகில் வீழ்வார்/மூர்கர் வார்த்தை கூட
தாழ்வாக பேசி கொண்டு இருந்தார்கள்
பிராமணர் இல்லை/தமிழ்/வாயினால் பேசலாம்/பூஜை பண்ண கூடாது
ஆச்சார்யா ஹிருதயம் பிறந்து நிர்வகித்தார்
ஸ்திரீ தர்மம்-வீட்டுக்கு விலக்கி விபத்துபோல் -வைக்க வேண்டும்
மனசில் கொண்டு வெடித்தார் -நரகில் வீழ்வார்கள்
சென்று அணுக கூடி திரி -அவர்கள் பக்கம்
வியாக்யானம்-அருளி செயல் -அருள் பெற்ற நாதா முனி முதலான நம் தேசிகர்
ஆச்சர்யரை குறிக்க வந்த பதம்-தேசிகர்
நம் தேசிகர் –
ஓராண் வழியாக வந்த அருளிசெயல் விடாக்யானம்- கூட
ஆசை உடையோர்க்கு எல்லாம் -அருளி செயல்
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-எம்பெருமானார் -கேட்டு
-அருளி செயல் அர்த்தம் -பார் உலகில் -ஆசை உடையோர்க்கு கூறுவது –
74 சிம்காசனபதிகள் மூலம்-பேசி வரம்பு அறுத்தார் –
துவயம் -அர்த்தமே திரு வாய் மொழி -சார சங்கரகம்
எம்பெருமானார் தரிசனம்-நம் பெருமாள்-பேர் இட்டு -நாட்டி வைத்தார் –
வளர்த்த அந்த செயல் அறிக்கைக்க
காத்த குணவாளர்-வியாக்யானம் அருளி-
அன்று உரைத்தது -பாஷ்யகாரர் முன்பே -இன்பமுகு ஆறாயிரம்-விஷ்ணு புராணம்
ஆய்ந்து உரைத்தது -பட்டார் ஆய்ந்து நன்ஜீயருக்கு உரைத்தது ஸ்ரீ பாஷ்யம்
சொன்னது இருபத்து நாலாரியம்-ஸ்ரீ ராமாயணம்-பிரிந்ததால் ஸ்ரீ மத் இல்லை -இரண்டு மதில்
ஸ்ரீ ராமாயணம்/திரு வாய் மொழி
நன்கு உரைத்தது -ஈடு–
நம்பிள்ளை-இந்திரன் வார்த்தையும் நான் முகன் வார்த்தையும் ஈசன் வார்த்தையும் –
காசினிக்கே -நம்பூர் வரதன் வார்த்தை பொருக்கி கொடுத்தால் உலகே பரிசாக பெறுவார்
சுத பிரகாச சாயை
ஈடு-பெயர் இட்டவர் மா முனிகள் தான்
ஈடு படும் படி செய்யும்
கவசம் போல் ரசிக்கும்
நிஷேப ரஷை /பாஞ்ச இதர /சஞ்சரித்த -தேசிகன்-இடை அடி ஒட்டி
சார அர்த்தம்-சார ஆசார விவேகம் அறிந்து சார தமம் காட்டும் ஈடு
9 -9 -2 பாண்டவர்களுக்காக உடம்புக்கு ஈடு இடாதே எதிரி அம்புக்கு முகம் காட்டிய இந் நீர்மை
கவசம் அர்த்தம்
புறம் புள்ளார் -இடம் காக்க -ஓராண் வழியாக இட்டு ரஷித்தார்
ஈட்டு பெருக்கர் ஈடு பிரவர்தகர் -மா முனிகள்-
உபதேச மார்க்கம் சிரம் மேல் கொண்டு தனியன்பெற்ற பெருமை –
ஸ்ரீ வசன பூஷணம் 7 பாசுரங்கள் அருளி .
சரம பர்வம்-ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்-
தெருள் மா தேசிகனை சேர்ந்து -எம்பெருமானாரை-உடையவரை சேர்வோம்-பலன் சொல்லி நிகமிக்கிறார்
நாளும் சிந்திப்பார் -எந்தை எதிராசன் இந் அருளுக்கு இலக்கு ஆகி –
அமானவனும் நம்மை கரத்தால் தீண்டல் கடன்-சேர்ப்பார் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம்- இராமானுச நூற்றந்தாதி-சாரம் ..

December 11, 2011

ஸ்ரீ பெரிய கோவில் நம்பி-திரு அரங்கத்து அமுதனார்

மூன்று சாத்து முறை பாடல்கள் – ஸ்ரீ கூரத் ஆழ்வான் நியமனம் படி –
ஸ்வாமி தானே செவிசாய்த்து அருளி –அமுதன் -சாத்தினார் –
வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளாய் –
ராமாநுஜார்ய திவ்ய சரிதை-மேல் நாட்டுக்கு எழுந்து அருளி திரும்பி வந்த
வையம்- மா மறை போய் என்பர் ஐயன் உரைத்த தமிழ் யார் அறிவார்  -எம்பெருமானார்
வியாக்யானம் செய்ய சொல்லி வளர்த்த தாய் —
வையத்து ஊன்று கோல் ஐயன் மூன்று கோல்
ஐயன்-ஆழ்வாருக்கு -பெரியன் என்றும் திரு நாமம் –
சேராதவரை சித்திப்பது அப்பொழுது ஒரு சிந்தை செய்தே -திருத்தி பணி கொண்டார் .
திரு அரங்க கலம்பகம்-பிள்ளை பெருமாள் ஐ யங்கார் -பராசர பட்டர் சிஷ்யர்  –
சித்தரை வீதி கூரத் ஆழ்வான் திரு மாளிகை-ஹஸ்தம் தோறும் உபன்யாசம் உண்டு ஸ்ரீ ரெங்கத்தில் .
தீர்த்தம் ஆடி வரும் பொழுது நித்ய அனுசந்தானம் இந்த பிரபந்தம் செய்து கொண்டே வருவார்கள் பூர்வர் .
கண் நுண் சிறுதாம்பு முதல் ஆயிரம் இறுதியில் சேர்த்ததுபோல்
இதை இறுதியில் சேர்த்து அர்த்த கௌரவம்-பிரபன்ன காயத்ரி ..
உபாயம் உபேயம் -பிள்ளான்-வானமாமலை -பிரகரணம்-படி
-பட்டர் ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய்–உபாயம் மட்டுமே
இரண்டையும் காட்டும்  பாசுரம் -என்பர்
பேரு ஓன்று இல்லை உன் திரு அடி தவிர -அதை அடைய வழியும் உன் திரு அடி- இதிலும் உண்டு
ஆழ்வான் சம்பந்தம் -சரண் கூடிய பின் -எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
துதிக்க யோக்யதை இல்லை என்று நினைத்து இருந்த அமுதனார்-
ஆழ்வான் சம்பந்தத்தால்-வாசா மனோகரம்   -மொழியை கடக்கும் பெரும் புகழ்
-கல்வி செல்வம் குளம் -முக்குறும்பு இன்றி -ஸ்தவம் காம்பீரம்-நிறைந்த –
நாலூரான்-தரிசனத்துக்கு தர்சனம் கொடுத்து -திரு மால் இரும் சோலை -பஞ்ச ஸ்தவம் அருளி –
வரதன் இடம் பிரார்த்திக்க சொல்ல -நாலூரனுக்கும் பேரு பிரார்த்தித்து
-பெருமாள்-ராவணனை இன்று போய் நாளை வா -போல் எதில் சேர்க்கும் குணம்-அதி மானுஷ ஸ்தவம் –
பெருமாளையும் விஞ்சி-காட்டிய ஆத்மா குணம்
பழ அடியார் முன்பு அருளிய-அடியார் முன்பு பலர் இருக்க- என்னை நியமித்த –
ஐதீகம்-பெரிய நம்பி -சுத்தி நாம் வலம் செய்ய துயர் கடியும் -தாள தாமரை –
நான் போகும் பொழுது இவர் பின் போவதா என்ற எண்ணம் இன்றி கூட வர வேண்டும்
ஆத்மா குணம் பரி பூர்ணம் நிறைந்த ஆழ்வானை நியமித்தார்
வால்மீகி போல்வார் இருக்க ஆழ்வாரை நியமித்து திரு வாய் மொழி அருள வைத்தது போல் ..
வானவர் எதிர் கொள்ள- சூழ் விசும்பு-சடாரி சேவை அங்கும்-ஆழ்வான் -எம்பெருமானார் முன்பே
பரம பதம் எழுந்து அருளாமல்-தானே -முன்பு சென்று அங்கும் அவரை வர வேற்க -கேட்டு கொண்டார் .
உமக்கும் உம்முடைய சம்பந்தம் உடையவருக்கும் மேல் வீடு தந்தோம் –
அபய ஹஸ்தம்-திரு கை சிறப்பு -அருளி-எம்பெருமானாரும் தனக்கும் -உண்டே –
திரு கோஷ்டியூர் நம்பி அபசாரம் பட்டாலும் கிட்டுமே என்று -துள்ளி குதித்தாராம்
எம்பார்-ஸ்லோகம் இது பற்றி அருளி இருக்கிறார்-
திரு முடி சம்பந்தம் திரு அடி சம்பந்தம் மூலம் அனைவருக்கும் உத்தாரகர் –அவரே
ஆழ்வான் சம்பந்தத்தால் என்று நினைத்த பெருமை
இன்று போய் நாளை வா எனும் இறைவனும்
என் ஆழ்வானுக்கு நேர் ஒவ்வா —
நாட்டிய நீச சமயங்கள் -மாண்டன –
சிங்கம் குகை இருந்தது அறிந்து -இவர் இயல்பு கண்டே மாண்டன –
நாரணனை காட்டிய வேதம் களிப்புற்றது –
அரு சமய செடி அதனை அடி அறுத்தான் வாழியே
வியாக்யானம் அருளி செய்ய வைத்து -பிள்ளான் மூலம்
வாட்டமிலா வன் தமிழ் மறை வாழ வைத்தார்  .
கர்ம காண்டம் ஞான காண்டம்-இரண்டும் ஓன்று -சித்தாந்தம் செய்து -அருளினார் .
திரு ஆராதனா க்ரமம் பூர்வ பாகம்
ஸ்வரூபத்தி சொல்லும் உத்தர பாகம்
வேதம் முழுவதும் அவனையே
வேர்தார்தம் அறுதி இடுவது சுருதி இதிகாசங்களால்.
பேத அபேத ஸ்ருதிகள் மட்டும்கொள்ளாமல் கடக சுருதி கொண்டு ஒருங்க விட்டு
ஜகதாச்சர்யன்-அவனை காட்டி கொடுத்து அனைவரையும் உஜ்ஜீவிக்க அருளி –
ஆச்சர்யத்வம்-உத்தாரகர் -ஈஸ்வரனும் ஆசை பட்டு
குரு பரம்பரை-தேர் தட்டில் இடம் பிடித்தான் .
பிரதி உபகாரம்-விபூதி சதுஷ்ட்டியும் -இரண்டு பர பிரமமும் வேண்டும் .
நம் பிள்ளை-ஆல மரம் மோஷம் -காஞ்சியில் –
மா முனிகள் புளிய மரம் -மோஷம்  .
மன்னிய யோனிகள்–மாதவன்-அப்பொழுதே -நாரணற்கு ஆயினரே
என் நின்ற யோனியுமாய் பிறந்தும்-அவனால் சாதிக்க முடியாததை சாதித்தார் .
அண்ணல் ராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே -ஆத்மா சரீரம்-சரீரி -அறிந்து கொண்டு –
அனைத்து இல்லத்தாரும் -அறிந்து
இந்த பெண் பிள்ளை பிறந்த பின்பு பஞ்ச லஷம் பெண்களும் அறிந்தார்
எம்பெருமானார் நாரணற்கு ஆள் காட்டியது போல் -திரு பாவை –
மற்றவர்களும் அங்கீகரிக்க- விவேகானந்தர் -life of raamaanujar
ஞானம் பிரதானம் சங்கரர் -மோஷம் அனைவர்க்கும் இல்லை -இவர் சித்தாந்தம்
ராமானுஜர் பக்தி உணர்ச்சி இடம் பிராந்திய மொழியில் ஸ்தோத்ரம் செய்யலாம்
மோஷம் அனைவருக்கும்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
வைதிக மார்கத்தில் கொண்டு வர முயன்று வெற்றி கண்டவர் ராமானுஜர் .
சர்வ சூன்ய வாதம்-ஊன்றி இருந்த காலம் இவர் அவதாரம் பொழுது -மறை தாழ்ந்து
கலி புருஷன்-கூட்டணி-கலியே ஆள -வந்து அளித்தவர்
தானே -பிரார்த்திக்காமல் -அவதரித்து -அளித்தவன் காண்மின்
சூடி கொடுத்த தோல் அருளால் வாழ்கின்ற வள்ளல் மா முனியே
மௌலி சூடி-தலை முழுவதும் தாங்கி -கொண்டானாம் அரங்கன்
வாழ்கின்ற வள்ளல்- நிகழ் காலம்-முக்காலத்திலும் இருக்கிறவர் –
பங்குனி உத்தரம்-நமக்கும் சேர்ந்து வரம் வாங்கி அருளி .-
வாழ்கின்ற வள்ளல்- நமக்கும் அருளி –
பதி தோறும் புக்கு நிற்கும் கொண்டல் ராமானுஜன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம் -திரு வாய் மொழி– சாரம் ..

December 11, 2011
 ஸ்ரீ பகவத் விஷயம்
திரு வாய் மொழி -சொல்லும் பொருளும் இணைந்து -காவியம் .
குருவி தலையில் பனம் காய் போல்
அருளி செயல் அரங்கத்தில் அரங்கன் அருளி செயல் விண்ணப்பம்
ஆயிரமும் மதிள் அரங்கர் வன் புகழ் மேல்
ஈந்த இவை பத்தும் –
ஸ்ரீ பண்டார விநியோகம் போல் –
சடரி புர -ஏகைவ -திவ்ய கவி
ஏற்கும் பெரும் புகழ்-ஏற்கும் புகழ் சொல்ல வல்லார்க்கு -அத்யாபக சுவாமிகளை கொண்டாடி –
தீவில் சிறந்த திரு மாலுக்கு -ஏற்ற பாண்டியன் சடகோபன்
உண்டோ வைகாசி விசாகத்து ஒப்பு -ஆழ்வார்/திரு வாய் மொழி /திரு குருகூர் ஒப்பு இல்லை
குருகூர் புனிதன் இன் கவி
வேதத்தின் முன் செல்க
விரிஞ்சன் முன் செல்வன்
எங்கள் குருகூர் கவி பாதம் முன் போகான் –
மறை பாற் கடலை -கடைந்து -பிள்ளை பெருமாள் ஐ யங்கார்
அங்கு விஷம் வந்தது முதலில் -பந்தகமாக அமிர்தம் வந்தது அங்கு –
இதை புசித்து மோஷம் பெறமுடியாதே
நா வீறு உடையான்-இவர் – பக்தாம்ருதம் இது –
முடிப்பான் சொன்ன ஆயிரத்து -மோஷம் கொடுக்குமே –
அன்பர் ஈட்டம் -கண்டு -சென்ம விடாய்-பெற ..
இரும் தமிழ் நூல் புலவன்-கலியன்-சொல்லி கொள்கிறார்
பரந்த தமிழ் நூல்களில் -இலக்கியமாய் அமைந்த –
திரு பாவை ஜீயர்
திரு நெடும் தண்டக கவி-பட்டர்
திரு வாய் மொழி புலவன்-கலியன்
திரு வாட்டாற்று-என் நெஞ்சத்து உள் இருந்து இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -தாமே காட்டி –
இரும் தமிழ் நூல் =திரு வாய் மொழி
பண்ணார் பாடல்–இன் கவிகள் -திரு வாய் மொழி தானால் என்னை பாட -இவருடைய முக்கோட்டை  இருந்த படி -திரு மால் இரும் சோலை –
மூக கோடம்-மூகாம்பிகை கோவில்-கவிதா சாமர்த்தியம் வர மூகாம்பிகை வணங்கி
ஸ்ரீ ஜெயந்தி ஸ்ரீ ராம நவமி-தேவ பெருமாள் புறப்பாடு -போல் -உத்சவம் கண்டு அருளுவார் .
யானால் தன்னை தான் பாட –
கேழில் ஆயிரம்/அவாவில் அந்தாதி -திரு வாய் மொழி –
நாயனார் அருளிய ஆச்சர்ய ஹிருதயம்-ஒப்பட்ட்ற பிரபந்தம்
ஆராய்ச்சி நூல்-தாத்பர்யம் காட்டி அருள –
மந்திர விதி அனுசந்தானங்களுடன் சேர்த்தி -இவர் பிரபந்தங்கள்
இயற்பா மூன்றும் வேத த்ரயம் போல்
பண்ணார் பாடல்-பண்புரை இசை கோள் வேதம்-
ருக் சாமம் பரந்தது போல் -திரு விருத்தம் -திரு வாய் மொழி -சாம வேத சாரம் .
ரகஸ்ய த்ரய சம்ப்ரதாயம் நமது -குரு பரம்பரை-ரகஸ்ய த்ரயம் அவலம்பித்து
நேரே ஆசார்யன் எனபது சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்தவரை
நர நாராயணன் /விஷ்ணு லோகம் துவயம் /சரம ஸ்லோகம்
நரன்/பிராட்டி/அர்ஜுனன்-சொல்ல வில்லை
பெரிய பெருமாள்- பெரிய பிராட்டியார் -விஷ்வக் சேனர் -நம் ஆழ்வார் –
இத்தை ஒழிய கால ஷேபம் பண்ணி அறியாதவர்கள் நம் பூர்வர் ..
அனைத்து அருளி செயலும் ரகஸ்ய த்ரய அர்த்தம் தானே ..
ஓம் நாம திரு விருத்தம்
நாராயண -திரு ஆஸ்ர்யம்
பெரிய திரு அந்தாதி சரம ஸ்லோகம்
த்வய அர்த்தம் தீர்க்க சரணாகதி சார சங்கரகம் திரு வாய் மொழி சொல்லும்
ஸ்ரீ ய பதித்வம்-முதல் பத்தால் காட்ட பட்டது
இது ஒரு பிரக்ரியை
அர்த்த பஞ்சகம்-
மகா பிரவேசம்-பெரிய நுழை வாயில் மூன்று ஸ்ரீ யபதி கற்க வேண்டும் .-
ஐந்தையும் சொல்ல வந்தன –
மிக்க இறை நிலையும் -குருகையோர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
வேத வேதார்த்த வேதினர் காட்டும் அர்த்தம்
விசத/விசத  தர/விசத  தமமாக -மிக்க மிக்க தெளிவாக அறிந்தவர் ஆழ்வார்
மூன்றில் சுருக்கிய ஐந்தை-மூன்று பிரபந்தங்களில் -காட்டிய அர்த்த பஞ்சகம்
பர -உயர் திண் அணை ஓன்று -அவன் ஸ்வரூபம் சொல்லும்
தத்வ பரம்-உபாசன பரம் -இரண்டு வகை சாஸ்திரம்
தத்வம் அடைய மார்க்கம் காட்டும் இவை
உயர்வற -தத்வ பரம் -தத்வ ஞானம் வேண்டும் -அனுஷ்டானமும் வேண்டும்
வீடு முன் முற்றவும் -உபாசன பரம்-
இரண்டும் வேத வியாசர் -பிரம சூத்திரம் சொல்லும் –
காரண வஸ்துவை தியானம் பண்ணு -பிரமம் அது தானே –
மேலானது சித் அசித் விலஷனம் -உயர்வற உயர்நலம்
உயர்வே பரன் படியை உள்ளதே எல்லாம் தான் கண்டு –
கடல் பரப்பை காண்பது போல் கண்டார் ஆழ்வார்
உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
உளன் சுடர் மிகு சுருதியுள் –
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –
வாழ்விக்கும் மாறன் சொல்-பரத்வே பரம்
அடுத்து -திண்ணன் வீடு-நம் கண்ணன் அல்லது இல்லை கண்ணே
பொய்கை-உபய விபூதி யுக்தன் சொல்ல
பூதம்-நாரணற்கு-
பேய் -திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் -ஸ்ரீ யபதி
இந்த மூன்றையும் அறிந்து கொண்டால் போதும் .
அன்வய முகத்தாலே இவர்கள் காட்ட
அவனே பரதத்வம்-எதிரேக முகத்தால் திரு மங்கை ஆழ்வார்
நம் கண்ணன் அல்லல் இல்லை கண்
அவதாரத்த பரத்வம்-திண்ணன் வீடு -விபவே பரத்வம்
மனுஷ்ய திர்யக்-கண்ணுக்கு இலக்காகும் படி-
கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே
மகன்-பரதந்த்ரன்-தானே -பெருமை குன்றுமா
அவதாரச்ய ஞானம் -கண்ணன் காட்டி -கீதை
கள்வா-சிவன் வார்த்தை -ஈச்வரதுவதுக்கு அனுகுணமாக வரம் கேட்க வேண்டும் –
பெருமை குன்றாமல் பிறக்கிறான்-
அவதாரத்திலும் பரமன் –
கள்வா தீர்த்தன் என்று வசன –
ருக்மிணி தேவி உடன் -15 வருஷம் -பிள்ளை வேண்டி-கண்டாகர்ணன் வழியாக போனான் –
மம கண்டா கர்ண -நமஸ்காரம்-நாம கடபடாயச -இரண்டு வார்த்தை வர வில்லை
கேட்டு வழக்கம்  இல்லையே -அதனால் வாய் துடிக்கும் –
கள்வா எம்மையும் -ஸ்வாமி நீ –ஹரிவம்ச கதை
கேசவ நாமம் க பிரமன் ச ஈசன் -அதனால் கேசவ
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் பாதம் -அடுத்து
மோஷ பிரதன் பராத்பரன்-அணைவது -காட்டும் -இருவர் அவர் முதல்-சேஷசயித்வம்-
படுக்கையில்-படுத்து -திரு மால்- பூம் பாவை ஆகம் புணர்வது -பரம் பொருள் காட்டும்
குழந்தைகள் உண்டே இருவர் அவர் முதலும் அவனே -வீடு முதல் கொடுப்பான்
அர்ச்சை-அர்ச்சகர் பராதீனன்-இருக்கிறானே-அவனும் பரமன் காட்டும் ஒன்றும் –
அதிலும் ஸ்வாமித்வம்-உண்டே -பரதந்த்ரன்-அனைவருக்கும் -அனைவரும் சேவிக்க வந்து இருக்கிறேன் –
குடில் கட்டி பயிர் நோக்கும் க்ருஷிகன் போலே -இருக்கிறான்-
நிலத்தை குறித்து ஸ்வாமித்வம் -விட்டு அகலாது
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்
உபதேச பத்து –
ஆழ்வார் திரு நகரி- நின்ற ஆதி  பிரான் நிற்க -மற்றை தெய்வம் நாடுதிரோ
குன்றம் போல் மணி மாட நீடு-
திரு குருகூர் அதனுள் குன்றம் போல் பொலிந்து நிற்க-மலை போல் நிற்க
எது மேலானது -கேள்வி போல
அக்னி பெருமை சொல் -வாயு வைபவம் சொல்-இருக்கும்
கேள்வி பொதுவில் பதில்
இலிங்கத்து இட்ட புராணம் -அவை
கபால மோஷ சரித்ரம் கண்டு கொள்மின்-உங்கள் கதை புராணம் பார்த்து கொள்ளும் என்று வியாக்யானம் ..
பர ஸ்வரூபம் அறிந்து -கொண்டு
ஸ்வ ஸ்வரூபம்
பயில்  சேஷத்வ காஷ்டை -சொல்ல -பகவத் ஏகசெஷா பூதன்-நிலை நிற்க பாகவத சேஷத்வம் வேண்டும்.
பத்னி சகோதரன் வர -முகம் கொடுத்து பேசாத பர்தா -ஆசை இல்லை-சொல்வாளே –
அது போல் அடியார் வரை ஆசை கொள்ள வேண்டும்-காஷ்டை நிலம்
பயிலும் திரு உடையார்-எம்மை ஆளும் பரமரே
புறம்பான  எதுவும் வேண்டாம்–ஏராளும் இறையோனும்-திசை முகனும் -மாறாளன் -மணிமாமைகுறைவிலமே
ந தேகம் ந பிராணன்–மது பட்ட பாடு படுவோம் -ஆத்மா ஆத்மீயங்கள் த்யாஜ்யம்
அடுத்து கண்கள் சிவந்து -ஆத்மா ஸ்வரூபம் காட்டும்-தேக இந்திரிய பிராண மனசு விலஷனம்
அவனுக்கு அனந்யார்க்க சேஷம்-பகவத் ஏக -அவனுக்கே அடிமை-உ காரம் காட்டும் அர்த்தம் –
வேறு யாருக்கும் பூரணமான தகுதி இல்லை
அன்னியருக்கு ஆகாது அவனுக்கே
அகம்காரம் மமகாரம் வீடுமுன் /அசேவ்ய சேவை கூடாது -சொன்னால் விரோதம் இது
ஒரு நாயகம் ஐஸ்வர்யம் கைவல்யாதிகள் த்யாஜ்யம்
கொண்ட பெண்டிர் ஆபாச பந்துகள் விரோதி
உபாயம்-வலி-நோற்ற நாலிலும் –
நோற்ற நோன்பு கை முதல் இல்லை -சொல்லி வானமா மலை
களைவாய் -அநந்ய கதித்வம்
அடுத்து மானே நோக்கு திரு வல்ல வாழ பக்தி பாரவச்யம்- உடம்பு உருகி-
பிறந்து உலகம்-சீலத்து குணம்-விபவத்தில் சரண்
பலன்-அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம்
தனக்கே ஆக -திரு முகம் பார்க்காமல் எனக்கே ஆள செய்
எக் காலத்திலும் தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொண்ட சிறப்பே
ஒழிவில் காலம்-உடனாய் மன்னி –
பாகவதர் -நெடுமாற்கு -அடியார் அடியை கூடும் இது அல்லால்
உந்தன் திரு உள்ளம்-வேய் –
ஐந்து அர்த்தம்
இரண்டு அர்த்தம் உபாயம் உபயம்-மற்றவை அங்கம்
அருளினான்-வீடு பெற்றேன்-இரண்டும்
பிராப்யம்- முக்த லஷண விருத்தி ஒன்றே -சொல்ல வந்தது
பக்தாஞ்சலி- முத்தரை ஹ்ருஷ்டாக நம சொல்லி வணங்கி சந்தோஷித்து பேசி கொண்டு ஸ்தோத்ரம்  பண்ணி கொண்டு
தொழுது ஆரம்பம்
தொண்டு கழித்து
அந்தி தொழும் சொல்லும் பெற்றேன்
பிரபந்த சாரம்..
மயர்வற வீடு பெற்ற -அஞாக்ன நிவ்ருத்தி ஞான பூர்த்தி -பிரசாதம் சொல்ல வந்த
பிரபந்த ஐ காக்ய அர்த்தம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம் -பெரிய திரு மடல்- சாரம் ..

December 11, 2011
 திரு மால் கவிஜன்
சின்ன அஸ்தரம் சிறிய திரு மடல்
பெரிய அஸ்தரம் பெரிய திரு மடல்
தெளியாத மறை நிலைகள் தெளிகின்றோமே
சிறந்த யக்ஜம் -இது –
சந்நிவேசம்-சிறப்பு -நம் பிள்ளை சந்நிதி -வசந்த காலம்-
நின்னையே தான் வேண்டி -திரு வல்லி கேணி கண்டேனே –
TSR
பேய் ஆழ்வார் சந்நிதி-அருகில்-அனைத்தும் மதுரம் –
நோய் பட்டு ஒழிந்தேன் ஆழ்வார் வாய் பட்டு
அருளி செயல்- எங்கனே சொல்லிலும் இன்பம்  பயக்குமே
அருளி  இச் செயல் –
நம் பெருமாள் -நம் பாணன்-தேசிகன்-நம் ஜீயர் -நம் பிள்ளை –
பெரிய பெருமாள் பெரிய திரு அடி பெரியதிரு மடல்
பெரியவனை மாயவனை -இளங்கோ அடிகள்
விரி கமல உந்தி உடையவனை ‘காணா கண் என்ன கண்ணே –
மடலூர்தல்- சத்யாக்ரகம் போல் -கீரி பாம்பு சண்டைபோல் -மடலூர வில்லை
பயமூட்டுவது தான்
சீர் கலந்த சொல் நினைந்தது அருளும் உக்தி
திரு வி கா -திரு மால் அருள் வேட்டல்-கவிதை அழகு
கடலாழி வலம் வந்து கை தொழுவேன்
கோவில் கமல முகம் கண்டு
படலாடும் அரசியலால் பக்தி மனம் போச்சு
பரமா நின் அரசியலை பரப்ப
மடலாடும் பாவையர் போல் இருக்க வேண்டும்
கடல் அன்ன காமம் -வந்தாலும் மடலூரார் பெண்கள்
நாண் -வில்-ஆசைக்கு கட்டுபடுத்த நாணம் -அங்குசம்
பயிர்ப்பு-தொட்டால் சுருங்கி போல் உணர்வு –
பிள்ளை தமிழ்-பெரிய ஆழ்வார்
மடலை-நாடும் நகரமும் நன்கு அறிய செய்தவர்
ஆரா அமுதே -பிறப்பிலியை அந்தணனை -விசேஷம் சேர்த்து இங்கே அருளி –
பிள்ளை நறையூரார்-தனியன்-எத் பாவம் -அவர் போல்- மன்னும் மடலூர்வன் –
பெண்மை ஏறிட்டு கொண்டு அருளுகிறார்
இவர் மடலூர அவர் நறையூரர்-

 நறை-தேன்
தேனில் இனிய பிரான் –
மன்னிய -நிலை பெற்ற -முதல் அர்த்தம்-
மங்கள வார்த்தை -வியாக்யானம்
பல் பொறி சேர் –ஆயிர வாய் வாள் அரவின்-
மகர குண்டலங்கள் வில் வீச –
நாஸ்திக வாதம்-ஜாபாலி வார்த்தை போல் –
உலகம் யாவையும் தாம் உள ஆக்கை -சத்தை பெற வைக்க –
பாத ஸ்பர்சம்-பர்வதம்-ஸ்தானம் போல்-
பகவத் காமம்- உண்ணும் சோறு எல்லாம் கண்ணனுக்கே ஆவது காமம்
தென்னுயர் பொற்பும்  தெய்வ வட வேம்கடமும்
மேகம்-கூந்தல் போல் /மலைகள் ஸ்தானம் /
பரம் சென்று சேர் வேம்கடம்-
குன்று எடுத்து கோகுலத்தில் -குன்றாக இருந்ததாம் கை பட்டதும் மலை
குன்றி இருந்ததாம் –ஸ்பர்சம் பட்டதும் -இல்லை எனக்கு எதிர் -ஆனதாம்
கண்ணன் அடி இணை எனக்கு காட்டும் வெற்பு
அளவிட்ட தாமரை போல் இன்றி-
தாமரை காடு-உந்தி தாமரை-மன்னிய தாமரை –
பொய்கையில்-பூ மலர -அந்த பூவிலே பொய்கை மலர்ந்தது
மன்னிய தாமரை –
பூ மன்னு-மன்னு புகழ் கோசலை தன் –
சிறிய-பாரோர் சொலப்பட்ட மூன்று -இங்கு நான்கு
பேதை பாலகன் அது ஆகும்-பெயரை கூட சொல்லாமல் –
இங்கு நான்கை சொல்லி விலக்குகிறார் –
தொன் நெறியை வேண்டுவார் –
ஆறாம் பொருள்
காமம்-இரண்டாக பிரித்து
தாமரை கண்ணன் உலகு விட –
தாம்
பிர பந்தம் விட்டால் தான் பிரபந்தம் புரியும்
சாக்கடை இருந்து சந்தானம் பூசி கொள்ள
மெய்ய்னில் வையம் தன்னை கூடாமல்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் மாலுக்கு
மாலை பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -திரு மால்
கண்ணன் இல்லாத பொழுது நெய் உண்ணோம் பால் உண்ணோம்
சூடகம் தோள் வளையே பின்பு
வட நெறியே வேண்டினோம் –
குல தர்ம பத்னி-ஆறு-
ஆதி மந்தி-இருந்தால் சொர்க்கம்-நின் பிரிவினும் சுடுமோ காடு
அன்றில் பறவை-குரலுக்கும் வாடாதார் –
மாடு மணி ஓசை-கிருஷ்ண கதாம்ருதம்-
எதி தர்மம் -துறவி -ஆவதும் மடலூர்வது போல்
ஒல்லை நீ -த்வரை வேண்டும் –
ஒரு நால் செல்லலிலும் பல நாள் செல்லிலும் -முதல் நாள் போல் –
மின்னுருவில்–தன்னுடைய தாதை-கம்பன்-
பணியால் அரசு ஒழிந்து –
வெம் பரல்-வெய்யில் பரத்த -பஞ்சடியால்- அன்ன நடையால் பின் சென்றாள் –
உடனாய் மன்னி–
வேகவதி -காதலன் காணாமல்-சண்டை களம் சென்று பலாத்காரம்
ஆண்டாள் தனியன்
உய்த்திடுமின் -வீசுமின் –
புளியம் பழம்-ஆடும்-பழுத்தால் உறவை விடும்
மற்று ஒன்றும் வேண்டாம்-
வென்றி தனஞ்சயன்-
யோகேஸ்வரன் கிருஷ்ணன் வில்லாளி விஜயன் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்கும் –
தீர்த்த யாத்ரை போகும் பொழுது -தவ வேஷம்-சித்திராங்கதை உளுபி -நாக பெண் –பொன் வரை ஆகம் தழுவி –
உஷை-சித்ரலேகை-கதை-அநிருத்தன் -நாண் விரும்பும் கண்ணனின் பேரன்
தேவாதி தேவனை -சென்று நாம் -ஆவா என்று ஆராய்ந்து -இதுவும் மடலூர்வது தானே .
கோவில் -ஆவியை -தேவியை பிரிந்த பின்பு
ஓவியத்தில் எழுத ஒண்ணா-திட்டு பொழுதும் சந்திரகாந்தன் அழகு -உள்ளம் கவர் கள்வன் .
கால் ஆளும் ஆழ்வார்-அவனுக்கு  ஆளப்பட்டு ஒழிந்தேன் –
மலர் அரையன் பொன் பாவை-சைவர் பழக்கம்-காட்டுகிறார்
உமையனும் -ஜடா பாரம் தரித்து -ருத்ர தாண்டவம் ஆடின –
சுழல சுழன்று ஆடும் கூத்தன்-பித்தா பிறை சூடி- ருத்ர தாண்டவம் ஆடினாலும் அணைந்தாள்-
பன்னி உரைக்கில் பாரதமாம் –
நோக்கினேன்-யான் நோக்கும் காலை காலாலே நிலத்திலே கோலம் போட்டு -நிலம் நோக்கும்
நோக்காக்கால் தான் நோக்கி -திரு வள்ளுவர்
அன்னலும் நோக்கினால் அவளும் நோக்கினால்-கம்பர்
உணர்வும் ஒன்றிட –
கரும் கடல் பள்ளியில் -கலவி நீங்கி போய் -ஆதி அம் சோதியை அங்கு வைத்து
கரதலமும் —காடோர்-தாமரை காடு –
வீநாணும்-பிராட்டிக்கு பிரகாரம்-அரை நாண் -மதிள் போல
சேர்த்தியில் அனுபவம் வேண்டேன் மனை வாழ்க்கை-திரு விண்ணகர் அனுபவம்-முதலில்
நுண்ணுய வஞ்சி கொடி நின்றது போல் –
விருப்புற்று கேட்கின்றேன்-முதல் நேயர் விருப்பம் –
இன் இளம் பூம் தென்றல்-ஆழ்வாரின் அரும் தமிழில் அழுந்தி இருக்கும் அழகு -திரு வி க
நெஞ்சே இலக்காகா –
பொறையாகி-பாரம்-
நீள் இரவு-கல்பம் போல் –
நம்மை பிடிக்க அர்ச்சை யாகிய மடல்- ஊரை வளைத்து நம்மை பிடிக்க முயல்கிறான்
நம் பிள்ளைக்கு-ஓர் அரி -அத்வதீயம் -நலன் உடை ஒருவனை –
வள்ளலை கூத்தனை வீரனை-தன் உலகம் ஆக்குவித்த தாடாளன் –
தாமரையால்
போர் விடையை –
செம்பவள குன்றனை
வயலாளி –என்னுடைய இன் அமுதை -இயம் சீதா -மம சுதா -போல்
இன் அமுதே ராகவனே தாலேலோ
மன்னும் அரங்கத்து மா மணியை- ய காந்தாமணி தேவ சிகாமணி கோபால சூடாமணி
பேரில் பிறப்பிலியை -திரு பேர் நகர் –
எது பெயர் சொல் என்றேன் ஒன்றும் இல்லை கண்ணன் என்பார் ஊரில் உள்ளோர் என்னை
ஆனா பொழுதுக்கு அளவு இல்லை பாரதி
கடல் கிடந்த தோழா மணி சுடரைஎன் மனத்து மாலை
–அன்ன வயல் தேர் அழுந்தூர்
சித்ரா கூட என் செல்வன்
வேம்கடத்து வித்தகன்-மால் இரும் சோலை மணாளனை
உறக்கத்தை-இதுவே பெயர்
மன்னு மறை நான்கும் ஆனானை
தமிழை -தெய்வம்- வட மொழியை
கண்ணனை கண்ண புரத்தானை
கண்டு ஆங்கு கை தொழுது
தாரானேல்- அருள் முதலில்- சீறி அருளாதே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
தன் அடியார் முன்பும்-சேரியிலும் -அறிவிப்பன் –
சேரி களவின்–கலியன்-களவு போல் இல்லை
மின்னிடையார் ஆய்ச்சி -துன்னு படல்-கீத்து கதவு -திறந்து புக்கு –
உள்ளே போய் கதவை மூடி கொள்வான்
பொன் -நீ உனக்காகா
தன் வயிறார விழுங்க
பெரும் சோறை நீயே உண்டு
நவநீத நாட்டியம்-ஏலாப் பொய்கள் உரைப்பானை
அரக்கர் பாவை-தன்னை நயந்தாளை –
பின் ஒருவர் பாரார் அயல் என்று மூக்கு அறுத்தான் -நம் இடமே இருந்து ஒழிய
தருணு ரூப சம்பனவ் -வால்மீகி
வரிவில் -மன்மதன் -தர்ம சீலர் -கம்பன்
தாடகையை மா முநிக்காக -பழியை பார்ப்பான் தலையில் போட்டு-
மற்று இவை -பல
பெண்ணை மடல்-பனை மரம் –
கலியன் ஒலி கேட்டு வலி மிக்க சீயம்
தன் அருளும் ஆகமும் தாரானால்-கம்பர்
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -சிறிய திரு மடல் -சாரம் ..

December 10, 2011
வாழி பரகாலன் –
ஆழ்வார்கள் சித்தாந்தம்-அவனை பற்றியே சிந்தனையே நல்ல நாள்கள் .
நம் பிள்ளை திரு ஓலக்கத்திலே செய்ய பெற்ற பாக்கியம்-
பயிற்று வைத்த மட கிளி போல்
திரு மால் அடியார்கள் நிறைந்த –
மால் வியாமோகம் உடையவன்-பிராட்டியார் உடனும் நம் போல்வார் இடமும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்
கண்=ரஷகன்
கண்ணாவான்-வின்னோர்க்கும் மன்னோர்க்கும்  -நிர்வாககன்
மாலை கண் என்று இருப்பார்க்கு -விஷயாந்தாரங்களில் -மாலை கண் தோற்றாது இறே-ஈடு
சஷூர் இந்திரியம்  -இழந்து மாலை கண் வியாதி –
வாசவதத்தை -பக்தராஜன்-மடல்- நடந்து வெற்றி -கண்டார்கள் ..
த்வரை-கொண்டு பெண் உடை உடுத்தி -அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நாம் யார்
நைச்ய பாவனை –
நல்லை நன் தோழி –சிறு மானிடரவர் -நாம் செய்வது என் -பூமிபிராட்டியும் அருள
நாகணை மிசை -பராத்பரன் -சர்வேஸ்வர ஈஸ்வர ஈஸ்வரன்-செல்வர்-உபய விபூதி நாதன் –
சதுர முக -தானாக -தோழி/தாய்/மகள் -உபாயம் பலம் த்வரை –
வேகம்-ஆற்றாமை உந்த -என்று நான் காண்பேன் –
பெரிய திருமொழியில் கோடிட்டு காட்டினார் திரு புல்லாணி பாசுரம் மடல் இடுவதாக –
புல்லாணி கை தொழுதேன் வர காணேனே –
காற்றையும் கழியையும் -நெஞ்சம் கோள் பட்டாயே -கட்டி அழுதது போல்
பனம் தோப்பு வழியே வர -மடல் எடுக்க -மட்டை-உண்டே
அன்றில் பறவை குடி புக-பாதகம் காமுகருக்கு –
தார்மிகராய் இருப்பார்-தண்ணீர் பந்தல் வைத்து -பகல் கொள்ளை காரன் -தீவட்டி –
பறிப்பது போல் -அன்றில் பறவை தொனி -இருந்ததாம் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
கண்ணனுக்கே ஆம் அது காமம்
பகவத் விஷய சிந்தனை மனனம் -பராம் காஷ்ட்டை
சாகரம் சோஷ இஷ்யாமி-பெருமாள்-சமுத்திர ராஜன் -கோபம் ஏற் இட்டு -கொண்டானே பெருமாள் –
அது போல் பரகால நாயகி பயப்படுதுகிறாள்
இது ஒரு அபிநயம்-பிரக்ரியை –
ரகஸ்யம் சில -பிரகாசக்கிக்க வேண்டியது சதஸ்யம் –
செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் -உபதேசித்து போந்தார் உடையவர் .
மானஸ அனுபவம் மட்டும் போதாது -உன்னை கட்டி பிடித்து அணைத்து –
பூமி-காரார் வரை கொங்கை-புருஷார்த்த த்ரயம்-சொல்லி –
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று –
நில மங்கை-பூமி பிராட்டி நினைத்து –
பெரிய திரு அந்தாதி -அர்த்தம் பொதிந்து
இரண்டு எதற்கு-ஓன்று விபவ வைபவம் வர்ணித்து -சிறிய திரு மடல் –
அர்ச்சா அவதாரம்-பெரிய திரு மடல் –
சம்ச்லேஷ ரசம் ஜனித சுகம் பெறாமையால் வெறுத்து -அருளுகிறார் ..
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே-போக்யத்வம் சௌலப்யம் அர்ச்சை தானே –
மடல் எடுக்கும் பொழுதும் லோகத்தாருக்கு உபதேசம்
ருசி ஜனகத்வம் அர்ச்சையில் பரி பூர்ணம் .
தாயார்-இவளும் தண் அம் துழாய் கமழ்தல் –
நம் தெருவே குடக் கூத்து ஆடிவருகிறானே பார்க்க வா கூப்பிட -பார்த்ததும்
மோகம் அதிகரிக்க -குறி சொல்ல –
இந்திரனை தெரியுமா -பழைய கதை சொல்ல -அனுபவம் வாய்ந்த அன்னைமார்
கட்டு விச்சி -நினைத்த உடன் வர -ஆசார்யன் -ஸ்தானம் —

முழம் கால் தகர -மூக்கிலே கட்டுவது போல் தேவதாந்தர சம்பந்தம்
சொல்லும் கட்டு விச்சி இல்லை
யார் மருந்து இனி யாவர் ஆகுவார்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
முறம்-சீர்மை மணி மாணிக்கம் காட்டி கொடுத்ததால் –
ஜாடை காட்டி -அடுத்து –
பேர் ஆயிரம் உடையான் -அவனுடைய திவ்ய செஷடிதங்கள் பல உண்டே –
அதற்க்கு ஏற்ற படி-சீல பேர் வீர பேர் -தேவோ நாம சகஸ்ரவான் –
சதா பரகுணா நிஷ்ட்டை-கண்ண நீர் சுரந்து –ஆக்லாத சீத நேத்ராம்புக்கு –
உலகம் அளந்து -ஆநிரை மேய்த்து -இலங்கை பொடி பொடி ஆக்கினவன் –
அவன்கிட்டே வர வில்லையே –
பால திவ்ய லீலை-தாமோரத்வம்-அனுபவிக்கிறார் –
யசோதை -செல்வத்தில் விஞ்சி இருந்தாலும் ஆளை  விட்டு சந்தி செய்வார் உண்டோ-
யசோதை தானே கடைய -குல வழக்கம் –
உதஸ்மித் -மோர் -உதகேன ஸ்வதென-நீர் மோர் -மோர் குடம் உருட்டி-
காளிய நர்த்தன /கஜேந்திர மோஷம் விஷயம்
நாராயணா மணி வண்ணா நாகணையா -தொழும் காதல் மத களிறு –
எம்பார் வார்த்தை-மூன்று கண்டம்-திரௌபதி கஜேந்த்திரன் பிரகலாதன்-தப்பினான்
திவ்ய தேசங்கள் பேரை சொல்லி -சீரார் திரு வேம்கடமே -ஆரம்பித்து
தீர்த்த புஷ்ப சுப்ரபாதம் கைங்கர்யம்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஜீயர்கள் கைங்கர்யம் உள்ள சீர்மை –
வேம் =பாப சமூகம் கடம்=எரிக்கும் –
கிருஷ்ண குணம் இங்கே நடை மாடிக் கொண்டு இருக்கும் பொழுது அன்வயிக்க தேவர்களே வர வேண்டாமா
திரு கோவலூர் -அடுத்து -நெருக்கு உகந்த பெருமாள்-கருப்பஞ்சாறு –
மிதுனமே உத்தேயம்  -ஆங்கு அரும்பி கண்ணீர் -அன்பு அடியவர் முதல் ஆழ்வார்கள்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -வண்டினம் முரலும் சோலை-
ஆசை உண்டு பண்ணும் -திவ்ய தேசம்-அவனுக்கும் நமக்கும் –
விஸ்ரமிக்கும் திவ்ய தேசம்–பத்ரி வரை 28 திவ்ய தேசம் அருளி –
சீரார் தயிர் -சீர்மை கடைவதற்கு முன்னே இவன் எச்சில் பட்டு
கடைக்கும் பொது இவன் எச்சில் பட்டு
கிம் பூதம்-வாய் அமுதம்
கடைந்து சமைந்தால் இவன் எச்சில் படுமதே சீர்மை –
தோள்கள் உள்ளவும் கை நீட்டி –
பட்டர் நஞ்சீயர் -அறிந்த படி எங்கனே
கோவில் சாந்தை விளிம்பில் கண்டாள் போல்
வெண்ணெய் விழுங்கி -மோரார் குடம் உருட்டி-
ஆத்மா வஸ்து கொண்டு தேகம் விட்டு
சீரார் கலை அல்குல்- வஸ்த்ரதுக்கு சீர்மை-இவன் புழுதி அலைந்த பொன் மேனி சம்பந்தத்தால்
இவனுடைய பத்து மஞ்சளும் –
முற் காலத்தில் பெரிய திரு நாள் சேவித்த முதலிகள் மேலை திரு நாள் வரும்
அளவும் அவ் இரட்டையை மடித்து கொடியில் இட்டு பார்த்து
முகில் வண்ணன்-கண்டு அருள-வட்டில்-அமுது வைத்து –
ஈந்த பத்து -இவை பத்தும் -பிரித்தது போல் –

மட நெஞ்சை தூது விடுகிறாள் பரகால நாயகி
தருவானா இல்லையா தாரார் துழாய் மாலை
-சென்ற நெஞ்சு திரும்ப வில்லையே ..
இந்திரன் படிகள் படி- 98 இந்திரன் படி சொல்லும் பெரியவர் வார்த்தைகள்
முன்புத்தை ஆசார்யர்கள் நால் இரண்டு பேருக்கு மட்டும் சொல்ல
எம்பெருமானார் ருசி உடையார் எல்லாருக்கும் அருளுவார் .
கர தூஷணர் -விருத்தாந்தம் பட்டர் அழகாக அருளி நஞ்சீயர் மனசை கொள்ளை கொண்டார்
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .