SRI:
SRIMATHE RAMANUJAYA NAMAHA:
SRIMATH ANANTHARYA MAHAGURAVE NAMAHA:
SRIMATH VARA VARA MUNAYE NAMAHA:
THERE WAS A LADY DISCIPLE (SHISHYAI) NAMED
THRAILOKYAL. UNDER THE DIVINE SHELTER OF SWAMY
VANGIPURATHU ACHI WHEN SWAMY THIRUMALAI ANANTHALVAN
SHOWERED HIS BLESSING ON HER BY HIS DIVINE VISIT TO
HER PLACE, SHE SUBJECTED HERSELF TO THE KAINKARYAM TO
SWAMY(ANANTHALVAN) FOR SIX MONTHS.
AFTER HIS(ANANTHALVAN) RETURN TO THIRUMALAI, WHEN
SHE RETURN TO SWAMY VANGIPURATHU ACHI'S LOTUS FEET,HE
ENQUIRED ABOUT HER ABSENSE FOR THE PAST SIXMONTHS. SHE
ANSWERED, " I WAS DOING KAINKARYAM TO SWAMY
ANANTHALVAN"
SWAMY VANGIPURATHU ACHI ASKED DID HE GIVE ANY
UPADESAMS SUPERIOR TO THE ONE'S I HAVE GIVEN YOU?
SHE REPLIED, "YES, IAM UNDER YOUR LOTUS FEET FOR
THE PAST 16 YEARS, DEVARIR MADE ME REALISE THE
ULTIMACY OF THE LOTUS FEET OF SRIMAN NARAYANA. BUT IN
THE PAST SIX MONTHS HE MADE ME TO REALISE THE
SUPREMACY OF SURRENDERING TO YOUR LOTUS FEET.
SO,ACHARYAN IS MUCH MORE IMPORTANT THAN THE
BHAGAWAN
SWAMY ANANTHALVAN EXPLAINED THIS NICELY HERE.
OUR HUMBLE PRANAMS TO SWAMY THIRUMALAI ANANTHALVAN
ADIYEN MADURAKAVIDASAN,
(T.A. AKKARAKKANI SRINIDHI),
Archive for August, 2010
Acharyar Thiruvadi Mahimai..
August 19, 2010திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-பேய் ஆழ்வார் ..
August 17, 2010திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று-1
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் இன்று அன்று திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டு கொண்டு என் மனம் -2
மலராள் தனத்துள்ளான் -3
தேசும் திறலும் திருவும் உருவமும் -10
எந்தை ஒரு வல்லி தாமரையாள் ஒன்றிய சீர்மார்வன் திருவல்லிகேணியான் சென்று -16
முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ் உலகம் ஈர் அடியால் பின் அளந்து கோடல் பெரிது ஒன்றே ?என்னே ! திருமாலே ! செம் கண் நெடியானே ! எங்கள் பெருமானே ! நீ இதனைபேசு -20
பாரத வெம் போர் உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனேவாழ் எயிற்று பேய்ச்சி பால் உண்ட பிரான் -28
பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -29
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை -30
அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கரும் கடல் நீர் உள்ளான் துவர்க்கும் பவள வாய் பூ மகளும் பன் மணி பூண் ஆரம் திகழும் திரு மார்பன் தான் -37
அங்கு ஓர் மாது உகந்த மார்வதற்க்கு பெண்ணகலங் காதல் பெரிது -54
நிறையுடைய நாமங்கை தானும் நலம் புகழ வல்லளே பூ மங்கை கேள்வன் பொலிவு-56
பொலிந்து இருண்ட கார்வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன் -57
திரு மா மணி வண்ணன் செம் கண் மால் எங்கள் பெருமான் அடி சேர பெற்று -59
வெம் கொங்கை உண்டானை மீட்டாய்ச்சி ஊட்டுவான் தன கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து -74
மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டு மாற்றா தாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணி கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றாமகன் -91
நீண்ட திருமால் அனைத்து உலகும் உள் ஒடுக்கி -93
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய் இகழ்ந்த இரணியன தாகம் சுகிர்ந்து எங்கும் சிந்த பிளந்த திருமால் திருவடியே வந்தித்து ஏன் நெஞ்சமே !வாழ்த்து -95
தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடி தாமரையாம் அலர் -96
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த வானமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல்திரு-100
திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று-1
பேய் ஆழ்வார் திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-பூதத் ஆழ்வார் ..
August 16, 2010நிகர் இல்லா பை கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் 15
கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே -19
மகிழ்ந்தது சிந்தை திருமாலே! மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -32
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38..
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39
திரு பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் -40
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் -42
அறம் தாங்கும் மாதவனே ! என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -41
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே ! -48
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி 50
செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆரது அறிவார் ? 52
பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -56
திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடை பிடிமின் கண்டீர் -57
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன் நெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன் ஆழி பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -58
ஏறின் பெருத்த எருத்தம் கொடு ஒசிய பெண் நசையின் பின் போய் எருத்திறுத்த நல ஆயர் ஏறு -62
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் -82
நரம் கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அம் கண் மா ஜாலத்தமுது -84
மண் உலகம் ஆளேனே ? வானவர்க்கும் வானவனாய் விண் உலகம் தன அகத்து மேவேனே ? நண்ணி திருமாலை செம்கண் நெடியானை எங்கள் பெருமானை கை தொழுத பின் -90
எங்கள் பெருமான் ! இமையோர் தலை மகன் ! நீ செம் கண் நெடுமால் ! திரு மார்பா ! பொங்கு பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு அணை மேல் சேர்ந்தே குடமூக்கு கோயிலாக கொண்டு -97
பூதத் ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Brahmam-saamaanaathi kiramam vilakkam..
August 16, 2010Sarvam kalu etham brahma..athanaiyum brahmam
thaj jalaan..
thaja thathu ja-athan edathin pirappathaay
thalla-athan edathil layipathaay
tha na -athanaal radshikka
Athanaiyum avanukku sareeram
Sareerathin sabtham anaithum aathma varai sellum..
pirapanjam brahmam– pirapanjam udaiyathu brahmam
man kudam thanga sangili..mannaal seyya patta kudam velai paadu illai jalam thookka mudiyaathu kaarana thisai kaariya thisai..manaaley aakka pattathu neelam/vaayim vayirumana/panbum kadathil poy seruhirathu..saamaathi kramam..pinna piravarthy-neeraay nilanaay theeyaay kaalaay nedu vaanaay. nee thaan anaiththum.. viseshanam.. brahman visesham..naalam–5 viseshanam pola-payan vera/ vaayum vayirumaana/ velai paadu udaiya/100 rs/ mann-thanga kudam illai.. payan serthu orey kudathai kurikirathu..
neery nilam-payanum vera..vevera payan koodiya viseshanam avanukku poy serum..avanukaa avanaal nyamikka pattu erukanum..
nirankusa eisvaryam udaiyavan..avanaaley piravarthika padubavai. swami-entha darisanathai emberumaaneer vallartha ath seyala arikaikkaa..darisanamey emberumaanaar.thath piravarthsya–sareeram pirakaaram ellai veru paadu.. motham sareeram antharaathma piravarthanam pannuhiraar viboothi athyaayam.. kalyana gunankalley viboothi therinthu kondaal bakthi undaahi valara vubayoham..
Aalvaar Emberumaanaar Jeeyar Thiru vadikaley Saranam..
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-பொய்கை ஆழ்வார்
August 16, 2010தேர் ஆழியால் மறைத்தது ஏன் ?நீ திருமாலே போர் ஆழி கையால் பொருது -8
திரு மகளும் மண் மகளும் ஆய மகளும் சேர்ந்தால் திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல் ?திரு மகள் மேல் பாலோதம் சிந்த பட நாகணை கிடந்த மாலோத வண்ணர்மனம் -42
பூ மேய மாதவத்தோன் தாள் -45
ஓவாது எப்போதும் திருமாலை கை தொழுவர் சென்று -52
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -53
உலகினில் செம்தீயும் மாருதமும் வானும் திருமால் தன புந்தியிலாய புணர்ப்பு -61
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை ? -64
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்உணர்வு -67
சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு செல்லும் தனையும் திருமாலை நல இதழ் தாமதத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தாலே யேத்துதிரேல் நன்று -70
மூப்பு உன்னை சிந்திப்பார்கு இல்லை திருமாலே ! நின் அடியை வந்திப்பார் காண்பர் வழி -75
நீயும் திரு மகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறைத்த பண்பாளா ! -86
மாதவ ! நின் பாதம் சிரத்தால் வணங்க -90
திரு மாலே ! ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே ? முன் ஒரு நாள் மண்ணை உமிழ்ந்த வயிறு -92
உன் தன் அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர் பொன் -97
ஓர் அடியும் சாடுதைத்த ஒண் மலர் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ! ஓர் அடியின் தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்துவை -100
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-திருபாண் ஆழ்வார்
August 16, 2010திரு ஆர மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே 5
திருபாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார்
August 16, 2010திருமறுமார்வ !நின்னை சிந்தையுள் திகழ வைத்து
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-திருமழிசை பிரான்
August 16, 2010திரு சந்த விருத்தம்
பின்னை கேள்வன் என்பர் 13
புண்டரீக பாவை சேரும் மார்ப ! பூமி நாதனே 22
மங்கை மன்னி வாழு மார்ப !ஆழி மேனி மாயனே ! 24
மை அரி கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே 40
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய ! நின்னை யாவர் வல்லர் 41
ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் 55
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன் …கொங்கு தங்கு வார் குழல் மடந்தை மார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்தபுண்டரீகனே 57
அற்புதன் அனந்த சயணன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே 65
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு இண்ட வாணன் ஈர் ஐஞ்சூறு தோள்களை துனித்த நாள் 71
போதில் மங்கை பூதல கிழத்தி தேவி …மாது தங்கு கூறன் 72
விடை குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் கடி கலந்த தோள் புணர்ந்த காலி ஆய ! 92
செய்ய போதில் மாது சேரும் மார்ப ! நாதனே ! 97
பின்னை கேள்வ! நின்னொடும் 99
திரு கலந்து சேறு மார்ப !தேவ தேவனே !இருக்கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா ! 103
மங்கை கொங்கை தங்கு பங்கய கண்ண ! 105
வல்லி நாண் மலர்க்கிழத்தி நாத ! 118
————————————————————————————————-
நான்முகன் திரு அந்தாதி
வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே 5
நரகத்து சேராமல் காக்கும் திருமால் 14
வடிப்பவள வாய் பின்னை தோளிக்கா வால் ஏறு எருத்தி இறுத்து கோப்பின்னும் ஆனான் 33
வானுலவு தீ வளி மா கடல் மா பொருப்பு தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் அண்டந்திருமால்அகைப்பு 37
வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைகின்றேன் கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் 40
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் பொல்லாத தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத தேவரை தேறேன்மின் தேவு 53
அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் பொன் பாவை கேள்வா !கிளர் ஒளி என் கேசவனே !கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள் 59
திரு நின்ற பக்கம் திறவிதென்றோரார் கருநின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த மார்பன் சிறீதரன் வண்டுலவு தண் துழாய் தார் தன்னை சூடி தரித்து 62
மாலவனை மாதவனை யாதானும் வல்லவா சிந்த்திருப்பேற்கு வைகுந்தத்து இல்லையோ சொல்லீர் இடம் ? 65
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு விருந்த மார்பன் ஸ்ரீதரனுக்கு ஆளாய் கரு இருந்த நாள் முதலாகாப்பு 92
திருமழிசை பிரான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-குலேசேகர ஆழ்வார்
August 15, 2010திரு மாது வாழ் வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் 2-1
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் 2-2
நறும் துழாய் மாலை உற்றவரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை 2-8
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் 2-10
அம் தாமரை பேதை மா மணவாளன் தன பித்தனே 3-5
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் என பலர் உள்ள இவ் வூரில் 6-1
அங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை 6-3
கண் உற்றவளை நீ கண்ணா விட்டு கை விளிகின்றதும் கண்டே நின்றேன் என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?இன்னம் அங்கே நட நம்பி !நீயே 6-5
அரிவையரோடு மணந்து வந்தாய் எற்றுக்கு நீ ஏன் மருங்கில் வந்தாய் ? 6-6
நீ உகக்கும் மையரி ஒண் கண்ணினராரும் அல்லோம் 6-7
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது வூதி வந்தாய் எங்களுக்கே ஒரு நாள் வந்து வூத உன் குழலின் இன் இசை போதராதே 6-9
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் எல்லி பொழுதினிலே மத்தூடி 6-10
குழகனே ! என் தன் கோமள பிள்ளாய் ! கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா மழலை மென் நகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன்இழந்தேனே 7-7
தயரதன் தன் மா மதலாய் ! மைதிலி தன் மணவாளா ! 8-4
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி 9-8
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து 10-3
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்ற அரசு தானே 10-7
குலேசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-ஆண்டாள் ..
August 15, 2010நாயக பெண் பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ ?- திரு பாவை 7
கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் -திரு பாவை 8
மாமன் மகளே! மணி கதவம் தாள் திறவாய் ..மா மாயன் மாதவன் வைகுந்தன் -திரு பாவை 9
ஆற்ற அனந்தல் உடையாய் ! அரும் காலமே !தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் -திரு பாவை 10
குற்றம் ஓன்று இல்லாத கோவலர் தம் போர் கொடியே புற்றரவல்குல் புன மயிலே !….செலவ பெண்டாட்டி -திரு பாவை 11
நல செல்வன்தங்காய் !-திரு பாவை 12
போதரி கண்ணினாய் ..பள்ளி கிடத்தியோ பாவாய் !-திரு பாவை 13
நங்காய் ! எழுந்திராய் நாணாதாய் !நா உடையாய் ! -திரு பாவை 14
எல்லே !இளம்கிளியே !-திரு பாவை 15
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குல விளக்கே !எம்பெருமாட்டி !-திரு பாவை 17
நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் !கந்தம் கமழும் குழலி !…பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட செம் தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப -திரு பாவை 18
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா !…மை தடம் கண்ணினாய் ! -திரு பாவை 19
செப்பன்ன மென் முளை செவ்வாய் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் ! திருவே ! துயில் ஏலாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை -திரு பாவை 20
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை …செம் கண் திரு முகத்து செல்வா திரு மாலால் எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..-திரு பாவை 30
கள்ள மாதவா! கேசவா !-நாச்சியார் திரு மொழி 2-5
ஓதமா கடல் வண்ணா ! உன் மணவாட்டி மாரோடு சூழ் உறும்-நாச்சியார் திரு மொழி 2-7
சீதை வாய் அமுதம் உண்டாய் ! -நாச்சியார் திரு மொழி 2-10
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை நாச்சியார் திரு மொழி 3-10
திரு மாலை ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன-நாச்சியார் திரு மொழி 5-8
விண் உற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண்ட மடந்தை விரும்பி- நாச்சியார் திரு மொழி5-11
கோளரி மாதவன் கோவிந்தன் என்பதோர் காளை-நாச்சியார் திரு மொழி6-2
பூ புனை கண்ணி புனிதனோடு என் தன்னை காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழி !-நாச்சியார் திரு மொழி 6-4
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை கை தலம் பற்ற கனா கண்டேன் தோழி !-நாச்சியார் திரு மொழி 6-6
காய்சின மா களிறன்னான் என் கை பற்றி தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-7
நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திரு கையால் தாள் பற்றி அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-8
அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரி முகம் தட்ட கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-9
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆணை மேல் மஞ்சனம் ஆட்ட கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-10
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே -நாச்சியார் திரு மொழி 7-1
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதம் -நாச்சியார் திரு மொழி 7-9
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் -நாச்சியார் திரு மொழி 8-1
வேங்கடத்து தன்னாக்க திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு -நாச்சியார் திரு மொழி 8-4
பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச்சியார் திரு மொழி 11-8
ஆங்கு அவளை கை பிடித்த பெண்ணாளன் பேணும் வூர் பேரும் அரங்கமே -நாச்சியார் திரு மொழி 11-9
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தனிய வீசீரே-நாச்சியார் திரு மொழி 13-1
கொடிய கடிய திருமாலால்–நாச்சியார் திரு மொழி 13-6
செம்மை உடைய திருமாலால் -நாச்சியார் திரு மொழி 13-9
மாலே செய்யும் மணாளனை ஏலா பொய்கள் உரைப்பானை -நாச்சியார் திரு மொழி14-3
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன் –நாச்சியார் திரு மொழி14-4
மாதவன் என் மணியினை -நாச்சியார் திரு மொழி14-5
பொருத்தம் உடைய நம்பியை –நாச்சியார் திரு மொழி14-7
அளி நன்கு உடைய திருமாலை ஆழியானை —நாச்சியார் திரு மொழி14-8
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்