திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-ஆண்டாள் ..

நாயக பெண் பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ ?- திரு பாவை 7

கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் -திரு பாவை 8

மாமன் மகளே!  மணி கதவம் தாள் திறவாய் ..மா மாயன் மாதவன் வைகுந்தன் -திரு பாவை  9

ஆற்ற அனந்தல் உடையாய் ! அரும் காலமே !தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் -திரு பாவை  10

குற்றம் ஓன்று இல்லாத கோவலர் தம் போர் கொடியே புற்றரவல்குல் புன மயிலே !….செலவ  பெண்டாட்டி -திரு பாவை  11

நல செல்வன்தங்காய் !-திரு பாவை  12

போதரி கண்ணினாய் ..பள்ளி கிடத்தியோ பாவாய் !-திரு பாவை  13

நங்காய் ! எழுந்திராய்  நாணாதாய் !நா உடையாய் ! -திரு பாவை  14

எல்லே !இளம்கிளியே !-திரு பாவை  15

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குல விளக்கே !எம்பெருமாட்டி !-திரு பாவை 17

நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய்  !கந்தம் கமழும் குழலி !…பந்தார் விரலி  உன் மைத்துனன் பேர் பாட செம் தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப -திரு பாவை 18

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா !…மை தடம் கண்ணினாய் ! -திரு பாவை 19

செப்பன்ன மென் முளை செவ்வாய் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் ! திருவே ! துயில் ஏலாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை -திரு பாவை 20

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை …செம் கண் திரு முகத்து செல்வா திரு மாலால் எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..-திரு பாவை 30

கள்ள மாதவா! கேசவா !-நாச்சியார் திரு மொழி 2-5

ஓதமா கடல் வண்ணா ! உன் மணவாட்டி மாரோடு சூழ் உறும்-நாச்சியார் திரு மொழி 2-7

சீதை வாய் அமுதம் உண்டாய் ! -நாச்சியார் திரு மொழி 2-10

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை நாச்சியார் திரு மொழி 3-10

திரு மாலை ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன-நாச்சியார் திரு மொழி 5-8

விண் உற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண்ட மடந்தை விரும்பி- நாச்சியார் திரு மொழி5-11

கோளரி மாதவன் கோவிந்தன் என்பதோர் காளை-நாச்சியார் திரு மொழி6-2

பூ புனை கண்ணி புனிதனோடு என் தன்னை காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழி !-நாச்சியார் திரு மொழி 6-4

மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை கை தலம் பற்ற கனா கண்டேன் தோழி !-நாச்சியார் திரு மொழி 6-6

காய்சின மா களிறன்னான் என் கை பற்றி தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-7

நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திரு கையால் தாள் பற்றி அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-8

அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரி முகம் தட்ட கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-9

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆணை மேல் மஞ்சனம் ஆட்ட கனா கண்டேன் தோழி ! நான் -நாச்சியார் திரு மொழி 6-10

மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே -நாச்சியார் திரு மொழி 7-1

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதம் -நாச்சியார் திரு மொழி 7-9

தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் -நாச்சியார் திரு மொழி  8-1

வேங்கடத்து தன்னாக்க திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு -நாச்சியார் திரு மொழி   8-4

பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச்சியார் திரு மொழி   11-8

ஆங்கு அவளை கை பிடித்த பெண்ணாளன் பேணும் வூர் பேரும் அரங்கமே  -நாச்சியார் திரு மொழி   11-9

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தனிய வீசீரே-நாச்சியார் திரு மொழி 13-1

கொடிய கடிய திருமாலால்–நாச்சியார் திரு மொழி 13-6

செம்மை உடைய திருமாலால் -நாச்சியார் திரு மொழி 13-9

மாலே செய்யும் மணாளனை ஏலா பொய்கள் உரைப்பானை -நாச்சியார் திரு மொழி14-3

ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன் –நாச்சியார் திரு மொழி14-4

மாதவன் என் மணியினை -நாச்சியார் திரு மொழி14-5

பொருத்தம் உடைய நம்பியை –நாச்சியார் திரு மொழி14-7

அளி நன்கு உடைய திருமாலை ஆழியானை —நாச்சியார் திரு மொழி14-8

ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading