திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-திருமழிசை பிரான்

திரு சந்த விருத்தம்

பின்னை கேள்வன் என்பர் 13

புண்டரீக பாவை சேரும் மார்ப ! பூமி நாதனே 22

மங்கை மன்னி வாழு மார்ப !ஆழி மேனி மாயனே ! 24

மை அரி கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே 40

ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய ! நின்னை யாவர் வல்லர் 41

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் 55

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன் …கொங்கு தங்கு வார் குழல் மடந்தை மார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்தபுண்டரீகனே 57

அற்புதன் அனந்த சயணன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே 65

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு இண்ட வாணன் ஈர் ஐஞ்சூறு தோள்களை துனித்த நாள்  71

போதில் மங்கை பூதல கிழத்தி தேவி …மாது தங்கு கூறன் 72

விடை குலங்கள்  ஏழ் அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் கடி கலந்த தோள் புணர்ந்த காலி ஆய ! 92

செய்ய போதில் மாது சேரும் மார்ப ! நாதனே ! 97

பின்னை கேள்வ! நின்னொடும் 99

திரு கலந்து சேறு மார்ப !தேவ தேவனே !இருக்கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா ! 103

மங்கை கொங்கை தங்கு பங்கய கண்ண ! 105

வல்லி நாண் மலர்க்கிழத்தி நாத ! 118

————————————————————————————————-

நான்முகன் திரு அந்தாதி

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே 5

நரகத்து சேராமல் காக்கும் திருமால் 14

வடிப்பவள வாய் பின்னை தோளிக்கா வால் ஏறு எருத்தி இறுத்து கோப்பின்னும் ஆனான் 33

வானுலவு தீ வளி மா கடல் மா பொருப்பு தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் அண்டந்திருமால்அகைப்பு 37

வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைகின்றேன் கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் 40

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் பொல்லாத தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத தேவரை தேறேன்மின் தேவு 53

அன்பாவாய் ஆரமுதமாவாய்  அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் பொன் பாவை கேள்வா !கிளர் ஒளி என் கேசவனே !கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள் 59

திரு நின்ற பக்கம் திறவிதென்றோரார் கருநின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த மார்பன் சிறீதரன் வண்டுலவு தண் துழாய் தார் தன்னை சூடி தரித்து 62

மாலவனை மாதவனை யாதானும் வல்லவா சிந்த்திருப்பேற்கு வைகுந்தத்து இல்லையோ சொல்லீர் இடம் ? 65

என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு விருந்த மார்பன் ஸ்ரீதரனுக்கு ஆளாய் கரு இருந்த நாள் முதலாகாப்பு 92

திருமழிசை பிரான் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading