Archive for the ‘Poyhai Aazlvaar’ Category

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -83 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

அவன் ஆஸ்ரித பரதந்த்ரன்
அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன
மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ-
அது கொண்டு கார்யம் கொள்ளாதே
மலையை எடுப்பது
ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து
வெருமனேயோ
என்கிறார் –

————————————–

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் -83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக் கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மது கைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும்
அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத் தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்றவா  றேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

—————————————-

வியாக்யானம் –

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –
ஒன்றால் சலிப்பிக்க ஒண்ணாத மலையைக் குடையாகக் கொண்டு
அதுக்கு தாரகமான காம்பு தன் தோளாகக் கொண்டு
பசுக்களை ரஷித்து –

ஆயர் நிரை விடை யேழ் செற்றவாறேன்னே –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகமாய்த்
திரண்டு வந்த ருஷபங்கள் ஏழையும் முடித்தது யென்னீ –

இது உன் சர்வ சக்தித்வம் காட்டச் செய்தாயோ
உன்னால் அல்லது செல்லாதார்க்கு அவர்கள் விரோதிகளைப் போக்கி
உன்னைக் கொடுத்த படி இறே என்கிறார் –

கையில் திரு வாழியைக் கொண்டு இந்த்ரனை நேராதே
உன் தோள் நோவ ரஷிப்பதே –

உரவுடைய நீராழி யுள்  கிடந்து –
சர்ப்பத்தை உடைய நீர் -என்னுதல்
உரகம் என்கிறத்தைக் குறைத்து உரம் -என்று கிடக்கிறது
இத்தால்
துஷ்ட சத்வங்கள் எல்லாத்துக்கும் உப லஷணம்

அன்றிக்கே
மிடுக்கை உடைத்தான நீர் -என்றுமாம்
திருப் பாற்  கடலிலே கிடந்து-

நேரா நிசாசரர் மேல் -பேராழி கொண்ட பிரான்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளச் செய்தே
சத்ருக்களாய் கிட்டின நிசாசரர் உண்டு மதுகைடபர்கள்
அவர்களைத் திரு வாழியை இட்டுப் பொடி படுத்தி விட்டான் ஆய்த்து
நீ உறங்கா நிற்கச் செய்தே விரோதி வர்க்கத்தை
பொடி படுத்த வற்றான பரிகரத்தை யுடைய உபாகாரனே –

உன் தோள் நோவ மலை எடுத்ததும்
ருஷபங்கள் முன்னே உன்னை அழிவுக்கு இட்டதும்
இவை எல்லாம் என் செய்தாய் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு விரோதம் வந்த போது
சங்கல்பத்தால் அன்றியே
தன்னுடம்பு நோவக் கார்யம் செய்யும்
என்றபடி –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -82 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது
அவனைக் கண்டு சொல்ல வேணுமே
அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே
என்றவர்க்குக் குறை தீரும்படி
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

—————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களை யுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசி யன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

—————————

வியாக்யானம் –

படையாரும் வாள் கண்ணார்-
வேல் போலேயாய்
ஒளியை உடைத்தான கண்களை உடைய பெண்கள் ஆனவர்கள் –
படை என்று வாளையும் சொல்லக் கடவது –
தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்குமவர்கள் -என்கை –

பாரசி நாள் –
த்வாதசி நாளிலே –

பைம் பூம் தொடையலோ டேந்திய தூபம் –
பருவத்தால் வந்த இளமை கொண்டு புறம்பு
அந்ய பரத்தை பண்ணலாய் இருக்கச் செய்தே
அது தவிர்ந்து –
பகவத் பஜனமே யாம்படி பண்ணிக் கொள்ள வற்றாய்த்து
அத் தேச ஸ்வ பாவம் தான் –

இவர்களிலே தாம் தாம் கைகளிலே தரித்துக் கொண்டு நிற்க
அழகியதாய்த் தொடுத்த மாலைகளும் தூபங்களும் –

இடையிடையில் மீன் மாய மாசூணும் வேங்கடமே –
நடு நடுவே ஒரோ நஷத்ரங்களை யுடைத்தான ஆகாசத்தை இவை சென்று
மாசூணப் பண்ணா நின்றது
மரியா நின்றது

இவர்கள் புகைத்த தூபமானது ஆகாசத்தை மறைக்கும்
இவர்கள் கைகளில் செறிந்த மாலைகளானவை நஷத்ரங்களை மறைக்கும் –

மேலோரு நாள் மானமாய வெய்தான் வரை –
அப்படி பஜிக்கிற ஸ்திரீகளுக்கும் பிராட்டி திறத்தில் போலவே
பரதந்த்ரனாய்க் கார்யம் செய்யுமாய்த்து

அவள் சொல்லப் பண்டு ஒரு நாள் மாயா மிருகத்தின் பின்னே போய் அத்தை வதித்தான் இறே
அப்படிப் பட்ட ஆஸ்ரித பரதந்த்ரன் வர்த்திக்கிற தேசம் வேங்கடமே –

இப் பாட்டால்
1-சர்வ சமாஸ்ரயணீயத்வமும்
2-சௌலப்யமும்
3-ஆஸ்ரித பாரதந்த்ர்யமும்
4-போக்யதையும்
5-விரோதி நிரசனமும்
குறை வற்று வர்த்திக்கிற தேசம்
என்கிறது –

—————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -81 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம்
பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை
என்றொரு பேர் உண்டோ –
அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –

ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் –

———————————————

ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக் கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையா யிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.

———————————————

வியாக்யானம் –

ஆளமர் வென்றி யடு களத்துள் –
ஆளாலே அமர் பட்டு இருப்பதாய்
ஆளோடு ஆள் மிடைந்து இருப்பதாய்
வென்றியை உடைத்தான –

ஆடு களத்து –
முடிக்கிற களத்து –

அஞ்ஞான்று –
அசுரர் தேவர்களை முறித்து வாயிலிட்டுச் செல்லுகிற
அற்றை நாளிலே –

வாளமர் வேண்டி  –
ஒளியை யுடைத்தாய் இருப்பது ஒரு யுத்தம் வேணும் என்று பார்த்து

அதாகிறது
தேவர்களும் அசூரர்களும் ஆகப் பொரா நிற்க
அசூரர்களுக்கு பலம் மிகுத்து
தேவர்களுக்கு பலம் குறைந்து பட்டுக் கிடக்கப் புக்க வாறே
அனுகூலரான நம்முடையார்க்கு மதிப்பு உடைத்தாய் இருப்பதொரு பூசல் வேணும் என்று பார்த்தான் –

வரை நட்டு நீளவரைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே –
அதற்க்குக் கைம் முதல் வேணுமே
ஆழ்ந்த நீரிலே ஆளக் கடவ மந்த்ரத்தை
பிடுங்கிக் கொண்டு வந்து நட்டு
மிருதுவான வாசுகியைச் சுற்றி
மகத் தத்வமான கடலைக் கலக்கினான் யாய்த்து –
அது விறே

தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை –
கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய
திரு நாமமே அன்றோ

பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும்
எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –

பற்றிக் கடத்தும் படை –
அள்ளி எடுத்துக் கொண்டு போய்
பரம பதத்திலே வைக்கும் பரிகரம்-

எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள்
கரையிலே முதலிகளை வைத்தால் போலே பரம பதத்திலே வைத்து
தாஸ்யாம்ருத தத்தைக்  கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
த்வா மேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண -ஜிதந்தே -4-என்னக் கடவது இறே –

சம்சார சாகரத்தைக் கடத்தும் படை-நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே =என்று அந்வயம் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -80 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

மகா பலி பக்கல் நின்றும் விபூதியை மீட்டுக் கொண்டு நோக்கின் அவ்வளவே அன்றிக்கே
ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும்
ந ஷமாமி -என்கிறத்தைப்  பாராதே
அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் –
என்கிறது –

அதாகிறது
பாதாளத்திலே ஸூமுகன் என்றொரு சர்ப்பமாய்
அவனைப் பெரிய திருவடி ஆமிஷமாகக் கணிசித்து இருக்க
அத்தைக் கேட்டு அஞ்சி
சர்வேஸ்வரன் இந்திர லோகத்திலே உபேந்திர மூர்த்தியாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்க
அங்கே சென்று அவன் எழுந்து அருளி இருந்த சிம்ஹாசனத்திலே சுற்றிக் கொண்டு கிடந்தான் ஆய்த்து –

சரணம் புகுவார்க்கு லஷணம்
பவத் விஷய வாசின -ஆரண்ய -1-20-என்னும் இவ்வளவே இறே
பெரிய திருவடி அங்கே சென்று காணாமே பெரிய வேகத்தோடு இங்கே இவன் இருந்த படியைக் கண்டு
அந்தரங்கராய் வஹிக்குமவர்கள் பொதுவாகச் சில சொல்லுமா போலே சொல்ல
சர்வேஸ்வரனும் அத்தைக் கேட்டுப் பின்னையும் அவனை விட்டே சமாதனத்தைப் பண்ணி
அவன் கையிலே காட்டிக் கொடுக்க
அவனும் அத்தை ஆபரணமாக உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கிக் கொடுத்த படி சொல்லுகிறது –

———————————————-

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் –80-

——————————————

வியாக்யானம் –

அடுத்த கடும் பகைஞற்கு –
அண்ணிய பகை யாய்த்து –
ஜன்மத வந்த சாத்ரவம் ஆய்த்து

அதாகிறது
இவருடைய தாய்மார்க்கும் சா பத்ன்யத்தால் வந்ததொரு விரோதம் உண்டாய்த்து

கடும் பகை –
பேர் சொல்ல-
முடியும் படி கொடியதாய் இருக்கை-

ஆற்றேன் என்றோடி –
அவனுக்கு ஆற்ற மாட்டேன் -என்று ஓடி
சடக்கென வந்தான் ஆயத்து –

படுத்த பெரும் பாழி சூழ்ந்த –
அங்குத்தைக்கு ஈடாம்படி படுத்த சிம்ஹாசனத்தைச் சுற்றின
பாயலும் பள்ளியும் பாழியும் பாசியும் படுக்கையும் சேர்க்கைக்கு பேர் –

விடத் தரவை –
ஒரு சம தமாத் யுபேதனைத் தான் நோக்கப் பெற்றதோ –
சத்ரு வச்யமான கோடியில் உள்ளது ஒன்றாகிலும்
தர்ம ருசி உண்டாய் இருப்பாரையும் கிடைக்கும் இறே
அப்படிப் பட்டான் ஒருவனும் அன்று -என்கை-

சர்ப்ப ஜாதி ரியம் க்ரூரா-என்னக் கடவது இறே
சரண்யனுக்கு  கிருபா விஷயம் அன்று  -என்கிறது –

வல்லாளன் கை கொடுத்த –
சரணாகத பரித்ராணத்தில் இவனத்தனை சமர்த்தன் இல்லை யாய்த்து
பின்னை அவன் கையிலே கொடுத்து அவனை இடுவித்தே நோக்குவித்தான் ஆய்த்து
கடித்த வாயாலே தீர்க்கை

வத்யதாம்-யுத்த -17-29- -என்றவரை
அஸ்மாபிஸ் துல்யோ பவது -18-38–என்னப் பண்ணினால் போலே –
ந ஷமாமி -என்றத்தையும்
ந த்யஜேயம் -என்றத்தையும் ஒக்க ஜீவிப்பித்த படி –

மா மேனி-
அவனை நோக்கின பின்பு வடிவில் பிறந்த
பௌஷ்கல்யம்
ததா ராம க்ருதக்ருத்ய -பால -1-83-

மாயவனுக்கு –
இவனுக்கு ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரம்
அவனால் எல்லை கண்டு மீளப் போகாதாய்த்து –

அல்லாது மாவரோ ஆள் –
ஒருக்கால் ஆளாய் அடிமை புக்கே பின்னையும்
ஸ்வ ரஷணத்துக்குத் தான் இருந்து முந்திக் கொள்ள வேண்டும்படியாய் இருப்பாரையும்
பற்றுவார்களோ

சரணம் என்றொரு உக்தி மாத்ரம் சொன்னால்
பின்னை மேலுள்ளதனை தன் தலையிலே
ஏறிட்டுக் கொண்டு நோக்குமவனை யன்றோ பற்ற அடுப்பது –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -79 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

ஆஸ்ரிதருக்காக   தன்னை அழிய மாறி
மேல் விழுந்து கார்யம் செய்யும் ஸ்வபாவன் என்று  இறே
சொல்லிற்றே நின்றது –

அது பின்னை எங்கே கண்டோம் அவனுக்கு -என்னில்
ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக்
கார்யம் செய்திலனோ
என்கிறார் –

—————————————

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  –79-

பதவுரை

மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை
அம் கை–(தனது) அழகிய திருக்கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறி வந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

——————————–

வியாக்யானம் –

நீ செய்த செயலை அனுசந்தித்து நாட்டார்   உன்னைக் கொண்டாடும்படி தான் செய்தாயோ –
குணமே குற்றமாய்க் குற்றமும் குணமாம் கிடீர் சம்சாரம் –
தன்னைதான பூமியை அவனதாக மேல் எழுத்து இட்டு
அவன் கொடுத்தானாக இவன் கொண்டத்தை
தன் கையிலே நீர் வார்த்தவனைப் பாதாளத்திலே  தள்ளினான் என்று பழி சொல்லா நிற்பார்கள் –

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் –
மகா பலி யாகிறான் ஆசூர ப்ரக்ருதியாய் –
ஈஸ்வர விபூதியைத் தன்னதாக அபிமானித்து
நிரசிக்க ஒண்ணாதபடி ஔதார்யம் என்பதொரு
குணத்தை ஏறிட்டுக் கொண்டு இருந்தான் –

இவன் கையிலே விபூதி கிடக்கும் அன்று அனுகூலர் நெருக்குண்பர்கள்
ஆனால் அவன் இட உகக்குமாகில்
நாம் பெற்றால் ஆகாதோ என்று தன்னைக் குறைய விட்டுச் சென்று அர்தித்தான் ஆயிற்று –

நாட்டார் இவற்றை ஒன்றையும் அனுசந்தியாதே
அவனை வஞ்சித்துக் கொண்டான் கிடீர் என்று பழி சொல்லா நிற்பார்கள்

இனி ஆராய்ந்து பார்த்தால்
நெல் வாலிலே வைத்து தெறிக்க வேண்டுவது மகா பலியை யாய்த்து
ராவணணோபாதி வத்யனாய்த்து
அதாகிறது
அஸ்வாமி விக்ராயம் பண்ணக் கடவன் அல்லன்
அவனதான ஆத்மாவை அவன் பக்கலிலே சமர்ப்பித்தால்
அநந்தரம் அனுதாபம் விளைந்து
அதவா  கிந்னு சமர்பயாமி தே-ஸ்தோத்ர ரத்னம் -53-என்னக் கடவது இறே
அங்கன்  அன்றிக்கே
கொடுத்த பின்பும் –
தன்னத்தையே கொடுத்ததாக நினைத்து இருந்தான்

கொண்டாரை என்று பாடமான போது-
பிரயோஜனத்தைச் சொல்லிற்று ஆகிறது –

மண்டா வென விரந்து மாவலியை –
தன்னைதான ஜகத்திலே
ஏக தேசமான மண்ணை
மகாபலி பக்கலிலே சென்று
தர வேணும் என்று அபேஷித்தான் ஆயிற்று –

ஒண்டாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே –
ஒள்ளிய தாரையின் நீரானது கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே வந்து
விழும் காட்டில்
ஆசூர பிரக்ருதியானவன் மறு மனஸ்ஸூப் படில் செய்வது என்-என்று
சிவிட்கு என வளர்ந்தான் ஆயிற்று
அலாப்ய லாபம் பெற்றால் போலே
வர்ஷேண  பீஜம் பிரதி சஞ்ஜ ஹர்ஷா – சுந்தர -29-6-என்னுமா போலே
நீர் விழும் காட்டில் வளர்ந்ததிலையோ –

அப்போது –
நீள் விசும்பில் ஆரங்கை தோய வடுத்து  –
அளவுடைத்தான ஆகாசத்தில் ஆரமும் கையும் சேரும்படி கிட்டி -என்னுதல்-

அன்றிக்கே
நீள் விசும்பிலார் அழகிய கைகளைக் கொண்டு ஸ்பர்சிக்கும் படிக்கு ஈடாக கிட்டி -என்றுமாம்

தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்  சிவந்த தன் கை யனைத்தும்
ஆரக் கழுவினான் -இரண்டாம் திரு -78-என்னக் கடவது இறே –

அன்றிக்கே
நீள் விசும்பு ஆரங்கை எடுத்து ஆஸ்ரயிக்க நிமிர்ந்திலையே -என்னவுமாம் –

நீரங்கை தோய நிமிர்ந்திலையே –
திருக் கையிலே நீரும் திருவடிகளிலே
நீரும் ஒக்க விழுந்தது

ஸ்வரூப ஜ்ஞானம் வேண்டா கிடீர்
இந்தச் செயலைக் காண வமையும் கிடீர்
நமக்கு ஸ்ரோத்ராதிகள் உண்டாகைக்கு –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -78 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால்
நமக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது
நிற்க ஒண்ணாது கிடீர்
என்கிறார் –

———————–

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-

பதவுரை

நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பை நாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய
திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)

————————–

வியாக்யானம் –

இடரார் படுவார் –
அவனைப் பிரிந்தால் வரும் கிலேசம்
அனுபவிக்க வல்லார் தான் ஆர்
சோறு உண்டாய் இருக்க யார் பசியோடு இருக்க வல்லார் -என்னுமா போலே

எழு நெஞ்சே –
அறிவுடைய நீ சடக்கென புறப்பட்டு
இனி நமக்கு இடர் வந்ததாகில்
முதலை பட்டது படும் அத்தனை –

வேழம்  தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த-
வேழத்தை தொடரா நிற்பதாய்
தான் பலத்தை யுடைத்தாய்
நெஞ்சில் இரக்கம் அற்று இருந்துள்ள முதலையை முடித்த –

படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்-
ஸ்வ சம்ஸ்லேஷத்தாலே வந்த ஹர்ஷம் தோற்றும்படியான
பணங்களை யுடையனுமாய்
விஸ்தருதனுமாய் இருந்துள்ள
திரு வநந்த   வாழ்வானுக்கு உடம்பு கொடுக்கும் படியான ஸ்வ பாவத்தை
உடையவன் திருவடிகளை ஆஸ்ரயிப்போம்

இத்தால்
ஆஸ்ரிதர் பக்கலிலும்
அநாஸ்ரிதர் பக்கலிலும்
அவன் இருக்கும் படி சொல்லுகிறது

விரோதியைப் போக்கி
திரு அநந்த ஆழ்வானைப் போலே அடிமை கொள்ளும் -என்றபடி   –

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —
கொய்யப் படுவதான நாகத்தின் உடைய போக்யமான புஷ்பத்தைக் கொண்டு கை தொழுதும்

நாகப் பூ -என்றவத்தால்
அப்ராக்ருதமான புஷ்பம் வேண்டாம்
காட்டிலே ஒரு பூ அமையும் -என்கிறது

வனசரர் ஆகையாலே
வந்யம் ஆன புஷ்பங்கள் அறிந்து இருப்பார் -என்று சீயர் அருளிச் செய்வர்

பண்டு பூப் பறித்தான் ஒருவன் இடரைப் போக்கித் தனக்காக்கிக் கொண்டான் கண்டாயே
நமக்கும் அப்படியே செய்யும் காண் –

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்-
இடரார் படுவார் எழு நெஞ்சே-என்று அந்வயம் –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -77 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

திருமலை ஒன்றுமே யல்ல கிடீர்
உகந்து அருளின தேசங்களுக்கும் இப்படிக் கிடீர்-என்கிறார்

அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்திக்க
நம்முடைய செயலால் வந்த துக்கங்கள் அடைய ஓடிப் போம் -என்கிறார் –

நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை

அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக
நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத்
தன்னடையே ஓடிப் போம்
என்கிறார் –

———————-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

பதவுரை

வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய
சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும்
பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்

———————————

வியாக்யானம் –

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும்
திருமலையிலே நின்று அருளினான்
ஸ்ரீ வைகுண்டத்திலே வீற்று இருந்து அருளினான்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளினான் –

அக்காத பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் –
ஒன்றோடு ஓன்று விச்சேதிக்க கடவது அன்றிக்கே
போக்யதை யளவிறந்து உள்ள  அழகை யுடைத்தான
நீர் நிலங்களை யுடைத்தாய்
தர்ச நீயதை விஞ்சி
ஸ்ப்ருஹணீயமாய் இருந்துள்ள
திருக் கோவலூர் நகரத்திலே நடந்து அருளினான் ஆய்த்து –

நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே  என்றால் கெடுமா மிடர் –
இவை நாலிலும் ஒக்குமாய்த்து இவ்வோ வ்யாபாரங்களைப் பண்ணின படி
இவர்களுக்கு எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி

பொன்னகர் என்று தானே வந்து நோக்கின இடம்
இவ்வோ இடங்களிலே அச் செயல்களைச் செய்தான் என்று அனுசந்தித்துச் சொல்லுவோர்க்குத்
தாம் தாம் பண்ணிக் கொண்ட துக்கங்கள் அடையத் தாம் தாமை விட்டோடிப் போம் என்கிறார் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -76 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ
உன்னோடு சம்பந்தித்த திருமலை யாழ்வார் தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல்
ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –

பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப்பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

———————————–

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-

பதவுரை

வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப,
ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆஸ்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.

————————————-

வியாக்யானம் –

வழி நின்று நின்னைத் தொழுவார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் சொல்லுகிறபடியே
வழி பட்டு நின்று உன்னை ஆஸ்ரயிப்பார்-

ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்யோ ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதியாசிதவ்ய –

விஜ்ஞாய ப்டஜ்ஞான் குர்வீத

உபாசனம் த்ருவா நு ஸ்ம்ருதி  தர்சன சமா நாகாராதா பிரத்யஷாபத்தி

விசதே தத நந்தரம்-கீதை-18-55-
என்கிற சாஷாத்கார பர்யந்தமாகச் சொல்லுகிற உபாசனத்திலே நின்று –

(பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.)

வழுவா மொழி நின்ற மூர்த்தியரே யாவர் –
ஓன்று தப்பாதபடி யதா பூத வாதியான வேதத்திலே நின்ற மூர்த்தி யுண்டு
அதில் சொல்லுகிற ஸ்வரூபம் –
பரஜ்ஞ்யோதி ரூப சம்பத்திய ஸ்வேண  ரூபேணாபி விஷ்பத்யதே -அத்தைப் பெறுவார்கள் –

பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும்-
ப்ராப்யத்தில்  ஆதல்
பிராபகத்திலே ஆதல்
ஒரு கொற்றை வாராமே நித்ய விபூதியைக் கொடுக்கும்
ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –

மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –
அந்த ஸ்வபாவம் உண்டாயிற்று திருமலைக்கு
சீரான் -என்று சம்போதனை

அன்றிக்கே
மண்ணளந்த சீரை உடையவன் திருமலை இப்படிச் செய்யும் என்னுதல்-
மண் அளந்த சீரானதான திருமலை -என்னுதல்-

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -75 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப்
பெற்றவர்கள் இறே
விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழி போனார் ஆகிறார்
என்கிறார் –

———————————————————-

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி—75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரம புருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அரு வினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட் பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

——————————————————————————–

வியாக்யானம் –

காப்புன்னைக்  யுன்னக் கழியும் –
தர்மஸ்ஸ ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்-என்று
ஈஸ்வரனுக்குப் புரவர் போலே
பதினாலு பேர் உண்டு இறே –

சூர்யன் -சந்தரன் -காற்று -நெருப்பு -ஆகாயம் -பூமி நீர்
மனம் -யமன் -பகல் இரவு -ப்ராதாஸ் சந்த்யை -சாயம் சந்த்யை -தர்மம் –
இச் சேதனர் செய்யும் கர்மங்களை ஆராயக் கடவர்கள்

அவர்கள் உன்னை அனுசந்திக்க
விட்டுக் கடக்க நிற்பார்கள்
அவனுடையாரை நோக்கக் கடவன் அவனே யன்றோ -நாம் என்-என்று கடக்க நிற்பார்கள் –
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம்   -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -3-7-4-
தேவர்ஷி பூதாப்த -பாகவதம் -11-5-41-இத்யாதி –

கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி
அது போம்படி சொல்லுகிறது
அரு வினைகள் ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் –
ஆக்கை புகுகைக்கு அடியான
அவித்யாதிகளால் உண்டான பந்தங்கள் எல்லாம் உன்னை அனுசந்திக்க தாமே கழன்று போம் –

மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை –
காப்பும் அருவினையும் போன அதிகாரிக்கு மூப்பாவது கைவல்யம்

அன்றிக்கே
பிறந்தான் இறந்தான் என்று சொல்லக் கடவ
ஷட் பாவ விகாரங்கள் வந்து கிட்டா –

திரு மாலே –
இவை எல்லாம் வந்து கிட்டாமைக்கு அடி இருக்கிறபடி
ஈஸ்வரன் ஸ்வாதந்த்ர்யத்தாலே ஆராயப் புக்காலும்
பிராயச்சித்த சாத்யம் அல்லாத பாபம் நாம் பொறுக்கும் அத்தனை யன்றோ என்று
ஆற்றுவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது

தாஸீ நாம் ராவணஸ் யாஹம்  -யுத்த் -113-41-
ராஜ சம்ஸ்ரய வச்யா நாம் –யுத்த -113-38-
என்னும்படியே தன்னைக் கழிக்குமோ பாதி
பிராப்யானாம் போது பிராட்டி கூட வேணும் –

நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி  –
தேவர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் இறே நல் வழி போனார் ஆகிறார்

வழி என்று
அர்ச்சிராதி  கதியைச் சொல்லிற்று ஆகவுமாம்  –

பரமபதம் போலே இறே பரமபதத்துக்கு போம் வழி
வந்தியாருக்கு முள்ளும் முடுக்குமான வழி

மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே –
யுவா குமாரா
யுவதிஸ்ஸ குமாரிணீ-என்கிற
உங்களை ஆஸ்ரயித்தால்
உங்களைப் போலே பரம சாம்யம் உபைதி இறே –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -74 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

அவனை ஒழிய வேறு ஆஸ்ரயணீயர் இல்லை என்னா நின்றீர்
என் தான் –
ருத்ரன் ஆஸ்ரயணீயன் அன்றோ -என்னில்

அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன்
என்கிறார் –

உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு

அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும்

இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் –

———————————————————————————

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

பதவுரை

ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒரு பால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்து கொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச் சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத் திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேஸ்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.

——————————————————-

வியாக்யானம் –

ஏற்றான்-
ருஷப வாஹனன் என்று பிரசித்தமாய் இருப்பதொரு
எருத்தை வாகனமாக உடையனாய் இருக்கும் அவன் –

புள்ளூர்ந்தான் –
வேதாத்மாவான பெரிய திருவடியைத் தனக்கு வாகனமாக
உடையனாய் இருக்கும் இவன்

எயில் எரித்தான் –
திரிபுர தஹனம் பண்ணினேன் என்று ஆஸ்ரிதரை ஒரு வ்யாஜத்தாலே அளிக்கும் அவன்

மார்விடந்தான் –
ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னை அழிய மாறி
அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனாய் இருக்கும் இவன் –

நீற்றான் –
பஸ்மச் சந்த -என்று பஸ்மத்தைத் தரித்து
பிராயச் சித்த வேஷியாய் இருக்கும் அவன் –

நிழல் மணி வண்ணத்தான் –
கண்டார்க்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கும் இவன் –

கூற்றொரு பால் மங்கையான் –
அருளே ஒரு ஸ்திரீயை வைத்து
அத்தால் வந்த அபிமானத்தை யுடையனாய் இருக்கும் அவன் –

பூ மகளான் –
அசயே ஸா   நா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்னும்
இவளைத் தனக்கு என உடையனான
ஸ்ரீ யபதியாய் இருக்கும் இவன் –

வார் சடையான் –
சாதனா வேஷத்துக்கு ஈடாக தாழ்ந்த ஜடையை உடையனாய்
இருக்கும் அவன் –

நீண் முடியான் –
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேகத்தை யுடையனாய் இருக்கும் இவன்

கங்கையான் –
தனக்கு சுத்திக்கு ஈடாக
கங்கையைத் தரித்துக் கொண்டு இருக்கும் -அவன்

நீள் கழலான்-
அந்த தீர்த்த பூதையான கங்கையை உத்பாதித்துக் கொடுக்கும்
திருவடிகளை உடையவன் இவன் –

காப்பு  –
ஏற்றான்
எயில் எரித்தான்
நீற்றான்
கூற்றொரு பால் மங்கையான்
வார் சடையான்
கங்கை யானானவன்
புள்ளூர்ந்தான்
மார்விடந்தான்
நிழல் மணி வண்ணத்தான்
பூ மகளான்
நீண் முடியான்
நீள் கழலான்
ஆனவனுடைய காப்பு -ரஷை என்றபடி –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –