அவதாரிகை –
உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ
உன்னோடு சம்பந்தித்த திருமலை யாழ்வார் தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல்
ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –
பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப்பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-
———————————–
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-
பதவுரை
வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப,
ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆஸ்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.
————————————-
வியாக்யானம் –
வழி நின்று நின்னைத் தொழுவார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் சொல்லுகிறபடியே
வழி பட்டு நின்று உன்னை ஆஸ்ரயிப்பார்-
ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்யோ ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதியாசிதவ்ய –
விஜ்ஞாய ப்டஜ்ஞான் குர்வீத
உபாசனம் த்ருவா நு ஸ்ம்ருதி தர்சன சமா நாகாராதா பிரத்யஷாபத்தி
விசதே தத நந்தரம்-கீதை-18-55-
என்கிற சாஷாத்கார பர்யந்தமாகச் சொல்லுகிற உபாசனத்திலே நின்று –
(பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்
மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.)
வழுவா மொழி நின்ற மூர்த்தியரே யாவர் –
ஓன்று தப்பாதபடி யதா பூத வாதியான வேதத்திலே நின்ற மூர்த்தி யுண்டு
அதில் சொல்லுகிற ஸ்வரூபம் –
பரஜ்ஞ்யோதி ரூப சம்பத்திய ஸ்வேண ரூபேணாபி விஷ்பத்யதே -அத்தைப் பெறுவார்கள் –
பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும்-
ப்ராப்யத்தில் ஆதல்
பிராபகத்திலே ஆதல்
ஒரு கொற்றை வாராமே நித்ய விபூதியைக் கொடுக்கும்
ததீய சேஷத்வ பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –
அந்த ஸ்வபாவம் உண்டாயிற்று திருமலைக்கு
சீரான் -என்று சம்போதனை
அன்றிக்கே
மண்ணளந்த சீரை உடையவன் திருமலை இப்படிச் செய்யும் என்னுதல்-
மண் அளந்த சீரானதான திருமலை -என்னுதல்-
சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –
————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply