கடவுள் – வித்து–
ஊழிதோ றூழி… … …யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி……– திருவாசிரியம் – 4–
தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் – தானே..
வைப்பாம் … …
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்…
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்…
ஒக்கலை வைத்து … …
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்…
ஓவாத் துயர்ப்பிறவி … …
மூவாத் தனிமுதலாய் …
சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் …
—
எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும்–
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி…
அமைவுடை அறநெறி … … … …
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.–
என்னுள் கலந்தவன் … … … …
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே–
எப்பொருளுந் தானாய்… வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை…
எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –
பூவைகள் போல்……………..
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் …வான்புலன் இறந்ததும் நீயே.
துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப் பெற்றேதும் அல்லலிலனே.
யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே-
எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.
யானே என்னை … … .யானே நீஎன் னுடைமையும் நீயே…
என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் …
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என் னுள் வைத்தான்..
மாயம் செய்யேல் … … நேசம் செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே
ஊனில் வாழ் உயிரே… …தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்கூசம் செய்யாது கொண்டாய்
எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.
பற்ப நாபன்… … …
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்..
உணர்வி லும்பர் … … … யானும் தானா யொழிந்தேனே.
என்னுடைக் கோவலனே…
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு…
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை-
தாள்களை எனக்கே…
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ.
ஆறெனக்கு… … … எனதாவியும் உனதே…ஏகமூர்த்தி… … … உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.
மாயனென்… … …காயமும் சீவனுந் தானே…
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் – என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.
மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.
கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
நாழாலமர் … …
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.
கண்ணுள்ளே… …
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.
தளர்வின்றி…
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை…
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்…என்று கொல் சேர்வது… …
… … நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ…
பிறந்த மாயா … …
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே..
ஏகமூர்த்தி இருமூர்த்தி … ….. ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்…
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.
புகழுநல் லொருவனென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே.
மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்…
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய்.
விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்…
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்…
பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே
போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.
திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.
இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.
யாருமோர் நிலைமையனென வறி வரிய எம்பெருமான்…
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது…
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே
அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.
கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.
வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே.
—
ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.
சொன்னால் விரோதம் … … …
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை…
ஆரா அமுதே … … …
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ..
மானேய் நோக்கு நல்லீர் … … …
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை .
என்றுகொல் தோழிமீர் … … …
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான்
நிச்சலும் …
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.
காண்பதெஞ் ஞான்று… …
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்
பாதங்கள் … … …
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை
நாடொறும் … …
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான்
கழல்வளை … …
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்.
உணர்த்த லூடல்… …
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை.
நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம்..
காலம் பெற … …
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப்பேரையிற்கே.
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ …
மாயோனிகளாய் … ….. … எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ..
நீயும் நானும் … …தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.
ஒத்தார் … அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா ..
போகின்ற … … தாய் தந்தை உயிர் ஆகின்றாய்…
மேலாத்… …மேலாத் தாய் தந்தையும் அவரே…
முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்…
சிந்தையாலும் … தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்…
தாம்பாலாப்… …
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பிரான தெழில்நிறமே.
நிறமுயர் கோலமும் பேருமுருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்பிரான் பெருமையையே.
உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயிராயின காவிகளே.
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்…
கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.- திருவாசிரியம் – 1
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.-திருவாசிரியம் – 7–
முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்…
தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்…
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை…
தஞ்சமாகிய… …
… … மூவர் தம்முள்ளும் ஆதியை…
தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி…
யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே’
வரிவளையால்… …
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்… .
பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே…
தளர்ந்தும்… …
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே
நோலா தாற்றேன்… …. …
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே
பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே
என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்…
திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.
வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே.
அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.
எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே.
கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.
உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்…
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.
பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்…
மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.
அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி…
எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே.
உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்
இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.
—
மும்மூர்த்திகளைப் பிர்மா – விஷ்ணு – ருத்ரன் – என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி – என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் – ஐஸிஸ் – ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் – பிரீயா – தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு – இயா – பேல் (அஸ்ரியர்); தௌலாக் – பான் – மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் – அவலோகீதீசுரர் – மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் – பினா – சொக்மா (யூதர்); அஹுரமஜதர் – மித்திரர் – அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply