Archive for the ‘Divya desams’ Category

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

July 13, 2025

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.

ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)

ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )

ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.

கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்

ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை

ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.

ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி

உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,

கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்

ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.

அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)

புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.

கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.

பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி

கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்

ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்

அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,

குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)

குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.

இல் எத்தனை?-அன்பில்.

தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.

கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*
மேற்சென்று செய்யப் படும்’
*என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. .‘நல்வினை’-திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்-வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்-இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான
வீராணம் ஏரி இருக்கிறது.-‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.-காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.-இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக்கண்ணபுர மஹிமை–ஸ்ரீ சௌரி ராஜ ஸ்தவம்-

May 14, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், சன்னாநல்லுõர் அருகே நான்கு கிலோமீட்டார் தொலைவில் திருக்கண்ணபுரம் உள்ளது. வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் சிறப்பு! பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீர கோபுரம்! 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். சௌரிராஜப் பெருமாள்: திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். 

பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. நடையழகு! *இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. சக்கரத்தின் பெருமை! *அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். முனையதரையன் பொங்கல் வந்த கதை… *முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் : தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பூலோக வைகுந்தம் ! திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. திருவிழாக்கள்: 15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. துயர் துடைக்கும் ஊர்! ‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” திருவாய்மொழி 9-10-10 (3665) திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன

ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

 மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம் உத்பாலவதாக விமானம் காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு.-விமான தரிசனம் செய்ய முடியாத கோயில்! விமான தரிசனம் சுவாமியை தரிசனம் செய்த பலன்களைத் தரக்கூடியது. கோயில்களில் கருவறைக்கு மேல் இருக்கும் விமானத்தை சுவாமியின் வடிவமாகவே கருதுவர். ஆனால் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. உத்பலாவதகம் எனப்படும் இவ்விமானத்தில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்தை தரிசனம் செய்ய முடியாத வகையில் சுற்றிலும் உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது

ராமபக்தரான விபீஷணருக்கு தனிசன்னதி உள்ளது. மனித அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவிற்கு சேவை செய்த விபீஷணர், அவரது தெய்வ நடையைக் காண வேண்டுமென அவரிடம் வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே நடந்து காட்டினார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் விபீஷணருக்கு, விஷ்ணு நடையழகு காட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கிறது. சுவாமியின் நடையழகை தரிசிப்போரின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1. முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

2. சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர்.

3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும்.

7. இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும்.

8. சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும்.

9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும்.

11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும்.

14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான்.

16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார்.

ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து... செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய் தீர மருந்துண்டோ சொல் தோழீ என்ன உண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள் தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும் சுக்கைத் திகழத் தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடி கட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்து வைத்து ஓம் நம: என்னும் உமியைத் தூவி திருநீர்மலை யென்னும் நெருப்பை மூட்டி திருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து அமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந் நோய் தீருமம்மா ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து நாராயணனே நமக்கே பறை தருவானென்று பாடிப்பறை கொள்ளும் மருந்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் மருந்து செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள் பகரும் மருந்து அணியனார் செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளை யென்றும் நோயில்பட வொட்டாத மருந்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்து உன்னுள்ளம் நோய் தீர்வதற்கு இதுவேஉகந்த மருந்தம்மா காளமேக புலவரும் திருக்கண்ணபுரமும் கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கன மழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவ பக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்‘ என்றனர். காளமேகம் பார்த்தான். ‘சரி, உங்கள் பெருமாளைத் தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ…‘ என்று சொல்லி ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்‘ என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்.? என் கடவுப்ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்‘ என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து ‘அதெப்படி?‘ என்றார்கள். ‘ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே‘ என்று புதிரை விடுவித்தான். ’சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னான். கண்ண புர மாலே …..கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் …..அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம் …..உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ …..எண்ணத் தொலயாதே. கண்ண புர கோயில் கதவடைத்து… கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் என்னும் சிரக்கப் புரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று. திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள் பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது: உத்திரத்துக்கு ஓர் நாள் உரோகணிக்குப் பத்தாம் நாள் சித்திரைக்கு நேரே சிறந்த நாள் – எத்திசையும் கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ் சவுரி நார யணன்பிறந்த நாள்.- திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும் திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள்.திருவாரூர் – தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல் வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத் தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார். ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலை ஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளை யிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார். சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார். இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற் சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்: இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி முனையா கலவி முயங்கியவா றெல்லாம் நினையாயோ நெஞ்சத்து நீ. *

திருக்கண்ணபுரத்தின் சிறப்பை கூறும் பாடல்கள்: பாடல் 1: கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும் என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் .. முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும் முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும் தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும் மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான் செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான் சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான் சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான். கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர வேறோர் வலைச்சி வலை வீசிட நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … * கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன். திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன் எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். கண்ணபுரம்… நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன் நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன் உத்பலாவதக விமானத்தை நினைப்பேன் உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். கண்ணபுரம்… கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன் கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன். பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன் பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். கண்ணபுரம்.. எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன். ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன். கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன். கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்

    திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம் உபய வேதாந்த வித்வான் டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய ஸ்ரீசௌரிராஜஸ்தவத்தின் பகுதி ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாதகேசம்

    உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்! சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸீந்தரம்!! பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்! பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்!

    1-திருமேனி ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்! ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!! அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி, பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச்சக்கரம், ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சசௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக.

    2-யாவர்க்கும் அரியன் தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்! ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸீரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!! தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும், மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக்கொண்ட திருமார்பை உடையவனும், நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும், திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக.

    3-திருமேனி அழகு, ஒளி நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா! ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீலவர்ண இவ ஸாநுமாந் புவி!! பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன். ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய், சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுளகில் விளங்குகிறாய்.

    4-திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல் நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர்கøணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி! ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தரஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபி ரஹோ ப்ரவிபாதி தீப்தா!! நீலபர்வதத்தின் கொடுமுடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தரஹாரம், ஸ்ரீகௌஸ்துபம் முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்!

    5-திருவடிகள் யத்பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீஸீதாஸ் ஸதயம் ஸகோதா: ஸம்வாஹயந்தி ஸீகுமாரதரை:கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!! ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸீவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸீகுமாரமான தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர். ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக.

    6-திருவடிகள் யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்! சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!! காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர். சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருளவேணும்.

    7-திருவடிகள் யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத்வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:! யச்சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பதயுகம் தவ தந் நதாஸ்ம:!! உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தையுடையவனாவன்,(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர். உன்னையே சரணாகாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத்திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர். அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

    8.திருப்பாதுகைகள் சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே! ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!! ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன. தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக.

    9.பாதபத்ம பீடம் சௌரே!! ஸீகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந! தத்தே கிமப்ஜம், பதபத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!! ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரைமலர், (உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன?

    10-திருவடிகளின் சோதி யத்வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:! புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!! ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு, அலர்ந்த தாமரையின் வடிவம்போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்!

    11-திருவடி நகங்கள் சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:1 ஜ்யோத்ஸ்நாஸ் தரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும் புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டுபண்ணும்வனவுமான நகங்களிலிருந்து வெளிவருகிறது சந்திரிகையாகிய ஒளி: இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின் வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்!

    12-திருத்தொடைகள் சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!! ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக்கவர வல்லன. உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன.

    13-அரை (கடி), இடை தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே! அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற்குன்றுகளை அவமதிக்கின்றன; உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது.

    14-இடது திருக்கை வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்! ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சயவஸிஹ தேவ!! தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும். (அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும்.

    15-வலது திருக்கை நநு வதாந்யதமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீகரணோத்யதாம்! ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!! பெருமானே! மிகச்சிறந்த கொடைவள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும் ஸ்வாதீனமாக வாங்கிக்கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடுகூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன?

    16-வலது திருக்கை உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே! வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!! ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன்போல் வலது திருக்கையைக்குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய்.

    17-வலது திருக்கை ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீபுத்ர்யவேக்ஷ்ய! அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்கயேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!! ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக்கொள்ள விரும்புவதுபோல் நீ உனது வலது திருக்கரத்தை நீட்டிக் குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய். அதை வஸீவின் திருமகளான பத்மிநிதேவி நன்கு பார்த்து, ‘நம்போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்துகொள்ளப்போகிறாரா?’ என்ற சங்கையால் உனது ஸமீபத்தை ஒருபொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்?

    18-திருநாபி தவத்-திவ்ய-ஸீந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே! ஸ்ங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!! ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம், ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க்கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய் விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம்.

    19-திருநாபி மலர் த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந்நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய! தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக்கை,வலக்கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதிமூடியும் உள்ள நிலையில் உள்ளது. ஸ்ரீலக்ஷ்மிதேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்குதானோ இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம். சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு.

    20-திருநாபி மலர் த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்! த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம்ஹி சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ரஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர். அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது; இதனால் துஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது.

    21-திருவயிறு த்வயா நிகீர்ணம் ப்ரளயேப்யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:! குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!! ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு, மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக்கொள்ள விரும்புகிறதா, என்ன?

    22-அரை வடம் உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:! கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ்பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள், நீ அண்டங்களை விழுங்கியபோது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது.

    23-திருவரை கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந! தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிகவிசித்ர இவாத்ய சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக்கட்டிச் சுற்றி நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ, நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த தாதுப் பொருட்களால் விளங்குவதுபோல் பிரகாசிக்கிறாய்!

    24-திருக்கைகள் ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:! இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரசயந்தி தியம் ந:!! உழல்தடிபோல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும், செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம்.

    25-திருமார்பில் பிராட்டி ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநகப்ரபா! கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரியதமா இவ சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறைபோல் விளங்குகின்றது உனது திருமார்பு. அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமிதேவி. உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்) உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன?

    26-திருமார்பில் பிராட்டி கமலாலயா ஹி கலிதாவஸதா ருசிரம் கடவாட- ஸீத்ருடம் விபுலம்! ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!! தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவுபோல் மிகத் திண்ணியதும் விசாலமுமான ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை. அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான்.

    27-ஸ்ரீகௌஸ்துபம் வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி- தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:? ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான உன்திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத்தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி) தரித்துக்கொண்டிருக்கிறாயா,என்ன?

    28-திருமார்பில் முத்துவடங்கள் நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர=மௌக்திக-ஹாரா:! தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!! கறுப்பான மணிப்பாறைபோல் விளங்கும் உன்திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்துவடங்கள் மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலையருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன.

    29-திருப்பூணுல் த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து சௌரே த்வத்-யஜ்ஞஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந்த்வலோக-த்ருப்தா:!1 ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன்திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக்கொண்டு, மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன.

    30-வனமாலை ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா! கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!! ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிறமலர்கள் வாய்ந்ததும் உனது திருக்கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக உன்னைச் செய்துகொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத்தான் கவர்வதில்லை.

    31-பாஞ்ச சந்நியம் சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்! பரிஹஸதீவாக்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!! ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக்கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும் பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும் அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வதுபோல் இருக்கிறது.

    32-சக்ராயுதம் த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ! சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!! தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன?

    33.ப்ரயோக சக்கரம் ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய! ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ணபுரேச!! திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான். எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோகநிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே.

    34-பாஞ்சசந்நியம் ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ணபுரீச! ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப் ய சங்க ஏவ லஸதீவ கராப்ஜே!! திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே. உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும்.

    35-திருவதரம் குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத்ஸ்மிதாதஹஹ! பக்தகோசராத்! பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!! பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு), பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக). இது உனது புன்முறுவலால், குந்தமலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய் இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல்

    36.புன்முறுவல் த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:! பீஜபூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்புபோலே வெளுப்பானவை உன் பற்கள். நீ புன்முறுவல் செய்யும்போது உன் அதரத்தின் சிவப்பால் இப்பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப்போல் அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன.

    37-திருச்செவிகள் ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே! ஸபுஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதிபிம்ப்யமாநே!! கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ்பாகத்தில் குண்டலங்கள் அணிந்த உன் திருச்செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன.

    38-திருக்கண்கள் சபர-ஸ்புரிதாபிபாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ! மம பாபததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபிவர்ஷணாத்!! உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன. இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும்.

    39-திருப்புருவங்கள் அநீகபஸ் தே கலு கார்யஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய! தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!! உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார். அப்புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும்.

    40-திருநெற்றி தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:! தாபத்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!1 ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திருநெற்றியிலிருந்து வெளிவருகின்றது காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம். தாபத்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது.

    41-திலகம் புவிசந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்! இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!! தேவனே! இப்புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில் நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய். பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காககஇதை தரித்திருக்கிறாயா, என்ன?

    42-திருமுக மண்டலம் பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே! லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!! ஸ்ரீசௌரிராஜனே! இளம்பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது, உனது திருமுக மண்டலத்தைப் பூர்ணசந்திரனாக மதித்து, பயத்தினால், உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன?

    43-திவ்யபீடம் அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகேநார்யமகோடி- பாஸா! ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம். அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது, இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது).

    44-திருக்குழல் சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே! தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் த்ம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!! ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப்பட்டையிலிருந்து வெளிவந்த நுõல்கள் எவையோ, கறுத்துத்திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப்பட்டவையாகித் தலைக்கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன.

    ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே- உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!! *

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ கண்ணபுரநாயகி ஸமேத ஸுவ்ரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

    January 20, 2025

    ஸ்ரீ திருவல்லிக்கேணி -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

    பகல் பத்து முதல் நாள்–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருக்கோலம்
    ஸ்ரீ பார்த்தா சாரதி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மஹா மண்டலத்தில் திரு ஓலக்கம் -1-45-pm திரு ஆராதனம் -தளிகை -அருளப்பாடு -2-11 pm
    சேவை தொடக்கம்-திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திரு மொழி –2-25 pm தொடங்கி -4-20-pm வரை 2 பதிகம் –
    சாற்று முறை -தீர்த்த்ம் சடகோப விநியோகம்
    உள் புறப்பாடு -6 pm மணிக்கு தொடங்கி -வரதர் சந்நிதி திருமழிசை ஆழ்வார் சந்நிதி ஆனால் சந்நிதி -6-45-pm
    ஆளவந்தார் சந்நிதி -7-25-pm
    ஒய்யாளி -பின்பு 8-00 pm -மணிக்கு

    தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
    மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
    என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
    மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
    வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

    மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு-அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே
    இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே –நம்பி என்கிறது-என்னுடைய உஜ்வலமான நாமம் இந்த லோகத்தில் எவ்வளவு செல்லும்
    அவ்வளவும் உனக்கு ராஜ்ஜியம் நடக்க கடவது என்று அருளி செய்த
    ராமனாய்
    மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்

    கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
    உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
    மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
    அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ
    –81-என்கிறபடியே அவ் அவதார குணம் எல்லாம் இங்கே பிரகாசிக்கும்படி திருமலைக்கு- நிர்வாஹகனாய் இருக்கிறவனுக்கு –

    பகல் பத்து -2 நாள் ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம்

    சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க 
    குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது 
    பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப 
    கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே -3-6-8 – –

    சிறு விரல்கள் தடவி பரிமாற –
    கரும் சிறுக்கன் -என்ற பருவத்துக்கு தகுதியாம்படி சிறுத்து இருந்துள்ள திரு விரல்கள் ஆனவை –
    திருக் குழலின் துளைகளில் புதைக்க வேண்டுவது –
    புதைத்து திறக்க வேண்டுவது –
    திறக்கைகாக குழலின் துளைகளை தடவிக் கொண்டு வ்யாபரிக்க

    செம் கண் கோட –
    இட வணரை இடத் தோளோடே சாய்த்து துளை தோறும் கண்ணோட நின்று ஊதுகையாலே 
    சிவந்து இருந்த திருக் கண்கள் ஆனவை வக்கரிக்க 

    செய்ய வாய் கொப்பளிக்க –
    வாய் கடை கூட -என்கிறபடியே
    இரண்டு கடை வாயையும் குவித்து ஊதுகிற போது –
    சிவந்த திருப் பவளமானது அக வாயில் உண்டான வாயுவினுடைய பூரிப்பாலே குமிழ்க்க 

    குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப-
    உலாவி உலாவி குழலூதுகிற ஆயாசம் பொறாமல் ஸௌ குமார்யத்தாலே 
    குறு வெயர்ப்பு அரும்பின-பரம்பின – திருப் புருவமானது மேலே கிளர்ந்து வளைய 

    கோவிந்தன் குழல் கொடூதின போது –
    கோ ரஷணத்திலே தீஷிதனாய் –
    அவற்றை மேய்த்துக் கொண்டு திரியுமவன் –
    அவன் மேய்ந்து வயிறு நிறைந்த ஹர்ஷத்தால் –
    சர்வ ஜந்து ஜாத மநோஹரமான  திருக் குழலைக் கொண்டு ஊதின போது 

    பறைவையின் கணங்கள்
    பஷிகளினுடைய திரள்கள் 

    கூடு துறந்து –
    தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு  

    வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப –
    குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு –
    வெட்டி விழுந்த  காடு போலே பரவசமாய் கிடக்க 

    கறைவையின் கணங்கள்-
    பசுக்களினுடைய திரள்கள் ஆனவை 

    கால் பரப்பி இட்டுக் –
    பாரவச்யத்தாலே கால்களை பரப்பி 

    கவிழ்ந்து இறங்கி –
    தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு 

    செவி ஆட்டகில்லாவே –
    செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று 
    செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன — 

    பெரியாழ்வார் திரு மொழி சாற்று முறை -உள் புறப்பாடு

    ————————————-

    பகல் பத்து -3 நாள் ஸ்ரீ காளிங்க நர்த்தன திருக்கோலம்

    திருப்பாவை -நாச்சியார் திரு மொழி -ஸேவை9 பத்து வரை

    மகுடியும் வாசிப்பார்கள் புறப்பாட்டின் முடிவில்-

    ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
    பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
    வாய்த்த காளியன் மேல் நடமாடிய
    கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

    ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
    பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
    பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
    அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
    போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
     -12-7-

    பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
    விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
    அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
    கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

    நீள் கடம்பு –
    இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

    புகப் பாய்ந்த –
    கால் ஆழக் குதிக்க

    வாய்த்த காளியன்
    தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
    அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

    மேல் நடமாடிய-
    ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
    ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

    கூத்தனார் வரில் –
    ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

    கூடிடு கூடலே-
    உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

    —————————

    பகல் பத்து -4 நாள் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலம்

    பெருமாள் திருமொழி ஸேவை-

    வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
    வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
    மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
    வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
    செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
    தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
    அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

    வந்து எதிர்ந்த தாடகை
    தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
    தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

    தன் உரத்தை கீறி-
    ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

    வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
    செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
    வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

    மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
    ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
    யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

    வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
    யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
    மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

    செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
    சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
    சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
    அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

    அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
    கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
    தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

    ———

    பகல் பத்து -5 நாள் ஸ்ரீ ஏணிக் கண்ணன் திருக்கோலம்

    முதல் ஆயிரம் சாற்று முறை ஸேவை

    காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
    சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
    ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
    பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

    காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
    க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
    அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து

    எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
    விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
    பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –

    இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
    பூத்து நின்றது ஆய்த்து –

    இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
    சொல்லிற்று –

    மா பிளந்த –
    ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
    பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்

    கைத்தலத்த கண்ணன் என்பரால் –
    ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
    என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்

    ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
    ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
    யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
    இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
    அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –

    பேய்ச்சி பாலை உண்டு –
    தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
    அவ்வழியாலே அவளை முடித்து –

    யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
    பின் மண்ணை உண்டு –
    க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
    சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
    கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
    சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்

    பண்டு ஓர் ஏனமாய வாமனா —
    கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
    அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –

    1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
    2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
    க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
    இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

    ——————————————————

    பகல் பத்து -6 நாள் ஸ்ரீ பரம பத நாதன் திருக்கோலம்
    இன்று தொடங்கி மூலவர் தர்சனம் -மீசை இல்லாமல் ஐந்து நாள்களுக்கு ஸேவை

    பெரிய திரு மொழி தொடக்கம்
    ஸ்தல பாசுரம் -சேவை பொழுது மூலவர் ஹார்த்தி -ஐந்து நாள்களுக்கு மீசை இல்லாமல் சேவை

    விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
    செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
    சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    -2-3-1-

    அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
    விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
    கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
    தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

    வியாக்யானம் –

    அடுத்து –
    மேல் விழுந்து கிட்டி

    ஆர்த்து எழுந்தாள் –
    ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு –
    கிளர்ந்து வந்து தோற்றினவள் –

    பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை
    (காதுக்கும் இது உப லக்ஷணம்
    நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
    அயில்
    கூர்மை கூரிய
    திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்

    விளங்கு இத்யாதி
    கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி
    நித்ய சூரிகள் கார்யத்தை நிர்வஹித்து கொண்டு போகிறவன்-

    நண்ணார் -இத்யாதி –
    சத்ருக்கள் முன்பே
    இந்த்ரனுடைய அபிசந்தி பூர்வகமாக வருகிறது ஆகையாலே
    (நண்ணார்-எதிர்த்து வந்த இந்திரனும் -அவனுக்கு எதிரிகளான கோப கோபிமார்கள் -)
    பெரிய வேகத்தோடு கோஷித்துக் கொண்டு தோற்றின
    மஹா வர்ஷத்தை கோவர்த்தன கிரியைத் தரித்து
    பண்ணின உபகாரத்தையும் அறியாதே
    ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத (அநந்யார்ஹ -ஆகிஞ்சன்யம்)பசுக்களை
    நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று

    தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –

    —————

    ————–

    பகல் பத்து -7 நாள் ஸ்ரீ பகாசூர வத திருக்கோலம்

    பெரிய திரு மொழி -3 பத்தும் 4 பத்தும் ஸேவை

    தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
    பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
    தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
    ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

    —————

    பகல் பத்து -8 நாள் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக திருக்கோலம்

    பெரிய திருமொழி -5-6-7 ஸேவை

    ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
    மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
    தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
    ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

    இரக்கம் முதல் படி -அருள் அடுத்து – இன்னருள் அடுத்து -இத்தை உபபாதிக்கிறது மேல் –
    இங்கு ஒழி-பிரிவு இருந்தால் தானே சேர்க்கையில் சுகம் உண்டு இங்கேயே நில்
    சொற்கள் வந்து-கர்ணா கர்ணிகையாய் வந்து

    ஏழை –
    அஞ்ஞன்
    ஏழை என்ன அஞ்ஞன் என்று காட்டுமோ என்னில் -சபலன் என்ற படி –
    விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே –
    அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் –
    என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
    ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –
    யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் –
    விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
    தர்மஞ்ஞா -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
    (மற்ற வேறே பெண்ணை ஏர் எடுத்துக் பார்க்காத யசஸ்ஸூ )
    இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –

    (விஷய சாபல்ய ஹேதுவான அஞ்ஞானம்
    அபோக்யங்களில் போக்யதா புத்தி பண்ணுவது –
    கீழ் இரண்டையும் -அவாந்தர பேதங்களைச் சொன்னது இதன் குரூரம் அறிவதற்காக
    விஷய ப்ராவண்யமாக பரிணமிக்கும் விபரீத ஞானம் -)

    ஏதலன் –
    சத்ரு
    தாயைச் சோறு வேண்டும் போது
    வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –
    ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி
    (யுத்த காண்ட ஸ்லோகம் -கருட இறக்கையால் நாக பாசம் –
    விரோதிகள் இடம் வாத்சல்யம் -குகன் தாய் இடம் விரோதி )
    மர்யாதா நாஞ்ச-என்கிறவர்க்கு   எதிர் தட்டாம்படி
    மர்யாதா பங்கம் பண்ணி இறே இருப்பது
    இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது-
    (ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -அனுஷ்டானத்தைச் சொன்னவாறு )

    கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்
    கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்
    பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே –
    இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே
    இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி –
    இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –

    இம் மூன்றாலுமாக
    பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து –

    ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி-
    இவை ஒன்றும் பாராதே யாய்த்து இரங்கிற்று –
    ருஷீணாம் அக்னி கல்பா நாம் -என்று
    ஜன்ம வித்யா வ்ருத்யங்களை உடையராய் இருக்கும்
    உபாசகரான ருஷிகளுக்கும்
    அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும் இளைய பெருமாளுக்கும்
    சாதன சித்த்யர்த்தமாகவும்
    போக சித்யர்த்தமாகவும்
    இரங்கும் இரக்கத்தை இறே
    இவர் அளவில் இரங்கிற்று –
    (சாதனா நிஷ்டர்களுக்கும் கைங்கர்யமே பிரார்த்திக்கும் இளைய பெருமாளுக்கும்
    இவர் இரக்கமே உபாயம் )

    அதவா
    என்னாது இரங்கி –
    இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –
    ந தர்ம நிஷ்டோஸ்மி-ந ஆத்மவேதி –
    அமர்யாதா-
    (நல்லவை இல்லை தீயவை சகலமும் உண்டு என்பதுக்கு இரண்டு பிரமாணங்கள் ஸ்தோத்ர ரத்னம் )
    ராவணே நாம -இத்யாதிகளில்
    சரணம் புகுவார் ஸ்வ நிகர்ஷத்தை  முன்னிட்டு
    கொள்ளக் கடவர்கள் என்னா நின்றது இறே –

    ஸ்ரீ குகப் பெருமாள் சொல்லக் கடவ பாசுரத்தை
    இவர் சொல்லுவான் என் என்னில்
    அவருடைய கருத்தாலே-

    மற்று அவர்க்கு –
    அவனுக்கு அதுக்கு மேலே –

    இன்னருள் சுரந்து –
    இவ் விஷயீ காரத்துக்கு மேலே
    இனிய அருளைச் சுரந்து
    இன்னருள் –
    தன் பேறான அருள்

    சுரந்து –
    வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை
    சுரக்குமா போலே
    குணங்களைச் சுரந்து –

    இத்தை உபபாதிக்கிறது மேல் –
    மாழை மான் மட நோக்கி-
    நிகர்ஷம் சொன்னால்
    பிரதமத்தில் முன்னிடக் கடவ
    அர்த்தத்தைச் சொல்லுகிறது –
    முக்த்தமான மானின்  உடைய மிருதுவான நோக்குப் போலே
    உள்ள நோக்கை உடையவள் –
    இத்தால் சம்பந்தம் இருவரோடும் ஒத்து இருக்கச் செய்தே
    இவளுடைய கடாஷத்தின் உடைய முற்பாடு சொல்லுகிறது –
    இவனைப் பாரா அவனைப் பார்க்கும் –
    ப்ரேஷிதாஜ்ஞாச்து கோசலா இறே –
    பிரணயினி பிரணயிகளுக்கு வாயால் சொல்லுவது இல்லை இறே –
    (உள்ளே ஓடும் எண்ணத்தை அறிபவர் கோசல தேசத்தார்
    அதுக்கும் மேலே அபிமத அநுரூப பிரணயி )
    இத்தனை குறைவாளனை  விஷயீ கரியாது ஒழிகிறது என் –
    என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
    இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால்
    இவள் வழியே போவான் ஒருவன் இறே –

    யுன் தோழி –
    உனக்கு ஸ்வாமிநி- என்னாதே
    தோழி என்கிறார் -நீர்மையாலே
    சீரியார் சேஷ பூதரையும் -அண்ணா ஆச்சி -என்னா நிற்பார்கள் இறே
    இவர்கள் தான் இங்கன் அல்லது சொல்லா நிற்க மாட்டார்கள்
    மித்ர பாவேன-
    (சர்வ லோக சரண்யனாக வந்தவனை -நண்பனாகக் கொண்டு )
    மித்ர மௌபயிகம்-
    தேன மைத்ரீ பவதுதே –
    (காலைப் பிடிக்கவும் யோக்யதை இல்லா ராவணனுக்கு உபதேசம் நட்பு கொள்வாய்
    உன் குடி இருப்பு நிலைக்க -சரணாகத வத்சலன் என்று சொல்லியும் )

    இவ் வார்த்தை போழ்க்கனாய் இருக்கை
    (உபசார வார்த்தையாக கபடமாக இல்லாமல்
    பிராப்தி சமயத்தில் நிரஞ்சனம்- சாம்யா பத்தி-ஸாதர்மம் ஆகதா
    சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
    குண சாம்யத்தையும்
    போக சாம்யத்தையும்
    தேக சாம்யத்தையும்
    போக்ய சாம்யத்தையும்
    கொடுத்து இறே வைப்பது –

    உம்பி யெம்பி –
    உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –
    இங்கனே சொல்லுவான் என் என்னில்
    பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை
    அவரோபாதியாக நினைத்து இருக்கும்
    இளைய பெருமாள் கருத்தாலே

    பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
    தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் சச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
    தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட வருளினாய் -என்றும்
    சொல்லுகிறபடியே
    பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -என்று
    சம்சாரத்தில் நின்றும் ஒருவன் முக்தனாய்ச் சென்றால்
    ஸ்ரீ பாதம் விளக்கி ஸூரிகள் ஆதரிக்கக் கடவர்கள்
    என்னா நின்றது இறே
    அவர்களிலே பிறி கதிர் பட்டு  போந்தவர் இறே இளைய பெருமாள்

    இத்தால்
    ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் பண்ணிக் கொடுத்த படி-
    தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் -என்றும்
    அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
    சொல்லக்  கடவது இறே  –
    (பாகவத அபிமானம் பெற்றுக் கொடுப்பதே சேமம் விமலத்வம் )

    என்று ஒழிந்திலை-
    அவ்வளவிலே விட்டிலை
    பிராட்டியை தோழி என்றும்
    இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே
    ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –

    உகந்து –
    உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்
    உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே
    (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )

    தோழன் நீ எனக்கு –
    ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி
    புருஷகாரத்தை முன்னிட்டு
    ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
    அநந்தரம்
    உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே
    அத்தைச் சொல்லுகிறது –
    (நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

    இங்கு ஒழி –
    பின்பு தொடர்ந்து போகப் புக்கால் காணும் இவரும் ( கலியனும் )-
    படை வீடு கெடாமைக்கு ஒருவனை வைத்தோம்-
    வழி யடி கெடாத படி   இங்கே இரும்-
    ஸ்வ இச்சா அனுரூபமாக வன்றியிலே
    க்ரியதாம் இதி – யிலே அங்கும் உள்ளது-
    (சிஷ்யச்ச தசஸ் ச என்று சொல்லி பரதாழ்வான் -வருவான் அவனுக்கு வழி காட்ட வேண்டுமே
    இதுவும் பாகவதருக்கு சேஷமாக்குதல்
    தான் ஆசைப்பட்ட -இஷ்ட விநியோக அர்ஹனாக்கி )

    என்ற சொற்கள் –
    அவ் வர்த்தங்கள் அன்றிக்கே
    அப் பாசுரம் காணும் இவரை வருத்துகிறது

    வந்து –
    ஒரு கால விசேஷத்திலேயாய் இருக்க
    கர்ண பரம்பரையாக வந்து
    இவர் நெஞ்சிலே யாய்த்து ஊற்றி இருந்தது
    இப் பாசுரம் தன்னை
    குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
    ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –
    ( வேதம் தமிழ் செய்த பரகாலன் )

    அடியேன் மனத்து இருந்திட-
    சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி -என்னுமா   போலே
    இவர் நெஞ்சிலே யாய்த்து வேர் விழுந்தது
    சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம்
    சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடைக்குமா போலே
    சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –

    (சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி பிரியாணி மதுரானி அம்ருதாணி பரதன் பேச்சைப் பற்றி பெருமாள் –
    எப்பொழுது நான் சேருவேனோ என்று எல்லாம் பிதற்றி
    சேஷன் வார்த்தை சேஷி திரு உள்ளத்தில் அது
    இங்கு ஒழி -பரதன் கைங்கர்யத்துக்காக சொன்னது போல் எனக்கும் கொடுத்து அருள வேணும் )

    ஆழி வண்ண –
    ரத்னங்களால் கடல் நிரம்பி இருக்குமா போலே
    ஆஸ்ரயநீயத்துக்கு ஏகாந்தமான  குணங்களால் நிரம்பின கடல் –
    அபார காருண்யா -இத்யாதி
    யதா ரத் நாநி ஜலதேர சந்க்க்யே யானி புத்ரக
    ததா குணாஹ்ய நந்தச்ய
    அஸங்யேய மகாத்மான
    உத்பத்தியும் அங்கேயுமாய்
    வாசமும் அங்கேயுமாய்
    புறம்பு ஓர் இடத்தில் அன்றிக்கே
    எல்லாரும் ஆதரிக்கும்படி ரத்னங்கள்
    இருக்குமாப் போலே யாய்த்து குணங்கள் இருக்கும்படி

    அதவா
    கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே
    வடிவைக் கண்ட போதே
    சாம்சாரிகமான தாபங்கள் உடைய ஆறும்படி யாய்த்து இருப்பது –

    நின்னடி இணை  –
    அனந்தரத்தில் சரணவ் என்கிற பதத்தை நினைக்கிறது –
    (பூர்வ வாக்ய அர்த்தமே இப்பாசுரம் -ஆழி வண்ண நாராயண -)

    அடைந்தேன்
    பிரபத்யே வர்த்தமான கிரியா பதம் அமுக்கியம் இவருக்கு

    அணி பொழில் திருவரங்கத் தம்மானே
    ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே
    நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
    அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது

    அணி -என்று
    பொழிலுக்கு விசேஷணமுமாய்
    கோயிலுக்கும் விசேஷணுமுமாய்  இருக்கிறது
    அதாகிறது
    சம்சாரத்துக்கு ஆபரணம் போலே இருக்கை
    சோலை வாய்ப்புக் கண்டு சாய்ந்தால் போலே இருக்கச் செய்தேயும்
    ஆஸ்ரிதர் தேட்டமாய் அன்றோ இங்கு சாய்ந்து அருளிற்று

    அம்மானே -உடையவன் ஆகையாலே
    உடைமை தேட்டமாய் அன்றோ
    இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –

    ——————

    பகல் பத்து -9 நாள் ஸ்ரீ முரளி கண்ணன் திருக்கோலம்

    பகல் பத்து -10 நாள்-சாற்றுமுறை – ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்

    இராப்பத்து -2 நாள் வேணுகோபாலன் திருக்கோலம்
    5 நாள் ரத்னாங்கி ஸேவை
    6 நாள் திருவேங்கடமுடையான் திருக்கோலம்
    7 நாள் -முத்தங்கி ஸேவை
    8 நாள் -ராஜ மன்னார் ஸேவை
    9 நாள் -கோவர்த்தன கிரி திருக்கோலம்

    —————————

    பகல் பத்து முதல் திரு நாள்
    நம் பெருமாள் பீதாம்பரம் -மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து அருளி
    ரத்ன பாண்டியன் கொண்டை சாற்றி அருளி
    திரு நெற்றிப் பூ சாற்றி
    ஸேவை சாதித்து அருளுகிறார்

    அரங்கன்
    வைகுண்ட ஏகாதசி உற்சவம் : பகல் பத்து 3ஆம் நாள் நாச்சியார் திருமொழிக்காக
    நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து
    அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம்
    பின்புறம்
    அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார்


    நீராட்டு உத்சவம் –
    பகல் பத்தில் நான்கு நாள்கள்
    காலை பெரிய வீதிப்புறப்பாடு 8-20 தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து நீராட்டு மண்டபம் வந்து சேர்க்கிறாள்
    பின்பும் போர்வைகள் களைதல்-உபசாரம் -நலுங்கு -நீராட்டம்
    பின்பும் குளக்கரை புற்ப்பாடு
    மாலை மாத்துதல்
    பெரியாழ்வார் விருந்து முதல் நாள் -நம்மாழ்வார் விருந்து அடுத்த நாள் -ஆளவந்தார் விருந்து அடுத்த நாள்

    அடுத்து உடையவர் விருந்து -அடுத்து பேயாழ்வார் விருந்து –பூதத்தாழ்வார் விருந்து –

    ————

    ஸ்ரீ ஆண்டாள் -நாச்சியார் திருக் கோயிலே திரு அத்யயன உத்ஸவம்
    பகல் பத்து முதல் நாள்
    ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் மூல ஸ்தானத்தில் -கோபால விலாஸத்தில் -இருந்து பகல் பத்து மண்டபத்துக்கு மாலை புறப்பாடு
    ஸ்ரீ வேதாப்பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாஷித்து கோபால விலாஸம் சேர்தல்
    விண்ணப்பம் செய் கோஷ்ட்டி
    ஸ்ரீ பெரிய பெருமாள் கருட வாகனம் -ஸ்ரீ பெரியாழ்வார் யானை வாகனம் -ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி கல்யாணம் மண்டலத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம்
    இரவில் நாச்சியார் மாட வீதி -பெரிய பெருமாள் மாட வீதி கண்டருளி தோளுக்கு இனியானில் பகல் பத்து மண்டபம் சேர்தல்
    ஆழ்வார்கள் பகல் பத்து மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல்
    திருவாராதனம் கோஷ்ட்டி அருளப்பாடு -திருப்பல்லாண்டு வியாக்யானம்
    பெரியபெருமாள் பக்தி உலாவுதல்
    ஸ்ரீ ரெங்க மன்னாருடன் புறப்பாடு -மூலஸ்தானம் சேர்தல்
    முதல் நாள் மட்டுமே இரவில் நடக்கும்
    இதே போல் இராப்பத்திலும் முதல் நாள் மட்டுமே பகலிலே நடக்கும்
    வியாக்யானம் பாசுரங்கள்
    2 நாள் -சென்னியோங்கு வியாக்யானம்
    3 நாள் -திருப்பாவை
    4 நாள் -ஊனேறு செல்வம்
    5 நாள் -திருமாலை
    6 நாள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு -வாடினேன் வாடி
    7 நாள் -தூவிரிய மலர்
    8 நாள் -பண்டை நான் மறை
    10 நாள் -தெள்ளியீர் -அக்கும் புலியின் -முந்தூர்ஸ்
    10 நாள் -அமிர்த மதனம் -திரு நெடும் தாண்டகம் –
    வைகுண்ட ஏகாதசி
    காலை ஸ்ரீ பெரிய பெருமாள் தோளுக்கு இனியானாலும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி
    விரஜை தீர்த்தம் பிரசாதம்
    ஸ்ரீ வைகுண்ட வாசல் திறப்பு -ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தால் -மாடவீதி கந்தாடை வீதி எழுந்தருளி இராப்பத்து மண்டபம் சேர்தல்
    முதல் நாள் திருக்கொட்டகையிலே நடக்கும்
    திருவாய் மொழி துவக்கம் -அரையர் அருளிப்பாடு -உயர்வற muthal பாசுரம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பக்தி உலாவுதல்
    அரையர் வியாக்யானம் உயர்வற உயர் நலம்
    மற்ற நாள்கள் வியாக்யானம் பாசுரங்கள்
    2 நாள் -கிளர் ஒளி இளமை
    3 நாள் -ஒழிவில் காலம்
    4 நாள் -ஒன்றும் தேவும்
    5 நாள் -எங்கனேயோ
    6 நாள் -உலகமுண்டா பெருவாயா
    7 நாள் -கங்குலும் பகலும்
    8 நாள் -நெடுமாற்கு அடிமை
    9 நாள் -மாலை நண்ணி
    10 நாள் -சாத்து முறை -தாள தாமரை -முனியே நான்முகனே
    11 நாள் -இயற்பா சாத்துமுறை
    8 நாள் -திருவேடுபரி -குதிரை வாகனம் புறப்பாடு -இராப்பத்து ஸ்ரீ ஆண்டாள் சென்னியில் நடக்கும்
    நீராட்ட உத்ஸவம்
    பிரியா விடை
    இரவில் ஸ்ரீ ஆண்டாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பாடு -மாட வீதி வழியாக ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதி சேர்தல்
    அங்கு ஸ்ரீ ஆண்டாள் ஏகாந்த திருமஞ்சனம்
    கைத்தல ஸேவை
    பெரிய பெருமாள் மூல ஸ்தானம் சேர்தல்
    திருவாராதனம்
    அரையர் வியாக்யானம் -திருப்பாவை முதல் பாட்டு -மற்ற பாசுரங்கள் ஸேவை
    ஸ்தலத்தார் உத்சவ வைபவம் வாசித்தல் -பஞ்சாங்கம் வாசித்தல் –
    பொது ஜன ஸேவை
    அதிகாலை ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு -ஸ்ரீ பெரியாழ்வார் மங்களா ஸாஸனம் -மூல ஸ்தானம் சேர்தல்
    ஸ்ரீ ஆண்டாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படி களைந்து திருவடி விளக்கம்
    அரையர் நாள் பாட்டு -தீர்த்த கோஷ்ட்டி
    விடாய் ஆற்றி மண்டபங்களில் விடாயாற்றி யாகி எண்ணெய் காப்பு மண்டபம் சேர்தல்
    பட்டர் பிரான் சுருள் கோஷ்ட்டி
    ஸ்தலத்தார் திருவாசிரியம் ஸேவித்தல்
    எண்ணெய் காப்பு சேவை -ஷோடச உபசாரம்
    பக்தி உலாவுதல்
    நீராட்டத்தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்
    ஈரவாடை தீர்த்தக்கோஷடி பக்தி உலாவுதல் -அம்மானை விளையாடுதல் -படியேற்ற சேவை
    முதல் நாள் காலை யில் தங்கப்பல்லக்கில் புறப்பாடு -மாலையில் துளசி வாகன புறப்பாடு
    இரண்டாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை சந்திரன் பிரபை ஸேவை
    மூன்றாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தோளுக்கு இனியானில் புறப்பாடு
    நான்காம் நாள் -தங்கப்பல்லக்கில் முத்தங்கி ஸேவை -முத்து மாலையுடன் -மாலை சேஷ வாகனம்
    ஐந்தாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில்
    பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தங்க ஹம்ஸ வாகனம்
    ஆறாம் நாள் காலை வீற்று இருந்த திருக்கோலம் சவுரித் திருமஞ்சனம்
    மூக்கூத்தி ஸேவை -இரவு கனக தண்டியல்
    ஏழாம் நாள் காலை தங்கப்பல்லக்கில் தங்க கவசம் -இரவு ஆளேறும் பல்லக்கு
    8 நாள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் மங்களா ஸாஸனம் -ஸ்ரீ ஆண்டாள் மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி ஸேவை
    அசுத்த நாள் கனு -ஸ்ரீ ஆண்டாள் தோளுக்கு இனியானில் ஸ்ரீ பெரியாழ்வார் சந்நிதிக்கு எழுந்து அருளி தொடர்ந்து
    முத்துக் குறி அரையர் சேவை ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும்
    காலை ஸ்ரீ பெரிய பெருமாள் பல்லக்கில் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்து அருளி கனுப்பரி வேட்டை நடைபெறும்

    ————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸமேத வேங்கட கிருஷ்ணன் பார்த்தா சாரதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

    ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

    December 5, 2024

    நாயிந்தே நாயிந்தே
    த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
    இதம் வேத மூல ப்ரமாணாத்
    ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
    ஸோ அபி சாக்ரோஸ ஏவ
    க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
    கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
    ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
    ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

    மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
    புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
    தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
    அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

    யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
    யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
    யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
    ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
    ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
    மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
    பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
    மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
    ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
    தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

    நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
    ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
    ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
    பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

    முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
    மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
    வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
    கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
    கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
    கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
    மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
    நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
    கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
    வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
    பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
    குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
    மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
    தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
    நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
    ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
    அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
    ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
    தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
    சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
    நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
    தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
    திருவடிகளை யுடையனான தேவரீர்

    ஸூதா வல்லீ ஸமேதனாய்
    திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
    ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
    பக்தோசிதனே

    பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
    சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
    மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
    கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
    வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

    வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
    தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
    ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
    ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
    ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
    அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
    ஓம் ஜய விஜயீ பவ
    ஸ்வாமீ எச்சரிக்கை

    —————

    திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

    ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
    ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
    ஓம் சங்கு சக்ர தராய நம
    ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
    ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

    ஓம் கிரீடிநே நம
    ஓம் அனா மயாய நம
    ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
    ஓம் கோமலா க்ருதயே நம
    ஓம் ப்ரஸன்ன வதனாய நம

    ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
    ஓம் உஜ்வலாய நம
    ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
    ஓம் வன மாலிநே நம
    ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

    ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
    ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
    ஓம் ஸிம்ஹ முகாய நம
    ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
    ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

    ஓம் ஜகதாம் கர்த்ரே நம
    ஓம் கோப்த்ரே நம
    ஓம் விஷ்ணவே நம
    ஓம் ப்ரேணத்ரே நம
    ஓம் அநிந்திதாய நம

    ஓம் தம்ஷ்ட்ரிணே நம
    ஓம் கேஸரிணே நம
    ஓம் நர கேஸரிணே நம
    ஓம் விபவே நம
    ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

    ஓம் பீமாய நம
    ஓம் கதா தராய நம
    ஓம் அதீஸ்வராய நம
    ஓம் வ்யக்தனனாய நம
    ஓம் மஹோரஸ்காய நம

    ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
    ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
    ஓம் உன்னதஸ்ருதயே நம
    ஓம் உத்ததாய நம
    ஓம் உதக்ர நாஸாய நம

    ஓம் உச்சண்ட காலாய நம
    ஓம் உத்தம மஸ்தகாய நம
    ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
    ஓம் சிவ ஸேவிதாய நம
    ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

    ஓம் வய க்யாத நம
    ஓம் அவ்யக்தாய நம
    ஓம் புருஷோத்தமாய நம
    ஓம் ஸிம்ஹ காமிநே நம
    ஓம் ஈஸாநாய நம

    ஓம் நிதயே நம
    ஓம் அச்யுதாய நம
    ஓம் அவ்யயாய நம
    ஓம் பிங்க லாஷாய நம
    ஓம் ப்ருது க்ரீவாய நம

    ஓம் விமலாய நம
    ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
    ஓம் முக்திதாய நம
    ஓம் புகதிதாய நம
    ஓம் சாந்தாய நம

    ஓம் தாந்தாய நம
    ஓம் ஆனந்த கந்த லாய நம
    ஓம் மந்தார மாலாபரணாய நம
    ஓம் அஷ்ட பாஹவே நம
    ஓம் மஹா உதாராய நம

    ஓம் ஸநகாதி நுதாய நம
    ஓம் தேவராஜ பூஜிதாய நம
    ஓம் ஈஸ்வராய நம
    ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
    ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

    ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
    ஓம் ஹ்ருதி வாஸிநே நம
    ஓம் ஹநுமத் வந்திதாய நம
    ஓம் லோக சங்கராய நம
    ஓம் சங்கர ப்ரியாய நம

    ஓம் பக்த அர்ச்சிதாய நம
    ஓம் பக்தி தாயினே நம
    ஓம் ஸூப தாயினே நம
    ஓம் சடாலம் க்ருதாய நம
    ஓம் அவ்யக்ராய நம

    ஓம் உக்ர சாஸநாய நம
    ஓம் உத்ததாய நம
    ஓம் விஸ்தீர்ண வதனாய நம
    ஓம் தீன ரஷகாய நம
    ஓம் ஸூர ரக்ஷகாய நம

    ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
    ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
    ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
    ஓம் ஹேமாங்காய நம
    ஓம் ஹேம குண்டலாய நம

    ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
    ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
    ஓம் மாலாபரணாய நம
    ஓம் தைத்ய ராஜவஸா நம
    ஓம் ந்ருணாம் சரணாய நம

    ஓம் உத்தமாய நம
    ஓம் அநுத்தமாய நம
    ஓம் தேவாய நம
    ஓம் ராஜா நம
    ஓம் ஆஜாநு பாஹு காய நம

    ஓம் ஜகதாம் போஷணாய நம
    ஓம் பூத பாவனாய நம
    ஓம் பத்ரி வாஹனாய நம
    ஓம் வேதாந்த வேத்யாய நம
    ஓம் அவ்யக்ராய நம

    ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
    ஓம் ஸம் ஸ்துதாய நம
    ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
    ஓம் பரமார்த்தயா நம
    ஓம் மஹாஷாய நம

    ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
    ஓம் பக்த ரக்ஷகாய நம
    ஓம் அபராஜிதாய நம
    ஓம் அஷோப்யாய நம
    ஓம் அநந்தாய நம

    ஓம் பராய நம
    ஓம் பரம் நம
    ஓம் அநேக ரூபாய நம
    ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
    ஓம் அக்ருத்ரிமாய நம

    ஓம் ஹிரண்யாய நம
    ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
    ஓம் ப்ரபவே நம

    ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

    ——————————-

    ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

    அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
    ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

    பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
    ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

    சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
    ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

    ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
    உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

    பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
    புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

    ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
    ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

    வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
    கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

    மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
    ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

    அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
    வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

    ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
    விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

    பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
    மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

    மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
    ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

    ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
    ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

    ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
    ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

    ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
    வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

    வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
    மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

    ————–

    ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

    ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

    ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

    எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

    கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

    நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

    கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

    கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

    ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

    வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

    ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

    ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

    பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

    ——————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

    நந்திபுரம்‌-குடவாயில்‌ பாலசுப்ரமண்யம்‌-

    November 25, 2024

    நந்திபுரத்தில்‌ தங்கியிருந்த நந்திவர்மனைச்‌ சித்திரமாயப்‌ பல்லவராஜனும்‌, தமிழ்‌ அரசர்களும்‌
    (பாண்டியனோடு பிற மன்னர்களும்‌) முற்றுகையிட்டுச்‌
    சிறைப்படுத்தினர்‌. இச்செய்தியினை அறிந்த வில்வலம்‌ எனும்‌
    நகரத்தின்‌ தலைவனும்‌, யபல்லவமல்லனளைத்‌ தன்‌ பேரரசனாக
    ஏற்றுக்‌ கொண்டவனும்‌, பூசான்‌ குலத்தில்‌ பிறந்தவனுமான
    உதயசந்திரன்‌ தம்பெரும்‌ படையோடு நந்திபுரம்‌ வந்து,
    பகைவர்களுடன்‌ போரிட்டு, சித்திரமாயப்‌ பல்வவராஜனைக்‌
    கொன்று, தம்பேரரசனான நந்திவர்மனை மீட்டான்‌.உதயசந்திரன்‌ நந்திபுரத்தினை மீட்டதற்குப்‌ பின்பு பல்லவமல்லனான இரண்டாம்‌ தந்திவர்மனின்‌ பலம்‌ மிகவும்‌ ஒங்கியது. பாண்டிய மன்னனுடன்‌ போரிட்டு அவன்‌ வெற்றிபெற்றதைத்‌ திருமங்கை ஆழ்வார்‌. பரமேச்சுர விண்ணகரப்‌ பாசுரத்தில்‌,
    “தேம்‌ பொழில்‌ குன்றெயில்‌ தென்னவளைத்‌
    திசைப்பச்‌ செருமேல்வியத்‌ தன்று சென்றபாம்புடைப்‌ பல்லவர்‌ கோன்‌ பணிந்த
    பரமேச்சுர விண்ணகரம்‌ ௮.துவே”” (பெரியதிருமொழி 2:9:5)
    “நிரந்தவர்‌ மண்ணையில்‌ புண்ணுகர்வேல்‌
    தெடுவாயல்‌ ககச்செரு வில்‌ முன நான்‌
    பரந்தவன்‌ பல்லவர்‌ கோள்‌ பணிந்த.
    பரமேச்சர விண்ணகரம்‌ அதுவே.” (பெரியதிருமொழி 2:9:2)
    என்றும்‌ பாடுகிறார்‌.
    இப்பதிகத்தில்‌ குறிக்கப்படும்‌ மண்ணை எனும்‌ ஊர்‌
    தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ மணக்குடி என ஆராய்ச்சியாளர்‌
    கருதுகின்றனர்‌.

    இவை அனைத்தையும்‌ தொகுத்து நோக்கும்‌ போது
    சாளுக்கிய விச்கிரமாதித்தியனின்‌ தாக்குதலால்‌ காஞ்சியை
    விடுத்துச்‌ சோழநாட்டு நந்திபுரத்தில்‌ தங்கிய நந்திவர்மன்‌,
    சித்திரமாய பல்லவராஜனால்‌ அல்லலுற்றதையும்‌, பின்பு
    உதயசந்திரனின்‌ ஆற்தலால்‌ அவனைக்‌ கொன்றதோடு,
    பாண்டிநாடுவரை சென்று பெரு வெற்றியும்‌ பெற்று
    வலிமையுடன்‌ திகழ்ந்ததையும்‌. நாம்‌ : அறிய முடிகின்றது.
    அதனால்‌ தான்‌ 68 ஆண்டுகள்‌ இவனது ஆட்சி தொடரமுடிந்தது,௮ப்பல்லவனின்‌ வரலாற்றில்‌ நந்திபுர நகரம்‌
    மிகச்‌ சிறந்த இடத்தினைப்‌ பெற்றது.

    காஞ்சி மாநகரில்‌ உள்ள பல்லவர்காலத்து ஆலயபங்களுள்‌ குறிப்‌பிடத்தக்கது வைகுந்தநாதப்பெருமாள்‌ கோயில்‌
    எனும்‌ வைணவ ஆலயமாகும்‌. இரண்டாம்‌ நந்திவர்ம பல்லவன்‌ எடுப்பித்த சிறப்புடையது. திருமங்கை ஆழ்வார்‌ “பரமேச்சுர விண்ணகரம்‌” என்று மங்களாசாசனம்‌ செய்த திருப்பது இது. இவ்வாலயத்தின்‌ கருவறையைச்‌ சுற்றியுள்ள மண்டபத்தின்‌
    உட்புறச்சுவர்‌ முழுவதும்‌ பல்லவர்‌ வரலாற்றைச்‌ சித்ரிக்கும்‌
    புடைப்புச்‌ சிற்பங்கள்‌ உள்ளன. காட்சித்‌ தொகுப்பகளுக்குக்‌
    கீழாகப்‌ பல்லவ கிரந்தத்தில்‌ கல்வெட்டுப்‌ பொறிப்புகளும்‌ உள்ளன. இவை குறிப்பிட்ட ஒவ்வொரு காட்ச பற்றியவிளக்கங்களாகும்‌. இதனை முழுமையாக ஆராய்ந்த டாக்டர்‌ ௪.
    மீனாட்சி அவர்கள்‌ (76 1450071021 Sculptures of the
    Vaikuntaperumal Temple, Kanchi) என்ற நூலில்‌”
    இக்காட்சிகள்‌ பற்றிய படங்களோடு பல்லவர்‌ வரலாற்றைச்‌
    சிறப்புற எழுதியுள்ளார்கள்‌. இந்நூலில்‌ நந்திபுர முற்றுகை யிலிருந்து உதயசந்திரன்‌ மீட்பது.ம்‌, பல்லவ மல்லனான
    தந்திவர்‌மன்‌ நந்திபுரக்கோட்டையில்‌ அமர்ந்துள்ளதுமான பல
    காட்சிகளை எடுத்துக்‌ காட்டியுள்ளார்கள்‌.
    இவ்வாலயத்துத்‌ திருச்சுற்று மண்டபத்தின்‌ தென்புறச்‌
    சுவரில்‌ நந்திவர்ம பல்லவன்‌ அமர்ந்திருத்தல்‌, உதயசந்திரன்‌ குதிரை மீது அமர்ந்த வண்ணம்‌ தன்‌ வீரர்களுடன்‌ உத்திர மாயனின்‌ படையை நோக்கிச்‌ செல்லுதல்‌, சித்திரமாய
    பல்லவனைத்‌ தாக்கிக்‌ கொல்லுதல்‌, வெற்றிச்‌ செய்தியினை
    வீரர்கள்‌ பல்லவ மல்லனுக்குக்‌ கூறுதல்‌, மனமகிழ்வோடு
    தந்திவர்மன்‌ வீற்றிருத்தல்‌, பின்னர்‌ உதயசந்திரன்‌ பலவெற்றி களைத்‌ தழுவுதல்‌ ஆகிய காட்சிகள்‌ தொடர்சிற்பங்களாக
    உள்ளன. :உதயேந்திரம்‌ செப்பேடு கூறும்‌ நந்திபுர முற்றுகையும்‌ மீட்புமான செய்திகள்‌ இங்குக்‌ காட்சிச்‌ சிற்பங்களாக அமைந்‌ து
    “பல்லவன்‌ கண்ட நந்திபுரத்தை நம்‌ முன்‌ நிறுத்துகின்றன.

    நந்திபுர விண்ணகரம்‌
    கி.பி. எட்டாம்‌ நூற்றாண்டில்‌ இரண்டாம்‌ நந்திவர்மன்‌
    காலத்தில்‌ வாழ்ந்தவராகப்‌ பன்னிரு ஆழ்வார்களில்‌ ஒருவரான
    திருமங்கை ஆழ்வாரைக்குறிப்பர்‌. இவர்‌ பெரிய திருமொழியில்‌
    தீதறு எனத்தொடங்கும்‌ பாசுரமொன்றினைப்‌ பாடியுள்ளார்‌.
    பத்துப்‌ பாடல்களிலும்‌ “நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே” என்று நந்திபுரத்தில்‌ இகழ்ந்த வைணவ ஆலயத்தைக்‌
    குறிக்கின்றார்‌. இப்பதிகத்தின்‌ ஏழாம்‌ பாடவில்‌
    தந்தைமன முந்துதுயர்‌ நந்த, இருள்‌ வந்தவிறல்‌
    தந்தன்‌ மதலை
    எத்தையிவன்‌ என்றமரர்‌ கந்தமலர்‌ கொண்டுதொழ
    தின்ற நகர்‌ தான்‌–5-10-7-

    பழையாறு என்ற பெயரில்‌ பல அரர்கள்‌ . இருந்தது
    போலவே நந்திபுரம்‌ என்ற பெயரிலும்‌ நந்திவன.ம்‌ என்ற
    பெயரிலும்‌ பல ஊர்கள்‌ இருப்பதைக்‌ கண்டோம்‌.
    சோழநாட்டைப்‌ பொறுத்த வரை முற்காலச்‌ சோழர்களின்‌
    கல்வெட்டுக்களில்‌ அதிலும்‌ குறிப்பாகப்‌ பராந்தக சோழனின்‌
    காலத்துச்‌ சாசனங்களில்‌ குறிக்கப்படும்‌ நந்திபுரங்கள்‌ மூன்று.
    ஒன்று கிழார்‌ கூற்றத்து ஆயிரத்தளியான நந்திபுரம்‌, மற்றவை
    உம்பள நாட்டு நந்திபுரமும்‌பழையாற்று நந்திபுரமுமாகும்‌.
    இருமங்கை ஆழ்வார்‌ குறிப்பிடும்‌ விண்ணகரம்‌ இருந்த
    நந்திபுரம்‌ இவை மூன்றில்‌ எங்கும்‌ இருந்திருக்கலாம்‌.

    தஞ்சை சரஸ்வதி மகாலில்‌ உள்ள சமஸ்கிருத
    ஏட்டுச்சுவடி ஒன்று “தந்திபுரமாகாத்மியம்‌!” என்ற பெயரில்‌
    (B.No. 11328, D.No. 10028) உள்ளது. இதில்‌ நந்திபுரம்‌-
    தந்திதாதபுரம்‌ என்று குறிக்கப்பெற்றுள்ளது. பின்பு இதுவே
    நாதன்கோயில்‌ என மருவியும்‌ உள்ளது. வைணவ மரபு வழி
    போற்றப்பெறும்‌ திருப்பதி என்பதாலும்‌, அங்குப்‌ பல்லவ
    மல்லன்‌ காலத்தியது எனக்‌ கலை வல்லோர்‌ ஏற்கக்‌ கூடிய
    விஷ்ணு திருமேனி வழிபாட்டில்‌ இருப்பதாலும்‌, நாதன்‌
    கோயிலை நந்திபுர விண்ணகரமாச நாம்‌ ஏற்றுக்‌
    கொண்டாலும்‌ நாதன்‌ கோயில்‌-நந்திபுரம்‌ என்ற பெயர்‌
    வழக்கிற்கான சான்றுகள்‌ மிக பிற்காலத்தியவையே.ஆயினும்‌
    வரலாற்றுச்‌ சிறப்பு வாய்ந்ததும்‌, பல்லவ மல்லன்‌ வாழ்ந்த
    அரண்மனை இருந்ததுமான நந்திபுரம்‌ செங்கமேடு- வீரசிங்கம்‌
    பேட்டை எனா ஊு களாகத்‌ இகழும்‌ கிழார்‌ கூற்றத்து நந்திபுரம்‌
    தான

    “ஆயிரத்தளி”
    என்பது ஆயிரம்‌ சிவலிங்கங்கள்‌ உள்ள ஒரு சிவாலயத்தைக்‌
    குறிப்பிடும்‌ சொல்லாகும்‌. ஆயிரம்‌, நூறு இலவிங்கங்களை
    வழிபடும்‌ நெறிகள்‌ தோன்றியபோது நியமத்திலும்‌,
    தந்திபுரத்திலும்‌ ஆயிரத்தளிகள்‌ தோன்றின.

    கோயிற்பெயராலேயே சில ஊர்களும்‌ அழைக்கப்‌
    பெற்றன. திருதாசேச்சரம்‌ எனும்‌ கோயிலால்‌ அவ்வூர்‌
    திருநாகேசுவரமாயிற்று. ரங்கமன்னார்‌ உறையும்‌ கோயில்‌
    மன்னார்‌ கோயிலாகூப்‌ பின்பு கோயில்‌ என்றசொல்‌ தெலுங்கில்‌
    குடி” என்றழைக்கப்பெறுவதால்‌ தாயக்கர்களால்‌ மன்னார்‌
    குடியாக ஊர்ப்‌ பெயரும்‌ மாறிற்று. இதுபோலவே ஆயிரத்தளி
    இருந்த ஊர்‌ ஆன நந்திபுரம்‌ பின்னாளில்‌ *ஆயிரத்தனி”” என்ற
    ஊர்ப்‌ பெயராகவே ஆயிற்று. அதுவும்‌ காலப்‌ போக்கில்‌ பல
    மன்னர்விருதுப்‌ பெயர்களோடு இணைந்து பின்பு முற்றிலுமாக
    வழக்கொழிந்தும்‌ விட்டது. நந்திபுரம்‌ ஆயிரத்தளியாஇப்‌ பின்பு
    அதுவும்‌ மறைந்து தற்போது வீரசிங்கம்பேட்டை (கண்டியூர்‌)
    என்று மருவியது தான்‌ வரலாற்று உண்மை.

    நந்தியின்‌ புதல்வனான’ நிருபதுங்களின்‌ கண்டியூர்‌
    தருக்கோடிக்காவல்‌”” திருச்சென்னம்‌ பூண்டி” லால்குடி
    சல்வெட்டுக்கள்‌ நந்திபுரம்‌ உள்ளிட்ட சோழநாட்டுப்‌ பகுதிகள்‌
    இப்பெருவேத்தனின்‌ ஆளுகையின்‌ கீழ்‌ இருந்தமையை
    விவரிக்‌கன்றன. இவை அனைத்தையும்‌ தொகுத்து நோக்கும்‌
    போது சோழப்பெருநாட்டின்‌ சீர்மிகு பல்லவ ஆட்சி
    நந்தபுரத்தனைத்‌ தலைமை இடமாகக்‌ கொண்டு மன்னனின்‌
    கோயிலாம்‌ அரண்மனையோடு திகழ்ந்தது என்பது உறுதி
    பெறுகின்றது.

    எலியட்‌ மற்றும்‌ டவ்ஸன்‌ அமீர்குஸ்ரு பற்றிக்‌ கூறும்‌
    போது “இந்துஸ்தான கிளி” என்றே இக்கவிஞனை, வரலாற்று
    எழுத்தாளனைக்‌ குறிப்பிடுகின்றனர்‌. 2253 இவ்‌ பிறந்து 2325 ல்‌
    ‘இறந்ததாகவும்‌குஸ்ரு டெல்லி சுல்தான்‌ அலாவுதீன்‌ கில்ஜியின்‌ .
    அவைக்களப்புலவராய்த்‌ இகழ்ந்ததாகவும்‌ கூறுகின்றனர்‌.
    அலாவுதீன்‌ கில்ஜியின்‌ தளபதியான மாலிக்காபூர்‌ தென்‌
    னாட்டின்‌ மீது படை எடுத்துக்‌ கொள்ளையிட்ட இரு முறையும்‌
    அவனுடன்‌ பயணித்துத்‌ தான்‌ கண்ணால்‌ கண்ட காட்சிகளைக்‌
    குறிப்பெடுத்து எழுதியதே இவ்வாவணங்கள்‌. 1309 இல்‌ மாலிக்‌
    டெல்லியிலிருந்து புறப்பட்டுத்‌ தேவகி வாரங்கல்‌ வரை
    படை எடுத்து 2310 இல்‌ இல்லி திரும்பினான்‌. இரண்டாம்‌ முறை
    18-li- 7870 இல்‌ தில்லியிலிருந்து புறப்பட்டுத்‌ தேவூரி,
    பண்டிரி, துவாரசமுத்திரம்‌, (கர்நாடகம்‌) மாபார்‌ (தமிழகம்‌)
    வரை கொள்ளையிட்டு 28-70-7477 இல்‌ தில்லி திரும்பியது
    இரண்டாம்‌ நிகழ்வாகும்‌.

    தமிழகத்திற்கு மாலிக்காபூர்‌ வருவதற்குக்‌ காரணமாய்த்‌
    திகழ்ந்தவன்‌ பாண்டிய அர குடும்பத்தைச்‌ சேர்ந்த இராராஜன்‌
    சுந்தரபாண்டியன்‌ எனபவனே. தாயத்தார்மீது பொறாமை
    யாலும்‌, தான்‌ நாடு பெற வேண்டிச்‌ செய்த சூழ்ச்சியாலும்‌,
    கொடியவன்‌ மாலிக்காபூரூடன்‌ இணைந்தான்‌. இதனால்‌
    தமிழகம்‌ தனித்தன்மை கொண்ட தம்‌ கலைச்‌ செல்வங்களாம்‌
    கோயில்களை இழந்ததோடு நவநிதிச் செல்வங்களையும்‌ இழந்தது.

    மாவிக்காபூரின்‌ இப்படை எடுப்பில்‌ பெரும்பகுதி
    கண்டியூரிவ்திகழ்ந்தவையாகும்‌. யானைகளைக்‌ கைப்பற்றியது,
    கோயில்களையும்‌ கண்டியூர்‌ மக்களையும்‌ அழித்தது, இங்கிருந்த
    மூகமதியர்களை மட்டும்‌ மன்னித்துக்‌ கொல்லாமல்‌ விட்டது போன்ற பல திகழ்வுகள்‌ திகழ்ந்தன. :
    இக்காரணங்களால்‌ தான்‌ இன்று நந்திபுர நகரம்‌ இல்வை. ஆயிரத்தளி சகஸ்ரவிங்கக்‌ கோயில்‌ இல்லை.
    மல்லீச்சுரம்‌ இவ்லை. பராந்தக தேவீச்சுரம்‌ இல்லை. வானவன்‌
    மாதேவீச்சரம்‌ இல்லை. மன்னனது கோயிலோ, அயிஷேக
    மண்டபமோ, பல்லவராயன்‌ மண்டபமோ, பள்ளியறைக்‌
    கூட்மோ, காணிங்கராயன்‌, சேதிறாயன்‌ போன்ற மன்னனது கட்டில்களோ இல்லை.
    இப்படை எடுப்பால்‌ நந்திபுரம்‌ மட்டுமின்றித்‌ தில்லை
    இருவரங்கம்‌, கங்கைகொண்ட சோழபுரம்‌, தஞ்சாஷர்ப்‌
    பெருங்கோயில்‌ போன்றனவும்‌ சதைவுற்றன. தில்லையிலிருத்து
    மயிலாடுதுறை வழியாகத்‌ திருவரங்கம்‌ செல்லும்‌ சாலையில்‌
    (காவிரிக்கரை வழி) தான்‌ ஆயிரத்தளி-கண்டியூர்‌ உள்ளது.
    இப்பகுதியில்‌ உள்ள அனைத்து இந்து அலயங்களும்‌
    இத்தாக்குதலால்‌ பேரழிவுக்கு உட்பட்டன.

    இவ்வளவு . பேரழிவும்‌, பெரும்‌ மாற்றங்களும்‌
    70-9-1277- லிருந்து 8- 4-7227- க்குள்‌ நிகழ்ந்தது என்பதை அமீர்‌
    குஸ்ருவின்‌ குறிப்புகளால்‌ அறியமுடிகிறது. பெருமைமிகு
    நந்திபுரம்‌ கி.பி. 1312-ல்‌ அழிந்தது. எஞ்சிய அரண்மனையில்‌
    பின்புவந்த இரண்டாம்‌ வீரபாண்டியன்‌ ஆட்சிபுரிந்தான்‌.
    இதனால்‌ தான்‌ தாராசுரம்‌ சல்வெட்டில்‌ தன்னுடைய
    அரண்மனையை “கண்டியூர்‌ கோயில்‌” என்றே குறிப்பிட்டுக்‌
    கொள்கிறான்‌. 1341-ல்‌ பேரழிவுக்கு உட்பட்ட இந்நகரம்‌ 7280-ல்‌
    வீரபாண்டியன்‌ ஆட்சியோடு மறைந்து பெருமை இழந்து பல
    சிற்நார்களாகப்‌ பிரிந்தது.

    மூவுலகத்தின்‌ மேன்மைக்காகச்‌ சுமேரு மாலையின்‌
    உச்சியிலே சிறந்த யோகபந்த நிலையில்‌ அமர்ந்திருப்பவரும்‌
    சூரியசந்திரர்களை இரு கண்களாக உடையவரும்‌ உமையுடன்‌
    கூடியவரும்‌, ஆதரவுடன்‌ மேன்மையளிக்கக்‌ கூடிய உதயசந்திர
    னுக்குத்‌ திருவை அளிக்கக்‌ கூடியவரும்‌ சடைமுடி தறித்தவரு
    மான சதாசிவனை நான்‌ வணங்குகிறேன்‌ என்பதே
    இத்தமிழாக்கமாகும்‌.
    சதாசிவ வடிவம்‌ பற்றிக்‌ கூறும்‌ சிற்ப ஆகமதூல்கள்‌,
    அவர்‌ வடிவைப்‌ பஞ்ச பிரமன்‌ என்றே கூறுகின்றன.
    “பஞ்சப்ருஹ்மதநுஸ்‌ சாக்ஷாத்‌
    ஸிவேூத்‌ ஸதா௫வ:”
    எனவேதான்‌ அவர்‌ வடிவை ஐந்துமுகமுடைய வடிவாகவோ
    ஐந்து உடல்கள்‌ இணைந்த வடிவாகவோ ிற்பங்களில்‌
    வடித்தனர்‌. சதாசிவன்‌ ஐந்து முகமுடையவராக 4 வேதங்‌
    களையும்‌ 6 அங்கங்களையும்‌ அளித்தார்‌… . ”’ எனக்‌ கூறப்‌
    பெறுகின்றது. “ஐந்து முகமுடைய இவ்வள்ளல்‌ ஞானம்‌ உரைக்‌
    கவில்லை என்றால்‌ இவ்வுலகம்‌ அறியாமை இருளில்தான்‌
    மூழ்கி இருந்திருக்கும்‌” – என்பது ஆகமங்களின்‌ கூற்று.

    • பஞ்ச வக்த்ரஹரோ பூத்வா
      பஞ்ச பூதைர்‌ முகைரபி
      வேதாதிக்ரந்த ஜாலம்‌ யத்‌
      தத்‌ ஸர்வம்‌ அவதத் ப்ரபு
      சதாசிவமூர்த்தியின்‌ தியான சுலோகம்‌
      பஞ்ச வக்த்ரே தஸபுஜ: ஹ்யக்ஷ்பஞ்ச தஸைர்யுத: 1
      ஸாுத்தஸ்படிக சங்காஸ: ஸர்வாபரண பூஷித: 11
      ஸர்வஞ்ஞ ஸர்வக: ஸாந்த: ஸர்வோபரி ஸுஸம்ஸ்தித: 1
      பத்மாஸனஸ்த: ஸோமேஸ: பாபம்‌ ஆஸு வ்யயோஹது 1!
      ஆகமங்கள்‌ சதாசிவமூர்த்தியின்‌ முகங்களைக்‌ கிழக்கு
      தோக்கியது தத்புருஷம்‌ என்றும்‌ தெற்கு நோக்கியது அகோரம்‌
      என்றும்‌ மேற்கு நோக்கியது சத்யோஜாதம்‌ என்றும்‌ வடக்கு
      நோக்கியது வாமதேவம்‌ என்றும்‌ முகத்தின்‌ உச்சியில்‌ உள்ளது
      ஈசானம்‌ என்றும்‌ பெயரிட்டு அழைக்கின்றன. ஈசான
      முகத்தினை வடிவின்றி லிங்கத்தின்‌ சிரசாக கொள்ளல்‌
      வேண்டும்‌ என்றும்‌ உரைக்கின்றன.எனவே சதாசிவ வடிவம்‌ லிங்க மூர்த்தமாயினும்‌ வேறு வடிவாயினும்‌ பெரும்பாலும்‌ நான்கு முகங்களோடு தான்வடிக்கப்‌ பெறுவதாகும்‌.

    தென்‌ ஆர்க்காடு மாவட்டம்‌ திருவதிகைக்‌ கோயில்‌
    பல்லவர்‌ காலத்தியதாகும்‌. இங்கு மூன்றாம்‌ நந்திவர்மன்‌ மற்றும்‌
    நிருபதுங்க பல்லவன்‌ காலத்தில்‌ பல திருப்பணிகள்‌ நிகழ்ந்தன.
    அவர்கள்‌ காலத்தில்‌ வடிக்கப்‌ பெற்ற அரிய சதுர்முக இலிங்கம்‌
    ஒன்று அத்திருக்கோயில்‌ தஇருச்சுற்றில்‌ இன்றும்‌ உள்ளது.
    பீடத்தின்‌ மேல்‌ காணப்படும்‌ பாணத்தில்‌ நான்கு திக்குகளிலும்‌
    முறையே தத்புருஷம்‌, அகோரம்‌, சத்யோஜாதம்‌,வாமதேவம்‌
    ஆகிய முகங்கள்‌ உள்ளன. பாணத்தின்‌ உச்சியாகத்திகமும்‌
    வளைந்த சிரசு இங்கு ஈசான முகமாக வடி.வின்றி உள்ளது. இது
    போன்று வடிக்கப்பெற்ற பஞ்சமுகலிங்கங்கள்‌ திருவானைக்கா,
    திருக்காளத்தி போன்ற தஇிருக்கோயில்களில்‌ வழிபாட்டில்‌
    உள்ளன.தஞ்சைப்‌ பெரிய கோயிலின்‌ முதற்‌ கோபுரத்தில்‌ (கேரளாந்‌
    தன்‌ திருவாயில்‌) 4 முகங்களும்‌ (ஐந்தாம்‌ முகம்‌ மறைந்த
    திலையில்‌) பத்துக்‌ கரங்களும்‌ கொண்டு பத்மபிடத்தில்‌ அமர்ந்த
    கோலத்தில்‌ வடிக்கப்‌ பெற்ற சுதைச்‌ சிற்பங்கள்‌ இரண்டு
    உள்ளதை இன்றும்‌ காணலாம்‌.
    இதே திருக்கோயிலில்‌ காணப்படும்‌ இராஜராதனின்‌
    கல்வெட்டொன்று *பஞ்ச தேகழூர்த்தி”” என்ற செப்புத்‌
    திருமேனி பற்றி விவரிக்கின்றது.

    ————
    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ திருவல்லிக்கேணி–ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி ஆலயம் சிறப்பம்சங்கள்

    November 25, 2024

    🔥 சென்னையில் உள்ள #வைணவத் தலங்களில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழமையான தலம் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி ஆலயம்.

    🌺 லக்ஷக்கணக்கான திவ்யதேசங்களில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சென்னை நகருக்குள் முக்கியத் தலம் இந்த #ப்ருந்தாரண்ய_க்ஷேத்ரம்.

    🌺 பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் இத்தலம் ஏராளமான சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

    ஶ்ரீவேதவியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத் தலத்தில் பெருமாளைச் சுற்றி உள்ள ஆலயத்தை திருப்பணி செய்து பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் அழகான ஆலயத்தை 8-ம் நூற்றாண்டில் புனரமைத்தார்.

    🍒 இத்தல வரலாறு சுமதி மன்னன் என்பவருடன் தொடர்புடையது. இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.

    🍒 இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது.
    அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர் எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார்.
    பார்த்தனுக்கு (அர்ஜுனன்), கிருஷ்ணர் தேரோட்டி (சாரதி)யாக இருந்தார்.
    இதனால்தான் நாம் கிருஷ்ண #பரமாத்மாவை பார்த்தசாரதி” என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர் விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் இங்கே திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். . அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி #ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக ஸேவிக்கப் படுகிறார்.

    🍎 இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே ஆத்ரேய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக அறியப்படுகிறது.

    🔥 உத்ஸவராக பார்த்தஸாரதி ஸ்வாமி தன் திருமுகம் எல்லாம் மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மாசார்யரின் அம்பு பட்ட வடுக்களுடன் உள்ளார்.

    🌺 கோபுரங்களும், மண்டபங்களும் நுட்பமான திராவிட சிற்பக் கலை சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கருவறையில் மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி எனும் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன், தாயார் ருக்மிணித் தாயார், அண்ணன் பலராமர், தம்பி ஸாத்யகி, (ஸாத்யகி: சத்தியகனது புத்திரன். யதுகுலத்தரசர்களுள் வசுதேவனுக்கு உடன் பிறந்த முறையாகிறவனும் சினியென்பானது மகனுமான சத்தியகனது குமாரனான சாத்தகி, பிராயத்திற் கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பி முறையாவன்)புத்திரன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன், என குடும்ப ஸஹிதமாக உள்ளார். பலராமர் வரதமுத்திரை காட்டி கலப்பை ஏந்தியுள்ளார். தம்பி ஸாத்யகி அவருக்கே உரிய கத்தி ஏந்தியும் பிள்ளையும் பேரனும் உலக்கை எனும் தோமரங்கள் ஏந்தியும் பக்தர்களுக்கு காக்ஷி அளிக்கின்றனர்.

    கிருஷ்ணர் தம்மூன்று தலைமுறையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இது தான்.

    🌺 அதுபோல கிருஷ்ணர் உலகில் வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மட்டுமே #முறுக்கு_மீசையுடன் காணப்படுகிறார்
    . 9 அடி உயரத்தில் திருமுகத்தில் புன்னகை ததும்ப அருள்பாலிக்கும் அவரை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    🔥 பகல் பத்து, கடைசி 5 நாட்களில் மட்டும் மீசை இல்லாத மூலவரை தரிசிக்கலாம்.

    🔥மகாபாரதப் போர் நடந்த போது பீஷ்மர் விட்ட அம்புகள் பட்ட காயத்தால் கிருஷ்ணர் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. உத்ஸவரின் முகத்தில் அந்த வடுக்களை இன்றும் காணலாம். உத்ஸவர் கதாயுதம் ஏந்தாமல் செங்கோலுடன் உள்ளார்.

    ⚙️இது பகவான் கிருஷ்ணர் ஆயர் குலத்தில் பிறந்ததை பிரதிபலிக்க தரித்ததாகச் சொல்கிறார்கள்.

    🔥மூலவர் மற்ற தலங்களில் உள்ளது போல இங்கு சக்கராயுதம் ஏந்தவில்லை. இடையில் வாள் தாங்கி . திருக்கையில் #பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஏந்தியுள்ளார்.

    🍒 இந்த கிருஷ்ணரை ஏன் வேங்கட கிருஷ்ணர் என்று செல்கிறார்கள் தெரியுமா? சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தன் என்பதை படித்து இருப்பீர்கள். அந்த #வேங்கடவனேஇங்குவந்துசேவை சாதித்ததால் காட்சியுடன் சேர்த்து வேங்கட கிருஷ்ணர் என்றழைக்கப்படுகிறார்.

    🌺 பேயாழ்வார் ஒரு பாசுரம், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் 10 பாசுரம் பாடி மங்களாசனம் செய்துள்ளனர். இத்தலத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், அஹோபிலம், அயோத்தி ஆகிய 5 திவ்ய சேதப் பெருமாள்களை தனித்தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம்.
    இதன் காரணமாக இத்தலம் 5 மூலவர்கள் கொண்ட தலமாகவும், பஞ்ச வீரத் தலமாகவும் அழைக்கப்படுகிறது.

    🔥 முதல் சன்னிதியில் மூலவர் வேங்கடகிருஷ்ணன் இருப்பது போல #இரண்டாவதுஸன்னிதியில் ஸ்ரீரங்கம் #ரங்கநாதர் ஶயனக்_கோலத்தில் உள்ளார். இவரை மன்னாதன் – தமிழில் என்னையாளுடையப்பன் என்றும் அழைக்கிறார்கள்.

    🌺 தாயார் பெயர் #வேதவல்லித்தாயார். வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்த திருமகள், இத்தலம் துளசிச் செடி வனமாக இருப்பது கண்டு, அங்குள்ள ஒரு மரத்தடியில் குழந்தை வடிவமாக தோன்றினார்.
    அவரை பிருகு முனிவர் எடுத்து வளர்த்தார்.
    திருமால் இளவரசன் வேடத்தில் வந்து தாயார் வேதவல்லியை திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி விட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    மூன்றாவது_ஸன்னிதியில் கருடன் மீது அமர்ந்தபடி #காஞ்சீபுரம்வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி உள்ளார். இவரை பக்தர்கள் #தேவப்பெருமாள் என்றும் அழைக்கிறார்கள்.

    இவர் ஸப்தரோமா முனிவருக்கு கஜேந்திர வரதராக கருட வாகனத்தில் காட்சியளித்தார்.

    நான்காவதுசன்னிதியில் மேற்கு நோக்கியப்படி அஹோபிலம் நரசிம்மர் திருமார்பில் லட்சுமியுடன் யோகாஸநத்தில் வீற்றிருக்கிறார். நோய்கள் தீர இவர் ஸந்நிதி பின்புறம் உப்பு, மிளகை காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அத்ரி முனிவருக்கு #தெள்ளியசிங்கராக இவர் காட்சியளித்தார்.

    இவரை வழிபட, கல்வியில் மேன்மை பெறலாம். இவர் சன்னதியில் மணிஓசை கூட எழுப்பப்படுவதில்லை.

    ஐந்தாவதுசன்னிதியில் அயோத்தி #ராமர்_தெற்குநோக்கிஉள்ளார். அவருடன் சீதாப்பிராட்டி, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன், மற்றும் எதிரே அனுமனும் சேவை சாதிக்கிறார்கள்.

    🌺 மதுமான் முனிவருக்கு ராமர் தன் பட்டாபிஷேக கோலத்தை இத்தலத்தில் காட்சி அருளியதாக வரலாறு உள்ளது.

    ஸ்ரீபார்த்தசாரதிஸ்வாமிக்கும், ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கும் #தனி__தனிகொடிமரம், வாசல்கள் உள்ளன.

    இப்படி5_சன்னிதிகளிலும்_பெருமாள் அளவு கடந்த திரு அருள் ஆற்றலுடன் எழுந்தளும் உள்ளார்.

    5 சன்னிதிகளிலும் மூலவர்கள் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளதால், திருவல்லிக்கேணியை #பஞ்சமூர்த்தி தலம்” என்கிறார்கள்.

    🍒 இத்தலத்தின் #குளமான_கைரவிணியில் ஒரு காலத்தில் அல்லி மலர்கள் அதிகமாக இருந்தன. இதனால்தான் அல்லிக்கேணி என்பது திரு சேர்த்து திருவல்லிக்கேணி என்ற பெயர் உண்டாயிற்று.

    🍂 இந்த குளத்தில் இந்திர, கோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய 5 புண்ணிய தீர்த்தங்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. மீன் வசிக்காத இக்குளக்கரையில் நடக்கும்

    கஜேந்திரமோக்ஷம் கருடசேவை நிகழ்வு மிகவும் பிரசித்தம்.

    🔥 திருவல்லிக்கேணி கோவிலில் முதலில் முன் மண்டபம் உள்ளது. அடுத்து மகா மண்டப நுழைவாயில் உள்ளது.
    அதன் மீதுதான் 5 நிலைகளும், 7 கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    🍒கோவில் உள்ளே 5 மூலவர் சன்னிதி மீதுள்ள விமானங்கள்,

    🍑 ஆனந்த விமானம்,

    🍑பிரணவ விமானம்,

    🍑புஷ்பக விமானம்,

    🍑 சேஷ விமானம்,

    🍑 தைவிக விமானம் என்று அழைக்கப்படுகிறது.

    இத்தலம் #இரண்டு_பிராகாரங்களைக் கொண்டது.

    🌺 கிழக்கு கோபுரம் சுமதி தொண்டைமான் மன்னனால் கட்டப் பட்டது.

    🌺 பிருகு, அத்ரி, மாரீஷி, மார்க்கண்டேயர், சுமதி, ஜபாலி, சப்தரோமா ஆகிய 7 ரிஷிகளும் இங்கு தவம் இருந்துள்ளனர். இதனால்

    சப்தரிஷி_ஸ்தலம் என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.

    🔥 ராமானுஜரின் பெற்றோர் குழந்தை செல்வம் வேண்டி இத்தலத்து பெருமாளிடம் மனம் உருக வழிபட்டார்களாம். இதனால் ஸ்ரீ பார்த்தசாரதியே அவர்கள் புத்ரனாக ராமானுஜராக அவதரித்ததாக சொல்கிறார்கள்.

    🌺 இங்கு 5 மூலவர் சன்னிதி தவிர ஸ்ரீவேதவல்லி தாயார் சன்னிதி தனியாக உள்ளது. இவருக்கு வெள்ளி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    🌹மேலும் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் , ஸ்ரீ ஆஞ்ஜநேயர்,ஆகியோரும் உள்ளனர்.

    🌹இக்கோவிலில் தொன்றுதொட்டு #ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரஆகம முறையும் #தென்கலைவைணவ பாரம்பரியமும் கடை பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீபார்த்தசாரதிக்கும், ஆனி மாதம் ஸ்ரீ அழகிய சிங்கருக்கும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    🍒 இவை தவிர ஏராளமான உற்சவங்கள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கைத்தல சேவை, ஆவணி மாதம் உரியடி திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உத்ஸவம் நடக்கிறது. எப்போதும் தினமும் இத்தலம் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.

    🍒விவேகானந்தர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், ராமானுஜர், பாரதியார் ஆகியோர் பார்த்தசாரதியை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    🍒துலாபாரம் கொடுக்க இங்கு வசதி உள்ளது.
    அன்னதான திட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.

    🍒இத்தலத்தில் திரு அத்யயநோத்ஸவம் அதன் அங்கமாக ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பகல் பந்து, ராப்பத்து ஆழ்வார் அருளிச்செயல் சேவை பெருமாள் சிறந்த அலங்கார சாத்துபடி சேவை, மார்கழி மாத திருப்பாவை கதா காலக்ஷேபங்கள் என்று கோவில் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கும்.

    🔥வைகுண்ட ஏகாதசியின் 20 நாட்களில் ஒரு நாள் இத்தல பெருமாள், திருப்பதி ஏழுமலையான் போல் முழுமையான அலங்காரம் கண்டருள்வார்.

    🔥 ஸ்ரீபார்த்தசாரதிக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்,போன்றவை சிறந்த பிரசாதமாக செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை தோறும் நடக்கும் திருமஞ்சனத்தின்போது, சர்க்கரை பொங்கல் அளித்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
    குழந்தை பாக்கியமும், குடும்பத்தில் செல்வ செழிப்பும் உண்டாகும்.

    🍒 பொதுவாக கிருஷ்ண பரமாத்மா, ஆபத்து காலங்களில் ஓடோடி வந்து நமக்கு உதவுபவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. அந்த பாக்கியத்தைப் பெற நாம் கிருஷ்ணனிடம் மனதை பறி கொடுக்க வேண்டும். பக்தி நெறியால் வழிபட வேண்டும். அந்த வழிபாட்டுக்கு ஏற்ற தலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்தான்.

    🌺 லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்று வாழ்வில் செய்தற்கரியன சாதிப்பவர்களும் மன அமைதி பெற விழைவோரும், பொதுவாழ்வில் சாதிக்கும் எண்ணம் உடையவர்களும் அவசியம் இத்தல பெருமாளை வழிபட வேண்டும்.

    ————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ ருக்மிணித் தாயார் ஸமேத வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி-ஸ்ரீ ஆழ்வார் திருவடி தொழுதல் -ஸ்ரீ நம்மாழ்வார் மோட்ச வைபவம்-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ கலியன் அருள் பாடு-

    September 21, 2024

    ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
    யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

    (கலி தொடங்கி இப்பொழுது 5111-
    4600 வருஷங்களாக திருவாய் மொழி-இராப்பத்து உத்சவம் திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைத்தது-
    நாதமுனிகள் ஏற்பாட்டால் பகல் பத்தும் இராப் பத்தும் இயற் பாவும்-ஆக 21 நாள்கள்
    திருவேங்கடத்தில் மேலும் 2 நாள்கள் -இராமானுஜ நூற்றந்தாதி தனியாக ஒரு நாள் -அனந்தாழ்வான் ஏற்பாடு
    தண்ணீர் உத்சவம் -திருமலை நம்பி வம்சத்தாருக்காக)

    (தர்ம வர்மா திருச்சுற்று
    ராஜ மகேந்திரன் திருச்சுற்று
    குலசேகரன் திருச்சுற்று
    ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதி
    திருவிக்ரமன் திருச்சுற்று
    உத்தர வீதி -உள் துறையார்கள் -அந்தரங்க கைங்கர்ய பரர்கள் -ஆயிரம்கால் மண்டபம் மேல் நம்பெருமாள் இருக்க தாளம் இசைத்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்வானாம்
    சித்ர வீதி –ஆக ஏழு பிரகாரங்கள் -மாட மாளிகைகள் சூழ் திருவீதி இதுவே -முன்பு இதற்கு வெளியில் தான் குடியிருப்பாம்)

    ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
    சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாய்
    இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல ஆத்மாக்களோடு தனக்கு யுண்டான சம்பந்தம் ஒத்து இருக்க –
    சிலர் தன்னை அனுபவித்து வாழ்ந்தும் –
    சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு -திரு உள்ளம் கலங்கி –
    இவர்கள் நம்மைக் கிட்டி அனுபவிக்கும் விரகு ஏதோ -என்று பார்த்து –

    சம காலீநர்க்கு ஆஸ்ரயண உபயோகியான விபவங்கள் போல் அன்றிக்கே –
    பின்னானார் வணங்கும் சோதி (திரு மூழிக் களத்தானே) -என்கிறபடியே -எல்லாக் காலத்திலும் -எல்லா தேசங்களிலும் -எல்லார்க்கும்
    ஆஸ்ரயணம் ஸூலபமாம்படி பண்ணி –
    அர்ச்சாவதாரமாய் ஸ்ரீ கோயில் முதலான  திருப்பதிகள்  தோறும் -க்ருஹங்கள் தோறும் நித்ய சந்நிதி பண்ணி –
    ஆஸ்ரித பராதீனனாயும் -ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பட்ட நாதாதி பக்த  முக்தராலும்
    அநேக ஆத்மாக்கள்  உஜ்ஜீவிக்கும் படி ரஷித்து அருளா நிற்கிற காலத்திலே-

    ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும் –
    வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற் கணார் கல்வியே கருதி -என்று
    ஸ்ரீ சர்வேஸ்வரன்  விபூதி அடைய இவர் தொடைக் கீழே கிடக்கிறதோ -என்று சங்கிக்க வேண்டும்படி –
    அதிசய அஹங்கார உக்தராய் – அதுக்கடியான தேஹாத்ம அபிமாநத்தை யுடையராய் –
    ஆத்ம விஷய மாதல் -ஈஸ்வர விஷயமாதல் -ஒரு ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத படி
    விஷய ப்ரவணராய் இருக்க –

    இவரை இது நின்றும் எடுக்க விரகு பார்த்து -இவருக்கு விஷயங்களில் யுண்டான ரசிகத்வமே பற்றாசாக
    தன் அழகையும்

    (ஸூஸேக்ஷண –அவனது அழகே நம்மைத் திருத்த வைக்கும் உபகரணம்
    ஐயப்பாடு அறுக்கும் அழகன்
    ஆதரம் பெறுக வைத்த அழகன்
    ஒருநாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு படுத்தும் பாடு)
    சர்வார்த்த ப்ரகாசகமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
    சௌசீல்யாதி குணாதிக்யத்தையும் –
    ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்ட இவரும் ஹ்ருஷ்டராய் -இவர் –

    (முன்பு ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தைப் பேணி வந்தவர் இப்பொழுது தான் ஆழ்வார் ஆகிறார்-காரார் திருமேனி காலம் அளவும் போய் சீரார் திருவேங்கடமே)

    (அரச மரத்தின் அடியில்
    ஆலி நாட்டுக்கு அரசனான கலியனுக்கு
    தெய்வங்களுக்கு அரசனான வயலாலி மணவாளன்
    மந்த்ர அரசான திரு மந்திரம் அருளிச் செய்த பின்பே
    ஆழ்வார் ஆனார்-வேடுபரி உத்ஸவம் இன்றும் ஸேவிக்கிறோம்)

    வாடினேன் வாடி -என்று தொடங்கி-உகந்து அருளிய நிலங்கள் தானே ஆஸ்ரயணீயம்-என்று நினைத்து –
    ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே –
    ஸ்ரீ பகவத் அர்ச்சாவதார ஸ்தலங்களுக்கு எல்லாம் பிரதானமாய் –
    அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -என்று சொல்லுகிறபடியே
    ஸ்ரீ பாகவத கோஷ்டிக்கு எல்லாம்  விரும்பி வர்த்திக்கும் ஸ்தலமான ஸ்ரீ திரு வரங்கத் திருப்பதியிலே
    நித்ய வாசம் செய்து அருளக் கண்டு –

    நாள் தோறும் -கோல  மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ
    நிறை கொண்டது என் நெஞ்சினையே-என்கிறபடியே
    ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திரு உள்ளம் குடி புகுந்து அத் தலைக்கு மங்களா சாசன பரராய் –
    திருக் கோபுரம் -திரு மதிள்-திரு மண்டபங்கள் -திரு மடைப் பள்ளி -முதலான கைங்கர்யங்களும்  நடப்பித்துக் கொண்டு

    இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் -என்கிறபடியே –
    ஒருவராலும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற த்ரமிட சாஸ்திரத்தைக் கரை கண்ட ஜ்ஞானாதிக்யத்தை யுடையராய் –
    தமிழ்க் கவிகளுக்கு எல்லாம் தலைவராய் -நாலு கவிப் பெருமாள் -என்று திரு நாமம் பெற்று –

    ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளான-
    ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திருவாய் மொழி -என்கிற நாலு பிரபந்தங்களிலும்
    சப்த ரசம் -அர்த்த ரசம் -பாவ ரசம் -என்கிற ரச விசேஷங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு –

    விசேஷமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே –
    அந்தமில் பேரின்பம் -பெற்றவர் ஆகையாலே -அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக
    அனுசந்தித்துக் கொண்டு போரா நிற்க -நல்லடிக் காலத்திலே –

    திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமார்களும் திரு மஞ்சனம் கொண்டு அருளி –
    செங்கமலக் கழலில்  -ஸ்ரீ பெரியாழ்வார் -1-5-10-படியே நன்றாக ஒப்பித்து நிற்க –

    (செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
    தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
    மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
    எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-)

    அப்போது ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற பிரபந்தத்தை இட்டருளி –
    ப்ரதமம் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செவி சாற்றி அருளும்படி தேவ கானத்தில் ஏறிட்டு அனுசந்தித்து –
    திரு உள்ளம் உகக்கும் படி நன்றாக  ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலும் ஏத்தி நிற்க –

    ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ஆழ்வார் திறத்திலே திரு உள்ளம் குடி புகுந்து –
    ஸ்ரீ ஆழ்வீர்-இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே இரா நின்றீர் -நாம் உமக்குக் செய்ய
    வேண்டுவது உண்டாகில் சொல்லும் -என்ன

    ஸ்ரீ ஆழ்வாரும் நித்ய சம்சாரியாய்ப் போந்த அடியேனை தேவரீர் இப்படி விஷயீ கரித்த பின்பு ஒரு குறை யுண்டோ –
    ஆகிலும் ஒரு விண்ணப்பம் யுண்டு -என்ன –
    ஸ்ரீ பெருமாளும் -அத்தைச் சொல்லும் -என்ன –

    ஸ்ரீ ஆழ்வாரும் -நாயன்தே நாயன்தே -தேவரீர் லோக அநுக்ரஹர்த்தமாகச் செய்து அருளின அர்ச்சாவதார ஸ்தலங்களில்
    பிரதானமான இந்த ஸ்தலத்திலே
    மார்கழி மாசம் சுக்ல பஷத்தில் ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)அன்று அத்யயன உத்சவம் கொண்டு அருளும் போது-(முன்பே வேதங்களை மட்டும் ஓதும் அத்யயன உத்சவம் நடந்து வந்துள்ளது)
    ஸ்ரீ சடகோபன் சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியையும் வேத பாராயணத்தோடு கேட்டருளி
    இதுக்கு வேத சாம்யமும் அநுக்ரஹித்து அருள வேணும் -என்ன –

    (இதே போல் பின்பும் பாடிய வாளன் படித்துறை –வாளை வீசி கேட்டுப் பெற்ற வ்ருத்தாந்தம்)

    ஸ்ரீ பெரிய பெருமாளும் திரு உள்ளம் உகந்து -அப்படியே வேத சாம்யம் அநுக்ரஹித்தோம்-
    அத்யயன உத்சவத்தில் வேத பாராயணத்தோடு ஸ்ரீ திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்-என்று
    அருளப்பாடு பிரசாதித்து அருளி

    ஸ்ரீ கலியன் நம்மை தேவ கானத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது -ஆன பின்பு நாம் இன்று தரித்த
    சிஷ்டமான எண்ணெய் காப்பை அவர் திரு மிடற்றிலே தடவுங்கோள் -என்று அருளப்பாடு பிரசாதிக்க
    பின்பு ஸ்ரீ பெருமாள் பரிகரமும் அவர் திரு மிடற்றிலே எண்ணெய் காப்பைச் சாத்த –அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்து அருளின பின்பு –

    ஸ்ரீ திரு நகரியிலும் ஸ்ரீ ஆழ்வார் அத்யயன உத்சவத்துக்கு
    ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கு –
    ஸ்ரீ பெரிய பெருமாள்  திரு முகப் பட்டயம் எழுதி சந்நிதிப் பேரர்களையும் ஸ்ரீ திரு நகரிக்கு அனுப்பி வைக்க –

    (இப்பொழுதும் திருக் கார்த்திகை உத்சவத்தில் கைத்தலை சேவையால் ஆஸ்தானம் வரை நம்பெருமாள் எழுந்து அருளுகிறார்)

    ஸ்ரீ ஆழ்வாரும் திரு முகப் பட்டயத்தை சிரசா வகித்து அத்யயன உத்சவத்துக்கு உதவும்படி ஸ்ரீ கோயில்  ஏற எழுந்து அருளின பின்பு
    ஸ்ரீ திரு மங்கை மன்னனும் ஸ்ரீ ஆழ்வாரை எதிர் கொண்டு -திருவடி தொழுது -சந்நிதியிலே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக

    ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வாரைக் குளிரக் கடாஷித்து அருளி -தம் திரு உள்ளத்தில் உகப்பாலே – ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று திரு நாமம் சாற்றி –
    திருமாலை -ஸ்ரீ சடகோபன் திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை பிரசாதிக்க –

    (ஸ்ரீ சடகோபனுக்கே ஸ்ரீ சடகோபன் சாத்தி அருளுகிறார் நம்மாழ்வார்)

    ஸ்ரீ திரு மங்கை மன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக -ப்ராத காலத்திலே வேத பாராயணமும் –
    ராத்திரி காலத்திலே ஸ்ரீ திருவாய் மொழியும் அநு சந்தானமாக கால விபாகம் பண்ணி
    வேதங்களை அநு சந்தித்துச் சாற்றி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தித்துச் சாற்றும் போது
    ஸ்ரீ ஆழ்வார் முன்பு ஸ்ரீ திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்த படியை அநு கரித்து
    ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து

    ஸ்ரீ ஆழ்வார் பிரதி சம்வத்சரம் அத்யயன உத்சவத்துக்கு எழுந்து அருளி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தானம் நடக்கும்படி பண்ணுவித்து
    திருமாலை  ஸ்ரீ சடகோபன் முதலான வரிசைகள் எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பிரசாதித்து அருளப்பாடும் பிரசாதித்து
    அருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க

    பின்பு ஸ்ரீ ஆழ்வாரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ திரு நகரி ஏற எழுந்து அருளி -பிரதி சம்வத்சரம் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி –
    அத்யயன உத்சவத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு வர 

    (அத்யயன உத்சவம் மாசி மாதம் இப்பொழுதும் திருத்தொலைவில்லி மங்கலத்தில் -நம்மாழ்வார் திரும்பிப் போகும் பொழுது நடந்தது)

    (கலியுகம் தொடங்கி 398-வருஷம் திரு அவதாரம்-503 வருஷம் தன்னுடைச் சோதி -திருக் குறுங்குக்குடியில்)

    (86-திவ்ய தேச மங்களா சாசனம்-47 -இவர் மட்டுமே மங்களா சாசனம்-திருவரசு உள்ளது)

    (அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,-ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,-பரந்த விழியும், படிந்த நெற்றியும்,-நெரித்த புருவமும், சுருண்ட குழலும்,-வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,-தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,-

    அகன்ற மார்பும், திரண்ட தோளும்,-நெளித்த முதுகும், குவிந்த இடையும்,-அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,-தூக்கிய கருங்கோவையும்,தொங்கலும் தனி மாலையும்,-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்,-சாத்திய திருதண்டையும்,

    சதிரான வீரக்கழலும்,-தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,-குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,-வாடினேன் வாடி வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி, மருவளர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே!!!-(மன்னு முடி தொப்பாரம் -திருமங்கை மன்னனுக்கு அசாதாரண திரு அபிஷேகம்)

    உரை களித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல், உருக வைத்த மனம் ஒழித்து உலகளந்த நம்பி மேல், குறையை வைத்து, மடல் எடுத்த குறையலாலி திருமணங்கொல்லை தன்னில்,வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,

    மறை உரைத்த மந்திரத்தை, மால் உரைக்க அவன் முனே, மதி ஒடுக்கி, மணம் அடக்கி,வாய் புதைத்து ஒன்றலார்,கரை குளித்த வேல் அணைத்து நின்ற இந்த நிலைமை,என் கண்ணை விட்டு அகன்றிடாது

    கலியன் ஆன ஆனையே!!! காதும் சொரிமுத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை தாளினையும், தனிற்றிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப்போல, என் ஆணை ஒப்பார் இல்லையே!!!!

    வேல் அணைத்த மார்பும், விலங்கு திருவெட்டெழுத்தை மால் உரைக்க, தாழ்த்த வளர்செவியும் தாளினை தண்டையும் வீரக் கழலும், தார்க் கலியன் நன்முகமும் கண்டு களிக்கும் என் கண்.)

    (இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
    இதுவோ எழிலாலி என்னுமூர்
    இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
    எட்டெழுத்தும் பறித்தவிடம்.)

    [வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]

    ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான் வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின் எட்டெழுத்தும் பெற்ற இடம்.

    (ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.)

    இப்படி சில காலம் சென்ற பின்பு –
    கலி தோஷத்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான திவ்ய பிரபந்தங்கள் லுப்தமாய் –
    பஹூ காலம்  அத்யயந அத்யாபநங்கள் இன்றிக்கே –
    ஸ்ரீ ஆழ்வாரும் அத்யயன உத்சவத்துக்கு கோயில் ஏற எழுந்து அருளாமல் இருக்க –

    இப்படி சில காலம் சென்றவாறே -ஸ்ரீ மன் நாதமுனிகள்( ஸ்ரீ மன் நாதமுனிகள் திருவவதாரம் 823-ஆனி அனுஷம்) -ஸ்ரீ வேத வியாச பகவான் லோகத்திலே திரோஹிதங்களான
    வேதங்களை உத்தரித்தால் போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை உத்தரிப்பதாக திரு உள்ளமாய்
    ஸ்ரீ திரு நகரி எழுந்து அருள –

    ஸ்ரீ மதுரகவி சம்ப்ரதாயஸ்தரான ஸ்ரீ பராங்குச நம்பி சந்நிதியிலே –
    ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்கிற ஸ்ரீ ஆழ்வார் விஷயமான திவ்ய பிரபந்தத்தை லபித்து-
    ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திரு வாய் மொழிக்குப் பண்ணின அநுக்ரஹ அதிசயத்தை கேட்டருளி
    மிகவும் திரு உள்ளம் உகந்து -யோக தசையிலே ஸ்ரீ ஆழ்வாரை சாஷாத்கரித்து –

    தந் முகமாக
    ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும் -ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த (23)திவ்ய பிரபந்தங்களையும் லபித்து(பவிஷ்யத் ஆச்சயர்யரான எம்பெருமானார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் கொடுத்து அருளி) -க்ருதார்த்தராய் –
    ஸ்வ சிஷ்ய ப்ர சிஷ்ய  முகத்தாலே அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அத்யயந அத்யாபனங்களைப் பண்ணுவித்து –
    முன்பு போலே அத்யயன உத்சவத்தில் ஸ்ரீ ஆழ்வார் கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கும்
    வேத பாராயணத்தோடு  ஸ்ரீ திருவாய் மொழி  அநு சந்தானம் நடக்கும் படி பண்ணி –

    ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திருவாய் மொழிக்கு வேத சாம்யத்தை அநு க்ரஹிக்கையாலே –
    வேதங்களுக்கு உபக்ரம உத்சர்ஜந கால நியமம் உண்டானாப் போலே –

    த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் – என்று ஓதப்பட்ட திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழிக்கும்
    திருக் கார்த்திகை திவ்ய மஹோத் சவத்திலே  உத்சர்ஜன   காலம் என்றும்
    மார்கழி மாதத்திலே அத்யயன உத்சவத்திலே உபக்ரம காலம் என்றும்
    திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியை திருக் கார்த்திகை உத்சர்ஜனம் பண்ணி –
    உபக்ரம காலமான அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் கேட்டருளும்  அளவும்
    ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சினால் நினைந்து வாயினால்   மொழியாமல் இருக்கும் படிக்கும்
    ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிரதி வருஷம் திரு முகப் பட்டயம் பிரசாதிக்கும் படியும்

    அன்று திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் தாம் சாத்திக் கொண்ட எண்ணெய் காப்பு
    சேஷத்தை ஸ்ரீ திரு மங்கை மன்னன் திரு மிடற்றிலே சாத்துவித்து அவர் தம்மைப் பாடின இளைப்பு  எல்லாம்
    தீரும்படிப் பண்ணின கட்டளையை பிரதி சம்வத்சரம் திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே
    ஸ்ரீ பெரிய பெருமாள் சாத்திக் களைந்த எண்ணெய்  சேஷத்தை ஸ்ரீ ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான
    ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மிடற்றிலே சாத்தி
    அந்த சேஷத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்கள் தங்கள் திரு மிடற்றிலே சாத்தும் படிக்கும் –

    ருக்காதி பேதேன சதுர் விதமான வேதங்களுக்கு சீஷாதிகளும் இதிஹாச புராணங்களும் அங்க உப அங்கங்களாக இருக்குமா போலே
    ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நாலு பிரபந்தங்களும் -நாலு வேத ஸ்தாநே  யாகவும்
    ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் மற்றை ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த
    பிரபந்தங்களும் அங்க உப அங்கங்கள் ஆகவும் –

    (வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
    இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்-
    (இருமை -பெருமை -)-சூரணை-43-)

    (மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
    ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது )

    (மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
    அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது .)

    ஸ்ரீ திருவாய் மொழி தானும் த்வ்யார்த்த விவரணம் என்றும்

    ஸ்ரீ திருப் பல்லாண்டு  முதல் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -ஸ்ரீ பெருமாள் திருமொழி –
    ஸ்ரீ திருச் சந்த விருத்தம் -ஸ்ரீ திருமாலை -ஸ்ரீ திருப் பள்ளி எழிச்சி -ஸ்ரீ அமலனாதி பிரான்
    ஆக இப் பிரபந்தங்கள் (ஒன்பதும்)ப்ராயேண பிரணாவர்த்த பிரகாசகம் ஆகையாலே முதல் ஆயிரம் -என்றும் –

    ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் சப்தார்த்த விவரணம் -என்றும்

    ஸ்ரீ திருமொழி -ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –
    ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அருளிச் செய்த ஸ்ரீ திருவந்தாதி மூன்றும் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் –
    ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை -ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பெரிய திருமடல் (ஆகிய பதின்மூன்றும்)-ஸ்ரீ மந்திர சேஷ விவரணம்  என்றும்

    இதில் இதில் ஸ்ரீ திருவந்தாதி மூன்று முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக சப்த ரச பிரதானமாய் இருக்கையாலே -ஸ்ரீ இயற்பா -என்றும்

    இப்படி இருபத்து மூன்று பிரபந்தங்களும் திருமந்த்ரார்த்த விவரணம் என்றும்

    இப் பிரபந்தங்களிலே ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவத்துக்கு விஷயமாய்-  ஸ்ரீ எம்பெருமான்
    விரும்பி வர்த்திக்கிற ஸ்தலங்கள்- ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருப் பாற் கடல் தொடக்கமான நூற்று எட்டு -என்றும்

    ஸ்ரீ திருவாய் மொழி ஒழிந்த பிரபந்தங்கள்- ஸ்ரீ திருப் பல்லாண்டு முதலாக ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் அளவாக
    அத்யயன உத்சவத்துக்கு முன்பு பத்து நாளாக பெரிய பெருமாள் கேட்டு அருளும்படிக்கும்

    ஸ்ரீ திருவந்தாதி முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக அத்யயன உத்சவ அனந்தரம் மற்றை நாள் கேட்டு அருளும் படிக்கும் –

    ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் -ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ மத் மதுர கவிகள் ஆகப் பன்னிரண்டு திரு நாமங்களும்
    அருளிச் செய்த இருபத்து மூன்று பிரபந்தங்களில் பாட்டு நாலாயிரம் -என்றும் –

    பிராமணனுக்கு வேத வேதாந்தங்கள் -இதிஹாச புராணங்கள் அதிகரிக்க வேண்டுமா போலே
    பிரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ திவ்ய பிரபந்தங்கள் அதிகரிக்க வேணும் என்றும் –

    இதில் ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சி எம்பெருமானை திருப் பள்ளி யுணர்த்து வதாகையாலே –
    ப்ராத காலத்தில் நித்யம் அனுசந்தேயம் என்றும்

    எப்போதும் பிரபந்த அனுசந்தானத்துக்கு முன்பு மங்களா சாசன பரமான ஸ்ரீ திருப் பல்லாண்டு அனுசந்தேயம் என்றும்

    ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தானத்துக்கு பூர்வ  உத்தரங்களிலே ஸ்ரீ ஆழ்வார் விஷயமான
    ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் என்றும்

    இப்படி ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திலே அநேக ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை நியமித்த நியமனம் –

    (திருநெடும் தாண்டகம் முதலில்
    முதல் நாள் திருப் பல்லாண்டு தொடங்கி 2-9-வரை முதல் நாள்
    அடுத்த நாள் 2-10/3-1/அபிநயம் பிடித்து -5-3 வரை
    மூன்றாம் நாள் -5-4 சென்னியோங்கு பதிகம் -7 பாசுரம் வியாக்யானம் -பின்பு ஸ்ரீ சடகோபன் அரையர் ஸ்வாமி ஸாதிப்பார் –
    திருப்பாவை -நாச்சியார் திருமொழி பாசுரங்கள்
    நான்காம் திருநாள் -இரண்டு அரையர் சேவை -நாச்சியார் திருமொழி -பெருமாள் திருமொழி -திருச்சந்த வருத்தம் -கம்ச வதம்
    ஐந்தாம் நாள் திருமாலை -6 வரை -ஆராதனம் முடிந்து மீதம் பாசுரங்கள்
    ஆறாம் நாள் கண்ணி நுண் சிறுத்தாம்பு-பின்பு திருமொழித் திருநாள் –முதல் 220 பாசுரங்கள்
    ஏழாம் திருநாள் -மீண்டும் இரண்டு அரையர் சேவை – திருமொழி சேவை -அம்ருத மதனம் -பண்டை நாள் -திருவரங்கம் பாசுரம் -தெள்ளியீர் -8-2- அபிநயம்
    முத்துக்குறி அபிநயம்
    தசமி நாச்சியார் திருக்கோலம் -இரண்டு அரையர் சேவை -ராவண வதம் அபிநயம்
    11 நாள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் -திருவாய் மொழி திருநாள்
    விராஜா நதி மூன்றாம் திருச்சுற்று
    ஒவ்வொரு நாளும் 100-பாசுரங்கள் அபிநயமும் உண்டு -ஒவ்வொரு நாளும்
    ஏழாம் நாள் கங்குலும் பகலும் -அபிநயம் -பராங்குச நாயகி திருக்கோலம்
    திருகைத்தல சேவை நடக்கும் -ஹிரண்யவதம்
    எட்டாம் நாள் வேடுபரி -நெடுமாற்க்கு அடிமை அபிநயம்
    ஒன்பதாம் நாள் -காலை மாலை கமல மலரிட்டு அபிநயம்
    பத்தாம் நாள் -தாள தாமரை அபிநயம் -திருவடி தொழுதல் இறுதி 20 பாசுரம் -நம்மாழ்வாரைத் திரும்பிப் பெறுதல்
    அடுத்த நாள் காலையில் தான் தீர்த்தம் ப்ரஸாதம் ஆகும்
    பின்பு இயற்பா 21- நாள்)

    —————

    வைகுண்ட ஏகாதசி
    ஆழ்வார் திருவடி தொழுதல்
    நம்மாழ்வார் மோட்ச வைபவம்

       பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

         மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

         ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

       அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

    அரங்கனின் திருவோலை

         திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

        நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

    ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

       நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

    வைகுண்ட ஏகாதசி
    ஆழ்வார் திருவடி தொழுதல்
    நம்மாழ்வார் மோட்ச வைபவம்

       பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

         மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

         ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

       அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

    அரங்கனின் திருவோலை

         திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

        நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

    ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

       நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

    திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.

         11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங் களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக் கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திரு முகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, ‘ முனியே..! நான்முகனே..’ என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.

         நம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்!

       அரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப் பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்!

          இராப்பத்தின் நிறை நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு  வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

    அரங்கன் ஆழ்வாரைத் திருப்பித் தரும் வைபவம்

          இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.

           இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

           அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

    தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
    நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
    தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
    காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே

     என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

    பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
    பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
    மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
    அணிநின்ற செம்பொன் அடலாழியானே

    கண்ணன் கழலிணை
    நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம்
    திண்ணம் நாரணமே

            என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

        நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.
    நனி சிறந்த அறிவு பெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

    சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
    ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
    பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
    கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

    கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

    வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
    வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
    வைகுந்த்தமரரும் முனிவரும் வியந்தனர்
    வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

    விதிவகை புகுந்தனரென்று நல் வேதியர்
    பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
    நிதியும் நற்சுண்ணமும் நிறை குடவிளக்கமும்
    மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

            இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

    முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
    கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
    த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
    இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

           என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது.

         பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.

    நம்மாழ்வார் மோட்சம் (திருத்துழாயால் ஆழ்வார் மூடப்படல்)

     சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ?
    சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதீயோ!
    சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பமேயோ!
    சூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே

    அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
    அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
    அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
    அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

          என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.

    ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

    நம்மாழ்வாரின் பிறபெயர்கள்

    1. சடகோபன்
    2. மாறன்
    3. காரிமாறன்
    4. பராங்குசன்
    5. வகுளாபரணன்
    6. குருகைப்பிரான்
    7. குருகூர் நம்பி
    8. திருவாய்மொழி பெருமாள்
    9. பெருநல்துறைவன்
    10. குமரி துறைவன்
    11. பவரோக பண்டிதன்
    12. முனி வேந்து
    13. பரப்ரம்ம யோகி
    14. நாவலன் பெருமாள்
    15. ஞான தேசிகன்
    16. ஞான பிரான்
    17. தொண்டர் பிரான்
    18. நாவீரர்
    19. திருநாவீறு உடையபிரான்
    20. உதய பாஸ்கரர்
    21. வகுள பூஷண பாஸ்கரர்
    22. ஞானத் தமிழுக்கு அரசு
    23. ஞானத் தமிழ் கடல்
    24. மெய் ஞானக் கவி
    25. தெய்வ ஞானக் கவி
    26. தெய்வ ஞான செம்மல்
    27. நாவலர் பெருமாள்
    28. பாவலர் தம்பிரான்
    29. வினவாது உணர்ந்த விரகர்
    30. குழந்தை முனி
    31. ஸ்ரீவைணவக் குலபதி
    32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
    33. மணிவல்லி
    34. பெரியன்

    16.11.நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்

    1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்

    ஆழ்வார்களுள் அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.

    மற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால்

    மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.

    இதில்,

    பூதத்தாழ்வாரை தலையாகவும்,

    பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,

    பெரியாழ்வாரை முகமாகவும்,

    திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,

    குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,

    தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும்,

    திருமங்கையாழ்வாரை வயிறாகவும்,

    மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு இருக்கிறார்.

    இதிஹாச புராணங்களில் நம்மாழ்வார் அவதாரம் பற்றிய சிறு குறிப்புகள் :

    ப்ரம்மாண்ட புராணம் :  ஸ்ரீமந்நாராயணன் ப்ரம்மாவிடம், இருபத்தெட்டாவது கலியுகத்தில் “சடகோபர்” என்று திருநாமம் கொண்டு, நானே அவதரிக்கப் போகிறேன்; அப்போது, வடமொழி மறைகளைப் (வேதங்கள்) போல, தமிழ் மறைகளை (திவ்யப்ரபந்தங்கள்) வெளியிடுவேன். அத்தமிழ் மறைகளாலே கலியுகத்தில் மக்கள் பெருவாழ்வு வாழ்ந்து முக்தி அடைவார்கள் என்று தெரிவித்தான்.  

    இதைப்போல, விஷ்ணு-ரிஷி ஸம்வாதம் (பேசிக்கொள்வது), நாராயண-அகஸ்த்ய ஸம்வாதம் ஆகியவைகளிலும் பெருமான் தான் “சடகோபராக” அவதரிக்கப் போவதை அறிவித்தான்.  மேலும், இதிஹாசத்தில் மேன்மையானதான ஸ்ரீராமாயணம் “தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா” – தெற்கு, திக்கு யாவர்க்கும் புகலிடம், வேதம் தமிழ் செய்யவிருக்கும் முனியாலே என்றும் குறிப்பு உரைத்தது.  

    ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தத்தில், கலியுகத்தில் நாராயணனே பரம்பொருள் என்ற உறுதியான பொருளை வெளியிட, தமிழகத்தில் தாம்ரபரணி நதிக்கரையில், நம்மாழ்வாராக அவதரிக்கப் போகிறார் என்று குறிப்பு உரைத்தது.  

    விருத்தபாத்ம புராணம், கலியுக ஆரம்பத்தில், வைகாசி விசாக நக்ஷரத்தில் விஷ்ணு பக்தியை நிலைநிறுத்தும் வகையில், சேனை முதலியாருடைய (விஸ்வக்சேனர்) அம்சமான ஒருவர் அவதரிக்கப் போகிறார் என்று உரைத்தது.  

    மார்க்கண்டேய புராணம் நான்கு வேதங்களின் அம்சமாக (சாரமாக) நான்கு திவ்யப்ரபந்தங்களை  அருள சடகோப முனிவர் தோன்றப் போகிறார் என்றும், ஸாம வேதத்தின் ஆயிரம்  சாகைகளைத் தமிழ்ப்பாசுரம் வடிவமாக (திருவாய்மொழி) அருளிச்செய்யப் போகிறார் என்றும் உரைத்தது.  

    யஜுர் வேதம் : யஜுர் வேதம் ப்ராஹ்மணத்தில, காடகமென்ற பகுதியில், “பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்பிர் ப்ரஹமசர்யமுவாஸ” என்ற ஒரு உபாக்யானம் உள்ளது.  அதில், பரத்வாஜ மஹரிஷி அனைத்து வேதங்களையும் குறைவின்றிக் கற்க விரும்பி, அதற்குத் தேவையான ஆயுளைப் பெற இந்திரனிடம் யாசித்துப் பெற்றார்.  இந்திரன், முன்னூறு ஆண்டு கழிந்து தளர்ந்த சரீரத்தை உடைய முனிவரை மறுபடியும் கண்டு,  ஒரு நூறு ஆண்டு வாழும் ஆயுளைத் தந்தால் என்ன செய்வீர்? என்றான்.  முனிவர் அதற்கு, மற்ற வேதங்களை அறிந்துகொள்ள முயல்வேன் என்றார்.  உடனே இந்திரன், வேதங்களுக்கு அளவே இல்லை. .அவை அனைத்தையும் ஒருவன் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள முடியாது என்றான்.  இதனால் மிகவும் வருத்தம் கொண்டார் பரத்வாஜர்.  இந்திரன் அவரைத் தேற்றி, “முனிவரே! கவலை வேண்டாம்; திருவாய்மொழியாகிய ஸாவித்ர வித்யையை உபதேசிக்கிறேன் என்று சொல்லி, அதன்படி உபதேசித்து, வேதங்கள் அனைத்திலும் உள்ளதை இதன்மூலமாக அறியலாம் என்றான்.  

    ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்தார் என்பதனை, “அருளினான் அவ்வருமறையின் பொருள்” (அருமறை : நான்கு வேதங்களின் அர்த்தங்களை, தனது திருவாய்மொழி என்னும் திவ்யப் பிரபந்தத்தின் மூலம் பாடியவர்) என்று நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக் கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரும், “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று ஸ்ரீமந் நாதமுனிகளும், நம்முடைய “முதல் குலபதி” என்று ஸ்ரீ ஆளவந்தாரும், “சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன்” என்று மணவாள மாமுனிகளும், “வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே” என்று அப்பிள்ளையும் கொண்டாடியுள்ளனர்.  “எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வந்த சடகோபர்” (இராமாநுச நூற்றந்தாதி, 18)  என்று திருவரங்கத்தமுதனார் என்னும் வைணவ ஆசார்யர் பாடியுள்ளார்.  அதாவது, “அணுகுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் கடினமான வடமொழி வேதங்களை, இனிய தமிழ்மொழிகொண்டு திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களால் அறிவிக்க வந்தவர் என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார்.  

    மாறன் பணித்த தமிழ் மறை” என்று மணவாள மாமுனிகள் என்னும் வைணவ ஆசார்யர், “நம்மாழ்வார்” அருளிய திவ்யப் பிரபந்தங்களைப்  போற்றுகிறார்.  “மாறன்” என்பது நம்மாழ்வாரின் இன்னொரு திருநாமம் (பெயர்). “வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே” என்பது இவ்வாழ்வாருக்கு அமைந்துள்ள பல்லாண்டு  (புகழ் பாடும் துதி) ஆகும்

    திருவிருத்தம்” (100 பாசுரங்கள்) – “ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே” …”ருக் வேத சாரம்”.

    திருவாசிரியம்” (ஏழு பாசுரங்கள்) – “ஆசிரியம் ஏழு பாட்டு அளித்த பிரான் வாழியே” ….”யஜுர்வேத சாரம்”.

    ஆசிரியப் பாக்களால் அமைந்ததால், யாப்பின் அடிப்படையில் “திருவாசிரியம்” என்று பெயர் பெற்றது.  பக்தி இலக்கியங்களில் ஆசிரிய யாப்பினால் பாடப்பெற்று, பாடப்பெற்ற யாப்பினாலேயே பெயர் பெற்ற முதல் நூல் “திருவாசிரியம்” ஆகும்.   இது ஒன்பது முதல் பதினாறு அடி வரையுள்ள ஆசிரியப்பாக்களால் ஆனது.  அந்தாதி அமைப்புடையது.   வடமொழி மறைகளில் (வேதங்கள்) யஜுர் வேதம் மிகப்பெரியது ஆகும்.  இது ஏழு காண்டங்களைக் கொண்டது.  அவற்றின் சாரத்தை இவ்வாழ்வார் ஏழு ஆசிரியப் பாக்களில் அருளிச்செய்துள்ளார்.  பிரபந்தம் சிறிய அளவில் இருந்தாலும், பொருளில் (அர்த்த விஷயங்கள்) மிகப்பெரியது.  சொற் சுவையும், பொருட் சுவையும், பக்திச் சுவையும் நிறைந்த சிறந்த பிரபந்தமாகும் இது.  யஜுர் வேத மந்திரங்கள் வசன (உரை) நடையில் அமைந்தவை.  அதை ஒட்டி, இப்பிரபந்தமும் அப்படியே அமைந்துள்ளது.  யாகத்தின் நடைமுறையை விவரிப்பது யஜுர் வேதம்; யாகத்தினால் ஆராதிக்கப்படும் எம்பெருமானை அனுபவிப்பது திருவாசிரியம்.  

    பெரிய திருவந்தாதி” – “ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே” 

     இப்பிரபந்தத்தின் பொருள் (அர்த்த விஷயங்கள்) சிறப்பினைக் கருதி இது பெரிய திருவந்தாதி என்று பெயர் பெற்றது.  பெருமை பொருந்திய அந்தாதி என்பதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது.  மேலும், இதில் ஆழ்வார் பெருமானை நோக்கி, “யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?” –  அதாவது பெருமானே! நீ பெரியவன்; உன்னைப் பாடுவதால் நானும் பெரியவன் என்பதனை யார் அறிவார்   என்று அருளிச் செய்துள்ளதால் இது பெரிய திருவந்தாதி என்று போற்றப்படுகிறது.  மேலும் ஆழ்வார்களில் தலைவராக இருப்பவர் நம்மாழ்வார்; ஆக அவரைப் பெரியவர் என்று கொண்டு, அவர் பாடிய இந்த அந்தாதிப் பிரபந்தத்தை பெரிய திருவந்தாதி என்று அழைத்தனர் என்றும் கூறுவர்.

    இலகுதிருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே”

     மற்ற ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பெற்ற திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவ்வாழ்வாரே அருளிச்செய்த முதல் மூன்று திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவரால் பாடப்பெற்ற “திருவாய்மொழி”  என்னும் பிரபந்தம்தான் மிகவும் முக்கியமானது.  கண்ணபிரான் கீதையில் “ச்ருதிஸ்ம்ருதிர்  மமைவாஞ்ஞா” என்கிறார் – அதனால் வேதம் ஆணை (ஸத்யம்) என்பதும் மாறுபாடு இல்லாதது என்றும் பெருமைபெறுகிறது.  அதைப்போலவே, 1102 பாடல்களைக் கொண்ட திருவாய்மொழியும் “ஆணை ஆயிரம், ஏதமில் ஆயிரம், பொய்யில் பாடல், முந்தை ஆயிரம், அழிவில்லா ஆயிரம்” என்றபடி மேம்பாடு உடையது.  அநாதியான (மிகவும் பழமையான) வேதங்களை நாராயணன் நான்முகனுக்கு ஓதி வெளியிட்டான்  அதுபோலவே, நித்தியமான தமிழ் வேதமான திருவாய்மொழியை பகவான் ஆழ்வாருக்கு ஓதினான்.  ஆதலால் இதனை ஆழ்வார் அருளினார் என்கிறோம்.  ருக்வேதம் ஸ்வர விவரணமாய் கானரூபமான ஸாமவேதமாயிற்று.  அது போலவே ரிக்வேத சாரமான திருவிருத்தம் இசையோடு கூடிப்பரவி, திருவாய்மொழி (சாமவேத சாரம்) ஆயிற்று.  திருவாய்மொழியின் ஒவ்வொரு பதங்களும் திருமால் பெருமையையே பேசுகிறது.  

     ஆழ்வார் எம்பெருமானை ஞானக்கண்ணால் கண்டுகளித்தார்.  அக்களிப்பினால் சொல்மாலைகள் பாடினார்.  ஒவ்வொரு பாசுரமும் இறைவனுக்கு அணிவித்த மாலை என்று கொள்ளுதலே பொருத்தமாகும்.  “அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்” என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார் மதுரகவிகள்.  அதாவது, உலகோர் அனைவரும் எம்பெருமானையே உபாயமாகப் பற்றி உய்யவேண்டும் என்று பேராவல் கொண்டு 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியை அருளிச்செய்தார் நம்மாழ்வார் என்று பொருள்.  

    “என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கிருந்து தமிழ்நூல் இவை மொழிந்து” என்றும், “பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி”  என்றும் பாடி, பகவானே தம் உள்ளத்திலிருந்து பாடல்களைப் பாடுகிறான் என்பது ஆழ்வாரது கூற்று (கருத்து).  

     பகவானது திருவருளால் ஆழ்வார் தாம் பெற்ற நலத்தை ஒவ்வொரு பதிகத்திலும் விளக்குகிறார்.  “பதிகம்” என்றால், பத்து பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.  இதைப்போல ஒரு நூறு (100) பதிகங்களைக் கொண்டது “திருவாய்மொழி”ப் பிரபந்தம்.  ஒவ்வொரு பதிகமும் பகவானின் விசேஷ குணங்களை அனுபவிப்பதாக இருக்கும்.  முதலில் இவர் மதிநலம் (தெளிந்த ஞானம்) பெற்றார்.  பகவானது அருளால் தாம் கண்ட தத்வத்தை (உண்மையை) மறவாமை நேர்ந்தது; இந்த ஞானத்தின் விளைவாக இவர் தேறியது; தாம் பெரும் மோக்ஷம் பெருமானது அருளாலேயே – அவனது கருணையாலேயே என்பதை உறுதிசெய்து பாடியுள்ளார் ஆழ்வார்.  பகவானுக்கு எல்லா காலத்திலும் எல்லா நிலைகளிலும், எவ்வகைகளிலும் அடிமை செய்வது தமது பேறென்று விரும்பினார்.   தாம் கோரும் (விண்ணப்பிக்கும்) அடிமைக்கு விரோதமான பிறவியை இவர் கடிந்தார் (வெறுத்தார்).  பின்பு பகவானை அனுபவிப்பதற்குப் பெரியதோர் காதல் கொண்டார்  இவனது திருவடிகளில் பணிந்து இவனே உபாயம் (வழி) என்று துணிந்திருந்தார்.  

     நம்மாழ்வார் “வேதம் தமிழ்செய்த மாறன்” என்று மணவாள மாமுனிகளால் போற்றப்படுகிறார்.  அவர் அருளிச்செய்துள்ள திருவாய்மொழியானது “தமிழ்வேதம்” என்றும் போற்றப்படுகிறது.  இந்த வேதஸமான (வேதத்திற்கு சமமான) திருவாய்மொழி அவ்வேதத்தை வெளியிட்டது எவ்வாறு என்றால், 

     “ஸத்யம் ஞானம் அநந்தம் பிரம்ம” என்கிற வாக்கியத்தை “உணர்முழுநலம்” என்றும், “பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் சாச்வதம் சிவமச்சுதம் நாராயணம்” என்கிற வாக்கியத்தை “நாரணன் முழு ஏழுலகுக்கும் நாதன்” என்றும், “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன்” என்றும், “சக்ஷூர் தேவநாம் உதமர்த்யாதாம்” என்கிற வாக்கியத்தை “கண்ணானாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” என்றும், “ஹ்ரீச்சதே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ” என்கிற வாக்கியத்தை “தேவிமாராவார் திருமகள் பூமி” என்றும் தம்முடைய செஞ்சொற்களாலே வேதத்தை தமிழ்படுத்தி அருளினார் நம்மாழ்வார்.  

     திருவாய்மொழியின் பயன்:   எம்பெருமானார் (இராமாநுசர்) இவ்வுலகோருக்கு உபதேசம் செய்தவைகளுள் “மிகச்சிறந்த செல்வமும், தந்தையும், தாயும் குருவும் தெய்வமும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியே ஆகும்” என்பதே சிறப்புடையதாய் இருக்கிறது.  மாறனின் செந்தமிழ் ஆரணம் பெருமையுடையது.  பரபக்தி, பரஞ்ஞானம், பரமபக்தி முதலான நல்லியல்புகள் உடையது திருவாய்மொழி.  மோக்ஷத்தை அடையும் வழியைக் காட்டுவது இது.  திருவாய்மொழியை ஒதுபவரை தவறாது காக்கும் தன்மையுடையது திருவாய்மொழி.  இதனை நன்கு உணர்ந்து கற்பவர் வைணவர் ஆவார். 

    மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
    (சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
    முடத்திருமாறன்பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
    இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
    மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிமாலைமாறன்நாயனார்
    நின்றசீர் நெடுமாற நாயனார்
    மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

    மாறன் சடகோபனின் தந்தை காரி மாறன். இவர் பாண்டியர் ஆட்சியில் சிற்றரசராக திருக்குருகூர் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்தவர். அதனால் பாண்டியர்களின்
    “மாறன்” எனும் அடைமொழியோடு வாழ்ந்தார். ஆழ்வாரும் தம் தமிழருவிப் பாசுரங்களில் சில பாசுரங்களில் தன்னை  சடகோபன் மாறன் என்றே கூறிக்கொள்கிறார்.
    (திருவாய்மொழி2-6-11, 4-5-10, 4-7-11, 4-10-10, 5-2-11,)

    ————

    வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்

    கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணங் கடந்த

    போதக் கடலெங் குருகூர்ப் புனிதன் கவியின் னொரு

    பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே”–என்றார் கம்பர்.

    ———–

    ”சேமம் குருகையோ? செய்ய திருப் பாற்கடலோ?

    நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம் துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ? உளவோ பெருமான் உனக்கு“.

    ———-

    பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்

    தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்

    காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்

    பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”–நம்மாழ்வாரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி

    ஸ்ரீ மணவாளமாமுனிகளும், நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து, “உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள், உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? உண்டோ,திருவாய்மொழிக்கொப்பு ? தென்குருகைக்குண்டோ ஒருபார் தனிலொக்குமூர்?” என்று நம்மாழ்வார் பிறந்த நட்சத்திர தினமான வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும், அவர் கொடுத்த திருவாய்மொழியையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார்.

    -------------------------------
    
    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ முக்திநாத் (ஸ்ரீ சாளக்கிராமம்)-நேபாளம்

    September 20, 2024

    ஸ்ரீ முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

               ஸ்ரீ வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

             கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மற்றும் சிறிது துரம் நடந்து முக்திநாதரை தரிசிக்கலாம்

    ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
    இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
    தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.–பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)

    கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
    சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
    மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
    தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.–திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)

    சாளக்கிராமம்-ஆழ்வார்கள்-மங்களாசாசனம்(12-பாசுரங்கள்)

    முக்திநாத் பூமி நுழைவு வாசல்

    60.1(a) முக்திநாத் பூமி நுழைவு வாசல்
    • ஜொம்ஸம்–கண்டகி நதியோரம் வேனில் பயணம்–பினனர் குதிரை சவாரி–சிறிது தூரம் நடை பயணம்முக்திநாத் தலம்.60.1(b) மலையடிவாரம்
    • முக்திநாத் கோவிலின் பாதை நுழைவு வாசல்- மூன்று கலசங்களோடு ஒரு அமைப்பு.60.1(c)
    • மூலஸ்தான விக்ரகங்கள்-பஞ்சலோகம்
    • எதிரே ஒருபுரம் ஹோமம்-மறுபுரம் விளக்குகள்60.1(d)
    • மூலவர் : ஸ்ரீமூர்த்தி ; தாயார்  : ஸ்ரீதேவி நாச்சியார்
      தீர்த்தம்  : சக்ர தீர்த்தம், கண்டகி நதி
      விமானம்  : ககன விமானம்.
    • கருவறைக்குள், ஸ்ரீசாளக்ராம நாராயணன், முக்தி நாராயணன்  ஸ்ரீதேவி, பூதேவியர்.
    • பெருமாளின் இடது பக்கம் ராமானுஜர், பிள்ளையார். பெருமாளின்  பக்கம் புத்தர் சிலை தாய்லாந்து பாணியில் கிரீடம்.
    • பெருமாளுக்கு வலது பக்கம் புத்தர் அமர்ந்த நிலையில்.  அவருக்கு முன்னால் இரண்டு உருவங்கள். நரநாராயணர்கள்.  இரண்டு சாளக்ராமங்கள்.60.1(e)
    • காலை இந்து முறை பூஜை, மாலை புத்த முறை பூஜை
    • ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது. பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா என்று அங்குள்ள பூசாரி கூறுகிறார். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது.
    • கோவில் உச்சியில் கலசம்!   வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். இரண்டு பக்கமும் செவ்வக  தீர்த்தக்குளங்கள். ஒன்று பாவங்கள் களைய, இன்னொன்று புண்ணியம் சேர்க்க! சரஸ்வதி குண்டம், லக்ஷ்மி குண்டம்  என்ற பெயரில் இருக்கும்.
    60.1(f)

               கோயிலுக்கு வெளியே,கோவிலின் பின்புரம், சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம்.

    60.1(g)

             மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந்தாலே இதில் நீராடலாம்.வெளியே அதிக சந்நிதிகள் இல்லை. இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன. சிறிய யாக சாலை உள்ளது.

    60.1(h)

                    கோயிலில் கூட்டமே இல்லை. இருநதாலும் அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் மொழியில் கூறிக்கொண்டே இருக்கிறார் , அர்த்த மண்டபம் போன்ற கட்டுமானங்கள் இல்லை.

    தலபுராணம்

           முன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள்.

        ஜலந்திரன் சாகா  வரம் வேண்ட பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே! உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது! எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்” என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான்.

          ஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப் படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான்

           அவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை. நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரத தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார்.

            இதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது.

            அதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதா தன்மை மாசடைந்து விடுகிறது.

         உடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார்.

           பிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதா தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்” என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.

          அதைக்கேட்ட திருமால், பிருந்தை உன்னுடைய விருப்பத்தை அப்படியே ஏற்கிறேன். நேபாளம் முக்திநாத்) கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்.

    சாளக்கிராமம்

          முக்திநாத்தில் பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று.

             ஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி!

          உன்னை, எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.

          அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள். உன் பதிவிரதா தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்!” என்று அருள்பாலித்தார்.

           அது முதற்கொண்டு துளசிச் செடியும் சாளக்கிராமமும் விஷ்ணு பூஜைக்கு உகந்ததாக ஆயிற்று.

    இராமாநுஜ கூடம்-ராணிபௌவா-ஆஸ்ரமம்

          இவ்விடத்தில், முக்திநாத் பக்தர்கள், முன்கூட்டியே அறிவித்தால், தேவையான தங்கும் வசதி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

    60.1(i)

           இங்கு மலைப்பகுதிகளில் சாளக்கிரமங்கள் என்று கூறப்படும் கற்கள் கிடைக்கின்றன.

           நைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும்புஷ்கரத்தில் நீராகவும்பத்ரிநாத்தில் மலையாகவும்ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரகமாகவும்முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம்.

          இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது  நல்லது.

           ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள்   நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்  என்பார்கள்.

    60.2:கண்டகி ஆறு (நாராயணீ ஆறு)-கங்கா நதியின் துணை ஆறு: 

         காளி–கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறு, நாராயணீ ஆறு  நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாறை காளி-கண்டகி என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

         நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.
            இமயமலையின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் நுபின் இமயமலையின் உறைபனி ஆற்றிலிருந்து காளி-கண்டகி ஆறு உற்பத்தியாகி, பின் தென்மேற்காக முக்திநாத் வழியாக பாய்கிறது.

          பின் காளி-கண்டகி ஆறு கிழக்கே திரும்பி, மகாபாரத மலைத்தொடர்கள் வழியாக செல்லும் போது, கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

            காளி-கண்டகி ஆறு தெற்கில் திரும்புகையில், திரிசூலி எனும் துணை ஆறு, தேவிகாட் எனுமிடத்தில், காளி-கண்டகி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் சித்வான் சமவெளியில் பாய்ந்து, தென்மேற்கே கோவிந்தகாட் நகரத்தை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் போது காளி-கண்டகி, கண்டகி ஆறு எனப் பெயர்க் கொள்கிறது.

          இந்தியாவில் நுழைவதற்கு முன் நேபாளத்தின் காக்பெனி நகரத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு, இந்திய-நேபாள எல்லையில் பாய்கையில் பட்ச்னாடு மற்றும் சோன்கா ஆகிய துணை ஆறுகளுடன் சேர்ந்து சோன்பூரில் கூடுமிடத்தை, திரிவேணி சங்கமம் என்பர்.

        சோன்பூர்–பீகார்  கண்டகி ஆறு, கங்கா நதியில் சங்கமம்- “கங்கா-கண்டகி-கார்கா” நதிகள் சங்கமம்”-கஜேந்திர மோட்சம் 

         கண்டகி நதியில் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது. இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது. நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.

           ஐப்பசி-பௌர்ணமி தினம் மகிமை வாய்ந்தது. இந்தத் திருநாளையட்டி ராஜஸ்தானில் பிரம்மனை போற்றி கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவும் பீகார்- சோன்பூரில் நடைபெறும் சோன்பூர் மேளாவும் பிரசித்திப் பெற்ற விழாக்கள் ஆகும்.

           கங்கை, கண்டகி, கார்கா ஆகிய நதிகள் சூழ அமைந்திருக்கும் சோன்பூர் குறித்து பாகவத புராணம் விவரிக்கிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட இந்த தலம், தொன்மை வாய்ந்த விசால திரிகூட பர்வத சேத்திரத்தைச் சார்ந்த பகுதியாக திகழ்ந்ததாம்!

             இத்தகு பெருமைகள் மிக்க சோன்பூர், நதிக் கரையில் அழகுற அமைந்துள்ளது ஹரிஹரநாத் ஆலயம். கூம்பு வடிவ கோபுரத்துடன் மிக எளிமையாகத் திகழும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கென்று தனியே கருவறையும் கிடையாது. விசாலமான- வட்ட வடிவ முற்றம் போன்ற ஓர் இடத்தில், உயரமான பீடத்தில்… சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து ஹரிஹரனாகக் காட்சி தருகிறார்கள். சிலையின் வலப் பாகம்- ஹரியின் தோற்றம்; இடப் பாகம்- ஹரனின் தோற்றம். இந்த ஹரிஹர மூர்த்தத்துக்கு வில்வம் மற்றும் துளசி மாலைகள் சாத்தப்படுகின்றன.
          முற்காலத்தில் இந்தப் பகுதியில் அடிக்கடி எழும் சைவ-வைணவ தர்க்கங்கள் மற்றும் பிரச்னைகளைப் புறந்தள்ளி, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத் துவதற்காக இந்த ஆலயம் எழுப்பப் பட்டதாகக் கூறுவர். விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்ற ஸ்ரீராம-லட்சுமணர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் கூறுவர்.

          கோயிலுக்கு அருகில் உள்ளது ‘கோன்ஹரா’ படித்துறை (கோன்ஹரா என்றால் ‘தோல்வி யுற்றது யார்?’ என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்)! சண்டையில் தோற்றது யானையா, முதலையா? வாதத்தில் தோல்வி யுற்றது சைவமா, வைணவமா என்ற கேள்வி எழுந்த இடத்துக்கு கோன்ஹரா என்ற பெயர் பொருத்தம்.

          ஐப்பசி-பௌர்ணமி அன்று, இங்குள்ள கங்கையில் நீராடி, ஹரிஹரனை கங்கா தீர்த்தத்தால் அபிஷேகித்த பின்னரே சந்தை கூடுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிய யானைகள், வரிசையாக கோயிலை வலம் வந்து இறைவனை தரிசிக்கும் அழகே அழகு! இந்தத் திருநாளன்று துவங்கும் சோன்பூர் சந்தை, சுமார் 21 அல்லது 25 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில், சகலமும் கிடைக்குமாம்!

    கந்தர்வன்-ஹூஹூ:முதலையாக

         திரிகூட பர்வதத்தின் நடுவே இருந்த நீர் நிலையில், தனது ஆசை நாயகிகளுடன் ஜலக்கிரீடையில் இருந்தான் கந்தர்வத் தலைவன் ஹூஹூ.

        அப்போது, ஒரு முனிவரும் அங்கு நீராடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹுஹு, நீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரது கால்களை வாரி விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர், ‘ஹுஹு’வை முதலையாகும்படி சபித்தார். தன் தவறு உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, ‘பரந்தாமனின் அருளால் விமோசனம் பெறுவாய்’ என்று கூறிச் சென்றார் முனிவர்.

    இந்திரயுத்யும்னன்:யானையாக

         அதே வேளையில், விஷ்ணு பக்தனான இந்திரயுத்யும்னன், ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அப்போது, அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் வரவேற்கத் தவறினான். இதனால் கோபமுற்ற அகத்தியர், யானையாக மாறும்படி  அந்த மன்னனை சபித்தார். அவன் சாப விமோசனம் வேண்டவே, ‘பரந்தாமன் அருளால் விமோசனம் கிடைக்கும்!’ என்று அருளிச் சென்றார் அகத்தியர்.

         இதன்பின்னரே, படித்துறையில் யானை- முதலை சண்டையும் கஜேந்திர மோட்சமும் நிகழ்ந்ததாக இங்கே சொல்கிறார்கள்.

         ஸ்ரீசக்கரத்தால் அறுபட்ட முதலை, கந்தர்வனாக உருப்பெற்று சொர்க்கம் சென்றது. கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பரந்தாமன், மன்னனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

        இதையட்டியே ஹரிஹர்நாத் ஆலயமும், அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் தோன்றியதாகச் சொல்வர். கஜேந்திர மோட்சத்தை பறைசாற்றும் சிலை ஒன்றை, படித் துறைக்குச் செல்லும் வழியில் காணலாம்.

             ஐப்பசி பௌர்ணமியன்று, ‘கோன்ஹரா’ தீர்த்தக்கட்டம் அருகில் நடைபெறும் கஜேந்திர வழிபாடு, ஹரிஹர்நாத் திருவிழா மற்றும் சோன்பூர் மேளா ஆகிய விழாக்களைக் காணக் கண் கோடி வேண்டும்!

    வரலாற்றில் கண்டகி ஆறு

          மகாபாரதத்தில் இதிகாசத்தில் கண்டகி ஆறு குறித்த செய்திகள் உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் சங்கச்சூடனை வதம் புரியும் படலத்தில் கண்டகி ஆறு குறித்த செய்தி உள்ளது.

         நேபாளத்தின் கண்டகி சமவெளியில், காளி-கண்டகி ஆறு பாயுமிடத்தில் சித்வான் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நேபாள நாட்டின் பெரிய தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும்.

          இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.

    சித்வான் தேசியப் பூங்காவின் தெற்கு பக்கத்தில் வால்மீகி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

    சாளக்கிராமங்கள்

          முக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

    • முற்றிலும் சிவப்பு நிற சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்-இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
    • சக்கர வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.
    • முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்’ என்பர்.
    • இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.
    • வட்ட வடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.
    • குடை வடிவ கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.
    • சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
    • சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.
    • நீல நிறம்—செல்வம், சுகம் (ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம்)
    • பச்சை—பலம் , தைரியம் (ஸ்ரீ நாரயண ஷேத்திரம்)
    • .வெண்மை—ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்)
    • கருப்பு—புகழ் , பெருமை (விஷ்ணு ஷேத்திரம்)
    • மஞ்சள் நிறம்— வாமன ஷேத்திரம்
    • பசும்பொன் (அ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்—ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்
    • சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .
    •       சாளக்கிராமத்தை பால் (அ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் ,அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும்-துண்டிக்கப்பட்டிருந்தாலும் (அ) விரிந்து போனதாய் இருந்தாலும்-சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை.

    பொக்காரா-ஜொம்சொம் செல்லும் விமானங்கள் லகு-ரக விமானங்கள். .அளவில் சிறியவை. 1+1 இருக்கை அமைப்பு. இதில் விமானி, துணை விமானி, பணிப்பெண் ஆகிய மூன்று பேர், இருப்பார்கள் .16 பயணிகள் அமரக்கூடியது.வாநிலை காலை 8 மணிக்கு மேல் தான் தெளிவாகும். சிலநாட்களில் நாள் முழுதும் சீராகாமல் போக்குவரத்து இல்லாமலே போய்விடுமாம்.

            பொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15 நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடுகளைத் தொட்டுவிடுவது போல் தாவிச் சென்றது

    ஜீப் சுமார் இரண்டு மணி நேரம் சென்றது. வழி நெடுகிலும் பெரிய ஆறு கண்டகி, ஓடிக்கொண்டே இருக்கிறது. மிக உயரத்தில் இருந்து பார்க்கிற போதும் ஆறு ஓடுவது அச்சத்தைத் தருகிறது. எங்காவது  நீண்ட தூரத்திற்குப் பிறகு மிகச்சிறிய கிராமங்கள் உள்ளன. சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன.

    ———————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

    ஸ்ரீ ஒப்பிலியப்பனுக்கு பங்குனி பிரம்மோற்சவம் – ஸ்ரீ திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-ஸ்ரீ தேவாதிராஜனான வரதராஜ பெருமாள் கோயில் உற்சவங்கள் விவரணம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்ரீரங்கநாதன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து —

    September 19, 2024

    “தபஸ்யே பால்குனே மாஸே ஏகாதச்யாம் திதௌ முனே

    புண்யே ஸ்ரவண நக்ஷத்ரே முஹூர்த்தே அபிஜித் ஆஹ்வயே

    ஆஜகாம வஹாயோகீ ஸாக்ஷாத் நாராயணோ ஹரி:

    ஸ தேவ: ஸ்ரீநிவாஸாக்யோ பூமி தேவ்யா: பதி: விபு:

    வஸுந்தரா விவாஹார்த்தம் லோகாநுக்ரஹ காம்யயா”— என்கிறது ஸ்ரீ ஒப்பிலியப்பனின் தல புராணம். 

    இதன் பொருள்: “பங்குனி மாதம் ஏகாதசி திதியில், திருவோண  நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில், திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலத்தில், பூமி தேவியை மணந்து கொள்வதற்காகவும், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அனைத்து வரங்களும் அருட்வதற்காகவும் ஶ்ரீநிவாசன் என்ற பெயரோடு திருமால் அவதாரம் செய்தார்!”

    எனவே வருடந்தோறும் பங்குனி மாதத் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, கும்பகோணத்துக்கு 5 கி.மீ. கிழக்கில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவோணத்துக்கு ஒன்பது நாள் முன் தொடங்கும் இந்த உற்சவம், பங்குனி திருவோணத்தன்று நிறைவடையும். 

    ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஒப்பிலியப்பனுக்கும் பூமிதேவித் தாயாருக்கும் புறப்பாடு நடைபெறும். அந்தப் புறப்பாடுகளுக்கான பின்னணிகளை ஆசுகவி வில்லூர் ஶ்ரீநிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்னும் காவியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை  அவரது ஸ்லோகங்களோடு இணைத்து இக்கட்டுரையில் காண்போம்:

    1. முதல் நாள் – இந்திர விமானம்:

    “ஐந்த்ரம் விமானம் அதிருஹ்ய ஸமுஜ்ஜ்வலந்தீம்

    இந்த்ரேண ஸர்வ ஜகதாம் தயிதேன ஸாகம்

    இந்த்ராதி தேவ வினுதாம் அவலோக்ய மாத:

    இந்த்ர ப்ரியா இதி பவதீம் நிஜகாத வேத:”

    பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் ஒப்பிலியப்பனோடு இந்திர விமானத்தில் பூமி தேவி காட்சி தருகிறாள். இதற்கான காரணம் என்ன? அனைத்துலகுக்கும் இந்திரனாகத் (தலைவனாக) திகழும் திருமாலுக்கு மனைவியாக பூமி தேவி இருக்கிறாள். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளையும் பூமிதேவியையும் வந்து பணிகிறார்கள். வேதமும் பூமிதேவியை ‘இந்திரப் பிரியா’ என்று அழைக்கிறது. இந்தக் கருத்துகளை நமக்கு உணர்த்தவே பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் இந்திர விமான வாகனத்தில் தன் கணவனோடு பூமிதேவி வலம் வருகிறாள்.

    2. இரண்டாம் நாள் – சந்திரப் பிரபை வாகனம்:

    “ஓஷதீச ப்ரபா வாஹ மத்யக: ஸூன பூஷித:

    நிஷ்கலங்கம் யசோ தத்தே ஸுவம்ச கர பங்கஜ:”

    இரண்டாம் நாள் மாலை பெருமாளும் தாயாரும் சந்திரப் பிரபை வாகனத்தில் வலம் வருவார்கள். சந்திரனில் சில களங்கங்கள் தெரிகின்றன அல்லவா? ஆங்கிலத்தில் அவற்றை ‘craters’ என்று சொல்வார்கள். வெண்ணிலவைக் களங்கமற்றதாக ஆக்க நினைத்த ஒப்பிலியப்பன், அதையே தனக்கு வாகனமாக்கி அதன் நடுவே பூமி தேவியோடு எழுந்தருளினார். அதனால் சந்திரன் களங்கமில்லாததாக ஆனது! தூய்மை பெற்றது!

    3. மூன்றாம் நாள் – சேஷ வாகனம்:

    “த்வாம் யோ வஹேத பஹவ: கில தம் வஹந்தி

    தத்ர ப்ரமாணம் இஹ மே புஜகாதிபோஸௌ

    யஸ்த்வாம் நிஜேன சிரஸா வினதோ ததான:

    ஸர்வை: அமீபி: அதுனா த்ரியதே மஹே தே”

    யார் ஒருவர் பூமி தேவியைத் தலையால் தாங்குகிறாரோ, அவரை மக்கள் அனைவரும் தலையால் தூக்கிக் கொண்டாடுவார்களாம். அதற்குச் சான்றாகத் தான், உலகத்தைப் (பூமி தேவியை) பாதாளத்தில் இருந்தபடி தலையாலே தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை உற்சவத்தின் மூன்றாம் திருநாளன்று பலர் தூக்கிக் கொண்டாடுகிறார்களாம். அந்த ஆதிசேஷன் மேல் மூன்றாம் நாள் மாலையில் பூமிதேவியும் ஒப்பிலியப்பனும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

    4. நான்காம் நாள் – கருட, ஹம்ச வாகனங்கள்:

    “த்விஜேஷு ஹம்ஸோ பவதீம் ததாதி

    த்விஜேஷு ய: குண்டலினாம் நிஹந்தா

    நாதம் த்வதீயம் யுவயோ: ப்ரதீதம்

    ஸ்புடம் ஹி லோகே ப்ருது தாரதம்யம்”

    நான்காம் திருநாளன்று மாலையில் பெருமாள் கருட வாகனத்திலும் பூமி தேவி அன்ன வாகனத்திலும் (ஹம்ச வாகனத்திலும்) புறப்பாடு கண்டருளுவார்கள். பரம ஹம்சர்கள் என்று போற்றப்படும் ஞானியர்கள் பூமி தேவியை எப்போதும் தம் உள்ளத்தில் தாங்குகிறார்கள் என்பதை உணர்த்தவே, அந்தப் பரம ஹம்சர்களுக்குப் பிரதிநிதியான ஹம்சத்தின் மேல் பூமி தேவி புறப்பாடு கண்டருளுகிறாள். அடியார்களின் துன்பத்தை அழிப்பவராகத் திருமால் திகழ்வதால், பாம்புகளை அழிக்கும் கருடனின் மேல் அவர் புறப்பாடு கண்டருளுகிறார். இப்படித் தாயார் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டருளுவதில் இருந்து இருவரின் தன்மைகளையும் நாம் அறிய முடிகிறது.

    5. ஐந்தாம் நாள் – ஹநுமந்த, கமல வாகனங்கள்:

    “லங்கா புர்யாம் கில ஆஸீத் அதிகமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீனாம்

    தஸ்யா மாதா ஹி ஸேயம் ஸ்வயம் இதி ஹநுமான் தர்சயதி ஆதரேண”

    ஐந்தாம் திருநாளன்று பெருமாள் ஹநுமந்த வாகனத்திலும், பூமி தேவி கமல (தாமரை) வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். இலங்கையில் பூமி தேவியின் மகளான சீதையை ஆஞ்ஜநேயர் முதன் முதலில் கண்ட போது, கலைந்த கூந்தலோடும், கிழிந்த ஆடையோடும், மெலிந்த மேனியோடும், வாடிய முகத்தோடும், கண்ணீரில் தோய்ந்த கண்களோடும் அவள் இருப்பதைக் கண்டு அவர் மிகவும் வருந்தினாராம். 

    அந்தக் குறை தீரும் படியாக, பட்டாபிஷேகக் கோலத்தில் ஆஞ்ஜநேயருக்குக் காட்சி தர விழைந்தாளாம் பூமிதேவி. அதனால் தான் ஐந்தாம் திருநாளன்று பெருமாள் அனுமனின் மேல் (ஹநுமந்த வாகனத்தில்) உலா வருகையில், பூமிதேவி தாமரையின் மேல் (கமல வாகனத்தில்) பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் காட்சி தந்து அனுமனை மகிழ்விக்கிறாளாம்.

    6. ஆறாம் நாள் – யானை வாகனம்:

    “ராஜதே கஜவரே விராஜதே

    ராஜ ராஜ நத பாத பங்கஜே

    நாயகோ கஜ கதி: ஸுஹம்ஸகா:

    த்வம் து ஹம்ஸ கமனேதி ஸாம்ப்ரதம்”

    ஆறாம் திருநாள் மாலையில் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். யானையைப் போன்ற நடையை உடைய திருமால் யானை வாகனத்தில் வருவதில் வியப்பில்லை. ஆனால் அன்னம் போல் நடக்கும் அன்னை பூமி தேவியும் ஏன் யானை வாகனத்தில் உலா வருகிறாள்? வில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்த பூமிதேவி, திருமால் வந்து தன்னை மணந்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதில்,“அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!”என்று, யானையில் திருமாலோடு சேர்ந்து எழுந்தருள விழைந்தாள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே பூமி தேவி பெருமாளோடு சேர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிப் புறப்பாடு கண்டருளுகிறாள்.

    7. ஏழாம் நாள் – சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனம், தோளுக்கு இனியான்:

    “ஆந்தோலிகாந்த: அவனீ ரமணம் யுவானம்

    ஆஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ச ஸாயம்

    த்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌதுகேயம்

    தத்ர க்ஷமேதி பவதீம் அவலோக்ய த்ருத்யா”

    ஏழாம் திருநாள் பொன் மாலைப் பொழுதில், பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் சூர்ணாபிஷேகம் நடைபெறும். வடநாட்டில் நடைபெறும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர் மேல் ஒருவர் தூவிக் கொள்வதைக் காண்கிறோம். அதற்கெல்லாம் வித்திட்டது வண்ணப் பொடியால் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம். அந்த சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே, பூமிதேவியோடு இளங்குமரனாய்த் தோளுக்கு இனியானில் பெருமாள் புறப்பாடு கண்டருளும் அழகைக் காண்கையில், அடியார்களின் மனம் ஒரு பெண்ணின் நிலைக்கு மாறி இறைவன் மேல் காதல் கொள்கிறது.

    “புந்நாகம் அம்ப புருஷே புரத: அதிரூடே

    ஸந்நாகம் அம்ஸ மதுரே பவதீ ததாதி

    கிந்நாம தேன ஸஹ வாஹனதா கதா ஸ்யாத்

    யந்நாம கோப வனிதாஸு ததா க்ஷமாவான்”

    அதன் பின் ஏழாம் திருநாள் இரவில் பெருமாள் புன்னை மர வாகனத்திலும், தாயார் தோளுக்கு இனியானிலும் புறப்பாடு கண்டருள்வார்கள். கோபிகைகளின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு புன்னை மரத்தின் மீதேறிக் கண்ணன் அமர்ந்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா? அதை நினைவூட்டவே புன்னை மர வாகனத்தில் பெருமாள் வருகிறார். 

    புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கண்ணன், சாஸ்திர விதிகளை மீறி ஆடையின்றி நீராடிய கோபிகைகளைத் தண்டிக்காமல் அவர்களிடம் பொறுமையையும் கருணையையும் காட்டினான் அல்லவா? அதை உணர்த்தவே புன்னை மரத்தில் செல்லும் பெருமாளைப் பின் தொடர்ந்து, பொறுமை, கருணை இவற்றின் வடிவாய்  இருக்கும் பூமிதேவி தோளுக்கு இனியானில் செல்கிறாள்.

    8. எட்டாம் நாள் – குதிரை வாகனம், தோளுக்கு இனியான்:

    “ஸுபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்வதீயே

    த்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ஸ ரம்யே நிவிஷ்டா

    துரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ

    துரக வதன பேத்து: ச இதி மந்த ஸ்மிதாஸ்யா”

    எட்டாம் நாள் மாலையில் பெருமாள் குதிரை வாகனத்திலும் பூமிதேவி தோளுக்கு இனியானிலும் காட்சி தருவது வழக்கம். “குதிரை முகத்தோடு ஹயக்ரீவராக அவதரித்த நீங்கள் குதிரை வாகனத்தில் வருவது பொருத்தமாகவே உள்ளது!” என்று பெருமாளைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருளுகிறாள் பூமிதேவி.

    9. ஒன்பதாம் நாள் – திருத் தேரோட்டம்:

    “ரதஸ்யாந்த: ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பதேயயௌ தஸ்யாம் வீத்யாம் ரத இதி லஸன் வர்தத இதி”

    நிறைவு நாளான பங்குனி திருவோணத்தன்று காலை திருத் தேரில் பெருமாளும் பூமி தேவியும் எழுந்தருளும் போது, “இறைவன் நம்மைத் தேடி நம் வீதிக்கு வந்துள்ளாரே!” எனப் பரவசப்பட்டு பக்த கோடிகள் பேசும் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமாளும் பூமிதேவியும் ஆனந்தம் கொள்கிறார்கள்.

    10. காலை பல்லக்குப் புறப்பாடு:

    “ஆந்தோலிகாஸு பவதீம் ஜனதா வஹந்தீ

    சாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ

    ஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஜந்தீ

    சாரோஹயந்தீ அத ச பாதி அவரோஹயந்தீ”

    உற்சவத்தின் இரண்டாம் திருநாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளுவார்கள். மண் மடந்தையான பூமிதேவி, விண்ணகரம் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கோவில் கொண்டிருக்கிறாள் அல்லவா? இது (அதாவது விண்ணகரத்தில் மண் மடந்தை குடியிருப்பது) விண்ணிலே மண் குடி இருப்பது போல் உள்ளதாம்! விண்ணிலே மண் குடியிருப்பதைக் காட்ட, மண் மடந்தையான பூமி தேவியைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து விண்ணை நோக்கி உயர்த்திப் பிடிக்கிறார்களாம். பெருமாளோடு பூமிதேவி பல்லக்கில் வலம் வந்தபின், மண்மடந்தை மண்ணில் இருப்பதே பொருத்தம் என்று கருதி பல்லக்கைக் கீழே இறக்கி வைக்கிறார்களாம்.

    “டோலாயமானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மதுஸூதனம்

    ரதஸ்தம் கேசவம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம ந வித்யதே”

    – என்ற ஸ்லோகம் பிரம்மோற்சவக் காலத்தில் திருமகளையும் திருமாலையும் தரிசிப்போர் மறுபிறவி இல்லாத பேரானந்தமாகிய முக்தியை அடைவார்கள் என்று சொல்கிறது.


    தேவாதிராஜனான வரதராஜ பெருமாள் கோயில் உற்சவங்களை வேளுக்கு டி ஸ்ரீரங்கநாதன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து –
    “பரிஜந பரிபர்ஹா பூஷணா ந்யாயுதாதி ப்ரவரகுண கணாஸ்ச ஜ்ஞாந சக்த்யாத யஸ்தே! பரமபத
    ம தாண்டா ந்யாத்ம தே ஹஸ் ததாத்மா வரத ஸகலமேதத் ஸம்ஸரிதார்த்தம் சகர்த்த!! “
    கூரத்தாழ்வான் இந்த வரதராஜ ஸ்தவத்தில் இந்த ஆ பரணம் கோவில் உற்சவாதிகள் அனைத்தும் அடியார்களுக்காக த்தான் பெருமானுக்காக அல்ல என்று குறிப்பிடுகிறார். இந்த உற்சவரிகளால் பெருமானுக்கு எந்த ஒருதனிப்பெருமை வந்துவிடாது. வேணுகோபாலன் திருக்கோலம் காளிங்க நர்த்தன திருக்கோலம் என பலத்திருக்கோலத்தை பெருமான் பூண்டுள்ளார். வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி உற்சவமும், வைகாசி விசாகத்தில் ஆழ்வார் திருநக்ஷத்திர வைபவமும் நடைபெறும். இதற்கு 10 நாள் உற்சவம் கண்டருள் வார் . 10ம் நாள் ஆழ்வாருக்கு மாலை மரியாதை எல்லாம் பண்ணி பின்னே தன் ஆஸ்தானத்தில் எழுந்தருள்வார்.
    கோடை உற்சவம் 7 நாள்கள் அந்த உற்சவத்தில் பெருமாள் தனியாகவும் உபயநாச்சிமார்கள் தனியாகவும் புறப்பாடு கண்டருள்வார். ஆனிஸ்வாதி அன்று பெரியாழ்வார் அவதாரதின மாதலால், ஆழ்வார் ப்ரதக்ஷணம் செய்து காட்சி கொடுக்கிறார். ஆடியில் ஆண்டாள் ஜனன உற்சவம் அப்போது ஆண்டாளும் பெருமாளும் எழுந்தருளி இருவருக்கும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். பூரத்திற்கு அடுத்த நாள் சாயங்காலம் மாடவீதியில் இருவருக்கும் சேர்ந்து ஊர்கோலம் நடைபெறும். பெருந்தேவிக்கு கோயிலுக்குள்ளேயே எல்லா உற்சவமும் கண்டுள் வார் ஆடி மாத பௌர்ணமி அன்று கஜேந்திர மோக்ஷத்தை பகவான்மறுபடியும் நடத்தி காட்டுகிறார். அடுத்து கருடவாகனத்தில் எழுந்தருளி கருடசேவை நடக்கும் ஆக வைகாசி ஆனி ஆடி 3 மாதமும் கருடசேவை:
    ஆனி மாதம் 7 நாட்கள் ஸ்ரீ ஜெயந்தியை ஒட்டி பவித்ரோற்சவம் நடக்கிறது. கண்ணனும் பெருமாளும் சேர்ந்து உற்சவம் கண்டருள்வார் . பின் சேஷவாகனத்தில் ப்ரத்யோகமான சேவை . புரட்டாசியில் பெருந்தேவி தாயாருக்கு 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் கண்டருள்வார். மஹாளய பக்ஷம் முடிந்தவுடன் பெருமாளும் தாயாரும் சேர்ந்து கண்ணாடி அறையில் சேவை சாதிப்பார்கள் . நவராத்திரி மஹா நவமி அன்று பெரிய கொண்டாட்டமாய் சேர்த்தி உற்சவம் இருவரும் சேர்ந்து கண்டருள்வார்கள் . அப்போது ஏக சிம்மாசனத்தில் இருவரும் எழுந்தருள்வார்கள் . அன்று சாயங்காலம் ஏகசத்திரம் ஒரே குடையில் கீழ் பெருமாள் தாயார் சேர்ந்து எழுந்தருளி ப்ரதக்ஷணமாய்
    100 கால் மண்டபம் எழுத்துருகிறார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார்.
    தொடரும் .-ஐப்பசி மாதத்தில் தீபாவளி உற்சவம் பிரசித்தமாய் நடக்கும் கார்த்திகை மாதம் கார்த்திகை பரணி திருக்கச்சிநம்பிகள் ஆலவட்டம் கைங்கரியம் பெருமானுக்கு பண்ணியவர் திருநாட்டை அலங்கரித்த தினமாதலால் அந்த நினைவு நாளை பொருட்டு பெருமான் கச்சிக்கு வைத்தான் மண்டபத்தில் எழுந்தருள்வார். பின் தீப உற்சவம் நடைபெறும். கார்த்திகை கார்த்திகை அதிகாலை உற்சவம் முடிந்து தை மாதம் பிறக்கும் வரை அநத்தையன காலம் வீடுகளில் திவ்யபிரபந்தம் ஒதப்படாது அத்யைன உற்சவம் முடிந்த பின் பாகரங்கள் சேவிக்கலாம். ஆழ்வார்களுக்கு தொண்டையில் தைலத்தை ப்ரசாதமாய் சாற்றுவார்கள் தினமும் குறைந்தது 100 பாசுரங்களாவது சேவிப்பார்கள் ௨2 வது உற்சவம் அனுஷ்டான குண உற்சவம் சாலக்கிணறு தீர்த்தம் கொடுப்பதை ஒட்டி பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணி ௨௨வது நாள் பெருமாள் விந்தியமலையில் வேடுவன் வேடுவச்சியாய் வந்த நினைவை ஒட்டி பெருமாள் தாயார் வேடுவன் வேடுவச்சி வேடத்தில் தோன்றுவார்கள். அதே அலங்காரத்துடன் 4 மாட விதி வந்து பெருமான் கிழக்கு கோபுரம் அருகே உடையவர் திருமாளிகையில் எழுந்தருள்வார். மார்கழி ஆண்டாள் நீரா்ட உற்சவம் நடைபெறும்

    ————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

    ஸ்ரீ ஆழ்வார்கள் கண்ட திருவல்லிக்கேணி -ஸ்ரீ உ வே திருமலை நல்லான் சக்ரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-

    September 18, 2024

    ஸ்ரீ மந்நாதப்பெருமாள் -ஸ்ரீ வேதவல்லித் தாயார் -ஸ்ரீ ப்ருகு மஹரிஷியின் திருக்குமாரத்தியாக ஸ்ரீ மஹா லஷ்மி ஆவிர்பவிக்க
    மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி திருக் கல்யாணம்

    மாக மாஸே மஹா தேஜாஸ் த்வாதஸ்யாம் ஸஹரிஸ் ஸ்வயம்
    ப்ராது ராஸ ப்ருகோ தஸ்ய ஹ்யாஸ்ரமே புண்ய கர்மணஸ்
    யதோ மந்நாத இத்யாஹ வேத வல்லீ ஸூசிஸ்மிதா
    ததோ மந்நாத இத்யேவ விஸ்ருதோ புவந த்ரய —
    என்றபடி
    மிக்க ஒளியை யுடைய மஹா விஸ்ணு -புண்யம் செய்த ப்ருகு மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் மாசி மாத த்வாதசியில் தாமே தோற்றி அருளினார்
    எக் காரணத்தால் வெளுத்த புன்னகை யுடன் வேத வல்லித் தாயார் மந் நாதா -என்று கூறினாளோ அக் காரணத்தாலே இந்தத் திரு நாமத்துடன் உலகெங்கும் பிரஸித்தி பெற்று விளங்குகிறான் –

    அத்திரி மஹ ரிஷி இங்கு மோக்ஷம் பெற தவம் செய்ய
    ஐம் புவனத்தில் இருந்த முனிவருக்குப் பணிவிடை புரிந்து இருந்த விகட மஹரிஷி -பார்க்க முனிவரைக் காண வந்த மாரீச முனிவர் வாயிலாக அத்திரி முனிவருக்குப் பிரத்யக்ஷமாக வந்து அருள் புரிய போவதை வசிஷ்டர் மூலம் அறிந்து இங்கு வந்து அத்தரி முனிவருடன் வசிக்க
    விமானம் வந்து இறங்க
    ஸத தர்ச விமாநஸ்ய மத்யே பாஸ்கர ரோசிஷ
    ஆஸீநம் பரமம் தேவம் நரஸிம்ஹம் ஸ்வரூபிணம்

    அத்ரி முனிவர் சாஷாத்கரித்து வாயார வாழ்த்தினார்

    ——–

    த்ரேதா யுகத்தில் சசபதர் முனிவர் பாண்டரம் மலையில் தவம் செய்ய
    இந்த்ரன் ஏவ ஹேலை அப்சரஸ் தவத்தைத் கலைத்து
    இருவருக்கும் ஆண் மகன் பிறக்க
    மலைக்குகையில் விட்டு இருவரும் பிரிய
    இறைவன் அருளால் சொரிந்த தேனைப் பருகி வளர
    அங்குள்ள முனிவர்கள் மதுமான் பெயர் இட்டு அனைத்துக் கலைகளையும் கற்பித்து
    அவன் பக்திமானாகி கார்க்க்ய முனிவரைச் சந்திக்க
    ராமபிரான் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுவதை அறிந்து ஸோகிக்க
    எம்பெருமான் கார்க்க்ய முனிவர் உருவத்துடன் தோன்றி இங்கே தவம் செய்ய அறிவிக்க
    காகுத்தா உன்னைக் காணுமாறு அருளாய் என்று வேண்டி தவம் செய்ய ப்ரத்யக்ஷமாகி
    யாத்ருகாஸீத் புரா ராம ராஜ்ஜோ தசரதஸ்ய ஹி
    ப்ராத்ருபிஸ் ஸஹிதஸ் தாத்ருக் ஸ ஸீதஸ் ப்ரத்ய த்ருஸ்ய
    –என்று
    அனைத்து சஹோதர்களுடனும் சீதாப் பிராட்டியாருடனும் நித்ய வாஸம் செய்து அருள்கிறான்

    வ்யாஸ பகவான் ஆத்ரேய மகரிஷியிடம் ஸூமதி மன்னர் ப்ருந்தாரண்ய ஷேத்ரத்தில் தவம் செய்து கொண்டு இருக்கிறார் இருக்கிறார்
    வலக் கைச் சங்கம் இடக்கை தான முத்திரையுடன் கூடிய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி பிரதிஷ்டை பண்ணி தானும் திருவாராதனை செய்து ஆத்ரேயர் கையில் கொடுத்து வைகாநஸ ஆகமப்படி ஆராதித்து தவம் செய்து இருக்க நியமிக்க
    அவரும் நெடும் காலம் ஆராதித்து பரம பதம் எய்தினார்
    ஸூ மதி மன்னன் திரு வேங்கடம் சென்று பார்த்த சாரதி வேஷத்தைக் காட்டி அருளப் பிரார்த்திக்க
    ப்ருந்தாரண்யத்தில் ஸேவை சாதிப்பதாக அருள் புரிய
    ஸ்ரீ பார்த்த சாரதியை
    ஸ்ரீ ருக்மிணிப்பிராட்டி
    ஸ்ரீ பலராமன்
    ஸ்ரீ அநிருத்தன்
    ஸ்ரீ பிரத்யும்நன்
    ஸ்ரீ ஸாத்விகி
    இவர்களுடன் சேவை சாதிக்க
    நாமும் இன்றும் அந்த திவ்ய சேவையை அனுபவிக்கிறோம்

    ஸ இதா நீம் அபி முநே த்ருஸ்யதே தத்ர மாநவை
    ருக்மிணி ச அநிருத்தேந ப்ரத்யும்னநே ச ஸேவிதே
    ஹலாயுதேந ஸஹிதஸ் ததா ஸாத்யகி நா ஸஹ
    பார்த்த சாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜகதீ பதி

    ஸப்த ரோமா மஹ ரிஷி கருடா ரூடனான வரதராஜப் பெருமாளை வைகாநஸ விதிப்படி ஆராதித்து வந்து மோக்ஷம் அடைய
    இன்றும் நாம் அந்த சேவையை அனுபவிக்கிறோம்

    ஸோபி ஸம் ப்ரதி ஸர்வேஷாம் ப்ராணிநாம் கோசரீ பவந்
    வரதோ நாம தேவேஸே த்ருஸ்யதே தத்ரைவ ஹரி

    முத்கல முனிவர் தவம் செய்ய
    இங்குள்ள கைரவணி புஷ்கரணியில் நீராட
    அழகிய மீன் பரிவாரங்களுடன் தோன்ற
    உன்னால் எனது தவத்துக்கு இடையூறு ஏற்படும் -உனது பரிவாரங்களுடன் வேறு இடம் சென்று விடு என்ன அன்று முதல் இங்கு மீன்களே இல்லை
    இந்த்ர தீர்த்தம்
    ஸோம தீர்த்தம்
    மீன தீர்த்தம்
    அக்னி தீர்த்தம்
    விஷ்ணு தீர்த்தம்
    என மேலும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன

    துர்வாஸ முனி ஹேம கூட மலையில் மத்த வாரணம் சிகரத்தில் தபஸ் செய்ய
    விஸ்வா வஸூ வான வெளியில் செல்ல
    அவன் நிழல் இவர் மேல் பட இவர் சரீரமில்லாதவனாகக் கடவை என சபிக்க
    இங்கு தவம் செய்து சாபம் நீங்கப் பெற்றான்

    ப்ருந்தாரண்ய நிவாஸாய பல ராமாநுஜாயஸ
    ருக்மிணீ பிராண நாதாயா பார்த்த ஸூதாய மங்களம்

    வந்து உதைத்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
    அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
    ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
    திருவல்லிக் கேணியான் சென்று  
    —-16–

    ஒரு வல்லித் தாமரையாள் சென்று   ஒன்றிய சீர் மார்வன்
    வெண் திரைகள் வந்து உதைத்த செம்பவள வெண் முத்தம்
    அந்தி விளக்கும் அணி விளக்காம் –
    திருவல்லிக் கேணியான் எந்தை –என்று அந்வயம்

    பதவுரை

    ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களை யுடைய தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பிராட்டி
    சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
    வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
    அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
    அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாகப் பெற்ற
    திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
    எந்தை–எனக்கு ஸ்வாமி

    —————————————————————————————–

    வியாக்யானம் –

    வந்துதித்த வெண் திரைகள் –
    வந்து உதையா நின்றுள்ள
    வெள்ளத் திரைகளாலே தள்ளப் படுகிற –

    செம்பவள வெண் முத்தம் –
    சிவந்த பவளங்களும்
    நீர்மையை உடைத்தான முத்துக்களும் –

    அந்தி விளக்காம் மணி விளக்காம் –
    சந்த்யைக்கு பிரகாசஹமான
    மங்கள தீபத்தை யுடைத்தான –

    எந்தை
    எனக்கு ஸ்வாமி-

    ஒரு வல்லித் தாமரையாள் –
    நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்

    ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே
    கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை

    அவன் புருஷோத்தமன்
    ஆனாப் போலே
    இவள் நாரீணாம்   உத்தமை –

    தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
    மலர்மகள் விரும்புகையாலே
    சர்வாதிகத்வம் ஆகை-

    ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
    பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே
      -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
    அநாதரே சஷ்டி –
    பிரஜைகள் பார்த்து இருக்க
    பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே
    தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

    தயா அவலோகிதா தேவா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
    பின்னை சர்வேஸ்வரன் இவர்கள் உடைய அலமாப்பைப் பாராய் என்று
    திரு உள்ளத்தாலே நினைத்த படி தோற்ற
    பின்னை அவளாலே பார்க்கப் பட்டார்கள்

    முன்பு கடாஷியா விட்டது என் என்னில் –
    தன் ஸ்வரூபத்தை பெற்று பிறரை ரஷிக்க வேணுமே –

    பிரதேஹி ஸூ பகே ஹாரம் -யுத்த -131-80-என்று
    அவன் நினைவும் சொலவும் அறிந்து  இறே
    ஒருவரைக் கடாஷிப்பதும்
    ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதும்

    இவள் பிரிந்து இருக்கையாலே
    பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு
    பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி

    ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்

    ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்

    நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு -திருவாய்மொழி -9-2-1-

    திருவல்லிக் கேணியான் எந்தை –
    திரு வல்லிக் கேணியிலே  எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –

    எந்தை
    பெறாப் பேறு பெற்றாப் போலே

    ஒரு வல்லித் தாமரையாள் சென்று ஒன்றிய சீர் மார்வனுமாய்
    திருவல்லிக் கேணி யானுமானவன்
    எந்தை –
    அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்-

    வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
    வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
    ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
    திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

    ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
    பஸ்யதாம் சர்வ
    -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

    (பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
    தயா வ லோகிதா தேவா
    பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
    பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
    ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
    சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
    பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

    ஒன்றிய மார்பு
    தாமரை விட்டுப் பிரிந்தால் போல் திரு மார்பை விட்டுப் பிரியாதவள்
    சீர் மார்பு
    அழகும் மாரத்தவமும் தாமரையை விட மேலுள்ள சீர்மை

    மா மலராள் செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள் பல் நாள் —பூதத்தாழ்வார்
    அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -நம்மாழ்வார்

    வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
    படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
    ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
    கோலத்தால் இல்லை குறை–82-

    படிக் கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் (கோதாய் )கழித்தார் ஆரோ என்னில்
    வடிக் கோல வாள் நெடுங்கண் மா மலராள் –
    ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய்
    சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்

    (கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
    நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
    அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

    செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
    செவ்வியை உடைத்தாய்
    ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு
    காலம் எல்லாம் அகலாள்
    ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
    வைத்த கண் வாங்க மாட்டாமையும்
    கால் வாங்க மாட்டாமையும்

    அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ கோலத்தால் இல்லை குறை –
    அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்(இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து )
    பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற
    விஷயம் என்று அறிந்த பின்பும்

    ஸ்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –
    அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் –
    இவளுக்கு விசிஷ்டம் -(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரைப் பற்றும் )

    இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
    அடிக்கோலி -என்கிறது

    (மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
    நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

    தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால்
    கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது –
    எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார்
    குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே
    அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –

    கோல இத்யாதி –
    நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு
    குறைவற்று இருக்கையாலே –
    இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –

    கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
    எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் –
    பரப்பு உண்டாகையாலே
    இவ் விஷயத்தை அனுபவிப்பாருக்கு பிரியமே உள்ளது –

    (அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

    (வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
    யுவா குமார
    அரும்பினை அலரை
    செவ்விப் படிக்
     கோலம்
    பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
    பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
    பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
    போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
    அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
    தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
    அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர –
    பால –77-36-
    திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
    வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

    உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
    லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –
    ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

    இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
    உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
    இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
    விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
    ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

    போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
    நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
    தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
    யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
    –ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

    தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
    அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ள போது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
    நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
    ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
    இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
    இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ள போதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
    அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும் போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
    இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
    அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
    இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

    ———————————

    திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
    ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு

    இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

    (பேய்காள் (31)-என்றார்
    மேல் யுக்தி பிரதி யுக்திகள்
    வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
    விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
    நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
    இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
    பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –

    ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
    ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
    என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
    ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
    மா நகர பெருமை மயிலைக்கு
    மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை

    வாயும் பேசவில்லை அசையும் இல்லை
    இங்கு ஒரே கேள்வி
    திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
    மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)

    தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
    வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
    வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
    ஐந்தலை வாய் நாகத்தணை-35-

    பதவுரை

    நீளோதம்–பெரிய அலைகள்
    வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
    மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
    மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
    ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
    வாளா–வெறுமனே
    கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
    வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
    (இப்படி யிருப்பதற்குக் காரணம்)
    தாளால்–திருவடியாலே
    உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

    போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
    நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
    திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
    சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
    இதுக்குக் காரணம்
    பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
    வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
    வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்

    நீளோதம்-பெரிய ஓதம் –

    தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்-
    வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
    பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
    காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
    (அசைவு -தளர்த்தி )

    இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
    உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-

    வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-
    ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
    வார்த்தையும் பேசுகிறிலன்-

    (வாளா -வெறுமனே
    ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )

    (கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
    மாஸூ ச
    தாதாமி ஏதத் விரதம்
    அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
    போன்ற இடங்கள் உண்டே
    விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
    க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
    சீறியாவது அருளலாமே
    வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
    அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )

    நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
    நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும்
    ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-

    (பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
    முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )

    (வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
    சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
    பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
    அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
    அஸ்தானே பய சங்கை
    கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
    மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
    அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
    படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )

    பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
    தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
    போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
    ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
    காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
    சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
    வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளம் உடைய
    இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
    இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
    இதுக்கு அடி
    மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
    பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
    (ஸூ குமாரவ் மஹா பலவ்
    உலகம் அளந்த -பலம்
    தாளால் -ஸூ குமாரம் )
    காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

    —————

    (சிங்க வேள் குன்றம் இருந்தவாறும் -திருவேங்கடத்திலும் நின்றவாறும் -திரு எவ்வுள்ளில் கிடந்தவாறும் அனுபவித்து
    அனைத்து திருக்கோலங்களும் சேவித்து
    கரி ரக்ஷணம் அனுபவித்து -திரு நறையூர் திருவாலி குடந்தை -கோவல் நகர் -முதலான தோற்றி
    அவை எல்லாவற்றிலும் உள்ள
    அபிநிவேசத்துடன் இங்கே வந்து அனுபவிக்கிறார் )

    பிராட்டிமாரோடே கூட வந்து
    விரோதி நிரசன சீலனாய்
    பிரபல விரோதியான பாபங்களை
    அநாயேசேந போக்க வல்லவனாய்
    சர்வ ஸ்வாமியான
    சர்வேஸ்வரன்
    உகந்து அருளின நிலங்கள் எங்கும்
    பண்ணும் விருப்பத்தை
    திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து
    சந்நிஹிதனானான் –
    அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு
    அநர்த்தப் பட்டுப் போகாதே
    அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய்
    போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-

    ———————————————————————-

    அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
    என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
    நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

    நடந்தது -எல்லை நடந்து -அளந்த என்றவாறு

    ———————————————————————————

    வியாக்யானம் –

    அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி –
    முன்பு பண்டு ஒரு நாள்
    நப்பின்னை பிராட்டியாரோடும்
    அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
    பெரிய பிராட்டியாரோடும்-( ஸ்ரீ ருக்மிணித் தாயாரோடும் )
    விரும்பிக் -கலந்து

    அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு –
    அவர்கள் உடன் கூட இருந்த போதும்
    அசுர வர்க்கத்துக்கு ஒரு காலும் இரக்கம் இல்லாத வனுக்கு –

    உறையுமிடமாவது
    நித்ய வாஸம் பன்னுகைக்கு ஸ்தானம் ஆவது –

    இரும் பொழில் சூழ் —
    பரந்த பொழிலாலே சூழப் பட்ட –

    நன்றாய புனல்-
    நல்ல ஜல சம்ருத்தியை உடைத்தான –

    நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் –
    திரு நறையூர் –
    இப்படிப்பட்ட நன்மைகளை உடைய திருவாலி -திருக் குடந்தை –
    தடாகங்கள் திகழா நின்றுள்ள திருக் கோவலூர் –
    இவை துடக்கமானவற்றில் –

    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
    திரு நறையூரிலே நின்றான்
    திருவாலியிலே இருந்தான்
    திருக் குடந்தையிலே சாய்ந்தான்
    திருக் கோவலூரிலே நடந்தான் –

    இடம் மா மலையாவது நீர் மலையே –
    மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை
    வாஸஸ் ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
    (மா விசேஷணம் மற்ற மலைகளுக்கு வியாவ்ருத்தம் )

    உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ
    விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து
    சந்நிஹிதனான தேசம் திரு நீர் மலை-

    ————-

    நெறி எல்லாம் எடுத்து உரைத்த ஸ்ரீ கீதாச்சார்யன் இன்றும் நாம் சேவிக்கும்படி-
    ஸ்ரீ பார்த்த சாரதி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
    நின்றும் நடந்தும் கிடந்தும் இருந்தும் பரந்தும் ஐவர் சேவை –
    ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் பலராமன் சாத்விகி அநிருத்தன் பிரத்யும்னன் இப்படியும் ஐவர்
    நம்மாழ்வார் -தேர் கடவிய பெருமான் கனை கழல் சேவிக்கப் பெறுவேன் -நம்மாழ்வார் மங்களாசாசனம்
    பெற்றே புறப்பாடு இன்றும் -திருத்தேர் புறப்பாடும் நம்மாழ்வார் சந்நிதிக்கு அருகிலே –

    கீழே இவரை வசீகரித்த ராம கிருஷ்ண அவதாரமும்
    கிடை அழகையும்
    சிங்க வேழ் குன்றம் ஸ்ரீ நரசிம்மம்
    திரு வேங்கடத்தில் கஜேந்திர வ்ருத்தாந்தம் கஜேந்திர வரணும் இங்கே சேவை
    தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் -ஐவரும்
    மன்னாதன் -சயனம் தகிரு எவ்வுள் போலே
    இப்படி இரண்டு வித சங்கதி )

    ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
    ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –
    ஆஸ்ரித சுலபனாய் –
    இதர விஸாஜதீயனாய் –
    இருக்கிற சர்வேஸ்வரன்
    இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி
    எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –

    இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார்
    புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி-( இண்டை கொண்டு பாசுரம் கீழே பார்த்தோம் )
    வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே-

    ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும்
    என்று இடர் பட -(மீனமர் பொய்கை பாசுரம்)
    அவ்விடர் தீர்க்கைக்காக-
    அது இடர் பட்ட மடுவின் கரையிலே-
    அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து-
    அத்தை ஆற்றி-

    இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று
    சாய்ந்து அருளினான் கண்டேனே -என்கிறார் –
    (மன்னாதன் தானே இங்கே முன்னம் )

    ——————————————

    விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
    செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
    சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    –2-3-1-

    சிற்றவை-நடுவில் ஆய்ச்சி -மாற்றுத் தாய்-
    தேவை–ஸ்வாமியை –

    ——————

    வியாக்யானம் –

    விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் –
    விற் பெரு விழா வாயிற்று
    சத்ரு நிரசனம் பண்ண நினைக்கிறான் ஆகையாலே -பெருக்கக் கோலினான் -ஆயிற்று –
    அத்தைக் கோலின கம்சனும்

    அவனுக்கு பலமாய் மலை துள்ளினாற் போலே
    பெரிய கிளர்த்தியோடே கூடின மல்ல வர்க்கமும் –

    அவர்கள் பார்க்கிலும் கண் பாராதே இடையற வீசும்படி
    மதிப்பித்து ( மதமூட்டி ) வழியிலே நிறுத்தின ஆனையும்

    அத்தை தள்ளினாலும் அது தன்னை உயிர்ப்புள்ளது போலே
    நடத்த வல்ல -பாகனும் –

    வீழ செற்றவன் தன்னை-
    ஏகோத் யோகத்திலே நிரசித்தாற் போலே
    வினை செய்த சடக்கு-
    (வார் கெடா -கஞ்சனை குஞ்சி பிடித்து -வரிசையாக நம்மாழ்வார் -இங்கு அக்ரமம் )

    புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை –
    திரிபுர தஹந அபதாநத்தாலே சஞ்சாத அபிமாநனான -ருத்ரன்
    பிதாவுமாய் -லோக குருவுமாய் -இருக்கிறவன் தலையை அறுத்து -பாதகியாய் இருக்கும் –
    மதிப்பனாய் இருக்கிறவன் எளி வரவு பட ஒண்ணாதே -என்று அத்தைப் போக்கி
    அத்தாலே லோகத்துக்கு எல்லாம் தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை- வெளி -இட்டவன் –

    தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷதாம் ப்ரயா சித விஷ்ணு பிரஸாதாத் –
    சர்வேஸ்வரன் பிரஸாதத்தாலே
    ஸூஸ்ரோணி
    அவனைக் கிட்டுகையாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது இறே-என்கிறான்-

    (மாத்ஸ்ய புராணம் -வாம அங்குஷ்ட நகத்தால் கிள்ளப்பட்டது -கபாலித்தவம் பவிஷ்யதி சாபம் –
    பூ தல புண்ய க்ஷேத்ரம் போனேன் ஹிமாசலம் சென்றேன் -பதரி விசால் பெருமானைப் பிரார்த்தித்தேன்
    ரத்தம் வியர்வை கபாலம் பட்டு வெடிக்க ஸ்வப்ன தனம் போல் கபாலம் தொலைந்தது
    இதனாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது என்று பார்வதி இடம் சொன்னானே )

    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு –
    பற்றலர் -உண்டு -சத்ருக்கள்
    அவர்கள் முடிந்து போம் படி
    ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்றவாறே
    குதிரைகளை நடத்தும் கோலைக் கையிலே கொண்டு –

    பார்த்தன் தன் தேர் முன்னின்றானை –
    ரதியைச் சீறினால்
    சாரதியை இறே அழியச் செய்வது
    அவனை பின்னே இட்டு -தன்னை அம்புக்கு இலக்காக்கி –
    நின்றவனை

    சிற்றவை பணியால் முடி துறந்தானை-
    மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
    ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

    ந நூநம் மம கைகேயி
    சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
    உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
    உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
    என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

    அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
    திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
    நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
    தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
    ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
    அவரை ஈஸ்வரராகவும்
    உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

    (ஒவ் ஒரு பாசுரத்துக்கும் ஸ்வா பதேசமும் அருளிச் செய்கிறார் )
    விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –
    ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் போக்குமவனாய் –
    தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
    போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் செய்யுமவனானவனை –

    திருவல்லிக்கேணிக் கண்டேனே
    திருவல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
    என்கிறார்

    அவன் பாரிப்புக்குத் தக்க பெரு விழவு
    மல் –ஆகு பெயரால் மல்லரைக் குறிக்கும்
    சிவன் உறும் துயர்களைக் களைந்தவனும் கண்ணனே
    அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி -நம்மாழ்வார்
    கொல்லா மாக்கோல் கொலை செய்து –
    பார்த்தன் தேரின் மேல் நிற்றலே பற்றலர்களை வீயச் செய்யுமே
    யத்ர யோகேஸ்வர கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர் தர
    தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம

    படையெல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற விசயன் தேர் ஊர்ந்தானை -என்றும் இவரே அருளிச் செய்கிறார்
    பற்றலர் -த்விஷ்தன்னம் ந போக்த்வயம்
    ஸ்நேஹம் இல்லாதவர்கள் என்றுமாம்
    சேராக்குலை கொண்ட ஈர் ஐந்து தலையான் இலங்கையை ஈடழித்த கூர் அம்பன்
    கையில் கோல் கொண்டு
    -கையும் கோலுமாகக் கையார் சக்கரத்தனைக் கண்ட அழகைப் பேசுகிறார்
    கோல் குதிரையை ஓட்டும் சம்மட்டி ‘
    கோல் கொள்ள -சாரதியாய் இருப்பதை-மாதலி முன்பு தேர் கோல் கொள்ள -ஆண்டாள்
    இப்பாசுரத்தில்
    விரோதிகளை போக்கும் இறைவனது திறனும்
    தற்பெருமை பாராட்டுவாருக்கும் தயங்காது உபகரித்தமையும்
    அடியாருக்காக தனது பரத்வ நிலைமை மாறி இழி தொழில் செய்வதையும்
    போலி அன்புடையாருக்கும் எயிற்று செய்யும் தியாகமும் முறையே பேசப்பட்டன

    ———————————————

    வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
    கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
    ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
    மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
    –2-3-2-

    மயிலாப்பூர் படைவீடு
    திரு வல்லிக்கேணி ஆரண்யம்

    கனி-நிரதிசய போக்யம்
    நந்தனார் களிற்றை-வேழ போதகம் -யானைக்குட்டி
    யாளுடை யப்பனை-அடிமை கொண்ட உபகாரகன்
    மா-செல்வம் நிறைந்த மாதவன் கேசவன் பார்த்தசாரதி உள்ளடக்கிய செல்வம்

    ———————————————————–

    வியாக்யானம் –

    வேதத்தை –
    த்ரை குண்ய விஷயா வேதா –
    என்கிறபடியே எல்லார்க்கும் ஹிதம் சொல்லப் போந்த
    வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்

    வேதத்தின் சுவைப் பயனை –
    வேதோக்தமான கர்மங்களை அநுஷ்டித்து
    ராஜசராயும் தாமசராயும் சாத்விகராயும் உள்ளாருக்கு
    அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பனண்ணுமவன் –
    (அ சாஸ்திரம் படி செய்பவர் அசுரர்
    சாஸ்திரம் முக் குணம் உள்ளோருக்கும் )

    விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை-
    கர்ம பாவனை யாதல் உபய பாவனை யாதல் அன்றிக்கே
    கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
    சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –

    நந்தனார் களிற்றை-
    ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
    அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
    எப்போதும் ஒக்க இனியனானவனை –

    குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை-
    பூமியில் உள்ளார் -காரணந்து த்யேய -என்கிறபடியே
    தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
    ஜகத் காரண பூதனாய்  உள்ளவனை –

    யமுதை-
    அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –

    என்னை யாளுடை யப்பனை-
    அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை
    அடிமை கொண்ட உபகாரகனை –

    ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை-
    ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
    என்று பிராட்டி ப்ராதான்யமேயான ஊராகையாலே
    பிராட்டி பரிகரமே யாயிற்று –

    நா நயோர் வித்யதே பரம் -என்று
    அவள் விபூதியும் ஈஸ்வர விபூதியுமாய்
    இரண்டு கூறாய் இறே இருப்பது –
    (தேவர் திர்யக் மனுஷ -புருஷன் ஹரி -ஸ்த்ரீ தன்மை ஸ்ரீ லஷ்மீ -மைத்ரேயருக்கு )

    மயிலாப்பூர் என்று படை வீட்டுக்கு பேர் –
    திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

    அறியாதவற்றை அறிவிப்பதால் வேதம்
    புலம் என்றும் இதனாலேயே வேதத்திற்குப் பெயர்
    புலமும் பூவனும் நாற்றமும் நீ -பரி பாடல்
    வேதத்தின் சுவைப் பயனை -பயனைத் தருபவனையே -பயனாகச் சொல்லுவது ஆகு பெயர்
    நான்கு வேதப் பயன் என்கோ –

    கர்ம பாவனையில் இருப்பவர்களுக்கு முதலில் காயாக -காலம் செல்லச் செல்லக் கனியாகவும்
    ப்ரஹ்ம பாவனையில் உள்ளாருக்கு அப்பொழுதே கனி யாவான்
    விழுங்கும் கனி -ரஸ புஞ்சமாய் இருப்பான் அன்றோ
    வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் –ஆர்வத்தால் பாரித்த முனி
    விழுமிய முனிவர் விழுங்குவதால் கோதில் இன்கனி
    நாமும் அனுபவிக்கலாம் படி நந்தன் குமரன் -நந்தனார் கழிற்றை
    உலகம் எல்லாம் கண்ணன் படைப்பு என்பதை -குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை -காரணந்து த்யேய –
    இத்தால் பிராப்ய ஸ்வரூபம் -அமுதை -என்கிறார்
    என்னை ஆளுடை அப்பன் -மன்னாதானை மங்களா ஸாஸனம்

    —————————————

    நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –

    வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
    நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
    விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
    அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
    -2-3-3-

    விஞ்சை வானவர் -வித்யாதரர்
    வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை

    ————————————————————–

    வியாக்யானம் –

    வஞ்சனை இத்யாதி –
    தாய் வடிவு  கொண்டு வஞ்சிக்க வந்த
    பூதனை கதறிக் கொண்டு போய்
    பூமியிலே விழும்படியாக
    விஷம் நிரம்பின முலை வழியே
    அவளுடைய பிராணன்கள் போம் படி அமுது செய்த –

    நாதனை –
    தனக்கு சேராத வடிவு கொண்டு
    உலகத்துக்கு பிராணனான தன்னை நலிய வந்தவளை
    முடித்து தன்னைத் தந்தவன்
    ஸ்தந் யம்தத் -(விடமும் அமுதமும் சமம் -பிராணன் உடன் சேர்ந்து குடித்தார் -ரசமாக இருந்ததாம்
    ஜகத் குருவுக்கு -விஷ்ணு புராணம்
    பன்னிரண்டு மைல் நீளமாக உடல் விழுந்ததாம் வில் கடை தூரம் அன்று –
    கொழு மோர் கொடுத்தாள் தாய் பரிந்து இவன் அச்சம் தீர்க்க )

    தானவர் கூற்றை –
    ஆசூர வர்க்கத்துக்கு ம்ருத்யு வானவனை

    வித்யாதரர் சாரணர் ஸித்தர் உள்ளிட்ட
    தேவ வர்க்கம் அடைய விஸ்மிதராய்
    ஸ்தோத்ரம் பண்ணும்படி –

    புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
    அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –

    கண்ணனை வஞ்சம் செய்ய என்னாமல் வஞ்சம் செய்ய என்றது அனைவரையும் வஞ்சம் செய்து அன்றோ வந்தாள்
    பரிவின் காரணமாக தன்னை வஞ்சனை செய்யவே என்று ஆழ்வார் திரு உள்ளம்
    தாயுருவாகி -உள்ளம் பேயாயாகவே இருந்தும் உருவம் மாத்ரம் தாய் போல் இருந்தாள்
    கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாள் –மண் சேர்ந்தாள் என்கிறார் இவ்வாழ்வாரே மேல்
    அவள் பால் உயிர் செகவுண்ட திருவாய் மொழி
    விஷம் கலந்த பால் ஜகத் குருவான கண்ணனுக்கு ரசிக்கத் தக்கதாய் இருந்தது -பராசரர்
    விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -நம்மாழ்வார்
    பேய் சேராத தாய் உருக்கொண்டால் போல்
    புருஷோத்தமன் பெண்ணுருவாகி அசுரரை வஞ்சித்தான்
    பேயின் வஞ்சனை தோற்றது
    இறைவனின் வஞ்சனை வென்றது
    தன்னடியாருக்குத் தாயுருவாகி அமுதம் ஊட்டினான்
    வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார்
    புருஷோத்தமனான தன் படிக்குச் சேராத ஸ்த்ரீ வேஷத்தை ஏறிட்டுக் கொண்டு
    ஆண் பிள்ளைச் சோறாள்வி –பெண் வேடம் பூண்ட புருடன்
    பெண் வேஷம் என்னா ல் தரிக்கப் பட்டது -அவதாரங்கள் போல் அன்றிக்கே வேஷம் என்று ஸ்பஷ்டம்
    அமுதம் அன்று அளித்தானை இன்று கண்டார் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்
    திருப் பாற்கடலிலே அமுதம் அளித்தானைத் திருவல்லிக் கேணிக் கரையிலே கண்டேன் என்கிறார்
    அஞ்சுவை அமுதம் அளித்தானைக் கண்டேன் –சவுந்தர்யத்தாலே கண்ணுக்கு இனியதாயும் –
    ஸ்துதிப்பதால் நாவுக்கு இனியதாயும்
    திருமேனியின் போக்யத்தையைக் காட்டக் கண்டேன் என்கிறார்

    ————————

    (பூதனை நிரசனத்து அளவு இன்றிக்கே த்ரை லோக இந்திரன் கல் மழை பொழிய –
    கடுங்கால் மாரி கல்லே பொழிய -கோவர்த்தன விருத்தாந்தம் அனுபவம் இதில் )

    இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
    மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
    எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
    அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே
    –2-3-4-

    ———————————————————————

    வியாக்யானம் –

    இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் –
    திரு ஆய்ப்பாடியில் உள்ளார் த்ரை லோக்ய ஈஸ்வரனான
    இந்த்ரனுக்காக வருஷார்த்தமாக ஆண்டுக்கு ஒரு
    விருந்திடக் கடவர்களாய் –

    நாம் பிறந்து வளருகிற ஊரிலே
    புரோடாசத்தை நாய் தின்றாற் போலே
    ஒரு தேவதை வந்து புஜிக்க யாவது என் -என்று
    நீங்கள் செய்யப் புகுகிறது தான் என்ன -என்று கேட்டான் –

    நாங்கள் இந்தரனுக்கு வருஷார்த்தமாக விருந்திடப் புகுகிறோம் என்றார்கள்

    இந்த மலை யன்றோ நமக்கும் பசுக்களுக்கும்
    ஒதுங்க இடமும் தந்து -புல்லும் தருகிறது
    ஆரேனுக்குமோ பிரத்யுபகாரம் பண்ணுவது இம் மலைக்கு இடுங்கோள் -என்றான் –

    முகத்தைப் பார்த்து ஓன்று சொன்னால் மறுக்கலாம் படி அன்றே இருப்பது –
    ஒன்றாகக் கொடு வந்து குவித்தார்கள் –
    (வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று –அழகைக் கண்டவள் ஏது என்று அறிய மாட்டாளே )

    இந்த்ரன் இத்யாதி –
    இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த
    எழில் உடைத்தான விழவிலே
    முன்பு செய்து போரும் படியிலே
    மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
    அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

    அவன்
    பசி க்ராஹத்தாலே கோபித்து மஹா வர்ஷமாக வர்ஷிப்பிக்க –
    அத்தாலே இடையரானவர்கள் தளர்ந்து

    ரஷகரான எங்களோடே
    எங்கள் உடைய ரஷ்யமான பசுக்களும் தளராதபடி
    நோக்கி அருள வேணும் -என்ன –

    இத்தால்
    புறம்புண்டான ரஷ்ய ரஷக பாவமும்
    அப்ரயோஜகம் என்றபடி –

    அந்தமில் –
    அந்த மழையின் அளவு அல்லாத
    பெரிய மலையாலே
    மழையைத் தடுத்து –

    (தேவதாந்த்ர பிரசாதம் தனது அநந்யார்ஹ பக்தர்களுக்கு கூடாதே -தானே உண்டான் -அவனுக்கு எல்லாம் ஆகுமே )

    அப்படியே
    பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -என்கிற
    என்னுடைய சம்சாரம் ஆகிற வருஷத்தை
    பரிகரிக்க வந்தவன்..

    பகைவனது வில் விழவை அழித்தமை கீழே
    இடையரது விழாவைச் சீர் திருத்தினமை இங்கு
    ஆ நிரைகளுக்கு ஆயர்கள் ரக்ஷகர் அல்லர்
    ஆயர்களுக்கு இந்த்ரன் ரஷகன் அல்லன்
    காக்கும் இயல்வினன் கண்ணன் -அனைவருக்கும் ரஷகன் இவனே

    குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் சென்று சேரும் இடம் திருவேங்கடம் -நம்மாழ்வார்
    இவரோ மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார்
    அறியாமை என்னும் மேகங்கள் சூழ்ந்து அறிவு ஒளியை மறைத்து துன்ப வர்ஷம் பொழிய -தளர்ந்த அடியேனை ரக்ஷிக்கவே திருவல்லிக்கேணியான்

    ——————

    அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுபவித்து -ஸ்ரீ பூமா நீளா தேவி நாயகனாய் இருந்து
    வைத்தும் தூது சென்றான் என்று ஈடுபடுகிறார்

    இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
    தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
    வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
    என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    –2-3-5-

    நற் புவி-ஷமை பிருத்வி சமாயா –
    தன் துணை யாயர் பாவை-தன்னையே துணை இவளுக்கு மட்டும் தந்தை சுல்கம் வைத்து பற்றினான்

    ———————————————————-

    வியாக்யானம் –

    இன் துணைப் பதுமத் தலர்மகள் –
    நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற
    பதுமத்தலர் மகள் உண்டு –
    தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார்
    அவளுக்கு இன்பனானவன் –

    தனக்குமின்பன் —
    எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற
    பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
    விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –

    நற் புவி தனக்கிறைவன் –
    சர்வேஸ்வரனான தனக்கும் கூட
    பொறைக்கு உவத்தாய் இருக்கிற
    பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
    (புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )

    தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை-
    தன்னையே துணையாக உடையாளான
    ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
    அவளுக்கு ஸ்வாமி யானவன் –
    (சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )

    மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை –
    இப்படி இருக்கையாலே
    அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –

    பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை-
    ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக
    அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது –
    இங்கே வந்து அறிவிப்பதாய் –
    இப்படி ஆஸ்ரித விஷயத்தில்
    தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை
    (தூது இயங்கும் என் துணை -என்பதால் )
    எனக்கு அறிவித்தவன் –

    எந்தை –
    எனக்கு ஸ்வாமியாய் –

    தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
    என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.

    ஆஸ்ரித பாரதந்தர்ய திருக்குண த்தில் இழிகிறார்
    ஆயர் பாவை -கும்பன் திருமகளானாலும் ஆயர்கள் அனைவரும் தமது மகளாகப் பேணிக் கொண்டு இருப்பதால்
    பாவை அத்யந்த பாரதந்தர்யம்
    ஸ்ரீ வல்லப ஏவம் பூத பூமி நீளா நாயக
    இவர்கள் பக்கல் முறையுடன் பரிமாறுகையும்
    அவள் பக்கல் முறை கெடப் பரிமாறுகையும்
    இம்முறை கேடு தனக்கு இவர்கள் தங்களை எழுதிக் கொடுத்து இறே இருப்பது
    நிழல் போல்வனர்
    வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தந
    உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித பரமேஸ்வர
    மிதுனத்தை பூமி நீளா தேவிமார் சேவிப்பதைச் சொல்லும்
    ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
    ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
    இருவடைய அபிமானத்துக்குக் கீழே த்ரிபாத் விபூதியாக
    அடங்கிக் கிடக்குமே

    வன் துணை வானவர்க்காய் -தன்னைப் பேணாதே அம்புக்கும் இலக்காகிக் கொண்டு நின்ற எளிமை தனது வம்சத்துக்கே நாதன் இவன்

    ———————————

    தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

    அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
    எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
    சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2
    -3-6-

    அரசர் தம் அரசன் ராஜ ராஜன் -துரியோதனன் அவன் நினைவால்
    அணி யிழை-அப்படிப்பட்டவள் இப்படி மூன்று நாள்கள் இருக்கும் பொழுதும்
    அலக்கண் -துக்கத்தை
    இந்திர புத்ரன் -அர்ஜுனன் -வாலி -அங்கு
    சூர்ய புத்ரன் -கர்ணன் -சுக்ரீவன் -அங்கு

    ——————————————————-

    வியாக்யானம் –

    அந்தகன் சிறுவன்
    குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
    இத்தால் அறிவு  கேடு வழி வழி வருகிறது என்கை –
    பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
    தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

    அரசர் தமரசற் கிளையவன்
    ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
    துச்சாதனன் -என்றபடி –
    அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
    தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
    (யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

    அணி யிழையைச் சென்று —
    மஹோ உத்சவம் ஆகையாலே
    ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
    பக்கலிலே கிட்டி –

    எந்தமக்குரிமை செய்யென-
    சூதிலே உன்னையும் தோற்றார்கள்
    நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

    தரியாது –
    அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
    இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

    ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
    தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
    எம்பாரைக் கேட்க
    அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
    மஹத்யாபதியம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
    (வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

    இது தன்னைப் பட்டரைக் கேட்க
    பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
    இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
    அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
    விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
    (எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

    சந்தமல் குழலாள் –
    சந்தம் என்று நிறம்
    அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
    நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
    அன்றிக்கே
    சந்தமல் குழலாள் –
    சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

    அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
    துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
    அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
    அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

    இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
    வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
    தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
    த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
    அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

    அவிவேகம் அந்தகன் சிறுவனாதலால்
    செல்வச் செருக்கு -ராஜாதி ராஜன் தம்பியாதலால்
    ப்ரபுத்வம் யுவராஜா யாதலால்
    யவ்வனம் இளையவன் ஆதலால்
    நான்கு குறும்புகள் சேர்ந்தவன்
    பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் -பெரியாழ்வார்

    ———————

    (ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தில் ஆசை கொண்டு தேர் தட்டிலும் குரு பரம்பரையில் இடம் பிடித்தான்
    சிற்றவை பணியால் முடி துரந்தானே -கீழே பெருமாள் மங்களாசானம் இதில் விரித்து ச குடும்பமாக

    ப்ருந்தாரண்ய துளசிக் காடு -நிவாஸாய –
    கைரவணி புஷ்கரணி –மீன்கள் இல்லாதது
    துர்வாசர் சாபத்தால் விஸ்வகர்மா-உடல் அற்று கீழே விழ சபித்து -அ ரஜ நதிக்கரையில் –
    சாபம் போக இங்கு தபஸ் அங்கங்கள் பெற்றார்
    ஆர்த்ரேயர் வியாசர் இருவரும் -வியாசர் எழுந்து அருளப்பண்ணிய வேங்கட கிருஷ்ணம்
    வலது திருக்கையில் பாஞ்ச ஜன்யம்
    இடது திருக்கையில் தான ஹஸ்தம் வைகுண்டம் ஹஸ்தம் ஞான முத்திரை
    ஒரு திருவடி முன் வைத்து பார்த்தனை கடாக்ஷித்து -சாட்டை வைத்து பார்த்தசாரதி சேவை
    சேஷ பீடத்தில் ஒட்டியாணம் நாகாபரணம் தரித்து ஹிரண்ய மீசை
    சுமதி அரசன் -இரண்டு தோள் அமுது
    அத்ரி முனிவர் தபஸ் -அத்ரி குமாரர் ஆர்த்ரேயர் நரசிம்மர் )

    ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் நடுவில் வழி பரிப்பாரைப் போல் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -சிற்றவை –
    நெஞ்சுக்குள் புகுந்து பாடல் பெறுகிறார் இங்கு –

    பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
    இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
    குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    —2-3-7–

    காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-

    ————————-

    வியாக்யானம் –

    பரதனும் தம்பி சத்ருக்கனனும்-
    ஸ்ரீ பரதாழ்வானும்
    அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
    (கச்சதா மாதுல குலம் அ ந க –என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )

    இலக்குமனோடு மைதிலியும் –
    இதுவும் இங்கனே  ஒரு சேர்த்தி –
    ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
    பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் )
    ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –

    இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
    சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
    கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
    தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
    (சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை-
    தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –
    கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்
    ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
    முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )

    இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
    நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
    அங்கன் இன்றிக்கே
    திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
    உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )

    இராவணாந்தகனை –
    இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின
    அபதானம் ஒன்றுமே ஆயிற்று –

    யெம்மானை –
    அவர்களோபாதி நானும் தோற்று
    ஏத்தும்படி -பண்ணினவனை

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
    குரவம் கமழா நிற்பதாய்
    ஸ்ரமஹரமான
    பொழிலின் ஊடே
    குயில்களோடே கூட
    மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –

    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
    ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
    பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
    (ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
    பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

    இக்குளிர் பொழிலின் வளம் தான்
    பரதாதி நித்ய ஸூரிகளையும்
    குயில் முதலிய பறவைகளையும்
    ஆழ்வாராதிகளையும்
    கவி பாட வைக்கும் முக்கோட்டை

    குரவம் கமழ நாசிக்கும்
    குளிர்ச்சியால் உடலுக்கும்
    குயில் பாட செவிக்கும்
    மயில் ஆல கண்ணுக்கும்
    ஸ்துதிப்பதால் நாவிற்கும்
    இவ்வாறு ஐம் பொறிகளுக்கும் இன்பம் பயக்கும் பொழில்

    முடி துறந்த பெருமாள் முதல் பாசுரம்
    முடி சூடிய பெருமாள் இதில்

    ——————————

    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
    ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
    தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    —-2-3-8-

    ஒள்ளியவாகி-அழகாக
    ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்

    —————————————————————

    வியாக்யானம் –

    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –
    பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்
    சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –
    இதாயிற்று பருவம் -இருந்தபடி –
    அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை
    சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –

    வாயில் ஓர் ஆயிர நாமம் –
    அவன் அப்போது சொல்லிற்று
    நால் இரண்டாகிலும்
    பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி
    இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –

    நால் இரண்டு -திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
    நாராயண -ஹரி என்றுமாம்
    விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –

    ஒள்ளியவாகிப் போத –
    வயிற்றில் பிறந்தவன் சொல்லுகையாலே
    இனிதாய் இருக்குமே –

    வாங்கு
    அவ்விடத்தில் –

    அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி –
    பள்ளியில் ஓதும் பருவத்தில் சொல்லுவது எல்லாம் பிரியமாய் இருக்கும் –
    தன் வயிற்றில் பிறந்தவன் சொல்லிற்று எல்லாம் இனிதாய் இருக்கும் –
    சத்ருவே சொன்னாலும் சிரசா வஹிக்க வேண்டுமத்தை சொல்லிற்று –
    அசஹ்ய அபசார ப்ராசுர்யத்தாலே
    திரு நாமம் கேட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
    முனிந்தான் ஆயிற்று –

    பிள்ளையை-
    திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை
    கை விட்டான் அவன் –
    திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து
    இருக்கிறபடியாலே –பிள்ளையை –என்கிறார்

    சீறி வெகுண்டு தூண் புடைப்ப-
    கோபத்தாலே செய்வது அறியாதே
    தூணைத் தட்ட –

    பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் –
    பிறை போலே இருந்த எயிற்றையும்
    அக்நி போலே இருந்த கண்களையும்
    புறப்பட விடா நின்றுள்ள பெரிய வாயையும்- உடைய -( இவையாய் பிலவாய் )

    தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே –
    ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே
    நரசிம்ஹமாய்
    அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன்
    என்னும் இடத்தை வெளி இட்டான் –

    ——————————

    ஆண் பிள்ளை ஐவருக்கும் பெண் பிள்ளைக்கும் சிறுக்கனுக்கும் உதவியது அன்றிக்கே
    திர்யக்குக்கும் ஒரு திரியக்கால் வந்த நோவுக்கு அரை குலையத் தலை குலைய வந்த
    மஹா குணத்தில் கட்டுண்டு அனுபவிக்கிறார்

    மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
    கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
    ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
    தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    -2-3-9-

    ———————————————

    வியாக்யானம் –

    மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த –
    நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே
    இடர் பட்டுத் திரிந்த விது –
    பூத்த தடாகத்தைக் கண்டு –
    ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
    வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே
    வந்து இழிந்த –

    கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ  –
    காட்டிலே ஸ்வ சஞ்சாரம் பண்ணக் கடவ யானையானது
    கை எடுத்துக் கூப்பிடும்படியாக
    முதலை யானது இதின் காலைக் கதுவ –
    முதலைக்கு தன்னிலமாய்
    இதுக்கு வேற்று நிலமாயிற்று –

    ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –
    ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம்
    போம்படியாக
    பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
    ஆனைக்கு இடர் இன்றிக்கே
    முதலைக்கே இடர் ஆம்படியாக
    திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

    தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
    வண்டுகள் அமர்ந்த சோலையையும்
    மாடங்களையும் உடைத்தான
    மயிலாப்பூரில் திருவல்லிக்கேணிக் கண்டேனே –

    ——————

    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
    தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
    கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
    சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே
    —2-3-10-

    பாண்டிய தேச அரசர் வம்சம் -தென்னன்
    நின்றானை-ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை –
    இவர் பாடலே இவனுக்கு அரண் -ஆகவே மதிள் மங்கை நாட்டில் இருக்க வேண்டுமே
    சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
    சொல் மாலை -ஸப்த சந்தர்பமான

    ——————————-

    வியாக்யானம் –

    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
    நித்யமாய்
    குளிர்ந்து இருந்துள்ள பொழிலும்
    நீர் நிலங்களும்
    அரணாகப் போரும்படியான மதிள்களும்
    மாடங்களும்
    மாளிகைகளும்
    மண்டபங்களும்-

    தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை –
    இன்னமும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் எல்லாம்-( நன் மயிலை-சொல்லாத நல்லவைகளும் )
    உண்டாம்படி யாயிற்று
    தொண்டமான் சக்கரவர்த்தி ஏற்றிற்று –

    கன்னி நன் மாட மங்கையர் தலைவன் –
    அரணாகப் போரும்படியாய்
    நன்றாய் இருக்கிற மாடங்களை உடைய
    திருமங்கைக்கு ப்ரதானர் –

    காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்-
    ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய
    ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
    அப்யசிக்க வல்லார்கள் –

    சுகமினி தாள்வர் வானுலகே –
    நித்ய அனுபவம் பண்ணலாம் படியான
    நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணித்த
    தொண்டையர் பல்லவர் கோன்
    சித்ர கூடத்துக்கும் திருவேங்கடத்துக்கும் பொற் பூ சமர்பித்தான்

    முக்தி இன்பத்தை விட கலியன் ஒலி இன்பம் மிக்கது -தெள்ளியீர் பதிகம் –

    ஆள்வர் வானுலகே
    முடியுடை வானவர்
    ஸ்வராட் -கிங்கரத்வாதி ராஜ்ஜியம் -அடி சூடும் அரசு
    குடி இருப்பரோபாதி யாயிற்று பரமபதத்தில் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு
    பிராப்தி தேசம் நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்
    அடியாரது வைகுந்தம்
    அவனது வையம்

    ————

    ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
    தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
    திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
    அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

    வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
    அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
    ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
    சீர் அல்லிக் கேணியுள் அன்று
    –13-

    சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
    புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
    கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
    எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
    கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
    அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
    புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இனியான் நின்றும் –
    கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
    வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

    ——–

    திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
    புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
    கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
    திருவல்லிக்கேணி யான் சீர்
    –94-

    (இ – ள்.) திரிந்து உழலும் – (ஐம்புலவாசைகளிற்) சென்று அலைகின்ற,
    சிந்தைதனை – உங்கள் மனத்தை,
    செவ்வே நிறுத்தி – (அவ்வாறு செல்லவொட்டாது) நேராக நிறுத்தி,
    திருவல்லிக்கேணியான் – திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய,
    கண்ணன் – கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,
    சீர் – கீர்த்தியை,
    புரிந்து புகன்மின் – விரும்பிக் கூறுங்கள்;
    புகன்றால் – அவ்வாறு புகழ்ந்து கூறினால், (அது), –
    கரு வல்லிக்கு – கர்ப்பமாகிய கொடிக்கு,
    மருந்து ஆம் – (நசிக்கச் செய்யும்) ஒளஷதமாம்;
    மா கதிக்கு – சிறந்த முத்தி யுலகத்துக்கு,
    ஏணி ஆம் – (ஏறிச் செல்லுதற்குஉரிய) ஏணியாகும்; (எ – று.)

    மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணியி லெழுந்தருளிய திருமாலின்
    கீர்த்தியை யெடுத்துக்கூறினால், அது கொழுந்தோடிப்படர்கின்ற கர்ப்ப பரம்பரைகளை நீக்கி முத்தி
    நெறியிலேறுதற்கு எளியஉபாயமாகு மென்பதாம்.

    கருவல்லிக்கு மருந்து – பிறப்புக்களை இனி உண்டாகவொட்டாது தடுக்குந் திவ்யௌஷதம்,
    கீழிடத்திலிருந்து மேலிடத்திலேறுதற்கு ஏணி இன்றியமையாக் கருவியாதல் போல
    நில வுலகத்திலிருந்து மேலுலகமாகிய முத்தி யுலகத்தி லேறுதற்குக் கண்ணபிரானது புகழ்கள்
    இன்றியமையாத உபாயமாமென்பது, ‘ஏணியாம் மாக் கதிக்கு’ என்றதன் கருத்து. கண்ணன் – பார்த்தசாரதியுமாம்.

    இது – தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
    தனது குடும்பத்தோடு சேவை சாதித்த தலம்;
    இத் தலத்துப் புஷ்கரிணி – அல்லிப் பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணி யென்று வட மொழியிலும்,
    திருவல்லிக்கேணி யென்று தென் மொழியிலும் பெயர் பெறும்.
    இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரே இத் தலத்திற்கும் பெயராயிற் றென்க.
    இது மயிலையை யடுத்திருத்தலால், மயிலைத் திருவல்லிக்கேணி யெனப் பெயர் பெறும்;
    இம் மயிலையே பேயாழ்வாரது திருவவதார ஸ்தலமாம்.

    ———–

    பேயார் திரு மழிசைப் பெம்மான் அருள் கலியன்
    வாயாரச் சொன்ன வளம் கவியில் -மேயான்
    திருவல்லிக்கேணியான் சீர் அருளே வாளாம்
    கரு வல்லிக் கால் அறுக்கும் கால்

    எறி கடல் வந்து அலைக்கும் எழில் அல்லிக்கேணி கண்ட
    அறிவுடை ஆழ்வார் பாடல்கள் அனைவரும் அறிய வான்றோர்
    முறையிலே பிறழாது ஏகி மூண்ட பேர் அன்பினாலே
    சிறியனேன் உரை செய்தேனால் சீர் திருமலை நல்லானே

    ———–——————————————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ நல்லான் சக்ரவர்த்தி ராமகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
    அரி திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்