ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி-ஸ்ரீ ஆழ்வார் திருவடி தொழுதல் -ஸ்ரீ நம்மாழ்வார் மோட்ச வைபவம்-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ கலியன் அருள் பாடு-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

(கலி தொடங்கி இப்பொழுது 5111-
4600 வருஷங்களாக திருவாய் மொழி-இராப்பத்து உத்சவம் திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைத்தது-
நாதமுனிகள் ஏற்பாட்டால் பகல் பத்தும் இராப் பத்தும் இயற் பாவும்-ஆக 21 நாள்கள்
திருவேங்கடத்தில் மேலும் 2 நாள்கள் -இராமானுஜ நூற்றந்தாதி தனியாக ஒரு நாள் -அனந்தாழ்வான் ஏற்பாடு
தண்ணீர் உத்சவம் -திருமலை நம்பி வம்சத்தாருக்காக)

(தர்ம வர்மா திருச்சுற்று
ராஜ மகேந்திரன் திருச்சுற்று
குலசேகரன் திருச்சுற்று
ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதி
திருவிக்ரமன் திருச்சுற்று
உத்தர வீதி -உள் துறையார்கள் -அந்தரங்க கைங்கர்ய பரர்கள் -ஆயிரம்கால் மண்டபம் மேல் நம்பெருமாள் இருக்க தாளம் இசைத்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்வானாம்
சித்ர வீதி –ஆக ஏழு பிரகாரங்கள் -மாட மாளிகைகள் சூழ் திருவீதி இதுவே -முன்பு இதற்கு வெளியில் தான் குடியிருப்பாம்)

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல ஆத்மாக்களோடு தனக்கு யுண்டான சம்பந்தம் ஒத்து இருக்க –
சிலர் தன்னை அனுபவித்து வாழ்ந்தும் –
சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு -திரு உள்ளம் கலங்கி –
இவர்கள் நம்மைக் கிட்டி அனுபவிக்கும் விரகு ஏதோ -என்று பார்த்து –

சம காலீநர்க்கு ஆஸ்ரயண உபயோகியான விபவங்கள் போல் அன்றிக்கே –
பின்னானார் வணங்கும் சோதி (திரு மூழிக் களத்தானே) -என்கிறபடியே -எல்லாக் காலத்திலும் -எல்லா தேசங்களிலும் -எல்லார்க்கும்
ஆஸ்ரயணம் ஸூலபமாம்படி பண்ணி –
அர்ச்சாவதாரமாய் ஸ்ரீ கோயில் முதலான  திருப்பதிகள்  தோறும் -க்ருஹங்கள் தோறும் நித்ய சந்நிதி பண்ணி –
ஆஸ்ரித பராதீனனாயும் -ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பட்ட நாதாதி பக்த  முக்தராலும்
அநேக ஆத்மாக்கள்  உஜ்ஜீவிக்கும் படி ரஷித்து அருளா நிற்கிற காலத்திலே-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற் கணார் கல்வியே கருதி -என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன்  விபூதி அடைய இவர் தொடைக் கீழே கிடக்கிறதோ -என்று சங்கிக்க வேண்டும்படி –
அதிசய அஹங்கார உக்தராய் – அதுக்கடியான தேஹாத்ம அபிமாநத்தை யுடையராய் –
ஆத்ம விஷய மாதல் -ஈஸ்வர விஷயமாதல் -ஒரு ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத படி
விஷய ப்ரவணராய் இருக்க –

இவரை இது நின்றும் எடுக்க விரகு பார்த்து -இவருக்கு விஷயங்களில் யுண்டான ரசிகத்வமே பற்றாசாக
தன் அழகையும்

(ஸூஸேக்ஷண –அவனது அழகே நம்மைத் திருத்த வைக்கும் உபகரணம்
ஐயப்பாடு அறுக்கும் அழகன்
ஆதரம் பெறுக வைத்த அழகன்
ஒருநாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு படுத்தும் பாடு)
சர்வார்த்த ப்ரகாசகமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும் –
ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்ட இவரும் ஹ்ருஷ்டராய் -இவர் –

(முன்பு ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தைப் பேணி வந்தவர் இப்பொழுது தான் ஆழ்வார் ஆகிறார்-காரார் திருமேனி காலம் அளவும் போய் சீரார் திருவேங்கடமே)

(அரச மரத்தின் அடியில்
ஆலி நாட்டுக்கு அரசனான கலியனுக்கு
தெய்வங்களுக்கு அரசனான வயலாலி மணவாளன்
மந்த்ர அரசான திரு மந்திரம் அருளிச் செய்த பின்பே
ஆழ்வார் ஆனார்-வேடுபரி உத்ஸவம் இன்றும் ஸேவிக்கிறோம்)

வாடினேன் வாடி -என்று தொடங்கி-உகந்து அருளிய நிலங்கள் தானே ஆஸ்ரயணீயம்-என்று நினைத்து –
ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே –
ஸ்ரீ பகவத் அர்ச்சாவதார ஸ்தலங்களுக்கு எல்லாம் பிரதானமாய் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -என்று சொல்லுகிறபடியே
ஸ்ரீ பாகவத கோஷ்டிக்கு எல்லாம்  விரும்பி வர்த்திக்கும் ஸ்தலமான ஸ்ரீ திரு வரங்கத் திருப்பதியிலே
நித்ய வாசம் செய்து அருளக் கண்டு –

நாள் தோறும் -கோல  மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ
நிறை கொண்டது என் நெஞ்சினையே-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திரு உள்ளம் குடி புகுந்து அத் தலைக்கு மங்களா சாசன பரராய் –
திருக் கோபுரம் -திரு மதிள்-திரு மண்டபங்கள் -திரு மடைப் பள்ளி -முதலான கைங்கர்யங்களும்  நடப்பித்துக் கொண்டு

இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் -என்கிறபடியே –
ஒருவராலும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற த்ரமிட சாஸ்திரத்தைக் கரை கண்ட ஜ்ஞானாதிக்யத்தை யுடையராய் –
தமிழ்க் கவிகளுக்கு எல்லாம் தலைவராய் -நாலு கவிப் பெருமாள் -என்று திரு நாமம் பெற்று –

ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளான-
ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திருவாய் மொழி -என்கிற நாலு பிரபந்தங்களிலும்
சப்த ரசம் -அர்த்த ரசம் -பாவ ரசம் -என்கிற ரச விசேஷங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு –

விசேஷமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே –
அந்தமில் பேரின்பம் -பெற்றவர் ஆகையாலே -அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக
அனுசந்தித்துக் கொண்டு போரா நிற்க -நல்லடிக் காலத்திலே –

திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமார்களும் திரு மஞ்சனம் கொண்டு அருளி –
செங்கமலக் கழலில்  -ஸ்ரீ பெரியாழ்வார் -1-5-10-படியே நன்றாக ஒப்பித்து நிற்க –

(செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-)

அப்போது ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற பிரபந்தத்தை இட்டருளி –
ப்ரதமம் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செவி சாற்றி அருளும்படி தேவ கானத்தில் ஏறிட்டு அனுசந்தித்து –
திரு உள்ளம் உகக்கும் படி நன்றாக  ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலும் ஏத்தி நிற்க –

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ஆழ்வார் திறத்திலே திரு உள்ளம் குடி புகுந்து –
ஸ்ரீ ஆழ்வீர்-இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே இரா நின்றீர் -நாம் உமக்குக் செய்ய
வேண்டுவது உண்டாகில் சொல்லும் -என்ன

ஸ்ரீ ஆழ்வாரும் நித்ய சம்சாரியாய்ப் போந்த அடியேனை தேவரீர் இப்படி விஷயீ கரித்த பின்பு ஒரு குறை யுண்டோ –
ஆகிலும் ஒரு விண்ணப்பம் யுண்டு -என்ன –
ஸ்ரீ பெருமாளும் -அத்தைச் சொல்லும் -என்ன –

ஸ்ரீ ஆழ்வாரும் -நாயன்தே நாயன்தே -தேவரீர் லோக அநுக்ரஹர்த்தமாகச் செய்து அருளின அர்ச்சாவதார ஸ்தலங்களில்
பிரதானமான இந்த ஸ்தலத்திலே
மார்கழி மாசம் சுக்ல பஷத்தில் ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)அன்று அத்யயன உத்சவம் கொண்டு அருளும் போது-(முன்பே வேதங்களை மட்டும் ஓதும் அத்யயன உத்சவம் நடந்து வந்துள்ளது)
ஸ்ரீ சடகோபன் சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியையும் வேத பாராயணத்தோடு கேட்டருளி
இதுக்கு வேத சாம்யமும் அநுக்ரஹித்து அருள வேணும் -என்ன –

(இதே போல் பின்பும் பாடிய வாளன் படித்துறை –வாளை வீசி கேட்டுப் பெற்ற வ்ருத்தாந்தம்)

ஸ்ரீ பெரிய பெருமாளும் திரு உள்ளம் உகந்து -அப்படியே வேத சாம்யம் அநுக்ரஹித்தோம்-
அத்யயன உத்சவத்தில் வேத பாராயணத்தோடு ஸ்ரீ திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்-என்று
அருளப்பாடு பிரசாதித்து அருளி

ஸ்ரீ கலியன் நம்மை தேவ கானத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது -ஆன பின்பு நாம் இன்று தரித்த
சிஷ்டமான எண்ணெய் காப்பை அவர் திரு மிடற்றிலே தடவுங்கோள் -என்று அருளப்பாடு பிரசாதிக்க
பின்பு ஸ்ரீ பெருமாள் பரிகரமும் அவர் திரு மிடற்றிலே எண்ணெய் காப்பைச் சாத்த –அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்து அருளின பின்பு –

ஸ்ரீ திரு நகரியிலும் ஸ்ரீ ஆழ்வார் அத்யயன உத்சவத்துக்கு
ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கு –
ஸ்ரீ பெரிய பெருமாள்  திரு முகப் பட்டயம் எழுதி சந்நிதிப் பேரர்களையும் ஸ்ரீ திரு நகரிக்கு அனுப்பி வைக்க –

(இப்பொழுதும் திருக் கார்த்திகை உத்சவத்தில் கைத்தலை சேவையால் ஆஸ்தானம் வரை நம்பெருமாள் எழுந்து அருளுகிறார்)

ஸ்ரீ ஆழ்வாரும் திரு முகப் பட்டயத்தை சிரசா வகித்து அத்யயன உத்சவத்துக்கு உதவும்படி ஸ்ரீ கோயில்  ஏற எழுந்து அருளின பின்பு
ஸ்ரீ திரு மங்கை மன்னனும் ஸ்ரீ ஆழ்வாரை எதிர் கொண்டு -திருவடி தொழுது -சந்நிதியிலே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக

ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வாரைக் குளிரக் கடாஷித்து அருளி -தம் திரு உள்ளத்தில் உகப்பாலே – ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று திரு நாமம் சாற்றி –
திருமாலை -ஸ்ரீ சடகோபன் திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை பிரசாதிக்க –

(ஸ்ரீ சடகோபனுக்கே ஸ்ரீ சடகோபன் சாத்தி அருளுகிறார் நம்மாழ்வார்)

ஸ்ரீ திரு மங்கை மன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக -ப்ராத காலத்திலே வேத பாராயணமும் –
ராத்திரி காலத்திலே ஸ்ரீ திருவாய் மொழியும் அநு சந்தானமாக கால விபாகம் பண்ணி
வேதங்களை அநு சந்தித்துச் சாற்றி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தித்துச் சாற்றும் போது
ஸ்ரீ ஆழ்வார் முன்பு ஸ்ரீ திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்த படியை அநு கரித்து
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து

ஸ்ரீ ஆழ்வார் பிரதி சம்வத்சரம் அத்யயன உத்சவத்துக்கு எழுந்து அருளி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தானம் நடக்கும்படி பண்ணுவித்து
திருமாலை  ஸ்ரீ சடகோபன் முதலான வரிசைகள் எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பிரசாதித்து அருளப்பாடும் பிரசாதித்து
அருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க

பின்பு ஸ்ரீ ஆழ்வாரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ திரு நகரி ஏற எழுந்து அருளி -பிரதி சம்வத்சரம் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி –
அத்யயன உத்சவத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு வர 

(அத்யயன உத்சவம் மாசி மாதம் இப்பொழுதும் திருத்தொலைவில்லி மங்கலத்தில் -நம்மாழ்வார் திரும்பிப் போகும் பொழுது நடந்தது)

(கலியுகம் தொடங்கி 398-வருஷம் திரு அவதாரம்-503 வருஷம் தன்னுடைச் சோதி -திருக் குறுங்குக்குடியில்)

(86-திவ்ய தேச மங்களா சாசனம்-47 -இவர் மட்டுமே மங்களா சாசனம்-திருவரசு உள்ளது)

(அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,-ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,-பரந்த விழியும், படிந்த நெற்றியும்,-நெரித்த புருவமும், சுருண்ட குழலும்,-வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,-தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,-

அகன்ற மார்பும், திரண்ட தோளும்,-நெளித்த முதுகும், குவிந்த இடையும்,-அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,-தூக்கிய கருங்கோவையும்,தொங்கலும் தனி மாலையும்,-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்,-சாத்திய திருதண்டையும்,

சதிரான வீரக்கழலும்,-தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,-குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,-வாடினேன் வாடி வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி, மருவளர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே!!!-(மன்னு முடி தொப்பாரம் -திருமங்கை மன்னனுக்கு அசாதாரண திரு அபிஷேகம்)

உரை களித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல், உருக வைத்த மனம் ஒழித்து உலகளந்த நம்பி மேல், குறையை வைத்து, மடல் எடுத்த குறையலாலி திருமணங்கொல்லை தன்னில்,வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,

மறை உரைத்த மந்திரத்தை, மால் உரைக்க அவன் முனே, மதி ஒடுக்கி, மணம் அடக்கி,வாய் புதைத்து ஒன்றலார்,கரை குளித்த வேல் அணைத்து நின்ற இந்த நிலைமை,என் கண்ணை விட்டு அகன்றிடாது

கலியன் ஆன ஆனையே!!! காதும் சொரிமுத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை தாளினையும், தனிற்றிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப்போல, என் ஆணை ஒப்பார் இல்லையே!!!!

வேல் அணைத்த மார்பும், விலங்கு திருவெட்டெழுத்தை மால் உரைக்க, தாழ்த்த வளர்செவியும் தாளினை தண்டையும் வீரக் கழலும், தார்க் கலியன் நன்முகமும் கண்டு களிக்கும் என் கண்.)

(இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.)

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]

ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான் வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின் எட்டெழுத்தும் பெற்ற இடம்.

(ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.)

இப்படி சில காலம் சென்ற பின்பு –
கலி தோஷத்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான திவ்ய பிரபந்தங்கள் லுப்தமாய் –
பஹூ காலம்  அத்யயந அத்யாபநங்கள் இன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வாரும் அத்யயன உத்சவத்துக்கு கோயில் ஏற எழுந்து அருளாமல் இருக்க –

இப்படி சில காலம் சென்றவாறே -ஸ்ரீ மன் நாதமுனிகள்( ஸ்ரீ மன் நாதமுனிகள் திருவவதாரம் 823-ஆனி அனுஷம்) -ஸ்ரீ வேத வியாச பகவான் லோகத்திலே திரோஹிதங்களான
வேதங்களை உத்தரித்தால் போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை உத்தரிப்பதாக திரு உள்ளமாய்
ஸ்ரீ திரு நகரி எழுந்து அருள –

ஸ்ரீ மதுரகவி சம்ப்ரதாயஸ்தரான ஸ்ரீ பராங்குச நம்பி சந்நிதியிலே –
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்கிற ஸ்ரீ ஆழ்வார் விஷயமான திவ்ய பிரபந்தத்தை லபித்து-
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திரு வாய் மொழிக்குப் பண்ணின அநுக்ரஹ அதிசயத்தை கேட்டருளி
மிகவும் திரு உள்ளம் உகந்து -யோக தசையிலே ஸ்ரீ ஆழ்வாரை சாஷாத்கரித்து –

தந் முகமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும் -ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த (23)திவ்ய பிரபந்தங்களையும் லபித்து(பவிஷ்யத் ஆச்சயர்யரான எம்பெருமானார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் கொடுத்து அருளி) -க்ருதார்த்தராய் –
ஸ்வ சிஷ்ய ப்ர சிஷ்ய  முகத்தாலே அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அத்யயந அத்யாபனங்களைப் பண்ணுவித்து –
முன்பு போலே அத்யயன உத்சவத்தில் ஸ்ரீ ஆழ்வார் கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கும்
வேத பாராயணத்தோடு  ஸ்ரீ திருவாய் மொழி  அநு சந்தானம் நடக்கும் படி பண்ணி –

ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திருவாய் மொழிக்கு வேத சாம்யத்தை அநு க்ரஹிக்கையாலே –
வேதங்களுக்கு உபக்ரம உத்சர்ஜந கால நியமம் உண்டானாப் போலே –

த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் – என்று ஓதப்பட்ட திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழிக்கும்
திருக் கார்த்திகை திவ்ய மஹோத் சவத்திலே  உத்சர்ஜன   காலம் என்றும்
மார்கழி மாதத்திலே அத்யயன உத்சவத்திலே உபக்ரம காலம் என்றும்
திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியை திருக் கார்த்திகை உத்சர்ஜனம் பண்ணி –
உபக்ரம காலமான அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் கேட்டருளும்  அளவும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சினால் நினைந்து வாயினால்   மொழியாமல் இருக்கும் படிக்கும்
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிரதி வருஷம் திரு முகப் பட்டயம் பிரசாதிக்கும் படியும்

அன்று திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் தாம் சாத்திக் கொண்ட எண்ணெய் காப்பு
சேஷத்தை ஸ்ரீ திரு மங்கை மன்னன் திரு மிடற்றிலே சாத்துவித்து அவர் தம்மைப் பாடின இளைப்பு  எல்லாம்
தீரும்படிப் பண்ணின கட்டளையை பிரதி சம்வத்சரம் திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே
ஸ்ரீ பெரிய பெருமாள் சாத்திக் களைந்த எண்ணெய்  சேஷத்தை ஸ்ரீ ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான
ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மிடற்றிலே சாத்தி
அந்த சேஷத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்கள் தங்கள் திரு மிடற்றிலே சாத்தும் படிக்கும் –

ருக்காதி பேதேன சதுர் விதமான வேதங்களுக்கு சீஷாதிகளும் இதிஹாச புராணங்களும் அங்க உப அங்கங்களாக இருக்குமா போலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நாலு பிரபந்தங்களும் -நாலு வேத ஸ்தாநே  யாகவும்
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் மற்றை ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த
பிரபந்தங்களும் அங்க உப அங்கங்கள் ஆகவும் –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)-சூரணை-43-)

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது )

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது .)

ஸ்ரீ திருவாய் மொழி தானும் த்வ்யார்த்த விவரணம் என்றும்

ஸ்ரீ திருப் பல்லாண்டு  முதல் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -ஸ்ரீ பெருமாள் திருமொழி –
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் -ஸ்ரீ திருமாலை -ஸ்ரீ திருப் பள்ளி எழிச்சி -ஸ்ரீ அமலனாதி பிரான்
ஆக இப் பிரபந்தங்கள் (ஒன்பதும்)ப்ராயேண பிரணாவர்த்த பிரகாசகம் ஆகையாலே முதல் ஆயிரம் -என்றும் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் சப்தார்த்த விவரணம் -என்றும்

ஸ்ரீ திருமொழி -ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அருளிச் செய்த ஸ்ரீ திருவந்தாதி மூன்றும் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை -ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பெரிய திருமடல் (ஆகிய பதின்மூன்றும்)-ஸ்ரீ மந்திர சேஷ விவரணம்  என்றும்

இதில் இதில் ஸ்ரீ திருவந்தாதி மூன்று முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக சப்த ரச பிரதானமாய் இருக்கையாலே -ஸ்ரீ இயற்பா -என்றும்

இப்படி இருபத்து மூன்று பிரபந்தங்களும் திருமந்த்ரார்த்த விவரணம் என்றும்

இப் பிரபந்தங்களிலே ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவத்துக்கு விஷயமாய்-  ஸ்ரீ எம்பெருமான்
விரும்பி வர்த்திக்கிற ஸ்தலங்கள்- ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருப் பாற் கடல் தொடக்கமான நூற்று எட்டு -என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி ஒழிந்த பிரபந்தங்கள்- ஸ்ரீ திருப் பல்லாண்டு முதலாக ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் அளவாக
அத்யயன உத்சவத்துக்கு முன்பு பத்து நாளாக பெரிய பெருமாள் கேட்டு அருளும்படிக்கும்

ஸ்ரீ திருவந்தாதி முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக அத்யயன உத்சவ அனந்தரம் மற்றை நாள் கேட்டு அருளும் படிக்கும் –

ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் -ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ மத் மதுர கவிகள் ஆகப் பன்னிரண்டு திரு நாமங்களும்
அருளிச் செய்த இருபத்து மூன்று பிரபந்தங்களில் பாட்டு நாலாயிரம் -என்றும் –

பிராமணனுக்கு வேத வேதாந்தங்கள் -இதிஹாச புராணங்கள் அதிகரிக்க வேண்டுமா போலே
பிரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ திவ்ய பிரபந்தங்கள் அதிகரிக்க வேணும் என்றும் –

இதில் ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சி எம்பெருமானை திருப் பள்ளி யுணர்த்து வதாகையாலே –
ப்ராத காலத்தில் நித்யம் அனுசந்தேயம் என்றும்

எப்போதும் பிரபந்த அனுசந்தானத்துக்கு முன்பு மங்களா சாசன பரமான ஸ்ரீ திருப் பல்லாண்டு அனுசந்தேயம் என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தானத்துக்கு பூர்வ  உத்தரங்களிலே ஸ்ரீ ஆழ்வார் விஷயமான
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் என்றும்

இப்படி ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திலே அநேக ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை நியமித்த நியமனம் –

(திருநெடும் தாண்டகம் முதலில்
முதல் நாள் திருப் பல்லாண்டு தொடங்கி 2-9-வரை முதல் நாள்
அடுத்த நாள் 2-10/3-1/அபிநயம் பிடித்து -5-3 வரை
மூன்றாம் நாள் -5-4 சென்னியோங்கு பதிகம் -7 பாசுரம் வியாக்யானம் -பின்பு ஸ்ரீ சடகோபன் அரையர் ஸ்வாமி ஸாதிப்பார் –
திருப்பாவை -நாச்சியார் திருமொழி பாசுரங்கள்
நான்காம் திருநாள் -இரண்டு அரையர் சேவை -நாச்சியார் திருமொழி -பெருமாள் திருமொழி -திருச்சந்த வருத்தம் -கம்ச வதம்
ஐந்தாம் நாள் திருமாலை -6 வரை -ஆராதனம் முடிந்து மீதம் பாசுரங்கள்
ஆறாம் நாள் கண்ணி நுண் சிறுத்தாம்பு-பின்பு திருமொழித் திருநாள் –முதல் 220 பாசுரங்கள்
ஏழாம் திருநாள் -மீண்டும் இரண்டு அரையர் சேவை – திருமொழி சேவை -அம்ருத மதனம் -பண்டை நாள் -திருவரங்கம் பாசுரம் -தெள்ளியீர் -8-2- அபிநயம்
முத்துக்குறி அபிநயம்
தசமி நாச்சியார் திருக்கோலம் -இரண்டு அரையர் சேவை -ராவண வதம் அபிநயம்
11 நாள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் -திருவாய் மொழி திருநாள்
விராஜா நதி மூன்றாம் திருச்சுற்று
ஒவ்வொரு நாளும் 100-பாசுரங்கள் அபிநயமும் உண்டு -ஒவ்வொரு நாளும்
ஏழாம் நாள் கங்குலும் பகலும் -அபிநயம் -பராங்குச நாயகி திருக்கோலம்
திருகைத்தல சேவை நடக்கும் -ஹிரண்யவதம்
எட்டாம் நாள் வேடுபரி -நெடுமாற்க்கு அடிமை அபிநயம்
ஒன்பதாம் நாள் -காலை மாலை கமல மலரிட்டு அபிநயம்
பத்தாம் நாள் -தாள தாமரை அபிநயம் -திருவடி தொழுதல் இறுதி 20 பாசுரம் -நம்மாழ்வாரைத் திரும்பிப் பெறுதல்
அடுத்த நாள் காலையில் தான் தீர்த்தம் ப்ரஸாதம் ஆகும்
பின்பு இயற்பா 21- நாள்)

—————

வைகுண்ட ஏகாதசி
ஆழ்வார் திருவடி தொழுதல்
நம்மாழ்வார் மோட்ச வைபவம்

   பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

     மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

     ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

   அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

அரங்கனின் திருவோலை

     திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

    நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

   நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி
ஆழ்வார் திருவடி தொழுதல்
நம்மாழ்வார் மோட்ச வைபவம்

   பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

     மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

     ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

   அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

அரங்கனின் திருவோலை

     திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

    நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

   நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.

     11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங் களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக் கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திரு முகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, ‘ முனியே..! நான்முகனே..’ என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.

     நம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்!

   அரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப் பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்!

      இராப்பத்தின் நிறை நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு  வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

அரங்கன் ஆழ்வாரைத் திருப்பித் தரும் வைபவம்

      இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.

       இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

       அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே

 என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே

        என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

    நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.
நனி சிறந்த அறிவு பெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகை புகுந்தனரென்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

        இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

       என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது.

     பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.

நம்மாழ்வார் மோட்சம் (திருத்துழாயால் ஆழ்வார் மூடப்படல்)

 சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதீயோ!
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

      என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

நம்மாழ்வாரின் பிறபெயர்கள்

  1. சடகோபன்
  2. மாறன்
  3. காரிமாறன்
  4. பராங்குசன்
  5. வகுளாபரணன்
  6. குருகைப்பிரான்
  7. குருகூர் நம்பி
  8. திருவாய்மொழி பெருமாள்
  9. பெருநல்துறைவன்
  10. குமரி துறைவன்
  11. பவரோக பண்டிதன்
  12. முனி வேந்து
  13. பரப்ரம்ம யோகி
  14. நாவலன் பெருமாள்
  15. ஞான தேசிகன்
  16. ஞான பிரான்
  17. தொண்டர் பிரான்
  18. நாவீரர்
  19. திருநாவீறு உடையபிரான்
  20. உதய பாஸ்கரர்
  21. வகுள பூஷண பாஸ்கரர்
  22. ஞானத் தமிழுக்கு அரசு
  23. ஞானத் தமிழ் கடல்
  24. மெய் ஞானக் கவி
  25. தெய்வ ஞானக் கவி
  26. தெய்வ ஞான செம்மல்
  27. நாவலர் பெருமாள்
  28. பாவலர் தம்பிரான்
  29. வினவாது உணர்ந்த விரகர்
  30. குழந்தை முனி
  31. ஸ்ரீவைணவக் குலபதி
  32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
  33. மணிவல்லி
  34. பெரியன்

16.11.நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்

1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்

ஆழ்வார்களுள் அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.

மற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால்

மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.

இதில்,

பூதத்தாழ்வாரை தலையாகவும்,

பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,

பெரியாழ்வாரை முகமாகவும்,

திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,

குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,

தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும்,

திருமங்கையாழ்வாரை வயிறாகவும்,

மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு இருக்கிறார்.

இதிஹாச புராணங்களில் நம்மாழ்வார் அவதாரம் பற்றிய சிறு குறிப்புகள் :

ப்ரம்மாண்ட புராணம் :  ஸ்ரீமந்நாராயணன் ப்ரம்மாவிடம், இருபத்தெட்டாவது கலியுகத்தில் “சடகோபர்” என்று திருநாமம் கொண்டு, நானே அவதரிக்கப் போகிறேன்; அப்போது, வடமொழி மறைகளைப் (வேதங்கள்) போல, தமிழ் மறைகளை (திவ்யப்ரபந்தங்கள்) வெளியிடுவேன். அத்தமிழ் மறைகளாலே கலியுகத்தில் மக்கள் பெருவாழ்வு வாழ்ந்து முக்தி அடைவார்கள் என்று தெரிவித்தான்.  

இதைப்போல, விஷ்ணு-ரிஷி ஸம்வாதம் (பேசிக்கொள்வது), நாராயண-அகஸ்த்ய ஸம்வாதம் ஆகியவைகளிலும் பெருமான் தான் “சடகோபராக” அவதரிக்கப் போவதை அறிவித்தான்.  மேலும், இதிஹாசத்தில் மேன்மையானதான ஸ்ரீராமாயணம் “தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா” – தெற்கு, திக்கு யாவர்க்கும் புகலிடம், வேதம் தமிழ் செய்யவிருக்கும் முனியாலே என்றும் குறிப்பு உரைத்தது.  

ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தத்தில், கலியுகத்தில் நாராயணனே பரம்பொருள் என்ற உறுதியான பொருளை வெளியிட, தமிழகத்தில் தாம்ரபரணி நதிக்கரையில், நம்மாழ்வாராக அவதரிக்கப் போகிறார் என்று குறிப்பு உரைத்தது.  

விருத்தபாத்ம புராணம், கலியுக ஆரம்பத்தில், வைகாசி விசாக நக்ஷரத்தில் விஷ்ணு பக்தியை நிலைநிறுத்தும் வகையில், சேனை முதலியாருடைய (விஸ்வக்சேனர்) அம்சமான ஒருவர் அவதரிக்கப் போகிறார் என்று உரைத்தது.  

மார்க்கண்டேய புராணம் நான்கு வேதங்களின் அம்சமாக (சாரமாக) நான்கு திவ்யப்ரபந்தங்களை  அருள சடகோப முனிவர் தோன்றப் போகிறார் என்றும், ஸாம வேதத்தின் ஆயிரம்  சாகைகளைத் தமிழ்ப்பாசுரம் வடிவமாக (திருவாய்மொழி) அருளிச்செய்யப் போகிறார் என்றும் உரைத்தது.  

யஜுர் வேதம் : யஜுர் வேதம் ப்ராஹ்மணத்தில, காடகமென்ற பகுதியில், “பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்பிர் ப்ரஹமசர்யமுவாஸ” என்ற ஒரு உபாக்யானம் உள்ளது.  அதில், பரத்வாஜ மஹரிஷி அனைத்து வேதங்களையும் குறைவின்றிக் கற்க விரும்பி, அதற்குத் தேவையான ஆயுளைப் பெற இந்திரனிடம் யாசித்துப் பெற்றார்.  இந்திரன், முன்னூறு ஆண்டு கழிந்து தளர்ந்த சரீரத்தை உடைய முனிவரை மறுபடியும் கண்டு,  ஒரு நூறு ஆண்டு வாழும் ஆயுளைத் தந்தால் என்ன செய்வீர்? என்றான்.  முனிவர் அதற்கு, மற்ற வேதங்களை அறிந்துகொள்ள முயல்வேன் என்றார்.  உடனே இந்திரன், வேதங்களுக்கு அளவே இல்லை. .அவை அனைத்தையும் ஒருவன் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள முடியாது என்றான்.  இதனால் மிகவும் வருத்தம் கொண்டார் பரத்வாஜர்.  இந்திரன் அவரைத் தேற்றி, “முனிவரே! கவலை வேண்டாம்; திருவாய்மொழியாகிய ஸாவித்ர வித்யையை உபதேசிக்கிறேன் என்று சொல்லி, அதன்படி உபதேசித்து, வேதங்கள் அனைத்திலும் உள்ளதை இதன்மூலமாக அறியலாம் என்றான்.  

ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்தார் என்பதனை, “அருளினான் அவ்வருமறையின் பொருள்” (அருமறை : நான்கு வேதங்களின் அர்த்தங்களை, தனது திருவாய்மொழி என்னும் திவ்யப் பிரபந்தத்தின் மூலம் பாடியவர்) என்று நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக் கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரும், “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று ஸ்ரீமந் நாதமுனிகளும், நம்முடைய “முதல் குலபதி” என்று ஸ்ரீ ஆளவந்தாரும், “சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன்” என்று மணவாள மாமுனிகளும், “வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே” என்று அப்பிள்ளையும் கொண்டாடியுள்ளனர்.  “எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வந்த சடகோபர்” (இராமாநுச நூற்றந்தாதி, 18)  என்று திருவரங்கத்தமுதனார் என்னும் வைணவ ஆசார்யர் பாடியுள்ளார்.  அதாவது, “அணுகுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் கடினமான வடமொழி வேதங்களை, இனிய தமிழ்மொழிகொண்டு திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களால் அறிவிக்க வந்தவர் என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார்.  

மாறன் பணித்த தமிழ் மறை” என்று மணவாள மாமுனிகள் என்னும் வைணவ ஆசார்யர், “நம்மாழ்வார்” அருளிய திவ்யப் பிரபந்தங்களைப்  போற்றுகிறார்.  “மாறன்” என்பது நம்மாழ்வாரின் இன்னொரு திருநாமம் (பெயர்). “வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே” என்பது இவ்வாழ்வாருக்கு அமைந்துள்ள பல்லாண்டு  (புகழ் பாடும் துதி) ஆகும்

திருவிருத்தம்” (100 பாசுரங்கள்) – “ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே” …”ருக் வேத சாரம்”.

திருவாசிரியம்” (ஏழு பாசுரங்கள்) – “ஆசிரியம் ஏழு பாட்டு அளித்த பிரான் வாழியே” ….”யஜுர்வேத சாரம்”.

ஆசிரியப் பாக்களால் அமைந்ததால், யாப்பின் அடிப்படையில் “திருவாசிரியம்” என்று பெயர் பெற்றது.  பக்தி இலக்கியங்களில் ஆசிரிய யாப்பினால் பாடப்பெற்று, பாடப்பெற்ற யாப்பினாலேயே பெயர் பெற்ற முதல் நூல் “திருவாசிரியம்” ஆகும்.   இது ஒன்பது முதல் பதினாறு அடி வரையுள்ள ஆசிரியப்பாக்களால் ஆனது.  அந்தாதி அமைப்புடையது.   வடமொழி மறைகளில் (வேதங்கள்) யஜுர் வேதம் மிகப்பெரியது ஆகும்.  இது ஏழு காண்டங்களைக் கொண்டது.  அவற்றின் சாரத்தை இவ்வாழ்வார் ஏழு ஆசிரியப் பாக்களில் அருளிச்செய்துள்ளார்.  பிரபந்தம் சிறிய அளவில் இருந்தாலும், பொருளில் (அர்த்த விஷயங்கள்) மிகப்பெரியது.  சொற் சுவையும், பொருட் சுவையும், பக்திச் சுவையும் நிறைந்த சிறந்த பிரபந்தமாகும் இது.  யஜுர் வேத மந்திரங்கள் வசன (உரை) நடையில் அமைந்தவை.  அதை ஒட்டி, இப்பிரபந்தமும் அப்படியே அமைந்துள்ளது.  யாகத்தின் நடைமுறையை விவரிப்பது யஜுர் வேதம்; யாகத்தினால் ஆராதிக்கப்படும் எம்பெருமானை அனுபவிப்பது திருவாசிரியம்.  

பெரிய திருவந்தாதி” – “ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே” 

 இப்பிரபந்தத்தின் பொருள் (அர்த்த விஷயங்கள்) சிறப்பினைக் கருதி இது பெரிய திருவந்தாதி என்று பெயர் பெற்றது.  பெருமை பொருந்திய அந்தாதி என்பதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது.  மேலும், இதில் ஆழ்வார் பெருமானை நோக்கி, “யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?” –  அதாவது பெருமானே! நீ பெரியவன்; உன்னைப் பாடுவதால் நானும் பெரியவன் என்பதனை யார் அறிவார்   என்று அருளிச் செய்துள்ளதால் இது பெரிய திருவந்தாதி என்று போற்றப்படுகிறது.  மேலும் ஆழ்வார்களில் தலைவராக இருப்பவர் நம்மாழ்வார்; ஆக அவரைப் பெரியவர் என்று கொண்டு, அவர் பாடிய இந்த அந்தாதிப் பிரபந்தத்தை பெரிய திருவந்தாதி என்று அழைத்தனர் என்றும் கூறுவர்.

இலகுதிருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே”

 மற்ற ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பெற்ற திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவ்வாழ்வாரே அருளிச்செய்த முதல் மூன்று திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவரால் பாடப்பெற்ற “திருவாய்மொழி”  என்னும் பிரபந்தம்தான் மிகவும் முக்கியமானது.  கண்ணபிரான் கீதையில் “ச்ருதிஸ்ம்ருதிர்  மமைவாஞ்ஞா” என்கிறார் – அதனால் வேதம் ஆணை (ஸத்யம்) என்பதும் மாறுபாடு இல்லாதது என்றும் பெருமைபெறுகிறது.  அதைப்போலவே, 1102 பாடல்களைக் கொண்ட திருவாய்மொழியும் “ஆணை ஆயிரம், ஏதமில் ஆயிரம், பொய்யில் பாடல், முந்தை ஆயிரம், அழிவில்லா ஆயிரம்” என்றபடி மேம்பாடு உடையது.  அநாதியான (மிகவும் பழமையான) வேதங்களை நாராயணன் நான்முகனுக்கு ஓதி வெளியிட்டான்  அதுபோலவே, நித்தியமான தமிழ் வேதமான திருவாய்மொழியை பகவான் ஆழ்வாருக்கு ஓதினான்.  ஆதலால் இதனை ஆழ்வார் அருளினார் என்கிறோம்.  ருக்வேதம் ஸ்வர விவரணமாய் கானரூபமான ஸாமவேதமாயிற்று.  அது போலவே ரிக்வேத சாரமான திருவிருத்தம் இசையோடு கூடிப்பரவி, திருவாய்மொழி (சாமவேத சாரம்) ஆயிற்று.  திருவாய்மொழியின் ஒவ்வொரு பதங்களும் திருமால் பெருமையையே பேசுகிறது.  

 ஆழ்வார் எம்பெருமானை ஞானக்கண்ணால் கண்டுகளித்தார்.  அக்களிப்பினால் சொல்மாலைகள் பாடினார்.  ஒவ்வொரு பாசுரமும் இறைவனுக்கு அணிவித்த மாலை என்று கொள்ளுதலே பொருத்தமாகும்.  “அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்” என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார் மதுரகவிகள்.  அதாவது, உலகோர் அனைவரும் எம்பெருமானையே உபாயமாகப் பற்றி உய்யவேண்டும் என்று பேராவல் கொண்டு 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியை அருளிச்செய்தார் நம்மாழ்வார் என்று பொருள்.  

“என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கிருந்து தமிழ்நூல் இவை மொழிந்து” என்றும், “பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி”  என்றும் பாடி, பகவானே தம் உள்ளத்திலிருந்து பாடல்களைப் பாடுகிறான் என்பது ஆழ்வாரது கூற்று (கருத்து).  

 பகவானது திருவருளால் ஆழ்வார் தாம் பெற்ற நலத்தை ஒவ்வொரு பதிகத்திலும் விளக்குகிறார்.  “பதிகம்” என்றால், பத்து பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.  இதைப்போல ஒரு நூறு (100) பதிகங்களைக் கொண்டது “திருவாய்மொழி”ப் பிரபந்தம்.  ஒவ்வொரு பதிகமும் பகவானின் விசேஷ குணங்களை அனுபவிப்பதாக இருக்கும்.  முதலில் இவர் மதிநலம் (தெளிந்த ஞானம்) பெற்றார்.  பகவானது அருளால் தாம் கண்ட தத்வத்தை (உண்மையை) மறவாமை நேர்ந்தது; இந்த ஞானத்தின் விளைவாக இவர் தேறியது; தாம் பெரும் மோக்ஷம் பெருமானது அருளாலேயே – அவனது கருணையாலேயே என்பதை உறுதிசெய்து பாடியுள்ளார் ஆழ்வார்.  பகவானுக்கு எல்லா காலத்திலும் எல்லா நிலைகளிலும், எவ்வகைகளிலும் அடிமை செய்வது தமது பேறென்று விரும்பினார்.   தாம் கோரும் (விண்ணப்பிக்கும்) அடிமைக்கு விரோதமான பிறவியை இவர் கடிந்தார் (வெறுத்தார்).  பின்பு பகவானை அனுபவிப்பதற்குப் பெரியதோர் காதல் கொண்டார்  இவனது திருவடிகளில் பணிந்து இவனே உபாயம் (வழி) என்று துணிந்திருந்தார்.  

 நம்மாழ்வார் “வேதம் தமிழ்செய்த மாறன்” என்று மணவாள மாமுனிகளால் போற்றப்படுகிறார்.  அவர் அருளிச்செய்துள்ள திருவாய்மொழியானது “தமிழ்வேதம்” என்றும் போற்றப்படுகிறது.  இந்த வேதஸமான (வேதத்திற்கு சமமான) திருவாய்மொழி அவ்வேதத்தை வெளியிட்டது எவ்வாறு என்றால், 

 “ஸத்யம் ஞானம் அநந்தம் பிரம்ம” என்கிற வாக்கியத்தை “உணர்முழுநலம்” என்றும், “பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் சாச்வதம் சிவமச்சுதம் நாராயணம்” என்கிற வாக்கியத்தை “நாரணன் முழு ஏழுலகுக்கும் நாதன்” என்றும், “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன்” என்றும், “சக்ஷூர் தேவநாம் உதமர்த்யாதாம்” என்கிற வாக்கியத்தை “கண்ணானாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” என்றும், “ஹ்ரீச்சதே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ” என்கிற வாக்கியத்தை “தேவிமாராவார் திருமகள் பூமி” என்றும் தம்முடைய செஞ்சொற்களாலே வேதத்தை தமிழ்படுத்தி அருளினார் நம்மாழ்வார்.  

 திருவாய்மொழியின் பயன்:   எம்பெருமானார் (இராமாநுசர்) இவ்வுலகோருக்கு உபதேசம் செய்தவைகளுள் “மிகச்சிறந்த செல்வமும், தந்தையும், தாயும் குருவும் தெய்வமும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியே ஆகும்” என்பதே சிறப்புடையதாய் இருக்கிறது.  மாறனின் செந்தமிழ் ஆரணம் பெருமையுடையது.  பரபக்தி, பரஞ்ஞானம், பரமபக்தி முதலான நல்லியல்புகள் உடையது திருவாய்மொழி.  மோக்ஷத்தை அடையும் வழியைக் காட்டுவது இது.  திருவாய்மொழியை ஒதுபவரை தவறாது காக்கும் தன்மையுடையது திருவாய்மொழி.  இதனை நன்கு உணர்ந்து கற்பவர் வைணவர் ஆவார். 

மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

மாறன் சடகோபனின் தந்தை காரி மாறன். இவர் பாண்டியர் ஆட்சியில் சிற்றரசராக திருக்குருகூர் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்தவர். அதனால் பாண்டியர்களின்
“மாறன்” எனும் அடைமொழியோடு வாழ்ந்தார். ஆழ்வாரும் தம் தமிழருவிப் பாசுரங்களில் சில பாசுரங்களில் தன்னை  சடகோபன் மாறன் என்றே கூறிக்கொள்கிறார்.
(திருவாய்மொழி2-6-11, 4-5-10, 4-7-11, 4-10-10, 5-2-11,)

————

வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப் புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே”–என்றார் கம்பர்.

———–

”சேமம் குருகையோ? செய்ய திருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம் துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ? உளவோ பெருமான் உனக்கு“.

———-

பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்

தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்

காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்

பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”–நம்மாழ்வாரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி

ஸ்ரீ மணவாளமாமுனிகளும், நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து, “உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள், உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? உண்டோ,திருவாய்மொழிக்கொப்பு ? தென்குருகைக்குண்டோ ஒருபார் தனிலொக்குமூர்?” என்று நம்மாழ்வார் பிறந்த நட்சத்திர தினமான வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும், அவர் கொடுத்த திருவாய்மொழியையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார்.

-------------------------------

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading