ஸ்ரீ -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

ஸ்ரீ திருவல்லிக்கேணி -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

பகல் பத்து முதல் நாள்–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருக்கோலம்
ஸ்ரீ பார்த்தா சாரதி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மஹா மண்டலத்தில் திரு ஓலக்கம் -1-45-pm திரு ஆராதனம் -தளிகை -அருளப்பாடு -2-11 pm
சேவை தொடக்கம்-திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திரு மொழி –2-25 pm தொடங்கி -4-20-pm வரை 2 பதிகம் –
சாற்று முறை -தீர்த்த்ம் சடகோப விநியோகம்
உள் புறப்பாடு -6 pm மணிக்கு தொடங்கி -வரதர் சந்நிதி திருமழிசை ஆழ்வார் சந்நிதி ஆனால் சந்நிதி -6-45-pm
ஆளவந்தார் சந்நிதி -7-25-pm
ஒய்யாளி -பின்பு 8-00 pm -மணிக்கு

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு-அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே
இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே –நம்பி என்கிறது-என்னுடைய உஜ்வலமான நாமம் இந்த லோகத்தில் எவ்வளவு செல்லும்
அவ்வளவும் உனக்கு ராஜ்ஜியம் நடக்க கடவது என்று அருளி செய்த
ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ
–81-என்கிறபடியே அவ் அவதார குணம் எல்லாம் இங்கே பிரகாசிக்கும்படி திருமலைக்கு- நிர்வாஹகனாய் இருக்கிறவனுக்கு –

பகல் பத்து -2 நாள் ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம்

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க 
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது 
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப 
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே -3-6-8 – –

சிறு விரல்கள் தடவி பரிமாற –
கரும் சிறுக்கன் -என்ற பருவத்துக்கு தகுதியாம்படி சிறுத்து இருந்துள்ள திரு விரல்கள் ஆனவை –
திருக் குழலின் துளைகளில் புதைக்க வேண்டுவது –
புதைத்து திறக்க வேண்டுவது –
திறக்கைகாக குழலின் துளைகளை தடவிக் கொண்டு வ்யாபரிக்க

செம் கண் கோட –
இட வணரை இடத் தோளோடே சாய்த்து துளை தோறும் கண்ணோட நின்று ஊதுகையாலே 
சிவந்து இருந்த திருக் கண்கள் ஆனவை வக்கரிக்க 

செய்ய வாய் கொப்பளிக்க –
வாய் கடை கூட -என்கிறபடியே
இரண்டு கடை வாயையும் குவித்து ஊதுகிற போது –
சிவந்த திருப் பவளமானது அக வாயில் உண்டான வாயுவினுடைய பூரிப்பாலே குமிழ்க்க 

குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப-
உலாவி உலாவி குழலூதுகிற ஆயாசம் பொறாமல் ஸௌ குமார்யத்தாலே 
குறு வெயர்ப்பு அரும்பின-பரம்பின – திருப் புருவமானது மேலே கிளர்ந்து வளைய 

கோவிந்தன் குழல் கொடூதின போது –
கோ ரஷணத்திலே தீஷிதனாய் –
அவற்றை மேய்த்துக் கொண்டு திரியுமவன் –
அவன் மேய்ந்து வயிறு நிறைந்த ஹர்ஷத்தால் –
சர்வ ஜந்து ஜாத மநோஹரமான  திருக் குழலைக் கொண்டு ஊதின போது 

பறைவையின் கணங்கள்
பஷிகளினுடைய திரள்கள் 

கூடு துறந்து –
தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு  

வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப –
குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு –
வெட்டி விழுந்த  காடு போலே பரவசமாய் கிடக்க 

கறைவையின் கணங்கள்-
பசுக்களினுடைய திரள்கள் ஆனவை 

கால் பரப்பி இட்டுக் –
பாரவச்யத்தாலே கால்களை பரப்பி 

கவிழ்ந்து இறங்கி –
தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு 

செவி ஆட்டகில்லாவே –
செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று 
செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன — 

பெரியாழ்வார் திரு மொழி சாற்று முறை -உள் புறப்பாடு

————————————-

பகல் பத்து -3 நாள் ஸ்ரீ காளிங்க நர்த்தன திருக்கோலம்

திருப்பாவை -நாச்சியார் திரு மொழி -ஸேவை9 பத்து வரை

மகுடியும் வாசிப்பார்கள் புறப்பாட்டின் முடிவில்-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
 -12-7-

பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

நீள் கடம்பு –
இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

புகப் பாய்ந்த –
கால் ஆழக் குதிக்க

வாய்த்த காளியன்
தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

மேல் நடமாடிய-
ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

கூத்தனார் வரில் –
ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

கூடிடு கூடலே-
உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

—————————

பகல் பத்து -4 நாள் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலம்

பெருமாள் திருமொழி ஸேவை-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

———

பகல் பத்து -5 நாள் ஸ்ரீ ஏணிக் கண்ணன் திருக்கோலம்

முதல் ஆயிரம் சாற்று முறை ஸேவை

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து

எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –

இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
பூத்து நின்றது ஆய்த்து –

இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
சொல்லிற்று –

மா பிளந்த –
ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்

கைத்தலத்த கண்ணன் என்பரால் –
ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்

ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –

பேய்ச்சி பாலை உண்டு –
தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
அவ்வழியாலே அவளை முடித்து –

யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
பின் மண்ணை உண்டு –
க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்

பண்டு ஓர் ஏனமாய வாமனா —
கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –

1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

——————————————————

பகல் பத்து -6 நாள் ஸ்ரீ பரம பத நாதன் திருக்கோலம்
இன்று தொடங்கி மூலவர் தர்சனம் -மீசை இல்லாமல் ஐந்து நாள்களுக்கு ஸேவை

பெரிய திரு மொழி தொடக்கம்
ஸ்தல பாசுரம் -சேவை பொழுது மூலவர் ஹார்த்தி -ஐந்து நாள்களுக்கு மீசை இல்லாமல் சேவை

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
-2-3-1-

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

வியாக்யானம் –

அடுத்து –
மேல் விழுந்து கிட்டி

ஆர்த்து எழுந்தாள் –
ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு –
கிளர்ந்து வந்து தோற்றினவள் –

பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை
(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்
கூர்மை கூரிய
திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்

விளங்கு இத்யாதி
கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி
நித்ய சூரிகள் கார்யத்தை நிர்வஹித்து கொண்டு போகிறவன்-

நண்ணார் -இத்யாதி –
சத்ருக்கள் முன்பே
இந்த்ரனுடைய அபிசந்தி பூர்வகமாக வருகிறது ஆகையாலே
(நண்ணார்-எதிர்த்து வந்த இந்திரனும் -அவனுக்கு எதிரிகளான கோப கோபிமார்கள் -)
பெரிய வேகத்தோடு கோஷித்துக் கொண்டு தோற்றின
மஹா வர்ஷத்தை கோவர்த்தன கிரியைத் தரித்து
பண்ணின உபகாரத்தையும் அறியாதே
ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத (அநந்யார்ஹ -ஆகிஞ்சன்யம்)பசுக்களை
நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று

தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –

—————

————–

பகல் பத்து -7 நாள் ஸ்ரீ பகாசூர வத திருக்கோலம்

பெரிய திரு மொழி -3 பத்தும் 4 பத்தும் ஸேவை

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

—————

பகல் பத்து -8 நாள் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக திருக்கோலம்

பெரிய திருமொழி -5-6-7 ஸேவை

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

இரக்கம் முதல் படி -அருள் அடுத்து – இன்னருள் அடுத்து -இத்தை உபபாதிக்கிறது மேல் –
இங்கு ஒழி-பிரிவு இருந்தால் தானே சேர்க்கையில் சுகம் உண்டு இங்கேயே நில்
சொற்கள் வந்து-கர்ணா கர்ணிகையாய் வந்து

ஏழை –
அஞ்ஞன்
ஏழை என்ன அஞ்ஞன் என்று காட்டுமோ என்னில் -சபலன் என்ற படி –
விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே –
அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் –
என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –
யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் –
விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞா -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
(மற்ற வேறே பெண்ணை ஏர் எடுத்துக் பார்க்காத யசஸ்ஸூ )
இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –

(விஷய சாபல்ய ஹேதுவான அஞ்ஞானம்
அபோக்யங்களில் போக்யதா புத்தி பண்ணுவது –
கீழ் இரண்டையும் -அவாந்தர பேதங்களைச் சொன்னது இதன் குரூரம் அறிவதற்காக
விஷய ப்ராவண்யமாக பரிணமிக்கும் விபரீத ஞானம் -)

ஏதலன் –
சத்ரு
தாயைச் சோறு வேண்டும் போது
வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –
ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி
(யுத்த காண்ட ஸ்லோகம் -கருட இறக்கையால் நாக பாசம் –
விரோதிகள் இடம் வாத்சல்யம் -குகன் தாய் இடம் விரோதி )
மர்யாதா நாஞ்ச-என்கிறவர்க்கு   எதிர் தட்டாம்படி
மர்யாதா பங்கம் பண்ணி இறே இருப்பது
இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது-
(ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -அனுஷ்டானத்தைச் சொன்னவாறு )

கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்
கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்
பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே –
இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே
இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி –
இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –

இம் மூன்றாலுமாக
பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து –

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி-
இவை ஒன்றும் பாராதே யாய்த்து இரங்கிற்று –
ருஷீணாம் அக்னி கல்பா நாம் -என்று
ஜன்ம வித்யா வ்ருத்யங்களை உடையராய் இருக்கும்
உபாசகரான ருஷிகளுக்கும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும் இளைய பெருமாளுக்கும்
சாதன சித்த்யர்த்தமாகவும்
போக சித்யர்த்தமாகவும்
இரங்கும் இரக்கத்தை இறே
இவர் அளவில் இரங்கிற்று –
(சாதனா நிஷ்டர்களுக்கும் கைங்கர்யமே பிரார்த்திக்கும் இளைய பெருமாளுக்கும்
இவர் இரக்கமே உபாயம் )

அதவா
என்னாது இரங்கி –
இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –
ந தர்ம நிஷ்டோஸ்மி-ந ஆத்மவேதி –
அமர்யாதா-
(நல்லவை இல்லை தீயவை சகலமும் உண்டு என்பதுக்கு இரண்டு பிரமாணங்கள் ஸ்தோத்ர ரத்னம் )
ராவணே நாம -இத்யாதிகளில்
சரணம் புகுவார் ஸ்வ நிகர்ஷத்தை  முன்னிட்டு
கொள்ளக் கடவர்கள் என்னா நின்றது இறே –

ஸ்ரீ குகப் பெருமாள் சொல்லக் கடவ பாசுரத்தை
இவர் சொல்லுவான் என் என்னில்
அவருடைய கருத்தாலே-

மற்று அவர்க்கு –
அவனுக்கு அதுக்கு மேலே –

இன்னருள் சுரந்து –
இவ் விஷயீ காரத்துக்கு மேலே
இனிய அருளைச் சுரந்து
இன்னருள் –
தன் பேறான அருள்

சுரந்து –
வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை
சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –

இத்தை உபபாதிக்கிறது மேல் –
மாழை மான் மட நோக்கி-
நிகர்ஷம் சொன்னால்
பிரதமத்தில் முன்னிடக் கடவ
அர்த்தத்தைச் சொல்லுகிறது –
முக்த்தமான மானின்  உடைய மிருதுவான நோக்குப் போலே
உள்ள நோக்கை உடையவள் –
இத்தால் சம்பந்தம் இருவரோடும் ஒத்து இருக்கச் செய்தே
இவளுடைய கடாஷத்தின் உடைய முற்பாடு சொல்லுகிறது –
இவனைப் பாரா அவனைப் பார்க்கும் –
ப்ரேஷிதாஜ்ஞாச்து கோசலா இறே –
பிரணயினி பிரணயிகளுக்கு வாயால் சொல்லுவது இல்லை இறே –
(உள்ளே ஓடும் எண்ணத்தை அறிபவர் கோசல தேசத்தார்
அதுக்கும் மேலே அபிமத அநுரூப பிரணயி )
இத்தனை குறைவாளனை  விஷயீ கரியாது ஒழிகிறது என் –
என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால்
இவள் வழியே போவான் ஒருவன் இறே –

யுன் தோழி –
உனக்கு ஸ்வாமிநி- என்னாதே
தோழி என்கிறார் -நீர்மையாலே
சீரியார் சேஷ பூதரையும் -அண்ணா ஆச்சி -என்னா நிற்பார்கள் இறே
இவர்கள் தான் இங்கன் அல்லது சொல்லா நிற்க மாட்டார்கள்
மித்ர பாவேன-
(சர்வ லோக சரண்யனாக வந்தவனை -நண்பனாகக் கொண்டு )
மித்ர மௌபயிகம்-
தேன மைத்ரீ பவதுதே –
(காலைப் பிடிக்கவும் யோக்யதை இல்லா ராவணனுக்கு உபதேசம் நட்பு கொள்வாய்
உன் குடி இருப்பு நிலைக்க -சரணாகத வத்சலன் என்று சொல்லியும் )

இவ் வார்த்தை போழ்க்கனாய் இருக்கை
(உபசார வார்த்தையாக கபடமாக இல்லாமல்
பிராப்தி சமயத்தில் நிரஞ்சனம்- சாம்யா பத்தி-ஸாதர்மம் ஆகதா
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
குண சாம்யத்தையும்
போக சாம்யத்தையும்
தேக சாம்யத்தையும்
போக்ய சாம்யத்தையும்
கொடுத்து இறே வைப்பது –

உம்பி யெம்பி –
உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –
இங்கனே சொல்லுவான் என் என்னில்
பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை
அவரோபாதியாக நினைத்து இருக்கும்
இளைய பெருமாள் கருத்தாலே

பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் சச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட வருளினாய் -என்றும்
சொல்லுகிறபடியே
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -என்று
சம்சாரத்தில் நின்றும் ஒருவன் முக்தனாய்ச் சென்றால்
ஸ்ரீ பாதம் விளக்கி ஸூரிகள் ஆதரிக்கக் கடவர்கள்
என்னா நின்றது இறே
அவர்களிலே பிறி கதிர் பட்டு  போந்தவர் இறே இளைய பெருமாள்

இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் பண்ணிக் கொடுத்த படி-
தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
சொல்லக்  கடவது இறே  –
(பாகவத அபிமானம் பெற்றுக் கொடுப்பதே சேமம் விமலத்வம் )

என்று ஒழிந்திலை-
அவ்வளவிலே விட்டிலை
பிராட்டியை தோழி என்றும்
இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே
ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –

உகந்து –
உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்
உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே
(உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )

தோழன் நீ எனக்கு –
ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி
புருஷகாரத்தை முன்னிட்டு
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
அநந்தரம்
உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே
அத்தைச் சொல்லுகிறது –
(நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

இங்கு ஒழி –
பின்பு தொடர்ந்து போகப் புக்கால் காணும் இவரும் ( கலியனும் )-
படை வீடு கெடாமைக்கு ஒருவனை வைத்தோம்-
வழி யடி கெடாத படி   இங்கே இரும்-
ஸ்வ இச்சா அனுரூபமாக வன்றியிலே
க்ரியதாம் இதி – யிலே அங்கும் உள்ளது-
(சிஷ்யச்ச தசஸ் ச என்று சொல்லி பரதாழ்வான் -வருவான் அவனுக்கு வழி காட்ட வேண்டுமே
இதுவும் பாகவதருக்கு சேஷமாக்குதல்
தான் ஆசைப்பட்ட -இஷ்ட விநியோக அர்ஹனாக்கி )

என்ற சொற்கள் –
அவ் வர்த்தங்கள் அன்றிக்கே
அப் பாசுரம் காணும் இவரை வருத்துகிறது

வந்து –
ஒரு கால விசேஷத்திலேயாய் இருக்க
கர்ண பரம்பரையாக வந்து
இவர் நெஞ்சிலே யாய்த்து ஊற்றி இருந்தது
இப் பாசுரம் தன்னை
குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –
( வேதம் தமிழ் செய்த பரகாலன் )

அடியேன் மனத்து இருந்திட-
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி -என்னுமா   போலே
இவர் நெஞ்சிலே யாய்த்து வேர் விழுந்தது
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம்
சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடைக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –

(சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி பிரியாணி மதுரானி அம்ருதாணி பரதன் பேச்சைப் பற்றி பெருமாள் –
எப்பொழுது நான் சேருவேனோ என்று எல்லாம் பிதற்றி
சேஷன் வார்த்தை சேஷி திரு உள்ளத்தில் அது
இங்கு ஒழி -பரதன் கைங்கர்யத்துக்காக சொன்னது போல் எனக்கும் கொடுத்து அருள வேணும் )

ஆழி வண்ண –
ரத்னங்களால் கடல் நிரம்பி இருக்குமா போலே
ஆஸ்ரயநீயத்துக்கு ஏகாந்தமான  குணங்களால் நிரம்பின கடல் –
அபார காருண்யா -இத்யாதி
யதா ரத் நாநி ஜலதேர சந்க்க்யே யானி புத்ரக
ததா குணாஹ்ய நந்தச்ய
அஸங்யேய மகாத்மான
உத்பத்தியும் அங்கேயுமாய்
வாசமும் அங்கேயுமாய்
புறம்பு ஓர் இடத்தில் அன்றிக்கே
எல்லாரும் ஆதரிக்கும்படி ரத்னங்கள்
இருக்குமாப் போலே யாய்த்து குணங்கள் இருக்கும்படி

அதவா
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே
வடிவைக் கண்ட போதே
சாம்சாரிகமான தாபங்கள் உடைய ஆறும்படி யாய்த்து இருப்பது –

நின்னடி இணை  –
அனந்தரத்தில் சரணவ் என்கிற பதத்தை நினைக்கிறது –
(பூர்வ வாக்ய அர்த்தமே இப்பாசுரம் -ஆழி வண்ண நாராயண -)

அடைந்தேன்
பிரபத்யே வர்த்தமான கிரியா பதம் அமுக்கியம் இவருக்கு

அணி பொழில் திருவரங்கத் தம்மானே
ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது

அணி -என்று
பொழிலுக்கு விசேஷணமுமாய்
கோயிலுக்கும் விசேஷணுமுமாய்  இருக்கிறது
அதாகிறது
சம்சாரத்துக்கு ஆபரணம் போலே இருக்கை
சோலை வாய்ப்புக் கண்டு சாய்ந்தால் போலே இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் தேட்டமாய் அன்றோ இங்கு சாய்ந்து அருளிற்று

அம்மானே -உடையவன் ஆகையாலே
உடைமை தேட்டமாய் அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –

——————

பகல் பத்து -9 நாள் ஸ்ரீ முரளி கண்ணன் திருக்கோலம்

பகல் பத்து -10 நாள்-சாற்றுமுறை – ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்

இராப்பத்து -2 நாள் வேணுகோபாலன் திருக்கோலம்
5 நாள் ரத்னாங்கி ஸேவை
6 நாள் திருவேங்கடமுடையான் திருக்கோலம்
7 நாள் -முத்தங்கி ஸேவை
8 நாள் -ராஜ மன்னார் ஸேவை
9 நாள் -கோவர்த்தன கிரி திருக்கோலம்

—————————

பகல் பத்து முதல் திரு நாள்
நம் பெருமாள் பீதாம்பரம் -மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து அருளி
ரத்ன பாண்டியன் கொண்டை சாற்றி அருளி
திரு நெற்றிப் பூ சாற்றி
ஸேவை சாதித்து அருளுகிறார்

அரங்கன்
வைகுண்ட ஏகாதசி உற்சவம் : பகல் பத்து 3ஆம் நாள் நாச்சியார் திருமொழிக்காக
நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து
அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம்
பின்புறம்
அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார்


நீராட்டு உத்சவம் –
பகல் பத்தில் நான்கு நாள்கள்
காலை பெரிய வீதிப்புறப்பாடு 8-20 தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து நீராட்டு மண்டபம் வந்து சேர்க்கிறாள்
பின்பும் போர்வைகள் களைதல்-உபசாரம் -நலுங்கு -நீராட்டம்
பின்பும் குளக்கரை புற்ப்பாடு
மாலை மாத்துதல்
பெரியாழ்வார் விருந்து முதல் நாள் -நம்மாழ்வார் விருந்து அடுத்த நாள் -ஆளவந்தார் விருந்து அடுத்த நாள்

அடுத்து உடையவர் விருந்து -அடுத்து பேயாழ்வார் விருந்து –பூதத்தாழ்வார் விருந்து –

————

ஸ்ரீ ஆண்டாள் -நாச்சியார் திருக் கோயிலே திரு அத்யயன உத்ஸவம்
பகல் பத்து முதல் நாள்
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் மூல ஸ்தானத்தில் -கோபால விலாஸத்தில் -இருந்து பகல் பத்து மண்டபத்துக்கு மாலை புறப்பாடு
ஸ்ரீ வேதாப்பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாஷித்து கோபால விலாஸம் சேர்தல்
விண்ணப்பம் செய் கோஷ்ட்டி
ஸ்ரீ பெரிய பெருமாள் கருட வாகனம் -ஸ்ரீ பெரியாழ்வார் யானை வாகனம் -ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி கல்யாணம் மண்டலத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம்
இரவில் நாச்சியார் மாட வீதி -பெரிய பெருமாள் மாட வீதி கண்டருளி தோளுக்கு இனியானில் பகல் பத்து மண்டபம் சேர்தல்
ஆழ்வார்கள் பகல் பத்து மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல்
திருவாராதனம் கோஷ்ட்டி அருளப்பாடு -திருப்பல்லாண்டு வியாக்யானம்
பெரியபெருமாள் பக்தி உலாவுதல்
ஸ்ரீ ரெங்க மன்னாருடன் புறப்பாடு -மூலஸ்தானம் சேர்தல்
முதல் நாள் மட்டுமே இரவில் நடக்கும்
இதே போல் இராப்பத்திலும் முதல் நாள் மட்டுமே பகலிலே நடக்கும்
வியாக்யானம் பாசுரங்கள்
2 நாள் -சென்னியோங்கு வியாக்யானம்
3 நாள் -திருப்பாவை
4 நாள் -ஊனேறு செல்வம்
5 நாள் -திருமாலை
6 நாள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு -வாடினேன் வாடி
7 நாள் -தூவிரிய மலர்
8 நாள் -பண்டை நான் மறை
10 நாள் -தெள்ளியீர் -அக்கும் புலியின் -முந்தூர்ஸ்
10 நாள் -அமிர்த மதனம் -திரு நெடும் தாண்டகம் –
வைகுண்ட ஏகாதசி
காலை ஸ்ரீ பெரிய பெருமாள் தோளுக்கு இனியானாலும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி
விரஜை தீர்த்தம் பிரசாதம்
ஸ்ரீ வைகுண்ட வாசல் திறப்பு -ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தால் -மாடவீதி கந்தாடை வீதி எழுந்தருளி இராப்பத்து மண்டபம் சேர்தல்
முதல் நாள் திருக்கொட்டகையிலே நடக்கும்
திருவாய் மொழி துவக்கம் -அரையர் அருளிப்பாடு -உயர்வற muthal பாசுரம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்தி உலாவுதல்
அரையர் வியாக்யானம் உயர்வற உயர் நலம்
மற்ற நாள்கள் வியாக்யானம் பாசுரங்கள்
2 நாள் -கிளர் ஒளி இளமை
3 நாள் -ஒழிவில் காலம்
4 நாள் -ஒன்றும் தேவும்
5 நாள் -எங்கனேயோ
6 நாள் -உலகமுண்டா பெருவாயா
7 நாள் -கங்குலும் பகலும்
8 நாள் -நெடுமாற்கு அடிமை
9 நாள் -மாலை நண்ணி
10 நாள் -சாத்து முறை -தாள தாமரை -முனியே நான்முகனே
11 நாள் -இயற்பா சாத்துமுறை
8 நாள் -திருவேடுபரி -குதிரை வாகனம் புறப்பாடு -இராப்பத்து ஸ்ரீ ஆண்டாள் சென்னியில் நடக்கும்
நீராட்ட உத்ஸவம்
பிரியா விடை
இரவில் ஸ்ரீ ஆண்டாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பாடு -மாட வீதி வழியாக ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதி சேர்தல்
அங்கு ஸ்ரீ ஆண்டாள் ஏகாந்த திருமஞ்சனம்
கைத்தல ஸேவை
பெரிய பெருமாள் மூல ஸ்தானம் சேர்தல்
திருவாராதனம்
அரையர் வியாக்யானம் -திருப்பாவை முதல் பாட்டு -மற்ற பாசுரங்கள் ஸேவை
ஸ்தலத்தார் உத்சவ வைபவம் வாசித்தல் -பஞ்சாங்கம் வாசித்தல் –
பொது ஜன ஸேவை
அதிகாலை ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு -ஸ்ரீ பெரியாழ்வார் மங்களா ஸாஸனம் -மூல ஸ்தானம் சேர்தல்
ஸ்ரீ ஆண்டாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படி களைந்து திருவடி விளக்கம்
அரையர் நாள் பாட்டு -தீர்த்த கோஷ்ட்டி
விடாய் ஆற்றி மண்டபங்களில் விடாயாற்றி யாகி எண்ணெய் காப்பு மண்டபம் சேர்தல்
பட்டர் பிரான் சுருள் கோஷ்ட்டி
ஸ்தலத்தார் திருவாசிரியம் ஸேவித்தல்
எண்ணெய் காப்பு சேவை -ஷோடச உபசாரம்
பக்தி உலாவுதல்
நீராட்டத்தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்
ஈரவாடை தீர்த்தக்கோஷடி பக்தி உலாவுதல் -அம்மானை விளையாடுதல் -படியேற்ற சேவை
முதல் நாள் காலை யில் தங்கப்பல்லக்கில் புறப்பாடு -மாலையில் துளசி வாகன புறப்பாடு
இரண்டாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை சந்திரன் பிரபை ஸேவை
மூன்றாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தோளுக்கு இனியானில் புறப்பாடு
நான்காம் நாள் -தங்கப்பல்லக்கில் முத்தங்கி ஸேவை -முத்து மாலையுடன் -மாலை சேஷ வாகனம்
ஐந்தாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில்
பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தங்க ஹம்ஸ வாகனம்
ஆறாம் நாள் காலை வீற்று இருந்த திருக்கோலம் சவுரித் திருமஞ்சனம்
மூக்கூத்தி ஸேவை -இரவு கனக தண்டியல்
ஏழாம் நாள் காலை தங்கப்பல்லக்கில் தங்க கவசம் -இரவு ஆளேறும் பல்லக்கு
8 நாள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் மங்களா ஸாஸனம் -ஸ்ரீ ஆண்டாள் மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி ஸேவை
அசுத்த நாள் கனு -ஸ்ரீ ஆண்டாள் தோளுக்கு இனியானில் ஸ்ரீ பெரியாழ்வார் சந்நிதிக்கு எழுந்து அருளி தொடர்ந்து
முத்துக் குறி அரையர் சேவை ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும்
காலை ஸ்ரீ பெரிய பெருமாள் பல்லக்கில் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்து அருளி கனுப்பரி வேட்டை நடைபெறும்

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸமேத வேங்கட கிருஷ்ணன் பார்த்தா சாரதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading