புளிய மரம் செண்பக மரம் துவஜஸ்தம்பம் வல்லது பக்கமும் இடது பக்கமும் -பெருமாளும் பிராட்டிமாரும் வேடர்கள் வழிபட்டவை –
வராஹமூர்த்தி உத்சவம் ராமானுஜர் -ஐப்பசி திருவோணம் பிரதிஷ்டை செய்து அருளினவன் -அவதார உத்சவம் -வராஹ ஜெயந்தி -அத்யயன உத்சவம் ஒரு நாள் -மூன்று நாள்கள் இன்றும் நடக்கிறது
நாகாபரணமும் ராமானுஜர் சாத்தி அருளினார்
ஸ்ரீ பாத ரேணு ப்ரஸாதம் முக்கியம்
வழித்துணை நரஸிம்ஹர் திருக்கோயிலும் நடைபாதையில் உண்டாம்-
தேசிகேந்த்ரன் அப்பனுக்கு சங்காழி அளித்தவன் வாழியே -அமர்ந்த திருக்கோலம் திருமலையில் -சிஷ்யனாக அப்பன் நின்ற திருக்கோலம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -உபதேசித்து அருளினார் –
———-
10 புராணங்களில் திருமலையின் பெருமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை கீழ்காணுமாறு :
1) வராஹ புராணம் (புராணம்)
2) பாத்ம புராணம் (புராணம்)
3) கருட புராணம் (புராணம்)
4) ப்ரம்மாண்ட புராணம் (புராணம்)
5) மார்கண்டேய புராணம் (புராணம்)
6) வாமன புராணம் (புராணம்)
7) ப்ரம்ம புராணம் (புராணம்)
8) ஸ்காந்த புராணம் (புராணம்)
9) ஆதித்ய புராணம் (உபபுராணம்)
10) பவிஷ்யோத்தர புராணம் (உபபுராணம்)
இவற்றோடு , மகாபாரதத்தின் 19 வது பர்வம் என்று போற்றப்படும் ஹரிவம்சத்திலும் திருமலையின் பெருமைகளை காணலாம்.
வேங்கடாசல மாஹாத்ம்யத்தில் , வராஹ பெருமானின் வைபவம், ஸ்ரீநிவாஸன் திருவேங்கடத்தை வந்தடைந்தமை, அனைத்துலகிற்கும் தாயான பத்மாவதி ஸ்ரீநிவாஸனை திருக் கல்யாணம் செய்து கொண்டமை, திருக் கோனேரியின் பெருமை, ஏனைய தீர்த்தங்களின் பெருமை மற்றும் வைஷ்ணவ லக்ஷணம் உள்ளிட்டவைகளை அனுபவிக்கலாம்-எம்பெருமானார் யாதவராஜனின் சபையிலே திருமலையில் கோயில் கொண்டுள்ள தெய்வம் ஸ்ரீநிவாஸனே என்று நிரூபித்த அந்த சந்தர்ப்பத்திலும், மேலும் திருமலையப்பன் கோயில் திருப்பணிகளை சீர் திருத்தி நிர்வகித்த சந்தர்ப்பங்களிலும் , பல புராண ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஆக , இவற்றையும் அறிந்து கொள்ளுதல் இராமனுசனுடையார்களுக்கு இன்பம் பயக்க வல்லதே ஆகும்.
ஸ்ரீ வேங்கடேச ப்ரீயதாம்-ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ பாஷ்யகாரய மங்களம்
ஸ ஏஷ ஏவ புருஷ பஞ்சதா பஞ்சாத்மா -ஸ்ருதி -எல்லா உலகங்களுக்கும் காரண பூதனாய் இருக்கும் இப்பரம புருஷன் தான் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை முதலியவைகளாலும் விஷ்ணு புருஷன் ஸத்யன் அச்யுதன் அநிருத்தன் முதலியவைகளாலும் கூடி யிருக்கிறான்
அத்ப்ய: ப்ருதிவ்யை ரஸாத் ஸம்பூத்: – விச்வ கர்மண: – ஸமவர்த்தத – . தஸ்ய – , த்வஷ்டா – , ரூபம் -விததத் – தத்- , புருஷஸ்ய – , அகரே – விச்வம் – ஆஜாநம் -.அத்ப்ய: ஜலத்தினுடையவும், ப்ருதிவ்யை – பூமினுடையவும், ரஸாத் – ஸாரமான பாகத்தினால், ஸம்பூத்: – உண்டான சிலையானது, விச்வ கர்மண: -நான்முகனால், ஸமவர்த்தத – நன்றாக செய்யப்பட்டது. (நான்முகனின் ஸங்கல்பத்தால் பகவானின் திவ்ய மங்கள விக்ரஹ மண்டப ப்ராகாராதிகளின் நிர்மாணத்துக்கு உசிதமான சிலை (கல்லு)
உண்டாயிற்று – என்று – கருத்து.) தஸ்ய – அந்த சிலைக்கு , த்வஷ்டா – சிற்பி
யானவன், ரூபம் – கர சராணாதிகளோடு கூடிய மனேஹரமான விக்ரஹத்தை,
விததத் – நிர்மித்தான், தத்- அந்த நிர்மாணமானது , புருஷஸ்ய – பரம புருஷனுடைய, அகரே – உண்டாகப் போகும். விச்வம் – ப்ரஸித்தமான, ஆஜாநம் – ஆவிர்பாவத்திற்கு காரணமாயிருக்கிறது
அஸ்ய ரூபம் ஸந்த்ருசே ந திஷ்டதி கச்சித் ஏநம் சஷுஷா ந பஸ்யதி ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: யே விது: தே அம்ருதா –அஸ்ய – இந்த பகவானுக்கு, ரூபம் – ரூபமானது, ஸந்த்ருசே – திருஷ்டி. விஷயமாய், ந திஷ்டதி – இருப்பதில்லை, கச்சித் – எவனும், ஏநம் – இவனை, சஷுஷா – கண்ணால், ந பஸ்யதி – பார்க்க முடியாது . ஆகிலும், ஹ்ருதா -ஸ்ருதி ப்ரமாணத்தாலும், மநீஷா – மந்வாதி ஸம்ருதிகளாலும், மநஸா – பார்கவாதி பகவச் சாஸ்த்ரங்களாலும், அபிக்லுப்த: – பிம்ப ரூபமாக. யே- எவர்கள், விது: – தெரிந்து கொள்ளு கிறார்களோ, தே- அவர்கள், அம்ருதா – மோக்ஷத்தை அடைவார்கள்,
வீர ஸுதஷ தேவகாம்: யுக்தக்ராவ; ஜாயதே-வீர -பகவான் அர்ச்சனாதிகளால் ஆராதிக்கப்பட்டு, ஸுதஷ – பக்தர்களின் அபிஷ்டங்களை அருளுமவனாய், தேவகாம்: – கிரீடிக்க வேணுமென்ற திரு வுள்ளம் பற்றி, யுக்தக்ராவ; – சிலா மூர்த்தியாக, ஜாயதே – ஆகிறான்.
அச்மாணம் ஆகணம் ப்ரபத்யே”-அச்மாணம் -சிலா மூர்த்தியான பகவானை -ஆகணம் -சிற்பியினால் ஸாஸ்த்ர யுக்தமாகச் செய்யப்பட்டு -பகவத் ஸாஸ்த்ர விதிகளின்படி ப்ரதிஷ்டாதிகள் செய்யப்பட ப்ரபத்யே”-சரணம் புகுகிறேன்
அந்தஸ: ப்ரபாந்தம் மஹேசூராய விஷ்ணவே வ: த்யாய அர்ச்சத-அந்தஸ: – ஆஹாராதிகளால் வ்ருத்தி யடையும் கரண களேபரங்களை ஸ்ருஜித்து , ப்ரபாந்தம் -ரக்ஷிக்குமவனான. மஹேசூராய – ஸர்வ சக்தனான, விஷ்ணவே – பகவானை,
வ: – உங்களுக்கு, த்யாய – மோக்ஷ ப்ராப்திக்காக, அர்ச்சத – பூஜியுங்கள்,
என்று ருக் வேதத்தில் சொல்லப்பட்டது
ஸ்ம்ருதிகளில் :–” ஏதுத் ரூபம் ப்ரதிஷ்டாப்ய சுத்தயா சிலயா ந்ருப “ -என்றும் *ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ:-முதலான வாக்யங்களாலும் விக்ரஹ ஆராதனம் சொல்லப்பட்டுள்ளது -ப்ரவ: பரந்த மந்தஸோ அதிபாய தே” பக்த்யா பகவந்தம் நாராயணம் அர்ச்சயேத்–மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரூ”” என்னும் ப்ரமாணங்கள் *எம்பெருமானுடைய அர்ச்சநம் மிகவும் உபாதேயம்’”–என்று ௮றுதி யிடுகின்றன.
ஹே அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
ஸ்ரிம் பிடஸ்ய ஸத்வபி: தே அபிஷ்ட்வா சாதயாமஸி.-என்று ருக்வேத்தில் திருவேங்கடமும், அதின் ஸ்வாமியான ஸ்ரீநிவாஸனும் வர்ணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஏவம் ஸ்ரீக்ருஷ்ண ருபேண க்ரீடிதோ வேங்கடாசலே
அரரயி காணே விகடே கிரிம் கச்சே ” திஸ்தம் விது:
ஸோ$யம் வேதாமய? ஸாக்ஷாத் கிரீச. பந்நகாசல--என்று வேங்கடாசல புராணத்தில் இந்த அர்த்தம் சொல்லப் பட்டிருக்கிறது .
ஹே அராயி -ஏழையே
காணே -குருடனே
விகடே கிரிம் -வேங்கடாசலத்தை
கச்ச -அடைவாயாக
ஸதான்வே-எப்பொழுதும் ௮ந்வேஷணத்தைப் பண்ணும் அவ்விடத்தைச் சென்று,
அசஞ்சலமான த்யானத்தைப் பண்ணுவாயாக,
ஸ்ரிம் பிடஸ்ய -ஸ்ரீ மஹாலஷ்மிக்கு இருப்பிடமாய் ஸ்ரீ நிவாசனுடைய
ஸத்வபி: -ஸாத்விக குணங்களான
தே பி -அந்த தயா வாத்சல்யத்தி கல்யாணம் குணங்களாலே
அபிஷ்ட்வா சாதயாமஸி.-உன் பாபங்களை நீக்கி பேரின்பத்தையும் அளிக்கிறோம்
அதோ யத்தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே ௮பூருஷம்,
ததராபஸ்வ துர்ஹண: தேந கச்ச பாஸ்தாம். (10-155-3) -என்னும் ஸ்ருதிக்கு ஜகந் நாத க்ஷேத்ர பரமாக அர்த்தம்
ரயி: ககுத்மான் விததத்வி நஷ்டம் ரயிவத் விதானம்
தஸ்மை கருத்ரே விகடாய பித்ரே ஸ்வாஹா,-என்னும் பராமாத்மிக–உபநிஷ்த்தில் சொல்லப்பட்டிருக்கிறது
ரயி: -ஐஸ்வர்ய ஸ்வரூபனும் (பெருஞ்செல்வ ஸ்வரூபன்-என்று கருத்து.)
ககுத்மான் -வ்ருஷபாசலத்தில் நித்ய வாஸம் செய்யுமவனும் (அல்லது சிறக்தவனலும்),
விததத்வி நஷ்டம் –எல்லோருக்கும் எல்லா வரங்களையும் கொடுக்குமவனும்.
ரயிவத் விதானம்–ருக்- யஜுஸ்-ஸாம-அதர்வணங்களாகிற வேதங்களில் (ஸத் புருஷர்களுக்கு ஸம்பத் – வேதங்களே தான் “ஸாஹி ஸ்ரீர் அம்ருசா ஸதாம்’” என்று
சொல்லப் பட்டிருக்கிறது )ப்ரஸித்தனானவனும்,
தஸ்மை கருத்ரே -வ்ருஷபாசலத்தின் அக்ரா பாகத்தில் இருக்குமவனும்,
விகடாய -வேங்கடாசலத்தி லிருக்கும் பெருமானுக்கு,
பித்ரே ஸ்வாஹா,-என் ஆத்மாவை ஸமர்ப்பிப்பேன்–
வராஹ புராணத்தில்–ஸர்வ பாபானி வேம் ப்ராஹு:, கட தத்தாஹ உச்யதே
ஸர்வ பாபாபஹாரித்வாசத் வேங்கடாத்ரி ரீதிரித -என்று, வேம்” என்ற சொல்லுக்கு எல்லாப் பாபங்களும்”என்று பொருள்–என்றும், * கட – சப்தத்திற்கு எரித்தல் என்று
பொருள் என்றும், நிரூபிக்கப்பட்டு. யிருக்கிறது,
வாமன புராணத்தில்-வகாரோ அம்ருத பீஜம் து , கட மைஸ்வர்ய முச்யதே ,
அம்ருசைஸ்வர்ய ஸங்கத்வாத், வேங்கடாத்ரி ரிதி ஸ்ம்ரித..-என்று. “வேம் ” என்ற சொல்லுக்கு * அம்ருதம்” என்றும்-௧ட– என்பதற்கு ஐஸ்வர்யம்” என்றும் – பொருள் கூறப்பட்டன.
ஸ்ரீநம்மாழ்வார் -வேம் கடங்கள் என்னும் பாசுரத்திலே கடங்கள் எல்லாம் – வேம்- தீயினில் தூசாகும் – என்று பொருள் கூறினார்.-ஸ்ரீபகவத் ராமானுஜாசார்யர், தமது ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தில் “** ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே ”’, என்று திருவேங்கடமுடையானைத் தொழுவதுமன்றி, வேதார்த்த ஸங்க்ரஹத்தைத் திரு வேங்கடமுடையான் திருமுன்பே தான் உபந்யஸித்தார்.
வேதாந்த தேசிகரும் தயா சதகத்தில் -“ப்ரபத்யே தம் கிரிம்” என்று திருவேங்கடத்தையும் – கம ப்யந வதிம் வந்தே கருணாவருணாலயம்”’… என்று திருவேங்கட முடையானையும், ஸ்ரீ ஸ்துதியில் தாயாரையும் அடைக்கலம் புகுந்தார்.அதிகார சங்கரஹத்தில்:–
கண்ணனடி யிணை யெமக்கு காட்டும் வெற்புக்
கடுவினைய ரிருவினையுங் கடியும் வெற்புத்
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்புப்
புண்ணியத்தின் புகலிதெனப் புகழும் வெற்புப்
பொன்னுலகிற் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற்பென விளங்கும் வேத வெற்பே–என்றும் திருவேங்கடத்தைச் சிறப்பித்துள்ளார்.
ஸாளுவ நரஸிம்ஹ ராஜாவுக்கு ஸேநா நாயகனா யிருந்த துளுவ நரசிங்கராயர் 1487-ம் வருஷத்தில் கர்னாடக ராஜ்யாதிபதியானார், இந்தத் துளுவ நரசிங்க தேவராயர் ஆந்திர போஜ ராஜன்”! என்று புகழ் பெற்ற ஸ்ரீ கிருஷ்ண தேவராயருக்குத் தகப்பனார் –ஸ்ரீ கிருஷ்ண
தேவராயர் திருவேங்கடமுடையானைத் தனக்கு இஷ்ட தெய்வமாகச் சொல்லிக் கொண்டு, அவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி பிரஸித்தமான * ஆமுக்தா மால்யதை ” என்னும் ஆந்திர பிரபந்தத்தைத் திருவேங்கடமுடையானுக்கே உரிமை யாக்கினார்.
ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றியதும் மிகப் பழையதுமாகிய தொல்காப்பியம்’ என்னும் இலக்கணத்திற்கு, ௮தன் ஆசிரியராகிய தொல்காப்பியர் காலத்தில் இருந்தவராகிய பனம்பரானுர் என்பார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார் -அவர் தமிழ் காட்டிற்கு எல்லை கூறுங்கால்- வட வேங்கடம் தென்குமரி‘” என்று வேங்கடத்தை வட எல்லையாகக் கூறியுள்ளார் -கடைச் சங்க நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் -இம்மலை, ்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெரினும்
பழகுவ ராதலோ அரிது.”-என்றும்,
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை , ”என்றும்,
வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்(டு)
ஒங்கு வெள் ளருவி வேங்கடத் தும்பர்.”-என்றும்,சிறப்பிக்கப் பட்டுள்ளது
சிலப்பதிகாரம், மாங்காட்டு மறையவன் கூற்றாக
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்
ஒங்குயர் மலயத் துச்சி மீமிசை
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய விடை நிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்கு விற் பூண்டு
கன்னிற மேகம் நின்றது போலப்
பகை யணங் காழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையி நேந்தி
நலங்கிள ராரமார் விற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்.” என, * வேங்கட மலையில் எழுந்தருளிய பெருமான்–திருவாழித் திருச் சங்குகளைத் தரித்து முகில் நிறத்தோடு விளங்கும் திருமாலே ”என்பதை விளக்கமாகக் கூறுகின்றது.
சமணப் புலவராகிய * ஐயனாரிதனார்” என்பவர், தாம் எழுதிய-புறப் பொருள் வெண்பா மாலையில் – புலவர் ஆற்றுப் படைக்கு மேற்கோளாக :
வெறி கொள் அறை யருவி வேங்கடத்துச் செல்லின்
நெறி கொள் படிவத்தோய் நீயும் -பொறிகட்டு
இருளீயும் ஞாலத் திடரெல்லாம் நீங்க
௮ருளீயும் ஆதி யவன்,”-என்னும் வெண்பாவில் “: திருவேங்கடவன் திருமாலே “என்று கூறிப் போந்தார்.
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகறியாதவர்,”-என்னும் திருமூல நாயனார் திருமந்திரத்தையும்,
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூரம்மான்
௮ரியாரும் பாகத்தமுதன்-அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் விளிந்து. ‘என வரும் கபில தேவ நாயனார் * சிவபெருமான் திருவந்தாதியையும் கொண்டு சைவருட் சிலர், திருவேங்கடமுடையான் சிவபெருமானே” எனக் கூற முற்படுவர்.அருணகிரிநாதர், திருமலையில் முருகப் பெருமானைப் பாடியிருக்கிறார் என்றால், ௮து திருவேங்கடமுடைய திரு மாலைக் குறிப்பதன்று – திருமலைப் பெருமையை அறிவிக்கும் புராணத்தில், * குமார தாரை ’ என்னுமிடத்தில், முருகன் திருமாலைக் குறித்துத் தவம் செய்து ௮ருள் பெற்றமையால் அங்கே யிருந்ததாகக் கூறப்படும் ௮ம்முருகப் பிரானை யென்பது –* குமார தாரை என்னும் பெயராலும்
௮மைவுடைத்தாதலின், ௮த் திருப்புகழுக் கரிய முருகன், திருவேங்கட வள்ளலாகிய திருமால் அல்லன். என்பது போதரும் ; வேதத்தில் யுவா குமார ” என்று திருமாலைக் “குமரன்‘” என்னும் சொல்லால் கூறியிருத்தல் அறிக. ஆழ்வார்களும், பலவிடங்களில், திருமாலைக் குமரன் என்றும் * இளையோன் ‘ என்றும் அருளிச் செய்திருத்தலும்
அறியத்தக்கது .
ஸ்தானோத்கர்ஷாத் ஸூதீப்தம், ச்ரம ஹர வபுஷம், ஸ்வாங்க பர்யாப்பத
பூஷம்,
தேஜிஷ்டம் நீசயோகாத், ப்ரணமித புவனம், பாவனம் ஸந்நதானாம் |
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம், ௮ஹ: ப்ரசமன விஷயம், பந்த விச்சேதி பாதம்,
பேஷே சீக்காரபியான க்ஷம சுபவஸதிம், லம்பி தார்ச்சாபி முக்யம் –த்ரவிடோபநீஷத் தாத்பர்ய ரஈத்நாவஸி.
ஸ்தானோத்கர்ஷாத் ஸூதீப்தம், –திருமலையிலே நின்றும் அருளுகையாலே அளவில்லாத காந்தியை யுடையவனுமாய்
ச்ரம ஹர வபுஷம், –காள மேகம் போலே கண்டார்க்கு ஸ்ரம ஹரமான வடிவழகை யுடையவனுமாய்
ஸ்வாங்க பர்யாப்பத பூஷம், –தாமரை போன்ற தம்முடைய திருக்கண் மலர் முதலான அவயவங்களினாலே பூஷண யுக்தனுமாய்
தேஜிஷ்டம் நீசயோகாத், -அபகர்ஷத்தையும் அபூர்த்தியையுமுடைய தாழ்ந்தவர்களோடு சம்பந்திக்கையாலே மிகவும் விளங்குகிறவனாயும்
ப்ரணமித புவனம், -எல்லா உலகங்களாலும் தொழப்படுகிறவனாகவும்
பாவனம் ஸந்நதானாம் |-வணங்குபவர்களை அவர்களது பிரதிபந்தகங்களைப் போக்கி பரிசுத்தமாக்குபவனாயும்
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம், -மோக்ஷத்தை அளிக்க வல்ல இருப்பிடத்தை யுடையவனாயும்
௮ஹ: ப்ரசமன விஷயம், –தன்னை அடைவதற்கு விரோதிகளைப் போக்க வல்ல திவ்ய தேசத்தை யுடையவனாயும்
பந்த விச்சேதி பாதம்,-ஜென்ம ஜரா மரணாதி வியாதிகளைப் போக்கவல்ல திருவடித் தாமரைகளை யுடையவனாயும்
சீக்காரபியான க்ஷம சுபவஸதிம், —
மெள்ளப் போகிறோம் என்றும் இராதே தள்ளிக்கொண்டு முன்னே செல்ல வேண்டும்படியான திருமலையில் நித்யவாஸம் பண்ணுகிறவனாயும் இருக்கிற எம்பெருமானை
பேஜே -ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் -படியே நினைத்தபடியே உகப்போடே கண்டு அனுபவித்து அருளினார் –
ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்
1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-
2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-
5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!
6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி
8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply