உலகுய ரரங்க முறையூர் தஞசை
அன்பில் கரம்பனூராதனூர் வெள்ளறை
கண்டியூ ரழுந்தூர் கவித்தலம் புள்ளம்
பூதங்குடி சிறுபுலியூர் குடந்தை
திருவிண்ணகரந் திருத் தலைச் சங்க
நாண்மதியம் திருப்பேர் நகர் திருச் சேறை
வெள்ளியங்குடி யரிமேய விண்ணகரம்
வண் புருடோத்தம மாலி நறையூர்
சித்ரகூடஞ் சீராம விண்ணகரம்
காவளம்பாடி கண்ண மங்கை
நந்தி புர விண்ணகர் நாகை யிந்தளூர்
கண்ணங்குடி திருக் கண்ண புர மணி
மாடக் கோயில் வைகுந்த விண்ணகரம்
கூடலூர் வெள்ளக்குள மணிக்கூடம்
தேவனார் தொகை திருத் தெற்றி யம்பலம்
செம்பொன் செய் கோயில் திருப் பார்த்தன் பள்ளி
சோழ நாட்டிடை மறை சொற் பதி நாற்பதின்
மாலிருஞ்சோலை வரகுணமங்கை
புல்லாணி மெய்யம் புளிங்குடி மோகூர்
குருகூர் கோட்டி கூடல் வைகுந்தம்
குளந்தை குறுங்குடி கோளூர் புதுவை
தொலை வில்லி மங்கலந் தூய்த் திருப்பேரை
சீ வர மங்கை திருத் தண் காலூர்
பாண்டி நாட்டிடை வாழ்பதி பதினெட்டின்
போற்று மனந்தபுரம் புலியா் செங்
குன்றூர் வித்துவக் கோடு மூழிக்
களம் வண்பரிசாரம் காட்கரை நாவாய்
வாறன்விளை வண்வண்டூர் வல்லவாழ்
திருக் கடித்தானசம் திருவாட்டாறு
பகர் மலை நாட்டிடைப் பதி பதின் மூன்றின்
திருவகீந்த்ர புரத் திருக்கோலலூர் நடு
நாட்டிடையிரண்டு நலந் தருபதியின்
அத்தி மா மலை யூரகத் திருத் தண்கா
புட்குழி யட்டபுயங்க நீரகம்
காரகம் வெக்கா கள்வனூர் பாடகம்
நின்றவூ ரெவ்வளூர் நிலாத் திங்கள் துண்டம்
திருவேளுக்கை திருக் கார்வானம்
பவள வண்ணம் பரமேச்சுர விண்ணகரம்
திருவிடவெந்தை திருக் கடன் மல்லை
அல்லிக்கேணி வளர் திருக் கடிகை
நீர்மலை தொண்டை நாடு நாட்டிடையின்
இன்புறும்பதிக ளிருபதிரண்டின்
வேங்கடஞ் சிங்கவேள் குன்ற மயோத்தி
தேங்கிய வதரி யாச்சிரம் நைமி
சாரணியம் பிரிதி சாளக் கிராமம்
கங்கைக்கரை வாழ் கண்டம் திருவாய்ப்
பாடி துவாரகை பாற்கடல் மதுரை
வட நாட்டிடையின் மன்னிய பதிகள்
பத்துடனிரண்டிற் பரம பதமெனும்
திருநாடொன்றிற் சேர்த்து நூற்றெட்டில்
யதிபதி யருளாலியற்றிய திரு நா
ராயண புரம் திரு ராச மன்னார் கோயில்
மன்னிய விருரந் தாவனம் பெரும்பூதூர்
மெய்ப் புகழ்ப் பாபவிநாசாசஞ் சீர் முட்டம்
புராண நூற்றலங்கள் போற்றுமோர் ஆறின்
உலகிடை மற்றுளவோங்கிய பதியின்
மலர் மகளுடனே மன்னிய திருமால்
ஏழையேனுள்ளது இருந்து இங்கு
ஊழி யினயூழியா வுலகளித்திடவே –
நூற்றெட்டுத் திருப்பதி யகவல் முற்றிற்று,
—————-———————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply