ப்ருந்தாரண்ய நீவாஸாய பல ராமாநுஜாய ச ருக்மிணீ பிராண நாதாய பார்த்த ஸூதாய மங்களம்
Swami Vivekananda ‘s letter -20-8-1983-Go now this minute to the Temple of Sri Parthasarathy and bow to him who was friend to the poor and lowly cowherds of Gokul -Parthasaarathy is ready to be our Sarathy and his name with eternal faith shall suffice for our salvation
760 ஆண்டு விழா மலர் -1982-April 9-18-உத்ஸவம் கொண்டாட்டம்-வேத பிரபந்த கோஷ்ட்டி விமரிசையாக நடக்கும் விவரங்கள் தினமணி-27-3-1982- கோஷிக்கிறது-அதாவது கிபி 1223 இருந்து ஆரம்பம்-(வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவவதாரம் -கிபி 1217- பெரியவாச்சான் பிள்ளை திருவவதாரம் -1228)
ஸ்ரீ மணவாள மா முனி காலத்துக்கு முன்பிருந்தே அத்யாபக கைங்கர்யம் -760 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று Hindu -9-4-82—என்றும்-700 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று remarks oj Judge in suit no cs-349 of 1923-சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்த அறுபதாம் ஆண்டு விழாவும் இதுவே-
கஜேந்திர வரதர் பரத்வம் -மந்நாதப்பெருமாள் வ்யூஹம் -சக்ரவர்த்தி திருமகள் வைபவம் -தெள்ளிய சிங்கர் அந்தர்யாமி -இவ்வாறு நான்குக்கும் நான்கு பாசுரங்கள் -பார்த்தசாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேனே என்று அர்ச்சாவதாரம் ஐந்து பாசுரங்கள் என்று திருமங்கையாழ்வார் மங்களா ஸாஸனம்-பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ அவசிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -பின்னானார் வணங்கும் சோதியான சர்ச்சையில் தானே ஸமஸ்த கல்யாண குண புஷ்கலம்
ஸ இதாநீ மபிமுநே த்ருஸ்யதே தத்ரமா நவைஸ்
ருக்மிண்யா ச அநிருத்தேந ப்ரத்யும்நே நச ஸேவித
ஹலாயுதேந ஸஹிதஸ் ததா சாத்யகிநா ஸஹ
பார்த்த சாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜெகதீ பதி -ஆத்ரேயர் ஸூமதி ரிஷிகளுக்கு ஸேவை
ஆத்ரேய த்வம் மஹா பாக கத்வா பிருந்தாவனம் சுபம்
கமதேராஸ்ரமம் ஸவ்மய வஸநேந மஹாத்மநா
தத்ர ரம்யே வநோ த்ருஸே ஸம் ஸ்தாப்ய ப்ரதிமாம் இமாம்
வைகாநஸேந விதிநா ஸ்மர்ச்சய ஜகத்குரும் -வ்யாஸ மஹரிஷியின் சிஷ்யனான ஆத்ரேயர் ப்ரதிஷ்டை
ஸததர்ச விமா நஸ்ய மத்யே பாஸ்கர ரோசிஷ ஆஸீநம் பரமம் தேவம் நரஸிம்ஹ ஸ்வரூபிணம் -அத்ரி முனிவருக்கு ஸேவை தெள்ளிய சிங்கர்
மகா மாஸே மஹா தேஜாஸ் த்வாதஸ்யாம் ஸஹரிஸ் ஸ்வயம்
ப்ராதுராஸே ப்ருகோஸ்தாஸ்ய ஹ்யாஸ்ரமே புண்ய கர்மண
யதோ மந்நாத இத்யாஹ வேத வல்லீ ஸூசிஸ்மிதா
ததோ மந்நாத இத்யேவ விஸ்ருதோ புவந த்ரய –பிருகு புத்ரி -மாசி த்வாதஸி -வேதவல்லி ஸமேத மன்னாதான்
ததஸ்மிந் திநேரஸ்து ப்ருந்தாரண்யே மஹாமதி மந்நாதம் பிரணமேத் விப்ர ஸ யாதி பரமம் பதம் -ப்ரஹ்மாண்ட புராணம்
யா த்ருகா ஸீத் புரா ராம ராஞ்ஜோ தசரதஸ்ய ஹி
ப்ராத்ருபிஸ் ஸஹிதஸ் தாத்ருக் ஸ ஸீதஸ் ப்ரத்யய த்ருஸ்யதே –மதுதான் ரிஷிக்கு ஸஹ குடும்பத்துடன் ஸேவை
ஸோபி ஸம் ப்ரதி ஸர்வேஷாம் ப்ராணிநாம் கோஸரீ பவந்
வரதோ நாம தேவேஸ் த்ருஸ்யதே தத்ரவை ஹரி –சப்தரோமா மகரிஷிக்கு கருடாரூடனாக ஸேவை
ந தேவா யஷ்டி மாதாயா ரஷந்தி பசு பாலவத்
யம்ஹி ரஷிதம் இச்சந்தி புத்யா ஸம் யோஜயந்தி தம் -பற்றலர் வீயக்கோல் கைக்கொண்டு தேர் முன் நின்றானை -மாதலி தேர் முன்பு கோல் கொள்ள -ஆண்டாள்
ஆராதனாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் யேநகேந விஷ்ணோர் அர்ச்சனம் உத்தமம் ஆத்மாத்ர்த்தம் வா பரார்த்தம் வா க்ருஹ தேவாலயேபி வா அர்ச்சனம் வாஸூ தேவஸ்ய லக்ஷ கோடி குணம் பவேத் -அர்ச்சன நவநீத ஸ்லோகம்
ஆழ்வார்கள் கண்ட அல்லிக்கேணி -ஸ்ரீ நல்லான் சக்ரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் -1951-திருவல்லிக்கேணியில் வெளியிட்டு அருளி கோஷ்ட்டி ஊர்வலம் -வை மு கோபல க்ருஷ்ணமாச்சார்யார் ஸ்வாமிகளும் கலந்து கொண்டார்-
பேயார் திருமழிசைப் பெம்மான் அருட் கலியன்
வாயாரச் சொன்ன வளங்கவியில் -மேயான்
திருவல்லிக்கேணியான் சீர் அருளே வாளாம்
கருவல்லிக் காலறுக்குங் கால்
எறி கடல் வந்தலைக்கும் எழில் அல்லிக்கேணி கண்ட
அறிவுடை யாழ்வார் பாடற்கு அனைவரும் அறிய ஆன்றோர்
முறையிலே பிறழாது ஏகி மூண்ட பேரன்பினாலே
சிறியேன் உரை செய்தேனால் சீர் திருமலை நல்லானே
ஆயர் விளக்கு–என்பதே மருவி ஆயிரம் விளக்காயிற்று
ஆழ்வார் பேட்டை -முதல் ஆழ்வார்கள் திருமழிசைப்பிரான் -ஆள்வார் பேட்டை ஆயிற்று
ஆனைக்குளம் -கஜேந்திர வரதரின் முந்தைய ஸ்தானம் –
அந்தமிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களும்
தம்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே -கம்பர்
கோயில் திருமலை பெருமாள் கோயில் பிரசித்தம் –திருமந்திரம் சரம ஸ்லோகம் த்வயம் போல் இம் மூன்றும் –திருவிருத்தம் மங்களா ஸாஸனம் இவற்றுக்கு என்பதால்-இமையோர் தலைவா –அமரர்கள் அதிபதி -பிரதம சதகே வீஷ்யே வரதம் -துயரறு சுடரடி -தொழுது எழு என் மனனே –பெருமாள் கோயில் விசேஷணம் இது ஒன்றுக்கே -தினமும் ஐம்பது பாசுரங்களான வருஷத்தில் ஐந்து ஆறு ஆவ்ருத்தி நாலாயிரம் அருளிச் செயல்களை செவி சாத்தி அருளுகிறவன்-இயல் தொடங்கும் பொழுது பிடாத்தை விழவிட்டு அத்யாபகர்கட்க்கு ஸர்வ ஸ்வதானம் செய்யும் முறையில் அவகுண்டத்தைக் களைந்து ஸேவை ஸாதித்து அருளுகிறவன்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-
பகாரோ பாப நாஸாயீ விகாரோ விக்ந சாந்தயே த்ருகாரம் த்ராணந ப்ரோக்தம் இதி பவித்ரஸ்ய லக்ஷணம் -பவித்ரா உத்ஸவ மஹிமை
ரதஸ்தம கேஸவம் த்ருஷ்டா புநர் ஜென்ம ந வித்யதே
பார்த்தசாரதிக்கு சித்ர ஸ்ரவண தீர்த்தவாரி -தெள்ளிய சங்கருக்கு ஆனி ஸ்ரவண தீர்த்தவாரி
ப்ருந்தே த்வ யக்ஷர யுக்மஞ்ச துளஸீத் யக்ஷர த்ரயம் ஸங்கீர்த்தயதி யோநாம தஸ்ய புண்யம் அநந்தகம்
பஞ்ச தீர்த்த ஸமாயுக்த மீத்ரு ஸீம்தாம் ஸரோவராம் ஸ்நாநாயாத் கைரவணீம் விப்ரயதீச்சதி ஹரேபேதம் -இந்திர சோம அக்னி மீன விஷ்ணு தீர்த்தங்கள் மத்தியில் பாவனையாக கைரவணி தீர்த்த ஸ்பரிஸமே சர்வபாபேயோய மோக்ஷ ஹேதுவாகும்-
சைத்ரே மாஸே ஸிதே பக்ஷே சதுர்தஸ்யாம் திதவ் முநே
ஸோபநே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே
வபோ ஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே
தாதுத்தர வேத்யந்த ப்ராதுர் ஆஸீத் ஜநார்த்தன -சித்திரை ஹஸ்தம் தேவராஜன் திருவவதாரம் -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
வேகவத் யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரத ஸர்வ பூதாநாம் அத்யாபி பரித்ருஸ்யதே
வஸிஷ்டர் வாமதேவர் ஸூ யஜ்ஞர் ஜாபாலி கஸ்யபர் கௌதமர் மார்க்கண்டேயர் காத்யாயனர் விசயர் -நவ ரிஷி ரத்தினங்கள் சக்ரவர்த்தி திருமகனை ரக்ஷிக்கும் அரண் போல் இருந்தார்கள்
அத்ரி ப்ருகு குத்சர் வஸிஷ்டர் கௌதமர் கஸ்யபர் ஆங்கீரஸர் -பிரஸித்த ஸப்த ரிஷிகள்
இப்போது நடப்பது ஏழாவதான வைவஸ்வத மன்வந்த்ரம் -முந்தியவை –1-ஸ்வாயம்பூ -2- ஸ்வா ரோசிஷ -3-ஒவ்த்தம -4-தாமஸ -5-ரைவத -6-சாஷுஷ மந்வந்தரங்கள்
அல்லித் தாமரையாள் -திரு உகந்த அல்லிக்கேணி -ஸ்ரீ வேதவல்லித்தாயாரின் பிறந்தகம் -மந்நாதனின் ஸ்வசுர க்ருஹம்-மாமனார் திருமாளிகை –
வைரம் இனி இல்லை மண்ணில் பிறப்பில்லை
கைரவிணி நம் கருத்துளதால் -பையரவில்
மன்னாதன் சிங்கன் பரதன் இராமன் கண்ணன்
இந் நாள் அருள் பெய்வர் இங்கு
அபஹர மம துரிதாநி ப்ரதிஸ த்வம் நிருபமாம் யஸோ லஷ்மீம்
பகவதீ கைரவணீ த்வாம் ப்ரணமாமி ஜனார்த்தந ப்ரியே ஸூபகே —வஸிஷ்ட பகவான் -கைரவம் என்பது செவ்வல்லி -ஆம்பலின் வகை
பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-மஹதாஹ்வய –மகாதாஹ்வயர்-ஆகிறார் -மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -என்னும்படியான அத்தேசத்துக்கு சமமாய் இருந்துள்ள-மாட மா மயிலையில் ––மா வல்லிக் கேணியில்–செவ்வல்லிப் பூவிலே அவதரித்து-யானுமோர் பேயன் – பித்தர் என்றே பிறர் கூர
என்று பேசும்படியான பெயர் –
——–
கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹ மேதிநம்
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பாஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்-புராணம் வேதம் வேதாந்தம் சாங்க்யம் யோகம் ஸாஸ்திரங்கள் அனைத்தும் இதம் எதிரில் இரவாகின்றன
பஞ்சாயுத அம்சமான ஒவ்பகாயனர் சாண்டில்யர் பரத்வாஜர் கௌசிகர் மௌஞ்யாயனர் -ஐவருக்கும் ஐந்தும் தினங்களில் தானே உபதேசித்து அருளினார் –
ஆகமம் பரதம் சில்பம் வைத்தியம் ஜ்யோதிஷ மேவ ச
பஞ்ச சாஸ்த்ராணி ஸம் யோகாத் பாஞ்சராத்ரம் இதி ஸ்ம்ருதம்
ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸந்ந வதந ஈஷணம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரிம் ஸூவர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத்தாம் விசிந்தயேத்
விசத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஸ்ம ரூபிணாம் –ஸுநகபகவான்
108 ஸம்ஹிதைகள் கொண்டதும் பாஞ்சராத்ர ஆகமம் -இவற்றுள் ரத்ன த்ரயம் -சாஸ்வத பவ்ஷ்கர ஐயாக்ய ஸம்ஹிதைகளால் திருநாராயண புரம் திருவரங்கம் காஞ்சிபுரம் இவற்றில் திரு ஆராதனம்-திருவேங்கடமுடையான் வைகாநஸ ஆகமத்தினால் திருவாராதனம் கண்டு அருளுகிறான்
த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா -சரணாகதி தீபிகா–32–வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள் வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply