ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
நூற்று தொண் நூற்று மூன்றாம் வார்த்தை
அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
(ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் —ஊற்றத்தைப் பற்றச் சொன்னது -அக்னி கார்யமான காம்ய கர்மாக்களைச் செய்து ஸ்வர்க்கம் போவதை அகற்றுபவரும்-கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தா –11-9-உபாயங்களைப் பார்த்து எனக்கு மிக்க பயம் உண்டாகிறது -இவ்வாறு அஞ்சுபவர்களுக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான ப்ரபத்தியை உபதேசித்து அச்சம் போக்கி அருளும் ஆச்சார்யர்கள்-)
——————————————————————————————–
நூற்று தொண் நூற்று நாலாம் வார்த்தை
துக்க அனுபவம் – பிரகிருதி
துக்க அநுபவிதா -ஆத்மா
துக்க அசஹை – பிராட்டி
துக்க நிவாரகன் -ஈஸ்வரன் –
———————————————————————————————
நூற்று தொண் நூற்று ஐந்தாம் வார்த்தை –
நஞ்சீயர் பட்டரை -பெருமாள் சந்திர புஷ்கரணி கரையிலே கண் வளர்ந்து அருளுகிற இதுக்கு திரு உள்ளத்தில் கருத்து என் -என்று விண்ணப்பம் செய்ய –
நாராயணா ஒ மணி வண்ணா -என்று கூப்பிட்ட பின்பு இறே மடுவின் கரையிலே வந்தது –
இங்கு கண் வளர்கிறது நான் கூப்பிடுவதற்கு முன்பே -என்னை எடுக்கைகாக –
நான் அகப்பட்ட பொய்கையிலே ஏற்கனவே வந்து கண் வளர்ந்து அருளுகிறார் -இவ்வர்த்தம் கேட்டது-உம்முடைய வசநத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு பெருமாள் என் நினைவை வெளி இட்டு அருளினார் -என்று அருளிச் செய்தார் –
——————————————————————————————–
நூற்று தொண் நூற்று ஆறாம் வார்த்தை –
ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம்
பிள்ளை இன்றிக்கே இருந்து -பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே
ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு -அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று –அப் பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து -வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் –என்று வினவுவர் –
ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் –இதுக்கு ஹேது என் -என்ன -நான் அவனுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னேன் காண் -என்ன –
அவன் எங்கே நீர் எங்கே -இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன –
ஒருவன் விலங்கிலே கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது -விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் –
அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –
(ஆச்சார்யர் கிருத்யம் அவனை வேண்டிக் கொள்வது ஒன்றே -அவன் கிருத்யம் இவனை ஆச்சார்யர் இடமும் சேர்த்து திருத்திப் பணி கொள்ளச் செய்வதே -இதை நன்கு அறியலாம் இந்த வ்ருத்தாந்தத்தின் மூலம்)
போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே ஆதரியாதே இருக்க -முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில் உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய -அவரும் அப்படியே செய்ய –
பிற்றை நாள் அவ் வூரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் -அதுக்கு பின்
ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –
(முதலியாண்டான் கிருத்யம் கூட்டி உடையவர் திருவடி சேர்ப்பது -உடையவர் உத்தாரகராய் இருந்து உஜ்ஜீவிப்பித்து அருளுவர்)
———————————————————————————————–
நூற்று தொண் நூற்று ஏழாம் வார்த்தை
மிளகு ஆழ்வானை முதலிகள் -நீர் கீழை ஊருக்கு (திருவரங்கத்துக்கு கிழக்கு உள்ள திருவானைக்கா)பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு
சொல்லுவன் -அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில
கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் -அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம் பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் –அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –
————————————————————————————————-
நூற்று தொண் நூற்று எட்டாம் வார்த்தை
நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில் அனர்த்தப் பட்டோம் இத்தனை இறே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம் என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்
(ஆளிப்பிள்ளான் -தாழ்ந்த குலத்தவராகிலும் சதாசார்யர்கள் அபிமானத்துக்குப் பாத்திரமானவர் -வர்ணாஸ்ரம தர்ம வரம்புகளை மீறலாகாது -அருளிச் செய்த வார்த்தை -சாமான்ய ஸாஸ்த்ர அர்த்தம் -சதாசார்யர் அபிமானத்துக்குப் பாத்திரமாய் இருக்கும் எவரும் எப்பொருளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கைக் கொள்ளத் தக்கவையே -என்கிற வார்த்தைக்கும் அனுஷ்டானத்துக்கும் மிகவும் பொருந்தும் அன்றோ)
————————————————————————————————-
நூற்று தொண் நூற்று ஒன்பதாம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –
(ஸம்ஸார மண்டலத்தில் எம படர் நலியாமல் இருக்க ஆச்சார்யர் சம்பந்தம் சொல்ல வேண்டும் -அங்கு எம்பெருமானாருடைய ஆச்சார்யருக்கும் தமையனார் என்றும் கேட்டு உகப்பார்கள் அன்றோ)
(அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
க்ருதஞ்ஞஸ்ய பஹுஞ்ஜஸ்ய லஷ்மணோ நாம நாமத-அயோத்-3-20-
உபகார ஸ்மரணமுடையராயும் -அல்ப உபகாரத்தையும் பஹுவாக நினைப்பவருமாய் இருக்கும் இந்த இராமபிராற்கு நான் பின்பிறந்த தம்பி -அவருடைய கல்யாணம் குணங்களால் தூண்டப்பட்டு கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் -பேரினால் லஷ்மண என்றும் ப்ரஸித்தன்)
————————————————————————————————-
இரு நூறாம் வார்த்தை
அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –இவை இத்தனையும் உண்டான போது-ஆய்த்து ஈடேற லாவது-
(யஸ்ய ராமஸ்ய பஸ்யதி -யார் பெருமாளை சேவிக்கவில்லையோ -யாரை பெருமாள் கடாக்ஷிக்க வில்லையோ -இரண்டும் போல் இங்கும்–இரண்டு ஸமாசமாகக் கொண்டு-நாம் அபாகவதர்களைத் த்யஜிக்க வேண்டும் -அபாகவதர்களும் நம்மை த்யஜிக்க வேண்டும் -இதே போல் மற்ற அனைத்துக்கும் கொள்ள வேண்டும்)
————————————————————————————————-
இரு நூற்றோராம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே உடையவர் -பதினெட்டு பிரகாரம் எழுந்து அருள –
இன்னமும் கேட்க வந்தீரோ -என்ன -உடையவர் -ஓருரு இரண்டுரு வாந்தனையும் வருவன் – என்று அருளிச் செய்தார் –
(திருமந்திர சரம ஸ்லோகார்த்தங்களைக் கேட்க 18 தடவை வந்த பின்பும் மறுபடியும் சில உருக்கள் அவற்றைக் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்வதற்காக மீண்டும் பல தடவை வருவேன் என்றார் என்கிறபடி)
————————————————————————————————
இரு நூற்று இரண்டாம் வார்த்தை
பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் (நம்மாழ்வாருக்கும் நாதமுனிகளுக்கும் -5126-1200=3926 வருஷங்கள் இடைவெளி உண்டே -880-1440=600 வர்ஷம் தானே நாதமுனிகள் தொடக்கி மா முனிகள் வரை நம் குருபரம்பரை-)எல்லாரையும் அறிய வேண்டாவோ –என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க -அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப் போகாது –
இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இறே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார்
(மதுரகவி வம்சத்தார் அனைவரையும் அறிய வேண்டாவோ என்பது கேள்வி)
————————————————————————————————
இரு நூற்று மூன்றாம் வார்த்தை
நஞ்சீயரை பெரிய கோயில் வள்ளலார் திருவாய் மொழியிலே -ஓர் அர்த்த பிரச்தாபத்திலே
ஜீயர் அருளிச் செய்த படி ஒழிய -இங்கனே யானாலோ என்ன –
நான் சொன்னபடி அழகிது என்று திருக் கலி கன்றி தாசர் சொல்லுவர் -என்று ஜீயர் அருளிச் செய்ய –
உம்முடைய சிஷ்யர் அழகியது என்பர் என்றது பிரமாணமாக சொல்லுவான் என் -என்ன –
அதில் ஒரு நிபந்தனம் இல்லை காணும் -சதாசார்ய சந்நிதியோடு -சச் சிஷ்ய சந்நிதியோடு –
வாசி இல்லை காணும் ஒருவனுக்கு திருத்தம் பிறக்க -என்று அருளினார் –
————————————————————————————————
இரு நூற்று நாலாம் வார்த்தை
பட்டர் திருவணை யாட (சேது சமுத்திரம் நீராட)எழுந்து அருளுகிற போது பகலில் வழி நடந்த ஆயாசத்தாலே விட்டதொரு தூற்றடியிலே நஞ்சீயர் மடியிலே திரு முடியை வைத்து கண் வளர்ந்து அருள –
அவ்விரா முடியத் துடை மாறுதல் -சலிப்புதல் செய்யாதே -எழுந்தி அருளி இருந்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –
———————————————-—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply