ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
நூற்று அறுபத்து ஒன்பதாம் வார்த்தை
ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு ஹித காமனாய் இருக்குமவன் –
சிஷ்யனாவான் -சர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –(பார்யை சரீரம் நினைவு அனைத்துமே ஒதுக்கி அத்யந்த பாரதந்தர்யம்)
———————————————-
நூற்று எழுபதாம் வார்த்தை
உடையவர் -சந்யசித்து அருளுகிற போது –
சரீர சம்பந்தத்தை விட்டு விட வேண்டுகிறதோ – என்று கேட்க –
முதலியை ஒழிய சந்யசித்தோம் -என்றார் –
இப்படி செய்யலாமோ -என்று அருகிருந்தார் கேட்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ -முதலியை விடுவது -என்று அருளிச் செய்தார் –
(அஜகத் -விட்டுப் பிரியாத மருமகன் – பாதுகை-திரிதண்டம் மூன்றும் ஆண்டான்)
———————————————–
நூற்று எழுபத் தோராம் வார்த்தை
கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் –
எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன –
பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி –தஸ்யாம் அன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –
(உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன -அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக என்று நினைத்து -அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை)
——————————————————————-
நூற்று எழுபத் திரண்டாம் வார்த்தை
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் இரண்டுக்கும் தலை –
ஆத்ம சமர்ப்பணமும் –
ஆத்ம அபஹாரமும் –
இவற்றிலும் விஞ்சின ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் –
ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே
க்ருதஜ்ஞதையும் –
க்ருதக்நதையும் –
(கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யா லவ் விருளைத் துரத்தில னேல் உயிரை
உடையவன், நாரணன் என்றறிவா ரில்லை உற்றுணர்ந்தே.–59-)
———————————————————–
நூற்று எழுபத்து மூன்றாம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டானையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமானார் மடமே எழுந்து அருள –
அவரும் தண்டன் சமர்ப்பிக்க –
அவரைப் பார்த்து அருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே
திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று
இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து
தாம் மீண்டு எழுந்து அருளினார் –
திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி –
திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள –
ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய
இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி –
ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன
அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –
அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை –
உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன –
அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து –
சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும்
உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது –
ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் –நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் –
(அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-
அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;-ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.-அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்)
(இத்தால் சொல்லிற்று ஆய்த்து –ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி -)இது அடுத்த வார்த்தையுடன் சேர இருப்பது பொருத்தமாய் இருக்கும்
———————————————————————
நூற்று எழுபத்து நாலாம் வார்த்தை –
பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு ஒருகால் திரு மேனி பாங்கு இன்றியிலே கண்
வளர்ந்து அருளும் போது
தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து –
நான் இப்போது திருவடி சாராமல் -ஆலச்யம் -(காலதாமதம் )-பொறுத்து
இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி –
ஏழை ஏதலன் -(கோவிந்த ஸ்வாமி விருத்தாந்தம் இதில் உண்டு)
ஆழி எழச் சங்கு -இவற்றை பெருமாள் திருவடிகளில் விண்ணப்பம் செய்து –
பிரபத்தி பண்ணும் கோள் -என்ன –
அவர்களும் அப்படியே செய்து
ஜீயருக்கு திரு மேனி பண்டு போலே பாங்காய்த்து –
இதைக் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை
ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு –
ஜ்ஞான வ்ருத்தருமாய் வயோ வ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செய்தார் –
இது இவருடைய ஸ்வரூபத்துக்கு சேருமோ -என்று விண்ணப்பம் செய்ய –
பிள்ளையும் –
அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம் –
சகல வேத சாஸ்திரங்களும் போவது பிள்ளை எங்கள் ஆழ்வானுக்கு ஆய்த்து –
அவரைச் சென்று கேளும் கோள் என்ன –
அவர்களும் எங்கள் ஆழ்வானைக் கேட்க –
அவரும் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யிலே சங்கம் போலே காணும் -என்ன -(இச்சுவை தவிர அச்சுவை பெறினேம் வேண்டேன்)
பிள்ளை இதைக் கேட்டு அருளி -அழகிது
பிள்ளை திரு நாராயண புரத்து அரையரைச் சென்று கேளும்கோள் -என்ன –
அவரும் -துவக்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும் -என்ன –
இதையும் கேட்டருளி -ஆகிறது
அம்மங்கி யம்மாளைக் கேளும்கோள் -என்ன –
அவரும் -பிள்ளை கோஷ்டியில் இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயம்
கேட்கிறவர்களுக்கும் ஒரு தேச விசேஷம் ருசிக்குமோ -என்ன –
மீளவும் பிள்ளை இத்தையும் கேட்டருளி –
அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளும்கோள் என்ன –-(அம்மங்கி அம்மாள் தகப்பனாராக இருக்கலாம் -)
அவரும் –
பெருமாள் சிவந்த திரு முக மண்டலமும் –
கஸ்தூரி திரு நாமமும் -பரமபதத்தில் கண்டேன் இல்லையாகில் –
மூலையடியே முறித்துக் கொண்டு மீண்டு வருவேன் என்று அன்றோ பட்டர் அருளிச் செய்தார் –
அப்படியே இவரும் பெருமாள் திருமுக மண்டலத்தையும் கஸ்தூரித் திரு நாமத்தையும்
விட்டுப் போக மாட்டாராக வேணும் -என்றார்
பிள்ளை -இவை கேட்டருளி -ஜீயர் திருமுக மண்டலத்தை பார்த்து சிரித்து –
இவை எல்லாம் உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ -என்ன –
இவை இத்தனையும் அன்று -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்ய –
ஆனாலும்
உம்முடைய அபிப்ராயத்தை சொல்லும் என்ன –
பிள்ளை (பின்னை)தேவரீர் சர்வஜ்ஞர் ஆகையாலே அறிந்து அருளாதது இல்லை –
ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளி இட்டருள திரு உள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன் –
தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி –
தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி -உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் –
சுழற்றிப் பணி மாறுகிற (திருவாலவட்டம் )கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார் –
இதைக் கேட்டருளி பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் –
இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற
சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –
(பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-)
—————————————————————————
நூற்று எழுபத்து ஐந்தாம் வார்த்தை
நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த அனந்தரத்திலே
கையிலே இருந்த சில பொன்னை வாங்கி பட்டர் ஸ்ரீ பாதத்திலே இட்டு தண்டன் இட்டவாறே பட்டர் அத்தை எடுத்து இவரைப் பார்த்து –
நான் கொடுத்த த்ரவ்யத்தில் சாபேஷராய் இருக்கிற இவர் உபதேசித்த ஜ்ஞானம்
நமக்கு உத்தாரக ஹேதுவாக புகுகிறதோ என்று -உனக்கோடுகிறது -என்று கேட்டருளி –
இவரைப் பார்த்து -சர்ப்பதஷ்டனாய் ம்ருதனான ராஜகுமாரனுடைய சம்ஸ்கார தசையிலே –
மந்திர ஔ ஷத சக்தி உடையனாய் இருப்பான் ஒருவன் வந்து –
உன் மகனைப் பிழைப்பிக்க இந்த ராஜ்யத்தை தா என்னிலும்
கொடுக்கும் படியான புத்திர வாத்சல்யத்தை உடைய ராஜாவின் பக்கலிலே –
ஒரு பிடி சோறு வேண்டி உண்டு ம்ருதனான ராஜ புத்ரனைப் பிழைப்பிக்கும் பிரக்ருதிமான்கள் எல்லாரும் உண்கிற சோற்றிலே இவனுக்கு இச்சை உண்டாய்த்து என்னா அந்த விஷ ஹரண சக்தியில் ஏதேனும் குறைந்தது இல்லை இறே –
அப்படியே எல்லாரும் ஸ்ப்ருஹை அர்த்த காமங்களிலே எங்களுக்கு ஸ்ப்ருஹை உண்டாய்தே ஆகிலும் நாங்கள் உபதேசிக்கிற ஜ்ஞானத்துக்கு -ஒரு சம்சார பந்தத்தை அறுத்து புருஷார்த்தை தர வல்ல சக்தி உண்டு என்று இரும் -என்று அருளிச் செய்தார் –
இத்தால் –
ஆசார்யனுக்கு ஆதல் -வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆதல் –
இதர சம்சாரிகளோ பாதி ஹேது சத்தா பிரயுக்தமான அர்த்த காம ப்ராவண்யம் உண்டாய்த்து என்னா –
இவர்களையும் பிரக்ருதி மான்களோ பாதி யாக நினைக்கல் ஆகாது –
எங்கனே என்னில் –
காமோபபோக பரமா ஏதாவதி தி நிஸ் சிதா -என்று அர்த்த காமங்கள்
புருஷார்த்தம் என்றிருப்பர் அஞ்ஞர் –
ஜ்ஞானவான்கள் சரீர அவசானத்தளவும் –
சத்ருசம் சேஷ்டதே ஸ்வ ஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞனவா நபி -இத்யாதி பிரக்ரியையாலே
வாசனா பிரயுக்தமாக செல்லக் கடவது என்று அருளிச் செய்தார் –
(சிந்தாம் அபரிமேயாம் ச ப்ரலயாந்தாம் உபாஸ்ரிதா–
காம உப போக பரமா ஏதாவதிதி நிஸ்சிதா–৷৷16.11৷৷
ஆஸூர ப்ரக்ருதிகள் -அளவிட ஒண்ணாததாய் பிரளய காலம் வரையில் இருந்து சாதிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியதான கவலையை உடையவர்களாய் காம அனுபவத்தையே பரம புருஷார்த்தமாக நினைப்பவர்களாய் புருஷார்த்தம் என்பது இவ்வளவே -இதற்கு மேல் இல்லை – என்னும் உறுதி பூண்டவர்களாய் உள்ளனர் –
ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞாநவாநபி–
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷
சாஸ்த்ரங்களினால் ஏற்படும் ஆத்ம தத்வ ஞானத்தை உடையவனும் தன்னுடைய அநாதியான விஷய வாசனைக்குத் தக்கபடி -உலக விஷயங்களிலேயே பழகுகிறான் -ஏன் எனில் – அசேதனத்தோடு சேர்ந்து இருக்கும் சேதனர்கள் அநாதி வாசனையையே பின் செல்கின்றனர் – அவர்களை சாஸ்திரம் செய்யும் நியமனம் என்ன செய்து விட முடியும் –)
————————————————————
நூற்று எழுபத்து ஆறாம் வார்த்தை
நஞ்சீயர் மடத்திலே பட்டருடைய மூத்த பெண் பிள்ளை –
காஞ்சோரிச் சருகுண்டோ -என்று கேட்டு வர அப்போது –
முன்வாயிலே சிலவற்றை பார்த்து காணாமையாலே இல்லை என்று –
பின்னையும் பார்த்தவாறே ஒரு கலத்திலே இட்டு –
தம்முடைய மடியிலே இட்டு கொண்டு எழுந்து அருளின வாறே
இத்தை ஒருவர் கையிலே வர விடல் ஆகாதோ –
நீர் கொண்டு எழுந்து அருள வேணுமோ -என்று பட்டர் அருளிச் செய்ய –
அப்பொழுது இல்லை என்று விட்ட மஹா பாபிக்கு ஆளிட்டு இருக்கவும் வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –
இத்தால்
ஆசார்ய புத்ர பௌத்ராதிகளும் ஆசார்யவத் அநு வர்த்தநீயர்
என்று கருத்து –
————————————————
நூற்று எழுபத்து ஏழாம் வார்த்தை
பட்டர் குடும்ப சஹிதமாக கூர குலோத்தமனிலே இருக்கிற நாளிலே –
திரு நந்தவனத்திலே அல்பம் உபஹதி உண்டாய்த்தென்னா –
திரு நந்தவனம் செய்கிற ஏகாங்கிகள் சில வார்த்தை சொன்னார்கள் என்று
பெரிய ஜீயர்-(கூர நாராயண ஜீயர்-கூர குலோத்தம தாஸர் இவர் வம்சத்தவர்) -அவர்களை அழைத்து –
நான் பெருமாள் திருக்குழல் சிக்கு நாறுகிறது என்றோ திரு நந்தவனம் செய்கிறது –
பட்டரது குடும்பத்துக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக
திரு நந்தவன வ்யாஜத்தாலே கோலினேன் அத்தனை அன்றோ –
என்று அருளிச் செய்தார் –
(இத்தால் -சிஷ்யனுக்கு ஆசார்ய குடும்பமே உத்தேச்யம் -என்றது ஆய்த்து)
(இதே வார்த்தை நஞ்சீயர் அருளிச் செய்ததாகவும் சொல்வர்)
————————————————–
நூற்று எழுபத்து எட்டாம் வார்த்தை
தூவியம் புள்ளு திரு அவதரித்தார் என்று –(பட்டர் திரு வம்சத்தில் )–
நம்பிள்ளைக்கு சிலர் விண்ணப்பம் செய்ய –
அப்போது அருகே சேவித்து இருந்த திருப் பேராச்சானைப் பார்த்து –
எனக்கு ஒரு தமையனார் திரு அவதரித்தார் –
என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –
(ஆச்சார்ய வம்சத்தில் பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தம்முடைய தமையனாரைப் போலவே கௌரவிக்கத் தக்கவர் -என்கிற நம்பிள்ளையுடைய பிரதிபத்தியைக் காட்டுகிறது)
———————————————
நூற்று எழுபத்து ஒன்பதாம் வார்த்தை
நம்பி திருவழுதி வள நாடு தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில்
சேவித்துப் போந்த ஸ்ரீ வைஷ்ணவர் அழ –
கெடுவாய் -செத்துப் போகிற நான் போகா நின்றேன் –
ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்க கேட்க இருக்கிற நீ ஏன் அழுகிறாய் –
என்று அருளிச் செய்தார் என்று -பிள்ளை அருளிச் செய்தார் –
(ஆச்சார்யன் ஸம்ஸ்லேஷம் பரமபத்தைக் காட்டிலும் உத்தேஸ்ய தமம் என்றதாயிற்று)
———————————————————–
நூற்று எண்பதாம் வார்த்தை
பெருமாள் கோயிலிலே ஒரு பாகவத ஜன்மத்திலே பிறந்தான் ஒரு ஊமை –
அஞ்சாறு வருஷம் ஊமையாய் இருந்து –
அநந்தரம் இரண்டு மூன்று சம்வத்சரம் காணாது இருந்து –
பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வர இந்த ஆச்சர்யத்தை காண்கைகாக
எல்லாரும் திரண்டு –ஊமாய் எங்குப் போனாய் என்று கேட்க –
அவனும் நான் ஷீராப்திக்கு போய் வந்தேன் என்ன –
அங்கே விசேஷம் என் என்று கேட்க –
சேனை முதலியார் உடையவராய் வந்து அவதரித்தார் –
என்று சொன்ன அநந்தரம் அவனைக் கண்டது இல்லை -என்று
சேநாபதி ஜீயர் அருளிச் செய்தார் –
(சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||)
யாதவ பிரகாசனோடே எம்பெருமானார் படித்து அருளுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தின்
ராஜாவினுடைய புத்ரியை ப்ரஹ்ம ரஷஸ்ஸூ பிடிக்கையாலே யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க யாதவ பிரகாசன் போகச் சொன்னான் என்று சொல்லும் கோள் -என்று
சொல்லிப் போக விட –
அவன் தன்னை அங்கு நின்று போகச் சொன்னேன் -என்று
ப்ரஹ்ம ரஷஸ்ஸூ சொல்ல –
யாதவ பிரகாசனும் போர குபிதனாய் சிஷ்யர்களையும் கூட்டிக் கொண்டு –
மஹா மந்தரத்தையும் ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ரஷஸ்ஸூ முன்னே போய் நிற்க –
ரஷஸ்ஸூம் முடக்கின காலை பின்னையும் நீட்டி –
வாராய் அடே யாதவ பிரகாசா நீ சபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று
அந்த மந்தரத்தையும் சொல்லி -நான் இவற்றுக்கு -போவேனோ
நீ உன் ஜன்மமும் அறியாய் –
என் ஜன்மமும் அறியாய் -என்ன –
ஆகில் நீ பிரானே சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆகில்
உன்னுடைய ஜன்மம் ஏது –
என்னுடைய ஜன்மம் ஏது -என்று யாதவ பிரகாசன் கேட்க –
உன்னுடைய ஜன்மம்
ஸ்ரீ மதுராந்தகத்திலே ஏரிக் கரையிலே ஒரு புற்றாய்
அதிலே ஒரு உடும்பாய் இருப்புதி -திருமலைக்கு பெரும் கூட்டம் போகிற போது –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏரிக் கரையிலே நீராடி அங்கே ஸ்வயம்பாகம் செய்து –
அமுது செய்து அருளின தளிகையின் கீழே சிந்தின பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதப்பட்டாய் –
அத்தாலே நீ இப்படி வித்வானாய் பிறந்தாய் –
இனி என்னுடைய ஜன்மம் ப்ராஹ்மண ஜன்மம் –
யாகம் பண்ணினேன் -மந்திர லோப க்ரியாலோபம் வந்தவாறே ப்ரஹ்ம ரஷஸ்ஸூ ஆனேன் -என்ன –
ஆனால் நீ யார்க்கு போவுதி -என்ன
உன்னுடன் வாசிக்கிறவரிலே ஒருவர் –
அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் என்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவர் -என்று
உடையவரைக் காட்டி –
அவர் திருவடிகளைத் தெண்டன் இட்டு -இவர் போகச் சொன்னார் ஆகில் போகிறேன் -என்ன –
ஆகில் இளையாழ்வார் நீர் போகச் சொல்லீர் -என்ன –
ஆனால் நீ போகிறதுக்கு அடையாளத்தைக் காட்டிப் போ என்ன –
இவ்வரசு முறிந்து விழும் -என்று
அவ்வரசை முறித்துக் கொண்டு போயிற்று –
யாதவ பிரகாசனும் -இளையாழ்வார் நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர் -என்று மிகவும் உபஸ்லோகித்து(கொண்டாடி புகழ்ந்து)
மீண்டும் தன்னுடைய மடமே வந்தான் –
(கோகர்ணன் சரித்திரம் மூங்கில் கண்ணி ஒவ்வொன்றாக முடிந்து ஏழாம் நாள் போன விருத்தாந்தம் இதே போல் உண்டு)
——————————————————–———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply