Archive for the ‘முதல் திருவந்தாதி’ Category

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -100 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு
நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்

பெறுவதும் அவனையே
பெறுகைக்கு சாதனமும்
அவனே என்று –
அத்யவசித்துப்   போவாய் –
என்கிறார் –

—————————————

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–எம்பெருமானையே
மனத்து வை–மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

—————————————

வியாக்யானம் –

ஓரடியும்-
எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட
ஒரு திருவடிகளும் –

சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும்
ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –

ஈரடியும் காணலாம் என்நெஞ்சே-
அவ்விரண்டு திருவடிகளும்
நமக்குக் காணலாம்
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் –

என் நெஞ்சே –
காண வேணும் என்று இருக்கிற நெஞ்சே
இதுக்கு உபாயம் ஏது என்னில் –

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி  –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம்
பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி
வாழும் அத்தனை
என்கிறார்  –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -99 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –
ஆன பின்பு  -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட
நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –
என்கிறார் –

——————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்ய வாளம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்ய வாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்து கொள்.

—————————————–

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே -நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –

நீயும்  உளையாய்   இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க்  காண் –

பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-

அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-

நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச்  சொல்லி வைக்குமா போலே –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன்  –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது ஹ்ருத்தாய்க் கொண்டு –
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய்  –
நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –

என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ வித்து -என்றவனோடு
வாசி இல்லை –

உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்

பின்னிவன்  என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத்  தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே

அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு
அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -4-5-10-என்னுமா போலே –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -98 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

அவிர் சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு
அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று
இவனைக் குறையச் சொல்லுகிறது என்-
அவனைத் தனியே ஈஸ்வரனாகவும்
அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது
என்னில்
அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது
அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –

—————————————

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடைமுடியை யுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

—————————–

வியாக்யானம் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும் –
பொன் போலே உஜ்ஜ்வலம் ஆகா நின்றுள்ள
வடிவையும் பின்னின சடையையும் உடைய

அம் புண்ணியனும்
அழகியதாக சாதனத்தை அனுஷ்டித்து உள்ளவனும் –

பொன் திகழும் மேனி –
சர்வேஸ்வரன் மேக ஸ்யாமனாய் இருக்கும் இறே –
அதுக்கு எதிர் தட்டு

புரி சடை –
தாழ் சடையானுக்கும் நீண்  முடியானுக்கும்
வாசி பார்த்துக் கொள்ளும் இத்தனை இறே

அம் புண்ணியனும் –
ஹூத்வாத்மா நம் தேவதேவோ பபூவ -என்னும்படியே
பாபம் ப்ராமாதிகம்
இப் பததுக்கு அடியாகப் பண்ணின புண்யம் –

நின்றுலகம் தாய நெடுமாலும்
ஸ்வைரமாக ஆதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும்
ருத்ரன் தன்னோடு பிறரோடு வாசி அற
எல்லார் தலைகளிலும் திருவடிகளை
நின்ற இடத்தே நின்று வைக்கப் பிறந்த சர்வேஸ்வரனும்-

என்றும் இருவரங்கத்தால் திரிவரேலும் –
எப்போதும் இரண்டு தேஹத்தைப் பரிஹரித்துக் கொடு
திரிந்தார்களே யாகிலும் –

ஒருவன் ஒரு வனங்கத் தென்று முளன் –
ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்

அன்றிக்கே
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி
லப்த ஸ்வரூபனாய் இருக்கும் என்னுதல்-
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – திருவாய்மொழி -1-3-9-என்னும்படியே –

ஆக
இத்தால்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்  தெய்வம் மற்றில்லை -திருவாய்மொழி -4-10-3-என்றபடி –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -97 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று
அவனையே பாவனத்வமாகச் சொன்னீர்
புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ
என்னில்
அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம்
என்கிறார் –

பிடிசேர்
கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  –

——————————————–

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடை மேல்–ஒளி பொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜலமயமான
கங்கை என்னும் பேர்–கங்கை யென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்–சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

———————————–

வியாக்யானம் –

பிடிசேர் களிறளித்த பேராளா –
பிடியோடு சேர்ந்த களிறு ஆயிற்று

அதாகிறது
அத்தோடு சேரத் திரியுமதுக்கு மேல் பட
ஸ்வ ஹிதத்தில் ஒரு சிந்தை பண்ணி அறியாதாய்த்து –
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷூ -என்னுமவன் இறே மோஷத்துக்கு அதிகாரி

அன்றிக்கே
தன் பக்கல் பிரவணம் ஆகாதே
விஷய ப்ரவணமாகை இறே பாபம் ஆவது –

பிடியின் பக்கலிலே ப்ரவணமாய் –
தன் பக்கலிலே இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது
தான் இட்ட வழக்காக வேண்டாவோ

அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்து இருந்திலையோ  –
ஒருக்கால் நினைத்தானே என்னில் முன்புத்தை ஸ்வரூபம் இது வன்றோ என்கிறது
இத்தால் ஜன்ம வ்ருத்தங்கள் பிரயோஜகம் அன்று -என்கிறார்

அளித்த பேராளா –
அத்தை நோக்கின பெரியோனே
இப்படி அதிகாரி சம்பத்தி இல்லாதவனையே ரஷித்தான் என்றால்
அவன் செய்தானாகில் கூடும் என்று இருக்கை-

பேராளா  –
அவ்வளவேயோ உன் கிருபை
எல்லா வுலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ -திருவாய்மொழி -3-3-3-

உந்தன் அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –
உன் திருவடிகளை கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் பெற்றது

இத்தால்
தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது

க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
கங்கை தனக்கே தர்மத்வம் சொல்லா நின்றது இறே என்னில்

அதினுடைய பாவனத்வத்துக்கும் அடி அவன் என்கிறது –
பிறரையும் சுத்தமாக்கும்படி பார்த்து அருளினான் –

பொடி சேர் –
பஸ்மத்தை தரித்து இருக்கும் என்னுதல்
அதிலே போய்ச் சாயும் என்னுதல்-

அனற்கு அங்கை ஏற்றான் –
அக்னிக்கு அழகிய கையை ஏற்றான்
பஸ்மத் சந்தன் இறே
இது ஒழிந்த பிராயச் சிந்தங்களால்  பாபம் போகாது ஒழிந்த படி
இவனுடைய ஈஸ்வர அபிமானத்தை வந்தேறி யன்றே என்று இருந்தான் –

ஸ்வா பாவிக சம்பந்தத்தையே நினைத்து ரஷித்தான்-

அவனுடைய
அவிர்சடை  மேல் பாய்ந்த-
ஒளியை யுடைய சிவந்த சடையின் மேலே வந்து குதித்த நீரை
உடையளாய் கங்கை என்னும் பேரையும் உடையளாய்
ஸ்லாக்யையான ஸ்த்ரீயானவளும் –

உந்தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்-பெரியாழ்வார் திருமொழி -4-7-2-
பாதோதகேன ச சிவா
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை
உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை
யத் த்வத் ப்ரியம் ததி ஹ புண்யம் அபுண்ய மன்யத் -அதிமாநுஷ ஸ்தவம் -53-

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -96 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

சேதனர் செய்தபடி செய்ய
நெஞ்சே
நீ முன்பு நான் சொல்லுகிற இத்தை அழகிதாக புத்தி பண்ணு
என்கிறார் –

————————-

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான்–இந்தப் பூமியும்
மறி கடல் தான்–அலையெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலே யாவன்;
கடைக் கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மை யென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக் கொள்.

——————————

வியாக்யானம் –

திறம்பாது கடைக்கட் பிடி -என்று
மேலே கூட்டவுமாம் –

திறம்பாது அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்-என்று
எம்பெருமானோடே கூட்டவுமாம்

அன்றிக்கே
திறம்பாது என் நெஞ்சமே-என்று கிடந்தபடியே என்னவுமாம்

நான் சொல்லிற்று தப்பாதே செய்து போருகிற நெஞ்சே
அர்த்த தத்வம் கண்டு அல்லது கால் வாங்கேன் என்று இருக்கிற நெஞ்சே

என் நெஞ்சமே –
சொல்லு சொல்லு என்று அலைக்கிற நெஞ்சே –

செங்கண் மால் கண்டாய்-
புண்டரீகாஷனான  சர்வேஸ்வரன் கண்டாயே
யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் -திருவாய்மொழி -6-7-10-

அன்றிக்கே
செங்கண் மால்
நம் விஷயத்தில் அவன் இருக்கிறபடி கண்டாயே –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் –
புண்ய பாப ரூப கர்மங்கள் ஆகிறான் அவன் கிடாய்
அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்களுக்கு புறம்பாய் நின்று
பல பிரதமாக வல்லது ஓன்று இல்லை கிடாய்

விஹிதத்தைச் செய்து
நிஷிதத்தைப் பரிஹரித்து போருகிற  நம்மோடு
விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில்

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி –
தம்முடைய பக்கல் கர்த்ருத்வம் தவிர்ந்த பின்பு ஓர் அசேதன கிரியையைப் பற்றுமவர் அன்றே

செங்கண் மால் கண்டாய் –
சர்வ நியந்தா கிடாய் அவன் -என்கிறார் –
திறம்பாது அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்
அவனை ஒழியப் புண்ய பாபம் என்று தோற்றுவது
ஆபாத ப்ரதீதியில்
நிலை நின்று பார்த்தால் அவனே கடவும் என்று தோற்றும்
எங்கனே என்னில்  –

புறம் தான் இம் மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே-
சர்வமும் பகவததீனம் அன்றோ
இம் மண்ணும் மறி கடலும் மாருதமும் புறம் தான்
இவற்றுக்கும் அவ்வருகான மகாதாதிகளும் இவை எல்லாம் ஆகிறான் அவன் கிடாய் என்கிறார்
பிரதிபந்தகமான அசித்தோடு கூடிய சேதனமும் அவனே –

கண்டாய்  கடைக்கட்   பிடி-
இத்தைக் கடைப்பிடி -என்றபடி –
அன்றிக்கே
கடைக்கண் என்றாக்கி முடிவில் வந்தால் இருக்கும்படி அது கிடாய்
இத்தை திறம்பாது பிடி –
தவிராமல் புத்தி பண்ணு

மண் தான் இத்யாதி –
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிருமானாய் -திருவாய்மொழி -6-9-7-
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமே நிரங்குசமாகச் சொல்லா நிற்க
இங்கே தன் ஸ்வா தந்த்ர்யம் சொல்லுகிறபடி எங்கனே என்னில்

கார்யத்தில் ஒன்றும் இல்லை
பிரதிபத்தி மாத்ரமே இவனுக்கு உள்ளது
அன்யதா ப்ரதிபத்யதே
அவன் கிருபையாலே இவன் சத்தை அழியாதே கிடக்கிற இத்தனை –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -95 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

என் நா அவனை ஒழிய ஷண காலமும் ஏத்தாது என்றாரே
பாவியேன் இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு
சேதனர் சம்சாரத்துக்குப்
பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என் என்று
விஸ்மிதர் ஆகிறார் –

————————–

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ஸ்ரமப்படுத் தேட வேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப் பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம் போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக் கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத்தன்மை யற்ற [திரும்பி வருதலில்லாத]
மா கதிக்கண்–பரம ப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகை யுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படி யிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக்கதிக் கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

———————————

வியாக்யானம் –

நா வாயில் உண்டே –
இது முன்னம் புறம்பு போய்த் தேட வேண்டாவே
இத்தை ஈஸ்வரன் பண்டே தந்து வைத்தானே
நாவாகில் அவனை ஏத்தக் கண்டது இறே
ஸ்ருஷ்டத்வம் வன வாசாய -அயோத்யா -40-5-என்னுமா போலே –

நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சகஸ்ராஷரீ மாலா மந்த்ரம் என்கிறவை போலே
நீள  நீள ஒரு நாள் எல்லாம் சொல்லா நின்றாலும் முடிவு கொண்டு வர
ஒண்ணாத படி இருக்கை அன்றிக்கே
பத்து உருச் சொல்லி ஒரு கால் இளைப்பாறும் படியான
திருமந்த்ரத்தைத் தந்து வைத்தானே

அந் நாக்குக் கண்டவோபாதி திரு நாமும் இவனுக்கு -அவனே அருளி தந்ததே
கிம் தாத்ரா பஹூபிர் மந்த்ரை-
மற்றை பகவத் மந்த்ரங்களைச் சொல்லுகிறது  –

மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை  உண்டே –
சில நாள் இருந்து
பின்னை த்வம்ஸ என்று முகம் கீழ்ப் படத் தள்ளுகை அன்றிக்கே
அபுநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை
ப்ராபிக்கும் மரியாதையை உண்டாக்கி வைத்தானே –

என்னொருவர் தீக்கண் செல்லும் திறம் –
இவை இங்கனே குறைவற்று இருக்க
சம்சாரத்தைச் சென்று
ப்ராபிக்கிற பிரகாரம் இருந்தபடி என்

உஜ்ஜீவிக்கைக்கு நேர் வழி கிடக்க
விநாசத்துக்கு ஈடான விலக்கடி தேடி
அனர்த்தப் படுவதே

அநாத்மன் யாத்மா புத்திர்யா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11 –

ஸ்ரீ ஈட்டில்(-1-2-8) ஸ்ரீ ஸூக்திகள்
நா வாயில் உண்டே -இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே –
நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -சஹஸ்ர அக்ஷரமாலா மந்த்ரம் போல் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தாய் நடுவே விச்சியாதே சொல்லலாம் திரு நாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதி கண் செல்லும் வகை உண்டே -புநரா வ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை யுண்டாக்கி வைத்தானே
என் ஒருவர் தீக்கதி கண் செல்லும் திறம் -இங்கனே இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிறது எங்கனேயோ –

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -94 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா
அவ் வழியே துர்யோதன கோஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் –

அதாவது
பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல்

அன்றிக்கே
பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால்

செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும்
கீழில் பாட்டுக்கு சேஷமாக்கி நிர்வஹித்தல்
அன்றிக்கே
இப்பாட்டு தனக்கு உடலாக்குதல்    –

—————————————–

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெரு முயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தி யுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

——————————————

வியாக்யானம் –

செற்று எழுந்து தீ விழித்துச் –
பீஷ்மாதிகளுக்கு ஆக்கின போது மேல் முடிக்கக் கடவ
படியை யடங்க ரூப தர்சனத்தாலே
தெரிவித்த படியைச் சொல்லிற்று ஆகிறது –

தூது போனதாகில் இனியொரு தூது வேண்டா வென்று
துரியோநாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –

அன்றிக்கே
ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்குக் காட்டின போது
அந்த சம்ஹார சமயத்தில் கொண்ட வடிவாகிறது –

சென்ற  விந்த வேழ் உலகும் –
தன் பக்கலிலே சேர்ந்து கிடக்கிறதான
ஏழு உலகங்களையும் –

மற்றிவையா வென்று வாய் அங்காந்து –
அவையாகிறன இவை தான் என்று வாயை
அங்காந்து காட்டினான் ஆய்த்து
தத பஸ்ய மஹம் சர்வம் தஸ்ய குஷு மகாத்மான -பார ஆரண்ய காண்டம் -191-123  -என்னும்படியே

அன்றிக்கே
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை -திருவாய்மொழி -8-7-9-என்னக் கடவது இறே-

முற்றும் மறையவர்க்குக் காட்டிய-
தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –

மறையவர்க்கு
ரேபாந்தனான போது ஸ்ரீ பீஷ்மாதிகள் ஆகிறது

மறையவற்க்கு
என்று னகர ஓற்றான போது ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு ஆகிறது –

மாயவனை யல்லால் –
ஆச்சர்ய பூதனை அல்லால்
ஒருக்கால் சாமான்ய ரஷணத்திலே
ஒருக்கால் ஆஸ்ரித அர்த்தமாக –

இறையேனும் ஏத்தாது என் நா –
என் நாவானது ஷண  காலமும் ஸ்தோத்ரம் பண்ணாது –

இறையேனும் –
பர வ்யூஹாதிகளில் போகாது –

ஏத்தாது என் நா –
எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -93 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷ பாதம் சொல்லிற்றே நின்றது
நீர் சொல்லுகிற பஷ பாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன

இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன்  மேலே சீறினாயோ
அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-என்கிறார்-

கீழில் பாட்டில்-வாத்சல்யமாய்
வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார்  –

——————————

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று -93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக் கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

————————————

வியாக்யானம் –

வயிறு அழல வாளுருவி வந்தானை –
கண்ட அனுகூல வர்க்கம் அடங்கலும் வயிறு எரியும்படியாக வாளை உருவிப்
பிடித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று

எங்கனே யுய்வர்  தானவர் நினைந்தால் -பெரிய திரு மொழி -5-7-5-என்று
நரசிம்ஹத்தைக் கண்டால்
அசூர ராஷச ஜாதியாகப் படும் பாட்டை
இவனைக் கண்டு அனுகூல ஜாதி படும்படி

வயிறு அழல –
வயிறு அழலுகிறது ஆர்க்கு என்னில் -ஆழ்வார்க்கு –
முன்பு ஒரு நாள் ஹிரண்யன் பகையாகச் செய்தானாய் இராதே
தம் எதிரே வாள் உருவிக் கொண்டு புறப்பட்டாப் போலே இருந்தபடி

என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-என்றபடியே

அஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்தத் -17-5-

யஞ்ச எயிறிலக  வாய் மடுத்த தென் நீ –
அவன் வெறுவும்படிக்கு ஈடாக எயிறுகள் ஆனவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்
நாய்ச்சிமார்க்கும் ஸ்ப்ருஹணீயமாம்படி இருக்கிறது காணும்
இப்போதைய அட்டஹாசம்
போக்கற்ற விடத்தில் செய்யும் செயல் இறே இது
பிராட்டிமார்க்கு சம்போதகத்தில் திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும் படிக்கு ஈடாக ஹாசமே அமையும் படியாய் இருக்கிறது –

பொறி யுகிரால் -இத்யாதி –
நாநா வர்ணமாய்
தர்ஸநீயமான உகிராலே-
சம்போகத்துக்கு ஏகாந்தமான அழகை உடைய உகிராலே –

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா –
சௌகுமர்யத்தாலும் அழகாலும் பூவினுடைய அழகு தான்
தள்ளுண்டு போம்படி இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை தரிப்பதான கையை உடையவனே
அறு காழியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

நின் சேவடிமே லீடழியச் செற்று –
நாய்ச்சிமார் சாய்ந்து அருளும் படியான திருவடிகளின் மேலே அவனை ஏறிட்டு -என்னுதல்
என்றும் நாங்கள் ஆசைப் பட்டுப் பெறுகிற திருவடிகளிலே என்னுதல் –

மறுமூட்டுப் பொறாமல் சிந்திப் போம்படிக்கு ஈடாக முடித்துப் பின்னையும்
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
சங்கல்பம் தவிர்ந்து
திருவாழி தவிர்ந்து
திரு உகிராலே பிளந்து
பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வது என்

அவன் முடிந்த போன பின்பும் சீற்றம் மாறாதே இருந்ததுக்கடி
சிறுக்கன் பக்கல் உண்டான வ்யாமோஹாதிசயம் இறே –
முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு-

மரணாந்தானி வைராணி -யுத்தம் -114-101-இறே அது

த்வயி கிஞ்சித் சமா பன்னே -கிம் கார்யம் சீதயா மம -யுத்த 41-4-என்னும் விஷயத்தில் இப்படியே

கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இறே வாத்சல்யம்
முன்னணை  கன்றைக் கொம்பிலே சூடுகை இறே –

கொண்ட சீற்றம் உண்டு என்று
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்

ததோ ராமோ மகா தேஜா யுத்தத் -59-136
கண்டு கொண்டு இருக்கும் விஷயம் எதிர் விழுக்க ஒண்ணாத படி யாவதே
பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும் நெருப்பானால் விலக்காவது உண்டோ –

ராவனேன க்ருத  வ்ரணம்
கொசுகாலே சிம்ஹத்துக்குப் பரிபவம் வந்தவோபாதி
தன் செலவிலே ஆதித்ய மண்டலத்தைப் பழம் என்று பாஞ்சு வந்த  வ்ரணம் போலேயோ இது

த்ருஷ்ட்வா கோபச்ய வசமேயிவான் –
கண்ட பின்பு பெருமாளைக் கண்டதில்லை
தம்மை மறந்தார்
திருவடியை மறந்தார்
ந ராவண சஹச்ரம் மே -என்னுமவன் இறே

அவன் அப்போது ப்லாவக சார்த்தூலன் ஆனான்
கோபஸ்ய வசமே இவான்
அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்

கருத் யத்யபி சப்தோபி க்ரோத நீயானி வர்ஜயன்
ச ச நித்யம் ப்ரசாந்தாத்மா -என்னும் படி இறே அது –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -92 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

கீழே
ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று
இங்கு
அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன்
என்கிறது –

அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –

ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்

இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் –

———————————————————–

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

பதவுரை

வான் ஆகி–ஆகாசமாகியும்
தீ ஆய்–அக்நியாகியும்
மறி கடல் ஆய்–அலை யெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய்–காற்றாகியும்
தேன் ஆகி–தேன் போன்றும்
பால் ஆம்–பால் போன்றும் பரம போக்யனான
திருமாலே–எம்பெருமானே!
முன் ஒரு நாள்–பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை–(பிரளய காலத்தில் உட் கொண்டிருந்த) இவ் வண்டத்தை
உமிழ்ந்த-(உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு–உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய்–இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதை யென்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
விழுங்க–அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே–நிறைந்து விடுமோ? [நிறைய மாட்டாது]

——————————————————–

வியாக்யானம் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் –
பூத பஞ்சகங்களாலும்
ஆரப்தமான அண்டாந்தர வர்த்தி புருஷர்களுக்கு நிர்வாஹகனாய் –

தேனாகிப் பாலாம் திருமாலே –
சர்வ ரச-என்கிறபடியே
நித்ய விபூதியிலே உள்ளார்க்கு போக்யனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறது –

தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்

ஆக
இவ்விரண்டாலும்
உபய விபூதி யுக்தன் -என்றபடி –

உபய விபூதி யோகத்துக்கும் மேலாய்
ஒரு ஐஸ்வர்யம் போலே காணும்  ஸ்ரீயப்தித்வமும் –
ஆகைத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கும்
காமிநிக்கைக்கும்
ஒரு விஷயம் உண்டாவது என்றபடி

அவள் திரு முலைத் தடத்திலும் வெண்ணெய் போக்யமான படி
அது போக்யம் –
இது தாரகம் -என்றபடி

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் உரலினோடு இணைந்து இருந்து
ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய்மொழி -1-3-1-என்னக் கடவது இறே –

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ  நீ செய்தது –

ஆனாய்ச்சி வெண்ணெய் –
வெண்ணெயிலே அல்பம் முடை நாற்றம் குறையில் புஜியான் யாய்த்து

நிறையுமே –
குறைக்கும் இட்டு அடைக்க வேணும்

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

—————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -91 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும்
இதர விஷயங்களிலே ருசி யற்று
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது –
என்கிறார் –

ஹேயத்திலே ஹேயதா புத்தியும்
உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும்
வேண்டாவோ -பேற்றுக்கும்

கீழில் பாட்டில்
ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று –

இதில் –
ருசி தான் வேண்டுவது –
என்கிறது –

—————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–தத்வ ஜ்ஞாநமாகிற
சுடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

——————————————-

வியாக்யானம் –

ஊனக் குரம்பையினுள் புக்கு –
தோஷமே யான தேஹத்திலே தோஷம் உள்ள எல்லை யளவும் செல்ல அவகாஹித்து –
மாம்ஸ மயமான தேஹம் என்னக் கடவது இறே

ஹேயமாய் அல்பமாய் அஸ்திரமாய் அனர்த்தமாய் பீபத்சமாய் அகவாய்
தெரியாதபடி மேலே தோலை வைத்து மினுக்கி
ஆபாத ப்ரதீதியில் நன்று என்று தோற்றும் படி இறே இருப்பது

குரம்பை என்கிறது
ஆத்மாவுக்கு ஒரு குடிலோபாதி ஆகையாலே –

இருள் நீக்கி –
அத்தை போக்யம் என்று இருக்கிற
அஞ்ஞானத்தைப் போக்கி –

ஞானச் சுடர் கொளீஇ –
ஞானம் ஆகிற தேஜஸ் சைக் கொளுத்துவது –

விளக்கை ஏற்றுவது –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக ஈஸ்வர ஜ்ஞானத்தையும் உண்டாம்படி பண்ணி
பிரகாரமான தன்னையும் விட்டு
பிரகாரியான தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கி
ஸ்வ ரூபம் உண்டாய்
ஒருகால் இல்லையாமதல்ல –
அத்தை மறைக்கில் ப்ரயோஜ நாந்த்ரங்களும்
உபாயாந்தரங்களும் தலை எடுக்கும் –

நாடோறும் ஏனத் துருவா யுலகிடந்த -ஊழியான் பாதம்  மருவதார்க்கு உண்டாமோ வான்
தன் விபூதி  அழிய
தன்னைப் பேணி இருக்கை அன்றிக்கே
தன்னை அழிவுக்கு இட்டு நோக்கும் ஸ்வ பாவனானவன்
திருவடிகளிலே நாடோறும் வாசனை பண்ணாதார்க்கு
நித்ய விபூதி உண்டாமோ –

நாடோறும் –
நாடோறும் ஏக சிந்தையனாய்
ஏனத்து உருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –

ஊழியான் –
நாம் இல்லாத காலத்து உளனாய்
நம்மை ரஷிக்குமவன்

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார்  பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு  உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

கரணம் பிழைக்கில் மரணமாம் படியான பிரமாதத்தால் வருமவற்றுக்குப் பரிஹாரம் சொன்ன இத்தனை போக்கி
ப்ராப்ய ருசி இல்லாதார்க்கு ப்ராப்ய சித்தி உண்டாகச் சொல்லிற்றோ –

ஒருக்கால் அவனே கடவன் என்று சொல்லி
பின் பழைய வலையையே வர்த்திப்பித்துத் திரிய பேறு உண்டாமோ

முன்பு இது நெடும் காலம் இழந்தது இவ்வஸ்துவுக்கு யோக்யதை இல்லாமை யன்றே
ருசி இல்லாமை இறே

அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும்
அப்பெரிய பேற்றை பெரும் போது
தனக்கு ருசி வேண்டாவோ –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –