அவதாரிகை –
இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –
ஆன பின்பு -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –
நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட
நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –
என்கிறார் –
——————————————–
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-
பதவுரை
நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்ய வாளம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்ய வாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்து கொள்.
—————————————–
வியாக்யானம் –
உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே -நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –
நீயும் உளையாய் இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க் காண் –
பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-
அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-
நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச் சொல்லி வைக்குமா போலே –
நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –
உத்தமன் –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது ஹ்ருத்தாய்க் கொண்டு –
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய் –
நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –
என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ வித்து -என்றவனோடு
வாசி இல்லை –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன் என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத் தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு
அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -4-5-10-என்னுமா போலே –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply