அவதாரிகை –
கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷ பாதம் சொல்லிற்றே நின்றது
நீர் சொல்லுகிற பஷ பாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன
இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன் மேலே சீறினாயோ
அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-என்கிறார்-
கீழில் பாட்டில்-வாத்சல்யமாய்
வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார் –
——————————
வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று -93-
பதவுரை
பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக் கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.
————————————
வியாக்யானம் –
வயிறு அழல வாளுருவி வந்தானை –
கண்ட அனுகூல வர்க்கம் அடங்கலும் வயிறு எரியும்படியாக வாளை உருவிப்
பிடித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று
எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் -பெரிய திரு மொழி -5-7-5-என்று
நரசிம்ஹத்தைக் கண்டால்
அசூர ராஷச ஜாதியாகப் படும் பாட்டை
இவனைக் கண்டு அனுகூல ஜாதி படும்படி
வயிறு அழல –
வயிறு அழலுகிறது ஆர்க்கு என்னில் -ஆழ்வார்க்கு –
முன்பு ஒரு நாள் ஹிரண்யன் பகையாகச் செய்தானாய் இராதே
தம் எதிரே வாள் உருவிக் கொண்டு புறப்பட்டாப் போலே இருந்தபடி
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-என்றபடியே
அஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்தத் -17-5-
யஞ்ச எயிறிலக வாய் மடுத்த தென் நீ –
அவன் வெறுவும்படிக்கு ஈடாக எயிறுகள் ஆனவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்
நாய்ச்சிமார்க்கும் ஸ்ப்ருஹணீயமாம்படி இருக்கிறது காணும்
இப்போதைய அட்டஹாசம்
போக்கற்ற விடத்தில் செய்யும் செயல் இறே இது
பிராட்டிமார்க்கு சம்போதகத்தில் திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும் படிக்கு ஈடாக ஹாசமே அமையும் படியாய் இருக்கிறது –
பொறி யுகிரால் -இத்யாதி –
நாநா வர்ணமாய்
தர்ஸநீயமான உகிராலே-
சம்போகத்துக்கு ஏகாந்தமான அழகை உடைய உகிராலே –
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையா –
சௌகுமர்யத்தாலும் அழகாலும் பூவினுடைய அழகு தான்
தள்ளுண்டு போம்படி இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை தரிப்பதான கையை உடையவனே
அறு காழியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
நின் சேவடிமே லீடழியச் செற்று –
நாய்ச்சிமார் சாய்ந்து அருளும் படியான திருவடிகளின் மேலே அவனை ஏறிட்டு -என்னுதல்
என்றும் நாங்கள் ஆசைப் பட்டுப் பெறுகிற திருவடிகளிலே என்னுதல் –
மறுமூட்டுப் பொறாமல் சிந்திப் போம்படிக்கு ஈடாக முடித்துப் பின்னையும்
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
சங்கல்பம் தவிர்ந்து
திருவாழி தவிர்ந்து
திரு உகிராலே பிளந்து
பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வது என்
அவன் முடிந்த போன பின்பும் சீற்றம் மாறாதே இருந்ததுக்கடி
சிறுக்கன் பக்கல் உண்டான வ்யாமோஹாதிசயம் இறே –
முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு-
மரணாந்தானி வைராணி -யுத்தம் -114-101-இறே அது
த்வயி கிஞ்சித் சமா பன்னே -கிம் கார்யம் சீதயா மம -யுத்த 41-4-என்னும் விஷயத்தில் இப்படியே
கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இறே வாத்சல்யம்
முன்னணை கன்றைக் கொம்பிலே சூடுகை இறே –
கொண்ட சீற்றம் உண்டு என்று
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்
ததோ ராமோ மகா தேஜா யுத்தத் -59-136
கண்டு கொண்டு இருக்கும் விஷயம் எதிர் விழுக்க ஒண்ணாத படி யாவதே
பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும் நெருப்பானால் விலக்காவது உண்டோ –
ராவனேன க்ருத வ்ரணம்
கொசுகாலே சிம்ஹத்துக்குப் பரிபவம் வந்தவோபாதி
தன் செலவிலே ஆதித்ய மண்டலத்தைப் பழம் என்று பாஞ்சு வந்த வ்ரணம் போலேயோ இது
த்ருஷ்ட்வா கோபச்ய வசமேயிவான் –
கண்ட பின்பு பெருமாளைக் கண்டதில்லை
தம்மை மறந்தார்
திருவடியை மறந்தார்
ந ராவண சஹச்ரம் மே -என்னுமவன் இறே
அவன் அப்போது ப்லாவக சார்த்தூலன் ஆனான்
கோபஸ்ய வசமே இவான்
அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்
கருத் யத்யபி சப்தோபி க்ரோத நீயானி வர்ஜயன்
ச ச நித்யம் ப்ரசாந்தாத்மா -என்னும் படி இறே அது –
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply