ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)
பூர்வ அனுபூத -முன்னால் அனுபவித்த
முரவைரி குண அபி வ்ருத்த -பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற
பாஹ்ய சங்கம ருசி (-1-10-) –தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)
———————————————————————
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்
நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-
1-நித்ராதிச் சேதகத்வாத்-
மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—
தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்
2-அரதி ஜநநதோ-
கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–
ஒரு காலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்
3-அஜஸ்ர சங்ஷோப கத்வாத் –
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–
சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்
4-அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-
திவாராத்ரி விபாகமற எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
காரார் திருமேனி காணும் அளவும்
5-விலய விதரணாத்-
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–
முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்
6-கார்யஸ்ய தைந்யாதி கிருதத்வாத் –
நாண் மதியே! நீ இந்நாள் மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–
கார்ஸ்ய தைந்யாதிகளைப் பண்ணுகையாலும்
7-சிந்தா ஷோபாத்–
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—
மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்
8-வி சம்ஜ்ஜீகரணத–
மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–
ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்
9-உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–
காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்
10-த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –
நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று
வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்
———
ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —
வாயும் திரை யுகள் பிரவேசம் –
முதல் பத்தில் கைங்கர்ய புருஷார்த்தத்தை உபஷேபித்தார்-
இரண்டாம் பத்தில் அதின் களை அறுக்கிறார் –
கீழ்த் திருவாய் மொழியில் பரத்வ ஸுவ்லப்யங்களையும் வடிவு அழகையும் அனுபவித்து
அத்தால் பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அப்போதே அது கிடையாமையாலே ஆர்த்தராய்
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்
தன் பரிசரத்தில் உள்ள பஷிகளையும் தன்னைப் போலே பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவைகளுக்குமாகத் தான் நோவு படுகிறார் –
——-
வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-
முதல் பாட்டு
கிட்டா நின்றுள்ள அலைகளானவை மேலே தாவிப் போகா நிற்கிற கழிக் கரையிலே இருக்கிற
பற்றிற்று விடாத நாராய்
என்னுடைய தாய் உறங்கிலும்
தேவ லோகம் உறங்கிலும்
நீ உறங்காயோ -ஐயோ இது என்ன தஸை
ப்ரேம வியாதியும் வை வர்ண்யமும் மேலே பரம்பும் படி எண்ணெய் போலே நீயும்
ஸ்ரீ யபதியாலே நெஞ்சு பறி யுண்டாய் ஆகாதே -என்கிறாள் -வாயும் திரையுகள் -இத்யாதியால் –
——–
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-
இரண்டாம் பாட்டு
தீக்ஷணமான வாக்கையுடைய அன்றில் பஷியே
அபஹ்ருதமான மனஸ்ஸை யுடையையாய்க் கொண்டு தீர்க்கமான யாமங்கள் எல்லாம்
படுக்கையிலே சேராதே சிதிலை யாகா நின்றாய்
என்னைப் போலே நீயும் அநந்த சாயியான அவனுடைய திருவடிகளிலே பட்டுக்
குளிர்ந்த திருத்துழாய் மாலையை ஆசைப் பட்டாயாகாதே -என்கிறாள் -கோட்பட்ட இத்யாதியால் –
———
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-
மூன்றாம் பாட்டு
வாராய் கனையா நின்றுள்ள கடலே
ஆசைப்பட்ட பொருள் இழவோடே இரவும் பகலும் நீ முற்றக் கண் உறங்கா இருந்தாய்
பின்னையும் ஹ்ருதயம் நீராய் உருகிக் கூப்பிடா நின்றாய்
அக்னியை முழுக்கத் தென்னிலங்கையை உண்ணப் பண்ணினவனுடைய திருவடிகளை ஆசைப்பட்ட
நான் அபேக்ஷித்தத்தை அபேக்ஷித்தாயோ
நீ வாழ்ந்திடுக -என்கிறாள் காமுற்ற இத்யாதியாலே
——–
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-
நாலாம் பாட்டு –
சமுத்ரத்தையும் பர்வதத்தையும் ஆகாசத்தையும் துழாவிக் கொண்டு என்னைப் போலே
சந்த்ர ஸூர்யர்களைக் கொண்டு இருக்கும் இரவும் பகலும் உறங்குகிறாய் இல்லை –
குளிர்ந்த வாடையே
வலி மிக்கு இருந்துள்ள ஆயுத ஸ்ரேஷ்டமான திருவாழியை யுடைய ஸ்வாமியைக் காண்பானாய்
நீ ஸரீரத்திலே பஹு சாலமாக வியாதியை அடைந்தாய் ஆகாதே -என்கிறாள் -கடலும் இத்யாதியால் –
———
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-
அஞ்சாம் பாட்டு –
கல்பங்கள் தோறும் இவ்வுலகுக்கு வேண்டும் நீரை முகந்து கொண்டு தோழியையும் என்னையும் போலே
கரைந்து நீராய் நெகிழ்கிற மேகமே -நீ வாழ்ந்திடுக
நீயும் மது ஸூதனனுடைய விரோதி நிரசன சீலத்திலே அகப்பட்டு
அவன் இடத்தில் உண்டான ஆசா பாசத்தாலே நையா நின்றாய் ஆகாதே -என்கிறாள் -நைவாய இத்யாதியால்
————
நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-
ஆறாம் பாட்டு –
நைவே ஸ்வ பாவமாக இருக்கிற என்னைப் போலே கலா மாத்ரமான சந்திரனே –
நீ இந்நாள் மை போலே இருக்கிற ஆகாஸத்தில் இருளைப் போக்க மாட்டிற்று இல்லை –
மழுங்கிக் குறையா நின்றாய் -ஐயோ இது என்ன தசை
ஐந்து வாயையுடைய அரவணை மேலே கண் வளரா நின்றுள்ள திருவாழியை யுடைய ஸ்வாமியின்
மெய்யான வார்த்தையைக் கேட்டு உன் வடிவில் தேஜஸ்ஸை இழந்தாய் ஆகாதே -என்கிறாள் -நைவாய -இத்யாதியால்
——-
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-
ஏழாம் பாட்டு
எங்களுக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு நெஞ்சை இழந்தோமாய்க் கொண்டு
எங்களுடைய ஆற்றாமையை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டாய் அழுகிற எங்களைப் பற்ற
நீ நடுவே வந்து சத்ருக்கள் படியிலும் க்ரூரமாய் அநேக காலம் விரோதத்திலே நிலை நிற்பாயோ
நெருங்கின இருளே -நீ வாழ்ந்திடுக -என்கிறாள் -தோற்றோம் இத்யாதியால்
———
இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-
எட்டாம் பாட்டு –
இருளினுடைய வைரம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய பெரிய நீரை யுடைய கழியே
கெட்டு ஓடிய ஞானத்தை அடைந்து ராத்ரியும் பகலும் உறங்கிலும் நீ உறங்குகிறாய் இல்லை
ஐயோ உருளுகிற சகடத்தை உதைத்த உபகாரகருடைய கிருபையில் உண்டான பேராசையாலே
தரைப்பட்டு நோவு பட்டாய் ஆகாதே -என்கிறாள் -இருள -இத்யாதியால்
——–
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-
ஒன்பதாம் பாட்டு-
நோவத் தொடங்கினால் நொந்து தலைக் கட்டுகை அன்றிக்கே இருக்கிற ப்ரேம வியாதியானது
மிருதுவாய் இருந்துள்ள ஆத்மாவைக் குருத்து வற்றாக உலர்த்த
நந்தா விளக்கே –
நீயும் தய நீயையாய் இருந்துள்ள செந்தாமரை போலே விஸ்த்ருதமான கண்களையும்
சிறந்த கனி போலே இருக்கிற திருவதரத்தை யுமுடைய எம்பெருமான்
சாத்தி அருளின அழகிய ஒளியை யுடைய திருத்துழாயை ஆசைப்பட்டு
வேவா நின்றாய் ஆகாதே என்கிறாள் -நொந்தாரா -இத்யாதியால் –
———
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-
பத்தாம் பாட்டு –
வெந்து முடியாத ப்ரேம வியாதி யானது ஸூகுமாரமான ஆத்மாவை வெந்த இடம் விறகாக எரிக்கா நிற்க
இரவும் பகலும் ஓயாத படி உன் விஷயத்திலே தானே அபி நிவேசிக்கப் பண்ணி –
நிராசனாய் ஒழிந்தாய் -முகம் காட்டாதே கடக்க நின்றாய் –
கேசியின் வாயைக் கிழித்து
யாமளார்ஜுனங்களுக்கு நடுவே போய்
மஹாபலி அபஹரித்த பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி உப கரித்ததும் அஸாந்தமான உத்யோகத்தை யுடையவனே
இனி மேல் என்னைக் கை விடாதே கிடாய் என்று
வந்து ஸம்ஸ்லேஷித்த ஈஸ்வரனை பிரார்த்திக்கிறார் -வேவேரா -இத்யாதியால்
———
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-
நிகமத்தில்
நழுவாமல் இருக்கிற எல்லாப் பொருளுக்கும் காரணமாய் இருக்கிற பரஞ்சோதியின் பொருட்டுத்
தானே அபர்யாப்தமான அபி நிவேசத்தை யுடைய குருகூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஓர் ஆயிரமாகச் சொன்னவற்றுள் இந்தப் பத்தையும் ஒரு பாட்டும் விடாதே அனுசந்திப்பார்
வைகுந்தத்தை விடார் கண்டீர்
இது நிச்சயம் என்று யுக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -சோராத -இத்யாதியால் –
———–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம்–11-
அவதாரிகை –
இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே-
1-அனன்யார்யக சேஷத்வம் -2–அநந்ய சரணத்வம் -3–அநந்ய போக்யத்வம் -4–ததேக நிர்வாகத்வ
5–சம்ச்லேஷத்தில் தரிக்கை -6–விச்லேஷத்தில் தரியாமை -கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே –
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு-மயக்கம் உற்று –
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –
வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -11-
வியாக்யானம்–
வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –
ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –
ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் -ஆச்சார்ய ஹிருதயம் -132
செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்