ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-2–வீடு மின் முற்றவும்–சாரங்கள் —

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

————

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

————-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

————–

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

—————

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

————-

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

———-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

————

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

———–

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

———

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

————

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -2-

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே
அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அனுவதித்து -என்றுமாம் –
அது எங்கனே என்னில்
கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு
பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை
வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி
பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்
அஹங்கார ஹேதுக்களாய்
உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இ றே
வீடுமின் முற்றவும் வீடு செய்து –என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்
அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இ றே இருப்பது
அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்
சர்வ ஸ்மாத் பரனான
நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் ––
வீடு செய்மின்
இறை யுன்னுமின் நீரே
என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இ றே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு –நலத்தால் அடைய –என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்
என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் –
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்
பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்
நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்
தர்ச நீயமான
உதாரமான
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே
இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழு படி –
இடைக்காதர் வள்ளுவர் ஔவையார் -குரு முநிவர் -பாசுரங்களே பீஜம் -என்கிறார்கள்

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று
சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை
ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே
பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்-

பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216
கிரியை -வினைச் சொல்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இ றே
வீடுமின் –என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதயத்திலே -சூர்ணிகை -219–நாயனாரும் அருளிச் செய்தார் –

த்யாஜ்யம் -வீடு மின் முற்றவும் -தோஷம்- மின்னின் நிலையில -பரித்யாகம் நீர் நுமது -என்று பிரித்து -மேலே –
உபாதேயம் வீடு உடையான் -குணம் எல்லையில் அந்நலம்-சமர்ப்பணம் -இறை சேர்மினே -என்று கொள்ள வேண்டும்
இத்தை பக்தி பரமாக யோஜித்து-பாஷ்யகாரர் பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு
பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்-இவரும் அப்படியே அருளிச் செய்தார்–

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் –

———————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

—————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading