ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-3–பத்துடை யடியவர்க்கு எளியவன்–சாரங்கள் —

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

——–

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

——–

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

———-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

————–

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

————-

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

———–

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

————

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

———–

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

———–

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

————-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -3-

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு
பஜிககத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை
பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை–3-

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால் –

பத்துடையோர்க்கு -பக்திமான்களுக்கு
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
பத்துடை அடியவர் -என்றார் இ றே –
ஏவம் வித பக்தி உக்தருக்கு

என்றும் –
சர்வ காலத்திலும் –

பரன் –
யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் –
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-
என்றும் சொல்லப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன்

எளியனாம் –
வாயு ஸூநோ -என்றும்
இமௌஸ்ம -இத்யாதிப் படியே -எளியனாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் மத்துறு கடை வெண்ணெய் களவினில்

உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
என்னும்படி கட்டவும் அடிக்கவும் படி எளியனாம் -ஸூலபனாம் –

அது எத்தாலே என்னில் –
பிறப்பால் –
அவதாரத்தாலே
பல பிறப்பாய் ஒளி வரும் என்றத்தை நினைக்கிறது –

முத்தி தரும் –
அவதரித்த இடத்தே
பஷிக்கும்
ரஷஸ் ஸூக்கும்
மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

மா நிலத்தீர் –
அவன் அவதரிக்கைக்கு ஈடான இந்த மகா பிருதிவியில்
உள்ளவர்களே –

மூண்டவன் பால் -பத்தி செய்யும்-
விதி ப்ரேரிதராய் அன்றிக்கே அத்யந்த
அபி நிவேச யுக்தராய்
பரத்வ சௌலப்யத்வாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளிலே
பக்தியைப் பண்ணுங்கோள்-

என்று உரைத்த-
என்று அருளிச் செய்த –
இத்தால் -நன்று என நலம் செய்து அவனிடை -என்றத்தை
அனுபாஷித்த படி –

பத்தி செய்யும்-என்று உரைத்த-மாறன் தன் இன் சொல்லால் போம் –
அவதார சௌலப்யத்தை முன்னிட்டு
ஆஸ்ரயிங்கோள் -என்று ஆழ்வார்
ஸ்ராவ்யமாக அருளிச் செய்த
இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே
நிவ்ருத்தமாம் –

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த
ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம்
பண்ணின படி –
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இறே-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரணத்ரயதஸ் த்ருதீயே –3- பத்துடை அடியவர்

—————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–3- பத்துடை அடியவர்

1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –

2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –

அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்

4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்

5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்

6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்

7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்

8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-

9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –

10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்

எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

—————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading