ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-7–பிறவித் துயர் அற–சாரங்கள் —

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

———–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

———-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

——–

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

———-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

———

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

———–

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

——–

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

———–

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

———–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

———–

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -7-

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயண ரச்யதையை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே
அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று
ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே
பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும்
ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே
ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை
பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு–7–

வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் –
ஜன்ம சம்பந்தம் அற்று
நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே
நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுஹ்ரகிக்கும் ஸ்வ பாவனான
ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –

ஏவம் விதனானவன்
அறவினியன் பற்றும் அவர்க்கு என்று-
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி –

மற்றும் அவனுடைய போக்யதைக்கு அனுகுணமாகும் படி
ஆழிப் படை அந்தணனை -என்றும்
ஒண் சுடர்க் கற்றையை என்றும்
விடுவேனோ என் விளக்கை -என்றும்
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –என்றும்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -என்றும்
அருளிச் செய்தவையும் தத் சேஷங்களாகக் கடவது –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு-
குணைர் விருருசே ராம-என்னும்படி
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று
இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று
நெஞ்சே
சீக்ர கதியாகச் சென்று பற்று –
முந்துற்ற நெஞ்சாய்
அங்கே பற்றும் படி ஓடு-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -7-பிறவித்துயர் –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –

1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-

2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –

3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –

4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –

5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-

6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –

7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்

8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –

9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்

10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற

ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –

————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading