ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-8–ஓடும் புள்ளேறி–சாரங்கள் —

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

————–

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

———–

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

———

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

———–

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

———–

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

———–

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

———-

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

———–

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

———–

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே —1-8-10-

———-

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -8-

அவதாரிகை –

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற
ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்த
ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும்
ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத்த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி
இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன்
என்கிற –ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8–

வியாக்யானம்–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி –
சஞ்சலமாய்
நின்றவா நில்லா நெஞ்சும் –
அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே
செவ்வை கெட நடக்கும்
குடிலரோடு கூடிக் கலந்து –

நெடுமால் அடிமை கொள்ளும் நிலை —
சர்வ ஸ்மாத் பரனானவன்
அடிமை கொள்ளும் ஆர்ஜவ ஸ்வபாவத்தை –

நாடறிய ஒர்ந்து –
நாட்டார் அறியும் படி ஆராய்ந்து –

அவன் -தன் செம்மை-
தெனதே தம நுவ்ரதா-
ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா –
என்னும் படியான அவனுடைய ஆர்ஜவத்தை

உரை செய்த –
அருளிச் செய்த –
அதாவது
ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும்
நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அருளிச் செய்தார் -என்கை-
இப்படி உரை செய்த –
மாறன் என –
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த
ஆழ்வார் என்று அனுசந்திக்க –

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –
ஸ்வரூப அனுரூபமான
சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி
சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி
நிலை நிற்கும் –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந -8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்
சந்தர்ஸ்ய –வெளிப்படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்

1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்

2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்

3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்

4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்

5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்

6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்

7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்

8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்

9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –

10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற

நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading