Archive for the ‘திரு விருத்தம்’ Category

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –முந்நீர் ஞாலம் -3-2-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் – ஊழி காலம் போல் கங்குல் அளக்க முடியாத படி நீடிய –அம் தண் துழாய்க்கு உளப் பெரும் காதலின் -ஆழ்வாரது பக்தியைக் காட்டிலும் – அதனில் பெரிய அவா-தத்வ த்ரயத்தையும் விஞ்சிய காதலையும் விஞ்சி நீண்ட போனதே
அஞ்சுடர் ஆதித்யனும் உதிக்க மறுக்கிறார்-பெண் பிறந்தார் எய்யும் பெரும் துக்கம் காண மாட்டாமை
என்னுடைய பெண் -செவிலித் தாயார் பாசுரம் -மத் பாபமே நிமித்தம்
-முறுவல் செய்யவாய் தட முலை -பெண்ணின்-வைலக்ஷண்யம் போக்யதை —-மந்தஸ்மிதம் அதரம் -அபரிச்சேத்ய பக்தி –
அவ்வூழி -கல்ப காலம் விட அழகிய -குரூரமான -விபரீத லக்ஷணை யில் தண் அம் வெறுப்பில்
நீண்டு இருப்பதை என் மகள் சொல்கிறாள் என்று செவிலித்தாய் சொல்லும் பாசுரம்
ஓங்கு முந்நீர் வளப்பெறும் நாடன் -மது ஸூதனன் -இங்கும் முந்நீர் பத பிரயோகம்-முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே – -திருவாய் மொழி இதன் விவரணம்எந்நாள் நான் இனி வந்து கூடுவேன்-பாவியேன் அலமருகின்றேன் -இங்கு வல் வினையேன்-அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்கின்றேன் -அதனால் நீண்ட இரவு -இங்கு

அவதாரிகை
எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே – அவதரித்து இங்கே வந்து -ஸூலபனானான் என்றவாறே – தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் –அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –(ஸ்ரீ வைகுண்டத்தில் அவன் இருக்க நான் இங்கே இருந்து இழப்பது பொறுக்கலாம் ) இங்கே வந்து கிட்டச் செய்தே – பேரா விட்டவாறே அவசன்னரானார் – அவ்வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து —கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்- சம்பந்தம் உண்டாய் இருக்க –(ஓங்கு முந்நீர்வளப் பெரு நாடன்-ஸ்வாமி -சம்பந்தம் உண்டே ) போக யோக்யமான காலத்தில் -வந்து உதவக் காணாமையாலே- இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று அவள் பாசுரத்தை திருத் தாயார்-சொல்லுகிறாளாய்   இருக்கிறது –இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்-

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் நொந்து யுரைத்த பாசுரத்தை இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே–இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்–அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
-59 –இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து
——22–அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில் விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து-இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து வாழுகைக்கு உடலாக அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான் இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மை யவ்வூழி யங்கங்குல் – ஊழி ஆகிற ராத்திரி களானவை –அளக்க அரியத்தை- அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை –அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ –அளக்க அரிதாகையை  ஸ்வபாவமாக உடையவன் —ஊழி யங்கங்குல் –ஊழி ஆகிற ஆகாரமே காணும்-நிரூபகமாய் இருக்கிறது –ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாதோ -என்ன –அம் தண் அம் துழாய் இத்யாதி –அதனில் பெரிய என் அவா விறே– இதில் (இந்த அவாவைக் காட்டிலும் ) பெரிது என்னும் இத்தனை –பகவத் தத்துவத்தை விளாக்குலை கொண்டது இறே இவர் அவா –  பகவத் ஆனந்தத்தை பரிசேதிக்க-புக்க வேதம் பட்டது படும் இத்தனை –இத்தை பரிச்சேதிக்கப் புக்காலும்  –நேதி நேதி (ந இதி ந இதி )-என்கிறபடியே இதன்று என்னும் இத்தனை போக்கி – இப்படி என்று பாசுரம் இட ஒண்ணாது –அம் தண் துழாய் உண்டு –தோளில் இட்ட மாலை –
அதுக்கு என் உள்ளத்திலே உண்டாய் –சர்வாதிகத்வத்தையும் விளாக்குலை கொண்ட-காதலினும்
பெருத்து இருப்பனவாய் உள்ளது –ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் –1-அவன் எல்லைக்கு புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-2-அவன் அசக்தியால் நோவு படுகிறேனோ-
கடல் சூழ்ந்து இருப்பதாய் –வளப்பத்தை உடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை உடையவன் –மது சூதனன் –ரஷ்ய வர்க்கத்துக்கு களையான மதுவை நிரசித்தவன் –1-சம்பந்தம் இல்லாமையோ –
2-விரோதி நிரசன சீலன் அல்லாமையாலேயோ –நான் இங்கனம் படுகிறது –வல் வினையேன் –
இவள் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுக்கைக்கு ஓர் அடி இல்லையே — அத்தலை இத்தலையாய் -அவன் படக் கடவத்தை இவள் படா நின்ற-இதுக்கடி – காண்கிற என் பாபம் இறே –
மத் பாபம் ஏவ –(ந மந்த்ராயா இத்யாதி பரதன் வார்த்தை-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே ஏற்றான் அன்றோ )

இவள் படுகிற வியசனத்துக்கடி என் பாபமாக-வேணும் என்கைக்கு ஹேது என் என்னில்-தனப் பெரு இத்யாதி –இவள் நோவு படுகைக்கு இவள் வடிவிலே ஏதேனும் குறி உண்டோ -என்கிறாள் –தளப்பு என்றது –தள வென்றாய் –முல்லை-யரும்பு போலே இருப்பதாய் – பெறுதற்கு அரியதாய் –புரவமே சாரு ததீம் -என்கிறபடியே-(பெருமாள் வார்த்தை –கோவைப்பழம் அதரம் -சிரித்த சிரிப்பு மாறாமல் சீதையைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் உலகைத் தலை கீழாக ஆக்குவேன் )நாயகன் பெற ப்ரார்த்திக்குமதாய் –
நாயகன் புக்க இடம் புக்கு -அவன் நெஞ்சை வடிம்பிடவற்றாய்-இருந்துள்ள முறுவலை உடைய –நீள் முறுவல் -என்றது – நரசிம்ஹத்தினுடைய அட்டகாசத்தை சொன்னது அன்று இறே – ஒரு ஸ்திரீயினுடைய மந்த ஸ்மிதத்தை இறே சொல்லுகிறது –ஆனால் இப்படி பொருளாக வேணும் இறே –
எப்படி எனில் –அதனுடைய போக்யதையை – நீண்மை -என்கிறது –செய்ய வாய் -இத்யாதி –அம் முறுவலுக்கு-பரபாகமான சிவந்த அதரத்தை உடையாள் என்னுதல் –அன்றிக்கே –மேல் தட முலை -என்று முலைகளினுடைய சுற்றுடைமையைச் சொல்லுகிறதாகையாலே- இது செவ்வையைச் சொல்லி நேரே வளர்ந்த முலைகளை உடையாள் என்னுதல் –தட முலையே –விரஹத்தாலே தலை சாவி வெட்டின பின்பு காணும் இவ்வளவு சொல்லலாகிறது- சர்வேஸ்வரன் வைத்த அவகாசம் போராது போலே இரா நின்றது –தளப் பெரும் நீண் முறுவல்   செய்யவாய் தட முலை யானவள் –“அளப்பரும் தன்மை அவ்வூழி யங்கங்குல் அம் தண் அம் துழாய் குளப்பெரும் காதலில் நீளியவாயுள “- என்னும் –அதுக்கு மேலே –
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மதுசூதன் என்னும் வல்வினையேன் – என்று அன்வயம் –

தலைமகள் ஆற்றாமை மிக்கு அலறுவதை திருத் தாய் சொல்லுகிற பாசுரம் –காதலுக்கு முடிவு இல்லாதது போலே இரவுக்கும் முடிவு இல்லையே -நீளிய வாயுள-என்னும் -வினை முற்று -என்னும் என்பது இப்பாட்டுக்கு வினை முற்று –அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்–ஊழி ஆகிற ராத்திரி களானவை -அளக்க அரியத்தை-அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை -அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ -அளக்க அரிதாகையை ஸ்வபாவமாக உடையவன்-பெரியவாச்சான் பிள்ளை
ஓங்கு முந்நீர்-வளப் பெரு நாடன் -கடல் விழுங்காமல் நோக்கி ரஷிப்பவன் மது சூதன் -துஷ்ட நிக்ரஹன்
ஊழி யங்கங்குல்-கங்குலுக்கு அழகாவது கல்பத்தினும் நெடிதாகை – வல்வினையேன்-கங்குலை நீட்டவோ -அவனைக் கூட்டவோ முடியாத பாவியேன் காதலின் நீளிய வாயுள-ஒப்பு பொருளில் இல்லை -காதல் போலே நீண்டது என்ற படி தள-தளவு -முல்லை அரும்பு -என்றபடி-

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்-அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில் அழகிய கங்குலானவை–கங்குலுக்கு அழகாவது-கல்பத்திலும் நெடிதாய் இருக்கை-அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள-அழகிய குளிர்ந்த திருத் துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன–காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்–உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி–மது சூதன்--அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்–என்னும்-1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்-2-ரக்ஷகத்வத்தையும்-3-விரோதி நிவர்த்தகத்வத்தையும் வாய் விட்டுச் சொல்லா நிற்கும்–வல் வினையேன்–கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய —தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே-அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்–தளம் என்று முல்லை–முல்லை யரும்பின அளவான பெருமையையும் நீட்சியையும் யுடைத்தான முறுவலையும் (போக்யதையில் நீட்சி )-இங்கு முறுவல் என்பது தந்த பங்க்தியை–செய்ய வாய்-முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்-தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள் என்னும் -என்று கீழோடே அந்வயம்இத்தால் ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்றுதளப் பெரும் இத்யாதியாலே–1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு) (அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )–2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )–3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது (முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்— ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை-அளக்கலாமாகில் வந்து தோற்றானோ–அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான–ஊழி யங்கங்குல்–ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது-ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன–அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள–அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும் நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது–அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை–அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன–ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்–அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்-ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்-சம்பந்தம் இல்லாமையே -விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது–வல்வினையேன்–இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை-அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ-மத் பாபம் ஏவ -என்கிறாள்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்–வல்வினையேன்-வலியதான வெவ்வினையால் இறே-நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று-தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான் இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்–தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையேதளவு என்று முல்லை-அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்-சிவந்த திருவதரத்தை யுடையவன்-அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே இதுக்கு அந்வயம் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமையைக் கண்டு கால தாமதத்தை வெறுத்துப் பேசும் பாகவதர்கள் –சர்வ சக்தனாய் இருக்கச் செய்தேயும் இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகத் தோற்றுகையாலே-ஆற்றாமை விஞ்சி அத்தன்மையை வாய் விட்டுக் கூறினமை ஆழ்வாருடைய திரு முக மண்டலமும் சொல் திறமும் பக்தி வளமும் ஈற்றடியில் சொல்லிற்றாம் –

ஸ்வா பதேசம்
இத்தால்-அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் உண்டாய் இருக்க போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை- பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்–மது சூதனன் -என்கையாலே ஸ்வரூப ஞானம் –

தாத்பர்யம்
சர்வேஸ்வரன் சக்தனாய் இருந்தும்-தமக்கு வந்து உதாவாமையால் ஆற்றாமை மிக்கு வருந்தும் தலை மகளைப் பற்றி செவிலித் தாயார் பேசும் பாசுரத்தை விரஹினி இரவு நீட்சியைச் சொல்லும் பாசுரத்தாலே சொல்கிறாள் கல்பத்துக்கும் ஓர் அளவு உண்டே-1000 சதுர்யுகம் ப்ரஹ்மாவின் பகல் பொழுது சொல்லலாம் -இந்த நீண்ட இரவால் கொடுக்கும் துன்பம் அளவற்றதே -இவளுக்கு திருத்துழாய் மேல் உள்ள அபி நிவேசமே அபரிச்சேதயமாய் இருந்ததே-அதனில் பெரிய அவாவை விடவே இது பெரியதாய் -அத்தை விட நீண்டதாய் பெரியதாய் நீண்டதே முல்லை அரும்பு போல் இவள் அதரம் தடமுலை போன்ற இவளுடைய போக்யதையை அழகை அழித்து-பெரு நாடன் ஸ்வாமி -ரக்ஷகன் -மதுசூதனன் உதவாமல் உள்ளானே -என்று கூப்பிடா நின்றாள் -அவன் வராமல் இவள் துக்கப்படுவதுக்கு எனது வலிய வினைகளே காரணம் என்கிறாள்

3-2-முந்நீர் ஞாலம் பிரவேசம் 

பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே -சீராமப்பிள்ளை,
‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்குமதாய் நோவுபடுகிறாரல்லர்;
அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்;
உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்;
அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க இழிந்து –
பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் காரணம் என்?’ என்று கேட்க,
‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே
விஷயம் எங்கும் பூர்ணமாக இருக்கும்.
குறைந்து தோன்றுகிற இடம் -ப்ரதி பத்தாக்களுடைய பிரதிபத்தி தோஷத்தாலே –
நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலே யாயிருக்கும்.
கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவு இறே காண்பது ;
அப்படியே, அழகருடைய ஸுந்தர்யாதிகளை அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கலாய் இருந்தது இல்லை –
பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்க –
ஆஸ்யம் பிஹிதமானால் – வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது —
துடிக்குமாறு போன்று, விஷயமும் சந்நிஹிதமாயும் விடாயும் மிக்கிருக்கச்செய்தே,
அபரிச்சின்ன விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்கவொண்ணாதொழிய நோவுபடுகிறார்.
ஆயின், ‘பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவான் என்?’ எனின்,
‘இவ்வாறு அனுபவிக்க வொண்ணா தொழிந்தது விஷயத்தினுடைய -தவ்ர் ஜன்யத்தாலே – வைலக்ஷண்யத்தாலே வந்தது’
என்று அறிய மாட்டாது, தம்முடைய கரண சங்கோச நிபந்தனமாக வந்தது என்று அநுசத்தித்து.
‘அவன் தான் முதலிலே இத்தைக் கழித்துத் தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக-
ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் -(முந்நீர் ஞாலம் படைத்த)
ஸ்ருஷ்டமான ஜகத்திலே தான் வந்து அவதரித்தான்; (‘எம் வாமன’ )
அதற்குமேல் அந்தர்யாமி ரூபேண நின்று-(‘எங்கணும் நிறைந்த எந்தாய்’ ) சத்தா திகளை நிர்வஹித்தான்;
அவன் இப்படி உபகார பரம்பரைகளைப் பண்ண ,
நான் அவற்றையெல்லாம் அசத்துக்குச் சமமாக்கிக்கொண்டேன்-(‘ஆக்கையின் வழி உழல்வேன்);
இனி, நான் அவனைக் கிட்டுகை என்று ஒன்று உண்டோ?’ என்று
நிர்மர்யாத வ்யஸன சாகர அந்தர் நிமக்நராய் ‘முடிந்தேனேயன்றோ?’ என்று இவர் சோகிக்க-(எங்கினித் தலைப்பெய்வன்?’),
‘நீர் கரண சங்கோசத்தாலே வந்தது என்று சோகிக்க வேண்டா;
கரண சங்கோசமில்லாதாரும் நம்மை அனுபவிக்குமிடத்தில் இப்படியே காணும் படுவது-(சிந்து பூ மகிழும்’)’ என்று
இவர் இழவினை பரிஹரிக்கக் கோலி ,
‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையில் நின்றோம்;
அங்கே கிட்டி அனுபவியும்,’ என்று தான் அங்கு நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, –
ஸமாஹிதராய்த் தலைக்கட்டுகிறார்-(‘நிலை பெற்று என் நெஞ்சம்’).

‘ஆயின், தெற்குத் திருமலையிலே நிற்கிற நிலையை அனுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை
வடக்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில்,
முலை வேண்டி அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பரிஹரிக்கும் இத்தனையேயன்றோ?
(‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய அணங்கு’–பெரிய திருமடல்))
‘நன்று; இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில், வேண்டா;
இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே
‘அதுவே வேணும்; அது அன்று இது,’ என்கிற தெளிவில்லை ஆயிற்று இவர்க்கு.
மற்றும், ‘ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்;
பசியில்லாத காலத்தில் பாதகமான சோறு தானே அது கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே?
‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது பாதகமாம்’ என்று தெரியாது;
குணங்களின் ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு செல்லுகிற ஈஸ்வரனுக்கும்
தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான்.
ஆரியர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிற நீர்மை அங்கு;
கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகம் கொடுத்த நீர்மை உண்டே இங்கு.

இப்படி ஸ்வா பாவிகமான சேஷத்வத்துக்கு பிரதிசம்பந்தியான சேஷியினுடைய திவ்ய சவ்ந்தர்யாதிகளை அனுபவிக்கப் ப்ராப்தமாய் இருக்க
அது ஸித்தியாது ஒழிகிறது தத் விரோதியான சரீர சம்பந்தாதிகள் அடியாக என்று அனுசந்தித்து -தந் நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே
1–அது அவன் தனக்கு விதேயமாம் படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2–ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கின அபதானத்தையும்
3–ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
4—ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான வ்யாப்தியையும்
5–அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
6— ஸமஸ்த சேதனரும் ஸ்வ அதீனராம் படியான பாரம்யத்தையும்
7– வ்யாப்தியிலும் கார்ய காரமான சவ்லப்யத்தையும்
8—அந்த சவ்லப்யம் அடியாக வந்த குண விக்ரஹ உஜ்வல்யத்தையும்
9–ஞான அஞ்ஞான விபாகம் இல்லாத படியான ௭உபகாரகத்வத்தையும்
10—அதுக்கு பிரகாசகமான சகல வேத வேத்யத்வத்தையும் —
அனுசந்தித்துச் சொல்லிக் கூப்பிட்டு -ஸ்வ சந்நிதியாலே ஆர்த்தி சமிப்பித்த ஈஸ்வரனை அபரோக்ஷித்து ப்ரதிஷ்டிதராகிறார்-

முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக் கொண்டு அனர்த்தத்தை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட
பாவங்கள் ‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வ்யதிரிக்தங்களிலே – வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து,
உன் திருவடிகளிலே வாழ்ச்சியே யாம்படி செய்யவேணும்,’ என்கிறார்;
ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன்போக்யதையை – இனிமையை எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குண தானம் பண்ண ?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதன அனுஷ்டானம் பண்ணினேனோ , நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘அந்த திரைவிக்ரம அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்;
பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்;
நிகமத்தில் , பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன்
 –3-2-1-

முந்நீர் –ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷ ஜலம் -மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது.-இனி, அப ஏவ ச சர்ஜ்ஜாதவ் ‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே,-முற்பட ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி – பின்பு இறே அண்ட ஸ்ருஷ்டி தான் பண்ணிற்று , –முந்நீர் -முன்னே படைத்த நீர் -என்னுதல்.ஸ்ருஷ்டிப்பது கர்மங்களை கடாக்ஷித்து ஆகிலும் , யௌகபத்யம் அனுக்ரஹ காரியம்; ஒவ்வொரு கால விசேஷங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை இறே-அசித் அவிசேஷிதான் பிரளய சீமனி சம்சரத கரண கலேபரைர்க் கடயிதும் தயமான மநா-என்றார் பட்டர்.-சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தால் போலே-தோற்றா நின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.-இனி, பகவத் விஸ்லேஷத்தோடே இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல்.

எந்நாள் –எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை;
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். –இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.
ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

—————

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
 –3-2-2–

‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார்.-வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை.-அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல்.-மஹாபலி தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின்,‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல்.

எம் வாமனா –அபஹ்ருத ராஜ்யத்தை யுடையவனான இந்திரனுக்காக அன்று,
வாமனாவதாரமும் மதர்த்தம் என்றிருக்கிறார்.

படிகின்ற –தரை காணாதே அவகாஹிக்கிற – இவ்வனர்த்தத்திலே வெறுப்பின்றிப் பொருந்தி இருப்பதால் -‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற வர்த்தமான நிர்த்தேசத்தால் , ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும்.

அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி.-இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் சொல்லுவார்கள் –

—————

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே
 –3-2-3-

என்னை விஷயீ கரிக்கைக்கு என்று வந்து திருவவதாரம் பண்ணி அருளி -கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் பொகட்டான்.-அவித்த – பீஷ்மாதிகள் காட்டுத் தீகிளர்ந்தால் போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று அவித்தான்.-‘மழை கொலோ வருகின்றது!’ என்னும்படி யன்றோ அவன் வரவுதான் இருப்பது?இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-இராவணன் தலைகள் போன்று முளையா நிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.-ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும்
உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும்-நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்- இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

—————-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே 
–3-2-4-

எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை – -வாழ்ச்சி -என்கிறார் –யான் சேரும் வகையருளாய் வந்தே –
இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது –
வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

—–

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே
–3-2-5-

யிதுவே யிதுவாகில்- உதவாது ஒழிகையே ஸ்வ பாவமாகச் செல்லுமாகில்–கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-எந்தாய் –நீ உதவாது போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது -விலக்ஷணமான வடிவு அழகைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே–உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான்.- ‘இவ்வடிவின் போக்யதையை யறிந்த யான்’-பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை.-எங்கு வந்து அணுகிற்பன் –என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்?‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’-

—————-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
 –3-2-6-

என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை;-உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை;ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார்

கிற்பன் கில்லேன் என்றிலன்-விஹிதத்ததைச் செய்யாமையும், அவிஹிதத்தைச் செய்கையும்-காலமெல்லாம் எனக்கு இதுவே அன்றே யாத்திரை –அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.-உயிர் செய்கையாவது – ஸ்திதி கமன சயனாதிகளுக்கு – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி-யோக்யமாம்படி சரீரத்தோடே-சம்பந்திப்பிக்கை சேர்ப்பித்தல்.–இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ?-நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று –உன்னுடைய ப்ராப்தமாய் -அப்ராக்ருதமாய்  நன்றாய் -ஸ்ப்ருஹணீயமான -விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக் கடவேன்?

———–

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே 
–3-2-7-

பரம்பொருளை யறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்;மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய ஞானமே ஞானம் –கண்ணனை மேவுதுமே – ஸூலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.நினைவுக்கு வாய்த் தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள்-

——————

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
 –3-2-8-

சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப்
பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால் கர்மயோகம் இன்மையையும்,
‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று.-உபலக்ஷணத்தால் ஞானயோகம் இன்மையையும் கொள்க.

கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’-‘பரஞ்சுடராய் உடம்பாய்’ –

——————

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே 
–3-2-9-

ஒரு கால் கூப்பிட்டு பின்பு ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே மேல் மேல் எனக் கூப்பிடுகிற படி இவர் கூப்பிட்டால் ஈஸ்வரனுக்கு கை நீட்டி எடுக்க ஒண்ணாத தூற்றிலே யாயிற்று இவர் புக்கு நிற்கிறது –மேவி அன்று ஆ நிரை காத்தவன் -ஆபத்துக்கு உதவாதானாயத் தான் படுகிறேனோ -வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால்,‘காட்டிலே வழி திகைத்தார்க்கு -இடையர் -அங்கேயுள்ள ஆயர்கள்- போலே காணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும்.-திருத்தேர்த்தட்டிலே நின்று சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி சரம ஸ்லோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனே யன்றோ?’-–உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்–தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தவனை.-எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -இனி அவனுடைய ஈஸ்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –என்று நிராசர் ஆகிறார் –

—————-

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
.–3-2-10-

இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.
இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.நெஞ்சும் ஒரு படி தரிக்கப் பெற்றது–உயிர் நீடு பெற்றது –அழியப் புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.-நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி; சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்ய சித்தி யில்லையே’ 

———–

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே
.–3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;-இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.-இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,-அங்கு உண்டான சோலைகளும் தரித்து,-அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு-அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,-நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –திண்ணன் வீடு -2-2-

February 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் -துறை இது-தோழி பாசுரம்
உலகு அளந்த அவதார பரத்வம் சொல்லும் பாசுரம் திண்ணன் வீடு -இதன் விவரணம்
உயர் திண் அணை ஓன்று -நான்கும் பர ஸ்வரூபம் சொல்லும் பதிகங்கள்
உயர் -பரத்வே பரத்வம்-திண் -விபவ பரத்வம் ஒன்றும் -அர்ச்சையில் பரத்வம்
இங்கும் அளந்த பெருமையை உரைத்து தோழி ஆற்றாமையை சமிப்பிக்கிறாள்
ஒரு திருவடியே பூமி எங்கும் வியாபித்ததே –கழல் -தலம் –-மற்ற ஓன்று போய் வளர்ந்து நிழலைக் கொடுக்க ஆகாசம் எங்கும் பூர்ணமாக வியாபித்ததே-அண்டம் எங்கும் சஞ்சரிக்கும் ஞானச் சுடர் விளக்கு -பெருமாளுக்கு -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –-பின்னானார் வணங்கும் சோதி
திருமூழிக் களத்து விளக்கு
-தன்னையும் காட்டி மற்ற அனைத்தையும் காட்டும்-மிகுநர் இல்லாத- ஒப்பார் மிக்கார் இலையா மா மாயன்-சம அப் யதிக ராஹித்யம் தாமரைக் கண்ணன் –-எத்தை அளக்க வந்தான் -பக்தர் திரு உள்ளத்தையா லோகங்களையா

அவதாரிகை –
கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி –(தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே -ஸ்ரீ திரு மாலை-35) ஆன பின்பு நமக்கு ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து- இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் – அவன் நிற்கிறபடியைக் கண்டு  அத்தை பேசுகிறார்-தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –

இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர் ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு விளம்பம் என் என்று தளும்ப அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
– 58-தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன்
—-12-பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம் அதுக்கு ஈடான குண வைலஷண்யம் அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம் இவற்றை அனுவதித்து இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை   இதிஹாச புராண பிரக்ரியையாலே பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய் அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது- இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று – மகாபலி பக்கலில் நின்றும் திருக் கையிலே நீர் விழுந்த போதே-ஒரு திருவடிகளே பூமிப் பரப்பு அடங்கலும் போய் விளாக்குலை கொண்டது –கழல் தலம் –-பாத தலம்-(அகன்ற திருவடித் தாமரை ) ஒன்றே –அவன் வினைவும் வேண்டாதே திருவடிகள் தானே எங்கும் ஒக்க பரந்தது –ஒரு கழல் போய் –மற்றை ஒரு திருவடிகளும் போய்-நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது – அவதரித்து மீண்டும் போய் -தன்னுடை சோதியில் புக்காலும் –அவன் ஒருவன் உளன் என்று-விஸ்ரம்பித்து அவன் நிழலில் ஒதுங்கலாம் படி –யாகாசாவகாசம் -ஆகாச அவகாஸம் -உள்ளிட எங்கும் போய் பரம்பிற்று –ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து போல் இரண்டு திருவடிகளும் அத்விதீயம்–

நிழல் தர –பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பாயுமா போலே – வெளி உள்ள இடம் எங்கும் போய் வியாபித்தது –வாஸூ தேவ தருச்சாயா — எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –(ஸர்வத்ர வசதி வாஸூதேவ -எங்கும் ஓக்க வியாபிக்க இந்தப் பத பிரயோகம் )–நாதி சீதா -இத்யாதி –மிக வெப்பதும் செய்யாதே – மிக வவ்வ விடுவதும் செய்யாதே – நரகம் ஆகிற பெரு நெருப்பையும் விலக்கவற்று–சாகிமர்த்தம் ந சேவ்யதே – –இந் நிழலுக்கு புறம்பாய் இருப்பதொரு நிழல் உண்டாய் அங்கே ஒதுங்கவோ – இது நன்று அல்ல என்னவோ – இதின் உள்ளே இருந்த அநிச்சையை சொல்லும் இத்தனை –(தாழ்ச்சி மற்று எங்கும் -உனது திருவடி நிழலே வாழ்ச்சி -நம்மாழ்வார் ) –(திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் 
– பெரியாழ்வார் ) ஆஸ்ரித ரஷகனுமாய் –ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –ஆஸ்ரித ரஷகனுமாய் –ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –

நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )-நிவாச வ்ருஷ ஸாதூநாம்--வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்- அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன–அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –பெருமாள்-என்றாள் –ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன – சொல்லுகிறாள்–நிவாச வ்ருஷ ஸாதூநாம் இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –பூவாயும்-பழமாயும்  -நிழலாயும்- தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும் -தன் கீழே இருந்து தன்னை அழியச்  செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் – இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –(வாஸம் மட்டும் அல்லவே-நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம் -கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ – செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –ஆபன்நாநாம் –ஒதுங்கோம் என்னாமை போராது காண் –   ஆபன் நராகவும் வேணும் காண் –நான் தான் ஆபன்னன் அன்றோ –உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –ஆர்த்தா நாம் – ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –ஆபத்தை இசையவும் வேணும் காண் –நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன–யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்–இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே அவர்களை சொல்லுகிற  இதில் ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் – வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே – கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –ஏக பக்திர் விசிஷ்யதே –என்கிற ஞானியை சொல்கிறதாய்- முந்துற சம்சாரத்தில் நொந்து –   பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-அநந்தரம்–பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    – இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )–இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே–ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்–ஆபன்னானாம் கைவல்ய பரர்–ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி -அனைவருக்கும் -பராம் கதி —

நீண்ட வந்ததது உழறலர் ஞான சுடர் விளக்காய் –பரப்பை உடைத்தான அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய் இருந்துள்ள ஞானம் ஆகிற பிரகாசம் ரூபம் ஆகிய தீபத்தை உடையவனாய் – எல்லார் தலை மேலேயும் திருவடிகளை வைத்து –தன் பேறாய்- அத்தால் வந்த அலப்ய லாபத்தாலே  சஹஜ சார்வஜ்ஞமும் விகசிதம் ஆயிற்று –உயர்ந்தோரை இல்லா – ப்ரஹ்மாதிகளும் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே – நான் -என்பார் இல்லை யாயிற்று –-அழறலர் தாமரைக் கண்ணன்--அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே–என்னோ விங்களக்கின்றதே ––அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்–நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடி மாறி இடில் இறே அளந்தது ஆவது –-இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம்  என்னுதல்  –அன்றிக்கே நிர்ஹேதுகமாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கச் செய்தே ஒன்றும் செய்யாதால் போல் இன்னமும் பாரியா நின்றான் –என் செய்யாதானாய் திரு உள்ளத்தால் இங்கன் பாரிக்கிறது –என்னோ விங்களக்கின்றதே –கால் பெருத்து போலி சிறுத்தாலும் அளப்பார் உண்டோ-மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ–ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது என்றபடி-

ஸாதூநாம் ஞானியை சொல்லுகிறது–ஆபன் நானம் கேவலரை-ஆர்த்தானாம் த்ரிவித ஐஸ்வர்யார்த்திகளைச்  சொல்லுகிறது–ஆழ்வாரை கண்ட ப்ரீதி அளந்த அன்றையில் ப்ரீதி போலே இருந்தது என்றபடி–அன்றிக்கே என்னை விஷயீகரித்த பின்பும் வேறு ஒரு விஷயம் உண்டோ  –வியலிடம் என்கிற பாட்டில் –குண ஞானத்தினாலே தரிக்கை யாகிற-சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆகையாலே –-தானான தன்மை பிறந்து –அந்த குணம் தானும் சௌசீல்யம் ஆகையாலே-
அத்தை இப் பாட்டில் அருளிச் செய்கிறார் என்று சங்கதி உட் கொண்டு அருளிச் செய்கிறார் –
கீழ் -இத்யாதி -அவசாதம் எல்லாம் என்றது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி –1- பண்டும் பல பல வில் பட்ட வியசனம் என்ன–2-மலை கொண்டு என்றதில் கார்ச்யம் என்ன—3-வர்ஷா காலத்தில் வந்த கிலேசம் என்ன–4-வாராயின முலையாளில் மோஹம் என்ன –5-வீசும் சிறகாலில் தூஷ ப்ரேஷ்ணம் என்ன -இவை எல்லாம் என்றபடி –விளாக்குலை கொண்டது –வியாபித்தது–பூவாயும் இத்யாதி –பூ -போக்கியம் –பழம்- தாரகம் – நிழல் -போஷகம்

சர்வ சக்தன் அன்றோ -அவன் பிரதிபந்தகங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை களைந்து
சம்ச்லேஷிக்க விரைந்து வருவான் என்று தோழி சொல்லி தலைவியை ஆற்றுகிறாள் –தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே -என்ன ஆச்சர்யம் -என்றும் எப்படி பொருந்தும் என்றுமாம் –
அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம் என்னுதல்–நீண்ட வண்டத்து உள்ளவன் -மேலும்–உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லாதவன் -அழறலர் தாமரைக் கண்ணனாய் இருப்பவன் ––அழறலர் தாமரை-பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்–

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று-ஒரு அடித் தலமே பூமி அடையாத தானாயிற்று–ஒரு கழல் போய்–ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்–நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது-ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –ஒருவன் திருவடியை விளக்க – ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே அவர்களுக்குள் கொடுத்தது–நீண்ட வண்டத்து-அபரிச்சின்னமாய் பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான பரமபதத்திலே–உழறலர் ஞான சுடர் விளக்காய்-உழன்று சஞ்சரிப்பதால் அலர்ந்து விகஸிதமான ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்–இத்தாலே-ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் –திருவாய் -4-1-8-என்கிற கணக்கிலே ஸகல வியாபார மூலமாய் ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும் ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும் என்றும் சொல்லிற்று ஆயிற்று–உயர்ந்தோரே இல்லா–தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்–இத்தாலே–உயர்வற உயர்நலம் யுடையவன் –1-1-1- என்னும்படி-ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து-யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி–அழறலர் தாமரைக் கண்ணன்— இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்-அழறு என்று அளறு நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி–என்னோ விங்களக்கின்றதே-இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும் விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன் ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு இவ் விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ–அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –இத்தால்-விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன் த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று அவனுடைய ஸம்பந்தத்தையும் ஸக்தியையும் பிரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்–இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்-அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன் அழறு -சேறு–என்னோ விங்களக்கின்றதே – எந்தப் பிரகாரமாக இங்கு அளந்தானோ-அளப்பது நின்ற இடம் ஒழியவாம் நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை –ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது –இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான் சொல்லாய் நீ தான் தோழி –

ஸ்வாபதேசம் —
பாகவதர்கள் ஆழ்வாரை தேற்றுகிறார்கள் -சர்வ சக்தனைப் பற்றி சொல்லி-த்ரிவிக்ரமனாக உடைமையை உடையவன் சேர்த்துக் கொள்வான் –சம்பந்தம் சக்தி விசேஷங்களை-எடுத்துக் கூறி ஆழ்வாருடைய ஆற்றாமையை தணித்தனர்-

தாத்பர்யம் –
கீழ் பகவத் குண அனுசந்தானம் ஆகிற பகவத் சம்ஸ்லேஷத்தை பெற்று – ஆற்றாமை-நீங்கி -தாமான நிலையில் இருந்து –அவனுடைய சீலாதி குணங்களைப் பேசுகிறார் இப்பாட்டில்–த்ரி விக்கிரம அவதாரத்தில் ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் என்றும் பாராமல் சகல பிராணிகள் உஜ்ஜீவிப்பைக்காகாக
அவர்கள் தலையில் திருவடி படும் படி -ஓர் திருவடியினால் பூமியை அளந்தான் –இத் திருவடி சேஷி என்றும் – நாம் சேஷ பூதர் என்றும் எல்லாரும் அறிக்கைக்காகவும் – தன் திருவடி கீழே  சம்சார ஆபத்தரான இவர்களை அகப்படுத்தி -ஆஸ்வசிப்பைக்காகாவும்–மற்று ஒரு திருவடியை ஆகாசத்திலே தூக்கி -அவ் ஆகாசத்தை அளந்தான் –இப்படி சர்வஞ்ஞனாய் –பராத் பரனான புண்டரீ காஷன் – இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது – மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –

2-2-திண்ணன் வீடு -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.

‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.

இது வரை ப்ராசங்கிக சங்கதி -இனி சாஷாத் சங்கதி –
ஈஸ்வரன் சாத்ம்ய போக ப்ரதனாகையாலே-முதலில் தன்னுடைய ஈச்வரத்வத்தை அனுபவிப்பித்து
மேலே -2-3-ஊனில் வாழ் உயிரிலே தன்னை அனுபவிப்பிக்கிறான்
வைலக்ஷண்யத்துக்கு அடி குணங்கள் என்ற இடத்து -தாந்தைஸ் சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்சநைந பிதுர் குணைர்
விருருசே ராமோ தீப்தஸ் ஸூர்ய இவாம்ஸூபி -என்றது சம்வாதமாகக் கண்டு கொள்வது
இத்யாதிகளால் பெருமாள் குணங்களைச் சொல்லிக் கொடு போந்து-
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே
விஷ்ணுஸ் சனாதன -இத்யாதியாலே ஈஸ்வரத்வம் சொல்லிற்றே

இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

‘ஆயின், முதல்  திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்யம் ஆகிறது?

ப்ரஸம்ஸாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனே அபி வா பயே ச விஸ்மயே சைவ பவ்ன புந்ய மலங்க்ருதி -என்றபடி
பகவத் பரத்வ ப்ரதிஞ்ஜை யாகையாலே புநர் யுக்தி தோஷம் இல்லை
அனுபாவ்யத்தினுடைய ரஸ்யதையாலே
-அனுபவ ஜெனித ப்ரீதியாலே – பின்னையும் பின்னையும் சொல்லப் பண்ணும் இறே
இவர் ஆராத காதலை யுடையவர் ஆகையால் -2-1-11–கை வாங்கி இருக்குமவர் அல்லர்
ஆக உபதேஷ்ட்ரு ஸ்வபாவத்தாலும் உபதேஸ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபாவ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் –
அனுபாவயித்ரு ஸ்வபாவத்தாலும் புநர் யுக்தி தோஷாவாயன்று -என்கிறார்
நித்ய அபூர்வமான விஷயம் -பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -வர்த்தமான அர்த்தம்

ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே —
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய -என்றும் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-என்றும் உண்டே
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை

இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து -ஸங்க்ரஹேன -அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல்,
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத்சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே 
–2-2-1- 

இது திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் பிரளய ஆபத் சகனான கிருஷ்ணனே ஈஸ்வரன்-என்கிறார் –எண்ணின் மீதியன் –எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன்.-எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ -முழுதுமாய் -சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்ய பேத பின்ன சகல வித மோக்ஷ ப்ரதன்-காத்தல் அவனுக்குத்  தாரகமாகையாலே  ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும்.நம்-கண்ணன்-என்று ரக்ஷகத்வ பிரசித்தியை சொல்லுகிறது-

‘நம் கண்ணன் கண்’ என்கையாலே அன்வய -விதி-முகத்தால் பரத்துவமும்,
‘அல்லது இல்லை’ என்கையாலே வ்யதிரேக- மறை-முகத்தாலே பரத்துவமும் அருளிச் செய்தார்.  
‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது,அன்வய – விதி-முகத்தாற் கூறியது.
அல்லது இல்லை ஓர் கண்’ என்றது -வ்யதிரேக -மறைமுகத்தாற்கூறியது.

———–

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே
 –2-2-2-

அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? ப்ரஹ்ம ருத்ரர்களும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின்,
‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்;-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே-அவர்கள் ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான்-ரக்ஷிக்கிறவன் இவன்;-அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்-அவன் -சர்வ விஷயமாகப் பண்ணின ரக்ஷணம் -எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை-கிடக்கக்கிடீர் – நிற்க; 
தந்தாம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே-ஆபன்னரானால் –ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ -துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார்.
இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும்,-இறைவன் எத்துணைத் தன்னைத் தாழ விட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன.-கோபால கோள் அரி ஏறு –-கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம்.-கோள் – வலிமை.

———-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே
–2-2-3-

ஏறனை –சர்வேஸ்வரன் ‘கருட வாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று,
ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப் போன்று இறுமாந்து இருப்பவன்.பூவனை –‘திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந- நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன்.-

ப்ரஹ்மாதிகள் -‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க,  ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந் நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச் செய்தார். ஓர் தேவும் உளதே –
ஒக்கப் பரிமாறாநிற்க, ‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’

————

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே 
–2–2-4–

பூவுக்கு ஈடான ஸுகுமார்யமும் பூஜைக்கு ஈடான ப்ராதான்யமும் அவனை ஒழிய வேறு ஒரு வியக்தியிலே இல்லாமையால் இவனே ஈஸ்வரன்-ஒரு பூவில்-உந்தித் தாமரை- நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன்.-சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது;

அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும்,
‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், 
‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும்,
‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும்
தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் ஜோதி மேல் அறிவார் யவரே என்றும்
அவ் வைராக்கியத்தையே அருளிச் செய்தார்.-ஆகையால் ஞானத்தில் காட்டில் இதர விஷயத்தில் சரக்கு அறுகை யாகிற வைராக்யம் ஸ்ரேஷ்டம் 

————-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே 
–2-2-5-

புண்டரீகாக்ஷனாகையாலும் – இவனே ஈஸ்வரன் ,-தகும் அம்மான் -படைக்கத் தகும் தாமரைக் கண்ணன் -தகுகைக்கு ப்ரகாசகங்கள் திருக்கண்கள்-எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க நிலமோ –

—————

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே
 –2-2-6-

ஆபத் சகனாகையாலும் இவனே ஈஸ்வரன்-கவர்வு இன்றி –-கவர்கையாவது-க்ரஹிக்கை – பற்றுகை:அதாவது,-ஹிம்சையாய் – துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி.-பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு-ரஷிப்பதற்கு- உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை யுடையனாய்.-இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற (சுடர் என்றதிலே நோக்கு ) திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர்,-இப்படி– ஆபத்துக் காலத்தில் துணைவனாய் -இவனே ஈஸ்வரன்-அசம்பாதகமாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தையும் யுடையனாய்- ஸ்வாபாவிக சார்வஞ்ஞத்தை யுடையனாய்-ஆபத் சகனாய்-ஷீரார்ணவ நிகேதனான வண் துவரைப் பெருமானாய்- அணியன் ஆகையாலும் சர்வேஸ்வரன்-

————–

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே 
–2-2-7-

அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே ஈஸ்வரன்-அவாந்தர பிரளயத்தில் மூன்று லோகமாய் இருக்க இங்கு ஏழு உலகம் என்றது ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பைக் காட்டவே-கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி,‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’அவன் தன் கள்ள மாய மனக் கருத்தை உள்ளுள் அறியார் யார்-இவனுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு யுண்டோ-

————–

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே
 –2-2-8-

ஸ்ருஷ்டியும் பாலனமும் ஸ்வ அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே ஈஸ்வரன் -ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் இரண்டும் பரம புருஷ ஏக கர்த்ருகம்-

——-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே
 –2-2-9-

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீனமாம்படி இருக்கை யாலும் இவனே ஈஸ்வரன்-சம்ஹாரம் ஒன்றே கீழ்ப்பாட்டில் இருந்து இதுக்கு வாசி )பரம புருஷ கர்த்ருகம் -ப்ரஹ்மாதி ஸ்தம்ப பயந்த சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும்
பரம புருஷ கர்த்ருகம் 

———–

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே
–2-2-10-

நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன்-ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் ‘மெய்’ என்றிருப்பார்களோ?‘கள்வா’ என்பர்கள்-அவர்கள் தங்களுடைய வாக்யமே பிரமாணம் -என்கிறார் ––ஈண்டுக் களவாவது,தன் ஸ்வாதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை.-கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின், இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே-அந்தப்புரத்தில் செல்லுகைக்கு அந்தரங்கதை போராமையாலே ஆட்டத்து வெளியிலே யானைக் காலிலே விழுந்து கூப்பிடுவாரைப் போலே பெரிய திருவடியின் மேலே ஏறிப் புறப்பட்ட இடத்தே யாயிற்றுப் புகழ்வது –வேத மயமான கருடன் வாஹனமாகையாலே ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-

———

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே
 –2-2-11-

இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’-ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை-வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -57 -புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –முடியானே மூவுலகும் -3-8-

February 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-அதாவது-பாங்கன் -தலைமகனின் தோழன் தலைமகள் இடம் இவ்வளவு ஈடுபாடு கூடாது என்று சொல்ல-அத்தை மறுத்துப் பேசுகிறான் –கழறலரே-இடித்துச் சொல்ல மாட்டார்களே -என்று மருத்துச் சொல்லும் பாசுரம்-அவளது அழகைக் கண்டவர்கள் -ஆத்ம தேஹ குணங்கள் -ஈடுபட்டவர்கள் –-அத்தைத் தாண்டி பெருமாள் இடம் கூட வர மாட்டார்களே-அந்த அழகு உனக்குத் தெரியாமல் பேசுகிறாய் என்று மருத்துக் கூறுவதால்-கிளைவித் தலைமகன் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரம்–குண்டலம் -காது ஸ்ரவணம்-ஹ்ருத் புண்டரீகம் -நினைவு -மனனம்
வேல் விழிக்கின்ற -கண்கள் -தர்சனம் -காட்சி-மூன்றும் இப்பாசுரத்தில் உண்டே
-நம்மாழ்வார் இடம் ஈடுபட்டுப் பரவசப்பட்டு இருப்பதை -அத்தைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது
முடியானே- -இதன் விவரணம்-ஆழ் கடலைக் கடைந்தாய் அங்கும் உண்டு-ஒவ்வொன்றின் அவயவமும் தனது வியாபாரத்துடன் நிற்காமல் மற்ற அவயவங்கள் செயலை விரும்பும் -பதிகம்-கட் செவி சஷுஸ் ஸ்ரவ -ஆதி சேஷனுக்கு கொடுத்த வைபவம் தனக்கும் வேண்டும் என்று பிரார்த்தனை–புலக் குண்டலம் புலப்படுவது கண்ணுக்குத் தெரிகிறதா -புரிகிறதா -இரண்டும் உண்டே–காதாலே கேட்டுக் கேட்டு -அறிவது -புண்டரீகத்த -தாமரை முகம் இங்கு -கண்ணுக்கும் மூக்கும் வேறே சொற்கள் உண்டே
போர் கெண்டை -சண்டை போடும் மத்ஸ்யங்கள் -கண்கள் இங்கு கெண்டை என்று வல்லி ஒன்றால் -மூக்கால் விலக்குண்டு -நடுவர் -நடுநிலையாளர்-சண்டையைத் தீர்த்து நடுவிலும் இருக்கிறது –
விலக்குண்டு சஞ்சரிக்கும் கண்கள் -வேலாயுதம் -கண்கள் இங்கு –-இவற்றாலே முக வர்ணனை
இத்தால் தலைமகன் ஈடுபட்டு அடிபட்ட வற்றுக்கு த்ருஷ்டாந்தம்-அலை எறியும் கடல் -கண்ணுக்கும் விசேஷணம் -தலைமகனுடைய ஹ்ருதயத்துக்கும் இதே த்ருஷ்டாந்தம்-இத்தைப் பார்த்தவர்கள் -யாரும் என்னை நிர்பந்திக்க மாட்டார்களே-

அவதாரிகை –சம்ஸ்லேஷித்து விஸ்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி இறே  தலை மகன்-ஆற்றாமை இருப்பது –(ஸ்ரீ வைஷ்ணவர்கள் -பகவத் கைங்கர்யம் ஆகிற கார்ய புத்தியால் –அதுவும் ஆழ்வார் உகப்புக்காவே சென்றார்கள் )-அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் – லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது தலைமைக்கு போராது காண் -என்று திருத்தப் பார்க்க –அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று அவன் கழறினததை  மறுத்து வார்த்தை சொல்லுகிறான்-கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்–பாங்கன் -தோழன் –

தலைமகன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல் துறை விரஹ வியசனத்தினால் மெலிய
ஒருத்தி வலையிலே அகப்பட்டேன் காண் என்ன-ஸ்த்ரீ நிமித்தமாகப் படுவது உனது பெரும் தன்மைக்குத் தகாது என்று சொல்ல-என்னால் காணப்பட்ட வடிவை நீ கண்டாய் அல்லை
கண்டவர் இவ்வாறு வன்சொல் கூரார் -பரம விலக்ஷண வியக்தி அன்றோ என்கிறான் –
கண்டவர்கள் அனைவருமே தன்னைப் போல் பிச்சேறிப் போவார்களே என்கிறான்

இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை-தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின பாங்கனுக்குத் தலைமகன் கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய் அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்-அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட நாயகியாய் அருளிச் செய்கிறார்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே
 – -57-தலைவன் தோழனிடம் எதிர் வார்த்தை பேசுதல் –

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்
——28–பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரச்துதமான பகவத சௌந்தர்யாதிகள்
விடாய்க்கு உத்தகம்பாய் அத்தாலே விடாய் கரை புரண்டு- அன்று தேர் கடாவிய கழல் காண தானே முன்பு தாகம் -ஆழ்வாருக்கு – அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களைச் சொல்லி
தாமும் தம்முடைய கரணக்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற முடியானேயின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்-இப்படி கரண க்ரமத்தின் யுடையவும் கரணியான ஆழ்வார் தம்முடையவும் ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது

புலக்குண்டல —  இத்யாதி--கெட்டேன்-இவன் செய்வது என் என்று அவன் (பாங்கன் )புத்தியிலே படுகைக்காக அவை (ஆழ்வாரின் திருமுக அழகை ) தன்னை பேசுகிறான்–சர்வ இந்திரிய அபஹார ஷமமான குண்டலம் உண்டு -கர்ண பூஷணம்-அத்தை உடைத்தாய் இருப்பதொரு தாமரைப் பூ போலே ஆயிற்று முகம் (புண்டரீகம்) இருப்பது-குண்டலம் என்று வட்டணிப்பை சொல்லவுமாம்-(புல-புலப்படுகிற )-புல என்றத்தை-பொல என்றாக்கி  -பொன்னாலே செய்த குண்டலம் என்றும் சொல்வார்கள்–புண்டரீகத்த போர் கெண்டை –அத் தாமரைப் பூ மேலே சிலை கெண்டைகள் பொருகிறார் போலே ஆயிற்று கண்கள்-அல்லாத அவயவங்களில் காட்டில் கால் கட்ட வற்றாய் இறே முகம் இருப்பது –
அதில் பிரதானமாய் இறே கண்கள் இருப்பது–வல்லி ஒன்றால் விலக்குண்டு – இரண்டு மத்த கஜம் தன்னிலே பொரா நின்றால்-நடுவே ஒரு கணயத்தை பொகட்டால் போலே-ஆயிற்று மூக்கு இருப்பது-உலாகின்றது-நடுவே இது கிடைக்கையாலே  இரண்டும் தன்னிலே வந்து கிட்டப் பெறாதே – அவ் வாசியையும் இங்கே (குண்டலத்தில் )ஏற வைத்துக் கொண்டு – கர்ண பர்யந்தம் -உலாவா நின்றது –
ஈஸ்வரன் வைத்த மர்யாதையில் செவ்விதாக நிற்க மாட்டாது போலே இரா நின்றன –(செவ்வி – நேர்மை –வளைந்து இருக்குமே-செவ்விதாக -செவி அளவாக )வேல் விழிகின்றன–வேலை இட்டு மறுபாடு உருவக்  குத்தினால் போலே ஆயிற்று நோக்குகள் இருப்பது-

கண்ணன் இத்யாதி –ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல்(ஆயிரம் கையால்; அலை கடல் கடைந்து தாள்கள் ஆயிரத்தாய் இத்யாதி ) கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு –தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று – இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –மறி கடல் போன்று -என்னுதல்-மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்–அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே
அந் நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அக வாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே தோற்றும்படி நின்றாளாய்  –அவற்றை நினைக்கிறான் –அவற்றால்-அவை தான் இப்போதும் வடிம்பு இடுகிறபடி-கலக்குண்ட நான்று கண்டார் – நான் கலங்கின அன்று கண்டார்–எம்மை யாரும் கழறலேரே-என் பிரகிருதி அறியும் நீயே அன்றிக்கே – இத்தனை பாவ பந்தம் இல்லாத புறம்பு உள்ளாறும்- இப்படி கழறி வார்த்தை சொல்லுவார்கள்-

குண்டலப் புண்டரீகம் –வட்டணித்த தாமரை ஆகவுமாம்-அவளுடைய கண்களாலே கடல் போலே அவன் கலங்கின அன்று -என்று நாயகனுக்கு விசேஷணம் ஆதல்-கடல் போல் கலங்கி இரங்கி இருக்கிற கண்கள் என்று கண்களுக்கு விசேஷம் ஆதல் -சம்ச்லேஷித்து -பாகவதர் ஆகிற நாயகன் சம்ச்லேஷித்து-கார்யா புத்தி -அவர் உகந்த  விஷயம் அன்றோ என்று பகவத் விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற புத்யா -என்றபடி-புண்டரீகத்த -என்று முற்று உவமையால் -முகத்தை சொல்லும்-செவ்விதாக -சாடு -செவ்வையாக கோணாமல் என்றும் செவி அளவாக என்றும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -ஞான வைபவம்-

நாயகன் நாயகி வலையில் அகப்பட்டதை சொல்வது-கடல் போன்ற கம்பீர ஸ்வபாவனான நீயோ இப்படி என்ன – பரம விலக்ஷண-வ்யக்தி அன்றோ –-துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீ நோ யத நயா பிரபு -தாரயத் யாத்ம நோ தேஹம் ந சோகே நாவ ஸீததி-நான் கண்ட நாயகியை நீ காணப் பெறில் திருவடி பட்ட பாடு படுவாய் –புலக் குண்டலம் -புலப்படும் குண்டலம்-பொலக் குண்டலம் -பொன்னாலாகிய குண்டலம்-குண்டலம் என்பதை கெண்டைக்கு அடை மொழி யாக்கி காதணி வரை நீண்ட திருக் கண்கள்–குண்டலப் புண்டரீகம் -வட்ட வடிவமான முக மண்டலம் -புண்டரீகம் போன்ற முகம் –
கெண்டை போன்ற கண்கள் -கொடி போன்ற மூக்கு -உபமான பதங்களையே சொல்லி –உவமை ஆகு பெயர் –வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று–இரண்டு மத்த கஜம் தன்னிலே பொர உத்யோகித்து நடுவிலே கணையம் இட்டவாறே தாம் நினைத்த படி பொராப் பெறாது ஒழிந்து பெரும் சீற்றத்தோடு சஞ்சரிக்குமா போலே நின்று -பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்தி–கொடுமை இன்னம் மாறாமல் இருப்பதை -வேல் விழிக்கின்றன-என்கிறான்-ஆழ் கடலைக் கடைந்து -கலக்கி – சாரமான அம்ருதத்தை கொண்டால் போலே நாயகியின் கண்களும் ஆழ்ந்த என் நெஞ்சைக் கலக்கி சாரமான அறிவைக் கவர்ந்து கொண்டன-அவள் கண்ணின் வைலக்ஷண்யம் அனுபவித்தற்கு அன்றி மற்றை யாருக்கும் அரிய ஒண்ணாது –யாரும் -எவ்வளவு வைராக்யம் கொண்டவர்களுக்கும் –மறி கடல் போன்றவற்றால்-போன்று அவற்றால் -பிரிக்காமல் போன்றவற்றால் ஒரே சொல்லாக கொண்டு -கடையய் பட்டு
அமிருதத்தை சுரந்த அலை எறி கடல் போன்ற அக் கண்கள் –தன் அழகைக் கண்டு கலங்கி மருண்டு நோக்கிய கண்ணுக்கு கண்ணன் கையால் கலக்குண்ட கடல் உவமை -என்றும் கூறுவார் –கண்டார் எம்மை யாரும் கழறலரே -தன்னைப் போலே பித்தேறிப் போவார்கள் –

புலக் குண்டலப்-புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய புலப்படுத்தல் -காணப்படுதல்-பொலக் குண்டலம் என்று பாடமாய்-பொற் குண்டலம் என்றுமாம்–புண்டரீகத்த-குண்டலத்தை யுடைய புண்டரீகம் என்கையாலே செவ்வியும் அழகும் மணமும் யுடைமையால் புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது-போர்க் கெண்டை-அப் புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே கண்ணைக் காட்டுகிறது–வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு-அதாவது மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால் விலக்கப் பட்டால் போன்றன என்கை–உலாகின்று-உலவா நின்று கொண்டு விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே உலவா நின்றன என்னலாய் இருக்கை-வேல் விழிக்கின்றன-வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே க்ரூர்யம் மாறாதன என்கை-கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால் -ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி-கலக்குண்ட நான்று கண்டார்
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண் என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை-நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை-எம்மை யாரும் கழறலரே-இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும் வாசி அறிவாராகில்(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து ) நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –

இத்தால்-இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப் பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது-எங்கனே என்னில்-புலக் குண்டலம் என்று கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது-(ஸ்ரோதவ்யா-ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )-குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில் பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும் ஆராய்ச்சியைக் காட்டுகிறது–வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது–வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும் சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )-கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று (பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )-அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று (மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்-கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும் -கழியப் பெரிதால் -7-3-6- என்றும் சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகரணமாம் அளவன்றியே பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே-ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி-நாமும் உருகுகிறோமே காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )-நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம-அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன–ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1- தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று-அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி அதுக்கு-கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்–அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு–அவற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்–கலங்கிற்றோ என்ன–அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ் வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய் நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று–இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்-விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-
என்று அருளிச் செய்தார் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் உடைய ஞானக் கண் கண்டு ஈடுபட்ட பாகவதர் – அத்தை குறைவாக பேசிய சுற்றத்தார்களை நோக்கி மறுத்து சொல்லும் வார்த்தை –-முக்திக்கு காரணமான முதல் பொருளை அரிய மூன்று உபாயம்-கேள்வி -சிந்தனை -காட்சி -ஆச்சார்யர் பக்கல் கேட்டு பிரமாணம் உக்தியால் உள்ளத்தில் தெளிந்து -ஐயம் திரிபறத் தெளிதல்-
புலக் குண்டலம்-செவிக்கு அணி -கேள்வி-புண்டரீகம் ஹிருதய கமலம் -சிந்தனை –-போர்க் கெண்டை-சிந்தனை -பூர்வ பக்ஷ உக்திகளால் விரோதியை உண்டாக்கி –
வல்லி யொன்றால்-விலக்குண்டுலாகின்று-மத்யஸ்த சித்தாந்த உக்தியால் அவ்விரோதம் தீர்ந்தமை –
வேல் விழிக்கின்றன-சஞ்சலம் இல்லாமல் நிலை நின்ற ஞானத்தால் நுண்மையான நெடிய திருமாலை தர்சித்தமை –கண்ணன் கையால்-மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்ற-சபல சித்தரான யாம் பரவசப்பட்டு இனிய பக்தியைச் சுரந்து நிலை மாறிய பொழுது -ஆழ்வார் ஞான விசேஷம் அறிந்தார் யாவரும் எம்மை இங்கனம் கூறார் -என்கிறார்-கண்டார் எம்மை யாரும் கழறலரே-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்காமல்-தேவு மற்று அறியேன் -மதுரகவி நிலைமையை பெறுவார் என்றபடி

ஸ்வாபதேசம் –
இத்தால் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயில்(ஆழ்வாருடைய ஞான வைபவம் -ஸ்ரவண -மனன -தர்சன -பர பக்தி பர ஞானம் பரம பக்திகளில் )அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை –பகவத் விஷயத்தை காட்டியும் மீட்க ஒண்ணாத படியை சொல்லிற்று –அவர்கள் -தேவு மற்று அறியேன் -என்று இருப்பவர்கள் காணும் –(மதுரகவி ப்ரக்ருதிகள் ) பவத பரமோ மத -என்கிறபடி அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது –(பீஷ்மர் உகந்த திரு நாமங்கள் என்று தர்மர் விரும்பியது போல்
இங்கு ஆழ்வார் உகந்தது என்று பகவத் விஷயத்தை விரும்புவது )

தாத்பர்யம்
ஆழ்வாரைப் பிரிந்து படும் ஆற்றாமையை -விஸ்லேஷ வியசனத்தை அறியாமல் இத்தனை ஈடுபாடு கூடாது என்று விலக்கப் பார்க்க-ஓ தோழனே நீ அவள் முகத்தின் வை லக்ஷண்யம் அறியாமல் பேசுகிறாய்-அதி சுந்தரம் அதி மிருதுவாய் அதி கந்தம் மிக்கு -தாமரை போல் உள்ள முகம்
சர்வ இந்த்ரியங்களையும் அபகரிக்கும்-வல்லிக்கொடி போன்ற நாசிகை அணையை இட்டு விலக்கப்படும் யுத்த உன்முகமாய் இருக்கும்-இரண்டு – மத்ஸ்யங்கள் போல் நேத்ரங்கள்
காது வரை நீண்டு -சங்கு சக்கரம் வரை நீண்டு இருக்குமே –-திருக்கண்கள் -நீண்டு மலர்ந்து வேல் போல் -அம்ருத மதனம் செய்யும் பொழுது கலக்குண்ட கடல் போல் என்னைக் கலக்கிற்றே
ஆழ்வார் ஸ்வரூபம்-வை லக்ஷண்யம் – அறிந்தவர் இப்படி ஈடுபடக் கூடாது என்று தடுக்க மாட்டார்களே -என்று சொல்லும் பாசுரம் –

3-8-முடியானே -பிரவேசம் –

செய்ய தாமரைக் கண்ணனாய்’ என்ற -3-6-திருவாய் மொழியில் –
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள் அவனைக் காண வேண்டும்
என்று விடாய்த்தபடி சொன்னார். நிழலும் அடிதாறுமான ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, பின்னர்த் தொடங்குகின்ற
பாகவதர்களுடைய சேர்க்கை-போதயந்த பரஸ்பரம் – ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு தரிக்கைக்கு உடல் அன்றிக்கே,
பகவானுடைய குணங்களை நினைவு மூட்டக்கூடியதாய் மேலே பிறந்த விடாயினை மேன்மேல் வளரச் செய்தது.
‘அச் சேர்க்கை விடாயினை மேன்மேல் வளரச் செய்தவாறு யாங்ஙனம்?’ என்னில், மேலே பாகவதர்களுடைய
சொரூபத்தை நிரூபிக்கும் முறையாலே பகவானுடைய குணங்கள் முதலாயினவும் சொல்லப்பட்டன அன்றோ?

அடியார்கள் குழாங்களை கூடுவது என்று கொலோ கேட்டது கிடைக்காமல் -ஆடி ஆடி -சோகம் விஞ்சி அழுதார் -அங்கே
இங்கு -தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் -என்று கேட்டதும் அடியார்களைக் காட்டிக் கொடுக்க
-சம்ச்லேஷம் வேறு ஒன்றை கிளப்பி விட -இங்கும் அழுகிறார் -சம்ச்லேஷம் விடாயை -உத்கம்பகம் -ஆனதே -வளர்த்ததே –
ஐச்வர்யார்த்தி கைவல்யார்த்தி பகவல்லாபார்த்தி திருமாலுக்கு போவது போலே அனைவரையும் ஈர்க்க maall கட்டி வைத்து இருக்கிறார்கள்

‘நன்று; நிரூபகமாகச் சொன்னால் அது விடாயை வளர்க்கக் கூடுமோ?’ என்னில், வேறு ஒன்றற்காகப் புகுந்தாலும்
தன்னை ஒழியப் புறம்பு ஒன்றுக்கு ஆள் ஆகாதபடி தன் பக்கலிலே துவக்கிக்கொள்ள வற்றாய் அன்றோ
பகவானுடைய கல்யாண குணங்கள் இருப்பன? அவற்றாலும் காதல் கரை புரண்டு, ‘என்றுகொல் கண்கள் காண்பது!’ என்னும்
அளவே அன்றி, மற்றை இந்திரியங்களும் விடாய்த்து,-3-6 -கண்கள் மட்டும் தாகம் -இங்கு -3-8-அனைத்து இந்திரியங்களும் தாகம் –
ஒர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியங்களும் ஆசைப்பட்டும்,
மற்றை இந்திரியங்களினுடைய தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்பட்டும்,
அவை எல்லாவற்றினுடைய தொழில்களையும் தாம் ஆசைப்பட்டும், –அவன் செய்த கிருஷி பலன் இப்படி விடாயை வளர்த்து –
தம்மிலும் விடாய்த்த உறுப்புகளும் உறுப்புகளிலும் விடாய்த்த தாமுமாய், பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன்,
வற்கடம் உண்டான காலத்திலே தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது,
தன் வாயிற்சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், ‘என் பசிக்கு என் செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’
என்னுமாறு போன்று, தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார்.

‘மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத்
தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய்
இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான்
அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள் என்பது. அப்படி இவரும் நோவுபட்டு, ஆயுதங்களையும் ஆபரணங்களையும்
அவற்றுக்குப் பற்றுக்கோடான திருமேனியையும் குணங்களையும் செயல்களையுமுடைய எம்பெருமானைக் காணவேண்டும் என்று,
‘ஈசுவரனால் முன்பு போலே குணங்களை அனுபவிப்பித்தல் முதலியவைகளாலே பட்டினியைப் போக்க ஒண்ணாது’ என்னும்படி,
கேட்டார் எல்லாம் நீராகும்படி பெருந்தானத்திலே பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

குண வை லஷண்யம் தான் உம்மை படுத்து கிறது -கரண அசங்கு சத்தால் அல்ல என்றீரே முன்னம்
-இப்படி ஒரே கரணம் அனைத்தையும் அனுபவிக்கும் குணமும் உண்டே -கட்செவி -சஷூஸ் காது ஒன்றே தானே -பாம்பணையான் –
சாம்யா பத்தி அருளுவீரே -நித்ய ஸூ ரிகள் அனுபாவ்யம் கொடுக்கிறீர் என்றேனே -கொடுக்கலாகாதோ
இப்படி மடி பிடித்து கெஞ்சி பிரார்த்திக்கிறார் -தொண்டை கிழிய கூப்பாடு போடுகிறார் –

பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே’ என்பது போன்றவைகளை நோக்கி, ‘ஆயுதங்களை’ என்றும்,
‘முடியானே’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்களை’ என்றும்,
‘மூவுலகும் தொழுதேத்தும் சீர்’ என்பது போன்றவைகளை நோக்கி,‘குணங்களை’ என்றும்,
‘முன்பு போலே’என்றது, ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்த முன்னுரையை நோக்குக,
பெருந்தானம் – பெரிய ஸ்வரம்.

ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்;
சக்கரவர்த்தி ஜீவிக்கும் பொழுதே சுமந்த்ரன் திரும்பினான் -5 நாள்களில் —
அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே,-திவாசான் பஹூன் ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி.
‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க.
‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம்.
‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

‘ஞானம் வெளிப்படுதற்கு வழியாக உள்ள கரணங்கள் விடாய்க்கையாவது என்?’ என்னில், ஆழ்வாருடைய காதல்
மிகுதியைச் சொன்னபடி. அன்றியே, ‘இந்திரியங்களும் தனித்தனியே அறிவுடைப்பொருள்களைப்போன்று விடாய்க்கு
இதர விஷயங்களில் வாசனை விடாயைப் பிறப்பியாநின்றால், நற்குணக்கடலான இறைவன் விஷயத்திற் சொல்ல வேண்டா அன்றே? ‘நன்று;
இதர விஷயங்கள், தாமே இனியவைகள் ஆகையாலே, அவற்றில் வாசனை விடாயைப் பிறப்பிக்கும்;
இறைவனிடத்தில் வாசனை பண்ணுகிறது பலத்தைப் பெறுதற்குச் சாதனமாக அன்றோ? அங்ஙனம் இருக்க, இவ்வாசனை,
விடாயைப் பிறப்பிக்கக் கூடுமோ?’ எனின், பகவத் விஷயத்தில் வாசனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஒரு பயனைப் பெறுவதற்காக அன்று;
இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று. ’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத
பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.

பூ உடன் சேர்ந்த நாறும் மணக்கும் -ஆழ்வார் அபிநிவேச அதிசயத்தால் இவைகளும் -அவன் பெருமையும் இவற்றை தூண்டுவிக்குமே –
சாத்ய புத்தியே வேண்டும் -நம் இயலாமைக்காக அவனை சாதனமாக்குகிறோம் –

‘நன்று; ஓர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்படக் கூடுமோ?’ எனில், பாம்பு கண்ணாலே காண்பதுஞ்செய்து
கேட்பதுஞ்செய்யாநின்றதே அன்றோ? அதுவும் அவன் கொடுத்ததே; அவன் தந்தால் அது நமக்குத் தட்டு என்?
அடியார்கட்கு அவன் கொடுக்க எங்கே கண்டோம்?’ என்னில், தம்மையே ஒக்க அருள வேண்டுகையாலே, ஒரு தேச விசேஷத்திலே
தன்னை அனுபவிப்பார்க்குக் கொடா நின்றானே அன்றோ? தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு
ஒன்று நோக்குவது –9-9-9-அன்றோ அவன்றன் படி?
‘நன்று; கரணங்களும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்தால், தம் காதல் குறையாதோ?’ என்னில்,
ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும் பகுதி குறைவற்றுப் போமாறு போன்று,
இவருடைய -அபி நிவேச அதிசயம் -காதலின் மிகுதி இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகினாலும் காதல் குறையற்றே நிற்கும்.-

எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் அனுபவித்த பாகவத சேஷத்வத்துக்கு அடியான பகவத் குண வைலக்ஷண்யமானது இவர் திரு உள்ளத்திலே அனுபவ அபி நிவேசத்தை ஜநிப்பிக்க
அத்தாலே ப்ரஸ்துதமான பாகவத சம்ச்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக-நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற
அனுபவ அலாபத்தாலே ஆர்த்தி பிறந்து
1-அனுபாவ்யனுடைய சேஷித்தவாதி ஆகாரத்தையும்
2-அநிஷ்டத்தைப் போக்கி அநந்யார்ஹம் ஆக்கும் படியையும்
3-ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
4-அவதார மூலமான அநந்த ஸாயித்வத்தையும்
5-ஆஸ்ரிதற்கு முகம் காட்டுகைக்கு ஈடான வாஹனத்வதையையும்
6-அவர்களுக்கு அனுபாவ்யமாம் படி கையும் திருவாழியுமான அழகையும்
7-இவ் வாஹன ஆயுத விசிஷ்ட வஸ்துவே தாரகாதிகளான படியையும்
8-அனுபவிப்பிக்கும் சவ்ந்தர்ய ஸ்வ பாவத்தையும்
9-அனுபவ பிரதிபந்தக நிவ்ருத்தி பிரகாரத்தையும்
10-நிவர்த்தனத்தில் அனாயாசத்தையும்
அனுசந்தித்து -அனுபவம் கிட்டாத ஆர்த்தியாலே அதிசயிதமாகக் கூப்பிடுகிறார் –

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே
.–3-8-1-

‘பெருந்தானத்தில் பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்’ என்று அருளிச்செய்வதனால், அளபெடை கொண்ட பாடமே சிறப்புடைத்தாம்.-பொன் முடியன்’ என்றதுதான், முடியத் தொடர்ந்து வருகிறபடி.-தொடங்கின வற்றை முடிக்கிறார் –அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது? மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே – உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது? இவர்க்கு இதில் ஓடுகிற விடாயின் மிகுதி, ‘முடியானேஎ!’ என்னும் இசையின் ஓசையிலே காணலாமித்தனை-இத்தால் இசையின் முக்கியத்வம் -அரையர் சேவை -புகும் முறைகள் எல்லாம் இல்லை இதில்:நெடிலுக்கு பின்னால் குறில் வருவது அக்ரமம்

மூன்று உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானேஎ – குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லா உலகங்கட்கும் புகலிடமானதிருவடிகளையுடையவனே! திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.
மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி. ‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.

ஆழ்கடலைக் கடைந்தாய் –ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி. இதனால், ‘இத்திருவடிகளில் இனிமையை விட்டு வேறு பிரயோஜனத்தை ஆசைப்பட்டார்க்கும் வருந்தி அவர்கள் விரும்பியவற்றைக் கொடுக்குமவன்’ என்பதனைத் தெரிவித்தவாறு.

புள் ஊர் கொடியானேஎ – தன்னை உவந்தார் பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே!-அடியார்கள் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனம்; தூரத்திலே கண்டு வாராநின்றான் என்று தரிக்கைக்குக் கொடி.-கொண்டல் வண்ணா – திருவடி முதுகிலே தோன்றினபோது ஒரு மேருவைக் கினிய – கபளீகரித்த -முழுதும் அபகரித்த -காளமேகம் படிந்தாற்போலே ஆயிற்று இருப்பது –என் நெஞ்சமே –கொண்டாடிச் சொல்லுகிறார் அல்லர்;-தன் விடாய்க்கு என்செய்வேன்!’ -‘நாதா! காப்பாற்ற வேண்டாவோ! இவ்வயிறு தாரி-ஒன்றின் ஒன்றின் செயலை கேட்க்கிறதே ஒரு வயிறு இல்லையே –நெஞ்சை என்னால் பரிக்கப் போமோ?’ –பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளின் மேல் ஏறி அருளி இந்த லோகத்தில் வந்து தோன்றாய் -என்று எம்பெருமானைக் காண ஆசைப்பட்ட போதே காணப் பெறாமையாலே குறைப் பட்டுக் கிடைக்கும் என் நெஞ்சம் என்கிறார்.

————–

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே
.–3-8-2-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது-பரமபதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.-என் வாக்கானது இவ் வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ் வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு இராமாவதாரத்தின்
செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற் செய்த இடம் அன்றோ இராமாவதாரம்?
தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

———-

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.
–3-8-3—

என் கைகள் வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர்தம் நாயகனே என்னும்– கைகளானவை ‘இவ்வாக்கே ஏத்திப் போமித்தனையேயோ! நானும் ஒருகால் ஏத்தினால் ஆகாதோ!’ என்னா நின்றது.‘தன் நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும்
தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே, கையிலே வெண்ணெய்த் தாழிகள் தட்டின அளவிலே பிரியத்தாலே நகைத்தலைச் செய்வான்-அவ்வாறு நகைத்தலைச் செய்யுமதுவே கை விளக்காக அமுது செய்வான்,’புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது;-அவன் கை வெண்ணெய் தடவ -கையும் மெய்யுமாக பிடிக்க ஆழ்வார் கை தடவுகிறது-வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை; அதனாலே, தேடுகின்றன’ என்னுதல். –கைகளும் மயங்கின -ஆழ்வார் அபி நிவேசம் இவற்றுக்கும் உண்டே –-‘கடல் கொண்ட பொருள் மீளுமோ?-ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –-

—————–

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.
–3-8-4-

வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி-இத்தலை தொழுது இருப்புப் பெறுமாறு போன்று, தொழுவித்துக் கொண்டு இருப்புப் பெறும் உன்னை. என்றது,
‘தொழுது அல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டு அல்லது தரியாத உன்னை’ என்றபடி.-பை கொள் பாம்பு ஏறி உறை பரனே – திருமேனியின் பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது.-இதனால் தொழுவித்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்வு அற உயர்ந்த உயர்வினையும், விரும்பத் தக்கதாகையையும்
தொழுமவர்கள் இருக்கும்படியையும் சொல்லிற்று.-அரவு அணையான் அன்றோ சர்வேசுவரனாவான்? -பர்யங்க வித்தையிற் சொல்லுகிற பேற்றை ஆசைப்படா நின்றது என்றபடி.

மெய் கொள்ளக் காண – பத்தும் பத்தாக மெய்யே காண. என்றது, ‘மனத்தின் அனுபவம் எப்பொழுதும் இடையறாது நிற்கின்ற நினைவின் மிகுதியாலே நேரே கண்கூடாகக் காணுதலைப் போன்று நன்கு வெளிப்பட,-பாவனா பிரகர்ஷம் -உருவ வெளிப்பாடு – ‘இனிக் கிட்டிற்று’ என்று அணைக்கத் தேட, -கைக்கு எட்டாமையாலே கூப்பீட்டோடே முடிந்து போதலன்றிக்கே, பிரத்ய பிஜ்ஞார்ஹமாம்படி தேடாநின்றது,’ என்றபடி. விரும்பும் –
ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன.
‘ஸ்ரீபரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே ஆசைப்படாநின்றன,’ என்றபடி.

————

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.
–3-8-5-

தன்னைக் காணவேண்டும் என்று விடாய்த்த இக்கண்களாலே ஒருகால் காண வருமோ?’ என்னும் ஆசையாலே செவிகள் கிடந்து ஓர்க்கும்; கன்னம் இட்டும் காண வேண்டும்படி யன்றோ இறைவனுடைய சிறப்பு இருப்பது? பிச்சை புகினும் கற்கை நன்றே போலே திருடியும் காண வேண்டும் படி அன்றோ விஷய வை லக்ஷண்யம் -கன்னக் கோல் இட்டு காண ஆசைப்பட்டன செவிகள்-மண் கேட்ட வாமனன் -என்றும் – மண் கொண்ட திரிவிக்ரமன் சொல்லாமல் முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார் காணும்.
அன்றியே, இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் ‘வாமனன்’ என்கிறார் என்னுதல்.பண் கொண்ட – வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் – முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை; இதனையே திண்ணிதாகப் புத்தி பண்ணா நின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி? பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –

———–

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.
–3-8-6-

‘கவி கனி போல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார்.-புவியின்மேல் – ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார்.
‘தேசம் இதுவே ஆனதைப் போன்று விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்;
பொன் நெடும் சக்கரத்து உன்னையே – விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே-எனது ஆவியே –
‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது-‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.-என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது -என்கிறார் –

———–

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே
.–3-8-7-

கரணங்களை ஒழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். மக்களினுடைய இழவும் பசியும் சொன்னார் மேல்;-இனி, தம் இழவும் பசியும் சொல்லுகிறார். இப்பாசுரத்தில், ‘நான் மஹாபாபி ஆகையாலே, நெஞ்சின் விடாயும் தீரப்பெற்றிலேன்;-என் விடாயும் தீரப்பெற்றிலேன்,’ என்கிறார்.-ஆரமுதே- ஆர்ந்த அமுது; நிறைந்த அமுதம்; உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது.-நினைக்கும் பொழுது எல்லாம் அமுதிலும் ஆற்ற இனிய அமுதே அன்றோ? தேவசாதியினுடைய அமுதைக்காட்டிலும் வேறுபாடு தோன்ற ‘ஆர் அமுது’ என்கிறார்.-இவற்றால், தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருக்க, விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் என்றபடி.-என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!-மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,‘தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.

மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன்.-என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன்,உன கோலமே –
இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது.-கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?

———

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கோலமே –அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி.-தத் குணசாரத்துவத்தாலே-விஜ்ஞ்ஞாதா என்னாமல் -விஜ்ஞ்ஞானம் யஜ்ஞ்ஞம் தனுதே -பண்ணும் என்பதே போலே –அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார்.

அஞ்சன நீலமே –‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி.-ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்-நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே –பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை.
அன்றிக்கே,-‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.

சென்று செல்லாதன முன்னிலாம் காலமே – இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே! இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்-உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது,-இக்காலம் தன்னையே அந்தக் காணக் கடவிய காலம் ஆக்குவம் என்றால் உன்னால் ஆக்க முடியாதோ -என்கிறார்

———–

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
–3-8-9-

கொள்வன்-1-மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று.-அன்றிக்கே,2-இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு -விநீத வேஷம் கண்டு -‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, 3-இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி;
‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான்

‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து,-‘உனக்கு வேண்டுவது என்?’அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய் மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.-

புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!
‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப் பண்ணிற்று’ என்று அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி.-வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –-சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.பிராட்டியினுடைய
வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது?ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன;
ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் -கச்சதா மாதுல குலம் போலே – ‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக-ப்ராசங்கிகமாக – ஓர் உருவிலே அருளிச்செய்தார்-

ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் –கரபாஹை கலங்கப் பண்ணியது -அடுத்தேறாக வந்த -அடுக்கு அடுக்க -வந்தவற்றை நீக்கி -பிராப்த கரத்திலே நிறுத்தி -இரண்டில் நிறுத்தினான்
வாணன் உடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி -கரம் இல்லாமல் -என்றுமாம் –
கைப்பற்று -பரமசிவன் -இறை இல்லாமல் ஆக்கி -இறை -கரம் என்றும் அர்த்தம் உண்டே –
‘வாணனுடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.

———–

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?
–3-8-10-

பொருந்திய மா மருது – மருது, மா மருது, பொருந்திய மா மருது.
மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, ‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி.
‘மா’ என்கையாலே, மா–மாறுஎன்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம்.
‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி.
ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை யுடையராய், சீற்றத்தை யுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி-மருதங்களின் இடை -சொல்லாமல் ஒருமை -பொருந்தி -காம குரோதங்கள் சொல்லி ஒருமை ஒரு தாய் பிள்ளைகள் -லஷ்யம் ஓன்று போலே இங்கும்

எம் பெருந்தகாய் – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!-ஜகத் சேஷி உடைத்தாய் ஆயிற்றே என்று உகக்கிறார் —உன் கழல் காணிய – ‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவை முரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற
திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. –தம்முடைய ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.-எல்லா அவச்தைகளிலும் திருவடி விடாதவர் இவர் -ரிஷி ஜீவனம் திருக் கண்கள் இவர் ஜீவனம் திருவடி

வாசகமாலை கொண்டு – ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று- இவர்க்கு ஒரு சொற் கொண்டு சொல்லுகை-எத்தனை காலம் புலம்புவனே –‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.-

——————-

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே 
–3-8-11-

சப்த மாத்ரத்தாலே -பரமபதம் பெறுவார் -சொன்னாலே -இதில் பிரார்த்தித்த படியே –
ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –பூமி யளந்த பெருமானை-அந்ய சேஷத்வ -ஸூவ ஸ்வதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்ந்தார் -சர்வ ஸ்வாமி –நலங்கொள் சீர்-கரணங்கள் சேதன சமாதியால் விடாய்த்து-அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தி மற்றவற்றை ஆசைப்பட்டு இவர் அவைகள் உடன் ஆசைப்பட்டு பகவத் விச்சேதம் இல்லாத
ச ஏகதா பவதி -அநேக சரீரங்கள் பரிகரித்து
அவ்வோ சரீரங்களிலும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசம் பெறப் பெறுவார் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -56-பாசுரம் -வியலிடம் உண்ட பிரானார் விடுத்த –கண்கள் சிவந்து -8-8-

February 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தோழி நாயகன் வந்தமை அறியாமல் இருக்க–ஏகம் சுகம் துக்கம் போன்றவள் அன்றோ-வந்தார் கலந்தார் பிரிந்தார் தூது விட்டதால் வந்தமை சொல்லவில்லை -குறிப்பால் உணர்த்துகிறாள் –
அதுவும் உபாயம் இல்லையே-அவன் அருளாலேயே வந்தார்-விடுத்த திரு அருளால் உயலிடம் பெற்று உய்ந்தும்–ரஹஸ்யத்தில் உரைக்கும் துறை -இரவிடைக் கலந்தமை-தென் மேற்கு காற்று தென்றல் வந்து -அயல் இடம் யாரும் அறியாமல்-திருத்துழாய் தரித்து -வர -தென்றல் வீச -இனிமை இவள் இடம் விடுத்துப் போனதே-வந்து கலந்தார் நேராகச் சொல்ல வில்லை – தோழிக்கு மட்டும் தெரியும்படி குறிப்பால் -சொல்கிறாள் சங்கேத மொழி –அதே போல்-கண்கள் சிவந்து -8-8-இதன் விவரணம்கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்

கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே
–8-8-1-கலந்தபடியால் கண்கள் சிவந்து-பெரியவாய் வாயும் சிவந்து -கனிந்து உள்ளே வெண் பல் இலகு -சுடர் –மகர குண்டலத்தன் –மாறுதல் மட்டும் சொல்லி கலந்தமை அங்கும் உண்டே-இதில் அவன் கலந்ததால் ஆழ்வாருக்கு வந்த மாற்றம்உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3–
இங்கு விடுத்த திருவருளால் உய்ந்தோம்

அவதாரிகை–கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க – பிரிவாற்றா தலை மகளைக் கண்ட தோழி –
இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இதுவாய் இருந்தது –(இதுவாய் இருந்தது –விரஹ தசையில் சிறிது தெளிந்து இருக்கிறாளே ) நாயகனையோ வரக் காண்கிறிலோம் – இனி இவள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை – இவளை இழந்தோம் ஆகாதே -என்று-நோவுபட –இத்தைக் கண்ட தலைமகள் – இவள் சன்னதியிலே யாத்ருச்சிகமாக(தூது விட்டதை உபாயமாகக் கொள்ள மாட்டாளே -பிரபன்ன ஜன கூடஸ்தர் அன்றோ )ஒரு சம்ஸ்லேஷம் வ்ருத்தம்  ஆயிற்றாய்- அத்தை இவளை நோக்கி – நீயும் அறியாதபடி இங்கனே ஒரு சம்ஸ்லேஷம் வ்ருத்தம் ஆயிற்று காண் –நீ அஞ்ச வேண்டா காண் – என்று தலைமகள் தான் தோழிக்கு வ்ருத்தமான   சம்ஸ்லேஷத்தை சொல்லுகிறாள் –

இப்படி அன்பர் ஸ்லாகிக்கும் படி பகவத் விஷயத்தில் இவருக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே இவருடைய அனுபவ அலாபத்தாலே வந்த கிலேசம் தீரும்படி ஸர்வேஸ்வரன் ஒரு முகத்தாலே ஸம்ஸ்லேஷத்தை ப்ரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பிக்க பார்ஸ்வஸ்த்தரனானவர் தம்முடைய முன்புத்தை ஆர்த்தி கண்டு கலங்கின ஸூஹ்ருத்துக்களை ஆஸ்வஸிப்பித்த பாசுரத்தை தன் ஆற்றாமைக்குக் கலங்கி இருந்த தோழியைக் குறித்துத் தலைவி இரவிடத்துத் தலைமகன் கலந்தமையைத்
தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க பிரிவாற்றாத் தலை மகளைக் கண்ட தோழி இவளுடைய ஆற்றாமை இருந்த படி இதுவாய் இருந்தது-நாயகனையோ வரக் காண்கிறிலோம் இனி இவள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே என்று நோவு பட-இத்தைக் கண்ட தலைமகள் ஸந்நிதியில் யாத்ருச்சிகமாக ஒரு ஸம்ஸ்லேஷம் விருத்தமாயிற்று காண் நீ அஞ்ச வேண்டா காண் -என்று தலைமகள் தான் தோழிக்கு விருத்தமான ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறாள்

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
-56 –தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78–இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்-அதுக்கு இடம் அறும்படி ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ் வாத்ம ஸ்வரூபம் இருப்பது -என்று ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

தோழி வார்த்தை – இது உண்டான போது நமக்கு ஒரு கை முதல் வேணும் – அது இன்னது என்று அறிந்திலோமே -என்ன-வியலிடம் உண்ட – அவன் அருள் ஸஹகாரி நிர பேஷமாய் இருக்கும் என்னும்
பிரளயத்தில் பூமிக்கு உள்ள கைம்முதல் இறே நமக்கு உள்ளது என்கிறாள் –ஆபத்தை காண வேண்டுவது அவர்க்கு – பிரளய ஆபத்தில் தன் வயற்றில்  வைத்து நோக்குகிற போது பூமிக்காகா ஏதேனும் ஒரு கைமுதல் உண்டோ –அப்போது அப் பூமிக்காகா  உண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கும் உண்டு போலே காணும் –அவ் வாராகரமே. அவர் பக்கல் உள்ளது –அவர் பண்ணும் கிருபைக்கு பாத்ரமாம் இத்தனையே இத்தலைக்கு வேண்டுவது –அவர் பண்ணும் அருள் ஒரு ஸஹகாரியை அபேஷித்து இரா இறே–

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே – ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிறவர்கள் -நமக்கு தஞ்சமாக நினைத்து இருக்க அடுப்பது என் -என்ன வங்கி புரத்து நம்பி இருந்தவர் –மூடோயமல்பமதி -என்ற ஷத்ர பந்துவினுடைய வாக்கியம் அன்றோ -அது ஒண்ணாது  காண் – பிரணதே -(ப்ரக்ருஷ்டமான நமஸ்கராம் ) -என்று ஓன்று உண்டு – அதிலே ஒரு சர்வஞ்ஞன் அறிய நிர் மமனாய் விழ வேணும் இறே –(அது நம்மாலே இயலாதே )-நம் தலையிலே ஏதேனும் ஒரு அந்வயம் ஒதுங்கில் அது செய்து தலை கட்டுகையில் உள்ள அருமையாலே அது இழவோடே தலைக் கட்டும்படி இருக்கும் காண் – இத் தலையில் ஏதேனும் ஒரு அம்சம் உண்டாகில் அது அப்ரதிஷேத்திலே புகும் இத்தனை அல்லது –உபாய சஹ காரம் ஆகாது –நீ உபாயம் ஆக வேணும் -என்கிற ஸ்வீகாரம் அவஸ்ய அபேஷிதமாய் இருக்க செய்தேயும்- அத் தலையிலே உபாய பாவமாம் படி இறே இருப்பது–இவன் பக்கலிலே பரம பக்தி பர்யந்தமாக விளைந்தாலும் – அது ஸ்வரூப பிரயுக்தமான ருசியிலே-அந்வயிக்கும் இத்தனை போக்கி –
ஸ்வ தந்தரமாக  நின்று பல பிரதமாக மாட்டாதே இறே இருப்பது-ஆனால் பின்னை நினைத்து இருக்க அடுப்பதென் -என்ன-காளியனுடைய வார்த்தையை-நினைத்து இருக்க அடுக்கும் -என்று
அருளிச் செய்து அருளினார் –

சோஹம் –(அந்த நான் ) திரு மேனியிலே என்னுடலை இட்டு சுற்றின பிராதி கூல்யத்தில் நின்று நிவ்ருதனாகா நான் –தேவ தேவச –பிராதி கூல்ய நிவ்ருத்தியே -பரிகாரமாக போரும்படியாய் அன்றோ –
உன்னுடைய நைர பேஷ்யம் இருப்பது –கிருபை பண்ண வேணும் என்கிற உக்தி மாத்ரத்தை இறே-
இப்போது பிரதிகூல்ய நிவ்ருத்தி யாக நினைக்கிறது –

நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
.–நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் (பிராதி கூல்யத்தில் நின்று நிவ்ருதனாகா நான்) வெருவி வந்து நின் சரண் என  (உக்தி மாத்ரத்தை இறே) –கையில் உள்ளது -பிரதி கூல்யத்துக்கு பரிகரமாய் இருக்க –
சரணம் -என்ற உக்தி மாத்ரம் இறே அதின் பக்கல் உள்ளது-வெருவி வந்து--அந்த உக்தி தானும் போழ்கன் இறே –யார்த்தி இல்லாமையாலே சத்ரு பயத்தாலே வந்த இத்தனை இறே –
நார்ச்சா நாதவ் ஸ்துதவ் நச சாமர்த்யவான் –போழ்கன்-போட்கனேன்
மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே
–ஸ்ரீ திருமாலை-33—எனக்கு என்றால் வெல்லாம் செய்ய வல்லேன்-உனக்கு என்றால் ஒரு துரும்பு நறுக்குகைக்கு சக்தி இல்லை
ஒன்றும் செய்ய வேண்டாதபடி நிர பேஷனாய் இருந்தாய்-ஒன்றும் செய்கைக்கு சக்தி அன்றே இருந்தேன் நான்–உனக்கு என்றால் எல்லாம் செய்ய வல்லை ஆகில் -எனக்கு என்றால் ஒன்றும் செய்ய மாட்டாய் ஆகில் – ஆனால் இனி நம்மை செய்ய சொல்லுகிறது  என் என்னில் –க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி –இனி கிருபை பண்ண வேண்டி இருந்தது –அதுக்கு அனுதாபம் வேணும் –கிருபைக்கு பரிகரமான அனுதாபம் என் பக்கல் இல்லாமல் இருந்தது –இனி இவ் அனுதாபத்தால் கொள்ளும் கார்யதையும் கிருபையையே கொண்டு கொள்ள பார்த்து அருள வேணும் –அப்படி அனுதாபம் இன்றிக்கே இருந்தவர்களையும் ரஷிக்குமோ என்ன-பலி புஜி சிசுபால இத்யாதி-காகம் ஆனால் -சதம் நிபதிதம் -என்று ஆர்தியோடே பூமியிலே வந்து விழுந்ததமை உண்டு-சிசுபாலானால் திரு நாமங்களை சொல்லி த்வங்கரித்தமை உண்டு-இப்படி அவர்கள் பக்கல் அல்ப குணம் அரோபிக்கையாலே அவர்கள் பக்கல் உன் கிருபை முடங்கப் பட்டது –(இரண்டு பேர் இடமும் குண லேசம் உள்ளதே ஒன்றும் இல்லாதவரை ரஷித்தேன் என்ற பட்டம் தேடி உள்ளாய் நீ அதுவே நான் )-என் பக்கல் அங்கன்பழி இடலாவது  ஓன்று இல்லாமையாலே உன் கிருபைக்கு தான் நினைத்த படி அழகு செண்டேறலாம் இறே என் பக்கல்

விடுத்த திருவருளால் –-அவர் தந்த அருளாலே -இத் தலையில் உள்ளது ஒன்றும் பாராதே –
தம் பேறாக-அவர் பண்ணின அருளாலே –விடுத்த –-வர விட்ட -தந்த–உயலிடம் பெற்று உய்ந்தோம்  
இவளுக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஓர் அவகாசம் இல்லை –இவள் உஜ்ஜீவித்தாளாக காணப் பட்டோம் -என்று இறே தோழி இருந்தது –உஜ்ஜீவிகைக்கு ஓர் அவகாசம் உண்டாயிற்று –அது தான் மேல் வரக் கடவது என்று பார்த்து இருக்கை அன்றிக்கே -பெற்று உய்வதும் செய்தோம் –உய்ந்தோம்-இருவரும் உஜ்ஜீவித்தோம் -பஹு வசனம் -அவன் ஸ்வபாவத்தை  தோழி அறிந்து இருக்கையாலே –அவனையும் இழந்தோம் இவளையும் இழந்தோம் என்று இறே இருந்தாள் – எல்லோரும் உஜ்ஜீவித்தோம் காண் –அஞ்சல்-அஞ்சாதே கொள்–அம் தோழி –என்னுடைய பேறே உனக்கு பேறாக இருக்கும் அவள் இறே நீ –
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் –என்கிறபடியே – தோழி என்ற போதே -இவ்வளவு இல்லையோ –அம் தோழி என்றதால் பெற்றது என் என்னில் –தம் தம் பிரயோஜனமும் இத்தலையில் பிரயோஜனமும் வேண்டி இருப்பாரும் உண்டு –-ஸ்வ பிரயோஜனத்தை பாராதே –இத் தலையிலே பிரயோஜனமே பிரயோஜனமாய் இருக்கை –அம் –என்கிற விசேஷணத்தாலே–ஸூஹ்ருதோ வா பவத்விதா -என்னக் கடவது இறே –-சுக்ரீவனை பார்த்து பெருமாள் அருளிய வார்த்தை இது –-நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரி யாக்கி –அவனிலும் நம்மை அந்தரங்கர் ஆக்கிக் கார்யம் கொள்ளும் தனை
ஸௌ ஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார் –என்னுடைய பேறே உன்னுடைய பேறாய்
என்னுடைய இழவே உனக்கு  இழவு என்று இருக்கையாலே என்னுடைய இழவை நினைத்து அஞ்சுதி இறே  –இனி அஞ்சாதே கொள் —ஓர் தென்றல் வந்து –-தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது –-இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –-தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே–சம்ஸ்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக (மறைத்து )சொல்லுகிறாள்  –அவளும் அத்தை சங்கேத பிரக்ரியையால் அறிந்து – அயல் அறிய செய்வது என் என்று – துணுக்கு என –அயலிடை யாரும் அறிந்திலர்–அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–(இவர் வாயில் –என்னையும் நோக்கி என் அல்குலையும் நோக்கி –
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் -அங்கு தலைமகள் வார்த்தை 
)-மேல் செய்தது என் என்று கேட்க –-அம் பூம் துழாயின் இன் தேன் –அழகிய பூம் தாரை உடைய திருத் துழாயின் இனிய தேன் துளிகளை –புயலுடை நீர்மையினால் –குளிர்ந்த மேகத்தின் உடைய ஸ்வபாவத்தாலே- ஒருவர் அபேஷிதாய் இருக்க  வந்து உபகரித்த படிக்கு சொல்லுகிறது–தடவிற்று என் புலன்கலனே
புலன்களையும் கலங்களையும் – எல்லா வித இந்திரியங்களையும் எல்லா ஆபரணங்களையும் –
இந்திரியங்கள் விடாய் தீரவும் -ஆபரணங்கள் கழலாத படியும் -தடவிற்றுப் போலே காணும்-இத்தால்
சம்ஸ்லேஷம் வ்ருத்தமான படியை தோழிக்கு சொன்னபடி இறே –

தலைவி இரவிடத்து தலை மகன் கலந்தமையை தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம் –
குளிர்ந்த தென்றல் அயல் அறியாமல் ஏகாந்தமாக நாயகியின் திருத் துழாயின் தேனைத் துளித்துக் கொண்டு எனது அவயவங்களிலும் ஆபரணங்களிலும் பட்டு ஆற்றாமை தீர்த்தது காண் -என்கிறாள் –
நேராக கலந்ததை கூட வெட்க்கி தென்றல் மேலே வைத்து அருளிச் செய்கிறாள் – இனி வாடை போன்றவற்றுக்கு அஞ்ச வேண்டாம் -என்கிறாள் –வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்-பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அருளியது போலே-துக்க சாகரத்தில் மூழ்கித் தவிக்கின்ற என்னை ரக்ஷித்ததால் –உய்ந்தும்-உய்ந்தனம் -என்றபடி –ஆற்றாமை தீரும் படி குளிர்ந்த புதுமையான தென்றல் -ஓர் தண் தென்றல் வந்து-தோழி நாம் அஞ்ச வேண்டாம் -கலவியை அயலார் அறிந்திலர் -அயலிடை யாரும் அறிந்திலர்-நாயகன் கருணை திறத்தை –  -என்கிறாள் –தடவிற்று என் புலன்கலனே
புலன்களையும் கலங்களையும் –எல்லா வித இந்திரியங்களையும் எல்லா ஆபரணங்களையும் –
இந்திரியங்கள் விடாய் தீரவும் -ஆபரணங்கள் கழலாத படியும் -தடவிற்றுப் போலே காணும்-இத்தால் சம்ச்லேஷம் வ்ருத்தமான படியை தோழிக்கு சொன்னபடி இறே –

வியலிடம் உண்ட பிரானார்-விஸ்த்ருதமான தேசத்துக்கு பிரளய ஆபத்து வர வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகர் ஆனவர்–விடுத்த திரு அருளால்-அவர் நம்மளவில் வர விட்ட சம்பத்தான அருளாலே–உயலிடம் பெற்று உய்ந்தும்–உய்கைக்கு அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தோம்–அஞ்சலம்
இனி வாடை தொடக்கமான வற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லை-தோழி-இன்னாமைக்குத் தளர்ந்த வுனக்கும் ஒக்கும் இறே பேறு–ஓர் தண் தென்றல் வந்து-நாட்டில் தென்றலோடு கூட்டலாவது ஓன்று இன்றியே-அத்விதீயமாய் நம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி அதி சீத ஸ்பர்சமாய் நம் பக்கல் ப்ரேமத்தாலே தாக்ஷிண்யத்தை யுடைத்தான தென்றலானது தன் வரத்துத் தானே ஆஸ்வாஸ கரமாம் படி வந்து-அயலிடை யாரும் அறிந்திலர்-தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து-(நேராக நாயகன் கலந்தமை சொல்ல வில்லை-ஓர் தண் தென்றல் வந்து என்று உகந்து உரைத்ததே நாயகனுடைய வரவைச் ஸூசிப்பிக்கிறாள் )தோழி அசல் அறியில் செய்வது என் -என்று துணுக்கு என்ன-அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை என்கிறார்–மேல் செய்வது என் என்று கேட்க –அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -அழகிய பூந்தாரை யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற ஸ்வ பாவத்தை யுடைத்தாய்க் கொண்டு என்னுடைய இந்திரியங்களை ஸ்பர்சித்து ஆஸ்வஸிப்பித்தது-அன்றியே-பொலன் கலன் என்ற பாடமான போது
பொன்னாலே சமைத்த கலன் என்று சொல்லுவர்–இத்தால்-ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக கிருபையாலே நமக்கு உஜ்ஜீவிக்கக் குறையில்லைபிராணஸ்ய பிராண -என்கிறபடியே
நமக்கு ஆஸ் வாஸ கரனானவன் –லௌகிகரான ஒருவர் அறிவுக்கும் விஷயம் ஆகாத படி
தன்னுடைய நிரதிசய போக்யதையையும் பிரகாசிப்பித்து தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி
தம்முடைய கரணங்களையும் ஞானாதி குண அலங்காரங்களையும் தான் விரும்பினான்–புலன் கலனே -இந்திரியங்கள் -ஆபரணங்கள் -என்று கொண்டு பிரித்து அருளிச் செய்கிறார் -நமக்கு இனி அஞ்ச வேண்டுவது இல்லை என்று ஸூஹ்ருத் பூதரை ஆஸ்வஸிப்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-இது யுண்டாம் போது நம் பக்கலிலே ஒரு கைம்முதல் வேணும்
அதுவும் இன்னது என்று அறிகிறிலோமே என்ன-வியலிடம் யுண்ட பிரானார்-பிரளயத்தில் பூமிக்குள்ள கைம்முதலே இறே நமக்கு யுள்ளது என்கிறாள்-ஆபத்தே காண் வேண்டுவது அவன் அருளுக்கு –
பிரளய ஆபத்தில் அவன் வயிற்றிலே வைத்து நோக்குகிற போது பூமிக்காக ஏதேனும் கைம்முதல் யுண்டோ அப்போது பூமிக்கு யுண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கு யுண்டு போலே காணும்-பிரானார்-உபகாரமே காண் அவர் பக்கல் உள்ளது -அவர் பண்ணும் கிருபைக்குப் பாத்ர பூதராம் இத்தனையே காணும் இத்தலைக்கு வேண்டுவது-அவர் பண்ணும் இது ஒரு ஸஹ காரியை அபேக்ஷியாது இறே-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால் உயலிடம் பெற்று உய்ந்தும் விசேஷ பலத்தைப் பெற்று உஜ்ஜீவித்தோம் -தன் உஜ்ஜீவனமே தன் தோழிமார்க்கு எல்லாம் ஆகையாலே இந்த பஹு வசனம்-அஞ்சலம் தோழி –நீ இவ்வாடை கூடகமானவற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லையடி-ஓர் தண் தென்றல் வந்து அயலிடை யாரும் அறிந்திலர் அயல் இடத்தாரும் அறியாத படி தன் வரவே எனக்கு ஆஸ் வாஸ கரமாம்படி குளிர்ந்த தென்றல் வந்தபடி-வந்தது என் செய்தது என்ன-அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே-என்கிறாள்-அழகிய பூந்தராய் யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற ஸ்வ பாவத்தை உடையதாய்க் கொண்டு தடவிற்று என் கண் முதலான இந்த்ரியங்களையும் அணி கலன்களையும் அது செய்து போந்துள்ள ஸூகத்தை நான் ஏது என்று சொல்லுவேனடி

ஸ்வாபதேசம் –
கலங்கின அன்பரை நோக்கிக் கூறும் ஆழ்வார் -லௌகிக பதார்த்தங்களை அஞ்ச வேண்டாம் –
பிறர் ஒருவருக்கும் புலன் ஆகாமல் வந்து தன் போக்யதையை வெளிக்காட்டி என் துயரம் எல்லாம் தீர்க்கும்படி என் உறுப்புக்கள் ஞானம் போன்ற அலங்காரங்களையும் விரும்பி ஆட் கொண்டான் என்கிறார் –

ஸ்வாபதேசம்
குண ஞானத்தாலே தரித்த படி சொன்ன படி ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச ந
எம்மின் முன்னுக்கு அவனுக்கு மாய்வர் -என்று மோகித்து கிடக்கிற தோழி போலே – தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய மன்னேர் அன்ன என்ற பாசுரத்தை உள் கொண்டு அந்த ஆபத்து இவளுக்கு உண்டு என்று அவதாரிகை-

தாத்பர்யம்
நாயகி விட்ட தூதுவர் நாயகனை கொண்டு வர நாயகன் உடன் சேர்க்கச் சேர்ந்தமையையும் அறியாதே தோழி –அதற்கு முன் இருந்தே மோஹித்து இருக்க மோஹம் தெளிந்து எழுந்து இருந்து
முன்புள்ள தலைவியின் ஆற்றாமையையே நினைத்து தான் வியசனப்பட அந்தத் தோழிக்கு நடந்த சம்ஸ்லேஷம் அறிவித்துத் தேற்றுகிறாள் தலைவி –
ஓ தோழீ நீ வியசனப்பட வேண்டாம் பிரளயத்தில் ஆபத்து வந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து அருளியது போல் அந்த மஹா உபகாரகர் என்னுடன் கலந்து என்னுடைய ஆற்றாமையை நீக்கி அருளினார்-இத்தால் முன்புள்ள சங்கடம் தீர்ந்து இருவரும் பிழைத்தோம் ஆனோம்
முன் பாதகமான தென்றலும் அவன் சூடும் திருத்துழாயில் தேனை முகந்து-என் இந்த்ரியங்களையும் ஆபரணங்களையும் தடவிக் கொடுத்து ஆஸ்வாஸப்படுத்திற்று-அசலார் யாருமே இந்த கலவியை அறியார்-லோக அபவாதத்துக்கு நீ அஞ்ச வேண்டாம் என்று தலைவி பாசுரமாய் இருக்கிறது –

8-8-கண்கள் சிவந்து பெரியவாய்வாயும் சிவந்து கனிந்து-ப்ரவேஸம்-

கண்கள் சிவந்து -பிரவேசம்
மாயக் கூத்தா என்னும் திருவாய் மொழியிலே–இவருக்கு ஓடின விடாய் எல்லாம் ஆறும்படி
இருத்தும் வியந்து -என்கிற திருவாய்மொழி யிலே வந்து கலந்து
இவர் விடாயும் தீர -தன் விடாயும் தீர்ந்து–இவரைப் பெற்ற பேற்றினால் ப்ரீதனாய்-
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே இங்கனே சேர விழுந்தது-யாங்கனம் விழுந்தது எனின் –

(ப்ரவ்ருத்தமான ஸம்ஸ்லேஷம் சிதிலமாக ஒண்ணாது )இனி உண்டான கலவி குலைய ஒண்ணாது –
இவர் ஆகிறார்
வளவேழ் உலகின் -என்ற திருவாய் மொழியைப் பாடின ஆழ்வார் ஆயிற்று –
நாம் கிட்டக் கொள்ள -சிறியேனுடைச் சிந்தையுள் -என்று-(கீழ் சொன்னது ஸுசீல்யம் அனுபவித்து -அத்தையே இப்பொழுது )தம் தாழ்வினை நினைத்தவர்-
இன்னும் அது பின் நாட்டி அகலப் பார்ப்பர்-
அங்கனம் அகலப் பார்ப்பதற்க்கு முன்னே அதனை நீக்க வேண்டும் -என்று பார்த்து

இனி இவர் தாம் அகலப் பார்ப்பதும்-அநாதி காலம் சம்சாரத்தில் உழன்று போந்த ஆத்ம வஸ்து
அங்குத்தைக்கு யோக்யதை இனியது அன்று என்று ஆயிற்று-
இது அங்கன் அன்று-வந்தேறியான இதனைப் பாராமல்-அடியைப் பாரீர் என்று-
இந்த ஆத்ம வஸ்து வினுடைய சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்த வேண்டும் என்று பார்த்தான்

(வைலக்ஷண்யம் -ராகவனுக்கு வைதேஹி போல் -நித்யம் -ஞான ஆனந்த மயம் -அத்யந்த சேஷம்)

அங்கனம் பார்த்து–
என்றும் உள்ளதாய்-ஞான ஆனந்த லஷணமாய்–நமக்கே உரிய அடிமையாய் காணும் இருப்பது
நீர் கிட்டுமது நமக்கு தாழ்வு அன்று
கௌஸ்துவத்தை போன்றும் பிராட்டிமாரைப் போன்றும் -நமக்கு நிறமாம் இத்தனை -என்று
இவருடைய ஸ்வரூபத்தின் சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்துகிறான்-

அங்கனம் படுத்தும் இடத்து
உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி காட்டுவதற்கு வாரீர் -என்றால்-
மின் மினி போலே இருக்கிற இதில் சரக்கு என் -என்று இசைவார் ஒருவர் அல்லர் இவர்
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்றருள் -(8-7-7)-என்று-நம் வடிவிலே துவக்குண்டு இருப்பது ஓன்று உண்டு

ஆதலால் நம் வடிவினைக் காட்டி அதன் மூலமாக நமக்கு
பிரகாரமாக இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுப்போம் -என்று பார்த்து –
வாரீர் நம்முடைய வடிவு அழகு இருக்கிறபடி கண்டீரே
நம்மைக் காணும் காட்சியிலே உம்மையும் காணலாய் காணும் இருப்பது -என்று
தம்முடைய வடிவு அழகினை முற்பட அனுபவிப்பித்து

தனக்கு நூபுரம் முதலானவைகளைப் போன்று மிக இனிய பொருளுமாய்
தனக்கே அடிமையுமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்க
அதனை-அனுபவித்து இனியர் ஆகிறார்-

ஸ்ரீ கௌஸ்துபம் முன் அருளிச் செய்தது எம்பெருமான் திரு உள்ளம் -பிரணயித்தவ ஸ்வ அபிப்ராயத்தால்
நூபுரம் என்றது ஆழ்வார் திரு உள்ளம் -இது தத்வ ஸ்திதி –
தாஸ்ய பாவனையில் இருப்பாரே -பிரேம பாவனை விட -பர்த்ரு பார்யை -ஸ்வாமி தாஸ்ய பாவமே -மிகுத்து இருப்பாரே –
அத்யந்த போக்யமுமாய் அத்யந்த சேஷத்வமுமாய் இருக்கும்-அமுதனார் -இத்தை கொண்டே ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
சீலம் கொள் நாதமுனியை -யதிகட்க்கு இறைவன் யமனைத் துறைவன் -திருவடி -அப்ருதக் சித்தம் என்று காட்டி அருளினால் போலே –

இத் திருவாய்மொழி யில் முதல் இரண்டரை பாசுரங்களால்-பாட்டையும் பிரிக்காமல் -அவ்வளவு நெருக்கம் என்று காட்ட –
தன்னை அனுபவிப்பித்து-பின்னர் ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுத்தானாய் இருக்கும்-அதற்கு அடி என் என்னில்
ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி
பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர்

அன்றிக்கே
ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று
தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –

அன்றிக்கே –
இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறிய
கலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

பிராணவார்த்தம் -8-8-என்பர் -8-8-/-8- 9/8-10 -மூன்றும் சேர்ந்து திருமந்த்ரார்த்தம் –
பகவத் ஸ்வரூபம் ஆரம்பித்து ஆத்ம ஸ்வரூபத்தில் -முடியும் -கீதை விட ஏற்றம்
சந்தோஷம் உடன் ஆரம்பித்து வருத்தம் உடன் கீதை முடிய
ஏ பாவம் பரமே -உற்றேன் உன பாதம் பெற்றேன் -ஆனந்தம் முடித்து
ஐவரை வாழ வைக்க அது

ஒருவரை வாழ்வித்து 25 பேரை அழிக்க திருவாய் மொழி –
இருத்தும் வியந்து -உபாயம் இரக்கம்
அருத்தித்து -தகுதி -இச்சை
அவர் பொன்னடிக்கீழ் -இனிமை புருஷார்த்தம் –
இச்சை இரக்கம் இனிமை –
பாலோடு அமுது அன்ன ஆயிரம் -த்ருஷ்ட்டி விஷம் இந்த திருவாய் மொழி
வானோர் மனச் சுடரை தூண்டுவிக்கும் வினைச் சுடரை அழிக்கும் திருமலை போலே –

மாசி மகம் -மணக்கால் நம்பி -ராம மிஸ்ரர் -கலியுக ராமர் -மூவர் இடம் இல்லா பெருமை
அனுஜித ஷமா யோகம் -பரசுராமர் போல் ரோஷ ராமர் இல்லை
அபுண்ய ஜன பாதகம் -பெருமாள் போலே இல்லையே –
மது -கள் குடிக்காத -பல ராமர் போலே இல்லையே —

எட்டாம் திருவாய் மொழியில் -கீழ் தம்முடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து இந்திரியாதி விரோதிகளை நசிப்பித்துத்
தன் பேறாகக் கலந்து ப்ரீதனான ஈஸ்வரன் -இவருக்கு நிகர்ஷ ஆபாதகமான விரோதி வந்தேறி என்னும் இடம்
இவர் அறியும் படி இவருடைய ஸ்வரூபமானது நமக்கு பிரகாரமாய் இருக்கிறபடியையும்
விலக்ஷணமாய் இருக்கிறபடியையும் காட்டி நைர் தோஷயத்தை பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி
இவருடைய ஆத்ம ஸ்வரூபம் தன்னை ஆஸ்ரயித்து இருக்கும் என்கைக்கு உறுப்பாகத்
தான் இவருடைய ஹ்ருதயத்தில் இருக்கிற இருப்பையும்
சர்வாந்தராத்ம பூதனான தன்னுடைய நிரதிசய ஞானானந்த யோகத்தையும்
அஹமர்த்த பூதனான ஆத்மாவும் தனக்கு பிரகார பூதன் என்னும் இடத்தையும்
சர்வ காரண பூதனான தான் விலக்ஷண சாரஸ்யத்தை யுடையனான சேதனனுக்கு அப்ருதக் பூதனான நிலையையும்
ஸ்வ பிரகார பூதனான ஆத்மாவினுடைய ஸூரவதமத்வத்தையும்
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ப்ராப்ய பாவத்தையும்
ஏவம் வித ஆத்ம ஞானம் இல்லாதாருடைய சம்சார சம்பந்தத்தையும்
ஆத்மாபிராப்தி காமனுடைய அந்திம ஸ்ம்ருத்யபேஷையையும்
ஸ்வரூப ஐக்கிய ரூபமான மோக்ஷம் அசம்பாவிதம் என்னும் இடத்தையும்
ஏவம் விதனான ஆத்மாவுக்குத் தன் பக்கல் ப்ரத்யாசத்தியே உஜ்ஜீவன ஹேது என்னும் இடத்தையும்
பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து இப்படி விலக்ஷணமான ஆத்மாவினுடைய நைர் தோஷயத்தை பிரகாசிப்பித்துத்
தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டான் என்று ப்ரீதராகிறார் –

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

கபோலம் சொல்லாமல் -ஏழையராவி பதிகத்தில் கபோலம் படுத்துவதை சொல்ல வில்லையே –
அங்கே எதனால் சொல்ல வில்லை –வாசா மகோசரம் அது -பேசாமல் விக்கித்து போனார்
கூரத் ஆழ்வான் -யசோதை கை பட்டு பருத்த இந்த இடம் – -தாயாருக்கு சொத்து என்று விட்டார் -மற்றவை எல்லாம் பார்யை இவளுக்கு

உள்ளான் -உள்ளே ஆனான் -உள்ளே இருப்பானாக இருக்கிறான் -உள்ளத்திலே பிரகாசிக்கிறான்-என்றபடி

அடியேன் உள்ளானே-இந்த அழகைக் கண்டு மயங்கி -சேஷ பூதன் இப்பொழுது தான் –நானும் உனக்கு பழ வடியேன்ஸ்வரூபம்
இங்கு அழகுக்குத் தோற்று அடிமை –போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தான் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஐயப்பாடு அறுத்ததும் அழகால்
உள்ளானே-உள் ஆனே-உள்ளத்திலே பிரகாசிக்கிறான்

அவன் தன்னுடைய கலவியாலே புதுக் கணித்த-திவ்ய ஸுந்தரியாதிகளோடே -தெய்வத் தன்மை உடைய வனப்பு முதலானவைகளோடே
என்னுடைய மனத்தினிலே புகுந்து இருந்தான் -என்கிறார் –

நம் ஆழ்வார்கள் வடிவு அழகிற்கு அவ்வருகு ஸ்வரூப குணங்களில் இழிய மாட்டார்கள் –அவன் தன்னோடு-பிராட்டிமாரோடு-அடியார்களோடு-வாசி இல்லை-எல்லாருக்கும் விரும்பத் தக்கதாய் இருக்குமாயிற்று திருமேனி –இச்சா க்ருஹீத அபிமத தேகம்

ஆசார்ய ஹிருதயம் -சூர்ணிகை -58-மூவாறு மாசம் மோஹித்து – என்ற இடத்து
மாயக் கூத்தனில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தால் போலே
தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து-தம்மோடு கலந்த பின்பு அவை தன் நிறம் பெற்றதை அனுசந்தித்து
ஈதென்ன பிரகாரம் -என்று ஆறு மாசம் மோகித்து -மணவாள மா முனிகள் வியாக்யானம் –
இருத்தும் வியந்து -என்ற திருவாய்மொழியிலே கலவியாலே தன்னிறம் பெற்றபடி –
கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு -இசையிலே காணும் இத்தனை –கண்கள் சிவந்து -சிவந்த்தில் அழுத்துச் சொல்ல வேண்டும்

குனி சாரங்கன் –மகர குண்டலத்தன் -எனபது போன்று-இவையும் சில ஆபரணங்கள் இருக்கிறபடி-திருவாரமும் -திருவே ஆரம் –திருவும் ஹாரமும் என்றபடி -சரபங்கன் ஆஸ்ரமம் -இளைய பெருமாள் இடம் வில்லில் நாணை இறக்கி உள்ளே போகச் சொல்லி
இங்கு பராங்குச நாயகி செல்ல வளைந்து இருக்க வேணுமோ என்னில் –
வீரர்கள் கையில் வில் வினை இல்லாத போதும்-வளைந்தே இருக்குமாதலின் -குனி சாரங்கன் -என்கிறது –

——–

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

அடியேன் உள்ளான் –சேஷத்வ ஏக நிரூபணீயம்-அடிமைத் தனமே அடையாளம் அஹம் அர்த்தம் –

உபய லிங்க விசிஷ்டம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகை த ஏக குணாத்மகன் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம்
ஞானானந்த விசிஷ்டம் -உபமான ராஹித்யம் என்றதாயிற்று-அனைவருக்குள்ளும் இருந்தாலும்
இத்தை அறிந்தவர் உள்ளே இருந்து அவனுடைய போகத்துக்கு விஷயம் ஆவோம்
அறியாமல் இருந்தால் அவனுடைய லீலைக்கு விஷயம் ஆவோம்)

என்னுடைய மனத்தில் புகுந்த அளவு அன்றிக்கே-என் சரீரத்திலும் புகுந்து கலந்தான் -என்கிறார்-
கீழே அடியேன் உள்ளான் -உள்ளே ஹிருதயத்தில்-என்றாரே -இதில் சரீரத்திலும் புகுந்து கலந்தான் என்றவாறு —

அஹம் அர்த்தத்துக்கு ஞாநானந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தி –

ஈஸ்வரனுக்கும் இவருடைய ஆத்மாவைக் காட்டிலும்-இவர் கழிக்கிற சரீரம் உத்தேச்யமாய் தோற்றா நின்றது –
செருக்கர் தாம் உகந்த விஷயத்திலே அழுக்கு உகக்குமா போலே –த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் –

இதனால்–உயிர்கள் பரனோடு ஒன்றாம் என்னும்  -அல்லல் எல்லாம் வாதில் வென்றான் –என்றபடி
ஜீவ பர பேதமும் -அடியேன் -உள்ளான்-உள்ளே இருக்கிறான் -என்பதால்-
ஜீவர்களுக்குள் உள்ள பரஸ்பர பேதமும் –அடியேன் –அண்டத்தகத்தான்-ஏக பஹு வசனங்கள் -என்பதால்-
சேஷ சேஷி சம்பந்தமும் இல்லை-என்று சொல்லுகிற மதங்கள்-அர்த்தாத் ஸித்தம் -பொருள் ஆற்றலால் மறுக்கப் பட்டனவாம்-

ஓடியா இன்பப் பெருமையோன் -உணர்விலும்பர் ஒருவன்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
எல்லாருக்கும் விரும்பத் தக்கவனாய் இருக்கிறவன் காண்-என் சரீரத்தை விரும்புகிறான்-

————–

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

காரணம் இலாத கிருபையாலே -நிர் ஹேதுக-கிருபையாலே-தன் விஷயமாக இச்சையும் பிறப்பித்து–
என்னோடே கலந்து-(இது வரை முதல் பாதி பாசுர அர்த்தம் =மேல் கலவி ஸ்திரமாக இருக்க அநந்யார்ஹத்வம் ஸ்வரூப நிரூபகம் என்று காட்டி அருளினான் என்கிறார் )அக் கலவி நிலைத்து நிற்கும் பொருட்டு-
சிறப்பினை உடையதாய்-தனக்கே யுரியதுமான ஆத்மாவின் ஸ்வரூபத்தையும்-காட்டி அருளினான் -என்கிறார்
அநந்யார்ஹ சேஷத்வமான ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டி அருளினான் -என்றவாறு —

யானும் தானாய் ஒழிந்தானே-அவ்வளவிலும் முடியாமல்-
என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம்படி-தனக்கு பிரகாரம் ஆகையாலே-
அடிமை என்னும் இடத்தையும் காட்டிக் கொடுத்தான் –

ஆழ்வீர்-என்றால் ஏன் -என்பான் ஈஸ்வரனே போலும் காணும்-
நான் என்னும் சொல்லும்-நான் என்னும் புத்தியும்-தன்னளவும் செல்லும் படி சரீரமாய் இருக்கையே
ஸ்வரூபமாம்படி இருக்கிற படியைக் காட்டித் தந்தான் –

தத் -சப்தம் -குணங்களோடு கூடின இறைவனை காட்டுவது போன்று-
த்வம் -சப்தமும் சரீரத்தோடு கூடின ஆத்மாவுக்குள்-அந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் அளவும் செல்லக் கடவது அன்றோ –
தத் -அவன் — த்வம் -நீ — அஸி -ஆகிறாய்–போலே என்கிறார்-
இரண்டும் ப்ரஹ்மம் -விசேஷணங்கள் தானே மாறி இருக்கும்-விசேஷ்யம் ஒன்றே -இது தானே சாமாநாதி கரண்யம் -விசிஷ்டாத்வைதம் –

———-

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4

அநந்யார்ஹ சேஷத்வம் -முதல் பாதியில் லுப்த சதுர்த்தி அர்த்தம் -பின் பாதி –

பிராப்தி -தொடர்பினைக் காட்டின அளவே அன்றிக்கே-இவ்வாத்மா தனக்கு மிகவும் இனிய பொருள்
என்னும் இடத்தையும் காட்டித் தந்தான் -என்கிறார்-

அவனுக்கு -என்னது -என்பதனால் இனியதாய் இருக்கும்-
இவனுக்கு -அவனது -என்பதனால் இனியதாய் இருக்கும்-

நின்ற ஓன்று -என்று ஜீவாத்மா ஸ்வரூபத்தைக் காட்டும் இந்த சொல்லானது-
இந்த ஜீவாத்மா ஸ்வரூபத்துக்கு பற்றுக் கோடாய் இதனை சரீரமாக உடைய-பரமாத்மா அளவும் சென்று அவனைக் காட்டுகிறது-
ஜீவாத்மா ஸ்வரூபத்தை காட்டும் அச் சொல் தன்னளவில் நிற்பது அல்லாமையால்-பகவானைக் காட்டும் அளவாய் அன்றோ இருப்பது-

நின்றனர் இருந்தினர் -என்ற பாசுரத்திலே போலே-இந்த சாமாநாதி கரண்யத்துக்கு
இனிமையோடு கூடிய ஸ்வரூபத்தின் விசேஷண அம்சமான-இனிமையிலே தாத்பர்யம்

——–

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே-8-8-5-

மகாரார்த்தம் விளக்கி அருளிச் செய்கிறார்

மேல் பாசுரத்தில் பகவான் உடைய சரீரமாக ஆத்மா பேசப் பட்டது –
இதற்கு மேலே நான்கு பாசுரங்கள் –
ஆடையில் உள்ள வெண்மையைப் பிரித்து நிஷ்கர்ஷக சப்தத்தை இட்டுச் சொல்லுமா போலே-
நிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் பிரித்து பேசுவது-
அநிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் அபேதமாக பேசுவது-
நியத நிஷ்கர்ஷகம் தர்மி தர்மங்களை பிரித்து பேசுதல்-வாசனை உடைய மண் போலே-

வைஷிக நிஷ்கர்ஷகம் ஆவது தர்ம தர்மிகளை விருப்பத்துக்கு தக்க பிரித்து பேசுவது -வஸ்த்ரம் வெண்மை நிறத்தை உடையது போலே-
மேலே நான்கு பாசுரங்களும் வைஷிக நிஷ்கர்ஷ்கம் என்பார் எம்பார்-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் கதி த்ரய மூலஸ்தம் உண்டே –

அநிஷ்கர்ஷமாக திருமாலை ஆண்டான் நிர்வாகம்-

எம்பெம்மானோடு -என்கிற பாசுரம் முடிய கேவல ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுகிறது -என்று எம்பார் அருளிச் செய்யும் படி –
திருமலை ஆண்டான் -சரீரமான தன்மையிலே வைத்து சொல்லுகின்றன -என்று பணிப்பர் –

வெண் பட்டு -இரண்டையும் முதல் வேற்றுமையில் பிரித்து சொல்லாமல்
பட்டின் வெண்மை வேற்றுமை உருபுடன் பிரித்துச் சொல்லுமா போல் இரண்டு நிர்வாஹங்கள்

இப் பாட்டில் சாங்கிய சாஸ்த்ரத்தில்-தத்துவங்களை என்னும் முறையாலே
ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும் படியையும்-அதனை அறிகையில் உண்டான அருமையும் சொல்லிற்று-

——–

நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ் உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே–8-8-6-

யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே-இந்திரியங்களை அடக்குதல் முதலியவற்றின் வடிவமான யோகத்தாலே-பிரகிருதியின் நின்று விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை வருந்தினால் நேரே காணலாம் –என்கிறார்

பகவத் பிரகாரம் -மூன்றாம் -பாசுரம் —போக்யம் நாலாவது -பாசுரம் –ஸ்வயம் பிரகாசம் -ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி –
கைவல்யம் பெறவும் பகவத் பிரசாதத்தால் -ஆறாம் பாசுரத்தில் –இவற்றை தெரியாமல் சம்சாரத்தில் உழல்வோம் என்று ஏழாம் பாசுரம் -அருளிச் செய்கிறார்

வீடு –பிரகிருதி சம்பந்த பட்ட பொருள்களிலும் தொற்று அறும் –
பிரகிருதி போன்று -சுனையும் -நாணமும் -மிருதுத் தன்மையும் உடையார் அலர்-
தன் பக்கல் பராமுக புத்தி பண்ணினாரை தானும் முகம் பாராது –
பகவான் -தள்ளி நிற்க தள்ளி நிற்க அவகாசம் பார்த்து உடனே இருப்பானே -அவன் போலே இல்லையே பிரகிருதி —

அதுவே வீடு –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -என்கிறபடியே-பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களில் தொற்று அற்றவாறே-
ஆத்துமாவை அடைதல் ஆகிற அதுவே-மோஷமாய் இருக்கும் –
அதற்கு என்று செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -என்பார்-வீடாமே-என்கிறார் –

வீடாமே–சர்வேஸ்வரனுக்கு பிரகாரமாக ஆத்தும வஸ்துவை நினைத்து-
அவ்வழியாலே இதனை பேறாக அன்றோ இவர் தாம் நினைத்து இருப்பது-
அவ்வளவு போக மாட்டாமல் இதன் நன்மையைக் கண்டு- இவ்வளவில் கால் தாழ்வார்க்கும் போந்திருந்ததே -என்கிறார்-
தம்முடைய உத்தேச்யத்தில் ஒரு சிறு பகுதியை புருஷார்தத்தில்-முடிந்த நிலமாக
கொள்ளுகையால் அன்றோ முன்பு–அது செற்று -திருவாய் -1-2-5– இவர் இதனைச் சிரித்து இருந்தது-

————

அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

மேலே கூறிய உபாயத்தின் படியே-அந்த ஆத்துமாவை அடையாமல்
அதிலே ஐயம் தொடரப் பெற்றவர்கள்-உருவக் கிலேசப் பட்டே போம் இத்தனை –என்கிறார் –

——-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

இப்படி அரிதில் பெறத் தக்க-ஞானம் கை வந்தாலும்-அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில்
செய்தன எல்லாம் பயன் அற்றவை ஆகும்-என்கிறார்-

எம்பார் நிர்வாகத்துக்கு சேர -ஆத்மா வினுடைய இயல்பான தன்மை பற்றி அருளிச் செய்தார் -இப்படி என்று தொடங்கி-
மேல் திருமாலை ஆண்டான் நிர்வாகத்துக்கு சேர எம்பெருமான் நினைவோடு ஒத்தே சேர்ந்து -சேஷமாக-என்று நினைவு பற்றி -அருளிச்செய்கிறார் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -என்னும் பாட்டு தொடங்கி-நிஷ்கிருஷ்ட ஆத்மா அனுசந்தானம் மாத்ரமே அன்றிக்கே-
பகவானுக்கு அடிமையாம் தன்மை பர்யந்தமாக அனுசந்திக்கிறது என்றும்-
இப்பாட்டில் எம்பெருமானோடு ஒத்தே சென்று அங்கே உள்ளம் கூடக் கூடிற்றாகில் -என்னும் அந்திம ஸ்ம்ருதியும்-
எம்பெருமான் தனக்கு அடிமையாக இவ்வாத்மாவை நினைத்து இருக்குமா போலே-
இவனும் அவன் நினைவோடே ஒத்து அந்நிலையிலே அடிமையாம் தன்மையை நினைக்கிற நினைவு கூடுமாகில்
நல்ல வாய்ப்பு என்று ஆண்டான் அருளிச் செய்வர் –ஓத்தே சென்று என்றும் ஒத்த தேஐஸ்  என்றும்

நன்று
பகவான் உடைய குணங்களில் ஈடுபட்டவராய் இருக்கிற இவர் இவற்றை எல்லாம் பேசுவது என் -என்னில் –
இப்படி அரிதாய் இருக்கிற இதனைக் கண்டீர் எனக்கு காட்டித் தந்தது -என்று
அவன் பக்கலிலே செல்லுகின்ற செய்ந்நன்றி அறிதலே காரணமாம் -என்க –

—–

கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே–8-8-9-

அந்திம ஸ்மிருதியிலே ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்-பேதம் கூறப்படவாறே-
இந்த பேதம் உண்மை அன்று-தத்வ ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஓன்று -என்று கொண்டு
எப்பொழுதும் பிறவியிலே உழன்று திரிகிற ஆத்மாவை ப்ரஹ்மமாகச் சொல்லுகிற-மாயாவாதிகளை இகழ்கிறார்

உயிர்கள் மெய் விட்டு ஆதி பரனோடு ஒன்றாம் -அல்லல்-குத்ருஷ்ட்டி பக்ஷம் சம்பவம் -நிரசிக்கிறார்

அது அதுவே –அந்த ஆத்மவஸ்து அந்த ஆத்மவஸ்துவே-ஒரு பொருள் வேறு பொருள் ஆகாதே அன்றோ –ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே
நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாக-இச் சம்சாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களை சொல்லுவாரும் உளரோ -என்ன –

———-

உளரும் இல்லை அல்லராய் உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

சாங்க்யம் முதலான குத்ருஷ்டி மதங்களில்-நான் புகாதபடி-தானே யாதொரு பயனையும் கருதாது என்னை அங்கீகரித்து-
நினைவுக்கு வாய்த்தலையான மனத்திலே நித்ய வாஸம்-செய்கையாலே -என்னுடைய எல்லா துக்கங்களும் போயின –என்கிறார் –

உளரும் இல்லை அல்லராய் –இல்லை அல்லராய் உளரும்-சேஸ்வர சாங்க்ய மதம்

உளராய் யில்லை யாகியே –இல்லை யாகியே உளராய் –நிரீஸ்வர சாங்க்யன்

அன்றிக்கே-
அடியர் -அடியர் அல்லாதவர் -விஷயமாக்கி-இல்லை அல்லராய் உளராய் இருப்பார் அடியார்க்கு-ஆஸ்ரிதற்கு
இல்லை யாகியே உளராய் இருப்பார் அடியார் அல்லாதார்க்கு -என்னுதல் –நாஸ்திகர்க்கு –

———–

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11–

ஆத்ம அவலோகனம்-முடிந்து -அழகை அனுபவிக்கிறார் -நாயகி பாவம் -பொசிந்து காட்டுகிறது
குருகூர் சப்தம் இல்லை -பகவத் பிராப்தி பலன் -பிரகாரமாக ஆத்மாவை அன்பவித்து –
தெருளும் மருளும் மாய்த்துத்-சம்சார விஷய ஞானமும் த்யாஜ்யம் -பகவத் விஷய ஞானம் மட்டுமே நிலைக்க வேண்டும்

நிகமத்தில்-இப்பத்தும் கற்றாரை–தம்மை அங்கீகரித்தாப் போலே அங்கீகரித்து–தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்வான் –என்கிறார் –

வாய் திறந்து அருள பாடிட்டு –அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மீன் என்று அருளி இருத்தும் அம்மானாம்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான-திருவடிக் கீழ்-இப்போதைய வீரக் கழல்-
பிராட்டி முன்னாக அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –திண் கழலாய் இருக்குமே 

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ –சார்வே தவ நெறி -10-4-

February 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கிளைவித் தலைமகன் பாசுரம்-நலம் பாராட்டு துறை-இவ்வளவு அபிநிவேசம் உள்ளவன் சீக்கிரம் திரும்பி வருவான் என்று-குலே மஹதி சம்பூதே (அயோத்யா 26 )-பெருமாள் சீதையைப் பிரிந்து போகும் பொழுது அவள் குலத்தைக் கொண்டாடினான்-அது போல் பார்ஸ்வஸ்தர் இங்கு ஆழ்வாரைக் கொண்டாடுகிறார்-இவள் தலை இயற்க்கை மணம் போல் எங்குமே இல்லையே-கண்ணன் விண்ணூர் போல் -இங்கு வராஹ விண்ணூர்-விபவம் சொல்லியே பாசுரங்கள்-நித்ய முக்தர் படிக்கும் மேல் அன்றோ ஆழ்வார் – விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ

அவதாரிகை –இவள் விட்ட தூதுக்கு வந்து கலந்து –-பிரிய நினைத்து – பிரிந்தால் வரும் அளவும் இவள் ஜீவித்து இருக்கைக்காக – இப்படி இருக்கிற இவன் -பிரிந்தால் தாழான் -என்று அவள் நெஞ்சில்-படுகைக்காக –நலம் பாராட்டு என்பதோர் கிளவியாய் – அவளைக் கொண்டாடுகிறான் –
குலே மஹதி சம்பூதே (அயோத்யா 26 )-என்று பெருமாளும் கொண்டாடினார் இறே-

இப்படி நிரவதிகமாக இவருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த பக்தி வைலக்ஷண்யத்தைக் கண்ட
அன்புடையார் ஸ்லாகித்து யுரைத்த பாசுரத்தை-தலைவியை நலம் பாராட்டின (கிளவித் )தலைமகன் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிக-தூதுக்கு வந்து – பிரிய நினைத்து – பிரிந்தால் வரும் தனையும் இவள் ஆறி ஜீவித்து இருக்கைக்காக இப்படி இருக்கிறவன் அகலான் -என்று அவள் நெஞ்சிலே படுகைக்காக
நலம் பாராட்டு என்று ஒரு கிளவியாய் அவளைக் கொண்டாடுகிறான-குலே மஹதி ஸம்பூதே -அயோத்யா -26-21-என்று பெருமாளும் கொண்டாடினார் இறே

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–55- நலம் பாராட்டுதல்-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் 
–94-கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக- ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே- ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே-அந்த பிராப்ய வேஷத்தையும்- பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக- ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –சேவித்து-ஹ்ருஷ்டமாம் –மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

வண்டுகளோ வம்மின் –வண்டுகாள் வாரும் கோள்-நீர்ப் பூ இத்யாதி –-மூன்று வகை யாதல்
நாலு வகை யாதல் -சொல்லக் கடவது -இறே–நிலப் பூவும் கொடிப் பூவும் என்று – நிலத்திலே இரண்டாக்கி –மற்றை இரண்டையும் கூட்டி நாலாக-சொல்லுவாரும் உண்டு –நல்ல மலர் பொழில் நாலும் நுழைவீர் காள்-என்னக் கடவது இறே -பூ உள்ள இடம் எங்கும் மது பானம் பண்ணிக் களித்து –
அதுவே யாத்ரையாக -திரிகிற உங்களுக்கு- நல்லதோர் வார்த்தை சொல்லுகிறேன் வாரும் கோள்-ஏனம் இத்யாதி –அத்விதீயமான மகா வராஹமாய் –இப் பூமியை தன் திருவடிகளால் துகைத்து –
அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –வைகுந்த மன்னாள் –-வைகுந்தம் அன்னாள் –காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ் விபூதி போல் அன்றியிலே –அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் –
தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–
சர்வம் யதேவ நியமேன–ஸ்தோத்ர ரத்னம் – 5-அனைத்தும் யாருடையதோ – இறே-பூமா-அன்றோ – யத்ர நாந் யத்ர மற்ற ஒன்றைக் காணாவே-மாதா பிதா சர்வமும் ஆழ்வாரே குழல் வாய் விரை போல் –இவளுடைய குழலில் பரிமளம் போல்-விண்டு இத்யாதி –நீங்கள் தட்டித் திரிகிற விஸ்மயநீயமான பூமியில்  இப்படி சென்று காலம் பார்த்து இருக்க வேண்டாதபடி இருப்பதொரு மலர் உண்டோ –

ஸ்வாபதேசம்-
இத்தால்-பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் – அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி நீங்கள் அனுபவிக்கிற அவ் விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை –
அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –(இவ்வாறு இவரைக் கொண்டு அவன் பாடுவித்தான்
)

அம்பஸ்ய பாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –(நாராயண உபநிஷத் ) என்னக் கடவது இறே –-அம்பஸ்ய -வியூகம்–புவனஸ்ய -விபவம் -அர்ச்சை
நாகஸ்ய -பரம்–மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –அந்தர்யாமி-இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –பாட்டுக் கேட்க்கும் இடம்-கூப்பீடு கேட்க்கும் இடம் -வளைத்த இடம் -குதித்த இடம் –எல்லாம் வகுத்த இடமே-

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே
– ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -76 –

சார்வே –நீர் நின்ற நேமியான்-தவ நெறி பக்தி பரமாகவும் பிரபத்தி பரமாகவும் நிர்வாஹம் அதில்
பக்தி ஆரம்ப விரோதியைப் போக்க பிரபத்தி அங்கமாகக் கொண்டு -கீதை
தஸ்மாத் ந்யாஸ -உயர்ந்த தபஸ்ஸு பிரபத்தி -திருவடிகளே -இங்கு பக்தி ப்ராப்யமாகப் புகும்
ப்ராப்ய ருசி வளர்க்கப் பக்தி பயன்படும் –பக்தி ப்ராபகம் என்றும் ப்ராப்யம் என்றும் இரண்டு நிர்வாஹங்கள்-அம்ருத சகாரமாக வேறு ஒன்றில் கண் வைக்காமல் அனுபவிக்கிறான்
வைகுந்தம் அன்னாள்-சதா சந்நிதி யுடன் ஒத்து உள்ளவள் அன்றோ இவள் -அதுக்கு சமம் இவள்
வேறு ஒன்றில் போக்யத்தை நெஞ்சிலே படாமல் இருப்பவள்-குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் -ஐதிக்யம் -எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் பைம் தாமரைக் கண்ணன் அவன் ஆழ்வார் இடம் –
பக்தி ப்ராபகமாக மட்டும் இல்லையே-பரம பக்தி ஏவ மாம் குருஷ்ய -கத்யத்தில் பிரார்த்தனை -அங்கும் உண்டே -ஸாத்ய பக்திதானே அங்கேயும் தொடரும்-மத்யைவ தயை கிருபை ஒன்றே சாதனம்
இதுவே சார்வே தவ நெறி திருவாய் மொழிக்கும் இப்பாசுரத்துக்கும் தொடர்பு
பகவத் சந்நிதி காதாசித்தகம் -ஆழ்வார் சந்நிதி நித்யம் -இதுவே வகுத்த இடம் 

நலம் பாராட்டு துறைப் பாசுரம்-பூவின் வாசியும் மணத்தின் வாசியும் தேனின் வாசியும் அறிந்த வண்டுகளே-இவள் கூந்தலை ஒக்குமோ -என்றவாறு–நாயகன் தன் அன்பை அந்யாபதேச முகமாக புகழ்ந்து உரைத்தல் –-நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ -இவை எல்லா வற்றிலும் இல்லாத நறு மணம் இவள் கூந்தலில் இயற்கையாகவே உள்ளதே –-மருங்கு உழலும் களி வண்டினங்காள் உரையீர் மடந்தை -கருங்குழல் நாறும் என்போதுடைத்தோ நும் கடி பொழிலே -என்றும் –-மருங்கு உழல்வாய் நீ யறிதி வண்டே சொல் எனக்கு மங்கை கருங்குழல் போல் உளவோ விரை நாறு கடி மலரே -என்றும்
பிறரும் அருளிச் செய்வார்களே –-நிலப்பூ வகையில் கொடிப் பூவும் புதற்பூவும் அடங்கும்
ஏனம் ஒன்றாய்-மண்டுகளாடி–மன் துகள் ஆடி -மஹா வராஹமாய் –-வைகுந்த மன்னாள் -அழியாத நலம் உடையவள் என்றவாறு இங்கே

வண்டுகளோ வம்மின்-பூவின் வாசியும்-மணத்தின் வாசியும் தேனின் வாசியும் அறியும் நீங்கள் -புறம்பு யுண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு நான் சொல்லுகிற வார்த்தை கேட்க்கும்படி வாருங்கோள்–நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு-எளிதாக ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத நீர்ப் பூக்களிலும்-எல்லார்க்கும் கிட்டலாம்படியான நிலத்தில் பூக்களிலும்
உயர்ந்த சாகைகள் நிற்கிற மரத்தில் பூக்களிலும்-உண்டான வாசியை அறிந்து புஜித்துக் களித்து
அத்தாலே நிரதிசய ஆநந்திகளாய் எங்கும் ஓக்க ஸஞ்சரிக்கிற உங்களுக்கு--ஓன்று உரைக்கியம்
நீங்கள் கண்ட வாசி போல் அன்றியே அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருபத்தொரு வை லக்ஷண்யம் சொல்லுகிறோம்–ஏனம் ஒன்றாய்–அத்விதீயமாய் இருபத்தொரு வராஹமாய்-அன்றியே
வராஹ ஜாதியோடே வேறுபாடு இல்லாதபடியான ஜாதி ஐக்யத்தை யுடையனாய்
(மானமிலா பன்றியாய் -அபிமானம் இல்லாத உப மானம் இல்லாத -இப்படி இரண்டு போல் இங்கும் ) மண்டுகளாடி-மண்ணினுடைய துகளை ஆசினவனுடைய-அதாவது-துகள் என்று-ஏக தேசமாய்
மஹா வராஹத்தினுடைய திரு வயிற்றுக்கு பிரளய ஆர்ணவ கதையான பூமி ஒரு கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை (திரு எயிற்றுக்கு -கோரைப்பல்லுக்கு என்றுமாம் ) வைகுந்த மன்னாள்-இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம்
போலே இருக்கிறவளுடைய–குழல்வாய் விரை போல்–புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே (கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )-விண்டு
எங்கும் ஒக்கப் பரம்பி-கள் வாரும்-மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்-மலருளவோ நும் வியலிடத்தே-நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ

இத்தால்-வண்டுகளோ வம்மின்-இவ் வாழ்வாருடைய வை லக்ஷண்யத்தை அன்பரானவர்கள்
பகவத் அனுபவ தத் பரராய்த் திரிகிற ஸாரஞ்ஞரைப் பார்த்து-(பகவத் ப்ராவண்யம் – மொட்டு-பல்லவம் -பிரமம்-பாகவத சமாஹம் -மலர்ந்து -மத்யமம்-ஆச்சார்யர் அபிமானம் – பழுத்தால் போல் சரம பர்வ நிலை அன்றோ ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் திரிந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனால் போல் )நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்–ஷீராப்தி சாயியான வ்யூஹ ஸ்தலத்தின் விகாஸத்தையும் பூதல வர்த்தியான அவதாராதி வை லக்ஷண்யத்தையும்
நாநா சாகைகளின் முடியிலே காணும் படியாய் நித்ய போக்யமான பர தசையில் (வேதாந்த விழுப்பொருள் தானே பர வாஸூதேவன் )வை லக்ஷண்யத்தையும் நிரந்தர அனுபவம் பண்ணி ஆநந்திகளாய் ஸர்வ லோகங்களிலும் காம சாரிகளாய்த் திரிகிற உங்களுக்கு ஓன்று சொல்லுகிறோம்-ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே-ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய அழிவற்ற தேசம் போலே
ஆஹ்லாத கரரான இவருடைய-தூராத் கந்தோ வாதி –தைத்ரியம் -2 ப்ரச்னம் -என்கிற கணக்கிலே
இவ் விகாஸமும் யசஸ் ஸுரப்யமும்(எண் திசையும் அறிய இயம்பிய கீர்த்தி அன்றோ ஆழ்வாரது )
நீங்கள் அனுபவித்த பகவத் சம்பந்திகளில் யுண்டோ என்று ஸ்லா கித்து உரைத்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–வண்டுகளோ வம்மின்-வண்டுகாள் வாருங்கோள்–நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ மூன்று வகையாதல் நாலுவகை யாதல் சொல்லக் கடவது இறே-நிலப்பூவும் கொடிப்பூவும் என்று நிலத்திலே இரண்டாக்கி மற்றை இரண்டையும் கூட்டி நாலாகச் சொல்லுவாரும் உண்டு-நல்ல மலர்ப் பொழில் நாலும் நுழையீர்காள் -என்னக் கடவது இறே-பூ யுள்ள இடம் எங்கும் புக்கு
மதுபானம் பண்ணிக் கழித்து-அதுவே யாத்ரையாகத் திரிகிற உங்களுக்கு நல்லதொரு வார்த்தை சொல்லுகிறேன் வாருங்கோள்

ஸ்வாபதேசம்
வண்டுகளோ வம்மின்
-பரம் பொருளை நடித்த திரியும் சாரக் க்ராஹிகள்–நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ-உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்-
நீர்ப்பூ
-திருப் பாற் கடல் வ்யூஹ மூர்த்தி
நிலப்பூ — ராம கிருஷ்ணாதி விபவாதாரங்கள் –
மரத்தில் ஒண் பூ –வேதாந்த சிரஸில் உள்ள பரம பாத நாதன்
இப்படி இடைவிடாமல் அனுபவித்து தடை இல்லாமல் திரியும் -பாகவதர்கள் —-ஆழ்வாரது பக்தி -அழிவற்ற வைகுண்ட நாடு போலே பேரானந்தம் தரும் சிரோபூஷணம் -எங்கும் கண்டோம் அல்லோம் என்று புகழ்ந்து கொண்டாடின படி –பரம் பொருளை நாடித் திரியும் சார க்ராஹிகளுக்கு ஆழ்வார் பெருமையை உரைத்தவாறு

தாத்பர்யம்–தூது விட்ட வண்டுகள் நாயகனைக் கூட்டி வர-கலந்து -அப்போது இவளுக்கு உண்டான ஆனந்த அதிசயம் சமிப்பிக்க -சிறிது பிரிய எண்ணி-ராஸ க்ரீடையில் செய்தது போல் இங்கும் –
பிரிவைப் பேச ஆரம்பிக்க –-அப்போது முன் போல் ப்ராப்தமான நாயகியின் வியசனத்தைக் கண்டு-இந் நாயகன் நம்மிடம் வ்யாமோஹம் உள்ளவன் என்று நெடும் காலம் பிரிய வல்லன் அல்லன்
போன வேகத்தில் திரும்புவான் -என்று மத்யஸ்தர் -கிளைவித் தலைமகன்- சொல்ல
பிரிந்தால் தானே சுகம் தெரியும் -என்று பெருமாள் குகனுக்குச் சொல்லி பிரிந்தால் போல் பிரிந்தான்
இவளது பிரபாவம் தலைமகன் பேசினத்தை அவர்கள் கூறி சமாதானம் பண்ணுமதாய் உள்ள பாசுரம்-இவள் குழல் நறுமணம் போல் எங்கும் கண்டேன் அல்லேன் என்று சொன்னதை ஓ வண்டுகள் நான் உங்களை ஓன்று கேட்க்கிறேன்-அதுக்கு பதில் சொல்லிப் போங்கோள்-ஸ்தலமான தாமரை போன்ற பூக்கள்-நீரில் உள்ள மல்லிகை போன்ற பூக்கள்-மரத்தில் உள்ள சண்பகம் போன்றேற் பூக்கள்
ஜாதிப் பூக்கள் இவ்வாறு அநேக வித பூக்களில் சென்று மது பாநம் பண்ணினீர்கள்-அது எல்லாம்
வராஹ நாயனார் யுடைய பரமபதத்துக்கு சமமான பெருமை கொண்ட இவள் போல் உண்டோ
அங்கு போல் இவள் இடமும் நித்ய வாசம் செய்வதால்-அதே போல் பரம போக்யமான இவளுடைய திருக் குழலில் வாசனை மிக்கு உள்ள பூ வுடன் ஓக்குமோ-நீங்கள் சஞ்சரிக்கும் இடங்களில் இது போல் பூ உண்டோ-ஆச்சார்யர்களே – சேஷிகளும் உத்தேசயர்களும் ஆவார்கள் அன்றோ
பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடியேன் – போல் இங்கும் ஆழ்வார் வை லக்ஷண்யம் சொல்லப்படுகிறது 

10-4-சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-ப்ரவேஸம்-

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருந்த ஐயத்தாலே-பிரிந்தார் படும் துன்பத்தினைப் பட்டு-அதனாலே மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய–செங்கனி வாய் -அதனாலே தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் மேல் –

எம்பெருமானார் நிர்வாகம்
முதல் திருவாய் மொழியிலே -1-1-பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே அடியைக் கூடியதாய் இருக்கும் அன்றோ –ப்ராப்யமாய் -அமரரர்கள் அதிபதி –
அடியைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்-தொழுது ஏழு –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்-
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –10-2-
அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்-நெடுநாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்
வெருவி இவர் துன்பம் உற்றவராக-இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து-
அவனும் தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் – வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-10-3-

ஆக முதல் திருவாய் மொழியிலே பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி-
அப்பறம் பொருள் தானே அடியைக் கூடிய பேறாக-ப்ராப்யமாய்- இருக்கையாலே-
அப்பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் சுலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -1-3–என்கிற திருவாய் மொழியாலே சொல்லி-
சாத்ய பக்தி -உபாயமாக சொல்லுவது எதனால் –
பிரபத்திக்கு முன்பே பக்தி வேண்டுமே -பரம்பரையா உபாயம் -பரம பிராப்யம் என்கிற ஆசை வர பக்தி வேண்டுமே –
பக்தி அதன் சாத்தியமான பிரபத்தி உடன் பொருந்தி -அது பின் பக்தி உடன் பொருந்தி
பின் சாத்தியமான பிராப்யத்துடன் பொருந்தியதை சொன்னவாறு –
ஆக-வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –10-4-
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை ஆதரித்துக் கொண்டு –
-உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக-முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-
சாத்ய பக்தி பிரபத்தி என்கிற -இவ்விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட சொல் உண்டோ என்னில்-அருளினன் -என்றாரே அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற பக்தி அன்று-அது சாதன பக்தி அன்றோ –
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து-அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்-
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தோடு கூடாதோ என்னில் –அது இவரோடு பாசுரங்களோடு முரண்படும்-
அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்-
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி-
ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட-
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு-பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து இறைவனுடைய திருவருள் நிற்க-அதற்புப் பின் உண்டான பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –
இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே பேறாக-நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்யகாரரும்
பிரபத்தியைப் பண்ணி-பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இதுவே ஸ்வரூபம் பிராப்தம் -பக்தி ஸ்வரூப விரோதம் என்றவாறு –
அவன் உபாயம் ஆனாலும் – இவனுக்கு ருசி உண்டாய் – பேற்றினைப் பெற வேண்டுமே-இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
அவனே சாத்ய உபாயம் என்றாலும் – ருசி வளர்ந்தால் தான் – பிராப்பிய சித்தி -இது அதிகாரி ஆக்குவதற்கு –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு அன்றோ – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- பிரபத்திக்கு முன் பக்தி
அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு -பிரபத்திக்கு பின் பக்தி
இரண்டும் இருந்தால் தான் அன்றோ – – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் மாறாடலாம் படி அன்றோ இருப்பன –
ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்-பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி-
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –இது தான் பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –10-4-

நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற மனத்தின்-அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே-குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க
ஆனால் மேலும் எல்லாம் கண் கூடாக காணுதலைப் போன்று-மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி -ஒவ் ஒரு குணத்தைப் பற்றி -பிறந்தன சில ரச விசேடங்களை சொன்ன இத்தனை யேயாம் அவ்விடங்களில்
தொடங்கின பொருளை முடிக்கை என்பதும் ஓன்று உண்டே-அதனைச் சொல்லுகிறது இங்கே-
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –
மேலே அருளியவை எம்பெருமானார் நிர்வாகம் –

இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்-ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற சுலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம் உறுதி -என்கிறாள்-
-என்று ஒரு உருவிலே பணிப்பர் பிள்ளான் –

இனி ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே-1-1- பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்-
அந்த பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும் இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது-பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது-
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்-
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய சாதன பக்தியை -பத்துடை அடியவர்க்கு -1-3–திருவாய் மொழியில் அருளிச் செய்தார்-
ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த-பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு-பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி -10-4-–/ கண்ணன் கழலிணை -10-5-–/ என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –
அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்-பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்-

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்-தவங்களில் மிக்க தவமாக சொல்லிற்றே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து-ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
இரகசிய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்-

ஆக
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்-
அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே-10-2-
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று-அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது-த்வய மகா மந்த்ரத்தில் பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -10-2–என்னும் திருவாய் மொழியாலும்–வேய் மரு தோளிணை -10-3–என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பொருளை முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்-10-4-/கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்-10-5-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியாலும் /பத்துடை அடியவர் -1-3–என்ற திருவாய் மொழியாலும்-சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்று -ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை ஆண்டான் பணிப்பார் –

10-4-சாத்ய பக்தி சொல்லப்பட்டது -எம்பெருமானார் நிர்வாகம் -1-2- போலே -10-3- பிராசங்கிகம் –
பிரபத்தி பரம் -1-2- ஆளவந்தார் -பத்துடை அடியவர் 1-3-சாதன பக்தி பரம் –
-சார்வே தவ நெறி பிரபத்தி -பரம்-கண்ணன் கழலிணை பக்தி பரம் –
பிரபதிக்கு முன்னும் பின்னும் பக்தி வேணுமே -ப்ரேமம் வேணும் அவனை சரண் அடைய –
-உபாய பாவனையில் கண் வைக்காமல் கைங்கர்யம் -ப்ராப்ய ருசிக்கு பக்தி வேண்டுமே –
ஸ்தான த்ரயோ பக்தி -சாத்ய பக்தி -சாத்யத்துடன் சேர்ப்பிக்கும் பக்தி பிரார்த்தித்து பெற்றார் -எம்பெருமானார் –
உயர்வற உயர்நலம் -தத்வம் -ப்ராப்யம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பரத்வம்
அருளினன் -ஹிதம் -உபாயம் –
தொழுது ஏழு -புருஷார்த்தம் -வழி ஆகுமோ –
தொழுகை உபாயம் எழுகை உபேயம் என்றால் என்ன -தொழுகையே எழுகை -சாத்ய பக்தி அன்றோ -அதனால் அருளினன் சாதனம் –
மயர்வற மதி நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -தாரை போலே அனைத்து திருவாய்மொழிகளும் இதில் அடங்கும் –
உபாயம் இருந்தாலும் புருஷார்த்த பிரதான்யம் -முதல் திருவாய்மொழி –
கெடும் இடரில் -கைங்கர்ய பிரதி சம்பந்தி -கைங்கர்ய பிரதானம் இதில் -1-1-பரத்வம் -இருந்தாலும் -அங்கும் கைங்கர்ய பிரதி சம்பந்தி தானே –
அதனால் 1-1 /10-2- சேரும் என்றவாறு -அங்கே தொடங்கி இங்கே நிகமிக்கிறார் –

தாம் உபதேசித்த சாத்ய பக்தி -1-2- பிரபத்தியிலே மூட்ட -சேஷத்வ ஞானம் பரதந்த்ரன் புரிந்து -பிரபத்தி உபாயமாக தலைக் கட்டும் என்றபடி –
சாத்ய பக்தியையே பிரபத்தி என்னலாமோ என்னில்- இருவரும் பக்தி சாதனம் இல்லை என்பார்களே
பேற்றுக்கு உபாயமாக பிரபத்தியைப் பற்றி இருக்கிறார் என்பதுடன் சேராதே
சாத்ய பக்தி எதற்கு -என்றால் பிரபத்தியில் தூண்ட -மேலே ருசி வளரவும் பக்தி வேண்டும் –
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானங்களில் –
தவ நெறிக்கு சார்வு -சாத்யத்துடன் பொருந்தி பக்தி உபாயம் பலத்துடன் சேர்ந்தது என்றது பிரபத்தியில் மூட்ட என்றவாறு –
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய-ஆளவந்தார்
உபய கர்ம ஞான யோகம் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
அந்தக்கரணம் ஐ காந்திக பக்தி ஏக அந்த ஒன்றே முடிவு ஆத் யந்திக முடிவைத் தாண்டி யாவதாத்மா பாவி
பக்தியால் அடைய பெறலாம் -ஆத்மா இருக்கும் அளவும் பக்தி என்றால் -சாதனம் இல்லையே -பரம பாதம் சாத்ய பூமியிலும் உண்டே –
அனுபவம் தானே அங்கே -உபாய பாவம் வழி இல்லையே அங்கே கர்மம் தொலைத்த பின்பு
இங்கு விதி அற்ற படியால் கரு முக்கை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
அந்திம -சரம உபதேசம் -உபாய பாவம் மறந்து உபேய பாவத்தில் கண் வைக்க வேண்டும் உடையவர்
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானம் -பிரபன்னனுக்கும் அனுபவ த்துக்கும் கைங்கர்யத்துக்கும் -பக்தி வேண்டுமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -உபாய புத்தியை விட்டு -சாத்தியமாக ருசி வளர பண்ண வேண்டும் -ஸ்வயம் பிரயோஜன பக்தி —
கிருபையே உபாயம் உறுதி என்பதால் பிரபன்னர் -என்னலாம் -ஆர்த்தி மிகுதியைப் பார்த்தால் சாத்ய பக்தர் என்னலாம்-
கோபிகள் செய்வதை எல்லாம் பண்ணுகிறார் –
சாதன பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பக்தன் பிரபத்தி அங்கமாக செய்து -இதுவே ஸ்ரீ கீதை யிலே சரம ஸ்லோக அர்த்தம் –
விபீஷணாதிகள் இராவணாதிகளுக்கு உபதேசிக்க அது பக்திக்கு உடலானது போலே வீடு மின் முற்றவும் -நமக்கு உபதேசித்து பக்தி வளர்ந்து பிரபத்தி
ராகவன் சரணம் கத -பல வாக்கியம் இருந்தாலும் ஒரே சரணா கதி -முன்பு எல்லாம் அறிவிப்பு –
சர்வ லோக சரண்யாய ராகவாயா சரணம் -உபதேசிக்க பக்தி வளர அது தானே பிரபத்திக்கு தூண்டு வித்து –
ராவணன் தள்ளி விட்டு அதனால் இல்லை -பிராவண்யம் வளர பிரபன்னன் ஆனான் போலே –
சாத்யம் உடன் சேர்வது பகவத் சாஷாத்காரம் –
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் -பிரபத்தி அனுஷ்டித்தவனுக்கும் மூன்று அவஸ்தைகளும் உண்டே
கத்ய த்ரயத்தில் மூன்றையும் பிரார்த்தித்தார் -அது சாதன பக்தி இல்லை -ஸாத்ய பக்தி –
யாவதாத்மா பாவி -பக்தி வேண்டும் -பரம பக்தி -அங்கு -நிஜ சாஷாத்காரம் –
பிரத்யக்ஷ சாமானாக சாஷாத்காரம் -பர ஞான அவஸ்தையிலும் -ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகவே
-நீ போகேல் -சாஸ்திரம் -வரம்பு இல்லையே ஆழ்வார் உடைய பிரேம பக்திக்கு –
அங்கும் குண அனுபவம் -உபாசனத்திலும் குண அனுபவம் -பிராப்தி தசை போலே போக ரூபமாக இருக்குமோ என்னில்
ஆழ்வார் வேறு ஒன்றிலும் கண் வைக்காமல் சம்சாரம் நினைவில் இல்லாமல் உண்ணும் சோறு இத்யாதி
-பூவை பூம் –யாவையும் திருமால் திரு நாமமே என்று அன்றோ இருப்பார்
எதனால் இனி இனி என்று கதறுவதால் -பிராகிருதம் –
10-4 சாஷாத்கார நிலை -முன்பே இந்த நிலை இருந்தாலும் -அங்கு ஓர் ஓர் குணங்களை பற்றி –
இங்கு முனியே நான்முகனே அணித்து-விசத தமமான அனுபவம் -இங்கு தானே பல அனுபவம் பூர்ணம் –
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -சாதன பக்தி உபதேசம் -ஆளவந்தார் நிர்வாகம் படி –
ஆழ்வார் பிரபன்னர் -சாதன பக்தியை உபதேசிக்கிறார் –
அவனாலே அவனை அடைந்து பாட வேண்டும் -காலம் போக்க பிரபன்னர்களாகிய நாம் பாடி ஆடி கழிப்போம் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே-
-10-4-1-

சார்வு பிராப்தி தவ நெறி –ஸாத்ய பக்தி-சார்வு -என்றது பேறு- தவ நெறி -என்றது பக்தி மார்க்கத்தை-ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று-வணக்குடைத் தவ நெறி -1-3-5- என்றார் இறே-ஆகையால் இவன் ஒரு வணக்கத்தைச் செய்தால்-இவன் நம்மை நோக்கி குவாலாக வருந்தினான் -என்று-இதனை பெரிய காய கிலேசமாக நினைத்து இருக்கும்-அவன்கருத்தால் சொல்லுகிறது –

வேங்கடத்து உறைவார்க்கு –நம-வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே – அங்கமான வணக்கத்தை இட்டு அங்கியான பக்தியைத் தவம் என்ற சொல்லால் சொல்கிறது –அன்றிக்கே-யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் யஸ்ய ஞானம் அயம் தப -முண்டக உபநிஷத் -என்கிறபடியே-ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று ஆகவுமாம்

தாமோதரன் தாள்கள்-அவனை உகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் இத்தனை அன்றோ-வரத வலி த்ரய -பிரதம விபூஷணி வபூவ 

கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-விலக்ஷண விக்ரகம் -நீர் கொண்டு எழுந்த காள மேகம் – பக்திக்கு கிருஷி பண்ண வேண்டாம் வந்து நின்றால் போதுமே-ருசிக்கு உத்பாதகமுமாய் –வளர்த்து பக்குவம் ஆனால் அனுபவிக்கவும் அந்த அழகே -பிராப்யம்

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-
விக்ரக வை லக்ஷண்யத்துக்கு மேலே -ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்கிறது
யாவையும் யாவரும் தானாம் அமை உடை நாரணன் –பிரகார பிரகாரி பாவம் -அத்தையே இங்கு சொல்கிறது
பிருதிவி பஞ்ச பூதங்களை -சொல்லி காரணமான தேவாதி விஷயங்களையும் நினைக்கிறது -இத்தால் லீலா விபூதி உக்தன் என்றும்
கையும் திரு ஆழியும்—சொல்லி நித்ய விபூதியையும் சொல்லி –

———–

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே
–10-4-2-

மேலே கூறிய சௌலப்யம்-தமக்கு பலித்த படியை-அருளிச் செய்கிறார்-இதனை விட்டு ஒரு தேச விசேடத்தில் போனால் கொள்ளக் கடவ அடிமையை இந்த உலகத்திலே நாள் தோறும் கொள்ளா நின்றான் – அங்குப் போனால் குண அனுபவத்தாலே ஆத்மாவை -சத்தையை-நிர்வகிக்கும்–இங்கு குண ஞானத்தினால் தரிப்பியா நிற்கும் –

செங்கண்-அவளுடைய என்றும் உள்ள சேர்த்தியாலே-மதமுதிதரைப் போலே -சிவந்து – நீர் பாய்ந்த-பயிர் போலே செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவன் –

திரு மெய் யுறைகின்ற –-என்றாவது வருவான் என்று அன்றோ நித்ய வாசம்-
த்வயத்தில் நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறதே அன்றோ-மத் ப்ரத்யாயர்த்தம் –

————-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-

ஆர்த்தி ஹரத்வம் குணம் பத்தாம் பத்தில் -ருசிக்கு தன்னையே விஷயம் ஆக்கி அருளுகிறார் -பத்துடை அடியவர்க்கு எளியவன் திருவாய் மொழி அர்த்தமே இதிலும் அருளிச் செய்கிறார்-மீள்கின்றதில்லை-மறுவல் இடாதபடி-பிறவிப் பிணியைப் போக்கி-நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வன் ஆனவனுடைய திருவடிகளை தலைக்கு அணியாகப் பெற்றேன்–அடியாருக்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் அவனுடைய-தன்மைக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ-அவன் ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில் தன் ஊணை இழக்கிறான்-மண நோக்கம் உண்டவன் அன்றோ -பெரிய திருமொழி -8-10-1-அவனுடைய ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில்-அடுகுவளம் தடைப் படும் போல் காணும்-
அடுகு -என்று பெட்டி மேல் பெட்டியாய்-வளம் -என்று இனிய பொருளாய்-போனகப் பெட்டி-அடு குவளம் தடைப் படுதல் -நப்பின்னை பிராட்டி கடாஷம் பெறாமை-என் ஜீவனத்தை பறித்தான் ஆகில் தன் ஜீவனத்தை இழக்கிறான் –

ஆரால் குறை உடையம்-ஆரால் -என்கிறார் காணும்-என்றும் ஒரு சேதனனாலே பேறு-என்று இருக்குமவர் ஆகையாலே–எத்தால் -என்னாமல்-அசேதனம் -கர்மாதி உபாயாந்தரங்கள் கூடாதே –

பிறவித் துயர் கடிந்தோம் –பிறவித் துன்பத்தினை ஓட்டினோம் -என்றது –பரம பதத்திலே புகச் செய்தேயும்- ருசி முன்னாக பேறு இல்லாமையாலே-
கடலில் புக்க துரும்பு போலே மீளப் போந்தார்களே அன்றோ-வைதிகனுடைய பிள்ளைகள் –
மயர்வற மதிநலம் அருளினன் -என்று ருசி முன்னாக – அவன் தரப் பெற இருக்கிற நமக்கு-மீண்டு வருதல் என்பது ஓன்று இல்லை என்றபடி –

கடிந்தோம் -என்கிறார் காணும் -இறந்த காலத்தில் திரு மேனி உடன் இருக்கச் செய்தேயும் –
அவன் செய்வானாக ஏறிட்டுக் கொண்ட கார்யத்துக்கு-நிலையாகப் பெற்றேன் -என்ன வேண்டும்படி இருக்கும் அன்றோ –
ஸ்தித அஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம்தவ -ஸ்ரீ கீதை -18-73-நஷ்டோகோ மோஹ – பிரசாததத்தால் இந்த நிலை பெற்றேன் என்றான் –

என் தலை மேல் புனைந்தேனே – துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-என்றும்- கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும்-சொல்லுகிறபடியே-மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற இனிமை சொல்லுகிறது –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று வேண்டிக் கொண்ட அதனை-தலையாகப் பெற்று ஸ்ரேஷ்டமாக தலை மேல் பெற்று -கிருதகிருத்யன் ஆனேன்-

————

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே
–10-4-4-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் –அமரர் சென்னிப் பூச் சூடப் பெற்றேன்-வேண்டிக் கோடலே அன்றி அத் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன் – இப் பேறு பெருகைக்கு அவன் முயற்சி பண்ணின படி சொல்கிறது மேல்-
அவன் வண் தடத்தின் உள் கிடந்து-பெரிய திருமடல் -14-தவம் பண்ணிற்று-வண் தடம் -ஏகார்ணவம்-கடலில் கிடந்து -கல் மேல் நின்று -உள்ளில் நின்று கோர மா தவம் செய்தனன் கொல்–என் மனத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை-ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது என்று-
அறுதி இட்டு அதனாலே-கிருதகிருத்யனாய் இருந்தேன்-என்கிறார்-1-ஆலின்
இலைமேல் துயின்றான் 
-2-மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை-திரு வேங்கடத்தில் -ஸ்வயம் பிரயோஜனமாக நித்ய வாசம் செய்து அருளி –3-நெஞ்சுக்குள் பிரதிஷ்டித்தானாக -இருந்த திருக் கோலம் –கிடந்த நின்ற இருந்து அருளிய மூன்று நிலைகளையும் அனுபவிக்கிறார்–இங்கு விலக்குவார் இல்லாமையாலே-ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்தான் – –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே -மூன்றாவது நிலை-நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே-கதவு அடைத்து தள்ளினாலும் போக மாட்டானே –இருக்கும் அவனை போனான் என்று அழுத ஆழ்வார் -இப்படி அன்றோ ஆச்வாஸப் படுத்தி மாற்றி -உறுதி குலைக்க முடியாதே -நிச்சயித்து -அதனால் திருப்தியாக –இருந்தேனே-கிருதக்ருத்யன் ஆனேன் –

————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே
–10-4-5-

நீரிலே கிடந்தும்-மலை உச்சியிலே நின்றும்-தன் பேறாக தவம் செய்து வந்து-என் நெஞ்சிலே இருக்கையாலே-கைச் சக்கரத்து அண்ணல்-தன்னைப் பற்றினவர்களை ஒரு காலும் கை விடான் –எப்போதும் கை கழலா நேமியான் -இனி ஒரு காலும் விட்டுப் போகான் என்று நிச்சயித்து இருந்தேன் –

கள்வம் பெரிது உடையவன் –மனத்தினைக் கை விடாமையே அன்றிக்கே–இங்கே இருந்து நாம் அறியாது இருக்க- தான் அறிந்ததாகக் கொண்டு அவ்வருகே-குவாலைப் பாரியா நின்றான் -என்றது- பரம பதத்து ஏறக் கொடு போக ஒருப்படுவது-அமானவனை இடுவித்து தீண்ட நினைப்பது-மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ளப் பார்ப்பதாய்-குவாலைப் பாரியா நின்றான்-பேசி ருசி வளர்த்து பாட வைத்து -மறைத்து -நாதமுனிகளுக்கு வழங்கி அனைத்துக்கும் திட்டம் போட்டு பாரித்து -பவிஷ்யகார விக்ரகம் கொடுத்து -நாம், அறிந்து கொண்டாடும் படி பாட வைக்கப் பாரியா நின்றான்-

மெய் போலும் பொய் வல்லன் –அர்ஜுனன் முதலாயினோர் பக்கல் இருக்குமாறு போலேயோ-துரியோதனன் முதலாயினோர்கள் பக்கலிலும் இருப்பது –
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே-பொய் செய்து தலைக் கட்டுவான் –

நாகத்து அணையானே-நம்மோடு ஒத்தவர்கள் பக்கல் செய்தது அன்றோ நமக்கு எடுத்துக் காட்டு-அநந்யார்ஹத்வம் அநந்ய ப்ரயோஜனர் என்கிற-சஜாதீயம் -நம்முடைய பேற்றுக்கு அடியுமாய்-நம்மோடு ஒத்தவர்களும் ஆனாரோடு செய்யும்படி இது அன்றோ –

———

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-
10-4-6-

இன்று வந்து பற்றுமவரையும்-எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்-
அவர்களைப் போலே அங்கீகரிக்கும் அவன்-திருவடிகளிலே செருக்கு அற்றவனாய் விழப் பெற்றேன்

நாகத்து அணையானை –-உகந்தாரை படுக்கையாக-கொள்ளுமவன் ஆயிற்று-திருமேனி முழுவதும் ஆஸ்ரிதற்கு கொடுத்து இதிலும் மெய்யன் -அவர்களுக்கு ஏக தேசம் -பொய்யன் –

நாகத்து அணையானை – ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு –நாள்தோறும்-அருள் செய்யும் அம்மானை –ஞானம் -பக்தி–இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே-
அக் குறை தீர-ஒரே தன்மையான தான் நாள் தோறும் அருள் செய்யும் ஆயிற்று-

———-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே
–10-4-7-

நம் தடைகளை எல்லாம் தானே போக்கி-அடிமை கொள்ளுமவனை-
நாள்தோறும் அனுபவி -என்று-தன் திரு உள்ளத்தை நோக்கி-அருளிச் செய்கிறார்

அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன்

————-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்-
-10-4-8-

அவனை அனுபவிப்பாய் என்றவாறே-உகந்த நெஞ்சினைக் கொண்டாடி–முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே-மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழி நெஞ்சே–அவனை இடைவிடாதே அனுபவி–வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–நெஞ்சே மறவாது நித்ய அனுபவம் பண்ணி வாழப் பார்-
இவ் வாழ்வு நித்யமாக -வாழி என்று வாழ்த்துதலாக வுமாம்=

ஆழியான்-பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே–ஆழி யமரர்க்கும் அப்பாலான்-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் –
ஊழியான்-ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே-
ஊழி படைத்தான்-இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-
நிரை மேய்த்தான்பாழி யம் தோளால் வரை எடுத்தான்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-
தங்களை காத்துக் கொள்வதில் சம்பந்தம் இன்றிக்கே-அவன் பண்ணும் பாதுகாவலை விலக்காத பசுக்களைக்-காத்தவன்–பாது காப்பவனாக வேண்டும்-
மதிலுக்கு உள்ளே இருப்பாரைப் போலே-அச்சம் கெட்டு இருக்கலாம் படியான-வலியைச் சொல்கிறது -பாழி யம் தோள் -என்று-
அன்றிக்கே-பாழி -இடம் உடைமை ஆகலுமாம்-ஐந்து லஷம் குடியில் உள்ளாறும் இவன் தோள்-நிழலிலே ஒதுங்கினாலும் திரு ஆய்ப்பாடி அளவன்றிக்கே-இன்னமும் பத்து திரு ஆய்ப்பாடிக்கு இடம்-போரும் என்னும் படியான- காக்கும் தன்மையின் துடிப்பு இருக்கும்படியைச் சொல்கிறது-
இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –

——————-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே
–10-4-9-

இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-மாறாடும்படியாக இருக்கிற-பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் மேல் –உயிரான பாசுரம் -சரம ஸ்லோகம் படி இதனாலே பிரபத்தி சாதன பக்தி ஸாத்ய பக்தி மூன்று நிர்வாகங்கள் பார்த்தோம் -எது முன்னால் –கண்டேன் –கண்டதும் -விண்டே ஒழிந்தன-அடி வுடையராய் இருந்தார் ––சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்–என்று விட்டுப் போயிற்றின -அப்புறம் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் என்பதால்-பரம பக்தர்களுக்கு சாஸ்திர நியதி இல்லையே-

கண்டேன் –என்றும் கேட்டே போகக் கூடிய பொருளை-கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை–அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –

த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி முண்டகம் –ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் – உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அருளினன் – அதனால் — –ஸாத்ய பக்தி -பெற்று -அதனால் பிரபத்தி -என்றும் நேராக பிரபத்தி என்றும் -பின்பு அவா பெருகி வழிந்து- ஸ்வீ க்ருத சித்த சாதனர்-சித்த வஸ்துவை சாதனமாக ஸ்வீகாரம் பண்ணி-இத்தை -பக்தியை -மார்க்க மதியத்தில் பர ஞானம் -அங்கே பரமபக்தி-சாத்தியமாக இரக்க-பகவத் ப்ரஸாதத்தாலே சாத்தியமான பிராப்திக்கு முன்னே சித்திக்கும் -இத்தையே பகவத் ராமானுஜர் கத்யத்தில் அருளிச் செய்கிறார் –

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக –அந்த சரம ஸ்லோகத்துக்கு இதுவும் கருத்து -என்கிறார்-அடிமை நிலை நின்றதே இருக்குமே-அடிமை நித்தியமான பின்பு அதற்குத் தக்கதான தொண்டும்-நித்யமாகச் செல்லும் படியாக-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-
கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –

—————-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே
–10-4-10-

அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற-பிரயோஜனாந்தர பரர்களோடு-தமர்கட்கு ஓர் பற்றே-பக்திமான்களோடு-பிரபத்திமான்களோடு- -வேற்றுமை அற-அவனே உபாயம் -என்று-மேலே கூறியவற்றை எல்லாம்-முடிக்கிறார்- கதி த்ரயஸ்ய மூலம் –ஐஸ்வர்யாதி கைவல்யார்த்தி பகவல் லாபார்த்தி மூவருக்கும் –வகையால் -வேதப் பிரகிரியை படியே-சத் வித்யை -ஸ்வரூபம் உபாஸிக்க-தகர வித்யை -குணம் உபாஸிக்க -உபாசகனுக்கு என்றும் இதுவே —அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
குண உப சம்ஹார பாதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -குணக் கடல் அன்றோ –
ஸ்வரூபம் உபாஸிக்க- குணம் இல்லை – புத்தி ஆரோஹணத்துக்கு குணம் சொல்லிற்று என்பர் அத்வைதிகள் —தகர வித்யையில் சொன்னவனே இவனும் -குணம் விட்டுப் பிரியாதே –அங்குப் போனாலும் சோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண -குணங்கள் உடன் கூடிய ப்ரஹ்மம் அனுபாவ்யம் -ஆகவே ஸத்வித்யா உபாசகனும் குணத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே உபாசிக்கிறான் -எதனால் என்றால் குணங்களை ப்ரஹ்மத்திடம் இருந்து பிரிக்க முடியாதே -பிரபன்னனுக்கு வகையால் -உபாயாந்தரங்களில் -ப்ரயோஜனாந்தரங்களில்-போகாமல் -சரம ஸ்லோகம் படிக்கு என்றபடி –மாதவன் -பிள்ளையை -சின்ன சின்ன குற்றங்களைப் பொறுக்க அவள் உண்டே இதனால் வகையால் -மனம் ஒன்றி -மாதவன் -என்கிறார் –

நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திகை தோறு அமரர்கள் சென்று-இறைஞ்ச நின்ற தகையான் சரணம் 
கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே-
தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் –
பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே-
பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –

தமர்கட்கு ஓர் பற்றே –
ஓர் பற்று –

தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-
அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்-
தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –
தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-

————-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே
–10-4-11-

இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-கிருஷ்ணன் திருவடிகள்-சுலபமாம்- இவன் பிரபத்தியைச் செய்து-உறுதி உடையவனாய்-இருக்கும் அத்தனையே வேண்டுவது –
காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை – இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு-தகுதியான மிடுக்கையும் அன்பையும்-உடையவன் -என்பார் –மல் திண் தோள் மால் –இத்தால் ப்ராப்யத்தையும் ப்ராபகத்தையும் சொன்னபடி

ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே-கிருஷ்ணன் திருவடிகளே –இனி அவ் வருகு போய் ஓன்று தேடிப் பற்ற-வேண்டாதபடியான பற்றாகும்- இதையும் பற்றி தாண்டி போய் மற்று ஒன்றைப் பற்ற வேண்டாம் –ஏவ காரம் 

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -54-வீசும் சிறகால் பறத்தீர் –கேசவன் தமர் -2-7-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

மூன்றாம் பதிகம் வரிசையாக இங்கும் -2-7–கேசவன் தமர் இதன் விவரணம்-மா சதிர்
விளிம்பு -சாதனாந்தரம் மூலம் பேறு-சதிர் -அவனே உபாயம் என்று பிரபத்தி மூலம் பேறு
மா சதிர் -ஆச்சார்ய அபிமானம் -பிராட்டியாலே பேறு-ஆழ்வார் ஸம்பந்தத்தால் நம்மளவும் பேறு
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்-ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-பசு பக்ஷி மனுஷ்யா வா ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தில் ஒதுங்குவதே கர்தவ்யம்-எம்மை சேர்விக்கும் வண்டுகள் -இதுவே நிரூபகம்-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் –துளவமும் பொலிந்து தோன்றிய தோள்-கோயில் காப்பான் வாசல் காப்பான் போல்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -ஆச்சார்யர் வசம் தானே-வண்டு விடு தூது துறை-நாயகி பாசுரம்
தத் ப்ரஹ்ம கிசோர பாவம் -மதுரா பாக்யம் –விராஜா பெண்கள் கண்ணடி பட அன்றோ அவதாரம்-விண்ணோர் பெருமான் -திருடி உண்ணவே அவதாரம் 

அவதாரிகை – நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -என்றாளே – வீச வேண்டிற்று இல்லை-
இவளுடைய உக்தி மாத்ரத்தாலே உணர்த்தாள்-உறங்கின போது பசி பொறுக்கலாம்- உணர்ந்தால் ஜீவித்து  அல்லது நிற்க ஒண்ணாது இறே –
மோகம் தானே நன்றாம்படி யாய் இருந்தது–இனி அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்–இங்கு நின்று ஆள் விட்டு வரவு பார்த்து இருந்து தரித்தல் –-செய்ய வேண்டும்படியாய் ஆயிற்று-அங்கு நின்றும் ஒருவர் வரக் கண்டது இல்லை –-தன் பரிஸரத்தில் கால் நடை தருவார் இல்லையாய் ஆயிற்று- –இனித் தன் பரிஸரத்தில் வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுகின்றாள் 

இப்படி ஆர்த்தரான இவர் ஆர்த்தியை சமிப்பிக்கும் இடத்தில் ஸாரஞ்ஞரான கடகராலே சமிப்பிக்க வேணும் என்று நினைத்து அவர்களை அபேக்ஷித்த பிரகாரத்தை வண்டுகளைத் தூதாக நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே போக விடுகிற நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை-நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றாளே–வீச வேண்டுவது இல்லை இவளுடைய யுக்தி மாத்திரத்திலே உணர்ந்தாள்-உறங்கின போது பசி பொறுக்கலாம்-உணர்ந்தால் புஜித்து அல்லது தரிக்க ஒண்ணாது இறே –மோஹம் தானே நன்றாய் விழுந்தது –அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல் இங்கு நின்றும் ஓர் ஆள் விட்டு வரவு பார்த்து தரித்தல் செய்ய வேண்டும்படி யாயிற்று –அங்கு நின்றும் ஒருவரை வரக் கண்டது இல்லை–
தன் பரிகரத்தில் கால் நடை தந்து போக வல்லார் இல்லை யாயிற்று – இனித் தன் பரிசரத்திலே வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுமத்தனை என்று தூது விடுகிறாள்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி–அவதாரிகைஅப்படி சிலர் சிரஸா தரித்து வந்து உடம்பைத் தடவவே கண் விழித்தாளாய் ஸ்வ ஆச்சார்யர்களைக் கண்டு ஞான கர்மங்கள் ஆகிற சிறகால் எம்மை வீசும் வண்டுகளே –அச்சிறகால் எம்மை விண்ணாடு சேர்விக்கும் வண்டுகளே-பரத்தில் சேர்விக்கும் வண்டுகளே விண்ணாடு உங்களுக்கு எளிது -நீங்கள் பரத்திலே தூது போங்கோள் -போவதும் அங்கே நீங்கள் பேசும்படி என்ன -அத்தை என் முன்னே பேசியும் போக வேணும் -என்று அவர்களைத் தூது விடுகிறாள் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே
-54 –வண்டு விடு தூது –

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை–17-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய் தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான அவன் குண சேஷ்டிதங்களை திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற கேசவன் தமரில் -அர்த்தத்தை கேசவனால் எந்தமர்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —சம்பந்த சம்பந்திகள் அளவும் வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய ஆழ்வார் உடைய-புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம்

வீசும் சிறகால் –வீசுகையாவது –1-அசைந்து வருகையை சொல்லுவது-2-வேகத்தை சொல்லுதல்-3-பரந்து இருக்கையை சொல்லுதல்–சிறகால் பறத்தீர் –-தனக்கு சிறகும் இன்றியே கால் கொண்டு ஆயிற்று நடப்பது –-அது தானும் இட்ட கால் இட்ட கையாய் -திருவாய்மொழி -7-2-4-இறே தான் இருக்கிறது–விண்ணாடு நுங்கட்கு எளிது –-பூமியை விட்டு அந்தரிஷத்தே கிளம்பின போதே –
பரம பதத்துக்கு போக உடலாக இவ்வளவு-போயிற்றன என்று இருக்கிறாள் –பரம பதம் ஆகில் மேலே என்று இறே இவள் இருப்பது-மேலுலகங்களின் மீது போய் -நாச்சியார் திருமொழி -10-2–இத்யாதி-நுங்கட்கு எளிது –-இனி உங்களுக்கு தோள் தீண்டி இறே அது –-எங்களுக்கு இறே அவ்விடம் அரிது
கால் நடை தந்து போவார் எல்லாம் போவது பரம பததுக்கே என்று இருக்கிறாள்-(ஆச்சார்யர் -முமுஷுக்கள் -முக்தர் நித்யர்-அக் கரை என்னும் அநர்த்தக் கடல்-இக் கரை ஸ்ரீ வைகுந்தம் கிட்டே இருக்குமே இவர்களுக்கு-நடந்து போனாலே ஸ்ரீ வைகுந்தம் போவதாக நினைப்பவர் தானே
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்பவர் அன்றோ )பேசும்படி யன்ன பேசியும் போவது –
அங்கு போனால் சொல்லும் பாசுரத்தை -அப்படியே என் முன்னே -ஒரு கால் சொல்லிப் போக வேணும்-நெய் தொடு இத்யாதி – அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – பூமியிலே வந்து அவதரித்து –
தன் பக்கல் ஆசாலேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது-தரியாதானாய் – அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு கண்டு அமுது செய்து –-தன்னை உகவாத சிசுபாலாதிகள் ஏசும்படியாய் இருக்கிறவர்–1-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையாலும் –
2-ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள-த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் இருக்கிற சீலாதி அதிசயத்தாலுமாக
ஆக (பரத்வ ஸுலப்யங்களாலே ) என்னை-அனந்யார்ஹை ஆக்கினவர்--மாசின் மலரடி – மாசில்லாத மலரடி-இதுக்கு முன்பு சிலர் தூது விட தான் பிற்பாடானாய் இருக்கும் மாசு இல்லையாய்   ஆயிற்று-
(சீதாப் பிராட்டி அப்படி இருந்தாள் அன்றோ )-இத்தலை தூது விடிலும் – அங்கு நின்றும் வந்தார்கள் வாயிலே வார்த்தை சொல்லி விடும் அத்தனை -இறே-

யதாதம் புருஷவ்யாக்ரம் (ஸூந் த்தர 40) -பருவம் கழிந்தது இறே-இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா-நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல  வாண் புலி –-காத்ரை –கண்டாய் இறே-ஒரு நீர் சாவியை யாய்  இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- 
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே- விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண  வேணும்-(பசித்த போதே உண்ண வேண்டும்-இந்த சரீரத்தோடு கூட்டிப்போக சொன்னதால் தானே அழகர்-ஆழ்வார் திருமேனியுடன் கூட்டிச் செல்ல விரைந்தான்
ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்
)சகாமாஹம்- அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும் அளவு அல்லேன் நான் –விருப்பம் நிறைவேறியவளாவேன் என்கிறாள்
பெருமாளோ -தர்மம் ஒன்றையே ஹேதுவாக எண்ணுவார் -பிரணயித்தவம் அடியாகச் செய்ய மாட்டாரே
ஐயர் சொல்லவே மணம்

ஆள் வர விட்டாரே -ஆசையுடன் தானே அனுப்பினார் -இங்கு என்னில் அயோத்யையில் -கூட வருவேன் என்ற பிராட்டிக்கு ஆண் உடை உடுத்த பெண் -சொல்ல வைக்க – உனக்கு முன் நடப்பேன் கல்லையும் முள்ளையும் எடுப்பேன் சொன்னதும் நல்லது என்றார் அத்தனையே-ஆசைக் கணவன் வார்த்தை இல்லை ஸ்திரமாக அழைக்க வில்லை அன்றோ -அதுக்கு மேலே தன்னுடைய அம்பு நடையாடாத இடமாய் இருக்க இத்தனை நாள் ராக்ஷஸி கையில் நோவு பட வைத்தார்–இப்பொழுது தூது சுக்ரீவர் தர்ம காரியத்தால் தான் -என்றவாறு

ததா குரு தயாம் மயி –அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே – இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் – உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்-கிருபைக்கே இருப்பிடமான பிராட்டி திருவடியின் கிருபையை இரக்கிறாளே-அவன் நிரங்குச ஸ்வா தந்த்ரன்-
திருவடி தானே ஆச்சார்யன்-வராஹ பெருமாள் பெருமாள் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் -வார்த்தை -சொல் -பேச்சு நம்பி உள்ளேன்-அவை கார்யகரம் ஆகா விட்டாலும் பெரியாழ்வார் சம்பந்தம் வீணாகாதே-அவர் சக்தியில் குறை இல்லை-மத் பாபமே நிமித்தம்-கிஞ்சித் மஹ பாபம் பண்ணினவள் அன்றோ-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் —எம்மை சேர்விக்கும் வண்டுகளே – என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –

வண்டு விடு தூது -அமரர்கள் அதிபதி என்று -பிற்காலியாதே–நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் -என்று அவனது ஸுலப்யம் காட்டி –நெய் யைச் சொன்னது பால் தயிர் வெண்ணெய் அனைத்துக்கும் உப லக்ஷணம்-ஏசும்படி யன்ன செய்யும்–இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்று -அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்களைக் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே-போன்ற ஏச்சுக்குரிய கார்யங்களை உட் கொண்டு –எம்மை சேர்விக்கும் வண்டுகளே-சேர்விக்க வல்ல சக்தி உள்ளவை உங்களுக்கே என்று புகழ்ந்து உரைத்த வாறு –தேனை மலர்கள் கெடாதபடி உண்ணும் வண்டுகள் போல் ஸாஸ்த்ரங்களில் அவகாஹித்து ஸாரமான தத்வமாகிய தேனை அருளும் ஆச்சார்யர்கள்-

வீசும் சிறகால் பறத்தீர்-அவன் தன்னைப் போலே கால் கொண்டு நடக்க வேண்டாதே-எழ வீசுகிற சிறகாலே ஆகாசத்திலே போவுதீர்–விண்ணாடு நுங்கட்கு எளிது-உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாஸே பஷிணாம் கதி -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -என்கிறபடியே பக்ஷ பலமுடைய உங்களுக்கு பரம வ்யோம ஸப்த வாஸ்யனான திருநாடு செல்லுகிறது எளிதாய் இருக்கும்-ஆகையால் போகைக்கு உறுப்பாகச் செய்ய வேண்டுவது இல்லை–பேசும்படி யன்ன பேசியும் போவது -அங்குச் சொல்லும்படியான அந்த வார்த்தைகளை நான் கேட்டு ஆஸ்வஸித்து இருக்கும் படி எனக்குச் சொல்லியும் போக வேணும் –நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர்-நெய்யைக் களவிலே அமுது செய்தயாராக ஏசும்படியான அந்தச் செயலை அனுஷ்ட்டித்து-அத்தாலே எத்திறம் -1-3-1- என்று நான் ஈடுபடும்படி எனக்கு ஸ்வாமி யானவர் –விண்ணோர் பிரானார்–நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போகத்தை உபகரிக்கிறவருடைய–மாசின் மலரடிக் கீழ் –-ஹேய ப்ரதிபடமாய் நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே-எம்மை சேர்விக்கும் வண்டுகளே— என்னைச் சேர விடுவதாக உத் யுக்தங்களான வண்டுகளே
பேசும்படி அன்ன பேசியும் போவது -என்று அந்வயம்–இத்தால்–வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது-என்கையாலே–ஸாரஞ்ஞரான கடகருடைய ஞான அனுஷ்டான ரூபமான பக்ஷ த்யவத்தாலே நிரந்தர பகவத் அனுபவத்தில் யுண்டான உச்ச்ரித கதியாய் இருப்பார்க்கு
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்னும் கணக்கிலே போக பூமி எளிது என்னும் படி தோற்றுகிறது–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கையாலே –அப்படிப்பட்ட கடகருடைய கடிப்பிக்கைக்கு ஈடான வார்த்தை இவ்வதிகாரிக்கு ஆஸ்வாஸ கரம் என்றபடி–நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்-என்கையாலே–ஈஸ்வரனுடைய நீர்மையும் மேன்மையும்-இச் சேதனனுக்கு நிரந்தர உஜ்ஜீவன ஹேது என்றபடி –மாசின் மலரடி-என்கையாலே-ஆஸ்ரித விஷயத்திலே தாரதம்யம் ஆகிற மாசு இல்லாமையும் ஆஸ்ரித லாபத்திலே விகாஸத்தையும் சொன்னபடி–அடிக் கீழ் -எம்மை -என்கையாலே-இரண்டு தலைக்கும் சம்பந்தம் ஸ்வ ஸ்வாமி பாவம் என்றபடி–சேர்விக்கும் வண்டுகளே-என்கையாலே–தன் வாங் மாதுர்யத்தாலே சேர விடுகை ஆச்சார்ய க்ருத்யம் என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம்-வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது
-இதுக்கு அர்த்தமும் அந்வயமும் சொன்னதாயிற்று–நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக் கீழ் – சிசுபாலாதிகள் ஏசும்படி களவால் நெய் அமுது செய்ய-அத்தால் பிரகடித ஸுசீல்ய வாத்சல்யாதிகளால் என்னைத் தாம் அடிமை கொண்டு என்னில் ப்ரீதியையும் விளைத்து எம் ஈஸரானவர் விண்ணோர் பிரானாரே
இத்தாலும்–மாசின் மலரடிக் கீழ்–ஸுர்யாதி தோஷ ராஹித்யத்தால் ஜகத் ஆதரணீயரானவருடைய திருவடி மலர்களுக்கு என் தலை கீழ் பீடமாம்படி என்னைச் சேர்த்து விடும் வண்டுகள் நீங்கள் அன்றோ
இப்போதே நமக்காகத் தூது போங்கோள் -என்கிறாள்-எம்மை சேர்விக்கும் வண்டுகளே

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் தம் ஆற்றாமையை ஆச்சார்யர் மூலம் -புருஷகாரமாக -அவனுக்கு தெரிவிக்கிறார் –
விண்ணாடு நுங்கட்கு எளிது-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக உடையனான குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்-தேனார் கமலத்து திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -பரமபதம் உங்கள் கை வசம் உள்ளதே –பேசும்படி யன்ன பேசியும் போவது-அப்பெருமான் இடம் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை இப்பொழுது எனக்குச் சொல்லிப் போக வேணும் –
அவற்றைக் கேட்டாகிலும் ஆறி இருப்பேன் –ஆறு மாசம் மோகித்து கிடந்தார் எத்திறம் என்று -அந்த ஸுலப்ய குணத்தை பாராட்டி அருளிச் செய்கிறார் –-எம்மீசர் விண்ணோர் பிரானார்-மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும்-அடியாருடைய குற்றங்களை கணிசியாமையே எம்பெருமான் மலர் அடிக்கு மாசு இல்லாமை யாகும் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

தாத்பர்யம்–திருத்துழாய் -பற்றிப்பேசி -வீசுவதர்க்கு முன்னே அந்த நாமம் கேட்டவுடனே தெளிந்து
நாயகன் வரும் காலம் அறியாமல் ஆறி இருக்க மாட்டாமல் ஆள் விடவும் யாரும் இல்லாமல் –மற்றவர்கள் இவளுக்கு முன்பே மோஹித்து இருக்க திர்யக்க்கை அனுப்புகிறாள்–பரமபத நாதன் – மேன்மை யுடையவன் என் போல்வாரை ஆஸ்வஸிப்பிக்கைக்காகவே இடைக் குலத்தில் அவதரித்து
ஆய்ச்சிகள் ஒழித்து வைத்த வெண்ணெய் களவு கண்டு உண்டு-சிசுபாலாதிகள் ஏசும் படி அவதரித்த கண்ணன் மாசில் மலரடி பரம போக்யம் பாவனம் – கிட்டாமல் -இழந்து இவ் வவஸ்த்தை அடைந்தேன்
நீங்களே அங்கே போகவும்-அவன் திரு உள்ளத்தில் கருணை பிறப்பிக்கைக்கும் வல்லவர்கள் அன்றோ
நீங்களே அங்கே சென்று சொல்வதை என் முன்னே சொல்லிப் போக வேண்டும் –-அத்தாலே நீங்கள் வரும் வரை தரித்து இருப்பேனே -என்று விண்ணப்பிக்கிறாள்

2-7-கேசவன் தமர் -பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே-மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே-ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-

குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்-வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
–2-7-1-

கேசவன் தமர்
1-ரூபம்-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-ஸ்வரூபம்-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா–சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது

மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –
மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –
விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்
மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி-

————

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே
 –2-7-2-

மஹா உபகாரகனாய் — இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியான படியை எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ யபதியான ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அநந்யார்ஹன் ஆக்கின சேஷி –ப்ரஸ்துதமான நாராயண சப்தார்த்தைச் சொல்லுகிறார் –

———-

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே 
–2-7-3-

அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்–2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்- 4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று-தீதவம் கெடுக்கும் –தீதாகிறது -மயர்வற மதி நலம் அருள பெறுவதற்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணின கர்மங்கள்-அவமாகிறது -பின்பு பிராமாதிகம் ஆனவை-நிஷ்க்ருதி இல்லாத கர்மங்களும் நிஷ்க்ருதி உள்ளவையும் என்றுமாம் –அமுதம் –-போக்குவது தன் போக்யதையைக் காட்டி-செந்தாமரை கட்குன்றம்
என்னோட்டை கலவியாலே சிவந்த திருக் கண்களையும் வளர்ந்த திரு மேனியையும் உடையவன் ஆனான் –-சதைக ரூபமான வடிவு விகசிதம் ஆயிற்று –என் கோவிந்தன் -என்னை விஷயீ கரிக்கைக்காக கோவிந்தன் ஆனவன் –

————

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே
 –2-7-4-

தேவும் தன்னையும்தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இறே தானான தன்மைஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இறே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்-எம்பிரான் விட்டுவே –எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்-சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளையுமா போலே வியாப்திக்கு பிரயோஜனம் தம்மை வசீகரிக்கை என்று இருக்கிறார் –

————–

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே 
–2-7-5-

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

———

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
 –2-7-6-

இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்-தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று-இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –-சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள்விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே-நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்-தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது-

———-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே
 –2-7-7-

என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்முத்துப் பல் வரிசை –

பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது

என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

—–

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
 –2-7-8-

என்னைத் தீ மனம் கெடுத்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-

———-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே
 –2-7-9-

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படிஉன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும் வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள-ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக-இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி-வைகல் வைகல்-கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனைஉன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
என்னிருடீ கேசனே – எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன-பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

————–

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே 
–2-7-10-

மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்-நம்பி பற்ப நாபனையே — கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ-மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

———

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே 
–2-7-11-

எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ஸ்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் -கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு-இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்-விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் வைத்து ஆஸ்ரிதைகளான இடைச்சிகளுக்கு கட்டவும் அடிக்கவும் படி இருக்கிற ஸுலப்யத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -53-வார் ஆயின முலையாள் இவள் –வைகுந்தா மணி வண்ணனே -2-6-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இவள் -இது -நோய் -தெய்வ நன் நோய்-கலங்கின பக்தி யுடையவள் -இரண்டும் அத்விதீயம்
நோய் நாடி நோய் முதல் நாடி -வானோர் தலைமகன் தானே இதுக்குக் காரணம்
உபாயம் -திருத்துழாய் -தாரோ தழையோ கொம்போ வேரோ மண்ணோ
உபாயம் பயன்படுத்தும் -பிரகாரம் –கொண்டு வீசுமினோ –-வைகுந்தா மணி வண்ணனே -2-6-
கீழ்ப் பாசுரம் 2-5–இப்படி அமைவது அத்புதம் உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே
தாமரைக்கண்ணனை –துழாய் கண்ணி -அடிக்கடி திருத்துழாய் பிரசங்கம் அதிலும் உண்டே

செவிலித்தாய் கட்டு விச்சி நோய்க்குக் காரணம் சொல்லும் பாசுரம்-கீழ் தீர்ப்பாரை வெறி விலக்குதல் பார்த்தோம் ஒரு பாசுரத்தில் முன்பே-அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரம் போல்-பூம் கொத்து -தொடங்கி ஐந்தும் -இங்கு

அவதாரிகை – இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது –காலமும் அதுவேயாய் –
வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே-அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் –
இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –-வழி அல்லா வழியே  பரிஹரிக்க இழிய – இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –(பிரபன்ன குல தோஷ பரிஹாரிணி )
நீங்கள் செய்கிறது பரிஹாரம் அன்று – இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே  இங்கனம் பரிஹரிக்க பாருங்கோள்-என்கிறாள்-

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்-இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே-நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் ) தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை–தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின செவிலி முதலானார்க்கு கட்டுவிச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்-இம் மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-அவதாரிகை-இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய் மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார் -இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி இந்நோய் முதலையும்
இந் நோய் ஸ்வரூபத்தையும் இத்துக்கு இது தான் தணிவு என்னுமத்தையும் அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள் அவளை நிராகரித்து இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-53 –கட்டுவிச்சி கூறுதல்-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16–சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்-அல்லாவியுள் கலந்த -என்று தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் – தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண னில் அர்த்தத்தை வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

வாராயின முலையாள் இவள்-நீங்கள் செய்கிற இவ் விளையாட்டுக்கள் கொண்டு பரிகரிக்கும் பருவம் அல்ல –கால ஷேபம் பண்ணாதே-கடுக  சிஹித்சித்து  கொண்டு நிற்கும்படி அன்றோ இவள் பருவம் இருக்கிறது –வாராலே ஆர்த்த முலை –வாராலே தாங்கப்பட்ட முலையை உடையவள்–வாராலே தரித்தல் –நாயகன் தன் மார்பாலே தரித்தல் செய்யுமித்தனை போக்கி இவள் தன்னாலே தரிக்கும் அளவில்லை –

என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின்
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்

என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப்
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
–92–பெரிய திருமடல்–கன்னவிலும் காட்டகத்து -கல்லே என்று சொல்லப்படுகிற காட்டுள்ளே-ஓர் வல்லிக் கொடி மலரின்– ஒரு பூம் கொடியில் பரிமள பிரசுரமான மலரில் –நன்றறு வாசம்--அநுப புக்தமான (இது வரை அனுபவிக்கப் படாதே )-செவ்விப் பரிமளத்தை-மாற்றார் யானும் எய்தாமே –-போக்தாக்கள் புசிக்க பெறாதே–மன்னும் வறு நிலத்து  வாளான்குகுத்தது போல்--தான் முளைத்த வெறும் தரையிலே ஒரு பிரயோஜனம் இல்லாதபடி –வ்யர்த்தமே மீள எடுக்க-ஒண்ணாதபடி மங்குமா போலே–என்னுடைய பெண்மையும் என்னலனும்   என் முலையும்--அக் கொடியும் பூம் கொத்தும்  பரிமளமும் இருக்கிற படி–மன்னு மலர் மங்கை மைந்தன் –-பிரணய தாரையிலே பெரிய பிராட்டியாரோடே ஸ்ரோத்ரி யானவனே வேணும் இவளுக்கு தேசிகனாம் போது-கண புரத்து பொன் மலை போன்று நின்றவன் தன்-–பெரிய பிராட்டியும் தானுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க ஒண்ணாது—திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறவனாக வேணும்–பொன்னகலம் தோயாவேல் –-அவனுடைய வீறுடைத்தான மார்பிலே அணைக்கப் பெற்று-தன்னுடைய கிலேசம் தீரா வாகில்–என்னிவைதான் வாளா--இவற்றினுடைய சிருஷ்டிக்கு ஒரு பிரயோஜனம்   வேண்டாவோ–எனக்கே பொறையாகி--இருவர் கூட தரிக்கிற இத்தை – நான் ஒருத்தியும் எங்கனே தரிக்கும்படி எனக்கே தான்–சுமை ஆயிடுக – இவை தான் முதுகிலே  ஆக பெற்றோம் ஆகில் கண் காண இருந்து செவ்வி அழிய வேணுமோ மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே –இதுக்கு பட்டர் –
நாட்டில் ஓர் அந்தர் ஆளிகர் ( நடுவே சஞ்சரிப்பவர்-தூதர்-கடகர் )இல்லையோ  -என்கிறார் காண் -என்று அருளி செய்தார் –
(கொடி -ஜீவன்–மலர் -ஞானம்–நறு மணம் -பக்தி –திருமங்கை ஆழ்வார் ஞானம் பக்தி அனுபவிக்க திருமால் ஒருவனால் முடியும் என்றபடி – ஆந்தராளிகர் -தலைவன் தலைவி நடுவில் ஊடலை தீர்க்கும் நடுவர் -)

இவ் வார்த்தையைக் கேட்ட போது பிள்ளை திரு நறையூர் அரையர் உள்ளிட்டார் அடைய நாலைந்து நாழிகை போது வேறொரு வார்த்தைக்கு இடம் கொடாதே-
கொண்டாடியவர்கள்-பட்டது காணும் -என்று நம் ஜீயர் அருளி செய்வர் –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்கிற பாட்டை – பட்டர் அருளிச் செய்த சில வார்த்தைகளைக் கேட்டு – இதுக்கு முன் பூர்வாசார்யர்கள் பக்கலிலும் இவ் வார்த்தை கேட்டு அறியோம் -என்று கொண்டாட –

(பிள்ளை திரு நறையூர் அரையர் -வயசில் மூத்தவர் இளையவரான பட்டரைக் கொண்டாட )பிள்ளாய் (பூஜ்ய யுக்தி இது )பண்டும் இப்படி ஸ்லாகித்தாரும் உண்டு காணும் –-ஒரு திர்யக்கை வளர்த்து –
திரு நாமங்களைக் கற்பித்து – பின்னை அது சொல்லக் கேட்டு – அதன் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தார் –(ராமானுஜ சம்பந்தி என்று அன்றோ கொண்டாடினீர் என்றபடி
இதே போல் பெரிய நம்பி ராமானுஜர் விஷயத்திலும் உண்டே )நீர் உமக்கு வேண்டின நிலையிலே ஹேதுக்களை வையும் – உம்மை அனுபவிக்கிற இது -இழவாது ஒழியும் அத்தனையே வேண்டுவது -என்றாராம் –

உடையார் சுப்ரமணிய பட்டர் எம்பெருமான் எழுந்து அருளி இருக்கிற காலத்தில் – இங்கே வந்து திருப் புன்னை கீழே பெருமாளை சேவித்து இருக்க – எம்பெருமானாரை சிலர் வந்து அனுவர்த்திக்கிற படியைக் கண்டு – ஜீயரே நான் கேட்க வேண்டி இருக்கிறதொரு-வார்த்தை உண்டு -என்ன-அது ஏது -என்ன -சர்வேஸ்வரன் திரு முன்பே நம்மை சிலர் தண்டன் இடா நின்றார்கள் – அவர்களும் விவஷியதரா யிரா நின்றார்கள்- நாமும் அது வேண்டா என்கிறி லோம்-இதுக்கடி என் -என்ன –இது தான் கேட்க வேண்டுவதொரு வார்த்தை யாகிலும் நீர் கேட்குமது என் -என்று அருளி செய்தார் –எனக்கு வாசி என் -என்ன-நீர் ராஜ சேவை பண்ணித் திரிந்தவர் அன்றோ – ராஜாவின் பக்கலிலே ஒருவன் கார்யம் கொள்ள வந்தால் -அவனுடைய பாதுகைகளை எடுத்து தலையிலே வைத்து கொள்ளா நின்றால்- அவை தன்னை தலையில் வைக்க வேண்டா-என்னுமோ – அவன் தான் அவற்றை கொண்டாடுகிறானோ- அவற்றை கொண்டாடுகிறான் ஆகில் அவை தான் கார்யம் செய்ய வேணும் -இறே–ஆன பின்பு –-இத்தால் – ப்ரீதினானவன் ராஜாவே அன்றோ -என்று அருளி செய்தார்-

வாராயின முலையாள் இவள் –வார் தான் இம் முலையோடு சம்பதித்து ஸ்வரூபம் பெரும்படியான
முலையை உடையவள் -என்னவுமாம் – நாயகன் தானும் இம்முலையோடே அணைந்து இறே தன் ஸ்வரூபம் பெறுகிறது –அகலகில்லேன் இறையும் -என்றும்-ந ச சீதா த்வயாஹின-என்றும் இறே அங்குள்ளார் படி-நோவுக்கு ஹேது பூதன் ஆனவனுக்கும்-நோவுக்கும் உண்டான அவிபாகத்தாலே
வானோர் தலைமகனாம் சீராயின நல் நோய் -என்கிறது –(ஹார மத்யமணி நியாயம்-சீராயின நல் நோய்-சீராயின வானோர் தலைமகனாம்)-சீராயின –கனவிய நோய் —ஒருவரால் பரிஹரிக்கிறோம் என்று தொடங்க அரிய நோய்–தெய்வ நோய் –அப்ராக்ருதமான  நோய்–நல் நோய் –கைக் கூலி கொடுத்துக் கொள்ள வேணும் நோய் –அன்றிக்கே-வானோர் தலைமகனாம்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையையும் –சீராயின –கல்யாண குணங்களையும் உடைய–தெய்வ-பர தேவதை அடியாக வந்த நோய் -என்னுதல்-

தெய்வத் தண் அம் துழாய் -இத்யாதி–இந் நோய்க்கும்-இவளுக்கு பரிஹரிக்கிற உங்களுக்கும்
அனுரூபமாக பரிஹரிக்க பாரும் கோள்-தேவதாந்திர கடாஷ கொள்வதோ -என்று அது குடிப் பழி இறே-அவன் திருமேனியில் ஸ்பர்சத்தாலே அவன் தன்னோபாதியும் ஸ்லாக்கியமாய்
இருந்துள்ள -திருத் துழாயில்–தாராகிலும் ––அதில் தழை ஆகவுமாம்–அதில் கொம்பாகவுமாம்
கீழ் வேராகவுமாம்—அத்தோடு சம்பந்தித்த மண் ஆகிலுமாம்-ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து பரிஹரிக்கப் பாரும் கோள் –இதர ஸ்பர்சங்கள் தூரப் போந்ததும் பாதகமாம் போலே-பகவத் விஷயத்தில் தூரே உண்டான சம்பந்தமும் நோவுக்கு பரிஹாரமாம் இறே –-ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போரப் போர உறைத்து இருக்கும் இறே–தம்மடியார் அடியார் -இத்யாதி-(பிடித்தாரைப் பிடுத்து –அடியார் அடியார் அடியோங்கள் – தொட்டாரைத் தொட்டு -ஆனந்தம் மிக்கு இருக்குமே )

இதுவும் -21 -பாட்டு போலே -வெறி விலக்கு துறை-கட்டு விச்சி கூறல் -தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்கு பரிஹாரம் ஏதோ என்று வினவின் செவிலி முதலானோர்க்கு கட்டு விச்சி நோய் நாடி பரிஹாரம் சொன்ன பாசுரம் –கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ –-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டிய திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ –-விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை தென் குடந்தை எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ – நாகத்தணைக் குடந்தை வெக்காத் திரு எவ்வுள் நாகத்தணை அரங்கம் பேர் அன்பில் நாவாயும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ – வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வனை யார் இங்கே அழைத்ததூஉ–என்று கூவிக் கொண்டு —தெய்வ நன்நோய்-நோன்பு நோற்று பெற பெண்டியது -பேரின்பம் -பகவத் விஷயத்தில் ஈடுபாடு காரணம் –-அவனை அனுபவிக்க கரணமான பக்தியே -முலை -வாராயின முலையாள்-பக்குவமாய் முதிர்ந்த பக்தி உடையவள் என்றவாறு –

வாராயின முலையாள் இவள்–இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று பருவத்தைச் சொல்லுகையாலே இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி–ஆனால் யாராலே வந்த நோய் என்னில்–வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது–அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்-நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்-கிலேச பலம் இன்றியே-போக பலமான நோயாய் இருக்கும்–இத்தால்-நோய் முதலும்
நோயும்-நாடினாள் ஆயிற்று மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்–தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்— நோய் திவ்யமானவோ பாதி பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்–அவனோட்டை ஸ்பர்சத்தாலே அப்ராக்ருதமாய் செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான பூ வாகிலுமாம்–தழை யாயினும் அதனுடைய விகாஸத்தை யுடைத்தான இலைத் தழை யாகிலுமாம்–தண் கொம்பதாயினும்–அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான அதின் கிளை யாகிலுமாம்–கீழ் வேராயினும்-இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான மூலம் ஆகிலுமாம்–நின்ற மண்ணாயினும்
அந்தத் திருத் துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்–கொண்டு வீசுமினே–நீங்கள் ஸ்வீ கரித்து-அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று-ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –இத்தால்–வாராயின முலையாள் இவள் -என்கையாலே-இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது-சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது-(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே— ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள் பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது–ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:
–பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,-ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும், அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,-விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.–தெய்வ நல் நோயிது-என்கையாலே-இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும் போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது–தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே— இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே என்னும் இடம் தோற்றுகிறது–அதாவது–தெய்வத் தண் அம் துழாய்-என்று ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி–தாராயினும் -என்று ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது-(பூம் கொத்து -தலையால் தாங்க நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )தழை யாயினும் -என்று-அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –(மதுரகவி ஆழ்வார் போல்வார் ) தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது( கிளைஞ்சர்-உறவினர்)–கீழ் வேராயினும் -என்று-இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படி யானவரைக் காட்டுகிறது (நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் ) நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது-கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று-யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே-(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வாராயின முலையாள் இவள்-நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல-கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ இவள் பருவம் இருக்கிற படி–வாராயின முலையாள் இவள்-வாராலே யான முலை-வாராலே தாங்கப்பட்ட முலையை-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம் –-வாராயின முலையாள் இவள்-இம் முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்-அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்- இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு-இவளும் பொற்கொடி இறே-
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று-முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி–இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்-வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது-என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன் -அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன–தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்கிறாள்-தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ் விகல்பம்–துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற தேவ தேவ சாந்நித்யத்தாலே பரிமளத்தாலும் கோமளதையாலும் அழகியதும் குளிர்ந்ததுமான பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே கண் விழிப்பள் என்றபடி

ஸ்வாபதேசம்
இத்தால்-இதர ஸ்பர்ச லேசமும் சத்தையினுடைய விநாசத்துக்கு ஹேதுவாய் – பகவத் விஷயத்தில் சம்பந்தம் உள்ள ஏதேனும் ஒன்றாகிலும் சத்தா ஹேதுவாம் படியான பாவம் இவருக்குப் பிறந்த படி சொல்கிறது

தாத்பர்யம்–நாயகன் வாராமையால் விரஹம் விஞ்சி மோஹித்து இருக்க-சிலர் வந்து தேவதாந்தர உபாசனை செய்யச் சொல்ல இவளையம் இவளது நோயையும் அறிந்த தோழி-இந்த தேவதாந்த்ர பஜனம் இவள் முடிவுக்கே ஹேதுவாகும்-ஒரு நோய்க்கு பரிஹாரம் செய்யும் பொழுது-நோயையும் அவளையும் அறிந்து இருக்க வேண்டுமே-இப்போது இவள் பருவம் -முலை விஞ்சி வளர்ந்து –
சர்வேஸ்வரன் வந்து அணைந்தால் தான் சத்தை இருக்கும் படி இருக்குமே-அவன் வராமல் இருப்பதால் வந்த நோய் இது-இதன் ஸ்வபாவம் அறிந்து பகவத் சம்பந்தம் உள்ள பூவாயினும்-தழை யாயினும் – –அல்லது அது முளைத்த மண்ணை யாயினும் இவள் முகத்தில் படும்படி வீசினால் அதுவே பரிஹாரம் ஆகும் என்கிறாள் –

2-6-வைகுந்தா-பிரவேசம் –

ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)

உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –

ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்-

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே
 –2-6-1-

அம் தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் இறைவன் அழ்வாருடனே வந்து கலந்து
தான் பெறாப்பேறு பெற்றானாய் இருந்தான்;
இவர், ‘அல் ஆவி உள் கலந்த’ என்றும்,
‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தான்’ என்றும்
தம்முடைய -நைச்யத்தை அனுசந்தித்தவாறே -தாழ்மையினைச் சொன்னவாறே,
‘வளவேழ் உலகு தலை எடுத்து, இன்னம் இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை -ஐயத்தை-நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா –
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்ய புத்ர’ என்னுமாறு போன்றும்,
திருவாய்ப்பாடியில் பெண்கள்‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும்,
‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார்.
இதனால், ‘நித்திய விபூதி யுக்தன் தம்முடனே வந்து கலந்தான் என்று ஹ்ருஷ்டராகிறார் 

‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று;
‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று;
‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று;
இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.

இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்;
மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்;
அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார்.

செய் குந்தா வரும் தீமை –செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்கும் தீமை.-இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை

சிக்கெனப் பிடித்தேன் கொள் – என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று.-அவனைப் பார்த்து, மா ஸூ ச -‘துக்கப்பட வேண்டா’ என்கிறார்.-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்
மதிப்பன் அல்லன் என்று விடவோ –
வடிவில் பசை இல்லை என்று விடவோ-
ஸூ லபன் அன்று என்று விடவோ-
தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

————

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
 –2-6-2-

இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார்-இவரோடே வந்து கலந்து, அக் கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று, விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது.

ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை:
‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய,
‘அது கேட்க வேண்டும்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற,
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க,
‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க,
அப்பனும் யோகத்திலே எழுந்தருளி யிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,
‘இங்கே சொட்டைக் குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள,
‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு,
‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச் செய்கைக்கு ஏது என்?’ என்ன,
‘நானும் தானுமாக அனுபவியா நின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும்
அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்;
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’-என்று அருளிச் செய்தார்.

————–

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே
 –2-6-3-

நித்திய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்;-இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான்.-அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’-பொன் மலையை-இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படியைத் தெரிவித்தபடி.-வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார்-நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாட் பூ அலருமாறு போன்று-ஜிஹ்வ அக்ரத்திலே – நாக்கின் நுனியிலே -விகசியா நின்றுள்ள சந்தஸானது என் பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இது தன்னை –ஸ்வபாவமாக- உடையையாய் இருக்கிற பரம உதாரனே!-மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.

———–

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
 –2-6-4-

உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –எள்கல் த்யாகம் ஈடுபாடு –
1-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
2-எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்

உன்னை எங்கனம் விடுகேன்
1-உதாரன் அல்ல என்று விடுவோ
2-விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
3-உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
4-உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
5-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்-இப்படி பல பிரகார உபகாரகன் -இனி மேல் எல்லாம் அவன் அதி சங்கையைத் தீர்க்கிறார் –

உய்ந்து போந்து இருந்தே 
உய்ந்து -சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்-நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்கை
இருந்து -நிர்பரனாய் க்ருதக்ருத்யனாய்-இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன்-

——————–

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
 –2-6-5-

1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ – தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ?
8-எனக்குத் தெவிட்டி விடுகிறேனோ? -அடிமையின் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் விடில் அன்றோ நான் உன்னை விடுவது–உன்னைச் சிந்தை செய்து செய்தே –நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம்-பிரசங்கம் உண்டோ?’

———————-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே
 –2-6-6-

என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் –என்னுடைய-பிராக்தனமான – பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி.
பாவங்களைப் போக்கினவன் அவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே
அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.

அவன் விடுவது, மனம் அறிந்தே தீ வினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

என் முன்னைக் கோள் அரியே-நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்;
ஆஸ்ரிதர்களில் -அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி.-கோளரி ‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.-‘ஜ்வலந்தம்’ என்கிற தேஜஸ் – ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.-முடியாதது என் எனக்கே –ப்ரதிஜ்ஜா சம காலத்திலே நீ தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ-இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ப்ரஸாதத்தாலே விளைந்தது-என்கிறார் –

————

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
 –2-6-7-

முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து – பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது-படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –-எனக்கு இனி முடியாதது உண்டோ-அடியேனுள் புகுந்தான் –-சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்-உட்கலந்தான் –-ஒரு நீராகக் கலந்தான்-தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –விடியா வென்னரகத்து –-ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே-என்றும் கிட்டக் கடவதான தண்மை தவிர்ந்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

————-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்
 –2-6-8-

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூக்ருதம் என் என்ன -ஒரு ஸூக்ருதத்தால் வந்தது அல்ல-நான் பிறந்து படைத்தது என்கிறார் –அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –பிறந்து படைத்தது -தமப்பன் ஐஸ்வர்யம் பிள்ளைக்கு உண்டு -ஜன்ம சித்தம் –அந்தாதி -பூர்வ தேக அந்தம் உத்தர தேஹம் ஆதியாக இருக்குமே -திருவாய்மொழி போலே இதுவும் -என்றவாறு –

அஜீர்ணம் போய் அக்கார அடிசில் பெற்றேன் –ஒரு கடலில் தப்பி பிராப்த கடலில் ஆழ்ந்தேன் –துன்பக் கடலில் இருந்தும் இன்பக் கடலில் மூழ்கினேன் –சம்சார நாற்றத்துக்குள் ஆழ்ந்து இருந்தவன் இப்பொழுது சம்சார கந்தமே இல்லாத நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக பெற்றேனே –

உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் – ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –-தம்முடைய இனிமையாலே இவரும் அவன் பக்கலிலே அதி சங்கை பண்ணுகிறார் -தம் உகப்பு அவனை எதிர் இட்ட படி
எந்தாய் -விரோதியைப் போக்கி வந்து கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்கிறது

————-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே 
–2-6-9-

இனி எங்குப் போகின்றதே-போக்கிடம் இல்லையே உமக்கு -எதனால் என்னை விட முடியும் –
1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ -சேஷத்வம் மறந்தேன் என்று போகவோ –
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரஸ்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ -கங்கணம் -ரஷை-தீஷை –
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7- உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ-

———–

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே
 –2-6-10-

சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ –
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற-அதி சங்கையும் தீர்த்து-தோளில் இட்ட மாலையும் –தண் துழாய் விரை நாறு கண்ணியனே –இப்பொழுது தான் –அதி சங்கை தீர்ந்த பின்பு பரிமளிதமாய்-பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் -கைபந்து –தானுமாய் -பரிபூர்ண மநோ ரதனுமாய்-நின்றபடி-

————

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே 
–2-6-11-

அவர் கேசவன் தமரே –அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்-குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்-அரையர்கள் -விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் -தன் முகத்தாலே -உத்தேச்யர் ஆவார்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய –நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கடல் ஓசைக்கு ஆற்றாமல் அருளிச் செய்கிறார் -நெய்தல் நிலம் பிரிந்தார் உள்ள இடம்-கடலைக் கடைந்து அமுதம் கொண்டு போக –அத்தை திரும்பி வாங்கக் கொள்ள மாட்டாமல் -முடியாமல் பரதர் முத்துச் சிப்பி விற்பவர்கள் -அவர்கள் இடம் விலை கொடுத்து வாங்கிய வளையல்களைப் பிடுங்க என்னிடம் தானே இவை உத்பத்தி ஆகும் -சங்கு -ஸஜாதீயம் கொண்டாடி பிடுங்க யத்தனிக்க -ஈருகிறது
வேரித் திருத்துழாயைத் துணையாகக் கூட்டி வந்து -ஓ என்று சப்திக்கிறது-நண்ணாதார் முறுவலிப்ப -4-9–கண்ணாளா கடல் கடைந்தாய் அதிலும் உண்டே-அங்கும்-நண்ணாதார் முறுவலிப்ப-நல்ல உற்றார் கரைந்து என்க -உலகு இயற்கை- தாய முறை பற்றி –-தலைத் தலைப்பெய்து -வந்து வந்து அழுது -அலைக் கரங்கள் போல் – ஸம்ஸார சாஹர கோலா ஹலம் ஆற்றாமை அதில் —

இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம் ஆகிற படியை சொல்கிறது –பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா நிற்கச் செய்தே – க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக் காட்டினார் இறே-அப்படியே-இங்கு ஓர் ஆள் வராவிட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –சங்கத்யாத் பரத ஸ்ரீ மான் ராஜ்யே நார்த்தீ ஸ்வயம் பவேத் –சங்கத்யாத்–சேர்ந்து -பெருமாள் உடன் சேர்ந்து- ராஜ்ஜியம் உடன் சேர்ந்து –அத்தையே விரும்புவானாக ஆவானோ என்று அறிய ஆள் அனுப்பினானோ யவ்ராஜ்ய பட்டாபிஷேகம் விருப்பம் கொள்வானோ -இது தான் அர்த்தம் ஐயர் நியமிக்க –ஆச்சி உடைய வர வ்யாஜத்தாலே –நாம் ராஜ்யத்தை தனக்கே கொடுத்து போரச் செய்தேயும் –நம்மை பின் தொடர்ந்து வந்து -சொன்ன நாள் எல்லை கழிந்தால் –பின்னை ஒரு ஷணம் நான்-தாழ்க்கில் தன்னைக் கிடையாது -என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான் –இன்று நாம் சென்று-கிட்டினால் பதினாலாண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே –நீ முடி சூடு என்றால் -அல்லேன் -என்னாதே -அத்தை இசையப் பெறுவது காண்-ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு –நாம் பிள்ளையை-முடி சூட்டிக்  கண்டு தீரப் பெறுவது காண் –சநைர் ஜகாம சாபேஷ -என்கிறத்தை சாவேஷ –என்று திருத்தி -கீழ் விழியாலே பார்த்து போனார்-என்று பொருள் சொன்னபடியை -பட்டர் கேட்டருளி –அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே-பொருள் சொல்லலாம் காண் என்று –இவ் உபகரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக்-காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் என்கிறது காண் -என்று அருளிச் செய்தார் – அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்னே இறே-அபிஷேகத்துக்காக வந்த வற்றை வலம் வந்து விருப்பத்துடன் பார்த்து பெருமாள் சா பேஷா -விருப்பத்துடன் பெருமாளுக்கு ராஜ்ஜியம் விருப்பம் இல்லையே கீழ் பார்வை பார்த்து நகன்று போனார் சாவேஷா என்று மாற்றி அப்படி மாற்ற வேண்டாம் ஆசையுடன் தான் பிரதக்ஷிணம் செய்தார் என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனும் பெற்றது அன்றோ
பரதாழ்வானுக்கு முடி சூட்டப் பாரித்து 14 வருஷம் காத்து இருந்தார்
-என்றார் –

அடுத்த வேளை ஸ்நானம் பரதாழ்வான் உடனே நாட்டாரோடு சேர்ந்து இருக்கிற படி சங்க
என்னோடு சேர இருக்கிற படி ஆஸ்வாஸம் செய்யவே திருவடியை வர விட்டார்
ராஜ்ஜியம் 14 வருஷம் இருந்ததால் தானே விருப்பம் கொண்டு இருந்தானாகில் இங்கேயே இருக்கலாம்
என்று நாட்டார் சொல்லும் அர்த்தம் என்னுடன் சங்காத் -மத் விஷய சங்கம்
யவராஜ்யம் செய்து கொள்ள நியமித்தால் விருப்பம் கொள்வானோ என்று பெருமாள் நினைவு
திருவாய் இங்கிதம் ஞானம் அறிந்தவர்-பாவம் அறிந்தவர் பெருமாள் -திரும்பி வராமல் அங்கேயே இருப்பதைக் கொண்டே அறிந்தார் பரத அபிஷேகத்தில் சா பேஷை உண்டே பெருமாளுக்கு –
உபகரணங்களை நன்றாகக் கடாக்ஷித்துப் போனார் அதே போல் இங்கே தலைமகன் ஆள் விட்டு இருந்து என்னைத் தரிப்பிக்க வேண்டாவோ – ஆள் வரவிடாமையாலே கடலோசை மிகவும் பாதகம் ஆனதே 

தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்-அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை–அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது – பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்-இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்-அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம் பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்–சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31- இத்தை ஸா வேஷ -என்று திருத்தி கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே அத்தை பட்டர் கேட்டு அருளி–அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்–அத் தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிஅவதாரிகை-இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை  கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-51 –கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ் வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று
-39–சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே என்று விஷண்ணராய் இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல் செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

மலை கொண்டு மத்தா –அசல -பதார்த்தத்தை-ஸ்வ புத்ய அதீனமாக திரியும்படி பண்ணினான் –அரவால் –அதி மிதுனமான வாசுகியை கயிறாகக் கட்டிக் கொண்டான்–சுழற்றிய-வைத்த நேர்ப்பம் இருந்த படி –அமிர்தம் எழும் அளவும் செல்லத் தானே திரியும் படி –குசவன் திரிகை ஒருகால் திரித்து விட்டால் சிறிது போது திரியுமா போலே –சர்வ சக்தி திரித்தது ஆகையாலே கார்யம் முடியும் தனையும் திரிந்தது –இத்தால்-சகல பதார்த்தங்களின் உடைய பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ புத்தி அதீனம் என்றபடி –மாயப் பிரான் –ஆஸ்ரிதமான குண சேஷ்டிதங்கள்  உடையவன்-மாயிரும் குன்றம் –பெரிய திருமொழி -5-7-4-இத்யாதி –சாத்தின திருமாலையும் பரி வட்டமும் அலைய நின்று  கடைந்த படி–பிரான் –எனக்கு அவ்வடிவு அழகை  உபகரித்த உபகாரகன் –இவருடைய அம்ருதம் இருந்த படிஅலை கண்டு இத்யாதி –தன்னை கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி நெஞ்சிலே மந்தரத்தை நட்டு உலக்கையை-விடு நகம் கட்டி நல் ஜீவனை வாங்கிக் கொண்டவன் பாடு சென்று அத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது –கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து –நாச்சியார் திருமொழி -10-9-என்கிற அவன் பாடு போக மாட்டாது-பரதர் இத்யாதி –வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு  கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ளப் பாரா நின்றது –நாங்கள் தன் பாடே சென்றோமோ-தன்னை நெருக்கிக் கொண்டோமோ–வேரித் துழாய் துணையா –நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு – அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே- திருத் துழாயை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா-மஹதா – மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –நிர்ஜகாம –புறப்பட்டான் –ஹரீஸ்வர-பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –அநுமான்ய--ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –ததா- சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )-பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்–சுக்ரீவேந ஸமாஹிதா-சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி –துலை கொண்டு-தானும் ஒரு துலை இட்டுக் கொண்டு–

தாயம் இத்யாதி –தாயம் -ஞாதிகள் நாலைந்து க்ரயம் சென்று போனத்தை-எங்களது என்று தொடருவாரைப்  போலே  –சங்கு களுக்கு  உத்பத்தி ஸ்தானம் தன பக்கலிலே ஆகையாலே –சஜாதீயம் -என்று தொடரா நின்றதுஅழைக்கின்றதே –கார்யப் பாட்டால் கூப்பிடா நின்றது –வழிப் பறிக்காரர் அழைக்குமா போலே –ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை – அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று–இப்படி ஓசைப் படுத்தின இடத்துக்கு மேல் பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதாப் பிராட்டிக்கு –நிச்வசஞ் சக்ரவாகாநாம்  –பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான  படி–சஹ சாரணாம்--பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்–புண்டரீக விசாலாட்ஷி--வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –கதேமேஷா பவிஷ்யதி –-என்ன துன்பம் பட்டாளோ-

கடலோசைக்கு இரங்கி –வலியார் இடத்தே வலிமை காட்ட முடியாமல் -அமுதம் எடுத்த எம்பெருமான் இடம் காட்ட முடியாமல் எளியோரை வலிந்து நலியுமா போலே -சங்கு வளைகளை கவர்ந்து சென்று -தன் வலிமை போதாது என்று திருத் துழாயையும் கூட்டி மிக்க ஒலியால் அறை கூவுகின்றதே-வேரித் துழாய் துணையாத்–திருத் துழாய் மேலே ஆசைப் பட்டு கிடைக்காமையால் தளருவது போலே –
வாலி-ஸூ க்ரீவன் -நாமி பலம்-தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் நாம பலம் -போலே
துலை தலைக் கொண்டும் -என்னை தொலைப்பதற்காக-தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து-
தாயாதிகள் வழக்கு தொடர்ந்து சொத்து பறிப்பது போலே-அழைக்கின்றதே–அவன் திருமேனிக்கும் கம்பீரமான குரல் ஒலிக்கும் போலியாக வருத்தும்-

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்-மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்–அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்-தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது–பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
இச் சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை–பரதர் என்று -நுளை யருக்குப் பேர்வேரித் துழாய் துணையா-மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது-திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை நலிகைக்கு உறுப்பாகை-துலை கொண்டு-ஒத்து எதிர் ஏறி-துலைத்தல் -முடித்தலாய்-இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –தாயம் கிளர்ந்து— ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே மேல் எழுந்து–கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே–அழைக்கின்றதே–அவஷ்டம்ப (பற்றுக் கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து அழைக்கும் கணக்கிலே அதி கோஷம் பண்ணா நின்றது என்று தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –இத்தால்-மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே ஸம்ஸார சாகர மத்யத்திலே நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2- நூற்றும்படி யாக்கி அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –பரதர் இத்யாதியாலே-எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது–வேரித் துழாய் இத்யாதியாலே-பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே -இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -வியாக்யானம் –மலை கொண்டு மத்தா-ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி-அரவால்-ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே-அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்-சுழற்றிய— அஜ் ஜலத்தை பிரமிப்பித்தான்-மாயப்பிரான்–அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்-அன்றிக்கே-தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்–அலை கண்டு கொண்ட-அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே ஒருவரால்-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்-மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி எனக்கு உபகரித்தவன் –அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்-தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது-இக் கடலானது அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்–பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை-வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை-வேரித் துழாய் துணையாத்— இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்-ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்–வேரித் துழாய் துணையா-என்று-அவ்வளவு அன்றிக்கே-ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்-துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று அந்யாயப் படுகிறாள்--சங்கு எல்லாம் தன்னதேயாய்-பரதர் தன் தம்பிமார்களாய் இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு தன் தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்-தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –

ஸ்வாபதேசம் –
சம்சார கோலாஹலத்தைக் கண்டு தளர்தல் – கடல் என்று சம்சாரத்தை –சம்சார சாகரம்-மன உறுதி -மந்தர மலை -அன்பாகிய கயிற்றைக் கொண்டு -கடைந்து ஆத்மாவை கொண்டு சென்று அனுபவிக்க-மீட்டுக் கொள்ள சம்சாரத்துக்கு சக்தி இல்லையே-எம்பெருமான் போக்யதையில் விருப்பம் கொண்டதால் —கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல் வண்ணா அடியேனை- பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள் -திருவாய் -4–9–3-பரதர்-விலை கொண்டு தந்த சங்கமிவை கொள்வான் ஒத்து –ஆச்சார்யர்களால் பெற்ற சுத்த ஸ்வபாவத்தை சம்சார கடல் மீட்க ஒண்ணாது என்றபடி-பரதர் -நெய்தல் நில புருஷர் -வலையர் -நுளையர்-என்றும் சொல்வர் – அந் நிலத்து ஸ்திரீகளுக்கு -பரத்தையர் வலைச்சியர் துளைச்சியர் என்றும் பெயர் உண்டே –

தாத்பர்யம்-ஆற்றாமை மிக்கு இருக்கும் இவரை ஆஸ்வாஸி பிக்க தேரை வேகமாக ஒட்டி வரும் தலைமகன் தான் வருவதற்கு முன்னே ஒராளை வரவிட்டு செய்யாமல் இருக்க-சமுத்திர ஓஸை நலிய -இவள் ஒரு அபலை -எது செய்தாலும் பிரதி கிரியை செய்ய சக்தி கொண்டவள் அல்ல-இவள் தளருவதற்கு ஏற்ற பரிமளம் மிக்க திருத்துழாயை கூட்டுப் பகையாகக் கொண்டு கை வளையைப் பிடுங்க எத்தனிக்க-தன்னுள் உடையும் படி ஆகாசம் வரை அலை போகும்படி தன்னைக் கடைந்து சார அம்சம் எடுத்துக் கொண்ட போன சர்வ சக்தன் தனது வஸ்துவை திரும்பிக் கொள்ள மாட்டாதே என்னுடைய வளையல்கள் செட்டியார் விற்க இவள் வாங்கி கொண்டாள் என்று பாராமல் என்னிடம் உள்ள சங்கோடு ஒத்ததாக படியால் எனக்குச் சேரவே வேண்டும்-தாயம் கொள்ளுவரைப் போலே யத்னம் செய்கிறதே என் செய்வேன் என்கிறாள்

4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-

உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார்,
தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை.
ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில்.
இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே –
திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –

புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம்
லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே
வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால்
ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல்
கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய்
இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்
கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

அங்ஙன் அன்றிக்கே,
ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய் மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு ஆவார் உளரோ என்று
உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்;
அவர்கள், தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய்
அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாப மாம்படி இருந்தார்கள்;
அதனைக் கண்டவாறே வாளேறு காணத் தேளேறு மாய்ந்தாற் போலே, தம் இழவை மறந்தார்;
இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது;
சர்வேசுவரனைப் பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும்
பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.
ஆமாறு ஓன்று அறியேன் -பிரதிகோடி-சர்வஜ்ஞ்ஞன் / கடல் கடைந்தாய் -சர்வ சக்தன் /வள்ளலே -பரம உதாரன் /
அரவணையாய் -ரஷணத்தில் தீஷிதன் –கூப்பாடு கேட்க ஷீராப்தி –
நம்மைப் போலே தாழ்ந்தவர்களை ரஷிக்க ஸ்ரீ ரெங்கத்தில் சயனம்
வினையேனை அடியேனாகக் கொண்டாய்-அபராத சஹத்வம் / கண்ணாளா -சர்வ நியந்த்ருத்வம் –இது ஒரு ஐந்து –
அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் ‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து,
நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் —
கண்ணாளா -பரம கிருபாவான் -அம்மானே -சர்வேஸ்வரன் -பிராப்தன் –
இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க,
இவை இங்ஙனம் கிடந்து நோவு படுகை போருமோ?
இவற்றைக் கரை மரம் சேர்க்க வேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க,
நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே?
நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது?
அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு
நாம் பார்த்து வைத்த வழிகளை யடையத் தப்பின பின்பு நம்மாற் செய்யலாவது இல்லை காணும்;
நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.
அதனைக் கேட்ட இவர்,
நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தை யடைந்தேனாவது
இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவு படுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன,
இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று
நம்மை -விபவம் அர்ச்சை -ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’ ‘
உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; –
பாரமான பொருள் தாழும் -தாழ்ந்த சம்சாரம் –
நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமை காணும் கை வாங்கியது;
இனி நம்மாற் செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.
அறப் பொருளை அறிந்து ஓரார் –

ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று
பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு
தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில்,
இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.
ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க,
இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.
ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

கொடு உலகம் காட்டேல்–ஒரே பாசுரம் -இரண்டுக்கும் –
அநர்த்தம் கொடுமை -ஆழ்வான் -சம்சாரிகள் கொடியவர் காட்டேல் -எம்பார்
ஸ்த்ரீக்கு ஆழ்வார் தண்ணீர் எடுத்துக் கொடுத்த வ்ருத்தாந்த

ஆழ்வாருக்கு
மூன்று ஆர்த்தி திருவாய்மொழி
முந்நீர் -பிரகிருதி சம்பந்த நிமித்த ஆர்த்தி
சீலமில்லா சிறியேனில் பகவத் விஸ்லேஷ பிரயுக்த ஆர்த்தி
சம்சாரிகள் இழவால் வந்த ஆர்த்தி இது

ஒன்பதாம் திருவாய்மொழியிலே-இப்படி அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம் பிறந்த அளவிலும்
அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உஸாத் துணையாகைக்கு யோக்யர் அல்லாதபடி சம்சாரத்தில் உள்ளாறும் அதிசயித துக்க மக்நராய்க் கொண்டு
கிலேசிக்கிற படியைக் கண்டு -சகல கிலேச நிவர்த்தகனாய் நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுடைய
அர்த்தி தார்த்த கரணத்தையும்
சாதாரண பந்தத்தையும்
அபரிச்சின்ன ஸுந்தர்யத்தையும்
அவ்வழகை அனுபவிக்கும் உதார குணத்தையும்
அனுபவிப்பார்க்கு கைக்கு அடங்கும் படியான ஸுலப்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
சர்வாத்ம பாவத்தையும்
சகல ஜகத் காரணத்வத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஸ்ரீ லஷ்மீ ஷஹாதவத்தால் வந்த பரம ப்ராப்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான நீ அத்யந்த அஸஹ்யமாம்படி கிலேச உத்தரமான சம்சாரத்திலே இருத்தி என்னை
கிலேசிப்பிக்காதே உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ள வேணும் என்று கூப்பிட்டு
இவர் அபேஷா அநு ரூபமாக அவனும் பரமபதத்திலே இருக்கிற இருப்பைக் காட்ட மானஸ ஞானத்தால் கண்டு
ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய ஹேயதா பிரதிபத்தி பூர்வகமாக அவன் திருவடிகளையே
பரம ப்ராப்யமாகப் பற்றின படியை அருளிச் செய்கிறார் –

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.
–4-9-1-

உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து-கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.-அவதாரிகை -எம்பார் நிர்வாஹத்துக்குச் சேர –

கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற-இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
சுகம் -சுக ரூபத்தில் வரும் துக்கம் -துக்கம் -துக்க ரூபத்தில் வரும் துக்கம் -இரட்டை தாண்டியவர்கள் உண்டோ –அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது;-அதனால் ‘எண் ஆரா’ என்கிறார்.
பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும்
எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.

கண்ணாளா – இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில், உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் – அருளை உடையவன்.-அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக்கடவதன்றோ?
அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல்.
அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல்.
கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர். ‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் –கடல் கடைந்தாய் :

உன கழற்கே வரும் பரிசு –-விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை.
இவர்க்குக் காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன்.

தண்ணாவாது –தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது;-செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன,

அடியேனை’ என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி.

பணி கண்டாய் சாமாறே –பணிக்கை -சொல்லுகை; சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது?
அன்றிக்கே,-சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.

அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல்.
நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில், கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும் நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே,
இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது,
காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது?
பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி.-

——–

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
–4-9-2-

முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்;
அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய்,
இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.-கூரத் தாழ்வான் நிர்வாஹம் ஒற்றி அவதாரிகை இதில்

இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின;
நின்னலால் இலேன் காண்’ என்றும்,
பல நீ காட்டிப் படுப்பாயோ?’ ‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும்,
பகவானை அடையா தொழிவது விநாசத்திற்குக் காரணம்,’என்றும்,
இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது.இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக் கொண்டார்கள்? ‘-என் ஒருவர் தீக் கதிக் கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.

நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே!
சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:

நான் ஆமாறு ஒன்று அறியேன் – அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ?-சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ?-அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ?-இவ் வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியா நின்றேனோ?’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது, ‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் ஸ்ரீ ராமாவதாரத்தில் மெய்யுமே ரஷண ஹேது –

கண்டாய் –என்னைக் கண்ட உனக்கு விரையாதே இருக்கலாய் இருந்ததோ?பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.விரஹம் தின்ற உடம்பு இவருக்கு- அடியேனைக் குறிக்கொண்டே இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய் இருக்கிற என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.-உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றி யருள வேண்டும்’ -.சம்சாரிகள் கிலேசம் பொறுக்க மாட்டாதே என் வாசியைத் திரு உள்ளம் பற்றி நம்மோட்டை சம்பந்தத்தை அறிவித்த பின்பு பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதான் என்று திரு உள்ளம் பற்றி-என்னுதல்
நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில்,
இவை என்ன உலகியற்கை?’ என்று
இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?

————————-

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–
4-9-3-

கொண்டாட்டும் –முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப் புக்கவாறே-முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள்.-பயிலும் திருவுடையார்’ என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்?சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனே யன்றோ இவருக்கு?

கடல் வண்ணா – இந்த உலக வாழ்க்கையின் படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே.–படி -முறை -திருமேனி சாடு –இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டி யருளாய்.

அடியேனைப் பண்டே போல் கருதாது – ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ?
சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது சேர்க்கை பல்லி போலே பணி யன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.
அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம்.-கூரத் ஆழ்வான் -நிர்வாகம் -முன்பு தன் அநர்த்தம் மட்டுமே

உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –-உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருள வேண்டும். உன் திருவடிகளிலே அழைத்தாலும்,-அடிமையின் இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது?-ஆன பின்னர், என்னை நித்ய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’ என்னுதல்;
அன்றிக்கே, ‘சோற்றை யிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.-பரமபதத்தில் வைத்து கைங்கர்யம் கொடுத்து அருள பிரார்த்திக்கிறார் –

—————

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே
.–4-9-4-

நெருப்பாக –-அடியோடு அழிய’ என்னுதல்;-அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல்.-செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின்,
இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ
பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க.

கொள் என்று தமம் மூடும் –-மீளவும் அச் செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப் பட்டவனாய்த் தானே இருத்தல் வேண்டும்?-அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம்.
அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து, அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச் செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம்.

வள்ளலே மணி வண்ணா –-மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண-ஆச்சார்யர் உபதேசாதிகள்- அன்றாயிற்று.
அன்றிக்கே,-வள்ளலே-மணி வண்ணா-செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார்,
‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம்.–பச்சை வடம் கழற்ற விட்டு -அழகைக் காட்டி அருளினாய் –

உன கழற்கே வரும் பரிசு – ஞான லாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தர வேண்டாவோ?-மயர்வு அற மதி நலம் அருளினதைப் போன்று, துயர் அறு சுட ரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ?-பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ?

வள்ளல் செய்து –உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது,-இவன் இப் பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி.ஔதார்ய விசேஷம் பண்ணி
ஆறு -எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் பாதமே -ஔதார்யம் வானமாலையில் கொழுந்து விடும்-அவன் தன் சரண் தந்திலன் -நீ தந்து அருளினாய் ராமானுசா –

அடியேனை –பிறர் உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை.-அடியோங்களை-

உனது அருளால் – மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்ய வேண்டும்.

வாங்காய்’ என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத் தலையில் பரம பத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும், பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத் தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.-

————-

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.
–4-9-5-

வாங்கு நீர் மலர் உலகில் –இவ்வருகு உண்டான காரிய வர்க்கத்தை யடையத் தன் பக்கலிலே வாங்கா நின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே–காரியத்துக்கு காரணத்தில் இ றே உத்பத்தியும் லயமும்-.அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல்.வாங்கு –வளைந்த.

ஆங்கு வாங்கு எனை –நினைவிற்கும் எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும் தனிக் கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்க வேண்டும். –விஷய பரரான இவர்கள் நடுவில் நின்றும் -பக்தைர் பாகவதஸ் ஸஹ -என்கிற திரளில் கொடு போக வேணும்

மணி வண்ணா – ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை,‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும்.‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே,இவன் படியைக் கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?

அடியேனை –உன் படி அறிந்த என்னை; என்றது,-நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிற இருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி.

மறுக்கேலே –பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ண வேண்டும்.-என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளி விசும்பிலே வாங்கி யருள வேண்டும். ‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.-அடியேனை -அசாதாரணமான -சேஷத்வ ஞானம் -இருந்தும் லீலா ரசம் அனுபவிக்கக் கடவதோ –

—————

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே
.–4-9-6-

அறப் பொருளை அறிந்து – தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து.
ஓரார் – அதனுடைய தன்மையிலே முதலிலே இழியார்கள்.
அன்றிக்கே, ‘பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்;-
ஓர்தல் – ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி.
அன்றிக்கே,
பொருளை -சொத்தை –அற அறிந்து -நன்றாக அறிந்து என்று கொண்டு – செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி.- நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல்.

வெறித் துவள முடியானே-இம் மக்கள் நடுவே இருக்கிற என்னை உன்னுடைய இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!வினையேனை –’ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப் பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை.-உனக்கு அடிமை அறக் கொண்டாய் –நான் நின்ற நிலைக்குச் சேராத படியான உன் திருவடிகளில் அடிமையை ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய்-இனி –அடிமை கொண்ட பின்பு.-என் ஆர் அமுதே –-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே!-கூய் அருளாயே – நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக் கொண்டருள வேண்டும்.

இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள்
கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’-என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’-

——————

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–
4-9-7-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்-நீயே-ஆயே -என்றது தாயே என்றதாய் -தாய் போலே பரிவனானவனே -மாதா பிதா பிராதா –நீயே ஆயே -என்று கூட்டவுமாம்
இந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமமாத்மகமாய் உள்ள சகல பதார்த்தங்களும் நீயே என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படியாக –சர்வம் கல்விதம் ப்ரஹ்மமற்று ஒருபொருளும் இன்றி-பரம் பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்- ஸ்வதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று,-ஈண்டு ‘இல்லை’ என்கிறது.-அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே-அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்

நோயும் பிணியும் –ஆதி வியாதிகள்.-ஆதி -மநோ வியாதி என்றவாறு –வியாதி தேக வியாதி

காட்டேல் –த்ருஷ்ட்டி விஷம் போலே காணில் முடிவன்.
இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகா தொழிய வேண்டும் என்கையாலே,
இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.
மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.-யாவையும் திருமால் திரு நாமமே கூவி –-இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் –
காட்டேல் –-இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு
ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,
பர ஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்;
இது தான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.–

———–

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–
4-9-8-

காட்டி –முன்பு தானே தான் ஆம் படி இவற்றை அடையத் தன் பக்கலிலே உப சம்ஹரித்து -சேர்த்துச்-சத்’ என்னும் நிலையினதான உலகத்தை, பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி.
காட்டி–என்ற சொற்போக்கால், ஐந்திர ஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது போதரும்.

ஈட்டி – திரட்டி,-திரி விருத் கரணத்தைச் சொன்னபடி-திரி விருத்கரணம் – பூமி தண்ணீர் நெருப்பு இவற்றைக் கூட்டுதல்.-திரிவிருத்கரணத்தைக் கூறியது, பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம்.

இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து –-பிரமன் முதலானோர் வன்னியம் செய்கிற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு.
கோட்டை என்பது, புறம்புள்ளாரால் புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே,-புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய் இருக்குமே அன்றோ?
அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது.
என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?-விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலே பெற வேண்டும்.

ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை;-ஒரு சர்வ சத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை.-அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ?’-என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.-

—————

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
.–4-9-9-

வேட்கை எல்லாம் விடுத்து –-எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?-உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?-உன் திரு வடியே சுமந்து உழல – புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை – யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி-என்னைச் சேர்த்துக் கொண்டாய்.-நான் கண்டேனே – இது கேட்டார் வாய்க் கேட்டு நான் சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.

—————

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே
.–4-9-10-

கீழ் பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் சொல்லப்பட்ட பேற்றினைப் பிரீதியின் மிகுதியாலே விட்டது இது; பற்றினது இது’ என்று விளக்கமாக அருளிச் செய்கிறார் இத் திருப் பாசுரத்தில்.

ஐங்கருவி கண்ட இன்பம் – உழக்காலே அளக்குமாறு போன்று அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான இந்திரியங்களாலே அனுபவிக்கப்பட்ட இவ்வுலக இன்பம். ஆத்துமாவிற்கு ஞானம் நித்திய தர்மமாய், அதுதான் விபுவாயிருக்கக் கூடியது;
இப்படி இருக்கச் செய்தேயும், கர்மம் காரணமாகக் குறைவு பட்டதாய், மனம் அடியாகப் புறப்பட்டு, புற இந்திரியங்கள் வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது?ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது.

ஒண் தொடியாள் திரு மகளும் நீயும் –-தொடி என்பது, முன்கை வளை.-அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை.-எப்பொழுதும் சர்வேசுவரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி இருப்பது இல்லையே அன்றோ?-சங்கு தங்கு முன்கை நங்கை’ என்னக் கடவதன்றோ?-ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது;
இப்படியிருக்கிற பிராட்டியும், அவள் தானுங்கூட ‘இறையும் அகலகில்லேன்’ என்றிருக்கிற நீயும்.

நீயுமே நிலா நிற்ப – இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்.-புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே;
நானயோர் வித்யதே பரம் -இவர்களைத் தவிர வேறு பொருள் இல்லை,’ என்னா நிற்க,
வாசல்கள் தோறும் ஈஸ்வரர்களாய் இருக்கை யன்றோ இங்கு? அது போல் அன்றிக்கே இருக்கை –நிலாவுகை -வர்த்திக்கை–ஆதலின், ‘நீயுமே நிலா நிற்ப’ என்கிறது.

நிலா நிற்பக் கண்ட சதிர், உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே
வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த நேர்பாடு.(நிலா நிற்ப -வர்த்திக்க இருக்க என்றபடி )

 ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்ய விபூதியில் அடியார்களுடன் இருக்கும் இருப்பைச் சொல்லியது ஆமோ?’ என்னில், அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ!’ என்று இவர் சொல்லுகையாலும், பக்தைர் பாகவத சஹ -‘நித்யர்களோடும் முத்தர்களோடுங்கூட’ என்று வேறு பிரமாணங்கள் உண்டாகையாலும் சொல்லத் தட்டு இல்லை’

கண்டு –-நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா விஷ்ணுவானவர்
நித்ய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே,-நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது,-பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும்
அபிமானத்திலே ஓர் உலகமாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி.

உன் திருவடியே அடைந்தேன் –அந்த நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும் என்று உன் திருவடிகளைக் கிட்டினேன். இது நான் உற்றது; கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.-அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில், அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது-ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ?-இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,-இவரை அடிமை கொள்ளுவது ஒரு தேச விசேஷமாகவே இருக்க வேண்டும் அன்றோ?-

இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்-கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-கலியன்-கை வளை- கைவல்யம் – மேகலை ஐஸ்வர்யம் -காண வில்லை கலியனும் –

————

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே
.–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை
நினைத்து ஏத்துகிறார்-திருவடியை – எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.-நாரணனை –கேவலம் ஸ்வாமியாய் இருக்குமளவே அன்றிக்கே, இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாத படி அன்பு உள்ளவனாய் இருப்பவனை.-கேசவனை – அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே, இவர்களோடே ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.-பரஞ்சுடரை – இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்துவத்தைச் சொன்ன படி.-திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் இதுவே அன்றோ?-செழுங்குருகூர்ச் சடகோபன் – திரு வயோத்தியையில் மண்பாடு தானே ஸ்ரீராம பத்தியைப் பிறப்பிக்குமாறு போலே, அவ் வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம்.

இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;-நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.-நீங்கள் உங்களுக்குமாய் இராமல், அடிசிற் பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.--சாயுஜ்யம் பிரதி பன்னாயா-என்றும் –யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்றும் சொல்லுகிறபடியே -இளைய பெருமாளைப் போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத் தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள்.-தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய் மொழி தானே,’

திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடிகளிலே வைத்து சொன்ன ஆயிரம் என்னுதல் – இவ் விசேஷணங்களை ஆயிரத்திலும் இட்டு நிர்வஹிப்பர்கள் பூர்வாச்சார்யர்கள் -பட்டர் அவ்வோ திருவாய்மொழியிலே இட்டு நிர்வஹிப்பர்-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –கிளரொளி இளைமை -2-10-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நம் தேர் மா மலைக்கே வேகமாக ஒட்டு-மண் முதல் -தாழ்வரையில் ஆழ்வார் இருக்க-கிளைவித் தலைமக்கள்-காவிய நாயகன் நம்மாழ்வார் மநோ ரதம் வேகமாக செல்ல பரமத பங்கம் -திவ்ய தேச கைங்கர்யம் -பாகவத உபதேசம் பண்ணப் பிரிய ஆழ்வார் வியசனம் அதிகரிக்க பழிச் சொல் வரும் முன் வேகமாகச் செல்லு-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி -கங்குலும் பகலும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்று அங்கேயே இருந்து அசையாமல் அருளிச் செய்கிறார் அன்றோ – குளிர் அருவி வேங்கடம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -முத்து ஒழுகு வரிசை போல் அருவி பாயும் வேங்கடம்-குறிஞ்சி – பிரிந்தவர் கூடும் இடம் மலையும் மலை சார்ந்த இடம்
குளிர் அருவிக்கு த்ருஷ்டாந்தம்- தேன் நவின்ற -விண் முதல் நாயகன் – ஸ்ரீ வைகுண்டநாதனின் நீண்ட கிரீடத்தில் சாத்தின முத்து வாசிகை -போல் அருவி கீழ் பட்ட இடம் தானே ஆழ்வார்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் செல்ல அங்கே உபதேசம் -இதன் விவரணம் அது
அங்கு செல்வதே கர்தவ்யம் -மலையே புகுவது பொருளே – பாகவத உத்தமர்கள் பாசுரம் இது

இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-
அவசாதம் மிக்கவாறே – போத யந்த பரஸ்பரம் -பண்ணி  இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –வினை முற்றி மீண்ட தலைமகன் –(ராவண வதம் செய்து முடித்து சீக்கிரம் மீண்ட பெருமாள் போல் ) பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல் த்வரித்து வருகிறானாய் இருக்கிறது –-தலைமகன் சாரதியைப் பார்த்துச் சொல்லுகிறான் – (தீர்ப்பாரை –தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை போல் இங்கும்

இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர் ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை பொருள் வயிற் பிரிந்து வினை முற்றி மீண்ட தலைமகன் தலை மகள் ஆற்றாமை நினைத்து பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல் அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே
– 50-தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி
—-20-எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக இங்கேயே இவ் வுடம்போடேயே கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் 
–இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய் அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்-ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே-இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது-அன்றிக்கே -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய் முடியைச் செலுத்துவோம் – –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை –ஒள்ளிய நுதலை உடைய இவளுடைய மாமை –ஒளி உண்டு -நிறத்தில் புகர்-அது பயப்பதற்க்கு முன்பே -அது விவர்ணம் ஆவதற்கு முன்பே –பிரிவாற்றாமையால் துடித்து இருக்க-ஓள் நுதல் உண்டோ என்னில்-தலைமகன் இருக்கும் பொழுது கண்ட இருப்புக்குச் சொல்லலாமே–ஒண்ணுதல் மாமை –பத்து மாசம் பெருமாளும் பிராட்டியும் பிரிந்தவோபாதி  இறே இவர்கள் பிரிவும் –பிரிந்த போன நாளைக்கு பாதேயம் இருக்கிறபடி –சந்த்ர காந்தாந நாம் ஸூப்ரூம-என்றார் இறே பெருமாள் – இவ்வழகு இழந்தால் ஆறி இருக்க ஒண்ணாது என்கையும்-(பலிதம்)-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் – த்வரித்துக் கொண்டு நம்முடைய தேரானது கிட்ட வேண்டும் – அவள் தன் வை வர்ண்யத்தாலே நமக்கு பழி இடுவதற்கு முன்பே -நீ த்வரையாலே
அப் பழியைத் துடைத்து தர வேணும் –(பகவத் த்வராயா நம போல் ஆக வேண்டுமே )-வலவ – இங்கும் சாரதி கையது போலே காணும் கார்யம் (அங்கும் பார்த்த சாரதி கையதுவே தானே )-கடா நின்று நண்ணுதல் வேண்டும் – நடத்தா நின்று கொண்டு நம் தேர் கிட்ட வேணும் –தேன்  நவின்ற இத்யாதி –
நடத்துகிற உனக்கும் அங்கே போகப் புக்கால் பிரயோஜனம் உண்டாம்படி காண்-தேசம் இருப்பது -என்கிறான்-தேன் நவின்ற மா மலைக்கே -என்னுதல்–தேனுண்டு —வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகிற அவற்றின் உடைய பாட்டேயாய் இருக்கிற-திருமலை என்னுதல்-அன்றிக்கே –
தேன் நவின்ற விண் முதல் நாயகன்-என்னுதல்-விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடியே தேனாக சொல்லப்பட்ட –விண் முதல் நாயகன் -என்னுதல் –(நித்ய விபூதி தொடக்கமான அனைத்துக்கும் நாயகன் )நீண் முடி இத்யாதி –பிரிந்த நாளில் ஸ்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு –திரு அபிஷேகம் –அதில் வெண் முத்து வாசிகை உண்டு-வெளுத்த முத்து ஒழுங்கு –அத் தன்மையதாய்-அதின் படியை உடைத்தாய் –திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று – இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –பர்வதத்துக்கு அக்நி  மத்தையை சாதியா நின்றால்- மகாஸநதிகள் வ்யாப்தி க்ரகன பூமியாய்–(பக்ஷம் பர்வதம் – சாத்யம் அக்னி -ஹேது புகை மடப்பள்ளி த்ருஷ்டாந்தம்) இருக்குமா போலே – இங்குற்ற சீலம் தரை காண ஒண்ணாதோ பாதியாய் இருக்கையாலே இவ்விடம் நிலம் அன்று இறே –சத்கார்ய வாதம் ஆகையாலே -இச் சீலம் அங்கேயும் உண்டு என்று பிரமாணங்கள் சொல்ல- விச்வசிக்கும் இத்தனை இறே –கண்ணால் கண்டு அனுபவிக்கலாவது இங்கே இறே –மண் முதல் சேர்வுற்று –பூமி அளவு வந்து கிட்டி-அருவி செய்யா நிற்கும்-மா மலைக்கே –வழியில் ஸ்ரமம் அடங்கலும் தீருகிறது இறே அங்கே புக்கவாறே –-குளிர் அருவி வேம்கடம் -இறே –விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்-மண் முதல் சேர் வுற்ற அருவிகள் ப்ரவஹியா நின்றுள்ள மாமலைக்கே விரைந்து நம் தேர் நண்ணுதல் வேண்டும் –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் நம்முடைய தேரானது சடக்கெனக் கிட்ட வேண்டும்–வலவ கடா கின்று-தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக–கடாவுக்கா இன்று என்று இன்று நடந்துக என்றுமாம்–தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில் வெளுத்த முத்து வாசிகை போலே–மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே நண்ணுதல் வேண்டும்-என்று அந்வயம்–இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்-தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –இவ் விடத்தில்
மா மலைக்கே –என்கிற இடம் ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமைக்கு பொருந்தி இருக்குமே )

பொருள் ஈட்டி வரும் நாயகன் தேர் பாகனை விரைந்து தேரை நடத்த கட்டளை இடுகிறான்-ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் வலவ –-ஆகையால் விரைந்து கடாக -என்று அந்வயிப்பது –பசலை நிறம் படர்ந்து விட்டால் அது தன்னாலும் மீட்க ஒண்ணாதே —
வலவ கடாக இன்று -என்றும் கடாகின்றி நண்ணுதல் வேண்டும் -என்றுமாம்-திரு வேங்கட மலையை நோக்கி கடாக வேண்டும் –-இத்தால் பராங்குச நாயகி திரு வேங்கடத்தில் ஆழ்ந்தமை காட்டும் –கீழே -8- பாட்டில் இது எல்லாம் அறிந்தோம் மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் காட்டாது திண்ணனவே -பொருள் ஈட்டச் சென்றது -திரு வேங்கட மலைக்கு என்று அருளிச் செய்தார்–இதில் திரும்பி வந்து அங்கு நோக்கி செல்வதாக சொல்வதில் முரண் இல்லை-அழகிய மணவாளர் ஜீயர் -இவ்விடத்தில் மா மலைக்கே என்கிற இடம் ஆழ்வாருக்கு அணித்தான- தெற்குத் திருமலை ஆகவுமாம்-திரு மாலிருஞ்சோலையை சொன்னபடி–தேன் நவின்ற-விண் முதல் நாயகன் நீண் முடி –தேன் நவின்ற முடி என்று அந்வயம் –இயற்கையிலே பரிமளம் மிக்க திருக் குழல் -செண்பக மல்லிகை இத்யாதி-நல் மலர்களை எப்பொழுதும் தரித்து உள்ளதாகையாலும் –
மிக்க போக்யத்தையால் எம்பெருமானே தேன் -திருவரங்கத்தே வளரும் தேன் —-அன்றிக்கே தேன் நவின்ற மா மலைக்கே -என்று திரு மலைக்கு என்றுமாம்–தேன் -மதுவும் வண்டும்-தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடம் -என்னக் கடவது இறே–விண் முதல் நாயகன்-விண்ணுலகத்துக்கு முதன்மையான நாயகன் –விண் முதலிய உலகங்களுக்கு எல்லாம் நாயகன் என்றுமாம்-திருமுடி முதல் திருவடி வரை தொங்கும் முத்து மாலை வெள்ளருவிக்கு வாய்த்த உவமை-மா மலைக்கு நண்ணுதல் வேண்டும் -கூடும் இடம் குறிஞ்சி -குறிஞ்சி நிலத்து தலைமகள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே-போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான் வினை முற்றி மீண்ட தலைமகன் பதினாலு ஆண்டும் கூடப்போன-நம் அவ் வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு நம் அவ் வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று-அப் பெருமலை எல்லாம் அம் மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று என்று அந்வயம் –

ஸ்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –-திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு – திரு அருவிகளின் நடுவே இருப்பதைக் கண்டு பெருமாளை கை பிடித்த பின் -பிராட்டி மிதிலையை நினையாதால் போலே – திரு நகரியையும் மறந்து ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை அனுபவிக்க வேணும் என்று அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியைச் சொல்லுகிறது ஆழ்வார் தீர்த்தம் இன்றும் ஆழ்வார் நித்ய வாசம் சாதித்து அருளுகிறார் அன்றோ

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் ஆற்றாமை உணர்ந்து தேசாந்திர ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைகின்றார்கள் –
எம்பெருமானையும் எம்பெருமான் அடியாரையும் பிரிதலாகிய துயரை ஆற்றி ஆழ்வாரைத் தேற்ற மநோ ரதம் கொண்டு மநோ ரதத்தை சொல்ல வல்ல -தம் நெஞ்சை தூண்டுகிறார்கள்–ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை--திவ்யமான ஊர்த்தவ புண்டரத்தால் விளங்கும் நெற்றி உடைய ஆழ்வார் இயற்க்கை வண்ணம் கெடாத படி மலை -ஆழ்வார் எழுந்து அருளும் மேலான இடம் –உயர்த்தி தோன்ற மா மலை என்கிறார் –

தாத்பர்யம்--இருளின் நீட்சியால் தளர்ந்த ஆழ்வாரை ஆஸ்வசிப்பிக்கைக்காக பாகவதர்கள் விரைந்து மநோ ரதம் செலுத்திய படியை நாயகியைப் பிரிந்து சத்ரு நிரசனம் பண்ணி திரும்பிய நாயகன் சாரதி இடம் விரைந்து செல்ல
ஓ சாரதியே நான் நாயகியைப் பிரிந்து பல ஆண்டுகள் (சீதாப் பிராட்டியைப் பிரிந்து பத்து மாதங்கள் –
பரதாழ்வானைப் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் –-தேவகிப் பிராட்டியைப் பிரிந்து பத்து ஆண்டுகள் பிரிவு உண்டே -நெற்றி அழகி கொண்ட நாயகி பிரிவால் மேனி பசலை – விவரணம் அடைந்து உள்ளதே
உன்னாலே தான் இது என்று அனைவரும் பழி சொல்லுவார் –லோக அபவாதம் வாராத படி
ஆதி ராஜ்ய ஸூசகமாக திரு அபிஷேகத்தில் இழைத்த முத்து மாலை போல் தெளிந்த மலை அருவிகள் பாயும் திரு வேங்கடத்தில் – அவள் இருக்கும் திவ்ய தேசம் குறித்து தேரை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறும் பாசுரம் –

2-10-கிளரொளி பிரவேசம்

கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )

தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம் –கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம் –பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –

முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம் –வ்யூஹ –அஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )

கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –

முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே
 –2-10-1-

திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் –என்கிறார் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -திருமலைக்கு சென்றால் தானே கைங்கர்யம் கிட்டும்-இளமைக்கு கிளர் ஒளி -ஞானம் வளர யோக்யதை உண்டே –பால்யம் -யௌவன ஆரம்ப ரூபமான இளமை-கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ-கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்-அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பதுசார்வது சதிரே —திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்-அல்லாதவை எல்லாம் இளிம்பு-

—————–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே
 –2-10-2-

திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் –
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -அன்றிக்கே (திருப்பதியை யாதல் )-சில கோசங்களில்-கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்பதியது வேத்தி எழுவது பயனே
-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்-ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்-
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி –ஏத்தி -உக்தி வ்ருத்தி விசேஷம் –

———

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே 
–2-10-3-

உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ –திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் -திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு -பேராக-பேறாக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -மாமான் மகளே-என்னுமா போலே-பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்-செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் –பிராப்யம் -புயல் மழை வண்ணர்பிராபகம் -புரிந்துறை-அவன் எண்ணமே பிராபகம்-பயனான விஷயம் தான் இருக்கிறபடி-

—————–

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே
 –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்-அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் -கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி

ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்-புயல் மழை வண்ணர் -என்றது இறே-மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –

———-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே
 –2-10-5-

ரஷண உத்யுக்தமான திரு ஆழி உடையவன் வர்த்திக்கிறவன் -புற மலை கிட்டுவதே உபாயம்கிறி உபாயம் –ஆளவந்தார் நிர்வாகம் -கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-–அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –

—————

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே 
–2-10-6-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன்–அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம்-மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -போம் வழியை நினைக்கவே நலம் -புருஷார்த்தம் -இந்த வழிக்குள் அடியேன் உட்பட வேண்டும் என்ற நினைவே வேண்டியது –

————-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே 
–2-10-7-

திருமலையை சென்று கிட்டி -வலமுறை-நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –பகவத் விஸ்லேஷம் தான் ஆழ்வார்களுக்கு நரகம் –நெஞ்சே நகு-பகவத் விஸ்லேஷ ஜனித துக்கம் இங்கே தானே -சம்சாரம்–நின் பிரிவினும் சுடுமோ காடு-மலமறு மதி சேர் மாலிரும் சோலைதிருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தைவலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே சேஷ சேஷி பாவமாகிற முறைப் பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் -இதுவே பரம ப்ராப்யம்–-மருவுதல் வலம்- என்னுதல்- வரம்-என்னுதல் பலவத்தரம் என்னுதல்- ஸ்ரேஷ்டம் என்னுதல் –

——–

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே 
–2-10-8-

சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்-

கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்-இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்-இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது-அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –

பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் – அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் – உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்வாழ் முதல் -தாரகம் -போஷகம் –வளர் முதல் -போக்யம் மகிழ் முதல் –

———-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே 
–2-10-9-

மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்-இள வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்-அங்கு நிற்கிறது –நந்தா விளக்கின் சுடரே– சோலை மலைக் களிறு இறேஉலகம் ஏத்தும் –தென்னானை இறே-

———–

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே
 –2-10-10-

பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்

களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்-சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால் காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை-

வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை-பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை – மாதென்று மார்த்தவமாய் ஸூகுமாரமான மயில் என்றுமாம் அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை

போதவிழ் மலையே புகுவது பொருளே-கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள்-

—————–

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
 –2-10-11-

தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு-இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை-மருள் இருந்து கழிந்த ஆழ்வார் போல் இல்லாமல்
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும்படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது –
தூ மணி – துவளில் மா மணி போலே -பந்த மோஷ ஹேது அவனது -சாதாரண ஸ்வ தந்த்ரயம்--உஜ்ஜீவன ஏக ஹேது –அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்-அது செய்யும் இடத்தில்-முடித்தே-சம்சார பந்தத்தை வாசனையோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்-கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –ஊரெல்லாம் துஞ்சி -5-4-

February 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

ஒண் நுதலே –உடையவளே-மண்ணுக்கு பிருத்வி போன்ற சிறந்த நெற்றி யுடைய-தலை மகள் தோழியைக் கூறுவதாகவும் தோழி தலை மகளைக் கூறுவதாகவும் கொள்ளலாம்- –
இந்த இரவு போல் -விரிந்து கொண்டே போகும் இருள் -முன்பு கேட்டதும் கண்டதும் அறிந்ததும் இல்லையே-ஒண் நுதலாள் -என்று கொண்டு-பூமி கரையாமல் இருந்தது போல் பிருத்விக்கு நிகரான தோழி என்றும்-பின்னை கொல் இத்யாதியால் தலை மகள் ப்ரீதி அபிமானம் ரக்ஷணம் -இவற்றை அவளைப் போலவே இவளுக்கும் உண்டே-பாய் இருள் -பாய்ந்த இருள் -பாய்கின்ற இருள் – பாயும் இருள் –-கடாயா -தாண்டுதல் -அளந்த -நடத்தின- – ரஷித்த–ஊரெல்லாம் துஞ்சி-5-4- -ஆவி காப்பார் இனி யார் -இரவு வியசனம் இதுக்கு மடலூர்த ஒருமிக்க இரவு வந்ததால் -ஓர் நீள் இரவு போல் இங்கு பாய் இருள் – சங்கீதம் கூட்டி அங்கு இதே இருளுக்கு ஆற்றாமைக்கு சொல்லிக் கொள்ளும் துறை

சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று  இலனோ -என்று (நம் மேலொருங்கே பிறழ வைத்தார் என்றும் என்னைக் கொண்டு தன்னைத் தான் பாடி ) ஆறி இருந்தார் முன்பு –
காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும்
ஆற்றாமை ஒரு பிராட்டி திசையை விளைத்தது –கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் தான் ராத்திரி வ்யசனத்தாலே நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் –
அன்றிக்கே-தோழி வார்த்தை ஆதல் –

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர் தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்-பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்-முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு இது காதாசித்கமுமாய் அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது – கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல் தோழி வார்த்தை யாதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே
-49 –தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ
–44-விஸ்லேஷ வ்யசனம் ஒரு மடை செய்ய காலமும் விடியாது ஒழிய
மடல் எடுக்கை போய் –முடிகை தேட்டமான அளவிலே அதுவும் கிடையாமையால் இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள்  ஒருத்தி காணும் இவள் தான் –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் அநேகம் பிரளயங்களை நீஞ்சி கரை கண்டால் போல் – இதுக்கு முன்பு அநேக ராத்திரி -வியசனங்களும் அனுபவித்து –அவற்றுக்கு ஒரு அவசானமும் (முடிவும் )கண்டு போந்தோம் இறே-வீங்கிருள் காண்டும் – முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டு போந்தோம் –இப்பாயிருள் இத்யாதி –அவ்வளர்த்தியோடே இப்படி பரந்த  இருள் போலே இருப்பதொன்று-கண்டு அறியோம் – இவ் விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது –இவ் விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –நம்மோடு சஹோதரிகளாய் ராத்திரி வியசனதுக்கு உடல் கொடுத்து போந்த –ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போலே இருப்பார் தான் இப்படி இருப்பது ஓன்று அனுபவித்து போந்ததாக கேட்டு அறிவதும் இல்லை –முன்பு சம்சாரயாய் நின்ற நிலையில் கண்டு அனுபவித்ததும் அநேகம் போந்தது –இவ் விசேஷ கடாஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே-

(மூன்று வித ராத்திரி-சம்சாரி யாய் இருந்த நிலையில்-மதிநலம் அருளினை பின்பு-விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்பு-கண்டதும் இல்லை-கேட்டதும் இல்லை-அறிவதும் இல்லை பகவத் அனுபவ அலாப-இருள் அன்ன மேனியைக் கொண்டு பண்ணினான் )

காள வண்ணன் –-இவ் விருள் பாதகமாம்படி பண்ணிற்று ஓர் இருளை இட்டு காணும் – இருளன்ன மா மேனியைக் காட்டி யாயிற்று-போக யோக்யமான காலத்தில் -அவ்விருளோடு போலியான வடிவைக் கொண்டு –வந்து அணையாமை ஆயிற்று இது பாதகமாம் ஆகைக்கு  அடி –வண்டுந்துழாய் – ஒப்பனையால் வந்த அழகைச் சொல்லுகிறது –மது சூதனன் – இவற்றால் வந்த போக்யதையை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியை அம் மதுவை போக்கினால் போல் போக்குமவன் –தாமோதரன்
உகப்பார்க்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருக்கும் அவன் –உண்டும் இத்யாதி –உண்பது-உமிழ்வதாய் கொண்டு நடத்துகிற –அவனுக்கு ரஷ்யமாம் இடத்து பூமியோடு நேர் ஒத்த –

இது தலைமகள் வார்த்தை ஆன போது – பூமி பிரளயத்தில் கரைந்து போகாதே கிடந்தவோபாதி –
இந்த ராத்திரி வியசனத்தை தப்பி என் சத்தை கிடந்தது உன் சந்நிதி ஆகை இறே –தோழி வார்த்தை யான போது--தன் உடைமையை அழியக் கொடுப்பான் ஒருவன் அன்று காண்  அவன் –
தான் படாதது பட்டு நோக்கும் அவன் காண்-பிரளயத்தில் பூமியை அழிய விட்டு இராதோபாதி உன்னை ராத்திரி வியசனத்திலே விட்டு இரான் காண்–ஒண் நுதலே –அவன் உடைமை என்கைக்கு ஒரு திருஷ்டாந்தம் சொன்னோம் இத்தனை அன்றோ –உனக்கு ஒப்போ அம் மண் – அவனுக்காகர்ஷமான வடிவு அழகு உள்ளது உனக்கு அன்றோ –

காள வண்ணம் -வண்டுக்கும் எம்பெருமானுக்கு விசேஷணம் –
மண்ணேர் அன்ன -ஒண் நுதலுக்கும் ஒண் நுதலாளுக்கும் விசேஷணம்-பூமிப் பிராட்டி போன்ற சிறந்தவள்-உண்ணாது கிடந்தது ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியவரோடு இத்திரு–
மண்ணேர் அன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு —ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை -123-
-கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்திரி வியாசனத்தாலே தான் நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் – தோழி வார்த்தை யாதல் -நம்பிள்ளை ஈட்டில் அவதாரிகை –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-முற் காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்–இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்-இந்தப் பரந்த இருள் போலே நாங்கள் கண்டதுவும் இல்லை அறிவதும் இல்லை கேட்பதுவும் இல்லை–காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்-கறுத்த வண்ணத்தை யுடையவனாய்-வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால் ஸர்வ சேஷியானவன்(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ ) –காள வண்ண வண்டு -என்று-வண்டின் நிறம் ஆகவுமாம்–மதுசூதனன்-மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்–தாமோதரன்-ஆஸ்ரித பவ்யனானவன்–உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே-பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்-அநந்தரத்திலே உமிழ்ந்தும்-ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே-மண்ணேர் அன்ன-நேர் அழகு-அன்ன -நிகரானகடாய -என்று-நடத்துதலாய் நிர்வஹிக்கை-அதாவது ரஷிக்கை–அன்றியே-கடாய் என்று கடத்தலாய் அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –இத்தால்-முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே ஸ்ரவணத்துக்கும் மனனத்துக்கும் அபரோஷிக்கைக்கும் விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –காள
-என்று தொடங்கி-மண்ணேர் அன்ன ஒண் நுதலே –என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண ) போக்யத்தையும் -(வண்டுந்துழாய் ) சேஷித்வத்தையும் -(பெருமான் ) விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் ) சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன் ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி–ஒள்ளிய நுதலுக்கு-மண்ணேர் ஒத்தது என்கையாலே-ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம் நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான் மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே-வீங்கிருள் காண்டும்-முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்–இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்-இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது – இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்-நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த – ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை – முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள் ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன இவ் விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே-மே த்ருஷ்டிபும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு-மே ராமம்-இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று-அத்யாபி ந நிவர்த்ததே-கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே-ந த்வா பஸ்யாமி-பெருமாளைக் காணப் பெறா விட்டால்-அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்-கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே–நத்வா பஸ்யாமி -என்கையாலே–போக்குமவன்-தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்-அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி-கடாய-கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

ஸ்வாபதேசம் –
எம்பெருமான் பல வகையாலும் பாது காத்த லீலா விபூதியை ஒரு புடை ஒப்புமை சொல்லத் தக்க
ஞான பிறப்பை திரு முகத்தில் விளங்கப் பெற்ற ஆழ்வார் -என்றும் திரு மண் காப்பைத் தரிக்க தகுந்த திரு நெற்றி உடையவர் -என்றுமாம் –வியாமோஹ அதிசயத்தை வியந்து கண்டும் இல்லோம் கேட்பதும் இல்லோம் அறிவதும் இல்லோம் -என்று பாகவதர்கள் சொல்வதாக கொள்ள வேண்டும் –

தாத்பர்யம்-சர்வேஸ்வரன் தன் இடத்தில் விசேஷ கடாக்ஷம் அருளின வற்றை அனுசந்தித்த பின்பும்
சம்சாரத்தில் இருப்பு அத்யந்த அஸஹ்யமாய் பிரிய விரஹ சின்னையானவள் பிராட்டி நிலையை அடைந்து தோழியிடம் நாயகன் பிரிந்த பின்பு பாய் இருளாய் அநேகம் வடிவு கொண்டு அநேக ராத்திரி முன்பு பார்ததது போல் இல்லாமல் இங்கே இவ் விபூதி அடங்கிலும் பரவி இது போல் முன்பு பார்த்தும் கேட்டும் அறிந்தும் இல்லையாய் இப்படி அதி மாத்ர சங்கட சமயத்திலும் மது பானம் பண்ணித் திரியும் வண்டுகள் மொய்த்த திருத்துழாய் சூடிய பரம போக்யனாய்-விரோதி நிரசன சீலனாய்-ஆஸ்ரித ஸுலப்ய சீலனாய்-அத்யந்த ஸூலபனாய் சர்வேஸ்வரன் பிரளயம் முதலிய ஆபத்துகளிலும்
அளந்த -மஹாபலி அபிமானத்தில் இருந்து ரக்ஷித்து அருளியும்-உண்டும் உமிழ்ந்தும் அளந்தும் கடாவி ரக்ஷித்து அருளியவன் வாராமல் இருக்க-தோழி உன்னுடைய சந்நிதான பலத்தால் ஜீவித்து இருந்தேன்
அழகிய நுதலை உடைய தோழீ உன்னைக் காணாமல் இருந்தால்-ஜீவித்ததே இருக்க மாட்டேனே
-என்கிறாள்

5-4-ஊரெல்லாம் துஞ்சி -ப்ரவேஸம்

நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்”-5-3-10- என்று பெரியதொரு மனோ வேக ரசமாய் அன்றோ மேலே சென்றது,
மடல் ஊரப் பெறுகை தான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம் படி பலக் குறைவு அதிகரித்தது;
இனித் தான், மடல் ஊரும் போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுத வேணுமே,
அதற்கு நேரம் இல்லாதபடி “ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல்,
இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அது தான் மாலை நேரம் அளவு அன்றிக்கே
சரா சரங்கள் முற்றும் அடங்கிய நடு இரவாய், பழி சொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற,
எல்லாரும் ஒரு சேர உறங்குகையாலே ஓர் உசாத் துணையும் இன்றிக்கே, இவ் வளவிலே, பிரளய ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச்
செல்லுகிறது இத் திருவாய்மொழி.

அனுபவ யோக்யமான காலம் -இரவில் -சந்நிஹிதமாக இருக்கச் செய்தேயும் -அவன் அசந்நிஹிதன் –
பிரவ்ருத்திக்கு ஷமர் இல்லாமல்
அவசன்னராய் விளம்பம் அசஹ்யமாக ரஷிக்கும் அவன் குணங்களைச் சொல்லி கூப்பிடுகிறார் –
ஆற்றாமையால் இரவு நெடுமைக்கு இரங்கி –
சூர்யன் இந்த பெண் ஆற்றாமையை பார்க்க முடியாதே என்று இருக்க —
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்-

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் -தம்முடைய அனுபவ அபி நிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு ஸ்வரூப அநநு ரூபமான
ஸ்வ பிரவ்ருத்தியாலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த இவர்
அனுபவ யோக்கியமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அசன்னிஹிதனாய் இருக்கையாலே அத்யந்த ஆர்த்தராய் ஒரு ப்ரவ்ருத்தி ஷமர் அல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப ஷமர் அல்லாமையாலே இவ்வவஸ்தையிலே அவன் முகம் காட்டி ரஷிக்கைக்கு உடலான
அகில ஜகத் ரக்ஷண அர்த்த பிரவ்ருத்தியையும்
ஆபி ரூப்ய ப்ரகாசகமான பவ்யதையையும்
அநிஷ்ட நிராசகத்வத்தையும்
அபீஷ்ட லாபத்தாலே புதுக் கணித்த அவயவ சோபாதியால் யுண்டான அத்யந்த தீப்தியையும்
உபகாரக விக்ரஹ யோகத்தையும்
ஸ்த்திரை பரிகரகண குணவத்தையும்
ஆகாங்க்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஆகாரத்தையும்
அதிசயித ஐஸ்வர்யத்தையும்
அநந்யார்ஹம் ஆக்கும் அபதான விசேஷத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான ஈஸ்வரன் இவ்வஸ்தையில் வந்து ஸம்ஸ்லேஷித்து ரஷிக்கிறலன் –
முடிகைக்கும் யோக்யதை இல்லாதபடி பராதீனமான இவ்வாத்மாவை ரஷிக்கும் விரகு என் என்று கால விளம்பம் பொறாமல்
ஆர்த்தராய்க் கூப்பிட்ட பிரகாரத்தை அபிமத நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே
.–5-4-1-

ஊர் எல்லாம் துஞ்சி– ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம் மடல் ஊர்வது என்கிறாள்.-சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்.-திருவடி செல்லுகிற ஷணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழி சொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.
அன்றிக்கே,-இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக் கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒரு சேர உறங்கின படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத் துணையாவாரோடு வாசி அற,
எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள் என்கை.
இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது.
ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பே யுள்ள உலகத்திலே சென்றாகிலும் உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில்,-உலகு எல்லாம் நள் இருளாய் 
பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று.

பண்டும் இராத்திரி நெடுகா நிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று.-மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு,
அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையா யிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் உண்டு போலே காணும்; பிரளய ஆபத்து அங்கு -தம்மால் வந்த ஆபத்து இங்கு –திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவன்- உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி.
ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய ஸூரிகள் படியும் இல்லை யாயிற்று,
சம்சாரிகள் படியும் இல்லை யாயிற்றே நமக்கு! -தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்த படியாலே ‘நம்’ என்கிறாள். த்வரை விளைத்த உபகாரத்வம் தோன்ற வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா,-உடம்போடே அணைய வேண்டா,
வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ.–

ஆவி காப்பார் ஆர் – பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ?-“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ”-9-9- என்கிறபடியே,
இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவு படுகிற தோழி காக்கவோ,-ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ,-பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ?ரக்ஷகனானவன் வந்திலன்,-எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.-

—————

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.
–5-4-2-

இருள் அன்ன மா மேனி அன்றோ. கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ.-என் கண்ணன்–கம்சன் காவலாக வைத்த தீயோர் கண் படாதபடி இருளிலே வந்து உதவினவன்.-நள்ளிருட் கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ.-கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீ தன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?-“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் 

நீயும் பாங்கு அல்லையே– ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ?-ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ-ஸ்வரூபத்தால் ஸ்வதந்த்ரன் பிரணயித்தவத்தால் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம்-பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும்.–என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ.
ஸ்வரத்தால் நீயும் கூட பங்கு இல்லையே என்று சொல்ல வேண்டும் –ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.-பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

————–

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே
.–5-4-3-

முதலிலே நெடிதான இரவானது, அதற்கு மேலே-அடி காண ஒண்ணாத படியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இரா நின்றது.-சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களை யுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே
சிறு பேர் தவிர்ந்து ‘சோழக் கோனார்’, ‘தொண்டை மானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று,-இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரை யுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்.-அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லை யாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

அவனது சார்ங்கம் என்னளவிற் கண்டிலேன்.-பக்ஷபாதம் -அன்பு -சார்ங்கம் -சாடு –காகுத்தன் வாரானால்-முடி சூடிய அரச புத்திரர் அல்லாதார் தாம் தவிருகிறார்கள்,
முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்?-ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே!-பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று-பொருமவனும் வருகின்றிலன்-

செற்றார் -திறல் அழிய -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —
தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –-1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –

வல் வினையேன்--முடிந்து போதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாத படியான பாவத்தைச் செய்தேன். என்றது,-பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி.-ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம், முடிந்து போதல் தேட்டமான போது அரிதாம்,-ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமா மித்தனை அன்றோ.-புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -விநாசத்துக்கு ஹேதுவான பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப் பொழுது-பெண் பிறந்தே – பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.-பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்-பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:-ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.-அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வதந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே 

‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;-அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும் பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;-பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,-எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;-தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –-நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.-“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள், இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து, அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்-

————–

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?
–5-4-4-

ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தை யுடையவனும் வாராதே மறைந்தான்.-ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ,
இக் கொடுமை என் கண்களால் காணப் போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்கிறாள்.-அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள்.
வாரானால்--இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள்.-இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமான போது, பண்டு என்னோடே கலந்ததனாலே-தன் நிறம் பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக.

வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது.-‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. -எண்ணுவதற்கு அரியதான – பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம் தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே.

சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் – மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும்.-“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள் தாம். அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம்,-துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது,-மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று;
ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்ன படியேயாம். பிரிவு நிலையில் நினைவு தான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ;
“கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்”
“காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக் கடவதன்றோ.

என்னையே – இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள்.-நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகா நின்றார்களே அன்றோ,-சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, “தியானிக்கக் கடவன்” என்ற நினைவு-தன்னையே விதியா நின்றதே அன்றோ;-அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

————-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே
.–5-4-5-

“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும்.-அவன் வருகின்றிலன்,
இது போகிறதில்லை.-நான் காரியத்திலே முடிந்தேனா யிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப் பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஹேதுவானபடி.-அடியுடைய பெயர் -பகவத் கடாஷம் -உடையவர் -சடாரி என்றுமாம் –-ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே.
இதனுடைய அடி யுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.
பேர் என்னை மாயாதால் –-பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்ற படி

பின் நின்று – நான் முடியச் செய்தேயும் இப் பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.-வருகிற போது ஒரு சேர வந்தால், போகிற போதும் ஒரு சேரப் போக வேண்டாவோ.-முற்பட வந்தார்க்கு முற்படப் போக வேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?-நாமம் ரூபத்துக்கு முற்பட வந்தும் பிற்பட போக வில்லையே -என்கிறார்-

—————-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?
–5-4-6-

பின் நின்ற காதல் நோய் –புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது.
இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.-நெஞ்சம் பெரிது அடும் 
நெஞ்சினை மிகவும் நோவு படுத்தா நின்றது.-நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;-அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று-இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று – காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக் கொண்டு வந்தாற் போலே இரா நின்றது.
நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்து கொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.-எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று இத் தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட் கண்ணினைக் காதல் மறையா நின்றது,-கட் கண்ணை இரவு மறைத்தது.

போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு,
போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி.-நிவர்த்தகம் சக்கரம் நிவர்த்தத்தை அந்தகாரம் அழிப்பவன்–பிரகாச த்ரவ்யம் -இருளை கூட்டி வந்ததே-இங்குச் சங்கல்பம் அழிய வேண்டா; வருவதாக நினைக்க அமையும்.

இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன்,
வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக் கொண்டு நின்று வழக்குப் பேசா நின்றதாயிற்று ஆத்ம வஸ்து.-இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை,-இச் சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்-‘பிரிவிலும் முடியாத என் உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று. இவ்விடத்தே-சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.-

—————–

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
–5-4-7-

இரவுப் பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண் மூடாதவர்கள் ஆகையாலே உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.-எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு அஞ்சின படியாலே அன்றோ-‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.

காப்பார் ஆர் இவ்விடத்து–‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு,-‘அம்ம’ என்று அப்புத் தட்டி –(துடை தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்) -இருந்தவளே அன்றோ, -இப்போது காப்பார் ஆர்’ என்கிறாள்;-பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வ ரக்ஷகத்வம் ஓர் அச்சாய் அன்றோ இருப்பது.(அச்சிலே அந்தர்ப் பூதமான அகாரத்தாலே சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர் பொருள்-ஏக ரூபமாய் என்பது வேறும் ஒரு பொருள்.)-இவர் அல்லிலே (ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம
ஸ்வரூபத்தை நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.)கிடந்து நோவு படுகிறாரே அன்றோ. அவன் உண்டாயிருக்க, முதலிலே(அகாரம் முதலில்) ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.

அகார வாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
வேண்டியவளாக இருக்க, மகார வாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து, ‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று-நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.-அம்ம,-அ ம காரம் இரண்டும் காட்டி –

இருளைப் போக்கும் போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற் போன்று இருக்கின்ற
திவ்விய ஆயுதங்களை யுடையவன் வருகின்றிலன்.-அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.-பண்டே இவள் கை கண்டு வைத்தமை யன்றோ இவை தாம்.-இருளோடே சீறு பாறு என்று போக்குவான் ஒருவனும்,
இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.

தெய்வங்காள் என் செய்கேனோ
1-தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியே உறங்காதவர்கள்;-இவளோ எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்கு மேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள்.
2-தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள்,-சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக் காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள்.
3-“ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய் மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப் படுகிறதே அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற் போலே இருக்கிறது காணும்.-

———-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே
.–5-4-8-

ஓர் இரவு ஏழ் ஊழியாய் – கீழே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியா நின்றது.
சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற் போன்று,
இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளா நின்றது என்றபடி.

எனது ஆவி மெலிவிக்கும் – மோர்க் குழம்பு கொடுத்துத் தேற்றி விடு நகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி நலியா நின்றது. என்றது, போன உயிரை மீளக் கொடுத்து நலியா நின்றது என்றபடி.

கை வந்த சக்கரத்து–இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.-கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி

கை வந்த சக்கரத்து என் கண்ணன்-ஸ்ரீ பீஷ்மரைத் தொடருகிற போது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி.-ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது பொருத படியால் அருச்சுனன் இளைத்தான்,-அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான்,
தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான்.-ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

வெம் சுடரில் தான் அடுமே – வெவ்விய சுடரைக் காட்டிலும் அடும் என்னுதல்.
சுடரைப் போன்று நலியா நின்றது என்னுதல்.-உலகத்திலே உள்ள நெருப்பைக் காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ,-நரக அக்நியைக் காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.-

————-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே
.–5-4-9–

சூரிய மண்டலத்திலே எழுந்தருளி யிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது,
சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.ஞான ஸ்வரூபன் -இவனுக்கு ஞானம் கொடுத்து ஆந்தரமான அந்தகாரம் போக்குவானே –

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது, உருகிற்றாய் தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது,-தரிக்கவும் ஒட்டாது,-முடிய உருகினபடியே நிற்குமித்தனை.-இன்னம் ஒரு கால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது,-அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

——–

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே
.–5-4-10-

எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது,
சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழா நின்றது. யாரைப் போன்று எனின்,நின்று உருகுகின்றேனே போலே –-கண் கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள்.

பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது,
வரையாதே எல்லாரையும் ஒரு சேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப்
போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ-ஜீவித்திருக்கைக்குக் காரணம், அதுவும் அவனுக்கு, புழுக் குறியிட்டது எழுத்தானாற் போன்று-எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று,-அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்.-லோகத்துக்கு உபகாரகன் -நானும் லோகத்தில் ஒருத்தி -பெருக்காறு போலே அது ஒரு கால் –நடந்து அளந்து காட்டிய சேஷ்டிதம் வாராமையே ஸ்வ பாவம் என்று சொல்லவும் ஆள் இல்லையே –அன்னையர் தோழியர் முன்பு சொல்லி இங்கே உலகம் அனைத்தையும் கடிந்து கொள்கிறார் பிரிந்தவனோடு ஒத்ததீ –-ஒ – வையம் -அளந்த எம்பெருமான் வரவில்லையே

————-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?
–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,-அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.

இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ- இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
“பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள்.-இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரம பதம் ஆகையாலே-வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில், பகவத் விஷயத்தில் மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்று- “நீள் இரவாய் நீண்டதால்”, “ஒண் சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –