ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-அதாவது-பாங்கன் -தலைமகனின் தோழன் தலைமகள் இடம் இவ்வளவு ஈடுபாடு கூடாது என்று சொல்ல-அத்தை மறுத்துப் பேசுகிறான் –கழறலரே-இடித்துச் சொல்ல மாட்டார்களே -என்று மருத்துச் சொல்லும் பாசுரம்-அவளது அழகைக் கண்டவர்கள் -ஆத்ம தேஹ குணங்கள் -ஈடுபட்டவர்கள் –-அத்தைத் தாண்டி பெருமாள் இடம் கூட வர மாட்டார்களே-அந்த அழகு உனக்குத் தெரியாமல் பேசுகிறாய் என்று மருத்துக் கூறுவதால்-கிளைவித் தலைமகன் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரம்–குண்டலம் -காது ஸ்ரவணம்-ஹ்ருத் புண்டரீகம் -நினைவு -மனனம்
வேல் விழிக்கின்ற -கண்கள் -தர்சனம் -காட்சி-மூன்றும் இப்பாசுரத்தில் உண்டே-நம்மாழ்வார் இடம் ஈடுபட்டுப் பரவசப்பட்டு இருப்பதை -அத்தைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது
முடியானே- -இதன் விவரணம்-ஆழ் கடலைக் கடைந்தாய் அங்கும் உண்டு-ஒவ்வொன்றின் அவயவமும் தனது வியாபாரத்துடன் நிற்காமல் மற்ற அவயவங்கள் செயலை விரும்பும் -பதிகம்-கட் செவி சஷுஸ் ஸ்ரவ -ஆதி சேஷனுக்கு கொடுத்த வைபவம் தனக்கும் வேண்டும் என்று பிரார்த்தனை–புலக் குண்டலம் புலப்படுவது கண்ணுக்குத் தெரிகிறதா -புரிகிறதா -இரண்டும் உண்டே–காதாலே கேட்டுக் கேட்டு -அறிவது -புண்டரீகத்த -தாமரை முகம் இங்கு -கண்ணுக்கும் மூக்கும் வேறே சொற்கள் உண்டே
போர் கெண்டை -சண்டை போடும் மத்ஸ்யங்கள் -கண்கள் இங்கு கெண்டை என்று வல்லி ஒன்றால் -மூக்கால் விலக்குண்டு -நடுவர் -நடுநிலையாளர்-சண்டையைத் தீர்த்து நடுவிலும் இருக்கிறது –
விலக்குண்டு சஞ்சரிக்கும் கண்கள் -வேலாயுதம் -கண்கள் இங்கு –-இவற்றாலே முக வர்ணனை
இத்தால் தலைமகன் ஈடுபட்டு அடிபட்ட வற்றுக்கு த்ருஷ்டாந்தம்-அலை எறியும் கடல் -கண்ணுக்கும் விசேஷணம் -தலைமகனுடைய ஹ்ருதயத்துக்கும் இதே த்ருஷ்டாந்தம்-இத்தைப் பார்த்தவர்கள் -யாரும் என்னை நிர்பந்திக்க மாட்டார்களே-
அவதாரிகை –சம்ஸ்லேஷித்து விஸ்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி இறே தலை மகன்-ஆற்றாமை இருப்பது –(ஸ்ரீ வைஷ்ணவர்கள் -பகவத் கைங்கர்யம் ஆகிற கார்ய புத்தியால் –அதுவும் ஆழ்வார் உகப்புக்காவே சென்றார்கள் )-அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் – லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது தலைமைக்கு போராது காண் -என்று திருத்தப் பார்க்க –அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று அவன் கழறினததை மறுத்து வார்த்தை சொல்லுகிறான்-கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்–பாங்கன் -தோழன் –
தலைமகன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல் துறை விரஹ வியசனத்தினால் மெலிய
ஒருத்தி வலையிலே அகப்பட்டேன் காண் என்ன-ஸ்த்ரீ நிமித்தமாகப் படுவது உனது பெரும் தன்மைக்குத் தகாது என்று சொல்ல-என்னால் காணப்பட்ட வடிவை நீ கண்டாய் அல்லை
கண்டவர் இவ்வாறு வன்சொல் கூரார் -பரம விலக்ஷண வியக்தி அன்றோ என்கிறான் –
கண்டவர்கள் அனைவருமே தன்னைப் போல் பிச்சேறிப் போவார்களே என்கிறான்
இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை-தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின பாங்கனுக்குத் தலைமகன் கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய் அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்-அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட நாயகியாய் அருளிச் செய்கிறார்
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-தலைவன் தோழனிடம் எதிர் வார்த்தை பேசுதல் –
முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்——28–பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரச்துதமான பகவத சௌந்தர்யாதிகள்
விடாய்க்கு உத்தகம்பாய் அத்தாலே விடாய் கரை புரண்டு- அன்று தேர் கடாவிய கழல் காண தானே முன்பு தாகம் -ஆழ்வாருக்கு – அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களைச் சொல்லி
தாமும் தம்முடைய கரணக்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற முடியானேயின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்-இப்படி கரண க்ரமத்தின் யுடையவும் கரணியான ஆழ்வார் தம்முடையவும் ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது
புலக்குண்டல — இத்யாதி--கெட்டேன்-இவன் செய்வது என் என்று அவன் (பாங்கன் )புத்தியிலே படுகைக்காக அவை (ஆழ்வாரின் திருமுக அழகை ) தன்னை பேசுகிறான்–சர்வ இந்திரிய அபஹார ஷமமான குண்டலம் உண்டு -கர்ண பூஷணம்-அத்தை உடைத்தாய் இருப்பதொரு தாமரைப் பூ போலே ஆயிற்று முகம் (புண்டரீகம்) இருப்பது-குண்டலம் என்று வட்டணிப்பை சொல்லவுமாம்-(புல-புலப்படுகிற )-புல என்றத்தை-பொல என்றாக்கி -பொன்னாலே செய்த குண்டலம் என்றும் சொல்வார்கள்–புண்டரீகத்த போர் கெண்டை –அத் தாமரைப் பூ மேலே சிலை கெண்டைகள் பொருகிறார் போலே ஆயிற்று கண்கள்-அல்லாத அவயவங்களில் காட்டில் கால் கட்ட வற்றாய் இறே முகம் இருப்பது –
அதில் பிரதானமாய் இறே கண்கள் இருப்பது–வல்லி ஒன்றால் விலக்குண்டு – இரண்டு மத்த கஜம் தன்னிலே பொரா நின்றால்-நடுவே ஒரு கணயத்தை பொகட்டால் போலே-ஆயிற்று மூக்கு இருப்பது-உலாகின்றது-நடுவே இது கிடைக்கையாலே இரண்டும் தன்னிலே வந்து கிட்டப் பெறாதே – அவ் வாசியையும் இங்கே (குண்டலத்தில் )ஏற வைத்துக் கொண்டு – கர்ண பர்யந்தம் -உலாவா நின்றது –
ஈஸ்வரன் வைத்த மர்யாதையில் செவ்விதாக நிற்க மாட்டாது போலே இரா நின்றன –(செவ்வி – நேர்மை –வளைந்து இருக்குமே-செவ்விதாக -செவி அளவாக )வேல் விழிகின்றன–வேலை இட்டு மறுபாடு உருவக் குத்தினால் போலே ஆயிற்று நோக்குகள் இருப்பது-
கண்ணன் இத்யாதி –ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல்(ஆயிரம் கையால்; அலை கடல் கடைந்து தாள்கள் ஆயிரத்தாய் இத்யாதி ) கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு –தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று – இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –மறி கடல் போன்று -என்னுதல்-மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்–அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே
அந் நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அக வாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே தோற்றும்படி நின்றாளாய் –அவற்றை நினைக்கிறான் –அவற்றால்-அவை தான் இப்போதும் வடிம்பு இடுகிறபடி-கலக்குண்ட நான்று கண்டார் – நான் கலங்கின அன்று கண்டார்–எம்மை யாரும் கழறலேரே-என் பிரகிருதி அறியும் நீயே அன்றிக்கே – இத்தனை பாவ பந்தம் இல்லாத புறம்பு உள்ளாறும்- இப்படி கழறி வார்த்தை சொல்லுவார்கள்-
குண்டலப் புண்டரீகம் –வட்டணித்த தாமரை ஆகவுமாம்-அவளுடைய கண்களாலே கடல் போலே அவன் கலங்கின அன்று -என்று நாயகனுக்கு விசேஷணம் ஆதல்-கடல் போல் கலங்கி இரங்கி இருக்கிற கண்கள் என்று கண்களுக்கு விசேஷம் ஆதல் -சம்ச்லேஷித்து -பாகவதர் ஆகிற நாயகன் சம்ச்லேஷித்து-கார்யா புத்தி -அவர் உகந்த விஷயம் அன்றோ என்று பகவத் விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற புத்யா -என்றபடி-புண்டரீகத்த -என்று முற்று உவமையால் -முகத்தை சொல்லும்-செவ்விதாக -சாடு -செவ்வையாக கோணாமல் என்றும் செவி அளவாக என்றும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -ஞான வைபவம்-
நாயகன் நாயகி வலையில் அகப்பட்டதை சொல்வது-கடல் போன்ற கம்பீர ஸ்வபாவனான நீயோ இப்படி என்ன – பரம விலக்ஷண-வ்யக்தி அன்றோ –-துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீ நோ யத நயா பிரபு -தாரயத் யாத்ம நோ தேஹம் ந சோகே நாவ ஸீததி-நான் கண்ட நாயகியை நீ காணப் பெறில் திருவடி பட்ட பாடு படுவாய் –புலக் குண்டலம் -புலப்படும் குண்டலம்-பொலக் குண்டலம் -பொன்னாலாகிய குண்டலம்-குண்டலம் என்பதை கெண்டைக்கு அடை மொழி யாக்கி காதணி வரை நீண்ட திருக் கண்கள்–குண்டலப் புண்டரீகம் -வட்ட வடிவமான முக மண்டலம் -புண்டரீகம் போன்ற முகம் –
கெண்டை போன்ற கண்கள் -கொடி போன்ற மூக்கு -உபமான பதங்களையே சொல்லி –உவமை ஆகு பெயர் –வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று–இரண்டு மத்த கஜம் தன்னிலே பொர உத்யோகித்து நடுவிலே கணையம் இட்டவாறே தாம் நினைத்த படி பொராப் பெறாது ஒழிந்து பெரும் சீற்றத்தோடு சஞ்சரிக்குமா போலே நின்று -பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்தி–கொடுமை இன்னம் மாறாமல் இருப்பதை -வேல் விழிக்கின்றன-என்கிறான்-ஆழ் கடலைக் கடைந்து -கலக்கி – சாரமான அம்ருதத்தை கொண்டால் போலே நாயகியின் கண்களும் ஆழ்ந்த என் நெஞ்சைக் கலக்கி சாரமான அறிவைக் கவர்ந்து கொண்டன-அவள் கண்ணின் வைலக்ஷண்யம் அனுபவித்தற்கு அன்றி மற்றை யாருக்கும் அரிய ஒண்ணாது –யாரும் -எவ்வளவு வைராக்யம் கொண்டவர்களுக்கும் –மறி கடல் போன்றவற்றால்-போன்று அவற்றால் -பிரிக்காமல் போன்றவற்றால் ஒரே சொல்லாக கொண்டு -கடையய் பட்டு
அமிருதத்தை சுரந்த அலை எறி கடல் போன்ற அக் கண்கள் –தன் அழகைக் கண்டு கலங்கி மருண்டு நோக்கிய கண்ணுக்கு கண்ணன் கையால் கலக்குண்ட கடல் உவமை -என்றும் கூறுவார் –கண்டார் எம்மை யாரும் கழறலரே -தன்னைப் போலே பித்தேறிப் போவார்கள் –
புலக் குண்டலப்-புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய புலப்படுத்தல் -காணப்படுதல்-பொலக் குண்டலம் என்று பாடமாய்-பொற் குண்டலம் என்றுமாம்–புண்டரீகத்த-குண்டலத்தை யுடைய புண்டரீகம் என்கையாலே செவ்வியும் அழகும் மணமும் யுடைமையால் புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது-போர்க் கெண்டை-அப் புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே கண்ணைக் காட்டுகிறது–வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு-அதாவது மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால் விலக்கப் பட்டால் போன்றன என்கை–உலாகின்று-உலவா நின்று கொண்டு விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே உலவா நின்றன என்னலாய் இருக்கை-வேல் விழிக்கின்றன-வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே க்ரூர்யம் மாறாதன என்கை-கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால் -ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி-கலக்குண்ட நான்று கண்டார்—
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண் என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை-நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை-எம்மை யாரும் கழறலரே-இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும் வாசி அறிவாராகில்(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து ) நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –
இத்தால்-இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப் பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது-எங்கனே என்னில்-புலக் குண்டலம் என்று கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது-(ஸ்ரோதவ்யா-ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )-குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில் பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும் ஆராய்ச்சியைக் காட்டுகிறது–வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது–வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும் சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )-கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று (பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )-அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று (மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்-கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும் -கழியப் பெரிதால் -7-3-6- என்றும் சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகரணமாம் அளவன்றியே பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே-ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி-நாமும் உருகுகிறோமே காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )-நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று
பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம-அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன–ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1- தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று-அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி அதுக்கு-கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்–அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு–அவற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்–கலங்கிற்றோ என்ன–அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ் வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய் நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று–இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்-விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-என்று அருளிச் செய்தார் –
ஸ்வாபதேசம் –
ஆழ்வார் உடைய ஞானக் கண் கண்டு ஈடுபட்ட பாகவதர் – அத்தை குறைவாக பேசிய சுற்றத்தார்களை நோக்கி மறுத்து சொல்லும் வார்த்தை –-முக்திக்கு காரணமான முதல் பொருளை அரிய மூன்று உபாயம்-கேள்வி -சிந்தனை -காட்சி -ஆச்சார்யர் பக்கல் கேட்டு பிரமாணம் உக்தியால் உள்ளத்தில் தெளிந்து -ஐயம் திரிபறத் தெளிதல்-–புலக் குண்டலம்-செவிக்கு அணி -கேள்வி-புண்டரீகம் ஹிருதய கமலம் -சிந்தனை –-போர்க் கெண்டை-சிந்தனை -பூர்வ பக்ஷ உக்திகளால் விரோதியை உண்டாக்கி –
வல்லி யொன்றால்-விலக்குண்டுலாகின்று-மத்யஸ்த சித்தாந்த உக்தியால் அவ்விரோதம் தீர்ந்தமை –
வேல் விழிக்கின்றன-சஞ்சலம் இல்லாமல் நிலை நின்ற ஞானத்தால் நுண்மையான நெடிய திருமாலை தர்சித்தமை –கண்ணன் கையால்-மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்ற-சபல சித்தரான யாம் பரவசப்பட்டு இனிய பக்தியைச் சுரந்து நிலை மாறிய பொழுது -ஆழ்வார் ஞான விசேஷம் அறிந்தார் யாவரும் எம்மை இங்கனம் கூறார் -என்கிறார்-கண்டார் எம்மை யாரும் கழறலரே-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய பிறரை நியமிக்காமல்-தேவு மற்று அறியேன் -மதுரகவி நிலைமையை பெறுவார் என்றபடி
ஸ்வாபதேசம் –
இத்தால் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயில்(ஆழ்வாருடைய ஞான வைபவம் -ஸ்ரவண -மனன -தர்சன -பர பக்தி பர ஞானம் பரம பக்திகளில் )அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை –பகவத் விஷயத்தை காட்டியும் மீட்க ஒண்ணாத படியை சொல்லிற்று –அவர்கள் -தேவு மற்று அறியேன் -என்று இருப்பவர்கள் காணும் –(மதுரகவி ப்ரக்ருதிகள் ) பவத பரமோ மத -என்கிறபடி அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது –(பீஷ்மர் உகந்த திரு நாமங்கள் என்று தர்மர் விரும்பியது போல்
இங்கு ஆழ்வார் உகந்தது என்று பகவத் விஷயத்தை விரும்புவது )
தாத்பர்யம்
ஆழ்வாரைப் பிரிந்து படும் ஆற்றாமையை -விஸ்லேஷ வியசனத்தை அறியாமல் இத்தனை ஈடுபாடு கூடாது என்று விலக்கப் பார்க்க-ஓ தோழனே நீ அவள் முகத்தின் வை லக்ஷண்யம் அறியாமல் பேசுகிறாய்-அதி சுந்தரம் அதி மிருதுவாய் அதி கந்தம் மிக்கு -தாமரை போல் உள்ள முகம்
சர்வ இந்த்ரியங்களையும் அபகரிக்கும்-வல்லிக்கொடி போன்ற நாசிகை அணையை இட்டு விலக்கப்படும் யுத்த உன்முகமாய் இருக்கும்-இரண்டு – மத்ஸ்யங்கள் போல் நேத்ரங்கள்
காது வரை நீண்டு -சங்கு சக்கரம் வரை நீண்டு இருக்குமே –-திருக்கண்கள் -நீண்டு மலர்ந்து வேல் போல் -அம்ருத மதனம் செய்யும் பொழுது கலக்குண்ட கடல் போல் என்னைக் கலக்கிற்றே
ஆழ்வார் ஸ்வரூபம்-வை லக்ஷண்யம் – அறிந்தவர் இப்படி ஈடுபடக் கூடாது என்று தடுக்க மாட்டார்களே -என்று சொல்லும் பாசுரம் –
3-8-முடியானே -பிரவேசம் –
செய்ய தாமரைக் கண்ணனாய்’ என்ற -3-6-திருவாய் மொழியில் –
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள் அவனைக் காண வேண்டும்
என்று விடாய்த்தபடி சொன்னார். நிழலும் அடிதாறுமான ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, பின்னர்த் தொடங்குகின்ற
பாகவதர்களுடைய சேர்க்கை-போதயந்த பரஸ்பரம் – ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு தரிக்கைக்கு உடல் அன்றிக்கே,
பகவானுடைய குணங்களை நினைவு மூட்டக்கூடியதாய் மேலே பிறந்த விடாயினை மேன்மேல் வளரச் செய்தது.
‘அச் சேர்க்கை விடாயினை மேன்மேல் வளரச் செய்தவாறு யாங்ஙனம்?’ என்னில், மேலே பாகவதர்களுடைய
சொரூபத்தை நிரூபிக்கும் முறையாலே பகவானுடைய குணங்கள் முதலாயினவும் சொல்லப்பட்டன அன்றோ?
அடியார்கள் குழாங்களை கூடுவது என்று கொலோ கேட்டது கிடைக்காமல் -ஆடி ஆடி -சோகம் விஞ்சி அழுதார் -அங்கே
இங்கு -தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் -என்று கேட்டதும் அடியார்களைக் காட்டிக் கொடுக்க
-சம்ச்லேஷம் வேறு ஒன்றை கிளப்பி விட -இங்கும் அழுகிறார் -சம்ச்லேஷம் விடாயை -உத்கம்பகம் -ஆனதே -வளர்த்ததே –
ஐச்வர்யார்த்தி கைவல்யார்த்தி பகவல்லாபார்த்தி திருமாலுக்கு போவது போலே அனைவரையும் ஈர்க்க maall கட்டி வைத்து இருக்கிறார்கள்
‘நன்று; நிரூபகமாகச் சொன்னால் அது விடாயை வளர்க்கக் கூடுமோ?’ என்னில், வேறு ஒன்றற்காகப் புகுந்தாலும்
தன்னை ஒழியப் புறம்பு ஒன்றுக்கு ஆள் ஆகாதபடி தன் பக்கலிலே துவக்கிக்கொள்ள வற்றாய் அன்றோ
பகவானுடைய கல்யாண குணங்கள் இருப்பன? அவற்றாலும் காதல் கரை புரண்டு, ‘என்றுகொல் கண்கள் காண்பது!’ என்னும்
அளவே அன்றி, மற்றை இந்திரியங்களும் விடாய்த்து,-3-6 -கண்கள் மட்டும் தாகம் -இங்கு -3-8-அனைத்து இந்திரியங்களும் தாகம் –
ஒர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியங்களும் ஆசைப்பட்டும்,
மற்றை இந்திரியங்களினுடைய தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்பட்டும்,
அவை எல்லாவற்றினுடைய தொழில்களையும் தாம் ஆசைப்பட்டும், –அவன் செய்த கிருஷி பலன் இப்படி விடாயை வளர்த்து –
தம்மிலும் விடாய்த்த உறுப்புகளும் உறுப்புகளிலும் விடாய்த்த தாமுமாய், பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன்,
வற்கடம் உண்டான காலத்திலே தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது,
தன் வாயிற்சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், ‘என் பசிக்கு என் செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’
என்னுமாறு போன்று, தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார்.
‘மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத்
தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய்
இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான்
அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள் என்பது. அப்படி இவரும் நோவுபட்டு, ஆயுதங்களையும் ஆபரணங்களையும்
அவற்றுக்குப் பற்றுக்கோடான திருமேனியையும் குணங்களையும் செயல்களையுமுடைய எம்பெருமானைக் காணவேண்டும் என்று,
‘ஈசுவரனால் முன்பு போலே குணங்களை அனுபவிப்பித்தல் முதலியவைகளாலே பட்டினியைப் போக்க ஒண்ணாது’ என்னும்படி,
கேட்டார் எல்லாம் நீராகும்படி பெருந்தானத்திலே பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.
குண வை லஷண்யம் தான் உம்மை படுத்து கிறது -கரண அசங்கு சத்தால் அல்ல என்றீரே முன்னம்
-இப்படி ஒரே கரணம் அனைத்தையும் அனுபவிக்கும் குணமும் உண்டே -கட்செவி -சஷூஸ் காது ஒன்றே தானே -பாம்பணையான் –
சாம்யா பத்தி அருளுவீரே -நித்ய ஸூ ரிகள் அனுபாவ்யம் கொடுக்கிறீர் என்றேனே -கொடுக்கலாகாதோ
இப்படி மடி பிடித்து கெஞ்சி பிரார்த்திக்கிறார் -தொண்டை கிழிய கூப்பாடு போடுகிறார் –
பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே’ என்பது போன்றவைகளை நோக்கி, ‘ஆயுதங்களை’ என்றும்,
‘முடியானே’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்களை’ என்றும்,
‘மூவுலகும் தொழுதேத்தும் சீர்’ என்பது போன்றவைகளை நோக்கி,‘குணங்களை’ என்றும்,
‘முன்பு போலே’என்றது, ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்த முன்னுரையை நோக்குக,
பெருந்தானம் – பெரிய ஸ்வரம்.
ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்;
சக்கரவர்த்தி ஜீவிக்கும் பொழுதே சுமந்த்ரன் திரும்பினான் -5 நாள்களில் —
அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே,-திவாசான் பஹூன் ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி.
‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க.
‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம்.
‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?
‘ஞானம் வெளிப்படுதற்கு வழியாக உள்ள கரணங்கள் விடாய்க்கையாவது என்?’ என்னில், ஆழ்வாருடைய காதல்
மிகுதியைச் சொன்னபடி. அன்றியே, ‘இந்திரியங்களும் தனித்தனியே அறிவுடைப்பொருள்களைப்போன்று விடாய்க்கு
இதர விஷயங்களில் வாசனை விடாயைப் பிறப்பியாநின்றால், நற்குணக்கடலான இறைவன் விஷயத்திற் சொல்ல வேண்டா அன்றே? ‘நன்று;
இதர விஷயங்கள், தாமே இனியவைகள் ஆகையாலே, அவற்றில் வாசனை விடாயைப் பிறப்பிக்கும்;
இறைவனிடத்தில் வாசனை பண்ணுகிறது பலத்தைப் பெறுதற்குச் சாதனமாக அன்றோ? அங்ஙனம் இருக்க, இவ்வாசனை,
விடாயைப் பிறப்பிக்கக் கூடுமோ?’ எனின், பகவத் விஷயத்தில் வாசனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஒரு பயனைப் பெறுவதற்காக அன்று;
இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று. ’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத
பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
பூ உடன் சேர்ந்த நாறும் மணக்கும் -ஆழ்வார் அபிநிவேச அதிசயத்தால் இவைகளும் -அவன் பெருமையும் இவற்றை தூண்டுவிக்குமே –
சாத்ய புத்தியே வேண்டும் -நம் இயலாமைக்காக அவனை சாதனமாக்குகிறோம் –
‘நன்று; ஓர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்படக் கூடுமோ?’ எனில், பாம்பு கண்ணாலே காண்பதுஞ்செய்து
கேட்பதுஞ்செய்யாநின்றதே அன்றோ? அதுவும் அவன் கொடுத்ததே; அவன் தந்தால் அது நமக்குத் தட்டு என்?
அடியார்கட்கு அவன் கொடுக்க எங்கே கண்டோம்?’ என்னில், தம்மையே ஒக்க அருள வேண்டுகையாலே, ஒரு தேச விசேஷத்திலே
தன்னை அனுபவிப்பார்க்குக் கொடா நின்றானே அன்றோ? தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு
ஒன்று நோக்குவது –9-9-9-அன்றோ அவன்றன் படி?
‘நன்று; கரணங்களும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்தால், தம் காதல் குறையாதோ?’ என்னில்,
ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும் பகுதி குறைவற்றுப் போமாறு போன்று,
இவருடைய -அபி நிவேச அதிசயம் -காதலின் மிகுதி இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகினாலும் காதல் குறையற்றே நிற்கும்.-
எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் அனுபவித்த பாகவத சேஷத்வத்துக்கு அடியான பகவத் குண வைலக்ஷண்யமானது இவர் திரு உள்ளத்திலே அனுபவ அபி நிவேசத்தை ஜநிப்பிக்க
அத்தாலே ப்ரஸ்துதமான பாகவத சம்ச்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக-நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற
அனுபவ அலாபத்தாலே ஆர்த்தி பிறந்து
1-அனுபாவ்யனுடைய சேஷித்தவாதி ஆகாரத்தையும்
2-அநிஷ்டத்தைப் போக்கி அநந்யார்ஹம் ஆக்கும் படியையும்
3-ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
4-அவதார மூலமான அநந்த ஸாயித்வத்தையும்
5-ஆஸ்ரிதற்கு முகம் காட்டுகைக்கு ஈடான வாஹனத்வதையையும்
6-அவர்களுக்கு அனுபாவ்யமாம் படி கையும் திருவாழியுமான அழகையும்
7-இவ் வாஹன ஆயுத விசிஷ்ட வஸ்துவே தாரகாதிகளான படியையும்
8-அனுபவிப்பிக்கும் சவ்ந்தர்ய ஸ்வ பாவத்தையும்
9-அனுபவ பிரதிபந்தக நிவ்ருத்தி பிரகாரத்தையும்
10-நிவர்த்தனத்தில் அனாயாசத்தையும்
அனுசந்தித்து -அனுபவம் கிட்டாத ஆர்த்தியாலே அதிசயிதமாகக் கூப்பிடுகிறார் –
முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-
‘பெருந்தானத்தில் பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்’ என்று அருளிச்செய்வதனால், அளபெடை கொண்ட பாடமே சிறப்புடைத்தாம்.-பொன் முடியன்’ என்றதுதான், முடியத் தொடர்ந்து வருகிறபடி.-தொடங்கின வற்றை முடிக்கிறார் –அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது? மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே – உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது? இவர்க்கு இதில் ஓடுகிற விடாயின் மிகுதி, ‘முடியானேஎ!’ என்னும் இசையின் ஓசையிலே காணலாமித்தனை-இத்தால் இசையின் முக்கியத்வம் -அரையர் சேவை -புகும் முறைகள் எல்லாம் இல்லை இதில்:நெடிலுக்கு பின்னால் குறில் வருவது அக்ரமம்
மூன்று உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானேஎ – குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லா உலகங்கட்கும் புகலிடமானதிருவடிகளையுடையவனே! திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.
மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி. ‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.
ஆழ்கடலைக் கடைந்தாய் –ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி. இதனால், ‘இத்திருவடிகளில் இனிமையை விட்டு வேறு பிரயோஜனத்தை ஆசைப்பட்டார்க்கும் வருந்தி அவர்கள் விரும்பியவற்றைக் கொடுக்குமவன்’ என்பதனைத் தெரிவித்தவாறு.
புள் ஊர் கொடியானேஎ – தன்னை உவந்தார் பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே!-அடியார்கள் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனம்; தூரத்திலே கண்டு வாராநின்றான் என்று தரிக்கைக்குக் கொடி.-கொண்டல் வண்ணா – திருவடி முதுகிலே தோன்றினபோது ஒரு மேருவைக் கினிய – கபளீகரித்த -முழுதும் அபகரித்த -காளமேகம் படிந்தாற்போலே ஆயிற்று இருப்பது –என் நெஞ்சமே –கொண்டாடிச் சொல்லுகிறார் அல்லர்;-தன் விடாய்க்கு என்செய்வேன்!’ -‘நாதா! காப்பாற்ற வேண்டாவோ! இவ்வயிறு தாரி-ஒன்றின் ஒன்றின் செயலை கேட்க்கிறதே ஒரு வயிறு இல்லையே –நெஞ்சை என்னால் பரிக்கப் போமோ?’ –பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளின் மேல் ஏறி அருளி இந்த லோகத்தில் வந்து தோன்றாய் -என்று எம்பெருமானைக் காண ஆசைப்பட்ட போதே காணப் பெறாமையாலே குறைப் பட்டுக் கிடைக்கும் என் நெஞ்சம் என்கிறார்.
————–
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது-பரமபதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.-என் வாக்கானது இவ் வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ் வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு இராமாவதாரத்தின்
செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற் செய்த இடம் அன்றோ இராமாவதாரம்?
தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.
———-
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—
என் கைகள் வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர்தம் நாயகனே என்னும்– கைகளானவை ‘இவ்வாக்கே ஏத்திப் போமித்தனையேயோ! நானும் ஒருகால் ஏத்தினால் ஆகாதோ!’ என்னா நின்றது.‘தன் நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும்
தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே, கையிலே வெண்ணெய்த் தாழிகள் தட்டின அளவிலே பிரியத்தாலே நகைத்தலைச் செய்வான்-அவ்வாறு நகைத்தலைச் செய்யுமதுவே கை விளக்காக அமுது செய்வான்,’புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது;-அவன் கை வெண்ணெய் தடவ -கையும் மெய்யுமாக பிடிக்க ஆழ்வார் கை தடவுகிறது-வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை; அதனாலே, தேடுகின்றன’ என்னுதல். –கைகளும் மயங்கின -ஆழ்வார் அபி நிவேசம் இவற்றுக்கும் உண்டே –-‘கடல் கொண்ட பொருள் மீளுமோ?-ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –-
—————–
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-
வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி-இத்தலை தொழுது இருப்புப் பெறுமாறு போன்று, தொழுவித்துக் கொண்டு இருப்புப் பெறும் உன்னை. என்றது,
‘தொழுது அல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டு அல்லது தரியாத உன்னை’ என்றபடி.-பை கொள் பாம்பு ஏறி உறை பரனே – திருமேனியின் பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது.-இதனால் தொழுவித்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்வு அற உயர்ந்த உயர்வினையும், விரும்பத் தக்கதாகையையும்
தொழுமவர்கள் இருக்கும்படியையும் சொல்லிற்று.-அரவு அணையான் அன்றோ சர்வேசுவரனாவான்? -பர்யங்க வித்தையிற் சொல்லுகிற பேற்றை ஆசைப்படா நின்றது என்றபடி.
மெய் கொள்ளக் காண – பத்தும் பத்தாக மெய்யே காண. என்றது, ‘மனத்தின் அனுபவம் எப்பொழுதும் இடையறாது நிற்கின்ற நினைவின் மிகுதியாலே நேரே கண்கூடாகக் காணுதலைப் போன்று நன்கு வெளிப்பட,-பாவனா பிரகர்ஷம் -உருவ வெளிப்பாடு – ‘இனிக் கிட்டிற்று’ என்று அணைக்கத் தேட, -கைக்கு எட்டாமையாலே கூப்பீட்டோடே முடிந்து போதலன்றிக்கே, பிரத்ய பிஜ்ஞார்ஹமாம்படி தேடாநின்றது,’ என்றபடி. விரும்பும் –
ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன.
‘ஸ்ரீபரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே ஆசைப்படாநின்றன,’ என்றபடி.
————
கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-
தன்னைக் காணவேண்டும் என்று விடாய்த்த இக்கண்களாலே ஒருகால் காண வருமோ?’ என்னும் ஆசையாலே செவிகள் கிடந்து ஓர்க்கும்; கன்னம் இட்டும் காண வேண்டும்படி யன்றோ இறைவனுடைய சிறப்பு இருப்பது? பிச்சை புகினும் கற்கை நன்றே போலே திருடியும் காண வேண்டும் படி அன்றோ விஷய வை லக்ஷண்யம் -கன்னக் கோல் இட்டு காண ஆசைப்பட்டன செவிகள்-மண் கேட்ட வாமனன் -என்றும் – மண் கொண்ட திரிவிக்ரமன் சொல்லாமல் முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார் காணும்.
அன்றியே, இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் ‘வாமனன்’ என்கிறார் என்னுதல்.பண் கொண்ட – வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் – முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை; இதனையே திண்ணிதாகப் புத்தி பண்ணா நின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி? பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –
———–
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-
‘கவி கனி போல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார்.-புவியின்மேல் – ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார்.
‘தேசம் இதுவே ஆனதைப் போன்று விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்;
பொன் நெடும் சக்கரத்து உன்னையே – விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே-எனது ஆவியே –
‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது-‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.-என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது -என்கிறார் –
———–
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-
கரணங்களை ஒழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். மக்களினுடைய இழவும் பசியும் சொன்னார் மேல்;-இனி, தம் இழவும் பசியும் சொல்லுகிறார். இப்பாசுரத்தில், ‘நான் மஹாபாபி ஆகையாலே, நெஞ்சின் விடாயும் தீரப்பெற்றிலேன்;-என் விடாயும் தீரப்பெற்றிலேன்,’ என்கிறார்.-ஆரமுதே- ஆர்ந்த அமுது; நிறைந்த அமுதம்; உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது.-நினைக்கும் பொழுது எல்லாம் அமுதிலும் ஆற்ற இனிய அமுதே அன்றோ? தேவசாதியினுடைய அமுதைக்காட்டிலும் வேறுபாடு தோன்ற ‘ஆர் அமுது’ என்கிறார்.-இவற்றால், தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருக்க, விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் என்றபடி.-என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!-மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,‘தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.
மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன்.-என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன்,உன கோலமே –
இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது.-கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?
———
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-
கோலமே –அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி.-தத் குணசாரத்துவத்தாலே-விஜ்ஞ்ஞாதா என்னாமல் -விஜ்ஞ்ஞானம் யஜ்ஞ்ஞம் தனுதே -பண்ணும் என்பதே போலே –அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார்.
அஞ்சன நீலமே –‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி.-ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்-நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே –பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை.
அன்றிக்கே,-‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.
சென்று செல்லாதன முன்னிலாம் காலமே – இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே! இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்-உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது,-இக்காலம் தன்னையே அந்தக் காணக் கடவிய காலம் ஆக்குவம் என்றால் உன்னால் ஆக்க முடியாதோ -என்கிறார்–
———–
கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-
கொள்வன்-1-மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று.-அன்றிக்கே,2-இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு -விநீத வேஷம் கண்டு -‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, 3-இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி;
‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான்
‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து,-‘உனக்கு வேண்டுவது என்?’அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய் மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.-
புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!
‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப் பண்ணிற்று’ என்று அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி.-வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –-சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.பிராட்டியினுடைய
வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது?ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன;
ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் -கச்சதா மாதுல குலம் போலே – ‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக-ப்ராசங்கிகமாக – ஓர் உருவிலே அருளிச்செய்தார்-
ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் –கரபாஹை கலங்கப் பண்ணியது -அடுத்தேறாக வந்த -அடுக்கு அடுக்க -வந்தவற்றை நீக்கி -பிராப்த கரத்திலே நிறுத்தி -இரண்டில் நிறுத்தினான்
வாணன் உடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி -கரம் இல்லாமல் -என்றுமாம் –
கைப்பற்று -பரமசிவன் -இறை இல்லாமல் ஆக்கி -இறை -கரம் என்றும் அர்த்தம் உண்டே –
‘வாணனுடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.
———–
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-
பொருந்திய மா மருது – மருது, மா மருது, பொருந்திய மா மருது.
மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, ‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி.
‘மா’ என்கையாலே, மா–மாறுஎன்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம்.
‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி.
ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை யுடையராய், சீற்றத்தை யுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி-மருதங்களின் இடை -சொல்லாமல் ஒருமை -பொருந்தி -காம குரோதங்கள் சொல்லி ஒருமை ஒரு தாய் பிள்ளைகள் -லஷ்யம் ஓன்று போலே இங்கும்
எம் பெருந்தகாய் – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!-ஜகத் சேஷி உடைத்தாய் ஆயிற்றே என்று உகக்கிறார் —உன் கழல் காணிய – ‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவை முரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற
திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. –தம்முடைய ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.-எல்லா அவச்தைகளிலும் திருவடி விடாதவர் இவர் -ரிஷி ஜீவனம் திருக் கண்கள் இவர் ஜீவனம் திருவடி
வாசகமாலை கொண்டு – ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று- இவர்க்கு ஒரு சொற் கொண்டு சொல்லுகை-எத்தனை காலம் புலம்புவனே –‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.-
——————-
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
சப்த மாத்ரத்தாலே -பரமபதம் பெறுவார் -சொன்னாலே -இதில் பிரார்த்தித்த படியே –
ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –பூமி யளந்த பெருமானை-அந்ய சேஷத்வ -ஸூவ ஸ்வதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்ந்தார் -சர்வ ஸ்வாமி –நலங்கொள் சீர்-கரணங்கள் சேதன சமாதியால் விடாய்த்து-அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தி மற்றவற்றை ஆசைப்பட்டு இவர் அவைகள் உடன் ஆசைப்பட்டு பகவத் விச்சேதம் இல்லாத
ச ஏகதா பவதி -அநேக சரீரங்கள் பரிகரித்து
அவ்வோ சரீரங்களிலும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசம் பெறப் பெறுவார் –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply