ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நம் தேர் மா மலைக்கே வேகமாக ஒட்டு-மண் முதல் -தாழ்வரையில் ஆழ்வார் இருக்க-கிளைவித் தலைமக்கள்-காவிய நாயகன் நம்மாழ்வார் மநோ ரதம் வேகமாக செல்ல பரமத பங்கம் -திவ்ய தேச கைங்கர்யம் -பாகவத உபதேசம் பண்ணப் பிரிய ஆழ்வார் வியசனம் அதிகரிக்க பழிச் சொல் வரும் முன் வேகமாகச் செல்லு-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி -கங்குலும் பகலும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்று அங்கேயே இருந்து அசையாமல் அருளிச் செய்கிறார் அன்றோ – குளிர் அருவி வேங்கடம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -முத்து ஒழுகு வரிசை போல் அருவி பாயும் வேங்கடம்-குறிஞ்சி – பிரிந்தவர் கூடும் இடம் மலையும் மலை சார்ந்த இடம்
குளிர் அருவிக்கு த்ருஷ்டாந்தம்- தேன் நவின்ற -விண் முதல் நாயகன் – ஸ்ரீ வைகுண்டநாதனின் நீண்ட கிரீடத்தில் சாத்தின முத்து வாசிகை -போல் அருவி கீழ் பட்ட இடம் தானே ஆழ்வார்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் செல்ல அங்கே உபதேசம் -இதன் விவரணம் அது
அங்கு செல்வதே கர்தவ்யம் -மலையே புகுவது பொருளே – பாகவத உத்தமர்கள் பாசுரம் இது–
இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-
அவசாதம் மிக்கவாறே – போத யந்த பரஸ்பரம் -பண்ணி இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –வினை முற்றி மீண்ட தலைமகன் –(ராவண வதம் செய்து முடித்து சீக்கிரம் மீண்ட பெருமாள் போல் ) பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல் த்வரித்து வருகிறானாய் இருக்கிறது –-தலைமகன் சாரதியைப் பார்த்துச் சொல்லுகிறான் – (தீர்ப்பாரை –தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை போல் இங்கும்–
இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர் ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை பொருள் வயிற் பிரிந்து வினை முற்றி மீண்ட தலைமகன் தலை மகள் ஆற்றாமை நினைத்து பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல் அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம்
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக இங்கேயே இவ் வுடம்போடேயே கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய் அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்-ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே-இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது-அன்றிக்கே -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய் முடியைச் செலுத்துவோம் – –
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை –ஒள்ளிய நுதலை உடைய இவளுடைய மாமை –ஒளி உண்டு -நிறத்தில் புகர்-அது பயப்பதற்க்கு முன்பே -அது விவர்ணம் ஆவதற்கு முன்பே –பிரிவாற்றாமையால் துடித்து இருக்க-ஓள் நுதல் உண்டோ என்னில்-தலைமகன் இருக்கும் பொழுது கண்ட இருப்புக்குச் சொல்லலாமே–ஒண்ணுதல் மாமை –பத்து மாசம் பெருமாளும் பிராட்டியும் பிரிந்தவோபாதி இறே இவர்கள் பிரிவும் –பிரிந்த போன நாளைக்கு பாதேயம் இருக்கிறபடி –சந்த்ர காந்தாந நாம் ஸூப்ரூம-என்றார் இறே பெருமாள் – இவ்வழகு இழந்தால் ஆறி இருக்க ஒண்ணாது என்கையும்-(பலிதம்)-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் – த்வரித்துக் கொண்டு நம்முடைய தேரானது கிட்ட வேண்டும் – அவள் தன் வை வர்ண்யத்தாலே நமக்கு பழி இடுவதற்கு முன்பே -நீ த்வரையாலே
அப் பழியைத் துடைத்து தர வேணும் –(பகவத் த்வராயா நம போல் ஆக வேண்டுமே )-வலவ – இங்கும் சாரதி கையது போலே காணும் கார்யம் (அங்கும் பார்த்த சாரதி கையதுவே தானே )-கடா நின்று நண்ணுதல் வேண்டும் – நடத்தா நின்று கொண்டு நம் தேர் கிட்ட வேணும் –தேன் நவின்ற இத்யாதி –
நடத்துகிற உனக்கும் அங்கே போகப் புக்கால் பிரயோஜனம் உண்டாம்படி காண்-தேசம் இருப்பது -என்கிறான்-தேன் நவின்ற மா மலைக்கே -என்னுதல்–தேனுண்டு —வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகிற அவற்றின் உடைய பாட்டேயாய் இருக்கிற-திருமலை என்னுதல்-அன்றிக்கே –
தேன் நவின்ற விண் முதல் நாயகன்-என்னுதல்-விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடியே தேனாக சொல்லப்பட்ட –விண் முதல் நாயகன் -என்னுதல் –(நித்ய விபூதி தொடக்கமான அனைத்துக்கும் நாயகன் )நீண் முடி இத்யாதி –பிரிந்த நாளில் ஸ்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு –திரு அபிஷேகம் –அதில் வெண் முத்து வாசிகை உண்டு-வெளுத்த முத்து ஒழுங்கு –அத் தன்மையதாய்-அதின் படியை உடைத்தாய் –திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று – இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –பர்வதத்துக்கு அக்நி மத்தையை சாதியா நின்றால்- மகாஸநதிகள் வ்யாப்தி க்ரகன பூமியாய்–(பக்ஷம் பர்வதம் – சாத்யம் அக்னி -ஹேது புகை மடப்பள்ளி த்ருஷ்டாந்தம்) இருக்குமா போலே – இங்குற்ற சீலம் தரை காண ஒண்ணாதோ பாதியாய் இருக்கையாலே இவ்விடம் நிலம் அன்று இறே –சத்கார்ய வாதம் ஆகையாலே -இச் சீலம் அங்கேயும் உண்டு என்று பிரமாணங்கள் சொல்ல- விச்வசிக்கும் இத்தனை இறே –கண்ணால் கண்டு அனுபவிக்கலாவது இங்கே இறே –மண் முதல் சேர்வுற்று –பூமி அளவு வந்து கிட்டி-அருவி செய்யா நிற்கும்-மா மலைக்கே –வழியில் ஸ்ரமம் அடங்கலும் தீருகிறது இறே அங்கே புக்கவாறே –-குளிர் அருவி வேம்கடம் -இறே –விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்-மண் முதல் சேர் வுற்ற அருவிகள் ப்ரவஹியா நின்றுள்ள மாமலைக்கே விரைந்து நம் தேர் நண்ணுதல் வேண்டும் –
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்-விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் நம்முடைய தேரானது சடக்கெனக் கிட்ட வேண்டும்–வலவ கடா கின்று-தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக–கடாவுக்கா இன்று என்று இன்று நடந்துக என்றுமாம்–தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்–விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில் வெளுத்த முத்து வாசிகை போலே–மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே நண்ணுதல் வேண்டும்-என்று அந்வயம்–இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்-தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –இவ் விடத்தில்
மா மலைக்கே –என்கிற இடம் ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமைக்கு பொருந்தி இருக்குமே )
பொருள் ஈட்டி வரும் நாயகன் தேர் பாகனை விரைந்து தேரை நடத்த கட்டளை இடுகிறான்-ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை-—விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் வலவ –-ஆகையால் விரைந்து கடாக -என்று அந்வயிப்பது –பசலை நிறம் படர்ந்து விட்டால் அது தன்னாலும் மீட்க ஒண்ணாதே —
வலவ கடாக இன்று -என்றும் கடாகின்றி நண்ணுதல் வேண்டும் -என்றுமாம்-திரு வேங்கட மலையை நோக்கி கடாக வேண்டும் –-இத்தால் பராங்குச நாயகி திரு வேங்கடத்தில் ஆழ்ந்தமை காட்டும் –கீழே -8- பாட்டில் இது எல்லாம் அறிந்தோம் மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் காட்டாது திண்ணனவே -பொருள் ஈட்டச் சென்றது -திரு வேங்கட மலைக்கு என்று அருளிச் செய்தார்–இதில் திரும்பி வந்து அங்கு நோக்கி செல்வதாக சொல்வதில் முரண் இல்லை-அழகிய மணவாளர் ஜீயர் -இவ்விடத்தில் மா மலைக்கே என்கிற இடம் ஆழ்வாருக்கு அணித்தான- தெற்குத் திருமலை ஆகவுமாம்-திரு மாலிருஞ்சோலையை சொன்னபடி–தேன் நவின்ற-விண் முதல் நாயகன் நீண் முடி –தேன் நவின்ற முடி என்று அந்வயம் –இயற்கையிலே பரிமளம் மிக்க திருக் குழல் -செண்பக மல்லிகை இத்யாதி-நல் மலர்களை எப்பொழுதும் தரித்து உள்ளதாகையாலும் –
மிக்க போக்யத்தையால் எம்பெருமானே தேன் -திருவரங்கத்தே வளரும் தேன் —-அன்றிக்கே தேன் நவின்ற மா மலைக்கே -என்று திரு மலைக்கு என்றுமாம்–தேன் -மதுவும் வண்டும்-தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடம் -என்னக் கடவது இறே–விண் முதல் நாயகன்-விண்ணுலகத்துக்கு முதன்மையான நாயகன் –விண் முதலிய உலகங்களுக்கு எல்லாம் நாயகன் என்றுமாம்-திருமுடி முதல் திருவடி வரை தொங்கும் முத்து மாலை வெள்ளருவிக்கு வாய்த்த உவமை-மா மலைக்கு நண்ணுதல் வேண்டும் -கூடும் இடம் குறிஞ்சி -குறிஞ்சி நிலத்து தலைமகள் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே-போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான் வினை முற்றி மீண்ட தலைமகன் பதினாலு ஆண்டும் கூடப்போன-நம் அவ் வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு நம் அவ் வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று-அப் பெருமலை எல்லாம் அம் மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று என்று அந்வயம் –
ஸ்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –-திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு – திரு அருவிகளின் நடுவே இருப்பதைக் கண்டு பெருமாளை கை பிடித்த பின் -பிராட்டி மிதிலையை நினையாதால் போலே – திரு நகரியையும் மறந்து ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை அனுபவிக்க வேணும் என்று அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியைச் சொல்லுகிறது ஆழ்வார் தீர்த்தம் இன்றும் ஆழ்வார் நித்ய வாசம் சாதித்து அருளுகிறார் அன்றோ –
ஸ்வா பதேசம் –
ஆழ்வார் ஆற்றாமை உணர்ந்து தேசாந்திர ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைகின்றார்கள் –
எம்பெருமானையும் எம்பெருமான் அடியாரையும் பிரிதலாகிய துயரை ஆற்றி ஆழ்வாரைத் தேற்ற மநோ ரதம் கொண்டு மநோ ரதத்தை சொல்ல வல்ல -தம் நெஞ்சை தூண்டுகிறார்கள்–ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை--திவ்யமான ஊர்த்தவ புண்டரத்தால் விளங்கும் நெற்றி உடைய ஆழ்வார் இயற்க்கை வண்ணம் கெடாத படி மலை -ஆழ்வார் எழுந்து அருளும் மேலான இடம் –உயர்த்தி தோன்ற மா மலை என்கிறார் –
தாத்பர்யம்--இருளின் நீட்சியால் தளர்ந்த ஆழ்வாரை ஆஸ்வசிப்பிக்கைக்காக பாகவதர்கள் விரைந்து மநோ ரதம் செலுத்திய படியை நாயகியைப் பிரிந்து சத்ரு நிரசனம் பண்ணி திரும்பிய நாயகன் சாரதி இடம் விரைந்து செல்ல
ஓ சாரதியே நான் நாயகியைப் பிரிந்து பல ஆண்டுகள் (சீதாப் பிராட்டியைப் பிரிந்து பத்து மாதங்கள் –
பரதாழ்வானைப் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் –-தேவகிப் பிராட்டியைப் பிரிந்து பத்து ஆண்டுகள் பிரிவு உண்டே -நெற்றி அழகி கொண்ட நாயகி பிரிவால் மேனி பசலை – விவரணம் அடைந்து உள்ளதே
உன்னாலே தான் இது என்று அனைவரும் பழி சொல்லுவார் –லோக அபவாதம் வாராத படி
ஆதி ராஜ்ய ஸூசகமாக திரு அபிஷேகத்தில் இழைத்த முத்து மாலை போல் தெளிந்த மலை அருவிகள் பாயும் திரு வேங்கடத்தில் – அவள் இருக்கும் திவ்ய தேசம் குறித்து தேரை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறும் பாசுரம் –
2-10-கிளரொளி பிரவேசம்
கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )
தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம் –கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம் –பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –
முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம் –வ்யூஹ –அஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )
கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –
முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –
முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்–
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-
திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் –என்கிறார் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -திருமலைக்கு சென்றால் தானே கைங்கர்யம் கிட்டும்-இளமைக்கு கிளர் ஒளி -ஞானம் வளர யோக்யதை உண்டே –பால்யம் -யௌவன ஆரம்ப ரூபமான இளமை-கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ-கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்-அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பது–சார்வது சதிரே —திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்-அல்லாதவை எல்லாம் இளிம்பு-
—————–
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-
திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் –
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -அன்றிக்கே (திருப்பதியை யாதல் )-சில கோசங்களில்-கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்–பதியது வேத்தி எழுவது பயனே
-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்-ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்-
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி –ஏத்தி -உக்தி வ்ருத்தி விசேஷம் –
———
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-
உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ –திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் -திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு -பேராக-பேறாக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -மாமான் மகளே-என்னுமா போலே-பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்-செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் –பிராப்யம் -புயல் மழை வண்ணர்–பிராபகம் -புரிந்துறை-அவன் எண்ணமே பிராபகம்-பயனான விஷயம் தான் இருக்கிறபடி-
—————–
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்-அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் -கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்–என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி
ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்-புயல் மழை வண்ணர் -என்றது இறே-மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –
———-
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-
ரஷண உத்யுக்தமான திரு ஆழி உடையவன் வர்த்திக்கிறவன் -புற மலை கிட்டுவதே உபாயம்–கிறி உபாயம் –ஆளவந்தார் நிர்வாகம் -கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-–அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –
—————
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன்–அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம்-மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -போம் வழியை நினைக்கவே நலம் -புருஷார்த்தம் -இந்த வழிக்குள் அடியேன் உட்பட வேண்டும் என்ற நினைவே வேண்டியது –
————-
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
திருமலையை சென்று கிட்டி -வலமுறை-நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –பகவத் விஸ்லேஷம் தான் ஆழ்வார்களுக்கு நரகம் –நெஞ்சே நகு-பகவத் விஸ்லேஷ ஜனித துக்கம் இங்கே தானே -சம்சாரம்–நின் பிரிவினும் சுடுமோ காடு-மலமறு மதி சேர் மாலிரும் சோலை–திருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை—வலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே சேஷ சேஷி பாவமாகிற முறைப் பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் -இதுவே பரம ப்ராப்யம்–-மருவுதல் வலம்- என்னுதல்- வரம்-என்னுதல் பலவத்தரம் என்னுதல்- ஸ்ரேஷ்டம் என்னுதல் –
——–
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-
சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்-
கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்-இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்-இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது-அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் – அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் – உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்–வாழ் முதல் -தாரகம் -போஷகம் –வளர் முதல் -போக்யம் மகிழ் முதல் –
———-
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்-இள வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்-அங்கு நிற்கிறது –நந்தா விளக்கின் சுடரே– சோலை மலைக் களிறு இறே–உலகம் ஏத்தும் –தென்னானை இறே-
———–
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-
பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்
களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்-சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால் காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை-
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை-பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை – மாதென்று மார்த்தவமாய் ஸூகுமாரமான மயில் என்றுமாம் அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை
போதவிழ் மலையே புகுவது பொருளே-கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள்-
—————–
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு-இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை-மருள் இருந்து கழிந்த ஆழ்வார் போல் இல்லாமல்
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும்படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது –
தூ மணி – துவளில் மா மணி போலே -பந்த மோஷ ஹேது அவனது -சாதாரண ஸ்வ தந்த்ரயம்--உஜ்ஜீவன ஏக ஹேது –அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்-அது செய்யும் இடத்தில்-முடித்தே-சம்சார பந்தத்தை வாசனையோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்-கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply