ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கிளைவித் தலைமகன் பாசுரம்-நலம் பாராட்டு துறை-இவ்வளவு அபிநிவேசம் உள்ளவன் சீக்கிரம் திரும்பி வருவான் என்று-குலே மஹதி சம்பூதே (அயோத்யா 26 )-பெருமாள் சீதையைப் பிரிந்து போகும் பொழுது அவள் குலத்தைக் கொண்டாடினான்-அது போல் பார்ஸ்வஸ்தர் இங்கு ஆழ்வாரைக் கொண்டாடுகிறார்-இவள் தலை இயற்க்கை மணம் போல் எங்குமே இல்லையே-கண்ணன் விண்ணூர் போல் -இங்கு வராஹ விண்ணூர்-விபவம் சொல்லியே பாசுரங்கள்-நித்ய முக்தர் படிக்கும் மேல் அன்றோ ஆழ்வார் – விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ—
அவதாரிகை –இவள் விட்ட தூதுக்கு வந்து கலந்து –-பிரிய நினைத்து – பிரிந்தால் வரும் அளவும் இவள் ஜீவித்து இருக்கைக்காக – இப்படி இருக்கிற இவன் -பிரிந்தால் தாழான் -என்று அவள் நெஞ்சில்-படுகைக்காக –நலம் பாராட்டு என்பதோர் கிளவியாய் – அவளைக் கொண்டாடுகிறான் –
குலே மஹதி சம்பூதே (அயோத்யா 26 )-என்று பெருமாளும் கொண்டாடினார் இறே-
இப்படி நிரவதிகமாக இவருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த பக்தி வைலக்ஷண்யத்தைக் கண்ட
அன்புடையார் ஸ்லாகித்து யுரைத்த பாசுரத்தை-தலைவியை நலம் பாராட்டின (கிளவித் )தலைமகன் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிக-தூதுக்கு வந்து – பிரிய நினைத்து – பிரிந்தால் வரும் தனையும் இவள் ஆறி ஜீவித்து இருக்கைக்காக இப்படி இருக்கிறவன் அகலான் -என்று அவள் நெஞ்சிலே படுகைக்காக
நலம் பாராட்டு என்று ஒரு கிளவியாய் அவளைக் கொண்டாடுகிறான-குலே மஹதி ஸம்பூதே -அயோத்யா -26-21-என்று பெருமாளும் கொண்டாடினார் இறே
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- நலம் பாராட்டுதல்-
சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக- ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே- ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே-அந்த பிராப்ய வேஷத்தையும்- பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக- ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –சேவித்து-ஹ்ருஷ்டமாம் –மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –
வண்டுகளோ வம்மின் –வண்டுகாள் வாரும் கோள்-நீர்ப் பூ இத்யாதி –-மூன்று வகை யாதல்
நாலு வகை யாதல் -சொல்லக் கடவது -இறே–நிலப் பூவும் கொடிப் பூவும் என்று – நிலத்திலே இரண்டாக்கி –மற்றை இரண்டையும் கூட்டி நாலாக-சொல்லுவாரும் உண்டு –நல்ல மலர் பொழில் நாலும் நுழைவீர் காள்-என்னக் கடவது இறே -பூ உள்ள இடம் எங்கும் மது பானம் பண்ணிக் களித்து –
அதுவே யாத்ரையாக -திரிகிற உங்களுக்கு- நல்லதோர் வார்த்தை சொல்லுகிறேன் வாரும் கோள்-ஏனம் இத்யாதி –அத்விதீயமான மகா வராஹமாய் –இப் பூமியை தன் திருவடிகளால் துகைத்து –
அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –வைகுந்த மன்னாள் –-வைகுந்தம் அன்னாள் –காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ் விபூதி போல் அன்றியிலே –அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் –
தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–
சர்வம் யதேவ நியமேன–ஸ்தோத்ர ரத்னம் – 5-அனைத்தும் யாருடையதோ – இறே-பூமா-அன்றோ – யத்ர நாந் யத்ர –மற்ற ஒன்றைக் காணாவே-மாதா பிதா சர்வமும் ஆழ்வாரே –குழல் வாய் விரை போல் –இவளுடைய குழலில் பரிமளம் போல்-விண்டு இத்யாதி –நீங்கள் தட்டித் திரிகிற விஸ்மயநீயமான பூமியில் இப்படி சென்று காலம் பார்த்து இருக்க வேண்டாதபடி இருப்பதொரு மலர் உண்டோ –
ஸ்வாபதேசம்-
இத்தால்-பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் – அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி நீங்கள் அனுபவிக்கிற அவ் விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை –
அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –(இவ்வாறு இவரைக் கொண்டு அவன் பாடுவித்தான் )
அம்பஸ்ய பாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –(நாராயண உபநிஷத் ) என்னக் கடவது இறே –-அம்பஸ்ய -வியூகம்–புவனஸ்ய -விபவம் -அர்ச்சை
நாகஸ்ய -பரம்–மஹதோ மஹீயான் அணுவில் அணுவாய் –அந்தர்யாமி-இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –பாட்டுக் கேட்க்கும் இடம்-கூப்பீடு கேட்க்கும் இடம் -வளைத்த இடம் -குதித்த இடம் –எல்லாம் வகுத்த இடமே-
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -76 –
சார்வே –நீர் நின்ற நேமியான்-தவ நெறி பக்தி பரமாகவும் பிரபத்தி பரமாகவும் நிர்வாஹம் அதில்
பக்தி ஆரம்ப விரோதியைப் போக்க பிரபத்தி அங்கமாகக் கொண்டு -கீதை
தஸ்மாத் ந்யாஸ -உயர்ந்த தபஸ்ஸு பிரபத்தி -திருவடிகளே -இங்கு பக்தி ப்ராப்யமாகப் புகும்
ப்ராப்ய ருசி வளர்க்கப் பக்தி பயன்படும் –பக்தி ப்ராபகம் என்றும் ப்ராப்யம் என்றும் இரண்டு நிர்வாஹங்கள்-அம்ருத சகாரமாக வேறு ஒன்றில் கண் வைக்காமல் அனுபவிக்கிறான்
வைகுந்தம் அன்னாள்-சதா சந்நிதி யுடன் ஒத்து உள்ளவள் அன்றோ இவள் -அதுக்கு சமம் இவள்
வேறு ஒன்றில் போக்யத்தை நெஞ்சிலே படாமல் இருப்பவள்-குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் -ஐதிக்யம் -எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் பைம் தாமரைக் கண்ணன் அவன் ஆழ்வார் இடம் –
பக்தி ப்ராபகமாக மட்டும் இல்லையே-பரம பக்தி ஏவ மாம் குருஷ்ய -கத்யத்தில் பிரார்த்தனை -அங்கும் உண்டே -ஸாத்ய பக்திதானே அங்கேயும் தொடரும்-மத்யைவ தயை கிருபை ஒன்றே சாதனம்
இதுவே சார்வே தவ நெறி திருவாய் மொழிக்கும் இப்பாசுரத்துக்கும் தொடர்பு
பகவத் சந்நிதி காதாசித்தகம் -ஆழ்வார் சந்நிதி நித்யம் -இதுவே வகுத்த இடம் –
நலம் பாராட்டு துறைப் பாசுரம்-பூவின் வாசியும் மணத்தின் வாசியும் தேனின் வாசியும் அறிந்த வண்டுகளே-இவள் கூந்தலை ஒக்குமோ -என்றவாறு–நாயகன் தன் அன்பை அந்யாபதேச முகமாக புகழ்ந்து உரைத்தல் –-நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ -இவை எல்லா வற்றிலும் இல்லாத நறு மணம் இவள் கூந்தலில் இயற்கையாகவே உள்ளதே –-மருங்கு உழலும் களி வண்டினங்காள் உரையீர் மடந்தை -கருங்குழல் நாறும் என்போதுடைத்தோ நும் கடி பொழிலே -என்றும் –-மருங்கு உழல்வாய் நீ யறிதி வண்டே சொல் எனக்கு மங்கை கருங்குழல் போல் உளவோ விரை நாறு கடி மலரே -என்றும்
பிறரும் அருளிச் செய்வார்களே –-நிலப்பூ வகையில் கொடிப் பூவும் புதற்பூவும் அடங்கும்
ஏனம் ஒன்றாய்-மண்டுகளாடி–மன் துகள் ஆடி -மஹா வராஹமாய் –-வைகுந்த மன்னாள் -அழியாத நலம் உடையவள் என்றவாறு இங்கே–
வண்டுகளோ வம்மின்-பூவின் வாசியும்-மணத்தின் வாசியும் தேனின் வாசியும் அறியும் நீங்கள் -புறம்பு யுண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு நான் சொல்லுகிற வார்த்தை கேட்க்கும்படி வாருங்கோள்–நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு-எளிதாக ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத நீர்ப் பூக்களிலும்-எல்லார்க்கும் கிட்டலாம்படியான நிலத்தில் பூக்களிலும்
உயர்ந்த சாகைகள் நிற்கிற மரத்தில் பூக்களிலும்-உண்டான வாசியை அறிந்து புஜித்துக் களித்து
அத்தாலே நிரதிசய ஆநந்திகளாய் எங்கும் ஓக்க ஸஞ்சரிக்கிற உங்களுக்கு--ஓன்று உரைக்கியம்–
நீங்கள் கண்ட வாசி போல் அன்றியே அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருபத்தொரு வை லக்ஷண்யம் சொல்லுகிறோம்–ஏனம் ஒன்றாய்–அத்விதீயமாய் இருபத்தொரு வராஹமாய்-அன்றியே
வராஹ ஜாதியோடே வேறுபாடு இல்லாதபடியான ஜாதி ஐக்யத்தை யுடையனாய்
(மானமிலா பன்றியாய் -அபிமானம் இல்லாத உப மானம் இல்லாத -இப்படி இரண்டு போல் இங்கும் ) மண்டுகளாடி-மண்ணினுடைய துகளை ஆசினவனுடைய-அதாவது-துகள் என்று-ஏக தேசமாய்
மஹா வராஹத்தினுடைய திரு வயிற்றுக்கு பிரளய ஆர்ணவ கதையான பூமி ஒரு கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை (திரு எயிற்றுக்கு -கோரைப்பல்லுக்கு என்றுமாம் ) வைகுந்த மன்னாள்-இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம்
போலே இருக்கிறவளுடைய–குழல்வாய் விரை போல்–புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே (கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )-விண்டு
எங்கும் ஒக்கப் பரம்பி-கள் வாரும்-மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்-மலருளவோ நும் வியலிடத்தே-நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ
இத்தால்-வண்டுகளோ வம்மின்-இவ் வாழ்வாருடைய வை லக்ஷண்யத்தை அன்பரானவர்கள்
பகவத் அனுபவ தத் பரராய்த் திரிகிற ஸாரஞ்ஞரைப் பார்த்து-(பகவத் ப்ராவண்யம் – மொட்டு-பல்லவம் -பிரமம்-பாகவத சமாஹம் -மலர்ந்து -மத்யமம்-ஆச்சார்யர் அபிமானம் – பழுத்தால் போல் சரம பர்வ நிலை அன்றோ ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் திரிந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனால் போல் )நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்–ஷீராப்தி சாயியான வ்யூஹ ஸ்தலத்தின் விகாஸத்தையும் பூதல வர்த்தியான அவதாராதி வை லக்ஷண்யத்தையும்
நாநா சாகைகளின் முடியிலே காணும் படியாய் நித்ய போக்யமான பர தசையில் (வேதாந்த விழுப்பொருள் தானே பர வாஸூதேவன் )வை லக்ஷண்யத்தையும் நிரந்தர அனுபவம் பண்ணி ஆநந்திகளாய் ஸர்வ லோகங்களிலும் காம சாரிகளாய்த் திரிகிற உங்களுக்கு ஓன்று சொல்லுகிறோம்-ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே-ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய அழிவற்ற தேசம் போலே
ஆஹ்லாத கரரான இவருடைய-தூராத் கந்தோ வாதி –தைத்ரியம் -2 ப்ரச்னம் -என்கிற கணக்கிலே
இவ் விகாஸமும் யசஸ் ஸுரப்யமும்(எண் திசையும் அறிய இயம்பிய கீர்த்தி அன்றோ ஆழ்வாரது )
நீங்கள் அனுபவித்த பகவத் சம்பந்திகளில் யுண்டோ என்று ஸ்லா கித்து உரைத்தார் ஆயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–வண்டுகளோ வம்மின்-வண்டுகாள் வாருங்கோள்–நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ மூன்று வகையாதல் நாலுவகை யாதல் சொல்லக் கடவது இறே-நிலப்பூவும் கொடிப்பூவும் என்று நிலத்திலே இரண்டாக்கி மற்றை இரண்டையும் கூட்டி நாலாகச் சொல்லுவாரும் உண்டு-நல்ல மலர்ப் பொழில் நாலும் நுழையீர்காள் -என்னக் கடவது இறே-பூ யுள்ள இடம் எங்கும் புக்கு
மதுபானம் பண்ணிக் கழித்து-அதுவே யாத்ரையாகத் திரிகிற உங்களுக்கு நல்லதொரு வார்த்தை சொல்லுகிறேன் வாருங்கோள்
ஸ்வாபதேசம்
வண்டுகளோ வம்மின் -பரம் பொருளை நடித்த திரியும் சாரக் க்ராஹிகள்–நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ-உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்-
நீர்ப்பூ -திருப் பாற் கடல் வ்யூஹ மூர்த்தி
நிலப்பூ — ராம கிருஷ்ணாதி விபவாதாரங்கள் –
மரத்தில் ஒண் பூ –வேதாந்த சிரஸில் உள்ள பரம பாத நாதன்
இப்படி இடைவிடாமல் அனுபவித்து தடை இல்லாமல் திரியும் -பாகவதர்கள் —-ஆழ்வாரது பக்தி -அழிவற்ற வைகுண்ட நாடு போலே பேரானந்தம் தரும் சிரோபூஷணம் -எங்கும் கண்டோம் அல்லோம் என்று புகழ்ந்து கொண்டாடின படி –பரம் பொருளை நாடித் திரியும் சார க்ராஹிகளுக்கு ஆழ்வார் பெருமையை உரைத்தவாறு
தாத்பர்யம்–தூது விட்ட வண்டுகள் நாயகனைக் கூட்டி வர-கலந்து -அப்போது இவளுக்கு உண்டான ஆனந்த அதிசயம் சமிப்பிக்க -சிறிது பிரிய எண்ணி-ராஸ க்ரீடையில் செய்தது போல் இங்கும் –
பிரிவைப் பேச ஆரம்பிக்க –-அப்போது முன் போல் ப்ராப்தமான நாயகியின் வியசனத்தைக் கண்டு-இந் நாயகன் நம்மிடம் வ்யாமோஹம் உள்ளவன் என்று நெடும் காலம் பிரிய வல்லன் அல்லன்
போன வேகத்தில் திரும்புவான் -என்று மத்யஸ்தர் -கிளைவித் தலைமகன்- சொல்ல
பிரிந்தால் தானே சுகம் தெரியும் -என்று பெருமாள் குகனுக்குச் சொல்லி பிரிந்தால் போல் பிரிந்தான்
இவளது பிரபாவம் தலைமகன் பேசினத்தை அவர்கள் கூறி சமாதானம் பண்ணுமதாய் உள்ள பாசுரம்-இவள் குழல் நறுமணம் போல் எங்கும் கண்டேன் அல்லேன் என்று சொன்னதை ஓ வண்டுகள் நான் உங்களை ஓன்று கேட்க்கிறேன்-அதுக்கு பதில் சொல்லிப் போங்கோள்-ஸ்தலமான தாமரை போன்ற பூக்கள்-நீரில் உள்ள மல்லிகை போன்ற பூக்கள்-மரத்தில் உள்ள சண்பகம் போன்றேற் பூக்கள்
ஜாதிப் பூக்கள் இவ்வாறு அநேக வித பூக்களில் சென்று மது பாநம் பண்ணினீர்கள்-அது எல்லாம்
வராஹ நாயனார் யுடைய பரமபதத்துக்கு சமமான பெருமை கொண்ட இவள் போல் உண்டோ
அங்கு போல் இவள் இடமும் நித்ய வாசம் செய்வதால்-அதே போல் பரம போக்யமான இவளுடைய திருக் குழலில் வாசனை மிக்கு உள்ள பூ வுடன் ஓக்குமோ-நீங்கள் சஞ்சரிக்கும் இடங்களில் இது போல் பூ உண்டோ-ஆச்சார்யர்களே – சேஷிகளும் உத்தேசயர்களும் ஆவார்கள் அன்றோ
பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடியேன் – போல் இங்கும் ஆழ்வார் வை லக்ஷண்யம் சொல்லப்படுகிறது –
10-4-சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-ப்ரவேஸம்-
தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருந்த ஐயத்தாலே-பிரிந்தார் படும் துன்பத்தினைப் பட்டு-அதனாலே மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய–செங்கனி வாய் -அதனாலே தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் மேல் –
எம்பெருமானார் நிர்வாகம்
முதல் திருவாய் மொழியிலே -1-1-பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே அடியைக் கூடியதாய் இருக்கும் அன்றோ –ப்ராப்யமாய் -அமரரர்கள் அதிபதி –
அடியைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்-தொழுது ஏழு –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்-
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –10-2-
அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்-நெடுநாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்
வெருவி இவர் துன்பம் உற்றவராக-இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து-
அவனும் தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் – வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-10-3-
ஆக முதல் திருவாய் மொழியிலே பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி-
அப்பறம் பொருள் தானே அடியைக் கூடிய பேறாக-ப்ராப்யமாய்- இருக்கையாலே-
அப்பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் சுலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -1-3–என்கிற திருவாய் மொழியாலே சொல்லி-
சாத்ய பக்தி -உபாயமாக சொல்லுவது எதனால் –
பிரபத்திக்கு முன்பே பக்தி வேண்டுமே -பரம்பரையா உபாயம் -பரம பிராப்யம் என்கிற ஆசை வர பக்தி வேண்டுமே –
பக்தி அதன் சாத்தியமான பிரபத்தி உடன் பொருந்தி -அது பின் பக்தி உடன் பொருந்தி
பின் சாத்தியமான பிராப்யத்துடன் பொருந்தியதை சொன்னவாறு –
ஆக-வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –10-4-
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை ஆதரித்துக் கொண்டு –
-உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக-முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-
சாத்ய பக்தி பிரபத்தி என்கிற -இவ்விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட சொல் உண்டோ என்னில்-அருளினன் -என்றாரே அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற பக்தி அன்று-அது சாதன பக்தி அன்றோ –
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து-அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்-
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தோடு கூடாதோ என்னில் –அது இவரோடு பாசுரங்களோடு முரண்படும்-
அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்-
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி-
ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட-
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு-பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து இறைவனுடைய திருவருள் நிற்க-அதற்புப் பின் உண்டான பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –
இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே பேறாக-நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்யகாரரும்
பிரபத்தியைப் பண்ணி-பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இதுவே ஸ்வரூபம் பிராப்தம் -பக்தி ஸ்வரூப விரோதம் என்றவாறு –
அவன் உபாயம் ஆனாலும் – இவனுக்கு ருசி உண்டாய் – பேற்றினைப் பெற வேண்டுமே-இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
அவனே சாத்ய உபாயம் என்றாலும் – ருசி வளர்ந்தால் தான் – பிராப்பிய சித்தி -இது அதிகாரி ஆக்குவதற்கு –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு அன்றோ – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- பிரபத்திக்கு முன் பக்தி
அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு -பிரபத்திக்கு பின் பக்தி
இரண்டும் இருந்தால் தான் அன்றோ – – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் மாறாடலாம் படி அன்றோ இருப்பன –
ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்-பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி-
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –இது தான் பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –10-4-
நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற மனத்தின்-அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே-குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க
ஆனால் மேலும் எல்லாம் கண் கூடாக காணுதலைப் போன்று-மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி -ஒவ் ஒரு குணத்தைப் பற்றி -பிறந்தன சில ரச விசேடங்களை சொன்ன இத்தனை யேயாம் அவ்விடங்களில்
தொடங்கின பொருளை முடிக்கை என்பதும் ஓன்று உண்டே-அதனைச் சொல்லுகிறது இங்கே-
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –
மேலே அருளியவை எம்பெருமானார் நிர்வாகம் –
இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்-ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற சுலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம் உறுதி -என்கிறாள்-
-என்று ஒரு உருவிலே பணிப்பர் பிள்ளான் –
இனி ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே-1-1- பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்-
அந்த பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும் இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது-பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது-
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்-
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய சாதன பக்தியை -பத்துடை அடியவர்க்கு -1-3–திருவாய் மொழியில் அருளிச் செய்தார்-
ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த-பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு-பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி -10-4-–/ கண்ணன் கழலிணை -10-5-–/ என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –
அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்-பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்-
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்-தவங்களில் மிக்க தவமாக சொல்லிற்றே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்
இனி ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து-ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
இரகசிய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்-
ஆக
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்-
அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே-10-2-
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று-அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது-த்வய மகா மந்த்ரத்தில் பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -10-2–என்னும் திருவாய் மொழியாலும்–வேய் மரு தோளிணை -10-3–என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பொருளை முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்-10-4-/கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்-10-5-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியாலும் /பத்துடை அடியவர் -1-3–என்ற திருவாய் மொழியாலும்-சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்று -ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை ஆண்டான் பணிப்பார் –
10-4-சாத்ய பக்தி சொல்லப்பட்டது -எம்பெருமானார் நிர்வாகம் -1-2- போலே -10-3- பிராசங்கிகம் –
பிரபத்தி பரம் -1-2- ஆளவந்தார் -பத்துடை அடியவர் 1-3-சாதன பக்தி பரம் –
-சார்வே தவ நெறி பிரபத்தி -பரம்-கண்ணன் கழலிணை பக்தி பரம் –
பிரபதிக்கு முன்னும் பின்னும் பக்தி வேணுமே -ப்ரேமம் வேணும் அவனை சரண் அடைய –
-உபாய பாவனையில் கண் வைக்காமல் கைங்கர்யம் -ப்ராப்ய ருசிக்கு பக்தி வேண்டுமே –
ஸ்தான த்ரயோ பக்தி -சாத்ய பக்தி -சாத்யத்துடன் சேர்ப்பிக்கும் பக்தி பிரார்த்தித்து பெற்றார் -எம்பெருமானார் –
உயர்வற உயர்நலம் -தத்வம் -ப்ராப்யம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பரத்வம்
அருளினன் -ஹிதம் -உபாயம் –
தொழுது ஏழு -புருஷார்த்தம் -வழி ஆகுமோ –
தொழுகை உபாயம் எழுகை உபேயம் என்றால் என்ன -தொழுகையே எழுகை -சாத்ய பக்தி அன்றோ -அதனால் அருளினன் சாதனம் –
மயர்வற மதி நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -தாரை போலே அனைத்து திருவாய்மொழிகளும் இதில் அடங்கும் –
உபாயம் இருந்தாலும் புருஷார்த்த பிரதான்யம் -முதல் திருவாய்மொழி –
கெடும் இடரில் -கைங்கர்ய பிரதி சம்பந்தி -கைங்கர்ய பிரதானம் இதில் -1-1-பரத்வம் -இருந்தாலும் -அங்கும் கைங்கர்ய பிரதி சம்பந்தி தானே –
அதனால் 1-1 /10-2- சேரும் என்றவாறு -அங்கே தொடங்கி இங்கே நிகமிக்கிறார் –
தாம் உபதேசித்த சாத்ய பக்தி -1-2- பிரபத்தியிலே மூட்ட -சேஷத்வ ஞானம் பரதந்த்ரன் புரிந்து -பிரபத்தி உபாயமாக தலைக் கட்டும் என்றபடி –
சாத்ய பக்தியையே பிரபத்தி என்னலாமோ என்னில்- இருவரும் பக்தி சாதனம் இல்லை என்பார்களே
பேற்றுக்கு உபாயமாக பிரபத்தியைப் பற்றி இருக்கிறார் என்பதுடன் சேராதே
சாத்ய பக்தி எதற்கு -என்றால் பிரபத்தியில் தூண்ட -மேலே ருசி வளரவும் பக்தி வேண்டும் –
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானங்களில் –
தவ நெறிக்கு சார்வு -சாத்யத்துடன் பொருந்தி பக்தி உபாயம் பலத்துடன் சேர்ந்தது என்றது பிரபத்தியில் மூட்ட என்றவாறு –
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய-ஆளவந்தார்
உபய கர்ம ஞான யோகம் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
அந்தக்கரணம் ஐ காந்திக பக்தி ஏக அந்த ஒன்றே முடிவு ஆத் யந்திக முடிவைத் தாண்டி யாவதாத்மா பாவி
பக்தியால் அடைய பெறலாம் -ஆத்மா இருக்கும் அளவும் பக்தி என்றால் -சாதனம் இல்லையே -பரம பாதம் சாத்ய பூமியிலும் உண்டே –
அனுபவம் தானே அங்கே -உபாய பாவம் வழி இல்லையே அங்கே கர்மம் தொலைத்த பின்பு
இங்கு விதி அற்ற படியால் கரு முக்கை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
அந்திம -சரம உபதேசம் -உபாய பாவம் மறந்து உபேய பாவத்தில் கண் வைக்க வேண்டும் உடையவர்
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானம் -பிரபன்னனுக்கும் அனுபவ த்துக்கும் கைங்கர்யத்துக்கும் -பக்தி வேண்டுமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -உபாய புத்தியை விட்டு -சாத்தியமாக ருசி வளர பண்ண வேண்டும் -ஸ்வயம் பிரயோஜன பக்தி —
கிருபையே உபாயம் உறுதி என்பதால் பிரபன்னர் -என்னலாம் -ஆர்த்தி மிகுதியைப் பார்த்தால் சாத்ய பக்தர் என்னலாம்-
கோபிகள் செய்வதை எல்லாம் பண்ணுகிறார் –
சாதன பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பக்தன் பிரபத்தி அங்கமாக செய்து -இதுவே ஸ்ரீ கீதை யிலே சரம ஸ்லோக அர்த்தம் –
விபீஷணாதிகள் இராவணாதிகளுக்கு உபதேசிக்க அது பக்திக்கு உடலானது போலே வீடு மின் முற்றவும் -நமக்கு உபதேசித்து பக்தி வளர்ந்து பிரபத்தி
ராகவன் சரணம் கத -பல வாக்கியம் இருந்தாலும் ஒரே சரணா கதி -முன்பு எல்லாம் அறிவிப்பு –
சர்வ லோக சரண்யாய ராகவாயா சரணம் -உபதேசிக்க பக்தி வளர அது தானே பிரபத்திக்கு தூண்டு வித்து –
ராவணன் தள்ளி விட்டு அதனால் இல்லை -பிராவண்யம் வளர பிரபன்னன் ஆனான் போலே –
சாத்யம் உடன் சேர்வது பகவத் சாஷாத்காரம் –
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் -பிரபத்தி அனுஷ்டித்தவனுக்கும் மூன்று அவஸ்தைகளும் உண்டே
கத்ய த்ரயத்தில் மூன்றையும் பிரார்த்தித்தார் -அது சாதன பக்தி இல்லை -ஸாத்ய பக்தி –
யாவதாத்மா பாவி -பக்தி வேண்டும் -பரம பக்தி -அங்கு -நிஜ சாஷாத்காரம் –
பிரத்யக்ஷ சாமானாக சாஷாத்காரம் -பர ஞான அவஸ்தையிலும் -ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகவே
-நீ போகேல் -சாஸ்திரம் -வரம்பு இல்லையே ஆழ்வார் உடைய பிரேம பக்திக்கு –
அங்கும் குண அனுபவம் -உபாசனத்திலும் குண அனுபவம் -பிராப்தி தசை போலே போக ரூபமாக இருக்குமோ என்னில்
ஆழ்வார் வேறு ஒன்றிலும் கண் வைக்காமல் சம்சாரம் நினைவில் இல்லாமல் உண்ணும் சோறு இத்யாதி
-பூவை பூம் –யாவையும் திருமால் திரு நாமமே என்று அன்றோ இருப்பார்
எதனால் இனி இனி என்று கதறுவதால் -பிராகிருதம் –
10-4 சாஷாத்கார நிலை -முன்பே இந்த நிலை இருந்தாலும் -அங்கு ஓர் ஓர் குணங்களை பற்றி –
இங்கு முனியே நான்முகனே அணித்து-விசத தமமான அனுபவம் -இங்கு தானே பல அனுபவம் பூர்ணம் –
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -சாதன பக்தி உபதேசம் -ஆளவந்தார் நிர்வாகம் படி –
ஆழ்வார் பிரபன்னர் -சாதன பக்தியை உபதேசிக்கிறார் –
அவனாலே அவனை அடைந்து பாட வேண்டும் -காலம் போக்க பிரபன்னர்களாகிய நாம் பாடி ஆடி கழிப்போம் –
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே--10-4-1-
சார்வு பிராப்தி தவ நெறி –ஸாத்ய பக்தி-சார்வு -என்றது பேறு- தவ நெறி -என்றது பக்தி மார்க்கத்தை-ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று-வணக்குடைத் தவ நெறி -1-3-5- என்றார் இறே-ஆகையால் இவன் ஒரு வணக்கத்தைச் செய்தால்-இவன் நம்மை நோக்கி குவாலாக வருந்தினான் -என்று-இதனை பெரிய காய கிலேசமாக நினைத்து இருக்கும்-அவன்கருத்தால் சொல்லுகிறது –
வேங்கடத்து உறைவார்க்கு –நம-வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே – அங்கமான வணக்கத்தை இட்டு அங்கியான பக்தியைத் தவம் என்ற சொல்லால் சொல்கிறது –அன்றிக்கே-யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் யஸ்ய ஞானம் அயம் தப -முண்டக உபநிஷத் -என்கிறபடியே-ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று ஆகவுமாம்
தாமோதரன் தாள்கள்-அவனை உகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் இத்தனை அன்றோ-வரத வலி த்ரய -பிரதம விபூஷணி வபூவ –
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-விலக்ஷண விக்ரகம் -நீர் கொண்டு எழுந்த காள மேகம் – பக்திக்கு கிருஷி பண்ண வேண்டாம் வந்து நின்றால் போதுமே-ருசிக்கு உத்பாதகமுமாய் –வளர்த்து பக்குவம் ஆனால் அனுபவிக்கவும் அந்த அழகே -பிராப்யம்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-
விக்ரக வை லக்ஷண்யத்துக்கு மேலே -ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்கிறது
யாவையும் யாவரும் தானாம் அமை உடை நாரணன் –பிரகார பிரகாரி பாவம் -அத்தையே இங்கு சொல்கிறது
பிருதிவி பஞ்ச பூதங்களை -சொல்லி காரணமான தேவாதி விஷயங்களையும் நினைக்கிறது -இத்தால் லீலா விபூதி உக்தன் என்றும்
கையும் திரு ஆழியும்—சொல்லி நித்ய விபூதியையும் சொல்லி –
———–
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-
மேலே கூறிய சௌலப்யம்-தமக்கு பலித்த படியை-அருளிச் செய்கிறார்-இதனை விட்டு ஒரு தேச விசேடத்தில் போனால் கொள்ளக் கடவ அடிமையை இந்த உலகத்திலே நாள் தோறும் கொள்ளா நின்றான் – அங்குப் போனால் குண அனுபவத்தாலே ஆத்மாவை -சத்தையை-நிர்வகிக்கும்–இங்கு குண ஞானத்தினால் தரிப்பியா நிற்கும் –
செங்கண்-அவளுடைய என்றும் உள்ள சேர்த்தியாலே-மதமுதிதரைப் போலே -சிவந்து – நீர் பாய்ந்த-பயிர் போலே செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவன் –
திரு மெய் யுறைகின்ற –-என்றாவது வருவான் என்று அன்றோ நித்ய வாசம்-
த்வயத்தில் நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறதே அன்றோ-மத் ப்ரத்யாயர்த்தம் –
————-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-
ஆர்த்தி ஹரத்வம் குணம் பத்தாம் பத்தில் -ருசிக்கு தன்னையே விஷயம் ஆக்கி அருளுகிறார் -பத்துடை அடியவர்க்கு எளியவன் திருவாய் மொழி அர்த்தமே இதிலும் அருளிச் செய்கிறார்-மீள்கின்றதில்லை-மறுவல் இடாதபடி-பிறவிப் பிணியைப் போக்கி-நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வன் ஆனவனுடைய திருவடிகளை தலைக்கு அணியாகப் பெற்றேன்–அடியாருக்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் அவனுடைய-தன்மைக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ-அவன் ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில் தன் ஊணை இழக்கிறான்-மண நோக்கம் உண்டவன் அன்றோ -பெரிய திருமொழி -8-10-1-அவனுடைய ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில்-அடுகுவளம் தடைப் படும் போல் காணும்-
அடுகு -என்று பெட்டி மேல் பெட்டியாய்-வளம் -என்று இனிய பொருளாய்-போனகப் பெட்டி-அடு குவளம் தடைப் படுதல் -நப்பின்னை பிராட்டி கடாஷம் பெறாமை-என் ஜீவனத்தை பறித்தான் ஆகில் தன் ஜீவனத்தை இழக்கிறான் –
ஆரால் குறை உடையம்-ஆரால் -என்கிறார் காணும்-என்றும் ஒரு சேதனனாலே பேறு-என்று இருக்குமவர் ஆகையாலே–எத்தால் -என்னாமல்-அசேதனம் -கர்மாதி உபாயாந்தரங்கள் கூடாதே –
பிறவித் துயர் கடிந்தோம் –பிறவித் துன்பத்தினை ஓட்டினோம் -என்றது –பரம பதத்திலே புகச் செய்தேயும்- ருசி முன்னாக பேறு இல்லாமையாலே-
கடலில் புக்க துரும்பு போலே மீளப் போந்தார்களே அன்றோ-வைதிகனுடைய பிள்ளைகள் –
மயர்வற மதிநலம் அருளினன் -என்று ருசி முன்னாக – அவன் தரப் பெற இருக்கிற நமக்கு-மீண்டு வருதல் என்பது ஓன்று இல்லை என்றபடி –
கடிந்தோம் -என்கிறார் காணும் -இறந்த காலத்தில் திரு மேனி உடன் இருக்கச் செய்தேயும் –
அவன் செய்வானாக ஏறிட்டுக் கொண்ட கார்யத்துக்கு-நிலையாகப் பெற்றேன் -என்ன வேண்டும்படி இருக்கும் அன்றோ –
ஸ்தித அஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம்தவ -ஸ்ரீ கீதை -18-73-நஷ்டோகோ மோஹ – பிரசாததத்தால் இந்த நிலை பெற்றேன் என்றான் –
என் தலை மேல் புனைந்தேனே – துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-என்றும்- கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும்-சொல்லுகிறபடியே-மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற இனிமை சொல்லுகிறது –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று வேண்டிக் கொண்ட அதனை-தலையாகப் பெற்று ஸ்ரேஷ்டமாக தலை மேல் பெற்று -கிருதகிருத்யன் ஆனேன்-
————
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் –அமரர் சென்னிப் பூச் சூடப் பெற்றேன்-வேண்டிக் கோடலே அன்றி அத் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன் – இப் பேறு பெருகைக்கு அவன் முயற்சி பண்ணின படி சொல்கிறது மேல்-
அவன் வண் தடத்தின் உள் கிடந்து-பெரிய திருமடல் -14-தவம் பண்ணிற்று-வண் தடம் -ஏகார்ணவம்-கடலில் கிடந்து -கல் மேல் நின்று -உள்ளில் நின்று கோர மா தவம் செய்தனன் கொல்–என் மனத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை-ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது என்று-
அறுதி இட்டு அதனாலே-கிருதகிருத்யனாய் இருந்தேன்-என்கிறார்-1-ஆலின்
இலைமேல் துயின்றான் -2-மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை-திரு வேங்கடத்தில் -ஸ்வயம் பிரயோஜனமாக நித்ய வாசம் செய்து அருளி –3-நெஞ்சுக்குள் பிரதிஷ்டித்தானாக -இருந்த திருக் கோலம் –கிடந்த நின்ற இருந்து அருளிய மூன்று நிலைகளையும் அனுபவிக்கிறார்–இங்கு விலக்குவார் இல்லாமையாலே-ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்தான் – –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே -மூன்றாவது நிலை-நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே-கதவு அடைத்து தள்ளினாலும் போக மாட்டானே –இருக்கும் அவனை போனான் என்று அழுத ஆழ்வார் -இப்படி அன்றோ ஆச்வாஸப் படுத்தி மாற்றி -உறுதி குலைக்க முடியாதே -நிச்சயித்து -அதனால் திருப்தியாக –இருந்தேனே-கிருதக்ருத்யன் ஆனேன் –
————
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-
நீரிலே கிடந்தும்-மலை உச்சியிலே நின்றும்-தன் பேறாக தவம் செய்து வந்து-என் நெஞ்சிலே இருக்கையாலே-கைச் சக்கரத்து அண்ணல்-தன்னைப் பற்றினவர்களை ஒரு காலும் கை விடான் –எப்போதும் கை கழலா நேமியான் -இனி ஒரு காலும் விட்டுப் போகான் என்று நிச்சயித்து இருந்தேன் –
கள்வம் பெரிது உடையவன் –மனத்தினைக் கை விடாமையே அன்றிக்கே–இங்கே இருந்து நாம் அறியாது இருக்க- தான் அறிந்ததாகக் கொண்டு அவ்வருகே-குவாலைப் பாரியா நின்றான் -என்றது- பரம பதத்து ஏறக் கொடு போக ஒருப்படுவது-அமானவனை இடுவித்து தீண்ட நினைப்பது-மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ளப் பார்ப்பதாய்-குவாலைப் பாரியா நின்றான்-பேசி ருசி வளர்த்து பாட வைத்து -மறைத்து -நாதமுனிகளுக்கு வழங்கி அனைத்துக்கும் திட்டம் போட்டு பாரித்து -பவிஷ்யகார விக்ரகம் கொடுத்து -நாம், அறிந்து கொண்டாடும் படி பாட வைக்கப் பாரியா நின்றான்-
மெய் போலும் பொய் வல்லன் –அர்ஜுனன் முதலாயினோர் பக்கல் இருக்குமாறு போலேயோ-துரியோதனன் முதலாயினோர்கள் பக்கலிலும் இருப்பது –
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே-பொய் செய்து தலைக் கட்டுவான் –
நாகத்து அணையானே-நம்மோடு ஒத்தவர்கள் பக்கல் செய்தது அன்றோ நமக்கு எடுத்துக் காட்டு-அநந்யார்ஹத்வம் அநந்ய ப்ரயோஜனர் என்கிற-சஜாதீயம் -நம்முடைய பேற்றுக்கு அடியுமாய்-நம்மோடு ஒத்தவர்களும் ஆனாரோடு செய்யும்படி இது அன்றோ –
———
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-
இன்று வந்து பற்றுமவரையும்-எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்-
அவர்களைப் போலே அங்கீகரிக்கும் அவன்-திருவடிகளிலே செருக்கு அற்றவனாய் விழப் பெற்றேன்
நாகத்து அணையானை –-உகந்தாரை படுக்கையாக-கொள்ளுமவன் ஆயிற்று-திருமேனி முழுவதும் ஆஸ்ரிதற்கு கொடுத்து இதிலும் மெய்யன் -அவர்களுக்கு ஏக தேசம் -பொய்யன் –
நாகத்து அணையானை – ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு –நாள்தோறும்-அருள் செய்யும் அம்மானை –ஞானம் -பக்தி–இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே-
அக் குறை தீர-ஒரே தன்மையான தான் நாள் தோறும் அருள் செய்யும் ஆயிற்று-
———-
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-
நம் தடைகளை எல்லாம் தானே போக்கி-அடிமை கொள்ளுமவனை-
நாள்தோறும் அனுபவி -என்று-தன் திரு உள்ளத்தை நோக்கி-அருளிச் செய்கிறார்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன்
————-
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்--10-4-8-
அவனை அனுபவிப்பாய் என்றவாறே-உகந்த நெஞ்சினைக் கொண்டாடி–முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே-மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழி நெஞ்சே–அவனை இடைவிடாதே அனுபவி–வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–நெஞ்சே மறவாது நித்ய அனுபவம் பண்ணி வாழப் பார்-
இவ் வாழ்வு நித்யமாக -வாழி என்று வாழ்த்துதலாக வுமாம்=
ஆழியான்-பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே–ஆழி யமரர்க்கும் அப்பாலான்-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் –
ஊழியான்-ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே-
ஊழி படைத்தான்-இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-
நிரை மேய்த்தான்—பாழி யம் தோளால் வரை எடுத்தான்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-
தங்களை காத்துக் கொள்வதில் சம்பந்தம் இன்றிக்கே-அவன் பண்ணும் பாதுகாவலை விலக்காத பசுக்களைக்-காத்தவன்–பாது காப்பவனாக வேண்டும்-
மதிலுக்கு உள்ளே இருப்பாரைப் போலே-அச்சம் கெட்டு இருக்கலாம் படியான-வலியைச் சொல்கிறது -பாழி யம் தோள் -என்று-
அன்றிக்கே-பாழி -இடம் உடைமை ஆகலுமாம்-ஐந்து லஷம் குடியில் உள்ளாறும் இவன் தோள்-நிழலிலே ஒதுங்கினாலும் திரு ஆய்ப்பாடி அளவன்றிக்கே-இன்னமும் பத்து திரு ஆய்ப்பாடிக்கு இடம்-போரும் என்னும் படியான- காக்கும் தன்மையின் துடிப்பு இருக்கும்படியைச் சொல்கிறது-
இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –
——————-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-
இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-மாறாடும்படியாக இருக்கிற-பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் மேல் –உயிரான பாசுரம் -சரம ஸ்லோகம் படி இதனாலே பிரபத்தி சாதன பக்தி ஸாத்ய பக்தி மூன்று நிர்வாகங்கள் பார்த்தோம் -எது முன்னால் –கண்டேன் –கண்டதும் -விண்டே ஒழிந்தன-அடி வுடையராய் இருந்தார் ––சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்–என்று விட்டுப் போயிற்றின -அப்புறம் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் என்பதால்-பரம பக்தர்களுக்கு சாஸ்திர நியதி இல்லையே-
கண்டேன் –என்றும் கேட்டே போகக் கூடிய பொருளை-கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை–அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி முண்டகம் –ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் – உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –
அருளினன் – அதனால் — –ஸாத்ய பக்தி -பெற்று -அதனால் பிரபத்தி -என்றும் நேராக பிரபத்தி என்றும் -பின்பு அவா பெருகி வழிந்து- ஸ்வீ க்ருத சித்த சாதனர்-சித்த வஸ்துவை சாதனமாக ஸ்வீகாரம் பண்ணி-இத்தை -பக்தியை -மார்க்க மதியத்தில் பர ஞானம் -அங்கே பரமபக்தி-சாத்தியமாக இரக்க-பகவத் ப்ரஸாதத்தாலே சாத்தியமான பிராப்திக்கு முன்னே சித்திக்கும் -இத்தையே பகவத் ராமானுஜர் கத்யத்தில் அருளிச் செய்கிறார் –
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக –அந்த சரம ஸ்லோகத்துக்கு இதுவும் கருத்து -என்கிறார்-அடிமை நிலை நின்றதே இருக்குமே-அடிமை நித்தியமான பின்பு அதற்குத் தக்கதான தொண்டும்-நித்யமாகச் செல்லும் படியாக-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-
கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –
—————-
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-
அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற-பிரயோஜனாந்தர பரர்களோடு-தமர்கட்கு ஓர் பற்றே-பக்திமான்களோடு-பிரபத்திமான்களோடு- -வேற்றுமை அற-அவனே உபாயம் -என்று-மேலே கூறியவற்றை எல்லாம்-முடிக்கிறார்- கதி த்ரயஸ்ய மூலம் –ஐஸ்வர்யாதி கைவல்யார்த்தி பகவல் லாபார்த்தி மூவருக்கும் –வகையால் -வேதப் பிரகிரியை படியே-சத் வித்யை -ஸ்வரூபம் உபாஸிக்க-தகர வித்யை -குணம் உபாஸிக்க -உபாசகனுக்கு என்றும் இதுவே —அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
குண உப சம்ஹார பாதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -குணக் கடல் அன்றோ –
ஸ்வரூபம் உபாஸிக்க- குணம் இல்லை – புத்தி ஆரோஹணத்துக்கு குணம் சொல்லிற்று என்பர் அத்வைதிகள் —தகர வித்யையில் சொன்னவனே இவனும் -குணம் விட்டுப் பிரியாதே –அங்குப் போனாலும் சோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண -குணங்கள் உடன் கூடிய ப்ரஹ்மம் அனுபாவ்யம் -ஆகவே ஸத்வித்யா உபாசகனும் குணத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே உபாசிக்கிறான் -எதனால் என்றால் குணங்களை ப்ரஹ்மத்திடம் இருந்து பிரிக்க முடியாதே -பிரபன்னனுக்கு வகையால் -உபாயாந்தரங்களில் -ப்ரயோஜனாந்தரங்களில்-போகாமல் -சரம ஸ்லோகம் படிக்கு என்றபடி –மாதவன் -பிள்ளையை -சின்ன சின்ன குற்றங்களைப் பொறுக்க அவள் உண்டே இதனால் வகையால் -மனம் ஒன்றி -மாதவன் -என்கிறார் –
நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திகை தோறு அமரர்கள் சென்று-இறைஞ்ச நின்ற தகையான் சரணம் –
கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே-
தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் –
பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே-
பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –
தமர்கட்கு ஓர் பற்றே –
ஓர் பற்று –
தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-
அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்-
தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –
தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-
————-
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-கிருஷ்ணன் திருவடிகள்-சுலபமாம்- இவன் பிரபத்தியைச் செய்து-உறுதி உடையவனாய்-இருக்கும் அத்தனையே வேண்டுவது –
காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை – இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு-தகுதியான மிடுக்கையும் அன்பையும்-உடையவன் -என்பார் –மல் திண் தோள் மால் –இத்தால் ப்ராப்யத்தையும் ப்ராபகத்தையும் சொன்னபடி
ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே-கிருஷ்ணன் திருவடிகளே –இனி அவ் வருகு போய் ஓன்று தேடிப் பற்ற-வேண்டாதபடியான பற்றாகும்- இதையும் பற்றி தாண்டி போய் மற்று ஒன்றைப் பற்ற வேண்டாம் –ஏவ காரம் –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply