Archive for the ‘திரு நெடும் தாண்டகம்’ Category

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-11-15- -திவ்யார்த்த தீபிகை —

September 29, 2014

எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப் பட்டிருக்கும்;
அவனுடைய திருநாமங்களைச் சொல்லி யநுபவித்தல்,
திருக்கல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல்,
வடிவழகை வருணித்து அநுபவித்தல்,
அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல்,
அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசி யநுபவித்தல்-என்றிப்படி பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம்.

இவ்வகைகளில் பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது-
ஆழ்வார் தரமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசியநுபவித்தல்.
இப்படி யநுபவிக்குந் திறத்தில், தாய் பாசுரம் தோழி பாசுரம் தலை மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு.
அப்போது ஆழ்வார்க்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி,
‘பரகாலநாயகி‘ என்று பெண்மைக்குப் பெயர் வழங்கப்பட்டுவரும்.
தாய் சொல்வது போலவும்
தோழி சொல்வது போலவும் தலைமகள் சொல்வது போலவும் பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரம் பேசுகிறவர் ஆழ்வாரேயாவர்.
ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகினாலும் அவற்றுக்குப் பிரதானமான பெயர் ஒன்றேயாயிருக்குமா போலே,
இம் மூன்று நிலைமைகளாகச் சொல் மாலை வழிந்து புறப்பட்டாலும்
“மன்னுமானமணி மாடமங்கைவேந்தன் மான வேற் பரகாலன் கலியன் சொன்ன“ என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும்.

ஆழ்வார் தாமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீ பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் ஏதுக்காக வென்னில்;
ஆழ்வார் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகிறாரல்லர், அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது.
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமடங்கப் பெண் தன்மையதாய் இருக்கையாலும்,
ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமே யி்ன்றிப் பாரதந்திரியமே வடிவாயிருக்கையாலும்
இவ் வகைகளுக்கேற்ப ஸ்த்ரீ பாவநை வந்தேறியன்று என்றே கொள்ளலாம்.

தண்டகாரண்ட வாஸிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தரியத்தில் ஈடுபட்டுப் பெண்மை விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடினர் என்ற ஐதீஹ்யமுண்டு.
ஆழ்வார் அப்படியன்றியே அப்போதே பெண்மையை யடைந்து புருஷோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர்.

ஆண், பெண் என்ற வியவஹாரங்கள் சிற்றின்பநுகர்ச்சிக்கன்றோ ஏற்பட்டவை;
பேரின்பவநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும்
கொங்கை முதலிய சொற்களை யிட்டுப் பாசுரங்கள் கூறுவதாகவும் நிகழ்கிறவிது என்னோ? எனின்;
விஷயாந்தரகாமம் என்றும் பகவத் விஷயகாமம் என்றும் காமம் இருவகைப்படும்;
வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்கார முறைமையில் பரிணமித்து நிற்கும்.
சிற்றின்பவநுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதநமாயிருப்பது போல,
பகவத் விஷயாநுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால்
அவையே கொங்கை முதலிய சொற்களால் அருளிச் செயல்களிற் கூறப்படுகின்றன வென்றுகொள்க.

ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள் அருளிச் செய்யக் கூடுமாயினும்
ஆழ்வார்கள் ச்ருங்கார ரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் யாதெனில்;
ஆரோக்கியத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட் கொள்ள இறாய்க்குமவர்களுக்கு
வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்துத் திண்பிப்பது போலச் சிற்றின்பம் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றனரென்ப.

பகவத் விஷயத்தில் அபிநிவேசம் மீதூர்ந் காலத்தில் தன் நிலைமாறிப் பெண் நிலை பெற்றுப் பேசுமிடத்தில்,
தாய் பாசுரமென்றும் தலைவி பாசுரமென்றும் தோழி பாசுரமென்றும் இப்படி வகுத்துக் கூறுவதற்கும் உட்கருத்து உண்டு;-
தோழியாகப் பேசுவதற்குக் கருத்து: –
நாயகனையும் நாயகியையும் இணக்கிச் சேர்க்குமவள் தோழியாவள்.
திருமந்திரத்தில் பிரணவத்தினால் எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹசேஷத்வம்
முதலிய ஸம்பந்தங்களை உணருகையே அப்பெருமானோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே
அந்த ஸம்பந்த ஞானமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழி யென்பதாகக் கொள்க.

பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்பு மிகுதியால்
அவனிருப்பிடத்துக்குச் செல்ல வேணுமென்று பதறுமளவில் படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்குப்
பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவள்;
ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப் பெறுதலில் காரணமில்லாமையாலே
அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவல் அதிகரிக்கப்பெற்று அதனால் படிகடந்து நடக்கவேண்டி வந்தவளவில்
இது ப்ரபந்நர் குடிக் கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி
‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்க வேணும்‘ என்று சொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற
நம: பதத்திற் கூறப்பட்ட உபாய அத்ய வஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக் கொள்க.

உறவினர் கூட்டக் கூடுகையன்றியே தானாகவே புணர்ந்து நாயகனுடைய மேம்பாட்டிலே ஈடுபட்டுக் குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல்
‘அவனைக் கிட்டியல்லது நான் உயிர்வாழ்ந்திருக்கமாட்டேன்‘ என்னும் பதற்றத்தை உடையவளாயிருப்பவள் உலகில் மகள்;
பிரணவத்தினாலும் நமஸ்ஸாலும் சேஷியென்றும் சரண்யனென்றும் உணரப்பட்ட எம்பெருமானுக்கு
நாராயண பதத்தினாற் கூறப்பட்ட ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றில் சேர்க்கையாலுள்ள பெருமையை அநுஸந்தித்து
அதனாலே அவனைத் தாமதித்து அநுபவிக்க நிற்க மாட்டாமல் ‘அவனே உபாயம்‘ என்ற கோட்பாட்டை அதிக்கிரமித்து,
கிட்டி யநுபவித்தாலொழியத் தரிப்புற்றிருக்க வொண்ணாதபடி நடக்கிற ப்ரஜ்ஞாவஸ்த்தையை மகள் என்பதாகக் கொள்க.

இம் மூன்று அவஸ்தைகளுள் முதல் அவஸ்தை நடக்கும்படியைத் தோழி பாசுரத்தாலும்,
இரண்டாவது அவஸ்தை நடக்கும்படியைத் தாய் பாசுரத்தாலும்,
மூன்றாவது அவஸ்தை நடக்கும்படியை மகள் பாசுரத்தாலும் வெளியிடுவரென்றதாயிற்று.

இப்பாசுரந் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் தாய் வார்த்தையாகச் செல்லுகின்றன.
இவற்றில், ஆழ்வார்க்கு நாயகி யவஸ்தை ஒரு புறத்திலும்
தாயின் அவஸ்தை மற்றொரு புறத்திலும் நடக்கிறபடியாலே,
எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வார்ககு விரைவு உண்மானமையும்
‘நாம் பதறக்கூடாது‘ என்கிற அத்யவஸாயமும் மற்றொரு புறத்தில் உண்டானமையும் விளங்கும்.
தன் ஸ்வரூபத்தை நோக்குமளவில் அத்யவஸாயம் உண்டாகும்;
அவனுடைய வைலக்ஷண்யத்தை நோக்குமளவில் பதற்றம் உண்டாகும்.

(பட்டுடுக்குமித்யாதி)
பரகால திருத் தாயார் தன் மகளின் நிலைமைகளைக் கண்டு கலங்கி
‘இவளுக்கு இப்படிப்பட்ட அவஸ்தை உண்டானமைக்கு என்ன காரணம்?‘ என்று குறி சொல்லுங் குறத்தியாகிய
கட்டுவிச்சி யொருத்தியை வினவ,
அவள் ‘எம்பெருமான் படுத்துகிறபாடு இது‘ என்று சொல்ல,
அதை வினவ வந்த உறவினர் பாடே சொல்லுகிறாளாய்ச் சொல்லுகிறது இப் பாட்டு–

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனி நெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல் வண்ணரிது செய்தார் காப்பா ராரே?

பதவுரை

பள்ளி கொள்ளான்–உறங்குகின்றிலன்;
என் துணை போது-ஒரு நொடிப்பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்-என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்-எம்பெருமானுடைய
திரு அரங்கம்-ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்-எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு-அழகிய வண்டுகள்
மட்டு விக்கி-(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ் செய்யப் பெற்ற
கூந்தல்-கூந்தலை யுடையவளான
மட மானை-அழகிய மான்போன்ற இப் பெண் பிள்ளையை
இது செய்தார் தம்மை-இப்படிப்பட்ட நிலைமை யடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன-உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்-‘கடல் போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்-நங்கைமீர்களே!,
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு)
காப்பார் ஆரே-இவ் வாபத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறு யாருளர்?.

பட்டு உடுக்கும் –
இப் பெண்பிள்ளையானவள் புடைவையை உடுக்கத் தொடங்கினாள்; ஏதுக்காக வென்னில்,
நல்ல வுடையை உடுத்தோமாகில் இவ்வுடையழகை இழக்கலாகாதென்று நாயகன் பதறி ஓடிவருவானென்று கருதி உடுக்கத் தொடங்கினாள்;
உடை வாய்த்தவாறே அவன் வருவானென்று மகிழ்ந்திருந்தவள் அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே

(அயர்த்து இரங்கும்)
மோஹிக்கலானாள்.
அயர்த்தல்-மோஹித்தல்; இரங்குதல்-வாய் பிதற்றுதல்.
இரங்குதல் முன்னமும் அயர்த்தல் அதற்குப் பின்பும் நிகழ வேண்டியிருக்க முறைமாறும்படி யாயிற்று விஷய வைலக்ஷண்யம்.

“பட்டுடுக்குமயர்த்திரங்கும்“
என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள்கூறுவர்; அதாவது,
பட்டு உடுக்கும்-இப்போது தான் அரையில் துணியுடுக்கும் பருவமாயிருக்கச் செய்தேயும்,
அயர்த்து இரங்கும்=நாயகனைப் பிரிந்த நிலைமையில் மூச்சு அடங்கும்படியாக வுள்ளதாயிற்று இவளுக்கு நிகழ்கிற அவஸ்தை.
மோஹித்திருக்கும் நிலைமையில் ஞானம் நடையாடாமையாலே வருத்தமில்லை;
அதில் ஞானம் குடிபுகுந்து அரற்றுதலாய் செல்லும் நிலைமையில் வருத்தம் மிகுகையாலே அயர்வுக்குப் பின்பு இரக்கம் கூறப்பட்டது.

வாய் பிதற்றி வருந்திக் கிடந்த பெண் பிள்ளையை ஏதேனும் ஒரு விதத்தாலே தரிப்பிக்க வேண்டித் திருத்தாயார்,
பண்டு ஊணுமுறக்கமின்றியே இவள் பார்வையோடே போது போக்கிக் கிடந்தாளாகையாலே
அதைக் கொணர்ந்து தந்தோமாகில் ஒருவாறு ஆறியிருப்பளோவென்று பார்த்துப்
பாவையை (மரப்பாச்சியை)க் கொண்டுவந்து காட்டினாள்;
அது கண்ணுக்கு விஷம் போலே தோற்றினபடியாலே சீறியுதைத்துத் தள்ளினாள்.
பாவையை யொழியப் போதுபோக்காதிருந்தவளன்றோ இப்போது பாவையை அநாதரிக்கிறாள்.
பகவத் விஷயத்திலுண்டான ஸங்கம் இதர விஷயங்களிற் பற்றறுத்தபடி.

பனி நெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்=
இவளுடைய கண்களின் பரப்பு உள்ளவளவும் நீர் வெள்ளங் கோத்ததாயிற்று.
குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர் பெருக வேண்டுங் கண்களிலே அந்தோ! சோகக் கண்ணீர் பெருகும்படியாயிற்றே!
‘நெடுங்கண்‘ என்றது
மஹானான எம்பெருமானையும் ஒரு மூலையிலே அடக்கவல்லதான கண் என்றவாறு.
ஸ்வாபதேசத்தில் கண் என்று ஞானத்தைச் சொன்னபடி.
எம்பெருமானைச் சேரப் பெறாத வருத்தத்தினால் ஞானக் கலக்கமுண்டானமை கூறியவாறு.

‘படுக்கையிலே சாய்ந்து உறங்கப் புகுந்தால் கண்ணீர்த் ததும்புதல் மாறும்‘ என்று சொன்னாலும் பள்ளி கொள்கின்றாளில்லை;
“தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள்துஞ்சுதல்“ என்றபடியே
கண்ணுறங்க ப்ரஸக்தியுண்டோ?
கூடிக் களிக்குங்கால் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்று உறங்கப் பெறாள்.
பிரிந்து படுங்கால் சோகக் கண்ணநீராலே உறங்கப்பெறாள்.
ஸம்ச்லேஷதசையில் அவன் உறங்கவொட்டான்;
விச்லேஷதசையில் விரஹவேதனை உறங்க வொட்டாது.

தன் வயிற்றிற் பிறந்தவளைப் பற்றிச் சொல்லுமிவ்விடத்து ‘உறங்காள்‘ என்று சொல்லலாமாயிருக்க,
“பள்ளி கொள்ளாள்“ என்று கௌரவச் சொல்லாலே சொன்னது,
வயிற்றிற் பிறந்தவரேயாகிலும் பகவத் ஸம்பந்தம் பெற்றவர்கள் உத்தேச்யதை தோற்றக் கௌரவித்துச்
சொல்லக் கடவர்களென்கிற சாஸ்த்ரார்த்தை வெளிப்படுத்தும்.
“கள்ளவிழ்சோலைக் கணபுரம் கை தொழுதும் பிள்ளையைப் பிள்ளை யென் றெண்ணப் பெறுவரே“
“விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக்கேட்டு,
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.“ என்ற பாசுரங்களுள் குறிக்கொள்ளத் தக்கன.

எட்டுணைப் போது என் குடங்காலிருக்க கில்லாள்=
பெண் பிள்ளை உறங்கக் காணாமையாலே, முன்பு தன் குடங்காலிலே உறங்கிப் போகக் கண்ட அநுபவத்தாலே
இப்போதும் அதில் உறங்கக் கூடுமோ வென்று பார்த்துத் தன் குடங்காலிலே இருத்தப் பார்த்தாள்;
அது நெருப்போடே அணைந்தாற்போல இருக்கையாலே துணுக்கென்றெழுந்தாள்.

இடைவிடாமல் என்குடங்காலிலேயே யிருந்து உறங்கிப் போது போக்கிக் கொண்டிருந்த விவளுக்கு
இப்போது ஒரு நொடிப்பொழுதும் அதிற் பொருந்தாதபடியாவதே! என வருந்திக் கூறுகிறபடி.
‘எட்டுணை‘ ‘எட்டணை‘ என்பன பாடபேதங்கள். (எள்Xதுணை= எட்டுணை.) எள் X தணை, எட்டணை.)
எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் – க்ஷண காலமும் என்றபடி.

இனி இவள் வாய்வெருவும் பாசுரமேதென்னில்,
எம்பெருமான் திருவரங்க மெங்கே யென்னும் =
என்னை இப்பாடுபடுத்தினவன் என்னை இங்ஙனே துடிக்கவிட்டு ஒரு விசாரமின்றியே கண்ணுறங்குமிடம்
எங்கே எங்கே யென்று பிதற்றா நின்றாள்.
பாவையைப் பேண் வொண்ணாதபடியும்
தாய் மடியிலே பொருந்த வொண்ணாதபடியும்
என்னைத் தன் பக்கலிலே ஈடுபடுத்திக் கொண்டவனுயையுமிடம் எங்கே யென்கின்றாள்.

காதலனுடைய திரு நாமத்தைச் சொல்லாமல் ‘எம்பெருமான்‘ என்றது ஏனென்னில்;
உற்றாருறவினர் கூட்டக் கூடினதன்றியே இயற்கைப் புணர்ச்சி யாகையாலே
ஆண்மை பெண்மைகளே ஹேதுவாகக் கலந்த கலவியாமத்தனை;
கூட்டுவாருண்டாகிக் கூடிலன்றோ திருநாமமறியலாவது; ஆகையாலே எம்பெருமான் என்கிறாள்.

ஆனால், அவனூர் திருவரங்கமென்பது மாத்திரம் எங்ஙனே அறியப்பட்ட தென்னில்;
ஸம்ச்லேஷகாலத்தில் நாயகன் விச்லேஷத்தை நினைத்து ‘பிரியேன்‘ பிரியில் தரியேன்‘ என்று பிரிவை
ப்ரஸங்கிக்கிறவளவிலே இவள் நம் ஊரைச் சொல்லிக் கொண்டாவது தரித்திருக்கவேணு மென்று
‘நம்மூர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று சொல்லுகையாலே ஊரின் பெயர் தெரியலாயிற்றென்ப.

தன் மகளுக்கு நேர்ந்த நிலைமை பகவத் விஷயத்தில் அவகாஹித்ததனாலுண்டாய தென்று தனக்குத் தெரிந்திருந்தாலும்
இதனை உற்றாருறவினர்க்குத் தானே வெளியிடுதலிற் காட்டிலும் கட்டுவிச்சி முகமாக வெளியிடுதல் நன்றென்று
கருதிய திருத்தாய் ஒரு கட்டுவிச்சியைத் தேடிநின்றாள்;அவ்வளவிலே,

“கொங்குங் குடந்தையுங் கோட்டியூறும் பேரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
கண்டியூராங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திருவேனை யாரிங்கழைத்த்தூஉ,
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமட வேளுக்கை தென்குடந்தை
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்துதூஉ,
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
வேங்கடமும் விண்ணவரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!“

என்று தெருவேறக் கூவிக்கொண்டு தானாகவேவந்து சேர்ந்தாள்,
அவளை நோக்கித் தாயானவள்
“மட்டுவிக்கி மணிவண்டு முரலுங்கூந்தல் மடமானை யிருசெய்தார்தம்மை மெய்யே கட்டுவிச்சி! சொல்“ என்றாள்.

குறிசொல்லுகிற குறத்திக்குக் கட்டுவிச்சி யென்று பெயர்
திருவாய்மொழியில் “இது காண்மினன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற் கொண்டு“ என்றும்,
சிறிய திருமடலில் “அது கேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி“ என்றும் வருவன காண்க.

ஐயங்கார் திருவரங்கக் கலம்பதத்தில் –
“காலமுணர்ந்த குறத்தி நான் கருதினை யொன்றது சொல்லுவேன்,
பாலகனுச்சியி லெண்ணெய்வார் பழகியதோர் கலை கொண்டுவா,
கோலமலர்க்குழன் மங்கை! நின்கொங்கை முகக்குறி நன்றுகாண
ஞாலமுவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே‘ என்று கட்டுவிச்சியின் பாசுரமாகப்
பாடியுள்ள செய்யுளும் குறிக்கொள்ளத்தகும்.

(மட்டுவிக்கி இத்யாதி)
மதுவைக் கழுத்தளவும் பருகி ரீங்காரஞ் செய்கின்ற வண்டு கள் படிந்த கூந்தலை யுடையவளான இப்பெண் பிள்ளையை,
இதுசெய்தார் தம்மை=குழலிலணிந்த பூவைச் சருகாக்கி வண்டுகளைப் பட்டினி யடிக்கையாகிற இத்தொழில் செய்த பெரியவரை,

கட்டுவிச்சி! மெய்யே சொல் என்ன=
‘வாராய் குறத்தியே! நெஞ்சில் தோன்றின தொன்றைச் சொல்லிவிடக் கூடாது;
உள்ளபடியே சொல்ல வேணும்‘ என்று நான் கேட்க,

(கடல் வண்ணர் இது செய்தார் என்று சொன்னாள்)
கடலின் நிறம் போன்ற நிறமுடையரான பெரிய பெருமாள் செய்த தெய்வ நன்னோய்காண் இது! என்றாள்,
கடல் கொண்டு போன வஸ்துவை நம்மால் மீட்கப் போமோ? என்றாள்.

காப்பார் ஆரே? =
வேலியே பயிரை யழித்தால் நோக்குவாருண்டோ?

ஆக இப்பாசுரத்தால்,
எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வார்க்கு வாய்த்தபடியும்,
இது நித்ய கைங்கரியத்திற்கு உறுப்பாகமல்
ஆற்றங்கரை வாழ் மரம்போல் அஞ்சும்படியாக இவ்விபூதியிலே இருக்க வைக்கையாலே நோயாகச் சொல்லப்படுகிற தென்பதும்,
இது தான் ஆத்ம ஸ்வரூபாநு பந்தியாகையாலே ஆத்மா உள்ளவரைக்கும் நிலைத்திருக்கக் கூடிய தாய் அபரிஹார்யமான தென்றும்,
இவ்வுண்மையை ஜ்ஞாநாதிகரான பாகவதர்கள் அறிவார்களென்றும் சொல்லிற்றாயிற்று.

நங்காய்! =
தாய் தன்து தோழியை நோக்கிச் சொல்லுகிறபடி.

ஆறு பல வாய்க்கால் வழியாக பெருகி வெவ்வேறு பெயர்கள் உண்டானாலும்
தாய் தோழி தலைமகள் தானான தன்மை பாசுரங்கள் ஆனாலும்
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பாசுரமாகவே தலைக் காட்டி அருளும்
பெண்மையை அடைந்து புருஷோத்தமனை காதலிக்கிறார்
தண்ட காரண்ய ரிஷிகள் பெண்மை விரும்பு பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டது போலே
வேப்பிலை உருண்டை வெல்லத்தில் சேர்த்து கொடுக்குமா போலே பகவத் காமம்-

தாய்- உபாய அத்யாவசியம் நம பதார்த்தம்
தோழி -சம்பந்தம் உணர்த்தும்
மகள் -நாராயண பதார்த்தம்- ஸ்வரூபம் ரூபம் குணங்கள் சேஷ்டிதங்கள்
கிட்டி அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத பிரஞ்ஞா அவஸ்தை
தன் ஸ்வரூபத்தை நோக்கும் அளவில் அத்யாவசாயம் உண்டாகும்
அவனுடைய வைலஷண்யத்தை நோக்கும் அளவில் பதற்றம் உண்டாகும்

பட்டுடுக்கும்
தாயார் கட்டுவிச்சி
எம்பெருமான் படுத்தும் பாடி என்று சொன்னதை
அதை வினவ வந்த உறவினர் இடம் சொல்லுவதாக
நல்ல ஆடை உடுத்தி இதை காண நாயகன் வருவான்
என்று மகிழும்
வரக் காணாமையால்

அயர்த்து இரங்கும்
மோஹித்து வாய் பிதற்றும்
வாய் பிதற்றி மோஹிக்காமல் -முறை மாறும் படி விஷய வைலஷண்யம்
மோஹித்தாலும் ஞானம் புகுந்து அலற்ற வைக்கும்

பாவை பேணாள்
பகவத் விஷய சங்கம் இதர விஷய பற்று அறுத்த படி

பள்ளி கொள்ளாள்
கௌரவ வார்த்தை
கள்ளவிழ் சோலை கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே
விளக்கொளியை மரகதத்தை திருத் தண் காவில் வெக்காவில் திரு மாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதல்
சம்ச்லேஷ தசையிலே அவன் உறங்க ஒட்டான்
விஸ்லேஷ தசையிலே விரஹம் உறங்க ஒட்டாது

எட்டுணைப் போதும் என் குடங்கா லில் இருக்க கில்லாள்
எள் துண–எட்டுணை
எள் தனை -எட்டணை

எம்பெருமான் திருவரங்கம் எங்கே எங்கே என்னும்
திரு நாமம் அறியாள்
பிரியேன் பிரியில் தரியேன் -நம்மூர் திருவரங்கம் பெரிய கோயில் -என்று தரிக்க சொல்லிப் போந்தான்

தாய் கட்டுவிச்சி தேடி நிற்க
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டியே திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடமும்
மண்ணகரம் மா மாட வேளுக்கை தென்குடந்தை
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
நாகத்தணை குடைந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
என்று தெரு தெருவே கூடிக் கொண்டு தானாகவே வந்து சேர்ந்தாள்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் -என்றாள்

ஐயங்கார் திருவரங்க கலம்பகத்தில்
காலம் உணர்ந்த குறத்தி நான் கருதினை ஒன்றது சொல்லுவேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பலகியதோர் கலை கொண்டு வா
கோல மலர்க்குழல் உன் மங்கை நின் கொங்கை முகக்குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்னுவை நம்பெருமாளையே

மதுவை கழுத்தளவும் பருகி ரீங்காரம் செய்கிற வண்டுகள்
படிந்த கூந்தலை உடைய இப் பெண் பிள்ளையை

கடல் வண்ணர் இது செய்தார்
கடலில் போன வஸ்துவை நம்மால் மீட்கப் போமோ
வேலியே பயிர் அழித்தால் நோக்குவார் உண்டோ

ஆக
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வாருக்கு வாய்த்த படியும்
அது நித்ய கைங்கர்யத்துக்கு உருப்பாகாமல் ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி
இது தான் ஆத்ம ஸ்வரூப அனுபபந்தி ஆகையால்
ஆத்மா உள்ளவரை நிலைத்து இருக்கக் கூடியதாய்
அபரிஹார்யமானது என்றும்
இந்த உண்மையை ஞானாதிகாரரான பாகவதர்கள் அறிவார்கள் என்றும் சொல்லிற்று-

————————————————————–

கீழ்ப் பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத் தாயர்
வினவ வந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும்,
எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும்
முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது;
அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்;
அதனை வினவ வந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய்.
இப் பெண் பிள்ளை நின்ற நிலை இது; இவளுடைய ஸ்வரூப ஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது;
இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று.

கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை
“நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி.

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே.

பதவுரை
(இப் பெண்பிள்ளை)
நெஞ்சு-மனமானது
உருகி-நீர்ப்பண்டமா யுருகி
கண் பனிப்ப நிற்கும்-கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்-மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்-பெரு மூச்சு விடுகின்றாள்;
உண்டு அறியாள்-போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்-உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்-பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்ய யுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்-அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்-பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா–என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்-பெண் மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து-விசாலமான இப் பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்-ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்–அந்தோ!.

நெஞ்சு உருகி =
நெருப்பினருகே மெழுகு போலே விரஹாக்நியாலே நெஞ்சு பதஞ் செய்யா நின்றது.

கண் பனிப்ப =
உருகின வெள்ளம் உள்ளடங்காமையாலே, நீர் நிரம்பின ஏரிக்குக் கலங்கவெடுத்து
விடுங்கணக்கிலே கண் வழியே புற வெள்ளமிடுகிறபடி.

நிற்கும் =
க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணக் கடவதான நெஞ்சு அழிந்து போகையாலே
ஒரு வியாபாரமும் செய்ய மாட்டாதே நிற்கின்றாள்.

சோரும் =
துவட்சி யடைகின்றாள்;

நெடிது உயிர்க்கும் =
உள்ளுண்டான சோகாவேசத்தாலே நெடுமூச்செறியா நின்றாள்.

உண்டறியாள் =
உணவு இப்படியிருக்க மென்பதே இவளுக்குத் தெரியாது ;
கூடியிருக்குங் காலத்திலே “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்“
என்றிருக்கையாலே அப்போதும் ஊண் இல்லை;
விரஹ காலத்தில் உணவு விஷமாயிருக்கையாலே ஊண் இல்லை;
ஆக உணவில் வ்யுத்பத்தியே யில்லை யென்றதாயிற்று.

உறக்கம் பேணாள் =
‘நங்காய்! காதலனுக்கு உன் உடம்பன்றோ தாரகம்; உடம்பன்றோ தாரகம்;
உறங்கா விடில் தேஹம் கெட்டுப் போகுமே; காதலன் பிறகு வருந்துவானே;
அவனுடைய போகம் குன்றாமைக்காகவாவது சிறிது உறங்க வேணும்‘ என்று சொன்னாலும் உறங்கப் பார்க்கின்றிலள்:
இவை யெல்லாம் எங்ஙனே யாயினுமாயிடுக; ஸ்வரூப ஹாநியாம்படி வாய் விட்டுக் கதறுகின்றாளே!,
அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றாளே!,
இதனைப் பாருங்கோளென்கிறாள் நஞ்சரவில் என்று தொடங்கி.

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீயென்னும் =
திருவனந்தாழ்வானுடைய பரிவுக்கு உகந்து ‘நஞ்சரவு‘ என்கிறாள்.
“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது.
பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற
திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத் தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று.
மென்மை, குளிர்த்தி, பரிமளம் என்று படுக்கைக்கு உரியனவாகச் சொல்லப்படுகிற லக்ஷணங்கள்
சாதியியல்வாகவே அமையப் பெற்ற ஆதிசேஷன் நம் தலைவனுக்குப் படுக்கையாகப் பெற்ற பாக்கியம் என்னே! என்று உகக்கிறாள் போலும்.
இப்படிப்பட்ட படுக்கையிலே படுத்து, வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுந்திராதபடி கண் வளர்ந்தருளும் போது
தகட்டிலழுத்தின மாணிக்கம் போலே அழகால் குறையற்று விளங்குபவனே! என்று வாய்விட்டுக் கூப்பிடா நின்றாள்.

இப்படி உகந்து சொல்லுகிற ளென்கை யன்றியே ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிறாளென்றுங் கொள்ளலாம்;
எங்ஙனே யென்னில் ;
நஞ்சரவு பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிற னென்றிருந்தோம்;
அது ஒருவியாஜ மாத்திரமாய் என்னைப் போன்ற அநுகூலர்களும் கிட்ட வொண்ணாதபடி விஷத்தை உமிழ்கின்றானே!‘
இருவர் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் எங்ஙனே துயிலமர்ந் திருக்கிறார்!
எனக்குத் தாயின் மடியும் பொருந்தாதிருக்க அவர்க்கு எங்ஙனே படுக்கை பொருந்திற்று என்றவாறு.

வம்பார் பூ வயலாலி மைந்தா வென்னும் =
தன்னைப் பாணி க்ரஹணம் பண்ணின விடத்தைச் சொல்லி வாய் வெருவுகின்றாள்.
எப்போதும் வஸந்த ருதுவே விளங்கும்படி யாகவுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலியிலே தன்னுடைய
இளம் பருவத்தைக் காட்டி என்னைக் கொள்ளை கொண்டவனே! என்கின்றாள்.
நானிருக்குமிடம் நீரும் பூவும் பரிமளமுமின்றி வறண்டு கிடக்க, தானிருக்குமிடம் தளிரும் முறிவுமாய் விளங்குவதே!
என்று ஊடல் தோற்றத் சொல்லுகிற படியுமாம்.
தான் வாடிக் கிடக்கையாலே தானிருக்குமிடமும் வாடிக் கிடக்குமென்க.

“மைந்தா வென்னும்“ என்கிறவிடத்திலே வியாக்கியான வாக்கியம் காண்மின்
“என்னை பேக்ஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹ மாக்குவானேன்?
அடியிலே நான் விஷய ப்ரவணனாய்த் திரிய ‘வாடினேன்‘ என்று சொல்லும்படி உன் போக்யதையைக் காட்டிப்
புறம்புள்ள துவக்கை உன்னை யொழியச் செல்லாதபடி பண்ணிற்று இன்று என்னைக் கை விடுகைக்கோ?“

அஞ்சிறை புட் கொடியே ஆடும் பாடும்=
பிராட்டிக்குத் திருமணம் நடத்தி வைக்க வந்த விச்வாமித்திர முனிவனைப் போன்று
தனக்குப் பாணி க்ரஹணம் பண்ணி வைக்க கொண்டு வந்த பெரிய திருவடியே
நெஞ்சில் உறைத்திருக்கையாலே அவனை அநுகரிக்கின்றளாயிற்று.
பெரிய திருவடி நெடுந் தூரத்திலே தோற்றித் தேற்றுவிக்கும்படியை நினைத்துக் கொண்டு அவன் வரும் வழியை நோக்கிக் கிடந்தாள்;
அவன் வரக் காணாமையாலே அவனை அநுகரிக்கத் தொடங்கினாள் போலும்.
விடாய்த்தவர்கள் ஹஸ்த முத்ரையாலே தண்ணீர் வேண்டுமா போலே பெரிய திருவடியின் வரவில் தனக்குண்டான
விருப்பம் தோன்ற அவன் வருகிற ரீதியை அபிநயிக்கத் தொடங்கினாளென்க.
அநுகாரத்தாலே ஒரு தேறுமதல் பிறப்பதுண்டே;
அதனாலே வாய் திறக்க வல்லளாய் ஆர்த்தி தோற்றக் கூப்பிடும்படியைச் சொல்லுகிறது பாடும் என்று
கேட்டவர்கள் கண்ணுங் கண்ணீருமாய்க் கொண்டு கால் தாழ்ந்திருக்கும் படியான த்வனி விசேஷமே பாட்டாவது.

அவ்வளவிலே இவளைத் தேற்ற வேண்டித் தோழியானவள் காய்ந்த தலையும் மெலிந்த வடிவும்
உறாவின முகமுமாய்க் கொண்டு தன் ஆர்த்தி யெல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னே வந்து நின்றாள்;
அவள் முகத்தைப் பார்த்து, ‘தோழீ! நாம் கோயிலே போய்ப் பெரிய பெருமானை அநுபவிக்கக் கூடுமோ?‘ என்கின்றாள்.
‘ஆடுதும்‘ என்றது
கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர்!

“பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும்
“தயாதன் பெற்ற மரதக மணித் தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப் பட்டிருந்தலுங்காண்க.

இங்ஙனம் தன் மகளின் தன்மைகளை எடுத்துரையா நின்ற தாயை நோக்கி
“உன் வயிற்றிற் பிறந்தவள் ஸ்வரூப ஹாநியிலே இழியப் புகுந்தால் அடக்கிக் காக்க வேண்டாவோ?“ என்று
சில மூதறிவாட்டிகள் சொல்ல,
அந்தோ! நான் என் செய்வேன்? என் சிறகின் கீழடங்காப் பெண்ணை பெற்றேனே! என்கிறாள்.
‘ஆச்ரயண தசையில் அவன் தானே மேல் விழுந்து ஆச்ரயிப்பித்துக் கொள்ள ஆச்ரயித்தது போலவே
போக தசையிலும் அவன் செய்தபடி கண்டிருக்கை காண் ஸ்வரூபம்;
நீ மேல் விழுகை பெண்மைக்குப் போராது காண்‘ என்று எனக்குத் தெரிந்த மட்டில் நான் சொன்னாலும்
அதைச் செவியிலுங் கொள்ளாமல் உதறித் தள்ளா நின்றாள்.

‘என்சிறகு‘ என்றது ‘என் பக்ஷத்திலே‘ என்றபடி.
எம்பெருமானுடைய பக்ஷத்திலே ஒதுங்கினவள் என் பக்ஷத்திலே ஒதுங்கி என் வார்த்தையை எங்ஙனே கேட்பள்.
(அடங்காப் பெண்ணைப் பெற்றேன்)
‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.
தன்னை, நொந்து பேசிக் கொள்வதாகப் புறம்புள்ளார்க்குத் தோற்றும்-
மகளுடைய குற்றமொன்றுமில்லை- தோன்றச் சொல்லுகிறபடி.

(இருநிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே)
பரந்த இப்பூ மண்டலத்திலே என்னைப் போல் பெண் பெற்றவர்களும் இல்லை,
என்னைப் போல் பழி படைத்தவர்களுமில்லை யென்கிறாள்.
இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.

கடல் வண்ணர் -எம்பெருமான் திருவரங்கம் எங்கே -கேட்டு முந்திய அவஸ்தையிலும் உணர்ச்சி கொஞ்சம் பிறந்து
இன்னும் முகம் காட்டாமையாலே ஆற்றாமை மிக்கு கூப்பிட தொடங்க -ஸ்வரூப ஹானி என்கிறாள்

அயர்த்து இரங்கும்
இரங்கும் வகைகள்- நெஞ்சு உருகி- கண் பனிப்ப- நிற்கும்- சோரும்

உண்டு அறியாள்
கூடி இருக்கும் காலம் உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன்
உணவு வ்யத்புத்தியே இல்லை

நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
பரிவுக்கு உகந்து நஞ்சு அரவு என்கிறாள்
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு
பிரணய ரோஷத்தாலும்
அனுகூலருக்குமா நஞ்சு
இருவர் படுக்க வேண்டிய படுக்கையில் ஒருவராய் எங்கனே துயில் அமர்ந்து இருக்கிறார்
எனக்கு தாயின் மடியும் பொருந்தாமல் இருக்க

வம்பார் பூ வயலாலி மைந்தா என்னும்
தனக்கு பாணிக் க்ரஹணம் இடத்தை சொல்லி வாய் வெருவுகிறாள்
நான் இருக்கும் இடம் நீரும் பூவும் பரிமளமும் இன்றி வறண்டு இருக்க
தான் இருக்கும் இடம் தளிரும் முறியுமாய் விளங்குவதே
தான் வாடிக் கிடப்பதாலே தான் இருக்கும் இடமும் அப்படியே

மைந்தா என்னும்
என்னை உபேஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்குவான் என்
அடியிலே நான் விஷய பிரவணனாய் திரிய வாடினேன் என்று சொல்லும் படி
உன்னுடைய போக்யதையை காட்டி புறம்புள்ள துவக்கி அறுத்து
உன்னை ஒழியச் செல்லாத படி பண்ணிற்று இன்று என்னை கை விடுகைக்காகவா

அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும்
பிராட்டிக்கு திருமணம் நடத்தி வைக்க வந்த விஸ்வாமித்ரர் போன்று
அவன் வருகிற ரீதியை அபி நயிக்க தொடங்கி தேறி
ஆர்த்தி தோற்ற கூப்பிடும்படியை -பாடும் -என்கிறாள்

ஆடுதும்
சுனையாடல் புனல் ஆடல்
பொற்றாமரை கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம்

என் சிறகின் கீழே அடங்கா பெண்ணைப் பெற்றேனே
எம்பெருமான் பஷத்திலே ஒதுங்கினவள்
என் பஷத்தில் ஒதுங்கி என் வார்த்தையை கேட்பாளோ

அடங்கா பெண்ணைப் பெற்றேனே
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறு உடையாள்
ஞாலத்து புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை
உள்ளூற ஆனந்தம் பொலியப் -பெற்றேன் -சொல்லிக் கொள்கிறாள்

இரு நிலத்து ஓர் பழி படித்தேன் ஏ பாவமே
இப் பழி உத்தேச்யம் ஓர் பழி என்கிறாள்
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றம் எல்லாம் ஞான விபாக கார்யமான
ப்ரேமத்தின் பரீவாஹம் என்று உகப்பாருக்கு இதுவே புகழாம் இறே

————————————————————————

உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போது போக்குதல் இயல்பு.
அப்படியே இப் பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்;
அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள்.
இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன் சொல் மிழற்றும்;
இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது.
தாயானவள் அக் கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும் படியான
சில திரு நாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்;
ஏவினவிடத்தும் அது பரகால நாயகியின் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு ஒன்றும் வாய் திறக்க மாட்டிற்றில்லை;
அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும்
அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து
‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல-
அது சொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய்–

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,
அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே.

பதவுரை

(இப் பெண் பிள்ளை)
கல் மாரி–(இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து–ஒரு மலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும்–தடுத்தவனே! என்றும்,
நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்-விரும்பத் தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும்–ஒழித்தவனே! என்றும்
மா கீண்ட–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத் தலத்து–திருக் கைகளை யுடைய
என் மைந்தா என்றும்–எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை–தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்-வில்லை முறித்துப் பிராட்டியைக் கைப் பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று–முன்பொரு காலத்தில்
மல்லரை–மல்லர்களை
மல் அடர்த்து–வலிமை யடக்கி
சொல் எடுத்து–திருநாமத்தின் முதற் சொல்லை யெடுத்துக் கொடுத்து
சொல் என்று–(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
(அது சொல்லத் தொடங்கினவாறே)
துணை முலை மேல்–உபயஸ்தரங்களிலும்
துளி சோர–கண்ணீர் பெருகப் பெற்று
சோர்கின்றாளே.–துவளா நின்றாள்.

கண்ணபிரான் * சோலை சூழ்ந்த பெரிய குன்றை யெடுத்து ரக்ஷித்திருக்க
இவள் “கல் எடுத்து“ என்று ஒரு சிறிய கல்லை யெடுத்தானாகச் சொல்லுவது எங்ஙனேயெனின்;
அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.
வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க.

“கல்லெடுத்துக் கல் மாரி காத்தாய்“ என்ற சொல் நயத்தை நோக்கி பட்டர் அருளிச் செய்வாராம்-
‘கல் மழையாகையாலே கல்லை யெடுத்து ரக்ஷித்தான், நீர் மழையாகில் கடலை யெடுத்து ரக்ஷிக்குங்காணும்“ என்று.
இதனால், இன்னதைக் கொண்டு இன்ன காரியஞ் செய்வதென்கிற நியதி எம்பெருமானுக்கில்லை யென்பதும்
ஸர்வ சக்தனென்பதும் விளக்கப் பட்டதாம்.
“பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால் வந்த ஆபத்தில் ரக்ஷிக்க லாகாதோ?
கல் வர்ஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? அவ்வூராகப் பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரக்ஷிக்கலாகாதோ?
என்னுடைய ரக்ஷணத்துக்கும் ஏதேனும் மலையை யெடுக்க வேணுமோ?
மலையை யெடுத்த தோளைக் காட்டவமையாதோ?“ என்ற பரம போக்யமான வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

காமரு பூங்கச்சி யூரகத்தாயென்றும்=
கல்லெடுத்துக் கல்மாரி காத்த காலத்தை இழந்து பிற்பட்டவர்களுக்கும் ஸர்வ ஸ்வதானம்
பண்ணுகைக்காக வன்றோ திருவூரகத்திலே வந்து அந்த க்ருஷ்ணாவதாரத்திற்குத் தோள் தீண்டியான
த்ரிவிக்ரம் வேஷத்தோடே நி்ன்றருளிற்று; இதுவும் பாவியேனுக்குப் பயன்படாதொழிவதே! என வருத்தந் தோற்றக் கூறுகிறபடி.

இப்பாட்டில், விபவாவதார சேஷ்டிதங்களைக் கூறுவன சில அடிகளும்
அர்ச்சாவதார நிலையைக் கூறுவன சில அடிகளுமுள்ளன; இவை மாறி மாறிக் கோக்கப்பட்டிருக்கின்றன;
அவதாரங்களை ஒரு கோர்வையாகவும் திருப்பதிகளை ஒரு கோர்வையாகவும் அநுபவிக்கலாமே,
அப்படி அநுபவியாமல் கலசிக் கலசி அநுபவிக்கிறார்; ஏனென்னில் ;
பிடி தோறும் நெய் வார்த்து உண்பாரைப் போலே திருப்பதிகளை யொழியத் தமக்குச் செல்லாதபடியாலே திருப்பதிகளைப்பேசுகிறார்.
திருப்பதிகளின் அடிப்பாடு சொல்ல வேண்டுகையாலே அவதாரத்திலிழிகிறார்.
மற்றை யாழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இது காண்மின்;
அவர்கள், மேன்மையை அநுபவிக்க வேண்டில் அவதாரங்களைப் பேசுவர்கள்;
அந்த நீர்மையை ஸாக்ஷாத் கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்.
இவ்வாழ்வார், மேன்மையை யநுபவிப்பதும் திருப்பதிகிறே -நீர்மையை திருப்பதிகளிலே,-அதை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்=
‘இவ்விலை முறித்தார்க்கு இவளை விவாஹம் பண்ணிக் கொடுக்கக் கடவேன்‘ என்று ஜநகன் சொல்லி வைத்திருக்கையாலே
இராம பிரான் வில்லை யெடுத்து நாணேற்றி வளைக்கப் புக்கவளவிலே வில் முறிந்தது;
அவ் வளவிலே நெடு நாளைய குறை தீரப் பெற்ற ஜநக மஹாராஜன் பொற் கிண்டியைக் கொணர்ந்து
தாரை வார்த்துத் தத்தம் பண்ணப் புக, அது கண்ட இராமபிரான்
‘நான் ஏதேனும் நெடு நாளைய ப்ரஹமசாரியாயிருந்து பெண் கொடுப்பாராருமில்லையே யென்று தடுமாறிப் பெண் தேடி வந்தேனோ;
ராஜ குமாரனாகையாலே வீர வாசி கொண்டாட வந்தேனத்தனை; உமக்குப் பெண் விவாஹஞ்செய்ய வேண்டியிருந்தால்
அது விஷயம் நமக்குத் தெரியாது; வஸிஷ்டாதிகளையும் நமது ஐயரையும் கேட்டுக்கொள்வது‘ என்று
கம்பீரமாகச் சீர்மையுங் கண்டு பிராட்டி நீராயுருகினாள்;
வில் முறித்த ஆயாஸந்தீர அவளது தோளிலே தோய்ந்தானிராமபிரான்; அதைப் பேசுகிறாள்
வில்லிறத்து மெல்லயல்தோள் தோய்ந்தாய்! என்று.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்
“வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையுங் கண்டு நீராடினாள் பிராட்டி“ எனத் திருக்திக் கொள்க.
தோய்தல் நீரிலே யாகையாலே இங்குத் ‘தோய்ந்தாய்‘ என்ற சொல் நயத்துக்கு ஏற்ப ‘நீரானாள்‘ என்றது.

வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் =
பிராட்டியைப் பாணி க்ரஹணம் பண்ணி வந்து அந்த இளைப்புத் தீரவும் அந்த மணக் கோலம் விளங்கவும்
துயிலமர்ந்தவிடத் திருவெஃகா வென்கிறாள்.
ஒரு ராஜகுமாரன் வந்து கிடக்கிறான் என்னலாம்படி யிருக்கிறதாயிற்று.

(மல்லடர்த்து இத்யாதி.)
மஹா பாபிகளான மல்லர்கள் ஏதேனுமொரு வியாஜத்தாலே உன்னுடைய தோளோடே அணையப் பெற்றார்கள்,
அவ்வளவு பாக்கியமும் எனக்குக் கிடைக்க வில்லையே! என்கிற கிலாய்ப்புத் தோற்றச் சொல்லுகிறபடி.
நானும் இத் தன்மை நீங்கிப் பிரதி கூலர் வடிவெடுத்து வந்தேனாகில்
உன் தோளோடே அணையப் பெறலாம் போலும் என்கிறாளென்றுங் கொள்க.

மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா! என்றும் =
திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகளுக்கு முற்றூட்டான திருமேனியைப் பாதுகாத்துக் கொண்டாய்;
அதை எனக்கு ஒருநாள் காட்டினால் போதுமே, இதுவும் அரிதாயிற்றே! என்று நொந்து பேசுகிறபடி.

சொல்லெடுத்து =
ஆக இப்படிப்பட்ட திருநாமங்களின் ஆதியை யெடுத்துக் கொடுத்துக் கிளியைச் சொல்லுவிக்க,
அவற்றின் பொருள் நெஞ்சில் உறைக்கவே இப்படி ஆபத்துக்களுக்கு உதவுமவனாகப் புகழ் பெற்றவன்
இன்று நம்மளவிலே உதவாதொழிவதே! என்று கண்ணுங் கண்ணீருமாயிருந்து கரைகிற படியைத் திருத் தாயார் கூறினாளாயிற்று.

இவள் வளர்த்த கிளியும் தளர்ந்து இருக்க முன்பு தான்
கற்பித்த திரு நாமங்களின் தலைப்பை எடுத்துக் கொடுத்து
இதைச் சொல் இதைச் சொல் என்ன
அது சொன்ன திரு நாமங்களைக் கேட்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் நிலைமையை
திருத் தாயார் எடுத்து உரைக்கிறாள்

கல் எடுத்து
அநாயாசேன செய்த செயல் என்பதால் கல் எடுத்து என்கிறாள்
கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில
வடிவேறு திரு உகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம் -பெரியாழ்வார்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை

கல் எடுத்து கல் மாரி காத்தான்
கல் மழை யாகையாலே கல்லை எடுத்து ரஷித்தான்
நீர் மழை யாகில் கடலை எடுத்து ரஷிக்கும் காணும் -பட்டர்
பிறரால் வந்த ஆபத்திலோ ரஷிக்கலாவது
உன்னால் வந்த ஆபத்தில் ரஷிக்கல் ஆகாதோ
கல் வர்ஷத்தில் வந்த ஆபத்திலோ ரஷிக்க லாவது
துக்க வர்ஷத்தால் வந்த ஆபத்தை ரஷிக்கல் ஆகாதோ
ஒரு ஊராக நோவு பட்டாலோ ரஷிக்கலாவது
அவ் ஊராக பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரஷிக்கலாகாதோ
என்னுடைய ரஷணத்துக்கு ஏதேனும் ஒரு மலையை எடுக்க வேணுமோ
மலையை எடுத்த தோளைக் காட்டல் ஆகாதோ

காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்னும்
பிற்பாடர் இழவாமைக்கு
கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டியான உலகு அளந்த திருக்கோலம்
இதுவும் பாவியேனுக்கு பயன்படாது ஒழிவதே
பிடி தொறும் நெய் வார்த்து உண்பாரைப் போலே அடி தொறும் அர்ச்சையில் இழிகிறார்
அல்லாதார் மேன்மையை அனுபவிக்க பர வாசுதேவன் இடம் இழிந்து
நீர்மையை அனுபவிக்க அவதாரங்களில் இழிவார்கள்
அந்த நீர்மையை சாஷாத் கரிக்க திருப்பதிகளில் இழிவார்கள்
இவரோ
மேன்மையை அனுபவிப்பதும்
நீர்மையை அனுபவிப்பதும்
நீர்மையை சாஷாத் கரிப்பதும்
அர்ச்சையிலே தானே

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்
வில்லை முறித்த ஆண் பிள்ளை தனத்தையும்
நம் ஐயரை கேட்டே விவாகம் சீர்மையும் கேட்டு சீதா பிராட்டி உருக
வில் முறித்த ஆயாசம் தீர அவளது தோளிலே தோய்ந்தான்
நீராடினாள் இனியனாளால் -பிழை யான பாடம் நீரானாள் சரியான பாடம்

வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே
திரு மணக் கோலத்துடன் ராஜ குமாரன் வந்து கிடக்கிறான் என்னலாம் படி

மல்லடர்த்து
மல்லர்கள் பெற்ற பாக்யமும் எனக்கு இல்லையே
பிரதி கூலர் வடிவு கொண்டு வந்து இருந்தேன் ஆகில்
உன்னை அணையைப் பெற்று இருப்பேனே

மா கீண்ட கைத்தலத்து மைந்தா
ஆய்சிகளுக்கு முற்றூட்டான திரு மேனியை பாதுகாத்து கொண்டாய்
அது எனக்கு ஒரு நாள் காட்டினால் போதுமே

சொல்லெடுத்து
ஆதியை எடுத்து கொடுக்க
கிளி சொல்ல சொல்ல
பொருள் நெஞ்சில் உறைக்கவே
ஆபத் சகன் நம்மளவிலே உதவாமல் ஒழிவதே -என்று
கண்ணும் கண்ணநீருமாய் இருந்தபடியை
திருத் தாயார் கூறினாள் ஆயிற்று-

—————————————————————-

“சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை
முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில்.
‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்;
நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது,
முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம்
என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி
“வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி
வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது.

முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும்,
மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும்
அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும்
திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும்
இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி–

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே.

பதவுரை

முளை கதிரை-இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள் முகிலை–திருக்குறுங்குடியில் காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து–நித்யமாய் மூவகைப் பட்டதான ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்–பரம பத்திலே
முதல் ஆய் நின்ற–(உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்
அளப்பு அரிய–(ஸ்வரூப ரூப குணங்களில்) அளவிடக் கூடாதவனும்
ஆர் அமுதை-அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை–திருவரங்க மா நகரில் பொருந்திய பரம பரிசுத்தனும்
அந்தணர் தம் சிந்தையானை–வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாக வுடையவனும்
திருத் தண் காவில் விளக்கு ஒளியை–திருத் தண் காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை–மரகதப் பச்சைப் போல் விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
வெஃகாவில் திருமாலை–திரு வெஃகாவில் கண் வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு–ஸர்வேஸ்வரனைக் (கிளி) பாட (அப் பாசுரங்களை)க் கேட்டு
மடக் கிளியை–அழகிய அக் கிளியை நோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று–உன்னை வளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கே வா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்–அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.

முளைக் கதிர் =
சிற்றிஞ் சிறுகாலை உதிக்கின்ற ஸூரியனைப் போலே கண்ணாலே முகந்து அநுபவிக்கலாம்படி யிருக்கிற
திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவன் என்றபடி.
“ப்ரஸந்நாதித்யவர்ச்சஸம்“ என்றதுங் காண்க.
தன்னை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும்
தன் பக்கலில் ருசியைப் பிறப்பித்தது வடிவைப் காட்டியாதலால் அதனையே கிளிக்கு முந்துற உபதேசித்து வைத்தாள் போலும்.

‘முளைக்கதிர்‘ என்பதை வினைத் தொகையாகக் கொண்டால் ‘முளைக்கதிர்‘ என்று இயல்பாக வேண்டும்;
தகரவொற்று இருப்பதனால் ‘முளைத்தலை யுடைய கதிர்‘ என்று பொருள் கொள்ள வேணும்;
அப்போது, முளை – முகனிலைத் தொழிற்பெயர்.

குறுங்குடியுள் முகில் =
கீழ்ச் சொன்ன வடிவைப் பிரகாசித்தது சாஸ்திர முகத்தாலுமன்று, ஆசார்யோபதேசத்தாலுமன்று.
திருக்குறுங்குடியிலே யாயிற்றுப் பிரகாசிப்பித்தது.
இன்ன மலையிலே மேகம் படிந்ததென்றால் மழை தப்பாதென்றிருக்குமா போலே,
திருக்குறுங்குடியிலே நின்றானென்றால் உலகமெல்லாம் க்ருதார்த்தமாம்படி யிருக்குமென்க.
ஒருகால் தோன்றி வர்ஷித்து விட்டு ஒழிந்து போம் மேகம் போலன்றியே சாச்வதமாய் நிற்கும் மேகம்
என்பது தோன்ற ‘உள்முகில்‘ எனப்பட்டது.

திருக்குறுங்குடியில் வந்து நின்றருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்லுகிறது
மூவா மூவுலகுமென்று தொடங்கி.
பரமபதத்தில் நின்றும் திருக்குறுங்குடியிலே போந்தருளினான் ஆயிற்று.
‘மூவா மூவுலகுங் கடந்து‘ என்றது –
பத்தாத்மாக்களென்றும் முக்தாத்மாக்களென்றும் நித்யாத்மாக்களென்றும் மூவகையாகச் சொல்லப் படுகின்ற
ஆத்ம வர்க்கங்களுக்கு எம்பெருமான் அவ்வருகு பட்டிருக்கின்றமையைச் சொன்னவாறு.
மூவா என்றது ஒரு காலும் அழிவில்லாமையைச் சொன்னபடி.

நித்ய முக்த்ர்களுக்குத் தான் அழிவு இல்லை;
பத்தர்களெனப்படுகிற ஸம்ஸாரிகளுக்கு அழிவு உண்டே யென்று சிலர் சங்கிப்பர்கள்;
ஆத்மாக்கள் கரும வசத்தால் பரிக்ரஹித்துக் கொள்ளுகிற சரீரங்களுக்கு அழிவுண்டேயன்றி
ஆத்மாக்களுக்கு ஒரு போழ்தும் அழிவில்லை யென்றுணர்க.

முதலாய் நின்ற என்றது –
உபய விபூதிக்கும் ஸத்தா ஹேதுவாய் நின்ற என்றபடி.
நித்ய ஸூரிகளுக்கு போக்யதையாலே ஸத்தா ஹேதுவாய்,
ஸம்ஸாரிகளுக்குக் கரண களேபர ப்ரதாநத்தாலே ஸத்தா ஹேதுவா யிருக்குமென்க.

அளப்பரிய ஆரமுது =
ஸ்வரூப ரூப குணங்களால் எல்லை காண வெண்ணாதவனாய் அமுதக் கடல்போலே இனியனா யிருக்குமவன்.

அரங்கம் மேய் அந்தணன் –
அந்த அமுதக் கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு ஒரு தடாகத்திலே வந்து தேங்கினாற் போலே யாயிற்று
திருவரங்கம் பெரிய கோயிலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி.

அந்தண னென்றது பரிசுத்தனென்றபடி;
தன் வடிவழகைக் காட்டி அஹங்காரமும் விஷயாந்தர ப்ராவணயமுமாகிற அசுத்தியைப் போக்க வல்ல சுத்தியை யுடையவனென்றவாறு.

அந்தணர்தம் சிந்தையான் –
“நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்,
என்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன், நின்றது மிருந்ததும் கிடந்தது மென்னெஞ்சுகளே‘! என்கிறபடியே
பரி சுத்தருடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணுமவன்.

எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமாலை பெருமாள் கோயில் முதலான
உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞசிலே வந்து சேர்வதற்கதாகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறனென்றும்,
ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய்
பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், விடுமென்றும் உணர்க.

விளக்கொளியை –
விளக்கின ஒளியானது எப்படி வெளிச்சத்தை யுண்டாக்கிப் பதார்த்தங்களை விளங்கச் செய்யுமோ
அப்படி ஸ்வ ஸ்வரூபம் ஜீவாத்ம ஸ்வரூபம் உபாய ஸ்வரூபம் விரோதி ஸ்வரூபம் ஆகிற அர்த்த பஞ்சகத்தையும்
தனக்கு விளங்கச் செய்தருளினவன் என்றவாறு.

மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே
இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீப ப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்;
திருத்தண்கா ‘விளக்கொளி கோயில்‘ என்றே வழங்கப் பெறும்.
இத் தலத்துப் பெருமான் பண்டைக் காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப்
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது.

திருத் தண் காவில் மரகதத்தை –
இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்மின்:-
“அருமணவனானை என்னுமா போலே திருத்தண்காவில் மரதகம் என்கிறார்.
இன்ன தீவிலேபட்ட ஆனை யென்றால் விலக்ஷணமா யிருக்குமா போலே திருத்தண்காவில் கண் வளர்ந்தருளுகிறவனுடைய
வடிவென்றால் விலக்ஷணமாயிருக்கிறபடி.
பச்சைமா மலை போல் மேனி என்கிற வடிவையுடையவன்.
வடதேசத்தினின்றும் பெருமாளை யநுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்த விடத்திலே அவர்களை எதிர்கொண்டு அநுபவிப்பிக்கக் கிடக்கிற கிடை.“

வெஃகாவில் திருமாலை-
“வில்லறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தா யென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்“
என்று பிராட்டியைத் திருமணம் புணர்ந்த மணக் கோலத்தோடே கூட இருவரும் வந்து கிடக்கிற கிடையாகக் கீழே அருளிச் செய்தாரிறே;
திரு வெஃகாவிலே வந்து திருக் கண் வளர்ந்தருளின பின்பு ச்ரியபதித்வம் நிறம் பெற்றபடி.

ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை மடக்கிளி எடுத்துப் பாடினவளவிலே
ஆனந்தமாகக் கேட்கலுற்ற என் மகளானவள் ‘கிளிப் பிள்ளாய்! உன்னை வளர்த்த ப்ரயோஜனம் பெற்றேன்;
ஆபத்துக்கு உதவுபவனென்று பேர் பெற்ற அவன் ஆபத்தை விளைவித்துப் போனான்,
அந்த நிலைமையில் நீ உதவப்பெற்றாயே!, அருகே வந்திடாய்‘ என்று சொல்லி
உபகார ஸ்மிருதி தோற்றக் கையெடுத்துக் கும்பிட்டாளென்றதாயிற்று.

புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத் துணையாகப் பெற்றால் கௌரவிக்க வேணும்
என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று.
“கணபுரங்கை தொழும் பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே“ என்றதும் நோக்குக.

நாம் சொன்னதே இவள் மோஹிக்க ஹேதுவானதே
தெளிந்த காலத்தில் உஜ்ஜீவனமாக கொண்டு இருந்த திரு நாமங்களை சொல்லுவோம்
என்று அடைவே சொல்ல வளர்த்ததனால் பயம் பெற்றேன் என்கிறாள்

முளைக்கதிர்
குறுங்குடியுள் முகில்
மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய அமுது
அரங்கமேய அந்தணன்
அந்தணர் தம் சிந்தையான்
விளக்கொளி
திருத் தண் காவில் மரகதமே
வெக்காவில் திருமால்
இவை யாயிற்று இவள் முன்பு கற்பித்த திருநாமங்கள்
இவற்றை அடைவே சொல்லிற்று மடக்கிளி
முளைக்கதிர்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்
அடியிலே தன்னை விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு ருசியை பிறப்பித்த வடிவு என்பதால்
அடியிலே இத்தை சொல்லி

குறுங்குடியுள் முகில்
வடிவை பிரகாசிப்பித்தது சாஸ்திர முகத்தால் அன்று
ஆச்சார்ய உபதேசத்தால் அன்று
திருக் குறும் குடியிலே யாயிற்று பிரகாசிப்பித்தது
பொலிந்து போகும் மேகம் போல இல்லாமல் சாஸ்வதம் -நிற்கும் -உள் முகில் –

மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய அமுது
அவனது அடிப்பாடு சொல்கிறது இத்தால்
மூவா நித்யர்
நித்யர் முக்தர் பக்தர் –
முதலா நின்ற உபய விபூதிக்கும் சத்தா ஹேதுவாய்
அளப்பரிய அமுது எல்லை காண முடியாத ஸ்வரூப ரூப குணங்கள் -அமுதக்கடல்
அரங்கமேய அந்தணன்
அந்த அமுதக் கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு தடாகம் தேங்கி
அந்தணன் பரிசுத்தன்
அந்தணர் தம் சிந்தையான்
நின்றது எந்தை –அன்று நான் பிறந்திலேன் –நின்றதும் இருந்ததும் கிடந்தததும் என் நெஞ்சுள்ளே
இதுவே புருஷார்த்தம் அவனுக்கு
சித்தித்து விட்டதும் அங்கு ஆதரம் மட்டமாகி விடுமே
விளக்கொளி
அர்த்த பஞ்சகம் காட்டி அருளி
அடுத்து திருத் தண் காவில் மரகதம் என்பதால் இங்கு தீப பிரகாசன்
முன்பு சயன திருக் கோலமாக இருந்ததாக பெரிய வாச்சான் பிள்ளை
திருத் தண்காவில் மரகதமே
அழகிய மணவானனை என்னுமா போலே திருத் தண்காவில் மரகதம் என்கிறார்
இன்ன தீவிலே பட்ட யானை என்றால் விலஷணமாய் இருக்குமா போலே
திருத் தண்காவிலே கண் வளர்ந்து அருளுகின்றவன் உடைய
வடிவு என்றால் விலஷணமாய் இருக்கிறபடி
பச்சை மா மலை போல் மேனி என்கிற வடிவை உடையவன்
வட தேசத்தின் நின்றும் பெருமாளை அனுபவிக்க வருமவர்கள் இளைத்து
விழுந்த இடத்திலே அவர்களை எதிர் கொண்டு அனுபவிப்பிக்க கிடக்கிற கிடை

வெக்காவில் திருமால்
திருமணம் புணர்ந்த கோலத்துடன் இங்கு வந்து கண் வளர்ந்த பின்பு
ஸ்ரீ யபதித்வம் நிறம் பெற்ற படி

உபகார ஸ்ம்ருதி தோற்ற கை எடுத்து கும்பிட்டாள்
புத்ரனுமாகவுமாம் சிஷ்யனும் ஆகவுமாம்
பகவத் விஷயத்துக்கு உசாத் துணையாகப் பெற்றால்
கௌரவிக்க வேணும்
கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே

———————————————————————

கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து
அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது.
அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்;
அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே
அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு,
அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்;
இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது.

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.

பதவுரை

கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்-கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட
கச்சி-காஞ்சீபுரத்திலே
கடல் கிடந்த கனியே என்றும்–திருப் பாற்கடலில் கண் வளர்ந்தருளுகிற கனி போன்றவனே! என்றும்.
அல்லி அம் பூ மலர் பொய்கை–தாதுகள் மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களை யுடைய தடாகங்களையும்
பழனம்–நீர்நிலங்களையும்
வேலி-சுற்றும் வேலியாக வுடைய
அணி அழுந்தூர்–அழகிய திருவழுந்தூரிலே
நின்று-நின்றருளி
உகந்த- திருவுள்ளமுவந்திருக்கின்ற
அம்மான் என்றும்–ஸ்வாமியே! என்று (சொல்லி)
சொல் உயர்ந்த-நாதம் மிக்கிருப்பதாய்
நெடு-இசை நீண்டிருப்பதான
மேய-எழுந்தருளி யிருக்கிற
களிறு என்றும்-மத யானை போன்றவனே! என்றும்
வீணை-வீணையை
முலை மேல்-தனது ஸ்தனங்களின் மீது
தாங்கி–தாங்கிக் கொண்டு
தூ முறுவல்–பரிசுத்தமான மந்த ஹாஸத்தாலே
நகை–பல் வரிசை
இறையே தோன்ற–சிறிதே விளங்கும் படியாக
நக்கு–சிரித்து
மெல் விரல்கள்-(தனது) மெல்லிய விரல்கள்
சிவப்பு எய்த-சிவக்கும்படியாக
தடவி-(அந்த வீணையைத்) தடவி
ஆங்கே-அதற்கு மேலே
என் பேதை-என் பெண்ணானவள்
மென் கிளிபோல்–கிளிப் பிள்ளை போலே
மிக மிழற்றும்–பலபடியாகப் பாடா நின்றாள்

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறென்றும் =
கல்லாலே செய்யப் பட்டுப் பிரதிகூலர்க்கு அணுக வொண்ணாதபடி ஓக்கத்தை யுடைத்தாய்,
உள்ளுக் கிடக்கிற யானைக்கு யதேச்ச விஹாரம் பண்ணுதற்குப் பாங்கான விஸ்தாரத்தை யுமுடைத்தான
திருமதிளாலே சூழப்பட்ட திருக்கச்சி மாநகரில் நித்ய வாஸஞ்செய்கின்ற மத்த கஜமே! என்றும்.

இங்குக் கச்சிமேய களிறு என்கிறது
திருப்பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
திருவத்தி மா மலையில் நின்றருளாநின்ற பேரருளாளப் பெருமாளை என்று அருளிச் செய்திருக்கலாம்;
அவருடைய திருவுள்ளமங்ஙனே நெகிழ்ந்தபடி. திருப்பாடகத்து நாயனாராக அருளிச் செய்தற்கு ஒருபொருத்தமுண்டு ;
“நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகாணைக் கிடந்தது – என்று
திருமழிசைப் பிரான் அநுபவித்தபடியை இம் மூன்று ஸ்தலத்திலும் அநுபவிக்கிறாள் இவள்“ என்று
மேலே நிர்வஹித்தருளுகையாலே அதற்குப் பொருந்தும்,
திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருக்கோலமுமாக
அநுபவிக்கிறாரென்று நிர்வஹிப்பதில் ஒரு சமத்கார அதிசயமுண்டு காணும்.

கடல் கிடந்த கனியே யென்றும் =
கச்சி மேய களிறு தோன்றின விடம் திருப்பாற்கடல் போலும்.
அதிலே பழுத்த பழம் போலே கண் வளர்ந்தருளுகிற பரம போக்யனே!
கனியானது கண்ட போதே நுகரத் தக்கதும் புஜிப்பாரைப் பெறாத போது அழிந்து போவதுமாயிருக்கும்;
அப்படியே தன்னை யநுபவிப்பார் தேட்டாமாய் அவர்களைப் பெறாத போது தான் அழியும்படியாயிருப்பன் எம்பெருமான்.
போக்தாக்களைக் குறித்து எதிர் பார்த்திருப்பவன் எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும்“,
போக்தர்களைப் பெறாத போது அழியும்படி யாயிருக்கிறவன் தன்னைப் பெறாத போது முடியும் படியாயிருக்கிற
எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும் வருந்துவது தோன்றச் சொல்லுகிறபடி.

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழனவேலியணியழுந்தூர் நின்ற கந்த வம்மானென்னும் =
தாது மிக்கு நறுமணங் கமழ்ந்து அழகியவாயிருந்துள்ள புஷ்பங்களை யுடைத்தான
தடாகங்களையும் நீர்நிலங்களையும் வேலியாகவுடையதாய்,
பிரதிகூலர்க்கு அணுக வொண்ணாததாய் அநுகூலர்க்குத் தாப ஹரமாய்ப் பரம போக்யமாயிருந்துள்ள
திவ்ய தேசத்திலே ஸம்ஸாரிகள் ஆச்ரயிக்கலாம்படி நின்று,
அவர்கள் தன் நிலையழகையும் அதுக்கடியான திருக் குணங்களையு மநுஸந்தித்துத்
திருவடிகளைக் கிட்டினால் உகப்பானும் தானேயாயிருக்கும் பெருமானே! – என்றிங்ஙனே சில திருநாமங்களை யிட்டுப்பாடி.

சொல்லுயர்ந்த நெடுவீணைமுலைமேல்தாங்கி =
‘கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு‘ இத்யாதிகளை வீணையிலேட்டுப் பாடினாள்;
வீணையை ஸ்பர்சித்தவாறே நாயகன் ஸம்ச்லேஷ தசையில் தன்னுடைய போக்யதையையும்
இவளுடைய யோக்யதையையும் வீணையிலேறிட்டு வாசிக்கும் படியை ஸாக்ஷாத் கரித்து,
அதைத் தடவும் திருக்கையை ஸாக்ஷாத்கரித்து,
அதுக்கு ஆச்ரயமான திருத்தோளை ஸாக்ஷாத்கரித்து,
அதுக்கு ஆச்ரயமான வடிவையும் ஸாக்ஷாத்கரித்து
அவனை ஸம்ச்லேஷ தசையிலே தன் மார்பில் ஏறிட்டுக் கொள்ளுமா போலே வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பார்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.

தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு =
வீணையை முலை மேல் தாங்கினவாறே அவனையே ஸ்பர்சித்ததாக நினைக்கையாலுண்டான மகிழ்ச்சியால்
பல் வரிசைகள் சிறிதே பிரகாசிக்கும்படி புன் முறுவல் செய்து, ஸுருமாரமாய் இயற்கையாகவே சிவந்துள்ள விரல்கள்
இன்னமும் சிவப்பு மல்கும்படி தந்திக் கம்பிகளை வெருடி அதுக்கு மேலே கிளி போலவும் மிக மிழற்றத் தொடங்கினாள் என்றாளாயிற்று.

என்பேதையே =
என் வயிற்றிற் பிறந்த சிறு பெண் இவையெல்லாம் எங்கே கற்றாள்! என்றவாறு.

தன் வாயாலே திரு நாமத்தை சொல்லி
அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்
வீணை முகத்தாலே அவனை சாஷாத் கரித்து
அவனாகவே கொண்டு
சம்ச்லேஷிக்கும் இடத்தில் பண்ணும் வியாபார விசேஷங்களை பண்ணா நிற்க
இவள் உணர்ந்தால் என்னவாய்த் தலைக் கட்டப் போகிறதோ
என்ற இன்னாப்புடன் திருத் தாயார் பேசும் பாசுரம்

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்னும்
பிரதிகூலர் அணுக ஒண்ணாதபடி
உள்ளுக் கிடக்கும் யானை யதேச்ச விஹாரம் பண்ண பாங்கான விஸ்தாரம்
நித்யவாசம் செய்யும் மத்த கஜம்
திருப் பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான் பிள்ளை
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது
என்று திரு மழிசைப் பிரான் அனுபவித்த படியை இம் மூன்று ஸ்தலத்திலும் அனுபவிக்கிறாள் இவள்
என்று
மேலே நிர்வஹித்து அருளுகையாலே அதற்குப் பொருந்தும்
திருவழுந்தூரில் நின்ற திருக் கோலமும்
திருப் பாடகத்தில் வீற்று இருந்த திருக் கோலமும்
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்ட திருக் கோலமும்
அனுபவிக்கிறார் என்று
நிர்வகிப்பதில் ஒரு சமத்கார அதிசயம் உண்டே
கடல் கிடந்த கனியே என்னும்
கச்சி மேய களிறு தோன்றின இடம் திருப்பாற் கடல் போலும்
அதிலே பழுத்த பழம்
கண்ட போதே நுகரத் தக்கதும்
புஜிப்பாரை பெறாத போது அழிந்து போவதும்
அப்படிப் பட்ட கனி
பெறாத போது முடியும்படியாய் இருக்கும் எனக்கு முகம் காட்டாது ஒழிவதே

அல்லியம்பூ மலர்ப்பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
திருவடிகளை நாம் கிட்டினால் உகப்பானும் அவனே
இத்யாதிகளை சொல்லி
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தடவும் திருக்கையை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான திருத் தோள்களை சாஷாத் கரித்து
அதற்கு ஆஸ்ரயமான திவ்ய வடிவையும் சாஷாத் கரித்து
அவனை தனது மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸா பர்த்து கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத் –

தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
ஸ்பர்சம் அனுசந்தித்த ஹர்ஷத்தாலே பல் வரிசைகள் பிரகாசிக்கும்படி புன் முறுவல் செய்து
விரல்கள் மேலும் சிவக்கும் படி தந்திக் கம்பிகளை வெருடி
அதுக்கு மேலே கிளி போல மிகவும் மிழற்ற தொடங்கினாள்

என் பேதையே
இவை எங்கே கற்றாள்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-6-10- -திவ்யார்த்த தீபிகை —

September 29, 2014

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

பதவுரை

அலம் புரிந்த–போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல
நெடு தட கை–நீண்ட பெரிய திருக் கைகளை யுடையனாய்
அமரர் வேந்தன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
அம் சிறை புள் தனி பாகன்–அழகிய சிறகை யுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய்
அவுணர்க்கு–ஆஸுர ப்க்ருதிகளுக்கு
என்றும்–எக்காலத்தும்
சலம் புரிந்து–சீற்றங்கொண்டிருந்து
அங்கு–அவர்கள் விஷயத்திலே
அருள் இல்லா தன்மை ஆளன் தான்-இரக்க மற்றிருக்கை யாகிற தன்மையை யுடையனான் எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கிற
ஊர் எல்லாம்–திருப்பதிகளிலெல்லாம்
தன் தாள் பாடி–அவனுடைய திருவடிகளைப் பாடி,
நிலம் பரந்து வரும் கலுழி–பூமி முழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தை யுடைய
பெண்ணை–பெண்ணை யாறானது
ஈர்த்த-(வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டுவருகிற
நெடு வேய்கள்-பெரிய மூங்கில்களினின்றும்
படு-உண்டாகிற
முத்தம்-முத்துக்களை
உந்த–வயல்களிலே கொண்டுதள்ள
உந்தி–(உழவர்களாலும் தங்கள் பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு
புலம் பரந்து–கழனிகளெங்கும் பரவி
பொன் விளைக்கும்–பொன்னை விளைக்குமிடமாயும்
பொய்கை வேலி–நீர் நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள
பூ கோவலூர்–திருக்கோவலூரை
தொழுதும்–ஸேவிப்போம்;
நெஞ்சே போது–நெஞ்சே! வா.

கீழ்ப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பேசியநுபவித்தார்; அது என்றைக்கோ கழிந்த அவதாரமிறே;
அதற்குத் தாம் பிற்படுகையாலே கண்ணாரக் கண்டு அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வருந்தியிருக்க,
இவருடைய வருத்தத்தைக் கண்ட எம்பெருமான்
‘ஆழ்வீர்! அவதாரத்துக்குப் பிற்பட்டவர்களையும் அநுபவிக்கைக்காக வன்றோ நாம் அந்தச் செவ்வியொடே
திருக் கோவலூரில் ஸந்நிதி பண்ணி யிருப்பது; அங்கே வந்து குறையற அநுபவிக்கலாமே‘ என்று,
உலகளந்த திருக் கோலமாக ஸேவை ஸாதிக்கு மிடமான திருக் கோவலூரைக் காட்டிக் கொடுக்க,
‘நெஞ்சே! நமக்கு வாய்த்தது; அநுபவிக்கப் போகலாம், வா‘ என்றழைக்கிறார்.

வழி போவார்க்கு வாய்ப் பாடல் வேண்டுமாகையாலே எம்பெருமானுகந்தருளின நிலங்களாகிய
திருப்பதிகளை யெல்லாம் பாடிக் கொண்டே போக வேணுமென்கிறார் முன்னடிகளில்.

திவ்யதேசங்கள் எப்படிப்பட்டவை? எம்பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியிருக்கப் பெற்றவை.
அவ் வெம்பெருமானுக்கு நான்கு விசேஷணங்கள் இடப்பட்டிருக்கின்றன.

(அலம்புரிந்த நெடுந்தடக்கை)
‘அலம்‘ என்பது வடசொல்; போதும் என்னும் பொருளதான இடைச்சொல்
யாசகர்கள் ‘போதும் போதும்‘ என்று சொல்லும் படியாக அவர்கட்கு அபாரமாகக் கொடுக்க வல்ல
பெரிய கையை யுடையவன் எம்பெருமான்.
தன்னிடத்தில் தானம் பெற்ற பின் வேறொரு வாசலிலே சென்று துவள வேண்டாதபடி பர்யாப்தமாகக் கொடுப்பவனென்க.
புரிதல்-கொடுத்தல்.

இனி, ‘புரிதல்‘ என்று மீளாகைக்கும் போதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே;
பெறுமவர்கள் ‘போதும்‘ என்றவாறு கொடுப்பதினின்று மீண்டாலும் நெடுந்தடக்கையாகவே யிருக்கும்;
உழக்கிலே பதக்கை யடக்க வொண்ணாமையாலே மீளுமித்தனை;
இவன் தன்னுடைய ஔதார்யத்தைப் பார்த்தால் யாசகர்களின் மனோ ரதம் சிறிதாய் இவனுடைய பாரிப்பே விஞ்சியிருக்குமென்பது கருத்து.

(நெடுந்தடக்கை) நெடு, தட என்ற இரண்டு விசேஷணங்களுக்குக் கருத்து என்னென்னில்;
யாசகர்களிருந்த விடத்தளவுஞ் செல்ல நீண்ட கை என்பது நெடு என்றதன் கருத்து;
திருக்கையின் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் அவகாசங் கொள்ளும்படியான
பெருமை ‘தட‘ என்றதனாற் சொல்லிற்றாமென்க.

அலம் புரிந்த என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
ஹலம் என்ற வடசொல் கலப்பை யென்று பொருள்படும்; அஃது அலமெனத்திரியும்;
கலப்பையைத் தரித்த திருக் கையை யுடையவன் என்னலாம்.
இதனால் பலராமாவதாரத்தைப் பேசினபடி.
பலராமனுக்குக் கலப்பையும் உலக்கையும் முக்கிய ஆயுதங்கள்.
அதனால் அவ்விராமனுக்கு ‘ஹலாயுதன், ஹனீ, முஸலீ என்ற திருநாமங்கள் வழங்கும்.

அமரர் வேந்தன் =
கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்ய ஸூரிகளை இங்கு அமரர் என்கிறது.
நித்ய ஸூரிகளை அடிமை கொள்வதாக முடி கவித்திருப்பவன் என்றவாறு.

(அஞ்சிறைப்புள்தனிப்பாகன்)
கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்ய ஸூரிகளை அடிமை கொள்பவனென்று பொதுவாகச் சொல்லிற்று;
அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு திருஷ்டாந்தமாக ஒரு வ்யக்தியைச் சிறப்பாக எடுத்துப் பேசுகிறார்.
அழகிய சிறகை யுடையனான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன், கருடவாஹன்ன் என்றபடி.
எம்பெருமான் தன்மீதேசறி உலாவும்போது உண்டாகும் ஆயாஸத்திற்குத் திருவாலவட்டம் பணிமாறினாப் போலே
இரண்டு சிறகாலும் ஆச்வாஸம் செய்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சிறை‘ என்று புள்ளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
அடியார்கள் இருக்குமிடங்களிலே எம்பெருமானைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிறகுகளே கருவியாதலால் அவற்றைக் சிறப்பித்துக் கூறுகிறபடியுமாம்.

(அவுணர்க்கென்றும் சலம்புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்)
ஸ்ரீராம க்ருஷ்ணாதிரூபேண திருவவதரித்து விரோதிகளைக் களைந்தமை சொல்லுகிறது.
‘அவுணர்‘ என்றது அசுர்ர் என்றபடி. இது அஸுரஜாதியைச் சொல்லுகிறதன்று.
அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை யுள்ளவர்கள் ஆஸுரப்க்ருதிகளென்று
சொல்லப் படுவார்களாதலால் அவர்களையே இங்கு அவுணரென்கிறது.

ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும்
“உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான்.
விபீஷணாழ்வான் ராக்ஷஸ அஸுரயோநியிற் பிறந்திருக்கச் செய்தேயும் “விபணஷஸ் து தர்மாத்மா“ என்னும்படியாயிருந்தான்.

ஜயந்தன் (காகாஸுரன்) தேவயோநியாயிருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான்.
ஆன இப்படிகளை ஆராயுமிடத்து அஸுரத்வமும் தேவத்வமும் ஜாதிபரமன்று, ஸ்வபாவபரம். அதாவது.
“விஷ்ணு பக்திபரோ தேவோ விபரீதஸ் த்தாஸுர“ என்று ஸ்ரீவிஷ்ணு தர்மத்திலே சொல்லிற்று.
“த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச-தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா.“ என்று
பகவத்கீதை யிலே சொல்லிற்று.
எம்பெருமானுடைய ஸ்வரூப குணவிபூதிகளில் அன்புள்ளவர்கள் தேவரெனப்படுவர்கள்,
அவற்றில் பொறாமை யுள்ளவர்கள் அசுரனெப்படுவர்கள்.
“நண்ணவசுர்ர் நலிவெய்த நல்லவமர்ர் பொலிவெய்த“ (10-7-5) என்பன போன்ற விடங்களிலும்
இவ்வகைப் பொருள் அநுஸந்திக்கப்பட்டமை காண்க.
ஆக இப்படிப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகள் விஷயத்தில் ஒருநாளும் அநுக்ரஹ மின்றி நிக்ரஹமே செய்து போருமியல்வின்ன் என்றதாயிற்று.

இப்படிப்பட்ட எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குந் திருப்பதிகளை யெல்லாம் பாடிக் கொண்டே
திருக்கோவலூர் தொழப் போவோமென்கிறார்.
மேல் ஒன்றரையடிகளால் திருக் கோவலூரை விசேஷிக்கிறார்.
(நிலம் பரந்து வருங்கலுழி இத்யாதி.)
பெண்ணையாகிற ஒரு பெண்மணி திருக் கோவலூராயனாராகிற புருஷோத்தமனை அநுபவிக்கப் போகிறாளாகையாலே
அளவற்ற ஆதரந்தோற்றப் பேராரவாரத்தோடே பெருகுகிறபடி.
ஜந்தோஷ மிகுதியாலே கரை மீதே வழிந்து குடியிருப்புக்களை யழித்த, கரையில் நிற்கிற வேய்களை
வேர்ப் பற்றிலே குத்தியெடுத்து இழுத்துக் கொண்டு வர, அந்த வேய்கள் உடைந்து முத்துக்களை ப்ரஸவிக்க,
அவற்றைப் பெண்ணையாறு வயல்களிலே கொண்டு தள்ள,
பயிரிடுமவர்கள் அவை தங்கள் பயிர்க்குக் களைகளென்று தள்ள,
அவர்களாலும் தடைசெய்ய வொண்ணாதபடி வயல்களிலெங்கும் பரந்தனவாம் முத்துக்கள்,
இப்படிப்பட்ட வயல்களிலே பொன் போன்ற நெற்கள் விளையப் பெற்ற பூங்கோவலூரைத் தொழுவோம்,
நெஞ்சே! புறப்படு என்றாராயிற்று.

பொய்கை வேலி என்பதில் தொனிக்கும் அர்த்த விசேஷமும் உணர்க.
பொய்கை யாழ்வார் முதலான முதலாழ்வார்களைக் காப்பாகவுடைய திருக்கோவலூர் என்க.

அவதாரத்துக்கு பிற்பட்டார் உஜ்ஜீவிக்க -திவ்ய தேசங்கள் இருக்க
அமரர் வேந்தன் -அலம் புரிந்த தடக்கைக்கு இலக்கான நித்ய ஸூரிகள் அமரர்
அவர்களை அடிமை கொள்ள முடி கவித்து இருப்பவன் அமரர் வேந்தன்

அஞ்சிறைப் புள் தனிப் பாகன் –
அமரர் அடிமை கொண்டதற்கு ஒரு எடுத்துக் காட்டு
பெறிய திருவடிக்கு அத்விதீயமான பாகன்
ஆயாசத்துக்கு திரு ஆல வட்டம் போலே சிறகுகள்
அடியார்கள் இருக்கும் இடம் அவனை கொண்டு வருவதால் அழகிய அடை மொழி

அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
அஹங்கார மமகாரங்கள் -பகவத் பக்தியிலே பகை உள்ளவர்கள்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஆசூர ஜாதியில் இருந்தாலும்
உபமானம் அசேஷாணாம் சாதுநாம் யஸ் சதா பவேத்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விபீஷணஸ் து தர்மாத்மா
ஜெயந்தன் காகாசுரனாய் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான்
அசூரத்வமும் தேவத்வமும் ஜாதி பரம் அன்று ஸ்வபாவ பரம்
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ் ததாசூர -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
த்வௌ பூத சர்க்கௌ லோகேச்மின் தைவ ஆசூர ஏவ ச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாயா சூரி மதா-ஸ்ரீ கீதை

மேலே திவ்ய தேசங்களை பாடிக் கொண்டு திருக் கோவலூர் தொழப் போவோம் என்கிறார்
பெண்ணை ஆறு திருக் கோவலூர் ஆயானாகிய புருஷோத்தமனை அனுபவிக்க
பெரிய ஆதாரத்துடன் பெறுகிற படி
கரை புரண்டு வேய்களை குத்தி எடுத்து
அந்த வேய்கள் உடைந்து முத்துக்கள் பிரவேசிக்க
அவற்றை பெண்ணை ஆறு வயல்களிலே கொண்டு தள்ள
பயிரிடுமவர்கள் அவற்றை களை என்று தள்ள
அவர்களாலும் தடை செய்ய ஒண்ணாதபடி வயல்கள் எங்கும் பரந்தனவாம் முத்துக்கள்
இப்படிப் பட்ட வயல்களிலே பொன் போன்ற நெற்கள் விளையப் பெற்ற
பூம் கோவலரைத் தொழுவோம் நெஞ்சே புறப்பட்டு -என்கிறார்-

————————————————————————–

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

பதவுரை

வற்பு உடைய–மிடுக்குடைய
வரை நெடு தோள்–மலை போன்று உயர்ந்த தோள்களை யுடையரான
மன்னர்–(கார்த்த வீரியார்ஜூனன் முதலான) அரசர்கள்
மாள–முடியும்படி
வடிவு ஆய–அழகியதான
மழு–கோடாலிப் படையை
ஏந்தி–தரித்து (பரசு ராமனாய்த் திருவதரித்தும்)
உலகம் ஆண்டு–(ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும்
வெற்பு உடைய–மலையை உள்ளே யுடைய
நெடு கடலுள் –பெரிய கடலினுள்ளே
தனி வேல்–ஒப்பற்ற வேற்படையை
உய்த்த–செலுத்தின
வேள் முதலா–ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை
வென்றான்–(பாணாஸுர யுத்தத்தில்) தோல்வி யடையச் செய்தும் போந்த எம்பெருமான்
ஊர்–எழுந்தருளி யிருக்குமிடமாய்,
விந்தை மேய–(தவம் புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய்
கற்பு உடைய–அறிவில் சிறந்தவளாய்
மடம்–பற்றினது விடாமையாகிற குணமுடையனான
கன்னி–துர்க்கையானவள்
கடி பொழில் சூழ்–பரிமளத்தை யுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய்
நெடு மறுகில்–விசாலமான திருவீதிகளை யுடைத்தாய்
கமலம் வேலி–தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
பொற்பு உடைய மலை அரையன்–பராக்ரம சாலிகளான மலயமாநவர்களாலே ஆச்ரயிக்கப் பட்டதான
பூங்கோவலூர்–திருக் கோவலூரை
நெஞ்சே தொழுதும்–மனமே! தொழுவோம்;
போது–வா

கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று
திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்;
அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த
ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார்.
அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி.

எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு
என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று.
ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த
ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே
பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும்
ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு
“பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார்.

“வற்புடையவரை நெடுந்தோள் மன்னர்மாள வடிவாய மழுவேந்தி” என்ற வளவும் பரசுராமாவதார பரம்.
“உலகமாண்டு” என்றது ஸ்ரீராமாவதாரபரம்.
“வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றான்” என்றது ஸ்ரீ க்ருஷ்ண யவதாரத்தில்
பாணாஸுர விஜய பரம். இவை, ஆழ்வாருடைய அச்சங்கெடுக்கைக்கு எம்பெருமான் காட்டித் தந்த மிடுக்குக்களாம்.

வடிவாய மழு = ‘வடிவு ஆய மழு‘ என்று பிரித்தால் அழகியதான மழு என்று பொருள்படும்.
‘வடி வாய மழு‘ என்று பிரித்தால் கூர்மையான வாயையுடைய மழு என்று பொருள்படும்.

உலகமாண்டு =
ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்துத் திருக்குணங்களாலே உலக முழுவதையும் ஈடுபடுத்தி
ஆண்ட படியைச் சொல்லுகிறது இது.

வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றானூர் =
முற் காலத்தில் மலைகளெல்லாம் இறகுகளுடன் கூடிப் பறந்து ஆங்காங்க வீழ்ந்து நகரங்களையும் கிராமங்களையும்
அழித்துக் கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் இறகுகளை அறுத்தொழிக்க,
மைநாக மலை அவனுக்குத் தப்பித் தெரியாதபடி கடலினுள்ளே கிடக்க,
தேவஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யன் அதனையறிந்து தனது வேற்படையைச் செலுத்தி
அம்மலையை நலிந்த வரலாறு இங்கு அறியத்தக்கது.
அப்படிப் பட்ட மஹாவீரனான ஸுப்ரஹ்மண்யன் முதலானாரைப் பாணாஸுர யுத்தத்தினன்று பங்கப்படுத்தினமை சொல்லிற்றாயிற்று.

‘வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர்.
மன்மதனைப் போல் அழகிற் சிறந்தவனென்க.
நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜய வ்ருத்தாந்தத்தைப் பேசும் போது
“நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற
அருளிச்செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க.
”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.

இனி, திருக்கோவலூர்த் திருப்பதியின் காவலுறைப்பை அருளிச் செய்கிறார் -விந்தைமேய வென்று தொடங்கி.
துர்க்கையானவள் இந்த க்ஷத்திரத்தைத் காவர் செய்து வர்த்திக்கிறாளென்பது இதிஹாஸம்.
பெரிய திருமொழியிலும் (2-10-6) இவ்வூர்த் திருப்பதிகத்தில்
”வியன்கலை யெண்டோளினாள் விளங்குசெல்வச் செறியார்ந்த மணிமாடந் திகழ்ந்து தோன்றுந்
திருக்கோவலூரதனுட் கண்டேனானே” என்றருளிச் செய்தது முணர்க.
இந்தத் துர்க்கையானவள் இவ்விடத்துக் காவல் பூணகைக் குறுப்பாக விந்த்யாடவியிலே யிருந்து தவம் புரிந்தாளென்பதுபற்றி
‘விந்தைமேய‘ எனப்பட்டது. ‘விந்தியம்‘ என்பது விந்தையென மருவிற்று.

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமலவேலி =
எங்குப் பார்த்தாலும் நறு மணம் மிக்க சோலையாயிருக்கும்;
திருவீதிகளோ அகல நீளங்களிற் குறையற்றிருக்கும்; தாமரைத் தடங்களும் ஊர்க்கு வேலியாயிருக்கும்.

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற =
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலவும்,
அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும்,
நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும்,
திருநறையூரில் செம்பியன் கோச் செய்கணான்போலவும்,
திருக்கோவலூரில் ‘மலயமாநவர்‘ என்னும் பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனராக இதிஹாஸம் வழங்குமென்ப.

”மலையரையன்” என்றது ஜாத்யேகவசநமாய்ப் பரம்பரையான அரசர்களைச் சொல்லுகிறதென்பது பெரியவாச்சான் திருவுள்ளம்.
அவ்வரசர்களின் கைங்கரியங்களுக்கு இலக்காயிருக்கும் திருக்கோவலூர்.
ஆக இப்படிப்பட்ட திருப்பதியைச்சென்று தொழுவோம், புறப்படாய் நெஞ்சமே! என்றாராயிற்று.

திருவடியை வசிஷ்ட சண்டாள விபாகம் அற சர்வ ஸ்வதானம் பண்ண அதுக்கு அஞ்சி
அஸ்தான பய சங்கை ஆழ்வார்களின் பணி
சுக்ரீவன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் பண்ணிய அதி சங்கைக்கு தனது தோள் வலியைக் காட்டி
அச்சம் தவிர்த்தால் போலே
இங்கு உள்ள காவல் உறைப்பையும் தேசத்தில் உள்ள அரண் உடைமையும் ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க
கண்டு தெளிந்து ஆழ்வார் அச்சம் கேட்டு பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -என்று
தமது திரு உள்ளத்தை தட்டி எழுப்புகிறார்

வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய மழு ஏந்தி -ஸ்ரீ பராசுராம விஜய பரம்
உலகம் ஆண்டு -ஸ்ரீ ராம விஜய பரம்
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் -ஸ்ரீ கிருஷ்ண பாணாசூரா விஜய பரம்
ஆழ்வார் அச்சம் தீர அவன் காட்டித் தந்த மிடுக்குகள்

வடிவாய மழு-வடிவு ஆய மழு அழகிதான மழு
வடி வாய மழு -கூர்மையான வாயை உடைய மழு
மைந்நாக மலையை ஸூப்ரஹ்மன்யன் நலிந்த வரலாறு
மன்மதனை போலே அழகு என்பதால் -வேள் -என்கிறாள்
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் -வேள் முதலா வென்றான்
கார்த்திகையானும் கரி முகத்தானும் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு

விந்தை மேய –
துர்க்கை தேவதை ஷேத்திர காவல்
வியன்கலை ஒண் தோளினாள் விளங்கு செல்வச் செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேனே -பெரிய திருமொழி
விந்த்யாடவியிலே இருந்து தவம் புரிந்தாள் எனபது பற்றி விந்தை மேய -என்கிறார்
விந்த்யம் எனபது விந்தை என மருவி –

பொற்புடைய மலை யரையன் –
திருவல்லிக்கேணியில்- தொண்டையர் கோன் -போலவும்
திரு அட்ட புயகரத்தில் -வயிரமேகன்- போலவும்
திரு நந்திபுர விண்ணகரத்தில் -நந்தி வருமன் -போலவும்
திரு நறையூரில் -செம்பியன் கோச் செங்கணான் -போலவும்
திருக் கோவலூரில் -மலயமானவர் -பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனர்
மலையரையன் ஜாதி ஏக வசனம்-பரம்பரையான அரசர்கள் – என்றுமாம்-

——————————————————————-

பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்-

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணி னேனே.

பதவுரை

நீரகத்தாய்-நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய்–திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய்–நிலாத் திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய்–செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருப்பதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்–அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய்–சிந்திப்பாருடைய நெஞ்சிலுறைபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய்–உலகமெல்லாம் துதிக்கும்படியான திருக்காரகத்திலுள்ளவனே;
கார் வானத்து உள்ளாய்–திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா-கள்வனே!
காமரு–விரும்பத்தக்கதாய்
பூ–அழகியதான
காவிரியின்–திருக்காவேரியினது
தென் பால்-தென் புறத்திலே
மன்னு-பொருந்தி யிருக்கிற
பேரகத்தாய்-திருப்பேர் நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய்-எனது ஹ்ருதயத்திலே பேராமலிருப்பவனே!
பெருமான்-ஸர்வ ஸ்வாமியானவனே!
உன் திரு அடியே-உனது திருவடிகளையே
பேணினேன்-ஆசைப்படா நின்றேன்.

நீரகத்தாய் =
திருக்கச்சிமாநகரில் திருவூரகமென்று ப்ரஸித்தமான ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸந்நிதியிலுள்ள
திருநீரமென்கிற திவ்யதேசம்; அவ்விடத் தெம்பெருமானை விளித்தபடி.
நீரின் ஸ்வபாவத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தலமாதல் பற்றி இத்தலத்திற்கு
நீரக மென்று திருநாமமாயிற்றென்பர்.
நீர்க்கும் எம்பெருமானுக்கும் ஸ்வபாவ ஸாம்யம் பலபடிகளாலுண்டு. அது நமது ஸ்வாதேசார்த்த ஸாகரத்தில் காணத்தக்கது.

நெடு வரையின் உச்சி மேலாய்=
பூ மண்டலத்திலுள்ளார் அநுபவிப்பது மாத்திரமன்றியே மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கலாம்படி
ஓங்கியுள்ள திருமலையிலே நின்றருள்பவனே!
“வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“
“வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற அருளிச் செயல்களறிக.

நிலாத்திங்கள் துண்டத்தாய் =
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டினுள் ‘நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது ஒரு திருப்பதி;
இது பெரிய காஞ்சீபுரத்தில் தேவதாந்தா ஆலயத்தினுள் உள்ளது.

நிறைந்தகச்சியூரகத்தாய்=
ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி.
எம்பெருமான் உரக ரூபியாக இத்தலத்தில் ஸேவை ஸாதிப்பதனால் ஊரகமென்று திருநாமமாயிற்றென்ப.
(உரகம்-ஆதிசேஷன்)
நிறைந்த கச்சி யென்றது
திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சீ ஷேத்ரமென்றபடி.
திருவூரகத் தெம்பெருமான் தன் திருமேனியொளியாலே திருக்கச்சி மாநகர் முழுவதையும்
நிரப்பி யிருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்=
இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியங்களின் பரம போக்யதை காண்மின் ;-
“திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண்வளர்ந்தருளினவனே!.
அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே
அழகிய துறை யென்கிறது. தத்ஸம்பந்தத்தாலேயிறே அத்துறையைப்பற்றிக் கிடக்கிறது.
(கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா-
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.”-
“கணிகண்ன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் –
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.” )
என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற்காண்க.
ஆச்ரிதன் போனபோது அவன் பின்னே போயும் அவன் வந்தவாறே வந்து கால்நடை தலைமாடாக் கிடந்தும்
இப்படியிறே அங்குத்தை ஆச்ரித பாரதந்திரிய மிருப்பது.
‘இந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ‘ என்று வைஷ்ணவனிருந்த தேசம்
வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாயிருக்குமா போலே ஆச்ரித ஸ்பர்சமுள்ளதொருதுறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யமா யிருக்கிறபடி.

உள்ளுவார் உள்ளத்தாய்! –
காஞ்சீ ஷேத்ரதில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம் போலவே
தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு
‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ;
இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும்.
பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர,
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்
உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது.
தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி.
எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான
உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும்
நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது.

உலகமேத்துங் காரகத்தாய் =
காரகமென்கிற திவ்ய தேசமும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது.
மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக்
காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது.
(இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)

கார்வானத்துள்ளாய்! =
கார்வானமென்பதும் தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று;
இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கிய திவ்யதேசங்கள் நான்கிலொன்று.

கள்வா! =
‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்திலுறைபவனே :
பிறர் அறியாதபடி காரியஞ் செய்பவனைக் கள்வனென்பது;
எம்பெருமானும் ‘இராமடமூட்டு வாரைப்போலே உள்ள பதிகிடந்து ஸத்தையே பிடித்து
நோக்கிக் கொண்டு போருமவனாகையாலே கள்வனென்ப்படுகிறான்.

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! =
‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளிகொண்டருள்பவனை விளிக்கிறபடி.

பல திருப்பதிகளையும் வாயார சொல்லிக் கதறுகிறார் –
நீரகத்தாய்
திருக் கச்சியில் திரு ஊரகம் -உலகந்த பெருமாள் சந்நிதியில்
உள்ள திரு நீரகம் திவ்ய தேசம்
நீரின் ஸ்வ பாவங்கள் அவனுக்கும் உண்டே
1-பள்ளத்தில் பாயும் -மேட்டில் ஏறுவது அருமை
ஜாதி இத்யாதிகளால் குறைந்தோர் பக்கம்
பாண்டவதூதன் பீஷ்மர் துரோணர் துரியோதனன் விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகை அமுது செய்து அருளினான்
பள்ளத்தே ஓடி பெரும் குழியே தங்கும் இயல்வு உண்டே
2-நீர் இல்லாமல் கார்யம் இல்லை
லோகோ பின்ன ருசி யாக இருந்தாலும் எல்லாரும் நீரை விரும்புவது போலே எம்பெருமானும்
3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை– சூடு வந்தேறி
இவனுக்கும் தண்ணளி இயற்கை -சீற்றம் வந்தேறி
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் -முமுஷூப்படி திவ்ய ஸ்ரீ ஸூக்தி
4- நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்
எம்பெருமான் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –
5-நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரியதாய் இருக்கும்
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையாலே விலங்கிட்டு வைத்து புஜிக்க- நின்றான்
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது நடந்தான்
6-நீர் மற்ற பண்டங்கள் சமைக்க வேணும் –
தனிப்பட தானே குடிக்கவும் தக்கதாய் இருக்கும்
அவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் இரண்டு ஆகாரங்களும் உண்டே
அவனும் ஸ்வயம் புருஷார்த்தம்
7-அன்னம் போன்றதுக்கு பிரதி நிதி உண்டு
நீருக்கு பிரதிநிதி இல்லையே
குண அனுசந்தானத்தாலும் போது போக்க அரிது
ஒரு நாள் காண வாராயே -அடியேன் தொழ வந்து அருளாயே -என்று பிரார்தித்து பெற்றே தீர வேணும்
8-சோறு உண்ணும் போது நீர் வேணும்
நீர் வேறு ஒன்றை அபேஷிக்காது
உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்
எம்பெருமான் இதர நிரபேஷன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
9-கொள்ளும் பாத்ரங்கள் தார தம்யம் அன்றி நீர் தானே குறைய நில்லாது
எங்கும் நிரம்பவற்று
எம்பெருமானும் கொள்ளக் குறைவிலேன்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்ளக் குறையே அத்தனை
ஐஸ்வர்யம் போதுமே கைவல்யம் போதுமே
10- நீர் ஐந்து வகைப் பட்டு இருக்கும்
பூமிக்கு உள்ள பதுங்கிக் கிடக்கும் நீர் /ஆவரண ஜலம் /பாற் கடல் நீர் /பெருக் காற்று நீர் /தடாகங்களில் தேங்கும் நீர்
அவனும் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
விடாய்த்தவனுக்கு வேறு இடம் தேடித் போக வேண்டாத படி நிற்கிற இடத்திலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குத்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூமிக்குள் பதிந்த நீர் போலே அந்தர்யாமித்வம்
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்தில் இருக்கச் செய்தேயும்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் யத்னத்தால் காண வேணுமே
விடாய்தவனுக்கு அண்டத்துக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று இருக்குமவனுக்கு லீலா விபூதிக்கு அப்பால் உள்ள பரத்வம்
அப்படி அதி தூரஸ்தம் அன்றியே அண்டத்துக்கு உட்பட்டு இருக்கச் செய்தேயும்
விடாய்தவனுக்கு கிட்ட அரிதான பாற் கடல் போலே வ்யூஹம்
சமீஸ்தமாய் இருந்தும் தத் காலத்தில் இருந்தவர்களுக்கு மாத்ரம் உபயோகமாய் யோக்யமாய்
பிற்பட்டார்க்கு அரிதான பெருக்காறு போலே ஆயிற்று விபவம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
விடாய்தவனுக்கு விடாய் தீரலாம்படி பெருக்காரிலே தேங்கின மடுக்கல் போலே யாயிற்று
கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லார் கண்ணுக்கும் இலக்காம்படி அர்ச்சாவதாரம்
11- நீரானது ஸ்வத பரிசுத்தமாயினும் ஆஸ்ரய வசத்தாலே த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும்
அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் த்யாஜ்யனாயும்
கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள எம்பெருமான் உபாதேயம்
12-தோண்ட தோண்ட சுரக்கும் நீர்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்
13-நீர் தனக்கு ஒரு பிரயோஜனமும் இன்றியே பரார்த்தமாகவே இருக்கும்
எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும்
14-நீர் தானே பெய்ய வேணும் அன்றி ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது
எம்பெருமான் படியும் அப்படியே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷை கஞ்சித் கதாசன
15 நீர் கடலில் இருந்து காள மேகம் வழியாக வந்தால் அன்று உபஜீவிக்க உரியது ஆகாது
எம்பெருமானும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆசார்யர் முகமாகவே வந்தே உபஜீவ்யன் ஆகிறான்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாயத் திருந்தினவாறே
சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆமே
16-வசிஷ்ட சண்டாள விபாகம் அற ஒரே துறையிலே படிந்து குடைந்தாடலாம் நீரில்
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
பெரியார் சிறியார் வாசி அற ஆஸ்ரயிக்கலாம்
17-நீர் சிறிது த்வாரம் கிடைத்தாலும் உட் புகுந்து விடும்
எம்பெருமானுக்கு சிறிது வ்யாஜ்யமே போதும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய வந்து புகுந்தான்
18-தீர்த்த விசேஷங்களிலே நீருக்கு மகாத்மயம் அதிகம்
எம்பெருமானுக்கு கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திருப்பதிகள் விசேஷம்
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் ஏறட்டு கொள்வது
முதுகில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது குடைந்து நீராடுவது
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி -எம்பெருமானை விழுங்குவார்கள்
20-நீர் வேண்டியவன் துளி நுனி நாக்கு நனைத்தால் போதும் என்பான்
கூராழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள் காண வாராயே
21-நீரில் சிறிய கல்லும் அமிழும் பெரிய தெப்ப மரமும் மிதக்கும்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யக் காண்போம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனிசர் அமிழ்தலும்
ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும் காண்போம்
இங்கனே பலவும் உண்டே

நெடு வரையின் உச்சி மேலாய்
பூமியில் உள்ளார் மட்டும் அன்றி மேல் உலகத்தோரும் வந்து அனுபவிக்கலாம் படி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திரு வேங்கடம்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
மந்திபாய் வட வேங்கட மா மலை நின்றான் –

நிலா துங்கள் துண்டத்தாய்

நிறைந்த கச்சி ஊரகத்தாய்
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி
திரு ஊரகத்து எம்பெருமான் ஆதி சேஷன் தனது திரு மேனி ஒளியாலே திருக் கச்சி முழுவதும் நிறைத்த என்றுமாம்

ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
திரு வெக்காவில் அழகிய துறையைப் பற்றி கண் வளர்ந்து அருளினவனே
அல்லாத துறைகளைப் போல் அன்றியே ஆழ்வார் திரு மழிசைப் பிரான் இழிந்து தீர்த்தம் ஆடின துறையாகையாலே அழகிய துறை ஆகிறது
தத் சம்பந்தத்தாலே இறே அத் துறையைப் பற்றிக் கிடக்கிறது
கனி கண்ணன் போகின்றான் –பைந்நாகப் பாயை சுருட்டிக் கொள்
கனி கண்ணன் போக்கு ஒழிந்தான் –பைந்நாகப் பாய் படுத்துக் கொள் –
ஆஸ்ரிதன் போன போது அவன் பின்னே போயும்
அவன் வந்தவாறே கால் கடை தலை மாடாக கிடந்தும்
இப்படி இறே அங்குத்தை ஆஸ்ரித பாரதந்த்ர்யம் இருப்பது
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ என்று
ஸ்ரீ வைஷ்ணவர் இருந்த தேசம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே
ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள துறையும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யமாய் இருக்கும் படி
வேகவதி –வேகா சேது -வேகவணை –வேகணை -வேகனை-வெக்கணை -வெக்கா மருவி

உள்ளுவார் உள்ளத்துள்ளாய்
ஹிருதய கமலத்தில் வாழ தான் திவ்ய தேச வாஸம்
சிலர் உள்ளுவார் உள்ளம் தேவதாந்திர கோயில் என்றும் அங்குள்ள பெருமாள் என்றும் –
நிலாத் துங்கள் துண்டத்தாய் -என்றும் தப்பாக சொல்வார்கள்

உலகமேத்தும் காரகத்தாய்
மேகம் போன்ற ஸ்வ பாவம் உடையவனே
1-பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும்
வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
2- மின்னல் உள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும்
பிராட்டி உடன் இருந்தால் கிருபா ரசம் விஞ்சி இருக்கும்
இவள் சந்நிதியால் காகம் தலைப் பெற்றது அது இல்லாமையால் ராவணன் முடிந்தான்
3- மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்
தனக்கு உபதேசித்தார்க்கும் உபதேசிப்பான்
சித்ர கூடத்தில் வசிஷ்டன் பெருமாள் இடத்திலே சில சூஷ்ம தர்மங்கள் கேட்கப் பெறலாயிற்று
4-பெய்யப் பெறாத காலத்திலே வரைக்கும் மேகம்
நெஞ்சு உலர்ந்து பேசினான் இறே திரௌபதிக்கு ஆபத்திலே நேரிலே வந்து உதவப் பெறாமையாலே
5-இன்ன காலத்தில் மேகம் பெய்யும் என்று அறுதியிட வல்லார் யாரும் இல்லை
வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவானே
திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான்
அபேஷியாது இருக்கவே தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
6- வனத்திடை ஏரியாக வெட்டி யாயிற்று நீ மழை பெய்தாக வேணும் என்று வளைப்பிட ஒண்ணாது
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்தனன்
7- ஜல ஸ்தல விபாகம் இன்றியே பெய்யும் மழை
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம்
இடையர் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -பகவத் விஷயீ காரம் பெற்றவர்கள்
8-மேகம் சரத் காலத்திலே கர்ஜித்து போய் விடும் மழை பெய்யாது பெய்யும் காலத்தில் ஆடம்பரம் அறப் பெய்யும்
எம்பெருமான் குசேலருக்கு அருள் செய்தபடி
9- விராட பர்வ கால ஷேபத்துக்கு வரும் மேகம்
பகவத் விஷய கால ஷேபத்துக்கு வந்து நிற்கும் எம்பெருமான்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் என்று வந்தான் இறே ஸ்ரீ ரெங்க நாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே
10- சுக்திகளில் பெய்து முத்தாக்கும் மேகம்
அடியாருக்கு இன்ப மாரியாகிய எம்பெருமான் கடாஷ தாரையும்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் இடத்தே பிரவஹித்து மிக்க பயன் தரும்
11-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்
இவனும் இன்னார் தூதன் என நின்றான்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் இறே
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்
எருக்கலை போல்வன வீழ்ந்து ஒழியும்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய்
தாயார் மகிழ ஒன்னார் தளர
13- எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் பைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -வேறு புகல் அற்று
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அநந்ய கதிகளால்
14-துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை -என்கிறபடி
அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேது வாகையாலே போக ஸ்தானமாயும்
விடாய் தீர பருகுகையாலே ஸ்வயம் போக்யமாயும் இருக்கும்
பிராப்யனும் பிரபகனுமாய் இறே இவனும் இருப்பது
15-எத்தனை கண்ணீர் விட்டாலும் விருப்பம் இல்லாத அன்று வாளா இருக்கும் மேகம்
பரதாழ்வான் பலருடன் சித்ர கூட பரிசரத்திலே போந்து கண்ணநீரை விழ விட்டு வேண்டினவிடத்தும்
ஸ காம மன வாப்யைவ -என்று மநோ ரதம் பெறாமல் வீண்டான் இறே

கார் வானத்துள்ளாய்
மேகத்தின் ஸ்வபாவ விசேஷங்கள் இத்தலத்து எம்பெருமான் இடமும் உள்ளன

கள்வா
பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டத்தோர் புள் வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா
என்று ஓதுவது என் கண்டு

காமரு காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்
திருப் பேர் நகர்
சிலர் காவிரியின் தென் பால் விசேஷணம் பார்க்காமல் பேரகம்-உலகளந்த பெருமாள் என்பர்

——————————————————————-

எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும்
அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும்
வாய் வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார்–

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய் மதிள்கச்சி யூராய். பேராய்,
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழி தரு கேனே.

பதவுரை

வங்கத்தால்–கப்பல்களினால்
மா மணி–சிறந்த ரத்னங்களை
வந்து–கொண்டு வந்து
உந்து-தள்ளுமிடமான
முந்நீர்-கடற்கரையிலுள்ள
மல்லையாய்–திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!
மதிள் கச்சி ஊராய்–மதிள்களை யுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!
பேராய்-திருப்பேர் நதராளனே!
கொங்குஆர்–தேன் நிறைந்ததும்
வளம்–செவ்வி பெற்றதுமான
கொன்றை அலங்கல்- கொன்றை மாலையை
மார்வன்-மார்விலே யுடையனும்
குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்-பர்வதராஜ புத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை
பங்கத்தாய்-(வலது) பக்கத்திலுடையவனே!
பால் கடலாய்-திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!
பாரின் மேலாய்-ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!
பனி வரையின் உச்சியாய்-குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே
எங்கு உற்றாய்-எங்கிருக்கிறாய்?
பவளவண்ணா-திருப்பவள வண்ணனே!
எம்பெருமான்-எம்பிரானே!
ஏழையேன்-மிகவும் சபலனாகிய அடியேன்
உன்னை நாடி –உன்னைத் தேடிக்கொண்டு–
இங்ஙனமே -இவ்வண்ணமாகவே–
உழிதருகேன்–அலைச்சல் படாநின்றேன்.

(வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சியூராய்)
பரவாஸுதேவனாகிய ஒரு சிறந்த விலையுயர்ந்த ரத்னத்தை அவனது வாத்ஸல்யமென்கிற ஒரு கப்பலானது
(த்வீபாந்தரத்தில் நின்றும் த்வீபாந்தரத்திற்குச் சரக்குகளைக் கொண்டு தள்ளுவது போல)
திருக்கடல் மல்லை யென்கிற ஒரு தீவிலே கொணர்ந்து தள்ளிற்றாம்;

“கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து
காஞ்சீபுரத்திலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற்றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது.
ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றியே பெரியதிருமொழியில்
திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.

புண்டரீகர் என்கிற ஒரு பரம பக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரியதோட்டம் ஏற்படுத்தி
அதில் சிறந்த புஷ்பங்களை யுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டு போய் எம்பெருமானுக்கு
ஸமர்க்கிக்க வேணுமென்று பாரித்தார்; கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் இக்கடலைக் கையாலிறைத்துவிட்டு
வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவோமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே,
எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக் கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடி வந்து
அவரது தோப்பிலே தலைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது
திருக்கடல்மல்லைத் தலசாயிப் பெருமாளைப் பற்றின புராண வரலாறு.

பேராய்!=
பேரில் உள்ளவன் பேரான்; பேராய் என்பது விளி; திருப்பேர் நகரிலுள்ளவனே! என்றபடி.

(கொங்கத்தார் இத்யாதி)
கொன்றை மாலையை யணிந்த மார்வை யுடையவனும் பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொண்டவனுமான
ருத்ரனைத் தனது திருமேனியின் ஒரு புறத்திலே இடங்கொடுத்து இருத்தியிருக்குமவனே! என்றபடி.

“கொங்கத்தார்“ என்ற பாடத்தில்
‘கொங்கு அத்து ஆர்‘ என்று பிரித்து ‘அத்து‘ என்பதைச் சாரியையாகக் கொள்ள வேணும்.
‘கொங்குத்தார்‘ என்ற பாடத்தில்,
கொங்கு- தேனையும், தார்-பூக்களையும், வளம்-அழகையுமுடைத்தான, கொன்றை யலங்கல்- என்றுரைத்துக்கொள்க.
பங்கத்தாய்=‘பங்கு‘ என்று பார்ச்வத்திற்குப் பெயர்; திருமேனியின் கூறு. பங்கில் உடையவன்-பங்கத்தான்; அதன் விளி்.

பாற்கடலாய்=
அஹங்காரியான ருத்ரனுக்குத் திருமேனியில் இடங்கொடுத்தவளவேயோ?
பிரமன் முதலானோர்க்கு ஓர் ஆபத்து வந்தபோது ரக்ஷகரான நாம் நெடுந்தூரத்திலிருக்க வொண்ணாதென்று
பரமபதத்தில் நின்றும் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!.

பாரின்மேலாய்=
அஸுரர்களாலும் ராக்ஷஸர்களாலும் குடியிருப்பிழந்து ஸகல தேவதைகளும் வந்து சரணம் புக,
ராமக்ருஷ்ணாதி ரூபத்தாலே தன்னை அழியமாறி வந்தவதரித்து இப்பூமண்டலத்தின்கண் உலாவினவனே! என்கை.

பனிவரையினுச்சியாய்!=
ஸம்ஸாரதாபத்தை ஆற்றும்படியான குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலையினுச்சியிலே வாழ்பவனே!.

பவளவண்ணா!=
பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவுபடைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம்.
திருமங்கையாழ்வாருடைய இப்பாசுரத்திலுள்ள ‘பவளவண்ணா!‘ என்கிற விளியைக் கொண்டே
ஐயங்கார் அச்செய்யுள் இயற்றியருளின ரென்பது மறுக்கத்தக்கது.

(எங்குற்றாய் இத்யாதி.)
அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ;
“வருந்தி நான் வாசக மாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனை காலம் புலம்புவனே” என்றாற்போலே
உன்னைக் கூவிக் கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ;
இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.

நீ திருப்பதிகளில் கோயில் கொண்டு இருக்கும் அழகையும்
அஹங்காரிகளுக்கும் உனது திருமேனியில் இடம் கொடுத்து கொண்டு இருக்கும் சீலத்தையும்
வாய் வெருவிக் கொண்டு திரிவேன்

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சி ஊராய்
சிறந்த ரத்னத்தை வாத்சல்யம் என்கிற கப்பல் -கானத்தின் கடல் மல்லை-கடல் மலை தீவிலே தள்ள
விலை போவது மகா நகரங்களில் -என்பதால் அந்த கப்பல் திரு வெக்கா துறையிலே தள்ளிற்றாம்
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தல சயனம் -பெரிய திருமொழி

பேராய்
திருப் பேர் நகரில் உள்ளவனே

கொங்கத் தார் இத்யாதி
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
பச்யை காதச மே ருத்ரான் தஷிணாம் பார்ச்வம் ஆச்ரிதான் -மோஷ தர்மம்
தபஸா தோஷிதஸ் தேன விஷ்ணு நா ப்ரப விஷ்ணு நா ஸ்வ பார்ச்வே தஷினே சம்போர் நிவாஸ பரிகல்பித
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமானுடைய திருமேனியிலே இருப்பார்களோ என்னில்
ஆபத்துகளிலே திரு மேனியிலே இடம் கொடுத்து கொண்டு அருளும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
சாமாந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும்
மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியை
தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இறே
அப்படியே இவர்களும் திரு மேனியில் பண்ணி வைத்து இருக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரோ கலஹங்களிலே அடைய வளைந்தனுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து
கலஹம் தீர்ந்தவாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

பவள வண்ணா
விரும்பத் தக்க வடிவு திருப் பவள வண்ணன்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்தும் உய்யேனே பண்டைத்
தவள வண்ணா கார்வண்ணா சாம வண்ணா கச்சிப் பவள வண்ணா நின் பொற்பாதம்

எங்குற்றாய்
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே
இரங்கி அருள திரு உள்ளம் இல்லையா

——————————————————————-

எம்பெருமானே! பலபடிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழியப் பிறிதொன்றுமறியேன் என்கிறார்-

பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான்,
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே.

பதவுரை

உலகம் ஏத்தும்-உலகமடங்கலும் துதிக்கத் தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்-வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே!
குட பால் ஆனாய்–மேற்றிசையில் (கோயிலில் திருக் கண் வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே!
குண பால மதம் யானாய்–கீழ்த் திசையில் (திருக் கண்ணபுரத்தில்) மத யானை போன்றவனே!
என்றும்–எக் காலத்திலும்
இமை யோர்க்கு முன்னானாய்-நித்ய ஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி–அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத் தக்க சோதியாக
திருமூழிக் களத்து ஆனாய்–திருமூழிக் களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய்–முழுமுதற் கடவுளே!
பொன் ஆனாய்–பொன் போன்றவனே!
பொழில் ஏழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்–ஸப்த லோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே!
இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்–இகழ்வையே வடிவாகவுடைய தொண்டனாய் அறிவிலியான நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்–என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது
என் அறிவன்-வேறு என்ன வென்று சொல்ல அறிவேன்?

பொன்னானாய்! =
பொன் போன்றவனே! எம்பெருமானைப் பொன்னாகக் கூறுவதற்குப் பல பொருத்தஞ் சொல்லலாம்;
அதாவது-
பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விருப்பமுடையாரையும் இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது;
எம்பெருமான் படியும் அப்படியே;
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை உறங்கவெட்டான்;
கண்ட பின்பும் * ஸதாபச்யந்தி யாகையாலே நித்ய முக்தர்களை உறங்கவொட்டான்.
பொன்னானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி யழப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே: ஸ்ரீராமபிரானை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறிழுதமை ஸ்ரீராமாயணாதிப்ரஸித்தம்.
“பழுதே பலபகலும் போயின” வென்று கதறியழுவர் விவேகமுடையார்.
“இன்பத்தை யிழந்த பாவியேனெனதாவி நில்லாதே”
“எழில்கொள் நின் திருக்கண்ணினை நோக்கந் தன்னையுமிழந்தேனிழந்தேனே”
“உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாசத்தை நோக்கியழுவன் தொழுவனே” என்றிப்படியெல்லாங் கதறுவர்கள்.
பொன்னானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே; “எனக்காரும் நிகரில்லையே”
“மாறுளதோவிம்மண்ணின் மிசையே”
“எனக்கென்னினி வேண்டுவதே”
“இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் –
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பொழிலேழுங் காவல்பூண்ட புகழானாய் =
ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கை யன்றியே தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ் படைத்தவனே!.
‘காவல் பூண்ட‘ என்றதனால் காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டிருப்பனென்கிறது.
ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரணம் புகுந்த போது ஸுக்ரீவ மஹாராஜர் முதலானார் இவனை
ரக்ஷித்தருளலாகாதென்று தடை செய்த விடத்தும் ஒரு தலை நின்று ரக்ஷித்தே தீரும்படியான விரதம் பூண்டவனிறே எம்பெருமான்.

(இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாப் என்னானாப் என்னலல்லால் என்னறிவனேடையேன்?)
‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்;
அடைவே, நீசனாகிய என்றும்,
இகழத் தக்க வாய் மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க.
தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப் படுதல் போலவும்
பிச்சை யாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்ய ஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார்.

(என் ஆனாய்! என் ஆனாய்!)
ஆனை என்பது ஈறு திரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று;
‘என்னுடைய மத்த கஜமே! என்னுடைய மத்த கஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத்தனை யொழிய
ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.

யானைக்கும் எம்பெருமானுக்கும் பலபடிகளாலே ஸாம்யமுண்டு;- அது நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விரியும்.

(உலகமேத்தும் தென்னானாய் இத்யாதி.)
“திருமங்கை மன்னன் கட்டின திக்கஜங்களிருக்கிறபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை காண்க.
தென் திசைக்காகத் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட திசைக்காகத் திருவேங்கடமலையிலும்,
மேற்றிசைக்காகத் திருவரங்கம் பெரிய கோயிலிலும், கீழ்த் திசைக்காகத் திருக்கண்ணபுரத்திலும்
மத யானைபோலே விளங்குகிறபடியை அநுஸந்தித்தாராயிற்று.
தென்னானை, வடவானை, குடபாலானை, குணபால மதயானை என்ற பதங்கள் விளியுருபு ஏற்றுக் கிடக்கின்றன.

“குணபால மதயானாய்” என்கிற விடத்திற்கு
காட்டு மன்னார் ஸந்நிதியிலுள்ள மன்னனார் பரமான வியாக்கியானமுமுண்டு.

‘உலகமேத்தும்‘ என்கிற அடைமொழி நான்கு யானைகளுக்கும் அநவயிக்கும்.

(இமையோர்க்கு என்றும் முன்னானாய்)
நித்ய ஸூரிகளுக்கு எஞ்ஞான்றும் கண்முன்னே தோற்றி அவர்களுக்கு நித்ய தர்சந விஷய பூதனானவனே!

பின்னானார் வணங்குஞ்சோதி திருமூழிக்களத்தானாய்! =
திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும்.
பரத்வத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்வத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள்
இங்குப் பின்னானார் எனப்படுகின்றனர்;
அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனே!.
திருமூழிக்களமென்பது மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றில் ஒன்று.
இத்திருப்பதியைப் பாடினோர் இவ்வாழ்வாரும் நம்மாழ்வாருமே.
இருவரும் இப்பதியைப் பற்றிப் பேசுமிடங்களில்
‘திருமூழிக் களத்துறையு மொண் சுடர்‘ என்றும்
‘முனியே திருமூழிக்களத்து விளக்கே” என்றும்
“மூழிக்களத்து விளக்கினை” என்றும் சுடர்ப் பொருளாக அருளிச் செய்தல் குறிக் கொள்ளத் தக்கது:
அவ்வாறே இங்கும் “பின்னானார் வணங்குஞ் சோதி திருமூழிக்களம்” எனப்பட்டது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத் திருக்குணம் இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
அது தன்னிலும், கேவலம் அறிவிலிகளானவர்கட்கே காட்சி தருமிடமாகிய திருமூழிக்களத்தில்
அக்குணம் மிகமிக வொளிப்பெற்று விளங்குதலால்
‘ஒண்சுடர்‘ என்றும்
‘விளக்கு‘ என்றும்
‘சோதி‘ என்றும் இத் திருப்பதிக்குச் சிறப்பாகச் சொல்லுதல் ஏற்குமென்ப.
ஸகல ஜாதிகளிலும் பிற்பட்டவர்களைப் பின்னானார் என்கிற சொல்லாற் கொள்ளவுமாம்.
அர்ச்சாவதாரங்களில் புறப்பாடு வியாஜத்தினால் மிகத் தண்ணியர்களுக்கும் காட்சி தருவதுண்டே.

பல படிகளாலும் உன்னை பாடி கதறுவது ஒழிய பிரித்து ஒன்றும் இல்லையே -என்கிறார்

பொன்னானாய்
தீயில் சுட்டு –உளியை இட்டு வெட்டி -உரை கல்லிலே உரைத்தாலும்
பரம போக்யமாக ஒளி விஞ்சி காட்டும்
குந்து மணி உடன் ஒக்க நிறுத்து பார்ப்பதே வருந்துமாம்
இன்னார் தூதன் என நின்றாலும்
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை

பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்
ரஷகம் ஆபரணம்
மம வ்ரதம் என்றானே கடல்கரையிலே

இகழ்வாய தொண்டனேன்
இகழ்வு ஆய -நீசனாகிய
இகழ் வாய -இகழத் தக்க வாய் மொழியை உடையவன்
நித்ய சம்சாரி உன்னை ஆசைப்படுவதே

என் ஆனாய் என்னுடைய மத்த கஜம் என்றே வாய் வெருவி
திருமங்கை கட்டின திக் கஜங்கள் இருக்கிறபடி
குணபால மத யானாய் -திருக் கண்ணபுரம் /காட்டு மன்னார் மன்னாதன்
உலகம் ஏத்தும் அடை மொழி நான்கு திவ்ய தேசங்களுக்கும்

இமையோர்க்கு என்றும் முன்னானாய்
நித்யருக்கு நித்ய தர்சன விஷய பூதன் ஆனவனே

பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
திரு மூழிக் களத்துறையும் ஒண் சுடர்
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
மூழிக் களத்து விளக்கினை
இங்கும்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
சீல-சௌசீல்ய குணம் இங்கே பிரகாசிப்பதால்
சீலத்திலும் -ஜாதி ஞானாம் வ்ருத்தம் – பின்னானார்
புறப்பாடு வ்யாஜத்தினாலே தண்ணியர்களுக்கும் சேவை உண்டே

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-1-5- -திவ்யார்த்த தீபிகை —

September 28, 2014

ஸ்ரீ யபதி இனி மேலும் இவருக்கு முகம் காட்டாது ஒழியில்
ஜகத் ஈஸ்வரன் அற்றதாய் விடும் என்று நிச்சயித்து
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானாதிகளுக்கு முகம் காட்டினாப் போலே
இவருக்கு முகம் காட்டி
தானும்
இவரும்
ஜகத்தும்
உண்டாம்படி பண்ணி அருள
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தை தம் வாயாலே பேசுகிறார் இந்த சரம திவ்ய பிரபந்தத்தில்-

முதல் பத்து -தாமான தண்மை
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை
மூன்றாம் பத்து -தோழியுடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தலைமகள் வார்த்தை
பட்டர் -திரு நெடும் தாண்டகம் வல்லவர் -அத்தை கொண்டே நஞ்சீயரை சம்ப்ரதாயக்கு ஆக்கி அருளினார்

————————————————————–

தேஹாத்மாபிமானத்தைப் போக்கினது முதலாகத் திருவடிகளோடு ஸம்பந்தந்தை யளித்தளவாக வுள்ள
உபகார பரம்பரைகளைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.

பதவுரை

முன் உருவில்–முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில்
மின் உரு ஆய்–மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்
வேதம் நான்கு ஆய்–நால் வேதங்களையும் உபகரித்தவனாய்
விளக்கு ஒளி ஆய்–இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய்
முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்–(மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே
ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்,
பின் உரு ஆய்–இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி
முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்–முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே
வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது–கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய்
எண்ணும் பொன் உரு ஆய்–எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய்
மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்–திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்
புனல் உரு ஆய்-தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய்
அனல் உருவின் திகழும்–அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய்
சோதி தன் உரு ஆய்–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
என் உருவில் நின்ற–என் சரீரத்திலே நின்றவனாய்
எந்தை-எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய
தளிர்புரையும் திரு அடி–தளிர் போன்ற திருவடிகள்
என் தலை மேல–எனது தலையிலே இரா நின்றன;
ஏ-ஆச்சரியம்!

முன்னுருவில் மின்னுருவாய் =
கண் முன்னே பரத்யக்ஷமாகக் காணப்படுகின்ற பொருள்களெல்லாம் முன்னுரு எனப்படுகின்றன.
‘அப் பொருள்கள் மின்னின் தன்மை போன்ற தன்மை யுடையன‘ என்னும் உணர்வைப் பிறப்பித்தவன் என்கிறார்.
“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்“ என்கிறபடியே ப்ராக்ருதப் பொருள்களெல்லாம்
நிலை நிற்க மாட்டாதவை யென்று அறிவித்தானென்றவாறு.

ஜீவாத்மாவுக்கு தேஹ ஸம்பந்தம் இரண்டு வகையான காரணங்களினால் உண்டாகின்றது;
புண்ய பாப ரூப கருமங்கள் காரணமாகவும் எம்பெருமானது அருள் அடியாகவும்.
கருமமடியாக ப்ரக்ருதி பந்தமுண்டாமளவில், ஜீவாத்ம பரமாத்மாக்களுடைய ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ள
வொண்ணாமற் செய்கையும் தன் பக்கலில் அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் மறைத்து
ஸ்தைர்ய புத்தியையும் போக்யதா புத்தியையும் ப்ரக்ருதியானது பிறப்பிக்கும்;
இனி எம்பெருமானருளடியாக ஸம்ஸார பந்தமுண்டாமளவில், ஸ்வ விஷயத்திலும் ஸ்வகீய விஷயத்திலும் கிடக்கிற
அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் பிரகாசிப்பிக்கக் கடவதுமாய்
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பிக்கக் கடவதுமாயிருக்கும்.
ஆழ்வார் இவ்விபூதியிலே பிறந்தது கருமமடியாகவல்லாமல் எம்பெருமானருளடி யாகவாதலால்
ப்ராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசித்து த்யாஜ்யதா புத்தி யுண்டாயிற் றென்க.

வேதம் நான்காய் =
தேஹமே ஆத்மாவென்றும், இந்த்ரியமே ஆத்மாவென்றும் மாஸ்ஸே ஆத்மாவென்றும், ப்ராணனே ஆத்மாவென்றும்,
புத்தியே ஆத்மாவென்றும் கொள்வாருடைய கொள்கைகளைத் தள்ளி
‘அஹம்‘ (நான்) என்று வியவஹரி்ப்பதற்கு இலக்கான வஸ்துவே ஆத்மாவென்றும்
அவன் நித்யனென்றும் தெரிந்து கொள்வதற்கு சாஸ்த்ரம் அபேக்ஷிதமாகையாலே,
சாஸ்த்ரங்களில் தலையான வேதங்களை அருளினபடி சொல்லுகிறது.
இங்கு ‘வேத நான்காய்‘ என்றது, நால் வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் என்ற கருத்தினாலன்று;
நான்கு வேதங்களையும் உபகரித்தருளினவன் என்ற கருத்தினாலென்க.

ஆக, “மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்“ என்றவளவுக்குத் தேறின கருத்தாவது, –
ஆத்மாவிற்காட்டிலும் வேறுபட்ட அசேதனப் பொருள்களில் க்ஷணிகத்வ புத்தியைப் பிறப்பித்தவனும்,
அங்ஙனல்லாத ஆத்ம வஸ்துவின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதற் குறுப்பாக
சாஸ்த்ரங்களைத் தந்தருளினவனும் எம்பெருமான் என்றதாயிற்று.

விளக்கொளியாய் =
சாஸ்திரங்களைக் கொடுத்தருளின மாத்திரத்தால் என்னாகும்;
அவற்றால் மருள் நீங்கித் தெருள் பிறந்தாலன்றோ பயனுண்டாவது;
அங்ஙனம் அஜ்ஞானத்தை யகற்றி நல்ல ஞானத்தை யுண்டாக்கி
ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கச் செய்தருளினவன் என்கிறது –

விளக்கொளியாய் என்று. விளக்கொளியின் ஸ்வரூம் போன்ற ஸ்வபாவத்தை யுடைத்தாகையாலே
சாஸ்த்ர ஞானத்தை விளக்கொளி யென்கிறது.
விளக்கானது இருளைப் போக்கிப் பொருள்களை விளங்கச் செய்யுமா போலே அக விருளைப் போக்கி
ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கக் கடவதா யிருக்குமன்றோ சாஸ்த்ர ஞானம்.
இப்படிப்பட்ட சாஸ்த்ர ஞானத்தை யுண்டாக்கி யருளினவன் எம்பெருமான் என்க.
எம்பெருமானருள் இல்லாவிடில் உண்மையான சாஸ்த்ரார்த்த ஜ்ஞானம் உண்டாகமாட்டாதென்று உணர்க.

முளைத்தெழுந்த திங்கள்தானாய் =
மலை நுனியில் தோன்றி ஆகாசத்திலே கிளம்பின சந்திரனைப் போலே ஸந்தோஷ கரமான
ஞானத்தைக் கொடுத்தருளினவன் என்றபடி.

கீழ் ‘விளக்கொளியாய்‘ என்றவிடத்திலும் இவ் வர்த்தந்தானே சொல்லிற்று;
மீண்டும் இங்குச் சொல்லுகிறது என்னென்னில்; கேண்மின்;
எம்பெருமானைப் பற்றின ஞானங்கள் பல வகைப்படும்;
எம்பெருமானைக் காதால் கேட்டுணர்வது, நெஞ்சில் ஊன்ற மநநஞ்செய்துணர்வது, உபாஸநம் செய்துணர்வது
கண்ணாரக் கண்டுணர்வது என்றிப்படிப்பட்ட ஞானங்களுள்
ஸ்ரவண ஜ்ஞானம் (காதால் கேட்டுணர்தல்) பெற்றமை மாத்திரம் ‘விளக்கொளியாய்‘ என்றதனால் சொல்லிற்று;
மநந – நிதித்யாஸந-தர்சந ஜ்ஞானங்களைப் பிறப்பித்தமை இங்குச் சொல்லப்படுகிறது என வாசி காண்க.

விளக்கினாலுண்டாகிற ஆநந்த ரூபமாக இருப்பது போல, ஸ்ரவண ஜ்ஞானத்திற்காட்டிலும்
மநந நிதித்யாஸந தர்ச நங்களாலுண்டாகும் ஞானம் மிக்க ஆஹ்லாத ரூபமாக இருக்குமாதலால்,
விளக்கொளியா யென்றதனால் மற்ற ஞானங்களைச் சொல்லிற்றென்றும்
முளைத்தெழுந்த திங்கள் தானாய் என்றதனால் மற்ற ஞானங்களைச் சொல்லிற்றென்றும் பகுத்துரைத்தல் மிகப் பொருந்தும்.
இது தன்னிலும் முளைத்து என்றதனால் மநந தசையும்,
எழுந்த என்றதனால் நிதித்யாஸந தசையையும்,
திங்கள் தானாய் என்றதனால் ஸாக்ஷாத்கார தசையும் சொல்லப்பட்டன வென்றுணர்க.

பின்னருவாய் முன்னுருவிற்பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் =
இவ்வளவும் ஜீவாத்மாவைச் சொல்லுகிறதாய் (ஸாமாநாதி கரண்யத்தாலே)
இப்படிப்பட்ட நியாமகன் எம்பெருமான் என்றதாகிறது.

“பொங்கைம்புலனும் பொறியைந்துங் கருமேந்திரிய மைம்பூதம்,
இங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்கார மனங்களே“ என்கிறபடியே
இருபத்தினான்காகிய தத்துவங்களுக்குப் பிற்பட்டவனாய் இருபத்தைந்தாம் தத்துவமாகச் சொல்லுப்பட்டவனான
ஜீவாத்மாவைப் பின்னுருவாய் என்றதனாற் சொல்லுகிறது;

முன்னுருவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பலி யென்பது அந்த ஜீவாத்மாவையே;
ப்ரத்யக்ஷத்திற் காணப் படுகின்ற ப்ராக்ருத பதார்த்தங்களை முன்னுரு வென்கிறது.
அந்தப் பொருள்களுக்கு ஸம்பானுவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பிலி“ யென்று ஜீவாத்மாவைச் சொல்லிற்றாயிற்று.

ஆக பின்னுருவாயும் முன்னுருவிற்பிணிமூப்பி்ல்லாப் பிறப்பிலியாயு மிராநின்ற ஜீவாத்மாவைச் சொல்லி,
ஆய் என்ற ஸாமாநாதி கரண்யத்தாலே அப்படிப்பட்ட ஜீவாத்மாவை நிர்வஹிப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

இறப்பதற்கே யெண்ணாது =
இறப்பாவது மரணம்; ஆத்ம ஸ்வரூபாநுபந்தியான மரணம் இங்கு விவக்ஷிதம்;
அதாவது கைவல்யமோக்ஷம்.
தேஹாநுபந்தியான மரணம் ஆத்மாவுக்கு இல்லையாயினும் ஸ்வரூபாநுபந்தியான மரணம் உண்டாதலால்,
அப்படிப்பட்ட மரணமாகிய கைவல்ய மோக்ஷத்தை அந்தரங்கமான அடியார்க்குக் கொடுக்க
நெஞ்சிலும் நினையாதவனெம்பெருமான் என்றவாறு.

ஸ்வத : ஸுகியான ஆத்மாவினுடைய அநுபவ் ஸ்வரூபமாய்த் தனியே ஒரு புருஷார்த்மாய்
மீட்சியில்லாததான கைவல்யத்தை இறப்பு என்ன லாமொவென்னில்;
சரீரமானது ஆத்மாவின் வியோகத்தை யடைந்தால் அது மரணமாக ப்ரத் யக்ஷத்தில் வியவஹரிக்கப்படுகிறது;
இதுவும் அப்படியே ஸாக்ஷாத் ஆத்மாவாகிய பரமாத்மாவின் வியோகத்தாலே மரணமாகக் குறையில்லை.
ப்ரத்யக்ஷத்தில் மரணமடைந்த சரீரம் நஷ்டமாகிறாப்போலே ஆத்மா நசிப்பதில்லையே;
அப்படி இருக்க மரணமென்னலாமோ வென்னில்,
ஸ்வரூபாநுரூபமான போகமில்லாமையாலே ஆத்மாவை நஷ்டனாகவே கொண்டு மரணமென்னலாம்.
“ம்ருதோ தரித்ர: புருஷ:“ (ஏழையான மனிதன் செத்தவனே) என்கிறாப் போலே இதனைக் கொள்க.
இடைவிடாது ஸ்வதநுபவஞ் செய்பவர்களின் ஹ்ருதயத்தாலே இது மரணமேயாகும்.
இதனைத் திருவாய் மொழியில் ‘இறுகலிறப்பு என்றது முணர்க.

ஆக இறப்பதற்தேயெருண்ணா என்றதனால் சொல்லிற்றாவது –
வைவல்ய மோக்ஷத்தைப் புருஷார்த்தமாக அபேக்ஷிப்பவர்களுக்குக் கொடுக்க வல்லவனான எம்பெருமான்
இப்போது என்னை இப் படுகுழியிலே வீழ்த்த நினையானென்பதாம்.

இப்படிப்பட்ட உபகாரத்திற்கு மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை ப்ரகாசிப் பித்தருளினா னென்கிறார்
எண்ணும் பொன்னுருவாய் என்று.
போக்யதையின் மிகுதியாலே ஒரு நொடிப் பொழுதும் விடமுடியாமல் எப்போதும் சிந்திக்க வுரியதும்
பொன் போல் விரும்பத்தக்கதுமான திவ்ய ஸ்வரூபத்தை யுடையவன் என்றபடி.

மணியுருவிற் பூதமைந்தாய் =
இங்குப் ‘பூதமைந்து‘ என்கிறது பஞ்சோப நிஷத்துக்களை;
பரமேஷ்டீ புமாந் விச்வோ நிவ்ருத்தஸ் ஸர்வ ஏவ ஹி“ என்கிறபடியே
பஞ்சோப நிஷத்தை வடிவாயுடைத்தாயிருக்கும் எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
அஸ்ம தாதிகளின் தேஹங்களுக்குப் பஞ்சபூதங்கள் உபாதாநமாயிருக்குமாபோலே
எம்பெருமானுடைய திருமேனிக்குப் பஞ்சோபநிஷத்துக்கள் உபாதாநமாயிருக்குமென்று பாஞ்சராத்ர சாஸ்த்ரம் கூறும்.

இனி, ‘மணியுருவிற் பூதமைந்தாய்‘ என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;
தனக்கு அஸாதரணமான மணியுருவிலும் எழுந்தருளி யிருப்பவனாய்,
ப்ராக்ருதமான பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியுள்ளவன் என்று.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைச் சொல்லுகிறது புனலுருவாய் என்று.
வஸிஷ்டனென்றும் சண்டாளளென்றும் வாசியில்லாமல் ஒரு துறையிலே படித்தாடுதற்குரிய தண்ணீர்ப் போலே
அனைவர்க்கும் ஒருதன்மைப்பட எளியனாயிருக்குமவன் என்றவாறு.
இப்படி அனைவர்க்கும் எளியனானால் எந்த சத்ருவினால் எந்த வேளையில் என்ன கேடு விளைகிறதோவென்று
அஞ்சியிருக்க வேண்டாதபடி பிரதிகூலர்க்கு நெருப்புப் போலே கிட்ட வொண்ணாதிருக்குமவன் என்கிறார்
அனலுருவின்திகழும் என்று.
அநுகூலர்க்குப் புனலுருவினன்; பிரதிகூலர்க்கு அனலுருவினன் என்க.

சோதிதன்னுருவாய் =
நாட்டில் சோதிப்பொருள்களென்று விளங்குகின்ற அக்நி சந்திரன் ஸூரியன் முதலியவர்கட்கும்
தன்னுடைய ஸம்பந்தத்தாலே ஜ்யோதிஸ்ஸு உண்டாம்படி பரஞ்சோதியாயிருப்பவனென்கை.
“தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி“ என்று உபநிஷத்தும் ஓதிற்று.

என்னுருவில் நின்ற =
மிகவும் ஹேயமான என்னுடைய சரீரத்திலே வந்து நின்றானென்கிறார்.

கீழே இவ்வாழ்வார் மடலெடுக்கையாலே எம்பெருமான் தன்னுடைய ஸத்தைக்கு ஹாநி விளைந்திடு மென்றஞ்சி
ஓடி வந்து இவருடைய சரீரத்திலே பொருந்தித் தரிப்புப் பெற்றான் போலும்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய தளிர் போன்ற திருவடிகள் என் தலைக்கு
அலங்காரமாய்க் கிடக்கிறபடிபாரீர் என்றாராயிற்று.

தேகாத்ம அபிமானத்தை போக்கினது முதலாக
திருவடிகளோடு சம்பந்தத்தை அளித்தது ஈறாக
எம்பெருமான் பண்ணி அருளிய உபகார பரம்பரைகளை பேசி மகிழ்கிறார்

முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷமாக காண்பவை மின்னல் போல் அஸ்திரம் என்று காட்டி அருளி
மின்னின் நிலையின மன்னுயிர் ஆக்கைகள்
கர்மம் அடியாக பிறந்து – பக்கல் அஸ்த்ரத்தையும் அபோக்யதையும் மறைக்குமே –

வேதம் நான்காய்
ஆத்ம வஸ்துவின் உண்மையை புரிந்து கொள்ள வேத சாஸ்த்ரங்களை தந்து அருளி

விளக்கு ஒளியாய்
சாஸ்திர ஞானத்தையும் அருளி -ஸ்ரவண ஞானம்

முளைத்து எழுந்த திங்கள் தானாய்
ஸ்ரவணத்துக்கு மேலே -மனனம் -நிதித்யாசனம் -த்யானம்- சாஷாத்காரம்
முளைத்து -மனனம்
எழுந்த -நிதித்யாசன
திங்கள் தானாய் -சாஷாத்காரம்

பின்னுருவாய் -ஜீவாத்மாவுக்கு நியாமகன்
இதையே
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலி -பிரகிருதி பதார்ந்தகளின் தோஷங்களான
பிணி மூப்பு பிறப்பு இல்லையே

இறப்பதற்கே என்னாது கைவல்ய மோஷம் என்னாமல்
அன்னவான் அந்நாதோ பவதி என்பர் எண்ணத்தால் இதுவும் இறப்பே
இருகலிறப்பு-என்பர் இத்தையே நம்மாழ்வார்

இதுக்கு மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தது அருளினான்

பொன்னுருவாய் -திவ்ய ஸ்வரூபம்

மனிவுருவில் பூதம் ஐந்தாய் -பஞ்ச உபநிஷத் மயம்
பரமேஷ்டி புமான் விச்வோ நிவ்ருத்த்தஸ் சர்வ ஏவ ஹி –
அன்றிக்கே
தனக்கு அசாதாரணமான மணி யுருவிலும்
பிராக்ருதமான பஞ்ச பூதங்களிலும் எழுந்து அருளி இருப்பவன்

புனலுருவாய்
சௌலப்யம்
வசிஷ்ட சண்டாள வாசி இல்லாமல் படிந்தாடும் துறை போலே

அனலுருவில் திகழும்
ஆஸ்ரித விரோதிகளுக்கு

சோதி தன்னுருவாய்
அக்னி சந்த சூர்யர் போன்றோருக்கு தன்னுடைய சம்பந்தத்தாலே ஜோதிஸ் அருளி -பரஞ்சோதி

என்னுருவில் நின்ற
நீசன் என்னுடைய ஹேயமான சரீரத்தில் புக்கு
மடல் எடுத்த காரணத்தால் -தனது சத்தைக்கு கேடு என்று அஞ்சி ஓடி வந்து
சரீரத்தில் பொருந்தி தரிப்பு பெற்றான்-

அவனது தளிர் போன்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரம் ஆயிற்று
என்னுருவில் நின்ற எந்தை
தளிர் புரையும் திருவடி
என் தலை மேலே-

———————————————————————–

பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.

பதவுரை

ஏர் உருவில் அழகிற ஜகத்தில்–
மூவருமே என்ன நின்ற–மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த
இமையவர் தம்-தேவதைகளினுடைய
திரு உரு-ரூபங்களை
வேறு எண்ணும் போது–தனித்தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்
ஓர் உருவம்-(நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது
பொன் உருவம்–பொன்னின் வடிவாகவுள்ளது;
ஒன்று–(பரம சிவனாகிற) ஒருமூர்த்தி யானது
செம் தீ–சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது;
ஒன்று–(ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது
மா கடல் உருவம்–கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது;
ஒத்து நின்ற–சேர்ந்திருக்கின்ற
மூ உருவும்–(மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும்
கண்ட போது-(பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து,
பார் உருவி–கடினமான பூமியென்ன
நீர்-ஜலமென்ன
எரி-அக்நியென்ன
கால்-வாயுவென்ன
விசும்பும் ஆகி–ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்
பல்வேறு சமயமும் ஆய்-பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
பரந்து நின்ற-இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய்
ஆம் சோதி-பரஞ்சோதியென்று போற்றப் படுமதாய்
ஒன்று-அத்விதீயமா யிருக்கின்ற
முகில் உருவம்-காளமேக வுருவமானது
எம் அடிகள் உருவம்–எம்பெருமானுடைய வடிவமாம்.

அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளிடத்தும் ஸாம்யபுத்தி நடப்பதாகிற ஒரு அநர்த்தமுண்டே,
அந்த அநர்த்தத்தையும் எம்பெருமான் தமக்குப் போக்கியருளின படியைப் பேசுகிறார் இப்பாட்டில்.
இருவர் சேஷபூதராய் ஒருவன் சேஷியாய், இருவர் ஸ்ருஷ்டிக்கப் படுகிறவர்களாய் ஒருவன் ஸ்ருஷ்டி செய்பவனாய்,
இருவர் சரீர பூதராய் ஒருவன் சரீரியாய் இருக்கிறபடியை எனக்குக் காட்டித்தருளினா னென்கிறார்.

இந்திரன் சந்திரன் வருணன் குபேரன் என்று பலப் பல தெய்வங்கள் இருந்தாலும்
விஷ்ணு, பிரமன், சிவன் என்கிற மூன்று மூர்த்திகளே முக்கியமாக வழங்கப் பெறும்;
அம் மூன்று மூர்த்திகளின் உருவங்களை ஆராயுமிடத்தில், ஒருவனுடைய (நான்முகனுடைய) வடிவம் பொன்னின் வடிவாகவுள்ளது;
மற்றொருவனுடைய (பரம சிவனுடைய) வடிவம் சிவந்த நெருப்பின் வடிவாகவுள்ளது;
இன்னுமொருவனுடைய (ஸ்ரீமந் நாராயணனுடைய) வடிவம் கருங்கடல் போன்றுள்ளது.

மேற்சொன்ன மும் மூர்த்திகளையும் பிரமாணங்கொண்டு பரிசீலனை செய்யுமிடத்து,
பஞ்ச பூதங்களை யுண்டாக்கியும் பலவகைப்பட்ட சமயங்களை யுயை ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்தும் நிற்கிற பரஞ்சோதியான எம்பெருமானுடைய வுருவம்
காளமேக வுருவமாயிருக்கும் என்று சொல்லுகிறவிதனால் முகிலுருவமுடையவனே எம்பெருமான் என்றாராயிற்று.

“ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர் தம் திருவுரு வேறெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம், ஒன்று செந்தீ, ஒன்று மாகடலுருவம், ஒத்து நின்ற
மூவுருவுங் கண்ட போது பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஒன்றாஞ்சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே“ என்று அந்வயிப்பது.

பாருருவி – ‘உர்வீ‘ என்னும் வடசொல் உருவி யெனத் திரிந்தது, பூமி யென்று பொருள்.
பார் என்றது பூமிக்கு விசேஷணமாய் நிற்கிறது இங்கு. பருமை பொருந்திய பூமி யென்றபடி.
அண்ட காரணமான பஞ்ச பூதங்களை ஸ்ருஷ்டி யெனப்படும், அஃது உள்ள ஸ்ருஷ்டி யெனப்படும்.
“பாருருவி நீரெரிகா்ல் விசும்புமாகி“ என்றது ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் சொன்னபடி,
“பல் வேறு சமயமுமாய்“ என்று வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது.
தேவ மநுஷ்யாதி பேதத்தாலே பலவகைப் பட்ட பாகுபாடுகளை யுடைய ஜகத்தை யுண்டாக்கினவனாய் என்றபடி.

சமயம் என்றது வடசொல் திரிவு ஏற்பாடு என்று பொருள்.
உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஏற்பாடு உண்டு,
தேவதைகள் – ஆராதிக்க வுரியராயும் அமுத முண்பவராயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு,
மனிதர் ஆராதனை செய்பவர்களாயும் அன்னமுண்பவர்களாயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு,
திர்யக்குக்களும் ஸ்தாவரங்ளும் ஆராதனைக்குக் கருவியாயிருத்தல் அவற்றுக்கான ஏற்பாடு,
இங்ஙனே கண்டு கொள்க.

பரந்துநின்ற –
பரக்கையாவது – ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களிலும் அநு ப்ரவேசத்தாலே ஆத்மாவாய் வியாபித்து நிற்கையாம்.
ஸூக்ஷ்ம சேதநா சேதநவிசிஷ்டனாகிற படியைச் சொன்னவாறு. இதற்கு ஈற்றடியில் அந்வயம்.

(ஏருருவில்)
ஜகத்திலே என்றபடி. ஜகத்து முழுவதும் எம்பெருமானுடைய உரு (சரீரம்) ஆகையாலே அந்தச் சொல்லியிட்டுச் சொல்லிற்று.
இருள் தரு மா ஞாலம் என்று வெறுக்கத் தக்க இதனை ஏருரு என்பானென்? என்னில்,
இந்த –ஜகத்தானது முமுக்ஷுக்களுக்கு ஒரு படியாலே ஹேயமாயும் ஒரு படியாலே உத்தேச்யமாயுமிருக்கும்,
ஸம்ஸார ஸ்தானம் என்று வெறுக்கத் தக்கதாயிருக்கும்,
எம்பெருமானுடைய விபூதியென்கிற காரணத்தாலே உத்தேச்யமாயிருக்கும்.
இங்கு உத்தேச்யத்வம் தோன்ற ஏருரு என்றதாகக் கொள்க.

மூவருமே யென்ன நின்ற இமையவர் –
ஸ்ருஷ்டி, ரக்ஷணம், ஸம்ஹாரம் என்பன மூன்று தொழில்கள்.
இவை மூன்றையும் ஸ்ரீமந் நாராயணனொருவனே நிர்வஹித்தாலும்
அவன் தான் ப்ரமனை அநு ப்ரவேசித்து ஸ்ருஷ்டிமையும்,
ருத்ரனை அநுப்ரவேசித்து ஸம்ஹாரத்தையும்,
தானான தன்மையிலே ரக்ஷணத்தையும் நடத்திப் போருகையாலே மூன்றுக்கும் ஒருவனே கடவன் என்று
தெளிய கில்லாத ஸாமாந்ய ஞானிகள் ஒவ்வொரு தொழிலுக்கு ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வதந்த்ர நிர்வாஹகமாகக் கொண்டு
மூன்று மூர்த்திகள் ஆச்ரயணீர் என்று.
“ஸஆத்மா, அங்காந்யந்யா தேவதா“ என்று சுருதியின்படி ப்ரஹ்ம ருத்ர்ர்களும் எம்பெருமானுடைய திருமேனியே யென்று
தெளியக் கண்டவராகையாலே அவர்களையும் திருவுரு என்ற கௌரவச் சொல்லுகிறார் என்ப.

வேறெண்ணும்போது –
“நன்றெழில் நாரணன் நான்முகனரனென்னுமிவரை, ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி
நும் மிரு பசை யறுத்து, நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நானே“ என்ற திருவாய்மொழிப்படியே
ஏக த்த்துவமாக மனத்து வைக்கிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும்,
அங்ஙன்ன்றியே
பிரித்து ப்ரதிபத்தி பண்ணுகிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும்,
அங்ஙன்ன்றியே
பிரித்து ப்ரதிபத்த பண்ணுகிற பட்சத்தில் ப்ரமஙேதுவான அஸாதாரண வடிவங்களைச் சொல்லுகிறது
ஒருருவம் பொன்னுருவ மென்று தொடங்கி.

பிரமனது உருவம் பொன்னுருவாயிருக்கும்,
பொன்னானது எல்லா ஆபரங்களும் பண்ணுகைக்கு உரித்தாயிருப்பது போல பதினான்கு லோகங்களையும்
ஸ்ருஷ்டிப்பதற்கு உரியவுருவமென்று தோற்றியிருக்குமென்க.

(ஒன்று செந்தீ) ருத்ரனது உருவம் செந்தீயுருவாயிருக்கும்,
அக்நிக்கு ஸ்வபாவம் அனைத்தையும் கொளுத்துகையாகையாலே, ருத்ரனுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தால்
ஜகத்தையெல்லாம் உபஸம்ஹரிப்பதற்கு உரித்தாயிருக்குமென்று தோற்றவிருக்கும்

(ஒன்று மா கடலுருவம்)
கண்டார்க்கு முதலியவற்றொடு வாசியற ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யிட்டு வைத்து ரக்ஷிக்கையும் பார்த்தால்,
ஆச்ரிதர்களுக்குத் தாபத்ரய ஹரமாயும், ஆச்ரயித்தாரைத் தன்னபிமானத்திலே யிட்டு வைத்து
ரக்ஷிக்குமதாயுமிருக்கை தோற்ற விருக்கும்.

ஒத்துநின்ற மூவுருவுங்கண்டபோது மூவுருவம் ஒத்திருக்கையாவதென்? என்னில்
அவரவர்களுடைய தொழிலுக்கு அவரவருடைய உருவம் பொருத்தமா யிருக்கும்படியைச் சொன்னவாறு.
ஸ்ருஷ்டிக்குப் பொருத்தமாயிருக்கும் பொன்னுருவம்,
ஸம்ஹாரத்துக்குச் சேர்ந்திருக்கும் செந்தீயுருவம்,
ரக்ஷணத்திற்குத் தகுந்திருக்கும் மாகடலுருவம் என்று காண்க.

ஆக இப்படிப்பட்ட மூவுருவையும் பிரமாணகதி கொண்டு ஆராயுமிடத்தில்,
பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும்.
*ஏகோஹவை நாராயண ஆஸீத்* என்றிவை முதலான வேத ப்ரமாணங்களின் படியே
ஸ்ரீமந் நாராயணானொருவனே முழு முதற் கடவுளாயிருப்ப னென்றாராயிற்று.

எம்மடிகளுருவம் முகிலுருவம் =
கீழ், ‘மாகடலுருவம்‘ என்றதையே இங்கு முகிலுருவமென்று அநுபாஷிக்கிறார்.
முகிலுருவ முடையவரே எம்மடிகள் என்றாரென்க.

பாருருவி -பசுமை பொருந்திய பூமி
பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து அருளினவன்
அண்டத்துக்குள் பிறந்த பிரமன் ருத்ரன் முதலானார் உடன் சாம்யம் சங்கிக்கவும் இடமில்லை
அரி அரன் அயன் மும் மூர்த்தி சாம்ய பிரமையையும் ஒழித்து அருளினான்
நான்முகன் பொன்னின் வடிவு -பொன் கொண்டு ஆபரணம் பண்ணுமா போலே
ருத்ரன் நெருப்பின் வடிவு -ஜகம் உப சம்ஹரிக்கைக்கு உறுப்பாக
ஸ்ரீ மன் நாராயணன் -கரும் கடல் -கண்டாருக்கு விடாய் தீர்க்கும்
கடல் போன்று தன்னுள்ளே இட்டு ரஷிக்கையும்
மூன்று உருவமும் ஒத்து இருக்கை
தொழிலுக்கு பொருத்தமாய் இருக்கை
பிரமாண கதி கொண்டு ஆராயும் இடத்தில்
பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயுமாகி
பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும்
சிருஷ்டித்து அந்தர்யாமியாயும் வியாபித்து பரஞ்சோதி ரூபம்
ஒன்றாம் ஜோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
தேவ மனுஷ்யாதி சமயமுமாகி
பரந்து நின்ற அந்தர்யாமி
ஏருருவில் -ஜகம் முழுவதும் அவன் உருவம் -எம்பெருமான் விபூதி என்பதால் உத்தேச்யம்
சம்சாரம் என்பதால் த்யாஜ்யம்
ச ஆத்மானி அங்காநி அந்யா தேவதா -தேவர்களும் எம்பெருமான் திருமேனி –
அதனால் அவர்களையும் திரு உரு கௌரவ சொல்
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நம் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே -திருவாய் மொழி
எம்மடிகள் உருவம் முகில் உருவம்
கீழே கடலுருவம் என்றத்தை அனுபாஷிக்கிறார்-

————————————————————————

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக் கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே?

பதவுரை

திரு வடிவில்–விலக்ஷணமான வடிவுகளில்,
கருநெடுமால்–காளமேக ச்யாமமான வடிவை
பெரு வடிவின்–பெரிய கூர்ம ரூபத்தோடே
கடல்–கடலினின்றும்
அமுதம் கொண்ட காலம்–(தேவர்களுக்கு) அமுதமெடுத்துக் கொடுத்த காலமாகிய கிருத யுகத்திலே
வளை உரு ஆய் திகழ்ந்தான் என்றும்–சங்கு போலே வெளுத்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
திரேதைக் கண்–த்ரேதா யுகத்திலே
சேயன் என்றும்–சிவந்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
(கலியுகத்தில்)
கரு நீலம் வண்ணன் என்றும்–இயற்கையான) நீல நிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும்
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்–எப்போதும் நின்று துதிப்பதல்லாமல்
ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா-வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப் போகாமலிருக்கிற
கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை–கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக் கண்களை யுமுடையனான எம்பெருமானை
யார் ஒருவர்–ஆரேனுமொருவர்
காண் நிற்பாரே–(ஸ்வப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ?
கட்டுரை–(நெஞ்சே!) சொல்லு.

திரிமூர்த்தி ஸாம்ய ப்ரமத்தை எம்பெருமான் தமக்குப் போக்கித் தந்தருளின படியை அருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில்.
எம்பெருமான் தனது நிர்ஹேதுக க்ருபையினால் தமக்குக் காட்டித் தந்தருளின திருமேனியின் வைலக்ஷண்யத்தை
அநுபவித்துப் பேசுகிறார் இப்பாட்டில்.
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
க்ருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகக் கிருத யுகத்தில் பால் போல் வெளுத்த நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்;
த்வாபர யுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன்;
கலி யுகத்தில் இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன்-என்பது நூற்கொள்கை.

ஸ்ரீபாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் இருபதாவது ச்லோகம் முதலாக
இவ் விஷயம் விரியக் காணத் தக்கது.
இப்பாட்டில் த்வாபர யுகத்திற் கொள்ளும் பசுமை நிறம் சொல்லப்படா தொழியினும் அதுவும் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
பொருட்சேர்த்திருக்குத் தகுதியாக
“பெருவடிவிற் கடலமுதங்கொண்ட காலம் வளையுருவாய்த் திகழ்ந்தான்“ என்பது முந்துற அந்வயித்துக் கொள்ள வுரியது.

“திரேதைக்கண்“ சேயனென்றும் =
இவ் வாக்கியம் முன்னே யிருந்தாலும் அர்த்தச் சேர்த்திக்குத் தகுதியாகப் பின்னே அந்வயிக்க வுரியது.
க்ருத யுகத்திற்குப் பிறகு தானே திரேதா யுகம். ஆழ்வாரும் யுக க்ரமமாகவே அருளிச் செய்யாலாமே;
மாறுபட அருளிச் செய்வானென்? என்னில்;
ஸத்வாஜஸ்தமோமயமான ப்ரக்ருதிக்கு நிறங்கள் சொல்லப் புகுந்த வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

“கருநீலவண்ணன்“ என்றது கலியுகத்தின் நிறத்தைச் சொன்னபடி.

(ஒருவடி வத்தோருருவென்றுணரலாகா)
“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்
சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றாற்போலே வகைப்பட்ட நிறங்களையும் எம்பெருமான் என்று கொண்டாலும்
இவை யெல்லாம் இச்சையினால் பரிக்ரஹிக்கப் பட்டவையத்தனையே யாதலால்,
அப்படி ஸங்கல்பத்தினாற் கொள்ளும் வடிவுகளும் நிறங்களும்
ஒருவராலும் எல்லை காண வொண்ணாதபடி யிருக்கிறானாயிற்று எம்பெருமான்.
பல வடிவுகளையும் சில நிறங்களையும் ஒருவாறு அவரவர்கள் பாசுரமிட்டுப் பேசித் துதிக்கலாமத்தனை யல்லது
உள்ளபடி அறியக் கூடாதவனான எம்பெருமானை யார் தாம் அறிய வல்லார்? –
நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே நான் கண்டு பேசினாப் போலே எவர் தாம் கண்டு பேச வல்லார்?
நான் கண்டாப் போலே காண வல்லாருண்டோ? நான் பேசினாப் போலே பேச வல்லாருண்டோ? என்றாராயிற்று.

கட்டுரை –
ஏவலொருமை வினை முற்று; தம்முடைய திருவுள்ளத்தை விளிக்கின்றமை கொள்க.
இனி, ‘கட்டுரை‘ என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் பெயர்ச் சொல்லாகக் கொண்டு உரைப்பினுமாம்;
அவரவர்கள் ஏதோ பேசுவது வெறுங்கட்டுரையே யன்றி உள்ளபடி கண்டு பேசினதன்று என்க.

நிர்ஹேதுக கிருபையால் தன்னுடைய திரு மேனி வைலஷண்யம் காட்டி அருளினத்தை பேசி மகிழ்கிறார்
த்ரேதைக் கண்-என்னாமல் பெரு வடுவில் கடல் அமுதம் கொண்ட காலம் -வளை உருவாய்த் திகழ்ந்தான்
பிரயோஜனாந்த பரர்களுக்காக்ள அமுதம் கொண்ட சேஷ்டிதம் கொண்டே அருளுகிறார் –
பெரிய திரு நாளிலே ஆதரம் உடையார்
பங்குனி மாசத்துக்கு பின்பு கார்யம் செய்கிறோம் என்ன பிராப்தமாய் இருக்க
பெரிய நாளுக்கு பின்பு கார்யம் செய்கிறோம் -என்னுமா போலே
பெரு வடிவில் என்றது பதினாலு நூறாயிரம் காதம் அளவு பரப்பை உடைத்தான
திருப் பாற் கடலில் அப்பரப்பு முழுவதும் விம்மும்படி
தன் தாளும் தொழும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
திருக் கண் வளர்ந்த வடிவுடன் கடல் கடைந்ததும்
பல வடிவுகள் கொண்டும்
மந்திர மலை அழுந்தாமைக்கு ஆமை வடிவு கொண்டும்
கொந்ழியாமைக்கு ப்ருஹத் ரூபியாயும்
தேவதைகளோடு நின்று கார்யம் செய்யும் வடிவு கொண்டும்
வாசூகி நாகத்துக்கு வலிமையாய் புகுந்து நின்றும் -இப்படி பல பல வடிவுகள் கொண்டானே
கடல் அமுதம் கொண்ட காலம்
அமுதம் அமரர்கட்கு ஈந்த -உப்புச் சாறு
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் –
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே-திருவாய்மொழி
கையும் திருவாழியும் கொண்டு கடல் கடைந்த ஆழ்வார் உடைய அமுதம்
தோளும் தோள் மாலையுமாக கடல் கடைந்த அமுதினை ஆழ்வார்கள் நேரில் கண்டது போல்
பரம போக்யமாக களித்து அனுபவிப்பார்கள்
த்ரேதைக் கண் சேயன் என்றும்
முதலில் இத்தை அருளி
அஜாமேகரம் லோஹித சுக்ல க்ருஷ்ணம் -ஸ்ருதியும்
சிவப்பு வெளுப்பு கருப்பு அடைவிலே சொல்லியது போலே
கரு நீல வண்ணன் -கலி யுகத்தின் வர்ணம்

ஒரு வடிவத் தோர் உரு என்று உணரலாகாது –
மீனாய் இத்யாதி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளையும்
சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றால் போலே
இச்சையால் பரிக்ரஹிக்கப் பட்டவை
சிலவற்றை பாசுரம் இட்டு சொல்லலாம்
உள்ளபடி அறிய முடித்த அவனை
அவனது நிர்ஹேதுக கிருபையால் -பகவத் பிரசாதத்தால் கண்டு
நான் பேசினால் போல் பேச வல்லார் யார்
கட்டுரையே-
தமது திரு உள்ளத்தை விளிக்கிறார்
அன்றிக்கே
அவர்கள் ஏதோ ஏதோ பேசினும் வெறும் கட்டுரையே அன்றி உள்ளபடி கண்டு பேசினது அன்று என்றுமாம்-

————————————————————————

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.

பதவுரை

இந்திரற்கும்–இந்திரனுக்கும்
பிரமற்கும்–ப்ரஹ்மாவுக்கும்
முதல்வன் தன்னை–காரண பூதனாய்
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்–பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
செம்திறத்த தமிழ் ஓசை ஆகி–செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசிக்கப் பித்தவனாய்
வடசொல் ஆகி–ஸம்ஸ்க்ருத வேதத்தையும் பிரகாசிக்கப் பித்தவனாய்
திசை நான்கும் ஆய்–நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அந்தராத்மாவாய்
திங்கள் ஞாயிறு ஆகி–சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய்
அந்தரத்தில்–இப்படி ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில்
தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை–தேவர்களுக்கும் அறியக் கூடாத சுத்த ஸ்வபாவனாய்
அந்தணர் மாடு–பிரமாணர்கட்குச் செல்வமான வேதத்தினுடைய
அந்தி–முடிவிலே
வைத்த–விளங்குகிற
மந்திரத்தை–பரம மந்த்ரமான ஸர்வேச்வரனை
மந்திரத்தால்–திரு மந்த்ரத்தாலே
மறவாது வாழுதி ஏல்–இடைவிடாது அநுபவிப்பாயாகில்
மட நெஞ்சமே–விதேயமான நெஞ்சே!
என்றும்–இவ்வாத்மா உள்ளவளவும்
வாழலாம்–உஜ்ஜீவிக்கப்பெறலாம்.

எம்பெருமானைத் தாம் ஒருவராக அநுபவிப்பதில் த்ருப்தி பிறவாமையாலே உசாத் துணை கூட்டிக் கொள்ள
விருப்பமுண்டாயிற்று ஆழ்வார்க்கு;
முக்தர்களும் நித்யர்களும் இந்நிலத்தவ ரல்லாமையாலே அவர்கள் துணையாகப் பெற்றதில்லை;
இந் நிலத்தவரான ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடும் அவர்களாகையாலும் துணையாக மாட்டார்கள்;
இனி ஒரு போதும் தம்மை விட்டுப் பிரியாதிருக்கிற தமது திருவுள்ள மொன்றே தமக்குத் துணையாகவற்றாதலால்
‘நெஞ்சே! இவ் விஷயத்தை நாம் அநுபவிக்கும் படி பாராய்‘ என்கிறார்.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை=
உலகத்தில், நான்முகக் கடவுளாகிய பிரமனுக்குப் பரத்வம் சங்கிப்பவர்கள் உளரே யன்றி
இந்திரனுக்குப் பரத்வம் சங்கிப்பார் ஆருமில்லை;
அப்படியிருக்க ‘இந்திரற்கும் முதல்வன்‘ என்று இங்குச் சொல்லுவானேன்?
அப்படிச் சொன்னாலும் பிரமனை முந்துறச் சொல்லிப் பின்னை இந்திரனைச் சொல்லியிருக்கலாமே;
முற்படச் சொல்லுவானென்? என்னில்;

ஸாதாரண ஜீவ ராசிகளில் பரிகணிதனான இந்திரனுக்கு எப்படி எம்பெருமான் காரணபூதனோ,
அப்படியே நான்முகனுக்கும் காரணபூதன் என்று தெளிவித்தவாறு.
இந்திரன் எப்படி கார்ய பூதனோ அப்படியே பிரமனும் கார்ய பூதன் என்று தெளிவித்தவாறு.
இந்திரன் எப்படி கார்ய பூதனோ அப்படியே பிரமனும் கார்ய பூதன் என்று காட்டுதற்கே இந்திரனை முற்படச் சொல்லிற் றென்க.

ருத்திரனுக்குத் தந்தையான பிரமனை யெடுத்துச் சொன்ன போதே ருத்ரனுக்கும் எம்பெருமானே முதல்வனென்பது வெளிப்படையேயாம்.
தாழ்ந்தவர்களில் கடையான இந்திரனையும் உயர்ந்தவர்களில் முதல்வனான பிரமனையும் எடுத்துரைத்த போதே
ப்ரத்யாஹாரந்யா (ப்ரத்யாஹாரந்யாயமாவது முதலையும் முடிவையுஞ் சொன்ன முகத்தால்
இடையிலுள்ள வற்றையும் க்ரஹிப்பித்தல்.) யத்தாலே நடுவுள்ள தேவர்களும் சொல்லப்பட்டனராகக் குறையில்லை யென்க.

இருநிலங்கால் தீநீர்விண் பூதமைந்தாய் =
எம்பெருமான் பஞ்ச பூதங்களாகவே யிருக்கிறானென்றது பஞ்ச பூதங்களையும் படைத்தவனென்றபடி.

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி=
தமிழ் வேதத்தையும் ஸம்ஸ்க்ருத வேதத்தையும் வெளிப்படுத்தினவன் என்றாவது,
தமிழ் வேதத்தாலும் ஸம்ஸ்க்ருத வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன் என்றாவது பொருள் கொள்க.
ஆர்ய பாஷையாகிய ஸம்ஸ்க்ருத பாஷையை முன்னே சொல்லி ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷையைப்
பின்னே சொல்ல ப்ராப்தாயிருக்க, முன்னே சொல்லிற்று என்னென்னில்;

தமிழ் வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும்,
”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்ற
வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும்,
ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம்
போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும்
இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க.

வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர் பெற்றிருக்கும்;
இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத்தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும்
சிறப்புறுதல் பற்றிச் ‘செந்திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.

திசைநான்குமாய்=
நான்கு திசைகளிலுமுண்டான ஸகல பதார்த்தங்களையும் படைத்தவனாய் என்றபடி.
திங்கள் நாயிறாகி யென்று சந்திர ஸூரியர்களுக்கு அந்தராத்மாவா யிருக்கும்படியைச் சொல்லுகிறது.

(அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா வந்தணனை)
‘அந்தரம்‘ என்று மேலுலகத்திற்கும் பெயருண்டாகையாலே
‘மேலுகத்திலுள்ள தேவர்க்கும் அறியலாகா‘ என்று பொருளுரைக்கலாம் ஆயினும் அப் பொருள் இங்கு விவக்ஷிதமன்று;
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் * ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யா: அந்தர: * என்று தொடங்கிப்
பல பர்யாயங்களில் பிரயோகிக்கப்ட்டுள்ள அந்தர சப்தம் வியாபகன் என்னும் பொருளதாகையாலே
இவ்விடத்திற்கும் அப்பொருள் ஏற்கும்;

அந்தரத்தில் – அந்தரனாமிடத்தில் (அதாவது) ஸ்ருஷ்டிக்கப்பட்ட் ஸகல பதார்த்தங்களிலும் வியாபனாய்
உறைந்து நிற்குமிடத்தில் என்றவாறு.
ஞான சக்திகளால் நிரம்பின தேவர்களுங்கூட எம்பெருமானுடைய ஸர்வ வ்யாப்தியை அறிய மாட்டார்களென்றதாயிற்று.
எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷ விஷய பூதனான ப்ரஹலாதாழ்வான் போல்வார் அறியலாமத்தனை யன்றி
மற்றையோர் அறியகில்லார் என்க.

(அந்தணனை)
அந்தணனென்பது பிராமணனுக்குப் பெயர்;
அதைக் கொண்டு ‘பரிசுத்தன்‘ என்கிற பொருளை ஆசாரியர்கள் விவக்ஷிப்பர்கள்.
திருவாய்மொழியில் ”அறவணை ஆழிப்படை யந்தணனை” என்றவிடத்தும் இப்படியே.
ப்ரக்ருதத்தில் விவக்ஷிதமான பரிசுத்தியாவது, எம்பெருமான் ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்திருக்கிறானென்றால்
அவற்றிலுள்ள தோஷங்களாலே ஸ்பர்சிக்கப்பட்டு அபரிசுத்தனாக ஆகிறானோ என்று
ஒரு சங்கை தோன்றக்கூடுமாதலால் அதற்கு இடமறச் சொல்லுகிறபடி.

(அந்தணர் மாட்டாந்திவைத்த மந்திரத்தை)
”மாடு பொன் பக்கஞ் செல்வம்” என்ற நிகண்டின்படி மாடு-செல்வம்;
பிரமாணர்கட்குச் செல்வம் வேதமென்று நூல்கள் கூறும்.
”தநம் மதீயம் தவ பாதபங்கஜம்” என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமானுடைய திருவடிகளே
தனமாயிருப்பது போல, ப்ராஹ்மணர்கட்டு வேதமே தனமாயிருக்கும்.
ஆகவே ‘அந்தணர்மாடு‘ என்று வேதத்தைச் சொல்லிற்றாயிற்று. அதனுடைய அந்தியாவது வேதாந்தம்;
வேதாந்தத்திலே புதைத்து வைக்கப்பட்ட மந்திரமாயிருப்பன் எம்பெருமான்.

ஸஹஸ்ரநாமத்தில் எம்பெருமானுக்கு ‘மந்த்ர:‘ என்றாரு திருநாமமுண்டு;
மந்த்ர:=வேதமந்திர ரூபமாயிருப்பவர்;
மந்திரங்களினால் தெரிவிக்கப்படுகிறவர் என்றுரைத்தார் சங்கராச்சாரியர்;
தியானம் செய்கிறவர்களைக் காப்பாற்றுகிறவர் என்றுரைத்தருளினர் பட்டர்.

இங்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியம்;-
”மந்த்ரம் என்றும் ஸர்வ ஸ்மாத் பரனென்றும் பர்யாயம் போலே காணும்.
ஈச்வரனை ரஹஸ்யமென்கிறது- தலைக் கடையையும் புழைக் கடையையு மடைத்துக் கிழிச் சீரையை
அவிழ்த்துப் பார்ப்பாரைப் போலே அஷ்ட கர்ணமாக உபதேசிக்கவும் அநுஸந்திக்கவும் வேண்டி.
இப்படி சீரிய சரக்காயிருக்கையாலே.” என்பதாம்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை (மடநெஞ்சமே! மந்த்ரத்தால் வாழுதியேல்)
பகவத் விஷயத்தை அநுபவிக்குமிடத்தில் வேதாந்த முகத்தாலே யாவது இதிஹாஸ புராணமுகத்தாலே யாவது
அநுபவிக்கப் பாராமல் திருவஷ்டாக்ஷாமாகிற பெரிய திருமந்திரத்தினால் அநுபவிக்கப் பார்த்தாயாகில் என்றபடி.

இடையிடையே விஷயாந்த்ரங்களிலும் நெஞ்சுசெல்லக்கூடா தென்பதற்காக
”மறவாது வாழுதியேல்” என்கிறார் என்று சிலர் சொல்லுவர்;
இங்கு அந்த நிஷேதத்திற்கு ப்ரஸக்தியில்லை. கேவலம் உபேயாகவே நினைக்க வேண்டிய எம்பெருமானை
உபாயமாகவும் நினைத்தல் அவனை மறந்ததாகவே கருதக் கூடியதாதலால் அந்த நினைவு வேண்டாவென்கிற தென்க.
‘சிந்தித்தியேல் என்றோ ‘நினைத்தியேல்‘ என்றோ சொல்ல வேண்டுமிடத்தில் ‘வாழுதியேல் என்றது,
அதுதானே வாழ்ச்சியாயிருக்கவேணு மென்கைக்காக.
எம்பெருமானுடைய பரத்வத்திலும் உபாயத்வத்திலும் இழியாதே போக்யதையில் இழிந்து
அநுபவித்தால் அதுதானே வாழ்ச்சியாயிருக்குமிறே.

(என்றும் வாழலாம்)
ஆத்மா உள்ளவரையிலும் நித்யஸூரிகள் நடுவேயிருந்து வாழலாமென்றதாயிற்று.

உசாத்துணை தேட்டம் அவனை அனுபவிக்க
நெஞ்சே கூட சேர்ந்து அனுபவிக்கப் பாராய் என்கிறார்
இந்த்ரனை முதலில் சொல்லி காரண பூதர்கள் இவர்கள்
நடுவு உள்ள தேவர்களும் சொல்லப் பட்டனர்
இந்த்ரனுக்கு பிரமனுக்கு ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்யா புத்தியால் அன்று — ஷேபிக்கிறார்
இந்த்ரனுக்கு -இந்தரற்கு
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்னற்கு ஆளன்றி ஆவரோ
இங்கும் கண்ணனுக்கு

இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
பஞ்ச பூதங்களாகவே இருக்கிறான் என்றது அவற்றை படைத்தான் என்றபடி

செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி
சர்வாதிகாரம் ஆதாலால் தமிழ் முதலில் சொல்லி
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே
ஈரத் தமிழ்
செவிக்கு இனிய செஞ்சொல் -அதனால் செந்திறத்த என்கிறார்
முரட்டு சமஸ்க்ருதம்
வந்தருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -ஈட்டில்
பட்டர் ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தவாறே நஞ்சீயரை பல காலும் இயல் கேட்டு அருளுவர்
ஒரு கோடையிலே திரு வீதியிலே நீரை விட்டு எழுந்து அருளி இருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று
ஜீயரை அருளிச் செய்து
தாம் இத்தை அனுசந்தித்து இருந்து
அனந்தரத்தே தாமும் இப்பாட்டை இயல் சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலே த்யேய வஸ்துவை மனனம் பண்ணி
புறம்புள்ள பராக்கை அறுத்து அனுசந்திக்கப் புக்காலும்
சுக்கான் பரல் போல் இருக்கக் கடவ நெஞ்சுகள் பதம் செய்யும் படி தார்மிகராய் இருப்பார்
இவை சில ஈரச் சொல்களை பொகட்டு போவதே -என்று அருளிச் செய்தார்
இன்னும் தங்கள் அன்பார தமது சொல் வலத்தால் -9-2-8-
வங்கி புரத்து நம்பி பெருமாளை சேவிக்க எழுந்து அருளின அளவிலே
இடைச்சிகள் அண்டையில் சேவித்தாராய் அதை ஆண்டான் கண்டருளி
பிராப்யமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமுதாயம் இருக்க அவர்கள் அண்டைக்கு எழுந்து அருளுவான் என் என்ன
நாம் சற்று விரகராய் இருப்போம்
இவர்கள் ஒன்றும் அறியாத கொச்சைகள் ஆகையாலே எம்பெருமான் உடைய கடாஷம்
இவர்கள் இடத்திலே பள்ள மடையாய் இருக்கும் என்று அங்கே இருந்தேன் என்ன
அவர்கள் சொன்னது ஏது தேவரீர் அருளிச் செய்தது ஏது என்று ஆண்டான் கேட்க
பொன்னாலே பூணூல் இடுவீர்
நூறு பிராயம் புகுவீர்
அழுத்த விரட்டை உடுப்பீர்
என்கிற இவை அவர்கள் சொன்ன வார்த்தை
விஜயஸ்வ விஜயீ பவ -என்று நான் சொன்ன வார்த்தை என்று வங்கி புரத்து நம்பி அருளிச் செய்ய
அங்குப் போயும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லையே
எங்கே இருந்தாலும் நாம் நாம் காணும்
இங்கே எழுந்து அருளீர் -என்று ஆண்டான் அருளிச் செய்த வார்த்தை

அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை
இங்கு மேல் உலகம் பொருள் இல்லை
அந்தர சப்தம் வியாபகன் என்னும் பொருளில் அந்தரனாகும் இடத்தில்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வார் அறியலாகுமே ஒழிய பிரயோஜனாந்த பரர்கள் அறியார்
அந்தணன்
பரிசுத்தன்
அறனை ஆழிப்படை அந்தணனை
வ்யாபித்தாலும் எந்த தோஷங்களும் தட்டாதவன்

அந்தணர் மாடு அந்தி வைத்த மந்த்ரத்தை
மாடு பொன் பக்கல் செல்வம்
இங்கு செல்வம்
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
பிராமணர்களுக்கு வேதமே தனம்
வேதாந்தத்தில் புதைத்து வைக்கப் படும் மந்த்ரம்
மந்திர -சஹஸ்ரநாமம் -பட்டர் த்யானம் செய்பவரை காத்து அருளுபவன்
சங்கரர் வேத மந்திர ரூபம் -மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிறவர்
மந்த்ரம் என்றும் சர்வ ஸ்மாத் பரன் என்றும் பர்யாயம் போலே காணும்
ஈஸ்வரனை ரஹச்யம் என்கிறது தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்து
கிழிச் சீரையும் அவிழ்த்து பார்ப்பாரைப் போலே அஷட் கரணமாக உத்தேசிக்கவும்
அனுசந்திகவும் வேண்டி
இப்படி சீரிய சரக்காய் இருக்கையாலே

மந்திரத்தால் வாழுதியேல்-
வேதாந்த முகத்தாலோ
இதிஹாச புராண முகத்தாலோ ஆராதிக்கப் பார்க்காமல்
திரு மந்தரத்தால் அனுபவிக்கப் பார்
மறவாது வாழுதியேல் என்பர் சிலர் -விஷயாந்தரங்களில் நெஞ்சு செல்லக் கூடாது என்பதற்காக
அந்த நிஷேததுக்கு பிரசக்தி இல்லை
உபேயமாக மட்டுமே நினைக்க வேண்டியவனை உபாயமாக நினைப்பதும் மறப்பது போலே தானே
அந்த நினைவு வேண்டா என்கிறது இதில்

சிந்தித்தியேல் நினைத்தியேல் சொல்லாமல் வாழுதியேல் என்றது அது தானே வாழ்ச்சி

பரத்வத்திலும் உபாயத்திலும் இழியாதே
போக்யதையில் இழிந்து அனுபவித்தால்
அது தானே வாழ்ச்சி

என்றும் வாழலாம்
ஆத்மா உள்ளவரை நித்ய சூரிகள் நடுவே இருந்து வாழலாம் என்றதாயிற்று

—————————————————————-

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.

பதவுரை

ஒரு கால்–ஒரு திருவடியானது
ஒண் மிதியில்–அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில்
புனல் உருவி நிற்ப–ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச் சென்று
(அப்புறம் போக இடம்பெறாமையாலே) நிற்க,
ஒரு காலும்–மற்றொரு திருவடி
காமரு சீர் அவுணன்–நல்ல பாக்யசாலியான மஹாபலி யானவன்
உள்ளத்து எண்மதியும் கடந்து–தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து
அண்டம் மீது போகி எழுந்து–அண்ட பித்திக்கு மப்பால் செல்லக் கிளம்பி
இரு விசும்பின் ஊடு போய்–பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச் சென்று
கதிரவனும் –ஸூரிய மண்டலத்தையும்–
மேலே தண் மதியும்–அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திர மண்டலத்தையும்
தவிர ஓடி–கடந்து சென்று
தாரகையின் புறம் தடவி–(அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ர மண்டலத்தையும் கடந்து
அப்பால் மிக்கு–அவ்வருகே பிரம லோகத் தளவும் வியாபித்து நிற்க
மண் முழுதும்–பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும்
அகப்படுத்து நின்ற எந்தை-ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தை–எம்பெருமானுடைய
மலர் புரையும் திரு அடியே–தாமரை மலரையொத்த திருவடிகளையே
வணங்கினேன்–வணங்கப் பெற்றேன்.

கீழ்ப்பாட்டில் “மந்திரத்தால் வாழுதியேல்” என்று திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஸ்மரித்தார்;
அதில் நாராயண நாமத்தின் பொருளான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரமாவதாரத்திலே யிட்டு அநுபவிக்கிற பாசுரம் இது.

(ஒருகால் ஒண்மிதியில் புனலுருவி நிற்ப.)
ஒரு திருவடியானது பூமியளவாதல் ஸப்த ஸாகரங்கள்ளவாதல் ஸப்த த்வீபங்களளவாதல்
சக்கரவாள கிரியளவாதல் மஹா ஜலத்தள வாதல் அண்ட கடாஹத்தளவாதல் செல்லுகையன்றியே
ஆவரண ஜலத்தளவுஞ் சென்று நின்றதாம்.

ரக்ஷ்ய வர்க்கமெல்லாம அண்ட கடாஹத்தினுள்ளே யன்றோ வுள்ளது,
அதற்கு மப்பால் செல்லவேண்டுவானென் என்னில்;
ரக்ஷகனுடைய ரக்ஷணப் பாரிப்பு ரக்ஷய வஸ்துவலினளவன்று, அதனிலும் விஞ்சியது என்று காட்டுகிறபடி.

”சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிற் பெரும் பாழேயோ“ என்று தொடங்கித்
தத்வ த்யத்தையுஞ் சொல்லி ”சூழ்ந்ததனிற் பெரிய என்னவா” என்று அதனிலும் விஞ்சினதாக வன்றோ
ஆழ்வாருடைய ஆசையளவு சொல்லப்பட்டது; எம்பெருமானுடைய வாத்ஸல்யம் இதனிலுங் குறைந்து விடுமோ?
உலகமுள்ள வளவையும் மீறிச் செல்லுகி்ன்றது ரக்ஷகனான எம்பெருமானுடைய பாரிப்பு.
ஆகவே அண்ட கடாஹத்துக்குமப்பால் ஆவரண ஜலத்தளவும் ஒரு திருவடி ஊடுருவிச் சென்றதென்க.

ஆக, பூமியையளந்த திருவடியை அநுபவித்துப் பேசினாராய்,
இனி மேலுலகங்களை யளந்த மற்றொரு திருவடியின் செயலைப் பேசுகிறார் ஒருகாலும் என்று தொடங்கி.
‘திருவடி‘ என்று கௌரவித்துச் சொல்ல வேண்டியிருக்க ‘கால்‘ என்கிறாரே, இதுவென்? என்னில்;

முதற்பாட்டில் ”தளிர்புரையுந் திருவடி என்தலை மேலவே” என்றும்,
இப்பாட்டிலும் ”மலர்புரையுந் திருவடியே வணங்கினேனே” என்றும் அருளிச் செய்கிற ஆழ்வார்
இங்குக் கால் என்றது வெறுமனன்று; ஒரு கருத்துத் தோன்றவே இப்படியருளிச் செய்தது;
அதாவது, ஸம்ஸாரிகளின் அபிப்பிராயத்தாலே சொல்லுகிறபடி;

உலகளந்த காலத்தில் திருவடி எல்லார் தலையிலும் பட்டபோது ஸம்ஸாரிகள்
‘ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய
”கோல மாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குலை கழலே” என்றாற் போலே உகந்து கொண்டார்களில்லையே;
அன்னவரது கருத்தாலே கால் என்றது.

(காமருசீரவுணனுள்ளத் தெண்மதியுறங் கடந்து)
வாமனன் ‘மூவடி நிலம் தா‘ என்று கேட்டவாறே
‘மூவடி நிலந்தானே இவன் கேட்பது, அதைக் கொடுப்போம்; அதுதவிர மற்ற நிலமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான் மாவலி;
மூவடி மண் இரந்துபெற்ற வாமனன் பூமியை யடங்கலும் அளந்தவாறே ‘பூமிபோனாலும் மேலுலகமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான்;
மேலுலகத்தையு மளந்தவாறே, எண்டிசையுங் கீழும் மேலும் முற்றவுமிழந்தோமே! என்று வருந்தினானாயிற்று.
இதுவே ‘அவுணனுள்ளத் தெண்மதியுங்கடந்து‘ என்றதன் கருத்து.

மஹாபலியை ஜ்ஞாதாக்க ளெல்லாரும் அஹங்காரி யென்றும் பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும் நிந்தியா நிற்க,
இவர் ”காமசீரவுணன்” என்று புகழ்ந்து பேசுவானென்னென்னில்;
அவ் வவதாரத்திற்குப் பிற்பட்டுப் போன நம்மைப் போலன்றியே ஸ்ரீவாமநனுடைய வடிவழகையும் சீலத்தையும்
கண்ணாலே காணப்பெற்றவனன்றோ மாவலி; இவனைப்போலே பாக்யசாலியுண்டோ?
என்னுங்கருத்தாலே அருளிச்செய்கிறபடி.

இங்கே வியாக்கியான வாக்கியங்காண்மின்;-
“நானும் அடியேனென் றிருக்கிறதை விட்டு பகவத் விபூதியை அபஹரித்து ஔதார்யத்தை யேறிட்டுக்கொண்டு
யஜ்ஞத்திலே இழியப்பெற்றிலேனே! என்கிறார்“ என்பதாம்.
“ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய
திருவடியைச் சென்னி மேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.

(அண்டமீதுபோகி இருவிசும்பினூடுபோயெழுந்து)
‘போகி‘ என்றதை ‘போக‘ என்னும் எச்சத் திரிபாகக் கொண்டு ‘எழுந்து‘ என்றதை அதனோடு அந்வயித்துக் கொள்ள வேணும்.
அண்டத்திற்கு அப்பால் போவதாகக் கிளம்பி ஆகாசத்தின் மேலே போய்‘ என்றவாறு.
இவ்விடத்தில் ”இரு விசும்பினூடு போய்“ என்றவளவு போதுமே “அண்டமீதுபோகி யெழுந்து” என்பது வேணுமோ?
என்னில்;
“ஸ்ரீவாமனனுடைய விஜயத்தில் தமக்குண்டான ஆதராதிசயத்தாலே அளக்கும் ப்ரதேசத்ததுக்
கொண்டைக் கோல் நாட்டுகிறார்“ என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

மேலே அதிக்ரமித்துச் சென்ற விடங்களைச் சொல்லுகிறது
மேலைத் தண் மதியும் என்று தொடங்கி.
அந்தரிக்ஷத்துக்கு மேலெல்லையாய் ஸ்வர்க்கத்துக்குக் கீழெல்லையாயிருக்கும் ஆதித்ய பதம்;
அதற்கு மேலே நூறாயிரக்காத வழியுண்டு சந்திர பதம்;
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழியுண்டு நக்ஷத்ர பதம். அதற்கு மேலும் ஓங்கிச் சென்றதாயிற்று திருவடி.

ஸூர்யமண்டலங் கடந்த பின் சந்திர மண்டலமாயிருக்க,
இங்குத் ”தண்மதியுங் கதிரவனும்” என்று சந்திர மண்டலத்தை முந்துறச் சொல்லுவானென்? எனில்;
அஹங்காரிகளாய் மிகவும் விமுகராயிருக்கும் ஸம்ஸாரிகளின் தலையிலே ஸூகுமாரமான திருவடியை வைக்கையாலே
அத் திருவடிக்குண்டான வெப்பந்தீர சைத்யோபசாரம் பண்ண வேணுமென்று திருவுள்ளம் பற்றி
முந்துறச் சந்திர மண்டலத்தைப் பேசுகிறாரென்று ரஸோக்தியாக அருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

மந்திரத்தால் வாழுதியேல் -திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை ஸ்மரித்தார்
அதில் நாராயண நாம பொருளான வியாபகத்தை திரி விக்கிரம வியாபாரத்திலே இட்டு அனுபவிக்கிற பாசுரம் இது

ரஷகனுடைய ரஷணப் பாரிப்பு ரஷ்ய வஸ்துவின் அளவன்றே விஞ்சியது –
தளிர் புரையும் திருவடி என்றவர்
இங்கே கால் என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -உகந்து கொள்ளாமல்
ஒருவனுடைய கால் நமது தலையிலே பட்டதே -என்பார்கள் இறே

காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து
அவன் எண்ண எண்ண அத்தையும் கடந்து
எண் திசையும் கீழும் மேலும் முற்றும் இழந்தோமே
அவனுக்கும் சீர்மை
வாமனன் வடிவு அழகையும் சீலத்தையும் கண்ணாலே காணப் பெற்ற சீர்மை
நானும் அடியேன் என்று இருக்கிற இத்தை விட்டு
பகவத் விபூதியை அபஹரித்து
ஔதார்யத்தை ஏறிட்டுக் கொண்டு
யஞ்ஞத்திலே இழியப் பெற்றிலேனே
ஐயோ நான் காளியனாக பிறவாது ஒழிந்தேனே ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம்

அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து
போகி என்றது போக என்றபடி
போவதாக கிளம்பி மேலே போய்
இரு விசும்பினூடு போய் எழுந்து -என்று மட்டும் சொல்லாமல்
அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து-என்றது
ஸ்ரீ வாமனன் உடைய விஜயத்திலே தமக்கு உண்டான ஆதாராதிசயத்தாலே
அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக் கால் நாட்டுகிறார்

மேலைத் தண் மதியும் இத்யாதி
அந்தரிஷத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்வர்க்கத்துக்கு கீழ் எல்லையாய் இருக்கும் ஆதித்ய பதம்
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழி உண்டு சந்திர பதம்
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழி உண்டு நஷத்ர பதம்
அதுக்கும் மேலே ஓங்கிச் சென்றதாயிற்று திருவடி
ஸூர்ய மண்டலம் கடந்த பின் சந்திர மண்டலமாய் இருக்க
இங்கு முந்துற சந்திர மண்டலம் சொன்னது
திருவடிகளில் வெப்பம் தீர சைத்யபோசாரம் பண்ண திரு உள்ளம் பற்றி முந்துற பேசுகிறார்-

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்–30–மின்னு மா மழை தவழும் மேக வண்ணா–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 25, 2013

அவதாரிகை –

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு
இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும்
தாங்களே முதலரிய வல்லார் –
என்கிறார் –

(“பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே“ என்று
பயனுரைக்கும் முகத்தால்
அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும்.)

—————————————————

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

பதவுரை

முனிவரோடு அமரர் ஏத்த-முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னமாய் ஹம்ஸ ரூபியாய் அவதரித்து
அரு மறையை-அருமையான வேதங்களை
வெளிப்படுத்த-பிரகாசிப்பித்த
அம்மான் தன்னை-ஸர்வேஸ்வரன் விஷயமாக,
மன்னு மா மணி மாடம் மங்கை வேந்தன்-சாஸ்வதமான சிறந்த மணி மாடங்களை யுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்
மானம் வேல்-பெருமை தங்கிய வேற்படையை யுடைவரும்
கலியன்–திருமங்கை யாழ்வார்
மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா-‘மின்னலோடு கூடியும் மிகவும் குளிர்ந்தும்
தவழ்ந்து வருகின்ற மேகம் போன்ற வடிவை யுடையவனே!
விண்ணவர் தம் பெருமானே–தேவாதி தேவனே!
அருளாய்-அருள் புரிய வேணும்
என்று சொன்ன–என்று பிரார்த்தித்து அருளிச் செய்த
பன்னிய -மிகவும் பரம்பின
தமிழ் நூல்-தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற
மாலை-இச் சொல் மாலையை
வல்லார் தாம்–ஓத வல்லவர்கள்
தொல்லை–அநாதியான
பழ வினையை–முன்னே வினைகளை
முதல்-வேரோடே
அரிய வல்லார்–களைந்தொழிக்க வல்லவராவர்.

ருஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண
ஹம்ஸ ரூபியாய்
பெறுதற்கு அரிய வேதத்தை பிரகாசிப்பித்த ஸர்வேஸ்வரன் விஷயமாக நிலை பெற்ற
விலை உயர்ந்த ரத்னங்களால் செய்த மாடங்களை யுடைத்தான திரு மங்கைக்கு ராஜாவாய்
பெருமை தங்கிய வேலை யுடையராய்
பிரதி பக்ஷத்தை வென்றவராய் கலி தோஷத்தைப் போக்கின ஆழ்வார்
மின்னலை யுடைத்தாய் தர்ச நீயமாய் வர்ஷியா நின்றுள்ள
மேகத்தினுடைய வடிவை யுடையனாய் நித்ய ஸூரி நிர்வாஹகனானவனே
கிருபை செய்து அருள வேணும் என்று அருளிச் செய்த ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பிரதிபாதிப்பதாய்
லக்ஷணோ பேதமாய் தமிழ் பாஷையாய் மாலா ரூபமான இப் பிரபந்தத்தை
அர்த்தத்தோடே கற்க வல்லவர்கள் அநாதி ஸித்தமான ப்ராரப்த கர்மத்தை
முதலோடே அரிந்து விடுகைக்குத் தாங்களே சமர்த்தராவார்கள் –

———————————————————-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –
மின்னி முழங்கி வில் விட்டு
தர்ஸ நீயமாய் –
வர்ஷியாது இருப்பதொரு வர்ஷூக வலாஹகம் போலே
இருந்துள்ள வடிவை உடையவனே –

ஒரு நீர்ச் சாவியிலே ஒரு காள மேகம் வர்ஷித்தால் போலே
அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று
இவருடைய ஆர்த்த நாதத்தை கேட்டு -இவருடைய தாபம் எல்லாம் நீங்கும்படியாக
குளிர நோக்கிக் கொண்டு -காளமேக நிபஸ்யமமான வடிவோடு வந்து
முகம் காட்டின படியைச் சொல்கிறது –

கீழில் பாட்டிலே –
பரோஷ நிர்த்தேசம் பண்ணி இருக்க
இங்கே அபரோஷித்துச் சொல்லுகையாலே -வந்து முகம் காட்டினமை தோற்றுகிறது –

பிரணய ரோஷம் அகிஞ்சித்கரமான தசையிலும்
ஸ்வ தோஷ ஞாபநம் கார்யகரமான படி –

நம் ஆழ்வார் (உயர்வற உயர் நலம் உடையவன் என்று  )ஜகத் காரணத்வத்திலே உபக்ரமித்து –
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை -என்று ஜகத் காரணத்தோடு தலைக் கட்டினார்

இவர் வடிவிலே -மணிவுருவில் பூதம் ஐந்தாய் -என்று -உபக்ரமித்து
மின்னு மா மழை தவழும் -என்று வடிவோடு தலைக் கட்டுகிறார் –

விண்ணவர் தம் பெருமானே –
இவ் வடிவைப் படியிட ஜீவித்து இருக்குமவர்களைச் சொல்லுகிறது –
அயர்வறும் அமரர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே –

(திருமேனி குணம் அனுபவமே அன்னம் –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னான் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத)

கடலிலே வர்ஷித்தால் போலே அவர்களுக்கு உன்னைக்
கொடுக்குமது ஒரு ஏற்றமோ –

அவர்கள் உன்னை சதா தர்சனம் பண்ணுமா போலே
நானும் உன்னை
சரீர சம்பந்தம் அற்று
சதா தர்சனம் பண்ணும்படி கிருபை பண்ணி அருள வேண்டும்

அருளாய் என்று
பரம பக்தி பர்யந்தமான விடாய் – பிறந்த இடத்திலும் இரக்கமே சாதனம் என்று இருக்கிறார் –

ஆழியான் அருளே -என்று விஷயாந்தர நிவ்ருத்திக்கும்
இரக்கமே சாதனம் -என்கிறார் –
பகவத் அனுபவத்துக்கும் இரக்கமே சாதனம் -என்கிறார்-

(வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல் கணார் கலவியே கருதி* 
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். )

அன்னமாய் –
தமக்கு அவன் வந்து தன்னைக் கொடுத்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார் –

ப்ரஹ்மாவுக்கு பிரமாணத்தை வெளி யிட்டால் போலே யாய்த்து
தமக்கு பிரேமேய பூதனான தன்னை வெளி இட்ட படியும் –

முனிவரோடு அமரர் ஏத்த
ரிஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் வேத சஷூஸ்சை
இழந்தோம் என்று
தன்னை ஆஸ்ரயித்து ஏத்த –
ரிஷிகளுக்கு ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக பிரமாண அபேஷை உண்டு
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ர்ஷ்டாதி வியாபாரத்துக்கு பிரமாண அபேஷை உண்டு –

அன்னமாய் –
அபௌருஷேயத்வம் குலையாத படி
ஹம்ஸ ரூபியாய் –

அரு மறையை –
பெறுதற்கு அரிய வேதம் –
பெறுதற்கு அரியது பிரமேயம் அன்று –
பிரமாணம் ஆய்த்து –

வெளிப்படுத்த –
பிரமாணத்துக்கு உத்பத்தி விநாசம் ஆவது
பிரகாச -அப்ரகாசங்கள் -என்கை –

அம்மான் தன்னை –
சர்வேஸ்வரன் இவர்களுக்கு வேத பிரதானம்
பண்ணுகைக்கு அடி
உடையவன் ஆகையாலே -என்கை –

மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
இவர் தரித்த வாறே
ஊரும் ஸ்திரமான படி –

கல்பாவசாநத்து அளவும் அழிவு இன்றிக்கே
ஸ்லாக்கியங்களான ரத்னங்களாலே
செய்யப்பட மாடங்களை உடைத்தான -திருமங்கை –

மங்கை வேந்தன் –
பஷியின் காலில் விழுந்தவர்
திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனார்

(“அரசமர்ந்தானடி சூடுமரசையல்லால் அரவாகவெண்ணேன் மற்றரசுதானே“ என்றாற்போன்ற
அத்யவஸாயத்தின் கனத்தாலே இங்ஙனே பேசினாராயிற்று)

மான வேல் பரகாலன் –
கிஞ்சித் கரிக்கவும் பெற்றார் -என்கை –
அத் தலையிலே பரிவாலே எடுத்த வேல் -இறே –

மான வேல்
கா புருஷன் எடுக்கிலும்
திரு மங்கை மன்னன் ஆக்க வல்ல வேல் –
மான வேல் பரகாலன் -என்னுதல்-

பர காலன் –
கையில் வாளாலும்
பிரதி பாதனத்தாலும்
பிரதி பஷத்தை வென்று
வைதிக மரியாதையை ஸ்தாபித்தவர் –

(அபிமான துங்கன் செல்வ நம்பி போல் பகவத் பாகவத அபிமானம் உத்தேச்யம் -கொண்டாடத் தக்கதே
ஸ்ரீ பராசர பட்டராலே ஸ்ரீ மாதவாச்சார்யரை ஸ்ரீ நஞ்ஜீயராக்கிய ஸாஸ்த்ரம் அன்றோ -)

கலியன் –
உபயத்துக்கும் அடியான மிடுக்கை சொல்கிறது
கலி -மிடுக்கு
அங்கன் இன்றியே
கலி காலத்தை கடிந்தவர் -என்னுதல் –

(கலி ஹந்த –உன் தனக்கும் பொருள் கற்கலாம் -கலி கன்றி

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-)

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –
பன்னுதல் -பரம்புதல்
ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
விளாக் கொலை கொண்டு இருக்கை –

நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –

தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –

மாலை
ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –

(எம்பெருமானும் அவனடியார்களும் உகந்து முடி மேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.)

தொல்லை இத்யாதி
கார்ய காரண ரூபத்தாலே
அநாதியாய் வருகிற -அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி
சம்பந்தங்களை
தாங்களே சவாசனமாக போக்க வல்லவர்கள்

வினை
அதாகிறது -புண்ய பாப ரூபமான கர்ம த்வயம்

இது தான் பூர்வ உத்தர ஆக (போய பிழையும் புகு தருவான் நின்றனவும் ) பிராரப்த ரூபமாய் இருக்கும்

இது தான் அல்லாத
ஜ்ஞான அநுதயம்
அந்யதா ஜ்ஞானம்
விபரீத ஜ்ஞானம்
ஸ்தூல சூஷ்ம ரூபமான அசித் சம்பந்தம்
வாசனா ருசிகளுமாகிற -விரோதி வர்க்கத்துக்கும் உப லஷணம் –

தொல்லைப் பழ வினை –
இவை தான் பழையதாய் இருக்கையும்
அடி காண ஒண்ணாதாய் இருக்கையும் -அதிசயத்தைப் பற்றி சொல்லுதல்
அறவும் பழையதான வினை -என்னுதல் -(அநாதி அன்றோ )

தாமே –
இப் பிரதிபந்தங்களை எல்லாம் தாங்களே சவாசனமாக போக்க வல்லார் –
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டாம் -என்கை –

(அனுஷ்டித்த கோபிமாருக்கும் – அநு கரித்த நாய்ச்சியாருக்கும் -அனுசந்தானம் செய்யும் நம்மோடு வாசி அற
செங்கண் திரு முகத்துக்குச் செல்வத் திரு மாலால் எங்கும் திரு வரும் பெற்று இன்புறுவோம் அன்றோ)

அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த -என்று
அவர்களுக்கு விசேஷணம் ஆன போது –

எம்பெருமானைக் கண்ட போதே -என் அவா அறச் சூழ்ந்தாயே – என்ன சக்தர் அல்லாமையாலும்
கீழில் பாட்டில் போலே இப்பாட்டில் இயலின் பல ஹானி தோற்றி இராமையாலும்
எம்பெருமான் திரு மேனி வர்ஷூக வலாஹம் போலே இருக்கையாலும்
அயர்வறும் அமரர்களுக்குத் தன்னை புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும்படியைச் சொல்லுகையாலும்
தாமே வேல் எடுக்க சக்தராகையாலும்
பிரதி பஷத்தை நிரசித்தபடியை அருளுகையாலும்

இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றாலும்
தம்முடைய பல ஹானி போய்
தம்முடைய அபேஷிதம் பெற்று
திருப்தரானார் என்னும் இடம்
இப் பாட்டிலே வ்யக்தம் –

முனிவரோடு அமரர் ஏத்த –
அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் -என்று -சொன்ன –
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று அந்வயம் –

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–29–அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 24, 2013

அவதாரிகை –

முதல் பத்தில் –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களை நிர்ணயித்து –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை நிர்ணயித்து –
தத் விரோதியையும் நிர்ணயித்து –
விரோதி நிவ்ருத்திக்கும் -புருஷார்த்த சித்திக்கும் அனுரூபமான உபாயத்தையும் நிர்ணயித்து –
இத்தனைக்கும் வாசகமான -திரு மந்த்ரத்தை -வாக் இந்த்ரியத்துக்கு விஷயமாக்கி —
இவ் வர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயமாக்கி –
தெளிந்து கால ஷேபம் பண்ணினார் –

நடுவில் பத்தில் —
கால ஷேப அர்த்தமாக அனுசந்தித்த அனுசந்தானத்து அளவிலே பர்யவசியாதே
கண்ணான் சுழலை இட்டு
கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படியான ஆற்றாமை விளைந்து –
தான் நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே
அப்ரக்ர்திங்கராய் -பிறர் வாயாலே வார்த்தை
சொல்ல வேண்டும்படியான மோஹமாயச் சென்றது –

மூன்றம் பத்திலே –
இவள் தசையைக் கண்ட தோழி இவளை ஆஸ்வசிப்பிக்க வேணும் என்று பூர்வ சம்ஸ்லேஷத்தை முன்னிட
வ்ர்த்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து நின்று பேசினாள்-

பின்னை
ப்ரஸ்ன பிரதி வசனங்கள் இல்லாமையாலே
பழைய ஆற்றாமையே மேலிட்டு தூத ப்ரேஷணத்தில் அன்வயித்தாள் –

அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டாமையாலே ப்ரணய ரோஷம் தலை எடுத்தது –
நம் ஆழ்வாரைப் போலே ப்ரணய ரோஷம் நிலை நிற்கில் இறே -அவன் வந்து முகம் காட்டுவது –
அது செய்யாதே நடுவே எளிமைப் பட்டு பழைய ப்ரக்ருதியிலே இழிந்தார் –

விழுந்த இடத்திலும் தரித்து இருக்கலாவது அவன் முகம் காட்டினால் இறே –
அது இல்லாமையாலே
நம் ஆழ்வாருக்கு -முனியே நான்முகனில் -பிறந்த பரம பக்தி -இவருக்கு பிறந்து –
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –
ஸ்வ தோஷ பூயஸ்வத்தையும்-முன்னிட்டு
பிரணயியான நீ -எனக்கு முகம் காட்டாது ஒழிவதே -என்று கூப்பிடுகிறார் –

நம் ஆழ்வார் பரத்வத்தையும் அவதாரத்தையும் பற்றிக் கூப்பிட்டார் –
இவருக்கு பராவஸ்தையும் அவதாரம் ஆகையாலே
அவதாரத்தையும் அர்ச்சாவதாரத்தையும் பற்றிக் கூப்பிடுகிறார் –

(ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போகாதவர் அன்றோ)

(சூழ் புனல் குடந்தையே தொழுது -உபக்ரமித்து
இங்கு-தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே- உபஸம்ஹாரம்)

—————————————————–

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

பதவுரை

அன்று–முன் பொருகாலத்தில்
ஆயர் குலம் மகளுக்கு–இடைக் குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு
அரையன் தன்னை–நாயகரானவரும்
அலை கடலை கடைந்து-அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்
அடைத்த அம்மான் தன்னை–(அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்
குன்றாத வலி–குறைதலில்லாத மிடுக்கை யுடைய
அரக்கர் கோனை மாள–இராவணன் முடியும்படியாக
கொடும் சிலைவாய்–கொடிய வில்லிலே
சரம் துரந்து–அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து
குலம் களைந்து வென்றானை–அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும்
குன்று எடுத்த–கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த
தோளினானை–புஜத்தை யுடையவரும்
விரி திரை நீர் விண்ணகரம் மருவி–பரந்த அலைகளை யுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி
நாளும் நின்றானை–எப்போதும் ஸந்நிதி பண்ணி யிருப்பவரும்
தண் குடந்தை–குளிர்ந்த திருக்குடந்தை யிலே
கிடந்த மாலை–பள்ளிக் கொண்டிருக்கும் ஆஸ்ரித வத்ஸலரும்
நெடியானை–ஸர்வோத்தமருமான பெருமானை
நாய் அடியேன்–நாய் போல் நீசனான அடியேன்
நினைந்திட்டேன்–நினைத்தேன்.

கும்பர் ஏழு ருஷபங்களைக் கன்யா சுல்கமாக வைத்த அன்று அவற்றை நிரஸித்து
இடைக்குலத்தில் அவதரித்த பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனாய்
அலைகளை யுடைத்தான சமுத்திரத்தை அம்ருதத்துக்காக மதனம் பண்ணி
ராமாவதாரத்தில் சேது பண்ணினவனாய் ஸர்வ ஸ்வாமியாய்
ஒரு காலும் ஷயியாத பலத்தை யுடைய ராஜஸ ஜாதிக்கு எல்லாம் நிர்வாஹகனான ராவணன் முடியும்படியாக
க்ரூரமான வில்லிலே பாணங்களை பிரயோகித்து ராக்ஷஸ குலத்தை நிர்மூலமாக்கி ஜெயித்தவனாய்
பசு நிரைகளையும் இடையரையும் ரஷிக்கைக்காக கோவர்த்தன பர்வதத்தைக் குடையாக எடுத்து திருத் தோளை யுடையனாய்
விஸ்திருதமாகா நின்று அலைகளை யுடைத்தான ஜல ஸம்ருத்தியை யுடைய திரு விண்ணகரிலே எக்காலமும் பொருந்தி நிற்குமவனாய்
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின ஆஸ்ரித வியாமுக்தனாய்
இப்படிப் பட்டவன் என்று அளவிடற்கு அரியனாய் இருக்கிற ஸர்வேஸ்வரனை
அடிமையையே நிரூபகமாக யுடையனாய்
நாய் போலே தண்ணியனான நான் நினைத்தேன் –

———————————————————

பிரணயிநிகளுக்கு முகம் கொடுத்த படியைச் சொல்லுகிறார் –
பிரதமத்தில் நப்பின்னை பிராட்டிக்கு உதவின படியை அருளிச் செய்கிறார் –

அன்று –
அன்றும் இன்றும் போலே காணும் ஆபத்து உள்ளது –

அதாகிறது
நப்பின்னை பிராட்டி உடைய சௌந்த்ர்யத்தைக் கண்டு
இவளைக் காத்தூட்ட வல்லான் ஒரு சமர்த்தன் வரனாக வேணும் என்று பார்த்து
ரிஷபங்களை முன்னிட்டு
இவற்றை நிரசித்தவனுக்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று சங்கல்ப்பிக்கையாலே –
கிருஷ்ணன் வந்து முகம் காட்டுவதற்கு முன்பு
அன்யார்ஹமாகப் புகுகிறோமோ -என்று நடுங்கின நடுக்கம் இறே அவளது –

ஆயர் குலமளுக்கு –
அபிஜாதையான நப்பின்னை பிராட்டிக்கு
இவளுடைய ஆபிஜாத்யத்துக்கு சதர்சமான குலத்தில் பிறந்தால் அல்லது
இவளை லபிக்க ஒண்ணாது – என்று பார்த்து இறே
ஸ்ரீ நந்த கோபர்க்கு பிள்ளையாய் வந்து பிறந்தது –

அரையன் தன்னை –
ஒரு நாட்டை வன்னியம் அறுத்து
அத் தேசத்தை அனுபவித்ததோபாதி போருமாய்த்து
இவளுடைய விரோதி வர்க்கத்தின் உடைய கனமும்
போக்யதையினுடைய பெருமையும் —
அவளுடைய விரோதி வர்க்கத்தைப் போக்கி
அவளுக்கு உதவினால் போலே
எனக்கு முகம் தர வேண்டாவோ –
என்கிறாள் –

பிராட்டிக்கு உதவின படியை அருளிச் செய்கிறார் –
இவ்விரண்டு அபதானத்தாலும் –
பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தது –
அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காக கடலைக் கடந்தது –
அம்ருத பிரதானமும் குடி இருப்பு கொடுக்கையும் ஆநுஷங்கிகம் -இறே –
அவனுடைய திரு உள்ளத்தை அனுசந்தித்து இறே ஆளவந்தாரும் அருளிச் செய்தார்

(சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத் ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 37 –

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–)

(பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் என்க.
“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!“ என்றாரே இவர் தாமே.)

அம்மான் தன்னைக் –
உன்னுடைய பிரணயித்வத்தை இழக்கை அன்றிக்கே
ஆநு ஷங்கிகமாகக் கொண்டு
துர்வாச சாபத்தாலே நஷ்ட ஸ்ரீ கரரான இந்த்ராதிகள் வந்து சரணம் புகுர
அவர்களுடைய அஸ்ரீ யைப் போக்கி
அம்ருதப் பிரதானம் பண்ணுகையாலும்
ப்ரஹ்மாதிகள் ராவணனால் குடி இருப்பு இழக்க
அவர்களுக்கு குடி இருப்பு கொடுக்கையாலும்
வந்த பரத்வத்தை இழக்கக் கிடாய் புகுகிறாய் -என்கிறாள்-

குன்றாத வலி –
தோள் வலி யாகில் இறே போது செய்வது
வர பலம் ஆகையாலே போது செய்யாது இறே

யரக்கர் கோனை மாளக் –
அவ் வர பலத்தையே ஆலம்பனமாகக் கொண்டு
பர ஹிம்சையே யாத்ரையாய் இருக்கும் –
ராஷச ஜாதிக்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை நசிப்பிக்கும் படியாக –

கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து –
கண்ட போதே எதிரிகள் மண் உண்ணும்படியான
ஸ்ரீ சார்ங்கத்தாலே திருச் சரங்களை நடத்தி -(சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை )

கொடுஞ்சிலை –
தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே
திருச் சரங்களுக்கு உண்டான ஏற்றமும்
ராம பாணாஸந ஷிப்தம் ஆகையாலே –

குலங்களைந்து-
ராஷச ஜாதியாக அழியச் செய்து –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –தன் நினைவாலும் -ராவணனுடைய நினைவாலும் –
பெருமாள் நினைவாலும் -இஷ்வாகு வம்ச்யன் இறே

தான் சொன்ன ஹிதம் அவன் கேளாமையாலே-நிசாசர -என்றான் –

தத்வாம்துதிக் குல பாம்சனம் -என்றான் ராவணன்-

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தன்னை -ராஷசானாம் பலாபலம் -என்று பெருமாள் கேட்டார்

ராஷசானாம் வதே சாஹ்யம் -என்று ராஷச வதத்திலே சஹகரிக்க கடவேன் நான் –
ஆகையால் ராஷச ஜாதிக்கு கூட்டு அல்லன் என்கை –

ராவணன் ஒருவனும் அவதாரம் பண்ண -ராஷச ஜாதியாக நசிக்கும் படி இறே
அவன் பண்ணின அபராதத்தின் உடைய கனம்

ஒருவன் அனுகூலன் ஆனால் அவனுடைய சம்பந்தி சம்பந்திகள் அடங்க உஜ்ஜீவிக்குமா போலே இறே
ஒருவன் பிரதிகூல்யம் பண்ணினால் அவனுடைய சம்பந்தி சம்பந்திகள் அடங்கலும் நசிக்கும் படியும்
ராவணன் பக்கல் சீற்றம் ராஷச ஜாதியாக முடிந்தது –
மகா ராஜர் பக்கல் ஸ்நேகத்தாலே வானர ஜாதியாக வாழ்ந்தது –

(கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும், மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா“ என்கிறபடியே
ஒருவன் அநுகூலனானால் அவனுடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமாபோலே
ஒருவன் பிரதிகூலனான இராவணனுடைய ஸம்ந்தத்தாலே ராக்ஷஸ குலமடங்கலும் பாழ்பட்டன;
அது கூலனான ஸுக்ரீவனுடைய ஸம்பந்தத்தாலே வாநர ஜாதி யடங்கலும் வாழ்ச்சி பெற்றன.)

வென்றானைக் –
ராஷச ஜாதியை நிச் சேஷமாக நசிப்பித்தாலே போலே ஆய்த்து –
ஸ்ரீ வானர வீரரிலே ஒருத்தனுக்கு ஒரு வாட்டம் வாராத படிக்கு ஈடாக வென்றபடியும் –

குன்றெடுத்த தோளினானை –
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு தன்னை ஒழிய செல்லாத படியான விளைத்து
அவர்களை அனுபவிப்பித்தவனை –

இத்தால்
உன்னை ஒழிய செல்லாத படியான ஆற்றாமையை விளைவித்த நீ
உன்னை அனுபவிப்பிக்க வேண்டாவோ -என்கை-

அவ் அவதாரத்துக்கு பிற்பாடராய்-
தூத ப்ரேஷணத்திலே அன்வயிப்பது –
ப்ரணய ரோஷத்தில் அன்வயிப்பது ஆனார்க்கு
உதவுகைக்கு அன்றோ திரு விண்ணகரத்திலே
நித்ய வாசம் பண்ணுகிறது –

விரி திரை நீர் விண்ணகரம் –
சௌகுமார்யத்துக்கு அனுகூலமான ஜல ஸம்ருத்தியை உடைய தேசம் –

மருவி-
பரமபதத்தை விட்டு
அநந்த கிலேச பாஜனமான
சம்சாரத்திலே பொருந்தி வர்த்திக்கிறது –
ஆஸ்ரித வாத்சல்யத்தால் இறே –

கர்ஷகனுக்கு அகத்தில் கிடையைக் காட்டிலும்
மடைத்தலையில் கிடை இறே பொருந்தி இருப்பது –

நாளும் நின்றானைத்
கல்பாவசானமாக நிற்கிறவனை-

தண் குடந்தை கிடந்த மாலை –
நின்றால் கந்தவ்ய பூமி உண்டு என்னும் இடம் தோற்றும் இறே –

அது செய்யாத படி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகோம் என்று
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவனை

இப்படி இத் தேசத்தில் நிற்பது இருப்பது கிடப்பது -ஆகைக்கு அடி என் என்னில்
மாலை –
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே –

((மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.)

நெடியானை –
இவர் ஆஸ்ரிதர்க்கு முகம் கொடுக்கும் படி என்னால் பேசப் போமோ
அபரிச்சின்னம் என்னும் இத்தனை என்கிறாள் –

(உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-)

(செடியாய வல்வினைகள் தீர்க்கும்*  திருமாலே*
நெடியானே வேங்கடவா*  நின் கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்*  அரம்பையரும் கிடந்து இயங்கும்*
படியாய்க் கிடந்து*  உன் பவளவாய் காண்பேனே (2)

அதவா
நெடியானை –
இப்படி சர்வ ஸூலபனாய் இருக்கிறவன் கிடீர்
எனக்கு எட்டாப் பூவாய் இருக்கிறவன் –

அடி நாயேன் நினைந்திட்டேனே –
அவனுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாதாப் போலே இறே
என்னுடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லாத படி –

நாயேன் –
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து திரிகையும் –
நுழைந்த வாசல் எல்லாம் பரிபூதமாய் புறப்படுகையும்
உடையவனே உகந்து தொடிலும் ஸ்நானம் பண்ண வேண்டும்படியான ஜன்மத்திலே பிறந்தவன் –

அடி நாயேன் –
சம்பந்தமே ஹேதுவாக நீ முகம் பார்த்தல் ஒழிதல்
செய்யும் அது ஒழிய
புறம்பு கதி இல்லாதவன் –

ஆஸ்ரயண வேளையோடு -போக வேளையோடு வாசி அற
ஆகிஞ்சன்யமும்
ஸ்வ தோஷ ஞாபானமும்
காணும் இவருக்கு உள்ளது-

அடி நாயேன் -வந்தடைந்தேன் -என்றார் ஆஸ்ரயண வேளையில்
இங்கே -அடி நாயேன் -என்கிறார் –

(தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-)

இது இறே இவர் தம்மை நினைத்து இருந்தபடி –
தமக்கு உண்டான நன்மை அடங்கலும்
போக உபகரணமாக நினைத்து இருக்குமவர் -இறே –

நம் ஆழ்வார்-அதனில் பெரிய என் அவா -என்று தலைக் கட்டினார் –
இவர் -அடி நாயேன் -என்று தலைக் கட்டினார் –

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-)

அதுக்கு ஹேது என் என்னில்

அவர்க்கு
விரக்தி நை சர்க்கிகம் ஆகையாலே
பிரேமத்தை விளைக்கை யாய்த்து கர்த்த்யம் -(ஸஹஜ பக்தர் -மேலே மேலே பெருக்குவதே கர்த்தவ்யம் அங்கு )
ஆகையால் -அதனில் பெரிய என் அவா -என்னும்படிக்கு ஈடாகப் பண்ணினான் –

இவர்
வென்றியே வேண்டி வீழ பொருட்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை வுடையராய்-போருகையாலே
இவரை -அடி நாயேன் நினைந்திட்டேன் – என்ன பண்ணுகை யாய்த்து கர்த்யம் –
ஆகையாலே இவரை -அடி நாயேன் நினைந்திட்டேன் -என்னப் பண்ணினான் –

(நைச்ய அனுசந்தானத்தையே வளர்ப்பது கர்தவ்யம் இங்கு )

நினைந்திட்டேனே –
அடியிலே நிர்ஹேதுகமாக-விஷயீ கரித்த தொரு விஷயீ காரமும் உண்டு
அது யாவதாத்ம பாவியாக வேணும் என்று நினைத்தேன்

இயற்க்கையில் புணர்ச்சி(வந்து என் மனம் புகுந்தாய் -சிந்தனைக்கு இனியாய் )
யாவதாத்ம பாவியாக வேணும் என்று நினைத்தேன் -என்கை –

(அம்மானாழிப் பிரானவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங்கண்டீர்‘
என்றாப் போலே, மிக நீசனான அடியேனுக்கும் விதி வசத்தாலே நேர்ந்த இக் கலவி
நித்யமாய்ச் செல்ல வேணுமென்று நினைந்திட்டே னென்றவாறு.)

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–28–தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாள–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 24, 2013

அவதாரிகை –

நம் ஆழ்வார் -வைகல் பூம் கழிவாயில்-(6-1-விபவ -ராமாவதாரத்தில் தூது ) -தூத ப்ரேஷணம் பண்ணி
அநந்தரம்
அவன் முகம் காட்டக் காணாமையாலே
(மின்னிடை மடவார்களில்–6-2-)பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடினால் போலே
இவளும் தூது விட்டு
இதிலே ஊடுகிறாள் –

தூத ப்ரேஷணம் பண்ணும்படியான ஆற்றாமைக்கு அவ்வருகே
ஒரு தசா விசேஷம் இறே பிரணய ரோஷம் ஆகிறது –

(பிரிவாற்றாமை ஏற்பட்டு -அதுவே வளர -தூது விட்டும் பிரிவாற்றாமை ஏற்பட்டு –

அதுவே வளர -தூது விட்டும் -வராமல் கோபம் -மடல் எடுத்து -ஊடல் -போன்ற தசைகள் )

அப்படியே அத் தசையிலே வெள்ளிடி விழுந்தால் போலே
மன பிரசாதம் பிறந்து தெளிந்து –
நம் ஆற்றாமை இருந்தபடியாலும்
தூத ப்ரேஷணம் பண்ணுகையாலும் –
ஸூப நிமித்தங்கள் செய்கையாலும் –
அவன் வரவு தப்பாது என்று நிர்ணயித்து –
அவன் வந்தால் முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் –
என்று அத்யவசித்தாள்-

அதுக்கு ஹேது என் என்னில் –
அவனுடைய சம்ஸ்லேஷம் விஸ்லேஷாந்தமாய் இல்லாது இராமையாலே
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்காய் இருந்து கிலேசப்படுமதில் காட்டில்
அவன் வந்தால் முகம் கொடாதே
அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்க கடவோம் -என்று பார்த்தாள் –

(உள்ளே வராமல் தடுப்பது -ஸ்வரூப நாசம் -இதனால் உயிர் விட்டு -பிரிவுத் துன்பத்தில் இருந்து நீங்கலாம்)

தாம் தாம் முடிய நினைப்பார்
வெற்றிலை தின்பது பூ சூடுவது சிரிப்பதாமா போலே
அகவாய் அழியா நிற்கச் செய்தே -இவள் தெளிந்து இருக்க

அத்தைக் கண்ட தோழி யானவள் –
பிரணய ரோஷம் தலை எடுக்கும் படியான ஆற்றாமை செல்லா நிற்கச் செய்தே
நிஸ் சங்ககமாக இவள் தெளிந்து இருந்தாள் –
இதுக்கு ஹேது என் என்று பார்த்து –
நெஞ்சில் ஓடுகிறது என் என்று கேட்க –

அவன் வந்தால் பண்டு போலே முகம் கொடுக்கக் கடவேன் அல்லேன் –
அவன் சந்நிதியிலே முடியக் கடவதாக அத்யவசித்தேன் -என்ன

கெடுவாய் -மலையோடு (வரை வுருவின் மா களிற்றை)பொரும் மல்லர் உண்டோ –
உபய விபூதி நாயகனாய்
சர்வ சக்தியாய் இருக்கிறவர் உடன்
அபலையான நீ எதிர் இடுகை யாவது என் என்று –
தோழிக்கு இவள் தன்னிலும் காட்டில் ரோஷம் கனத்து இருக்கையாலே
பிரணயிநிகள் உடன் செய்யும் அத்தை பிரபுக்களோடு செய்யக் கடவையோ -என்ன

(“நல்ல வென் தோழி! நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்?“ என்று
சொன்னவர்களைக் கேட்டதில்லையோ?
ப்ரணயிகளிடத்துச் செய்யத் தக்கதை ப்ரபுக்களிடத்துச் செய்யலாகுமோ?” என்று சொல்ல:)

அவர் பிரபுத்வமும் நாடாளும்படியும் என் கையில் படும் பாடு பாராய் –என்ன

இவள் அத்வாசாயம் இருந்தபடியால் முடியும் போல் இருந்தது –
பிரணய ரோஷத்தின் அளவிலேயாவது முடியாதபடி நோக்க வேணும் என்று பார்த்து
ஆஸ்ரிதர்க்கு அவன் முகம் கொடுக்கும் படி இது காண் என்று சொல்ல அமையும் -என்ன-

அவை எல்லாம் -அவனது அன்பு எல்லாம் -பகட்டு காண் –
நான் முடிகை தவிரேன் -என்கிறாள் –

பிரணியிநியான இவளை ஒழிய தோழிக்கு ரோஷம் தலை எடுக்கக் கூடுமோ என்னில்
வீத ராகனாய் சருகு இல்லை தின்று போந்த ஸ்ரீ வால்மீகி பகவான் பிராட்டியைக் கண்டு
ஹீநோ யாத நயா பிரபு -என்று (துஷ்க்ருதம் க்ருதவாந் ராமம் ஹீநோ யத3நயா ப்ரபு-செயற்கு அரிய கார்யம் அன்றோ உயிர் தரித்து இருக்கிறான் )
பெருமாள் நாடாளவும் ஆனை குதிரை கட்டவும் கற்றார் இத்தனை போக்கி
பிரணயித்வத்தில் புதியதுண்டிலர் ஆகாதே -என்றான் இறே –

முற்படத் தோழி-அவன் ஆஸ்ரிதர்க்கு முகம் கொடுத்த பிரகாரத்தைச் சொல்ல
அத்தை அனுபாஷித்து அவை எல்லாம் பகட்டுக் காண் என்கிறாள்

—————————————————-

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரை வுருவின் மா களிற்றைத் தோழீ எந்தன்
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே–28–

பதவுரை

தோழீ–வாராய் தோழியே!,
தென் இலங்கை-தென்னிலங்கையிலுள்ள
அரண்–கோட்டைகள்
சிதறி–அழிந்து
அவுணன் மாள–இராவணனும் முடியும்படியாக
சென்று–(ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றினையும் திரிந்து-(த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு–அரசர்கள் விளங்கா நின்ற
பாரதத்தை மாள–பாரத யுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த–ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை–மலை போன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்–என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்–பசலை நிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக் கொண்டு-அணைத்துக் கொண்டு
போகாமை வல்லேன் ஆய்-அப்பால் போக வொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி–அவரைப் பிரிந்து பட்ட வருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு-முகம் காணப் பெறாமையாலே அவனையும் என் எதிரே பட வைத்து
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த-என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்-எல்லாக் காலத்திலும்
நான்-நான்
நினைந்து-அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்-முடிந்து பிழைப்பேன்.

என் உயிர்ப் பாங்கியே
லங்கா நகரத்திலே தர்ச நீயமான கோட்டையை அழித்து
ராவணாசூரன் ,முடியும் படியாக
அந்நகரத்திலே பிரவேசித்து மூன்று லோகங்களையும் சஞ்சரித்து திருவடிகளாலே அளந்து
அரசர்கள் விளங்கா நின்றுள்ள பாரத சமரம் முடியும்படி
ஒரு தேரை சாரதியாய் நின்று நடத்தின மலை போலெ இருந்துள்ள திண்மையை யுடைய
பெரிய யானை போலே இருந்துள்ளவனை சமர்த்தையாய்க் கொண்டு என்னுடைய வை வர்ண்யத்தை யுடைத்தான
ஸ்தநங்கள் ஆகிற ஸ்தம்பத்திலே அவன் புறம்பு போகாதபடி சேர்த்துக் கொண்டு
அவனைப் பிரிந்து படும் கிலேசத்தை அவன் ஸந்நிதியிலே அடைந்து-முகம் காணப் பெறாமையாலே அவனையும் என் எதிரே பட வைத்து –
என்னுடைய சர்வ அவயவங்களும் என்னிடத்தே வந்து ஆனந்தத்தை அடையும்படியாக
சர்வ காலத்திலும் விஸ்லேஷ அசஹையான நான் அவரை நினைந்து அழிந்து விடுவேன் –

——————————————————

தென்னிலங்கை யரண் சிதறி –
மேல் வரை வுருவின் மா களிற்றை-என்கையாலே
யானையினுடைய வியாபாரமாக பேசுகிறாள்

இவ் வபதானங்களை எல்லாம் –
இலங்கையில் தர்ச நீயமான அரணைச் சிதறி –
அரணின் வலி இறே வீரர்களுக்கு தர்ச நீயமாக இருப்பது –

திருவடி பிராட்டியைத் தேடி இலங்கையில் சென்ற போது
இலங்கையின் அரணையும் ராவணனுடைய பலத்தையும் பார்த்து –
இவ் வரண் இருந்தபடியால் நான் புகுதல் என் தமப்பனாரான வாயு புகுதல்
செய்யும் இத்தனை ஒழிய வேறு ஒருவரால் புகுர ஒண்ணாது –
அது தன்னிலும் ராத்திரி புகுமது ஒழிய பகலிலே புகுர ஒண்ணாது ஆய்த்து-
இப்படிப் பட்ட தேசத்திலே ஸூகுமாரான ராஜ குமாரர்களைக் கொண்டு வரத் தேடா நின்றோம் என்று
திருவடி நெஞ்சு உளுக்கும் படி இறே அரண் இருந்தபடி –
இதுக்கு அத்யஷனானவன் தன்னுடைய பலம் இருந்தபடி என் என்னில்
வெளி நிலத்திலே எதிரிகளைத் தனியே ஜெயிக்க வல்லவனாய் இருந்தது –

சிதறி
ஓர் அரணை மணல் கொட்டகத்தை சிதறினால் போலே அநாயாசேன அழித்து –
ஒரு கல்லும் மரமும் ஆகில் இறே இடறி என்பது –
பெருமாள் உடைய வீரத்தை கேட்டிருந்த மாத்ரத்தை கொண்டு
யதாஸை கதமம் பஸி – என்று(பலவந்தச்ச சூரர் — யதா ஸைகதமம் பஸி-மணல் வீடு அழிவது போல் )
ஓர் அரணை மணல் கொட்டகத்தை அழிக்குமா போலே காண்
பெருமாள் கையில் நீயும் உன் பரிகரமும் அழி உண்ணப் போகிற படி என்றார்
என்று இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்

(வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த விருத்தம் –39-
கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விஸ்வகர்மாவாலே சமைக்கப்
பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –
யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் -)

அவுணன் மாளச் சென்று –
ராவணன் முடியும்படி சென்று –
சென்ற செலவிலே ம்ருத்தன் ஆனான்
பின்னைப் பிணம் வெட்டி வாள் முறித்த இத்தனை யாய்த்து –

அதாகிறது –
ஒரு மத ஹஸ்தி வழி போகா நின்றால்-முன் கண்டவற்றைக் கையாலும் காலாலும்
அழித்துக் கொண்டு போமா போலே
கர தூஷண ப்ரப்ருதிகளை நிரசித்து –
தன்னை வாலிலே கட்டிக் கொண்டு திரிந்த வாலியை நிரசித்து –
கடல்கரையிலே சென்றுவிட்டு -இலங்கைக்கு அரணான கடலை அரண் செய்து
இலங்கையைச் சென்று அடை மதிள் படுதினபடியைக் கண்ட போதே -ம்ருத்னன் ஆனான் என்கை –

ஒரு பிரணயிநிக்காக அவன் பண்ணின வியாபாரம் இது வன்றோ -என்ன –
அவன் பரம பிரணயி அன்றோ –
அபலைகளாய் இருப்பார் அகப்படுக்கைக்காச் செய்தது ஒன்றாகையாலே
அதுவும் பகட்டு காண் -என்கிறாள்

உலகம் மூன்றினையும் திரிந்து –
சதுர தச புவனத்தையும் அளந்து –
ஒரு மத ஹஸ்தி ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
எல்லார் தலைகளிலும் ஸ்வரைமாக திருவடிகளை வைத்த படியாலே –
திரிந்து -என்கிறது –

பிரணயிநிக்கு முகம் கொடுக்கை அன்றிக்கே
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலும்
விமுகராய் இருப்பார் தலைகளிலும் அகப்படத் திருவடிகளை வைக்கும் ஸ்வபாவன் அன்றோ -என்ன –

அவன் விசேஷஞ்ஞன் காண்
விமுகர் தலையில் திருவடிகளை வைக்குமது ஒழிய
எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய-என்று
இருப்பார்க்கு முகம் கொடுப்பவன் அன்று காண் -என்கிறாள்-

(“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணா வுன் கோலப் பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.)

ஒர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த –
ஓர் தேரால்
எதிரிகள் கிருஷ்ணன் ஆயுதம் எடுக்க வேண்டா -என்ற இத்தனை ஒழிய
தூது போதல்
சாரத்தியம் பண்ணுதல் -செய்ய வேண்டா என்றிலர்களே –
ஆகையால் சாரதியாய் நின்று
ஒரு தேராலே அழியச் செய்தான் –

இன்னத்தைக் கொண்டு இன்ன கார்யம் செய்யக் கடவோம் என்கிற நியதி இல்லை இறே –
கொல்லா மாக்கோல் கொலை செய்து -என்னக் கடவது இறே –

(கொல்லா மாக்கோல்* கொலை செய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர் வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.)

மன்னிலங்கு பாரதத்தை –
அதிரதி மகா ரதரான பீஷ்மாதி ராஜ லோகங்கள்
முன் தூசியிலே சஞ்சரிக்கும் படியான பாரதத்தை –

மாள ஊர்ந்த
பிணமும் கண் காணாத படியாக தேரை நடத்தின
ஆடிய மா நெடும் தேர் படை நீர் எழச் செற்ற பிரான் -என்கிறபடியே
தேர் காலிலே துகை உண்டு
தூளியாய் போம்படி யாய்த்து தேரை நடத்தின படி –

(ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்
ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே)

தன்னை ஒழியச் செல்லாது இருப்பாள் ஒருத்தி உடைய குழல் முடிப்பிக்கைக்காக –
தன்னை அழியா மாறி வ்யாபரிப்பதே -என்று
நாட்டாரை பகட்டுக்கைக்காக செய்தான் இத்தனை
தன்னை ஒழியச் செல்லாதார் குழலை விரிப்பிக்குமவன் காண் -என்கிறாள்-

(“பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழன்மன்னர் கலங்கச்
சங்கம் வாய்வைத்தான்“ என்கிறபடியே த்ரௌபதியின் குழலை முடிப்பிக்கைக்காக அவர் பண்ணின வியாபாரமன்றோ வென்று தோழி சொல்ல;
ஒருத்திக்காக இப்படி காரியஞ் செய்கிறவனென்று நாட்டாரைப் பகட்டுகைக்காகச் செய்தாரித்தனை;
தம்மையே புகலாக நம்பியிருப்பாருடைய கூந்தலை விரிப்பிக்குமவர் காண் என்று சொல்லுதல் இங்கு உள்ளுறை.)

வரை வுருவின் மா களிற்றைத் –
மலை போலே இருந்துள்ள திண்மையையும்
செருக்கையும் உடைத்தான -ஆனை போலே இருந்துள்ளவனை –
ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் திண்ணியனாய் இருக்கையும்
ஆஸ்ரிதர் கார்யம் செய்த ப்ரீதியாலே வந்த செருக்கையும் -உடையவனை –

தோழி -என்கையாலே
அவன் படும்பாடு காண விறே புகுகிறாய் –
அங்கன் இன்றியே
ஏகம் துக்கம் ஸூகம் ஜனௌ-என்று இருக்கிறவள் ஆகையாலே
நீ விலக்காயாகில்-அவன் படும் பாடு பாராய் -எண்ணுதல் –

தோழீ –
நீ விலக்காது ஒழிய வேணும் –

எந்தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு –
என் கையில் பிரஹ்மாஸ்திரம் இருக்க
ஜெயிக்க ஒண்ணாத நிலம் உண்டோ –

எந்தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில்-
நாட்டார் முலை எழுந்தால் போலேயோ -என் முலை எழுந்த படி –
அவன் முலை எழுந்தால் போலேயோ என் முலை எழுந்தபடி –

பொன்னிலங்கு முலை –
அவனுடைய பும்ஸ்த்வம் போலேயோ என்னுடைய ஸ்த்ரீத்வம் இருப்பது –
வ்யதிரேகத்தில் விவர்ணமாம் படி யன்றோ என்னுடைய ஸ்த்ரீத்வம் –
மின்னிலங்கு திருவுரு என்று -வ்யதிரேகத்தில் வடிவு ஏக ரூபமாய் இருக்கும்படி அன்றோ
அவருடைய பும்ஸ்த்வம் இருப்பது –
சதைக ரூப ரூபமான வடிவை உடையானுக்கு வாய் உண்டோ –

(அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே.)

முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு –
முலையாகிற ஸ்தம்பத்தோடு சேர்த்துக் கொண்டு –
ஸ்தம்பத்தோடே சேர்க்கை யாவது -தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்கை –

போகாமல் -பூட்டிக் கொண்டு –
என் பக்கல் முகம் பெறாமையாலே போகத் தேடும் போது
என் ஆற்றாமையை அடங்க ஆவிஷ்கரிகக் கடவேன் –

முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு –
வரை வுருவின் மா களிறு ஆகையாலே
ஒரு முலையிலே சேர்க்க வேணும் – இறே –

(என்றன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொ்ணடு =
என் கையில் ப்ரஹ்மாஸ்த்ரமிருக்க எனக்கு வெல்ல வொண்ணாத நிலமுண்டோ?
எம்பெருமானாகிற அந்த மத யானை என்னுடைய முலையாகிற ஸ்தம்பத்தோடே சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டிவிடுவேன்;
முகங்கொடுத்துப் பேச மாட்டேன், வெண்ணெய் திருடின கண்ண பிரானை யசோதை உரலிலே கட்டிப் போட்டு வைத்தாப் போலே,
என்னைப் படு கொலை யடித்த பெருமானை முலைக் குவட்டிலே கட்டிப் போடடு வைப்பேன்;
இதுவாயிற்று அவனுக்கு நான் செய்யும் பெரிய சிக்ஷ. என்னிடத்திலே முகம் பெறாமையாலே அவன் ஓடிப் போகத் தேடுவேன்;
(போகாமை முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு)
“குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு, அற்றகுற்ற மவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே“
என்கிறபடியே அவனாலும் நெகிழ வொண்ணாதபடி கட்டிப் போட்டு வைப்பேன்.)

வல்லேனாய்-
இது ஒன்றுமே குறை -என்கிறாள் –
என் மனஸ்ஸூ சஹகரிக்கப் பெற்றில்
அவன் வந்து முகம் காட்டினால் -நெஞ்சு மேல் விழாது ஒழியப் பெறில் –
நீயும் நிஷேதியாதே சஹகரிக்கப் பெறில் –
நெஞ்சிலும் காட்டில் அந்தரங்கை இறே தோழி-

புலவி எய்தி –
அவனைப் பிரிந்து படும் கிலேசத்தை எல்லாம்
அவன் சந்நிதியிலே படக் கடவேன் -என்கிறாள் –

அதவா
புலவி எய்தி –
அவனைப் பிரிந்து நாம் பட்ட பாடு இத்தனையும்
அவன் தான் என் சந்நிதியில் படும்படி பண்ணக் கடவேன் –
என்கிறாள்-ஆகவுமாம் –

என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த –
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்கு ஆயிராதபடி –

என்னிலங்கம் எல்லாம் –
இது ஒரு கண் இருந்தபடி -என்
இது ஒரு முறுவல் இருந்தபடி -என்
இது ஒரு முலை இருந்த படி -என்
என்றால் போலே (ஞான பக்தி வைராக்யங்கள் எல்லாம் )அவன் கொண்டாடும்படி
அவனுக்கு ஆதரணீயமான -என்னுடைய சர்வ அவயவங்களும் –

இன்பம் எய்த –
ஷாம காலத்தில் குடும்பியாய் இருக்குமவன்
குடும்பத்தின் உடைய பசியும் தன்னுடைய பசியும்
பொறுக்க மாட்டாமையாலே
ச குடும்பமாய் ஆற்றிலே புக்கு முடியும் என்னுமா போலே
என் அவயவங்களுடன் முடியக் கடவேன்-

வந்து
கன்று வேறு -தாய் வேறாக்கும் விஷயம் இறே –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கைகேயியையும் போலே ஆகையாலே
தனித் தனியே சேதன சமாதியாலே அவ் விஷயத்திலே
பிரவணமாய் இறே இருப்பது –
அவை அங்கும் நின்றும் மீண்டு ஆஸ்ரய பூதையான என்னோடு கூட முடிக்கையிலே உத்யோகிக்கை

இன்பம் எய்த
முடியக் கடவேன் என்னுமத்தை –இன்பம் எய்த -என்கிறாள் –
முடிகை தான் பரமபத ஸ்தாநீயமாம் படியான
ஆற்றாமையாலே

எப்பொழுதும் –
எவ் வஸ்தையிலும் –

அவன் வாராத படியாலே சொல்லுகிறாய் –
வந்து முகம் காட்டினவாறே
மை வண்ணம் -இத்யாதியில் சொல்லுகிறபடி
அவன் சௌந்த்ர்யத்தைக் கண்டவாறே மேல் விழுகிறாய் என்ன
அத் தசையிலும் முடியக் கடவேன்—அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்கக் கடவேன்

எப்பொழுதும்
சேஷித்வத்தால் வந்த பிராப்தியைக் காட்டிலும்
முடியக் கடவேன்-

நினைந்து உருகி இருப்பன் நானே
நினைத்த மாத்ரத்திலே அழிந்து இருப்பன் –
அவன் வந்து சந்நிஹிதனாய்
தன் செல்லாமையைக் காட்டினால்
அழிகை அன்றியே
மநோ ரதித்த மாத்ரத்திலே அழியும்படி ஆய்த்து இவளுடைய
சௌந்தர்யமும் சௌகுமார்யமும் இருப்பது –

நம் ஆழ்வாருக்கு பிரணய ரோஷம் தலை எடுத்த போது
அவன் வந்து முகம் காட்டின அளவிலும்
தோழியும் தானுமாக அவனுக்கு புகுர ஒண்ணாத படி
க்ரமத்தாலே தன் செல்லாமையைக் காட்டி
பிரணய ரோஷத்தை அழித்து கிட்ட வேண்டிற்று –
இவர் நினைப்பதுக்கு முன்னே அழிந்தார் –

நானே –
புறம்பு கண்டறியோமே -என்ன
என் பிரகிருதி இருக்கும்படி இது என்கிறாள் –

அல்லாதார் ஒன்றை சங்கல்ப்பித்தால்
அத்தை முடிய நடத்தவும் வல்லர்களாய் இருப்பார்கள் –
சங்கல்ப்பித்த போதே அழியும்படி ஆய்த்து நான் இருப்பது –

(இப் பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு.
இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்த வவா‘ என்கிற பரம பக்தி முதிர்ந்தமை சொன்னபடி.)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–27–செங்கால மட நாராய் இன்றே சென்று–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 24, 2013

அவதாரிகை –

கீழ் பாட்டில்
வண்டுகளைத் தூது விட்டாள் –
அது சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் அளவும்
தரித்து இருக்க சக்தி இல்லாமையாலே
ஒரு நாரையைத் தூது விடுகிறாள் –

யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹூந் யயுதா நிச-திஷூ சர்வாஸூ மார்கந்தே -என்றும் பிராட்டியைத் தேடுகைக்காக
ஸ்ரீ வானர வீரரை அடைய ஏவினால் போலே
இவரும் கண்டவற்றை அடைய ஏவுகிறாள்

ராமாவதாரத்தில் வானர ஜாதி ஸ்லாக்கியமானால் போலே
காணும் ஆழ்வார்களைத் தோற்றி பஷி ஜாதி ஸ்லாக்கியமானபடி –

———————————————

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-

பதவுரை

செம் கால–சிவந்த கால்களை யுடைய
மட நாராய்–அழகிய நாரைப் பறவையே!
இன்றே சென்று-இன்றைக்கே புறப்பட்டுப் போய்
திருக் கண்ணபுரம் புக்கு–திருக் கண்ணபுரத்தில் புகுந்து
என் செங்கண் மாலுக்கு-செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும்
என் துணைவர்க்கு–எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே
என் காதல்–எனது விருப்பத்தை
உரைத்தி ஆகில்–சொல்லுவாயாகில்
எமக்கு-(அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு
இது ஒப்பது இன்பம் இல்லை–இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை;
(இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;)

சிவந்த கால்களையும் மடப்பத்தையுமுடைய நாரையே
இன்றைக்கே போய்
திருக் கண்ணபுரத்தில் பிரவேசித்து
என்னுடைய புண்டரீகாக்ஷராய்
ஆஸ்ரித வியாமுக்தராய்
எனக்கு வல்லபரானவர் இடத்திலே
எனக்கு அவர் பக்கலிலே உண்டான வ்யாமோஹத்தைச் சொல்லுவாயாகில்
அவரைப் பிரியில் தரியாத எமக்கு இதுக்கு ஸத்ருசமான ஸூகம் இல்லை
நீ உள்ள காலம் எல்லாம் இந்த பரப்பை யுடைத்தான சோலை சூழ்ந்த காட்டை எல்லாம்
உனக்கே உரித்தாம் படி செய்து நீர் நிலங்களில் உள்ள மத்ஸ்யங்களை எல்லாம் மேல் விழுந்து புஜிக்கும்படியாக
விருப்பத்தோடே கொடுப்பேன்
தருவேனே யாகில் உன் மனையாட்டியும் நீயும் இவ்விடத்தில் வந்து ஸந்துஷ்ட சித்தராய் இருந்து
இந்த மஹா பிருத்வியிலே அனுகூல ஸூகத்தை அடையலாம் –

———————————————————

செங்கால மட நாராய் –
சம்ஸ்லேஷ தசையில் தன் காலை அவன் கொண்டாட கண்டு இருந்தவள் ஆகையால்
அல்லாத அவயவங்களை விட்டு காலைக் கொண்டாடுகிறாள் –
இது ஒரு காலும்
சிவப்பும்
இருந்தபடி என் -என்கிறாள் –

ஒரு சிவந்த காலோடு வாசனை உண்டு போலே காணும் இவளுக்கு –
அபிமதன் உடைய கால் போலே இருந்ததீ -உன் காலும் -என்கிறாள் –

கரு முகை மாலையை சும்மாடு கொண்டாப் போலே
தூது விடுகை மிகையாய்
சதா தர்சனம் பண்ணலாய் இருந்ததீ –உன் கால் இருந்த படி -என்கிறாள் –

(ஆச்சார்யர் திருவடியையே உபேயமாகக் கொள்ளாமல் உபாயமாக்குவதே)

(அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் நீ தான் தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே-69-)

அவன் காலோடு ஒக்கும் என்னும் இடம் தப்பச் சொன்னேன் –
தன் காலைத் தரும் இத்தனை இறே அவன் செய்வது
அவன் காலையும் தந்து உன்னையும் தரும் ஏற்றம் உண்டே உன் காலுக்கு –
நீயும் ஸூலபனாய் இருந்து
அவனையும் ஸூலபனாக்கும் ஏற்றம் உண்டே உனக்கு –

மட நாராய் –
அறிவு கெட்ட நாராய்
மடம் -என்று இங்கு அறிவின்மையை சொல்கிறது –

ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவள் இங்கன் சொல்லக் கடவளோ என்னில்
நிந்தா ஸ்துதி போலே இதுவும் கொண்டாடத்தில் ஒன்றாய் இருக்கிறது
நிந்தா ஸ்துதி யாகிறது -ஆபாத ப்ரதீதியிலே நிந்தை போலேயே
விழுக் காட்டில் ஸ்தோத்ரமாய் இறே இருப்பது

சம்ஸ்லேஷ தசையில்– (அத்யந்த பக்தனுக்கு )ந சாஸ்திரம் நைவ சக்கரம் -என்கிறபடியே
அறிவழிந்து முறை கெட பரிமாறுகை இறே
பிரணயித்வத்தில் உனக்கு உண்டான கௌசலம் -என்கிறாள்-

முறையிலே பரிமாறில் ஸ்வரூபத்தை நோக்கிற்றோம் இத்தனை ஒழிய
பிரணயியன்றிக்கே ஒழியும் இறே –
என் இழவு தீரும்படியான பூர்த்தி உனக்கு உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -(மடம் -அனைத்துக்கும் உப லக்ஷணம் )

நாராய் –
என்கிற யுக்தி -அம்மே -என்பாரைப் போலே இருக்கிறது ஆய்த்து –
வழி பறி உண்கிற தசையிலே தாய் முகத்திலே விழித்தால் போலே யாய்த்து

அவனைப் பிரிந்து நோவு படுகிற தசையிலே இதின் சந்நிதி உண்டான இது –
ஸபர்யா –பம்பா தீரே ஹநுமதா சங்கதா வானரேண ஹ -என்று பிராட்டியைப் பிரிந்து
ஸ்மாரக பதார்த்தங்களின் கையிலே
பெருமாள் நோவு படுகிற தசையிலே திருவடி வந்து சந்நிஹிதனான இது
வழி பறி வுண்ட தசையிலே தாய் முகத்திலே விழித்தால் போலே இருந்தது இறே பெருமாளுக்கு –

நாராய்
என்ற போதை யார்த்தி -உச்ச ஸ்வரத்தாலே -இசையிலே இறே தோற்றுவது –
ராஜ மகிஷி யாகையாலே கைக்கூலி தந்து கார்யம் செய்ய வேண்டும்படி அன்றோ
என்னுடைய ஏற்றம் இருப்பது –

நீ அபேஷிக்க வேணுமோ -கார்யத்தைச் சொல்லலாகாதோ -என்னச் சொல்லுகிறாள் –
இன்றே சென்று –
நாளை செய்கிறோம் என்னுமது அன்று
அவன் படியைப் பார்த்தாலும் நாளை செய்யுமது அன்று –
என் படியைப் பார்த்தாலும் நாளை செய்யுமது அன்று
ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும் படி யாய்த்து அவன் படி –
ஜலான் மத்ஸ்யா விவோத்தருதௌ –என்னும்படி யாய்த்து என் படி –

(ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷணாம் -சுந்தர 66-10-)

(ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்தருதௌ-அயோத்யா -53-31-)

(ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷணாம்-அந்த ஸீதையைப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்ற அவர் படியைப் பார்த்தாலும்கால தாமதம் செய்யலாகாது;
“ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ – முஹூர்த்த மபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ.“
என்னத் தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் செய்யலாகாது. இப்போதே புறப்படவேணும்.

திருக் கண்ணபுரம் புக்கு –
ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமா போலே அன்று காணும்
இவர்க்கு திருக் கண்ணபுரம் என்றால் இருக்கும் படி –
அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ் ஊரில் உண்டான பாவ பந்தம் –

நம்மாழ்வார் திருத்தொலை வில்லி மங்கலம் என்னுமா போலேயும் -அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னுமா போலேயும்
பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னுமா போலேயும்
சோமாசி யாண்டான் -எம்பெருமானார் -என்னுமா போலேயும் –
திரு நாமங்களைச் சொல்லும் போது இவர் ஆதாரம் –

திருக் கண்ணபுரம் புக்கு –
திருவழுந்தூரில் தூது விட்டாள் ஆகில் பின்பும் அங்கு விடுமது ஒழிய
இங்கே விடுவான் என் என்னில் –
திருவழுந்தூரில் -அவன் தரிக்க மாட்டான் –
வண்டும் தானும் அரை குலைய தலை குலைய
எதிரே வந்து ஒரு பயணம் புகா நிற்கும் –
அங்கே செல்லுங்கோள் என்கிறாள்-

என் செங்கண் மாலுக்கு
என் மாலுக்கு
உபய விபூதியும் தாம் இட்ட வழக்காய் இருக்கிறவர் –
நான் இட்ட வழக்காம் படி என் அபிமானத்தே அடங்கி இருக்கிறவருக்கு

செங்கண் மாலுக்கு
கண் அழகைக் காட்டி என்னை ஜிதம் என்னப் பண்ணி
தன் அபிமானத்தே இட்டு வைத்தவருக்கு

செங்கண் மாலுக்கு
அநித்ரஸ் சததாம் ராம (ஸூக்தோபி நர உத்தம சீதேபி மதுரா வாணீம் )- என்கிறபடியே
என்னைப் பிரிகையாலே அவருக்கு உறக்கம் இல்லை –
அத்தாலே கண் குதறிச் சிவந்து இருக்கும்
அது உங்களுக்கு அடையாளம் -என்கிறாள் -ஆகவுமாம்

(“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே“
என்கிறபடியே என்னைப் பிச்சேற்றின கண்களே அவரைக் கோட் சொல்லித் தருமே
என்னைப் பிரிந்திருக்கையாலே அவர்க்கு உறக்கம் இராது; அதனாலும் கண்கள் குதறிச் சிவந்திருக்கும்;
அந்த அடையாளங்கொண்ட அவரைக் கண்டு பிடித்துக் கொள்ளலா மென்கிறாளாயிற்று.)

மாலுக்கு
பெரும் பித்தருக்கு –
தம்முடைய பித்தைக் காட்டி என்னை பிச்சேற்றினவருக்கு
பிச்சேறி இருக்கும் அத்தனை இறே இத் தலைக்கு உள்ளது –
பிச்சேறி இருக்கையும்
எதிர் தலையை பிச்சேற்றுகையும்
அத் தலைக்கு இறே உள்ளது –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே –

(மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை* 
ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?* 
மேலால் பரந்த வெயில்காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்* 
மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*     )
என் காதல்-
தம்முடைய காதல் போல் அன்று என்று சொல்லுங்கோள்-
மின்னிலங்கு திருவுருவு என்று -உடம்பு குறி அழியாத படி அன்றோ நீர் காதல் பண்ணிற்று –
பொங்கார் மென்னிளம் கொங்கை பொன்னே பூக்கும்படி அன்றோ அவள் காதல் பண்ணிற்று(17-பாசுரம்) என்னுங்கோள் –

என் காதல்
யா ப்ரீதிர் அவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயினி (ஸ்ரீ விஷ்ணு புராணம் )- என்கிறபடியே நாட்டார் காதல் போல் அன்று –
முக்தர் காதல் போல் அன்று காணும் இவளுடைய காதல்
ஞானம் பிறந்தவாறே த்யாஜ்யமான காதல் இறே சம்சாரிகளது –
ஸூக ஹேதுவான காதல் இறே முக்தரது –

(‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.)

(மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என் காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை,
நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம்
இங்கு அநுஸந்திக்கத்தக்கது.)

என் துணைவர்க்கு
எனக்கு அவர்ஜநீய பந்துவாய் இருக்குமவர்க்கு –
எவ் வவஸ்தையிலும் எனக்கு துணையாய் இருக்குமவர்க்கு சொல்லுங்கோள்
விமுகமான தசையிலே சத்தையை நோக்கி
பின்பு ஆபிமுக்கியத்தை பிறப்பித்து
சம்ஸ்லேஷித்து பிரிந்த பின்பும் சத்தை கிடக்கும் படி இறே
அவர் துணை இருக்கும்படி

என் துணைவர்க்கு-
இவ் வாற்றாமையை பரிஹரிக்கும் அவர்க்குச் சொல்லுங்கோள்

(“எருத்துக் கொடி யுடையானும் பிரமனுமிந்திரனும் மற்று, மொருத்தருமிப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“.)

உரைத்தி யாகில்-
சொல்லுவுதி யாகில் –

ஆகில் –
கடகரை இரக்குமது ஒழிய நியமிக்க பிராப்தி இல்லை இறே-
அத்தாலே -திரு உள்ளம் ஆகில் -என்கிறாள் –

உரைத்தி யாகில்-
அவர் அழகிலே கால் தாழ்ந்து
போன கார்யத்தை மறவாதே
என் தசையை அறிவிப்புதி யாகில் –

உரைத்தி –
வாசா தர்மம் அவாப்நுஹி–(ஸூந்தர காண்டம் உயிருடன் வாழும் என்னை பெருமாள் மதிக்கும் படி வார்த்தை சொல்ல வேண்டும் ) -என்கிறாள் –
உனக்கு ஒரு வார்த்தை -நான் பெறுகிறது சத்தை -என்கிறாள் –

இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை-
எனக்கு இத்தோடு ஒத்த பிரியம் இல்லை –
நீ உரைக்கை யாகிற இதுக்கு மேற்பட்ட ஸூகம் இல்லை –
அவனோடு சம்ஸ்லேஷித்தால் அன்றோ ஸூக ஸித்தி உள்ளது –

அறிவித்த மாத்ரத்திலே ஸூக ஸித்தி உண்டாமோ -என்னில் –
அறிவிக்குமதுவே -விளம்பம் –
வரவு தப்பாது -என்று இருக்கையால் -சொல்லுகிறாள் –

நாளும்–பைம் கானம் ஈதெல்லாம் உனதேயாகப்-
எனக்கு உபகரித்து விடும் அளவு போராது –
உபகார ஸ்ம்ர்தியாலே -நான் பண்ணும் கிஞ்சித் காரத்தையும் அங்கீ கரிக்க வேணும் -என்கிறாள் –

நாளும் -இத்யாதி –
ஆசார்யன் ஒருக்கால் உபகரித்து விட்டால்
சிஷ்யன் யாவதாயுஷம் அனுவர்த்திக்கக் கடவன் -என்கை-

பைம் கானமீது எல்லாம் –
தன் அபிமானத்தில் கிடந்தத்தைக் கொடுக்கும் அத்தனை இறே செய்யலாவது –
பரப்பை உடைத்தான கடல் கரை சோலை அடைய –
பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் ஆகையால்
கடல் கரையில் தான் இருக்கையாலே –
பைம் கானமீதெல்லாம் -என்கிறாள் –

ஈ தெல்லாம் –
தன் கண்ணால் கண்ட பிரதேசத்தை அடையக் கொடுக்கிறாள் –
என் விபூதி அடங்கலும் தருவன் -என்கிறாள் –
இது உபய விபூதிக்கும் உப லஷணம்
பொன் உலகு ஆளீரோ புவன முழுது ஆளீரோ -என்னக் கடவது இறே

(பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-)

உனதேயாக –
எனக்கும் உனக்கும் பொதுவாக அன்றியே
உனக்கே சேஷமாம்படி தருவன்-

பழன மீன் –
நீர் மாறாதே இருக்கையாலே
மத்ஸ்யங்களும் ஆனைக் கன்று போலே இருக்கும் இறே –
யதன்னம் புருஷோ பவதி ததன்யாஸ் தஸ்ய தேவதா -(அயோத்யா-இலந்தை பழத்தால் செய்த அடை பெருமாள் தந்தைக்கு கொடுத்து )என்கிறபடியே
தனக்கு சித்தித்த அம்சத்தை கொடுக்கலாவது இறே அவர்களுக்கு
கடகருக்கு அவர்கள் உகந்தது தேடிக் கொடுக்க வேணும் என்கை –

(“பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன்“ என்றதன் உள்ளூறை பொருளாவது –
நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசார்யனுக்கு உகப்பான பொருளைத் தந்து கிஞ்சித்தகரிக்க வேணுமென்பதாம்.)

கவர்ந்து உண்ணத் தருவன் –
மேல் விழுந்து புஜிக்கும் படியாக சாதரமாக தருவன் –

தந்தால் இங்கே வந்து-
உங்கள் பூர்த்தியாலே நான் பண்ணின கிஞ்சித் காரத்தை ஸ்வீகரித்தி கோளாய்ப் போகை அன்றிக்கே
என் சந்நிதியிலே புஜிக்க வேணும் –

வந்து-
அவனைப் போலே உபகரித்து பின்பு வாராது ஒழியாதே
நான் இருந்த இடத்தே வந்து புஜிக்க வேண்டும்

இனிது இருந்து உன் பெடையும் நீயும்-
உன் பெடையும் நீயும் இனிது இருந்து –
ஏகாகியாய் வந்து இருக்க ஒண்ணாது –
அபிமத விஷயத்தோடு கூட வந்து இருக்க வேணும் –
அது தனக்குத் தேட்டம் இறே –

இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே-
அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்திலே
அந்தமில் பேரின்பத்தை பிராபிக்கலாம் –
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்கிறபடியே வாழப் பெறலாம் –

(நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-)

வைஷ்ணவர்கள் சரீர சம்பந்த உக்தர் ஆகையாலே
அபேஷித தசைகளிலே அபேஷிதங்களைக் கொடுத்து வர்த்திக்கும்
கார்ஹ்யஸ்த்யத்தால் வந்த ஏற்றம் இல்லை இறே -நித்ய விபூதியில்-

(வையத்து வாழ்வீர்காள் -தெள்ளியார் அனுபவம் இங்கே தானே-)

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–26 –தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 24, 2013

அவதாரிகை –

அவன் இவளுடைய ஆற்றாமை ஸ்வ கிருஷியின் பலம் ஆகையாலே
அதிலே முகம் மலர்ந்து கடக்க நிற்கையாலும்
தாயும் ஹிதம் சொல்லும் அளவு அல்லாமையாலே ஸ்லாகித்துக் கடக்க நிற்க்கையாலும்
தோழி -இவ்வளவில் இவளை ஆஸ்வசிப்பிக்கும் விரகு ஏதோ –
என்று பூர்வ வ்ருத்தத்தைக் கேட்க
வ்ருத்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து –
அத்தை இரண்டு பாட்டாலே இவளுக்கு சொன்னாள் –

பின்பும் அங்கே ஓர் அவகாசம் கண்டு இப்படி அவன் உனக்கு பவ்யனாய் இருந்தால் –
பிரிகிற போது போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ என்ன

அதுவும் சொன்னேன் –
அவன் பர ப்ரேரிதனாய் போகையாலே இது கார்யகர மாய்த்து இல்லை என்கிறாள் -மூன்றாம் பாட்டிலே –

கொண்டு போனவன் தன்னை நியமிக்க மாட்டிற்று இல்லையோ என்ன

ஒருவர் இருவரோ பரிகரம் எல்லாம் வந்து சூழ்ந்து கொண்டது -என்றாள் –
நாலாம் பாட்டிலே –அது தன்னை நியமித்து விட்டாள் –

ஐஞ்சாம் பாட்டிலே – சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து
அத் தலையில் உள்ளதை நேராகக் காட்டி
இத் தலையில் உள்ளத்தை நேராக அபஹரித்துக் கொண்டு போகிறவர்
என் சத்தை கிடக்க வேணும் என்று ஊரின் பேரைச் சொல்லிப் போந்தான் -என்றாள் –

ஆறாம் பாட்டிலே
ப்ரஸ்னம் இல்லாமையாலே -பிரதி வசனம் இல்லையே
பழைய ஆற்றாமை தலை யெடுத்து
நம்முடைய ஆற்றாமை அறியாமையாலே வாராது ஒழிகிறான் -இத்தனை
அத்தை அறிவிக்கவே சர்வதா வரும் என்று பார்த்து
சில வண்டுகளைத் தூது விடுகிறாள் –

தன்னுடைய பந்து வர்க்கம் தனக்கு முன்னே தரைப்பட்டு கிடைக்கையாலும்
சேதனர் தூது போன இடத்தில் அது கார்ய கரமாகக் காணாமையாலும்
ராமாவதாரத்தில் திர்யக்குகள் தூது போன விடத்தில் அது கார்யகரமாக காண்கையாலும்-
திர்யக்குகளைத் தூது போக விடுகிறாள் –

பரம சேதனன் கிருஷ்ணன் தூது போன விடத்தில் ஊர்ப் பூசல் வந்தான் இத்தனை இறே செய்தது –
ஆனால் குரங்கைத் தூது விடாதே வண்டைத் தூது விடுவான் என் என்னில்
அங்கே பெண் தூதன் ஆகையாலே –
விரக்தனுமாய்
சமர்த்தனுமாய்
இருப்பான் ஒருவன் தூது போக வேண்டிற்று –

விஸ்லேஷத்தில் ஆற்றாமை அறிவாராய் போக விட வேண்டுகையாலும்
இவை தன்னுடைய சந்நிதியிலேயே கலந்து ஸூகித்து இருக்கக் காண்கையாலும்
இவற்றைத் தூது விடுகிறாள்

ஆனால் கலவியிலே பிரவணமாய் இருக்கிற இவை போகக் கூடுமோ என்னில் –
ஆத்ம சாம்யத்தாலே சொல்லுகிறாள் –
தானும் அவனும் சம்ஸ்லேஷிக்கும் அளவில் சில துக்கிகள் கூடினால்
அவர்கள் கார்யத்தை முடித்த பின்பு இறே தங்கள் போகத்தில் இழிவது –

(அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -ச லஷ்மணா ந ஸூ ப்ரதிஜ்ஜயாம்-ரக்ஷண விரதம் கைவிடேன் )

பிரதமத்தில் வண்டுகளைக் கொண்டாடுகிறாள் -தனக்கு இரங்கி கார்யம் செய்கைக்காக –
கடகரை ஸ்துத்யராகச் சொல்லக் கடவது இறே –

(ப்ரத்யஷே குரவ ஸ்துத்யா -ப்ரோஷே மித்ர பாந்துவா -கார்யாந்தே தாஸ்ய -ந கதாசன புத்ரா ச)

(உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்“ என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும்,
“போந்தெ தென்னெஞ் சென்னும் பொன்வண்டு உனதடிப்போதிலொண்சீராந் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி“ என்கிறபடியே
ஆசார்ய பாதாரவிந்த ஸேவையாகிற மதுவைப் பருகுதலையே விரதமாகவுடைத்தாகியும்,
உயர்கதிக்கு ஸாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்ம ஜ்ஞானங்களை யுடையராகியும் ஸார க்ராஹிகளாயுமிருக்கின்ற
ஸ்ரீவைஷ்ணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம்.
அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணர்களை நோக்கி ‘நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷகாரஞ்செய்து
அடியேனையும் உம்மைப் போலே பகவதநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ள வேணும்‘ என்று
பிரார்த்தித்தல் இதற்கு உள்ளூறை பொருள்.
வேதம் வல்லர்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது ஸம்ப்ரதாயமென்க.)

——————————————————————–

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26-

பதவுரை

தேன் மருவு-தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற
பொழில் இடத்து-சோலைப் புறத்திலே
மலர்ந்த போது-மலர்ந்த புஷ்பங்களிலுண்டான
தேன் அதனை–தேனை
வாய் மடுத்து–பானம் பண்ணி
உன் பெடையும் நீயும்–உனது பேடையும் நீயும்
பூ மருவி–புஷ்பத்திலே பொருந்தி
இனிது அமர்ந்து–இனிமையாகப் புணர்ந்து
பொறியின் ஆர்ந்த–மேனியிற் புகர் அதிகரிக்கப் பெற்ற
அறுகால சிறு வண்டே–ஆறு கால்களை யுடைய சிறிய வண்டே!
உன்னை தொழுதேன்–உன்னை வணங்கி யாசிக்கின்றேன்;
ஆநிரை–பசுக் கூட்டங்களை
மருவி மேய்த்த–விரும்பி மேய்த்தவனும்-கோ சகன் அன்றோ இங்கு –
அமரர் கோமான்-நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்-தேவாதி ராஜனாகவும் இங்கு
அணி அழுந்தூர் நின்றானுக்கு–அழகிய திருவழுந்தூரிலே நிற்பவனுமான எம்பெருமான் பக்கலிலே
இன்றே நீ சென்று-இப்போதே நீ போய்
அஞ்சாதே–பயப்படாமல்
மருவி நின்று–பொருந்தி நின்று
ஓர் மாது–ஒரு பெண் பிள்ளை
நின் நயத்தாள் என்று–உன்னை ஆசைப் பட்டிருக்கின்றாள்‘ என்று
இறையே–சிறியதொரு வார்த்தையை
இயம்பிக் காண்–சொல்லிப் பார்.

எப்போதும் தேன் பரிபூரணமாய் இருக்கிற பொழிலை யுடைய தேசத்திலே
பூ அலர்ந்த போது உண்டான தேனைப் பாநம் பண்ணி
உன்னுடைய ஸ்திரீயும் நீயும் புஷ்பங்களிலே பொருந்தி ஸூகமாக ஸம்ஸ்லேஷித்து
புள்ளி மிக்கு இருப்பதாய் ஆறு கால்களை யுடைய சிறிய வண்டே உன்னை ஆஸ்ரயித்தேன்
நித்ய ஸூரி நிர்வாஹகனாய் இருக்குமவனாய் பசுக் கூட்டங்களைப் பொருந்தி ரஷித்தவனாய்
திருவழுந்தூரிலே நின்றவனுக்கு இன்றைக்கே போய் நீ அவன் இடத்தில் பொருந்தி
அஞ்சாமல் எதிரே நின்று
ஒரு ஸ்திரீயானவள் உன்னை ஆசைப்படா நின்றாள் என்று ஒரு வார்த்தை சொல்ல வேணும் –

————————————————————————

தே மருவு பொழிலிடத்து –
தேன் மாறாத பொழிலை உடைய தேசத்தில் –

மருவுகை யாவது –
என்றும் ஒக்க உண்டாய் இருக்கையும்
சம்ர்த்தமாய் இருக்கையும் –

பொழில் -என்கையாலே -ஸ்ரமஹரதையைச் சொல்கிறது –

பரம பதத்துக்கு ஏற்றம் -1-என்றும் ஒக்க உண்டாய் இருக்கையும்
2-சம்ருத்தமாய் இருக்கையும்-3- தாப ஹரமாய் இருக்கையும் -இறே –

உங்களுக்கு அந்த போக ஸ்தானத்தில் இருப்பு போகமாவது
என்னையும் போக ஸ்தானத்தில் இருத்தினால் அன்றோ -என்கை –

மலர்ந்த போதைத் தேனதனை வாய் மடுத்து –
அபி நவமாய் அதி ரசமாய் இருந்துள்ள தேனைப் பானம் பண்ணி –
கழிய அலர்ந்தால் பர்யுஷிதமுமாய் தேன் அல்பமுமாய் பழசுமுமாய் இருக்கும் –
கடு மொட்டாய் இருந்தால் தேன் உத்பன்னமாகிற அளவாகையாலே அல்பமுமாய் –
வலிய வர்த்துகையாலே சாரஸ்யமும் குறைந்து இருக்கும் –
ஆகையாலே அலருகிற போதைத் தேன் -என்கை

காற்றாலே அலரக் கடவ புஷ்பம் இவை சொல்லும் போதாக அலருமோ என்னில் –
முன்பு தொட்டாரோடே தோஷமாம் படி பக்வமாய் இருக்கையாலே
இவற்றின் சிறகின் காற்றாலும் உஸ்வாசத்தாலும் அலருகை-என்கை
பூ விரிய மது நுகரும் -என்னக் கடவது இறே –

(தூ விரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே,
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரி வெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.)

(என்னுடைய புதுமையும் இளமையும் )செவ்வி அறியாதே பொகட்டு போனவரைப் போலே அன்றியே
நீங்கள் செவ்வி அறிந்து அனுபவிக்கப் பெற்றேன் என்கை –

என்னையும் (புதுமையும் இளமையும்)செவ்வி அழியாதே அவனோடே சேர்த்த போது அன்றோ
நீங்கள் செவ்வி அறிந்து அனுபவித்தி கோள் ஆவது

வாய் மடுத்து
பர்த்ரு பார்யைகள் -ஒரு கலத்தில் உண்பாரைப் போலே – அத் தேனை வாயிலே கொண்டு –
அந்யோந்யம் வாயிலே கொடா நிற்கை –
அந்யோந்யம் போகத்துக்கு வர்த்தகமாய் இறே தேன் இருப்பது –
என்னையும் அவனோடு சேர்த்து –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது – என்னும்படி பண்ண வேண்டாவோ -என்கை –

(“இதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா .-தூய்மை சுவை –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்தம் மதுகர பம்பா தீரத்ருமேஷ .-பெருமாளும் பிராட்டியும் பரிமாறிக் கொண்டது போல் )

உன் பெடையும் நீயும் –
உனக்கு பவ்யமான பெடையும்
அதுக்கு பவ்யமான நீயும் –

உன் சந்தத்தை அனுவர்த்திக்கும் பெடையும்
அதின் சந்தத்தை அனுவர்த்திக்கும் நீயும்

அவனைப் போலே சந்தத்தை அறியாது ஒழிகை அன்றியே
நாங்கள் சந்தானுவ்ர்த்திகளாய் பரிமாறப் பெற்றதே –

உன் பெடையும் நீயும் –
சேரவிருப்பார் பிரிந்திருப்பார் கார்யம் செய்ய வேண்டாவோ –
நீங்களும் என்னைப் போலே பிரிந்து இருந்து -உங்களைச் சேர விட வேண்டாதே போரப் பெற்றதே –என்கிறாள்

மகாராஜர் -ராஜ்ய தாரங்களை இழந்து இருக்கையாலே
அத்தைச் சேர விட்டுக் கார்யம் கொள்ள வேண்டிற்று இறே –

பூ மருவி –
அக்னியில் அணைவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் –
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாய் இறே தனக்கு இருப்பது –

(பாவியேன்  மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-)

அக்னி ஸ்தம்பனம் உடையாருக்கு செய்யலாம் இறே
அக்னி ஸ்தம்பனம் ஆவது -மிதுனமாய் இருக்கை ஆவது –
படுக்கை பொருந்தாதே தரைக் கிடக்கிற என் கார்யம் செய்தால் அன்றோ -உங்களுக்கு படுக்கை பொருந்திற்று ஆவது –

ஸ்ரமஹரமான சோலை -போக ஸ்தானமாகவும்
மது போக்யமாகவும் பூ படுக்கையாகவும்
தம்பதிகள் சேர இருக்கவும் பெறுவதாய்
இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி -என் -என்கிறாள் –

யினிதமர்ந்து –
இனிதாக அமர்ந்து –
சுகரூபமாக சம்ஸ்லேஷித்து –
துக்க ரூபமான கலவி இறே தன்னது -சம்ஸ்லேஷ அநந்தரம் விஸ்லேஷிக்கையாலே –

இது நமக்கு புலவி தானே என்றாள் இறே
உங்களுக்கு அது சுக ரூபமாவது என் துக்கத்தை போக்கினால் அன்றோ –

பொறியிலார்ந்த-
பொறி -என்று புள்ளி -புள்ளி மிக்க
சம்ஸ்லேஷத்தால் வடிவில் பிறந்த புகரைச் சொல்கிறது-

அறு கால சிறுவண்டே தொழுதேன் உன்னை
யுவா குமார -யுவதிஸ்ஸ குமாரிணி –என்கிற பருவத்தை உடைத்தாய் இருக்கை –
உபாவாச க்ர்சையாய் -சோபிதாபி ந சோபதே (அணிகலனான நாயகனைப் பிரிந்த நாயகி )-என்னும்படி இருக்கிற எனக்கு
அழகை உண்டாக்கினால் அன்றோ உங்களுக்கு அழகாவது

அறு கால சிறு வண்டே –
த்விபாத்தாய் இருத்தல்
சதுஷ்பாத்தாய் இருத்தல் -செய்கை அன்றிக்கே –
கமன சாதனமான கால்கள் ஆறு உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்

வண்டுக்கு கமன சாதனம் சிறகு ஆகையாலே –
மேலே -தொழுதேன் -என்கையாலும் –
என் தலையில் வைக்கைக்கு ஆறு காலாக உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

(எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-அர்ச்சையில் தூது இது (தூது நான்கு உண்டே )
என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத்தக்கது.)

சிறு வண்டே
ஏற்கவே சிறியையாய் திருவடியைப் போலே -கார்ய காலத்திலேயே சிறுக வேண்டாவே உனக்கு –

வண்டே
திருவடியைப் போலே ஆராய்ச்சி பட வேண்டாதபடி
வளையத்தே யாதல் தோளில் மாலையிலே யாதல் -இருந்து வார்த்தை சொல்லலாம் படியான ஜன்மம் அன்றோ உள்ளது –

( பகவத் குணமான மதுவை ரசிக்கும் ஆச்சார்யர்களே வண்டு-ஏற்கனவே நீ சிறியையாயிருப்பதும் ஒரு பாக்கியம்;
அனுமான் இலங்கைக்குத் தூது சென்ற போது சிலவிடங்களில் தன் வடிவைச் சிறுக்கடித்துக் கொள்ளவேண்டி யிருந்தது;
அங்ஙனே உனக்குத் தேவையில்லை; உருவமே சிறியையாயிரா நி்ன்றாய் காண் என்று விசேஷார்த்தங்காண்க.
ஹனுமானாகில் ‘இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?, என்று ஆராய்ச்சிப்பட வேண்டியிருக்கும்;
நீ வண்டாகையாலே
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில்
இஷ்டமானதோரிடத்திலே யிருந்து கொண்டு வார்த்தை சொல்லலாம்படியான ஜன்மமன்றோ உன்னது என்பதும் விவக்ஷிதம்.)

தொழுதேன் உன்னை
உன் காலிலே விழுந்தேன் -தொழுதேன் –
கடகர் போலே காணும் ஸ்துத்யரும்-நமஸ்கார்யரும் –

உன்னை –
அவனை தொழுகிறேன் அல்லேன் –
அவன் பொகட்டுப் போன தசையிலும் -அறுதல் பிணைக்க இருக்கிற உன்னைத் தொழுதேன்
அவனும் உண்டானாய் நானும் உண்டாய் இருக்க பிரிந்து கிலேசப் படா நின்றேன் –
சேர விட்ட நீ அன்றோ ஸ்துதிக்கப் படுவாயும் நமஸ் கரிக்கப் படுவாயும்
இவர்கள் உடைய -அத்ரபரத்ரசாபி -இருக்கிறபடி –

(தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||–ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 2–

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.)

என்னைத் தொழுகிறது என் -கார்யத்தை சொல்லல் ஆகாதோ -என்னச் -சொல்லுகிறாள்
அமரர் கோமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு சென்று அறிவியுங்கோள் –

அவனை எங்களால் கிட்டலாமோ -என்ன –
ஆ மருவி நிரை மேய்த்த –
அம் மேன்மை கிடக்கச் செய்தே காண்
பசுக்களோடு பொருந்தி பசுக்களை ரஷிப்பது –
நித்ய ஸூரிகளுக்கு தன்னை ஒழியச் செல்லாதா போலே காண்
பசுக்களை ஒழிய தான் செல்லாதே இருக்கும் படியும் –
அவர்களுக்கு தன்னை ஒழிய செல்லாத படியாலே முகம் காட்டுகிறான் இத்தனை –
பசுக்களோடு காண் அவனுக்கு பொருத்தம் –

அது பின்னை ஒரு காலத்தில் அன்றோ -என்ன –
அணியழுந்தூர் நின்றானுக்கு-
அக் காலத்தில் பசுக்களை ரஷித்தால் போலே
அக் காலத்துக்கு பிற்பாடராய்
பசு சமராய் இருப்பாரையும் ரஷிக்கைக்காக
திருவழுந்தூரிலே நின்றான் –
அவனுக்கு அறிவியுங்கோள்-

(பரத்வம் ஒருபுறத்தே கிடக்கச் செய்தேயும் பசுக்களோடே பொருந்தி அவற்றோடே போது போக்குமவன் காண்;
நித்ய ஸூரிகளுக்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே பசுக்களை யொழியத் தனக்குச் செல்லாதபடியான
குடிப் பிறப்புடையவன்காண்;
மேன்மையைக் கண்டு தியங்காதே செல்லலாமென்றாள்; ஆமாம்; அது ஒருகாலத்திலன்றோ?
க்ருஷ்ணாவதாரங் கடந்து நெடுநாளாயிற்றே! என்ன;
அணியழுந்தூர் நின்றனுக்கு என்கிறாள்.
அக்காலத்தில் பசுக்களை ரக்ஷித்தாற்போலே அக்காலத்திற்குப் பிற்பட்டவர்களாய்ப பசு ப்ராயராயிருப்பாரையும்
ரக்ஷிக்கைக்காகப் * பின்னானார் வணங்குஞ் சோதியாகத் திருவழுந்தூரிலே நிற்கிறான் காண்;
அங்கேபோய் அறிவிக்க வேணுமென்றாளாயிற்று.)

(சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10-)

அவன் பிரிகிற போது புனல் அரங்கமூர் -என்று சொல்லி கோயிலிலே போய் இருக்க
திருவழுந்தூரிலே-தூது விடுகை –கர்னே ஸ்ப்ர்ஷ்டே கடிம் சலயதி -என்றபடி அசங்கதம் அன்றோ என்னில் –
அவனும் சேதனன் ஆகையாலே ஆற்றாமை அவனுக்கும் உண்டாய் இருக்கும்
ஒரு கார்யப் பாட்டாலே பிரிந்தான் இத்தனை –
முடியப் போக மாட்டான் –
திருவழுந்தூரிலே பிற்காலித்து நிற்கக் கூடும் –
அங்கே சென்று அறிவியுங்கோள் என்கிறாள் –

அங்கன் இன்றிக்கே
கோயில் போக ஸ்தானம் ஆகையாலே
என்னை ஒழிய அங்கே தரிக்க மாட்டான் –
அத்தாலே எதிரிலே திருவழுந்தூர் அளவிலே வரும் –
அங்கே சொல்லுங்கோள் என்கிறாள் ஆகவுமாம் –

நின்றானுக்கு –
அவ் வருகு போக மாட்டாமையாலே ஸ்தாவர பிரதிஷ்டையாய் நின்றான் -என்னுதல்
கோயில் நின்றும் வந்து தான் மேல் விழ மாட்டாமையாலே
இத் தலையில் நின்றும் ஆள் வருவாரோ என்று பார்த்து நின்றான் -என்னுதல் –

இன்றே சென்று –
நாளைச் செய்கிறோம் என்ன ஒண்ணாது –
நாளைக்கு நான் இல்லை -என்கிறாள் –
நான் இல்லாமையாலே அவனும் இல்லை –
இரண்டு தலையும் பிழைக்க வேண்டும் என்று இருந்திகோள் ஆகில் இன்றே செல்லுங்கோள்
இரண்டு தலையும் அழிக்கை யாவது –ஜகத்து உபசம்ஹாரம் பிறக்கை இறே –

நீ மருவி –
ஆ மருவி நிரை மேய்த்தவன் ஆகையாலே
திர்யக் ஜாதியான உனக்கு முகம் தரும்
நீ சென்று கிட்டி –

நீ மருவி –
என்னைப் போல் அவனுடைய ஸ்லாக்கியத்தைக் கண்டு வைத்தும்
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே-என்று அவர் பக்கலிலே
அதஸ்மிம் ஸ்தத் புத்தி பண்ணி -பிற்காலியாதே
அவனோடு பொருந்தி –

அஞ்சாதே நின்று-
அமரர் கோமானாய் இருக்கிற படியைப் பார்த்து அஞ்சாதே
ஆ மருவி நிரை மேய்த்த படியைப் பார்த்து தரித்து நின்று –

(தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர் நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-)

அங்கன் இன்றியே
அஞ்சாதே நின்று –
மகிஷி பக்கலில் நின்றும் வந்தார்கள் என்று தோற்றும் படி
மேலிட்டு நின்று
வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள் ஆகவுமாம் –
மேலிட்டு வார்த்தை சொல்லும் போதே என் பக்கல் நின்று வருகிறார்கள் என்று இருக்கும்-

அவனுக்கு அறிவிக்கும் வார்த்தை ஏது என்ன சொல்லுகிறாள் -மேல் —
ஒர் மாது –
பேர் சொல்ல வேண்டா
ஒருத்தி -என்ன அமையும் -தாமே அறிவர் –
ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டுக் கிடந்து துடியா நின்றது என்றால்-எய்தவன் அறியும் இறே

அதவா
ஓர் மாது
அத்விதீயையாய் இருப்பாள் ஒருத்தி என்று சொல்லுங்கோள் என்கிறாள் –
அத்விதீயையான மாது என்ற போதே அறியும் –
சம்சாரிகளுக்கும் கூட்டு அன்றியே –
முக்தருக்கும் கூட்டு அன்றியே
முமுஷூக்களுக்கும் கூட்டு அன்றியே –
பிறந்திட்டாள் என்னும்படி இறே இருப்பது-

(விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-)

(பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்றுகூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-)

நின்னயந்தாள்
சென்ற போதே அறியும்
வார்த்தை சொல்ல வேண்டிற்று இல்லை
ஒரு மாது என்ற போதே அறியும்
இவ்வளவும் போராது என்று இருந்தாய் ஆகில்
ஒரு வார்த்தை சொல் என்கிறாள்-

நின்னயந்தாள் –
படுகுலைப் பட்டாள் என்று சொல்லுங்கோள் –
ஒரு கா புருஷனையா ஆசைப் பட்டது –
வ்யதிரேகத்தில் ஆற்ற ஒண்ணாத படியான வைலஷண்யத்தை உடைய
(புருஷோத்தமனான )உன்னை அன்றோ ஆசைப் பட்டது என்று சொல்லுங்கோள்

நின்னயந்தாள் –
பர வ்யூஹ விபவங்களிலே ஆசைப் பட்டாளோ -ஆறி இருக்கைக்கு என்று சொல்லுங்கோள்

இறையே இயம்பிக் காணே –
நீங்கள் வார்த்தை சொல்ல உபக்ரமித்த போதே
உங்களை முடியச் சொல்ல ஒட்டான் –
அவன் தான் உங்களைக் கொண்டாடும் -என்கிறாள் –

இறையே இயம்பி
ஓர் மாது -என்று சொன்ன போதே அவன் அறியும் –
நின்னயந்தாள் -என்கிற இதுவும் மிகையாம்படி இருக்கும் -என்னவுமாம் –

காணே –
நீ இவ்வளவும் சொன்ன போதே
அவன் உன்னை சத்கரிக்கும் சத்காரம் எல்லாம் காண வன்றோ புகுகிறாய் –
தர்மதம் பரி ரஷித –என்பது
ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்க -என்று
தழுவிக் கொள்ளுவதாக அன்றோ புகுகிறான்

(தர்மதம் பரி ரஷித–அஹம்- ரகு குலமும் உமக்கு கடன் பட்டோம் -கைம்மாறு கருதாத இந்த அறச் செயலாலே எங்கள் குலமே ரக்ஷிக்கப்பட்டதே )

(த்ரஷ்டா பரிஷ்வங்க ரசைக லோலா … ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத  என்கிறபடியே-சர்வ ஸ்வ பூதஸ்து-ஸர்வ ஸ்வதானம் அன்றோ இந்த ஆலிங்கனம் -அனுமான் பெற்ற பரிசும் ஏகதேச மென்னும்படி யன்றோ நீ பஹுமாநம் பெறப்போகிறாய்; இது நான் சொல்ல வேணுமோ? அநுபவத்தில் பார்த்துக் கொள்ளாய் என்றாளாயிற்று-யாம் பெரும் ஸம்மானம் -நாடு புகழும் பரிசு -நன்றாக -பரத மாருதி அக்ரூரர் பெற்றார்கள் அன்றோ .)

காணே –
நான் காணப் பெறாத வடிவை அன்றோ
நீ காணப் புகுகிறாய் -என்னவுமாம் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–25–மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 23, 2013

அவதாரிகை –

அத் தலையில் உள்ளதை நேராகக் காட்டி
இத் தலையில் உள்ளதை நேராகக் கொண்டு போனான்
என்கிறாள் –

——————————————-

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கையும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே
தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே
புனலரங்க மூரென்று போயினாரே–25-

பதவுரை

மின் இலங்கு திரு உருவும்-மின்னல் போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்-பெரிய திருத் தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்-குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப் புடைத்த திருக் கைகளும்
கண்ணும்–திருக் கண்களும்
வாயும்–திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே–தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத் துழாய் மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு–தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்–மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி–ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்–என்னுடைய அழகையும்
என் நிறைவும்–என் அடக்கத்தையும்
என் சிந்தையும்–என் நெஞ்சையும்
என் வளையும்–என் கை வளைகளையும்
கொண்டு–அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு–என்னை அடிமை யாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த–பொன் போல் மலர்ந்த
நறு–பரிமளம் மிக்க
செருந்தி பொழிலின் ஊடே–ஸுர புன்னைச் சோலையினிடத்தே யிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்–நீர் வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய் விட்டார்!.

மின் போலே விளங்கா நின்றுள்ள திரு மேனியும்
பெரிய திருத் தோள்களும்
குவலயா பீடம் என்னும் யானையை நிரசித்த திருக் கைகளும்
திருக் கண்களும்
திரு அதரமும்
தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று மிக்க பரிமளத்தை யுடைத்தான திருத்துழாய் மாலையின் கீழே
திருத்தோள் அளவும் வரத் தாழ்ந்து விளங்கா நிற்பதாய் ஓன்றோடு ஓன்று பொருந்தி இருந்துள்ள திரு மகரக் குண்டலங்களையும் காட்டி
என்னுடைய சவுந்தர்யத்தையும் ஸ்த்ரீத்வத்தையும்
என்னுடைய மனசையும் வளையையும் கொண்டு
என்னை அடிமையும் ஆக்கிக் கொண்டு
பொன் போலே அலர்ந்ததாய் பரிமளிதமான பூவை யுடைத்தான செருந்திப் பொழிலிலே
ஜல ஸம்ருத்தியை யுடைய ஸ்ரீ ரெங்கம் நம்மூர் என்று சொல்லிப் போய் விட்டார் –

——————————————————–

மின்னிலங்கு திருவுருவும் –
மின் போலே விளங்கா நின்றுள்ள திருமேனியும்
கார் வண்ணம் திருமேனி -என்றும் –
கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்
ஔதார்யத்தையும்
ஸ்ரமஹரதையையும் பற்றி -சொல்லிற்று -கீழ்
இங்கு -அநபிபவ நீயதையைப் பற்றச் சொல்கிறது –

(எதிர் விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது.)

ஆனாலும் வடிவுக்கு நிறம் அது வன்றோ -என்னில் –
காளமேகத்தை அருண கிரணத்தாலே வழிய விட்டினால் போலே
திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸ்ஸூ-திரு மேனி எங்கும் ஒக்கப் பரவி இருக்கையாலே சொல்லுகிறது –

வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இறே –
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி –என்றார் இறே கீழே
தமஸ பரம உதாரா சங்க சக்ர கதா தரா  ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய –தாரை சதுஸ் ஸ்லோஹி-என்கிற பெரிய மேன்மையைக் காட்டின படி –

மின்னிலங்கு திருவுருவும் –
கிட்டின போது -பெரு வயிற்ற கரு முகிலே -என்றாள்
பேர நின்றவாறே பளபளத்து தோற்றின படி –

(கார் வண்ணம் திரு மேனி என்றும்
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
என்று சொல்லி வைத்து
இங்கே மின் இலங்கக் கூடுமோ என்பதுக்கு பரிஹார த்ரயம்
1-பிரதமம் கார் வண்ணம் இத்யாதி
2-த்விதீயம் காளமேகத்தை இத்யாதி
3-வடிவுக்கு நிறம் அது என்றாலும் என்று அன்வயித்துக் கொள்வது
த்ருதீயம் கிட்டின போது இத்யாதி )

பெரிய தோளும்-
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
அவயவாந்தரந்களிலே போக ஒட்டாத படியான போக்யதையும் (தோள் கண்டார் தோளே கண்டார் )
காவல் துடிப்பையும் சொல்கிறது –
ஒதுங்குவார்க்கு நிழல் மிக்கு இருக்கை –

(ஆயதாச்ச ஸூவ்ருத்தாச்ச பாஹவ )பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா (கிமர்த்தம் ந விபூஷிதா ) -என்கிறபடியே
வீர சிஹ்னத்தையும் -போக சிஹ்னத்தையும் உடைத்தான தோள் -என்கை –

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை—ஶம்ஸிபி
கை வளையும் மேகலையும் காணேன் -என்று விரோதி நிவர்த்தகவத்தையும்
நான்கு தோளும் -என்று போக்யதையையும்
இவள் தானே சொன்னாள் இறே

(சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 33 –

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –)

(இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே
தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம் )

(மேல் ஒவ்வொன்றுமே போக்யமாயும் ரக்ஷகமாயும் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்)

கரி முனிந்த கைத் தலமும் –
குவலயா பீடத்தை வேண்டாம் என்ற கையும்
கம்சனையும் சாணூர முஷ்டிகர்களையும் நிரசிக்கிற போதை வியாபாரம் எல்லாம் இதுக்கு வேண்டிற்று இல்லை இறே

இத்தால் வீர சிஹ்னத்தையும்
போக சிஹ்னத்தையும் உடைத்தான கை -என்கை –
புகர்ச் செம் முகத்த களிறட்ட பொன்னாழிக் கை -என்கிறபடியே

(நுகர்ச்சி உறுமோ மூ வுலகின் வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன் பெரிய தனி மாப் புகழே–8-10-6-)

கையும் –
அறுகாழியோடு கூடி இருக்கிற கையாலே இறே குவலயா பீடத்தை நிரசித்தது –
எய் வண்ண வெஞ்சிலையே -துணையா -என்று வீர சிஹ்னத்தையும்

கை வண்ணம் தாமரை -என்று போக சிஹ்னத்தையும் காட்டினாள் –

கண்ணும் –
கிட்டினாரை ஓடி எறியும் கண்ணும்
கண் இணையும் அரவிந்தம் -என்றாள் இறே –

வாயும் –
அழகுக்கு தோற்று அனன்யார்ஹமானாரை குறித்து
தான் அனன்யார்ஹம் ஆனமை தோற்ற
சாந்த்வவாதம் பண்ணும் திருவவதாரம் –
வாய் கமலம் போலும் -என்றாள் இறே –

தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே –
இத்தால் ஒப்பனை அழகு சொல்கிறது
தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று அதி பரிமளிதமான
திருத் துழாயாலே அலங்க்ருதமான வளையத்தின் கீழே –

மலரின் கீழே தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி –
வைத்த வளையத்தின் கீழே திருத் தோள் அளவும் வரத் தாழ்ந்து
பரபாக ரூபத்தாலே விளங்கா நின்றுள்ள
திரு மகரக் குழையும் காட்டி –

பிரிந்ததுக்கு மேலே –
திருவடி திருத் தோளிலே ஏறி
இவள் முன்னே சாரிகை வந்து -(புள்ளூறும் கள்வா கீழே உண்டே )
தனக்கு உள்ளதை அடையக் காட்டி
இங்குள்ளத்தை அடையக் கொண்டான் -என்கிறாள் –
இத்தால் ஒப்பனையோடு ஆபரணத்துக்கு உண்டான சேர்த்தி அழகு சொல்லுகிறது-

சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து சர்வ ஸ்வா பகாரம் பண்ணினான் -என்கிறாள் –
என்னலனும் –
என்னுடைய சௌந்த்ர்ய சௌகந்த்ய சௌகுமார்யாதி ரூபங்களையும்
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்ம குணங்களையும் –

(நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கி நிற்பது.
மடமாவது, எல்லாமறிந்தும் அறியாது போலிருத்தல்.
அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல்.
பயிர்ப்பாவது, பர புருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.)

நலம் -குணம் –
என்னலம் -ஒருவராலும் அழிக்க ஒண்ணாத நலம் –

எதிர்த் தலையை தான் அழிக்கும் இத்தனை ஒழிய
தன்னை ஒருத்தராலும் அழிக்க ஒண்ணாத படி இருக்கை –

என்னிறைவும் –
என்னுடைய ஸ்த்ரீத்வமும் –
எதிர்த் தலையில் பும்ஸ்வத்தை அழிக்கும் படி இறே இவளுடைய ஸ்த்ரீத்வம் இருப்பது –
நிறைவு -அடக்கம் –

என் சிந்தையும் –
அதுக்கடியான மனசையும் –

என் வளையும் கொண்டு –
தான் போனால் ஆஸ்வாச ஹேதுவாய் இருக்கிற வளையும் கொண்டு –

என்னை ஆளும் கொண்டு –
என் சர்வத்தையும் அபஹரித்து கொண்டு போகை அன்றியே
சுமையாளும் நானே யாக வேணுமோ –
ஒரு வனத்தே புக்கு நேராக ஒடுக்கி அவன் தலையிலே சுமையை வைத்துக் கொண்டு போமா போலே

அங்கன் இன்றியே
அவனோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தை
அடிமையாக நினைத்து இருக்கையாலே
என்னை அடிமை கொண்டான் -என்கிறாள் -ஆகவுமாம் –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கோர் குற்றேவல் -என்னக் கடவது இறே –

(கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திரு மார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே)

அங்கன் இன்றியே
சர்வ ஸ்வத்தையும் அபஹரித்திக்கொண்டு போகா நின்றால்
தன் உடைமையை தானே கொண்டு போகிறான் ஆகில்
நீ என் (எனக்கே சொத்து )என்னும்படி என்னை அனன்யார்ஹம் ஆக்கியும் போனான் -என்கிறாள்-

(“என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே
‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்;
இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க,
என்னுடையவற்றை அவர் கொள்ளை கொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி.)

(உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று –
போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்தி வைப்பது மேன் மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று.
அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி –
(நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்;)

பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே-புனலரங்க மூரென்று போயினாரே
சர்வ ஸ்வாபகாரம் பண்ணினோம் –
சத்தை கிடக்க வேணுமே என்று ஊரைச் சொல்லிப் போந்தான் -என்கிறாள் –
தன் சௌகுமார்யத்துக்கு அனுரூபமாக சோலை யூடே போனான்
பொன் போலே அலர்ந்து பரிமிளிதமாய் இருந்துள்ள பூவை உடைத்தான
செருந்திப் பொழிலினூடே ஸ்ரமஹரமான கோயில் நம்மூர் என்று போயினர் –

திருநகரி யினின்றும் கோயில் அளவும் செல்ல பொழிலாய்க் கிடந்ததோ என்னில் –
ஒரு காளமேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால் -கண்டவிடம் எங்கும்
தளிரும் முறியும் ஆகாதோ -என்று பட்டர் அருளிச் செய்வர் –
பிரிந்தார் இரங்கும் நிலத்தில் மரம் செருந்தி (ஸூர பின்னை மரம் )இறே –

போயினாரே –
முன்பே கால் கடைக் கொண்டு பெற வேண்டும்படி காண் -போகிறபோது அவர் பின்புறம் இருந்தபடி –

புனலரங்கம் –
ஸ்ரமஹரமான தேசம் –
நித்ய சம்ஸ்லேஷம் பண்ணலாம் தேசம் –

போயினாரே –
பரம பந்துவாய் இருந்து வைத்து இப்படி செய்தார் காண் என்னும் இன்னாப்பாலே
பிரியாதே கூட இருத்தல் –
போகிற போது கூடக் கொண்டு போதல் –
செய்ய வேண்டாவோ -என்கிறாள் -ஆகவுமாம் –

பொன்னித்யாதி –
புஷ்பாபசயம் பண்ணுகைக்கும்
ஜல க்ரீடை பண்ணுகைக்கும்
ஏகாந்தமான தேசம் நம்மூர் என்று போயினர் -என்னவுமாம் –

பொழிலினூடே புனல் –
மேல் செருந்தியாய் கீழ் நீராய் இருக்கை –
போகிற போதை அவர் பின்பு இருந்த படி காணப் பெற்றது இல்லை காண் –

விக்கிரம சோழ தேவன் -உங்கள் தலைமகள் பிரிந்த இடத்தில் சொன்ன கவி என் என்ன –
அவள் எலும்பும் சாம்பலும் உடையவன் -என்றாள்
இவள் -மின்னிலங்கு திருவுருவம் -என்றாள் என்ன
தன் காலிலே துகை யுண்டவனை தோழிக்கு சொல்லா நிற்க
திருவுரு -என்பதே —
இவள் தலைமை வுடையவள் –
அவள் -பிணம் தின்னி -என்றாள் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–24–இருக்கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 23, 2013

அவதாரிகை

பெரிய திருவடி கொண்டு போனான் ஆகில் –
யஸ்யை தே தஸ்ய தத் தனம் -என்கிறபடியே

(ஆதி பர்வம் -யயாதி அரசே -மனைவி வேலையாட்கள் மகன் இவர்களுக்குத் தனியாக செல்வம் இல்லையே
இவர்கள் அண்டி இருக்கும் புருஷன் -ஸ்வாமி -யுடைய செல்வங்களே)

1-அவன் தான் உனக்கு பவ்யனாய் இருந்தானாகில் –
அவனுக்கு சேஷ பூதனான பெரிய திருவடி உனக்கும் சேஷமாய் அன்றோ இருப்பது
அது கிடக்க
2-மகிஷி வர்க்கத்துக்கு ஸ்வரூபேண தாஸ பூதனாய் அன்றோ அவன் இருப்பது –
இரண்டாலும் அவனை நீ போகல் என்று நீ நியமிக்க குறை என் -என்ன

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் )

அவன் ஒருவனுமே ஆகில் அன்றோ அது செய்யலாவது
நித்ய விபூதியில் உள்ளார் அடங்க வந்து சூழ்ந்து கொண்டார்கள்
அவர் தாம் பண்டு போல் அன்றியே
வடிவில் பௌஷ்கல்யத்தாலும் -மேன்மையினாலும் –அநபிபவ நீயராய் இருந்தார் –

அத்தாலே –
சென்று கிட்டவும்
வார்த்தை சொல்லவுமாய்
இருந்தது இல்லை காண் -என்கிறாள் –

————————————————————————————

இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–

பதவுரை

உலகு உண்ட பெரு வாயர்–பிரளய காலத்தில் உலகங்களை யெல்லாம் அமுது செய்த பெரிய திரு வாயை யுடைய வரும்,
இங்கே வந்து-இவ்விடத்தே வந்து
பொரு கயல்-ஒன்றோடொன்று போர் செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற
என் கண்-எனது கண்களிலிருந்து
நீர் அரும்ப–நீர்த் துளிகள் துளிக்கும்படி
புலவி தந்து–விரஹ வேதனையை யுண்டாக்கி,
இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்-விளங்குகின்ற ஓசையை யுடைய
நீர் நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெரு வயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள்
பெருந் தவத்தர் அரு தவத்து முனிவர் சூழ-பரம பக்தி யுக்தரான ஸ்ரீவைஷ்ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு கையில்-ஒரு திருக் கையிலே
சங்கு-திருச்சங்கையும்
மற்றொரு கை–மற்றொரு திருக் கையிலே
ஆழி-திருவாழியையும்
ஏந்தி-தரித்துக் கொண்டு
புனல் அரங்கம் ஊர் என்று-நீர் வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு
போயினார்-அகன்று போனார்;
(அதுவே காரணமாக)
இரு கையில்-(எனது) இரண்டு கைகளிலும்
சங்கு இவை நில்லா-இந்தச் சங்கு வளைகள் கழன்றொழிந்தன
எல்லே பாவம்–என்ன மஹா பாபமோ!.

ஸமஸ்த லோகங்களையும் பிரளய காலத்திலே அமுது செய்த பெரிய வாயை யுடையவர்
இவ்விடத்தே வந்து ஒன்றோடு ஓன்று பொரா நின்றுள்ள மத்ஸ்யங்களை ஒத்த என் கண்களிலே நீர்த் துளிகள் ப்ரவஹிக்கும் படி துக்கத்தை விளைத்து
ஒளியையும் சப்தத்தையும் நீரையும் யுடைய மஹா சமுத்திரத்தை அவகாஹித்துப் பருகினதாய்
இடமுடைத்தான வயிற்றை யுடைத்தான காளமேகத்தின் நிறத்தை வடிவு அழகிலே ஒத்து இருப்பவர்
பரம பக்தி உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் மஹா தபஸ்ஸிகளாய் மனன சீலர்களாக ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு திருக்கையிலே பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும்
மற்ற ஒரு திருக்கையிலே திருவாழி ஆழ்வானையும் தரித்தவராய்
தாம் பிரிந்தால் நான் தரித்து இருக்கைக்காக
ஜல ஸம்ருத்தியை யுடைய ஸ்ரீ ரெங்கம் தம்மூர் என்று சொல்லி நம்மைப் பிரிந்து போனார்
அவர் போன போதே எனது இரண்டு கைகளிலும் சங்கு வளைகளானவை கழன்று போயின
என்ன மஹா பாபமோ –

————————————————————————————-

தாம் போகை அன்றிக்கே
தாம் போனால்
ஆஸ்வாச ஹேதுவாய் இருக்குமவையும்
எனக்குத் துணையாகாத படி காண் பண்ணிப் போய்த்து

கையில் சங்கு நில்லா –
அவன் போன போதே ஆற்றாமை குடி புகுந்தது –
கையில் வளையைப் பார்த்தாள் –
வளை அவனுக்கு முன்னே போய் நின்றது
அவன் போனாலும் அவன் போக உபகரணங்கள் கிடந்ததாகில் அத்தைப் பார்த்து தரிக்கலாம் இறே –

அவன் கையின் கார்ஸ்யத்தால் வந்ததோ என்று
மற்றை கையைப் பார்த்தாள் –
இரு கையில் சங்கிவை நில்லா –
அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது –
ஆகையாலே –இரு கையில் சங்கிவை நில்லா –என்கிறாள் –

இவை நில்லா –
1-அவன் நில்லாது ஒழிந்தால் -இவையும் நில்லாமல் ஒழிய வேணுமோ –
சேஷியாகையால் அவன் போகிறான் –
எனக்கு சேஷமான இவையும் போக வேணுமோ –

2-சேதனன் ஆகையால் இத் தலையில் ஒரு குறை கண்டு போகலாம் அவனுக்கு –
அசேதனமான இவையும் போக வேணுமோ –

3-வந்து கலந்தவன் ஆகையால் போகிறான் அவன்
சஹஜமான இவையும் போக வேணுமோ –

இவை நில்லா –
4-நம் கைக்கு அடங்காதவன் ஆகையால் போந்தான் அவன்
நம் கைக்கு அடங்கின இவையும் போக வேணுமோ –

இவை நில்லா
5-அவன் நிற்கிலும்
இவை நிற்கிறனவில்லை

நில்லா
போகேல் என்ன போனால் போலே
பல கால் எடுத்து எடுத்து கையிலே இடக் கழலுகையாலே –நில்லா -என்கிறாள் –

(அக்ரூரர் உடன் சென்று கோபிமார்களைப் பிரிந்த பின்பு கையில் வளையல்களும் போயினவே -ஸ்ரீ மத் பாகவதம்)

வெல்லே –
என்னே -சித் அசித் விபாகம் அற மத் சம்பந்தமே அமையும் ஆகாதே உதவாது ஒழிகைக்கு –
மமேதம் -என்ன அமையும் ஆகாதே உதாவது ஒழிகைக்கு –
அவன் உதவாது ஒழிகைக்கு ஹேது மத் சம்பந்தமே இறே –

பாவம் –
அவன் போனான் ஆகில் போகிறான் கைப் பட்டதும் போகைக்கு அடி என் பாவமே இறே –

எல்லே பாவமே –
அவன் புண்யத்துக்கு ஓர் அவதி இல்லாதவோபாதி
என் பாவத்துக்கும் ஓர் அவதி கண்டிலோமே –
தானே வந்து கலந்தவனை அனுபவிக்கப் பெறாத பாவத்துக்கு மேலே
ஆஸ்வாச ஹேதுவான இவையும் உதவாது ஒழியும்படி இறே என் பாப அதிசயம் –

இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம் –
தன்னைக் கலந்து பிரிந்து போகிற போது
அவன் வடிவில் பிறந்த புதுக் கணிப்பு சொல்கிறாள் –
இத்தலை வெறும் தரையாம்படி விவரணமாய் இறே கிடந்தது –

இலங்கு இத்யாதி –
இவளை வெறும் தரையாக்கின பிரகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் சொல்கிறது –
பெரும் வயிற்ற என்னும் அளவும் செல்ல –

இலங்கொலி நீர் இத்யாதி –
லாவணாதி களாலே அளாவின ஒளி அன்றிக்கே
ஸ்வாபாவிகமான ஒளியையும் காம்பீர்யத்தையும் உடைத்தான நீரை உடைய மகா சமுத்ரத்தை
வெறும் தரையாகப் பருகின தொரு காள மேகம் போலே காண்
போகிற போது அவர் வடிவு இருந்தபடி –

என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் -என்கிறபடியே
என் வடிவில் ஒளியும் காம்பீர்யமும் அவர் பக்கல் குடி கொண்டது என்னும்படி
காண் அவர் வடிவு இருந்தபடி –

பெரும் பௌவம் என்று சப்த த்வீபங்களையும் விளாக்குலை கொண்ட ஸூத்த ஜல சமுத்ரத்தை சொல்லுகிறது –

மண்டி யுண்ட –
மணலோடு பருகின -என்னுதல் –
பெரிய அபிநிவேசத்தோடே மேல் விழுந்து பருகின -என்னுதல் –
இவளோடு சம்ஸ்லேஷிக்க வருகிற போதையில் அபிநிவேசமும்
இத்தலையில் சௌந்தர்ய சாகரத்தை அற்ற சாரம் ஆக்கினபடியும் வடிவிலே தோற்றி இருக்கிறபடி –

பெரு வயிற்ற
இத்தலையில் உள்ளது நேராக க்ரஹித்த பின்பும் அபிநிவேசம் மாளாதே இருந்தபடி –

கரு முகிலே ஒப்பர் வண்ணம் –
இத்தால் ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று –
தாத் காலீனமான அழகைச் சொல்லுகிறது –
ஒரு காள மேகத்தை மின் தழுவினாப் போலே
ஸ்வா பாவிகமான எழிலுக்கு மேலே
இத் தலையில் எழிலும் அங்கே குடி கொள்ளுகையாலே வடிவு இரட்டித்து இருக்கிறபடி –

(கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே;
இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடி கொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி.
பரகால நாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க.
மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல
அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி.
அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று.)

மண்டி யுண்ட –
பாவியேன் மேகம் முகக்கும் கடல் ஆகாதோ -பெய்யும் தரையாகப் பெற்றிலேன்-

பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ –
1-வடிவில் பௌஷ்கல்யம் இருந்தபடியும்
2-பரிகரவத்தை இருந்தபடியும்
3-மேன்மை இருந்தபடியும்
நீ காணப் பெற்றிலை காண் –

பெரும் தவத்தர் இத்யாதி –
ஒருவர் இருவராய் சென்று கிட்டுகிறாரோ –
அம்ருதத்தை அமரர்கள் சூழ நின்று காக்குமா போலே காண்
என்னைப் பிரிந்த சமனந்தரம் பரிகரம் வந்து சூழ்ந்து கொண்ட படி இது காண் -என்கிறாள் –
பக்த்தைர் பாகவதைஸ் ஸஹ-என்றும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிறபடியே
நித்ய ஸூரிகளை சொல்கிறது –

(வைகுண்ட து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ )

(வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-)

(புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.)

பெரும் தவத்தர் –
பகவத் பிரேமத்தால் அதிசயித்தவர்கள் –
வணக்குடை தவ நெறி -என்று பக்தியை தபஸ் சப்தத்தால் சொல்லக் கடவது இறே –

(பிணக்கற அறுவகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே-1-3-5-)

அரும் தவத்து முனிவர்
அவனும் அவர்களுமாய் கொண்டு பரிமாறும் பரிமாற்றமே
தங்களுக்கு போகமாய் இருக்கும் ஏற்றம் உண்டு இறே அவர்களுக்கு –

சூழ
அதுவுமாம் இறே
தங்களுடைய சேஷத்வத்தையும்-அவனுடைய ஸ்வாமித்வத்தையும் உணர்ந்து இருக்குமவர்கள் பரிவராய்க் கொண்டு
ஒருவர் கிட்ட ஒண்ணாத படி எங்கும் ஒக்க சூழ்ந்து நிற்கையாலும் கிட்டப் போய்த்தில்லை –

(சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே)

(கடலில் அமுதந் தோன்றின வன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்து கொண்டாப் போலே காண் என்னைப் பிரிந்து போகிற போது
அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்து கொண்டது.
வைகுண்ட து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ – என்று
சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள்.
அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச் சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே?)

(கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே–5-5-10-)

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
பரிகரத்தை ஒரு படி நீந்திச் சென்றோமே யாகிலும் கிட்ட ஒண்ணாதபடி காண் –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்கிறபடியே
அவர் தாம் அநபிபவ நீயராய் இருக்கிறபடி –

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று இறே மேன்மைக்கு எல்லை –
வடிவார் சோதி வலத்து  உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ற
பெரியாழ்வாரைப் போலே காணும் இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறபடி –

(நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே–5-5-7 )

(அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு 
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு 
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே )

ஒரு கையில் சங்கு -இத்யாதி
என் கையைப் பிடித்த கையும்
என் காலைப் பிடித்த கையும் காண்
அவர்களுக்கு பிராப்யம் ஆயத்து -என்கிறாள் –

அக் கைக்கு என் அவயவங்கள் பிராப்யம் ஆனால் போலே காண் -அவர்களுக்கு அக் கை பிராப்யமாய் இருந்தபடி –

கலந்த போதை நீர்மை போலே காண்
பிரிந்த போதை மேன்மை இருந்தபடி –
அப்போதை நீர்மைக்கு எல்லை இல்லாதாப் போலே காண்
போகிற போதை மேன்மைக்கு எல்லை யற்று இருந்தபடி –

(நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனை யன்றி
அணுகிச் சென்று வாய் திறக்க வழி யுண்டாயிருந்ததோ வென்கிறாள்.)

உலகுண்ட பெரு வாயர் –
இத்தால் பிரளய ஆபத் சகனைச் சொல்லுகிறது -அன்று
வந்து கலந்தான் சக்கரவர்த்தி திருமகன் ஆகையாலே தத் ஸ்வ பாவத்தைப் பற்றிச் சொல்கிறது –
பிரளய காலத்தில் ஜகத்துக்கு தம்மை ஒழிய செல்லாதாப் போலே காணும்
என்னோடு கலக்க வருகிற போது அவர் வந்த படி -என்கை –

(பிரளய காலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மை யொழியச் செல்லாமையிருந்தாப் போலே
என்னை யொழியச் செல்லாதவரா யன்றோ அவர் ஸம்ஸ்லேஷிக்க வந்த போதில் இருந்தபடி என்கை.)

(பரஞ்சோதி -மேன்மை மிக்கு பல்லாண்டு மங்களா ஸாஸனம் பண்ண வேண்டும் படியும் –
நித்ய ஸூரீகள் ஆசைப் படும்படி மேன்மையின் எல்லை இங்கு -கீழ் நீர்மைக்கு எல்லையாக வந்து ஸம்ஸ்லேஷித்து
இருந்த பெருமாள் –ஸீதா பிராட்டியாகவே இவளுடைய பாவநா ப்ரகர்ஷம்)

இங்கே வந்து-
அவர் வரவாலே அவரை அனுபவிப்பது என்னும் இடம் தோற்றுகிறது –
விஷயீ கரிக்கைக்கு அவதரித்தால் போலே போகமும் அவர் வரவாலே என்கை -(பரகத ஸ்வீகார மேன்மை)

என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து –
அவர் வந்து கலந்ததனால்
நான் பெற்ற பேறு இது காண் என்கிறாள் –

பொரு கயல் கண்
ஒன்றுக்கு ஓன்று உபமானம் ஆவது ஒழிய
வேறு உபமான ரஹீதமான கண்கள் –

கயல் கண் -என்று
சம்ஸ்லேஷ தசையில் ஹர்ஷத்தால் வந்த அலமாப்பைச் சொல்லுகிறது –

நீர் அரும்ப
சோக ஸ்ருவுக்கு இலக்காய்த்து -என்கிறாள்

அரும்ப
விரஹ அக்னியால் உள் உலர்ந்து கிடக்கிறபடி –

(கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹ சோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும்.
உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர் பெருகுவதெங்ஙனே?)

புலவி தந்து
தன்னை கிட்டினாரை-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனம் -என்கிறபடியே
ஆனந்திப்பிக்க கடவ
அவன் காண் எனக்கு துக்கத்தை விளைத்தான் –

(வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெரு மான்றனை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3 )

தந்து –
அவர் தம்முடைய கிழிச் சீரையினின்றும் அழித்துத் தந்த தனம் இது காண் -என்கிறாள் –
தான் சாதித்துத்தது ஓன்று அன்றியே ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபையால்
ஸம்ஸ்லேஷத்தில் இன்பமும் விஸ்லேஷத்தில் துன்பமும் வந்த பேறு அன்றோ

(இங்கே வந்து தந்து -பரகத ஸ்வீ காரம்)

புனலரங்க மூரென்று போயினாரே –
தாம் போனால் நான் தரித்து இருக்க வேணும் என்று
பார்த்து –நம்மூர் -கோயில் என்று போனார்-

(அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே
அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப் போனார் காண்;
பிரிவில் நான் தரித்திருக்க வேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று
அழகும் போன போதை யழகும் தோழீ! நீ காணப் பெற்றிலையே! என்றாளாயிற்று.)

உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து என் –பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட -பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ -ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
புனலரங்க மூரென்று போயினாரே –இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்—–என்று அந்வயம்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –