Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -180-188-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 7, 2014

சூர்ணிகை -180-

ஆக
ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் என்றத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதிப்பதாக உபக்ரமித்தார் –

இவன் தான்
முந்நீர் ஞாலம் படைத்த
என் முகில் வண்ணன்
என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு
ஸ்ருஷ்டியாதிகளைப்
பண்ணும் –

நடுவு சொன்ன –
ஆர்த்தாதி சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்வமும்
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் ஆகிற
இவை இரண்டையும் உப பாதியாது ஒழிவான்-என் -என்னில்
காரணந்து தயேய-என்றும்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடி
காரண வஸ்துவே உபாசயமும் ஆசரயணீயமும் ஆகையாலே காரணத்வம் சொன்ன போதே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிற சதுர்வித சமாஸ்ரயணீயத்வமும்
பலமத உபபததே -என்கிறபடியே பல பரதவ ஹேதுவான
சர்வ சக்தி யோகம் கீழே உக்தம் ஆகையாலே
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் அர்த்தாத் உக்தம் என்னும் நினைவாலும்
அவற்றில் உப்பாத நீயாம்சம் மிகவும் இல்லாமையாலும்
தத் உப்பாத்னம் பண்ணிற்று இலர்
ஆகையால் கீழ்ச் சொன்ன காரணத்வத்தோடே விக்ரஹ யோஹத்துக்கு அந்வயத்தைச்
சொல்லிக் கொண்டு அருளுகிறார்-

இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே -என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் என்று –
அதாவது
இப்படி ஜகத் சர்க்காதி கர்த்தாவாக சொல்லப் பட்ட இவன் தான்
எனக்காக
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலம் என்று மூன்று வகைப் பட்ட நீரை யுடைத்தான
சமுத்ரத்தோடே கூடின ஜகத்தை ஸ்ருஷ்டித்த
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவனே என்று
ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தத்தில் சொல்லுகிற படியே
விக்ரக ஸ ஹிதனாய்க் கொண்டு ஸ்ருஷடி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணும் -என்கை
முகில் வண்ணன் என்கிற இது ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள்
பலரும் வியாக்யானம் பண்ணினார்களே ஆகிலும்
விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனும் ஒரு யோஜனை யுண்டு என்று கொள்ள வேணும்
ஒன்றுக்கு பல யோஜனைகள் உண்டாய் இ றே இருப்பது –

—————————————————————————————–

சூர்ணிகை -181-

இனி இந்த விக்ரஹத்தின் யுடைய வை லஷண்யத்தை ஒரு சூர்ணிகை யாலே விஸ்தரேண
உபபாதிக்கிறார் –

விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய்
இருக்கும்-

விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதம் யாகையாவது
-ஆனந்த மயமான ஸ்வரூபமும் ஆனந்தா வஹமான குணங்களும் போல் அன்றியே
நிரதிசய ஆனந்தாவஹமாய் இருக்கையாலே
அவற்றிலும் காட்டில் மிகவும் அபிமதமாய் இருக்கை –

ஸ்வ அனுரூபம் ஆகையாவது -அநநுரூபமாய் இருக்கச் செய்தேயும் அபிமதமாய் இருக்குமவை போல் அன்றிக்கே
தனக்கு அனுரூபமாய் இருக்கை-

நித்யமாகை -ஆவது –
ஸ்வரூப குணங்களோ பாதி அநாதி நிதானமாய் இருக்கை –
லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண்கையாலே இதுக்கும் அவயவிதவேன அநித்யத்வம் வாராதோ என்னில் வாராது
எங்கும் ஒக்க அவயவ சம்பந்த மாதரம் அல்ல அநித்யத்வ ஹேது அவயவ ஆரப்தம் –
அவயவ சம்பந்தம் மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாம் ஆகில் கர சரணாத அவயவ சம்பந்தம் உண்டான ஆத்மாவுக்கும் விநாசம் வர வேணுமே
இங்கு அப்படி அவயவார பதத்வத்தில் பிரமாணம் இல்லாமையாலே
இது கர சரணாத யவயவ யோகியாய் நிற்கச் செய்தேயும்
நித்யமாயே இருக்கும் என்று இப்படி விவரணத்தில் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இ றே-

ஏக ரூபமாகை யாவது –வ்ருத்தி ஷயாதி விகார ரஹிதமாய் இருக்கை
சதைக ரூப ரூபாயா -என்னக் கடவது இ றே –

ஸூத்த சத்வாத்மகமாகை யாவது —
குணாந்தர சம்சர்க்கம் இல்லாத சத்வத்துக்கு ஆச்ரயமாய் இருக்கிற அப்ராக்ருத த்ரவ்யமே வடிவாய் இருக்கை –
ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி -என்னக் கடவது இ றே –

சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் –
சுத்த சத்வாத்மகம் ஆகையாலே குண த்ரய ஆச்ரயமான சேதன தேஹம் போலே
ஞானமயம் ஆகையாலே தேஜோரூபமான ஸ்வரூபத்தை
புறம் தோற்றாதபடி மறைக்கை அன்றிக்கே
மாணிக்கத்தை செப்பாக சமைத்து அதிலே பொன்னை இட்டு வைத்தால்
உள்ளிருக்கிற பொன்னை அது புறம்பே நிழல் எழும்படி தோற்றுவிக்குமா போலே –
எண்ணும் பொன்னுருவாய் -என்கிறபடியே ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே

பொன்னுரு என்று சொல்லப் படுமதான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு தான் பிரகாசகமாய் இருக்கை-

நிரவதிக தேஜோ ரூபமாகை யாவது –
நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக ஜாதிய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
ஏக ஜாதீய த்ரவ்யாத்மகமான கதயோத சரீர தேஜஸ் சில் காட்டிலும்
ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோதிசயம் போலே
இவை ச வதிக தேஜஸ சாம்படி தான் நிரவதிக தேஜஸ் சை யுடைத்தாய் இருக்கை –

சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாகை யாவது –
சௌகுமார்யம் சௌந்தர்யம் லாவண்யம் சௌகந்த்யம் யௌவனம்
முதலான கல்யாண குண சமூஹத்துக்கு கொள்கலமாய் இருக்கை –
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்ய
யௌவன அத்யந்த குணநிதி திவ்ய ரூப
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் இ றே –

யோகி த்யேயமாகை யாவது –
பகவத் தயா நபரமான பரம யோகிகளுக்கு சுபாஸ்ரயமாய்க் கொண்டு
எப்போதும் த்யான விஷயமாய் இருக்கை
காசா நயா தவா மருதே தேவி சர்வ யஞ்ஞமாயம் வபு
அத்யாசதே தேவ தேவஸ்ய யோகி சிந்தயம் கதாபருத –
என்று அசாதாரண விக்ராஹமே யோகி சிந்தயமாகச் சொல்லப் பட்டது இ றே

சகல ஜன மோகனமாகை யாவது –
ஜ்ஞான அஞ்ஞான விபாகம் அற சகல ஜனங்களையும் ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றுமதாய் இருக்கை –
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரிணம் -என்றும்
சர்வ ஸ்தவ ம்நோஹர –
கண்டவர் தம் மனம் வழங்கும் -என்னக் கடவது இ றே –

சமஸ்த போக வைராக்ய ஜனக-மாகையாவது –
தன வை லஷண்யத்தைக் கண்டவர்களுக்கு
ஸ்வ இதர சகல விஷய அனுபவத்திலும் ஆசை அறுதியை விளைக்குமதாய் இருக்கை-
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆராத தோள்-என்னக் கடவது இ றே –

நித்ய முக்த அனுபாவ்ய-மாகை யாவது –
அபரிச்சின்ன ஜ்ஞானாதி குணகரான நித்யராலும் முக்தராலும்
சதா பஸ்யந்தி சூரய-படியே அநவரதம் அனுபவிக்கப் படுமதாய் இருக்கை –

வாசத் தடம் போலே சகல தாப ஹர-மாகை யாவது –
கண் கை கால் தூய செய்ய மலர்களா -என்று தொடங்கி
ஆழ்வார் வர்ணித்த படியே திவ்ய அவயவங்களும் திரு மேனியுமான சேர்த்தியாலே
பரப்பு மாறத் தாமரை பூத்து பரிமளம் அலை எறியா நிற்பதொரு தடாகம் போலே இருக்கையாலே
தன்னைக் கிட்டினவர்களுக்கு சம்சாரிக்க விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசி அற
சகல தாபத்தையும் போக்குமதாய் இருக்கை –

அநந்த அவதார கந்த-மாகை யாவது –
அஜாயாமானோ பஹுவிதா விஜாயதே -என்றும்
பஹூ நிமே வயதி தானி -என்றும் சொல்லப்படுகிற
அசங்க்யாதமான அவதாரங்களும் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி கொண்டு
தீபா துதபன்ன ப்ர தீபம் போலே
வருகிறவை யாகையாலே அவை எல்லாவற்றுக்கும் மூலமாய் இருக்கை
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி -என்றும்
கல்பே கல்பே ஜாயமானச ஸ்வ மூர்த்தாயா –என்றும்
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -என்றும் சொல்லக் கடவது இ றே

சர்வ ரஷகம் -ஆகை யாவது –
ஐஸ்வர் யாதிகளோடு கேவலரோடு
பகவத் சரணாகதர்களில் உபாசகரோடு -பிரபன்னரோடு -அனுபவ கைங்கர்யரான நித்ய முக்தரோடு
வாசி அற சர்வருடைய
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி களைப் பண்ணுவது
திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்க் கொண்டே ஆகையாலே
எல்லாருக்கும் ரஷகமாய் இருக்கை –
சர்வாபாஸ்ரயம் -ஆகை யாவது –
உபய விபூதிக்கும் ஆச்ரயமாய் இருக்கை –

அஸ்த்ர பூஷண பூஷிதம் -ஆகை யாவது –
கீழ்ச் சொன்ன சர்வாஸ்ரயத்வ ஸூ சகமாம் படி
அஸ்த்ர பூஷன அத்யாயத்தில் சொல்லுகிறபடியே
விபூதய அபிமானிகளான திவ்ய ஆயுதங்களாலும்
திவ்ய ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய் இருக்கை –
ஆத்மா நமஸ்ய ஜகதோ நிர்லேபம குணாமலம் பிபாததி கௌச்துபமணிமா ஸ்வரூபம்
பகவான் ஹரி ஸ்ரீ வத்ஸ சமஸ்த தானதர மன நதேச சமாசரிதம் பிரதானம் புத்திர பயாசதே கதா ரூபேண மாதவே
பூதாதி மிந்த்ரியா திஞ்ச த்வித அஹங்கார மீச்வர பிபாததி சங்ககரு ரூபேண
சாரங்க ரூபேண ச ஸ்திதிதம் சல ஸ்வரூப மத்யந்த ஜவே நானா தரிதா நிலம் –
சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தததே விஷ்ணு கரே ஸ்திதிதம்
பஞ்ச ரூபாது யாமாலா வைஜயந்தீ கதாபருத ச பூத ஹேது
சங்கா தோபூத மாலாச ச த்விஜ யாதீந்த்ரிய விசேஷாணீ
புத்தி காமா தமாக நிவி சர ரூபாணாய சேஷாணி தானி ததே ஜனார்த்தனா
பிபாததி யச்சாசிரத நமச்யுதோ தயந்த நிர்மலம் வித்யாமயந்து தத் ஜ்ஞானம் வித்தியாச மமசாம் ஸ்திதிதம் -என்னக் கடவது இ றே-

—————————————————————————
சூர்ணிகை -182-

ஆக -விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதித்தார் கீழ் –
இந்த விக்ரஹ யோக பிரயுக்தமான ஈஸ்வரனுடைய பரத்வாதி பஞ்ச பிரகாரத்தையும்
தனித் தனியே ஸூ வியக்தமாக தர்சிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -பிரதமம்
அது தன்னை உத்ஷேபிக்கிறார் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான்
பரத்வம்
வ்யூஹம்
விபவம்
அந்தர்யாமித்வம்
அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே
கூடி இருக்கும் –

அதாவது -இத்தை சொல்லி அருளி
ஸ்ரீ லஷ்மி பூமா நீளா நாயகனாய் -என்றதையும் உபபாதித்து விட்டு
பின்னை இது சொல்லாது ஒழிவான் என் என்னில்
அதில் உபபாதிக்க வேண்டுவது பணி இல்லாமையாலும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனா
உபாபயாம பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்கையாலே
மேல் சொல்லுகிற பரத்வத்திலே அர்த்ததாதுகதமாம் என்னுமதைப் பற்றவும்
தனித்து உபபாதிதிலர்-ஆகையால் விரோதம் இல்லை –

ஈஸ்வர ஸ்வரூபம் -என்கிற இடத்தில்
ஸ்வரூப சப்தத்தால் சொல்லுகிறது -ஸ்வ அசாதாரண விக்ரஹதை யாதல்
விக்ரஹ விசிஷ்டமான ஸ்வரூபம் தன்னை யாதல் –
சங்கரஹேண் இட்டு அருளின மற்றை இரண்டு தத்வ த்ரய படியிலும் ஒருபடியிலே திரு மேனியும் அஞ்சு படியாய் இருக்கும் -அதாவது
பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அந்தர்யாமித்வம் -அர்ச்சாவதாரம் -என்றும்
மற்றைப் படியிலே ஈஸ்வர ஸ்வரூபம் ஹேய பிரதிபடமாய் -என்று தொடங்கி
பத்நீ பரிஜன விசிஷ்டமாய் இருக்கும் -என்றத்தை உபபாதித்த அநந்தரம்
இது தான் அஞ்சு படியாய் இருக்கும் என்றும்
இதம் சப்தத்தாலே பிரக்ருதமான ஈஸ்வர ஸ்வரூபத்தை பராமர்சிதது
அது தான் பரத்வாதி ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும் என்று இவர் தாமே அருளிச் செய்கையாலே
இப்படி பரத்வாதி பஞ்ச பிரகார விசிஷ்டனாய் இருப்பன் என்னும் இடத்தை
மம பிரகாரா பஞ்சேதி பரா ஹூரா வேதாந்த பாரக
பரோ வ்யூஹச்ச்ச விபவோ நியந்தா சர்வ தேஹி நாம
அர்ச்சாவதார ச ச ததா தயாலு புருஷர்க்ருதி இத யேவம்
பஞ்சதா பராஹோர் மம வேதாந்த விதோ ஜனா -என்று
விஷ்வக் சேன சம்ஹிதையிலே தானே அருளிச் செய்தான் இ றே-

——————————————————————————————–

சூர்ணிகை -183-

இனி இந்த அஞ்சு பிரகாரத்தையும் அடைவே உபபாதிக்கக் கோலி பிரதமம் பரத்வத்தை
உபபாதிக்கிறார் –

அதில்
பரத்வமாவது
அகால கால்யமான
நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு
போக்யனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

அதாவது
அவ்வைந்திலும் வைத்துக் கொண்டு பரத்வம் ஆவது
நாகால சததரவை பரபு -என்றும்
கலா முஹூர்த்ததாதி மாயச்ச கால ந யத விபூதே பரிணாம ஹேது -என்றும்
யாவை நஜாது பரிணாம பதா சப்தம் சா காலாதி கா தவ பரா மஹதீ விபூதி -என்றும்
யத காலாத அபிசேளிமமம -என்றும் சொல்லுகிறபடியே
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
காலகாலயம் அன்றிக்கே இருப்பதாய்
நலமந்த மில்லதோர் நாடு -என்றும்
ஆனந்தம் அளவிறந்து அத்விதீயமாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
யத்ர பூர்வே சதாயாச சந்திதேவா -என்றும்
யத்ராஷய பிரதமஜா யே புராணா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அசங்குசித ஜ்ஞானராய் இருந்துள்ள
அநந்த கருட விஷ்வக்சேனர்திகளான நித்ய சூரிகளுக்கும்
சூர்ய கோடி ப்ரதீகாச பூர்ணே நதவயுத சந்நிபா யஸ்மின் பதே விரஜாந்தே முக்தாஸ சம்சார பந்ததை -என்கிறபடியே
நிவ்ருத்த சம்சாரராய்
அசங்கு சித ஜ்ஞானரான முக்தருக்கும்
அனுபவ விஷய பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை –
வைகுண்டேது பரே லோகே நித்யதவேன வ்யவஸ்திதம்
பச்யந்திச சதா தேவம் நேதரைர் ஜ்ஞாநேன வமரா -என்னக் கடவது இ றே-

———————————————————————————-

சூர்ணிகை -184-

அநந்தரம் வ்யூஹத்தை உப பாதிக்கிறார் –

வ்யூஹமாவது
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும்
சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும்
உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண
பிரத்யும்ன
அநிருத்த
ரூபேண
நிற்கும் நிலை –

அதாவது -வ்யூஹத்துக்கு விநியோகம் லீலா விபூதியில் ஆகையாலே
இவ் விபூதியினுடைய ஸ்ருஷ்டி என்ன ஸ்திதி என்ன சம்ஹாரம் என்ன
இவற்றை நிர்வஹிக்கைக்காகவும்
புபுஷூக்களான சம்சாரிகளை அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை
பண்ணி ரஷிக்கைக்காகவும்
முமுஷூக்களாய் உபாசிக்குமவர்களுக்கு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக
தன்னை வந்து பிராபிக்கைக்கு உடலான அனுக்ரஹத்தை பண்ணுகைக்கு உடலாகைக்காகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்துக்களாய்க் கொண்டு
நிற்கும் நிலை வ்யூஹம் ஆவது -என்கை –
இதில் இன்ன வியூஹத்தாலே இன்னது செய்யும் என்னும் இடம் மேல் உப பாதனத்திலே கண்டு கொள்வது –
சதுர்விதச ச பகவான் முமுஷூணாம் ஹிதாயா அன்யே ஷாம் அபி லோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்தித்ய ந்த சித்தயே -என்றும்
ஆன நதயாத தவ சேனா நே யயூஹா ஆதயோ மயே ரித
அநாதி கர்ம வச்யா நாம சம்சாரே பததாமத
என்று தொடங்கி
உபாசகா நுக்ரஹார்த்தம் ஜகதோ ரஷணாய ச -என்றும்
ஆவி ராசீத பகவத பஞ்சாயுத பரி ஷக்ருதருக்மாபச சோயமே மலச
சர்வ சாஸ்த்ரேஷூ சப்தித சோயம் பிரத்யும்ன நாம நாபூத
ததோக நாதாவபுர்த்தர
சோயாம சங்கர்ஷணா ககயோபூத ததேகா ந்த வபுர்தர இந்திர நீல பிரதீகாச
எஸ சாஸ்த்ரேஷூ சப்தித ததோ நாம நா அநிர்த்ததோயம் ஸ்வயமேவ வைபவ நமுனே ததேகா ந்த வபுர்யுகதச ததா தவிககந ப்ரப-என்றும்
பகவத் சாஸ்த்ரத்திலே ஸ்ருஷ்டியாதிகளும்
சம்சாரி சாம் ரஷணமும்
உபாசக அனுக்ரஹமும் ஆகிற வ்யூஹ கிருத்யங்களும்
சங்கர்ஷணாதி வுயூஹங்களும் -சொல்லப் பட்டது இ றே –
சதுர்விதச ச பகவான் என்கிற இடத்தில்
சதுர்விதமாகச் சொல்லிற்று வாஸூ தேவரையும் கூட்டுகையாலே –

——————————————————————————————

சூர்ணிகை -185-

இந்த பர வ்யூஹங்களுக்கு தன்னில் விசேஷம் ஏது என்ன
அருளிச் செய்கிறார் –

பரத்வத்தில்
ஜ்ஞாநாதிகள் ஆறும்
பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘
இவ்விரண்டு குணம்
ப்ரகடமாய் இருக்கும் –

அதாவது
சம்பூர்ண ஷட்குணச தேஷு வா ஸூ தேவோ ஜகத்பதி -என்றும்
பூர்ண சமிதி ஷாட்குண்யோ நிச தரங்கா ரண வோபம் -என்றும்
ஷணணாம் யுகபது நமேஷாத குணா நாம ஸ்வ பர சோதிதாத
அநந்த ஏவ பகவான் வா ஸூ தேவச சனாதன -என்றும் சொல்லுகிறபடியே
வாஸூ தேவ ரூபமான பரத்வத்திலே
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆகிற ஆறு குணங்களும் பரிபூரணமாய் இருக்கும்
சங்கர்ஷணாதி ரூபமான வ்யூஹத்தில் -தத்ர தத்ர அவசிஷ்டமயத குணா நாம த்வியுகம் முனே அனுவிருத்தம் பஜதயேவ தத்ர தத்ர யதாத்தம் -என்கிறபடியே
அவிசிஷ்டமான குண சதுஷ்ட்யமும் தத்ர தத்ர அனுவிருத்தமாய் நிற்கச் செய்தேயும்
அதிகரித்த கார்யங்களுக்கு அனுகுணமான இவ்விரண்டு குணமே பிரகாசமாய் இருக்கும் என்கை
குணை ஷட்பிச தவேதை பிரதமதா மூர்த்தி ச தவ பவௌ
ததஸ திசரச தேஷாம்
த்ரியுக யுகளை ஹி த்ரிபிறப்பு வ்யவஸ்ததா யா சைஷா
ந்து வரத சாவிஷ கருதி வசாத பவான சர்வத்ரைவ தவ கணித மகா மங்கள குணா -என்று
இது தன்னை ஆழ்வான் அருளிச் சசெய்தார் இ றே-

————————————————————————————

சூர்ணிகை -186-

இனி இந்த சர்கர்ஷணாதிகள் மூவர் பக்கலிலும் பிரகாசிக்கிற குண விசேஷங்களையும்
இவர்கள் தான் இன்ன கிருத்யங்களுக்கு கடவராய் இருப்பார்கள் என்னுமத்தையும்
தனித் தனியே அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
பிரதமத்தில் சங்கர்ஷணர் படியை அருளிச் செய்கிறார் –

அதில் சங்கர்ஷணர்
ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி
ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து
பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது
சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும்
பண்ணக் கடவராய் இருப்பார் –

அதாவது வ்யூஹ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு சங்கர்ஷணர்
தத்ர ஞான பல த்வந்தவாத ரூபம் சங்கர்ஷணம் ஹரே -என்றும்
பகவான் அச்யுதோபீததம ஷட் குணே ந சமேதித பல ஞாநௌ குநௌ தஸ்ய சப்பு டௌ கார்ய வாசனா முனே -என்றும் சொல்லுகிறபடியே
சர்வகுணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமாக
ஜ்ஞான பலங்கள் இரண்டும் கூடி
சோயம் சமஸ்த ஜீவானாம் அதிஷ்டாத்ருதயச ச்ததித-என்றும்
சங்கர்ஷண ச து தேவாசோ ஜகத் ஸ்ருஷ்டும் நாச தத ஜீவ தத்வம் அதிஷ்டாய பரக்ருதேச்து விவிசய தன -என்றும்
சொல்லுகிறபடியே
பிரக்ருதிக்கு உள்ளே மயங்கிக் கிடக்கிற ஜீவ தத்தவத்தை அதிஷ்டித்து
அந்த அதிஷ்டான விசேஷத்தாலே இத்தை பிரக்ருதியில் நின்றும்
நாம ரூப விசேஷம் தோற்றும்படி விவேகித்து
விவேகாந்தரம் தேவ பிரத்யும்ன தவ மவாப ச -என்றும்
சோயம பிரத்யுமன நாம பூத ததேகாந்தவ புத்திர -என்றும்
சொல்லுகிறபடியே
பிரத்யும்ன அவஸ்தையும் பஜிதது –
சாஸ்திர பிரவர்த்த நஞ்சாபி சம்ஹாராஞ்சைவ தேஹி நாம -என்றும்
பலேன ஹாதீ தம ச குணென நிகிலம் முனே ஜ்ஞாநேன தநுதே சாஸ்திரம்
சர்வ சித்தாந்த கோசரம் வேத சாஸ்திரம் இதி ககயாதம பாஞ்சராத்ரம் விசேஷத –
என்றும் சொல்லுகிறபடியே வேதாதி சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை –

———————————————————————————-

சூர்ணிகை -187-

அநந்தரம் பிரத்யும்னர் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்யும்னர்
ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி
மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும்
மனு சதுஷ்டயம் தொடக்கமான
சுத்த வர்க்க சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர்-

அதாவது -ஐஸ்வர்ய வீர்ய சம்போதத ரூபம் பிரத்யும்னம் உச்யதே -என்றும்
பூர்ண ஷடகுண ஏவாயம் அச்யுதோபி மகாமுனே குணா ஐஸ்வர்ய வீர்யா க்க யௌ ச்புடௌ தஸ்ய விசேஷத -என்றும்
சொல்லுகிறபடியே சகல குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
கார்ய அனுகுணமான விசேஷண சப்புடங்களாய் இருக்கிற ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
மன சோயம் அதிஷ்டாத மநோ மய இதீரத -என்கிறபடியே
ஜ்ஞான பிரசரண த்வாரமான மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து –
ஐஸ்வர் யேண குணே நாசௌ ஸ்ருஜதே தச சரா சரம வீர்யேண சர்வ தர்மாணி பிரவர்த்தயதி சர்வச –
என்கிறபடியே சாஸ்தராத்த அனுஷ்டான ரூபமான தர்மங்களின் யுடைய உபதேசத்தையும்
மநு நாம சாசமக்ர்தோ முக பாஹூரு பாத்த சதுராணாம் ப்ரஹ்மணா தீ நாம
சாச்த்வாரம் ஜகத் பத்தி த்விஜ யுகமம் ஷத்ர யுகமம் விஷய யுகமம் ததைவ ச
மிதுநஞ்ச சதுர்தச்ய ஏத நமனு சதுஷ்டயம் மனுப்யோ மான வசதம்
ஸ்திரீ புமமிது ந்தோ பவேதே ஏகைகர்ம வர்ண பேதேன தேபயோ
மாநவ மாநவ சஹசா சமபபுபூ யுச்ச ஸ்திரீ புமமிது நதச ததா
மனுஷ்யாச்ச ததச தேபா பராதுஷயா வீதமதசரா ஏதே ஹி சுத்த சத்வ சதா தேஹா நதம நா நயயாஜின நிராசீ
கர்ம கரணான மாமேவ பராப நுவனதிதே த்ரயந்தேஷூ
ச நிஷணதா த்வாத் சாதயா தம சீததகா வ்யூஹ நிவ்ருத்திம்
சத்தம் குர்வதே தே ஜகத்பதே த்ருதீ யேன ஜகத்தாதர நிர்மிதா மனசா ஸ்வயம்
குண பிரதானயோகே ச நிஷ்டிதா புருஷர்ஷப இத்யேஷசுததசாகோயம் ச னேச தவ கீர்த்தித -என்று
விஷ்வக் சேன சமிதையில் சொல்லுகிற படியே
முக பாஹூரு பாதஜராய்
மிதுனமாய் இருக்கிற ப்ரஹ்மானாதி மனு சதுஷ்டயம் தொடக்கமாக
இந்த மனுக்கள் பக்கல் நின்றும் மிதுனங்களாய்க் கொண்டு தனித் தனியே
வர்ண பேதேன யுண்டான மாநவ சத்தமும்
அப்படியே ஸ்திரீ பும மிதுனங்களாய்க் கொண்டு
அந்த மாநவர் பக்கலிலே நின்றும் யுண்டான மாநவரும்
அவர்கள் பக்கலிலே நின்றும் யுண்டான மனுஷ்யருமாயக் கொண்டு
நிர்மதஸ்ரராய் சுத்த சத்வச்தராய் தேஹானத மன யயாஜிகள் அன்றிக்கே
பல அபி ச நதி ரஹீதராய் கொண்டு
பகவத் சமாராதன ரூபமான கர்மத்தை அனுஷ்டியா நிற்பரே
வேதாந்ததிலே நிஷனாதராய்
த்வாதச அஷர முகேன அத்யாத்ம சிந்தராய்க் கொண்டு
சர்வேவரனுடைய வ்யூஹ அனுவருத்தியை எப்போதும் பண்ணா நின்று கொண்டு
பகவத் பிராப்தியைப் பண்ணா நிற்கும் சுத்த வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை-

—————————————————————————–

சூர்ணிகை -188

அநந்தரம் அநிருத்தர் படியை அருளிச் செய்கிறார் –

அநிருத்தர்
சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
கால ஸ்ருஷடிக்கும்
மிசர ஸ்ருஷடிக்கும்
கடவராய் இருப்பர்-

அதாவது -அநிருத்தர் சக்தி தேஜஸ் சமுத காஷாத அனிருத்த தநூஹரே -என்றும்
புருஷோபி மகாதயஷா பூர்ண ஷட் குண உச்யதே சக்தி தேஜௌ குனௌ
தஸ்ய ஸ்புடா கார்யவசனா முனே -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ குணங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமான
சக்தி தேஜஸ் ஸூ க்களோடே கூடி –
சக்த்யா ஜகதிதம் சர்வ மனனதாண்டம் நிரந்தரம் பிப்ரததி பாதி ச ஹரிர
மணிசாநுரி வாணி கம தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபய தயா தமனோ முனே -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும்
உஜ்ஜீவன ஹேதுவான தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
தருடி முதலாக த்விபிரார்தன பர்யந்தமாக உண்டான கால ஸ்ருஷடிக்கும்
துரீ யோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மணா மசருஜத புன முக பஹூரு பஜ ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டின
சதுர்விதோ பூத சாவாச தேன ஸ்ருஷ்டச ஸ்வயம்புவா ப்ரஹ்மணாதயாஸ்
ததா வரணா ராஜா பிரசுர்யதோ பவன
தராய் மார்சேஷூ நிஷணாத பலவாதே ரமந்திதே தேவா தீ னேவ மன வானா ந ச மாம் மே நிரே ச்வத
தம பராயாச தவிமே கேசி தமமே நிதானம் பிரகுர்வதே
ஆராத யஞ்ச நியந்தாரம் ந ஜானனதே பரஸ்பரம்
சல லாபம் குர்வதோ வயகரவேதா வா தேஷு நிஷ்ட்டிதா
மாம ஜ ஜானநதி மோகன தே ஹி சம்சார வாதமனி இத்யேஷ மிஸ்ரா சாஸ்து கணேச தவ கீர்த்தித –
என்று விஷ்வக் சேனை சம்ஹிதையில் சொல்லுகிறபடி
ப்ரஹ்மாவினுடைய முக பாஹூ ருபாதஜராய்
ப்ரஹ்மணாதி வர்ணராய்
ரஜ பிரசுரராய் பூர்வபாமரர் நிஷதணராய் ஷலவாசதிலே ரம்யா நிற்பரே
ஈஸ்வரனை ஒழிய தேவாதிகளை ஆராதயாரக நினைத்து
அதிலே சிலர் தம பிரசுரராய்
பகவன் நிந்தனையைப் பண்ணி ஆராதயனாய நியந்தாவாய் இருக்கிற அவனை அறியாதே
வயகரமான வேத வாக்யங்களிலே மனசை வைத்து ஒருவர்க்கு ஒருவர் சல்லாபித்துக் கொண்டு
ஆகையாலே பகவத் ஜ்ஞான பக்திகளிலே அந்வயம் இன்றிக்கே
ஸ்வ ஜாதிகளிலே ரம்யா நின்று கொண்டு
ஸ்வ கர்ம பல அவசானத்திலே அதபதித்து கர்ம விஷயமான மனசை யுடையவராய்
ஜரா மரணங்களை அடைந்து சம்சார மார்க்க கர்மிகளாய்
திரியுமவர்கள் ஆகிற மிஸ்ரா வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியும் பண்ணக் கடவராய் இருப்பர் என்கை-

அண்டத்தையும் ஆண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனர்க்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் -என்று
சமஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் அத்வாரமாகவும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவும் –
இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும்
இவ்வண்டத்திலே பத்தாதம் சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும்
இதுக்கு கீழே ஸ்வ சங்கல்ப்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும்
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவே கொள்ள வேணும் ஆகையால்
பிரத்யும்ன கிருத்யமாகச் சொன்ன சுத்த வாதமா ஸ்ருஷ்டி அத்வாரகம்
அநிருத்தன் கிருத்யமாகச் சொன்ன மிஸ்ரா ஆத்மா ஸ்ருஷ்டி சத்வாரகம் என்ன ஒண்ணாது
ஆகையால் சுத்தாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ராத்மா ஸ்ருஷ்டியும்
சத்வார ஸ்ருஷ்டி தன்னிலே சேதனர் உடைய கர்ம விசேஷ பிரயுக்தமான சங்கல்ப விசேஷத்தாலே யாகக் கடவது
இந்த சுத்தவாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ரவாத்மா ஸ்ருஷ்டியும் எம்பெருமான் தானே அருளிச் செய்ய கேட்ட அநந்தரம்
பகவன் தேவ தேவேச சர்வஞ்க்ன பரமேஸ்வர
கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிஸ்ரசாமோ ஜகத் பத்தி
சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயை ஷாம நிர்தய புருஷோத்தமா –
என்று சேனை முதலியார் கேட்க
விஹாய சுத்த ஸ்ரீசஞ்ச மிஸ்ரா சாசய காரணம் ஸ்ருணுஷ்வ
கண நாத
தவம் தயாலு நிர்தயோ ந ச சர்வஞ்ஞோஹம் ந சந்தேஹச
ததாபி ச சருஜா மயஹம்
அநாதய விதயா சமமுஷ்ட சேமுஷீ காண நாரா நிஹா
வீஜயாஜா ஜ்ஞான பிரசங்கம் து நிஷித்த கரணம் ததா விஹிதா கரணஞ்சாபி வீஷயை ஷாம
பராதகான மிசராத்மா கரோம யேவ ப்ரஹ்மனா பரமேஷ்டினா
ஏவம் ஸூ கருத லேசேன சுத்த சத்வாத்மா கரோமி ச
மனுபர முகசாசோ யச சுத்த சாசோ மயேரித
சுத்த சத்வ மயாசே சர்வே மதபக்தி நிரதாச சதா மமார்ச்ச்சனா ஜீதேன தரியா
பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மகா முனே பிராப்யம் வைகுண்டம்
ஆசாதய ந நிவர்த்தந்தி தேவயயா ஏவம் சர்வேஷூ குரவத ஸூ மான வேஷூ முமுஷூ ஷூ
ஸ்ருஷடி ஷயோ மகா நாசித நாரகீ பூச தருண வருதா
இதி ஜ்ஞாத்வா மிஸ்ராத்மா கரியதே லீலயா மயா –
என்று பகவான் தானே அருளிச் செய்கையாலே —

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -165-179-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 6, 2014

சூர்ணிகை -165-

இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாதரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்

இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –

அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும்-கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –

இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் மருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –

ஏகமேவ அத்விதீயம் -என்றும்
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இ றே –

————————————————————————————–

சூர்ணிகை -166-

இப்படி தான் ஜகத்தாய பரிணமிக்கும் ஆகில்
நிர்க்குணம் நிரஞ்சனம் நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய -என்றும்
இவனை நிர்விகாரனாகச் சொல்லும்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
நிர்விகாரன்
என்னும்படி
என்
என்னில்-

——————————————————————————–

சூர்ணிகை -167-

அத்தை பரிஹரிக்கிறார்

ஸ்வரூபத்துக்கு
விகாரம்
இல்லாமையாலே –

அதாவது
சித் அசித் ரூப விசேஷண விசிஷ்டனான தானே ஜகதாய பரிணமிக்கும் இடத்தில்
விசேஷ்யமான ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே
நிர்விகாரன் என்னக் குறை இல்லை என்கை –

—————————————————————————————

சூர்ணிகை -168-

ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லை யாகில்
இவன் தானே ஜகத்தாய பரிணமிக்கிறான் -என்ற பரிணாமம்
இவனுக்கு உண்டாம்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அதில்
பரிணாமம்
உண்டாம்படி
என்
என்னில் –

————————————————————————————–

சூர்ணிகை -169-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

விசிஷ்ட
விசேஷண
சத்வாரகமாக –

விசிஷ்டஞ்ச தத் விசேஷணம் சேதி விசிஷ்ட விசேஷணம் -என்று
பிரதமம் காம தாரயா சமாசத்தைப் பண்ணி
த்வாரேண சஹ வர்த்தத இதி சத்வார கம் – என்று
அனனதாபதத்தை பஹூ வரீகித்து
விசிஷ்ட விசேஷண -சத்வாரகம்
என்று த்ருதியாதத புருஷனாக சப்தத்துக்கு வ்யுத்புத்தி பண்ணிக் கொள்வது
விசிஷ்டம் ஆவது -விசேஷ யுக்தமானதாய்
விசிஷ்டமான விசேஷணம் என்று தண்ட குண்டலாதிகள் போல் அன்றிக்கே
சரீர பூதம் ஆகையாலே ப்ருதக் சித்த யர்ஹம் அல்லாத விசேஷத்தை உடைத்தான
சித் அசித் ரூப விசேஷணத்தைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
விசிஷ்ட விசேஷணம் என்கிற இதுக்கு
சரீர பூதமாய்க் கொண்டு என்றும் ஒக்கத் தன்னோடு கூடி இருக்கிற விசேஷணம் என்றும் பொருளாம்
அப்போதும் பிருதக் சித்தி அர்ஹமான தண்ட குண்டலாதிகளில் வ்யாவ்ருத்தி சித்திக்கும் இ றே
விசேஷணத்தாலே சத்வாரகமாக என்றது
இப்படி அப்ருதக் சித்த விசேஷணம் ஆகிற ஹேதுவாலே
த்வார சஹிதமாக இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்கை
இத்தால்
அப்ருதக் சித்தமான சித் அசித் ரூப விசேஷண த்வாரா
இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்றது ஆயிற்று –

————————————————————————————————

சூர்ணிகை -170-

இப்படி ஸ்வரூபத்துக்கு விகாரம் இன்றிக்கே இருக்க
ஸ்வ சரீர பூத விசேஷண த்வாரா
கார்ய ஜகத்துக்கு எல்லாம் இவனே உபாதானமாகக் கூடுமோ -என்ன
அருளிச் செய்கிறார்-

ஒரு சிலந்திக்கு
உண்டான
ஸ்வபாவம்
சர்வ சக்திக்கு
கூடாது
ஒழியாது இ றே

அதாவது
அல்ப சக்திகதமான சிலந்திக்கு ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே
ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தாலே தத் அனுஜாதமாக கார்ய ஜாததுக்குத் தான் உபாதானமாம் படியாம் யுண்டான
ஸ்வ பாவம்
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்று ஒதப் படுகிற சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே என்கை-
யாதோரண நாபிஸ் ஸ்ருஜதே கருஹண தே ச -என்றும்
ஊராண நாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத கரசதே-என்னக் கடவது இ றே
கார்யே நந்தே சவத நுமுகதச தவா முபாதா நாமா ஹூ ஸ
சா தே சகதிச ஸூ கர மிதரச சேதி வேலாம விலங்கய
இச்சா யாவத விஹரதி சதா ரெங்கராஜா நபேஷா சைவாச நாததி சயகரீ சோரண நாபௌ விபாவய -என்று
அருளிச் செய்தார் இ றே பட்டர் –

இப்படி நிமித்த உபாதான காரணத்வங்களை சொல்லி
சஹ காரி காரணத்வம் சொல்லாது ஒழிந்தது –
சர்வஞ்ஞத்வாதி குண யோகம் கீழே சொல்லுகையாலும்
நிமித்த உபாதானங்களுக்கு ஐகயம் சொல்லுகையாலும்
தன்னடையே சித்திக்கும் என்னுமத்தாலே –

ஆகை இ றே வேதாந்த சூத்ரத்திலும் இதி விசேஷித்து சொல்லாது ஒழிந்தது –

———————————————————————————————

சூர்ணிகை -171-

ஆக ஈச்வரனே த்ரிவித காரணமும் என்னும் இடம் சாதித்தாராய் நின்றார் கீழ் –
அஜாமேகாம -என்றும்
சௌர் நாதாய நதவே தீ -என்றும்
த்ரி குணம் தஜ ஜகத யோ நிர நரதி பராபவாபயயமா -என்றும்
அஜோஹயகே -என்றும்
ஜ்ஞாஜஜௌ தவா வஜா வீச நீ சௌ -என்றும்
அஜோ நித்யச சாச்வதோயம் புராண -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
நித்தியமாய் இருந்துள்ள அசித்தையும் சித்தியும் ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது தான் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது
அசித்தை பரிணமிப்பிக்கையும்
சேதனனுக்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப்
பண்ணுகையும் –

கீழே ஜகத் காரண பூதனாகச் சொல்லப்பட்ட ஈஸ்வரன்
சேதன அசேதநாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது –
தம பரே தேவே ஏகி பவதி -என்கிறபடியே தன்னோடு அவபிகதமாய்க் கிடந்தது தமஸ் சப்த வாச்யமான அசித்தை
ததஸ ஸ்வயம் பூர பகவா நவயகதோ வயஞ்ஜய நதிதம மகா பூதாதி திவ்ருத தௌஜா பராதுரா ஸீத தமோ நுத -என்கிறபடியே
ஸ்வ பரே ரண விசேஷத்தாலே ஸ்வ சமாத விபகதமாக்கி
அநந்தரம்
அஷர அவஸ்ததம் ஆக்கி
அது தன்னை பின்பு அவ்யவகத அவஸ்த்தம் ஆக்கி
அத்தை வ்யக்த சப்த வாச்யமான சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்கள் ஆம் படி பரிணமிப்பிக்கையும் –
அசித விசேஷிதான பிரளய ஸீமநி சமசாத -என்கிறபடியே
கரண களேபர விதுரனாய் –
போக மோஷ சூன்யனாய்
அசித் விசேஷிதனாய் -கிடந்த சேதனனுக்கு
போக ஸ்தானமான சரீரத்தையும்
போக உபகரணங்களான இந்த்ரியங்களையும்
கொடுத்து
போக மோஷ பாகித்வ அனாஹனாம்படி பண்ணி
முன்பு சங்கு சிதமாய்க் கிடந்த ஜ்ஞானத்தின் யுடைய விகாசத்தை பண்ணுகையும் -என்கை
சேதனனுக்கு என்ற இது ஜாதி ஏக வசனம் –

——————————————————————————————-

சூர்ணிகை -172-

அநந்தரம் ஸ்திதி சம்ஹாரங்களின் யுடைய பிரகாரங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி
பிரதமம் ஸ்திதியினுடைய பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்திதிப்பிக்கை யாவது –
ஸ்ருஷ்டமான வஸ்துக்களில்
பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று
சர்வ ரஷைகளையும்
பண்ணுகை –

ஸ்திதிக்கை யாவது என்னாதே
ஸ்திதிப்பிக்கை யாவது -என்றது -ஸ்திதி யாவது சிருஷ்டி சம்ஹாரங்கள் போலே
கர்த்ருகதம் அன்றிக்கே ரஷணத்துக்கு
கர்மீபவிக்கிற வஸ்துகதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
ஸ்ருஷ்டமான இத்யாதி -அதாவது -தத் த்ருஷ்ட்வா -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே
பயிருக்கு ரஷகமாய்க் கொண்டு அனுகூலமாய் நிற்கும் நீர் நிலை போலே ததேவ அனுபிராவிசத் என்கிறபடியே
தத் ரஷண அனுகூலமாக உள்ளே பிரவேசித்து நின்று
தத் தத் வஸ்து அனுகுணமான
சர்வ ரஷைகளையும் பண்ணுகை -என்கை
அனுபிரவேச சப்தத்துக்கு அனுகூலதயா பிரவேசம் இவர்க்கு இவ்விடத்தில் விவஷிதம் –

இத்தால்
ஸ்திதிப்பிக்கை யாவது
நிலைப்பிக்கையாலே
தத் தத் ரஷணங்களைப் பண்ணுகை
என்றது ஆயிற்று –

—————————————————————————————-

சூர்ணிகை -173-

அநந்தரம் சம்ஹார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

சம்ஹரிக்கை யாவது
அவி நீதனான புத்ரனை
பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற
கரணங்களை
குலைத்திட்டு வைக்கை –

அதாவது
விசித்ரா தேக சம்பத்தீ ரீச்வராய நிவேதிதும் -என்கிறபடியே
ஸ்வ சமாஸ்ரயணீயத்தைப் பண்ணி
உஜ்ஜீவிப்பிகைக்கு உறுப்பாக
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு
தன்னை வழி படுககை அன்றிக்கே
பாஹ்ய விஷய பிரவணனாய் போகப் புக்க வாறே
விதி நிஷேத வச்யனாய் ஒடுங்கி வர்த்தியாமல்
ஸ்வைரசாரியான புத்ரனை ஹித பரனானபிதாவானவன்
ஒரு வியாபார அர்ஹன் அல்லாத படி விலங்கை இட்டுஒடுக்கி வைக்குமா போலே
தன்னை ஒழிந்த விஷயங்களிலே அதி பிரவணனாய் நடக்கிற
கரணங்களைக் குலைத்து ஒடுக்கி இட்டு வைக்கை -என்கை –

———————————————————————-

சூர்ணிகை -174-

இனி இந்த ஸ்ருஷ்டியாதிகள் தான்
பிரத்யேகம் சதுர்விதமாய் இருக்கையாலே
அத்தையும் தர்சிப்பிக்கைக்காக அருளிச் செய்கிறார்

இம் மூன்றும்
தனித் தனியே
நாலு
பிரகாரமாய் இருக்கும் –

சதுர்விபாகச சம்ச்ருஷ்டௌ சதுர்ததா சம ஸ்திதிச ஸ்திதிதௌ பிரளயஞ்ச கரோதயே ந்தே சதுர்பேதா ஜநார்த்தனா-என்னக் கடவது இ றே-

—————————————————————————————
சூர்ணிகை -175-

ஸ்ருஷ்டியில்
ப்ரஹ்மாவுக்கும்
பிரஜாபதிகளுக்கும்
காலத்திற்கும்
சகல ஜந்துக்களுக்கும்
அந்தர்யாமியாய்
ரஜோ குணத்தோடு கூட
சிருஷ்டிக்கும் –

அதாவது
ஸ்ருஷ்டியில் வந்தால் -சதுர்தச புவன ஸ்ருஷ்டாவாய் சமஷ்டி புருஷனான ப்ரஹ்மாவுக்கும் –
அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய சிருஷ்டி கர்த்தாக்களான
தச பிரஜாபதிகளுக்கும்
ஸ்ருஷ்டிக்கு அபேஷிதமான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று உத்பாதங்களான சகல ஜந்துக்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் அடைய தன பக்கலிலே பர்யவசிக்கும் படி
அந்தராத்மாவாய் ப்ரவ்ருத்தி ஹேதுவான ரஜோ குணா விசிஷ்டனாய் கொண்டு ஸ்ருஷ்டிக்கும் -என்கை –
ஏகே நாம சே ந ப்ரஹ்மா சௌ பவதவவய கத மூர்த்தி மான
மரீசி மிஸ்ரா பதயே பிரஜா நாம நய பாகத
இததம சதுர்த்தா சம ச்ருஷ்டௌ வர்தததேசௌ ரஜோ குண -என்னக் கடவது இ றே-

—————————————————————————————-
சூர்ணிகை -176-

ஸ்திதியில்
விஷணவாதி ரூபேணஅவதரித்து
மன் வாதி முகேன சாஸ்த்ரங்களை
பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய்
சத்வ குணத்தோடு கூடி
ஸ்திதிப்பிக்கும்-

அதாவது
ஸ்திதியில் வந்தால்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார -என்கிற விஷ்ணு அவதாரம் தொடக்கமாக
ஸூ ர நர திரசசாமவதாந -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே அநேக அவதாரங்களைப் பண்ணி
யதவை கிஞ்ச மனு ரவதததத பேஷஜம் -என்று ஆபத் தமனாக
ஸ்ருதி பிரசித்தனான மனு முதலான யாஜ்ஞ்ஞாவல்க்ய பராசர வால்மீகி சௌ நகாதிகள் முகேன –
ஸ்ம்ருதி இதிஹாச புராண ரூப சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து
சேதனர் அபேத பிரவ்ருத்தராகாமல் ஈடேறுகைக்கு உறுப்பான நல் வழிகளை தர்சிப்பித்து
ரஷண உபயோகியான காலத்துக்கும்
லோகத்தில் ஓன்று ஓன்று ரஷகமான சர்வ பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
ஜ்ஞான பிரகாசாதி ஹேதுவான சத்வ குண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்திதிப்பிக்கும் -என்கை –
ஏகா மசேந ஸ்திதி தோ விஷ்ணோ கரோதி பரிபாலனம்
மன்வாதி ரூபீ சானயேன கால ரூபோபாரேண ஸ
சர்வ பூதேஷு சானயேன சம்ஸ்தித
சத்வம் குணம் சமா சரிதய ஜகத் புருஷோத்தம -என்னக் கடவது இ றே
புராணத்தில் ஏகா மசேன ஸ்திதோ விஷ்ணு -என்று விஷ்ணு அவதாரம் ஒன்றையும் சொன்னது –
அவதாராந்தரங்களுக்கும் உப லஷணம் என்று கொள்ள வேணும்
விஷ்ணு வாதி ரூபேண அவதரித்து -என்று இவர் அருளிச் செய்கையாலே –

——————————————————————————————-

சூர்ணிகை –177-

சம்ஹாரத்தில்
ருத்ரனுக்கும்
அக்னி அநதகாதிகளுக்கும்
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய்
தமோ குணத்தோடு கூடி
சம்ஹரிக்கும் –

அதாவது சம்ஹாரத்தில் வந்தால்
சம்ஹாரத தாதிகளில் தலைவனான ருத்ரனுக்கும்
அவாந்தர சம்ஹர்த்தாக்களான அக்னி அநதகாதிகளுக்கும்
சம்ஹார உபயோகியான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று நாசகமான சகல பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் எல்லாம் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கண் பாராமல் செய்கைக்கு உறுப்பான தமோ குண விசிஷ்டனாய்க் கொண்டு
சம்ஹரிக்கும் -என்கை
ஆசரிதய தமசோ வருத்தி மந்தகாலே ததா பிரபு ருத்ர ஸ்வரூபோ
பகவானே காம சேன பவத்யஜ அகனய நதகாதி ரூபேண பாகேனா நயேன வர்த்ததே கால ஸ்வரூபோ பாகோ நாய்ச சர்வ பூதானி
சாபர விநாசம குர்வதச தஸ்ய சதுர்ததைவ மகாத்மான -என்னக் கடவது இ றே
ஸ்ருஷ்டியாதிகளில் சதுர்விபாகம் சொல்லுகிற இடத்தில்
அம்ச சப்தத்தாலே ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்று
அவர்கள் அவனுக்கு பிரகார பூதர் ஆகையாலே என்னும் இடத்தை
அநந்தரம்
ப்ரஹ்மா தஷாதய காலச ததைவாகில ஜந்தவ விபூதயோ
ஹரே ரேதோ ஜகத் சிருஷ்டி ஹேதவ விஷ்ணுர் மனவாதய காலச சர்வ பூதானி ஸ தவிஜ ஸ்திதிதோ
நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதய ருத்ர காலா ந்த
காதயாச்ச சமசதாச சைவ ஜந்தவ சதுர்த்தா பிரளயே
ஹயேதா -ஜனார்த்தன விபூதய -என்று
மூன்று ஸ்லோகத்தாலே ஸ்புடமாக பிரதிபாதித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –
இத்தை நினைத்தே இவரும்-அந்தர்யாமியாய் -என்று அருளிச் செய்தது
விஷ்ணு மனவாதய -என்கிற ஸ்லோகத்தில் விஷ்ணுவையும் விபூதியாக சொன்ன இது
அவதார பிரயுக்தமான விக்ரஹ பரமாகக் கடவது –

————————————————————————————-

சூர்ணிகை -178-

இனி விஷம சிருஷ்டி அடி யாக மந்த மதிகளுக்கு உண்டாகக் கடவ சங்கையை பறிஹரிக்கைக்காக
பிரதமம் தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சிலரை ஸூ கிகளாகவும்
சிலரை துக்கிகளாகவும்
ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு
வைஷம்ய
நைர் கருண்யங்கள்
வாராதோ -என்னில்

அதாவது -ஸ்ருஷ்டிக்கிற அளவில் சர்வ ஆத்மாக்களையும் ஏக பிரகாரமாக அன்றிக்கே
தேவ மனுஷ்யாதி விபாகேன சில ஆத்மாக்களை
ஸூ கிகளாயும்-சில ஆத்மாக்களை துக்கிகளாயும் ஸ்ருஷ்டித்தால்
சர்வ சமனாய்- பரம தயாவானாய் இருக்கும் ஈஸ்வரனுக்கு
எல்லார் அளவிலும் ஒத்து இராமையாகிற
வைஷயமும்-துக்கிகளாய் ஸ்ருஷ்டிக்கையால் –
பரத்துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை இல்லாமையும் வாராதோ -என்கிறதாகில் -என்கை –

———————————————————————————————

சூர்ணிகை -179-

அத்தை பரிஹரிக்கிறார் –

கர்மம் அடியாகச்
செய்கையாலும்
மண் தின்ற பிரஜையை
நாக்கிலே குறி இட்டு
அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே
ஹித பரனாய்ச் செய்கையாலும்
வாராது –

அதாவது
சிலரை ஸூ கிகளாயும் சிலரை துக்கிகளாயும் ஸ்ருஷ்டிக்கிற இது
விஷம ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பான சேதனர் உடைய கர்மம் அடியாகச் செய்கையாலும்
துக்கிகளாக ஸ்ருஷ்டிக்கிற இது தனக்கு ரோக கரமான மண்ணை விரும்பித் தின்ற பிரஜையை
மேலே தின்னாதபடி நாக்கிலே குறி இட்டு மண் தின்ன பயப்படும்படி பண்ணும்
ஹித பரதையான மாதாவைப் போலே
இவர்கள் மேல் துக்க ஹேதுவான கர்மங்களைப் பண்ண அஞ்சும்படி
ஹித பரனாய்ச் செய்கையாலும் வைஷம்ய நைர்க்கருணயங்கள் இரண்டும் இவனுக்கு வாராது -என்கை
இத்தால் -வைஷம்ய நைகருண்யே ந சாபேஷதவாத -என்கிற வேதாந்த ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
நிமே நோ ந நதஞ்சகருணஞ்ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேஷய சருஜதச தவ ரெங்க சேஷிந
வைஷம்ய நிர்க்கருண தயோர் ந கலு பிரசகதிச தத் ப்ரஹ்ம
ஸூ த்ரச்சிவா ஸ்ருதயோ கருண நதி -என்று இது தன்னை பட்டரும் அருளிச் செய்தார் இ றே –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -152-164–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 5, 2014

சூர்ணிகை -152-

ஆக
ஜ்ஞான சக்தியாதி கல்யாண குண பூஷிதனாய் -என்றதை விஸ்தரேண உபபாதித்தார் கீழ் –
அநந்தரம்
சகல ஜகத சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் -என்றதை விஸ்தரேண உபபாதிப்பதாக யுபக்ரமிக்கிறார்

இவனே
சகல
ஜகத்துக்கும்
காரண
பூதன் –

அதாவது
இவன் -என்று கீழ் சொன்ன விலஷண ஸ்வரூப குண விசிஷ்டனான ஈஸ்வரனை பராமர்சிக்கிறது
அவதாரணத்தாலே -ஜகத் காரணத்வத்தின் யுடைய அந்யோந்ய வ்யவச்சேதம் பண்ணுகிறது –
வேதாந்தத்திலே -சதேவ சோம்யே ஏகமேவ ஆஸீத் -என்று சாந்தோக்யத்திலும்
ப்ரஹ்ம வா இதமேக மேவாகர ஆஸீத -என்று வாஜச நேயகத்திலும்
ஆத்மா வா இதமேக மேவகார ஆஸீத் -என்று ஐதரேகத்திலும்
சத் ப்ரஹ்மாதமரூப சாமான்ய சப்தங்களாலே சொல்லப் பட்ட
காரண வஸ்து ஏது என்னும் ஆகாங்ஷையிலே
கதி சாமான்ய நியாயத்தாலே
ஏகோஹ வை நாராயண ஆஸீத் -என்று மகா உபநிஷத்திலே விசேஷிக்கப் பட்ட நாராயணனே
ஜகத் காரண பூதனாக நிச்சயித்து இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே
இவனே என்று சாவதாரணமாக அருளிச் செய்கிறார்

சகல ஜகத்துக்கும் காரனபூதன் -என்றது
சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்களுக்கும் காரணபூதன் -என்றபடி –
இத்தால் –சமன்வயமும் -அவிரோதமும் -சாதனமும் -பலமும் -ஆகிற அர்த்த சதுஷ்டத்தையும்
அடைவே பிரதிபாதிக்கிற உத்தர மீமாம்சையில்
அத்யாய சதுஷ்டயத்திலும் வைத்துக் கொண்டு
அததோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாசா -என்று ஜிஜ்ஞாசயமாக சொல்லப் பட்ட ப்ரஹ்மத்துக்கு லஷணமாக
ஜனமாதயச்த யத -என்று ஜகத் காரணத்வத்தைச் சொல்லி
அதனுடைய அயோக அந்யயோக வ்யவச்சேத முகத்தாலே
ஜகத் காரண வஸ்து பிரதிபாதிக சகல வேதாந்த வாக்யங்களுக்கும்
ப்ரஹ்மணி சமயக அந்வயத்தை பிரதிபாதித்த பிரதம அத்யாயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————————————-

சூர்ணிகை -153-

அவிரோத பிரதிபாதகமான த்விதீய அத்யாயத்தின் படியே
ப்ரஹ்ம காரணத்வ விரோதியான
பரமாணு காரணவாதிகளை நிராகரிக்கிறார்

சிலர்
பரமாணுவைக்
காரணம்
என்றார்கள்

சிலர் என்று பௌத்த ஆர்ஹத வைசேஷிகாதிகளைச் சொல்லுகிறது
இதில் -புத்த ஆர்ஹதர்க்கு கேவல பரமாணுக்களே ஜகத் காரணமாக மதமாய் இருக்கும்
வைசேஷிகாதிகளுக்கு பரமாணுக்கள் உபாதான காரணமாய்
ஆனுமானிக ஈஸ்வரன் நிமித்த காரணமாக மதமாய் இருக்கும்
இவர்களில் பௌத்த வைசேஷிகாதிகள் பாரத்ததி வாபயதை ஐஸ்வர்ய வீயங்கள் என்று
பரமாணுக்களை சதுர்விதமாகக் கொள்ளுவார்கள்
ஆர்ஹதர் ஏகரூபமாகக் கொள்ளுவார்கள்
இங்கனே சில விசேஷங்கள் உண்டானாலும் பரமாணு காரண்த்வ அங்கீகாரம்
எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே சிலர் என்று சமுச்சியத உபாதானம் பண்ணுகிறார் –

—————————————————————————————–

சூர்ணிகை -154-

இவர்கள் மஹீ மஹீதராதிப சகல கார்யங்களும் பரமாணு பரிமாணம் என்று இ றே சொல்வது –
அந்த பஷத்தை நிராகரிக்கிறார் –

பரமாணுவில்
பிரமாணம் இல்லாமையாலும்
ஸ்ருதி விரோதத்தாலும்
அது சேராது

அதாவது
ஜகத் காரணதயா அங்கீ கரிக்கப் படுகிற பரமாணுக்கள்
ப்ரத்யஷ சித்தமும் இன்றியே
ஆகம சித்தியும் இன்றியே
அனுமானத்தாலே சாதிக்கப் பார்க்கில்
அது ஆகம விருத்தமான அர்த்தத்தை சாதிக்க மாட்டாமையாலே
அனுமான சித்தியும் இன்றியே இருக்கையாலே
பரமாணு சத்பாவத்தில் ஒரு பிரமாணமும் இல்லாமையாலும்
ஈச்வரனே ஜகத் காரணம் என்கிற ஸ்ருதிக்கு விரோதம் ஆகையாலும்
பரமாணுக்கள் ஜகத் காரணம் என்ற வது சேராது -என்கை-

—————————————————————————————–

சூர்ணிகை -155-

அநந்தரம் -ஜகத்துக்கு பிரக்ருதியே ஸ்வதந்திர காரணம் என்று சொல்லுகிற காபில மதத்தை
நிராகரிக்கைக்காக அத்தை உத்ஷேபிக்கிறார் –

கபிலர்
பிரதானம்
காரணம்
என்றார்கள்

கபிலர் -என்கிறது கபில மத நிஷ்டரான சாங்க்யரை-
மிருதாதமகமான கடத்துக்கு மிருத் த்ரவ்யமே காரணம் ஆகிறாப் போலே
சத்வ ரஜஸ் தமோ மய ஸூ க துக்க மோஹாதமகமான ஜகத்துக்கும்
குண த்ரயங்களின் யுடைய சாம்ய ரூபமான பிரதானமே
ஸ்வ தந்த்ரமான காரணம்
ததி பாவேன பரிணமியா நிற்கும்
பயஸ் ஸூ க்கு அனநயாபேஷமாக ஆதயபரிசப நனம் முதலான
பரிமாண பரம்பரை ச்வத ஏவ கூடுகிறாப் போலே யும்
மேக விமுகதமாய் ஏக ரசமாய் இருக்கிற ஜலத்துக்கு நாரி கேள தால சூத கபித்த நிம்ப திநதரிண யாதி

விசித்ர ராசா ரூபேண பரிணாம பிரவ்ருத்தி காணப் படுகிறாப் போலேயும்
பரிமாண ஸ்வ பாவமாய் பிரதிசாகா அவஸ்தையில் சத்ருச பரிணாமமுமாய் இருந்த பிரதானத்துக்கு
அனனயாதிஷ்டிதமாகவே சாகாவவஸ்தையில் குண வைஷம்ய நிமித்தமான விசித்ர பரிமாணம் கூடும் ஆகையாலே
பிரக்ருதியே ஸ்வ தந்த்ரமாகக் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது என்று இ றே அவர்கள் சொல்வது –

———————————————————————————

சூர்ணிகை -156-

அத்தை நிராகரிக்கிறார்

பிரதானம்
அசேதனம் ஆகையாலும்
ஈஸ்வரன் அதிஷ்டியாத போது
பரிணமிக்க மாட்டாமையாலும்
சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை
கூடாமையாலும்
அதுவும் சேராது –

அதாவது
விசித்ர ஜகத் காரேண பரிணமிப்போம் என்று இருக்கைக்கு யோக்யதை இல்லாத படி
பிரதானம் சைதன்ய ரஹித வஸ்து வாகையாலும்
பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிசயாத மேசசயா ஹரி ஷோபயாமாச சம்ப்ராப்தே சர்வ காலே வயயா வயயௌ -என்கிறபடியே
ஈஸ்வரன் அதிஷ்டித்த போது ஒழிய பரிணமிக்க மாட்டாமையாலும்
தத் அதிஷ்டானம் ஒழிய பரிணமிக்கும் ஆகில்
சர்வ காலமும் சிருஷ்டியாய் செல்லுமது ஒழிய
சம்ஹ்ருதயமாய்க் கிடக்கை என்னுமது கூடாமையாலே
கால பேதேன வருகிற சிருஷ்டி சம்ஹார வ்யவஸ்ததை கூடாமையாலும்
பிரதானம் காரணம் என்கிற அதுவும் சேராது என்கை
அதுவும் -என்று பூர்வ யுக்த பரமாணு காரண வாதத்தை சமுச்சயிக்கிறது —

———————————————————————————–

சூர்ணிகை -157-

இப்படி அசேதனமான பிரதானத்தை ஜகத் காரணமாகக் கொள்ளுகிற பஷத்தை நிராகரித்த
அநந்தரம்
சேதனனை ஜகத் காரணமாகக் கொள்ளும் பாசுபதாதி மதத்தை நிராகரிக்கிறார்

சேதனனும்
காரணம்
ஆகமாட்டான்

சப்தத்தாலே கீழ்ச் சொன்ன அசேதனத்தை சமுச்சயிகிறது
ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
ஆனுமானி கேஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
பாசுபத வைஷிகாதிகள் சொல்லுகிற ருத்ரன்
சேதனரில் அந்யதமன் இ றே
ஹிரண்ய கர்ப்பஸ் சமவாத ததாகரே –இத்யாதி வாக்யங்களைக் கொண்டு
சேதனரில் அந்யதமனான ப்ரஹ்மாவையும் ஜகத் காரணமாகச் சொல்லுவாரும் யுண்டு இ றே
அவை எல்லா வற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே சேதனனும் -என்று பொதுவிலே அருளிச் செய்தது
காரணம் ஆகமாட்டான் -என்றது காரணமாக ஷமன் அல்லன் -என்றபடி-

————————————————————————————————

சூர்ணிகை -158-

எத்தாலே -என்ன அருளிச் செய்கிறார் –

கர்ம
பரதந்தனுமாய்
துக்கியுமாய்
இருக்கையாலே –

அதாவது
சங்குசித ஜ்ஞான சக்திகனாய் கொண்டு தான் நினைத்த படி ஒன்றும் செய்ய வல்ல ஷமன் அல்லாதபடி
கர்மாதீனனுமாய்
ஆனந்தியாக் கொண்டு ஜகத் வியாபாரத்திலே மூளுகைக்கு
யோக்யதை இல்லாதபடி துக்கியுமாய் இருக்கையாலே -என்கை –
அபஹத பாபமா -என்கிறபடியே
அகரம வச்யனுமாய் -ஆனந்தமய -என்கிறபடியே நிரதிசய ஆனந்தியுமாய்
இருக்கிற அவனுக்கே இ றே அப்ரதிஹத ஜ்ஞான சக்திகனாய் மன ப்ரீத்தியை யுடையவன் பண்ணும் ஜகத் வியாபாரம் கூடுவது
ப்ரஹ்மா தயாச சகலா தேவா மனுஷ்யா பசவச ததா
விஷ்ணோர் மயா மஹா
வர்த்த மோஹாந்ததம சர்வ்ருதா ஆபரஹ மசதமப
பாய நதா ஜகத நதா வ்யவச்திதா
பராணின கர்ம ஜனித சம்சார வசவா ததின-என்கிறபடியே
கர்ம வச்யருமாய்
தத கரோத ப்ரீ தேன சமாகத நய நேன ச வாமாங்குஷ்ட நகா கரேண சின நம தஸ்ய சிரோ மய
யஸ்மாத் நபரா தஸ்ய சிரச் சின்னம் தவயா மம தசமாச சாப சமா விஸ்ட கபாலீதவம் பவிஷ்யசி -என்கிறபடியே
தலை அறுபபாரும் அறுப்புண்பாருமாய்க் கொண்டு
துக்கிக்களுமாய் இருப்பார்க்கு
ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபாரம் கூடாது இ றே-

—————————————————————————————

சூர்ணிகை -159-

ஆக இப்படி விரோதி பரிஹாரங்களைப் பண்ணி
பிரதிஞ்ஞா அனுகுணமாக நிகமிக்கிறார்

ஆகையால்
ஈச்வரனே
ஜகத்துக்கு
காரணம்

ஆகையால் என்று
சேதன அசேதனங்கள் இரண்டும்
காரணம் இன்றிக்கே ஒழிகையாலே -என்கை –

——————————————————————————————-

சூர்ணிகை -160-

லோகத்திலே அவித்யா கர்ம நிபந்தனமாகவும்
பர நியோக நிபந்தனமாகவும்
காரணமாகை யுண்டாகையாலே -அவற்றைக் கழித்து
இவனுடைய காரண ஹேதுவை-அருளிச் செய்கிறார் –

இவன் காரணம் ஆகிறது
அவித்யா
கர்ம
பர நியோகாதிகளால்
அன்றிக்கே
ஸ்வ இச்சையாலே –

அதாவது
அவித்யா கர்ம நிபந்தனமான காரணத்வம் சகல ஜந்து சாதாரணம்
அதாவது -லோகத்தில் ஒன்றுக்கு ஓன்று உத்பாதகமாய்க் கொண்டு வருகிற காரணத்வம்
வைஷயிக ஸூ க பிராவண்ய ஹேதுவான அஞானத்தாலும் கர்மத்தாலும் இ றே
அதில் சாஸ்திர வச்யமான வற்றினுடைய உத்பாதகத்வம் கர்ம பிரதானமாய் இருக்கும்
அல்லாதது அவித்யா பிரதானமாய் இருக்கும்
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டு இராது
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகள் யுடைய காரணத்வம் பர நியோக பிரதானமாய் இருக்கும்
பிரஜாபதயம் தவயா கர்ம பூர்வம் மயி நிவேசி தம் -என்றும்
யெதௌ தவௌ புருஷ சரே ஷட்டௌ பிரசாத கரோ தஜௌ சம்ருதௌ
தாதாதா சித்தப நனானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
ஆதி சப்தத்தாலே இவர்க்கு விவஷிதம் –அவர்ஜீயமான -ராகமோ –என்று
நடிவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்தாராம் இத்தனை –
அந்த ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் எம்பெருமானுக்கு அவித்யா கர்ம நிபந்தனமோ
அன்றிக்கே அவர்ஜீயமான ராகமோ
இல்லையாகில் பரப்ரேரிதனாய்க் கொண்டு செய்கிறானோ என்று இ றே
அவர் சங்கா வாக்யத்தில் அருளிச் செய்தது
இவற்றால் அன்றிக்கே -ஸ்வ இச்சையால் -என்றது –
நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
அபஹதபப்மா -என்றும்
ந தசயேசகசசந-என்கிறபடியே
அவித்யாதி தோஷ பிரதிபடனாய்
தனக்கு ஒரு நியாமற் இன்றிக்கே இருப்பானாய்
இருப்பவன் ஒருவன் ஆகையாலே தன இச்சை ஒழிய ஹேதவாந்தரம் இல்லை -என்றபடி –
அசித விசேஷிதா ந பிரளய ஸீம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமா நம நா
வரத நிஜேச சயைவபரவா நகரோ பரக்ருதம் மஹதபிமா நபூத கரணா வளி கோர கிணீம்-என்றும்
பரளய சமய ஸூ பதம் சவம் சரீரை கதேசம வரத சிதசிதாககயம் ஸ்வ இச்சையா
விசத ருணாந கசிதமிவ கலாபம் சிதரமாததய தூன வன அனுசிகினி சிகீவ கரீடசி ஸ்ரீ சம்ஷம் –என்று இ றே பட்டர் அருளிச் செய்தது —

——————————————————————————————-

சூர்ணிகை -161-

இப்படி இச்சை யானாலும் இது தான் ஆயாச ரூபமாய் இருக்குமோ என்ன
அருளிச் செய்கிறார் –

ஸ்வ சங்கல்பத்தாலே
செய்கையாலே
இது தான் வருத்தம் அற்று
இருக்கும் –

அதாவது
யத்ன ரூபமான காயிக வியாபாரத்தால் அன்றிக்கே
அயத்னமான மானச வியாபார ரூப சங்கல்ப்பத்தாலே செய்கையாலே
இந்த ஜகத் சிருஷ்டி ரூப வியாபாரம் தான் இவனுக்கு அநாயாசமாய் இருக்கும் என்கை –
சோகாமயத் பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
மனசைவ ஜகத் ஸ்ருஷ்டும் சம்ஹாராஞ்ச கரோதி யா
தச்யாரி பஷ ஷபனேகியா நுதயம் விசதர -என்றும்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய்
முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்துன் பெருமை -என்றும்
சொல்லக் கடவது இ றே-

—————————————————————————————-

சூர்ணிகை -162-

அநாயாசமாய் இருந்ததே யாகிலும் அவாப்த சமஸ்த காமத்தா
பரி பூர்ணனாய் இருக்கிறவனுக்கு
இந்த வியாபாரத்தால் பிரயோஜனம் என் -என்ன -அருளிச் செய்கிறார் –

இதுக்கு
பிரயோஜனம்
கேவல
லீலை –

அதாவது
இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –
லீலை யாவது -தாதாதவிக ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தை
கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –
இதுக்கு பிரயோஜனம் -என்று
சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
தாததவிக ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது
இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு தயூதாதிகள் போலேயும்
பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும்
தாதாரவிகர சமாய் இருப்பது ஓன்று இ றே இவனுக்கு –
இத்தால் -லோகவ்தது லீலா கைவல்யம் -என்கிற சூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
கரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய -என்று ஸ்ரீ பராசர பகவானும்
அப்ரமே யோநி யோஜ் யசச யத்ர காம கமோ வசீ
மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும்
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும்
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும்
அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இ றே-

ஆனால் –
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும்
உய்ய வுலகு படைத்து -என்றும்
விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ கருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சமயுதா -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை -என்றும்
அசித விசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசாத கரண களேபரைர் கடயிதும் தயமான ம நா -என்றும்
சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையாததயம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –
உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது
பராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிது மன்ய தசசச காத்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே தவம் ஸ்வதந
த்ரயம் ஐஸ்வர்யம் அபாய நு யோஜய மாஹூ-என்கிறபடியே
நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே
சகல ஆத்மாக்களையும் யுகபதேய முக்தராக்க வல்லனாய்
இருக்கச் செய்தேயும்
ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து
கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே இ றே
லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்
ஆகையால் இவ்விபூதியில் லீலையே பரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
சூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————————-

சூர்ணிகை -163-

இப்படி ஜகத் சிருஷ்டி பண்ணுகிறது லீலார்த்தமாக ஆகில்
சம்ஹார தசையில் லீலை குலையாதோ –
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
சம்ஹாரத்தில்
லீலை ‘
குலையாதோ
என்னில் –

———————————————————————————

சூர்ணிகை -164-

அத்தைப் பரிஹரிக்கிறார்

சம்ஹாரம்
தானும்
லீலை -யாகையால்
குலையாது –

அதாவது
கொட்டகம் இட்டு விளையாடுகிற பாலர்க்கு
இட்ட கொட்டகம் தன்னை மீள அழித்துப் பொகடுகிறது தானும்
லீலையாய் இருக்குமா போலே
இவற்றை சம்ஹரிக்கை தானும் ஸ்ருஷ்டியோபாதி லீலையாய் இருக்கையாலே
அப்போதும் லீலை குலையாது -என்றபடி –
அகில புவன ஜன்ம ஸ்த்தேம பங்காதி லீலே -என்றும்
நிகில ஜகத் உதய விபவ லய லீல-என்றும்
ஸ்ருஷ்டியோபாதி சம்ஹாரத்தையும் அவனுக்கு லீலையாக அருளிச் செய்தார் இ றே எம்பெருமானார்-

———————————————————————————-

ஆக
இதுக்கு கீழே
ஈச்வரனே ஜகத்துக்கு காரணம் -என்றும்
இவன் காரணம் ஆகிறது ஹேத்வந்தரங்களால் அன்று என்றும்
ஸ்வ இச்சையால் -என்றும்
சங்கல்ப மாத்திர வகலபதம் ஆகையாலே இதுதான் அநாயாசமமாய் இருக்கும் என்றும்
இது தனக்கு பிரயோஜனம் லீலை என்றும்
சொல்லி நின்றது –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -148-151-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 5, 2014

சூர்ணிகை -148-

இப்படி ஸ்வரூப வைலஷண்யத்தை யுபபாதித்த அநந்தரம்
ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களின் யுடைய
வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

இவனுடைய
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
நித்யங்களாய்
நிஸ் ஸீமங்களாய்
நிஸ் சங்கயங்களாய்
நிருபாதிகங்களாய்
நிர்த் தோஷங்களாய்
சமா நாதிக ரஹீதங்களாய்
இருக்கும் –

ஆதி சப்தத்தாலே –
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூ க்களும்
வாத்சல்யாதிகளும்
சௌர்யாதிகளும்
ஆகிற குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது-

நித்யங்கள் ஆகையாவது -உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை
ஸ்வரூப அனுபந்திகள் ஆகையாலே யாவதாத்மா பாவிகளாய் இருக்கும் இறே

த இமே சத்யகாமா – என்று
குணங்களின் யுடைய நித்யத்வம் ஸ்ருதி சித்தம்
காமயந்த இதி காமா கல்யாண குணா த இமே சதயா நித்யா இத்யாதயா -என்று இறே
இந்த ஸ்ருதிக்கு அர்த்தம்

ஈறில வண் புகழ் -என்றார் இறே ஆழ்வார்-

நிஸ் ஸீமங்கள் – ஆகையாவது –
ஓர் ஒன்றே அவதி காண ஒண்ணாது இருக்கை
யதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ -என்று
மீண்டு விட்டது இறே ஆநந்த குணத்தை எல்லை காணப் புக்க வேதம்

இது ஆநந்த குணம் ஒன்றிலும் அன்று இறே
குணங்கள் எல்லாம் இப்படி இறே இருப்பது

உபாயு பாயபஜபுவோபி பூருஷாந பரகல்ப்ய தே யே சதமித்ய நுகாரமாத
கிரச தவ தேகைக குணாவதீ பசாய சதா ஸ்திதிதா நோதய மதோதி சேரதே -என்னக் கடவது இறே
உயர் நலம் என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது-

நிஸ் சங்கயங்கள் -ஆகையாவது –
இப்படிப் பட்ட குணங்கள் தான் எண்ணிறந்து இருக்கை –

யதா ரதநாதி ஜலதேர சங்கயேயாநி புத்ரக ததா குணா ஹயன நதஸ்ய
அசங்க யேயோ மஹாத மன -என்றும்

வாஷாயுதைர் யஸ்ய குணா நசகயா வக்தும் சமேதைரபி சர்வ லோகை
மகா தம நச சங்கு சக்ராசி பானே விஷ்ணோர் ஜிஷ்ணோ வசூதேவா தமசஜ்ச்ய -என்றும்

சதுர்முகா யுயாதி கோபிவக்தா பவேன நா கவாபி விசுததசேதா சதே குணா
நாமயுதை கம்ம சம வதேன ந வா தேவவா பரசீத -என்றும்

நஹி தஸ்ய குணா சசர்வே சர்வைர் முனி கணைரபி
வக்தும் சக்யாவியுகதச்ய சத்வாதயை ரகிலை குணை-என்னக் கடவது இறே

எண்ணில் தொல் புகழ் -என்றார் இறே ஆழ்வாரும்

யேஷவே கஸ்ய குண சய விபு ருடபி வைலோகோ தாம ஸ்வாச்ராயம் குர்யாத் தாத்ருசா வைப வைர கணிதைர்
நிஸ் ஸீம பூமா நவிதை நித்யைர் திவ்ய குணை
சத்தோ திக சுபதவை காசபதா தமாஸ்ரையை ரிததம
ஸூந்தர பாஹூ மஸ்மி சரணம் யாதோ வநாதரீஸ்வரம் —என்கிற ஸ்லோகத்தில்
குணங்களின் யுடைய நிஸ் சீமதிச சங்கயத்வங்களை அருளிச் செய்தார் இறே ஆழ்வான் –

நிருபாதி கங்கள் –ஆகையாவது –
பரதந்திர வஸ்து கதங்கள் ஆகையாலே
ஸ்வோயாதிகளிலே ஈஸ்வர இச்சை யாகிற உபாதியை அபேஷித்து இருக்கும்
சேதன குணங்கள் போல் அன்றிக்கே ஸ்வா பாவிகங்களாய் இருக்கும் –

ஸ்ரீ பாஷ்யத்தில் –
ஸ்வ பாவதோ நிரசத நிகில தோஷா நவதிகாதிசய சங்க யேய
கல்யாண குணகண புருஷோத்தாமோ பிதீயதே -என்கிற
இடத்துக்கு வியாக்யானம் பண்ணுகிற ஸ்ருத பிரகாசகாரர்

அநவதிக அதிசய சப்தத்தாலே -நித்ய சித்தரை வ்யாவர்த்திக்கிறது என்று முந்துற ஒரு யோஜனை பண்ணி
அனுஷ்க தேன ஸ்வ பாவத இதி பதே நவா நித்ய சித்த வ்யாவ்ருத்தி
தேஷாம் தாத்ருச குணகத்வம் ஹி பகவன் நிதயே சசாதீ நம் -என்று
அனந்தர யோஜனையில் இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே

ஸ்வ பாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்று
குணங்களின் யுடைய ஸ்வா பாவிகத்வத்தை ஸ்ருதியும் சொல்லா நின்றது இறே
இந்த ஸ்ருதியில் கிரியை என்கிறது நியமத்தை –
பரா சயேதி-ஜ்ஞான சக்த்யாதி நாம ஸ்வ பாவிகத்வ முக்தம் க்ரியா -நியமனம் என்று இறே இதுக்கும்
ஸ்ருதி பிரகாசகாரர் வியாக்யானம் பண்ணிற்று-

நிர்த் தோஷங்கள் -ஆகையாவது
‘ஹேய குணா சம்சர்க்கம் ஆகிற தோஷம் இன்றிக்கே இருக்கை –

அபஹத பாப்மா விஜரோவிமிருத்யூர் விசோகா
விஜிகதஸ் சோபிபாசச சத்யகாமஸ் சத்யா சங்கல்ப -என்றும்

சதவாதயோ ந சநதீச யத்ரச பராக்ருதா குணா -என்றும்

ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் அஸ்ய சேஷத -என்றும்

பகவத் சப்த வாச்யானி வினா ஹேயைர் குணாதிபி-என்றும்

தேஜோ பல ஐஸ்வர்ய மகா வைபோஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்றும்

பர பராணாம் சகலா நயதரகாலே சாதயசச நதி பராவரேசே -என்கிறபடியே

ஆச்ரயம் ஹேய பிரத்ய நீகம் ஆகையாலே இவற்றுக்கு
ஹேய குணா சம்சர்க்க தோஷா பத்திக்கு யோக்யதை இல்லை இறே –

சமா நாதிக ரஹீதங்கள் -ஆகையாவது
சேதநாந்தர குணங்களை சமமாகவும்
ஈஸ்வர குணங்களை அதிகமாகவும் யுடைத்தாய் இருக்கும்

சேதன குணங்கள் போல் அன்றிக்கே
தனக்கு ஒத்ததும் மிக்கதும் இன்றிக்கே இருக்கை –

ந தத் சமச் சாபயதி கச்ச த்ருச்யதே -என்கிற
சமாதிக தரித்திர வஸ்துவை ஆச்ரயமாக யுடையவை ஆகையாலே
இவையும் சமநாதிக ரஹீதங்களாய் இருக்கும் இறே –

தோஷோ பதாவதி சமாதி சயான சங்க யா நிர்லேப மங்கள குனௌ கதுவா ஷடதே
ஜ்ஞான தைச்வர்யா சக்தி வீர்ய பலாச சிஷ சத வாம ரங்கேச பாச இவ ரத்னம் நாக கய நதி -என்கிற
ஸ்லோகத்தில் இவை அத்தனையும் பட்டர் அருளிச் செய்தார் இறே-

—————————————————————————–

சூர்ணிகை -149-

இப்படி இருந்துள்ள குணங்கள் தான் மூன்று வகைப்பட்டு
இருக்கையாலே
அம் மூன்று வகைக்கும் விஷயங்களை வகுத்து அருளிச் செய்கிறார் –

இவற்றில்
வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான
ஜ்ஞான சக்தியாதிகளுக்கு
எல்லாரும் விஷயம் –

அதாவது –
வாத்சல்யாதிகள் -என்கிற ஆதி சப்தத்தாலே
சௌசீல்ய சௌலப்ய மார்தவ ஆர்ஜவ -வாதிகளான குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது –
விஷயம் அனுகூலர் என்றது ஆஸ்ரிதர் -என்றபடி –
சௌர்யாதிகளுக்கு-என்கிற ஆதி சப்தத்தாலே பராக்ரமத்தைச் சொல்லுகிறது
விஷயம் பிரதிகூலர் -என்றது -ஆஸ்ரித விரோதிகள் என்றபடி
தவஷத் அன்னம் ந போக்தவ்யம்-தவிஷ நதம நைவ போஜ்யதே
பாண்டவ நத விஷசே ராஜன மம ப்ராணா ஹி பாண்டவா -என்று
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் என்று அருளிச் செய்தான் இறே-

இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகள் -இங்கே ஆதி சப்தத்தாலே
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூக்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதிகளுக்கும் சௌர்யாதிகளுக்கும் ஜ்ஞான சக்தியாதிகள்
காரணம் ஆகையாவது
பரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலமதுலம் ஐஸ்வர்யம் அகிலம் விமாயாதம் வீர்யம் வரத பரமா சக்தி ரபிச பரம தேஜஸ் சேதி பரவர குண ஷட்கம்
பிரதம ஜம குணா நாம் நிஸ சீம நாம கணந விகுணா நாம பரசவபூ -என்றும்
மங்கள குண ளாவாஷா ஷடேதா -என்றும் சொல்லுகிற படியே
அவற்றுக்கு ஊற்று வாயாய் இருக்கை –
அவை தான் வஸ்து உதகாஷா பாதக ஷட் குணயாத்தகுணா பாவமாய்த்து இ றே இருப்பது

எம்பெருமான் யுடைய திவ்ய ஆத்ம குணங்கள் ஆவன ஜ்ஞான சக்த்யாதி குண ஷட்கங்களும்
அதிலே பிறந்த சௌசீல்யாதிகளும்-என்ற இவ் வாக்யத்துக்கு அர்த்தம் எழுதும் அளவில்
அதிலே பிறக்கை யாவது -வஸ்து உத்கர்ஷ ஆபாதக ஷாட் குண்ய ஆயத்த குண பாவம் -ஆகை-என்று இ றே விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –
இந்த குண ஷட்கத்தில் வைத்துக் கொண்டு ஞானம் ஆவது
அஜடம் ச்வாதம் சமபோதி நித்யம் சர்வாகஹானம் ஜ்ஞான நாம குணம் பராஹூ பிரதமம் குணசிந்தகா
என்கிறபடியே என்றும் ஒக்க -சர்வ விஷய பிரகாசமுமாய்
ஸ்வ பிரகாசமுமான குண விசேஷம் –
சக்தியாவது -ஜகத் பிரகிருதி பாவோ யசஸா சக்தி பரி கீர்த்திதா -என்கிற
ஜகத் பிரகிருதி பாவமாதல் அகடிதகட நா சாமர்த்தியம் ஆதல்
பலமாவது-சரமஹா நிசது யா சத்தம் குர்வதோ ஜகத் பலம் நாம குணசதஷ்ய கதிதோ குண சிந்தகை -என்கிற
ஜகத் காரணதவ பிரயுக்தமான சரமம் இன்றியிலே ஒழிகை ஆதல்
பலம் தாரண சாமர்த்தியம் -என்கிற சமஸ்த வஸ்து தாரண சாமர்த்தியம் ஆதல்

ஐஸ்வர்யம் ஆவது -கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யா பரிபருமகிதம ஐஸ்வர்யம் நாம தத் பரோகதம் குணா தத்வராதாதா சிந்தனை -என்கிற
கர்த்ருத்வ லஷணமான ஸ்வா தந்த்ர்யம் ஆதல்
சமஸ்த வஸ்து நியமன சாமர்த்தியம் ஆதல் –
வீர்யமாவது -தசயோபாத நபாவேபி விகார விரஹோ ஹி யா வீர்யம் நாம குணா சசோ யமச யுததவோ பரா ஹவய -என்று
ஜகத் உபாதானமாகா நிற்கச் செய்தேயும்
ஸ்வரூப விகாரம் இன்றியிலே ஒழியும்படியான அவிகாரயதை –
தேஜஸ் ஆவது -சஹ காரியா நபேஷா யா தத் தேஜஸ் சமுதாஹருதம -என்கிற
சஹாகார நைரபேஷம் ஆதல்
பராபி பவன சாமர்த்தியம் ஆதல் –
இவற்றுக்கு எல்லாரும் விஷயமாகை-ஆவது
அனுகூல ரஷணாதிகளுக்கும் பிரதிகூல நிரசனாதிகளுக்கும்
ஜ்ஞான சக்தியாதி விசிஷ்டனாய்க் கொண்டு
நிர்வஹிக்க வேண்டுகையாலே
இவற்றுக்கு சர்வரும் விஷயமாய் இருக்கை –

—————————————————————————————————-

சூர்ணிகை -150-

இப்படி குணங்களை மூன்று வகை யாக்கி அவற்றுக்கு விஷயங்களை தர்சிப்பித்த அளவு அன்றிக்கே குணங்களுக்கு பிரத்யேகம் விஷய நியமம் யுண்டாகையாலே
அத்தையும் தர்சிப்பிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி
கீழ் எடுத்த குணங்களில் சிலவற்றுக்கு தனித் தனியே குணங்களை தர்சிப்பிக்கிறார் –

ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு
சக்தி அசக்தர்க்கு
ஷமை சாபராதர்க்கு
கிருபை துக்கிகளுக்கு
வாத்சல்யம் சதோஷர்க்கு
சீலம் மந்தர்க்கு
ஆர்ஜவம் குடிலர்க்கு
சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு
மார்த்த்வம் விஸ்லேஷ பீருககளுக்கு
சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு
இப்படி எங்கும் கண்டு கொள்வது-

ஜ்ஞானம் ஆவது-சேதனருடைய -ஹிதாஹித நிரூபணத்துக்கு உறுப்பான குணம் -ஆகையால்
கவாஹமத்யே நததுர்புத்தி கவசாத மஹித வீஷணம் யத்திதம் மமதேவேச ததா ஜ்ஞாப்ய மாதவ -என்கிறபடியே
ஸ்வ ஹிதாஹித நிரூபணாதிகளுக்கு அஞராய் இருக்குமவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-

சக்தி -அசக்தர்க்கு -என்றது -சக்தியாவது அகடிதகட நா சாமர்த்தியம்
ஆகையால் ஸ்வ இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களில் அசக்தராய் இருக்குமவர்கள் உடைய-கார்ய சித்திக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

ஷமை சாபதாரர்க்கு என்றது -ஷமை யாவது அபராத சஹத்வம்
ஆகையால் அஹம் அஸ்ய அபராத நாம் ஆலய -என்கிறபடியே அபராத சஹிதராய் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
ஷமா சாபராதே நுதாபி நயுபேயோ கதம சாபராதேபி தருபதே மயி சயாத-என்று இ றே பட்டர் அருளிச் செய்தது-

கிருபை துக்கிகளுக்கு -என்றது
கிருபை யாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் -ஆகையாலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று துளங்குகை முதலான
துக்கம் யுடையவர்களுக்கு உறுப்பாயிருக்கும் -என்கை
தயா பரவசாய நஹராபவவயதா ஸூ காயதே மம ததஹம தாயாதிக -என்று அருளிச் செய்தார் இ றே பட்டர் –

வாத்சல்யம் சதோஷர்க்கு -என்றது வாத்சல்யமாவது -அன்று ஈன்ற கன்றின் உடம்பின் வழுவை ஆதரித்துப் புஜிக்கும் தேனுவைப் போலே
ஆஸ்ரிதர் யுடைய தோஷங்களைப் போக்யமாக கொள்ளுவதொரு குணம் –
ஆகையால் அவித்யா காமாதி தோஷ சஹிதராய் தங்களை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

சீலம் மந்தர்க்கு -என்றது
சீலமாவது -பெரியவன் தாழ்ந்தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வ பாவம் –
ஆகையால் அவர்கள் யுடைய தண்மையை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

ஆர்ஜவம் குடிலர்க்கு -என்றது -ஆர்ஜவம் ஆவது -கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் இருக்கை
ஆகையாலே தங்கள் உடைய கரண த்ரய கௌடில்யத்தை நினைத்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -என்றது சௌஹார்த்தம் ஆவது எப்போதும் நன்மையை சிந்தித்து இருக்கும் ஸ்வ பாவம்
ஆகையாலே சர்வ காலமும் தீமையே நினைத்து இருக்கும் துஷ்ட ஹிருதயராகத் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு
உறுப்பாய் இருக்கும் -என்கை-

மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்கு -என்றது
மார்த்வம் ஆனது -ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாகையாலே
தன்னுடைய விச்லேஷத்தில் பீரு உடையவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு -என்றது
சௌலப்யமாவது-அதீந்த்ரியமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகை
ஆகையால் தன்னைக் காண வேணும் என்று ஆசைப் பட்டவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-

இத்தால்
இவனுடைய ஜ்ஞானத்தில் அபேஷை உள்ளது -தம்தாமுடைய ஹிதாஹித நிரூபணத்தில் அறிவு இல்லாதவர்களுக்கு ஆகையாலே ஜ்ஞானம் அஜ்ஞர்க்காய் இருக்கும் –
இவனுடைய சக்தியில் அபேஷை உள்ளது -ச்வேஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் அசக்தராய் இருப்பார்க்கு ஆகையாலே சக்தி அசக்தருக்காய் இருக்கும் –
பொறை யில் அபேஷை உள்ளது அபராதம் உடையார்க்கு ஆகையாலே ஷமை சாபராதர்க்காய் இருக்கும் –
ஐயோ என்று இரங்க வேண்டுவது நோவு பட்டவர்க்கு ஆகையாலே கிருபை துக்கிகளுக்காய் இருக்கும்
தோஷத்தை போக்யமாகக் கொள்ள வேண்டுவது தோஷவான்களுக்கு ஆகையாலே வாத்சல்யம் சதோஷர்க்காய் இருக்கும் –
தண்மை பாராதே புரையறக் கலக்க வேண்டுவது தாழ்ந்தவர்கள் விஷயத்திலே ஆகையாலே சீலம் மந்தர்க்காய் இருக்கும்
கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்க் கொண்டு தன்னை அமைத்துப் பரிமாற வேண்டுவது
செவ்வைக் கேடர் விஷயத்தில் ஆகையாலே ஆர்ஜவம் குடிலர்க்காய் இருக்கும் –
தான் எப்போதும் நன்மை சிந்திக்க வேண்டுவது தம்தாமுக்கு தீமைகள் சிந்திக்கும்
தீ மனத்தர் விஷயத்தில் ஆகையாலே சௌஹார்த்தம் துஷ்ட ஹிருதயர்க்காய் இருக்கும்
விரஹம் பொறாத மென்மை வேண்டுவது விரஹத்துக்கு அஞ்சுவார் திறத்தில் ஆகையாலே
மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்காய் இருக்கும்
அதீந்த்ரமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காக வேண்டுவது
அவ்வடிவைக் காண்கையில் ஆசை உடையவர்களுக்கு ஆகையாலே
சௌலப்யம் காண ஆசைப்பட்டவர்களுக்காய் இருக்கும்
என்று குணங்களின் உடைய விஷய பிரதி நியத்வத்தை தர்சிப்பித்தார் ஆயிற்று
இப்படி எங்கும் கண்டு கொள்வது -என்றது
கீழ் சொன்ன பிரகாரத்தில் அனுக்தமான குணங்கள் எல்லா வற்றுக்கும்
பிரத்யேகம் விஷயங்களை தர்சித்துக் கொள்வது -என்றபடி –

————————————————————————————-

சூர்ணிகை -151-

-ஏவம் பூத குண விசிஷ்டன் ஆகையாலே ஈஸ்வரன் ஆஸ்ரித விஷயத்தில் பரிமாறிப் போரும்படிகளை
விஸ்தரேண ஒரு சூர்ணிகையாலே அருளிச் செய்கிறார் மேல் –

இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல்
ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும்
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத்
தன்னையும் தன்னுடைமையும் வழங்கி
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருதத்வத்தையே நினைத்து
அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய்
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே
குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும்
அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு
அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி
தான் ஈடுபட்டு
அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்
புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு
ச்நேஹித்துக் கொண்டு போரும்-

இப்படி -என்று கீழ் உக்தமான குண யோக பிரகாரத்தை பராமர்சிக்கிறது –
ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே -என்று
குண யோகத்தை ஹேதுவாக அருளிச் செய்தது
மேல் சொல்லுகிற பரிமாற்றங்கள் எல்லாம் ஓரோர் குணகார்யம் என்று தோற்றுகைக்காக-
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி -இது கிருபா கார்யம்
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று ஈடுபடுகிறது பர துக்க அசஹிஷ்ணு வாகையாலே இ றே-
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து –
இது சௌஹார்த்த கார்யம்
எப்போதும் ஒக்க -என்றது இவர்கள் அறிந்த காலத்தோடு அறியாத காலத்தோடு வாசி அற
சர்வ காலத்திலும் -என்றபடி
ஆஸ்ரித சர்வ மங்கள அ ந்வேஷண பரனாய் இருக்கிறது சௌஹார்யத்தாலே இ றே-

தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்க்கேயாய்-
இது ஆஸ்ரித பாரதந்த்ர்ய கார்யம்
ஸ்வ அர்த்த பரனாயே இருத்தல் ச்வார்த்த பரார்த்தங்கள் இரண்டுக்கும்
பொதுவாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
சந்தரிகாதி பதார்த்தங்கள் போலே பரார்த்த ஏக வேஷனாய் இருக்கிறது பாரதந்த்ர்யத்தால் இ றே –
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே –
இது சாம்யகுண கார்யம்
ஆஸ்ரிதர் பக்கல் ஜன்மாதிகளால் உண்டான தண்மை பாராமல் பரிமாறுகிறது
சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே
ஜன்மாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசி அற
ஆஸ்ரயணீ யதவே சமனாய் இருக்கும் ஸ்வ பாவத்தாலே இ றே-

தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் –
இது அசரண சரண்யத்வ கார்யம்
தாங்களும் தங்களுக்கு ரஷகர் அன்று -பிறரும் தங்களுக்கு ரஷகர் அன்று
என்று கை வாங்கின தசையில் தான் ரஷகன் ஆகிறது
பற்றிலார் பற்ற நின்றான் -ஆகையாலே இ றே –
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும் அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் –
இது சத்யகாமத்வ கார்யம் –
மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல் வாய் மாண்டானை -என்கிறபடியே
நெடும் காலத்திலே கடல் கொண்டு போன சாந்தீபன் புத்ரனையும்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் -என்கிறபடியே
ஜனித்த போதே
என்னுடைய மனைவி காதல் மக்களை பயத்தாலும் காணாள்-என்கிறபடியே
பெற்ற தாயும் தர்சிக்கப் பெறாத படி நாச்சியார் தங்கள் ஸ்வா தந்த்ர்யத்தால் அழைப்பிக்க
தப்பின பிள்ளைகளை -என்கிறபடியே கை தப்பிப் போய்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியிலே கிடந்த வைதிகன் புத்ரர்களையும் உரு உருவே கொடுத்தான் என்றும்
உடலோடும் கொண்டு கொடுத்தவனை -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வவ ரூபன்களோடு மீட்டுக் கொடு வந்து கொடுத்தால் போலே துஷ்கரங்களைச் செய்தும் ஆஸ்ரிதர் அபேஷிதங்களைத் தலைக் கட்டுகிறது-

ஆஸ்ரித ரஷண விஷயோ மநோரத காம ச பரதிஹதோ அபவதீதி சத்ய காமா -என்கிற சத்ய காமன் ஆகையாலே இ றே –
சத்யகாமன் ஆகையாவது சாந்தீபன் புத்ரனை கொடு வந்தால் போலே சகல அபேஷிதங்களையும் முடிக்க வல்லனாகை
என்று இ றே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் தத்வ த்ரயத்திலே அருளிச் செய்தது-
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும் –
இது சத்யசங்கல்ப கார்யம் –
உத்தானபாத புத்ரனான த்ருவனுக்கு ஊர்த்த அவதியிலே அபூர்வமாய் இருப்பதொரு பதம்
கல்ப்பித்துக் கொடுத்தால் போலே
ஆஸ்ரிதர்க்கு பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்குகிறது –
அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க வல்ல அமோக சங்கல்பன் ஆகையாலே இ றே
சத்ய சங்கல்பன் ஆகையாவது த்ருவ பதம் போலே பண்டு இல்லாத வற்றையும் உண்டாக்க வல்லனாகை என்று
இதுவும் பட்டர் தாமே அருளிச் செய்தார் இ றே –
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி –
இது ஔதார்ய கார்யம்
வரத சகல மேதத சம்சரிதார்த்தம் சகாத்த -என்கிறபடியே
தங்கள் உடைமையை தாங்கள் விநியோகம் கொள்ளுமா போலே
விநியோகம் கொள்ளலாம் படி ஆத்மா ஆத்மீயங்களை
ஆஸ்ரிதர்க்கு கொடுக்கிறது –
கொடுத்தோம் என்கிற அபிமானமும் தன நெஞ்சில் இல்லாதபடியாகவும் கொள்ளுமவர்களுக்கு
பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படியாகவும்
கொடுக்கும் பரம உதாரன் ஆகையால் இ றே-
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய் –
இது கிருதிவ கார்யம்
ஆஸ்ரிதர் கார்யம் தலைக் கட்டினால் அவர்கள் கிருதக்ருத்யர் ஆகை அன்றிக்கே
அபிஷசைய ச லங்காயாம் -இத்யாதிப் படியே தான் கிருதகிருத்யனாகிறது –
ஆஸ்ரிதர் ரஷணம் பெற்றால் பேறு தன்னதாய் இருக்கும் ஸ்வ பாவத்தால் இ றே
கருதிகை யாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதம்பூர்ணமானால் தான் க்ருதக்ருத்யனாகை-என்று இ றே பட்டரும் அருளிச் செய்ததே-
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து –
இது க்ருதஞ்ஞதா கார்யம்
தன திறத்திலே ஒரு சரணாகதி முதலான ஸூ கருத லேசத்தை பண்ணினால்
அவர்களுக்கு தான் ஒரு எல்லா நன்மைகளையும் செய்தாலும் அவற்றை ஒன்றும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்தையே நினைத்து இருக்கிறது
செய்த நன்றி அறியுமவன் ஆகையாலே இ றே
க்ருதஞ்ஞன் ஆகையாவது ஆஸ்ரிதர் உடைய ஸூ க்ருதலவத்தை ஒன்றையுமே நினைத்து
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் பாராதே இருக்கை -என்று இதுவும் பட்டர் அருளிச் செய்தார்-

அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய் –
இது மாதுர்ய கார்யம் –
அநாதி காலம் பிடித்து கொளுந்திக் கிடக்கிற ப்ராக்ருத விஷய ரசங்களை விஸ்மரிக்கும் படி
சர்வ அவஸ்தையிலும் இனியனாகிறது
சர்வ ரச-என்கிறபடியே நிரதிசய போக்யனாய் இருக்கையால் இ றே-
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே –
இது சாதுர்ய கார்யம்
பார்யா புத்ராதிகளோடே கூடி வர்த்திப்பான் ஒரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டு இருக்கச் செய்தேயும்
காணாதாரைப் போலே இருக்குமா போலே
ஆஸ்ரிதர் செய்து இருக்கிற குற்றங்களை கண்டு இருக்கச் செய்தேயும் தன திரு உள்ளத்தாலே நினையாது இருக்கிறது
ஆஸ்ரிதர் தோஷங்களைத் தெரியாத படி மறைக்க வல்ல சாதுர்யன் ஆகையாலே இ றே-

குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து-
இது ஸ்திரதவ கார்யம் –
சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய்
சேதனர் குற்றங்களை பொறுப்பித்துச் சேர விடும் பெரிய பிராட்டியார்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் -என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்று
அவளோடு மறுதலைத்து நிச்சலனாய் நின்று ரஷி க்கிற ஸ்திர ஸ்வ பாவன் ஆகையாலே இ றே-

காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு –
இது பிரணயித்வ கார்யம்
காமினி விஷயத்தில் பிரணயித்வத்தாலே அவள் உடம்பில் அழுக்கை விரும்பும் காமுகனைப் போலே
ஆஸ்ரிதரான வர்களுடைய பிரகிருதி சம்பந்தாதி தோஷங்களை
போக்யமாகக் கொள்ளுகிறது பரம பிரணயி-ஆகையாலே இ றே –

அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் –
இது ஆர்ஜவ கார்யம் –
மனோ வாக் காயங்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராய் இருக்குமவர்கள் பக்கலிலே
நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே
தன்னை அமைத்து
த்ரிவித கரணங்களாலும் செவ்வியனாய் போருகிறது ருஜூ ஸ்வ பாவன் ஆகையாலே இ றே –

பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு –
இது மார்த்த்வ கார்யம்
ஊர்த்த்வம் மாசான ந ஜீவிஷயே -என்றால்
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிறபடியே
தன்னைப் பிரிந்தால் ஆஸ்ரிதர் படும் வ்யசனம்
கடல் போன்ற தன வ்யசனத்துக்கு ஒரு குளப்படி மாதரம் என்னும் படி
தான் கிலேசப் படுகிறது
ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாலே இ றே-

அவர்களுக்கு பாங்காக தன்னை தாழ விட்டு –
இது சௌசீல்ய கார்யம் –
ஜன்மாதிகளால் தண்ணியராய் இருக்குமவர்களுக்கு அனுகூலமாக சர்வேஸ்வரன்
சர்வ உத்க்ருஷ்டனான தன்னை தாழ விடுகிறது சீலவத்தையாலே இ றே-

அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
இது சௌலப்ய கார்யம்
அவதார தசையிலே நவநீத சௌர்ய வ்யாஜத்தாலே -சிக்கென வார்த்தடிப்ப -என்கிறபடியே
யசோதாதிகளுக்கு கட்டவும் அடிக்கவும் ஆம்படி எளியனாய் இருக்கிறது -எளிவரும் இயல்வினன் -ஆகையாலே இ றே-

அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலேபெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டுச்நேஹித்துக் கொண்டு போரும்-
இது வாத்சல்ய கார்யம்
அந்து தான் பெற்ற கன்றுக்கு தாயான பசு இரங்கி
முன்பு தான் ச்நேஹித்துக் கொண்டு போந்த முன் அணைக் கன்றையும்
தனக்கு போக்யமான புல்லிட வந்தவர்களையும் உட்பட மூசிக் கொம்பிலே கோத்தெடுப்பது
குளம்பாலே மிதிப்பது ஆம்போலே
பரிரம பணாதிபோக உபகாரியான பெரிய பிராட்டியாரையும்
முன்பு சிநேக விஷயமாகப் போந்த நித்ய சூரிகளையும் தள்ளி விட்டு
இன்று ஆஸ்ரயித்தவர்களை ச்நேஹித்துக் கொண்டு போருகிறது வத்சல்யன் ஆகையாலே இ றே-

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -141-147-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 4, 2014

சூர்ணிகை -141-

இப்படி சித் அசித் ரூபமான தத்வ த்வயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸூவ்யக்தமாம் படி அருளிச் செய்து
அநந்தரம்

ஷராத் மாநா வீசதே தேவ ஏக–(ஸ்வேதாஸ் –1-10-)
ஷரம் போன்ற பலவற்றுக்கும் ஈஸ்வரனாகிய தேவன் ஒருவனே -என்கிறபடியே
தத் உபய நியந்தாவான ஈஸ்வரனுடைய ஸ்வரூபாதிகளை
சம்சய விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –

அதில் பிரதம சூர்ணிகை யாலே
ஈஸ்வரத்வம் அசாதாரண தர்மதயா வஸ்துவுக்கு நிரூபகம் ஆகையாலே
ஈஸ்வரன் என்றே வஸ்துவை நிர்தேசித்து –
தத் ஸ்வரூபாதி வை லஷண்யத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்-

ஈஸ்வரன்
அகில ஹேய ப்ரத்ய நீக
அனந்த ஜ்ஞான ஆநந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற
சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
விலஷண விக்ரஹ யுக்தனாய் –
லஷ்மி பூமி நீளா நாயகனாய் –
இருக்கும்

அதாவது
அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
சமஸ்த ஹேய பிரதிபடமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
ஸ்வயம் பிரகாசத்வ -ஸூக ரூபவத்மே வடிவான
ஸ்வரூபத்தை யுடையவனாய் -என்கை –

சத்யம் ஜ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -(தைத்ரியம் -2-1-1 )என்றும்
விஜ்ஞ்ஞானம் ப்ரஹ்மம் -(தைத்ரியம் -3-5 )என்றும்
ஆனந்தோ ப்ரஹ்மம் -(தைத்ரியம் -3-6-1 )என்றும் சொல்லக் கடவது இறே-

அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந
ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷண
ஆநந்த ஜ்ஞானா நனதைக ஸ்வரூப -என்று இறே எம்பெருமானார் அருளிச் செய்தது –
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார் –

ஆனால்
கல்யாணை கதா நத்வமும் -ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷண த்வமும்
இவர் அருளிச் செய்யாது ஒழிவான் ஏன் என்னில்
ஹேய ப்ரத்ய நீகதை-புக்க விடத்தே கல்யாணை கதா நத்வமும் வரும் என்னுமதைப் பற்றவும்
ஆநந்த ரூபம் சொல்லுகையாலே தன்னடையே சித்திக்கும் என்னுமதைப் பற்றவும்
கல்யாணை கதா நத்வம் அருளிச் செய்திலர் –

ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷணதவம் உபய லிங்க விசிஷ்டத்வ பிரயுக்தம் ஆகையாலே
அர்த்தாதுகதம் என்று அருளிச் செய்திலர்-

ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
ஆதி -சப்தத்தாலே
குண சூர்ணையில் எம்பெருமானார் அருளிச் செய்த குணங்களை எல்லாம் சொல்லுகிறது –

குணங்களுக்கு கல்யாணத்வம் ஆவது –
ஆஸ்ரிதர்க்கு பரம போக்யமாய் இருக்கை-

கண சப்தம்
சமூஹ வாசி –

பூஷிதன் ஆகையாவது –
இவற்றாலே அலங்க்ருதனாய் இருக்கை-

திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு திவ்ய ஆபரணங்கள் போலே ஆயிற்று
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு திருக் கல்யாண குணங்கள் ஔஜ்வல்ய கரமாய் இருக்கிற படி –

இத்தால் –
யஸ் சர்வஜ்ஞ்ஞ ச சர்வ வித -என்றும்
பராசய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
சமஸ்த கல்யாண குணா தம கோசௌ-என்றும்
சொல்லுகிற கல்யாண குண யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

சகல ஜகத் சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் –
ஜகத் -சப்தத்தாலே
கார்ய வஸ்துவைச் சொல்லுகிறது

சகல -சப்தத்தாலே
சமஷ்டி வ்யஷ்டி ரூபமான சமஸ்த பதார்த்தங்களையும் சொல்லுகிறது

சர்க்கமாவது -சிருஷ்டி
இதுதான்
சத்வாரக
அத்வாரக ரூபேண த்வி விதையாய் இருக்கும்

ஸ்திதி யாவ்வது -ரஷணம்-இதுவும் பாஹ்யாபயந்தர ரூபேண
த்விவிதமாய் இருக்கும்

சம்ஹாரம் ஆவது -அழிக்கை-
இதுவும் சத்வாரக அத்வாரக ரூபேண த்விவிதமாய் இருக்கும்
இவை எல்லாம் மேல் இவர் உப பாதிக்கிற இடத்தில் காணலாம்

யதோவா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவ நதி
யத பரய நதய பிசமவிசநதி தத் விஜிஞ்ஞாஸ்வ தத் ப்ரஹ்ம -இத்யாதி
ஸ்ருதிகளாலே இவனுடைய சகல ஜகத் சர்க்காதிகள் சொல்லப் படா நின்றது இறே

இத்தால்
கீழ் சொன்ன குண விசிஷ்டன் ஆனவனுடைய வியாபார விசேஷங்களை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற
சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-

ஆர்த்தனாவான் -முன்புண்டான ஐஸ்வர்யத்தை இழந்து அதைப் பெற வேணும் என்று ஆசைப் படுமவன்

ஜிஜ்ஞாஸூ ஆகிறான் -ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவை அனுபவிக்க ஆசைப் படும் கேவலன்

அர்த்தார்த்தி ஆகிறான் அபூர்வமாக ஐஸ்வர் யத்தை ஆசைப் படுமவன்

ஜ்ஞானி ஆகிறான் பரம புருஷார்த்தமான பகவத் பிராப்தியை ஆசைப் படுமவன்

ஆர்த்த -பிரதிஷடாஹீந பரஷ்டைச்வர்ய புனச தத் பிராப்தி காம
அர்த்தார்த்ததீ -அப்ராப்த ஐஸ்வர் யதயா ஐஸ்வர்ய காம தயோர் முக பேத மாதரம்
ஐஸ்வர்ய விஷய தயா ஏக ஏவாதிகார-
ஜிஞ்ஞாஸூ -பிரகிருதி வியுக்தாதம் ஸ்வரூபாவ தீசசு ஜ்ஞானமே வாசாய ஸ்வரூபம் இதி ஜ்ஞ்ஞா ஸூ ரித யுக்தம்
ஜ்ஞானிச -இதஸ்த்வ நயாம பிரகிருதி வித்தி மே பராம இத்யாதி ந அபஹித பகவத் சேஷதை கரசாதம் ஸ்வரூபம் இத
பிரகிருதி வியுக்த கேவலாதம நயபாயாவ சயன பகவந்தம் பரேப ஸூ ர பகவந்தம் ஏவ பரமபராபயம் மனவான -என்று
சதுர்வித அதிகாரி வேஷத்தையும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார் இறே

இந்த சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்தை
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ச ஸூ கருதிநோர்ஜுனா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரத ரிஷப -என்றும்

சதுர்வித மம ஜனா பக்த ஏவ ஹி சே ஸ்ருதா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ சேதி பிருதக் பிருதக் -என்றும்
தானே அருளிச் செய்தான் இறே

இத்தால்
ஜகத் காரண பூதனாக கீழ்ச் சொல்லப் பட்டவனுடைய
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
தர்மார்த்த காம மோஷா ககய புருஷார்த்த உதாஹருத -என்று
புருஷார்த்தம் சதுர்விதமாய் இறே இருப்பது –

தர்மமாவது -இஷ்டா பூர்த்வங்கள்
இஷ்டமாவது -யாகாதி பூர்த்தமாவது வாதாஷி
அர்த்தமாவது-ஸூவர்ண ரஜ சாதிகள்
காமமாவது ஐஹிக பர லௌகிக போகய பதார்த்த அனுபவ ஸூகம் –
மோஷம் ஆவது ஆத்மா அனுபவ பகவத் அனுபவங்கள்

இவற்றில் –
தர்மம் சாதனயா புருஷார்த்தமாய் இருக்கும்
அர்த்தம் சாதநதாயும் ஸ்வயமாயும் புருஷார்த்தமாய் இருக்கும்
காம மோஷங்கள் இரண்டும் ஸ்வயமாய் புருஷார்த்தமாய் இருக்கும்
ஏவம் விதமான சதுர்வித பலங்களையும் அதிகார அனுகுணமாகக் கொடுக்குமவன் -என்கை

இத்தால்
சர்வ சமாஸ்ரயணீயன் ஆன இவனுடைய
சகல பல பிரதத்வத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று

தேவேந்தரச த்ரிபுவன மாதத மேக பிங்கச சர்வாததிம
த்ரிபுவன சாஞ்ச கார்த்த வீர்ய
வைதேக பரமபதம் பிரசாதாய விஷ்ணும் சம்ப்ராபதஸ் சகல பல பிரயோஹீ விஷ்ணு -என்னக் கடவது இறே –

விலஷண விக்ரஹ யுக்தனாய் –
அதாவது –
விக்ரஹம் தான் ஸ்வரூப குணங்களிலும் காட்டில் அத்யந்த அபிமதமாய் -என்று தொடங்கி
மேல் அருளிச் செய்கிற வைலஷண்யத்தை யுடைய விக்ரஹத்தோடே கூடி இருக்குமவன் -என்கை

நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேக பாஸ்வரா-இத்யாதியிலே விக்ரஹ வைலஷண்யம் ஸ்ருதி பிரசித்தம்

ஸ்வ அபிமத அனுரூபைக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய சௌந்தர்ய சௌகந்த்ய
சௌகுமார்ய லாவண்யா யௌவன அத்ய அநந்த குணநிதி திவ்ய ரூப -என்று
திவ்ய மங்கள விக்ரஹ லஷணத்தை அருளிச் செய்தார் இறே -எம்பெருமானார்

இத்தால்
கீழ்ச் சொன்ன ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
ஜகத் காரணத்வத்துக்கும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்துக்கும்
சர்வ பல பிரத்வத்துக்கும்
ஏகாந்தமான
திவ்ய விக்ரஹ யோகத்தை
அருளிச் செய்தார் ஆயிற்று-

லஷ்மி பூமி நீளா நாயகனாய் -இருக்கும்
அதாவது
உனக்கே ஏற்கும் -என்னும்படியான வை லஷண்யத்தை யுடையளாய்
சேதனருக்கு புருஷகார பூதையாயும் –
பிராப்யையாயும்
இருக்கும் பிரதான மஹிஷியான பெரிய பிராட்டியாருக்கும்
அவளோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கும் பூமி நீளைகளான மற்றை இரண்டு பிராட்டிமாருக்கும்
அநுரூப நாயகனாய் இருக்கும் -என்கை

ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று லஷ்மி பூமிகள் இருவரையும்
வேத புருஷன் சொன்ன இது நீளைக்கும் உப லஷணம்

வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன
உபாயயாம பூமி நீளா பயாம சேவித பரமேஸ்வர -என்னக் கடவது இறே

ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாதய நவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப
ஏவம் வித பூமி நீளா நாயக -என்று இறே எம்பெருமானார் அருளிச் செய்தது

இத்தால்
கீழ்ச் சொன்ன விக்ரஹ வை லஷண்யம்
காட்டில் எரித்த நிலா வாகாதபடி
அனுபவிக்கக் கடவரான பிராட்டிமாரோட்டை சேர்த்தியை
அருளிச் செய்தார் ஆயிற்று-

——————————————————————————–

சூர்ணிகை -142-

இப்படி உக்தமான ஸ்வரூபாதிகளை விஸ்தரேண உபபாதித்து அருளுகிறார் மேல்
அதில் பிரதமத்தில் அகில ஹேய பிரத்ய நீகத்வத்தை உபபாதிக்கிறார் –

அகில ஹேய பிரத்ய நீகன்
ஆகையாவது
தமஸ் ஸூக்கு
தேஜஸ் போலேயும்
சர்ப்பத்துக்கு
கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு
பிரதிபடனாய்
இருக்கை –

ஹேயமாவது -தோஷம்
அகில ஹேயம் -என்கையாலே –
த்ரிவித சேதன அசேதன தோஷங்களையும் சொல்லுகிறது

த்ரிவித சேதன அசேதன தோஷங்களும் ஈஸ்வரனுக்கு வாராது என்று
இது தன்னை வ்யக்தமாக மேலே அருளிச் செய்கிறார் இறே
தமஸ் ஸூக்கு தேஜஸ்ஸூ பிரதிபடமாய் இருக்குமா போலேயும்
சர்ப்பத்துக்கு கருடன் பிரதிபடமாய் இருக்குமா போலேயும் -என்கை –

விகாராதி தோஷங்கள் -என்கிற இடத்தில்
விகார சப்தத்தாலே த்ரிவித அசிததின் யுடைய பரிணாமத்தைச் சொல்லுகிறது

ஆதி -சப்தத்தாலே
பக்த சேதனருடைய அஞ்ஞான துக்கங்களையும்
முக்தருடைய சேறு தோய்த்து கழுவினால் போலே
பிரகிருதி சம்ருஷ்டராய் விடுபட்ட ஆகாரத்தையும்
நித்யருடைய பரிச்சின்ன ஸ்வரூபத்வ பாரதந்த்ரியங்களையும் சொல்லுகிறது

பாரதந்த்ர்யம் தோஷமோ என்னில்
புருஷனுக்கு ஸ்தன உத்பேதம் போலே ஸ்வ தந்த்ரனுக்கு தோஷம் என்கை –

இத் தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை யாவது –
தான் மாறாது இருக்கை –

பிரதிபடம் என்கையாலே –
ஆத்மா ஜ்ஞான மயோமல-என்கிறபடியே
ஸ்வரூப நிபந்தனமாக மல சம்பந்தம் இல்லையே யாகிலும்
உபாதி நிபந்தனமான மல சம்பந்தத்துக்கு யோக்யமான
ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் பகவத் ஸ்வரூபத்துக்கு வாசி தோற்றுகிறது –

தத் ப்ரஹ்ம பரமம் நித்யம்ஷ மஷய மவ்யயம் ஏக ஸ்வரூப
ந்து சதா ஹேயா பாவச்ச நிர்மலம் -என்றும்

சமஸ்த ஹேய ரஹிதம் விஷண வாக்கியம் பரமம் பதம் -என்றும்

அவிகாராய சுததாயா நித்யாய பரமாத்மனே -என்னக் கடவது இறே –

ஹேய ப்ரத்ய நீகத்வம் ஆவது –
ஆஸ்ரிதர் யுடைய ஹேய நிரசகத்வத்துக்கு அடியான ஹேய பிரதிபடத்வம் -என்னவுமாம்
என்னும் ஒரு யோஜனையும் யுண்டு இறே

கத்ய வ்யாக்யானங்களிலே நஞ்சீயர் ஆச்ச்சான் பிள்ளை முதலான ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது

சர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும் என்கிற த்ருஷ்டாந்தத்தாலே
அதுவும் இவ்விடத்து அர்த்தம் ஆனாலோ என்னில்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை என்கையாலே
இவ்விடத்தில் இவர்க்கு அது விவஷிதம் அன்று-

————————————————————————————-

சூர்ணிகை -143-

அநந்தரம் அனந்ததவத்தை உப பாதிக்கிறார் –

அநந்தன் ஆகையாவது
நித்யனாய்
சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய்
இருக்கை –

அதாவது
தேசதோ காலதோ வஸ்து தச்ச அபரிச்சேத்யம்-
விபுதவாத் -தேச பரிச்சேத ராஹித்யம்
நித்யத்வாத் -கால பரிச்சேத ராஹித்யம்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களுக்கும் பிரகாரியாய் இருக்கையாலும்
தனக்கு பிரகார்யாந்தரம் இல்லாதபடி நிற்கையாலும்
சத்ருச வஸ்து அபாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
அத்தை அருளிச் செய்கிறார்-

நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை -என்று
இத்தால்
நித்யன் ஆகையாலே –
இன்ன காலத்தில் உள்ளான் காலாந்தரத்தில் இல்லை என்கிற கால பரிச்சேதம் இன்றியிலே
சகல சேதன சேதனங்களுக்கும் வ்யாபகனாய்க் கொண்டு
விபுவாய் இருக்கையாலே –
இன்ன தேசத்தில் உள்ளான் தேசாந்தரத்தில் இல்லை என்கிற தேச பரிச்சேத்யம் இன்றியிலே
சர்வாந்தர்யாமி யாகையாலே
சர்வத்துக்கும் தான் பிரகாரியாய் தனக்கு பிரகாரந்தரம் இல்லாத படி இருக்கையாலே
இன்ன வஸ்து போலே என்கிற வஸ்து பரிச்சேதமும் இன்றியிலே இருக்கை என்றதாயிற்று

நித்யம் விபும் சர்வச்தம் ஸூ ஸூ ஷ்மம்-என்றும்

அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்றும்

யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்றும்

நதத் சமாச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே -என்றும் சொல்லக் கடவது இறே-

————————————————————————————–

சூர்ணிகை -144-

இவற்றோடு தான் ஒட்டு அற்று இருக்கை அன்றிக்கே
அந்தர்யாமிதயா அவஸ்திதனாய் இருக்குமாகில்
தத் கத தோஷங்கள் வாராதோ -என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அந்தர்யாமி
ஆனால்
தோஷங்கள்
வாராதோ
வென்னில் —

————————————————————————————

சூர்ணிகை -145-

அத்தை பரிஹரிக்கிறார்

சரீர கதங்களான
பால்யாதிகள்
ஜீவாத்மாவுக்கு
வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன
தோஷமும்
ஈஸ்வரனுக்கு வாராது –

அதாவது
இந்த சரீரத்தை அதிஷ்டித்து ஸ்வா தீனமாக நிர்வஹித்துக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கதமான பால்ய யௌனாதி விகாரங்கள்
தத் அந்தர்வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே

த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய்
இவற்றை சரீரமாகக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத் கத தோஷம் ஈஸ்வரனுக்கு வாராது -என்கை –

ஆவி சேர் உயிரினுள்ளால் யாதுமோர் பற்றிலாத பாவனை யதனைக் கூடில் யவனயும் கூடலாமே -என்று இறே
ஆழ்வாரும் அருளிச் செய்தது

சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீர கதங்களான பால்யாதிகள் வந்ததில்லை யாகிலும்
சரீர சம்பந்த நிபந்தனமாக துக்க அஜஞாநாதிகள் வருகிறவோபாதி
சரீர பூதமான இவற்றோட்டை சம்பந்தத்தால் இவனுக்கும் இங்கனே சில தோஷங்கள் வாராதோ என்னில்
வாராது -அதுக்கு அடி
பிரவேச ஹேது விசேஷம்

இவனைப் போலே கர்மம் அடியாக அன்றிக்கே
அனுக்ரஹம் அடியாக இறே அவனுக்கு இவற்றில் பிரவேசம் இருப்பது

அனஸ்நன் நன்ய -என்றும்

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா -என்றும்

விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே -என்றும் சொல்லிற்று இறே-

———————————————————-

சூர்ணிகை -146-

அநந்தரம்
ஜ்ஞானாந்ததைக ஸ்வரூபத்தை உப பாதிக்கிறார் –

ஞானானநதைக
ஸ்வரூபன் ஆகையாவது
ஆநந்த ரூப
ஜ்ஞானனாய்
இருக்கை –

ஞ்ஞாந நந்தங்களையே ஸ்வரூபமாக யுடையனாய் இருக்கை என்று
சப்தத்துக்கு அர்த்தம் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞானம் என்றும் ஆனந்தம் என்றும் பிரித்துச் சொல்ல
இரண்டு அவஸ்தை இன்றிக்கே
ஜ்ஞானமே ஸ்வரூபமாய்
அது தான் அனுகூலமாய் இருக்கை –
ஆனந்தம் ஆகையாலே ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்று அருளிச் செய்கிறார் –

அனுகூல ஜ்ஞானமே ஸ்வரூபமாய் இருக்க
ஜ்ஞான ஆனந்தங்கள் என்று பிரித்துச் சொல்லுகிறது
இரண்டும் யுண்டாகைக்காக என்று இறே
இவர் தாம் இட்டு அருளின கத்ய வ்யாக்யானத்தில் அருளிச் செய்தது-

————————————————————————————-

சூர்ணிகை -147-

ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்றது தன்னை உபபாதிக்கிறார்

அதாவது
கட்டடங்க
அனுகூலமாய்
பிரகாசமுமாய்
இருக்கை –

கட்டடங்க என்றது -ஸ்வரூபம் உள்ள பரப்பு எங்கும் -என்றபடி
இத்தால்
ஸ்வரூபத்தில் அ நனுகூலமாயாதல் அபிரகாசகமாயாதல் இருக்கும் இடம் இல்லை என்கை

ஜ்ஞானாந்த ஏக ஸ்வரூபம் என்ற இதில் ஏக சப்தார்த்தம் இது இறே
அனுகூலத்வம் ஆவது ஆஹ்லாதகரத்வம்
பிரகாசத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்

அநந்யாதீன பிரகாசத்வா வாஹ்லாதகரத்வ ரூப ஜ்ஞான மேவ யஸ்ய ஸ்வரூபம்
ச ஹிஜ்ஞானாந்ததைக ஸ்வரூப -என்னக் கடவது இறே –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -129-140-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 4, 2014

சூர்ணிகை -129-

பிருத்வ்யாதி சதுஷ்டத்யோ பாதி ஆகாசத்தையும்
பாவ ரூப பதார்த்தமாகக் கொள்ளாதே
ஆவரணாபாவ ரூபமாக கொள்ளுகிற பௌத்த மதத்தை
அருளிச் செய்கிறார் –

சிலர் ஆவரணாபாவம்
ஆகாசம் என்றார்கள் –

அதாவது –
ஆவரியதே அநேன-(இதனால் மறைக்கப்பட்டு உள்ளது ) -என்கிற
கரண வ்யுத்புத்தியாலே (செயப்படு பொருளாக )
ஆவரணங்கள் ஆவன ஸ்த்தூல பதார்த்தங்களான பிருத்வ் யாதிகளாய்
அவற்றினுடைய அபாவமே ஆகாச சப்த வாச்யம் அல்லது
இது ஆகாசம் என்று காட்டலாம் படி
பாவ ரூபமானதொரு பதார்த்தம் அன்று -என்கை –

(அதாவது ஆகாசம் என்ற சொல்லானது -எதுவும் இல்லாத வெற்றிடம் -என்னும்
பொருளைத் தருவதாக அவர்கள் கூறுகிறார்கள் )

நச பிருதிவ்யா தயபாவமா தரமாகாச கிதி வக்தும் சகயம் -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரரும் (2-2-23-)
(பூமி முதலானவற்றின் இல்லாமை என்பதே ஆகாசம் என்று கூற இயலாது ) என்று அருளிச் செய்தது –

——————————————————————————-

சூர்ணிகை -130-

அத்தை நிராகரிக்கிறார் –
(கீழே காட்டிய புத்த மதக் கருத்தை நிரசிக்கிறார் )

பாவ ரூபேண
தோற்றுகையாலே
அதுவும் சேராது –

அதாவது –
பாவ ரூபத்வேன அங்கீ கரிக்கப் பட்ட பிருதிவ்யாதிகளோ பாதி
அத்ர சயனே பத்தி அத்ர கருதர பத்தி
(இந்த ஆகாசத்தில் பறவை பறக்கின்றது -இந்த ஆகாசத்தில் கருடன் பறக்கின்றது போன்ற )என்று
சயேநாதிகளுடைய பந்தத்துக்கு தேசமாய்க் கொண்டு
ஆகாசமும் பாவ ரூபமாய்த் தோற்றுகையாலே
இத்தை ஆவரணா பாவ ரூபமாகச் சொல்லுகிற அது சேராது என்கை

அதவும் –
நிஷித்த சமுச்சயம்
(உம்மைத்தொகை -இந்தப்பொருளிலும் இவ்வாறு கூறுவது பொருந்தாது என்றபடி )

இது தன்னை-ஆகாசே சாவிசே ஷாத–2-2-33-என்கிற ஸூத்ரத்தில்
(ஆகாச விஷயத்திலும் புத்தர்களின் வாதம் பொருந்தாது )
ஆகாசே ச நிருபாக கய்தா ந யுக்தா பாவ ரூப தவே நாப யுபகத
பிருதிவ்யாதி வத ஆகாச சயா பய பாதிதா ப்ரதீதி சித்த வாவி சேஷாத
ப்ரதீயதே ஹயாகாசோதர சயேன பத்தய தய கருதர பத்தி இதி சயே நாதி பதந்தே சத வேன-என்று தொடங்கி
ஸ்ரீ பாஷ்ய காரர் விஸ்தரேண அருளிச் செய்தார்-

(பூமி முதலானவை போலே ஆகாசமும் இருக்கின்ற பொருளாக நீங்கள் ஒப்புக் கொள்வதால் பூமி போன்றவை
எவ்விதம் ப்ரத்யக்ஷத்தால் உணரப்படுவதின் காரணமாக வேறு எதனாலும் மறுக்கப்பட இயலாமல் உள்ளதோ
அதே போன்று எந்த வேறுபாடும் இன்றி ஆகாசமும் எதனாலும் மறுக்கப்படாமல் உள்ளது
அத்ர சயனே பத்தி அத்ர கருதர பத்தி
(இந்த ஆகாசத்தில் பறவை பறக்கின்றது -இந்த ஆகாசத்தில் கருடன் பறக்கின்றது போன்ற )என்று
கூறுவதற்கு ஏற்ப களுக்கு முதலானவை பறக்கும் இடமாக ஆகாசம் உள்ளது என்பது தொடக்கமாக
ஸ்ரீ பாஷ்யகாரர் விரிவாக அருளிச் செய்துள்ளார்

——————————————————————————-

சூர்ணிகை -131-

இனி ஆகாசத்துக்கு நித்யத்வ நிரவயவத்வ விபுத்வ அப்ரதயஷத்வங்கள்
கொள்ளுகிற
நையாயிக வைசேஷிக மதத்தை
அருளிச் செய்கிறார்

வேறே சிலர்
இது தன்னை
நித்யம்
நிரவயவம்
விபு
அப்ரத்யஷம்
என்றார்கள் –

———————————————————————

சூர்ணிகை -132-

இது தன்னை நிராகரிக்கிறார் –

பூதாதியிலே பிறக்கையாலும்
அஹங்காராதிகள் இல்லாமையாலும்
கண்ணுக்கு விஷயம் ஆகையாலும்
அவை நாலும் சேராது

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான தாமச அஹங்காரத்திலே உத்பன்னம் ஆகையாலும்
ஒன்றிலே நின்றும் உத்பன்னமான தொன்றுக்கு
சர்வயவத்வம் சித்திக்கையாலும்
நித்யம் நிரவவயம் என்கிற இரண்டும் சேராது

பூதாதியிலே பிறக்கையாலும் -என்றது
சப்த தன்மாத்ரையினுடைய ஸ்தூல அவஸ்தை ஆகையாலே
அதுக்கும் இதுக்கும் யுண்டான ஐக்யத்தைப் பற்ற –

இனி விபுவாகில்
சர்வ கதமாக வேணும் இறே

ஸ்வ காரணமான அஹங்காராதிகளில் இதுக்கு வ்யாப்தி இல்லாமையாலே
அதுவும் சேராது

பஞ்சீ கரண பிரயுக்தமான ரூபத்வத்தாலே கண்ணுக்கு விஷயம் ஆகையாலே
அப்ரத்யஷம் என்கைக்கும் சேராது
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே (சூர்ணிகை -117-)-என்றார் இறே கீழே

இது தன்னை –
அண்டாந்தர வர்த்தி நச சாகாசச்ய த்ரிவ்ருத கரணோபதேச ப்ரதர்சித
பஞ்சீ கரனேன ரூபவதத வாச சஷூஷத் வேப்ய விரோத (2-2-23 )-என்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் –

———————————————————————-

சூர்ணிகை -133-

வாயுவும் பிரத்யஷம் அன்று
ஸ்பர்ச அனுமேயம் என்று இறே அவர்கள் சொல்லுவது
அத்தையும் நிராகரிக்கிறார் –

த்வக் இந்த்ரியத்தாலே
தோற்றுகையாலே
வாயு அப்ரத்யஷம் என்கிற
அதுவும் சேராது –

அதாவது
ஜ்ஞான இந்த்ரியங்களில் ஏதேனும் ஒன்றுக்கு
கோசரம் ஆன போதே பிரத்யஷம் சித்திக்கையாலே
த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகிற வாயுவை
அபரதியஷம் என்ன ஒண்ணாது -என்கை –

———————————————————————

சூர்ணிகை-134-

இனி பரஸ்பர விலஷண ஸ்வ பாவங்களான பூத விசேஷங்களில்
ஜ்ஞாதவ்ய அம்சங்களை அருளிச் செய்கிறார் –

தேஜஸ்ஸூ
பௌமாதி பேதத்தாலே
பஹூ விதம் –

அதாவது –
பௌமம திவ்யம் ஔதார்யம் ஆக்ரஜம்-என்கிற
பேதத்தாலே அநேக விதமாய் இருக்கும் -என்கை

பார்த்திவ மாத்ரேந்தமான தேஜஸ்ஸூ பௌமம் –
அதாவது-
தீபாதி ஜல மாத்ரேந்தமான தேஜஸ்ஸூ திவ்யம்-
அதாவது
ஆதித்யாதி பார்த்திவ ஜலமாத்ரேந்தமான தேஜஸ் ஸூ ஔதார்யம்-
அதாவது
ஜாடாராக்னி நிரிநதமான தேஜஸ்ஸூ ஆக்ரஜம் –
அதாவது –
ஸூ வரணாதி-

———————————————————————-

சூர்ணிகை –135-

இதில் ஸ்த்திர அஸ்த்திர விபாகம் பண்ணுகிறார் –

அதில் ஆதித்யாதி
தேஜஸ்ஸூ ஸ்திரம்
தீபாதி தேஜஸ்ஸூ
அஸ்திரம் —

சிரகால வாததித்வத்தாலே ஆதித்யாதி தேஜஸ்ஸூ ஸ்திரம் என்கிறது
ஷிபர விநாசித்வத்தாலே தீபாதி தேஜஸ்ஸூ அஸ்தரம் -என்கிறது –

————————————————————–

சூர்ணிகை -136-

தேஜஸ்ஸூக்கு
நிறம்
சிவப்பு

ஸ்பர்சம்
ஔஷண்யம்-

தேஜஸ்ஸூ க்கு நிறம் சிவப்பு இத்தாலே-
தேஜ பதார்த்தங்களிலே வர்ண பேதம்
பதார்த்தாந்தர சமசாகஜம் என்கை

ஸ்பர்சம் – ஔஷண்யம்-இத்தாலே
உஷ்ண ஸ்பர்சம் சீத ஸ்பர்சம் அனுஷணாசீத ஸ்பர்சம் -என்கிற
த்ரிவித ஸ்பர்சத்தாலும் இதுக்கு ஸ்பர்சம் ஔஷண்யம் என்கை –

இது தான் தேஜ பதார்த்தங்களான ஸூவர்ணாதிகளில் பலவத சஜாதீய த்ரவ்யங்களாலே
அபிபூதம் ஆகையாலே தோன்றாது-

———————————————————————-

சூர்ணிகை -137-

ஜலத்துக்கு நிறம்-வெளுப்பு

ஸ்பர்சம் சைத்யம்

ரசம் மாதுர்யம்

ஜலத்துக்கு நிறம் வெளுப்பு -இதுக்கு ஸ்வாபாவிக வர்ணம் இது
வர்ண பேதம் வந்த விடம் ஔபாதிகம்

ஸ்பர்சம் சைத்யம் -இத்தால் த்ரிவித ஸ்பர்சத்திலும் இதுக்கு உள்ளது என்கை
ஆகையால் இதுக்கு ஸ்பர்ச பேதம் யுண்டாகிறதும் அந்யசமசாகத்தாலே

ரசம் மாதுர்யம் -இத்தால் இதுக்கு ஸ்வா பாவிக ரசம் இது
ரசநாதரபத்தி சமசர்கஜம் என்கை –

—————————————————————————

சூர்ணிகை -138-

பூமிக்கு
நிறமும்
ரசமும்
பஹூ விதம் –

அதாவது -லோகத்தில் காணப் படுகிற
நாநாவித வர்ண ரசங்களுக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானம் இது -என்கை –

—————————————————————————————-

சூர்ணிகை -139-

ஸ்பர்சம்
இதுக்கும்
வாயுவுக்கும்
அனுஷ்ணா சீதம்

அதாவது
திரிவித ஸ்பர்சத்திலும் வைத்துக் கொண்டு இவற்றுக்கு ஸ்பர்சம் இது என்கை
ஆகையால் இவற்றிலும் காதாசித்கமாக காணப் படுகிற ஸ்பர்ச பேதமும் ஔபாதிகம்-

——————————————————————————————–

சூர்ணிகை -140-

இப்படி
அசித்து
மூன்று படிப் பட்டு
இருக்கும் –

இப்படி என்று
சிம்ஹாவ லோகன ந்யாயத்தாலே
முன்பு அருளிச் செய்தவற்றை எல்லாம்
கடாஷித்து
அனுபாஷித்துக் கொண்டு
அசித் தத்வ உபன்யாசத்தை
நிகமித்தார் ஆயிற்று –

———–

ஆக
பிரதமத்திலே
அசித்து ஜ்ஞான ஸூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் (சூர்ணிகை-77)-என்று
அசித்தின் யுடைய லஷணத்தைச் சொல்லி

அநந்தரம்
அது தான் சுத்த சத்வமாதி பேதன திரிவிதமாய் இருக்கும் படியைச் சொல்லி

உத்தேச க்ரமத்தில்
பிரதமம் சுத்த சத்வம் ஆகிற அசித்தினுடைய பிரகாரத்தைச் சொல்லி

தத் அநந்தரம்
மிச்ர சத்வம் ஆகிற அசித் விசேஷம் இன்னது என்றும்
அது தான் சதுர் விம்சதி தத்வமாய் இருக்கும் என்றும்
அதில் பிரதம தத்வம் இன்னது என்றும்
அந்த தத்தவத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்கள் இருக்கும் படியையும்
அதில் நின்றும் தத்வாநதரங்கள் உத்பன்னம் ஆகைக்கு ஹேது அதனுடைய குண வைஷம்யம் என்றும்
அந்த குணங்கள் தான் இன்னது என்றும்
அவை தான் அதுக்கு அவி நாபூதங்களாய
அதனுடைய அவஸ்தா பேதங்களால் அனுத் பூதங்களாயும்
உத் பூதங்களாயும் இருக்கும் என்றும் அவைதான் கார்யனுமேயங்கள் என்றும்
அவற்றின் யுடைய வைஷம்ய பிரயுக்தமான மஹதாதி தத்வ உத்பத்தி க்ரமத்தையும் சொல்லி

அநந்தரம்
இப்படி உத் பன்னங்களான தத்வங்களின் யுடைய சமுதாய கார்யமான அண்ட உத்பத்தியையும்
அந்த அண்டத்துக்கு உள்ளில் சமஷ்டி புருஷ சதுர் முக உத்பத்தியையும்
ஈஸ்வரன் சமஷ்டி வ்யஷ்டி பதார்த்தங்களை அத்வாரமாகவும் சத்வாரமாகவும் நின்று
சிருஷ்டிக்கும் படியையும் சொல்லி

அநந்தரம்
அண்டங்களின் யுடைய பஹூத்வத்தையும்
அவற்றின் யுடைய கட்டளையையும்
அவை தான் ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்கள் என்னுமத்தையும்
அவற்றின் யுடைய உத்பத்தி பிரகாரத்தையும் சொல்லி

அநந்தரம்
ஆகாசாதி பூதங்களுக்கு தனித் தனியே யுண்டான விநியோகத்தையும்
ஜ்ஞான கர்ம இந்த்ரியங்களுக்கும் உபயாதமகமான
மனசுக்கும் யுண்டான வ்ருத்தி பேதத்தையும்
ஆகாசாதிகளுக்கு சப்தாதிகள் பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியையும்
அவற்றுக்கு குண விநிமயம் வருகைக்கு ஹேதுவையும்
குணாதிக்யத்துக்கு ஹேதுவையும் சொல்லி
இப்படி மிச்ர சத்வத்தின் யுடைய பிரகாரத்தை விஸ்தரேண உபபாதித்து

அநந்தரம்
இதனுடைய பரிமாணங்களுக்கு ஹேதுவாய் இருந்துள்ள
சத்வ ஸூன்யம் ஆகிற அசித் விசேஷத்தையும்
சங்க்ரஹேண சொல்லி

அநந்தரம்
ஏதத் பூர்வ உக்தமான அசித் த்வயத்தின் யுடைய பரிணாமங்களையும் சொல்லி
ஏதத் தர்ச நைகதேசிகள் யுடைய
கால விஷய பிரதிபத்தி பேதத்தையும் காட்டி

அநந்தரம்
கீழ்ச் சொல்லப் பட்ட வற்றில்
பாஹ்ய குத்ருஷ்டிகள் யுடைய விப்ரபத்தி பிரகாரங்களையும்
அவை தான் அயுக்தம் என்னும் இடத்தையும் சொலி

அநந்தரம்
பரஸ்பரம் விலஷணமான பூத விசேஷங்களில் ஜ்ஞாதவ்ய அம்சங்களையும் தர்சிப்பித்து
இப்படி அசித் த்ரயத்தின் யுடைய பிரகாரத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டினார் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -119-128-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 4, 2014

சூர்ணிகை -119-

உத்தேச க்ரமத்திலே –
சுத்த சத்வ –
மிஸ்ர சத்வங்களின் -யுடைய
ஸ்வரூபாதிகளைத் தெளிய அருளிச் செய்தார் கீழ் –

இனி
சத்வ சூன்யமாகிறது ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சத்வ
ஸூன்யமாவது
காலம் –

அதாவது
சத்வ குணம் ரஜஸ் தமஸ் குணங்களுக்கும் உப லஷணமாய்
சத்வ ஸூன்யம் என்றது
சத்வாதி குண த்ரய ஸூன்யம் -என்றது ஆயிற்று

இத்தால் ‘
கேவல சத்வமாயும்
குண த்ரய ஆச்ரமாயும்
இருக்கிற அசித் த்வயத்தையும் பற்ற
இது வ்யாவ்ருத்த ஸ்வரூபமாய் இருக்கும் -என்கை –

——————————————————————

சூர்ணிகை -120-

இதனுடைய பிரகாரம் ஏது என்னும் ஆகாஙஷையிலே சொல்லப் படுகிறது மேல் –

இது பிரகிருதி
பிராக்ருதங்களின் யுடைய
பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நித்யமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
சரீர பூதமாய்
இருக்கும் –

அதாவது –
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-
பிரகிருதி என்கிறது அவ்யக்தத்தை
ப்ராக்ருதம் என்கிறது வ்யக்தத்தை

பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு கால தத்வம் ஹேதுவாகை யாவது –
இவற்றை ஸ்வ சங்கல்பாதிகளாலே பரிணப்பிக்கிற சர்வேஸ்வரன்
காலத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்களைப் பார்த்து கொண்டு இருந்து
அவ்வவ காலங்கள் வந்தவாறே இவற்றை நிர்வஹிக்கையாலே
இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு இது அவஸ்யம் அபேஷிதமாய் இருக்கை-

பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிசயாத் மேச்சாயா ஹரி
ஷோபயாமாச ஸம் ப்ராப்தே சர்வ காலே வ்யயாவதய யௌ–(ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-2-35- )

ஸ்ருஷ்டி காலம் வந்தவுடன் மாற்றம் அடைந்தும் மாற்றம் அடையாமலும் இருந்துள்ள
ப்ரக்ருதி மற்றும் புருஷன் என்னும் ஆத்மா ஆகியவற்றில்
ஸ்ரீ ஹரி உட் புகுந்து தனது ஸங்கல்பத்தால் கலக்கினான் என்றும்

காலே ஸம்சதி யோக்யதாம் சிதசிதோரந் யோந்ய மாலிங்கதோ
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சீ கரணீ ஸ்வாந்த
ப்ரவ்ருத்ததீந்த்ரியை அண்ட நாவரணைஸ் சஹஸ்ரம் அகரோத் தாந் பூர்ப்புவஸ் ஸ்வர்வத
ஸ்ரீ ரெங்கேஸ்வர தேவி தே விக்ருதய ஸங்கல்ப மாந ப்ரிய -(ஸ்ரீ குண ரத்ன கோசம் -19-) –

ஸ்ரீ ரெங்கநாதனின் நாயகியே தாயே பிரளயம் முடிந்த பின்னர் பலவகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஓன்று வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன
அப்போது மீண்டும் ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கும் காலம் வந்தது – உனது பிரியமானவனான அழகிய மணவாளன்
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான் எதற்கு – உன்னை மகிழ்விக்கவே அன்றோ
அப்போது அவன் பஞ்ச பூதங்கள் அஹங்காரம் மஹத் ஞான இந்திரியங்கள் ஐந்து மனம் கர்ம இந்த்ரியங்கள்
ஐந்து ஆகியவற்றைப் படைத்தான் இவற்றுடன் ஏழு சுற்றுகளை படைத்தான்
அதன் பின்னர் பூ லோகம் புவர் லோகம் ஸ்வர்க்க லோகம் ஆகியவற்றைப் படைத்தான்
மேலும் பல அண்டங்களையும் படைத்தான் -என்கிறபடியே

ஜகத் சிருஷ்டி பண்ணுகிற போது
அக் காலம் வரும் அளவும் பார்த்துக் கொண்டு இருந்து இறே சிருஷ்டித்தது
இது தான் ஸ்திதி யாதிகளுக்கும் ஒக்கும் இறே

இப்படி கால பிரதானமாக சர்வேஸ்வரன் நிர்வஹித்து அருளுகையாலே
இவ் விபூதியில் சகல பதார்த்தமும் கால க்ருத பரிணாமமாய் இருக்கும்

இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு காலம் ஹேது என்னும் இடம்
இதனுடைய அந்வய வ்யதிரேகங்களாலே லௌகிக பதார்த்தங்களிலே காணலாம் இறே

ஆகையால் காலத்தின் யுடைய பிரகிருதி பராக்ருத பரிமாண ஹேதுத்வம்
ஆகமத்தாலும் பிரத்யஷத்தாலும் சித்தம் –

அநந்தரம்
கீழ் சொன்னதுக்கு உபயோகியான இதன் பரிணாம விசேஷத்தைச் சொல்லுகிறது –
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்-

காஷ்ட்டடா பஞ்ச தச க்யாதா நிமேஷா முனி சத்தம காஷ்டா த்ரிம் சத் கலா த்ரிம் சத் ‘
கலா மௌ ஹூர்த்தி கோ விதி தாவத் சங்க்யைர் அஹோராத்ரம்
முஹூர்த்தைர் மானுஷம் ஸ்ம்ருதம் அஹோராத்ராணி தவாந்தி மாச பஷ த்வ யாத்மாக
தைஷ் ஷட் பிரிய நம் வர்ஷம் த்வே யனே
தஷிண உத்தர அயனம் தஷிணம் ராத்ரி தேவானாம் உத்தரம் தினம் திவ்யைர்
வர்ஷ சஹஸ்ரைஸ் து க்ருத த்ரேதாதி சம்ஜ்ஜிதம் சதுர்யுகம்
த்வாதச பிஸ் தத் விபாகம் நிபோதமே சத்வாரி த்ரீணி த்வேசைகம் க்ருதா திஷூ யதா க்ரமம்
திவ் யாப்தாநாம் சஹஸ்ராணி யுகேஷ் வாஹூ புராவித
தத் ப்ரமாணைஸ் சதைஸ் சந்த்யா பூர்வா தத்ராபி தீயதே
சந்த்யாம் சகச்ச தத் துல்யோ யுகஸ்யா நந்தரோ ஹி ச
சந்த்யா சந்த்யா மசயோர் அந்தர்யா காலோ முனி சத்தம யுகாக் யஸ்
ச து விஜ்ஞ்ஞேய க்ருத த்ரேதாநநி தி சம்ஜ்ஞித -என்று தொடங்கி-

ஏவந்து ப்ரஹ்மணோ வர்ஷமேவம் வர்ஷ சதந்து தத் சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத் மன –
என்னுமது அளவாக காலத்தின் யுடைய பரிணாம விசேஷம்
ஸ்ரீ பராசர பகவானாலே கதிதமாயிற்று —

(முனிவர் களில் சிறந்தவரே
பதினைந்து நிமேஷங்கள் கொண்டது ஒரு காஷ்டை ஆகும் -முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை ஆகும்
முப்பது கலைகள் கொண்டது ஒரு முஹூர்த்தம் ஆகும் –
இப்படிப்பட்ட முஹூர்த்தங்கள் மூலம் பகல் இரவு என்பதாகிய ஒரு மனித நாள் உள்ளது
முப்பது நாள் கொண்டதாக இரண்டு பக்ஷங்கள் கொண்ட ஒரு மாதம் உள்ளது
ஆறு மாதங்கள் கொண்ட இரண்டு அயனங்கள் உடைய ஒரு வருடம்
தேவர்களுக்கு உத்தராயணம் என்பது பகல் -தக்ஷிணாயணம் என்பது இரவு -இரண்டும் சேர்ந்து ஒரு நாள்
12000 தேவ வருடம் -க்ருத-4000- த்ரேதா-3000- த்வாபர–2000- கலி -1000-சதுர் யுகம்-
முற் சந்தி -பிற் சந்தி ஒவ்வொன்றும் -400 க்ருத–300-த்ரேதா-200 த்வாபர-100 கலி —
என்று தொடங்கி
இப்படியாக உள்ள நான் முகன் ஒரு வருடம் -அவன் ஆயுள் காலம் இப்படி 100 வருடம் என்று
காலத்தின் மாற்றங்கள் சிறப்பானது என்று ஸ்ரீ பராசர பகவானால் கூறப்பட்டது )

இது தன்னை நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
நிமிஷம் பதினைந்து கொண்டது காஷ்டை –
காஷ்டை முப்பது கொண்டது கலை –
கலை முப்பது கொண்டது முஹூர்த்தம்
முஹூர்த்தம் முப்பது கொண்டச்து திவசம்
திவசம் முப்பது கொண்டது பஷம்
பஷ த்வய ரூபமான மாசம்
மாசம் இரண்டு கொண்டது ருது
ருது மூன்று கொண்டது அயனம்
அயனம் இரண்டு கொண்டது சம்வத்சரம்
இப்படி மானுஷ சம்வத்சரம் 360 கொண்டது ஒரு தேவ சம்வத்சரம்
தேவ சம்வத்சரம் 12000 கொண்டது சதுர யுகம்

அதில்
கிருத யுகம் -4000
த்ரேதை -3000
த்வாபரம் -2000
கலியுகம் -1000

கிருத யுகத்துக்கு பூர்வ சந்த்யை-400-அபர சந்த்யை -400
த்ரேதைக்கு -பூர்வ சந்த்யை-300-அபர சந்த்யை -300
த்வாபரத்துக்கு பூர்வ சந்த்யை-200-அபர சந்த்யை -200
கலி யுகத்துக்கு பூர்வ சந்த்யை-100-அபர சந்த்யை -100
இப்படி 71 சென்ற சதுர யுகம் ஒரு மன்வந்தரம்
14 மன்வந்தரம் 1000 சதுர யுகம்

இது ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல்
ராத்ரியும் இத்தோடு சமமாய் இருக்கும்
இப்படி அஹோராதரங்களும் மாச சம்வத்சரங்களுமாய் பெருக்கி
சதா நதமாக பரிகணிதமான ப்ரஹ்ம ஆயுஸ்ஸூக்கு பரம் என்று பேராம் -என்று
ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார்

ஆக
காலத்தின் யுடைய கலா காஷ்டாதி ரூப பரிணாம பிரகாரம் சொல்லப் பட்டது-

நித்யமாய் –
இவ்விடத்திலே நித்யத்வம் ஆவது
அநாதிர் பகவான் -காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே–(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20)-
என்கிறபடியே–ஆதி அந்த ரஹிதமாய் இருக்கை –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கை-
அதாவது –
நிகில ஜகத் உதய விபவ லய லீலனான சர்வேஸ்வரனுக்கு
தத் தத் லீலா உபகரணம் ஆகை
பிரகிருதி புருஷ காலங்கள் மூன்றும் லீலா உபகரணமாய் இறே இருப்பது –

அதில் பிரகிருதி புருஷர்கள் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கர்மீபவித்து லீலா உபகரணம் ஆவார்கள் –
இது சஹகாரித்வேன லீலா உபகரணமாய் இருக்கும்

ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நிர்வஹிக்கும் இடத்தில்
சத்ய சங்கல்பனான தான் அடியில் பண்ணி வைத்த கால நியமம் தப்பாத படி
அவ் வவ காலா கமனம் பார்த்து இருந்தே நிர்வஹிக்கையாலே
இது தன்னை நிமிஷ காஷ்ட்டாதி ரூபேண பரிணமிப்பிக்கையாலே
இது தான் சிருஷ்டி விஷயமாமுமாய் இறே இருப்பது

ஆக இப்படிகளாலே ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கும்
இத்தை க்ரீடா பரிகாரம் என்றே சொல்லுகையாலே
கால க்ருத பரிணாமமே யாய்ச் செல்லுகிற
லீலா விபூதியிலே இதுக்கு விநியோகம்
ந காலச தாத்ரா வை பிரபு-என்கிற போக விபூதியில்
இது கொண்டு அபேஷை இல்லை என்றதாயிற்று-

அநந்தரம்-
ஏவம் பூதமான கால தத்வம்
ஈஸ்வரனுக்கு அபருதக் சித்த விசேஷணமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
சரீர பூதமாய் இருக்கும் -என்று –

பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷ பரமம் த்விஜ வ்யக்த அவ்யக்தே
ததை வாந்யே ரூபே காலஸ் ததா பரம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-17 ) –

மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் சரீரமாக ஆத்மா உள்ளான் -ப்ரக்ருதியும் சரீரமாக உள்ளது –
காலமும் சரீரமாக உள்ளது -என்றும்

பிரதான புருஷ அவ்யக்த காலாஸ்து ப்ர விபாகச ரூபாணி ஸ்திதி
சர்காந்த வ்யக்தி சத்பாவ ஹேதவ–(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-19 )

ப்ரதானம் புருஷனாகிய ஆத்மா வ்யக்தம் காலம் போன்ற அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரங்கள்
இவை மாறு பாடுகளை அடை விக்கும் தன்மை -இன்பம் அளிக்க வல்ல தன்மை –
இருப்பு தோற்றம் அழிவு வெளிப்படும் தன்மை ஆகிய வற்றுக்குக் காரணமாக உள்ளன – என்றும்

விஷ்ணோ ஸ்வரூபாத் பர தோதிதே த்வே ரூபே பிரதானம் புருஷச்ச விப்ர தஸ்யைவ
தேந் யேந த்ருதே வியுக்தே ரூபாந்தரம் தத் த்விஜ கால சம்ஜ்ஞம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-26 )-

அனைத்தையும் விட உயர்ந்த மஹா விஷ்ணுவின் திரு மேனியில் இருந்து
ப்ரதானம் மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் தோன்றின
இவை ஸ்ருஷ்டிக்கு ஏற்ற படி உள்ளது போன்று அவனுடைய சரீரத்தில் உள்ள
மற்ற ஓன்று காலம் என்பது ஆகும் என்றும் சொல்லக் கடவது இறே

ஒரு சேதனனோடு த்ரவ்யத்துக்கு யுண்டான
பிருதக் சித்த யனர்ஹ ஆதார ஆதேய பாவமும்
நியந்த்ரு நியாமய பாவமும் சேஷ சேஷி பாவமும்
ஓர் ஒன்றே சரீர லஷணமாய் இறே இருப்பது

கால சம்ஜ்ஞக அசித் த்ரவ்யத்துக்கு -ஏதத் சம்பந்த த்ரவ்யமும்
ஈஸ்வரனோடு யுண்டாகையாலே
இது அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றதாயிற்று

இப்படி பிரக்ருதியாதி பரிணாம சஹகாரியான காலம் ஈஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கும் என்கையாலே
சஹகாரி காரணமும் ஈஸ்வரனே என்னுமதுக்கு விரோதம் இல்லை –

ஆக
சத்வ ஸூன்யமாகிறது இன்னது என்றும்
அது செய்யும் கார்யமும்
அதுக்கு உறுப்பான அதனுடைய பரிணாமமும்
அதனுடைய அநாதி நிதனத்வமும்
அது தான் ஈஸ்வரனுக்கு இன்னத்துக்கு பரிகரமாய் இருக்கும் என்றும்
அது தான் அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றும்
சொல்லி நின்றது –

—————————————————-

சூர்ணிகை -121-

த்ரிவித அசித்தையும் அருளிச் செய்கிற விடத்தில்
அவனுக்கு போக உபகரணமான கௌரவத்தைப் பற்ற
சுத்த சத்வத்தை பிரதமத்தில் அருளிச் செய்தார்

அநந்தரம்
அவனுடைய லீலைக்கு பிரதான உபகரணமாய்க் கொண்டு
பிரதான சப்த வாச்யனான மிச்ர சத்வத்தை அருளிச் செய்தார் –

அநந்தரம்
அந்த பிரதான பரிணாமத்துக்கு சஹகாரியாய்க் கொண்டு
லீலா உபகரணமாய் இருக்கும் சத்வ ஸூன்யத்தை அருளிச் செய்தார் –

இப்படி அசித் த்ரயத்தையும் சொல்லுகிற இடத்தில்
பிரகிருதி ப்ராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-(120)என்று
கால தத்துவத்துக்கு விநியோகம் சொன்னாவோபாதி
பூர்வ அசித் த்வயத்துக்கும் விநியோகம் சொல்லப் பட்டது இல்லை இறே
அத்தை அருளிச் செய்கிறார் மேல் –

மற்றை இரண்டு அசித்தும்
ஈஸ்வரனுக்கும்
ஆத்மாவுக்கும்
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய்
இருக்கும் –

அதாவது
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் என்றது
சேதனர் இறே அசேதனதுக்கு போக்தாக்கள்
சேதனராக உள்ளது ஈஸ்வரனும் ஆத்மாவும் இறே
ஆன பின்பு உபயர்க்கும் போக்யாதிகளாய் இருக்கும் என்றபடி
ஆத்மாவுக்கும் என்ற ஏக வசனம் ஜாதி அபிப்ராயம் ஆகையாலே
த்ரிவித சேதனரையும் சொல்லுகிறது –

இப்படி உபய அசித்தும் உபயர்க்கும் போக்யாதிகளாய் இருந்ததே யாகிலும்
கேவல பகவத் இச்சையாலே தத் போக அர்த்தமாக பரிணமிக்கையாலும்-
அநவரத அபரோஷித ஸ்வ பர ஸ்வரூபரான நித்ய முக்தரில்
திருமகளும் நீயும் (திருவாய் -4-9-10 )-என்கிறபடியே
அம் மிதுனத்தினுடைய போகத்துக்கு கை தொடுமானமாய் இருக்குமது ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலும்
சுத்த சத்வத்தின் யுடைய விநியோகம் ஈஸ்வர பிரதானமாய் இருக்கும்-

அங்கன் இன்றிக்கே
சேதன கர்ம அனுகுணமாக பகவத் சங்கல்ப்பத்தாலே பரிணமிக்கையாலும்
சேதனர் எல்லாரும் தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியைப் பண்ணி
ஸ்வ தந்திர போக்தாக்களாய் இருக்கையாலும்
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் லீலா ரசமே பிரசுரமாய்
போக ரசம் அத்ய அல்பம் ஆகையாலும்
மிச்ர சத்வத்தின் யுடைய விநியோகம் பத்த சேதன பிரதானமாய் இருக்கும் –

————————————————————–

சூர்ணிகை -122-

அந்த விபூதியில் போக்யங்கள் ஆவன அப்ராக்ருதமான சப்தாதிகள்
போக உபகரணங்கள் ஆவன திவ்ய மாலயாதிகளும் சத்ர சாமராதிகளும் கரணங்கள் தானும்
போக ஸ்தானங்கள் ஆவன அப்ராக்ருத ரத்ன மயமான மண்டபம் என்ன மாளிகை என்ன இத்யாதிகளும்

பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய விக்ரஹங்களும்
இப்படி நித்ய விபூதி பிரக்ரியையும் இவ்விடத்திலே அருளிச் செய்ய வேண்டி இருக்க
சங்கோசித்து
லீலா விபூதி பிரக்ரியா மாதரத்தை அருளிச் செய்கிறார் –

போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்
போக உபகரணங்கள் ஆகிறன -சஷூராதி கரணங்கள்
போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –

இது தான் உபய விபூதிக்கும் ஆனாலோ என்னில்
போக உபகரணங்களில் பிரதானங்கள் சொல்லாமையாலும்
போக ஸ்தானங்களில் வைஷமயத்தாலும் சேராது-

இங்கு சேதனருக்கு போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஞானம்
அந்த ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆகையாலே சப்தாதி விஷயங்கள் போக்யங்கள்
அந்த ஜ்ஞானத்துக்கு உபகரணங்கள் ஆகையாலே இந்த்ரியங்கள் போக உபகரணங்கள் –
யாதொரு அதிகரணத்திலே நிற்கிற சேதனனுக்கு அந்த ஜ்ஞானம் பிறக்கிறது அது
போக ஸ்தான சப்தத்துக்கு அர்த்தம் ஆகையாலே
போக ஸ்தானங்கள் என்று லோகங்களையும் தேஹங்களையும் சொல்லுகிறது –
லோக விபாகம் கீழே சொல்லப் பட்டது
சமஸ்த தேஹங்கள் ஆவன ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சரீரங்கள்-

ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் யுண்டான போக்ய போக உபகரணாதிகளையும்
அவதார கந்தமான ஷீரார்ணவ சயனத்திலும்
அவதார விசேஷங்களிலும்
அர்ச்சாவதார விசேஷங்களிலும்
யுண்டான விநியிக்க விசேஷங்களாலே கண்டு கொள்வது –

———————————————————–

சூர்ணிகை -123

அநந்தரம் த்ரிவித அசித்தின் யுடைய பரிணாமங்களை
அருளிச் செய்கிறார் –

இதில் முற்பட்ட அசித்துக்கு
கீழ் எல்லை யுண்டாய்
சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே
இருக்கும்
நடுவில் அசித்துக்கு
சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே
மேல் எல்லை யுண்டாய் இருக்கும்
காலம்
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –

பூர்வ அசித்துக்கு கீழ் எல்லை யுண்டு என்கிறது மிச்ர சத்வ அவதி ஆகையாலே
நடுவில் அசிதுக்கு மேல் எல்லை யுண்டு என்கிறது சுத்த சத்வ அவதி யாகையாலே
காலத்துக்கு அங்கன் ஒரு அவச்சேதம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் என்கிறது

இப்படி சர்வ தரிகமான காலம் தான்
உபய விபூதியிலும் நித்யம் என்று இறே தமக்குத் திரு உள்ளம் –

————————————————————————–

சூர்ணிகை -124-
இங்கன் அன்றிக்கே
இதுக்கு விபூதி பாகத்தை இட்டு ஒரு பேதம் சொல்லுவாரும் யுண்டு
என்கிறார்

காலம் தான்
பரம பதத்தில் நித்யம்
இங்கு அநித்யம்
என்றும் சொல்லுவார்கள் –

இப்படி சொல்லுகைக்கு அடி –
பரம பதத்தில் இதுக்கு உத்பத்தியாதிகள் யுண்டாக சாஸ்திரங்கள் சொல்லாமையாலும்
இந்த விபூதியிலே இதுக்கு உத்பத்தியாதிகள் சொல்லுகையாலும்
வ்யூஹ க்ருதயங்களை சொல்லும் இடத்தில்
கால சிருஷ்டியை அநிருத்த கிருத்யமாக சொல்லா நின்றது இறே

பிரக்ருதியை ஸ்ருஷ்டிக்கை யாவது -மஹதாதி ரூபேண பரிணமிக்கையானால் போலே

காலத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது -நிமிஷ காஷ்டாதி ரூபேண பரிணமிப்பிக்கை

சத்த பரிணாமியான பிரக்ருதிக்கு மஹதாதி ரூபமான ஸ்தூல பரிணாமம் போலே இறே
இதுக்கும் நிமிஷாதி ரூபமான பரிமாணம்

அந்த மஹாதாதியோபாதி நிமேஷாயாதியான இதுவும் விநாசவததாகயாலே
இவ்வளவைக் கொண்டு காலம் இங்கு அநித்யமாய் இருக்கும் என்கிறது

பரமபதத்தில் ஈத்ருச பரணாம விசேஷ பரயுக்தோதபத்யாதி
வ்யவஹார ராஹித்யத்தாலே நித்தியமாய் இருக்கும் என்கிறது –

இப்படி காலத்துக்கு பரிணாமம் கொள்ளாதே
ஏக ரூபத்தைக் கொண்டு இப்படி இருந்துள்ள காலம் தான்
தன்னுடைய நிமிஷம் காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரம் தொடக்கமாக
பரார்த்தம் ஈறாக யுண்டான விசேஷ வ்யவஹாரத்துக்கு ஹேதுவான
நிமேஷோ நமேஷங்கள் ஆதித்ய கதி தொடக்கமான அவச்சேதங்களோடே சம்பந்தித்து இருக்கும் ஆகையாலே
ஷண லவாதி பேத வ்யவஹாரம் யுண்டாகின்றது என்று சொல்லுவதும் ஒரு பஷம் யுண்டு இறே

இது விறே தத்வ த்ரய விவரணத்தில் பெரிய வாச்சான் பிள்ளை பிரதானயேன அருளிச் செய்தது

அந்த பஷத்தில் உபய விபூதியிலும் கால ஸ்வரூபம் ஏக ரூபமாய் இருக்கையாலே
பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்ற இது சொல்லப் போகாது

ஆகையால் இது பரிணாம பஷத்தை அவலம்பித்து சிலர் சொன்னது என்று கொள்ள வேணும்

நம்முடைய தர்சன ஸ்தானங்களிலே இங்கனேயும் சிலர் அருளிச் செய்கையாலே
அத்தையும் தர்சிப்பித்து அருளினார் ஆயிற்று –

———————————————————————–

சூர்ணிகை -125-

சிலர் காலத்தை
இல்லை என்றார்கள் –

காலம் தன்னை இல்லை என்று
பௌத்தாதிகள் சொல்லுகையாலே -சிலர் -என்கிறார்

————————————————————————-

சூர்ணிகை -126-

அத்தை நிராகரிக்கிறார்

பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும்
சித்திக்கையாலே
அது சொல்ல ஒண்ணாது –

பிரத்யஷமாவது
ஸ்தாவர ஜங்கமாத்மகமான சமஸ்த பதார்த்தமும்
கால க்ருத பரிணாம மாகவே காணப் படுகிற இது

ஆகமமாவது
ஸ்ருதியாதிகள் –

கலா முஹூர்த்தா காஷ்டா ச சஹோராத்ராச்ச சர்வச -(தை -2-1-8-) என்றும்
(கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் அனைத்தும் )
மதுச்ச மாதவச்ச வாச நதிகா வருதூ சுகரச்ச சுசிச்ச கரைஷ மாவருதூ-(யஜுஷி-4 )
(சித்ரையும்யும் வைகாசியும் வசந்த ருதுக்கள் -ஆனியும் ஆடியும் க்ரீஷ்ம ருதுக்கள் )என்று
கால பரிணாம விசேஷங்களான -கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் ருது விசேஷங்களை
சொல்லா நின்றது இறே ஸ்ருதி –

கால ஸ்வரூபம் விஷணோச்ச யநம யோகதம தவா நக -இத்யாதியாலே
(ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே-1-3-6-என்று விஷ்ணுவின் கால ஸ்வரூபம் என்னாலே விரிவாகக் கூறப்பட்டது )
இது தான் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே

புராணாந்தரங்களிலும் இதிஹாசாதிகளிலும் இப்படி கண்டு கொள்வது –

இதுக்கு என்னவே நிர்மிதமாய் அத்யய நாதி கால நியமங்களை பிரதிபாதிக்கிற
ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வேதத்துக்கு திருஷ்டியாக சொல்லா நின்றது இறே

அந்த சாஸ்திரம் தன்னிலே இன்ன காலத்திலேயே இன்னது யுண்டாம் என்று சொன்னால்
அது பிரத்யஷிக்கலாய் இரா நின்றது இறே-

ஆகையால்
பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும் இப்படி சித்திக்கையாலே
கால அபாவம் சொல்ல ஒண்ணாது என்கை –

————————————————————-

சூர்ணிகை -127-

பலரும் திக்கு என்று
தனியே ஒரு த்ரவ்யம்
யுண்டு
என்றார்கள் –

வைசேஷாதிகள் பிருதிவ்யாதிகளோ பாதி
திக்கு என்றும் ஒரு த்ரவ்யம் யுண்டு என்று சொல்லுகையாலே
இப்படி அருளிச் செய்கிறார் –

த்ரவ்யாணி ப்ருதிவி அப்ய தேஜோ வாயு ஆகாச கால திக் ஆத்ம மநா மசி நவைவ -(தர்க்க ஸங்க்ரஹம் )-
(த்ரவ்யங்கள் என்பவை -பிருத்வி நீர் அக்னி வாய் ஆகாசம் காலம் திசை ஆத்மா மனம் ஆகிய ஒன்பதும் )என்று
இறே அவர்கள் சொல்லுவது –

பூராபோ ஜ்யோதிரநிலோ நப காலஸ் ததாதிச ஆத்மா மன இதி ப்ராஹுர்
த்ரவ்யாணி நவ தத்வித -என்றான் இறே அந்த மதத்தைச் சார்ந்த ஸ்ரீ வரத ராஜன் –

———————————————————————

சூர்ணிகை -128-

அத்தை நிராகரிக்கிறார் –

பல ஹேதுக்களாலும்
ஆகாசாதிகளிலே
அந்தர் பூதம் ஆகையாலே
அதுவும் சேராது –

அதாவது –
நாலு பேர் நாலு திக்கிலும் நின்றால்
நால்வர்க்கும் நடுவான பிரதேசம்
ஒருவனுக்கு கிழக்காய்-
ஒருவனுக்கு மேற்காய்-
ஒருவனுக்கு வடக்காய் –
ஒருவனுக்கு தெற்காய்
தோற்றா நின்றது இறே

அதுக்கடி
த்ரவ்யம் அன்றிக்கே பிரதியோக அணுகுண கல்பனம் ஆகை

நால்வருக்கு நடுவே இருக்கிற பிருதிவ்யாதிகள் த்ரவ்யம் ஆகையால்
இப்படி விப்ரதிபத்தி விஷயம் ஆகிறது இல்லை இறே

இனித்தான் ஆதித்யன் உதிக்கிற இடம் கிழக்காகவும்
அவன் அஸ்தமிக்கிற இடம் மேற்காகவும் இறே கொள்ளுகிறது –

அது தான் மகா மேருவுக்கு நாலு பார்ஸ்வத்திலும் பேதித்து இறே இருப்பது
ஆகையால் இறே நாலு பார்ஸ்வத்திலும் உள்ளவர்களுக்கு மகா மேரு வடக்காய் இருக்கிறது –

நைவாஸ் தமய மரீக் கஸய நோதயஸ் ஸர்வ தாஸத உதயாஸ் த மாயாக்க்யாய ஹி தர்சன அதர்சனம் ரவே
ஸர்வேஷாம் த்வீப வர்ஷாணாம் மேரு ருத் தரதோ யத –
(எப்போதும் உள்ளதான ஸூர்யனுக்கு உதயம் என்றும் அஸ்தமனம் என்றும் இல்லை
ஸூர்யனைக் காண்பதும் மற்றும் காண இயலாமல் போவதும் மட்டுமே
உதயம் என்றும் அஸ்தமனம் என்றும் என்று காண்கிறார்கள்
அனைத்து த்வீபங்களுக்கும் மேருவானது வடக்கே உள்ளது )-என்று
இது தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் பட்டது-

இப்படி பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளில் அந்தர்பூதமாய்
தனக்கு என ஒரு த்ரவ்ய அவஸ்தை இல்லாமையாலே
திக்கு என்று ஒரு த்ரவ்யம் யுண்டு என்கிற வதுவும் சேராது என்கை –

ஆகாசாதி -என்கிற ஆதி சப்தத்தாலே
பூமியைச் சொல்லுகிறது

இவற்றில் திக்கு அந்தர் பூதம் ஆகையாவது
ஸூர்யனுடைய உதயாதிகளுக்கு ஈடாக
இவற்றுக்கு உள்ளே திக் விபாகத்தை கல்பித்துக் கொள்ளுகிறது-ஒழிய
பிரித்துக் காணலாவது ஒரு வஸ்து இன்றிக்கே இருக்கை

அதுவும் சேராது என்றது
முன்பேயும் ஒரு பஷத்தை நிஷேதிக்கையாலே சமுச்சயம்-

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -110-118–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 3, 2014

சூர்ணிகை -110-

ஆக இப்படி மஹதாதி பதார்த்தங்களின் யுடைய
உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இவற்றைக் கொண்டு ஈஸ்வரன்
அண்ட ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும்படியை அருளிச் செய்கிறார் -மேல்

இவை கூடினால் அல்லது
கார்ய கரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும்
சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே

ஈஸ்வரன் இவற்றை எல்லாம்
தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி
அதுக்கு உள்ளே
சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –

அதாவது –
இவை கூடினால் அல்லது கார்ய கரம் அல்லாமையாலே –
நாநா வீர்யா ப்ருதக் பூதாஸ் ததஸ் தே சம்ஹதம் விநா
நாசக்நுவந் ப்ரஜாஸ் ஸ்ரஷ்டு மசமாகம்ய க்ருதஸ் நாச (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53 )

(அதன் பின்னர் பலவிதமான வீர்யங்கள் கொண்டதும் தனித்தனியாக உள்ளதும் ஆகிய
அந்த மஹத் முதலான தத்வங்கள் ஒன்றாகச் சேர்ந்தால் அல்லாமல் பிரஜைகள் போன்றவற்றைப்
படைப்பதற்கு ஒன்றாகச் சேரத் தக்க வரிசையை அடைவது இல்லை )-என்கிறபடியே

சாந்தத்வ கோரத்வ மூடத்வங்களாலே
நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் இருக்கிற
இம் மஹதாதி பதார்த்தங்கள் பரஸ்பர சம்ஹதம் ஆனால் அல்லது
அண்ட ரூபமான கார்யத்தை உத்பாதிக்க மாட்டாமையாலே -என்கை-

மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக் சுவர் இடுவாரைப் போலே –
அதாவது –
ப்ருதக் வீர்யங்களாய் ப்ருதக் ஸ்த்திதங்களாய் இருக்கிற
ம்ருத சிகதா சலிலங்களை-அந்யோந்யம் சேர்த்து
தத் சமுதாயாத் மகமான தொரு த்ரவ்யமாகி
பித்தி ரூபமான தொரு கார்யத்தை நிர்மிப்பாரைப் போலே என்கை-

ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி –
அதாவது –
ஜகத் ஸ்ருஷ்டாவான ஈஸ்வரன்
சமேத் யாந் யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா ஏக சங்காத லஷ்யாச் ச சம் ப்ராப்யைக் யம சேஷத
மஹதாதயோ விசேஷாந் தா ஹயண்ட முத் பாதயந்திதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53 )

(ஒன்றை ஓன்று சார்ந்து நிற்பவைகளாக ஒன்றை ஓன்று தொடர்பு கொண்டவைகளாக –
ஒரு குவியலாகக் காணத் தக்கைவைகளாய் -உள்ள அவற்றைக் கொண்டு மஹத் தொடங்கி
அவற்றின் விசேஷமான பூதங்கள் முடிய உள்ள பலவும் சேர்ந்து அண்டத்தை உத்பத்தி செய்கின்றன ) -என்கிறபடியே
இவற்றை எல்லாம் அந்யோந்யம் சம்ஹதமாக்கி
இவற்றாலே அண்ட சிருஷ்டியைப் பண்ணி -என்கை –

இவ் வண்டத்துக்கு உள்ளே மஹதாதி கார்யங்களை அடையக் காண்கையாலே
மஹதாதி பதார்த்தங்கள் எல்லா வற்றையும் சேர்த்து
அண்ட சிருஷ்டியைப் பண்ணினான் என்னும் இடம் ஸூவ்யக்தம் ஆகையாலே

பூதேப் யோண்டம் மஹா புத்தே ப்ருஹத்
தது தகேசயம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-55)
(பூதங்களில் இருந்து அண்டம் உண்டாகிறது பெரியதாக உள்ள அந்த அண்டம் நீரிலே உள்ளது )என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் அது உதகத்திலே கிடக்கும் என்று சொன்னதும்

அப ஏவ ச சர்ஜாதௌ தாஸூ வீர்யம் அபா ஸ்ருஜத தத் அண்டம பவத் தைமம் சஹஸ்ராம்சு ச சம ப்ரபம் (மனு ஸ்ம்ருதி -1-7-9 )
(தொடக்கத்தில் நீரைப் படைத்தான் -நீரில் அண்டத்தைப் படைத்தான் –
அண்டமானது பொன்னைப் போன்ற ஸூர்யனை ஒத்த தேஜஸ்ஸூ கொண்டதாக ஆனது ) -என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னதும்
பூதாந்தரதுக்கும் உப லஷணம்-

அதாவது
பூர்வ பூதாம்சங்களோடே சம் ஸ்ருஷ்டமுமாய்
பிருத்வியும் தனக்கு உள்ளே கரைந்து கிடக்கிற ஜலத்தில் நின்றும் உத்பன்னமாய்
அதிலே கிடக்கும் -என்றபடி –

இப்படி அண்ட சிருஷ்டியை பண்ணும் படியை அருளிச் செய்து

அநந்தரம்
இந்த பாஹ்யமான பூதங்கள் ஆந்தரமான ஆகாசாதிகளாய் பரிணமித்த பின்பு
அவற்றைக் கொண்டு லோக விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
அந்த லோகங்களில் தேவாதி ஜீவ விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
இவ்வண்டத்துக்கு உள்ளே
பத்தாத்மா சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவை சிருஷ்டித்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –

அதுக்கு உள்ளே சதுர் முகனை சிருஷ்டித்து அருளும் -என்று
சதுர் முகனுக்கு பத்தாத்மா சமஷ்டி பாவமாவது
இவ் வண்டத்துக்கு வேண்டும் கர்ம வஸ்ய சேதனர் -இவன் சரீரத்தில் யுண்டாய் கிடக்கை

இப்படி சதுர் முகனை சிருஷ்டித்து
இனி மேல் யுண்டான சிருஷ்டி எல்லாம் சத்வாரமாக நின்று செய்வதாக இறே –

—————————————————-

சூர்ணிகை -111-

அது தன்னை தர்சிப்பிக்கைக்காக சமஷ்டி சிருஷ்டியிலும் வ்யஷ்டி சிருஷ்டியிலும்
சர்வேஸ்வரன் செய்யும் க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல்

அண்டத்தையும்
அண்ட காரணங்களையும்
தானே யுண்டாக்கும்

அண்டத்துக்கு உட்பட்ட
வஸ்துக்களை
சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று
யுண்டாக்கும் –

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும் –
அதாவது –
சமுதாய கார்யமான அண்டத்தையும்
தத் காரணமான மஹதாதி பதார்த்தங்களையும்
சத்ய சங்கல்பனான தன்னுடைய அவயவஹித சங்கல்பத்தாலே
யுண்டாக்கும் -என்கை –

சோபித் யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ருஷூர் விவிதா ப்ரஜா அப ஏவ
ச சர்ஜாதௌ தாஸூ வீர்யம பாஸ்ருஜத ததண்டமபவத் தைமம் சஹஸ்ராம்ஸூ சம் ப்ரபம் ( மனு -1-8-9-)

(பரமாத்மா சங்கல்பம் செய்து தனது திரு மேனியில் இருந்து பலவற்றையும் படைக்க வேண்டும் என்று எண்ணி
முதலில் நீரைப் படைத்தான் -அந்த நீரில் வீரியமான அண்டத்தைப் படைத்தான் –
அது பொன் மயமான ஸூர்யனுக்கு நிகரான தேஜஸ்ஸூ கொண்டதாக விளங்கியது )-என்னக் கடவது இறே –

அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் –
அதாவது
சதுர்முகாதி சேதனர்களுடைய ஹ்ருதயங்களில் இருந்து —
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சன்னிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹநஞ்ச -(ஸ்ரீ கீதை -15–15)
(அனைவருடைய இதயங்களிலும் நான் உள்ளேன் -என்னிடம் இருந்து ஞாபகமும் மறதியும் ஏற்படுகின்றன )
சங்கல்ப ஞானாதிகளை ஜெநிப்பித்துக் கொண்டு –
அண்டாந்த்ர வர்த்திகளான சகலத்தையும் ஸ்ருஷ்டிக்கும் –

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யே ஸத்வஜா தேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜ் யஸ்ய ஸம்ஸ்தவ் தத் ஸர்வம் வை ஹரேஸ் தனு (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-33 )
(எந்தப் பொருள்கள் நான்முகனால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டனவோ அவை அனைத்துக்கும்
பகவான் ஸ்ரீ ஹரியே காரணமாக உள்ளான்
அனைத்துமே அவனுடைய சரீரம் அல்லவோ )

யாதொரு சத்வ சமூகத்தால் -யாதொரு வஸ்து ஸ்ருஷ்ட்க்கப்படுகிறதோ
அதில் ஈஸ்வரன் காரணமாக இருக்கிறான் -அந்தர்யாமியாக -இருந்து -என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரம் என்றதாயிற்று –

ஈஸ்வரன் சகல கர்த்ரு சரீரியாய்க் கொண்டு சகல காரியங்களையும் ஸ்ருஷ்டிக்கும் -என்னக் கடவது இறே

——————————————————————

சூர்ணிகை -112-

ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி (சூர்ணிகை-110 )-என்று
சர்வேஸ்வரன் மஹதாதி பதார்த்தங்களைச் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணும்
என்னும் இவ்வளவு இறே கீழே அருளிச் செய்தது

இப்போது
இந்த அண்ட பஹூத்வத்தையும்
அவற்றின் யுடைய கட்டளை இருக்கும் படியையும்
அவை தான் சர்வேஸ்வரனுக்கு இன்ன விநியோகத்துக்கு உறுப்பு என்னுமத்தையும்
அவற்றின் யுடைய பரிணாம பிரகாரத்தையும்
அருளிச் செய்கிறார் –

அண்டங்கள் தான் அநேகங்களாய்
பதினாலு லோகங்களோடே கூடி
ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு
ஈஸ்வரனுக்கு கரீடா கந்துக ஸ்த்தாநீயங்களாய்
ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே
ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-

அண்டங்கள் தான் அநேகங்களாய்-
அண்டாநாம் து சஹாஸ்ராணாம் சஹஸ்ராண்ய யுதானி ச
ஈத்ருசா நாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச- (ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-7-27 )
(ஆயிரம் அண்டங்களுடைய ஆயிரம் ஆயிரம் மற்றும் பதினாயிரம் என்னும் பிரிவுகள் கொண்ட
அண்டங்களுடைய பல கோடிகள் உள்ளன )என்னக் கடவது இறே-

பதினாலு லோகங்களோடே கூடி –
பதினாலு லோகங்கள் ஆவன –
கீழில் அண்ட கடாஹலத்துக்கு மேல் –
எண்பத்து மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் ,யோஜனை
உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே

சப்த திஸ்து சஹாஸ்ராணாம் த்வி ஜோச்சராயோபி கத்யதே
தச சஹஸ்ர மேகைகம் பாதாளம் முனி சத்தம
அதலம் விதலஞ்சைவ நிதலஞ்ச கபஸ்திமத் மகாக்க்யம்
ஸூ தலாஞ் சாக்யர்ம்
பாதாளஞ்ச சைவ சப்தமம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-12 )

(பூமியின் உயரம் 70000 யோஜனை ஆகும்
1 யோஜனை -12 -15 கி மீட்டர்
பாதாள லோகம் ஒவ்வொன்றும் 16000 யோசனைகள் உயரம் மற்றும் அகலம் கொண்டதாக உள்ளன
அதலம்-விதலம் -நிதலம் -கபஸ்திமத் -மஹா தலம் -ஸூ தலம் -பாதாளம் என்று ஏழு லோகங்கள் உள்ளன ) –என்கிறபடியே

ஓர் ஓன்று பதினாலாயிரம் யோஜனத்து அளவும் உயர்தியையும் பரப்பையும் யுடைத்தாய்
தைத்ய தானவ பந்நக (நாகங்கள் ) ஸூபர்ணாதிகள்(பறவைகள் ) வர்த்திக்கும் தேசமாய்

சுக்ல க்ருஷ்ண அருணா பீதாச் சர்க்கராச் சைல காஞ்சனா பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ராசாத சோபிதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-3 )
(மைத்ரேயரே எந்த ஒரு லோகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் மாளிகைகளில் உள்ள தரை முதலானவை
வெளிர் நிறம் உள்ளவைகளாயும் மலைகளையும் கரும் கற்களாயும் -வெண் நிறமாகவும் உள்ளதோ )-என்கிறபடியே
சுக்லங்களாயும் க்ருஷ்ணங்களாயும் அருணங்களாயும் பீதங்களாயும்
வாலுகா மயமான சர்க்கரா ரூபங்களாயும் சைல ரூபமாயும் பொன்னாயும் இருக்கிற ஸ்தல விசேஷங்களை யுடையவையாய்
விலஷணமான மாளிகைகளாலேயும் ப்ராசாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ஸ்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமுமாய்
அதலம் என்றும்
விதலம் என்றும்
நிதலம் என்றும்
கபஸ்திமதம் என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
மஹாதலம் என்றும்
ஸூ தலம் என்றும்
பாதாளம் என்றும்
பேரை யுடைத்தாய் அதோ லோகங்கள் ஏழும்

இதுக்கு மேலே
எழுபதினாயிரம் யோஜனம் அகலத்தை யுடைத்தாய்
சப்த த்வீப சாகர பர்வதாதி விசிஷ்டமாய்
பாதசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
பத்மாகாரமான பூலோகமும்

பூ லோகத்துக்கு மேலே ஆதித்யனுக்கு கீழே
நூறாயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
கந்தர்வாதிகள் வர்த்திக்கும் தேசமான
புவர் லோகமும்

ஆதித்யனுக்கு மேலே த்ருவனுக்கு கீழே
பதினாலு நூறாயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
சாதிகாரரான க்ரஹ நஷத்ர இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேசமான
ஸ்வர் லோகமும் –

த்ருவனுக்கு மேலே
ஒரு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய்
விநி வ்ருத்தாதி காரஸ்து மஹர் லோக நிவாசின
(அதிகாரம் நீங்கியவர்கள் மற்றும் மஹர் லோகத்தில் உள்ளவர்கள் ) –என்று
நிவ்ருத்த அதிகாரராய் அதிகார அபேஷரான இந்த்ரிராதிகள் வர்த்திக்கும் தேசமான
மகா லோகமும்

அந்த மகா லோகத்துக்கு மேலே
இரண்டு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடையதாய்
ப்ரஹ்ம புத்ரர்களான சனகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான
ஜனர் லோகமும்

ஜனர் லோகத்துக்கு மேலே
எட்டுக் கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய்-
வைராக்ய அக்ரஜரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான
தபோ லோகமும் –

தேஷாமேஷாம் கேசன ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யாந்யே சந்தி தத்ரைவ லோகா –
விஷ்னோர் அந்ய சநதி லோகா விசாலாஸ் தாம் ஸ் தாந் லோகாந் தானுபாஸ்ய வ்ரஜந்தி

(ஒரு சிலர் ஸத்ய லோகத்தில் நான்முகனுடைய லோகம் உள்ளதாகவும் –
அங்கேயே ருத்ரனுடைய லோகம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்
ஒரு சிலர் விஷ்ணுவின் பரந்த லோகம் அங்கு உள்ளதாகக் கூறுகிறார்கள் ) -என்கிறபடியே
ப்ரஹ்ம விஷ்ணு சிவர்களும்
அவர்களை உபாசித்து தத் பிராப்தி பண்ணினவர்களும்
வர்த்திக்கும் தேசமான
சத்ய லோகமும்

ஆக ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு
அறுபது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும்
ஐம்பது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும் என்பாரும் யுண்டு

அதில் –
ஸூர்யாண்ட கோள யோர் மத்யே கோட் யஸ்யுர் பஞ்ச விம்சதி
(ஸூர்ய மண்டலமானது அண்ட கோளங்களின் நடுவில் 25 கோடி யோஜனை பரப்பளவில் உள்ளது ) -என்கிற
சுக்ர வசனத்தின் படியே
ஸூர்யனுக்கு மேலே இருபத்தஞ்சு கோடியும்
கீழே இருபத்தஞ்சு கோடியுமாய் இருக்கும்-

இப்படி இருந்துள்ள சதுர் தச புவனங்களோடு கூட
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப் பட்டு –

அதாவது
கீழ்ச் சொன்ன பதினாலு லோகத்தையும்
ஏதத் அண்ட கடா ஹேன திரச் சோர்த்த்வ மதஸ் ததா கபித் தஸ்ய யதா பீஜம் சர்வதோ வை சமாவ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-22 )
(விளாம் பழத்தின் விதைகளானவை எவ்விதம் ஓட்டுடன் நான்கு பக்கங்களிலும் நன்றாக சூழப்பட்டு
நிறைந்து உள்ளனவோ அதே போன்று இந்த லோகங்கள் அனைத்தும்
அண்ட கோளத்தால் கீழும் மேலுமாகச் சூழப் பட்டு உள்ளன ) -என்கிறபடியே
உள் வாயில் விளாம் தசையை விளாவோடு எங்கும் ஒக்க ஆவரிக்குமா போலே
கோடி யோஜன மானஸ்து கடாஹஸ் ஸம் வ்யவஸ்திதே
(அண்ட கோசமானது கோடி யோஜனை அளவு கொண்டது ) -என்று
கோடி யோஜனம் எடுப்பம் அவகாச தயா உக்தமான படி
அண்ட கடாஹம் ஆவரித்து நிற்கும்

சாண்ட கடாஹமான இவ் வண்டம்
தசோத் தரேண பயஸா மைத்ரே யாண்டஞ்ச தத் வ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-23 )
(மைத்ரேயரே பூமிக்கு பத்து மடங்கு அதிகமான நீராலும் அந்த அண்டம் சூழப்பட்டுள்ளது ) -என்கிறபடியே
தன்னில் பதிற்று -பத்து – மடங்கு பரந்து இருக்கிற ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் –

பஞ்சா சத் கோடி விஸ்தாரா சேய முர்வீ மஹா முனே சஹை வாண்ட கடா ஹேன
சத்வீ பாபதி மஹீ தரா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-4-98 )
(மகா முனிவரே தீவுகள் பெரும் கடல்கள் பெரிய மலைகள் என்று பலவற்றுடன் கூடியுள்ள
அண்ட கோஷத்துடன் சேர்ந்து பூமியானது ஐம்பது கோடி யோஜனை பரப்பு கொண்டது ) என்று
சாண்ட கடாஹமான பூ மண்டலம் பஞ்சாசத் கோடி விஸ்தாரமாகச் சொல்வாரும்

பூ மண்டலம் து சத கோடி விஸ்தாரம் சாண்ட கடாஹம்
(அண்ட கோசத்துடன் கூடிய பூ மண்டலமானது நூறு கோடி யோஜனை பரப்பு கொண்டது )-என்று
ஸ்ரீ வராஹ புராணத்தில் சொல்லுகையாலும்

இப்படி ஸ்கந்த புராணத்திலே சிவ ரஹஸ்யத்திலே பரக்கச் சொல்லுகையாலும்
மேருவைச் சுற்றும் பஞ்சா சத கோடி விஸ்தாரத்தைக் கொண்டு
பூமியை சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுவாருமாய் இருக்கும்

இதில் இரண்டத்து ஒரு மரியாதையை தளமாக்கி அதில்
பதிற்று -பத்து மடங்கு
பெருத்த ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் என்றபடி-

அண்ட கடாஹத்தைப் பற்ற
பதிற்று -பத்து – மடங்கு பெருத்த ஜல தத்வத்தாலே ஆவ்ருதம் என்பாரும் யுண்டு
இப்படி தசோத்தரமாயக் கொண்டு ஜல தத்தவத்தை தேஜஸ் தத்வம் ஆவரிக்கும்
அப்படியே அத்தை வாயு தத்வம் ஆவரிக்கும்
வாயுவை ஆகாசம் ஆவரிக்கும்
ஆகாசத்தை அஹங்காரம் ஆவரிக்கும்
அஹங்காரத்தை மஹத் தத்வம் ஆவரிக்கும்
அந்த மஹத் தத்தவத்தை அவ்யக்தம் ஆவரிக்கும்

தத் அநந்தம் அசங்கயாத ப்ரமாணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-26)
(ப்ரக்ருதி எனப்படும் பிரதானமானது அளவிட இயலாதபடி உள்ளது ) -என்று
அபரிமித ப்ரமாணமான அவ்யக்தத்துக்கு ஆவரணத்வ பிரயுக்தமான
தசோதரத்வம் கூடும்படி எங்கனே என்னில்
ஆயிரத்தில் பத்தும் யுண்டாமா போலே அபரிமித சங்கையில் அதுவும் யுண்டாகையாலே கூடும்-

வாரி வஹ்நி அநில ஆகாஸ சைஸ் ததோ பூதாதிநா பஹி வ்ருதம் தச குணைர் அண்டம் பூதாதிர் மஹதா ததா
அவ்யக்தேந ஆவ்ருதோ ப்ரஹ்மந் தைஸ் சர்வைஸ் சஹிதோ மஹான் ஏபி ஆவரணை அண்டம் சப்தபி
ப்ராக்ருதைர் வ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-60 )

(அதன் பின்னர் நீர் அக்னி வாயு ஆகாசம் ஆகியவற்றாலும் அஹங்காரத்தாலும் சூழப்பட்ட அண்டத்தாலும்
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கு அதிகமாகச் சூழப்பட்டுள்ளது –
பூதாதியானது மஹத்தாலே சூழப்பட்டுள்ளது -இவ்விதம் அனைத்து விதமான மூடுதலையும் கொண்ட மஹத்தானது
அவ்யக்த்தத்தாலே சூழப்பட்டு உள்ளது
இவ்விதம் ஏழு விதமான மறைவுகள் கொண்டு அண்டம் மூடப்பட்டு உள்ளது ) -என்கிறபடியே

இப்படி தசோததரங்களான சப்த அவரண்ங்களாலும் சூழப் பட்டு ஈஸ்வரனுக்கு க்ரீடா கனதுக சத்தா நீயங்களாய்-
அதாவது
க்ரீடா பரனான பாலனுக்கு க்ரீட நகங்கள் போலே
க்ரீடாரசாநு புபூஷுவான ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்களாய் இருக்கை-

ஹரே விஹரசி க்ரீடா கந்து கைரிவ ஜந்துபி (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
(இந்த மனிதர்களைப் பந்தாகக் கொண்டு நீ விளையாடுகிறாய் ) -என்றும்
மோததே பகவான் பூதைர் பால க்ரீட நகைரிவ
(சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டுக்கு கருவிகள் போன்று பயன்படுத்துகிறான் )-என்றும் சொல்லுகிறபடியே
ஈஸ்வரனுக்கு விபூதியாக லீலா உபகரணமாய் இறே இருப்பது-

ஜலபுதபுதம் போலே ஏக காலத்திலேயே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும் –
அதாவது
இவ் வண்டங்களை ஈஸ்வரன் சிருஷ்டிக்கும் அளவில் ஓரிரு படையாக இட்டு அகம் எடுக்குமா போலே
க்ரமத்தில் பரிணமிக்கை அன்றிக்கே

ந க்ரமேண விவ்ருத்தம் தத் ஜலபுத் புதவத் சமம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-56 )
(அண்டமானது வரிசையாக வளராமல் நீர்க்குமிழி போன்று சட்டு என்று வெளிப்படுகிறது )-என்கிறபடியே
நீர் குமுழி போலே ஒருக்காலே உத்பன்னங்களாய் -என்கையும்

ஏக காலேன ஸ்ருஜயந்தே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-17 )-
(ஒரே காலத்திலே ஸ்ருஷ்ட்டிக்கப் படுகின்றன ) என்கிறபடியே
சகல அண்டங்களும்
ஏக காலத்திலேயே உத் பன்னங்களாய் -என்கையும்-

ஆக –
அண்டங்கள் தான் அநேகங்கள் -என்னும் இடமும்
அவை தான் எல்லாம் ஓன்று போலே இருக்கும் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –

————————————————————-

சூர்ணிகை -113

பூத பஞ்சகங்களுக்கும் தனித்தனியே
விநியோகங்களைத் தர்சிப்பிக்கிறார் –

பூதங்களில்
ஆகாசம் அவகாச ஹேது
வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ்ஸூ பச நாதி ஹேது –
ஜலம் ஸேசன பிண்டீ கரணாதி ஹேது
பிருத்வி தாரணாதி ஹேது
என்பார்கள்-

அதாவது –
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது –
சகல பதார்த்தங்களுக்கும் ஸ்திதி கம நாதிகளுக்கு இடம் கொடுத்து கொண்டு இருக்கிற இது
ஆகாசத்துக்கு விநியோகம் என்கை-

அஸ்ய தேஜஸ்ய வியதோ லாகவம் சௌஷ்ம்யம் ஏவ ச சப்த ஸ்ரோத்ரம்
பலம் ப்ரஹ்மந் ஸூஷிரத்வம் விவிக் ததா( ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் )
( நமது சரீரத்துக்கு எடை குறைவான தன்மை -நுட்பமாக உள்ள தன்மை –
சப்தம் செவி மற்றும் வலிமை கொண்டதாக உள்ள தன்மை -துளைகளை யுடைய தன்மை
மற்றும் இடைவெளி கொண்டதாக உள்ள தன்மை ஆகிய பலவும் சரீரத்துக்கு ஆகாயத்தில் இருந்து ஏற்படுகிறது ) -என்று
இதுக்கு அநேக விநியோகங்கள் யுண்டாய் இருக்க இது ஒன்றையும் அருளிச் செய்தது
இதனுடைய ப்ராதான்யத்தைப் பற்ற –
இது தான் மற்றை அவற்றுக்கும் உப லஷணம்

வாயு வஹ நாதி ஹேது –
வஹனம் வஹிக்கை
ஆதி சப்தத்தாலே வ்யூஹன சேஷ்டாதிகளை சொல்லுகிறது
இது தான் –
வாயோஸ் ஸ்பர்ச இந்த்ரியஞ் சேஷ்டாம் கார்க்ககச்யம் ஸ்பர்சமேவ ச வ்யூஹநம்
வஹநம் தேஜஸ் ஸ்வீகரோதி ஸ்துத் தமே-
(ஸ்பர்ச இந்திரியம் அசைத்தல் உறுதியுடன் இருத்தல் ஸ்பர்சம் உலவுதல் எடுத்துச் செல்லுதல் போன்ற
பலவற்றையும் சரீரமானது வாயுவில் இருந்து கொள்கிறது ) -என்று சொல்லப் பட்டது இறே –

தேஜஸ்ஸூ -பஐ நாதி ஹேது –
பசனம் ஆவது பாகம் பண்ணுகை
ஆதி சப்தத்தாலே ஔஷண்ய பிரகாசாதிகளை சொல்லுகிறது
இதுவும்
அக்னே ரௌஷண்யம் பிரகாசத்வம் ரூபேந்த்ரிய மமர்ஷணம்
சந்தாப சௌர்ய தைஷண்யானி வர்ணம் பசன சக்தி தாம் ஆதத்தே சஹசா தேஜஸ் சாஹசஞ்ச த்விஜர்ஷப
( உஷ்ணமாக இருத்தல் -ஒளி பொருந்தி இருத்தல் -கண்கள் பொறுத்துக் கொள்ள இயலாமை -தாபம் -ஸுர்யம் –
தீஷ்ண்யம் -நிறம் -சமைக்கும் திறம் -சாகசம் ஆகியவற்றை இந்தச் சரீரமானது அக்னியிடம் இருந்து பெறுகிறது )-என்று
கதிதமாயிற்று

ஜலம் சேசன பிண்டீ கரணாதி ஹேது –
சேசனம் ஆவது -நனைக்கை
பிண்டீ கரணமாவது -திரட்டுகை
ஆதி -சப்தத்தாலே
சைத்ய மார்த்வாதிகளை சொல்லுகிறது
இதுவும்
அத்ப்யச் சைத்யம் சமாதத்தே ஸ்நிக் தத்வம் ரசேந இந்த்ரியம் பிரசாதம் மார்தவம் பிண்டீ கரணம் க்லேத நஞ்ச வை
( குளிர்ச்சி மென்மை சுவை இந்திரியம் தெளிவு மெழுகு போன்ற தன்மை திரட்டும் தன்மை நனைக்கும் தன்மை
போன்றவற்றைச் சரீரமானது நீரிலிருந்து பெறுகிறது )-என்று அபிஹிதம் ஆயிற்று –

பிருத்வி தாரணாதி ஹேது என்பார்கள் –
தாரணம் -தரிக்கை
ஆதி சப்தத்தாலே
மூர்த்தி மத்வ குருத் வாதிகளைச் சொல்லுகிறது

பூமோ கந்த குணம் காரணம் கரிமாணஞ்ச தாரணம் மூர்த்திமதத்வம் சஹிஷ்ணுத்வம் ஸ்வீகரோதி யதா ததம்
(மணம் என்ற தன்மை -மூக்கு பெரியதாக உள்ள தன்மை -தாங்கும் தன்மை -உருவம் கொண்டு இருத்தல் -பொறுமை
போன்றவற்றைச் சரீரமானது பூமியில் இருந்து பெறுகிறது ) -என்று
இதுவும் வயாஹ்ருத மாயிற்று

என்பார்கள் -என்றது –
தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி –

—————————————————————————————–

சூர்ணிகை -114-

இனி ஏகாதச இந்த்ரியங்களினுடைய வ்ருத்தி பேதத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
அடைவே சப்தாதிகள் ஐந்தையும்
க்ரஹிக்கை தொழில் –

வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
விஸர்க சிலபகத் யுக்திகள் தொழில்

மனஸ்ஸூ இவை
இத்தனைக்கும் பொது –

அதாவது
ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
ஸ்ரோத்ரத்துக்கு சப்த க்ரஹணமும்
த்வக் இந்த்ரியத்துக்கு ஸ்பர்ச க்ரஹணமும்
சஷூஸூக்கு ரூப க்ரஹணமும்
ஜிஹ்வைக்கு ரச க்ரஹணமும்
க்ராணத்துக்கு கந்த க்ரஹணமும்
தொழில் –

த்வக் சஷூர் நாசிகா ஜிஹ்வா ஸ்ரோத்ரம் அத்ர து பஞ்சமம் சப்தாதீ நாம வாப்த்யர்த்தம்
புக்தி யுக்தாநி வை த்விஜ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-48 )
(சரீரத்தில் உள்ள தோல் கண் மூக்கு நாக்கு மற்றும் காது ஆகிய ஐந்தும் –
ஸப்தம் முதலான புலன்களை அடையும் விதமாக புத்தி தத்வத்துடன் சேர்ந்து உள்ளன )-என்னக் கடவது இறே

இந்த ஸ்லோகத்தில் இந்த்ரியங்களை வ்யுத் க்ரமமாக எடுக்கையாலே
இன்னத்துக்கு இன்ன விஷயம் என்கிற நியமம் ந்யாயம் கொண்டு நிச்சயிக்க வேணும்

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு சப்தாதிகளை க்ரஹிக்கை தொழில் என்னும் இவ்வளவே பிரகாசிப்பது –

வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விஸர்க சிலபகத் யுக்திகள் தொழில்
அதாவது –
இப்படி வ்யுத் க்ரமமாக அருளிச் செய்தது வாக்ய ஸ்வா ரஸ்யத்துக்காக

இத்தால்
வாக்குக்கு உக்தியும்
பாணிக்கு சிலப்மும்
பாதத்துக்கு கதியும்
உபஸ்த்த பாயுகளுக்கு ஜல மல விஸர் ஜனமும் தொழில் என்கை –

பாயூபஸ்ததௌ கரௌ பாதௌ வாக் ச மைத்ரேய பஞ்சமீ
விசர்க சில் பகத் யுக்தி கர்ம தேஷாஞ்ச கத்யதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-50 )
(மல மூத்ர கருவிகள் கைகள் கால் வாக்கு ஆகிய ஐந்தும் மலம் மற்றும் சிறு நீர் கழித்தல் பொருளை எடுத்தல்
நடத்தல் மற்றும் பேசுதல் என்பதான தொழில் புரிகின்ற கர்ம இந்திரியங்கள் ) -என்னக் கடவது இறே

மனஸ்ஸூ இவை இத்தனைக்கும் போது – –
அதாவது –
ஜ்ஞான இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்கும் போதும்
கர்ம இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ கர்மங்களைப் பண்ணும் போதும்
மனஸ் சஹகாரம் வேண்டுகையாலே
உபயாத்மகமான மனஸ்ஸூ இவை இத்தனைக்கும்
சாதாரணமாய் இருக்கும் -என்கை –

—————————————————————–

சூர்ணிகை -115-

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு விஷயமாகச் சொல்லப் பட்ட
சப்தாதிகள் ஐந்தும்
ஆகாசாதிகளுக்கு பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

ஆகாசாதி பூதங்களுக்கு
அடைவே
சப்தாதிகள்
குணங்களாய் இருக்கும் –

அதாவது
ஆகாச குணம் -சப்தம்
வாயு குணம்- ஸ்பர்சம்
அக்னி குணம்- ரூபம்
ஜல குணம்- ரசம்
பூ குணம்- கந்தம்
என்றபடி-

————————————————————————-

சூர்ணிகை -116-

இப்படி பிரதி நியத குணங்களான பூதங்களுக்கு
குண விநி மயம் வருகைக்கு அடி அருளிச் செய்கிறார் –

குண விநி மயம்
பஞ்சீ கரணத்தாலே –

குண விநி மயமாவது -ஏக பூதத்திலே பூதாந்திர குணங்களும் காணலாம்படி-
பூதங்களில் யுண்டான குணக் கலப்பு

ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸூக பஷீயத்திலே
தேஜோ வாரிம் ருதாம் யதா விநிமய
(அக்னி நீர் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு எவ்விதம் ஒன்றுடன் ஓன்று சேர்க்கை ஏற்படுகிறது )-
என்கிற விதுக்கு
விநிமய பரஸ்பர ஸம்மிஸ் ரீ கரணம் -(வி நிமயம் என்றால் ஒன்றுடன் ஓன்று கலத்தல் )என்றாரே

இங்கும்
பரஸ்பர ஸம்மிஸ் ரீ கரணமே விநிமய சப்தார்த்தம்
அங்கு பூதங்களுக்கு அந்யோந்யம் கலப்புச் சொல்லிற்று
இங்கு குணங்களுக்கு அந்யோந்யம் சொல்லுகிறது
குணங்களுக்கு அந்யோந்யம் கலப்பாவது பூதமும் பூதாந்தரமும் போலே
குணமும் குணாந்தரமும் தன்னிலே கலக்கை அன்று
ஒன்றினுடைய குணம் ஒன்றிலே புக்கு எல்லா வற்றிலும் எல்லாம் யுண்டாம்படி இருக்கை –

அதவா –
விநிமயமாவது
ஒன்றைக் கொடுத்து ஒன்றைக் கொள்ளுகையாய்
தன் குணத்தை பூதாந்தரங்களுக்கு கொடுத்து அதன் குணத்தை தான் பஜிக்கை -என்னவுமாம் –

இத்தால் தன் குணம் அந்யத்தின் பக்கல் யுண்டாய்
அந்யத்தின் யுடைய குணம் தன் பக்கலிலும் யுண்டாம்படி இருக்கையைச் சொல்லுகிறது –

இந்த குணா விநீயம் பஞ்சீ கரணத்தாலே -என்றதுக்கு கருத்து
குணங்கள் ஆகையாலே ஆச்ரயா தந்யதோ வ்ருத்தி இல்லை இறே இவற்றுக்கு
ஆகையால் த்ரவ்யத்தின் யுடைய கலப்பே குணக் கலப்புக்கு ஹேது என்கை –

பஞ்சீ கரணமாவது –
ஏவம் ஜாதேஷூ பூதானி ப்ரத்யேகம ஸ்யுர் த்விதா தத சதுர்த்தா பின்ன மேகைக மரத்தமரத்தம்
ததா ஸ்த்திதம் வ்யோம தோர்த்த பாகாச் சத்வாரோ வாயு தேஜ பயோபுவாம்
அர்த்தா நியானி வாயோஸ்து வ்யோம தேஜ பயோபுவாம்

(இப்படியாகத் தோன்றிய பூதங்கள் அதன் பின்னர் தனித்தனியே இரண்டாயின
ஒவ்வொரு பாதி பாகமும் நான்காக மாறின
மற்ற ஒரு பாதி பாகம் பிரிக்கப்படாமல் இருந்தது ஆகாசத்தில் பாதி பாகம் மற்றும் வாயு அக்னி நீர் பூமி
ஆகியவற்றின் நான்கு பாகங்களும் சேர்ந்து வாயுவின் பாதி பாகமும் ஆகாசம் அக்னி நீர் பூமி ஆகியவற்றின்
நான்கு பாகங்களும் சேர்ந்து பஞ்சீ கரணம் ஆகிறது)-இத்யாதி
புராணங்களில் சொல்லுகிறபடியே

ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி
அவற்றில் ஒரு கூறை நாலு கூறாக்கி
அந்த கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி
சர்வ பூதங்களிலும் சர்வமும் யுண்டாம்படி பண்ணுகை –

இப்படி பஞ்சீ கரணம் ஆனாலும் அவிபக்தமான அர்த்தங்கள் பிரதானங்களாய் நிற்கையாலே
ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்கும் குறை இல்லை –

—————————————————————-

சூர்ணிகை -117-

ஆகாசம்
கறுத்துத்
தோற்றுகிறதும்
அத்தாலே –

அதாவது
அதி ஸூஷ்மதையாலே கண்ணுக்குத் தோற்றாத படி இருக்கும் ஆகாசத்துக்கு சஷூர் விஷயத்வமும்
யத் க்ருஷ்ணம் தத் பிருத்வீ (சாந்த் -6-4-1 )
(எந்த ஓன்று கறுமையாக உள்ளதோ அது பூமியின் அம்சமாகும் ) – என்று
பிருதிவிக்கு உள்ளது ஒன்றாக சொல்லுகிற கிருஷ்ணத்வமும் யுண்டாயிற்று
அது பஞ்சீ கரணத்தாலே -என்கை-

இத்தால் த்ரி வ்ருத்த கரணத்தைச் சொன்ன அநந்தரம் ஸ்ருதி தானே
யதக் னே ரோஹிதம் ரூபம் தேஜஸஸ் ச தத் ரூபம் யச் சுக்லம் ததபாம் யத் க்ருஷ்ணம் ததந் நஸ்ய (சாந்தோ -6-4-1-)
(அக்னிக்கு உள்ள சிவந்த நிறம் தேஜஸ்ஸின் அம்சம் -வெண்மையானது நீரின் அம்சம் -கறுமை யானது பூமியின் அம்சம் )-என்று
அக்னியிலே த்ரி ரூபத்வத்தை தர்சிப்பித்தால் போலே
இவரும் பஞ்சீ கரணத்தை அருளிச் செய்த அநந்தரம்
அது தன்னை சர்வத்தையும் பற்ற ஸூஷ்மமாய் இருப்பதொரு பூதத்திலே தர்சிப்பார் ஆயிற்று-

இப்படி ஸ்ரீ பாஷ்யத்திலே
யதக்நேர் லோஹிதம் ரூபம் தேஜஸஸ் ததபாமபி சுக்லம் க்ருஷ்ணம் ப்ருதிவ் யாச் சேத்ய கநா வேவ த்ரி ரூபதா
ஸ்ருத்யைவ தர்சிதா தஸ்மாத் சர்வே சர்வத்ர சங்கதா -(ஸ்ரீ பாஷ்யம் -1-1-1- ஸத் க்யாதி வாதம் )

(அக்னியில் உள்ள சிவப்பு நிறமானது தேஜஸ்ஸூவின் உடையதாகும்
வெண்மை நிறம் நீரினுடையது ஆகும் -கறுப்பு நிறமானது ப்ருத்வீ -பூமி நிறமாகும் –
இப்படியாக அக்னியில் உள்ள மூன்று விதமான ரூபங்கள் குறித்து ஸ்ருதியிலே தெளிவாக்க கூறப்பட்டு உள்ளது ) என்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் இறே –

சாந்தோக்யத்தில் பஞ்சீ கரணம் சொல்லாதே த்ரி வ்ருத்த கரணத்தை சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜ உப பன்னங்கள் மூன்றும் யுடையவும் உத்பத்தி மாதரம் இறே சொல்லிற்று
ஸ்ருதி யந்தரத்தில் சொல்லுகிற ஆகாச வாயுக்களின் யுடையவும்
அவ்யவகத மஹத் அஹங்காராதிகளின் யுடையவும் உத்பத்தி தானும் சொல்லிற்று இல்லை இறே
ஆகையால் தேஜோ உப பன்ன மாத்ரம் கதனம்
தத் வாந்தரங்களுக்கும் உப லஷணம் ஆனால் போலே
த்ரிவ்ருத கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கும் உப லஷணம்

இப்படி பஞ்சீ கரணத்தாலே சகல பூதங்களும் பரஸ்பரம் மிஸ்ரங்கள் ஆகையாலே
சப்தாதி குண பஞ்சகமும் சர்வ பூதங்களிலும் யுண்டாய் இருக்கும் என்று
குண விநிமய ஹேது சொல்லிற்றாய் நின்றது –

——————————————————————————

சூர்ணிகை -108-

இனி ஆகாசாதிகளில் பூர்வ பூர்வத்தைப் பற்ற உத்தர உத்தரவத்துக்கு
குணாதிக்யம் யுண்டாகைக்கு மூலம் அருளிச் செய்கிறார் –

முன்புத்தை தன் மாத்ரைகளோடே
கூடிக் கொண்டு
உத்தர உத்தர தன்மாத்ரைகள்
ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று
என்றும் சொல்வார்கள்-

அதாவது
சப்த தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு
ஸ்பர்ச் தந்மாத்ரம் ஸ்வ விஷயமான வாயுவை ஜநிப்பிக்கையாலே
வாயுவுக்கு ஸ்பர்ச சப்தங்கள் இரண்டும் குணமாயிற்று

இப்படி சப்த தந்மாத்ரையாலே ஆவ்ருத்தமான ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ஆவ்ருத்தமான
அவை இரண்டோடும் கூடி நின்று ரூப தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான தேஜசை ஜநிப்பிக்கையாலே
அத தத்வத்துக்கு சப்த ஸ்பர்ச ரூபங்கள் ஆகிற மூன்று குணங்களும் யுண்டாயிற்று

இப்படி பூர்வ தந்மாத்ர த்வய விசிஷ்டமான ரூப தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்
அவை மூன்றோடு கூடி நின்று ரச தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான ஜலத்தை ஜநிப்பிக்கையாலே
அதுக்கு சப்த ஸ்பர்ச ரூப ரச குணங்கள் நாலும் யுண்டாயிற்று

இப்படி பூர்வ தன்மாத்ரதயா விசிஷ்டமான ரச தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்க் கொண்டு
கந்த தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான பிருதிவியைப் பிறப்பிக்கையாலே
அதுக்கு சப்தாதிகள் ஆன அஞ்சு குணங்களும் உண்டாயிற்று -என்கை –

இத்தால்
ஏகைகுண ஆச்ரயமான ஆகாசாதி பூதங்களுக்கு
குண விநிமயம் பஞ்சீ கரண பர யுக்தமானவோபாதி
உத்தர உத்தர பூதங்களில் குணாதிக்யம்
ஸ்வ ஸ்வ தன்மாத்ரங்களுக்கு யுண்டான
ஆவரண ப்ரயுக்தம் என்றது ஆயிற்று
என்றும் சொல்லுவார்கள் என்று கீழ் சொன்னத்தோடே
இத்தையும் சமுச்சயித்து அருளிச் செய்கிறார்
இப்படி தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை –

ஆகாசம் சப்த மாத்ராந்து ஸ்பர்ச மாத்ரம் சமாவிசத்
ரூபம் ததை வா விசித சப்த ஸ்பர்ச குணா யுபௌ
சப்தஸ் ஸ்பர்சச்ச ரூபஞ்ச ரச மாத்ரம்
சமாவிசத தஸ்மாத் சதுர் குணா ஹி ஆபோ விசேஷாச் சேந்த்ரிய க்ரஹ –

( ஆகாசமானது சப்தம் மற்றும் ஸ்பர்சம் தன்மாத்திரைகளைப் பெற்று உள்ளது –
அவ்விதமே இரண்டாக உள்ளதான ஸப்தம் மற்றும் ஸ்பர்சம் ஆகிய குணங்கள்
அக்னிக்கு காரணமாக உள்ள ரூப தன்மாத்ரையை அடைகின்றன –
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ஆகிய குணங்கள் நீருக்குள் காரணமாக உள்ள சுவை தன்மாத்ரையை அடைகின்றன
எனவே இந்த்ரியங்களால் அறியப்பட வல்லதாக உள்ளதும் சிறப்பையும் கொண்ட நீரானது
நான்கு குணங்கள் கொண்டதாக உள்ளது )என்னக் கடவது இறே –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -102-109-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 3, 2014

சூர்ணிகை -102-

இனி மேல்
பூத தந் மாத்ர சர்கோய மஹங்காராத் து தாமசாத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-48 )
(பூதங்கள் மற்றும் தன்மாத்திரைகள் அனைத்தும் தாமஸ அஹங்காரத்தில் இருந்து உண்டாகின்றன ) -என்கிறபடியே
பூதாதி சப்த வாச்யமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
தந் மாத்ர பஞ்சகமும்
தத் விசேஷமான ஆகாசாதி பஞ்ச பூதங்களும்
உத்பன்னங்களாம் க்ரமம் அருளிச் செய்கிறார் –

பூதாதியில் நின்றும்
சப்த தந்மாத்ரை பிறக்கும் –
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜஸ்ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
ஆகாசத்தின் யுடைய ஸூஷ்ம அவஸ்தையான சப்த தந்மாத்ரை பிறக்கும்
இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த சப்த குணகமான ஆகாசமும்
வாயுவினுடைய ஸூஷ்ம அவஸ்தையான ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ஸ்பர்ச குணகமான வாயுவும்
தேஜஸ்சினுடைய ஸூஷ்ம மான ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய ரூப குணகமான தேஜஸ்ஸூம்
அப்பினுடைய ஸூஷ்ம மான ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ரச குணையான அப்பும்
பிருதிவினுடைய ஸூஷ்ம மான கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த கந்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையா கந்த குணையான பிருத்வி பிறக்கும் -என்கை –

ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
என்று உத்பத்தி சொல்லுகிற அளவில் பூதத்தை முற்படச் சொல்லி
தந்மாத்ரையை பிற்படச் சொல்லிக் கொண்டு வந்தது
பூத உத்பத்திக்கு அநந்தரம்
தந்மாத்ர உத்பத்தி என்கிற க்ரமம் தோற்றுகைக்காக-

இந்த தந்மாத்ர அனந்தர உத்பத்தி க்ரமம் நம் ஆச்சார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாகப் போகும்
அதுக்கடி
அஷ்டௌ பிரக்ருதய ஷோடஸ விகாராய (கர்ப உபநிஷத் எட்டு பிரக்ருதிகள் பதினாறு மாற்றங்கள் ) -என்கிற
ஸ்ருதிக்கு ஸ்வ ரஸார்த்தம் சித்திக்கையாலே

ஈச்வராத் பிரகிருதி புருஷௌ பிரக்ருதோ மஹான் மஹதோ அஹங்காரோ அஹங்காராச் சப்த தன்மாத்ரம்
சப்த தன்மாத்ராத் ஆகாசம் ஸ்பர்ச தன்மாத்ராஞ்ச ஸ்பர்ச தன்மாத்ராத் வாயு ரூப தன்மாந்த்ராஞ்ச ரூப தன்மாத்ராத்
தேஜோ ரச தன்மாத்ராஞ்ச ரச தன்மாத்ராத் ஆபோ கந்த தன்மாத்ராஞ்ச கந்த தன்மாதராத் பிருத்வி –

(ஈஸ்வரன் இடம் இருந்து பிரக்ருதியும் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள் –
பிரக்ருதியில் இருந்து மஹத் -மஹத்தில் இருந்து அஹங்காரம் -அஹங்காரத்தில் இருந்து சப்த தன்மாத்திரை –
சப்த தன்மாத்ரையில் இருந்து ஆகாசம் மற்றும் ஸ்பர்ச தன்மாத்திரை –
ஸ்பர்ச தன்மாத்ரையில் இருந்து வாயு மற்றும் ரூப தன்மாத்திரை
ரூப தன்மாத்ரையில் இருந்து அக்னி மற்றும் சுவை தன்மாத்திரை
சுவை தன்மாத்ரையில் இருந்து நீர் மற்றும் மண் தன்மாத்திரை
மண் தன்மாத்ரையில் இருந்து பூமி )என்று
இந்த க்ரமத்தை
யாதவ பிரகாசாதிகளும் ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்-

————————————————————————————–

சூர்ணிகை –103-

இனி பூதாத் தந்மாத்ர உத்பத்தி க்ரமமும்
சாஸ்திர சித்தம் ஆகையாலே அத்தையும் சங்கரஹேண அருளிச் செய்கிறார் –

ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான
நாலு தந்மாத்ரைகளும்
ஆகாசம் தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் காரணமாய்
இருக்கும் என்றும்
சொல்லுவார்கள்

அதாவது-
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் –
சப்த தந்மாத்ரை நின்றும் ஆகாசம் பிறக்கும்
ஆகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
வாயுவில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் பிறக்கும்
தேஜஸ்ஸில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையில் நின்றும் அப்பு பிறக்கும்
அப்புவில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் -என்றபடி-

இந்த க்ரமம் ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம்
பூர்வ க்ரமம் புராணாந்தர சித்தம் -என்று சொல்வார்கள்
அது சொல்ல ஒண்ணாது இறே

அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா (எட்டு பிரக்ருதிகள் பதினாறு மாற்றங்கள் )-என்று
ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும்
இந்திரியங்களோபாதி கேவலம் விக்ருதிகளாக ஸ்ருதி சொல்லுகையாலே

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஆகாசஸ்து விகுர்வாண ஸ்பர்ச மாத்ரம் சசர்ஜா ஹ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-41 )
(ஆகாசம் மாற்றம் அடைந்து ஸ்பர்ச தன்மாத்ரையை உண்டாக்குகிறது )என்று தொடங்கி
ஸ்பர்ச தன்மாத்ராதிகளுக்கு காரணமாகச் சொன்ன ஆகாசாதி பதார்த்தங்களையும்
தந்மாத்ர லஷணமான பூதங்களாக ஸ்ரீ பராசர பகவானுக்கு விவஷிதம் என்று நினைத்து
வியாக்யாதாக்கள் வியாக்யானம் பண்ணி வைக்கையாலே –

ஆகையால்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
பூதாத் தந்மாத்ரா உத்பத்தி சாப்தமாய்த் தோற்றி இருந்ததே யாகிலும்
வியாக்யான பிரகிரியைப் பார்த்தால்
தன்மாத்ராத் தந்மாத்ரா உத்பத்தி என்றே கொள்ள வேணும்

பூதாத் தந்மாத்ரா உத்பத்தி பஷத்திலும்
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா -என்று சொல்லுகிற
ஷோடஸ விகாரங்கள் ஆகிறது
பூதங்களை ஒழிய ஏகாதச இந்திரியங்களும் சப்தாதிகள் ஐந்தும் என்று
தன்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாத்ரம் ஆகையாலே
அஷ்டௌ பரக்ருதய -என்று
பிரகிருதி மஹான் அஹங்காரங்களையும்
ஆகாசாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது என்றும் ஸ்ருதிய விரோதம் நிர்வஹிப்பார்கள்-

இது தான் வேத வியாச பகவானாலே
அஷ்டௌ பிரக்ருதய ப்ரோக்தா விகாராச் சாபி ஷோடஸ அத வ்யக்தானி
சப்தைவ ப்ராஹூரத் யாத்ம சிந்தகா அவ்யக் தஞ்ச மஹாம் ச் சைவ
தத் அஹங்கார ஏவ ச பிருத்வீ வாயுர் ஆகாசம் ஆபோ ஜ்யோதிஸ்ஸ பஞ்சமம்
ஏதா பிரக்ருத யஸ்த் வஷ்டௌ விகாராநபி மே ஸ்ருணு ஸ்ரோதரம்
த்வக் சைவ சஷூச் ச ஜிஹ்வா க்ரணாஞ்ச பஞ்சமம்
வாக் ச ஹஸ்தௌ ச பாதௌச பாயுர் மேட்ரம் ததைவச சப்த ஸ்பர்சௌ ச ரூபஞ்ச ரசோ
கந்தஸ் ததைவச ஏதே விசேஷா ராஜேந்திர மஹா பூதேஷு பஞ்சஸூ
தச இந்த்ரியாண யதைதானி சா விசேஷாணி மைதில மனஷ்
ஷோடச மித்யா ஹூரத் யாத்ம கதி சிந்தகா-

(ப்ரக்ருதிகள் எட்டு எனக் கூறப்படுகின்றன -மாற்றங்கள் பதினாறு என்றும் –
அதன் பின்னர் தெளிவாகக் காணப்படும் மாற்றங்கள் ஏழு என்றும் மோக்ஷ ஸாஸ்த்ரம் கற்றவர்கள் கூறுகிறார்கள்
அவ்யக்தம் மஹத் மற்றும் அஹங்காரம் என்பதுடன்
பிருத்வீ வாயு ஆகாசம் நீர் மற்றும் தேஜஸ் என்பதான ஐந்தும் சேர்ந்து எட்டு ப்ரக்ருதிகள் ஆகும் –
அவை ஒன்றுக்கொன்று காரணங்களாக உள்ளதையும் மாற்றங்களாக உள்ளதையும் நான் கூறக் கேட்ப்பாயாக –
செவி தோல் கண் நாக்கு மூக்கு என ஐந்து
வாக்கு கைகள் கால்கள் மல மூத்ர கருவிகள் மற்றும் மர்மக் குறிகள் என ஐந்து
ஓசை உருவம் சுவை மணம் மற்றும் தொடுதல் என ஐந்து
இப்படியாக பஞ்ச பூதங்களுடைய விசேஷங்கள் உள்ளன
விசேஷங்களுடன் கூடிய இந்த ஐந்து பூதங்கள் பத்து இந்திரியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இறுதியாக
மனதையும் பதினாறாவது விஷயமாக மோக்ஷம் குறித்து எண்ணுபவர்கள் கூறுகிறார்கள் )-என்று
மோஷ தர்மத்திலே யாஞ்ஞ்வல்க ஜனக சம்வாதத்திலே சொல்லப் பட்டது –

அப்படியே
யம ஸ்ருதியிலும்
மநோ புத்திர் அஹங்கார ஹன்கார காநிலாக்நி ஜலானி பூ ஏதா பிரக்ருதயஸ்
த்வஷ்டௌ விகாராஷ் ஷோட சாபரே ஸ்ரோத் ராஷி ரசநா க்ராண த்வக் ச சங்கல்ப
ஏவ ச சப்த ரூப ரச ஸ்பர்ச கந்த த்வக் பாணி பாயவ உபஸ்த பாதாவிதி ச விகாராஷ் ஷோடஸ ஸ்ம்ருதா

(மனம் புத்தி அஹங்காரம் ஆகாசம் வாயு அக்னி நீர் மற்றும் பூமி என்ற எட்டும் பிரக்ருதிகள்
மற்ற அனைத்து பதினாறும் மாற்றங்கள் ஆகும்
செவி கண் வாய் மூக்கு தோல் ஆகியவற்றுடன் எண்ணம் என்பதும் சேர்ந்து
ஒலி உருவம் சுவை தொடு உணர்ச்சி மனம் நாக்கு கைகள் மல மூத்ர கருவிகள் மர்ம உறுப்புக்கள்
மற்றும் கால்கள் என்பதான பதினாறு மாற்றங்கள் கூறப்படுகின்றன ) -என்று சொல்லப் பட்டது –

இந்த ஸ்ம்ருதியில் பிரக்ருதிகளிலே பரிகணிகையாலும்
பிரதமத்தில் எடுக்கையாலும்
மந்த வ்யதையாலே மனஸ் என்று பிரதான தத்வம் சொல்லப் படுகிறது –

சங்கல்ப சப்தத்தாலே தத் காரணமான மனஸ் லஷிக்கப் படுகிறது என்று
ஸூ பால உபநிஷத்தில் வ்யாக்யானத்தில்
ஸ்ருதி பிரகாசராலே வியாக்யானம் ஆயிற்று

இப்படி இதிஹாசாதிகளிலே சொல்லப் படுகையாலே
அஷ்டௌ பிரக்ருதய என்கிற ஸ்ருதிக்கு
பூதாத் தந்மாத்ரா உத்பத்தி பஷத்தில் விரோத அபாவம் ஸூஸ்பஷ்டம் –

த்வசா பீஜமிவா வ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1- 2-37-)
தோலால் மூடப்பட்ட விதை போன்று )-என்கிற திருஷ்டாந்த பலத்தாலே
த்விக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதவோ பாதி
ஆவார கத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்று தோற்றுகையாலும்

காரண குணத்தை ஒழிய உத்தர உத்தர விசேஷங்களிலே
ஆத்யாத் யஸ்ய குணா நேதா நாப்நோதி ச பர பர (மநு ஸ்ம்ருதி -1-20 )
(முன்பு உள்ள தத்வங்களுடைய குணங்கள் பின்னர் வரவுள்ள தத்துவங்களை அடைகின்றன )-என்று
ஸ்வ விசேஷத்துக்கு சொல்லுகிற குணாதிசயம் கூடாமையாலும்

ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் சமாவிசத் ரூபம் ததைவா விசதச் சப்த ஸ்பர்ச குணா யு பௌ
சப்த ஸ்பர்ச ரூபஞ்ச ரச மாதரம் சமாவிசந் தஸ்மாத் சதுர் குணா ஹயாபோ விசேஷாச் சேந்த்ரிய க்ரஹா –
(ஆகாசமானது தனக்கு காரணமாக உள்ள ஸப்த தன்மாத்ரை மற்றும் வாயுவின் காரணமான ஸ்பர்ச தன்மாத்ரை ஆகியவற்றை அடைகிறது –
இதே போன்று இரண்டாக உள்ள ஸப்தம் மற்றும் ஸ்பர்ச தன்மாத்ரைகள் ஆகியவை அக்னியின் காரணமான ரூப தன்மாத்ரையை அடைகின்றன
ஸப்தம் ஸ்பர்சம் மற்றும் ரூப தன்மாத்ரைகள் நீரின் காரணமாக யுள்ள சுவை தன்மாத்ரையை அடைகின்றன –
ஆகவே இந்த்ரியங்களால் அறியத்தக்க சிறப்பு கொண்ட நீரானது நான்கு குணங்கள் கொண்டதாக உள்ளது -)
என்கிற புராண வசனங்களின் யுடைய ஆனு குண்யத்துக்காகவும்

தேப்யஸ் தந் மாத்ரேப்யோ யதா சங்க்யமேக த்வி த்ரி சது பஞ்சப்யோ பூதாந் யாகா
சா நிலா நல சலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே –
(ஓன்று இரண்டு மூன்று நான்கு மற்றும் ஐந்து என்பதான எண்ணிக்கைகளில் அடங்கி உள்ளதான
தன்மாத்திரைகளில் இருந்து ஆகாசம் வாயு அக்னி நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து பூதங்களும் உண்டாகின்றன )-என்று
இதில் அதி க்ருதனான சாங்க்ய வாசஸ்பதி சொல்லுகையாலும்

கார்ய உத்பாதங்களான தத்வங்கள் ஸ்வ ஸ்வ காரண வ்ருத்தங்களாய்க் கொண்டு
உத்பாதிக்கிறது என்று சொல்ல வேணும் என்று
தத்வ த்ரய விவரணத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்

பிரதாந தத்வ உத்போதம் மஹாந்தம் தத் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-32-)
(பிரதானம் என்பதால் உண்டாக்கப்பட்ட மஹத் தத்துவத்தை வியாபித்து நிற்கிறது )-என்றும்

யதா ப்ரதாநேன மஹாந் மஹதா ச ததாவ்ருத (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-36 )
(எப்படி பிரதானத்தால் மஹத் மூடப்பட்டபடி உள்ளதோ
அதே போன்று அஹங்காரமானது மஹத்தால் மூடப்பட்டுள்ளது )-என்றும்

சப்த மாதரம் ததாகாசம் பூதாதிஸ் ச சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-42 )
(தாமஸ அஹங்காரமானது சப்த தன்மாத்திரை மற்றும் ஆகாசத்தை மூடி உள்ளது ) -என்றும்

ஆகாசம் சப்த மாத்ரஸ்து ஸ்பர்ச மாத்ரம் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-42 )
( ஆகாசமானது ஸப்த தன்மாத்திரை மற்றும் ஸ்பர்ச தன்மாத்ரை ஆகியவற்றை மூடி உள்ளது )-என்றும்

ஸ்பர்ச மாத்ரஸ்து வைவாயூ ரூப மாத்ரம் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-42 )
(ஸ்பர்ச தன்மாத்திரை மற்றும் ரூப தன்மாத்ரை ஆகியவற்றை வாயுவானது மூடி உள்ளது ) -என்றும்

ரச மாத்ராணி சாம் பாம் சி ரூப மாதரம் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-45 )
(நீரானது சுவை தன்மாத்திரை மற்றும் ரூப தன்மாத்ரைகளை ஆகியவற்றை மூடி உள்ளது )-என்றும்
ஸ்ரீ பராசர பகவானாலே உக்தம் ஆகையாலும்

முன்புத்தை தன் மாத்ரைகளோடு கூட்டிக் கொண்டு
உத்தர உத்தர தன் மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே-என்று
இவர் தாமே மேலே அருளிச் செய்கையாலும்
ஆவரண க்ரமம் கொள்ள வேணும்

அப்படியே பூர்வ பாவ நியமத்தைப் பற்ற ஸ்பர்சாதி தன் மாத்ரைகளுக்கு ஸ்வ ஸ்வ விசேஷங்களை
உத்பாதிக்கும் அளவில் ஸ்வ ஸ்வ பூர்வ பூர்வ சஹாயத்வமும் கொள்ள வேணும்

அதாவது
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தந்மாத்ரையை பூதாதி ஆவரிக்கும்
இதில் நின்றும் ஆகாசம் பிறக்கும்
அநந்தரம் இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன் மாதரை பிறக்கும்
ஸ்பர்ச தன் மாதரை சப்த தன் மாத்ரையை ஆவரிக்கும்
இப்படி சப்த தன்மாத்ரா வருதையாய் ஆகாசத்தை சகாயமாய் யுடைத்தான
ஸ்பர்ச மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ஸ்பர்ச தன்மாத்ரா வருதையாய் வாயுவை சகாயமாக யுடைத்தான
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ்ஸூ பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையை ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரூப தன்மாத்ரையாய் வருதையாய் தேஜசை சகாயமாக யுடைத்தான ரச தன்மாத்ரையில்நின்றும் அப்பு பிறக்கும்
இந்த ரச தன் மாத்ரையில் நின்றும் கந்த தன் மாதரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையை ரச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரச மாத்ரையாய் வருதையாய் அப்பை சகாயமாய் யுடசித்தான கந்த மாத்ரையில் நின்றும் பிருத்வி பிறக்கும் என்கை

சப்த தந்மாத்ரா வருத்தமாய் ஆகாசத்தை சஹாயமாக யுடைத்தான
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும் என்று தொடங்கிச் சொன்ன விசேஷ உத்பத்தியில் க்ரமம்
பூதாத தன்மாத்ரம் உத்பத்தி பஷத்துக்கும் ஒக்கும்

பூர்வ பூர்வ பூதத்தில் நின்றும் உத்தர உத்தர தந்மாத்ரா உத்பத்தி
ஆகிற இது விசேஷம் -இது தத்வ த்ரய விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த க்ரமம் –

இங்கன் அன்றிக்கே
தத்வ நிரூபணத்தில் ஜீயர் அருளிச் செய்ததும் ஒரு க்ரமம் யுண்டு –
அதாவது
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தன்மாத்ரையில் நின்றும் அதனுடைய ஸ்தூல அவஸ்தையான ஆகாசம் பிறக்கும்
சப்த தன்மாத்ரையும் ஆகாசத்தையும் பூதாதி ஆவரிக்கும்
இப்படி பூதாத்யா வ்ருதமாய் ஸ்தூல ஆகாச சஹ க்ருதமாய்க் கொண்டு
விக்ருதமான சப்த தன்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும் –
அதில் நின்றும் ஸ்பர்ச குணகமான வாயு பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான சப்த தந்மாத்ரை ஆவரிக்கும்
சப்த தன்மாத்ரா வ்ருதமாய் வாயு சஹ க்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தன்மாத்ரத்தில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் தேசச சஹ க்ருதமாய் விகரித்த ரூப தன்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரச குணகமான ஜலம் பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் அம்ப சஹ கிருதமாய்க் கொண்டு விகரித்த ரச தன்மாத்ரையில் நின்றும்
கந்த தன்மாத்ரம் பிறக்கும்
அதில் நின்றும் கந்த குணகமான பிருத்வி பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரச தந்மாத்ரை ஆவரிக்கும் -என்கை

இதில் முற்பட்ட க்ரமத்திலே
ஸ்பர்ச தன்மாத்ராதி சதுஷ்டயத்துக்கு
ஸ்வ ஸ்வ விசேஷ உத்பாதனத்தில்
பூர்வ பூர்வ பூத சஹாயத்வம் சொல்லப் பட்டது

பிற்பட்ட க்ரமத்தில் பூர்வ பூர்வ தன்மாத்ரத்துக்கு உத்தர உத்தர தன்மாத்ரம்
உத்பாதனத்தில் ஸ்வ ஸ்வ விசேஷ சஹாயத்வம் சொல்லப் பட்டது

ஆகையால் அன்யோன்ய விரோதம் இல்லை-

ஓர் ஒன்றிலே இரண்டும் அனுக்தமே யாகிலும் இரண்டும் அபேஷிதம் ஆகையாலே
ஆவரண கதனத்திலும்
பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரதையும் தத் விசேஷத்தையும்
ஆவரிக்கும் என்று ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சப்த மாதரம் ததாகாசம் பூதாதிஸ் ச சமா வ்ருணோத்
(ஸப்த தன்மாத்ரை மற்றும் ஸ்தூல ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடுகிறது ) -என்ற விதுக்கு

சப்த மாதரம் -சப்த தன்மாத்ரம்
ததாகாசம் –ஸ்தூல ஆகாசஞ்ச ச பூதாதிர் ஆவ்ருணோத்
யேதன பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரம் தத் விசேஷஞ்ச வ்ருணோதிதி தர்சிதம்
(தன்மாத்திரை மற்றும் ஸ்தூலமான ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடுகிறது
இவ்வாறு கூறுவதால் முன்பு முன்பு உள்ள தன்மாத்ரைகள் பின்பு பின்பு உள்ள தன்மாத்ரை மற்றும்
அதன் சிறப்பான பூதங்கள் ஆகியவற்றை மூடுகின்றன என்று உணர்த்தப்படுகிறது -)- என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் வியாக்யானம் பண்ணுகையாலும்

தத்வ விவரணத்தில்
தன்மாத்ரத்துக்கு ஆவரணம் சொன்னவோபாதி
தத் விசேஷத்துக்கு ஆவரணம் சொல்லிற்று இல்லை யாகிலும்
அது உப லஷணமாம் இத்தனை

அல்லாத போது
அவ்விடம் தன்னில் பூதாத் தன்மாத்ரா உத்பத்தி சொல்லவும் போகாது

ஆகையால் இரண்டும் கொள்ள வேணும் –

தத்வ நிரூபணத்தில் தன்மாத்ரா தத் விசேஷங்கள் இரண்டுக்கும் ஆவரணம் சொல்லுகிற அளவில்
இரண்டையும் சேர்த்துப் பிடித்துச் சொல்லப் பட்டதே யாகிலும்
விசேஷ உத்பத்திக்கு முன்பே தன்மாத்ரத்துக்கு ஆவரணம் கொள்ள வேணும்

த்வகில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதாப் போலே
ஆவாரகத்தை ஒழிந்த போது
உத்தர கார்ய சக்தி இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது இறே-

இப்படி பூத தன்மாத்ர சிருஷ்டி சொல்லுகிற இடத்தில்
ஆவரண க்ரமம் வக்தவ்யமாய் இருக்கச் செய்தேயும்
அருளிச் செய்யாது ஒழிந்தது அபேஷிதம் அல்லாமை அன்று
சங்கோசேன உத்பத்தி க்ரமத்தை அருளிச் செய்தார் இத்தனை
பெரிய வாச்சான் பிள்ளையும் இப்படி இறே அருளிச் செய்தது –

—————————————————————————

சூர்ணிகை -104-

ஆக
பூத தன்மாத்ர உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தார் கீழ்
அதில்
தன் மாத்ரங்கள் தான் எவை -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

தன் மாத்ரங்கள் ஆவன
பூதங்களின் யுடைய
ஸூஷ்ம அவஸ்தைகள் –

அதாவது –
தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தன்மாத்ரம் தேன தன்மாத்ரதா ஸ்ம்ருதா
தன்மாத் ராண்யா விசேஷாணி அவி சேஷாஸ் ததோஹித
ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாச்ச விசேஷிண 9ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-46/47)

(ஆகாசம் முதலான பூதங்களில் தன்மாத்திரைகள் உள்ளதாக எண்ணப்பட்டது –
தன்மாத்திரைகள் எந்தவிதமான விசேஷமும் அற்றவை எனக் கூறப்பட்டது
எனவே ஓசை முதலான பூதங்களுடைய குணங்கள் அனைத்தும் விசேஷங்கள் அற்றவை யாகின்றன
ஏன் என்றால் இவை சாந்தம் கோபம் மற்றும் மூடம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய விசேஷங்கள் அற்றதாகவே உள்ளன )-என்று

சாந்தத்வ கோரத்வ மூடத்வ லஷணமான விசேஷங்களை யுடைத்து அல்லாத
சப்தாதி மாத்ரத்தை குணமாக யுடைத்தாய் இருக்கிற
ஆகாசாதி பூத ஸூஷ்மங்கள் –

சாந்தத்வம் ஆவது -அனுகூல வேதநீயத்வம்
கோரத்மவாது -பிரதிகூல வேதநீயத்வம்
மூடத்வமாவது -உதாசீன வேதநீயத்வம்

அதில் ஸ்வ பாவமே
சாந்தங்களாய் இருக்கும் -பூமியும் ஜலமும் –
கோரங்களாய் இருக்கும்–தேஜஸ்ஸூம் வாயுவும்
மூடமாய் இருக்கும் -ஆகாசம்

மேளனத்தாலே-எல்லா பூதங்களும் சாந்தவ கோரத்வ மூடத்வங்களை யுடையனவாய் இருக்கும்
தன்மாத்ரைகளுக்கு இந்த சாந்தத்வாதி விசேஷம் இல்லாமையாலே
அவை அவிவிசேஷங்கள் என்று சொல்லப் படுகின்றன
ஆகையால்
தன்மாத்ரைகள் என்றும் அவிவிசேஷங்கள் என்றும் பர்யாயம்

அதில்
அபி யுக்தரான யாதவ பிரகாசாதிகளும்
தன் மாத்ராண்யா விசேஷா இத்ய நர்த்தாந்தரம்
சாந்தத்வ கோரத்வ மூடத்வம் இதி த்ரயோ விசேஷாஸ் த்ரை குண் யாத்மானஸ் தேஷாம் அனுத்பவாத்
ஸூஷ்ம ஆகாசம் விசேஷ லஷணம் பவதி தேன சப்த தன் மாத்ரம் உச்யதே
ஏவம் ஸூஷ்மோ வாயுஸ் ஸூஷ்மம் தேஜஸ் ஸூஷ்மா ஆபஸ் ஸூஷ்மா பிருத்வீ

(தன்மாத்திரைகள் மற்றும் விசேஷம் அற்றவை ஆகிய இரண்டும் ஒரே பொருள் கூறுவதாகும்
சாந்தத் தன்மை கோரத் தன்மை மற்றும் மூடத் தன்மை ஆகிய மூன்று குணங்களையும் ஸ்வரூபமாகக் கொண்ட
மூன்று விசேஷங்கள் இத்தகைய தன்மாத்திரைகளுக்கு இல்லை என்பதால்
ஸூஷ்மமான ஆகாசமானது விசேஷம் அற்றதாகவே உள்ளது -அந்தச் சொல் மூலம் தன்மாத்திரைகள் கூறப்படுகின்றன
இப்படியாகவே ஸூஷ்ம வாயு ஸூஷ்ம தேஜஸ் ஸூஷ்மநீர் ஸூஷ்ம ப்ருத்வீ )-
என்று சொல்லி வைத்தார்கள் இறே

ஆக
த்ரிவித அஹங்காரத்திலும் வைத்துக் கொண்டு
சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்களும்
தாமச அஹங்காரத்தில் நின்றும் பூத தன் மாத்ரைகளும்
உத்பன்னமாம் க்ரமம் சொல்லி நின்றது-

———————————————————————–

சூர்ணிகை -105-

இனி ராஜஸ் அஹன்காரத்தின் கார்யம் சொல்லுகிறது –

மற்றை இரண்டு
அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப் பிறப்பிக்கும்

ராஜச அஹங்காரம்
சஹகாரியாய்
இருக்கும் –

அதாவது
சதவிக தாமச அஹங்காரங்கள் இரண்டும் ஸ்வ கார்யங்களை
உத்பாதிக்கும் போது
பீஜத்தின் யுடைய அங்குரத்துக்கு ஜலம் போலவும்
அக்னியினுடைய ஜ்வலனத்துக்கு வாயு போலவும்
ராஜச அஹங்காரம் சஹ காரியாய் இருக்கும் -என்கை –

இது சஹாகரிக்கை யாவது
ரஜ ப்ரவர்ததகம் தத்ர (அவற்றை ராஜஸம் ஈடுபட வைக்கிறது )-என்கிறபடியே
இவற்றில் இந்த்ரிய ஹேதுவான சத்வ அம்சத்துக்கும்
பூத ஹேதுவான தமோ அம்சத்துக்கும்
சல ஸ்வ பாவமான(அசைவதே இயல்பாகக் கொண்ட ) ராஜஸ்ஸூ ஸூபிரேரகமாய்க் கொண்டு பிரவர்த்திப்பிக்கை –

——————————————————————————————–

சூர்ணிகை -106-

இப்படி சாத்விக தாமச அஹங்காரங்களுக்கு சாதாரண சஹகாரியை அருளிச் செய்தார் கீழ்
அநந்தரம்
சாத்விக அஹங்காரத்துக்கு அசாதாராணாமாய் இருப்பன சில
சஹகாரி விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

சாத்விக அஹங்காரம்
சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹகாரியாய் கொண்டு
ஸ்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்

தத் சஹ க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்

இவற்றை ஒழிய தானே
மனஸ்சை சிருஷ்டிக்கும்
என்றும் சொல்லுவார்கள் –

அதாவது
சாத்விக அஹங்காரம்
இந்த்ரியங்களை சிருஷ்டிக்கும் அளவில் இவற்றின் யுடைய விஷய பிரதி நியமத்துக்காக
சப்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ஸ்ரோத்ரத்தையும்
ஸ்பர்ச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு த்வக் இந்த்ரியத்தையும்
ரூப தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு சஷூஸ்சையும்
ரச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ஜிஹ்வையையும்
கந்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு க்ராண இந்த்ரியத்தையும்
சிருஷ்டிக்கும்

இப்படி சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாகக் கொண்டு
ஸ்ரோத்ராதி ஞான இந்த்ரியங்களையும் சிருஷ்டித்த அநந்தரம்
ஸ்ரோத்ர க்ராஹ்யமான சப்த விஷயமாயும்
தவக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும்
சஷூர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருத்தி ஹேதுவாயும்
ரசனா விஷய ரச ஆஸ்ரயஸ்மான ஜலத்தின் யுடைய நிசசரண ஹேதுவாயும்
க்ராண விஷய கந்த ஆஸ்ரயமான பிருத்வி அம்சமான அந்நாதிகளில்
ருஷீ ஷோத் ஸர்ஜன ஹேதுவாயும்(சாரமாக அல்லாதவற்றை மேலே தள்ளுவதற்கு )
இப்படி ஞான இந்த்ரிய பஞ்சக சேஷமாய்க் கொண்டு
சப்தாதி பஞ்சகத்தையும் ஒட்டி இருக்கும்

கர்ம இந்த்ரிய பஞ்சகத்தை சிருஷ்டிக்கும் அளவில்
ஸ்ரோத்ர சஹ க்ருதமாய்க் கொண்டு வாக்கையும்
த்வக் சஹ க்ருதமாய்க் கொண்டு பாணியையும்
சஷூஸ் சஹ க்ருதமாய்க் கொண்டு பாதத்தை
ஜிஹ்வா சஹ க்ருதமாய்க் கொண்டு உபஸ்தத்தையும்
க்ர்ணா சஹ க்ருதமாய்க் கொண்டு பாயுவையும்
சிருஷ்டித்து

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் கர்ம இந்த்ரியங்களுக்கும் சஹகாரியாய்
உபாயதமகமான மனசை சஹகாரி நிரபேஷமாக தானே
சிருஷ்டிக்கும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை-

இது தன்னை
ஸ்ரீ விஷ்ணு புராண வ்யாக்யானத்தில்
அயமத் ரேந்த்ரிய சிருஷ்டிகரம் வைகாரிக அஹங்காரத் க்ரமேண சப்த தன்மாத்ராதி பஞ்சக சஹாயாத் க்ரமேண
ஸ்ரோத்ராதி ஞான இந்த்ரிய பஞ்சகஸ்ய ஸ்ருஷ்டி தஸ்மா தேவ தத் சஹாயாத்
வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகஸ்ய அசஹாயாத்து தஸ்மான் மனஸஸ் ஸ்ருஷ்டிரிதி

(இது இங்கு இந்திரிய ஸ்ருஷ்ட்டி வரிசைகள் -சாத்விக அஹங்காரத்தில் இருந்து முறையே
ஸப்தம் போன்ற தன்மாத்திரைகள் துணையோடு முறையே காதுகள் போன்ற
ஐந்து ஞான இந்திரியங்களின் ஸ்ருஷ்ட்டி உண்டாகிறது
ஞான இந்திரியங்களின் உதவி கொண்டு காதுகள் போன்ற ஐந்து கர்ம இந்திரியங்களுடைய ஸ்ருஷ்ட்டி ஏற்படுகிறது
மற்ற தத்துவங்களின் துணை ஏதும் இன்றி சாத்விக அஹங்காரத்தில் இருந்து மனம் தோன்றுகிறது )-என்று
பிள்ளை எங்கள் ஆழ்வானும் அருளிச் செய்தார்-

————————————————————-

சூர்ணிகை -107-

அநந்தரம் இப்படி தாம் அருளிச் செய்த இந்த்ரிய உத்பத்தி க்ரமத்துக்கு
விரோதி பஷத்தை
நிரசிக்கைக்காக அத்தை யுத்ஷேபிக்கிறார் –

சிலர்
இந்த்ரியங்களில்
சிலவற்றை
பூத கார்யம்
என்றார்கள் –

அதாவது –
சிலர் –
அவர்கள் ஆகிறார்
க்ரணாதிகளான இந்த்ரியங்களை
பிருதிவ்யாதி பூத கார்யமாகவே கொள்ளும்
நையாயிகாதிகள்

அவர்கள் தாம் ஆனுமாநிகர் ஆகையாலே
அனுமானத்தாலே இறே அர்த்தத்தை சாதிப்பது-

——————————————————-

சூர்ணிகை -108-

அத்தை காலாத்ய யாபதேசத்தாலே தூஷிக்கிறார்

அது
சாஸ்திர
விருத்தம்

அதாவது
இந்த்ரியங்களை பூத கார்யம் என்று சொல்வது
இவற்றை ஆகங்காரிகளாக சொல்லுகிற
இதிஹாச புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-

——————————————————-

சூர்ணிகை -109-

அது என் என்ன
மோஷ தர்மத்திலே –
சப்த ஸ்ரோத்ரம ததா காதி த்ரய ஆகாசம் சம்பவம்
வாயோ ஸ்பர்சம் ததா சேஷ்டா த்வக் சைவ த்ரிதயம் சம்ருதம்
ரூபம் சஷூஸ் ததா வ்யக்திஸ் த்ரிதயம் தைஜ உச்யதே
ரச க்லே தச்ச ஜிஹ்வா ச த்ரயோ ஜல குணா சம்ருதா
க்ராணம் க்ரேயம் சரீரஞ்ச தே து பூமி குணா ஸ்ம்ருதா (மோக்ஷ தர்மத்தில் )

(ஓசை செவி மற்றும் பறவைகளுடைய வழியாக உள்ள ஆகாயம் ஆகியவை ஆகாசத்தில் இருந்து உண்டாயின –
ஸ்பர்சம் அசைவு மற்றும் தோல் ஆகியவை வாயுவிடம் இருந்து உண்டாயின –
சுவை நனைத்தல் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் குணங்களாகக் கூறப்படுகின்றன
மூக்கு மணம் மற்றும் சரீரம் ஆகியவை பூமியின் குணங்களாகக் கூறப்படுகின்றன )–என்று சொல்லுகையாலே
இதிஹாசாதிகள் தன்னிலேயும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்வம் சொல்லப் படுகையாலே
பூதங்கள் இவற்றுக்கு காரணமாக வேணுமே -என்ன –

பூதங்கள்
ஆப்யாயங்கள்
இத்தனை –

அதாவது
இதிஹாசாதிகளில் இந்த்ரியங்களுக்குச் சொன்ன பௌதிகத்வம்
பூதங்களால் யுண்டான ஆபயாய நமாத்ரத்தைப் பற்ற வாகையாலே
இந்த்ரியங்களுக்கு பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை
காரணங்கள் அன்று -என்கை –

ஆப்யாயகத்வம் ஆவது -போஷகத்வம்

இன்னமும்
அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்த காரணமாகவும்
இவற்றை உபாதான காரணமாகவும் சொல்லுகிற
குத்ருஷ்டி மதம் யுண்டு இறே

அஹங்காரஸ் யேந்த்ரியாணி ப்ரதி நிமித்தத்த மேவ
பூதானா மேவ உபாதானத்வம் அந்ந மயம் ஹி சோம்ய மன
ஆபோ மய ப்ராணஸ் தேஜோ மயீ வாக் இதி ஸ்ருதேரித கேசி தாஹூ ததயுக்தம்
அஹங்காரஸ் யைவோ பாதா நத்வேபி பூதானா மாப்யாய கத்வே நாபி ததா நிர்தேசோ பபத்தே(ஸ்ரீ விஷ்ணு புராணம் -21-2-48 )

(அஹங்காரத்துக்கு இந்த்ரியங்களைக் குறித்து நிமித்த காரணமாக உள்ள தன்மை மாத்திரமே உள்ளது
பூதங்களுக்கு மட்டுமே உபாதானக் காரணமாக உள்ள தன்மை உள்ளது
ஸ்வேதகேது -மனமானது -அன்னமயம் பிராணனானது நீர் மயம் -வாக்கானது தேஜோ மயம் -என்று ஸ்ருதி கூறுகிறது
இவ்வாறு வேதம் கூறுவதால் பூதங்களை முதல் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்
ஆனால் அது சரியான கருத்து அல்ல
அஹங்காரத்துக்கு முதல் காரணமாக உள்ள தன்மையும்
பூதங்களுக்கு வளர்க்கின்ற தன்மையும் உள்ளதால் பூதங்கள் முதல் காரணமாக இருக்க முடியாது -) -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் எடுத்துக் கழித்தது அதுவும்

இந்த்ரியங்களில் சிலவற்றை என்று தொடங்கி
இவர் அருளிச் செய்த க்ரமம் தன்னாலே பிரதிஷிபதம்

அப்போதைக்கு -அது சாஸ்திர விருத்தம் -என்றது
ஏகாதசம மனசசாதர தேவா வைகாரி காச சம்ருதா -இத்யாதிகளாலே
இவற்றை சாத்விக அஹங்கார காரயமாகவே சொல்லுகிற புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-

புராணாதிகளைப் பற்ற
அன்ன மயம் ஹி சோம்ய மன (சோம்ய மனமானது பூமி உள்ளது ) -இத்யாதி ஸ்ருதிக்கு
பிராபல்யம் யுண்டே யாகிலும்
இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹயேத் -என்கையாலே
உப ப்ரும்ஹண அனுகூலமாக அதுக்கு அர்த்தம் கொள்ள வேணும் என்று கருத்து –

ஆனால் உப ப்ரும்ஹணங்கள் தன்னிலேயும் பௌதிகத்வம் சொல்லுகையாலே
இவற்றுக்கு பூதங்கள் காரணமாய் அன்றோ தோற்றுகிறது–என்ன –
பூதங்கள் ஆப்யாயங்கள் இத்தனை(இந்திரியங்களை வளர்க்கின்ற தன்மை மட்டுமே உள்ளது ) -என்று நிர்வாஹம் –

க்ரணாதிகளான இந்திரியங்களுக்கு
பிருத்வ்யாதி பூதங்களால் யுண்டான ஆபயாய நம ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே பிரசித்தம்

இது தான் ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே
க்ர்ணா தீநாம் மிந்த்ரியாணாம் ஹி பிருதிவ்யாதி பூதைர் ஆப்யாயநம் ஸ்ருதி ஸ்ம்ருதிஷூ பிரசித்தம்
அன்ன மயம் ஹி சோம்ய மன ஆபோமய பிராணஸ் தேஜோ மயீ வாக் ஸ்ரோதரம் நபோ
க்ராணமுக்தம் பிருதிவ்யா இத் யாரப்ய வாய் வாத் மகம்
ஸ்பர்ச நமாமநந்தி நபே ஸ்ரோதரஞ்ச தன்மயம் இத்யாதிஷூ –

(மூக்கு முதலான இந்திரியங்களுக்கு பூமி முதலான பூதங்களால் வளர்ச்சி ஏற்படுதல் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ளது –
மனமானது அன்னமயம் -பிராணனானது நீர் மாயம் -வாக்கானது தேஜோ மாயம் என்றும் கூறப்பட்டுள்ளது –
ஆகாயத்தில் இருந்து செவி இந்த்ரியமும் பூமியில் இருந்து மூக்கு இந்த்ரியமும் -என்று தொடங்கி
ஸ்பர்சத்தை வாயுவுக்கும் செவியை ஆகாசத்திடமும் கூறுகிறார்கள் )
என்று ஸ்ருதி பிரகாசகராலே அபிஹிதம் ஆயிற்று

இப்படி இந்த்ரியங்களுக்கு பூதங்கள் எப்போதும் ஆப்யாயகங்களாய் இருக்கும் என்னும் இடம்
மோஷ தர்மத்திலே ப்ருகு பரத்வாஜ சம்வாதத்திலே
ஆப்யாயந்தே ச தே நித்யம் தாதவஸ் தைஸ்து பஞ்சபி –
(ஐந்தாக உள்ள பூதங்களால் அனைத்துக் காலத்திலும் வளரும் படிச் செய்து )என்று
ஸூ வ்யக்தமாக சொல்லப் பட்டது –

ஆகையால்
பூதங்கள் இந்த்ரியங்களுக்கு ஆப்யாயகங்கள் (வளர்ச்சிக்கு உதவுபவை மட்டுமே )இத்தனை
காரணங்கள் அன்று என்றது ஆயிற்று-

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -87-101-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 2, 2014

சூர்ணிகை -87-

ஏவம் பூதமான அசித்து தான்
கார்ய காரண ரூபேண அநேக தத்வமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார்

இதுதான்
பொங்கைம்புலனும்
பொறி ஐந்தும்
கருமேந்த்ரியம்
ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய
பிரகிருதி
மானாங்கார
மனங்கள் -(திருவாய் -10-7-10 )
என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –

அதாவது
ஐம்புலன் சப்தாதிகள் பொங்குதலால் சேதனரை விக்ருதரராய் பண்ணும்படிக்கு ஈடான
இவற்றினுடைய உத்ரேகம் சொல்லுகிறது
இவ் விடத்தில் விசேஷ்யம் மாத்ரமே அபேஷிதம்

பொறி ஐந்தாவன -ஸ்ரோத்ராதிகள்
கருமேந்த்ரியம் -வாக்காதிகள்
ஐம்பூதம் -கக நாதிகள்

இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி -என்கிறது
சம்சார தசையில் இவ்வாத்மாவோடே அத்யந்த சம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற பிரகிருதி -என்றபடி –
இங்கும் விசேஷ்யம் மாத்ரம் இறே தத்வ சங்கையைக்கு வேண்டுவது

மானாங்கார மனங்கள் ஆவன –
மகானும் -அஹங்காரமும் -மனஸ் ஸூம்

இப்படி இருபத்து நாலு தத்வங்களையும் அருளிச் செய்கிற ஆழ்வார்
தன் மாத்ரைகளை அருளிச் செய்யாதே
சப்தாதிகளை அருளிச் செய்தது
தன் மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் ஆகையாலே
தன் மாத்ரங்களான பூதங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி
சப்தாதிகள் ஐந்தையும் ஐந்து தத்வங்களாகக் கொண்டு
இவையும் ஏகாதச இந்த்ரியங்களும்
பிரகிருதி மகான் அஹங்காரம்
இப்படி
சதுர் விம்சதி தத்வம் என்று கொள்ளுவதும் ஒரு பஷம் யுண்டாகையாலே
உபய பஷத்திலும் தத்வ சங்கையையில் ந்யூநாரிரேகம் இல்லை இறே
ஆகையால் இப் பாட்டில் சொன்னபடியே இருபத்து நாலு
தத்வமாய் இருக்கும் என்றது ஆயிற்று –

——————————————————————————————-

சூர்ணிகை -88

இப் பாட்டில் தத்தவங்களை சொன்ன இத்தனை ஒழிய
இவற்றினுடைய க்ரம கதனம்
பண்ணிற்று இல்லை இறே
ஆகையால் இதில் பிரதம தத்வம் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

இதில்
பிரதம
தத்வம்
பிரகிருதி

பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் அவ்யக்தம் என்றும்
பிரதம தத்வதுக்கு பேர்

பிரகிருதி என்று சொல்லுகைக்கு அடி முன்பே சொல்லப் பட்டது
பிரதானம் -என்கிறது -எம்பெருமானுடைய லீலைக்கு பிரதானமான உபகரணம் ஆகையாலே
அவ்யக்தம் என்கிறது அநபி வ்யக்த குண விபாகம் ஆகையாலே-

——————————————————–

சூர்ணிகை -89-

இப்படி பிரதம தத்வமான பிரகிருதிக்கு யுண்டான
அவஸ்தா விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

இது அவிபக்த தமஸ் -என்றும்
விபக்த தமஸ் என்றும் -என்றும்
அஷரம் என்றும்
சில அவஸ்தைகளை
யுடைத்தாய் இருக்கும் –

அதாவது
அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமஸீ லீயதே
தமே பரே தேவ ஏகீ பவதி -(ஸூபால உபநிஷத் )
(அவ்யக்தம் அக்ஷரத்திலும் அக்ஷரம் தமஸ்ஸிலும் லயிக்கின்றன
தமஸ் உயர்ந்த தேவன் இடம் சென்று ஒன்றாகிறது )என்கிறபடியே

சம்ஹ்ருதி சமயத்திலே அவ்யக்த அவஸ்தை குலைந்து
அஷர அவஸ்தமாய்
அது தானும் குலைந்து அதி ஸூஷ்மமாய் தமஸ் சப்த வாச்யமாய்
அது தானும் நாம ரூப விபாகம் அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கையாலே
அவிபக்த தமஸ் -என்றும் –

சர்க காலம் வந்தவாறே
ப்ராதுர் ஆஸீத் தமோ நுத (மநு -1-6-இருளை விரட்டும் விதமாக வெளிப்படுத்தினான் ) -என்கிறபடியே
அவனாலே ப்ரேரிதமாய்க் கொண்டு நாம ரூப விபாகம் யோக்யமாம்படி
அவன் பக்கல் நின்றும் விபக்தமாய்
கார்ய உந்முகம் ஆகையாலே விபக்த தமஸ் என்றும்

அநந்தரம்
தத் சங்கல்ப விசேஷததாலே
புருஷ சமஷ்டி கர்ப்பமான அசேதனம் என்று விவேகிக்கைக்கும்
அபத மாம்படியான தமோ அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான
அவஸ்தையைப் பிராபித்து நிற்கையாலே அஷரம் என்றும்
இங்கனே சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் -என்கை –

ஆகையால்
இது அவி பக்த தமஸ் ஆகையாவது
அவ்யக்த அஷர அவஸ்தைகளை குலைந்து தமஸ் சப்த வாச்யமாய்
நாம ரூப விபாக அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கை –

விபக்த தமஸ் ஆவது –
நாம ரூப விபாகம் அர்ஹமாம்படி விபக்தமாய் கார்ய உந்முகமாகை –

அஷரம் ஆகையாவது –
இது அசித் என்றும் இதன் உள்ளே புருஷ சமஷ்டி கிடக்கிறது என்றும்
விவேகிக்க ஒண்ணாத படி அதி ஸூ ஷ்மமாய் இருக்கிற
தமோ அவஸ்தை குலைந்து
புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை பஜிக்கை-என்றது ஆயிற்று –

குண த்ரய வைஷம்யஸ் யா நந்தர பூர்வ அவஸ்தா குண சாம்யம் குண சாம்ய லஷணம் அவ்யக்தம் -என்றும்
அவ்யக்தம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யாம் அவஸ் தாயாம் குண சாம்ய மப்யஸ்புடம் தத் அவஸ்தம்
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சப்தேநே உஸ்யதே
தனு சேதன மாத்ரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதித்வ அயோகாத்
அதசஸ் சர்வம் தத்வ ஜாதம் சித் அசித் ஆத்மகம் மந்தவ்யம்
ப்ரதா நாதி விசேஷாந்தம் சேதன அசேதன ஆத்மகம்– இதி பரசார வசனாத்
அத்ர து சித் கர்ப்பே வஸ்துநி அஷர சப்த உபசரித ப்ரயோகேந் யதா சித்தே
சக்தி அந்தர கல்பநா யோகாத்

அஷரம் தமசி லீயதே இதி –
சித் கர்ப்பத்வம் அசித்வம் அபி யத்ர விவேகதும் அசக்யம் தத் அவஸ்தத் அதி ஸூஷ்மம் பிரதானம்
தமஸ் சப்தேந அபி லப்யம் அஷராதி அவஸ்தா ப்ராப்த யௌவன முக்க் ய விசிஷ்டம் ததேவ விபக்தம்
தமஸ் ததௌந் முக்க்ய ரஹிதம் அபிபக்தம் தமஸ் பரமாத்ம சரீர தயாபி சிந்தயிதும் அஸக்யம்
சலில விலீந லவண சந்த்ர காந்தஸ்த சலில ஸூர்ய காந்தஸ் தவஹ்நி கல்பம்
சர்வஜ்ஞ பரமாத்மைக வேத்யம் அவதிஷ்டதே பூதல விநிஹித
பீஜஸ் ஸ்தாநீய மவி பக்தம் தமஸ் ம்ருந் நிஸ் ஸ்ருத பீஜ வத் விபக்தம் தமஸ்
சலில சம்ஸ்ருஷ்டாத்ரா சதில அவயவ பீஜ துல்யம் அஷரம் உஸ் சூன பீஜ சமாநம் அவ்யக்தம்
அங்குர ஸ்தாநீயோ மகாந் இதி விவேக -என்று ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே ஸ்ருத பிரகாசர்
இதனுடைய அவஸ்தா விசேஷங்களை ஸூஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்

(ப்ரக்ருதியானது மூன்று குணங்களுடைய ஏற்றத் தாழ்வை அடைகிறது –
அந்த நிலைக்குப் பின்னர் முந்தைய நிலையானது சமநிலை எனப்படுகிறது
குணங்கள் சமமாக உள்ள நிலையானது கண்களுக்குப் புலப்படாத அவ்யக்தம் எனப்படும்
எந்த ஒரு நிலையில் அனைத்து குணங்களும் சமமாகவோ அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடியதாக வெளிப்படையாகவோ
காண இயலாமல் உள்ளதோ அப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளதான தொகுத்த ஜீவாத்ம கூட்டம்
எதில் அடங்கி உள்ளதோ அது அக்ஷரம் எனப்படும் –
இது ஏன் என்றால் அக்ஷரம் என்பது ஜீவாத்மாக்களை மட்டும் குறிப்பது அல்ல
காரணம் -அதற்கு பிரக்ருதியானது காரணமாகவும் அது தமஸ்ஸுக்கு காரியமாகவும் உண்டானது அல்ல என்பதால் ஆகும்
ஆகவே ப்ரக்ருதி தத்வம் முதலாக இந்த பூமி முடிய உள்ள அனைத்தும்
சித் மற்றும் அசித் என்ற ஸ்வரூபங்களாகவே எண்ணப்பட வேண்டும்
பராசரர் -ப்ராதாநாதி விசேஷாந்தம் சேதன அசேதன ஆத்மகம் -பிரதானம் தொடக்கமாக விசேஷமான பொருள்கள்
முடிய உள்ள அனைத்தும் சேதனம் மற்றும் அசேதனம் என்பவற்றை உள்ளடக்கிய தாகவே உள்ளன -என்கிறார்
இங்கு ஜீவர்கள் அனைவரும் ப்ரக்ருதியில் உள்ள நிலையானது சூல் கொண்ட பயிர்களை போன்று உள்ளனர் –
என்பதைக் குறிக்கும் சொல்லானது உபசாரமாகவே மட்டுமே கூறப்பட்டது
இதற்கு வேறு விதமாகப் பொருள் ஏற்கக் கூடாது
இவ்விதமாக சித் வஸ்துக்களைக் கர்ப்பத்தில் கொண்டதாக உள்ள நிலையும் அசித் வஸ்துக்களினுடைய தன்மையும்
எந்த ஒரு நிலையில் பிரித்து அறிய முடியாதபடி உள்ளதோ அப்படிப்பட்ட ஸூஷ்ம மான நிலையானது
பிரதானம் மற்றும் தமஸ் போன்ற சொற்களால் கூறப்படுகிறது
இப்படிப்பட்ட அக்ஷர நிலையை அடைவதற்கான எதிர்த்தன்மையுடன் கூடி உள்ளது விபக்த தமஸ் என்னப்படும் –
இவ்விதம் எதிர் தட்டாக இல்லாதது அவிபக்த தமஸ் எனப்படும்
அது பரமாத்மாவின் சரீரம் என்று பிரித்து அறிய இயலாத படியும் -நீரில் கலந்துள்ள உப்பு –
சந்திரக்காந்தக் கல்லில் உள்ள நீர் -ஸூர்யகாந்தக் கல்லில் உள்ள நெருப்பு -போன்றதாகவும்
அனைத்தும் அறிந்த பரமாத்மாவால் மட்டுமே அறியக் கூடியதாகவும் உள்ளது
பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றதே அவிபக்த தமஸ் ஆகும்
நீருடன் ஒன்றாகக் கலந்து சிதைவுடன் கூடிய விதை போன்றதே அக்ஷரம் ஆகும்
அந்த விதையில் இருந்து வெளிவந்த முளையைப் போன்றதே மஹான் ஆகும் -என்று கூறினார்
இதன் மூலம் அக்ஷரம் மற்றும் தமஸ் ஆகியவை ஒரு மலருடைய மொட்டு மற்றும் அரும்பு
முதலான நிலைகளை போன்று பிரகிருதியின் சுருங்கிய நிலை யாகிறது
ஆகவே இவை மஹான் அஹங்காரம் என்பது போன்ற வேறு தத்வங்கள் அல்ல என்று தேறுகிறது -)

இத்தால்
அஷரமும் தமஸ்ஸூம்
குஸூமத்தினுடைய முகுள கோரக அவஸ்தைகள் போலே
இதனுடைய சங்கோச தசை யாகையாலே
மகாதாதிகளைப் போலே தத்வாந்தரம் அன்று என்னும் இடம் சித்தம்-

—————————————————————————————–

சூர்ணிகை -90-

இனி இந்த பிரக்ருதியில் நின்றும் மஹதாதி விகாரங்கள்
ஜநிக்கைக்கு மூலம் இன்னது -என்கிறார் –

இதில் நின்றும்
குண வைஷம்யத்தாலே
மஹதாதி விசேஷங்கள்
பிறக்கும் –

குணங்களுக்கு வைஷம்யம் ஆவது -பரஸ்பர உத்தரேகம்-

———————————————————————

சூர்ணிகை -91-

அப்படி இருக்கிற குணங்கள் தான் எவை என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

குணங்கள் ஆகிறன
சத்வ
ரஜஸ்
தமஸ் ஸூக்கள் –

—————————————————————–

சூர்ணிகை -92-

இவை தான் இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபந்திகளான
ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில்
அனுத் பூதங்களாய்
விகார தசையில்
உத் பூதங்களாய்
இருக்கும் –

இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபந்திகளான ஸ்வ பாவங்களாய-
சத்வம் ரஜஸ் தமஸ் இதி குணா பிரகிருதி சம்பவா (ஸ்ரீ கீதை -14-5)
(சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் -என்பதான ப்ரக்ருதியில் இருந்து உண்டான குணங்கள் )-என்றும்

பிரக்ருதே க்ரிய மாணிநி குணை கர்மாணி சர்வச (ஸ்ரீ கீதை -3-27)
(அனைத்து செயல்களும் அனைத்து விதங்களிலும் பிரகிருதியின் குணங்களால் இயங்குகின்றன )-என்றும்

சத்வம் ரஜஸ் தமஸ் இதி பிரக்ருதேர் குணா
(சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை பிரகிருதியின் குணங்கள் )-என்றும்
சொல்லக் கடவது இறே-

ஸ்வ பாவ அனுபந்திகள் -என்றது ஆகந்துகங்கள் அன்றிக்கே
சத்தா பிரயுக்தங்கள் ஆகையாலே
இவற்றை ஒழிந்து ஓர் அவஸ்தையும் இல்லை -என்கை-

இவற்றை ஸ்வ பாவங்கள் என்றும்
பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுப பந்திகள் என்றும் சொல்லுகையாலே
மூல பிரக்ருதிர் நாம ஸூக துக்கா மோஹாத் மகாநி லாகவ பிரகாச சலனோ பஷ்டம்பன கௌரவா வரண
கார்யாண்யத் யந்தா தீந்தரியாணி கார்யைக நிரூபண
விவேகாநி அந்யூனா நதிரே காணி சமதா முபேதானி சத்வ ரஜச தமாம்சி த்ரவ்யாணி -(ஸ்ரீ பாஷ்யம் -2-2-1)

மூலப்பிரக்ருதி என்பது சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களைக் கொண்டதாகும்
இவை மூன்றும் சரிசமமான நிலையில் -ஒன்றை ஓன்று விஞ்சாத விதத்தில் உள்ளன
இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸூகம் துக்கம் மற்றும் மோகம் -மயக்கம் -என்பதாகும் –
சத்வம் அதிகமாகும் போது ஸூகம் ஏற்படும் -சரீரம் எடை குறைவாக இருப்பதாகத் தோன்றும் –
இந்திரியங்கள் நன்கு இயங்கும் -இதுவே லாகவே ப்ரகாசங்கள் என்பர்
ரஜஸ் அதிகமாகும் போது துக்கம் ஏற்படும் -அசைவு மற்றும் இந்திரியங்கள் செயலாற்றுவதும் நிகழும்
சலனம் -சஞ்சலமான இயல்பு கொண்டபடியும் -உஷ்டம்பனம் -யாரையேனும் வாக்குவாதத்துக்கு இழுத்த படியும் இருப்பர்
தமஸ் அதிகமாகும் போது மயக்கம் ஏற்படும் -சரீரம் பழுவாக உணரப்படும் இந்திரியங்கள் மறைக்கப்படும் -கௌரவம் ஆவரணம் –
இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும் –
அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணர வல்லதாக -நிரூபிக்கும் படியாக -இருப்பதாகும்
சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றையும் சமநிலையில் கொண்டதான மூல அசேதனமாக உள்ள போதிலும்
ப்ரக்ருதியானது எண்ணற்ற சேதனர்களுடைய இன்பத்துக்கும் மோக்ஷத்துக்கும் உதவுவதாக உள்ளது -)என்று

இவற்றைத் த்ரவ்யங்களாயும்
இவை தான் பிரகிருதி ஸ்வ ரூபமாகவும் கொள்ளுகிற சாங்க்ய மதம் நிரசமாயிற்று-

இந்த மத நிராகரண அர்த்தமாக விறே ஆளவந்தார்
குணா பிரதானம் (ஸ்தோத்ர ரத்னம் -17-குணங்களும் பிரக்ருதியும் )-என்று பிரித்து அருளிச் செய்தது

பிரக்ருத அவஸ்தையில் அனுத் பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
அதாவது
சாம்யா பன்னங்களாய் இருக்கையாலே பிரகிருதி அவஸ்தையில் இவற்றின் யுடைய ஸ்வரூப விபாகம் தோற்றாது –
வைஷம்யா பத்தியாலே விக்ருத அவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றி இருக்கும் என்கை –

ஸத்வ ரஜஸ தமாமசி த்ரயோ குணா பிரக்ருதேஸ் ஸ்வ ரூப அனுப பந்திநஸ் ஸ்வ பாவ விசேஷா பிரகாசாதி
கார்யைக நிருபணீயா பிரக்ருத அவஸ்தாயம் அனுத் பூதாஸ்
தத் விகாரேஷூ மஹதாதி ஷூத் பூதா – (ஸ்ரீ கீதா பாஷ்யம் –14-5 )
(சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை பிரகிருதியின் ஸ்வரூபத்தை அண்டி உள்ளன –
இவற்றின் ஸ்வ பாவத்தில் உள்ள சிறப்புக்கள் அனைத்து காரியத்தில் மட்டுமே நிச்சயிக்கத் தக்கவையாக –
ப்ரக்ருதி என்ற நிலையில் வெளிப்படாமல் பிரகிருதியின் மாற்றங்களாகிய
மஹத் முதலானவற்றின் மூலம் வெளிப்படுகின்றன -)என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –

————————————————————————–

சூர்ணிகை -93-

விகார தசையில் இவை தான் கார்யைக நிரூபணீயங்கள் ஆகையாலே
கார்ய கதன முகத்தாலே இவற்றினுடைய ஸ்வரூபங்களைத் தர்சிப்பிக்கிறார் –

சத்வம்
ஜ்ஞான
ஸூகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும் –

அதாவது
சத்வ குணம் நிர்மலம் ஆகையாலே
ஜ்ஞான ஸூகாவரணம் இன்றிக்கே
அவற்றுக்கு ஜநகமுமாய் 
அவற்றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும் படி
அவை இரண்டிலும் சங்கத்தை யுண்டாக்கும் -என்கை

தத்ர சத்வம் நிர் மலத்வாத் பிரகாசக மநாமயம் ஸூக சங்கேன பத்நாதி ஜ்ஞான சங்கேன சாநக (ஸ்ரீ கீதை -14-6 )
( அந்த மூன்று குணங்களில் சத்வமான தூய்மை யானதாக உள்ளதால் ஒளிர்ந்தபடி இருக்கிறது –
மாற்றங்கள் அடையாதது -ஆனால் அது இன்பத்துடன் கொண்ட சம்பந்தம் மற்றும்
ஞானத்துடன் கொண்ட சம்பந்தம் காரணமாக கட்டுப்படும்படிச் செய்கிறது ) -என்னக் கடவது இறே –

———————————————————————

சூர்ணிகை -94-

ரஜஸ்ஸூ
ராக த்ருஷணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும் –

அதாவது
ரஜோ ராகாத்மகம் விததி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் தந் நிபத நாதி கௌந் தேய கர்ம சங்கேந தேஹி நாம் -(ஸ்ரீ கீதை -14-7 )
(விருப்பம் என்பதே வடிவமாக உள்ள ரஜோ குணமாவது கர்மம் மற்றும் பற்றுதல் ஏற்படக் காரணமாக உள்ளது
இது கர்மங்களிலும் கர்ம பலன்களிலும் உள்ள சம்பந்தம் காரணமாக் கட்டுப்படுத்து கிறது ) என்னக் கடவது இறே

ராகமாவது
யோஷித் புருஷர்களுக்கு அந்யோந்யம் யுண்டான ஸ்பருஹை

த்ருஷணை யாவது
சப்தாதி சர்வ விஷய ஸ்ப்ருஹை

சங்கமாவது –
புத்திர மித்ராதிகள் அளவில் சம்ஸ்லேஷ ஸ்ப்ருஹை

காம சங்கம் ஆவது –
கிரியைகளில் ஸ்ப்ருஹை-

—————————————————————-

சூர்ணிகை -95-

தமஸ்ஸூ
விபரீத ஜ்ஞானத்தையும்
அநவதா நததையும்
ஆலஸ் யத்யையும்
நித்ரையையும்
பிறப்பிக்கும் –

அதாவது
தமஸ்த்வ ஜ்ஞனாஜம் வித்தி மோஹனம் சர்வ தேஹிநாம்
ப்ரமாதா லஸ்ய நித்ராபிஸ் தந்நிபத்நாதி பாரத – (ஸ்ரீ கீதை -14-8 )
(சரீரத்தில் பற்றுதல் கொண்ட அனைவரையும் மயக்க வல்லதான தமஸ்ஸானது அஞ்ஞானத்தால் ஏற்படுவதாகும்
அது ஜீவாத்மாக்களை தேவையற்ற செயல்களில் ஈடுபடுத்தல் சோம்பல் மற்றும் உறக்கம்
முதலியவற்றால் காட்டுகிறது ) என்னக் கடவது இறே

விபரீத ஞானம் ஆவது –
வஸ்து யாதாத்ம்ய விபரீத விஷயமான ஜ்ஞானம்

அநவதாநமாவது –
செய்யுமது ஒன்றில் குறிக்கோள் இல்லாமை

ஆலஸ்யமாவது –
ஒரு கார்யத்திலும் ஆரம்பம் அற்று இருக்கும் சொப்பம்

நித்ரையாவது –
புருஷனுக்கு இந்திரிய ப்ரவர்த்தன ஸ்ராந்தி அடியாக வருகிற சர்வ இந்த்ரிய ப்ரவர்த்தநோபரதி-

———————————————————————————————

சூர்ணிகை -96-

இனி இக் குணங்களை உடைய சம தசையிலும்
விஷம தசையிலும்
பிரக்ருதியினுடைய விகாரங்கள் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

இவை சமங்களான போது
விகாரங்கள் சமங்களுமாய்
அஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும்

விஷமங்கள் ஆன போது
விகாரங்கள் விஷமங்களுமாய்
ஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும் –

அதாவது
இக் குணங்கள் பரஸ்பர உத்ரேகமாதல்
க்ருத்ஸ்ன உத்ரேகம் ஆதல் இன்றிக்கே சாம்யா பன்னங்களாய் இருந்த போது
பிரக்ருதியினுடைய விகாரங்கள்
நாம ரூப விசேஷ ராஹித்யத்தாலே -தன்னில் -சமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிக்கப் போகாத படி ஸ்பஷ்டங்களும் அன்றிக்கே இருக்கும்

இக் குணங்கள் உத்ரேகித்து விஷமங்கள் ஆன போது பிரக்ருதியினுடைய
விகாரங்களும் நாம ரூப விசேஷ சாஹித்யத்தாலே
தன்னில் விஷமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிகலாம் படி ஸ்பஷ்டங்களாய் இருக்கும் என்கை-

பிரதேச பேதத்தாலும்
கால பேதத்தாலும் -என்று கீழ்ச் சொன்னதுக்கும் (சூர்ணிகை-85)
இந்த குண சாம்ய வைஷமயங்கள் இறே ஹேது
அது இங்கே விசதமாயிற்று –

—————————————————————————-

சூர்ணிகை -97-

இந்த குண வைஷம்ய பிரயுக்தமான விஷம விகாரங்களில் பிரதம விகாரம் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

விஷம விகாரங்களில்
பிரதம விகாரம்
மகான் –

அதாவது
குண சாம்யாத் ததஸ் தஸ்மாத் ஷேத்ரஞ்ஞா திஷ்டிதாந் முநே குண வயஞ்ஜன சம்பூதி
சர்க காலே த்விஜோத்தம (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-36)
(ஸ்ருஷ்டியின் போது சம நிலையில் உள்ள மூன்று குணங்களும் ஷேத்ரஞ்ஞன் என்பதான ஆத்மாவால்
உட் புகப்பட்டு ப்ரக்ருதியில் இருந்து குணங்கள் வளருவதற்குக் காரணமாக உள்ள
மஹான் ஏற்படுகிறது –என்னக் கடவது இறே

அதாவது –
குணா சாம்யத்தை யுடைத்தாய்
ஷேத்ரஞ்ஞனான பக்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும்
வ்யக்த குணோந் மேஷ ஹேதுவாகையாலே குணா வ்யஞ்ஞனம் என்று பேரான
மகத் தத்வம் உத் பந்நமாம் -என்றபடி —

——————————————————————

சூர்ணிகை -98-

இதனுடைய ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

இது சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜனகமாய்
இருக்கும் –

அதாவது
இந்த மஹத் தத்வம்
சாத்விகோ ராஜஸச் சைவ தாமஸச்ச த்ரிதா மகான்(ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-2-36 )
(மகத்தானது சாத்வீகம் ராஜஸம் மற்றும் தாமஸம் என்று மூன்று வகையாகும் ) -என்று
பிரகாச பிரவ்ருத்தி மோஹ உன்மயமான சத்வ ரஜஸ் தமோ ரூப குண அன்வயத்தாலே
சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரி விதமாய்
மகான் வை புத்தி லஷண (மஹத்தானது புத்தியை லக்ஷணமாகக் கொண்டது )-என்று
புத்தி லஷணம் ஆகையாலே அத்யாவசாய ஜனகமாய் இருக்கும் -என்கை-

அதில் சாத்விக புத்தி யாவது
பிரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே பந்தம் மோஷம் ச யா வேத்தி
புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ (ஸ்ரீ கீதை -18-30 )
(ஸ்வர்க்கம் முதலானவற்றை அடைவதில் முயற்சி மற்றும் மோக்ஷ சாதனங்களான கர்மம் போன்றவற்றை அடைதல் –
எவை செய்யத் தக்கவை மற்றும் செய்யத் தகாதவை என்பதை அறிதல்
சாஸ்திரங்களில் கூறப்பட்டவற்றை மீறுதலால் அச்சம் மற்றும் அச்சம் இன்மை
சம்சாரம் மற்றும் மோக்ஷம் போன்றவற்றைக் குறித்து அறிதல் ஆகியவற்றை
எந்த ஒரு புத்தி அறிகிறதோ அந்த புத்தியானது சாத்வீகம் ஆகும் )
என்று பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் அடையவும்
கார்யாகார்யங்களினுடையவும்
பயாபயங்களினுடையவும்
பந்த மோஷங்களினுடையவும்
யதாவத் யவசாயம் என்றும் –

ராஜச புத்தி யாவது –
யயா தர்ம மதர்மம் ச கார்யம் ச கார்யமேவ ச அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் ச பார்த்த ராஜசீ (ஸ்ரீ கீதை -18-31)
(எந்த ஒரு புத்தியால் தர்மம் மற்றும் அதர்மம் -செய்யத் தக்கவை மற்றும் செய்யத் தகாதவை ஆகியவற்றைக்
குறித்து உள்ளது உள்ளபடி அல்லாமல் அறிகிறானோ அந்தப் புத்தியானது ராஜஸம் ஆகிறது )-என்று
தர்ம அதர்மங்களையும்
கார்யாகார்யங்களையும்
அந்யதாவாக அறுதி யிடுகை என்றும்

தாமச புத்தியாவது
அதர்மம் தர்மம் இதி யா மந்யதே தமசா வ்ருதா சர்வார்த்தாந் விபரீதாம்ச ச புத்திஸ் சா பார்த்த தாமசீ (ஸ்ரீ கீதை -18-32)
(எந்த ஒரு புத்தியால் அதர்மத்தைத் தர்மமாகவும் அனைத்துப் பொருள்களின் தன்மையை
மாறாக அறிகிறானோ அது தாமஸ புத்தி ஆகிறது )-என்று
அதர்மத்தை தர்மமாகவும்
தர்மத்தை அதர்மமாகவும்
இப்படி சர்வார்த்தங்களையும் விபரீதமாகவும் நிச்சயிக்கை என்றும்
பகவான் தானே கீதோபநிஷத்திலே அருளிச் செய்தான் இறே –

ஆக
பிரக்ருதியினுடைய விஷம விகாரங்களில் பிரதம விகாரம் இன்னது என்றும்
அதினுடைய ஸ்வரூபம் இருக்கும் படியையும்
அதனுடைய க்ருத்யமும்
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————

சூர்ணிகை -99-

இனி மற்று யுண்டான விகாரங்களும் க்ரமத்திலே சொல்லப் படுகிறது –

இதில் நின்றும்
வைகார்யம்
தைஜசம்
பூதாதி என்று
த்ரிவிதமான அஹங்காரம்
பிறக்கும் –

அதாவது
இந்த மஹானில் நின்றும்
வைகாரிகஸ் தைஜ சச்ச பூதாதிஸ் சைவ தாமச த்ரிவிதயோம் அஹங்காரோ
மஹத் தத்வாத ஜாயதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-37 )
(வைகாரிகமானது சாத்விக அஹங்காரம் ராஜஸ அஹங்காரம் மற்றும் தாமஸ அஹங்காரம் -என
மூன்று விதமாக உள்ளன -இவை மஹத் தத்துவத்தில் இருந்து வெளிப்படுகின்றன ) -என்கிறபடியே
சாத்விக ராஜச தாமச ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும்
தைஜசம் என்றும்
பூதாதி என்றும்
த்ரிவிதமான அஹங்காரமும் பிறக்கும் -என்கை

இத்தால்
த்ரிகுணாதமிகையன மூல பிரக்ருதியில் நின்றும் பிறந்ததாகையாலே
மஹானும் திரி குணமாய் இருக்கும் -என்கை –

அப்படியே
த்ரி குணாத் மகமான மஹானில் நின்றும் பிறந்தது ஆகையாலே
அஹங்காரமும் த்ரி குணமாய் இருக்கும் என்கை

—————————————————————-

சூர்ணிகை -100-

அஹங்காரம்
அபிமான
ஹேதுவாய்
இருக்கும் –

அதாவது தேஹாத்மா அபிமாநாதிகளை ஜனிப்பிக்கை
இத்தால்
இதனுடைய க்ருத்யம் சொல்லப்பட்டது –

—————————————————————–

சூர்ணிகை -101-

இதில் வைகாரிகத்தில் நின்றும்
ஸ்ரோத்ர
த்வக்
சஷூர்
ஜிஹ்வா
க்ராணங்கள்-
என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்

வாக்
பாணி
பாத
பாயு
உபஸ்தங்கள்
என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்

மனஸ்ஸூம் ஆகிற
பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் –

அதாவது –
இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில்
வைகாரிகமாவது சாத்விக அஹங்காரம் ஆகையாலே
இதில் நின்றும்
சாத்விக கார்யமான லகுத்வ பிரகாசத்வங்களை யுடைத்தான இந்திரியங்கள்
பதினொன்றும் பிறக்கும் என்கை –

வைகாரிகத்தில் நின்றும் ஏகாதச இந்த்ரியங்களும் பிறக்கும் என்று சொல்லி விடாதே
இப்படி அருளிச் செய்தது
இவற்றினுடைய கார்ய பேதத்தையும் சம்ஞ்ஞா பேதத்தையும் ஒழிய
இவற்றின் யுடைய ஸ்வரூப பேதமும் வ்யவஹார பேதமும்
தோற்றாது என்று
மனஸ்ஸூ க்கு கார்யம் உபய சஹ காரித்வம்
அது தான் இவ்விடத்தில் சொல்லாது ஒழிந்தது மேலே இவை தன்னை விஸ்தரேண்
சொல்லுகிற இடத்தில் சொல்லுகிறோம் என்று –
இந்த்ரியங்கள் சாத்விக அஹங்கார கார்யம் என்று அருளிச் செய்கையாலே
இவற்றை ராஜச அஹங்கார கார்யம் என்கிற பஷம் பிரதிஷிப்தம்-

தைஜசா நீந்த்ரியாண் யாஹூர் தேவா வைகாரிகா தச ஏகாதசம்
மனஸ் சாத்ர தேவா வைகாரி காஸ் ஸ்ம்ருதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-47 )
(இந்திரியங்கள் அனைத்தும் தைஜஸம் -ஒளி -எனப்படும் -பத்து இந்திரியங்களும் வைகாரிகா எனப்படும் –
மனம் பதினொன்றதாக ஆகும் -இவை தேவதைகளால் புகப்பட்டதால் தேவ என்னும் சப்தத்தால் கூறத்தக்கதாக ) -என்றும்

அக்னிர் வாக் பூத்வா முகம் பிராவிசத் வாயு க்ரானோ பூத்வா நாசிகே ப்ராவிசத் ஆதித்யச்
சஷூர் பூத்வா அஷிணீ ப்ராவிசத் திசஸ் ஸ்ரோத்ரம் பூத்வா கர்னௌவ் பிராவிசத் ஔஷதி
வனஸ்பதயோ லோமானி பூத்வா த்வசம் ப்ராவிசத் சந்தரமா மனோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத்
ம்ருத யுர பானோ பூத்வா நாபிம் ப்ராவிசத் ஆபோரேதோ பூத்வா சிஸ்நம் ப்ராவிசத் (ஐத்ரேய உபநிஷத் -2-1-4 )

(அக்னி வாக்காக மாறி முகத்தை அடைந்தான் -வாயு முகரும் இந்த்ரியமாக மாறி மூக்கை அடைந்தான் –
ஸூர்யன் பார்வையாக மாறி கண்ணை அடைந்தான்
திசையின் அபிமான தேவதையானவன் கேட்க்கும் இந்த்ரியமாக மாறி செவியை அடைந்தான் –
செடிகள் மற்றும் கொடிகள் தங்களுடைய அபிமான தேவதைகளாக மாறி மரங்களும் முடியும் என்றாகி
தொடு இந்திரியங்களை அடைந்து நின்றன -சந்திரன் மனமாக மாறி இதயத்தை அடைந்தான்
யமன் அபான வாயுவாக மாறி நாபியை அடைந்தான் –
நீரானது ரேதஸ்ஸாக மாறி மர்மக் குறியை அடைந்தது – ) -என்கிறபடியே

தேவ அதிஷ்டிதங்களாலே தேவ சப்த வாச்யங்களான இந்த்ரியங்கள் பதினொன்றும்
ராஜச அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
சாத்விக அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
என்று சொல்லி
அதில்
சாத்விக அஹங்கார கார்யம் என்கிறதே ஸ்வ பஷமாக ஸ்ரீ பராசர பகவான் நிச்சயிக்கையாலே
இவருக்கு இப்படி அருளிச் செய்யக் குறை இல்லை-

இந்த்ரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வியஷ்டி விஷயம் அன்று –
சமஷ்டி விஷயம்

தேஷாந் த்வ வயவான ஸூஷ்மான் ஷண்ணா மப்யமி தௌஜசாம் சந்நிவேஸ்யாத்மா
மாத்ராஸூ சர்வ பூதாமி நிர்மமே-(மநு ஸ்ம்ருதி -1-16 )
(மிகுந்த தேஜஸ் கொண்ட ஆறு இந்த்ரியங்களைக் காட்டிலும் ஸூஷ்மமான தன் மாத்திரைகளில்
தனது மாற்றங்களைச் சேர்த்து அனைத்து பூதங்களையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டி செய்தான் )என்று
அணுக்கள் ஆகையாலே ஸூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்ம மாத்ரைகளிலே
பிரவேசிப்பித்து
சர்வ பூதங்களையும் ஈஸ்வரன் சிருஷ்டித்தான் என்று மனு வசனம் யுண்டாகையாலே

இதில் ஸூஷ்ம -என்கையாலே
அணவச ச (2-4-6 -இந்திரியங்களும் அணு அளவே ஆகும் )-என்கிற ஸூத்திர மரியாதையாலே
இந்த்ரியங்கள் அணு வென்றும்

அவயவான் -என்கையாலே
இந்திரியங்கள் தோறும் வ்யக்தி பாஹூள்யம் யுண்டு என்றும்

ஆத்மா மாத்திரைகளில் கூட்டினான் என்கையாலே
அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத் சம்சாரம் அனுவர்த்திக்கும் என்றும்

சரீரம் யத் அவாப்நோதி யச்சாப் யுத் க்ரமா தீஸ்வர க்ருஹீத வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – (ஸ்ரீ கீதை -15-8 )
(காற்றானது எவ்விதம் மலர்களில் உள்ள நறு மணத்தைக் கவர்ந்து செல்லுமோ அது போன்று
உயிர் பிரிந்த பின்பு ஜீவன் தன்னுடன் இந்திரியங்களை அனைத்தையும் எடுத்துச் செல்கிறான் )என்கிறபடி
சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போது
இந்த்ரியங்களை க்ரஹித்துக் கொண்டு போம் என்று தோற்றுகிறது-

ஷண்ணாம் என்றும்
மனஷ் ஷஷ்ட்டாநி -என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை
இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே-

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-