தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -119-128-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -119-

உத்தேச க்ரமத்திலே –
சுத்த சத்வ –
மிஸ்ர சத்வங்களின் -யுடைய
ஸ்வரூபாதிகளைத் தெளிய அருளிச் செய்தார் கீழ் –

இனி
சத்வ சூன்யமாகிறது ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சத்வ
ஸூன்யமாவது
காலம் –

அதாவது
சத்வ குணம் ரஜஸ் தமஸ் குணங்களுக்கும் உப லஷணமாய்
சத்வ ஸூன்யம் என்றது
சத்வாதி குண த்ரய ஸூன்யம் -என்றது ஆயிற்று

இத்தால் ‘
கேவல சத்வமாயும்
குண த்ரய ஆச்ரமாயும்
இருக்கிற அசித் த்வயத்தையும் பற்ற
இது வ்யாவ்ருத்த ஸ்வரூபமாய் இருக்கும் -என்கை –

——————————————————————

சூர்ணிகை -120-

இதனுடைய பிரகாரம் ஏது என்னும் ஆகாஙஷையிலே சொல்லப் படுகிறது மேல் –

இது பிரகிருதி
பிராக்ருதங்களின் யுடைய
பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நித்யமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
சரீர பூதமாய்
இருக்கும் –

அதாவது –
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-
பிரகிருதி என்கிறது அவ்யக்தத்தை
ப்ராக்ருதம் என்கிறது வ்யக்தத்தை

பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு கால தத்வம் ஹேதுவாகை யாவது –
இவற்றை ஸ்வ சங்கல்பாதிகளாலே பரிணப்பிக்கிற சர்வேஸ்வரன்
காலத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்களைப் பார்த்து கொண்டு இருந்து
அவ்வவ காலங்கள் வந்தவாறே இவற்றை நிர்வஹிக்கையாலே
இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு இது அவஸ்யம் அபேஷிதமாய் இருக்கை-

பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிசயாத் மேச்சாயா ஹரி
ஷோபயாமாச ஸம் ப்ராப்தே சர்வ காலே வ்யயாவதய யௌ–(ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-2-35- )

ஸ்ருஷ்டி காலம் வந்தவுடன் மாற்றம் அடைந்தும் மாற்றம் அடையாமலும் இருந்துள்ள
ப்ரக்ருதி மற்றும் புருஷன் என்னும் ஆத்மா ஆகியவற்றில்
ஸ்ரீ ஹரி உட் புகுந்து தனது ஸங்கல்பத்தால் கலக்கினான் என்றும்

காலே ஸம்சதி யோக்யதாம் சிதசிதோரந் யோந்ய மாலிங்கதோ
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சீ கரணீ ஸ்வாந்த
ப்ரவ்ருத்ததீந்த்ரியை அண்ட நாவரணைஸ் சஹஸ்ரம் அகரோத் தாந் பூர்ப்புவஸ் ஸ்வர்வத
ஸ்ரீ ரெங்கேஸ்வர தேவி தே விக்ருதய ஸங்கல்ப மாந ப்ரிய -(ஸ்ரீ குண ரத்ன கோசம் -19-) –

ஸ்ரீ ரெங்கநாதனின் நாயகியே தாயே பிரளயம் முடிந்த பின்னர் பலவகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஓன்று வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன
அப்போது மீண்டும் ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கும் காலம் வந்தது – உனது பிரியமானவனான அழகிய மணவாளன்
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான் எதற்கு – உன்னை மகிழ்விக்கவே அன்றோ
அப்போது அவன் பஞ்ச பூதங்கள் அஹங்காரம் மஹத் ஞான இந்திரியங்கள் ஐந்து மனம் கர்ம இந்த்ரியங்கள்
ஐந்து ஆகியவற்றைப் படைத்தான் இவற்றுடன் ஏழு சுற்றுகளை படைத்தான்
அதன் பின்னர் பூ லோகம் புவர் லோகம் ஸ்வர்க்க லோகம் ஆகியவற்றைப் படைத்தான்
மேலும் பல அண்டங்களையும் படைத்தான் -என்கிறபடியே

ஜகத் சிருஷ்டி பண்ணுகிற போது
அக் காலம் வரும் அளவும் பார்த்துக் கொண்டு இருந்து இறே சிருஷ்டித்தது
இது தான் ஸ்திதி யாதிகளுக்கும் ஒக்கும் இறே

இப்படி கால பிரதானமாக சர்வேஸ்வரன் நிர்வஹித்து அருளுகையாலே
இவ் விபூதியில் சகல பதார்த்தமும் கால க்ருத பரிணாமமாய் இருக்கும்

இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு காலம் ஹேது என்னும் இடம்
இதனுடைய அந்வய வ்யதிரேகங்களாலே லௌகிக பதார்த்தங்களிலே காணலாம் இறே

ஆகையால் காலத்தின் யுடைய பிரகிருதி பராக்ருத பரிமாண ஹேதுத்வம்
ஆகமத்தாலும் பிரத்யஷத்தாலும் சித்தம் –

அநந்தரம்
கீழ் சொன்னதுக்கு உபயோகியான இதன் பரிணாம விசேஷத்தைச் சொல்லுகிறது –
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்-

காஷ்ட்டடா பஞ்ச தச க்யாதா நிமேஷா முனி சத்தம காஷ்டா த்ரிம் சத் கலா த்ரிம் சத் ‘
கலா மௌ ஹூர்த்தி கோ விதி தாவத் சங்க்யைர் அஹோராத்ரம்
முஹூர்த்தைர் மானுஷம் ஸ்ம்ருதம் அஹோராத்ராணி தவாந்தி மாச பஷ த்வ யாத்மாக
தைஷ் ஷட் பிரிய நம் வர்ஷம் த்வே யனே
தஷிண உத்தர அயனம் தஷிணம் ராத்ரி தேவானாம் உத்தரம் தினம் திவ்யைர்
வர்ஷ சஹஸ்ரைஸ் து க்ருத த்ரேதாதி சம்ஜ்ஜிதம் சதுர்யுகம்
த்வாதச பிஸ் தத் விபாகம் நிபோதமே சத்வாரி த்ரீணி த்வேசைகம் க்ருதா திஷூ யதா க்ரமம்
திவ் யாப்தாநாம் சஹஸ்ராணி யுகேஷ் வாஹூ புராவித
தத் ப்ரமாணைஸ் சதைஸ் சந்த்யா பூர்வா தத்ராபி தீயதே
சந்த்யாம் சகச்ச தத் துல்யோ யுகஸ்யா நந்தரோ ஹி ச
சந்த்யா சந்த்யா மசயோர் அந்தர்யா காலோ முனி சத்தம யுகாக் யஸ்
ச து விஜ்ஞ்ஞேய க்ருத த்ரேதாநநி தி சம்ஜ்ஞித -என்று தொடங்கி-

ஏவந்து ப்ரஹ்மணோ வர்ஷமேவம் வர்ஷ சதந்து தத் சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத் மன –
என்னுமது அளவாக காலத்தின் யுடைய பரிணாம விசேஷம்
ஸ்ரீ பராசர பகவானாலே கதிதமாயிற்று —

(முனிவர் களில் சிறந்தவரே
பதினைந்து நிமேஷங்கள் கொண்டது ஒரு காஷ்டை ஆகும் -முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை ஆகும்
முப்பது கலைகள் கொண்டது ஒரு முஹூர்த்தம் ஆகும் –
இப்படிப்பட்ட முஹூர்த்தங்கள் மூலம் பகல் இரவு என்பதாகிய ஒரு மனித நாள் உள்ளது
முப்பது நாள் கொண்டதாக இரண்டு பக்ஷங்கள் கொண்ட ஒரு மாதம் உள்ளது
ஆறு மாதங்கள் கொண்ட இரண்டு அயனங்கள் உடைய ஒரு வருடம்
தேவர்களுக்கு உத்தராயணம் என்பது பகல் -தக்ஷிணாயணம் என்பது இரவு -இரண்டும் சேர்ந்து ஒரு நாள்
12000 தேவ வருடம் -க்ருத-4000- த்ரேதா-3000- த்வாபர–2000- கலி -1000-சதுர் யுகம்-
முற் சந்தி -பிற் சந்தி ஒவ்வொன்றும் -400 க்ருத–300-த்ரேதா-200 த்வாபர-100 கலி —
என்று தொடங்கி
இப்படியாக உள்ள நான் முகன் ஒரு வருடம் -அவன் ஆயுள் காலம் இப்படி 100 வருடம் என்று
காலத்தின் மாற்றங்கள் சிறப்பானது என்று ஸ்ரீ பராசர பகவானால் கூறப்பட்டது )

இது தன்னை நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
நிமிஷம் பதினைந்து கொண்டது காஷ்டை –
காஷ்டை முப்பது கொண்டது கலை –
கலை முப்பது கொண்டது முஹூர்த்தம்
முஹூர்த்தம் முப்பது கொண்டச்து திவசம்
திவசம் முப்பது கொண்டது பஷம்
பஷ த்வய ரூபமான மாசம்
மாசம் இரண்டு கொண்டது ருது
ருது மூன்று கொண்டது அயனம்
அயனம் இரண்டு கொண்டது சம்வத்சரம்
இப்படி மானுஷ சம்வத்சரம் 360 கொண்டது ஒரு தேவ சம்வத்சரம்
தேவ சம்வத்சரம் 12000 கொண்டது சதுர யுகம்

அதில்
கிருத யுகம் -4000
த்ரேதை -3000
த்வாபரம் -2000
கலியுகம் -1000

கிருத யுகத்துக்கு பூர்வ சந்த்யை-400-அபர சந்த்யை -400
த்ரேதைக்கு -பூர்வ சந்த்யை-300-அபர சந்த்யை -300
த்வாபரத்துக்கு பூர்வ சந்த்யை-200-அபர சந்த்யை -200
கலி யுகத்துக்கு பூர்வ சந்த்யை-100-அபர சந்த்யை -100
இப்படி 71 சென்ற சதுர யுகம் ஒரு மன்வந்தரம்
14 மன்வந்தரம் 1000 சதுர யுகம்

இது ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல்
ராத்ரியும் இத்தோடு சமமாய் இருக்கும்
இப்படி அஹோராதரங்களும் மாச சம்வத்சரங்களுமாய் பெருக்கி
சதா நதமாக பரிகணிதமான ப்ரஹ்ம ஆயுஸ்ஸூக்கு பரம் என்று பேராம் -என்று
ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார்

ஆக
காலத்தின் யுடைய கலா காஷ்டாதி ரூப பரிணாம பிரகாரம் சொல்லப் பட்டது-

நித்யமாய் –
இவ்விடத்திலே நித்யத்வம் ஆவது
அநாதிர் பகவான் -காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே–(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20)-
என்கிறபடியே–ஆதி அந்த ரஹிதமாய் இருக்கை –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கை-
அதாவது –
நிகில ஜகத் உதய விபவ லய லீலனான சர்வேஸ்வரனுக்கு
தத் தத் லீலா உபகரணம் ஆகை
பிரகிருதி புருஷ காலங்கள் மூன்றும் லீலா உபகரணமாய் இறே இருப்பது –

அதில் பிரகிருதி புருஷர்கள் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கர்மீபவித்து லீலா உபகரணம் ஆவார்கள் –
இது சஹகாரித்வேன லீலா உபகரணமாய் இருக்கும்

ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நிர்வஹிக்கும் இடத்தில்
சத்ய சங்கல்பனான தான் அடியில் பண்ணி வைத்த கால நியமம் தப்பாத படி
அவ் வவ காலா கமனம் பார்த்து இருந்தே நிர்வஹிக்கையாலே
இது தன்னை நிமிஷ காஷ்ட்டாதி ரூபேண பரிணமிப்பிக்கையாலே
இது தான் சிருஷ்டி விஷயமாமுமாய் இறே இருப்பது

ஆக இப்படிகளாலே ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கும்
இத்தை க்ரீடா பரிகாரம் என்றே சொல்லுகையாலே
கால க்ருத பரிணாமமே யாய்ச் செல்லுகிற
லீலா விபூதியிலே இதுக்கு விநியோகம்
ந காலச தாத்ரா வை பிரபு-என்கிற போக விபூதியில்
இது கொண்டு அபேஷை இல்லை என்றதாயிற்று-

அநந்தரம்-
ஏவம் பூதமான கால தத்வம்
ஈஸ்வரனுக்கு அபருதக் சித்த விசேஷணமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
சரீர பூதமாய் இருக்கும் -என்று –

பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷ பரமம் த்விஜ வ்யக்த அவ்யக்தே
ததை வாந்யே ரூபே காலஸ் ததா பரம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-17 ) –

மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் சரீரமாக ஆத்மா உள்ளான் -ப்ரக்ருதியும் சரீரமாக உள்ளது –
காலமும் சரீரமாக உள்ளது -என்றும்

பிரதான புருஷ அவ்யக்த காலாஸ்து ப்ர விபாகச ரூபாணி ஸ்திதி
சர்காந்த வ்யக்தி சத்பாவ ஹேதவ–(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-19 )

ப்ரதானம் புருஷனாகிய ஆத்மா வ்யக்தம் காலம் போன்ற அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரங்கள்
இவை மாறு பாடுகளை அடை விக்கும் தன்மை -இன்பம் அளிக்க வல்ல தன்மை –
இருப்பு தோற்றம் அழிவு வெளிப்படும் தன்மை ஆகிய வற்றுக்குக் காரணமாக உள்ளன – என்றும்

விஷ்ணோ ஸ்வரூபாத் பர தோதிதே த்வே ரூபே பிரதானம் புருஷச்ச விப்ர தஸ்யைவ
தேந் யேந த்ருதே வியுக்தே ரூபாந்தரம் தத் த்விஜ கால சம்ஜ்ஞம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-26 )-

அனைத்தையும் விட உயர்ந்த மஹா விஷ்ணுவின் திரு மேனியில் இருந்து
ப்ரதானம் மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் தோன்றின
இவை ஸ்ருஷ்டிக்கு ஏற்ற படி உள்ளது போன்று அவனுடைய சரீரத்தில் உள்ள
மற்ற ஓன்று காலம் என்பது ஆகும் என்றும் சொல்லக் கடவது இறே

ஒரு சேதனனோடு த்ரவ்யத்துக்கு யுண்டான
பிருதக் சித்த யனர்ஹ ஆதார ஆதேய பாவமும்
நியந்த்ரு நியாமய பாவமும் சேஷ சேஷி பாவமும்
ஓர் ஒன்றே சரீர லஷணமாய் இறே இருப்பது

கால சம்ஜ்ஞக அசித் த்ரவ்யத்துக்கு -ஏதத் சம்பந்த த்ரவ்யமும்
ஈஸ்வரனோடு யுண்டாகையாலே
இது அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றதாயிற்று

இப்படி பிரக்ருதியாதி பரிணாம சஹகாரியான காலம் ஈஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கும் என்கையாலே
சஹகாரி காரணமும் ஈஸ்வரனே என்னுமதுக்கு விரோதம் இல்லை –

ஆக
சத்வ ஸூன்யமாகிறது இன்னது என்றும்
அது செய்யும் கார்யமும்
அதுக்கு உறுப்பான அதனுடைய பரிணாமமும்
அதனுடைய அநாதி நிதனத்வமும்
அது தான் ஈஸ்வரனுக்கு இன்னத்துக்கு பரிகரமாய் இருக்கும் என்றும்
அது தான் அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றும்
சொல்லி நின்றது –

—————————————————-

சூர்ணிகை -121-

த்ரிவித அசித்தையும் அருளிச் செய்கிற விடத்தில்
அவனுக்கு போக உபகரணமான கௌரவத்தைப் பற்ற
சுத்த சத்வத்தை பிரதமத்தில் அருளிச் செய்தார்

அநந்தரம்
அவனுடைய லீலைக்கு பிரதான உபகரணமாய்க் கொண்டு
பிரதான சப்த வாச்யனான மிச்ர சத்வத்தை அருளிச் செய்தார் –

அநந்தரம்
அந்த பிரதான பரிணாமத்துக்கு சஹகாரியாய்க் கொண்டு
லீலா உபகரணமாய் இருக்கும் சத்வ ஸூன்யத்தை அருளிச் செய்தார் –

இப்படி அசித் த்ரயத்தையும் சொல்லுகிற இடத்தில்
பிரகிருதி ப்ராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-(120)என்று
கால தத்துவத்துக்கு விநியோகம் சொன்னாவோபாதி
பூர்வ அசித் த்வயத்துக்கும் விநியோகம் சொல்லப் பட்டது இல்லை இறே
அத்தை அருளிச் செய்கிறார் மேல் –

மற்றை இரண்டு அசித்தும்
ஈஸ்வரனுக்கும்
ஆத்மாவுக்கும்
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய்
இருக்கும் –

அதாவது
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் என்றது
சேதனர் இறே அசேதனதுக்கு போக்தாக்கள்
சேதனராக உள்ளது ஈஸ்வரனும் ஆத்மாவும் இறே
ஆன பின்பு உபயர்க்கும் போக்யாதிகளாய் இருக்கும் என்றபடி
ஆத்மாவுக்கும் என்ற ஏக வசனம் ஜாதி அபிப்ராயம் ஆகையாலே
த்ரிவித சேதனரையும் சொல்லுகிறது –

இப்படி உபய அசித்தும் உபயர்க்கும் போக்யாதிகளாய் இருந்ததே யாகிலும்
கேவல பகவத் இச்சையாலே தத் போக அர்த்தமாக பரிணமிக்கையாலும்-
அநவரத அபரோஷித ஸ்வ பர ஸ்வரூபரான நித்ய முக்தரில்
திருமகளும் நீயும் (திருவாய் -4-9-10 )-என்கிறபடியே
அம் மிதுனத்தினுடைய போகத்துக்கு கை தொடுமானமாய் இருக்குமது ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலும்
சுத்த சத்வத்தின் யுடைய விநியோகம் ஈஸ்வர பிரதானமாய் இருக்கும்-

அங்கன் இன்றிக்கே
சேதன கர்ம அனுகுணமாக பகவத் சங்கல்ப்பத்தாலே பரிணமிக்கையாலும்
சேதனர் எல்லாரும் தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியைப் பண்ணி
ஸ்வ தந்திர போக்தாக்களாய் இருக்கையாலும்
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் லீலா ரசமே பிரசுரமாய்
போக ரசம் அத்ய அல்பம் ஆகையாலும்
மிச்ர சத்வத்தின் யுடைய விநியோகம் பத்த சேதன பிரதானமாய் இருக்கும் –

————————————————————–

சூர்ணிகை -122-

அந்த விபூதியில் போக்யங்கள் ஆவன அப்ராக்ருதமான சப்தாதிகள்
போக உபகரணங்கள் ஆவன திவ்ய மாலயாதிகளும் சத்ர சாமராதிகளும் கரணங்கள் தானும்
போக ஸ்தானங்கள் ஆவன அப்ராக்ருத ரத்ன மயமான மண்டபம் என்ன மாளிகை என்ன இத்யாதிகளும்

பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய விக்ரஹங்களும்
இப்படி நித்ய விபூதி பிரக்ரியையும் இவ்விடத்திலே அருளிச் செய்ய வேண்டி இருக்க
சங்கோசித்து
லீலா விபூதி பிரக்ரியா மாதரத்தை அருளிச் செய்கிறார் –

போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்
போக உபகரணங்கள் ஆகிறன -சஷூராதி கரணங்கள்
போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –

இது தான் உபய விபூதிக்கும் ஆனாலோ என்னில்
போக உபகரணங்களில் பிரதானங்கள் சொல்லாமையாலும்
போக ஸ்தானங்களில் வைஷமயத்தாலும் சேராது-

இங்கு சேதனருக்கு போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஞானம்
அந்த ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆகையாலே சப்தாதி விஷயங்கள் போக்யங்கள்
அந்த ஜ்ஞானத்துக்கு உபகரணங்கள் ஆகையாலே இந்த்ரியங்கள் போக உபகரணங்கள் –
யாதொரு அதிகரணத்திலே நிற்கிற சேதனனுக்கு அந்த ஜ்ஞானம் பிறக்கிறது அது
போக ஸ்தான சப்தத்துக்கு அர்த்தம் ஆகையாலே
போக ஸ்தானங்கள் என்று லோகங்களையும் தேஹங்களையும் சொல்லுகிறது –
லோக விபாகம் கீழே சொல்லப் பட்டது
சமஸ்த தேஹங்கள் ஆவன ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சரீரங்கள்-

ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் யுண்டான போக்ய போக உபகரணாதிகளையும்
அவதார கந்தமான ஷீரார்ணவ சயனத்திலும்
அவதார விசேஷங்களிலும்
அர்ச்சாவதார விசேஷங்களிலும்
யுண்டான விநியிக்க விசேஷங்களாலே கண்டு கொள்வது –

———————————————————–

சூர்ணிகை -123

அநந்தரம் த்ரிவித அசித்தின் யுடைய பரிணாமங்களை
அருளிச் செய்கிறார் –

இதில் முற்பட்ட அசித்துக்கு
கீழ் எல்லை யுண்டாய்
சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே
இருக்கும்
நடுவில் அசித்துக்கு
சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே
மேல் எல்லை யுண்டாய் இருக்கும்
காலம்
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –

பூர்வ அசித்துக்கு கீழ் எல்லை யுண்டு என்கிறது மிச்ர சத்வ அவதி ஆகையாலே
நடுவில் அசிதுக்கு மேல் எல்லை யுண்டு என்கிறது சுத்த சத்வ அவதி யாகையாலே
காலத்துக்கு அங்கன் ஒரு அவச்சேதம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் என்கிறது

இப்படி சர்வ தரிகமான காலம் தான்
உபய விபூதியிலும் நித்யம் என்று இறே தமக்குத் திரு உள்ளம் –

————————————————————————–

சூர்ணிகை -124-
இங்கன் அன்றிக்கே
இதுக்கு விபூதி பாகத்தை இட்டு ஒரு பேதம் சொல்லுவாரும் யுண்டு
என்கிறார்

காலம் தான்
பரம பதத்தில் நித்யம்
இங்கு அநித்யம்
என்றும் சொல்லுவார்கள் –

இப்படி சொல்லுகைக்கு அடி –
பரம பதத்தில் இதுக்கு உத்பத்தியாதிகள் யுண்டாக சாஸ்திரங்கள் சொல்லாமையாலும்
இந்த விபூதியிலே இதுக்கு உத்பத்தியாதிகள் சொல்லுகையாலும்
வ்யூஹ க்ருதயங்களை சொல்லும் இடத்தில்
கால சிருஷ்டியை அநிருத்த கிருத்யமாக சொல்லா நின்றது இறே

பிரக்ருதியை ஸ்ருஷ்டிக்கை யாவது -மஹதாதி ரூபேண பரிணமிக்கையானால் போலே

காலத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது -நிமிஷ காஷ்டாதி ரூபேண பரிணமிப்பிக்கை

சத்த பரிணாமியான பிரக்ருதிக்கு மஹதாதி ரூபமான ஸ்தூல பரிணாமம் போலே இறே
இதுக்கும் நிமிஷாதி ரூபமான பரிமாணம்

அந்த மஹாதாதியோபாதி நிமேஷாயாதியான இதுவும் விநாசவததாகயாலே
இவ்வளவைக் கொண்டு காலம் இங்கு அநித்யமாய் இருக்கும் என்கிறது

பரமபதத்தில் ஈத்ருச பரணாம விசேஷ பரயுக்தோதபத்யாதி
வ்யவஹார ராஹித்யத்தாலே நித்தியமாய் இருக்கும் என்கிறது –

இப்படி காலத்துக்கு பரிணாமம் கொள்ளாதே
ஏக ரூபத்தைக் கொண்டு இப்படி இருந்துள்ள காலம் தான்
தன்னுடைய நிமிஷம் காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரம் தொடக்கமாக
பரார்த்தம் ஈறாக யுண்டான விசேஷ வ்யவஹாரத்துக்கு ஹேதுவான
நிமேஷோ நமேஷங்கள் ஆதித்ய கதி தொடக்கமான அவச்சேதங்களோடே சம்பந்தித்து இருக்கும் ஆகையாலே
ஷண லவாதி பேத வ்யவஹாரம் யுண்டாகின்றது என்று சொல்லுவதும் ஒரு பஷம் யுண்டு இறே

இது விறே தத்வ த்ரய விவரணத்தில் பெரிய வாச்சான் பிள்ளை பிரதானயேன அருளிச் செய்தது

அந்த பஷத்தில் உபய விபூதியிலும் கால ஸ்வரூபம் ஏக ரூபமாய் இருக்கையாலே
பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்ற இது சொல்லப் போகாது

ஆகையால் இது பரிணாம பஷத்தை அவலம்பித்து சிலர் சொன்னது என்று கொள்ள வேணும்

நம்முடைய தர்சன ஸ்தானங்களிலே இங்கனேயும் சிலர் அருளிச் செய்கையாலே
அத்தையும் தர்சிப்பித்து அருளினார் ஆயிற்று –

———————————————————————–

சூர்ணிகை -125-

சிலர் காலத்தை
இல்லை என்றார்கள் –

காலம் தன்னை இல்லை என்று
பௌத்தாதிகள் சொல்லுகையாலே -சிலர் -என்கிறார்

————————————————————————-

சூர்ணிகை -126-

அத்தை நிராகரிக்கிறார்

பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும்
சித்திக்கையாலே
அது சொல்ல ஒண்ணாது –

பிரத்யஷமாவது
ஸ்தாவர ஜங்கமாத்மகமான சமஸ்த பதார்த்தமும்
கால க்ருத பரிணாம மாகவே காணப் படுகிற இது

ஆகமமாவது
ஸ்ருதியாதிகள் –

கலா முஹூர்த்தா காஷ்டா ச சஹோராத்ராச்ச சர்வச -(தை -2-1-8-) என்றும்
(கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் அனைத்தும் )
மதுச்ச மாதவச்ச வாச நதிகா வருதூ சுகரச்ச சுசிச்ச கரைஷ மாவருதூ-(யஜுஷி-4 )
(சித்ரையும்யும் வைகாசியும் வசந்த ருதுக்கள் -ஆனியும் ஆடியும் க்ரீஷ்ம ருதுக்கள் )என்று
கால பரிணாம விசேஷங்களான -கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் ருது விசேஷங்களை
சொல்லா நின்றது இறே ஸ்ருதி –

கால ஸ்வரூபம் விஷணோச்ச யநம யோகதம தவா நக -இத்யாதியாலே
(ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே-1-3-6-என்று விஷ்ணுவின் கால ஸ்வரூபம் என்னாலே விரிவாகக் கூறப்பட்டது )
இது தான் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே

புராணாந்தரங்களிலும் இதிஹாசாதிகளிலும் இப்படி கண்டு கொள்வது –

இதுக்கு என்னவே நிர்மிதமாய் அத்யய நாதி கால நியமங்களை பிரதிபாதிக்கிற
ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வேதத்துக்கு திருஷ்டியாக சொல்லா நின்றது இறே

அந்த சாஸ்திரம் தன்னிலே இன்ன காலத்திலேயே இன்னது யுண்டாம் என்று சொன்னால்
அது பிரத்யஷிக்கலாய் இரா நின்றது இறே-

ஆகையால்
பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும் இப்படி சித்திக்கையாலே
கால அபாவம் சொல்ல ஒண்ணாது என்கை –

————————————————————-

சூர்ணிகை -127-

பலரும் திக்கு என்று
தனியே ஒரு த்ரவ்யம்
யுண்டு
என்றார்கள் –

வைசேஷாதிகள் பிருதிவ்யாதிகளோ பாதி
திக்கு என்றும் ஒரு த்ரவ்யம் யுண்டு என்று சொல்லுகையாலே
இப்படி அருளிச் செய்கிறார் –

த்ரவ்யாணி ப்ருதிவி அப்ய தேஜோ வாயு ஆகாச கால திக் ஆத்ம மநா மசி நவைவ -(தர்க்க ஸங்க்ரஹம் )-
(த்ரவ்யங்கள் என்பவை -பிருத்வி நீர் அக்னி வாய் ஆகாசம் காலம் திசை ஆத்மா மனம் ஆகிய ஒன்பதும் )என்று
இறே அவர்கள் சொல்லுவது –

பூராபோ ஜ்யோதிரநிலோ நப காலஸ் ததாதிச ஆத்மா மன இதி ப்ராஹுர்
த்ரவ்யாணி நவ தத்வித -என்றான் இறே அந்த மதத்தைச் சார்ந்த ஸ்ரீ வரத ராஜன் –

———————————————————————

சூர்ணிகை -128-

அத்தை நிராகரிக்கிறார் –

பல ஹேதுக்களாலும்
ஆகாசாதிகளிலே
அந்தர் பூதம் ஆகையாலே
அதுவும் சேராது –

அதாவது –
நாலு பேர் நாலு திக்கிலும் நின்றால்
நால்வர்க்கும் நடுவான பிரதேசம்
ஒருவனுக்கு கிழக்காய்-
ஒருவனுக்கு மேற்காய்-
ஒருவனுக்கு வடக்காய் –
ஒருவனுக்கு தெற்காய்
தோற்றா நின்றது இறே

அதுக்கடி
த்ரவ்யம் அன்றிக்கே பிரதியோக அணுகுண கல்பனம் ஆகை

நால்வருக்கு நடுவே இருக்கிற பிருதிவ்யாதிகள் த்ரவ்யம் ஆகையால்
இப்படி விப்ரதிபத்தி விஷயம் ஆகிறது இல்லை இறே

இனித்தான் ஆதித்யன் உதிக்கிற இடம் கிழக்காகவும்
அவன் அஸ்தமிக்கிற இடம் மேற்காகவும் இறே கொள்ளுகிறது –

அது தான் மகா மேருவுக்கு நாலு பார்ஸ்வத்திலும் பேதித்து இறே இருப்பது
ஆகையால் இறே நாலு பார்ஸ்வத்திலும் உள்ளவர்களுக்கு மகா மேரு வடக்காய் இருக்கிறது –

நைவாஸ் தமய மரீக் கஸய நோதயஸ் ஸர்வ தாஸத உதயாஸ் த மாயாக்க்யாய ஹி தர்சன அதர்சனம் ரவே
ஸர்வேஷாம் த்வீப வர்ஷாணாம் மேரு ருத் தரதோ யத –
(எப்போதும் உள்ளதான ஸூர்யனுக்கு உதயம் என்றும் அஸ்தமனம் என்றும் இல்லை
ஸூர்யனைக் காண்பதும் மற்றும் காண இயலாமல் போவதும் மட்டுமே
உதயம் என்றும் அஸ்தமனம் என்றும் என்று காண்கிறார்கள்
அனைத்து த்வீபங்களுக்கும் மேருவானது வடக்கே உள்ளது )-என்று
இது தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் பட்டது-

இப்படி பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளில் அந்தர்பூதமாய்
தனக்கு என ஒரு த்ரவ்ய அவஸ்தை இல்லாமையாலே
திக்கு என்று ஒரு த்ரவ்யம் யுண்டு என்கிற வதுவும் சேராது என்கை –

ஆகாசாதி -என்கிற ஆதி சப்தத்தாலே
பூமியைச் சொல்லுகிறது

இவற்றில் திக்கு அந்தர் பூதம் ஆகையாவது
ஸூர்யனுடைய உதயாதிகளுக்கு ஈடாக
இவற்றுக்கு உள்ளே திக் விபாகத்தை கல்பித்துக் கொள்ளுகிறது-ஒழிய
பிரித்துக் காணலாவது ஒரு வஸ்து இன்றிக்கே இருக்கை

அதுவும் சேராது என்றது
முன்பேயும் ஒரு பஷத்தை நிஷேதிக்கையாலே சமுச்சயம்-

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading