Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தத்வ சேகரம் – விரோதி ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –

February 5, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

இப்புருஷார்த்ததுக்கு ப்ரதிபந்தகம் —
இப்படி பரமாத்மா யாதாம்ய அனுபவத்தாலே நிரதிசய ஆனந்தி யாகைக்கு யோக்யனான ஆத்மா –
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களையும் –
ஸ்வ ஸ்வரூப யாதாம்யத்தையும் அறியாதே -ஸ்வரூப விபரீதங்களாய்-
ஷண ஷரண ஸ்வபாவத்வாதி தர்ம விசிஷ்டங்களான நாநா வித தேஹங்களிலே ஆத்ம புத்தியைப் பண்ணி –

தேஹ அனுபந்திகளாய் பகவதீயங்களாய் இருக்கிற க்ருஹ ஷேத்திர ஆராமாதிகளை ஆத்மீயங்களாகவும்
அத்தை பகவதீ யத்வாகாரத்தை ஒழிய ஸ்வா தந்த்ர்யேண போக்யங்களாகவும் நினைத்து
அவை லபிக்கைக்கு அனுகூலித்தவர்கள் பக்கலிலே ராகத்தையும்
ப்ரதிகூலித்தவர்கள் பக்கலிலே த்வேஷத்தையும் பண்ணி –
அவற்றை லபிக்கைக்கு சாதனங்களான பர ஸ்தோத்ர பர ஹிம்சா தேவதாந்திர பஜனங்களிலே அந்வயித்து
அவற்றால் நாநா வித சரீரங்களைப் பரிக்ரஹித்து
பால்ய யௌவன வார்த்தக்யாத்ய வச்தைகளிலே
ஆத்யாத்மிகாதி தாபத்ர தப்தனாய் -மரண தசையிலே யம கிங்கர பீடிதனாய்
துக்கேன சரீரங்களை விட்டு

யாதநா சரீரங்களிலே பிரவேசித்து ரௌரவாதி நரகங்களிலே நாநா வித துக்கங்களை அனுபவித்து
தூம ராத்ரி அபர பஷ தஷிணாயன பித்ரு லோக ஆகாச சந்திர க்ரமத்தாலே உபரிதன லோகங்களிலே போய்
நாராகி தர்சன நைரந்தர்யத்தாலும் அதிக ஸூக அனுபவத்தாலும் அஸூர ராஷச பீடையாலும் பதன பீதியாலும்
துக்க பஹூளமான ஷூத்ர ஸூகங்களை அனுபவித்து த்யு பர்ஜன்ய ப்ருதிவீ புருஷ யோஷித் ஸ்தானங்களிலே
ஸ்ரத்தா சோம வர்ஷான்ன ரேதோ ரூப அவஸ்தா விசிஷ்டனாய்க் கொண்டு பிரவேசித்து
இப்படி ஜன்ம ஜரா மரண நிரயாதிகளிலே நாநா வித துக்கங்களைச்
சக்ர நேமி க்ரமத்தாலே அனுபவிக்கும் படி பண்ணும் கர்ம சம்பந்தம் –

—————————————————————————

ஜகன் மித்யாத்வ வாதி சங்கர மத உபன்யாசம்
நனு–அந்ருதேன ஹி பிரத்யூடா –என்றும் –
தஸ் மிம்ஸ் சாந்யோமாயா சந்நிருத்த –என்றும் –
மமா மாயா துரத்யயா –என்றும்
வஸ்த் வஸ்தி கிம் –மகீ கடத்வம் –தஸ்மான்ன விஜ்ஞான ம்ருதே அஸ்திகிஞ்சித் –சத்பாவ ஏவம்-என்றும்
ஸ்ருதி இதிஹாச புராணங்களிலே –அந்ருதம் –மாயை –நாஸ்தி -அசத்யம் -இத்யாதி சப்தங்களாலே சொல்லுகையாலே
மித்யா பூதமான அஜ்ஞானம் பந்த ஹேது -பந்தமும் மித்யை என்று சிலர் சொன்னார்கள் –

————————————————————————-

தத் கண்ட நம்
அது அனுபபன்னம் -அதில் பிரமாணம் இல்லாமையாலும் அநேக பிராமண பாதிதம் ஆகையாலும்
அந்ருத-சப்தத்தாலே சொல்லுகிறது –
சாம்சாரிக பலத்துக்கு ஹேதுவான கர்மத்தை –
ருதேதரமந்ருதம்-ருதம் ஆவது கர்ம பலம் -ருதம் பிபந்தௌ-என்கையாலே
இவ்விடத்தில் அந்ருதம் என்கிறது பகவத் ப்ராப்திக்கு எதிரான கர்மத்தை –

ஏதம் பிரம்மா லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா -என்கையாலே –
மாயை என்கிறது பிரகிருதியை —
மாயம் து ப்ரக்ருதிம் வித்யாத் -என்கையாலே -பிரகிருதியை மாயை என்கிறது விசித்திர கார்யங்களைப் பண்ணுகையாலே –

வஸ்த் வஸ்தி கிம் -இத்யாதி ஸ்லோகங்களாலே விநாசித்வத்தைச் சொல்லுகிறது -மித்யாத்வத்தைச் சொல்லுகிறது அன்று
மித்யா பூதமாகில் ஸூக்தி காரஜதம் போலேயும்
ரஜ்ஜூ சர்ப்பம் போலேயும் பாதிதமாக வேணும் –
ம்ருத்தி கேத்யேவ சத்யம் -என்றும் –
சர்வ மேதத்ருதம் மன்யே யந்மாம் வதசி கேசவ -என்றும் –
காலச்ய ஹி ச ம்ருத்யோஸ் ச ஜங்கமஸ் தாவரச்ய ச –ஈசதேபகவா நேகஸ் சத்யமேதத் ப்ரவீமி தே -என்றும்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே –வேதாச்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -இத்யாதி
பிரமாணங்களோடு விரோதிக்கும் –
ஆகையால் பந்தமும் பந்த ஹேதுவும் பரமார்த்தம் –

————————————————————————

ப்ரஹ்ம அஜ்ஞான வாத நிரசனம்
தத்வமஸி-என்றும் –
அயமாத்மா ப்ரஹ்ம -என்றும் -பிரமத்துக்கும் ஜீவனுக்கும் தாதாத்ம்யம் சொல்லுகையாலே
ப்ரஹ்மம் தானே சம்ஹரிக்கிறது என்கிறதும் அசங்கதம்-

ப்ரஹ்மம் நித்ய நிர்தோஷம்-சமஸ்த கல்யாண குணாத்மகம் -ஜீவாத் விலஷணம் -என்று சொல்லுகிற
அபஹத பாபமா –என்றும் –
யஸ் சர்வஜ்ஞ -என்றும் –
ப்ருதகாத்மானம் -என்றும் -இத்யாதி சாஸ்த்ரங்களோடு விரோதிக்கையால்-

தத்வமஸி -இத்யாதி வாக்யங்களில் சரீர சரீரி பாவத்தைச் சொல்லுகிறது
ஆகையால் தச்மிம்ஸ் சான்ய-என்றும் –
தயோர நய பிப்பலம் ஸ்வாத் வத்தி -என்றும் –
ஈச்வரப்ரேரித -என்றும்
சொல்லுகிறபடியே ஜீவன் சம்சரிக்கிறான் –

விரோதி ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தத்வ சேகரம் -புருஷார்த்த ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –

February 5, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————-

இவர்களுக்கு புருஷார்த்தம் -தம் யதா -இத்யாதி -ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்கிறபடியே –
ஸ்வரூப ஆவிர்பாவ பூர்வகமாய்
நித்ய நிர்த்தோஷ நிஸ் ஸீமா நந்தாத்மகமாய் இருக்கிற சவிபூதிக சமஸ்த கல்யாண குணாத்மக
பரமாத்ம யாதாத்ம்ய அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –

நனு -கைங்கர்யம் துக்க ரூபமாக லோகத்திலே காணா நின்றோம் –
சேவா ஸ்வ வ்ருத்திர் வ்யாக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத்-என்று நிஷித்தமாய் இருக்க
இதுவே புருஷார்த்தமாம் படி எங்கனே என்னில் –
லோகத்திலே கைங்கர்யம் எல்லாம் அபுருஷார்த்தம் அன்று –
ப்ரிய தம விஷயத்திலே கைங்கர்யம் புருஷார்த்தமாகக் காண்கையாலே-
ஸ்வ வருத்தி என்று நிஷேதித்தது இதர சேவையை –
இது புருஷார்த்தம் என்கிறவிடம் தர்மி க்ராஹக பிரமாணத்தாலே பாதிதம் –

அது அபுருஷார்த்தம் ஆகைக்கு ஹேது பாபாரப்தத்வம் –
புண்யபாபே விதூய -என்கையாலே இது பாப கார்யம் அன்று —
தன் ஸ்வரூபத்தை யாதொருபடி நினைத்தான் அதுக்கு ஈடாய் இருக்கும் –
இது புருஷார்த்தம் என்னும் இடம் ஸூர நர திர்யகாதி களிலே காணா நின்றோம் –
ஆகையாலே முக்தனும் தன்னை சேஷமாக நினைக்கையாலே
கைங்கர்யமே புருஷார்த்தமாம் -அத்தை ஒழிந்தது அபுருஷார்த்தமாய் இருக்கும் –

————————————–

சார்வாக மத நிரசனம் –
தேஹாதி விலஷணன் ஆகையாலே சப்தாத்யனுபவம் புருஷார்த்தம் அன்று

————————————-

யோகாதி மத நிரசனம்
பரதந்த்ரன் ஆகையாலே ஸ்வ அனுபவ மாத்ரம் புருஷார்த்தம் அன்று

—————————————-

பவ்த்தாதி மத நிரசனம்

ஸ்வரூபம் நித்யமாகையாலே ஸ்வரூப உச்சேதனம் புருஷார்த்தம் அன்று

————————————————

நையாயிக மத நிரசனம்

நித்ய ஜ்ஞானாதி குணகன் ஆகையாலே வைசேஷிக ஜ்ஞானாதி குண விநாசம் புருஷார்த்தம் அன்று
நனு -ஸூ கமாகில் துக்க மிஸ்ரமாய் அல்லது இராமையாலே ஸூகம் புருஷார்த்தம் அன்று –
விஷ சம்ப்ரயுக்தமான அன்னம் போலே த்யாஜ்யம் என்ன ஒண்ணாது
மோஷ ஸூகம் -ந ரோகம் நொத துக்க தாம் -என்று துக்க மிஸ்ரம் இல்லாமையாலே
துக்க நிவ்ருத்தி தான் புருஷார்த்தம் ஆக மாட்டாது -ஸூக ரூபம் அல்லாமையாலே –
ஆனால் துக்க நிவ்ருத்தியில் யத்னம் கூடாது என்னில் துக்கமும் பிரதிகூலம் ஆகையாலே கூடும்
ஸூகத்தில் காட்டிலும் துக்க நிவ்ருத்தியே புருஷார்த்தம் என்னில் துக்க மிஸ்ரமான ஸூக சாதனங்களில் இழியக் கூடாது –

———————————————-

சங்கர மத நிரசனம் –
அவித்யா நிவ்ருத்தியே மோஷம் என்கிற பஷமும் அனுபபன்னம் -அது ஸூக ரூபம் அல்லாமையாலே
ஸூக சாதனம் என்ன ஒண்ணாது -ப்ரஹ்மத்துக்கு ஸூகம் கொள்ளாமையால் -ஸூகம் கொள்ளில் ப்ரஹ்மம் சவிசேஷமாம் –

————————————————————–

பாஸ்கர மத நிரசனம்
உபாதி வியோகம் மோஷம் -என்கிற பஷமும் சேராது -ஸூக ரூபம் அல்லாமையால் –
திரோ ஹிதமான ஸூகத்துக்கு பிரகாசகம் என்னில்
ஜீவனுடைய ஸூ கத்துக்கு பிரகாசகமோ -பரனுடைய ஸூ கத்துக்கு பிரகாசகமோ
ஜீவ ஸூ கத்துக்கு பிரகாசகம் என்ன ஒண்ணாது -ஜீவன் நசிக்கையாலே –
பர ஸூக பிரகாசகம் என்ன ஒண்ணாது -அதுக்கு திரோதானம் இல்லாமையாலே
உபாதி பிரதேசத்தில் ஸூகம் திரோஹிதம் என்னில் சர்வஜ்ஞன் இன்றிக்கே ஒழியும்

—————————————-

யாதவ பிரகாச மத நிரஸனம்
ஸ்வாபாவிக பேதாபேத பஷத்திலும் மோஷம் புருஷார்த்தம் அன்று -முக்தனுக்கு பத்தனோடு அபேதம் உண்டாகையால்
பத்தனுடைய துக்கமே முக்தனுக்கு வருமாகையால் -ஈஸ்வரனுக்கு ஜீவனோடு அபேதம் உண்டாகையால்
ஈஸ்வரன் ஜீவனுடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாக நினைத்து சத்ய சங்கல்பன் ஆகையாலே தானே கழிக்கும்
ஆகையால் ஆத்மாவுக்கு மோஷ உபாயத்தில் இழிய வேண்டா -சர்வ முக்தியும் பிரசங்கிக்கும்

————————————————-

ஸ்வ சித்தாந்த சங்க்ரஹம்
ஆகையால் நிர்தோஷ நிரதிசய ஆனந்த ரூபமான பரமாத்ம அனுபவ கைங்கர்யமே மோஷம் –
தம் யதா யதோபாசதே ததைவ பவதி -என்றும் –
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தே நாம் ருதத்வமேதி -என்றும்
ஏதத் சாம காயத நாஸ்தே -என்றும் –
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா -என்றும்
ஆகச்ச வத்ஸ பத்ரம் தே புண்டரீக மஹா மாதே -மதரூப தாரீ நித்யாத்மா மம பாரிஷதாஸ் ரய -என்றும் –
இத்யாதி பிரமாணங்கள் அநந்தம்-

———————————————————

மோஷே ஜீவ பர ஐக்ய வாதி சங்க உபந்யாசம்
நனு -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும் –
யத்ர த்வஸ்ய சர்வாத்மைவா பூத் -என்றும் –
விபேத ஜனகே அஜ்ஞனே நாசமாத்யந்திகம் கதே –ஆத்ம நோ ப்ரஹ்மணோ பேதமசந்தம் க கரிஷ்யதி -என்றும்
பரமாத்மனா பவத்ய பேதீ -என்றும்
இத்யாதிகளாலே மோஷ தசையிலே ஐக்யம் சொல்லா நிற்க கைங்கர்யம் கூடும்படி என் என்னில்

————————————————

தத் கண்ட நம் –
பரமாத் மாத்ம நோர்யோக பரமார்த்த இதீஷ்யதே மித்யைத தன்ய த்ரவ்யம் ஹி நைதி தத் த்ரவ்யதாம் யத -என்கிறபடியே
ஹேய பிரதிப்பட வஸ்துவுக்கும் ஹேய யோக்ய வஸ்துவுக்கும் ஐக்யம் சொல்லுகை வ்யாஹதம் –
ஐக்யம் கொள்ளில்
ஆத்ம பாவம் நயத்யேநம் தத் ப்ரஹ்ம மத்யாயி நம் மு நே -விகார்யா மாதமநஸ் சக்த்யா லோஹமா கர்ஷகோ யதா -என்றும்
நிரஞ்ஜன பரமம் சாம்யமுபைதி -என்றும் –
மம சாதர்ம்யமாகதா -என்றும் –
தத் பாவ பாவமா பன்ன -என்று சொன்ன பரமாத்ம சா தர்மம் கூடாது –

ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்கிற இடத்தில் சொல்லுகிறது சாதர்ம்யத்தை
விஷ்ணு ரேவ பூத்வா -என்கீற இடத்தில் போலே ஏவ என்றது இவ என்றபடியாய்-ப்ரஹ்மம் போலேயாம் என்றபடி –
அவதாரணம் ஆனாலும் இதுவே அர்த்தம் –

யத்ர த்வஸ்ய -என்கிற இடத்தில் எல்லாம்
பரமாத்மாவுக்கு பிரகாரம் என்று சாஷாத் கரித்த படியைச் சொல்லுகிறது –

விபேதஜ நகே -என்றும் -பரமாத்ம நா பவத்ய பேதீ -என்கிற இடத்தில் தேவாதி ரூப பேதம் இல்லை -என்றபடி
தேவாதி பதே அபத்வஸ்தே -என்று இது தான் கண்டோக்தம்

நனு –
கிங்கரன் ஆகில் -ஸ ஸ்வராட் பவதி -என்கிற ஸ்வா தந்த்ர்யம் சேரும்படி என் என்னில் –
ஸ்வராட்-என்றது கர்ம வச்யன் அன்று என்றபடி –
ஆனால் சாம்யம் தான் கூடும்படி என் என்னில் -சாம்யம் போக மாத்ரத்திலே -சாயுஜ்யம் என்கிறது இத்தையே –
சர்வதா சாதர்ம்யம் இல்லை ஜகத் வ்யாபாராதிகள் இல்லாமையாலே

ஜகன் நியமனாதிகள் இல்லையாகில் போக சாம்யம் தான் கூடும்படி என் என்னில்
அவை இருவருக்கும் ஒக்க அனுகூலமாகக் கொண்டு பிரகாசிக்கையாலே கூடும் –
அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரியே ச்ப்ருசத -என்கிறபடியே -சரீர ஸூந்யனாவனுக்குக் கைங்கர்யம் கூடாது என்னில் –
ச ஏகதா பவதி த்ரிதா பவதி -என்று சரீரனாகச் சொல்லுகையாலே கூடும்
இது தன்னாலே சசரீரத்வம் சித்தம் –
அ சரீரம் என்றது கர்ம க்ருதமான சரீரம் இவனுக்கு இல்லை என்றபடி –

ந ஹைவ சசரீரச்ய சதா ப்ரியாப்ரியயோரபஹதி ரஸ்து -என்கிறபடியே சரீர விசிஷ்டன் ஆகில்
ஸூக துக்கங்கள் உண்டாகாதோ என்னில்
அங்குச் சொல்லுகிறது கர்ம க்ருத சரீரத்தை –
சரீரமாகில் கர்மக்ருதமாய் யன்றோ இருப்பது என்ன ஒண்ணாது -பகவத் விக்ரஹம் கர்ம க்ருதம் அல்லாமையாலே –
அவன் சர்வ சக்தனாகையாலும் சத்ய சங்கல்பன் ஆகையாலும் அவனுக்குக் கூடும் –
இவனுக்குக் கூடாது என்ன ஒண்ணாது -அவனுடைய சங்கல்பத்தாலே இவனுக்கும் கூடுகையாலே –

சங்கல்பாதே வாஸ்ய பிதராஸ் சமுத்திஷ்டந்தி -என்று சத்ய சங்கல்பனாகச் சொல்லுகையாலே
இவன் தன்னுடைய சங்கல்பத்தாலும் சரீரம் கூடும் –
ஈஸ்வரன் சத்ய சங்கல்பன் ஆகையாலே புநரா வ்ருத்தியும் கூடுமே என்னில் –
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோ அத்யர்த்தம் –ச மஹாத்மா ஸூ துர்லப -என்று
இருக்கிற ஈஸ்வரன் இவனை சம்சரிப்பிக்கக் கூடாமையாலும் –
சம்சார ஹேதுவான கர்மம் நிஸ் சேஷமாக நிவ்ருத்தம் ஆகையாலும்
ந ச புநரா வர்த்ததே -என்றும் –
இமாம் மா நவ மாவர்த்தம் நா வர்த்தந்தே -என்றும் –
மாமுபேத்ய புநர் ஜன்ம துக்காலயம சாஸ்வதம் –நாப் நுவந்தி மஹாத்மா நச் சாம் சித்திம் பரமாம் கதா —
ஆ பிரம்மா புவ நால்லோகா புநரா வர்த்தி நோ அர்ஜூன –மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே –
என்கையாலும் புநரா வருத்தி பிரசங்கமே இல்லை –

ஆகையாலே சவிபூதிக சமஸ்த கல்யாண குணாத்மக பரமாத்ம யாதாம்ய அனுபவ ஜனித ப்ரீதி காரித
கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –

புருஷார்த்த ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம் –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தத்வ சேகரம் -ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –

February 5, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

இவனுக்கு சர்வாத்மாக்களும் சர்வ பிரகார பரதந்த்ரர் –அவர்கள் தான் தேஹாதி விலஷணர்-
—————————–

சார்வாக மத உபன்யாசம் –
நனு-ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று தேஹத்திலே அஹம் புத்தி வ்யவஹாரம் காண்கையாலே
அஹம் அர்த்த பூதனான ஆத்மா தேஹம் தானாம் அத்தனை –
இந்த அஹம் புத்தி வ்யவஹாரங்களுக்கு தேஹாதிரிக்தன் விஷயம் என்ன ஒண்ணாது –
அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே –
கட படாதிகளைப் போலே பார்த்திவமான சரீரத்துக்குச் சைதன்யம் கூடாதே என்னில் மத சக்தி போலே
பரிணாம விசேஷத்தாலே கூடும் இறே

நனு –பால யுவ வ்ருத்த சரீரங்கள் அந்யோந்யம் பின்னங்கள் என்று சொல்ல வேணும் —
ஏகமாகில் பரிணாம பேதங்கள் கூடாது –
பேதத்தை இசையில் பால்யத்தில் அனுபவித்தவற்றை யௌவனத்தில் ஸ்மரிக்கக் கூடாது –
கூடில் ஒருவன் அனுபவித்ததை மற்றையவன் ஸ்மரிக்க வேணும் -அது காண்கிறிலோம்-இங்கு ஸ்ம்ருதி காணா நின்றோம் –
ஆகையாலே ஆத்மா தேஹாதிரிக்தனாக வேணும் என்னில் அதுவும் அனுபபன்னம் -சரீர பேதம் இல்லாமையாலே
ஒருவன் தனக்கே கால பேதத்தாலே பரிணாம பேதம் கூடும் –
பால்யத்தில் துக்கித்த நானே யௌவனத்திலெ ஸூகியா நின்றேன் –
பாலனான நானே யுவாவானேன் -என்கிற பிரத்யபிஜ்ஞைகளாலே யுவ சரீரம் பழைய சரீரம் என்னும் இடம் சித்தம் –
அல்லாத போது பால்யத்திலே அனுபவித்ததை யௌவனத்தில் ஸ்மரிக்கக் கூடாது –
ஸ்ம்ருதி பிரத்யபிஜ்ஞைகள் அஹம் அர்த்தத்துக்கு அன்றோ

தேஹத்துக்கு அன்றே என்ன ஒண்ணாது -தேஹ வ்யதிரிக்தமாய் இருப்பதொரு அஹம் அர்த்தம் காணாமையாலே –
கிஞ்ச தேஹத்திலே நெடும் காலம் செல்லச் செய்தேயும் ச ஏவாயம் என்று பரனுக்குப் பிறக்கும் பிரத்யபிஜ்ஞையும் கூடாது –
பிரத்யபிஜ்ஞைக்கு விஷயம் தேஹாதிரிக்தன் என்ன ஒண்ணாது -அவன் சாஷூஷன் அல்லாமையாலே –
பிரத்யபிஜ்ஞ்ஞை பிராந்தி என்ன ஒண்ணாது -பாதகம் இல்லாமையாலும் –
விபஷே ஸ்மரண அனுபபத்தி யாகிற பாதகம் உண்டாகையாலும்
இப்படி தேஹத்தில் அஹம் புத்தி கொள்ளாத போது விதி நிஷேதமும்
அதினுடைய நிவ்ருத்த்யர்த்தமான சாஸ்திர ஸ்ரவணாதிகளும் கூடாது –
ஆகையாலே தேஹமே ஆத்மாவாம் இத்தனை என்னில் –

தத் கண்டனம் –
அது அனுபபன்னம் —
தேஹம் அநேக அவயவ சங்காத் மகம் என்னும் இடம் சித்தம் -அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் உண்டாகில்
அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும் -அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும் –
அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் -கூடாது –
ஒரு அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில் அது விச்சின்னம் ஆனால் அவயவாந்தரம் அது அனுபவித்ததை
அவயாந்தரத்திலே ஸ்மரிக்கக் கூடாது –
பின்பு அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதா புத்தி வ்யவஹாரப்ங்களும் தவிர வேணும் –
சர்வ சரீர வியாபியான ஸூக துக்க அனுபவமும் கூடாது –

அவயவ சங்காதாத்மகம் அன்று சரீரம் -அயவவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –
உபலம்ப அனுபபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே –
கிஞ்ச -பாலதே ஹோ அஹம் மந்த ஜ்ஞான –யுவதே ஹோ அஹம் பஹூ ஜ்ஞான மம சரீரம் –என்று
சரீர அஹம் அர்த்தங்களில் பிறக்கிற பேத பிரதிபத்தியும் பேத வ்யவஹாரமும் கூடாது –
மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதகம் இல்லாமையாலே –
அன்றிக்கே அஹம் புத்திக்கு சரீரமே விஷயம் என்று கொண்டாலும் ஸ்ருதியாலும் ஸ்ருத் யர்த்தா பத்தி களாலும்
தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –

பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரிய விஷயங்களையும் அறிகையாலே —
இப்படி கொள்ளாத போது யாவன் ஒருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் –
அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் என்கிற பிரதிசந்தானமும் கூடாது –
சஷூஸ்ஸே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும் –
ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பத்திரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்
இப்படி மற்ற இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

—————————-

சங்கர மத கண்டனம்

அந்த கரணமும் ஆத்மாவாக மாட்டாது —
ஸ்மர்த்தாவினுடைய ஸ்மாரணாதி கார்யங்களுக்கு கரணமாகக் கல்பிதங்கள் ஆகையாலே –
இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது -ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே –
கரணமும் தானே என்ன ஒண்ணாது -விருத்தமாகையாலே –
வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணம் ஆகில் அது இல்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது
ஆந்தர கரணம் ஆகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேர் இட்டாதாய் விடும் –
ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்த்ரியார்த்த சம்பந்தம் உண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும் –
ஆகையால் மனஸ்ஸூ ம் ஆத்மாவாக மாட்டாது –
பிராணங்களும் ஆத்மாவாக மாட்டாது –
சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம் –

——————————

பௌத்த மத கண்டனம் –

ஜ்ஞானமும் ஆத்மாவாக மாட்டாது -எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது -என்று ஷணிகமுமாய்-
ஆத்ம தர்மமுமாய்த் தோற்றுகையாலே-
ஸ்திரனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்னும் இடம் நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் –
என்கிற பிரத்யபிஜ்ஞையாலே சித்தம்

————————————————-

இதுவும் சங்கர மத கண்டனம் –

நிர்விஷயையுமாய் -நிராஸ்ரயையுமான சம்வித்து ஆத்மா என்ன ஒண்ணாது –
அப்படி இருப்பதொரு சம்வித்துக் காணாமையாலே –
நனு -ஜ்ஞானம் ஆத்ம தர்மமாய் யன்று தோற்றுகிறது-
அந்தகரண ரூபமான அஹங்காரத்துக்கு தர்மமே யன்றோ தோற்றுகிறது -என்ன ஒண்ணாது –
அசேதனமுமாய்-பிரகிருதி பரிணாமமுமாய்-த்ருச்யமாய் -பராகர்த்தமுமாய் -பரார்த்தமுமாய் இருக்கையாலே
தேஹாதிகளைப் போலே அஹங்காரமும் ஜ்ஞாதாவாகக் கூடாமையாலே –
நனு –
சைதன்ய சந்நிதி யடியாக சாயாபத்தியாலே ஜ்ஞாத்ருத்வம் கூடுமே என்னில் அது கூடாது –
சைதன்யத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் கூடாமையாலே –
நனு ச -தர்ப்ப்பண ஜல கண்டங்கள் முக சந்திர கோத்வங்களுக்கு வ்யஞ்ஜகம் ஆகிறாப் போலே
அஹங்காரமும் சைதன்யத்துக்கு வ்யஞ்ஜகம் ஆகையாலே தன் நிஷ்டமாயத் தோற்றுகிறது என்னில்
ஸ்வயம் பிரகாசனான ஆத்மாவுக்கு ஜடமான அஹங்காரம் வ்யஞ்ஜகமாகை என்கிறது –
சாந்தாங்காரம் ஆதித்யனை பிரகாசிப்பிக்கும் என்றால் போலே இருப்பதொன்று
தர்ப்பணமும் ஜலமும் முகத்துக்கும் சந்த்ரனுக்கும் வ்யஞ்ஜகம் அன்று -சாஷூஷ தேஜ பிரதிபலனத்துக்கு ஹேது வித்தனை
அபிவ்யஞ்ஜகம் ஆலோகாதிகள் போலே -ஜாதி வ்யக்தி நிஷ்டையாய்த் தோற்றுகிறது வ்யக்திக்கு ஆகாரம் ஆகையாலே –

கிஞ்ச -சைதன்யத்தாலே வ்யங்க்யமான அஹங்காரம் அதுக்கு வ்யஞ்ஜகம் ஆகமாட்டாது –
ஆதித்ய கிரணத்தாலே அபி வ்யங்க்யமான கரதலம் அதுக்கு வ்யஞ்ஜகம் ஆகக் காணா நின்றோமே என்னில்
கர தலம் வ்யஞ்ஜகம் அல்ல -கிரண பாஹூள்யத்துக்கு ஹேது வித்தனை –
ஸூஷூப்தியிலும் முக்தி தசையிலும் அஹம் அர்த்தம் இல்லாமையாலும் அதுவும் ஆத்மாவாக மாட்டாது என்னில் –
அவற்றிலும் உண்டு –
ஸூ ஷூப்தியில் இல்லையாகில் உறங்கி எழுந்து இருந்தவன் -முன்பு நான் இத்தச் செய்தேன் -இத்தைக் கண்டேன் –
இத்தை அனுபவித்தேன் -என்று பராமர்சிக்கக் கூடாது
முக்தி தசையில் ஆத்மா இல்லையாகில் ஆத்ம நாசம் மோஷமாய் விடும் –
ஸ்வ நாசத்தையும் இசைந்து மோஷ உபாயத்தில் இழிவார் இல்லாமையாலே மோஷ சாஸ்திரம் அப்ரமாணமாம் –

மத்தஸ் சர்வமஹம் சர்வம் -என்றும் –
அஹமேக பிரதமமமாசம் -என்றும் –
அஹம் மனுரபவம் ஸூ ரிச்சா -என்றும் தத்வ ஜ்ஞானம் பிறந்த முமுஷுக்களும்
அஹம்,அன்னம் என்று முக்தனும் –
யஸ்மாத் ஷரமதீதோஹம்-என்றும் –
அஹமாத்மா குடாகேச -என்றும் –
நத்வேவாஹம் -என்றும் –
அஹம் க்ருதஸ் நஸய ஜகத -என்று பர ப்ரஹ்மமும் அஹம் என்று வ்யபதேசிக்கக் கூடாது –

அஹம் அர்த்தம் ஆத்மா வாகில்-மஹா பூதான் யஹங்கார-என்று ஷேத்ராந்தர்பாவம் கூடும்படி என் என்னில் –
அஹங்காரத்தை யாய்த்து அங்குச் சொல்லுகிறது -அஹம் அர்த்தத்தை யன்று –
அஹங்காரத்தை சாஸ்த்ரங்களிலே ஹேயமாகச் சொல்லா நின்றதே என்னில்
அங்குச் சொல்லுகிறது கர்வ ரூபமான அஹங்காரத்தை யாகையாலே அஹம் அர்த்தம் அஹங்காரம் அல்ல -ஆத்மாவே யாகையால் –

—————————————————————————

ஆத்ம நித்யத்வ சமர்த்தனம்

ஆத்மா தேஹாதி விலஷணம்-அவை போலே அநித்யன் அல்லன் –
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -என்றும் –
நித்யோ நித்யா நாம் சேதநஸ் சேதனா நாம் ஏகோ பஹூ நாம் யோ விததாதி காமான் -என்றும்
அஜோ நித்யஸ் சாஸவதோ அயம் புராண -என்று உத்பத்தி விநாச்யங்கள் இல்லை என்கையால்
நனு -பிரஜாபதி பிரஜா சதாயத நாஸ் சத்ப்ரதிஷ்டா -என்றும் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -என்றும் –
யதா பிரஸூதா ஜகத பிர ஸூ தீதே யேன ஜீவான் வ்யச ச சர்ஜ பூம்யாம் -என்று
உத்பத்தி விநாசங்களைச் சொல்லா நின்றதே என்னில்

அவற்றில் சொல்லுகிறது தேஹ சம்பந்தத்தையும் – தேஹ விநியோகத்தையும் –
நித்யன் ஆகில் சிருஷ்டிக்கு முன்பு ஏகத்வா வதாரணம் கூடாதே என்னில்
ஏகத்வம் ஆவது நாம ரூப விபாகா பாவம் ஆகையாலே கூடும் –
சம்ஹார தசையில் ஆத்மா இல்லை யாகில் ஈஸ்வரனுக்கு உபாதாநத்வம் கூடாது
அக்ருதாப்யா கம க்ருத விப்ரணாசங்களும் வரும் –
ஆகையால் ஆத்மா நித்யன்

———————————————————————

ஏக ரூபத்வ சமர்த்தம் –
அம்ருதாஷரம் ஹர -என்றும் –
ஆத்மா ஸூ த்தோஸ் ஷர -என்றும் –
ஏகம் சதேகம்-என்கையாலும்
அவை போலே உபசயாபசயங்களுக்கு அர்ஹன் அன்றிக்கே ஏக ரூபனாய் இருக்கும் –

——————————————————————–

ஜைனமத கண்டனம்

தேஹ பரிமாணன் என்கிற பஷம் ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் –
ச்தூலோஹம் க்ருசோஹம் பாதே மே வேதினா சிரசி மே ஸூ கம் என்கிற பிரதிபத்தியும் கூடாதே என்னில்
அது தேஹாத்மா பிரமத்தாலே கூடும் –
ஏக காலத்தில் அநேன சரீர பரிக்ரஹம் பண்ணுகிற யோகிகள் உடைய ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் பிரசங்கிக்கும் –

———————————————————————–

அஜடத்வ சமர்த்தம் –

இவன் ஸ்வரூபம் அவை போலே ஜடம் அன்றிக்கே –
ஹ்ருத்யந்தர்ஜ்யோதி புருஷ -என்றும் –
அத்ராயம் புருஷஸ் ஸ்வ யஞ்ஜ்யோதிர் பவதி -என்றும் –
விஜ்ஞாநகன -என்றும் –
தச்ச ஜ்ஞான மாயம் வியாபி ஸ்வ சம்வேத் யம நூபமம் -என்றும் –
ஆத்மா ஜ்ஞானமய -என்றும் –
ஆத்ம சம்வேத்யம் தஜ்ஞானம் என்கிறபடியே ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும் –
ஸ்வயம் பிரகாசமாகை ஆகிறது -ஜ்ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை-

நனு -ஸ்வரூபமும் நித்யமுமாய்த் தானே தோற்றுமாகில் ஸூஷூப்தியிலும் தோற்ற வேண்டாவோ என்னில் –
அப்போது தோற்றாதாகில் உணர்ந்த போது -இத்தனை போதும் ஸூகமாக உறங்கினேன் -என்னக் கூடாது –

நனு -நான் ஒன்றையும் அறிந்திலேன் -என்னும்படி என் என்னில் –
அறிந்திலேன் என்கிறது -என்னை ஒழிந்தவற்றை அறிந்திலேன் என்றபடி –
நான் என்னையும் அறிந்திலேன் என்றாலோ வென்னில் என்னையும் அறிந்திலேன் என்கிறது
சரீர விசிஷ்டனான என்னையும் அறிந்திலேன் என்றபடி –
ஸ்வரூபம் பிரகாசித்தது இல்லையாகில் நான் என்னக் கூடாது –
அயமஹமச்மி -என்று இவ்வர்த்தத்தை ஸ்ருதியும் சொல்லிற்று –
அப்போது விசதமாக தோற்றாது ஒழிகிறது-தமோ குணாபிபத்தாலே –

—————————————————————————–

ஆனந்த ரூபத்வ சமர்த்தனம் –

பிரகாசம் தான் அனுகூலமாய் இருக்கும் -ஸூகமாக உறங்கினேன் என்கிற பிரத்யபிஜ்ஞை தானே இதில் பிரமாணம்
இப்போது ஸூகம் பிறக்கும்படி உறங்கினேன் என்று அன்றோ ஸூகமாக உறங்கினேன் என்கிற இதுக்கு பொருள் என்ன ஒண்ணாது
பிரதிபத்தி சரீரம் அப்படி அன்றிக்கே இனிதாகப் பாடினேன் என்கிறாப் போலே இருக்கையாலே –
ஸ்வரூபம் அனுகூலம் அன்றாகில் ப்ரேமாஸ்பதத்வம் கூடாது
ஆச்சர்யவத் பஸ்யதி கச்சிதே நம் -இத்யாதிகளாலும் இவ்வர்த்தம் சித்தம் ஆகையாலே
ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிரஹ மஸ்மி -என்கிறபடியே
ஆத்மா ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய் இருக்கும் –

———————————————————————————————

ஜ்ஞாத்ருத்வ சமர்த்தம்

அவ்வளவும் அன்றிக்கே ஜ்ஞானானந்தங்களுக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும்
அதயோ வேதே தம் ஜிக்ராணீதி ச ஆத்மா மனஸை வைதான் காமான் பசின் ரமதே -என்றும்
ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி -என்றும் –
விஜ்ஞாதாரமரே கேன விஜா நீயாத் -என்றும் –
ஞானாத்யேவாயம் புருஷ -என்றும் –
ஏஷ ஹி த்ரஷ்டா ச்ப்ரஷ்டா ஸ்ரோதா க்ராதா ரசயிதா மந்தா போத்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ -என்றும் –
ஏவ மேவாச்ய பரித்ரஷ்டு -என்றும் இத்யாதி ஸ்ருதியாலும்
இவ்வர்த்தத்தை நான் அறியா நின்றேன் என்கிற பிரத்யஷத்தாலும் ஜ்ஞாதா வென்னும் இடம் சித்தம் –
இப் ப்ரத்யஷம் தன்னை -ஜானாத்யேவாயம் புருஷ -என்று ஸ்ருதியும் சொல்லிற்று

——————————————————————————————————–

பௌத்த மத கண்டனம்
ஜ்ஞான மாத்ரம் ஆத்மா -அது தான் ஷணிகம்-என்னும் பஷத்தில்
நேற்றுக் கண்ட அர்த்தத்தை இன்று காணா நின்றேன் என்கிறவிது கூடாது
நேற்றை ஜ்ஞானம் என்று ஓன்று இல்லாமையால்
அது அநித்யம் என்கிற பஷமும் அப்படி இருப்பதொரு ஜ்ஞானம் காணாமையாலே நிரச்தம் –
கிஞ்ச ஜ்ஞான மாத்ரமே ஆத்மாவாகில் தேஹாத்மா ப்ரமம் கூடாது -தேஹத்தை ஜ்ஞாதாவாக பிரமிக்கையால்

———————————————————————————-

தர்ம பூத ஜ்ஞான நித்யத்வ சமர்த்தனம் —

ந ஹி த்ரஷ்டுர் த்ருஷ்டேர் விபரிலோபோ வித்யதே -ந ஹி விஜ்ஞாதுர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும் –
யதோதபா நகரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் –சதேவ நீயதே வ்யக்தி மசதஸ் சம்பவ குத —
ததா ஹேய குணத்வம்சாத வபோதாதயோ குணா -பிரகாச்யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மா நோ ஹி தே -என்றும்
ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தர்மஸ்ஸ மனுஜேச்வர -ஆத்ம நோ ப்ரஹ்ம பூ தஸ்ய நித்யமேதச்ச துஷ்ட்யம் -என்கிறபடியே
ஜ்ஞாத்ருத்வம் நித்யம் –

ஆனால் உத்பத்தி வினாசங்கள் உண்டு என்று சொன்னபடி என் என்னில் –
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி-என்றும் –
ச சாநந்த்யாய கலப்பதே -என்றும்
முக்தி தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே சர்வத்தையும் சாஷாத்கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்
யயா ஷேத்ரஜ்ஞ சக்திஸ் சா வேஷ்டிதா ந்ருப சர்வகா -என்கிறபடியே கர்மத்தால் சங்குசிதமாய்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா–சர்வ பூதேஷு பூபால தாரதம் யேன வர்த்ததே –
அப்ராணி மத்ஸூ ஸ்வல்பா சா ச்தாவறேஷூ ததோ அதிகா -என்கிறபடியே
கர்ம அனுகுணமாகத் தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யத்யேகம் ஷர தீந்த்ரியம் -தே நாசா சாரதி ப்ரஜ்ஞா த்ருதே பாதாதி வோதகம் -என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிக்கக் கடவதாய் இருக்குமாகையாலே பிரசரணாதியை இட்டு
உத்பத்தி விநாசம் சொல்லுகிறது-
ஏகமாய் இருக்கச் செய்தே அநேகமாய்த் தோற்றுகிறது அத்தாலே –

——————————————————————————————————————————

தர்ம பூத ஜ்ஞானச்ய த்ரவ்யத்வ சமர்த்தனம்

இது தான் அஜடமுமாய் -சங்கோச விகாசங்களுக்கும் சம்யோக வியோகாதிகளுக்கும் ஆஸ்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம்
ஜ்ஞானம் நித்யமுமாய் அஜடமுமாய் இருக்குமாகில் ஸூஷூப்தியில் தோற்ற வேண்டாவோ வென்னில்
அப்போது தோன்றாது ஒழிகிறது திரோ ஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே பிரசரணம் இல்லாமையாலே

——————————————————————————–

தர்மபூத ஜ்ஞானச்ய ஆனந்தத்வ சமர்த்தநம்

சர்வமும் பகவத்தாத்மகமாகையாலே அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே இது தான் ஆனந்த ரூபமாய் இருக்கும் –
நனு-ஆனால் இப்போது விஷ சஸ்த்ராதிகள் பிரதிகூலங்களாயும்-
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் –
காஷ்ட லோஷ்டாதிகள் உபேஷா விஷயங்களாயும்-
இவை தான் ஸ்வதந்த்ரங்களாய்க் கொண்டு தோற்றுவான் என் என்னில் –
கர்ம தேஹாத்மா அபிமானங்களாலே அப்படி தோற்றுகிறது அத்தனை -ஸ்வ பாவமாயன்று –
ஸ்வ பாவமாகில்
ஒருகால் அனுகூலங்களான சந்தன குஸூமாதிகள் காலாந்தரத்திலே பிரதிகூலங்களாகத் தோற்றக் கூடாது –
வச்தவேகமேவது க்காய ஸூகா யேர்ஷ்யாகமாய ச -கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வச்த்வாத்மகம் குத –
ததேவ ப்ரீதயே பூத்வா புநர் துக்காய ஜாயதே ததேவகோபாய யத பிரசாதாய ச ஜாயதே –தஸ்மாத் துக்காத்மகம்
நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் -என்று ருஷியும் அருளிச் செய்தான் ஆகையால்
ஜ்ஞானத்துக்கு ஆனந்தத்வமே ஸ்வ பாவம் –இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை யுடையனாகை ஆனந்தி யாகிறது –

—————————————————————

புநரபி ஜீவாத்மநோ ஜ்ஞாத்ருத்வ சமர்த்தநம் –

இப்படி ஆத்மா ஜ்ஞாதாவாகில் –
யோ விஜ்ஞாநே திஷ்டன் -என்றும் –
விஜ்ஞா நம் யஜ்ஞம் தநுதே -என்றும் ஜ்ஞான சப்தத்தாலே சொல்லுவான் என் என்னில்
ஜ்ஞான ஏக நிருபணீயமுமாய் -ஸ்வயம் பிரகாசமும் ஆகையாலே -அப்படி சொல்லுகிறது –
ஆகையாலே ஜ்ஞாதாவுமாய் ஆனந்தியுமாய் இருக்கும்

—————————————————————————-

ஜீவாத்மன் அணுத்வ சமர்த்தநம் –

தேன பிரத்யோதே நைஷ ஆத்மா நிஷ்க்ராமதி -என்று உத்க்ரமணத்தைச் சொல்லுகையாலே ஆத்மா அணு பரிமாணன் –
உத்க்ராந்தி என்கிறது சரீர விநியோகத்து அளவே என்னில் -அது எப்படி யானாலும்
யே வைநே சாஸ்மால் லோகாத் பிராந்தி சந்த்ரமசமே வந்தே சர்வே கச்சந்தி -என்றும் –
தஸ்மால் லோகாத் புனரேத்ய அஸ்மை லோகாய கர்மணே -என்கிறபடியே கத்யாகதிகள் கூடாது –

ஏஷோணுராத்மா சேதஸா வேதி தவ்ய-என்றும் –
வாலாக்ர சதா பாகச்ய சத்தா கல்பி தஸ்ய ச –பாகோ ஜீவஸ்ஸ விஜ்ஞேய -இத்யாதிகளாலே
ஸ்ருதி தானே அணு வென்று முக்த கண்டமாகச் சொல்லிற்று –

ஹ்ருத் யந்தர் ஜ்யோதி புருஷ -என்கையாலே ஆத்மா அணுவாய்
ஹ்ருதய பிரதேசத்திலே நிற்குமாகில் பாணி பாதாதிகளில் ஸூக துக்க அனுபவம் கூடும்படி எங்கனே என்னில் –
ஜ்ஞான வ்யாப்தியாலே கூடும் –

—————————————————————————————–

ஆத்ம பஹூத்வ சமர்த்த நம்

ஆத்மாக்கள் தான் அநேகங்கள் -சிலர் ஆத்ம பேதம் இல்லை -ஏகாத்மாவே யுள்ளது என்றார்கள் –
அது அயுக்தம்-ஸூ காதி வ்யவஸ்த அனுபபத்தி வருகையால்
ஸூக துக்க இச்சா த்வேஷாதிகள் நியதங்கள் ஆகையாலே தேக பேதத்தாலே யாதல் –
அந்தகரண பேதத்தாலே யாதல்
இவை நியதங்கள் ஆகின்றன வென்னில் -சௌபரி சரீரத்திலும் இதுவே நியதங்கள் ஆக வேணும்

தேஹ பேதமும் அந்தகரண பேதமும் ஸூக துக்காதி நியமத்துக்கு ஹேது வன்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இஜ் ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்
ஸ்மரியாது ஒழிகிறது சம்ச்காரத்தினுடைய அனுத்பவத்தாலே யாதல் -நாசத்தாலே யாதல் –

ஆனால் சரீராந்தரத்தில் ஸூக துக்க ஸ்ம்ருதி யாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும் இரண்டத்தில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும் ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும் –
ஆகையால் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது தேஹாதி பேதம் என்ன ஒண்ணாது –

ஒருவன் ஆகில் பந்த மோஷ வ்யவஸ்தையும் சிஷ்ய ஆசார்ய வியவஸ்தையும் விஷம சிருஷ்டியும் கூடாது –
வைஷம்ய நைர்க்ருண்யங்களும் பிரசங்கிக்கும் -நித்யோ நித்யா நாம் -என்று இத்தை ஸ்ருதியும் சொல்லிற்று –
அந்த ஸ்ருதி ஔபாதிக பதத்தைச் சொல்லுகிறது -அல்லாத போது ஜீவாத்வைத ஸ்ருதிகளோடே விரோதிக்கும் -என்ன ஒண்ணாது
அவற்றில் சொல்லுகிறது பிரகாராத்வைதத்தை யாகையாலே –
சதா பச்யந்தி -என்றும் –
மம சாதர்ம்யமாகதா -என்றும் –
முக்தா நாம் பரமா கதி -என்றும்
மோஷ தசையிலும் பேதத்தைச் சொல்லுகையாலே பேதம் ஔபாதிகம் என்ன ஒண்ணாது
ஆகையால் ஆத்மாக்கள் அநேகர் என்னும் இடம் சித்தம்

————————————————————————————–

அமலத்வ கதநம்

ஆத்மா ஸூத்த –என்றும் –
ஜ்ஞானமயோ அமல -என்றும் –
ஜ்யோதிர்ஜ்வலதி என்கிறபடியே இவர்கள் தான் பரி ஸூத்தர்

—————————————————————————-

சேஷத்வ கதநம்

யஸ் யாஸ்மி –யோஹமஸ்மி -என்றும் –
ப்ரஹ்மாஹ மஸ்மி -என்றும் –
தாஸ பூதா -என்றும் –
க்ருஷ்ணஸ்ய ஹி கருத்தே -என்கையாலே இவர்கள் பகவச் சேஷ பூதர் –

யஸ் யாத்மா சரீரம் -என்றும் –
பூ ராணி ந-என்றும் –
தத் சர்வம் வைஹாரேஸ் தநு-என்றும் –
தானி சர்வாணி தத்வபு -என்றும் –
அபரேயமிதஸ் த்வந்யாம்-என்கையாலே இந்த சேஷத்வம் தான் சரீர தயாவாய் இருக்கும்

———————————————————————————-

உக்தார்த்த நிகமநம்
ஆக
இப்படி ஆத்மாக்கள்
தேஹேந்த்ரிய -மன -பிராண தீக்களில் விலஷணராய்-
ஸ்வயம் பிரகாசராய் –
ஆனந்த ரூபராய் –
ஜ்ஞானானந்தங்களுக்கு ஆஸ்ரய பூதராய் –
நித்யராய் –
அணுக்களாய் –
பரி ஸூ த்தராய் –
பகவச் சேஷ பூதராய் -இருப்பார்கள்

ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம்

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தத்வ சேகரம் –பர ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –

February 5, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

உபோத்காதம் –
பும்ஸ்பர்ச க்லேச சம்பாவநா கந்த விதுரமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய்-இருந்துள்ள நிகில வேத ஜாதத்துக்கும்-
தத் உபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளுக்கும் க்ருத்யம்-
சகல சம்சாரி சேதனர்க்கும் தத்வ ஜ்ஞானத்தை ஜநிப்பிக்கை –

தத்வ ஜ்ஞானமாவது –
சர்வ ஸ்மாத் பரனான நாராயணனுக்கு -சர்வ பிரகார பரதந்த்ரரான சர்வாத்மாக்களினுடையவும்
ஸ்வரூபத்துக்கு அநுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை -அனாதியாக பிரதிபந்தித்துக் கொண்டு போருகிற
கர்ம சம்பந்தத்தை நிவர்த்திப்பிக்கும் உபாயம்
தச் சரணாரவிந்த சரணாகதி என்கிற நிரூபண ஜ்ஞான விசேஷம் –

—————————————–

நாராயண காரணத்வ நிரூபணம் –
நாராயணன் சர்வ ஸ்மாத் பரனான படி எங்கனே என்னில் –
பரத்வ சிஹ்னங்களான ஜகத் காரணத்வ -முமுஷுபாஸ்யத்வ -மோஷ ப்ரதத்வங்கள் உள்ளது
இவனுக்கே யாகையாலே இவனே சர்வ ஸ்மாத் பரன்-

மஹா உபநிஷத்தும் ஸூபால உபநிஷத்தும் நாராயண உபநிஷத்தும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களும்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -என்றும் –
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் –
அத புருஷோ ஹவை நாராயணோஸ் காமயத -என்றும்
அப ஏவ ச சர்ஜா தௌ-என்றும் –
நாராயணோ ஜகன் மூர்த்தி -என்றும் –
விஷ்ணோஸ் சகாசாதுத் பூதம் -என்றும்
நாராயணாதி திவ்ய சப்தங்களாலே ஜகத் காரணத்வத்தைச் சொல்லுகையாலே இவனே காரண பூதன் –

சாந்தோக்ய வாஜசநேய கௌஷீதக் யாதிகளில் -சத் ப்ரஹ்ம ஆத்மாதி சப்தங்களாலேயும்
சில வஸ்துக்களைக் காரணமாகச் சொல்லா நின்றதே என்னில்
பஸ்வதி கரண ந்யாயத்தாலே சாமான்ய சப்தம் விசேஷ பர்யவசியியாகையாலே சத்தாதி சப்தங்களும் இவனையே ப்ரதிபாதிக்கின்றன –

——-

சதுர்முக காரணத்வ பஷ அநுவாதம்
நனு-
ஹிரண்ய கர்பஸ் சமவர்ததாக்ரே -என்றும் –
தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும் –
பிரஜாபதி பிரஜா அஸ்ருஜத -என்றும்
அஜச்ய நாபாவத் யேகமர்ப்பிதம் யஸ்மின் விஸ்வா புவநானி தஸ்து -என்றும்
ஹிரண்ய கர்ப்பாதி விசேஷ சப்தங்களாலே சொல்லுகையாலே ப்ரஹ்மா காரணமாகக் குறை என் என்னில்
தத் பஷ நிரசநம்

அது சொல்ல ஒண்ணாது –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோஸ் ஜாயத -என்றும் –
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே -என்றும்
ச பிரஜாபதிரேக புஷ்கர பர்ணே சமபவத் -என்றும் –
விராஜோ அதி பூருஷ -என்றும் –
யன்நாபி பத்மாதபவன் மஹாத்மா பிரஜாபதிர் விஸ்வஸ்ருட் விஸ்வரூப -என்றும்
ப்ரஹ்ம வை ப்ரஹ்மாணம் புஷ்கரே ச சர்ஜ -என்றும் –
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமானம் -என்றும் இத்யாதிகளால் -ஸ்ருஜ்யன் என்றும்

ந ப்ரஹ்மா -என்றும் –
ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ -என்றும்
சம்ஹார்யன் -என்றும்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ –புநஸ் த்ரைலோக்யதாத்ருத்வம் ப்ராப்தவா நிதி ஸூஸ்ரும –என்றும்
ப்ரஜாபத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசிதம் -என்றும் –
மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தா நவாப்யாம் பலாதித -என்றும் –
யஸ்மாத நபரா தஸ்ய சிரச் சின்னம் த்வயா மம -என்றும்
இத்யாதிகளால் சர்வேஸ்வர சமாராத நத்தாலே தன் பதம் பெற்றான் என்றும்

அசுரர் கையிலே வேதங்களைப் பறி கொடுத்தான் என்றும் –
ருத்ரனாலே பறி பூதனானான் என்றும்
இவனைக் கர்ம வச்யனாகச் சொல்லுகையாலே
ஹிரண்ய கர்ப்ப தாத்ரு பிரஜாபதி சப்தங்கள்
அபர்யவசான வ்ருத்தியாலேயாதல்
அவயவ சக்தியாலே யாதல் –
நாராயண பிரவ்ருத்தியாலே யாதல் -நாராயண வாசகங்கள் –

அஜஸ்ய நாபாவத் யே காமர்ப்பிதம் -என்கிறவிடத்தில் அர்ப்பிதம் -என்றது ஆவிர்ப்பூதம் என்றபடி —
ஏகம்-என்றது புஷ்கரத்தை –
அஜஸ்ய நாபாவத் யேகம் யஸ்மின் விஸ்வம் ப்ரதிஷ்டிதம் -புஷ்கரம் புஷ்க ராஷச்ய தஸ்மை பத்மாத்மாநே நம -என்று
மஹா பாரதத்திலே வ்யாக்யாதமாகையாலே –

————————————————–

ருத்ர காரணத்வ பஷ அநுவாதம்
நனு –
யதா தமஸ்தந்ந திவா ந ராத்ரி ந சந்த சாஸச் சிவ ஏவ கேவல -என்றும் –
காரணம் து த்யேய-என்றும்
சர்வைஸ்வர்ய சம்பன்னஸ் சர்வேஸ்வரஸ் சம்புரா காசமத்யே த்யேய -என்றும்
ஸ்வேதாஸ்வதராதர்வ சிகாதிகளிலே ருத்ரனைக் காரண பூதனாகச் சொல்லா நின்றதே என்னில்
தத் பஷ நிரநசம் –
அதுவும் அனுபபன்னம்

புத்புதாத் த்ர்யஷஸ் ஸூல பாணி புருஷோ அஜாயத-என்றும் –
நாராயணாத் ருத்ரோ ஜாயதே -என்றும் –
லலடாத் க்ரோத ஜோருத்ரோ அஜாயத -என்றும்
இந்த்ரோ வருணஸ் சோமோ ருத்ர பர்ஜன்யோ யாமோ ம்ருத்யு ரீசான -என்றும் –
த்ர்யஷம் கண்ட பர ஸூம ஜீஜநத் -என்றும் –
ப்ரஹ்மண புத்ராய -என்றும்
ஏவமாதி வாக்யங்களாலே மஹா உபநிஷத்தும் நாராயண உபநிஷத்தும் ஸூ பால உபநிஷத்தும்
ப்ருஹதாரண்யகமும் -அதர்வணமும் -சாம வேதமும் ஸ்ருஜ்யனாகவும் –

நேசான-என்று சம்ஹார்யனாகவும் சொல்லுகையாலே –

சத பத ப்ராஹ்மணத்திலே –
சம்வத்சரே குமாரோ அஜாயத ஸோ அரோதீத் தம் பிரஜாபதிரப் ரவீத் குமார
கிம்ரோதி ஷி யச்ச்ரமாத் தபசோஸ்தி ஜாதோ அசீதி ஸோ அப்ரவீத் அனபஹத பாப்மாஹம் அஸ்மி -இத்யாதிகளிலே
ருத்ரன் உத்பன்னனான வளவிலே ரோதனம் பண்ண அவனைப் பார்த்து பிரஜாபதி நீ அழுகிறது என் என்று கேட்க –
நான் அபஹத பாப்மா -என் பாபங்கள் போம்படி எனக்கு நாம கரணம் பண்ண வேணும் என்ன
இவன் அழுகையாலே உனக்கு ருத்ரன் என்று பேராகக் கடவது என்ன –
பவ சர்வேசான பஸூபதி பீமோக்ர மஹா தேவ ரூபமான நாம சப்தகத்தையும்
அஷ்ட மூர்த்தித்வத்தையும் கொடுத்தான் என்று சொல்லிற்று –

இதுதான் ஸ்காந்த புராணத்திலே
உன்மத்தவ தநுன்மத்த பிரபு பிரபவதாமாபி -ராத்ரௌ ச்மசாநே பர்யடசி தத்கிமேதத்த வேச்வர -இத்யாதியாலே –
தேவிச்மசாநபரிட நம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுபவிக்கைக்கு அடி என்-என்று கேட்க
அஹம் சோணிதா பங்கால கராலவத ஹரே ரோதிமி விஸ்வரம்-இத்யாதியாலே
தன்னுடைய உத்பத்தியையும் ரோதனத்தையும் நாம சப்தக மூர்த்யஷ்டகங்களையும் பெற்ற படியையும் சொல்லி

ரௌத்ரே முஹூர்த்தே ஜாதொஹம் ரௌத்ரகர்மா தது ஹ்யஹம் -யத்பவத் யுசிதம் கர்ம புருஷஸ்ய கிரேஸ் ஸூதே-
தத்தே நாவஸ் யக்ர்த்தவ்யம் ம்ருது வா யதி வேதாத் -பிரஜாபதேச்ச கச்சக்த ஆதேசம் கர்த்துமன்யதா –இத்யாதியாலே
தன்னுடைய நிஹீ நாசரண ஹேது கர்மம் என்று சொன்னான் என்று வ்யாக்யமாய்த்து –

இவ்விடத்திலே ஹரே ரோதிமிவிஸ்ரம் ததோ மாம் பாணி நா ச்ப்ருஷ்ட்வா லோகேச ப்ராஹ கேசவ -என்று
ஹரி கேசவ சப்தங்களாலே உபக்ரமித்து பிரஜாபதி சப்தத்தாலே உபசம்ஹரிக்கை யாலே
இந்த ஸ்ருதியில் பிரஜாபதி சப்தம் நாராயண பர்யவசியியாய்க் கடவது

மார்கண்டேய வைஷ்ணவ புராணாதிகளிலேயும்-
ருத்ர சர்க்கம் ப்ரவஷ்யாமி தந்மே நிகதத்தஸ் ச்ருணு -என்று இவ்வர்த்தத்தைச் சொல்லிற்று –

அஸ்ய தேவஸ்ய மீடுஷ-என்றும் –
மஹா தேவஸ் சர்வமேத மஹாத்மா ஹூத்வாத்மானம் தேவதேவோ பபூவ -என்று இவனுடைய பதம் கர்மாதீனம் என்று சொல்லிற்று –

ஸ்ரீ வராஹ புராணத்திலே
தவ விஷ்ணோ பரசாதென மயா தத் த்ரிபுரம் ஹதம் –தஸ்ய பாபச்ய தோஷேன ந சக்நோமி விசேஷ்டிதும்-என்று
திரிபுர தஹநத்தால் உண்டான பாபம் அடியாக யோக மாயை -ஐஸ்வர்ய நாசம் ஹ்ருதய சந்தாபம் நிச் சேஷ்டிதத்வங்கள்
இவனுக்கு உண்டாய்த்து என்றும் சொல்லிற்று –

ததோ வாக்யான் முநீந்தரஸ்ய தேவோ பாலேந்துசேகர-சங்கரஸ் சின்ன லிங்கஸ்து காநநே விசசார ஹ
ஏவம் சாபோ யதாஸ் மாகம் தாபயம் தத்தஸ் ஸூ தாருண-அவசய கரணீயம் மே ததா காஷ்டமயம் வபு
என்று ப்ருகு தத் பத்னி சாபங்களாலே சின்ன லிங்கத்வ காஷ்ட ரூபத்வங்களும் உண்டாய்த்து
என்று ப்ரஹ்ம புராணத்திலே சொல்லிற்று –

வாயவ்யத்திலே
ததொபி வ்யாஹ்ருதோ தஷோ ருத்ரம் சோப்யசபத் புன –யஸ்மாத் த்வம் மத் க்ருதே க்ரூரம் ருஷீன் வ்யாஹதவா நசி-
தஸ்மாத் சார்த்தம் ஸூ ரைர் யஜ்ஞைர் ந த்வா யஷ்யந்தி வை த்விஜா –ஹூத்வா ஹூதிம் தவ க்ரூராமபஸ் ச்ப்ருச்யந்து கர்ம ஸூ -என்றும்
அப உபச்ப்ருசதி மேத்யத்வாய நான்வீஷேத யாத ந்வீஷேத சஷூ ரஸ்ய பிரமாயுக ஸ்யாத்-தச்மாந்தரன் வீஷ்ய-
என்று சுருதியிலே போலே –
தஷ சாபத்தாலே இஜ்யத்வாதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று –

மாத்ச்ய புராணத்திலே –
யச்மாத நபரா தஸ்ய சிரச் சின்னம் த்வயா மம-தச்மாச்சாப சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி —
விஷ்ணோ பிரசாதாத் ஸூ ஸ்ரோனி கபாலம் தத் ஹச்ரதா-ஸ்புடிதம் பஹூதாயாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா -என்று
ப்ரஹ்மாவாலே இவன் சாபோபஹதனான படியையும்
சர்வேஸ்வரன் இவன் சாபத்தைப் போக்கின படியையும் சொல்லிற்று –

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஸ்ரீ கிருஷ்ணன் வைபவம் அறியாதே தன்னை ஆஸ்ரயித்த பாணனை நோக்குகைக்காக சபரிகரனாய் வந்து ஸ்ரீ கிருஷ்ணனோடு எதிரிட்டு
ஜ்ரும்பாபி பூதஸ்து ஹரோ ரதோபச்த உபாவிசத் –ந சசாகததா யோத்தும் கிருஷ்ணே நாக்ளிஷ்ட கர்மணா -என்று
தானும் பரிகரமும் தோற்றுத் தேர்த்தட்டிலே விழுந்து கிடந்து
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் -என்று பின்பு
ஸ்ரீ கிருஷ்ண வைபவத்தை உணர்ந்து பாணனுடைய பிராண ப்ரதாநார்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனை இரந்தான் என்றும்

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர ஸ்ரீ ராமாயணங்களிலே –
விஷ்ணோ ராதிக்யமன் விச்சம்ஸ் தஸ்ய மாயா விமோ ஹித க்ருத்வா நஸ்மி தேவேசோ தேவ வாக்யேன விக்ரஹம் -என்று –
பகவத் மாயா மோஹிதனாய் விஷ்ணுவோடு எதிரிட்டு –
ஆரோபிதும் ந மே சக்திச் சர்வ யத் நேன சாஸ் அபவத் -என்று அவன் கையிலே வில்லையும் வளைத்து நாணிலே ஏறிடவும் மாட்டாதே
ததாது ஜ்ரும்பிதம் சைவம் தா நுர்பீ மபராக்ரமம் -ஹூங்காரேண மஹா தேவஸ் தம்பி தொத த்ரிலோசன -என்று –
வில்லும் முறிந்து போய் தானும் ஹூன்காராபி பூதனாய்
தாத்தாச்ச க தாமோ ஹேன மயா ஜ்ஞாதோ ஹரி பர –ஜ்ஞாத்வா விஸ்ருஷ்ட சாபேன ச்துதஸ்ஸ பகவாம் ஸ் ததா -என்று பின்பு
தெளிந்து ஸ்தோத்ரம் பண்ணினான் என்றும் இவனுடைய அஜ்ஞான அசக்திகளைச் சொல்லிற்று –

வ்ருத்தாஸூரன் இவனை ஆராதித்து யாவன் ஒருவனுடைய தலையை ஸ்பர்சித்தேன் அவனுடைய
தலை சததாவாக வேணும் என்று அபேஷிக்க-
அவனும் அப்படியே வரம் கொடுக்க அநந்தரம் –
ஸ தத்வர பரீஷார்த்தம் சம்போர்மூர்த்னி வ்ருகா ஸூர -ஸ்வ ஹஸ்தம் தாதுமாரேபே ஸோ அபிப்யத் ஸ்வ க்ருதாச்சிவ —
தே நோபஸ் ருஷ்டஸ் சந்த்ரஸ்த உபதாவன் சவேபது -யாவதந்தம் தயவோ பூ மே காஷ்டா நாம தராபுவ -என்கிறபடியே
அவன் அத்தைப் பரீஷிக்கைக்காக -இவன் தலையைத் தொட சோக பீதனாய்
இவனோடு அவன் கண்டவிடம் எங்கும் ஓடிப் போக்கற்று ஸ்ரீ வைகுந்தத்து ஏறச் செல்ல
சர்வேஸ்வரன் இவனுடைய க்லேசத்தைக் கண்டு நடுவே வந்து ஆவிர்பவித்து
வருகாஸூரனைப் பார்த்து -இவன் ப்ராந்தன் பொய்யல்லது சொல்லான் -உன் தலையைத் தொட்டுப் பார்க்க மாட்டாயோ என்ன அநந்தரம்
அவன் தன்னுடைய தலையைத் தொட்டு ம்ருதனாய் விழுந்தான் என்று ஸ்ரீ பாகவதத்திலே
வருகா ஸூராய கிரிசோ வரம் தத்வாப சங்கடம் -என்று தொடங்கி இவன் ஆபன்னான படியையும் –
சர்வேஸ்வரன் இவன் ஆபத்தைப் போக்கின படியையும் இவனுடைய அஜ்ஞ்ஞான அசக்திகளையும் சொல்லிற்று –

அந்தகா ஸூரனை நிரசிக்கைக்காக மாத்ரு கணங்களை சிருஷ்டிக்க
த்ரை லோக்யே பஷ்யமாணே து ததா மாத்ரு கணே ந வை
நருசிம்ஹா மூர்த்திம் தேவசம் ப்ரதத்யௌ பகவான் சிவா -என்று அத்தாலே நோவு பட
தன்னாலே சமிப்பிக்க ஒண்ணாமையாலே
சர்வேஸ்வரனை த்யானம் பண்ண அவன் சமிப்பித்தான் என்று மாத்ச்ய புராணத்திலே இவனுடைய அஜ்ஞ்ஞான அசக்திகளையும் சொல்லிற்று –

ஆக இப்படி
ஸ்ருஜ்யத்வ சம்ஹார்த்யத்வ கர்ம வச்யத்வங்களைச் சொல்லுகையாலே இவனுக்கு காரணத்வம் கூடாது –
ஆகையால் ஹிரண்ய கர்ப்பாதி சப்தங்கள் போலே சிவ சம்ப்வாதி சப்தங்களும் நாராயண பரங்கள் –

சிவன் என்றது -சர்வ பிரகார ஸூத்தன் என்றபடி –
சிவ சப்தம் சிவ மஸ்து சர்வ ஜகதாம் -என்றும் –
சிவாச்தே சந்து பந்தான-என்றும் –
சிவம் கர்மாஸ்து -என்று ஸூத்ததி மங்கள குண விசிஷ்ட வஸ்துக்களிலேயும் பிரயுக்தம் –

சம்பு என்றது -சாம் -ஸூகம் பாவயதீதி சம்பு -என்கிற வ்யுத்பத்தியாலே சர்வ ஸூக ப்ரதன் என்றபடி –
சம்பு சப்தம் -த்ருஹிணனையும் சொல்லும்
சர்வஸ் சர்வஸ் சிவஸ் ஸ்தாணு -என்றும் –
ஸ்வயம்பூஸ் சம்பு ராதித்ய -என்று குண விவஷையாலே இவை தான் நாராயணன் பக்கலிலே பிரயுக்தங்கள்

யானி நாமானி கௌணானி-என்கையாலே இவை தான் யௌகிகங்கள்
நாராயண பதம் ருத்ரனைச் சொல்ல மாட்டாது
இது தன்னைப் பல உபநிஷத்துக்களிலும் பல காலும் சொல்லிற்று -சிவ சப்தத்துக்கு அதில்லை –

நனு-
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ் தே சர்வே சம்பிரஸூயந்தே -என்று அவர்களோடு ஒக்க நாராயணனும் பிறந்தான் என்றும் –
ஸ்ரீ ராமாயணத்திலும் லைங்காதி புராணங்களிலும் ப்ருகு சாபத்தாலே இவனுக்கு துக்க அனுபவம் உண்டாய்த்து என்றும் சொல்லுகையாலே
இவனுக்கு கர்ம வஸ்யத்வம் உண்டே என்னில் –அது சொல்ல ஒண்ணாது –

ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே என்கிற விடத்திலே இவனை அவர்களைப் போலே பிறந்தான் என்கிறது அன்று –
ரஷார்த்தம் சர்வ பூதாநாம் விஷ்ணுத்வம் உபஜக்மிவான் -என்கிறபடியே
ராகவ யாதவ சஜாதீயனானால் போலே
ப்ரஹ்ம விஷ்ணு சஜாதீயனாய்க் கொண்டு விஷ்ணுவாய் வந்து திருவவதரித்த படியைச் சொல்லுகிறது –

அஜாயமானோ பஹூதா விஜாயதே -என்று ஸ்ருதி தானே கர்ம மூலமான ஜென்மத்தை நிஷேதித்து
ஐச்சிகமான ஜென்மத்தை விதித்தது –
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாபமா -என்றும் –
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்றும்
பஸ்ய தேவஸ்ய மஹாத்ம்யம் மஹிமா நஞ்ச நாரத —ஸூ ப ஸூ பை கர்மபிர்யோ ந லிப்யதே கதாசன -என்றும்
ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் -என்றும் –
ஸூ பா ஸூ பைர்வி நிர்முக்தம் ஊர் மிஷட்காத் பரம் ப்ரபும் -தம் வைத்யமமலம் விஷ்ணும் சதா தாயன் விமுச்யதே -என்று
இவனை அ கர்ம வச்யனாகச் சொல்லிற்று –

சர்வ அவஸ்தா ஸூ வை விஷ்ணோர் ஜனனம் ச்வேச்சயைவது -சீலயா சைவ கிருஷ்ணே ந ஸ்வ குலச்ய ச சம்ஹ்ருதி –
ஐரகாஸ் தரச்ச லே நைவ கமனம் ச்வேச்சயைவ துர் -என்றும் –
தவிச சாபச்ச லே நைவ மவதீர்ணோபி லீலயா -இத்யாதியாலே
லைங்காதிகள் தன்னிலே பகவத் அவதாரம் ஐச்சிகம் என்று சொல்லிற்று –

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே –
தேவ திர்யக் மனுஷ்யேஷூ சரீர க்ரஹணாத்மிகா–லீலேயம் சர்வ பூதேஷு தவ சேஷ்டோப லஷணா-என்றும் –
நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்த ச -சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -என்றும் –
இச்சாக்ருஹீதாபி மாதோரு தேஹ-என்றும் –
சமஸ்த சக்த ரூபாணி தத் கரோதி ஜநேஸ்வர -தேவ திர்யக் மனுஷ்யாக்யா
சேஷ்டா வந்தி ஸ்வ லீலயா ஜகதாமுபகாராய ந சா கர்ம நிமித்தஜா -என்று
ஜகத் ரஷணார்த்தமாக இச்சையாலே அவதரிக்கிறான்

ரிஷி சாபத்தை சர்வ மர்யாதா ஸ்தாபநார்த்தமாகத் தானும் அனுவர்த்திகிகிறான் அத்தனை என்று சொல்லிற்று –
அஜோபிசன் அன்வ்யயாத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -ப்ரக்ருதிம் ஸ்வா மதிஷ்டாய சம்பவாம் யாத்ம மாயயா –
யதா யதா ஹி தர்மஸ்ய கலா நிர்பவதி பாரத -அப்யுத்தா நம தர்மஸ்ய ததாத்மானம் ச்ருஜாம் யஹம்-என்றும் –
பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று
தானும் அருளிச் செய்தான் இறே-ஆகையால் இவன் கர்மவச்யன் அன்று –

நனு –
ஸ்ரீ கிருஷ்ணன் புத்ரார்த்தியாய் கைலாசத்திலே சென்று ருத்ரனை அர்ச்சித்து அவன் பக்கலிலே புத்ரனை அபேஷித்தான்-
அவனும் புத்ரனைக் கொடுத்தான் -என்று மஹா பாரதத்திலே சொல்லுகையாலே
நாராயணனும் கர்ம வச்யனாய் ருத்ரனும் சரண்யபூதனாக வேண்டாவோ என்னில்

அங்குச் சொல்லுகிற அர்ச்சனா ப்ரார்த்த நாதிகள் கர்ம வச்யத்வாதி ஸூசககங்கள் அன்று என்னுமத்தை
அநயம் தேவ வரம் தேஹி பிரசித்தம் சர்வ ஜந்துஷூ -மர்த்யோ பூத்வோ பவான் தேவ மாமாராதய கேசவ –
மாம் வஹஸ்வ ச தேவேச வரம் மத்தோ க்ருஹாண ச -யே நாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோஸ் பவம்-என்று
ருத்ரன் அபேஷிக்க –
தேவ கார்யாவதாரேஷூ மனுஷ்யத்வம் உபேயிவான்-த்வாமேவாரா தயிஷ்யாமி மம த்வம் வரதோபவ -என்று
சர்வேஸ்வரனும் வரம் கொடுத்தான் என்று ஸ்ரீ வராஹ புராணத்திலே சொல்லிற்று –

புத்திர பிரதான அநந்தரம்
ருத்ரன் தேவர்களையும் ரிஷிகளையும் பார்த்து கிருஷ்ணன் ஜகன் மோஹநார்த்தமாகப் புத்ரார்த்தியாய் வந்தான் இத்தனை –
இவனே சர்வ காரண பூதன் -சர்வ ஸ்மாத் பரன் -மோஷ ப்ரதனும் இவனே –
இவனையே உபாசித்து முக்தராகப் பாருங்கோள்-என்று உபதேசிக்கையாலும் –
இவன் பரத்வத்தை பஹூ முகமாக ஸ்தோத்ரம் பண்ணுகையாலும்-
புத்ரனைப் பெறுகைக்காகப் பிறர் காலிலே விழுகிற கிருஷ்ணன் தானே வழியிலே கண்டா கர்ணனுக்கு மோஷம் கொடுக்கையாலும்
இவனுக்கு கர்மவச்யத்வாதி சங்கை இல்லை –

லைங்காதி புராணங்களிலே ஷேத்ர பிரகிருதி யோநி சக்தி மாயா சப்தங்களாலே ருத்ரனைப் பார்க்க
நாராயனனுக்குச் சொன்ன குண பாவம்
ருத்ராத் உத்பத்தி மூர்த்தி த்ரயாதீத சதாசிவபாராம்யம் தொடக்கமானவை –
ப்ரத்யஷ ஸ்ருதி விரோதத்தாலும் –
ஸ்வ கிரந்தத்தில் பரஸ்பர விரோதத்தாலும்
அக்நேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமசேஷூ பிரகீர்த்யதே -என்கிறபடியே இவை தான் தாமச புராண சித்தங்கள் ஆகையாலும்
பிராந்தி பரிகல்பிதங்கள் –

ப்ரஹ்ம ருத்ரர்களுடைய ஜன்மங்களும் ச்வேச்சையாலே யானாலோ வென்னில் -அது சொல்ல ஒண்ணாது –
ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்த ஜகதந்தர் வ்யவச்திதா பிராணின கர்ம ஜனித சம்சார வசவர்த்தின -என்றும்
ப்ரஹ்ம த்யாஸ் சகலா தேவா மனுஷ்யா பசவாஸ் ததா விஷ்ணோர் மாயாமஹா வர்த்தே மோஹாந்த தமஸா வ்ருதா -என்றும்
இவர்களை கர்ம பரதந்த்ரராகச் சொல்லுகையாலே –

இப்படி நாராயணனே காரணபூதன் என்கிற இவ்வர்த்தத்துக்கு நியாய வேண்டாதபடி –
அனந்தசாகா நிகில வேத நிகமனமாய் -உபாசன விதி விதுரமாய் –
சமஸ்த பர வித்யா உபாச்ய விசேஷ நிர்ணயகமாய் -நிகில வேதாந்த நிர்வாஹகமாய் இருந்துள்ள நாராயண அனுவாகம்
சகல வேதாந்தங்களிலும் பரம் ப்ரஹ்ம பரதத்த்வ பரமாத்மா பரம ஜ்யோதி பராயண புருஷா ஷராச்யுத விஸ்வாத்ம
சிவ சம்பு பிரமுக சப்தங்களாலே நிர்திஷ்டமான வஸ்துவை அவ்வோ சப்தங்களாலே அனுவதித்து நாராயணன் என்று விசேஷித்து
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர-என்று கார்யத்வென சம்ப்ரதிபன்னனான இந்த்ரனோடே ப்ரஹ்ம ருத்ரர்களை சஹபடித்து
இவனுக்கு கார்ய பூதனாகவும் சொல்லிற்று –

ஆக இப்படி நியாய ஸ்வ பாவத்தாலும் –
நியாய நிரபேஷமாக ஸ்ருதி தானே விசேஷிக்கையாலும்-
ச நோ ஹரி -என்று ஹரி சப்தத்தாலே உபசம்ஹரிக்கையாலும்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஸ்ருஜ்யத்வ சம்ஹார்யத்வ கர்ம வச்யத்வங்களைச் சொல்லுகையாலும்
நாராயணனே காரண பூதன் –

யேன ஜாதானி ஜீவந்தி -என்றும் –
ஏஷ பூ தபால -என்றும் –
பரித்ராணாய சாதூனாம் -என்றும் –
ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்றும்
ச ஏவ பாதி -என்கிறபடியே ஸ்தாபகனும் இவனே –

யத் பிரயந்த்யபி சம்விசந்தி -என்றும்
யே நேதம் விஸ்வம் பரிபூதம் யதஸ்தி -என்றும் –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷேத்ரஞ்ச உபே பவத ஓதன -ம்ருத்யுர் யச்யோப சேசனம் -என்றும்
க்ரசேத் சம்ஹார சமயே ஜகதௌ தும்பராண்ட வத் –லீலயா யஸ்து பகவான் தம் கச்ச சரணம் ஹரிம் -என்றும்
சம்ப ஷயித்வா என்கிறபடியே சம்ஹர்த்தாவும் இவனே –

நனு ருத்ரன் சம்ஹர்த்தா வென்னும் இடம் உபயவாதி சித்தமாய் இருக்க
இவனே சம்ஹர்த்தா வென்னும் இடம் என் என்னில்
கல்பாந்தே ருத்ர ரூபீ யோக்ரசதே த்வ கிலம் ஜகத் –தமைந்த புருஷம் விஷ்ணும் ப்ரணதோ அஸ்மி ஜனார்த்தனம் -என்றும்
சிருஷ்டி ஸ்தித்யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம் -ச சம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்றும் –
ச ஏவ ஸ்ருஜ்யச்ச ச சர்க்க கர்த்தா ச ஏவ பாத்யத்தி ச பால்யதே ச -என்கிறபடியே
ருத்ர அந்தர்யாமியாய் நின்று இவனே சம்ஹரிக்கிறான் –
ஆகையாலே சகல ஜகஜ் ஜென்மாதி காரண பூதன் –

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே –தத் விஜிஜ்ஞாசஸ்வ -என்றும் –
ஆசாத் வா இதமக்ர ஆஸீத் –ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி –என்றும் –
தமேவம் விதவா நம்ருத இஹ பவதி -என்றும் –
பித்யதே ஹ்ருதய க்ரந்தி -என்றும்
த்வாமாராத்ய பரம் ப்ரஹ்ம யாதா முக்திம் முமுஷவ –வா ஸூ தேவம நாராத்ய கோ மோஷம் சமவாப் நுயாத் -என்றும்
சம்ஹாரார்ணவ மக்நா நாம் விஷயா கிராந்த சேதஸாம் –விஷ்ணு போதம் வி நா நாந்யத் கிஞ்சி தஸ்தி பராயணம் -என்றும்
சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம்–த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷீண -என்றும்
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் சதிரா த்வயி –தர்மார்த்தகாமை கிம் தஸ்ய முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா -இத்யாதியாலே
காரண வஸ்துவே உபாஸ்யம்-மோஷ ப்ரதம்-முக்த ப்ராப்யம் -என்கையாலே
முமுஷு உபாஸ்யனும் மோஷ ப்ரதனும் முக்த ப்ராப்யனும் இவனே –

—————————————————————

பூர்வ பஷம்-
நனு –சாந்தோக்ய தஹர வித்யையில்-தைத்ரிய தஹர வித்யையிலும்-ப்ருஹ தாரணயகத்திலும் -அதர்வசிகையிலும்
தஹரோ அஸ்மின் நந்தர ஆகாச தஸ்மின் யதந்தஸ் தத ந்வேஷ்டவ்யம் -என்றும் –
ககனம் விசோகஸ் தஸ்மின் யதந்தஸ் தாது பாசிதவ்யம் -என்றும் –
ய ஏஷோ அந்தர்ஹ்ருதய ஆகாசாஸ் தஸ்மின் சேதே-சர்வச்ய வசீ சர்வஸ் யேசான-என்றும்
சம்பு ராகாசமத்யே திய -என்றும் –
ஆகாச சப்தத்தாலே நாராயணனைச் சொல்லி -அதுக்கு அவ்வருகே
சம்பு சிவ ஈசான மகேஸ்வர சப்தங்களாலே ருத்ரனை உபாஸ்யனாகச் சொல்லிற்று –

சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா -என்று நாராயணனுக்கு அசாதாரணமான நாம ரூப கர்த்ருத்வத்தை
ஆகாசோ ஹவை நாம ரூப யோர் நிர்வஹிதா -என்று சொல்லுகையாலே
சாந்தோக்ய தஹர வித்யையில் ஆகாச சப்தம் நாராயண பரம் –
அத்தோடு ஏகார்த்தமாக வேண்டுகையாலே அல்லாத விடங்களிலும் ஆகாச ககன சப்தங்களும் நாராயண பரங்கள் –
அதர்வசிரச்சிலே நாலு கண்டத்தாலே ருத்ரனுடைய சர்வ ஐஸ்வர்யத்தைச் சொல்லி -அஞ்சாம் கண்டத்தாலே –
தமாத்மச்தம் யே அனுபச்யந்தி தீரா தேஷாம் சாந்திச் சாஸ்வதீ நேதரேஷாம்-என்று
ஹ்ருதய அந்தர்வர்த்தியான ருத்ரனுடைய உபாசனத்தையும்
அதுக்கு பலம் மோஷம் என்னும் இடத்தையும் –
பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ்யான்காநி சம்சப்ருசேத் தஸ்மாத் -வ்ரதமேதத் பாஸூ பதம் பஸூ பாஸ விமோஷாய -என்று
பா ஸூ பத வ்ரதத்தைச் சொல்லுகையாலே உபாஸ்யத்வ மோஷ பிரதத்வங்கள் கண்டோக்தம் —

ஸ்வேதாஸ்
வதர உபநிஷத்திலே ததோ யதுத்தரதரம் -என்று நாராயணனில் பரத்வத்தையும் –
ய ஏதத் விதுரம்ரு தாஸ்தே பவந்தி என்று மோஷ பிரதத்வத்தையும் சொல்லிற்று —
தஸ்மாத் சர்வகத்தஸ் சிவ என்கையாலே இது தான் ருத்ர பரம் என்னும் இடம் சித்தம் –
ருத்ரஸ் தாரகம் ப்ரஹ்ம வ்யாசஷ்டே –யே நா ஸா வம்ருதீ பூத்வா மோஷி பவதி -என்கிற
ஜாபாலி ஸ்ருதியாலும் மோஷ பிரதத்வம் கண்டோக்தம் –
ஸ்ரீ ருத்ர சத ருத்ர ருத்ர பஞ்ஜர பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்களிலேயும் ருத்ர வைபவத்தைச் சொல்லிற்று –
ஆகையாலே ருத்ரனும் உபாஸ்யனும் மோஷ பிரதனுமாக வேண்டாவோ என்னில்

———————————————-

சித்தாந்தம் –
அது அனுபபன்னம் -சாந்தோக்ய தஹர வித்யை தன்னில் –
கிம் தத்ர வித்யதே யதன்வேஷ்டவ்யம் -என்று ஸ்ருதி தானே சோத்யம் பண்ணி
தஸ்மின் காமாஸ் சமாஹிதா -ஏஷ ஆத்மா அபஹத பாப்மா –இத்யாதியாலே தஹர ஆகாசத்திலே உபாஸ்யமாகச் சொல்லிற்று –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் என்று சமாதானம் பண்ணிற்று –
தைத்ரீய தஹர வித்யா வாக்யம் இத்தோடு ஏகார்த்தம்-ய -என்று
அகார வாச்யனைச் சொல்லுகையாலே -மகேஸ்வர சப்தம் அவயவ சக்த்யா சர்வ நியந்தாவான நாராயணனைச் சொல்லுகிறது –
அகாரோ விஷ்ணு வாசக – என்கையாலே அகார வாச்யன் நாராயணன் –

ப்ருஹ தாரணயத்திலும் அதர்வசிகையிலும் சொன்ன ஆகாச சப்தம் பரம புருஷ பரம் அன்று –
சர்வ பிரசித்த ஆகாச பரம் –
தஹராகாசாதிகளில் போலே புருஷோத்தமனுக்கு அசாதாரணமான தர்மம் இல்லாமையால் இவ்விடங்களில்
ஈசான சம்பு சிவ சப்தங்கள் வசித்தவ ஜகத் காரணத்வாதி பரமாத்மாசாதாரண தர்ம சம்பத்தாலே
ஈசான பிராணத-என்றும் –
ஸ்வயம் பூச் சம்பு -என்றும் –
சர்வஸ் சர்வஸ் சிவ -என்கீற சப்தங்களோடு பர்யாயங்கள் –

காரணம் து த்யேய-என்கிற வாக்யம் -காரண த்வத்யேயத்வங்கள் இரண்டையும் விதிக்கிறது அன்று –
த்யானத்தை விதிக்கிறது
இரண்டையும் விதிக்கும் போது வாக்ய பேதம் பிரசங்கிக்கும் –
அனுவதிக்கும் போது அத்யத பிரசித்தமானத்தை அனுவதிக்க வேண்டுகையாலே
காரண வாக்யங்களில் காரண பூதனாகச் சொன்ன நாராயணனை அனுவதித்து தத் த்யானத்தை விதிக்கிறது –

அதர்வசிரச்சிலே பிரதம கண்டத்தில் –
அஹமேக பிரதமமாசம் வர்த்தாமி ச பவிஷ்யாமி -ச நான்ய கச்சின்மத்தோ வ்யதிரிக்த -இத்யாதியாலே
ருத்ரன் தனக்கு விஸ்வ ஐஸ்வர்யத்தைச் சொல்லிற்று –
மத்தஸ் சர்வமஹம் சர்வம் -என்றும் –
அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்றும் –
ப்ராணோ அஸ்மி பிரஜ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித்யு பாஸ்வ -என்று
ப்ரஹ்லாத வாமதேவந்த்ராதிகளைப் போலே பரமாத்மா பாவநா ப்ரகர்ஷ பலத்தாலே என்னும் இடத்தை –
ஸோந்தராதந்தரம் ப்ராவிசத் -என்று ஸ்ருதி தானே சொல்லிற்று –

த்வதீய கண்டத்தில் சொன்ன தேவ வாக்யம் ருத்ர வாக்ய அனுவாதம் ஆகையாலே தத் வாக்ய துல்யம் –
த்ருதீய கண்டத்தில் பரமாத்வின் வைபவம் சொல்லுகிறது –
சதுர்த்த பஞ்சமா கண்டங்களில் ஓங்கா ராதி -பிரணவ நாமங்களையும் தத் நிர்வசனங்களையும் சொல்லுகிறது —
ஆகையாலே ருத்ர பரங்கள் அன்று அந்த சப்தங்கள் -பிரணவ வாக்ய நாராயண பரங்கள்
ஷஷ்ட கண்டத்தில் சொன்ன ருத்ர உபாசனம் -மது வித்யையில் சொன்ன ஆதித்ய உபாசனம் போலே பரமாத்மா உபாசனம் –
இதில் சொன்ன பச்ம ஸ்பர்சம் -சௌத்ராணியில் சொன்ன ஸூராக்ரஹணம் சர்வக்ரதுசாதாரணம் அல்லாதாப் போலே
சர்வ உபாசன சாதாரணம் அன்று –

சாந்தோக்யாதிகளில்-அசதே வேதமக்ர ஆஸீத் -இத்யாதிகளிலே
பரமத உபன்யாசம் பண்ணினால் போலே இவ்விடத்திலும் பரமத உபன்யாசம் பண்ணுகிறது –
லைங்கத்திலே நக்னத்வாதி தர்மாங்கமாகச் சொல்லுகையாலும்
அதர்வ சிரச்சில் சொன்ன மந்த்ரங்களை பஸ்மோத் தூள நத்திலே விநியோகிக்கையாலும்
அதர்வ சிரச்சிலும் லைங்கத்திலும் சொன்ன பாஸூபத வ்ரதம் ஏகம் ஆகையாலும்
அர்த்தர்த்த சார்த்த சம்யுக்தம் கூடம் ப்ராஜ்ஞவி நிந்திதம் வர்ணாஸ்ரம க்ருதைர் தர்மைர் விபரீதம் க்வசித் சமம் –என்று
லைங்கம் தன்னிலே அவைதிகமாகச் சொல்லுகையாலும் –
அதர்வ சிரச்சிலே அதிகார ஸ்ரவணத்தாலே விசேஷண சர்வாதிகாரத்வம் அப்ராப்தமாக ஸ்ரீ வராஹ புராணத்திலும் ஆதித்ய புராணத்திலும்
வேத பாஹ்யாதிகாரம் என்று சங்கோசிக்கையாலும்
பஸ்மச்சன்னோ பச்ம சய்யாசயான -என்று சாதாதப தர்ம சாஸ்த்ரத்தில் மஹா பாதக நிவர்த்தகமாகச் சொன்ன
பஸ்மோத் தூளனம் பிராயச்சித்த விஷய மாகையாலும்
லோக பிரசித்தியாலும் இது அவைதிகம் என்று சிலர் சொன்னார்கள்

ஸ்வேதாஸ் வதரத்தில் நாராயணாத் பரத்வமும் மோஷ பிரதத்வமும் சொல்லுகிறது என்கிறதுவும் அனுப பன்னம் –
வேதாஹமேதம் என்று தொடங்கி நான்ய பந்தா -என்று மஹா புருஷ வேதனம் மோஷ சாதனம் என்றும்
தத் வ்யதிரிக்த உபாயம் இல்லை என்றும் –
யஸ்மாத் பரம் நாபரம் -இத்யாதியாலே ப்ரஸ்துத புருஷனே பரன் -தத் வ்யதிரிக்தர் அடைய அபரர் என்று சொல்லி வைத்து
அநந்தரம் வேறே யொரு வஸ்துவைப் பரம் என்றும் மோஷ ப்ரதம் என்றும் சொல்லுகையாகிறது
பிரதிஜ்ஞா ஹேது விரோதத்தாலே அசங்கதம் ஆகையால் –

மஹான் ப்ரபுர்வை புருஷஸ் சத்த்வச்யைஷா ப்ரவர்த்தக -என்று ப்ரஸ்துதனான மஹா புருஷனை
சத்வ ப்ரவர்த்தகனாகச் சொல்லுகையாலும்
சத்வ ப்ரவர்த்தகன் விஷ்ணு வென்னும் இடம் –
அதயோ ஹைவ கலு ஏஷ வாச்ய சாத்விகாம்ச ஸோ அசௌ ப்ரஹ்ம சாரிணோ யோயம் விஷ்ணு
என்கிற மைத்ராயண யுபநிஷத் சித்தமாகையாலும்
ஸ்ரீ புருஷ ஸூக்த நாராயண அனுவாக ப்ரப்ருதிகளில் சொன்ன சர்வா நனத்வாதிகளை -சர்வா நனசிரோக்ரீவ இத்யாதிகளில்
சொல்லுகையாலும் இந்த பிரகரணம் நாராயண பரம்

ததோ யதுத்தரதரம் என்கிறவிடத்தில் தச் சப்தம் ஹேது பரம் -அன்றிக்கே இதம் சர்வம் என்று
கீழ்ச் சொன்ன பிரபஞ்சத்தைப் பராமர்சிக்கிறது ஆகவுமாம் –
சிவ சப்தம் அவயவ சக்த்யா நாராயண பரம் –
ருத்ரஸ் தாரகம் -இத்யாதிகளில் சொல்லுகிறது மோஷ பிரதத்வத்தை யன்று -ஜ்ஞான உபதேஷ்ட்ருத்வத்தை –
ச நோ தேவஸ் ஸூ பா ச்ம்ருத்யா சம்யுனக்து -என்கிற இடத்தில் சொல்லுகிறதும் ஜ்ஞான பிரதத்வத்தை –
உபாயோ அஸ்மி ஹரே ச்ம்ருதௌ-என்றும் –
ஈச்வராத் ஜ்ஞாமமன்விச்சேத்-இத்யாதிகளாலே அவனுடைய ஜ்ஞான உபேதேஷ்ட்ருத்வமும்
நாராயணனுடைய மோஷ பிரதத்வமும் சித்தம் –

சங்கரஸ்ய து யோ பக்த சப்த ஜன்மாந்தரம் நர –தச்யைவ து பிரசாதேன விஷ்ணு பக்த பிரஜாயதே -என்கிற படியே
ருத்ரன் பகவத் பக்தியை யுண்டாக்கும் அத்தனை -ஆகையால் இறே ருத்ர பக்தனான வாணன் –
நிர்வைரிதா ச விபுதைர் விஷ்ணு பக்திர நுத்தமா வா ஸூ தேவாத் து மரணம் கல்பாந்தே குபிதாத் புன -என்று
ருத்ரன் பக்கலிலே பகவத் பக்தியை அபேஷித்தது-
ஸ்ரீ ருத்ர ராதிகளில் பரத்வ சிஹ்னமான ஜகத் காரணத்வ முமுசு உபாசயத்வ மோஷ பிரதத்வங்கள் இல்லாமை யாலும்
அக்னி சய நாதிகளிலே வி நியுக்தங்கள் ஆகையாலும் ருத்ர பரத்வத்தை சொல்லுகிறன வன்று –
ஆகையாலே ருத்ரனுக்கு உபாசயத்வ மோஷ பிரதத்வங்கள் கூடாது

———————

கிஞ்ச -யே ஸ்வ தர்மஸ்தி தா வர்ணா விப்ராத்யா குறு நந்தன -விகரம ஸூ நிவர்த்தந்தே ப்ரீதிமாம்ஸ் தேஷு கேசவ -ப்ரஹ்ம சாரி க்ருஹச்தாத்யா -என்றும் –
தஸ்மாத் ப்ரியத்வம் க்ருஷ்ணச்ய –யேஷாமதுஷ்டி பாரக்யே –வேதா பிரமாணம் ச்ம்ருதய -என்றும்
பரத் ரவ்யேஷூ ஜாத்யந்தா பரதா ரேஷ்வ பும்சகா -பரிவாதேஷூ யே மூகா தே சர்வே திதா மம -என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருத்யுதி தம் தர்மம் -என்றும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி மமைவாஜ்ஞா -என்றும்
த்விவிதோ பூத சர்க்கே அயம் தைவ ஆ ஸூ ர ஏவச விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதச் ததா ஸூ ர -என்கீற ஸ்ரீ விஷ்ணு தர்ம வசநங்களாலும்
தேவானாம் பரமோ தர்மஸ் சதா யஜ்ஞாதி கா க்ரியா –ஸ்வாத் யாய தத்தவ வேதித்வம் விஷ்ணு பூஜா இதி ஸ்ருதி –தைத்யா நாம் பஹூ மா நித்வம்
மாத்சர்யம் சத்ஸ்வ சத்க்ரியா நிந்தனம் வேத சாஸ்த்ராணாம் ஹர பக்தி ருதாஹ்ருதா -என்கிற ஸ்ரீ வாமன புராண வசனத்தாலும்
ஸூ ர பதிர ஸூ ரைஸ் சதாபி யுக்த-ப ஸூ பதி ரப்யவ நீதப்ருத்ய வர்க்க –ஸூ ர குருத் ருட பிரசாத கர்த்தா –
ஹரி சரனௌ ஸ்மரதோ அபவர்க்க ஹேது -என்கிற ஸ்ரீ நாரசிம்ஹ புராண வசனத்தாலும்
விஷ்ணு பக்தி சமாயுக்தான் ஸ்ரௌ தஸ்மார்த்த ப்ரவர்த்தகான் –ப்ரியோ பவதி யோ த்ருஷ்ட்வா வைஷ்ணவோ அசௌ ப்ரகீர்த்தித -என்கிற லைங்க வசனத்தாலும்
யே ச வேத வயதோ விப்ரா -என்றும் –
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த -என்கிற மஹா பாரத வசனத்தாலும்
பகவத் பக்தர்கள் சத்வ பிரக்ருதிகளாய் வைதிகராய் இருப்பார்கள் என்னும் இடம் சித்தம் –

ருத்ர பக்தர்கள் தமஸ் பிரக்ருதிகளாய் அவைதிகராய் இருப்பார்கள் என்னும் இடம் சித்தம் –
வாஸூ தேவ பரா யத்ர வேத மார்க்க அநு சாரிண–ருத்ர பக்தாஸ் த்ரயீ பாஹ்யா பஸ்மோத் தூள ந விக்ரஹா -என்கிற லிங்க வசனத்தாலும்
பஸ்மோத் தூள நம் ருத்ர பக்தர்களுக்கு லஷணம் என்னும் இடம் சித்தமாய் நின்றது –

பஸ்மோத் தூள நம் தான் தஸ்மாத் சர்வ பிரயத் நேன பஸ்மோத் தூலன விக்ரஹா –ஜடிநோ முண்டி நச்சைவ நாகனா நா நா ப்ரகாரிண-என்றும்
ஜடிலா முண்டி தாவாபி -என்று லைங்கத்திலும் மகா பாரதத்திலும் நக்னத்வாதி தர்ம சஹ சரிதமாகச் சொல்லுகையாலும்
நபச்மகேசதுஷா கரீஷ கபாலா மேத் யாந்யதி திஷ்டேத்-என்று நிஷேத த்ரவ்யங்களோடே சேர வைக்கையாலும் –
பஸ்மம் தான் அஸூத்த த்ரவ்யம் ஆகையாலும்
நக்னம் வா நுபநீதம் வா விபரம் த்ருஷ்ட்வா பிரமாதத –ம்ருத்பிர் த்வாத சபிஸ் ஸ் நாத்வா வாஸோபிஸ் சஹ ஸூ த்த்யதி -என்றும் –
தச்மாதேதான் நரோ நக்னான் த்ரயீ சந்த்யாக தூஷிதான் -சர்வதா வர்ஜயேத் ப்ராஜ்க்ன ஆலாப்ஸ் பர்ஸ நாதி ஷூ -என்று
நக்னத்வாதிகள் வேத பாஹ்யங்கள் ஆகையாலும்

த்ரிபுண்ட்ரத தாரிணோ நித்யம் பஸ்மோத் தூல நத்பரா -பவிஷ்யத்வம் த்ரயீ பாஹ்யா மித்யாஜ்ஞா நப்ரலாபின -என்றும் –
ருஷீணாம் மாயா சர்வமிதி சஞ்சிந்த்ய தத்ர வை -சசாப தான் ஜடாபாஸ் ம மித்யா வ்ரததராம்ஸ் ததா -பவிஷ்யத த்ரயீ பாஹ்யா வேத கர்ம பஹிஷ்க்ருதா -என்கிற
ஆதித்ய புராண ஸ்ரீ வராஹ புராண வசனங்களாலும் வேத பாஹ்ய லஷணம் என்கின்றன –

இப்படி வேத பாஹ்ய லஷணரான தாமச புருஷர்களாலே சேவ்யனாகையாலும்-
ஜ்ஞானாதி கார்யங்களாலும் -தேவதாத்வத்தாலும் ருத்ரனுக்கு சக்ருத் சத்வ குணம் உண்டேயாகிலும் –
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா -என்று குண த்ரய வைஷ்யன் ஆகையாலும்
தமோ குணம் உண்டாகையாலும்
அதுதான் ப்ரஹ்மாதிகளுக்கும் உண்டே யாகிலும் அவர்களிலும் -இவனுக்கு அதிசயித்து இருக்கையாலே –
ஆபேஷிகமான தாமசத்வ வ்யபதேசம் யுக்தமாகையாலும் -தானும் தாமச புருஷனாகையாலும் –
சாபேஷ்த்வ ஸூ சகங்களான ஜடா சர்மா வசனாதி சாதச தர்மங்களோடு கூடி இருக்கையாலும் ருத்ரனுக்கு உபாச்யத்வாதிகள் கூடாது

ஸ்ரீ புருஷ ஸூக்த பிரக்ரியையாலும் நாராயணனுடைய காரணத்வ முமுஷூ உபாச்யத்வ மோஷ பிரதத்வாதிகள் சித்தங்கள் –
நனு
இவனுக்கு அசாதாரணங்களான வாகன ஆயுத நாம் ச்ம்ருதிகளாலே அந்யதம சங்கீர்த்தனம் இல்லாமையாலும் –
ஈசான பதம் கிடக்கையாலும் நாராயண பரம் அன்றே என்னில் -அது அனுபபன்னம் –

சஹஸ்ர ஷீர்ஷத் வாதிகளைச் சொல்லுகையாலும் அவை தான்
இவனுக்கு அசாதாரணம் என்னும் இடம் நாராயண அநு வாகாதி சித்தங்கள் ஆகையாலும் –
லஷ்மீ பதித்தவ லிங்கத்தாலும் –
நாராயண பிரதிபாதிக ஸூ பால உபநிஷத்திலே புருஷ ஏவேதம்-என்று புருஷ ஸூக்த வாக்யத்தாலே நிகமிக்கையாலும் –
அதர்வணத்திலே வைஷ்ணவ்யாம் புருஷ ஸூகதம் -என்று வைஷ்ணவ மகா சாந்தி மந்த்ரமாக விநியோகிக்கையாலும்
சாந்தோக்யத்தில் ஏஷா வை வைஷ்ணவீ நாம சம்ஹிதா -என்கையாலும்-
பகவத் சமாராதன ரூப கர்மாதிகளிலே போதாயன ப்ரப்ருதி பரமர்ஷிகளாலே விநியுக்தங்கள் ஆகையாலும்
புருஷஸ்ய ஹரேஷ் ஸூ கதம் ஸ்வர்க்யம் தான்யம் யசஸ்கரம் என்கிற சௌநக வாக்யத்தாலும் பலவிடங்களிலும்
புருஷ சப்த பிரயோகம் பண்ணுகையாலும்
புருஷம் நாராயணம் என்கிற சமாக்யையாலும் நாராயண பரம் என்னும் இடம் சித்தம் –

இவ்விடத்தில் ஈசான சப்தம் நாராயண சப்தம் போலே சம்ஜ்ஞை யல்ல-
அம்ருதத்வஸ்யே சான் -என்கையாலே புருஷ சப்தம் இவன் பக்கலிலே ரூடம் –
சேதன சாமான்ய வாசியாகிற அவ்வளவால் பிரயுக்தமாகிறதன்று-சால பாத பாதி சப்தங்கள் போலே சாமான்ய விசேஷ வாசியாய் இருக்கும் –
முண்டகோப நிஷத்து தொடக்கமான பல உபநிஷத்துக்களிலும் –
புருஷ புண்டரீகாஷ-என்றும் –
தவிரத்வாத சேப்யஸ் தத்த்வேப்ய க்யாதோ அயம் பஞ்ச விம்சக –புருஷோ வா ஸூ தேவஸ்ஸ பரமாத்மேதி சோச்யதே-என்றும் –
வித்யாத்து புருஷம் பரம் -இத்யாத் யுப ப்ரும்ஹணங்களாலும்-
அதாதோ மகா புருஷஸ் யாஹாஹ–பரிசர்யாவிதிம் வ்யாக்யாச்யாம என்கிற போதாயன வசனத்தாலும் –
பரம பூமா நிவபதி பத்ய -என்கிற அர்வாசீன பிரசித்தியாலும்
புருஷ சப்தம் நாராயண பரம் என்னும் இடம் சித்தம் –

தத் புருஷாய வித்மஹே மஹா தேவாய தீ மஹி-என்றும் –
புருஷோ வை ருத்ர -இத்யாதி பிரதேசங்களில் ருத்ரனையும் புருஷ சப்தத்தாலே சொல்லா நின்றதே என்னில் –
அவ்வோ விடங்களில் நாமதயா ப்ரயுக்தம் ஆகிறதன்று-
நமசகார்யத்வ ஹேதுவான பரமாத்மா பிரகாரத்வம் அடியாக வந்த திரிபுர தஹன பராக்ரமாதி குண யோகம்
தொடக்கமான வற்றாலே பிரயுக்தம் ஆகிறது இத்தனை –

ஆக இப்படி பரத்வ சிஹ்னங்களான ஜகத் காரணத்வ-முமுஷு பாச்யத்வ மோஷ பிரதத்வங்கள் உள்ளது இவனுக்கே யாகையாலும்
சர்வே வேதா யத்பதமாம நந்தி -என்றும் –
சர்வே வேதா யத்ரைகம் பவந்தி -என்றும்
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும் –
வேதம் தானே தனக்கு பிரதிபாத்யன் நாராயணன் என்கையாலும்

வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -என்று நானே வேத பிரதிபாத்யன் என்று அவன் தானே சொல்லுகையாலும் –
நாராயண பரா வேதா -என்றும் –
வேதே ராமாயணே புண்யே பாரதேபரதர்ஷப –ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும்
ஏ நமேகே வதந்த்யக் நிம் மருதோ அன்யே பிரஜாபதிம் -இந்த்ரமேகே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்று
இங்கனே ரிஷிகளும் சொல்லுகையாலும்

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யா ச புன புன -இத மேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் சதா -என்றும்
தத்தவம் ஜிஜ்ஞா சமா நா நாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை –தத்த்வமேகோ மஹா யோகி ஹரிர் நாராயண பர -என்றும்
ஸ்ருதயாம் நரவ்யாக்ர வேத வேதாந்த நிச்சய –யஜ்ஞோ ஸோ யஜ்ஞபுருஷ புண்டரீகாஷ சம்ஜ்ஞித –யஸ்ஸ விஷ்ணு பரம் ப்ரஹ்ம எதோ நாவர்த்ததே புன -என்றும் –
விஷ்ணு ரேவ பரம் ப்ரஹ்ம த்ரிவேத மித பட்யதே –வேத சித்தாந்த மார்க்கே ஷூ தன்ன ஜா நந்தி மோஹிதா -என்றும்
யதே தத் பரமம் ப்ரஹ்ம வேத சாஸ்த்ரேஷூ பட்யதே-ச தேவ புண்டரீகாஷ ஸ்வயம் நாராயண பர -என்றும்
பகவான் வாஸூ தேவஸ்ஸ கீர்த்யதே அத்ர சநாதன –ச ஹி சத்யம் ருதஞ்சைவ பவித்ரம் புண்ய மேவச -என்று
பிரமாண தர்க்கங்களையிட்டு ஆராய்ந்தவர்கள் இவனையே பரதத்வம் என்று நிர்வஹிக்கையாலும்

அவற்றை ஒழியவே ப்ரஹ்ம விஷ்ணு சிவர்கள் மூவரிலும் அதிகர் ஆரோ வென்று ஆராய்ந்து
வா என்று ப்ருகுவைப் போகவிட்டுப் பரீஷித்து
தந்தி சம்யாத முனயோ விஸ்மிதா முக்த சம்சா –பூயாம்சம ஸ்ரத்ததூர் விஷ்ணும் யதாஸ் சாந்திர் யதோ அபயம் -என்று
சாந்த்யாதி குண யோகத்தாலே இவனையே அதிகன் என்று நிர்ணயிக்கையாலும் –

ஜ்ரும்பிதம் தத்த நுர்த்ருஷ்ட்வா சைவம் விஷ்ணு பராக்ரமை -அதிகம் மே நிரே விஷ்ணும் தேவாஸ் சர்ஷிகணாஸ் ததா -என்று
தேவர்கள் பரீஷித்து நிர்ணயித்த படியே பார்க்கவன் சொல்லுகையாலும் –

அவன் தான் ருத்ரன் பக்கலிலே செல்ல
அவன் த்யான பரனாய் இருக்க -நீ ஆரை த்யானம் பண்ணுகிறது என்று அவனைக் கேட்க –
யோகீச்வரம் ஜகன்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சனாதனம் -பத்ம நாபம் விசாலாஷம் சிந்தயாமி ஜகத்பதிம் -என்று
ஜகத் பதியான ஸ்ரீ மஹா விஷ்ணுவை த்யானம் பண்ணுகிறேன் என்று சொல்லுகையாலும்

நஹ்யே தஸ்மாதிதி நேத்யன்யத் பரமஸ்தி-என்றும் –
ந தச்யே சே கச்சன -என்றும் –
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -என்றும்
நாராயணாத் பரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி –எதத் ரஹஅச்யம் வேதா நாம் புராணா நான்ச –சம்மதம் சத்தமா -என்றும்
ந பிரமாதும் மஹா பாஹூ யோகீ சக்யோ பாரத கேசவ ப்ரமேப்ய பரம் தஸ்மாத் விஸ்வ ரூபாந்த வித்யதோ -என்றும்
இவனில் காட்டில் பரராய் இருப்பார் இல்லை என்கையாலே இவனே சர்வ ஸ்மாத் பரன் –

பர ஸ்வரூப நிர்ணய பிரகரணம் முற்றிற்று

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வத்ரயம் -ஈஸ்வர பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

December 14, 2015

சூர்ணிகை -141-
ஈஸ்வரன் அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் – சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்- விலஷண விக்ரஹ யுக்தனாய் – லஷ்மி பூமி நீளா நாயகனாய் – இருக்கும்
சூர்ணிகை -142-
அகில ஹேய பிரத்ய நீகன் ஆகையாவது
தமஸ் ஸூ க்கு தேஜஸ் போலேயும்-சர்ப்பத்துக்கு-கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடனாய் இருக்கை –
சூர்ணிகை -143-
அநந்தன் ஆகையாவது நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை –
சூர்ணிகை -144-
அந்தர்யாமி ஆனால் தோஷங்கள் வாராதோ வென்னில் —
சூர்ணிகை -145-
சரீர கதங்களான பால்யாதிகள் ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன தோஷமும் ஈஸ்வரனுக்கு வாராது –
சூர்ணிகை -146-
ஞானானநதைக ஸ்வரூபன் ஆகையாவது ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை –
சூர்ணிகை -147-
அதாவது கட்டடங்க அனுகூலமாய் பிரகாசமுமாய் இருக்கை
சூர்ணிகை -148-
இவனுடைய ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
நித்யங்களாய் நிஸ்ஸீமங்களாய்-நிஸ் சங்கயங்களாய்-நிருபாதி கங்களாய்
நிர்த் தோஷங்களாய்-சமா நாதிக ரஹீதங்களாய்-இருக்கும் –
சூர்ணிகை -149-
இவற்றில் வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகளுக்கு எல்லாரும் விஷயம் –
சூர்ணிகை -150-
ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு சக்தி அசக்தர்க்கு ஷமை சாபராதர்க்கு கிருபை துக்கிகளுக்கு வாத்சல்யம்
சதோஷர்க்கு சீலம் மந்தர்க்கு ஆர்ஜவம் குடிலர்க்கு சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு மார்த்த்வம்
விஸ்லேஷ பீருககளுக்கு சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு-இப்படி எங்கும் கண்டு கொள்வது-
சூர்ணிகை -150
இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே – நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் அவர்களுக்கு தருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருதத்வத்தையே நினைத்து அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய் பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும்-

சூர்ணிகை -151-
இவனே சகல ஜகத்துக்கும் காரண பூதன் –
சூர்ணிகை -153-
சிலர் பரமாணுவைக் காரணம் என்றார்கள்-
சூர்ணிகை -154-
பரமாணுவில்-பிரமாணம் இல்லாமையாலே ஸ்ருதி விரோதத்தாலும் அது சேராது
சூர்ணிகை -155-
காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள்
சூர்ணிகை -156-
பிரதானம் அசேதனம் ஆகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும்
சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை கூடாமையாலும் அதுவும் சேராது –
சூர்ணிகை -157-
சேதனனும் காரணம் ஆகமாட்டான்
சூர்ணிகை -158-
கர்ம பரதந்தனுமாய் துக்கியுமாய் இருக்கையாலே –
சூர்ணிகை -159-
ஆகையால் ஈச்வரனே ஜகத்துக்கு காரணம்
சூர்ணிகை -160
இவன் காரணம் ஆகிறது அவித்யா கர்ம பர நியோகாதிகளால் அன்றிக்கே ஸ்வ இச்சையாலே –
சூர்ணிகை -161-
ஸ்வ சங்கல்பத்தாலே செய்கையாலே இது தான் வருத்தம் அற்று இருக்கும் –
நினைத்த எல்லா பொருள்களுக்கும் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
சூர்ணிகை -162-
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –
சூர்ணிகை -163-
ஆனால் சம்ஹாரத்தில் லீலை ‘ குலையாதோ என்னில் –
சூர்ணிகை -164-
சம்ஹாரம் தானும் லீலை -யாகையால் குலையாது –
சூர்ணிகை -165-
இவன் தானே ஐகத தாயப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும் –
சூர்ணிகை -166-
ஆனால் நிர்விகாரன் என்னும்படி என் என்னில்-
சூர்ணிகை -167–
ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே –
சூர்ணிகை -168-
அதில் பரிணாமம் உண்டாம்படி என் என்னில் –
சூர்ணிகை -169-
விசிஷ்ட விசேஷண சத்வாரகமாக –
சூர்ணிகை -170-
ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே
சூர்ணிகை -171-
ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது அசித்தை பரிணமிப்பிக்கையும் சேதனனுக்கு சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப் பண்ணுகையும் –
சூர்ணிகை -172-
ஸ்திதிப்பிக்கை யாவது – ஸ்ருஷ்டமான வஸ்துக்களில் பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று சர்வ ரஷைகளையும் பண்ணுகை –
சூர்ணிகை -173-
சம்ஹரிக்கை யாவது அவி நீதனான புத்ரனை பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற கரணங்களை குலைத்திட்டு வைக்கை –
சூர்ணிகை -174-
இம் மூன்றும் தனித் தனியே நாலு பிரகாரமாய் இருக்கும் –
சூர்ணிகை -175–
ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மாவுக்கும் பிரஜாபதிகளுக்கும் காலத்திற்கும் சகல ஜந்துக்களுக்கும்
அந்தர்யாமியாய் ரஜோ குணத்தோடு கூட சிருஷ்டிக்கும் –
சூர்ணிகை -176-
ஸ்திதியில் விஷணவாதி ரூபேணஅவதரித்து மன வாதி முகேன சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி காலத்துக்கும் சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் சத்வ குணத்தோடு கூடி ஸ்திதிப்பிக்கும்-
சூர்ணிகை -177-
சம்ஹாரத்தில் ருத்ரனுக்கும் அக்னி அநதகாதிகளுக்கும் காலத்துக்கும் சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய் தமோ குணத்தோடு கூடி சம்ஹரிக்கும் –
சூர்ணிகை -178-
சிலரை ஸூ கிகளாகவும் சிலரை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர் கருண்யங்கள் வாராதோ -என்னில்
சூர்ணிகை -179–
கர்மம் அடியாகச் செய்கையாலும் மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே ஹித பரனாய்ச் செய்கையாலும் வாராது –
சூர்ணிகை -180-
இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப்பண்ணும் –
சூர்ணிகை -181-
விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதமாய் ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய் ஏக ரூபமாய் ஸூ த்த சத்வாத்மகமாய் சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய் யோகித்யேயமாய் சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் நித்ய முக்த அனுபாவ்யமாய் வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார காந்தமாய் சர்வ ரஷகமாய் சர்வாபாஸ்ரயமாய் அஸ்த்ர பூஷண பூஷிதமாய் இருக்கும்-
கத்யோதம் மின் மினி –
சூர்ணிகை -182-
ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
சூர்ணிகை -183-
அதில் பரத்வமாவது அகால கால்யமான நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
சூர்ணிகை -184-
வ்யூஹமாவது ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும் சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும் உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண நிற்கும் நிலை –
சூர்ணிகை -185-
பரத்வத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘ இவ்விரண்டு குணம் பரகடமாய் இருக்கும் –
சூர்ணிகை -186-
அதில் சங்கர்ஷணர் ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது
சாஸ்திர பிரவர்த்தனத்தையும் ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பார் –
சூர்ணிகை -187
பிரத்யும்னர் ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும் மனு சதுஷ்டயம் தொடக்கமான சுத்த வர்க்க சிருஷ்டியையும் பண்ணக் கடவராய் இருப்பர்-
சூர்ணிகை -188-
அநிருத்தர் சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும் கால ஸ்ருஷடிக்கும் மிசர ஸ்ருஷடிக்கும் கடவராய் இருப்பர்-
சூர்ணிகை -189-
விபவம் அனந்தமாய் கௌண முக்ய பேதத்தாலே பேதித்து இருக்கும் –
சூர்ணிகை -190-
மனுஷ்யத்வம் திர்யக்த்வம் ஸ்த்தாவ்ரத்வம் போலே கௌணத்வமும் இச்சையாலே வந்தது ஸ்வ ரூபேண அன்று –
தண்ட காரண்யத்தில் குப்ஜா மா மரமாகவும் திருவவதரித்தான்
சூர்ணிகை -191-
அதில் அப்ராக்ருத விக்ரஹங்களுமாய் அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே யிருக்கக் கடவதான முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -192-
விதி சிவ–வியாச ஜாமதக்ன யார்ஜூன விததே சாதிகள் ஆகிற
கௌண பரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுகத ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுஷூக்களுக்கு அனுபாச்யங்கள் –
சூர்ணிகை -193-
நிதயோதித-சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான-சாதுராதமயமும்-கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான-பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத-ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண-மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்களும் துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-
சூர்ணிகை -194-
அவதாரங்களுக்கு ஹேது இச்சை –
சூர்ணிகை -195-
பலம் சாது பரித்ராணாதி த்ரயம் –
சூர்ணிகை -196-
பல பிரமாணங்களிலும் ப்ருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது கர்மம் ஆக வேண்டாவோ என்னில்
சூர்ணிகை -197-
அவை தன்னிலே–சாபம் வியாஜ்யம்-அவதாரம் இச்சம் என்று பரிஹரித்தது-
சூர்ணிகை -198-
அந்தர்யாமித்வம் ஆவது அந்த பிரவிசய நியந்தாவாய் இருக்கை –
சூர்ணிகை -199-
ஸ்வர்க்க நரக பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்-சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே-சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்-அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு-ஹ்ருதய கமலத்திலே-எழுந்து அருளி இருக்கும் இருப்பு —
சூர்ணிகை -200-
அர்ச்சாவதாரம் -ஆவது தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி சந்நிதி பண்ணி அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும் கிருஹங்களிலும் எழுந்து அருளி நிற்கும் நிலை –
சூர்ணிகை -201-
ருசி ஜனகத்வமும் சுபாஸ்ரயமும் அசேஷ லோக சரண்யதவமும் அனுபாவ்யத்வமும்
எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரி பூர்ணம் –
இது தான் சாஸ்த்ரங்களாலே திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப் போரும் சேதனர்க்கு வைமுக்க்யத்தை மாற்றி
ருசியை விளைக்கக் கடவதாய் -இருக்கும்
சூர்ணிகை -202-
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும் அசவந்தரைப் போலேயும் இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் –

———————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வத்ரயம் -அசித் பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

December 14, 2015

சூர்ணிகை -77-
அசித்து ஞான சூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் –
அவஸ்தா பேதங்கள் உண்டே -சித் வஸ்து தானே ஏக ரூபமாய் இருக்கும்
சூர்ணிகை -78-
இது சுத்த சத்வம் என்றும் -மிஸ்ர சத்வம் என்றும் -சத்வ சூன்யம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –
பரமபதம் பிரகிருதி காலம் இவை மூன்றும் என்பர் மேல்
சூர்ணிகை -78-
இதில் சுத்த சத்வமானது–ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே கேவலசத்வமாய்
நித்தியமாய்-ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்-கர்மத்தால் அன்றிக்கே-கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் நித்ய முக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்கஅரிதாய் அதி அத்புதமாய் இருப்பதொன்று –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளம் –
சூர்ணிகை -80-
இத்தை சிலர் ஜடம் என்றார்கள் -சிலர் அஜடம் என்றார்கள் –
அஜடம் பெரும்பான்மையான அபிப்ராயம் -இஹ ஜடாமாதிமாம் கேசிதா ஹூ -தத்வ முக்தா கலாபம் -ஜடம் என்கிறவர் பஷம்
சூர்ணிகை -81-
அஜடமான போது நித்யருக்கும் முக்தருக்கும் ஈஸ்வரனுக்கும் ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும் –
சூர்ணிகை -82-
சம்சாரிகளுக்குத் தோற்றாது –
சம்சாரிகளுக்கு தோற்றாத அளவில் அதனுடைய ஸ்வயம் பிரகாசத்துக்கு கொத்தை இல்லை -தர்ம பூத ஞானம் கர்ம விசேஷங்களால்
பிரதிபந்திக்கப் படுவது போலே பத்த தசையில் சுத்த சத்வ பிரகாசத்வம் பிரதி பந்திதிக்கப் பட்டு உள்ளது
சூர்ணிகை -83-
ஆத்மாவிலும் ஜ்ஞானத்திலும் பின்னமான படி என் -என்னில்
சூர்ணிகை -84-
நான் என்று தோற்றாமையாலும்–சரீரங்களாய் பரிணமிக்கையாலும்-விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
சப தச பாசாதிகள் யுண்டாகையாலும்-பின்னமாகக் கடவது –
சூர்ணிகை -85-
மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
விபரீத ஜ்ஞான ஜநகமாய் நித்தியமாய் ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் பர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும்
சத்ருசமாயும் விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை என்கிறபேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
பிரகிருதி -அவித்யை மாயை —
சூர்ணிகை -86-
பிரகிருதி -என்கிறது விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது – விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
பிரகிருதி சப்தம் -மகாதாதி விக்ருதாதிகள் -காரணத்தை சொல்லும் -பிரக்ருதிச் ச பிரதிஜ்ஞாதிருஷ்டாந்த நுபரோதாத் –
அவித்யை ஞானம் இல்லாமை -ஞானத்தில் வேறு பட்டது -ஞான விரோதி -இங்கே ஞான விரோதி அர்த்தம்
மாயை விசித்திர ஆச்சர்ய சிருஷ்டி என்றபடி
சூர்ணிகை -87-
இதுதான்
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி மானாங்கார மனங்கள் – என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –
சூர்ணிகை -88-
இதில்-பிரதம-தத்வம்-பிரகிருதி
பிரகிருதி பிரதானம் அவயகதம் -குணங்களின் பாகுபாடு வியக்தமாக தெரியாதே –
சூர்ணிகை -89-
இது அவிபக்த தமஸ் -என்றும்விபக தமஸ் என்றும் -என்றும் அஷரம் என்றும் சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் –
சம்ஹார தசையில் நாம ரூப அர்ஹம் இன்றிக்கே அவிபக்த தமஸ் -சிருஷ்டி காலத்தில் விபக்த தமஸ் -பின்பு பகவத் சங்கல்ப விசேஷத்தால்
தமஸ் அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்ப்பத்வம் தோன்ற அஷர அவஸ்தை அடையும்
சூர்ணிகை -90-
இதில் நின்றும் குண வைஷம்யத்தாலே மஹதாதி விசேஷங்கள் பிறக்கும் –
சூர்ணிகை -91-
குணங்கள் ஆகிறன சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் –
சூர்ணிகை -92-
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபநதிகளான ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில் அனுத பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -93-
சத்வம் ஜ்ஞான ஸூ கங்களையும் உபய சங்கத்தையும் பிறப்பிக்கும் –
சூர்ணிகை -94-
ரஜஸ் ஸூ ராக தருஷணா சங்கங்களையும் காம சங்கத்தையும் பிறப்பிக்கும் –
சூர்ணிகை -95-
தமஸ் ஸூ விபரீத ஜ்ஞானத்தையும் அநவதா நத்தையும் ஆல சயதயையும் நித்ரையும் பிறப்பிக்கும் –
கார்யம் கொண்டு இவற்றை நிரூபிக்கிறார்
சூர்ணிகை -96-
இவை சமங்களான போது விகாரங்கள் சமங்களுமாய் அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்
விஷமங்கள் ஆனபோது விகாரங்கள் விஷமங்க ளுமாய் ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும் –
சூர்ணிகை -97-
விஷம விகாரங்களில் பிரதம விகாரம் மகான் –
சூர்ணிகை -98-
இது சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரிவிதமாய் அத்யவசாய ஜனகமாய் இருக்கும் –
சூர்ணிகை -99-
இதில் நின்றும் வைகார்யம் தைஜசம் பூதாதி என்று த்ரிவிதமான அஹங்காரம் பிறக்கும்
சூர்ணிகை -100-
அஹங்காரம் அபிமான ஹேதுவாய் இருக்கும் –
சூர்ணிகை -101-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ச்ரோத்ர-தவக்-சஷூர்-ஜிஹ்வா-க்ராணங்கள்–என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்-பாணி-பாத-பாயு-உபச்தங்கள்-என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஸூம் ஆகிற-பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் –
வைகாரிக -தைஜச -பூதாதி மூவகை பேதங்கள் அஹங்காரத்தில் -வைகாரிக -சாத்விக அஹங்காரம் -பூதாதி தாமஸ அஹங்காரம் –
சூர்ணிகை -102-
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் – இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாய்வும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்-இதில் நின்றும் தேஜஸ் ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்-இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –
சூர்ணிகை -103-
ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும் ஆகாசம் தொடக்கமான நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான நாலு பூதங்களுக்கும் காரணமாய் இருக்கும் என்றும் சொல்லுவார்கள்-
சூர்ணிகை -104-
தன மாத்ரங்கள் ஆவன பூதங்களின் யுடைய சூஷ்ம அவஸ்தைகள் –
தன்மாத்ரைகள் அவிசேஷங்கள்-பூமியும் அப்பும் இயற்கையாக சாந்தங்களாக இருக்கும் -தேஜஸ் வாயு கோரங்களாக இருக்கும் –
ஆகாசம் முடமாய் இருக்கும் -இவை கூடி மூன்றும் கலந்து இருக்கும்
சூர்ணிகை -105-
மற்றை இரண்டு அஹங்காரமும் வைகார்யங்களைப் பிறப்பிக்கும்
ராஜச அஹங்காரம் சஹகாரியாய் இருக்கும் –
சூர்ணிகை -106-
சாத்விக அஹங்காரம்-சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாய் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத சஹ க்ருதமாய்க் கொண்டு வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழிய தானே மனசை சிருஷ்டிக்கும் என்றும் சொல்லுவார்கள் –
சூர்ணிகை -107-
சிலர் இந்த்ரியங்களில் சிலவற்றை பூத கார்யம் என்றார்கள்
சூர்ணிகை -108-
அது சாஸ்திர விருத்தம்
சூர்ணிகை -109-
பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை –
சூர்ணிகை -109-
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் —
சூர்ணிகை -110-
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –
சூர்ணிகை -111-
அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் –
சூர்ணிகை -112-
அண்டங்கள் தான் அநேகங்களாய்-பதினாலு லோகங்களோடே கூடி-ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு-ஈஸ்வரனுக்கு கரீடா க நதுக சத்தா நீயங்களாய் ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-
கந்தர்வாதிகள் -புவர் லோகம் –க்ரஹ நஷாத்ரா இந்த்ராதிகள் சுவர்க்க லோகம்
அதிகாரம் கழிந்து அதிகார அபெஷை உள்ள இந்த்ராதிகள் மகர் லோகம்
சனகாதிகள் ஜனார் லோகம் பிரஜாபதிகள் -தபோ லோகம் ப்ரஹ்ம -சத்ய லோகம்
சூர்ணிகை -113-
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ் ஸூ பச நாதி ஹேது – ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது பிருத்வி தாரணாதி ஹேது –என்பார்கள்-
சூர்ணிகை -114-
ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விசாக சில பக்த யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் பொது –
சூர்ணிகை -115-
ஆகாசாதி பூதங்களுக்கு அடைவே சப்தாதிகள் குணங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -116-
குணா விநி மாயம் பஞ்சீ கரணத்தாலே –
சூர்ணிகை -117-
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே –
சூர்ணிகை -118-
முன்புத்தை தன மாத்ரைகளோடே கூடிக் கொண்டு உத்தர உத்தர தன்மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று என்றும் சொல்வார்கள்-
சூர்ணிகை -119-
சத்வ ஸூன்யமாவது காலம் –
சூர்ணிகை -120-
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் நித்யமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் சரீர பூதமாய் இருக்கும் –
சூர்ணிகை -121-
மற்றை இரண்டு அசித்தும் ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் போக உபகரண போக ஸ்தானங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -122-
போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்போக உபகரணங்கள் ஆகிறன –
சஷூராதி கரணங்கள் போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –
லீலா விபூதி பிரக்ரியை மட்டுமே இங்கே அருளிச் செய்யப் படுகிறது
ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சமஸ்த தேஹங்களும் போக ஸ்தானம் -அனுபவ ஜ்ஞானம் பிறக்கும் ஸ்தலம் –
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் உண்டான போகய போக உபகரணாதிகளையும் -அவதார கந்தமான ஷீரார்ணவ சயனம் -அவதார விசேஷங்கள்
-அர்ச்சாவதாரங்கள் ஆகிய இவற்றில் உண்டான விநியோக விசெஷன்களால் அறிவது –
சூர்ணிகை -123-
இதில் முற்பட்ட அசித்துக்கு–கீழ் எல்லை யுண்டாய்-சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே இருக்கும்
நடுவில் அசித்துக்கு சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே மேல் எல்லை யுண்டாய் இருக்கும்
காலம் எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –
சூர்ணிகை -124-
காலம் தான் பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்றும் சொல்லுவார்கள் –
சூர்ணிகை -125-
சிலர் காலத்தை இல்லை என்றார்கள் –
பௌ த்தாதிகள் காலம் இல்லை என்பர்
சூர்ணிகை -126-
பிரத்யஷத்தாலும்-ஆகமத்தாலும் சித்திக்கையாலே அது சொல்ல ஒண்ணாது –
சூர்ணிகை -127-
பலரும் திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் யுண்டு என்றார்கள் –
சூர்ணிகை -128-
பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளிலே அந்தர்பூதம் ஆகையாலே அதுவும் சேராது –
சூர்ணிகை -129-
சிலர் ஆவரணா பாவம் ஆகாசம் என்றார்கள் –
ஆகாசம் தனியாக இல்லை என்பர்
சூர்ணிகை -130-
பாவ ரூபேண தோற்றுகையாலே அதுவும் சேராது –
சூர்ணிகை -131-
வேறே சிலர் இது தன்னை நித்யம் நிரவயவம் விபு அபாரத யஷம் என்றார்கள் –
சூர்ணிகை -132-
பூதாதியிலே பிறக்கையாலும் அஹங்காராதிகள் இல்லாமையாலும் கண்ணுக்கு விஷயம் ஆகையாலும் அவை நாலும் சேராது
சூர்ணிகை -133-
தவக் இந்த்ரியத்தாலே தோற்றுகையாலே வாயு அப்ரத்யஷம் என்கிற அதுவும் சேராது –
சூர்ணிகை -134-
தேஜஸ் ஸூ பௌ மாதி பேதத்தாலே பஹூ விதம்
சூர்ணிகை -135-
அதில் ஆதித்யாதி தேஜஸ் ஸூ ஸ்திரம் தீபாதி தேஜஸ் ஸூ அஸ்திரம் —
சூர்ணிகை -136-
தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு ஸ்பர்சம் ஔஷண்யம்-
சூர்ணிகை -137-
ஜலத்துக்கு நிறம் வெளுப்பு-ஸ்பர்சம் சைத்யம் ரசம் மாதுர்யம்
சூர்ணிகை -138-
பூமிக்கு நிறமும் ரசமும் பஹூ விதம் –
சூர்ணிகை -139-
ஸ்பர்சம் இதுக்கும் வாயுவுக்கும் அனுஷணா சீதம்
சூர்ணிகை -140-
இப்படி அசித்து மூன்று படிப் பட்டு இருக்கும் –

————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வத்ரயம் -சித் பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

December 11, 2015

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-

லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –

சித் பிரகரணம் –

சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு-மோஷம் யுண்டாம்போது-தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

தத்வ ஜ்ஞாநாத் முக்தி –
போக்தா போக்யம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேன அம்ருதத்வமேதி -உபநிஷத்
பசுர் மனுஷ்யா பஷீ வா எ ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
-ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தாலே பெறலாம் என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா-
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்பர்சத்தாலும் கடாஷத்தாலும் சித்தி -என்றதே என்னில்
இங்கே சேதனனுக்கு -என்கிறதே -இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –
அங்குத் தானும் முமுஷ்த்வமும் -தத்வ ஞானமும் பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே கார்யகரமாகச் சொல்லுகிறது –
ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நான்ய பந்தா அயநாய வித்யதே -ஈஸ்வர தத்வம் ஒன்றையே அறிந்தால் போதுமே என்னில்
அத்தை சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் என்றும் காரண வ்யாபக தாரக நியாமாக சேஷியாக அறிய வேணுமே –
அவற்றின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியவே தானே இவை அனைத்தையும் அறிய முடியும்
ப்ருதகாத்மா நம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா -சுருதி வாக்கியம் என்பதால் சுருதி விரோதம் இல்லை

——————————————————

சூர்ணிகை -2- தத்வ த்ரயம் ஆகிறது -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும்
சூர்ணிகை -3-சித் என்கிறது ஆத்மாவை
சைதன்யம் அறிவுக்கு ஆதாரமான வஸ்து சித் என்கிறது -சேதனன் சித்து பர்யாயம்-அசேதனம் அசித்து பர்யாயம்

————————————————–

சூர்ணிகை -4
ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக-இந்த்ரிய-மன-பிராண-புத்தி விலஷணமாய்
அஜடமாய்-ஆனந்த ரூபமாய்-நித்யமாய்-அணுவாய்-அவ்யக்தமாய்-அசிந்த்யமாய்-நிரவயவமாய்
நிர்விகாரமாய்-ஜ்ஞாநாஸ்ரயமாய்-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்-தார்யமாய்-சேஷமாய்-இருக்கும்-

சூர்ணிகை -5
ஆத்ம ஸ்வரூபம்-தேஹாதி விலஷணம்-ஆனபடி என் என்னில்-

சூர்ணிகை -6
தேஹாதிகன் -என்னுடைய தேஹாதிகன் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும்-ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்-ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்

சென்று சென்று பரம் பரமாய் -என்னுடைய தேஹம் -இந்த்ரியம் மனம் பிராணம் ஞானம் –
தேகாதிகள் இதம் புத்திக்கு விஷயமாகும் -அஹம் அர்த்தத்தில் காட்டிலும் வேறுபட்டவை
ஜாக்ரத தசையில் மட்டுமே தேசோஹம்-புத்தி தோன்றும் -ஸூ ஷுப்தி தசையில் இல்லையே
மூர் பிறவி பலனாய் இருக்கும் லோக வழக்கும் உண்டே -எனவே தேஹாதி விலஷணம்-என்றதாயிற்று –

——————————————————————

சூர்ணிகை -7
இந்த உக்திகளுக்கு கண் அழிவு யுண்டே யாகிலும் சாஸ்திர பலத்தாலே ஆத்மா -தேஹாதி விலஷணனாகக் கடவன்

சாஸ்திரமே பிரபல பிரமாணம்
பஞ்ச விம்சோயம் புருஷ –ஆத்மா து ச மகாரேணே பஞ்ச விம்ச பிரகீர்த்ததே —ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தேஹாதிகளில் ஆத்மா விலஷணன் என்றதே

—————————————————————————————

சூர்ணிகை -8
அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –

ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-தானே தோற்றிக் கொண்டே இருப்பதே அஜடத்வம் -அத்ராயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி –

சூர்ணிகை -9
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –

சூர்ணிகை-10-
உணர்ந்தவன்-ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –

ஸூ கமாகவே உறங்கினேன் -நிர்வாண மய ஏவாய மாத்மா –ஜ்ஞானானந்த மயஸ் த்வாத்மா -ஜ்ஞானானந்தைக்க லஷணம்-இத்யாதி பிரமாணங்கள்

———————————————–

சூர்ணிகை -11
நித்யமாகை யாவது-எப்போதும் யுண்டாகை –

சூர்ணிகை -12-
எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம்

ஆத்மா தேஹத்துடன் சம்பந்தம் கொள்வதே ஜன்மம் -பிரிந்து போகும் பொழுது மரணம் -ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -பிரமாணங்கள் –

——————————————————-

சூர்ணிகை -13-
அணுவான படி என்-என்னில் –

சூர்ணிகை-14-
ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –
உத்க்ராந்தி கத்யாகதீ நாம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –

சூர்ணிகை-15–
அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –

சூர்ணிகை- 16-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –

சூர்ணிகை-17-
ஒருவன் ஏக காலத்திலே அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிறதும் ஜ்ஞான வ்யாப்தியாலே –
குணாத் வா ஆலோகவத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –சௌபரி அநேக தேக பரிக்ரஹம் ஜ்ஞான வ்யாப்தியால் –

சூர்ணிகை -18-
அவயகதம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை –
ச்சேத நாதி யோக்யாதி கடபடா தீநி வஸ்தூ நியை பரமாணைர் வ்யஜ்யந்தே தை –அயமாத்மா ந வ்யஜ்யதே-இதி அவ்யக்த -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயமாம் அத்தனை யல்லது இந்த்ரிய ஜ்ஞானத்துக்கு விஷயமாகாது –சென்று சென்று பரம் பரமாய் –ஞானம் கடந்ததே –

சூர்ணிகை -19-
அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று-நினைக்க ஒண்ணாது இருக்கை –
ஒருபடியாலும் நினைக்க ஒண்ணாது என்றது இல்லை -அசித்துடன் சஜாதீயமாக யென்ன ஒண்ணாது என்றபடி

சூர்ணிகை -20-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை –
அவயவ சமுதாயம் இல்லாதபடி -விஜ்ஞ்ஞான மயம் விஜ்ஞ்ஞான கனம் என்றபடி –

சூர்ணிகை -21-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–
அம்ருத அஷரம் ஹர —என்றும் -ஆத்மாகத்தோஷர -என்றும் அஷர சப்தத்தால் சொல்லப்படும் வஸ்து -சதா ஏக ரூபமாய் இருக்கை –

சூர்ணிகை -22-
இப்படி இருக்கையாலே-சஸ்த்ரம்-அக்னி-ஜலம் வாதம் ஆதபம்-தொடக்க மானவற்றால்
சேதித்தல்-தஹித்தல்-நனைத்தல்-சோஷிப்பித்தல் செய்கைக்கு-அயோக்யமாய் இருக்கும் –
நை நம் ச்சிந்தந்தி சஸ்த்ராணி–அச்சேத்யோயம் அதாஹ்யோயம்-வெட்ட கொளுத்த அற்ஹயமாய் இருக்காதே –

சூர்ணிகை -23-
ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –
சூர்ணிகை -24-அது ஸ்ருதி விருத்தம் –
சூர்ணிகை -25-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –
ஜைனர்கள் ஆத்மாவை தேக பரிமாணன் என்பர்
அம்ருத அஷரம் ஹர -ஏஷ அணுர் ஆத்மா –வாலாக்ர சத பாகச்ய
ஏவஞ்சாத்மா அகார்த்ச்ன்யம்-ப்ரஹ்ம ஸூ த்ரம் -கஜ பீபீலிகாதி சரீரங்களை ஸ்வ கர்ம அனுகுணமாக பரிக்ரஹிக்கும் அவர்களுக்கு
-யானை எறும்பு -சரீரம் -சைதில்யம் வருமே

சூர்ணிகை -26-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு-இருப்பிடமாய்-இருக்கை –
தீபம் ஒளி இரண்டுமே தேஜோ த்ரவ்யம் -தீபம் ஒளிக்கு ஆஸ்ரயம் -விஜ்ஞா தாரமரே கேன விஜாதீயாத் –ஜ்ஞானான் யேவாயம் புருஷ -பிரமாணங்கள்

சூர்ணிகை -27-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாதரம் ஆகில்
சூர்ணிகை -28-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –
பௌத்தர் ஜ்ஞான மாதரம் என்பர் ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் பிரத்யஷ சித்தம்

சூர்ணிகை -29-
ஜ்ஞாதா என்ற போதே–கர்த்தா-போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-
சூர்ணிகை -30-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
ஹேய உபாதேய ஜ்ஞானம் உண்டானால் –சிகீர்ஷை முயற்சி உண்டாகி கர்த்ருத்வம் உண்டாகும் -கர்த்தாவான போதே போக்தாவும் ஆகிறான் –

சூர்ணிகை -31
சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றார்கள்
சூர்ணிகை -32-
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும்
சாங்க்யர்கள் வாதம் –சாஸ்திரங்கள் விதி நிஷேதங்கள் சேதனனுக்கே-சாஸ்திர பலம் பிரயோக்தரி -கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத்
ஸ்வர்க்க காமோ யஜேத –முமுஷூ ப்ரஹ்ம உபாசீத —கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் –

சூர்ணிகை -33-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –
சூர்ணிகை -34-
குண சமசாகக் க்ருதம்
ப்ரக்ருதே க்ரியமாணாநி கர்மாணி சர்வச அஹங்கார வி மூடாத்மா கர்த்தா ஹமிதி மந்யதே -ஸ்ரீ கீதா –

சூர்ணிகை -35-
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்
ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் பகவத் ஆதீனம் -பிரதம யத்னத்தை அபெஷிததுக் கொண்டு ஈஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கிறான்
பராத் து தத் ஸ்ருதே –க்ருத பிரயத்த அபேஷஸ் து விஹித பிரதிஷித்த அவையர்த்த் யாதிப்ய
அந்தராத்மாவாக இருந்து -நல்லது செய்யும் அளவில் அனுக்ரஹித்தும் தீயது செய்யும் அளவில் நிக்ரஹத்தையும் செய்து அருளுவான்
நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் -ஆதாவீச்வர தத்தயைவ புருஷஸ் -ஸ்வா தந்த்ர்ய சக்த்யா ஸ்வ யம தத்தத் ஜ்ஞான சிகீர்ஷ்ண ப்ரயதி நானா
உத்பாதயன் வர்தாதே தத்ரோபேஷ்யே தத் அநு மத்யே விததத் தன நிக்ரஹ அநு க்ரஹௌ தத்தத் கர்மபலம் ப்ரயச்சதி ததஸ் சர்வச்ய பும்சோ ஹரி –
ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி யம் ஏப்யோ லோகேப்யோ உன்நீஷதி ஏஷ ஏவ அஸாது கர்ம காரயது யம் அதோ நிநீஷதி -உபநிஷத்
-சர்வ ஜன சாதாரணம் இல்லை -அனுமதி அளிக்கும் தன்மையே -அனுகூளர் பக்கல் அனுக்ரஹம் பிரதிகூலர் பக்கல் நிக்ரஹம்

சூர்ணிகை -36-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்

சூர்ணிகை -37-
ஜ்ஞானத்தை ஒழியவும்-தன்னை அறிகையாலும்-ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமே இருக்கையாலும் -சொல்லிற்று
யோ விஜ்ஞானே –விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே -ஸ்ருதிகளில் ஜ்ஞானம் என்கிற சொல்லாலே சொல்லிற்றே என்றபடி அதற்கு சமாதானம் அருளுகிறார்

சூர்ணிகை -38-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —
சரீரத்தின் உடைய சகல பிரவ்ருத்திகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாகிறாப் போலே சரீர பூதமான இவ்வாதம வஸ்துவினுடைய
சகல வியாபாரங்களும் சரீரியான பரமாத்வாவினுடைய புத்தி அதீநம் என்றபடி

சூர்ணிகை -39-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன சத்தை இல்லையாம்படி இருக்கை –

சூர்ணிகை -40-
சேஷமாகை யாவது சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை-
ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் -அசித்து பிறருக்காய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறருக்கும் பொதுவாய் இருக்கும் என்று முற்பட்ட நினைவு –
அங்கன் இன்றிக்கே அசித்தைப் போலே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -நமஸ்-அர்த்தம் முமுஷுப்படி

சூர்ணிகை -41
இதுதான் –க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை –

சூர்ணிகை -42
ஆத்மஸ்வரூபம் தான்-பக்த-முக்த-நித்ய-ரூபேண-மூன்றுபடிப் பட்டு இருக்கும் –
சூர்ணிகை -43
பத்தர் என்கிறது-சம்சாரிகளை –
சூர்ணிகை -44
முக்தர் என்கிறது சம்சார சம்பந்தம் அற்றவர்களை –
கேவலரையும் முக்தர் என்கிறது –
சூர்ணிகை -45-
நித்யர் என்கிறது ஒருநாளும் சம்சரியாத சேஷ சேஷசநாதிகளை –
சூர்ணிகை -46-
ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட சததாலீ சம்சர்க்கத்தாலே ஔஷண்ய சப்தாதிகள் யுண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே அவித்யா கர்ம வாசனா ருசிகள் உண்டாகிறன-
நெருப்பால் தண்ணீர் விகாரம் ஆவது போலே ரஜஸ் தமஸ் சத்வம் கலந்த அசித் சம்பந்தத்தால் ஜ்ஞானானந்த அமல ஸ்வரூப ஆத்மாவுக்கு அவித்யாதிகள் உண்டாகின்றன

சூர்ணிகை -47
அசித்து கழிந்த வாறே அவித்யாதிகள் கழியும் என்பார்கள் –
காரியம் நிவ்ருத்தமானால் காரணமும் நிவர்தமாகுமே -தத்வ வித்துக்கள் அசித் சம்பந்தம் நீங்கமே அவித்யாதிகள் கழியும் என்பர் –
சூர்ணிகை -48-
இம் மூன்றும் தனித் தனியே அனந்தமாய் இருக்கும் –
சூர்ணிகை -49-
சிலர் ஆத்மா பேதம் இல்லை ஏக ஆத்மாவே உள்ளது என்றார்கள் –
சூர்ணிகை -50
– அந்த பஷத்தில் ஒருவன் ஸூகிக்கிற காலத்தில் வேறே ஒருவன் துக்கிக்க கூடாது –
சூர்ணிகை -51-
அது தேக பேதத்தாலே என்னில்-
சூர்ணிகை -52-
சௌபரி சரீரத்திலும் அது காண வேணும் –
சூர்ணிகை -53-
ஒருவன் சம்சரிக்கையும் ஒருவன் முக்தனாகையும் ஒருவன் சிஷ்யனாகையும் ஒருவன் ஆச்சார்யனாகையும் கூடாது
சூர்ணிகை -54-
விஷம சிருஷ்டியும் கூடாது –
சுக துக்க -ஜீவ பேதமும் கர்ம தாராதம்யமும் விஷம சிருஷ்டிக்கு ஹேது –
சூர்ணிகை -55-
ஆத்மபேதம் சொல்லுகிற ஸ்ருதியோடும் விரோதிக்கும் –
நித்யோ நித்யா நாம் சேதனச் சேத நா நாம் எகோ பஹூ நாம் யோ விததாதி காமான் –
சூர்ணிகை -56-
சுருதி-ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்ன ஒண்ணாது –
சூர்ணிகை -57-
-மோஷ தசையிலும் பேதம் யுண்டாகையாலே –
சூர்ணிகை -58-
அப்போது தேவ மனுஷ்யாதி பேதமும் காம க்ரோதாதி பேதமும் கழிந்து ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய் ஒரு படியாலும் பேதம் சொல்ல ஒண்ணாத படி இருந்ததே யாகிலும்
சூர்ணிகை -59-
பரிமாணமும் எடையும் ஆகாரமும் ஒத்து இருக்கிற பொற்குடங்கள் ரத்னங்கள் வரீஹ்கள் தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே ஸ்வரூப பேதமும் சித்தம் –
சூர்ணிகை -60-
ஆகையால் ஆத்மா பேதம் கொள்ள வேணும் –
சூர்ணிகை -61-
இப்போது இவர்களுக்கு லஷணம் சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம் –
சேஷத்வம் மட்டும் சொன்னால் -அசித்துக்கும் பொருந்தும் -ஞாத்ருத்வம் மட்டும் ஒன்னால் ஈஸ்வரனுக்கும் பொருந்தும்
இது–சேஷத்வத்துடன் கூடிய ஞாத்ருத்வம் பத்தர் முக்தர் நித்யர் மூவகைப் பட்ட ஆத்மா வர்க்கங்களுக்கும் பொருந்தும்
சூர்ணிகை -62-
இவர்கள் யுடைய ஜ்ஞானம் தான் ஸ்வரூபம் போலே நித்ய த்ரவ்யமாய் அஜடமாய் ஆனந்த ரூபமாய் இருக்கும் –
சூர்ணிகை -63-
ஆனால் ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் வாசி என் என்னில்-
சூர்ணிகை -64-
ஸ்வரூபம் தர்மியாய் சங்கோச விகாசங்களுக்கு அயோக்யமாய் தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய் அணுவாய் இருக்கும்
ஜ்ஞானம் தர்மியாய் சங்கோச விகாசங்களுக்கு யோக்யமாய் ‘ தனை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய் விபுவாய் இருக்கும்
ஸ்வரூபமான ஞானம் -தர்மமான ஞானம் இரண்டையும் சொல்லிற்று ஆயிற்று -இரண்டுக்கும் வாசி காட்டி அருளுகிறார்
சூர்ணிகை -65-
அதில் சிலருடைய ஜ்ஞானம்-எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும் அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் ஒருக்கால் விபுவாய் ஒருக்கால் அவிபுவாய் இருக்கும் –
ஸ்வா பாவிகமாக ஞானம் விபுவாக இருந்தாலும் தாராதாம்யம் பார்கின்றோம்
-அயர்வறும் அமரர்கள் -சம்சாரிகள் -கரைகண்டோர் -முக்தர்கள் -மூவருக்கும் ஞான வாசி உண்டே
சூர்ணிகை -66-
ஜ்ஞானம் நித்யமாகில் எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்கிறபடி என் என்னில்-
சூர்ணிகை -67-
இந்த்ரியத் த்வாரா பிரசரித்து மீளுவது ஆகையாலே அப்படிச் சொல்லக் குறை இல்லை –
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி ச ச ஆனந்த்யாய கலப்பதே -மோஷ அவஸ்தையில் சர்வ விஷயம்
-சம்சார தசையில் கர்ம அனுகுணமாக இருக்குமே -இத்தால் ஜ்ஞானத்துக்கு நித்யத்வத்தில் குறை இல்லை
சூர்ணிகை -68-
இது தான் ஏகமாய் இருக்கச் செய்தே நாநாவாய்த் தோற்றுகிறது ப்ரசரண பேதத்தாலே –
சூர்ணிகை -69-
த்ரவ்யமான படி என் என்னில்
சூர்ணிகை -70-
க்ரியா குணங்களுக்கு ஆச்ரயமாய் அஜடமாய் இருக்கையாலே த்ரவ்யமாகக் கடவது —
க்ரியா ஆஸ்ரயம் த்ரவ்யம் -குணா ஆஸ்ரயம் த்ரவ்யம் -ஜடா வஸ்துக்களில் த்ரவ்யங்களும் உண்டு அத்ரவ்யங்களும் உண்டு
ஆனால் அஜட வஸ்துக்கள் -த்ரவ்யமாகவே தானே இருக்கும் ஆகவே ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடத்வாத்
சூர்ணிகை -71-
அஜடம் ஆகில் ஸூ ஷுப்தி மூர்ச்சாதிகளில் தோற்ற வேண்டாவோ என்னில்-
யத் அஜடம் தத் த்ரவ்யம் -யதா ஆத்மாதி -என்பதால் அஜடத்வத்தையும் கொண்டும் தரவ்யத்தை சாதிக்கிறார்
சூர்ணிகை -72-
பர ஸ்மரணம் இல்லாமையாலே தோற்றாது –
விஷயங்களை கிரஹிக்கிற வேளையில் தான் ஜ்ஞானம் தன்னுடைய ஆஸ்ரயத்துக்கு தானே பிரகாசிக்கும் –
சூர்ணிகை -73-
ஆனந்த ரூபம் ஆகையாவது ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது அனுகூலமாய் இருக்கை –
ஜ்ஞானம் பிரகாசிப்பது என்றது ஞானன் தனது ஆஸ்ரயத்துக்கு விஷயங்களைக் காட்டும் போது என்ற படி
சூர்ணிகை -74
விஷ சசராதிகளை காட்டும் போது பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி தேஹாத்மா ப்ரமாதிகள்-
சூர்ணிகை -75-
ஈஸ்வராதமகம் ஆகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ப்ராதிகூல்யம் வந்தேறி –
ஜகத் சர்வம் சரீரம் தே–தானி சர்வாணி தத்வபு -தத் சர்வம் வை ஹரேஸ் தநு -சகல பதார்த்தங்களும் சரீரம் அன்றோ
சூர்ணிகை -76-
மற்றைய அனுகூல்யம் ஸ்வா பாவிகம் ஆகில் ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே-காலாந்தரே இவன் தனக்கும் அத்தேசத்திலே அக்காலத்திலே வேறே ஒருவனுக்கும் பிரதிகூலங்களாகக் கூடாது
ஆக பகவாத்மகத்வ மூலகமான ஆனுகூல்யமே இயற்க்கை –

முமுஷுக்களுக்கு தத்வத்ரய ஞானம் அவச்யகம் -என்றும் -தத்வத்ரயம் சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் –
ஆத்மா வஸ்து உடைய ஸ்வரூபமும் லஷணமும்-பத்தர் முத்தர் நித்யர் மூவகை பட்டமையும் –
ஏகாத்ம வாதம் ஸ்ருதிக்கும் உக்திக்கும் ஒவ்வாது என்றும் ஆத்மாக்களுக்கு சேஷத்வதுடன் கூடிய ஜ்ஞாத்ருத்வம் அசாதாராண லஷணம் என்று காட்டியும்
ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் உண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்கள்
மூவகைப்பட்ட சேதனர்களின் ஞான விசேஷமும்-ஞானத்தின்
நித்ய த்ரவ்யத்வ அஜடத்வ ஆனந்த ரூபவத்வங்கள் விவரணம் சொல்லி சேதனத்வத்தின் உடைய வேஷம் நிரூபித்தித் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -5 -தத்வ த்ரய சிந்தன அதிகாரம் — —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 23, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு —

———————————————————————

தத்வ த்ரய சிந்தன அதிகாரம் —

தத்வ த்ரய நிரூபண ப்ரயோஜனம்
தத்வத்ரய விபாகம் –
ஜீவாத்ம நிரூபணம் –
பத்த ஸ்வரூபம் -முத்த ஸ்வரூபம் -நித்யர் ஸ்வரூபம் –
முக்தர்களுக்கு சர்வவித கைங்கர்ய சித்தி–
தர்ம பூத ஞான நிரூபணம் –
ஸூத்த சத்வ நிரூபணம்
த்ரிகுண த்ரய நிரூபணம் –
கால நிரூபணம் –
ஈஸ்வர தத்வ நிரூபணம்
பர ரூபம் -வ்யூஹ ரூபம் -விபவ ரூபம் -அர்ச்சா ரூபம் -அந்தர்யாமி ரூபம் –
அவதார ரஹஸ்யம் –
ஸ்ரீ லஷ்மீ தத்வ நிரூபணம் –
தத்துவங்களில் ஏறவும் சுருங்கவும் பண்ணும் விபாகங்களின் தாத்பர்யம் –

பிரகிருதி ஆத்மா பிராந்தி களதி சித் அசித் லஷண தியா
ததா ஜீவா ஈச ஐக்ய ப்ரப்ருதி கலஹ தத் விபஜநாத்
அத போக்தா போக்யம் தத் உபய நியந்தா நிகமை
விபக்தம் ந தத்த்வத்ரயம் உபதி சந்தி அஷ ததிய –

(சேதநங்கள் , அசேநதங்கள் —இவைபற்றிய ஜ்ஞானம் ஏற்படும்போது, இதுவரை எண்ணியிருந்த, இந்த சரீரமும், இந்த்ரியங்களுமே ஆத்மா
என்கிற மதி மயக்கம் அகலும்; அதாவது, சித் , அசித் இவைபற்றிய ஜ்ஞானம். ஆத்மா வேறு; உடல் இந்திரியங்கள் வேறு என்கிற
உண்மையான ஜ்ஞானம் ஏற்படும். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கிற தவறான வாதம் , இவற்றின் குணங்களால் உணரப்படும் போது
அகன்றுவிடும்.அதாவது, ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மையான ஜ்ஞானம்.)

சம்பந்தமும் அர்த்த பஞ்சகமும் கூட ஆறு அர்த்தம் அறிய வேண்டி இருக்க –
இவற்றில் ஏக தேசமான தத்வ த்ரயத்தை முமுஷூவுக்கு விசேஷித்து அறிய வேண்டும் என்று
ஆசார்யர்கள் உபதேசித்து போருகைக்கு அடி என் என்னில் –
பிரகிருதி ஆத்ம க்ரமமும்
ஸ்வ தந்திர ஆத்ம க்ரமமும்
இதற்கு நிதானமான அநீஸ்வர வாத ருசியுமான மஹா விரோதிகளை முற்படக் கழிக்க பிராப்தமாகை –
இத்தை நினைத்து போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபத்தாலே சாஸ்த்ரங்களிலே தத்வ விவேகம் பண்ணுகிறது –

(சரீர ஆத்ம பிராந்தி என்னாமல் பிரகிருதி ஆத்ம பிராந்தி என்றது இந்திரியம் மனஸ் பிராணன்
இவையும் ஆத்மா என்கிற பிராந்திகளும் உண்டே
பிரகிருதி கர்மா சம்சாரம் பிறவி -பர்யாயம் என்றாலும் -கர்மம் அடியாக சம்சாரத்தில் பிரக்ருதி பரிணாமத்தால்
உண்டான சரீரம் எடுத்து பிறக்கிறோம் –
போக்தா போக்யம் பிரேரிததா -விபாகம் அறிந்து அவனது அனுக்கிரகத்தால் மோக்ஷம்
அர்த்த பஞ்சகத்தில் இவை அடங்கி இருந்தாலும் -இவற்றின் அசாதாரணமான ஆகாரங்களை கொண்டு அறிவதற்காக
இந்த பிரகிருதி ஆத்ம பிரமங்கள் போன்ற அல்வழக்கைப் போக்கி அருள ஆச்சார்யர்கள் உபதேசம் –
அர்த்த பஞ்சகம் அறிவதற்கு முன்பே ப்ரக்ருதி ஆத்ம பிரமம் போன்றவற்றைப் போக்கி -பரமபுருஷார்த்த யோஜனை பிறந்து –
அதில் ருசி பிறந்து உபாயத்தை விசாரிக்கும் பொழுது அர்த்த பஞ்சக ஞானம் பிரயோஜனம் ஆகும் )

இவற்றில் வைத்துக் கொண்டு –
அசேதனா பரார்த்தா ச நித்யா சததவீக்ரியா த்ரிகுணா கர்மிணாம் ஷேத்ரம் பிரக்ருதே ரூப முச்யதே-பரம ஸம்ஹிதையில் -என்றும்
(ப்ரக்ருதி , அறிவில்லாதது, எப்போதும் மற்றவர்களுக்காகவே உள்ளது, தனது ஸ்வரூபத்துக்கு அழிவு இல்லை ,
எப்போதும் மாறுகிற குணம் உள்ளது, ஸத்வம் ,ரஜஸ், தாமஸம் என்கிற மூன்று குணங்களை உடையது,
கர்மாக்களைச் செய்கிறார்களே–சேதநர்கள் —-அவர்களுக்கு, அந்தக் கர்மாக்களின் பலனை அநுபவிக்கும் சரீரமாக உள்ளது.)

அநாதிர் பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ விச்யதே -என்றும் –
கலா முஹூர்த்தாதி மயச்ச காலோ ந யத்விபூதே பரிணாம ஹேது -விஷ்ணு புராணம்-என்றும் –
(பகவானுக்குச் சரீரமாக உள்ள, காலம் என்பதற்கு, தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை; மற்றும், வினாடி,
முஹூர்த்தம் என்று காலப் பரிணாமங்களைச் சொல்கிறோமே இவை, எம்பெருமானின் நித்யவிபூதியில்
எந்தவிதமான மாற்றங்களையும் செய்வதில்லை–உண்டாக்குவதில்லை. ஞானானந்த மயா லோகா -என்றும் -)

காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ரவை பிரபு -மஹா பாரதம் –சாந்தி பர்வம்-
(நித்ய விபூதியில் ,காலமானது எம்பெருமானுக்குக் கட்டுப்பட்டது. அவன்தான் காலத்தை நிர்ணயிக்கிறான்.
நித்ய விபூதியில், ”காலம் ” எவ்வித மாறுதல்களையும் ஏற்படுத்த இயலாது.) என்றும் இத்யாதிகளிலே
த்ரிகுண கால சுத்த சத்வ ரூபங்களான த்ரிவித அசேதனங்களினுடைய ஸ்வபாவம் சொல்லிற்று –

புமான் ந தேவோ ந நர நாயம் தேவோ ந மர்த்யோ வா -ஸ்ரீ விஷ்ணு புராணம்-
(மனிதனும் அல்லன்; தேவனும் அல்லன்-தேவனும் அல்லன் ; மனிதனும் அல்லன்)
ஷரஸ் சர்வாணி பூதானி கூடஸ்த அஷர உச்யதே -ஸ்ரீமத் பகவத் கீதை ( 15–16 )
(த்வாமிமௌ புருஷெள லோகே க்ஷரஸ் ஸாக்ஷர ஏவ ச |
க்ஷவ : ஸர்வாணி பூதானி கூடஸ்தோக்ஷர உச்யதே ||
கர்மவசத்துக்கு உட்பட்டவர்கள் –க்ஷரன் /க்ஷரம்-அதாவது, பத்தர் ,கர்மவசப்பட்டவர்கள் . முக்தர்–கர்மஸம்பந்தம்
இல்லாமல் இருப்பவர்–அக்ஷரர் . நித்யஸூரிகள் –அக்ஷரர் –கர்மவசத்துக்கு உட்படாதவர்கள்)

யத்வை பஸ்யந்தி ஸூரய–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
(நித்ய ஸூரிகள் பார்த்தபடி உள்ள இடம்) இத்யாதிகளாலே த்ரிவித ஜீவர்களுடைய பிரகாரம் விவேகிக்கப் பட்டது –

சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வம் சக்தி ஞான பல க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதி பிரசம்யூத -ஸ்ரீ விஷ்ணு புராணம்-
(ஈச்வரன் —-பகவான் –இவன் ஸர்வஜ்ஞன் –அனைத்தும் அவனே-இவன் ஸர்வக்ருத் —எல்லாம் அறிந்தவன்
இவன் ஸர்வ ——சக்தி, ஜ்ஞான ,பல , ஐச்வர்ய , குணாதிகள் நிறைந்தவன்; களைப்பு, சோம்பல்,
பயம், கோபம், காமம் போன்றவை இல்லாதவன்) இத்யாதிகளாலே
ஈஸ்வர ஸ்வ பாவம் உபதிஷ்டமாயிற்று

இவ் ஈசோசிதவ்ய ரூபமான தத்தவ நிற்கும் நிலையை –
ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -என்று ஆளவந்தார் ஆத்ம சித்தியில்
சுருங்க அருளிச் செய்து அருளினார்
(ஸ்வாதீன த்ரிவித சேதநாசேதன ஸ்வரூப ஸ்திதிப்ரவ்ருத்திபேதம் , க்லேசகர்மாதி
அஸேஷதோஷா ஸம்ஸ்ப்ருஷ்டம் , ஸ்வாபாவிக அநவதிகாதிஸய , ஜ்ஞான
பல , ஐச்வர்ய , வீர்ய , சக்தி , தேஜ :, ப்ரப்ருதி அஸங்க்யேய கல்யாண குணகணெளக
மஹார்ணவம் , பரமபுருஷம் , பகவந்தம் , நாராயணம் , ஸ்வாமித்வேன ,
ஸுஹ்ருத்வேன , குரூத்த்வேன ச பரிக்ருஹ்ய ————
சம்ஸாரி , முக்தன் , நித்ய ஸூரி என்றும், 3 வித ஜீவராசிகளுடையவும் , த்ரிகுண ப்ரக்ருதி , காலம்,நித்ய விபூதி
என்றும் 3 வித அசேதனங்களுடையவும் ஸ்திதி, ப்ரவ்ருத்தி , நிவ்ருத்தி இவைகளைத் தாமிட்ட வழக்காக உடையவரும் ,
5 வித க்லேசங்களும், புண்ய பாபரூபமான கர்மங்களும் எனப்படும் எவராலும் மாசுபடாதவரும் , மிக உயர்ந்தவரும்,
இந்த்ரியங்களின் உதவியே இல்லாமல் காண்பது, மூலகாரணமாகப் பொருளாக ஆகும் ஆற்றல், அனைத்தையும்
எவ்வித ச்ரமமும் இன்றி தரிக்கும் வலிமை , எல்லாரையும் /எல்லாவற்றையும் ஸங்கல்பத்தின்படி நடத்தும் தலைமை ,
சிறிதும் சோர்வு அடையாத பெருமை , அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் ஒளி —-இவைகள் எல்லாம் நிறைந்தவரும்,
ஸமஸ்த ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்தவரும், பகவானான ஸ்ரீமந் நாராயணனை ,நம்மையெல்லாம் அடிமையாக்கிக்கொண்ட
ஸ்வாமியாகவும் , ஆசார்யனாகவும் )

த்ரிவித சேதனர் என்றது –பக்தரையும் முக்தரையும் நித்யரையும்-
த்ரிவித அசேதனம் என்றது த்ரிகுண த்ரவ்யத்தையும் காலத்தையும் சுத்த சத்வமான த்ரவ்யத்தையும்-
ஸ்வரூபம் என்றது -ஸ்வ அசாதாரண தர்மத்தாலே நிரூபிதமான தர்மியை —
ஸ்திதியாவது இதினுடைய காலாந்தர அனுவ்ருத்தி –
இது தான் நித்ய வஸ்துக்களுக்கு நித்யையாய் இருக்கும் –
அநித்ய வஸ்துக்களுக்கு ஈஸ்வர சங்கல்பத்துக்கு ஈடாக ஏறியும் சுருங்கியும் இருக்கும்
இங்கு பிரவ்ருத்தியாவது -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான வியாபாரம் –

இவை எல்லாம் வஸ்துக்கள் தோறும் பிரமாண பிரதி நியதமாய் இருக்கும் –
பிரமாணங்கள் வஸ்துக்களைக் காட்டும் போது அவ்வோ வஸ்துக்களின் ஸ்வரூபத்தையும் –
ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் -நிரூபித ஸ்வரூப விசேஷணங்களையும் -வியாபாரங்களையும் காட்டும்

அதில் ஸ்வரூபத்தை ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே விசிஷ்டமாகவே காட்டும்
அந்த ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களை இட்டு அல்லது சொல்ல ஒண்ணாது –
அவற்றைக் கழித்துப் பார்க்கில் ச ச விஷான துல்யமாம் –முயலின் காது பற்றி பேசுவது போலே என்றவாறு –

ஆகையாலே ஜீவ ஸ்வரூபத்தை -ஞானத்வம் ஆனந்தத்வம் அமலத்வம் அணுத்வம் இத்யாதிகளான
நிரூபக தர்மங்களை இட்டு நிரூபித்து
ஞானம் ஆனந்தம் அமலம் அணு என்று இம் முகங்களாலே சொல்லக் கடவது –

இஜ் ஜீவ தத்வம் சர்வேஸ்வரனுக்கு சேஷமாயே இருக்கும் என்றும் –
அவனுக்கே நிருபாதிக சேஷம் என்றும் –
அயோக அந்ய யோக வ்யவச் சேதங்களாலே-பரம பதத்திலே தோன்றின சேஷத்வம்
சம்பந்த ரூபம் ஆகையாலே சம்பந்தி ஸ்வரூபம் நிரூபிதம் ஆனால் அல்லது அறிய ஒண்ணாமை யாலே
ஜீவனுக்கு இது நிரூபித ஸ்வரூப விசேஷணம் என்னலாம் –
அணுத்வே சதி சேதனத்வம் போலே ச்வத சேஷத்வே சதி சேதனத்வமும் ஜீவ லஷணமாக வற்றாகையாலே
இச் சேஷத்வம் ஜீவனுக்கு ஸ்வரூப நிரூபகம் என்னவுமாம் –
இப்படி விபுத்வேசதி சேதனத்வமும் -அனன்யா தீனத்வ நிரூபாதிக சேஷித்வாதிகளும் ஈஸ்வர லஷணங்கள்-

ஜீவேஸ்வர ரூபமான ஆத்ம வர்க்கத்துக்கு எல்லாம் பொதுவான லஷணம் சேதனத்வமும் பிரத்யக்த்வமும் –
சேதனத்வமாவது-ஞான ஆச்ரயமாகை –
பிரத்யக்தமாவது தனக்குத் தானே தோற்றுகை-அப்போது தர்ம பூத ஞான நிரபேஷமாக நான் என்று தோற்றும் –
இப்படி சேதனத்வாதிகள் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பொதுவாகையாலே-
அவனில் காட்டில் வ்யாவ்ருத்தி தோற்றுகைக்காக ஜீவ லஷணத்தில் ஸ்வதஸ் சேஷத்வாதிகளைச் சொல்லுகிறது –

பிரதம அஷரத்தில் சதுர்த்தியில் தோற்றின தாதர்த்யத்ததுக்கு உபாதி இல்லாமையாலே
சர்வ ரஷகனான ஸ்ரீ யபதிக்கு ஜீவாத்மா நிருபாதிக சேஷமாயே இருக்கும் என்று
இப்படி யாவத் ஸ்வரூபம் சம்பந்தம் சொல்லுகை அயோக வ்யச்சேதம்

மத்யம அஷரத்திலே அவதாரண சாமர்த்யத்தாலே அவனுக்கே நிரூபாதிக சேஷம் வேறு ஒருத்தர்க்கு
நிரூபாதிக சேஷம் அன்று என்கை அந்ய யோக வ்யச்சேதம்

இச் சேஷத்வம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வளரும் படி மேலே சொல்லக் கடவோம் –

இப்படி இருக்கிற சேதனருக்கு ப்ரவ்ருத்தி யாவது –
பராதீனமுமாய் பரார்த்தமுமான கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் –
ஈஸ்வரன் தன் போக்த்ருத்வர்த்தமாக இவர்களுக்கு கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உண்டாக்குகையாலே இவை பரார்த்தங்கள்-

பக்த சேதனர்க்கு நீங்கி உள்ளாரில் பேதம் அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்த யுக்தராய் இருக்கை-
இவர்களுக்கு அன்யோன்யம் வரும் ஞான ஸூகாதி பேதத்தை ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தங்களான வகுப்புக்களிலே கண்டு கொள்வது –
இப் பத்த சேதனர் தம் தாமுக்கு கர்ம அனுரூபமாக ஈஸ்வரன் அடைத்த சரீரங்களை தர்மி ஸ்வரூபத்தாலும் தரியா நிற்பார்கள் –
தர்மியால் வருகிற தாரணம் சரீரத்தினுடைய சத்திக்கு பிரயோஜனமாய் இருக்கும் –
ஜாக்ரதாத்ய வஸ்தையில் தர்ம பூத ஞானத்தாலே வருகிற சரீர தாரணம்
புருஷார்த்த தத் உபாய அனுஷ்டானங்களுக்கும் க்ருத உபாயனான பரமைகாந்திக்கு
பகவத் அனுபவ கைங்கர்யங்களுக்கும் உபயுக்தமாய் இருக்கும்
பாப க்ருத்துக்களுக்கு இச் சரீர தாரணம் விபரீத பலத்துக்கு ஹேதுவாய் இருக்கும்
இஜ் ஜீவர்கள் சரீரங்களை விட்டால் இதன் சங்காதம் குலையும் இத்தனை –

சரீரத்துக்கு உபாதானமான த்ரவ்யங்கள் ஈஸ்வர சரீரமாய்க் கொண்டு கிடக்கும் –

பத்த சேதனர்க்கு இதரரில் காட்டில் ஸ்திதி பேதம் யாவன் மோஷம் அனுவர்த்திக்கை –
ப்ரவ்ருத்தி பேதம் புண்ய பாப அனுபய ரூபங்களான த்ரிவித பிரவ்ருத்திகளும் –
முக்தர்க்கு நீங்கி உள்ளாரில் பேதம் பிரதிபந்தக நிவ்ருத்தியாலே ஆவிர்பூத ஸ்வரூபராய் இருக்கை –

ஸ்திதி பேதம் பூர்வ அவதி உண்டான ஆவிர்பாவத்துக்கு உத்தர அவதி அன்றிக்கே இருக்கை –
இவர்களுக்கு அன்யோன்யம் ஸ்திதி பேதம் ஆவிர்பாவத்தில் முற்பாடு பிற்பாடு களால் உண்டான முன்புற்ற ஏற்றச் சுருக்கும் –
பிரவ்ருத்தி பேதம் அநாதி காலம் இழந்து பெற்ற பரிபூர்ண பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதமான
யதாபிமத கைங்கர்ய விசேஷங்கள் அனந்த கருடாதிகளுக்கு அதிகார விசேஷங்களும்
தத் உசித கைங்கர்யங்களும் வ்யவஸ்திதங்களாய் இருக்க –

நித்யருக்கும் முக்தருக்கும் சர்வ வித கைங்கர்ய சித்தி உண்டு என்கிற அர்த்தம் கூடுமோ என்னில் –
ஸ்வாமி யினுடைய அபிப்ராயத்துக்கு ஈடாக தனக்கு வ்யவஸ்திதங்களான கைங்கர்யங்களை தாங்கள்
அனுஷ்டிக்க வேணும் என்கிற அபிசந்தி வேறு ஒருவருக்கு பிறவாமையாலும் ஆரேனும் ஒருவர் அனுஷ்டிக்கும் கைங்கர்யமும்
ஸ்வாமிக்கு பிரியமான படியாலே தத் உசித கைங்கர்யங்களும் சர்வருக்கும் பிரியமாய் கைங்கர்ய பலமான
பரிதியிலே வாசி இல்லாமையாலும் சர்வருக்கும் சர்வ வித கைங்கர்ய சித்தி உண்டு என்கையில் விரோதம் இல்லை –

தர்மபூத ஞானம்
இவ்வாத்மாக்கள் எல்லாருக்கும் தர்மி ஸ்வரூபம் போலே தர்ம பூத ஞானமும் த்ரவ்யமாய் இருக்க –
இதன் ஸ்வரூபத்தை தனித்து இங்கு அருளிச் செய்யாது ஒழிந்தது
சேதனர் என்று எடுத்த விசிஷ்டத்திலே விசேஷணமாய் சொருகி நிற்கை யடியாக –
இத் தர்ம பூத ஞானம் விஷய பிரகாச தசையிலே ஸ்வ ஆஸ்ரயத்துக்கு ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும்-
இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் நித்ய விபுவாய் இருக்கும் –
மற்று உள்ளாருக்கு சம்சார அவஸ்தையில் கர்ம அனுரூபமாக பஹுவித சங்கோச விகாச வத்தாய்-
முக்தாவஸ்தையிலே ஏக விகாசத்தாலே பின்பு யாவத் காலம் விபுவாய் இருக்கும் –

இதுக்கு பிரவ்ருத்தி யாவது –
விஷயங்களை பிரகாசிப்பிக்கையும் –
பிரயத்ன அவஸ்தையிலே சரீராதிகளை ப்ரேரிக்கையும்-
பத்த தசையில் சங்கோச விகாரங்களும் –
ஆனுகூல்ய ப்ராதி கூலியா பிரகாச முகத்தாலே போகம் என்கிற அவஸ்தையை அடைகையும் –

போகமாவது தனக்கு அனுகூலமாக வாதல் பிரதிகூலமாக வாதல் ஒன்றை அனுபவிக்கை –
ஈஸ்வர விபூதியான சர்வ வஸ்துவுக்கும் ஆனுகூல்யம் ஸ்வ பாவமாய் இப்படி ஈஸ்வரனும் நித்தியரும் முக்தரும் அனுபவியா நிற்க –
சம்சாரிகளுக்கு கால பேதத்தாலும் புருஷ பேதத்தாலும் தேச பேதத்தாலும்
அல்ப அனுகூலமாயும் பிரதிகூலமாயும் உதாசீனமாயும் இருக்கிற இவ் விபாகங்கள் எல்லாம் இவ் வஸ்துகளுக்கு ஸ்வ பாவ சித்தங்கள் அல்ல –
இது இவர்களுடைய கர்மங்களுக்கு ஈடாக சத்ய சங்கல்பனான ஈஸ்வரன் இவர்களுக்குப் பல பிரதானம் பண்ணின பிரகாரம் –

இக் கர்ம பலம் அனுபவிக்கைக்குப் பத்தருக்கு ஸ்வரூப யோக்யதையும் சஹகாரி யோக்யதையும் உண்டு –
ஸ்வரூப யோக்யதை பரதந்திர சேதனத்வம்-
சஹகாரி யோக்யதை சாபராதத்வம் –

நித்யருக்கும் முக்தருக்கும் பரதந்திர சேதனதையாலே ஸ்வரூப யோக்யதை உண்டே யாகிலும்
ஈஸ்வர அநபிமத விபரீத அனுஷ்டானம் இல்லாமையாலே சஹகாரி யோக்யதை இல்லை-

ஈஸ்வரன் சர்வம் பிரசாசிதவாய் தான் ஒருத்தருக்கு சாசநீயன் அன்றிக்கே நிற்கையாலே
பரதந்திர சேதனத்வம் ஆகிற ஸ்வரூப யோக்யதையும் இல்லை –
ஸ்வ தந்திர ஆஜ்ஞாதி லங்கணம் ஆகிற சஹகாரி யோக்யதையும் இல்லை –

ஜீவ ஈஸ்வர ரூபரான ஆத்மாக்கள் எல்லாருடையவும் ஸ்வரூபம் ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசம் –
இத் தர்மி ஸ்வரூப பிரகாசத்துக்கு பத்தருக்கும் உள்பட ஒரு காலத்திலும் சங்கோச விகாசங்கள் இல்லை –
சர்வாத்மாகளுடையவும் தர்ம பூத ஞானம் விஷய பிரகாசன வேளையிலே ஸ்வ ஆஸ்ரயத்துக்கு ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும் –
ஞானத்வமும் ஸ்வயம் பிரகாசத்வமும் தர்ம தர்மிகளுக்கு சாதாரணம் –

தர்ம பூத ஞானத்துக்கு விஷயித்வம் ஏற்றம் -தர்மியான ஆத்ம ஸ்வரூபத்துக்கு பிரத்யக்தம் ஏற்றம் –
ஞானத்வம் ஆவது கஸ்யசித் பிரகாசகத்வம் –
அதாவது தன்னுடையாகவுவாம் வேறு ஒன்றினுடையாகவுமாம் ஏதேனும் ஒன்றினுடைய வ்யவஹார அனுகுண்யத்தைப் பண்ணுகை-
ஸ்வயம் பிரகாசத்வம் ஆவது தன்னை விஷயீ கரிப்பதொரு ஞானாந்தரத்தால் அபேஷை அறத் தானே பிரகாசிக்கை-

தர்ம பூத ஞானத்திற்கு விஷயித்வம் ஆவது தன்னை ஒழிந்த ஒன்றைக் காட்டுகை –

ஆத்மாக்களுக்கு பிரத்யக்த்மாவது ஸ்வஸ்மை பாசமானத்வம் –
அதாவது தன் பிரகாசத்துக்கு தானே பலியாய் இருக்கை என்றபடி
ஏதேனும் ஒரு வஸ்துவின் பிரகாசத்துக்கு பலி என்கிற சாமான்ய ஆகாரத்தை
தன் பிரகாசத்துக்கு தான் பலி என்று விசேஷித்த வாறே பிரத்யக்த்வமாம் —
இவ் விசேஷம் இல்லாத வஸ்துவுக்கு இச் சாமான்யமும் இத்தோடு வ்யாப்தமான சேதனத்வமும் இல்லை –

இத் தர்ம தர்மிகள் இரண்டும் ஸ்வயம் பிரகாசமாய் இருந்தாலும் நித்யத்வாதி தர்ம விசேஷ விசிஷ்ட ரூபங்களாலே
ஞானாந்தர வேத்யங்களுமாம்-
தன்னுடைய தர்ம பூத ஞானம் தனக்கு ஞானாந்தர வேத்யமாம் போது ப்ரசரண பேத மாத்ரத்தாலே ஞானாந்தர வ்யபதேசம்-

அசேதன த்ரவ்யங்கள் – த்ரிவித அசேதனங்களும் பரருக்கே தோன்றக் கடவனவாய் இருக்கும் –
அசேதனத்வம் ஆவது ஞாநாஸ்ரயமம் இன்றிக்கே ஒழிகை –
பிறருக்கே தோன்றுகையாவது தன் பிரகாசத்துக்கு தான் பலி இன்றிக்கே ஒழிகை –
இவை இரண்டும் தர்ம பூத ஞானாதிகளுக்கும் துல்யம் –

த்ரிவித அசேதனங்கள் என்று எடுத்த இவற்றில் பிரகிருதியும் காலமும் ஜடங்கள் –
சுத்த சத்வமான த்ரவ்யத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள் –
ஜடத்வம் ஆவது ஸ்வயம் பிரகாசத்வம் இன்றிக்கே ஒழிகை –
பகவச் சாஸ்த்ராதி பராமர்சம் பண்ணினவர்கள் ஞானாத்மகத்வம் சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரயத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –
இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யம் ஆக வேண்டாதே தானே தோன்ற வேண்டாவோ என்னில் –
சர்வாத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய் வேறு எல்லாருக்கும் ஞானாந்த வேத்யம் ஆனால் போலேயும்
தர்ம பூத ஞானம் ஸ்வ ஆஸ்ரயத்திற்கே ஸ்வயம் பிரகாசமாய் இதற்க்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும் நியத விஷயமாக ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை

யோ வேத்தி யுகபத் சர்வம் பிரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் ந்யாய தத்வம் பிரசஷ்மஹே -ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிய -ந்யாய தத்வ மங்கள ஸ்லோகம் –
(எந்த ஸர்வேச்வரன் , எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தனது ஸ்வபாவம் மூலமாக அறிகிறானோ அந்த ஸ்ரீ ஹரியை
நமஸ்கரித்து , ந்யாயதத்வம் என்கிற இந்த சாஸ்த்ரத்தைக் கூறுகிறோம்) என்கிறபடியே
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்துக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரயம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே என்னில்
இவனுடைய தர்ம பூத ஞானம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலே இதுவும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம் –
இப்படியே நித்யருக்கும் துல்யம் –

விஷய பிரகாச காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வ ஆச்ரயத்துக்கே ஸ்வயம் பிரகாசம் ஆனால் போலே
முக்தருக்கும் அவ்வஸ்தையிலே இதுவும் ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –
தர்ம பூத ஞானத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியானது விஷய பிரகாசம் இல்லாத காலத்தில்
கர்ம விசேஷங்களால் பிரதிபத்தை யானால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையிலே பிரதிபத்தை யாகையாலே
சுத்த சத்வம் பக்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-

திய ஸ்வயம் பிரகாசத்வம் முக்தௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித் சம்ருத்தம் ததா அத்ராபி நியாம்வதே –
(மோக்ஷ வேளையில் , தானாகவே வெளிப்படும் தர்மபூத ஞானம் ஸம்ஸாரத்தில் சில நேரங்களில் தடைப்படுகிறது .
இதைப்போலவே ஸுத்த ஸத்வ விஷயத்திலும் நேருகிறது.)
இவ்வளவு அவஸ்தா அந்தராபத்தி-(வேறு ஒரு நிலையை அடைவதானது ) விகார த்ரவ்யத்துக்கு விருத்தம் அன்று -ஆகையாலே
பிரமாண பிரதிபன்னார்தத்ததுக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை –
இங்கன் அன்றியிலே உபசாரத்தாலே நிர்வஹிக்கப் பார்க்கில் ஆத்ம ஸ்வரூபத்திலும் ஞானாதி சப்தங்களை அந்ய பரங்கள் ஆக்கலாம் –
ஸ்வயம் பிரகாசத்துக்கு ரூபம் ரசாதி குணங்களுக்கும் அவையடியாக வந்த பிருதிவ்யாதி விபாகமும் பரிணாமாதிகளும் கூடுமோ என்கிற சோத்யமும்
தர்ம பூத ஞானத்துக்கும் தர்மி ஞானத்துக்கும் உண்டான வைஷம்யங்களை பிரதிபந்தியாகக் கொண்டு பிரமாண பலத்தாலே பரிஹ்ருதம் –
இப்படி ஸ்வயம் பிரகாசமான சுத்த சத்வ த்ரயத்தை ஞாத்ருத்வம் இல்லாமையாலே த்ரிவித சேதனங்கள் என்று சேரக் கோத்தது –

இவ் அசேதனங்கள் மூன்றுக்கும் பிரவ்ருத்தி யாவது ஈஸ்வர சங்கல்ப அனுரூபங்களான விசித்திர பரிணாமாதிகள்-
இவற்றில் த்ரிகுண த்ரவ்யத்துக்கு ஸ்வரூப பேதம் குண த்ரய ஆஸ்ரயத்வம் –
சத்த பரிணாம சீலமான இத் த்ரவ்யத்துக்கு சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்கள் அந்யோந்யம் சமமான போது மஹா பிரளயம் —
விஷமமான போது ஸ்ருஷ்டி ஸ்திதிகள்-குண வைஷம்யம் உள்ள பிரதேசத்திலே மஹதாதி விகாரங்கள் –
இதில் விக்ருதம் அல்லாத பிரதேசத்தையும் விக்ருதமான பிரதேசத்தையும் கூட
பிரகிருதி மஹத் அஹங்கார தன்மாத்ர பூத இந்த்ரியங்கள் என்று இருபத்து தத்துவங்களாக சாஸ்திரங்கள் வகுத்துச் சொல்லும் –
சில விவஷா விசேஷங்களாலே ஓரோர் இடங்களிலே அவாந்தர வகுப்புக்களும் அவற்றின் அபிமானி தேவதைகளும்
அவ்வோ உபாசன அதிகாரிகளுக்கு அறிய வேணும் -ஆத்மாவுக்கு அவற்றில் காட்டிலும் வியாவ்ருத்தி அறிகை இங்கு நமக்குப் பிரதானம் –

இவை எல்லாம் சர்வேஸ்வரனுக்கு அஸ்த்ர பூஷணாதி ரூபங்களாக நிற்கும் நிலையை
புருடன் மணிவரமாக பொன்றா மூல பிரகிருதி மறுவாக மான் தண்டாக –
தெருள் வருள் வாள் மறைவாக -ஆங்காரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈர் ஐந்தும் சரங்களாக இரு பூத மாலை வனமாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே -அதிகார சங்க்ரஹம் ”–பாசுரம் 41–
என்கிற கட்டளையில் அறிகை உசிதம் –
(கருடனுடைய சரீரம் வேதங்கள்; இந்த வேதங்களின் பொருள் கண்ணன்.
ஜீவன் –கௌஸ்துப ரத்னம் ;மூல ப்ரக்ருதி –ஸ்ரீவத்ஸம் என்கிற மறு ; மஹத்வம் — கௌமோதகி என்கிற கதை ;
ஜ்ஞானமும் ,அஜ்ஞானமும் —கந்தகம் என்கிற கத்தி , அதன் உறை ; ஸாத்விக அஹங்காரம்—சார்ங்கம் என்கிற வில் ;
தாமஸ அஹங்காரம் —சங்கம் ; மனஸ் —சக்ரம் ; ஈரைந்து இந்த்ரியங்கள் —-பாணங்கள் ;தன்மாத்ரை 5ம் பூதங்கள் 5ம் —வனமாலை;
இப்படியாக, சகல தத்வங்களும் ,ஆயுதமாகவும் ஆபரணமாகவும் இருக்க,ஹஸ்திகிரியின் மேலே எல்லோரும் தரிசிக்கும்படி நின்று
எல்லாவற்றையும் காப்பாற்றுகிறான்
ஈரைந்து இந்த்ரியங்கள் —- ஜ்ஞானேந்திரியங்கள் 5ம் கர்மேந்த்ரியங்கள் 5ம் — பாணங்கள் ;
தன்மாத்ரை 5ம்—ஸப்தம் , வாயு, தேஜஸ், ஜலம் , மண்.
பூதங்கள் 5ம் — ஆகாசம் , காற்று,நெருப்பு, ஜலம் ,மண் ஆக 10ம் —வனமாலை;)
இருபத்து நாலு தத்துவங்களுக்கும் அந்யோந்ய ஸ்வரூப பேதமும் அவ்வோ லஷணங்களாலே சித்தம் –
இவற்றில் பிரக்ருதியின் கார்யமான 23 தத்துவங்களுக்கும் இவற்றால் ஆரப்தங்கள் ஆனவற்றுக்கும்
ஸ்திதியில் வரும் ஏற்றச் சுருக்கங்கள் புராணங்களிலே பிரசித்தமான படியே கண்டு கொள்வது –

ஸ்வ சத்தா பாசகம் சத்த்வம் குண சத்த்வாதி லஷணம்–பௌஷ்கர ஸம்ஹிதை
(ஸுத்தஸத்வம் என்பது தானாகவே வெளிப்படுவது; இந்த ஸுத்தஸத்வம்,
ரஜஸ் ,தமஸ் இவற்றுடன் உள்ள ஸத்வம் என்பதைக் காட்டிலும் வேறானது)
தமஸ பரமோ தாதா -ஸ்ரீமத் ராமாயணம்
(தமஸ்ஸுக்கும் அப்பால் உள்ளவன் பரமாத்மா –எம்பெருமான்)
அப்ராக்ருதம் ஸூ ரைர் வந்த்யம் -ஜிதந்தே ஸ்தோத்ரம்
(நித்யவிபூதி என்பது, ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானது;நித்யஸூரிகள் இருக்கும் இடம் ;அவர்களால் போற்றப்படுவது)
இத்யாதிகளிலே -தமஸ்ஸூக்கு மேலான தேச விசேஷம் சித்திக்கையாலே
அனந்தசய ந தச்யாந்த சங்க்யானம் வா அபி வித்யதே ததனந்தப சங்க்யாத பிரமாணம் சாபி வை யத-ஸ்ரீ விஷ்ணு புராணம் —
(ப்ரக்ருதிக்கு அழிவு கிடையாது ; கால அளவும் கிடையாது . இப்படி அளவிட இயலாதது)–இத்யாதிகள்
நித்ய விபூதியில் அவிச்சின்னம் அல்லாத பிரதேசத்தாலே மூல பிரக்ருதிக்கு அனந்தத்யம் -முடிவின்மை மட்டும் சொல்லுகின்றன –

த்ரிகுண த்ரயத்துக்கு பிரவ்ருத்தி பேதம் பத்த சேதனருடைய போகாப வர்க்கங்களுக்கும் ஈஸ்வரனுடைய லீலா ரசத்துக்குமாக –
சமமாகவும் விஷமமாகவும் பரிணாம சந்ததியை யுடைத்தாய் தேக இந்த்ரியாதி ரூபத்தாலே அவ்வோ வியாபாரங்களையும் பண்ணுகை-
இது ரஜஸ் தமஸ் ஸூக்களை இட்டு பத்தர்களுக்கு தத்வங்களின் உண்மையை மறைத்து விபரீத ஞானத்தை உண்டாக்குகிறது போகார்த்தமாக –
இது தானே அபவகார்த்தமாக சத்வ வ்ருத்தியாலே தத்தவங்களை யாதவத் பிரகாசிப்பிக்கிறது –
இவை எல்லாம் ஈஸ்வரனுக்கு லீலா ரசவஹமாய் இருக்கும் –
(மூன்று குணங்களும் ப்ரக்ருதியும் –ப்ரக்ருதியின் செயல்கள்
1. ஸத்வம் ,ரஜஸ் ,தமஸ் மூன்று குணங்களும் சமமாக ,ஒரே அளவில் இருக்கும்போது ப்ரளயம் உண்டாகிறது.
2. ப்ரக்ருதியின் செயல்கள் பேதப்பட்டு ( ஒன்று அதிகமாதல்,இன்னொன்று குறைதல்,இப்படி )
ப்ரக்ருதியும் மாறுதல் அடைந்து ஸ்ருஷ்டி ஏற்படுகிறது
3. ஸ்ருஷ்டி சமயத்தில் ஜீவன்கள் ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டு அநுபவத்தை அடைகிறது
4. அநுபவம் மூலமாக ஜீவன்கள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகிறது
5. இவை யாவும் பகவானின் லீலைக்காக ஏற்படுகிறது
6. லீலைக்கு ஏற்றவகையில் –அதற்கு ஏற்றவாறு பெயர் மற்றும் உருவம் எடுக்கிறது
( மொத்தத்தில் லீலா விபூதி )
7. ஜீவன்கள் அடையும் உடல்–சரீரம் காரணமாக ரஜோ தாமஸ குணங்களால்
உண்மையான தத்வத்தை , இவை மறைத்து ,தவறான ஜ்ஞானத்தைக் கொடுக்கிறது.
8. ஜீவனுக்கு ,ஸத்வகுணம் மேலோங்கும்போது அவனுக்கு உண்மையான ஜ்ஞானம் புலப்படுகிறது
9. இந்த உண்மையான ஜ்ஞானம் , மோக்ஷத்தை அடையும் வழியில் ஜீவனை முயற்சிக்கச் செய்கிறது.
இவை யாவும் பகவானின் லீலை)

—————————————————–

சுத்த சத்வத்துக்கு ஸ்வரூப பேதம் ரஜஸ் தமஸ் ஸூக்களோடு கலவாத சத்வ குண ஆச்ரயமாய் இருக்கை –
இதின் ஸ்திதி பேதம் நித்தியமான மண்டப கோபுராதி களிலும் ஈச்வரனுடையவும் நித்யர்களுடையவும்
விக்ரஹ விசேஷங்களிலும் நித்தியமாய் இருக்கும் –
நித்யருடையவும் முக்தருடையவும் ஈச்வரனுடையவும் அநித்யேச்சையால் வந்த -தற்காலிக விருப்பத்தால் வந்த –
விக்ரஹாதிகளில் அநித்யமாய் இருக்கும் –
இதன் பிரவ்ருத்தி பேதம் இவர்களுடைய இச்சைக்கு ஈடான பரிணாமாதி களாலே
சேஷிக்கு போக உபகரணமாயும் சேஷ பூதனுக்கு கைங்கர்ய உபகரணமாயும் நிற்கை ஆகிறது போகார்த்தமாக –
இது தானே அபவர்க்கார்த்தமாக சத்வ வ்ருத்தியாலே தத்தவங்களை யாதவத் பிரகாசிப்பிக்கிறது –
இவை எல்லாம் ஈஸ்வரனுக்கு லீலா ரசாவஹமாய் இருக்கும்

—————————————————–

காலத்துக்கு ஸ்வரூப பேதம் ஜடமாய் விபுவாய் இருக்கை –
இதன் ஸ்திதி காலவச்சேதம் இல்லாமையாலே நித்யையாய் இருக்கும் –
இதின் பிரவ்ருத்தி பேதம் கலா காஷ்டாதி விபாகத்தாலே ஸ்ருஷ்டியாதிகளுக்கு உபகரணமாய் இருக்கிறபடியிலே கண்டு கொள்வது –
இத் த்ரவ்யங்கள் எல்லாம் ஸ்வரூபேண நித்யங்களாய் இருக்கும் –
நாமாந்தர பஜனார்ஹா வஸ்தா விசேஷ விசிஷ்டதையை இட்டு சிலவற்றை அநித்யங்கள் என்கிறது –
அழிந்ததோடு சஜாதீயங்களான அவஸ்த்தாந்தரங்கள் மேலும் முழுக்க வருகையாலே ப்ரவாஹ நித்யங்கள் என்று சொல்லுகிறது –

இப் பதார்த்தங்கள் எல்லாவற்றினுடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள் ஈஸ்வரனுக்கு ஸ்வ அதீனங்களாய் இருக்கை யாவது
ஈஸ்வர சத்யையையும் ஈஸ்வர இச்சையும் ஒழிய இவற்றுக்கு சத்தாதிகள் கூடாது ஒழிகை –
ஆகையால் சமஸ்த வஸ்துக்களுக்கும் ஸ்வ பாவ சித்த அனுகூல்யம் ஈஸ்வர இச்சாயத்தம் –
இத்தாலே ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் சர்வமும் அனுகூல்யமாய் இருக்கும்
பத்தருக்கு கர்மானுரூபமாக புருஷ பேதத்தாலும் கால பேதத்தாலும் இவற்றில் ப்ராதி கூல்யங்களும் அல்ப அனுகூல்யங்களும் நடவா நிற்கும் –
இப் பத்தர் தங்களுக்கும் ஸ்வ ஆத்மா ஸ்வரூபம் சர்வதா அனுகூலமாக ஈஸ்வர இச்சா சித்தம் –
இப்படி அனுகூலமான ஆத்ம ஸ்வரூபத்தோடே ஏகத்வ பிரமத்தாலும் கர்ம வசத்தாலும் இறே
ஹேயமான சரீரம் ஞான ஹீனருக்கு அனுகூலமாய்த் தோற்றுகிறது-
இவற்றுக்கு கர்மாபாதிகமான பிரதிகூல ரூபத்தாலே முமுஷூவைப் பற்ற த்யாஜ்யத்வம் –
ஸ்வாபாவிகமான அனுகூல ரூபத்தாலே முக்தனைப் பற்ற அவை தமக்கே உபாதேயத்வம் –
அஹங்கார மமகார யுக்தனாய்க் கொண்டு தனக்கு என்று ஸ்வீ கரிக்குமவை எல்லாம் பிரதி கூலங்களாம்-
ஸ்வரூப ஞானம் பிறந்து ஸ்வாமி சேஷம் என்று காணப் புக்கால் எல்லாம் அனுகூலமாம் –
இவ் வர்த்தம் பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் சொல்லும் இடத்தில் பரக்கச் சொல்லக் கடவோம்

———————————————————

ஈஸ்வர தத்வம் –
இப்படி ஸ்வா தீன சர்வ சத்தாதிகளை யுடையனாய் இருக்கிற ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் –
சத்யத்வாதிகள் ஆகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே –
சத்தியமாய் ஞானமாய் அனந்தமாய் ஆனந்தமாய் அமலமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தை நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -என்றும்
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில்போல்
எந்தாய்!எமக்கே அருளாய் எனநின்று
இமையோர் பரவும் இடம் ,எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே
களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே–பெரிய திருமொழி ( 3–8–1 )
உணர் முழு நலம் என்றும் –
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறி உணர்வு அவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில எனனுயிர் மிகு நரையிலனே–திருவாய்மொழி (1–1–2 )
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் என்றும் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பரநன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரியஎன்னவாவறச் சூழ்ந்தாயே–10-10-10-
அமலன் -என்றும் இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அனுசந்தித்தார்கள் –
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் ,விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன் நீள் மதிளரங்கத்தம்மான் , திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளனவொக்கின்றதே–1-

மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ராஹாதிகளும் எல்லாம் ஈஸ்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாய் இருக்கும்
இக் குணங்களில் ஞான பல ஐஸ்வர்ய வீர்யம் சக்தி தேஜஸ் ஸூக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வ உபயுக்தங்களாய் இருக்கும் –
சௌசீல்ய வாத்சல்யாதிகள் சௌலப்ய உபயுக்தங்களாய் இருக்கும் –
இக் குணங்கள் எல்லாம் சர்வ காலங்களிலும் ஸ்வரூப ஸ்ரீ தங்களாய் இருக்கும் –

பர வ்யூஹாதி விபவங்களிலே குண நியமம் சொல்லுகிறது எல்லாம் அவ்வோ ரூபங்களை அனுசந்திப்பார்க்கு
சர்வேஸ்வரன் ஆவிஷ்கரிக்கும் குண விசேஷங்கள் சொல்லுகைக்காக வந்தன

ஔபனிஷத் வித்யா விசேஷங்கள் தோறும் அனுசந்தேய குண விசேஷங்கள் நியதங்கள் ஆனால் போலே
பகவச் சாஸ்திர உக்தமான ரூப விசேஷ அனுசந்தானத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள் –

அவ் விடத்தில் பர ரூபத்தில் ஞானாதி குணங்கள் ஆறும் வேத்யங்கள்
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்திரங்கள் சொல்லும் –
நாலு வ்யூஹம் உண்டாய் இருக்க வ்யூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூதேவ ரூபத்தில் காட்டில்
அனுசந்தேய குண பேதம் இல்லாமையாலே த்ரி வ்யூஹம் என்கிறது -இப்பஷத்தை
குணைஷ் ஷட்பிஸ்த்வதை ப்ரதமதர மூர்த்தஸ் தவ பபௌ
ததாஸ்திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரிப்ரபு –ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -16 -சங்க்ரஹிக்கப் பட்டன-

(தேவப்பெருமாளே திருச்செவி சாத்திய ஸ்தோத்ரம்
எம்பெருமானாரும், மற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ வரதன் ஸந்நிதியில் குழுமியிருக்க
தேவப் பெருமாள் , திருமுகப்பில் அரங்கேறிய ஸ்தோத்ரம்

குணை:ஷட்பிஸ்த்வேதை : ப்ரதமதர மூர்திஸ்தவ பபௌ
தத ஸ்திஸ்ரதேஷாம் த்ரியுக 1 யுகலைர் ஹி த்ரிப்ரபு : |
வ்யவஸ்த்தா யா சைஷா நநு வரத ! ஸா$$விஷ்க்ருதி வசாத்
பவாந் ஸர்வத்ரைவ த்வகணித மஹாமங்கல குண : ||

த்ரியுக =மூவிரண்டு குணங்களை உடைய
வரத = தேவப்பெருமாளே
தவ=தேவரீருடைய
ப்ரதமதர மூர்தி =முதன்மையான திருவுருவான பரவாஸுதேவ மூர்த்தி
ஷட்குணை :=அந்த ஆறு குணங்களால்
பபௌ =விளங்கியது
தத :திஸ்ர =அதிலிருந்து தோன்றிய மூன்று மூர்த்திகளான ஸங்கர்ஷண ,
ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள்
தேஷாம்= அந்த ஜ்ஞான சக்த்யாதி குணங்களுடைய
த்ரிபி: யுகலை =மூன்று இரட்டைகளாகவே
அபு : =ப்ரகாசித்தன
ஏஷாயா வ்யவஸ்த்தா = இத்தகைய யாதொரு கட்டுப்பாடு உண்டோ
ஸா = அது
ஆவிஷ்க்ருதி வசாத் = அந்தந்த மூர்த்திகளின் குணங்களை வெளியிடுவதால்
உண்டானதாகும்
து =ஆனால்
பவாந் =தேவரீர்
ஸர்வத்ர ஏவ =எல்லா நிலைகளிலும்
அகணித =எண்ணில் அடங்காத
மஹா மங்கல குண : =பெரிய மங்களமான குணக்கூட்டங்களை உடையவரே

ஹே வரதனே —உன்னுடைய பரவாஸுதேவ ரூபம் ஆறு குணங்களால் ப்ரஸித்தி .
ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள் , இந்த ஆறு குணங்களிலிருந்து இரண்டிரண்டு குணங்களை ஸ்வீகரித்துக்கொண்டுள்ளன)

இப் பர வ்யூஹங்களில் குண க்ரியா விபவங்கள்
ஷாட் குண்யாத் வாஸூ தேவ பர இதி சபவான் முக்த போக்யோ பலாட்யாத்
த்வம் ஹரசி விதனுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யவாத்
பிரத்யுமன சர்க்க தர்மௌ நயசிச பகவன் சக்தி தேஜோ நிருத்த
த்வம் ஹரசி விதனுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யவாத்
பிப்ராண பாசி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதி ராஜா- ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-39-
என்கிற ஸ்லோகத்தில் சங்க்ரஹிக்கப் பட்டன —

(ஹே ரங்கராஜனே , ஆறு குணங்களை உடையவராய் பரவாஸுதேவன் என்று கொண்டாடப்படுகிற தேவரீர் முக்தர்களால்
இப்படியாக அனுபவிக்கப்படுகிறீர். அப்படியே மூன்றாகப் பிரிந்து, ஜ்ஞானம் ,பலம் இந்த இரண்டு குணங்களுடன்
ஸங்கர்ஷணனாக உலகை ஸம்ஹரிக்கிறீர் , சாஸ்த்ரப்ரவசனம் செய்கிறீர்.
ஐச்வர்யம் வீர்யம் இந்த இரண்டு குணங்களுடன் ,ப்ரத்யும்நனாயிருந்து உலகங்களைப் படைத்து, தர்ம ரக்ஷணம் செய்கிறீர்.
சக்தி, தேஜஸ் –இரண்டு குணங்களுடன் அநிருத்தனாயிருந்து ரக்ஷித்து,தத்வ உபதேசம் செய்கிறீர்)

போதாத் சங்கர்ஷண -ஜாக்ரதாதி பத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம்
ஜாக்ரத் ஸ்வப்நாத் யலச துரீய ப்ராய த்யாத்ருக்மவது பாச்ய
ஸ்வாமின் தத் தத் குண பரிவர்ஹ சாதுர் சதுர்த்தா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-40 -என்று சங்க்ருஹீதங்கள் ஆயிற்று

(ஹே ரங்கநாதா —தேவரீரைத் த்யானம் செய்பவர்கள் சிலர், விழித்துக் கொண்டிருப்பவர்கள் போல இருக்கிறார்கள்.
சிலர், கனவு காண்பவர்போல இருக்கிறார்கள். சிலர் தூங்குபவர் போல இருக்கிறார்கள்.
சிலர், மூர்ச்சையடைந்தவர் போல இருக்கிறார்கள்.
[விழித்திருப்பாருக்கு –இந்த்ரியங்கள் வேலை செய்கின்றன–கனவு காண்பவருக்கு –மனம் மாத்ரம் வேலை செய்கிறது
தூங்குபவர்களுக்கு–மனமும் வேலை செய்வதில்லை–மூர்ச்சை நிலையில் —உயிரோடு இருக்கும் அடையாளம்கூட இல்லை ]
இவர்களைப்போல, ஹே பகவந் , நீர்,நான்கு ரூபங்களாகப் பிரிந்து-அந்தந்த ரூபங்களுக்குத் தகுந்த
குணங்கள், ஆயுதங்களுடன் உபாஸிக்கப்படுகிறீர்)

(வ்யூஹாந்தரங்கள்
1. வாஸுதேவன் –கேசவன் நாராயணன் மாதவன்–பத்னி –லக்ஷ்மி ஸ்ரீ வாகீச்வரி காந்தீ
2. ஸங்கர்ஷணன் —கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன்==பத்னி –கீர்த்தி-9ஜீவன் )–க்ரியா சாந்தி விபூதி :
3. ப்ரத்யும்நன் —— த்ரிவிக்ரமன் வாமநன் ஸ்ரீதரன்==பத்னி–ஜயா (புத்தி ) இச்சா ப்ரீதி : ரதி:
4.அநிருத்தன் — – ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன்–பத்னி–மாயா(அஹங்காரம் ) மாயா தீ : மஹிமா

பரமபதத்தில்—–விசாக ஸ்தம்பம் என்கிற அப்ராக்ருதமான பெரிய ஸ்தம்பம் உள்ளது. அது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாகத்துக்கும் நான்கு பக்கங்கள்.-கிழக்கே ஆரம்பித்து, தெற்கு, மேற்கு,வடக்கு என்று ஒவ்வொரு பக்கத்திலும்
வாஸுதேவ, ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்களாக பகவான் எழுந்தருளியிருக்கிறான் .

1.–முதலில்–ஜாக்ரத் ஸ்தானம் –இதில், ஜகத் ஸ்ருஷ்டி, ஆயுதங்கள், வாஹனங்கள், சின்னம்
2.அதற்கு மேல் —ஸ்வப்ந ஸ்தானம் —ஆகாரம், வர்ணம், சின்னம் [ஸ்பஷ்டமாகப் ப்ரகாஸிக்காது; ஜகத் வ்யாபாரமின்றி இச்சை மாத்திரம் இருக்கும்.
3. அதற்கு மேல் —ஸுஷுப்தி ஸ்தானம் –வர்ணம்,ஆயுதம் இவை இன்றி, இச்சையுமின்றி ஸ்வாநத்தா அநுபவம்
4. அதற்கு மேல்–துரீய ஸ்தானம்—ஸ்தம்பத்தின் கிளைகள்போலத் தோற்றம்

ஜீவனுக்கு–
1. விழிப்பு நிலை—-அநிருத்தன்
2. ஸ்வப்ந நிலை—ப்ரத்யும்நன்
3. உறக்க நிலை–ஸங்கர்ஷணன்
4. மோக்ஷ நிலை —வாஸுதேவன் , பரவாஸுதேவன்

1. விழித்திருப்பது—
எல்ல இந்த்ரியங்களும் இயங்குகின்றன ;கர்மாவைச் செய்கிறான்

2. ஸ்வப்நம்
ஜீவன் , வேறு ஒரு சரீரத்தில் இருப்பதாக உணர்கிறான் ஸ்வப்ந சமயத்தில், ஜீவன் சரீரத்தைவிட்டு வெளியேறினாலும் ,
ப்ராணவாயு ( ப்ராணன் ),ஜீவனுடன்கூட வெளியே செல்வதில்லை.அது ,பழைய சரீரத்திலேயே இருக்கிறது.
அதன்மூலமாக,சரீரம் ரக்ஷிக்கப்படுகிறது.ஸ்வப்நத்தில் , இவன் எடுத்துக்கொண்ட சரீரம் ,விழித்துக்கொண்டிருக்கும்போது இவனுடன்
இருப்பதில்லை. விழித்திருக்கும்போது உள்ள சரீரம் ,ஸ்வப்நத்தில் இருப்பதில்லை. ஸ்வப்நத்தில் இவன் இதை விட்டுவிடுகிறான்.
ஆதலால், சரீரத்தைவிட , ஆத்மா வேறு என்பது தெளிவாகிறது

3. உறக்கம்–ஸுஷுப்தி
ஸ்வப்நத்தின்போது , ” ஜீவன்,”ஹிதா ” என்கிற நாடிகளில் இருக்கிறான்.
தூங்கும்போதோ , ஸாக்ஷாத் பரமாத்மாவிடமே இருக்கிறான். அப்போது, அவனுக்கு அநுகூல ,ப்ரதிகூல விஷயங்கள் தெரியாது.
வெளி உலகம் தெரியாது.சுக துக்கம் தெரியாது. ப்ரியமான ஸ்திரீயால் அணைக்கப்பட்டு உள்ள நிலையில், தன்னை மறந்து இருப்பதைப் போல
தூக்க நிலையில் ,பரம ப்ரியனான பரமாதவினால் அணைக்கப்பட்டு, அதிலேயே லயித்து, எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறான்.
பரமாத்மாவைக் கூட அறிய முடியாமல் தூங்குகிறான். இச்சமயம் எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.
ஜ்ஞானமானது ,மனஸ்ஸை அடைந்து ,மனஸ் இந்த்ரியங்களை ஏவுதல் போன்ற எந்தக் காரியமும் உரக்க நிலையில் இல்லை.

4. மோக்ஷ நிலை—

பரவாஸுதேவ , உபாஸனையில் ஆறு குணங்களையும் உபாஸிக்கவேணும்
ஜ்ஞானம் = சாஸ்த்ர நிர்மாணம்
பலம் =ஸம்ஹாரம்
ஐச்வர்யம் =ஸ்ருஷ்டி
வீர்யம் =தர்ம ஸ்தாபனம்
சக்தி = ரக்ஷிப்பது
தேஜஸ் =தத்வத்தை அறிவிப்பது

1. வைச்வாநரன் விழிப்பு அநிருத்தன் (சக்தி,தேஜஸ் –அறிவை அழிப்பது, ரக்ஷணம் )
2. தைஜஸன் ஸ்வப்நம் ப்ரத்யும்நன் ( ஐச்வர்யம், வீர்யம் –ஸ்ருஷ்டி, தர்ம வ்யவஸ்தை )
3. ப்ராஜ்ஞன் உறக்கம் ஸங்கர்ஷணன் (ஜ்ஞானம், பலம்–ஸம்ஹாரம் ,சாஸ்த்ர ப்ரசாரம் )
4. துரீயன் மோக்ஷம் வாஸுதேவன் (பொது–வ்யூஹ வாஸுதேவன் ))

கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களும் வ்யூஹாந்தரங்கள் –
விபவங்களான பத்ம நாபாதிகளான முப்பத்து சின்ன ரூபங்கள் –
இவற்றில் மத்ஸ்ய கூர்மாதி களான அவதாரங்கள் ஒரு பிரயோஜன வசத்தாலே விசேஷித்துச் சொல்லப் பட்டன –
இவ் விபவங்கள் ஈஸ்வரன் அவ்வோ கார்ய விசேஷங்களுக்கு ஈடாகத் தான் வேண்டின குணங்களை வேண்டின போது
மறைத்தும் வேண்டின போது பிரகாசிப்பித்தும் நடத்தும் –
இவற்றில் அவாந்தர பேதங்கள் -கிருஷ்ண ரூபாண்ய சங்க்யாநி-பாஞ்சராத்ர ஆகமம் -இத்யாதிகளில் படியே அனந்தங்கள்-
(அதாவது, க்ருஷ்ணனாக அவதரித்த எம்பெருமானின் ரூபங்களுக்குக் கணக்கில்லை என்று ஸ்ரீ பாஞ்சராத்ரம் சொல்லுகிறது)
இப்படியே விபவாந்தரங்களும் கண்டு கொள்வது –
சில ஜீவர்களை விக்ரஹ விசேஷத்தாலும் சக்தி விசேஷத்தாலும் அதிஷ்டித்து அதிசயித்த கார்யங்களை நடக்கிறதும் விபவ பேதம்

பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆஸ்ரீதர்க்காக அவர்கள் அபேஷித்த படியிலே
பிம்பாக்ருத்யாத்மாநா பிம்பே சமாகத்யா வதிஷ்ட்யதே -என்கிற படியே நிற்கிற நிலை அர்ச்சாவதாரம்
(பிம்பத்தில்–விக்ரஹரூபமாக — விக்ரஹமா, திருமேனியா என்று பிரிக்க இயலாதபடி அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ளான்)

சர்வருடையவும் ஹிருதயங்களிலே ஸூஷ்மமாய் இருப்பதொரு ரூப விசேஷத்தைக் கொண்டு நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம் –
இது சர்வாந்தர்யாமியான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை அனுசந்திக்க இழிவாருக்கு துறையாக
அஷ்டாங்க யோக சித்தா நாம் ஹ்ருத்யாக நிரதாத்மா நாம்
யோகி நாமதிகாரஸ் ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயேசயே-இத்யாதிகளிலே சொல்லுகையாலே அந்தர்யாமி ரூபம் என்று சொல்லப் பட்டது —
(அஷ்டாங்க யோகத்தைச் செய்து, ஆத்மாவலோகனம் என்கிற ஸித்தியடைந்தவர்கள் , மானஸ பூஜையை விரும்பி
ப்ரஹ்மோபாஸனம் செய்து, யோகிகளாகி அவர்களின் ஹ்ருதயத்தில் ஒரு மூர்த்தியாக த்யானிப்பது.
மூர்த்தி என்பது, நான்கு வ்யூஹங்களாகப் பிரியாமலிருக்கிற ரூபம் என்று அர்த்தம்.)

இப்படி அவதரிக்கிற ரூபங்களில் வகைகள் எல்லாம் சுத்த சத்வ த்ரவ்ய மயங்களாய்
கர்ம தத் பலங்களோடு துவக்கற வருகையாலே சுத்த சிருஷ்டி என்று பேர் பெற்று இருக்கும் –
இவ் வவதாரங்கள் எல்லாம் சத்யங்கள் என்றும் –
இவற்றில் ஈஸ்வரனுக்கு ஞானாதி சங்கோசம் இல்லை என்றும் –
இவ் விக்ரஹங்கள் சுத்த சத்வ மயங்கள் என்றும் –
இவற்றுக்கு ஈஸ்வரன் இச்சா மாத்ரமே காரணம் என்றும் –
தர்ம ரஷணம் பண்ண வேண்டிய காலமே காலம் என்றும் –
சாது பரித்ராணாதிகளே பிரயோஜனங்கள் என்றும் –
இவ் வர்த்தம் அறிந்து தெளிந்து இருப்பார்க்கு ஏக ஜன்மத்தில் ஸ்வ அதிகார அனுகுண சமீஹித உபாய பூர்த்தியாலே
ஜன்மாந்தரம் அனுபவியாதே முக்தர் ஆகலாம் என்றும்
பஹூ நி மே வ்யதீதா நி என்று -ஸ்ரீ கீதை -4-5- ஐந்து ஸ்லோகத்தாலே ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்தான் –

(5.பஹு நி மே வியதீதாநி ஜன்மாநி தவ சார்ஜந |
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ! ||
பகவான் சொல்கிறார்
அர்ஜுனா ! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்துவிட்டன .
உனக்கும் அப்படியே.அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன் .
நீ அறியமாட்டாய்
6. அஜோ$பி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோபி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாப ஸம்பவாம்யாத்மமாயயா ||
நான் பிறப்பற்றவன். அழிவு இல்லாதவன்.ஸகல பூதங்களுக்கும் ஈச்வரன் .
இப்படி எல்லாம் இருந்தாலும் என்னுடைய மாயையால்
ஸங்கல்ப மாத்ரத்தில் அவதரிக்கிறேன்
7.யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத |
அப்யுத்தாந மதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||
எப்போது எப்போது தர்மம் நிலைகுலைந்துபோய் அதர்மம் வளர்கிறதோ
அந்தச் சமயத்தில் எல்லாம் நான் அவதரிக்கிறேன்
8.பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
ஸாதுக்களைக் காப்பாற்றவும் , துஷ்டர்களை அழிக்கவும்
தர்மத்தை நிலை நிறுத்தவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்
9. ஜந்ம கர்ம ச மே தி வ்யமேவம் யோ வேத்தி தத்வதா |
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந ||
அர்ஜுனா என்னுடைய திவ்ய அவதார ரஹஸ்யங்கள் என்னுடைய
செயல்கள் ,எவன் இப்படி உள்ளபடி தெரிந்து கொள்கிறானோ
அவன் (ஆத்மா ), சரீரத்தை விட்டவுடன் மறுபடியும் பிறவி இல்லாமல்
என்னையே அடைகிறான்
10. வீதராக பயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா |
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா ||
விருப்பம், பயம், கோபம் இல்லாதவர்களும் என்னையே
சரணம் என்று அடைந்தவர்களும் ஜ்ஞானம் என்கிற தவத்தால்
மோக்ஷமடைகிறார்கள்

விபாவதாரங்களைத் த்யானம் செய்வதால் அவனுக்கு அந்த எம்பெருமானின் குணங்கள் பற்றிய ஜ்ஞானம் வருகிறது;
மஹாவிச்வாஸம் உண்டாகிறது; இதனால், மோக்ஷம் அடைவதற்கு உள்ள உபாயம் ”ப்ரபத்தி ” என்று உணர்கிறான்)

இது ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுக்கு சரண்யா குண விசேஷ ஞான முகத்தாலே உபாய அனுஷ்டான ஷணத்திலே
மகா விச்வாசாதிகளை ஸ்திரீகரித்து உபகாரமாம்
இப்படியே அர்ச்சாவதாரமும் மிறுக்கிற மோஷத்தை தரும் என்னும் இடத்தை
ஸூ ரூபாம் பிரதிமாம் விஷ்ணோ பிரசன்ன வதநே ஷணாம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரீர் ஸூ வர்ண ரஜதாதிபி
விசத்ய பாஸ்ய தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரபிணீம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-16–என்று ஸ்ரீ சௌன பகவான் அருளிச் செய்தான்

(தங்கத்தாலே விக்ரஹத் திருமேனி, வெள்ளியாலே அப்படித் திருமேனி தரிசிப்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்குமாறு வடித்து,
அர்ச்சனம் செய்து த்யானிக்க வேண்டும். இதன்மூலமாக, அனைத்துத் தோஷங்களும் தொலைந்து ப்ரஹ்ம ரூபமான அதையே
அடைந்து விடுவான் இந்த அர்ச்சாவதார ரஹஸ்யம் ,இதன் மேன்மை இவற்றை உணர்ந்த ஆழ்வார்கள், அர்ச்சாவதாரத்திலேயே
முழுதும் மூழ்கி ,இதன் மூலமான பரமாத்மாவையே தர்ஸித்தனர் .)

ஆழ்வார்களும் இவ்வதார ரகஸ்யத்தையும்
அர்ச்சாவதார வை லஷண்யத்தையும் பிரகாரமாக அனுசந்தித்து இதற்குப் பேரணியாக பரத்வத்தைக் கண்டு போந்தார்கள் –

இப்படி இருக்கிற ஈஸ்வரன் தன் ஆனந்தத்துக்கு பரிவாஹமாகப் பண்ணும் வியாபாரங்கள்
சகல ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹார மோஷ பிரதத்வாதிகள் –

இவ் வீஸ்வரன் நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-இத்யாதிகளில் படியே –
சர்வ அவஸ்தையிலும் ச பத்நீகனாய்க் கொண்டே இருக்கும் என்னும் இடத்தை –
தத்த்வேந ய -மாதா பிதா -ஸ்லோக ரத்னம் ஸ்லோகங்கள் 4/5 -உபகார விசேஷத்தாலே
சாதரமாக விசேஷித்துச் சொல்லப்பட்ட பராசர பராங்குச பிரபந்தங்களிலே தெளிந்து கொள்வது –

(உலகத்துக்கே தாயான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , நாயகனான விஷ்ணுவை எப்போதும் பிரியாமல் உள்ளாள்.
( ப்ருகு மஹரிஷிக்குப் பெண்ணான பிறகோ , திருப்பாற்கடலில் தோன்றிய பிறகோ பகவானுடன் சேர்ந்தாள் என்பதல்ல–
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ,ரக்ஷண ,ஸம்ஹார ,மோக்ஷ தசைகளிலும்
பகவானுடன் கூடவே ஸர்வ அவஸ்தைகளிலும் பகவானுடன் கூடவே இருக்கிறாள் )

(ஸ்ரீ ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் –4 வது ச்லோகம்
தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ
போகாபவர்க ததுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

எந்த மஹரிஷி , வள்ளல்தன்மையுடன் ஜீவன், அசேதநம் ,ஈச்வரன் இவர்களின் தன்மை, ஜீவனின் அநுபவம், அசித்தின் அநுபவமான
கைவல்ய, ஐச்வர்ய , புருஷார்த்தங்கள் , மோக்ஷம், அவருக்கான -உபாயம்-வழி இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியாக
தெளிவாகக் காண்பிக்க புராண ரத்னம் என்பதை இயற்றினாரோ –அந்தப் பராசரருக்கு எனது வந்தனம்

5 வது ச்லோகம்
மாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீநம்மாழ்வார்—”ஆத்யஸ்ய ந குலபதே —-”, ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர் .
”மதன்வயாநாம்—” ஆளவந்தார், தம்மைச் சேர்ந்தவர் எல்லாரையும்
சேர்த்துக்கொண்டு,ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே ”சரணம்” என்கிறார்.

(ஈச்வருகிருபா அநாதிரபி ஆசார்யக்ருபாம் அபேக்ஷதே லீலாரஸ ஸஹசரிதா ச
ஆசார்யக்ருபாது தந்நிக்ரஹமபிசமயதி . அநுக்ரஹைக ரஸா ச . ஈச்வரஸ்ய
க்வசித் அதோ நீநீஷாபிவர்த்ததே அஸாது காரயித்ருத் வம் ச . ஆசார்யஸ்தது
ஸர்வத்ர உந்நிநீஷைவ ஸ ஸாத்வேவ காரயதி —
எம்பெருமானின் தயை ,ஆசார்யனின் தயையை அபேக்ஷித்தே நமக்கு நன்மையைச் செய்கிறது.
சிலபேர்விஷயத்தில், ஈச்வரன் நிக்ரஹமும் செய்வன் . கெட்ட செயல்களைச் செய்ய இடமளிப்பான்.
ஆசார்யனின் க்ருபை அநுக்ரஹத்தையே செய்யும்.நன்மையையே விளைவிக்கும்.)

(ஸ்வாமி தேசிகன் தன்னுடைய ஸ்தோத்ர பாஷ்யத்தில்
அத்ராஸம் மானதம் ரத்னம் ஸ்திரம் போக்யம் ப்ரகாஸகம் |
மஹார்கம் மங்களம் மான்யம் ஸுரக்ஷம் ஸுக்ரஹம் ந்ருணாம் || என்கிறார்
த்ராஸம் என்றால் ரத்னத்துக்கு உள்ள தோஷத்தைச் சொல்வது.
இது ”அத்ராஸம் ”. இந்த ரத்னம் எவ்விதத் தோஷமும் இல்லாதது.
மேலும் வைத்திருப்பவருக்குப் பெருமை முதலியன தருவது.
ஸ்தோத்ர ரத்னத்தில் , ஸ்ரீ ஆளவந்தார் முதல் 5 ச்லோகங்களாலே ஜ்ஞானத்தைக் கொடுத்தவர்களை நமஸ்கரிக்கிறார்.
ச்லோகம் 6ம் 7ம் —பரத்வம்
ச்லோகம் 8ம் 9ம் —ஸௌலப்யம்
ச்லோகம் 10 முதல் 21 —நாராயண ஸப்தார்த்தம்
ச்லோகம் 22–ப்ரபத்தி அநுஷ்டித்தது
ச்லோகம் 23—27 =ப்ரபத்திக்கு அதிகாரம் தமக்கு உள்ளதென்கிறார்
ச்லோகம் 28ம் 29ம், —லகு உபாயத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 30—46 =த்வயத்தில் உத்தரகண்டத்தின் பொருளைச் சொல்கிறார்
ச்லோகம் 47—-பலனில் ஆசையுடன் தகுந்த உபாயம் செய்யாததற்காக வருத்தம்
ச்லோகம் 48—51 =ப்ரபத்தி அளிக்கும்படி வேண்டுகிறார்
ச்லோகம் 52ம் 53ம் —ஸரணாகதி —ஸமர்ப்பணத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 54—57 =தேஹம் விடும்வரை இருக்க வேண்டுகிறார்
ச்லோகம் 58—63 =பகவானின் காருண்யம் பரத்வம், வாத்ஸல்யம்
ச்லோகம் 64—–வ்ரதம்
ச்லோகம் 65—ஆசார்ய அநுக்ரஹத்தின் பெருமை
இப்படியாக ”ஸ்தோத்ர ரத்ன”த்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டது.)

இவ் விடத்தில் தண்ட தரத்வமும் புருஷகாரத் வாதிகளும் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வியாபாரங்கள் –
உபதிஸ்யமான தர்மாதாரத்தில் காட்டிலும் அதி திஸ்யமான தர்மாதாரத்துக்கு விசேஷம்
ஸ்வத ப்ராப்தம் என்று உவர் மீமாம்சகர் அருளிச் செய்ததுக்கும் இப்படி விபாகத்தால் வந்த வைஷம்யத்திலே தாத்பர்யம் –
இது யுவத்வாதௌ துலே அபி -ஸ்ரீ குண ரத்ன கோசம் -16-என்கிற ஸ்லோகத்திலே நிர்ணிதம்-
(யுவாத் வா தெள துல்யேப்ய பரவஸதா–ஸத்ரு –ஸமன–
ஸ்த்த்ரவாதீன் க்ருத்வா பகவதி குணான் பும்ஸ்த்வஸுலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பாரார்த்தய கருணா
க்ஷமாதீன் வா போக்தும் பவதி யுவயோராத்மனிபிதா–ஸ்ரீ குணரத்னகோசம் –34

ஹே பெரியபிராட்டியாரான ரங்கநாயகி—-
இளமை முதலானவை ஒத்து இருந்தாலும் தனித்துச் செயல்படும் திறமை,எதிரிகளை அடக்குவது , எடுத்த காரியத்தில்
உறுதியோடு இருப்பது, முதலான நல்ல குணங்கள் ஆண்மைக்கு அநாதிகாலமாக இருக்க,
ஜகன்மாதாவான உம்மிடம் பெண்மைக்கே தகுந்தவை என்று ஏற்பட்ட மனஸ்ஸின் தன்மை , நாயகனான பகவானின்
திருவுள்ளத்துக்கு மீறாமல் இருப்பது பிறர் கஷ்டங்களைத் துடைப்பது, பொறுமை , இவை முதலானவை அநாதிகாலமாக
அமையப்பெற்று ஜீவன்கள் அநுபவிக்க ஏற்றவாறு
உங்கள் இருவரின் ஆத்ம ஸ்வரூபத்தில் பிரித்து அறியும் நிலை ஏற்பட்டுவருகிறது.)

இறை நிலை உணர்வு அரிது -என்று ஆழ்வார் அருளிச் செய்த நிலத்திலே ஏதேனும் ஒரு வ்ருதா நிர்பந்தம் ஆகாது –
உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள் !
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்றும் இவரை
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே–1-3-6-

க்ருசா நர்தாம்ஸ் தத கேசித் க்ருசாம்ஸ் தத்ர குர்வதே -என்கிறபடியே
(சிலர் சிறிய விஷயங்களையும் பெரிதாக்குகின்றனர் . நாம் நமது வாதங்களை நமக்குள்ள தர்க்கவாத அறிவைக் கொண்டே
நிரூபித்து விடலாம்.ஆனாலும் சிறிய விஷயங்களாக இருந்தாலும் சாஸ்த்ர பிரமாணம் தேவைப்படுகிறது.
ஆதலால்,இந்த ஈச்வர தத்வத்தையும் சாஸ்த்ரரூபமாக அறியவேணும்)
தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்து எல்லாம் சாதிக்கலாய் இருக்கச் செய்தே இறே நாம் பிரமாண சரணராய்ப் போருகிறது
ஆகையால் இவ் வீஸ்வரத்தையும் ஈசிதவ்ய தத்வங்களையும் யதா பிரமாணம் தெளியப் பிராப்தம் –

இவ்விடத்தில் சர்வஜ்ஞன் ஆகவும் வேண்டா –
அத்யந்த அனுப யுக்தங்களில் போலே ஸ்வல் போப யுக்தங்கள் ஆனவற்றில் அபிசந்தி பண்ணவும் வேண்டா –
அபரிச்சேத்யமான கடலிலே படகோடுவார் வழி முதலாக வேண்டுவன தெளியுமா போலே
இவ்வளவு விவேகிக்கை அவஸ்யாபேஷிதம்-இது பிரதிஷ்டமாகைக்காக இவற்றின் விரிவுகள் எண்ணுகிறது

இப்படி மூன்று தத்வங்களாக வகுத்துச் சிந்தித்தால் போலே சர்வ விசிஷ்ட வேஷத்தாலே ஈஸ்வரன் ஏக தத்வமாக அனுசந்திப்பார்க்கும்
ஈச ஈசி தவ்யங்கள் ஆத்மா அநாத்மாக்கள் -உபாய உபேயங்கள்-என்றால் போலே இரண்டு அர்த்தம் ஞாதவ்யமாக வகுப்பார்க்கும்
ரஷ்யம் ரஷகம் -ஹேயம் உபாதேயம் -என்று இப் புடைகளிலே அர்த்த சதுஷ்டயம் ஞாதவ்யமாக சங்க்ரஹிப்பார்க்கும்
முன்பு சொன்னபடி அர்த்த பஞ்சகம் -ஷட் அர்த்தங்கள் என்று விவேகிப்பார்க்கும்
ரகஸ்ய சாஸ்த்ரங்களில் படியே சப்த பதார்த்த சிந்தாதிகள் –
ஈஸ்வரன் -அவித்யை- கர்மம் -காலம் கடமை இயற்ற வேண்டிய முறை சமமாக இருத்தல் போன்ற
ஏழு சிந்தனைகளையும் -பண்ணுவார்க்கும்
அவ்வோ ஞான அனுஷ்டான பிரயோஜன விசேஷங்கள் கண்டு கொள்வது –

ரஹஸ்யார்த்தங்களில் — ஸப்த —-பதார்த்த —சிந்தாதிகள் —
1.ஈச்வரன்
2. அவித்யை ( அஞ்ஞானம் )
3. கர்மம் ( ஊழ்வினை )
4.காலம்
5. கடமை ( கர்த்தவ்யதை )
6.செய்யவேண்டிய முறை ( இதி கர்த்தவ்யதை )
7. புலனடக்கம் (ஸம்யமம் )

——————————————————————–

சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புத்தேஸ்வலந காரணம்
உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் சர்வ கர்ம ஸூ -என்கிறது
உபயுக்தமான சாராம்சத்தைக் கடுக சரவணம் பண்ணி கிருஷி பண்ணாதே உண்ண விரகு உடையவன் கிருஷி சிந்தையை பண்ணுமா போலே
விரிவு கற்கைக்கு ஈடான சாஸ்திர அப்யாசாதி கர்மங்களில் உபதரனாய்க் கடுக மோஷ உபாயத்திலே மூள ப்ராப்தம் என்றபடி —
உபயுக்தேஷூ த்ரிவர்க்க நிரபேஷதா-கராணா த்ரய சாரூப்யம் இதி சௌக்ய ரசாயனம் –
(எது ஸெளக்ய ரஸாயனம் ( நலத்தைத் தரும் மருந்து ) என்றால், தேவையானவற்றில் ஜ்ஞானம், தர்ம ,அர்த்த ,காமப் பற்றை
அறுத்தல், எண்ணம்,சொல் செயல் –மூன்றும் ஒருப்பட்டு இருப்பது.)

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் வினை உடம்பில்
கூறுபடும் கொடு மோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாற நினைந்து அருளால் மறை நூல் தந்த வாதியரே–

ஆவாப உத்வா பதஸ்ஸ் யு கதி கவிதீ சித்ரவத்தத் ததர்தேஷூ
ஆனந்த்யா தஸ்தி நாஸ்த்யோர நவதி குஹ நா யுக்தி காந்தா க்ருதாந்தா
தத்த்வா லோ கஸ்து லோப்தும் பிரபவதி சஹஸா நிஸ் சமஸ்தான் சமஸ்தான்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு பிராணிதா ஸ்தாணு தாதி —

பலபலத் தத்வங்கள் சொல்லப்படுகின்றன . ஒன்றில் இல்லை ; மற்றொன்றில் உளது. இன்னொன்றில் நீக்கல்; வேறொன்றில் சேர்க்கை.
இப்படியாக, அவரவர் வாதங்களால் கேட்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது .புலவர்களின் எல்லையில்லச் சிந்தனையைப்
போல, தத்வங்கள் எல்லையற்று உள்ளன. ,உண்மையைக் காணும் அறிவு, இவை அனைத்தையும் இருக்குமிடம் தெரியாமல் போக்கிவிடும் .
ஒரு மனிதன் தனக்கு முன்பு உள்ள பொருளை ”மணிதன் எனத் தெளிந்தால் , பின்பு ,அது மிருகமா, கட்டையா என்கிற ஐயம் வராது.
அப்படியே எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எனத் தெளிந்தபிறகு ,ருத்ரனா ,ப்ரம்மனா என்கிற ஐயம் அடியோடு நீங்கும்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -198-202–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 8, 2014

சூர்ணிகை -198-

ஆக
இப்படி விபவத்தை உபபாதித்த அநந்தரம்
அந்தர்யாமித்வத்தை
உப பாதிக்கிறார்

அந்தர்யாமித்வம்
ஆவது
அந்த பிரவிசய
நியந்தாவாய்
இருக்கை –

அதாவது
ய ஆத்மா நம நதரோ யமயதி
என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜனா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர் சேஷ சய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதனருடைய யுள்ளே பிரவேசித்து
சகல பிரவ்ருதிகளுக்கும் நியந்தாவாய் இருக்கை
அந்தர் யாமித்வம் -என்கை-

———————————————————————————————

சூர்ணிகை -199-

இது தான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று
நியமிக்குமதுவும்
ச விக்ரஹனாய்க் கொண்டு
ஹிருதயத்திலே வியாபித்து இருந்து நியமிக்குமதுவும் கொண்டு
த்வி விதமாய் இருக்கையாலே
உபயத்தையும் அருளிச் செய்கிறார் –

ஸ்வர்க்க
நரக
பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்
சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே
சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்
அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு —

அதாவது –
அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச சர்வேஷாம் பந்துவத ஸ்திதம் -என்று தொடங்கி-
ஸ்வர்க்க நரக பிரவேசேபி பந்து ராதமாஹி கேசவ -என்று சொன்னபடியே
புண்ய நிபந்தனமாக ஸ்வர்க்கத்தை பிரவேசிக்கையும்
பாப நிபந்தனமாக நரகத்தை பிரவேசிக்கையும்
உபய நிபந்தனமாக கர்மத்தை பிரவேசிக்கையும்
முதலான எல்லா அவஸ்தை களிலும்
எல்லா சேதனர்க்கும் இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளேயே பதி கிடந்தது
சத்தையையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே
துணையாய்
அவர்களை ஒரு காலும் விடாதே
அந்தராத்மாவாய் நிற்கும் நிலைக்கு மேலே —
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜயோ திரிவாதூமாக -என்றும்
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா-என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஜ்யோதி ரூப மயமான ச்யாமளமான தன்னை முட்டாக்கிடும் படி
செம்பொனே திகழுகிற புகராலே நீல தோயத்தை விழுங்கின
வித்யுல்லேகை போலே இருக்கையாலே
பாஹ்ய விஷய பிரவணமான மனசை
அதில் நின்றும் பற்று அறுத்து
தன் பக்கலிலே பிரவணமாம் படிக்கு
சுபாஸ்ரயமான திரு மேனியோடு அந்த சேதனர்க்கு
த்யான ருசி பிறந்த போது த்யெயன் ஆகைக்காகவும்
புத்த்யாதிகளுக்கு நியாமகனாய்க் கொண்டு
அவர்களை ரஷிக்கைக்காகவும்
நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்காலே
பந்து பூதனாய்க் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்ச சாபயதோமுகம்-என்கிற ஹிருதயத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை
அந்தராத்மதையை முதலில் சொல்லி
அதுக்கு மேலே ச விக்ரஹனாய்க் கொண்டு ஹிருதய கமலத்தில் இருக்கும் இருப்பைச் சொல்லி தலைக் கட்டிற்று –
விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி வருகிற பிரகரணம் -ஆகையாலே-

—————————————————————————–

சூர்ணிகை -200-

ஆக அந்தர்யாமித்வத்தை உப பாதித்தாராய் நின்றார் கீழ் –
அநந்தரம்
அர்ச்சாவதாரத்தை உப பாதிக்கிறார் –

அர்ச்சாவதாரம் -ஆவது
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே
விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி
சந்நிதி பண்ணி
அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும்
கிருஹங்களிலும்
எழுந்து அருளி நிற்கும் நிலை –

அதாவது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்கிறபடியே
ஆஸ்ரிதர் யாதொன்றை தனக்குத் திரு மேனியாகக் கோலினார்கள்-அத்தையே
தனக்கு வடிவாகக் கொள்ளும் என்றபடியே
ஆஸ்ரிதரான சேதனர்க்கு அபிமதமான
ஸ்வர்ண ரஜதாதி சிலாபர்யந்தமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்திலே
அயோத்யா மதுராதி தேச நியமம் என்ன
பதினோராயிரம் சம்வச்த்ரம் நூறு சம்வச்தரம் என்றால் போலே யுண்டான கால நியமம் என்ன
தசரத வஸூ தேவாதிகள் என்றால் போலே சில அதிகாரி நியமம் என்ன
இவற்றை யுடைத்தாய் கொண்டு சந்நிதி பண்ணின
ராம கிருஷ்ணாதி விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே –
பௌம நிகேத நேஷ வபி குடீகுஞ்ஜே ஷூ -என்கிறபடியே
ஒருதேச நியமம் இல்லாத படியாகவும்
அர்ச்சகனுடைய அபேஷா காலம் ஒழிய தனக்கு என்று ஒரு கால நியமம் இல்லாத படிக்கும்
ருசி யுடையார் எல்லாருக்கும் ஆகையாலே இன்னார் எனபது ஓர் அதிகாரி நியமம் இல்லாத படியாகவும்
சந்நிதி பண்ணி
சர்வ சஹிஷ்ணு -என்கிறபடி -சஹிஷ்ணு வாகையாலே
அவர்கள் செய்யும் அபராதங்களைக் காணாக் கண் இட்டு
அர்ச்சக பராதீநா கிலாதம் ஸ்திதி -என்கிறபடியே
அர்ச்சக பரதந்த்ரமான ஸ்நான ஆச நாதிகளான
சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் -என்கை –
அர்ச்சா பூஜா பிரதிமயோ -என்கையாலே
அர்ச்சா சப்தம் பிரதிமா வாசி –

—————————————————————————————

சூர்ணிகை -201-

இவ் வர்ச்சாவதாரத்தின் யுடைய
ருசிஜனகத்வாதி குண பூர்த்தியை
அருளிச் செய்கிறார் –

ருசி ஜனகத்வமும்
சுபாஸ்ரயமும்
அசேஷ லோக சரண்யதவமும்
அனுபாவ்யத்வமும்
எல்லாம்
அர்ச்சாவதாரத்திலே
பரி பூர்ணம் –

அதாவது
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போரும் சேதனர்க்கு தன்னுடைய
ரூப ஔதார்ய குணங்களாலே வைமுக்யத்தை மாற்றி
தன் பக்கலிலே ருசியை ஜனிப்பிக்கையும்
ருசி பிறந்த அநந்தரம்
தன்னை பஜிக்குமவர்களுக்கு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம் படி
சுபாஸ்ரயமாய் இருக்கையும்
அவ்வளவு அன்றிக்கே தன்னையே உபாயமாக சுவீகரிக்கும் அளவில்
குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களில் உள்ளவர்களுக்கும் சரண வர்ணார்ஹமாய் இருக்கையும்
உபாயமான மாத்ரமாய் ஒரு தேச விசேஷத்திலே போனால்
அனுபாவ்யமாம் படி இருக்கை அன்றிக்கே
வை லஷண்யத்தில் வாசி அறிந்தவர்களுக்கு
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்னும்படி
அனுபாவ்யமாம் படி இருக்கையும் ஆகிற
இவை எல்லாம் அர்ச்சாவதாரத்தில் பரி பூரணமாய் இருக்கும் என்கை –
ஸூ ருபாமா பிரதிமாம் விஷ்ணோ பிரச்னனவாத நேஷானாம்
க்ருதவாதமான ப்ரீதி கரீமா ஸ்வர்ண ரஜ தாதிபி தர்மசசயதே தாம பரணமேத
தாம் பஜேதே தாம் விசிந்தயேத் விசதய பாசத தோஷச்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம்-என்று
இவ் வர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
தனக்குத் திருமேனியாகக் கொண்டு
அவர்களுக்கு உபாசயனுமாய் பிராப்யனுமாய்
இருக்கும் என்னும் இடம் ஸ்ரீ சௌநக பகவானாலும் சொல்லப் பட்டது இ றே-

——————————————————————————————–

சூர்ணிகை -202-

இன்னமும் இவ் வர்ச்சாவதார குணாதிக்யத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்வ ஸ்வாமி பாவத்தை
மாறாடிக் கொண்டு
அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும்
அசவந்தரைப் போலேயும்
இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு
சர்வ அபேஷிதங்களையும்
கொடுத்து அருளும் –

அதாவது
ஸ்வ தவமா தமநி சஞ்ஜாதம் ஸ்வாமி தவம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
சேதனனுக்கு ஸ்வத்வமும்-தனக்கு ஸ்வாமி தவமும் வ்யவஸ்திதமாய் இருக்க
இவன் தன் உடைமைகளோடு ஒக்க அவனையும் சஹபடிக்கும்படி
ஸ்வாமித்வம் இவன் பக்கலிலும் ஸ்வத்வம் தன் பக்கலிலும்
ஆக தன் இச்சையால் மாறாடிக் கொண்டு
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித் பராசய சக்திர் விவிதைவ சரூயதே -என்றும்
ந தசயேசே கச்சந -என்றும்
சர்வேச்வரச சர்வத்ருக் சர்வவேததா சமஸ்த சக்தி பரமேச்வராககைய -என்றும்
சொல்லுகிறபடி
சர்வஜ்ஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்
இருக்கிற தன்னை அமைத்துக் கொண்டு
தன் காரியமும் பிறர் காரியமும் அறிய மாட்டாத அஜஞரைப் போலேயும்
தன்னைத் தான் ரஷிக்க மாட்டாத அசக்தரைப் போலேயும்
தனக்கு என ஒரு முதன்மை இல்லாத அசவத நரைப் போலேயும்
இரா நிற்கச் செய்தேயும்
விமுகரையும் உட்பட விட மாட்டாத படி கரை புரண்டு செல்லுகிற காருண்யம் இட்ட வழக்காய்க் கொண்டு
நேத்ர புத்ர விதரணம் முதலாக மோஷ ஸ்தான பர்யந்தமாக
யதாதிகாரம் சேதனருடைய சகல அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் என்கை –

அர்ச்சாவதார ரச சர்வேஷம் பாந்தவோ பக்த வத்சல
ஸ்வ தவமாத்மநி சஜ்ஞ்ஞாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம் -என்று
அர்ச்சாவதாரமானது சர்வர்க்கும் பாந்தவமாய் பகவத் ஸ்வம்மாய் இருக்கும்
ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும் ஸ்வாமித்வம் ஆனது என் பக்கலிலும் வ்யவஸ்திதமாய் இருக்கும் என்றும்
இதிவ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவசச தவதி மமாயம் ராம இதயேவ தேவ பிரசுலாஞ்சந-என்றபடி
சேஷித்வம் வ்யவஸ்திதமாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய கேசவன் என்றும்
பரசுவை அடையாளமாக உடையனான தேவனான ராமன் என்னுடையவன் என்றும்
மமாயம வாமனோ நாம நரசிம்ஹாக்ருதி பிரபு வராஹ வேஷா பகவான் நரோ நாராயணஸ் ததா -என்று
என்னுடையவன் இந்த வாமனானவன்
பிரபுவான நரசிம்ஹ ரூபியானவன்
வராஹ வேஷத்தை யுடைய பகவான்
அப்படியே நர நாராயணன் -என்றும்
ததா கிருஷ்ணச ச ராம்ச ச மமயாமிதி நிரதிசேத மதகராமவாசீ பகவான் மமைவேதி ச தீர் பவேத -என்னும்படி
கிருஷ்ணனும் ராமனும் என்னுடையவன் சொல்லா நிற்கும்
என்னுடைய கிராமத்தில் இருக்கும் பகவான் என்னுடையவனஎன்றும் மமத்வ புத்தி யுண்டாகா நிற்கும்
சிந்தயேசச ஜகந்நாதம் சுவாமி நாம பரமார்த்தததா அசக்தம்
அஸ்வ தரஞ்ச ரஷ்யஞ்சாபி ஜநார்த்தனம் -என்று
பரமார்த்ததால் ஜகன்னாதனாய ஸ்வாமியான ஜனார்த்தனனை அசக்த னாகவும்
அஸ்வ தந்த்ரனாயும் ரஷ்ய பூதனாகவும் சிந்திப்பதும் செய்யா நிற்கும்
திசசயா மகா தேஜோ புங்க்தே வை பக்த வத்சல ஸ்நானம் பானம் ததா யதா ராம குருதே வை ஜகத்பதி –
என்று பெரிய தேஜஸ் சை யுடைய ஜகத்பதி யானவன்-பக்தனுக்கு வத்சலனாய்க் கொண்டு
அவன் இச்சித்த போது அமுது செய்யா நிற்கும்
அப்படியே ஸ்நானத்தையும் பானத்தையும் யாத்ரையும் பண்ணா நிற்கும் -என்றும்
ஸ்வ தந்த்ரச ச ஜகன்நாதோபி அஸ்வதந்த்ர்யோ யதா ததா
சர்வ சக்தி ஜகதாதாபி அச்சக்த இவ சேஷ்ட தே -என்று
ஸ்வ தந்த்ரனாய் ஜகன்நாதனாய் இருக்கச் செய்தேயும் அவன் யாதொருபடி
அஸ்வதந்த்ரன் -அப்படி யாகா நிற்கும்
சர்வ சக்தியாய் ஜகத்துக்கு ஸ்ரஷ்டாவாய் இருக்கச் செய்தேயும் அசக்தரைப் போலே செஷ்டியா நிற்கும் என்றும்
சர்வான் காமான் தத ச்வாமயபி அச்சக்த இவ லஷ்யதே அபராதா நபி ஜஞச சன சதைவ குருதே தயாம -என்று
எல்லா கர்மங்களையும் கொடா நின்று ஸ்வாமியாய் நிற்கச் செய்தேயும்
அசக்தரைப் போலே காணப்படா நிற்கும்
அபராதங்களில் அறிவிலானாக நின்று கொண்டு எப்போதும் தயைப் பண்ண நிற்கும் -என்றும்

அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேச தச ததா உகதா குணா ந சக்யந்தே வக்தும் வாஷச தைரபி-என்று
அர்ச்சாவதார விஷயத்தில் என்னாலும் சுருங்கச் சொல்லப்பட்ட அத்தனை
குணங்கள் ஆனவை நூறு வருஷம் கூடினாலும் சொல்ல சக்யங்கள் அல்ல என்றும்
ருதே ச மத பிரசாத தவா ஸ்வதோ ஜ்ஞாநாகமேன வா -என்று
என்னுடைய பிரசாதம் ஒழிந்தாலும்
ஸ்வ ச சித்தமான ஜ்ஞானம் இல்லாத போதும் சொல்ல முடியாது என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநாம பத்தாம அத பூர்வ சமாதபி பூர்வ சமாத ஐயாயாம்ச சைவோத தரோ ததா -என்று
இப்படி பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரனான நான்
அத பதிக்கிற ஆத்மாக்களுக்கு
பூர்வ பூர்வ பிரகாரங்களில் காட்டில்
உத்தர உத்தர பிரகாரத்தில்
சௌலப்யத்தாலே ஸ்ரேஷ்டனாய் இருப்பேன் என்றும்
சௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸூ லபோ ஹயுத்த ரோததர -என்று
ஜகத் ஸ்வாமியான தான் சௌலப்யத்தாலெ மேலே மேலே
ஸூ லபனாய் இருப்பேன் இ றே என்றும் –
சர்வாதி சாயி ஷாட குண்யம் சமஸ்திதம் மந்தரபிமபயோ மந்தரே வாசயதே
மனா நித்யம் பிம்பே து க்ருபயா ஸ்திதம் -என்று
சர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட் குணிய ரூபமானது
மந்தர பிம்பங்களிலே நிற்கும் என்றும்
மந்தரத்திலே வாசயாதமநா நிற்கும் பிம்பத்திலே கிருபையாலே நிற்கும் என்றும் –
இப்படி அர்ச்சாவதாரத்தின் உடைய குணாதிக்கியம்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே சர்வேஸ்வரன் தன்னாலே அருளிச் செய்யப் பட்டது இ றே-

ஆஸ்தாம தே குணாராசிவாத குணா பரீவாஹாதம நாம ஜன்மாநாம் சங்க்யா பௌம
நிகேத நேஷ வபி குடீ குஞ்ஜேஷூ ரெங்கேஸ்வர
அர்ச்சயச சர்வ சஹிஷ்ணு ராசசக பராதீ நாகிலாத மஸ்திதி பரீணீஷி ஹ்ருதயாலுபிச
தவததச சீலாஜா ஜடீ பூயதே -என்று
அவதாரங்களை அருளிச் செய்த அனந்தரத்திலே
அர்ச்சாவதார வைபவத்தை சங்க்ரஹேண ஒரு ஸ்லோகத்திலே அருளிச் செய்தார் இ றே பட்டர்-

————————————————————————————-

ஆக
ஈஸ்வரனுடைய ஸ்வரூப வைலஷண்யத்தையும்
அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண வைலஷண்யத்தையும்
அக் குணங்கள் அடியாக அவன் பண்ணும் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களையும்
அப்படி காரண பூதன் ஆனவனுடைய சர்வ பல பிரதத்வத்தையும்
காரணத்வாத் உபயோகியான விலஷண விக்ரஹ யோகத்தையும்
அந்த விக்ரஹ வை லஷண்ய அனுரூபமான லஷ்மி பூமி நீளா நாயகத்வத்தையும்
அந்த விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதி பஞ்ச பிரகாரத்வத்தையும்
அருளிச் செய்து
ஈஸ்வர தத்தவத்தை நிகமித்தார் ஆயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -189-197-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 7, 2014

சூர்ணிகை -189-

ஆக வ்யூஹத்தின் படியை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விபவத்தின் படியை விஸ்தரேண உபபாதிக்கிறார் மேல் –

விபவம்
அனந்தமாய்
கௌண
முக்ய
பேதத்தாலே
பேதித்து இருக்கும் –

அதாவது
விபவோபி ததா அனந்தோ தவிதைவ பரிகீரதயதே கௌண முக்கய விபாகேன சாஸ்த்ரேஷூ ச ஹரே முனே -என்றும்
பரா துர்ப்பாவோ தவிதா பரோகதோ கௌண முக்கய விபேததே-என்றும்
சொல்லுகிறபடியே
விபவமானது பரி கணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அனந்தமாய்
கௌண முக்கியம் ஆகிற பேதத்தால் இரண்டு வகையாகப் பிரிந்து இருக்கும் -என்கை
விபவம் ஆவது -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஆவிர்பவிக்கை
இதில் கௌணம் என்றது அவரம் என்றபடி
முக்கியம் என்றது ஸ்ரேஷ்டம் என்றபடி
கௌணம் ஆவது ஆவேச அவதாரம்
முக்யமாவது -சாஷாத் அவதாரம் -ஆவேசம் தான் -ஸ்வரூப ஆவேசம் என்றும் சக்த்யா ஆவேசம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதில் ஸ்வரூப ஆவேசம் ஆவது ஸ்வமான ரூபத்தாலே ஆவேசிக்கை
ஆதாவது பராசுராமாதி களான சேதனர் உடைய சரிரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை
சக்த்யா ஆவேசமாவது -கார்ய காலத்திலே விதி சிவாதிகளான சேதனர் பக்கலிலே
சக்தி மாத்ரத்திலே ஸ்புரித்து நிற்கை –

———————————————————————————————

சூர்ணிகை -190-

இனி முக்கிய விபத்தோடு கௌண விபவத்தோடு
சாம்ய
வைஷம்யங்களை
அருளிச் செய்கிறார் –

மனுஷ்யத்வம்
திர்யக்த்வம்
ஸ்த்தாவ்ரத்வம்
போலே
கௌணத்வமும்
இச்சையாலே வந்தது
ஸ்வ ரூபேண அன்று –

அதாவது
மதிச்சயா ஹி கௌண த்வம் மானுஷ்யம் இச்சேசயயா ஸூ க்ரதவஞ்ச மத்ச்யத்வம்
நாரசிம்ஹ தவமேவச யதாவா தண்ட கராணயே குப்ஜாமரத்வம் மச்சேயா
யதா வர்ஜி முகதவஞ்ச மம சங்கல்ப தோ பவத சேனா பதே
மமேச்சாதோ கௌ ண த்வம் ந ச கர்மணா என்கிறபடியே
ராம கிருஷ்ணாத் வாதியான மனுஷ்யத்வம்
மத்ஸ்ய கூர்ம தவாதியான திர்யக்த்வம்
குப்ஜாமரத்வம் ஆகிற ஸ்தாவரத்வம்
ஆகிற இவை -இச்சையாலே ஆனால் போலே
ஆவேச ரூபமான கௌணத்வமும் இச்சையாலே வந்தது என்னும் ஆகாரம் ஒக்கும்
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ அசாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று என்கை –
உபாத்த வசனங்கள் இச்சையாலே வந்தது என்கிற மாதரத்தை சொல்லிற்றே ஆகிலும்
கௌணத்வம் ஆவது மனுஷ்யத்வாதிகள் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு
அவதரித்தது அல்லாமையாலே
ஸ்வரரூபேண வந்தது அன்று என்னும் இடம் சித்தம் இ றே-

———————————————————————————-

சூர்ணிகை -191-

இன்னமும் உபாசயத்வ அனுபாசயத்வ கதன முகத்தாலும்
உபயத்துக்கும் யுண்டான விசேஷத்தை
தர்சிப்பிதாக திரு உள்ளம் பற்றி
பிரதம் முக்கிய விபவத்தின் உடைய உபாயசத்வத்தை சஹேதுகமாக அருளிச் செய்கிறார்

அதில்
அப்ராக்ருத விக்ரஹங்களுமாய்
அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே
யிருக்கக் கடவதான
முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு
உபாசயங்களாய் இருக்கும் –

அதாவது
உபய விதமான விபவத்திலும் கொண்டு
பரா துர்ப்பா வாஸ்து முகயாய மதமசதவாத விசேஷத அஜஹத ஸ்வ பாவ விபவா திவ்ய அப்ராக்ருத விக்ரஹா
தீபாத தீபா இவோ தப நானா ஜகதோ ரஷணாய தே அர்ச்சயா
ஏவஹி சேநேச சம்ஸ்ருயூதத தரணாய முக்க்யா உபாசயாச
சேநேச அநாச்சையான இதரான விது -என்கிறபடியே –
ஆதி யஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தது ஆகையாலே
அப்ராக்ருத விக்ரஹகங்களுமாய்
அஜோபிசன் அவயவத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கையாலே
விடாதே இருந்துள்ள
அஜத்வ அவ்யவத்வ சர்வேஸ்வரத்வ வாதியான
ஸ்வ பாவ விபவங்களை யுடையவையுமாய்
அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பன்னமான ப்ரதீபம்
ஸ்வ காரணமான தீபத்தின் யுடைய ஸ்வ பாவத்தை
உடையதாய் இருக்குமா போலே
ஸ்வ காரண துல்ய ஸ்வ பாவமாய் இருக்கிற முக்கய பர துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூக்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் -என்கை —

————————————————————————————————-

சூர்ணிகை -192-

அநந்தரம்
கௌண விபவத்தின் உடைய அனுபாசயத்வத்தை
சஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

விதி சிவ-பாவக
வியாச
ஜாமதக்ன
யார்ஜூன
விததே சாதிகள் ஆகிற
கௌண பரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுகத ஜீவர்களை அதிஷ்டித்து
நிற்கையாலே
முமுஷூக்களுக்கு
அனுபாச்யங்கள் –

அதாவது
அநாச்சயா நபி வஷயாமி பரா துர்ப்பவாந யதாக்ரமம் சதுர்முகச து பகவான் ஸ்ருஷ்டிகார்யே நியோஜித
சங்க ராக்க்யோ மகாருதரச சம்ஹாரே விநியோஜித
மோஹனாககயச ததா புத்தோ வியாச ச சைவ மகா த்ருஷி வேதா நாம வயசனே தத்ர தேவேன விநியோஜித
அர்ஜூனோ தன்வி நாம ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகா நருஷி
வ ஸூ நாம பாவ கச்சாபி வித்தே ச ச ச ததைவ ச ஏவ மாதாயாச து சே நேச
பரா துர்ப்பாவைர திஷ்டி நா ஜீவாத்மா நச சர்வே நோபா சதிர
வைஷ்ணவி ஹி சா ஆவிஷ்ட மாதரச தே சர்வே
கார்யார்த்த மமிததயுதே அநாசசயாச சர்வே
யேவைதே விருத்த வான் மகாமதே அஹங்கருதி யூதாச சேமே
ஜீவமிஸ்ரா ஹைய திஷ்டிதா -என்கிறபடியே
ஸ்ருஷடி கர்த்தாவான ப்ரஹ்மாவும்
சம்ஹார கர்த்தாக்களான சிவ பாவ காக்களும்
வேதங்களை வ்யசித்த வ்யாசனும்
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்னி புத்ரனான பரசுராமனும்
அகார்யா சிந்தா சம மேவ பர துர்ப்பவம் சாபதர புரஸ்தாத் -என்கிறபடியே
சாபரதனாய்க் கொண்டு ஜகத்தை ரஷித்துக் கொண்டு போந்த
கார்த்த வீர்ய அர்ஜூனனும்
ஔ தார்யா பரதானனான வித தேசனும்
ஆதி சப்தத்தாலே
கரோடி கருதரான ககுஸ்தமுசுகுந்த பரப்ருதி களுமாகிற
கௌண பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
ஸ்வ தந்த்ர்யா ரூபமான அஹங்கார யுக்தரான ஜீவர்களை
கார்யார்த்தமாக ஆவேச முகேன அதிஷ்டித்து நிற்கையாலே
புபுஷூக்களாய் இருப்பார்க்கு ஒழிய
முமுஷூ க்களுக்கு உபாசயங்கள் அன்று -என்கை –
வியாச ஜாமதாகன யார்ஜூன -என்கிற இடத்தில்
அர்ஜூனன் என்கிறது பாண்டு புத்ரனான அர்ஜூனனையும் ஆக்கவுமாம்
அவனையும் ஆவேச அவதாரமாக இதிஹாசாதிகளில் சொல்லுகையாலே-

இந்த கௌண பரா துர்ப்பாவ அனுபாயச்த்வம் தான்
ப்ரஹ்ம ருத்ர ரார்ஜூன வியாச சஹசர கர பார்க்கவா
ககுத சதா தரேயா கபில புத்தாதய யே சஹச்ரச
சகதயா வேசாவதாராச து விஷ்ணோ சததகால விக்ரஹா
அனுபாச்யம் முமுஷாணாம் யதேநதராக நயாதி தேவதா -என்று
சம்ஹிகாந்தரத்திலும் சொல்லப் பட்டது இ றே
உபதாத வசனங்களில் புத்த முனியையும் ஆவேச அவதாரங்களில் ஒன்றாக சொன்ன இது
மாயுருவில் கள்ள வேடம் -என்று ஸ்வேன ரூபேண அவதரித்ததாகச் சொன்ன
நம் ஆச்சார்யர்கள் வசனத்தோடு விருத்தம் அன்றோ என்னில்
கல்ப பேதத்தால் அப்படி யும் செய்யக் கூடும் ஆகையாலே விருத்தம் அன்று
ஜாமதக் நயன ஸ்வரூப ஆவேச அவதாரமாய் இருக்க
சக்தி ஆவேசங்களோடு சஹபடித்தது
ஸ்வரூபேண ஆவேசிக்கிறது சக்தி விசேஷத்தாலே ஆகையாலே -என்று நியமித்துக் கொள்வது –

———————————————————————————————————

சூர்ணிகை -193-

ஆக
விபவங்களின் உடைய அனநதத்தையும்
அதில் சொன்ன முக்கய விபாகத்தையும்
அந்த கௌண முக்யங்களுக்கும் உண்டான பரஸ்பர விசேஷத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
அநந்தரம்
கீழ்ச் சொன்ன பர வ்யூஹங்களிலும் முக்கய விபவங்களிலும்
உண்டான அவாந்தரபிதைகளும்
அவற்றின் உடைய புஜ ஆயுத வரணாதி பேதங்களும் சொல்ல வேண்டி இருக்க
சொல்லாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

நிதயோதித
சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான
சாதுராதமயமும்
கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான
பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத
ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண
மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார
விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத
வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்களும்
துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய்
இருக்கையாலே
சொல்லுகிறிலோம்-

நிதயோதித சாந்தோதாதி பேத-மாவது –
நித்யோதிதாத சமப்பூவ ததா சாந்தோ தித்தோ ஹரி -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நித்ய முக்த அனுபாவ்யராய்
நிதயோதித சமஞ்ஞகராய் இருக்கும் பர வாஸூ தேவரும்
அவர் பக்கலில் நின்றும் உத்பன்னராய் சங்கர்ஷண வ்யூஹ காரணமாய்
சாந்தோ திதசமஞ்ஞகராய் இருக்கிற வ்யூஹ வாஸூ தேவரும்
முதலான வாஸூ தேவ மூர்த்தியில் பேதமும் –
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்த்ரங்களிலே சொல்லும்
நாலும் யுண்டாய் இருக்க மூன்று என்கிறது
வியூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில்
அனு சந்தேய குணபேதம் இல்லாமையாலே என்று அபி யுகதர் சொல்லுகையாலே
இவர் கீழ் வியூஹ த்ரயம் என்று அருளிச் செய்ததுக்கு
இங்கு வ்யூஹ வாஸூ தேவர் யுண்டாக அருளிச் செய்ததுக்கும் விரோதம் இல்லை-

ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான சாதுராதமயம்-ஆவது –
சாந்தோதி சோதபத்தி சொன்ன அநந்தரம்
சாதுராதமயம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்டினா உபாச காநு கரஹார்த்தமய ய பரச்சேதி கீர்த்தயதே
சாந்தோதி தாத பிரவ்ருத்த தஞ்ச சாதுராத மயத்ரயம் ததா
உபாசகா நுக்ரஹார்த்தம் சேநேச மமததபுன
ஸூஷுப்தி ஸ்வப்ன சம்ஜஞம் யத ஜாகரத சம்ஜ்ஞம் ததா பரம சாதுர் மாஸ்யம் மகா பாக பஞ்சமம் பாரமேச்வரம் -என்றும்
ஆதயோ வ்யூஹோ மயா பரோ கதோ ஹய பரம தரிதயம் சுருணு
உபாசகா நுக்ரஹார்த்தம் ச்வப்னாதி பத சம்சதிதம ஸ்வப்ன நாதயவஸ்தா பேதச து தயாயி நாம கேதச நதயே
தத்த பதசத தேவா நாம தந்தி வருததயா தத மேவச ஸ்வப்ன நாதயவஸ்தா ஜீவா நாம அதிஷ்டாதர ஏவ நே
காமதம நாஞ்ச சேநேச ததபதசதோ மமேச்சயா உபாசயோஹம் மஹாபாக பதபேத பிரயோஜனம் -என்றும்
சொல்லுகிறபடியே -உபாசகா நுக்ரஹார்த்தமாக தன கிருபையால் பண்ணினதாய்
தயாதிகளினுடைய கேதசா நதியின் பொருட்டும்
தத்தத பத சத ஜீவர்களுக்கு தனநிவ்ருத்தியின் பொருட்டுமாய்
தத்தத் வசத ஜீவர்களுக்கு அதிஷ்டாதருதவேன தத்தத் பதச்தனாய் கொண்டு
காம வச்யரான சேதனர்க்கு உபாசயனாகையே பத பேத பிரயோஜனாய்க் கொண்டு
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் பிரத்யேகம் உண்டான
ஜாக்ரத ஸ்வப்ன ஸூ ஷுப்தி துரீய சம்ஜ்ஞகனாய்க் கொண்டு நாலு வடிவை உடையனாய் இருக்கை-

கேசவாதி மூர்த்யந்தரமும்-ஆவது –
ஏத்த நாதகக தாச சர்வே மூர்த்தயந்தே ரசமாஹவயா கேசவாதய த்வாதச
ச லலாடா திஷூ நிஷ்டிதா சரீர ரஷகாச சர்வே தயாயி நாம தாபச நதயே -என்றும்
கேசவாதயம் த்ரயம் தத்ர வா ஸூ தேவதா விபாவயதே
சங்கர்ஷணா ச ச கோவிந்த பூர்வம் த்ரிதயமதபுதம்
த்ரிவிக்ரமாதயம் த்ரிதயம் பிரத்யுமநாத உதிதம் முனே
ஹருஷீ கேசாதிகம் தத்வத அநிருத்தா நமஹ முனே -என்றும் சொல்லுகிறபடி
லலாடாதிகளிலே நின்று சரீர ரஷண்த்தைப் பண்ணா நின்றுகொண்டு
தயாயிகளின் உடைய தாபசா நதியின் பொருட்டாய் இருப்பதாய்
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் ஓர் ஒன்றிலே மும் மூன்றாக உத்பன்னமாய்
மூர்த்த்யந்தர சமாஹவமாய் இருக்கிற கேசவாதி வ்யூஹாந்தரம்–

ஷட் தரிமசத பேத பின்னமான பத்ம நாபாதி விபமமும்-ஆவது –
பத்ம நாபாதிகாச சர்வே வைபவீயாச தவைச ஷட் த்ரிமசதா
சங்கயா சங்க யாத பராதான யேன கணேஸ்வர
ஷட் த்ரிமசத பேத பின நாச தே பத்ம நாபாதிகாச ஸூ ரா
அநிருததாத சமுத்த பனனா தீ பாத தீப இவேச்வரா -என்கிறபடியே
தீ பாத தீபான தாம போலே அநிருத்தாத உபபன்னங்களாய் பிரதானங்களாய்
ஷட் த்ரிம சத பேதத்தாலே பின்னங்களாய் இருக்கிற
பத்ம நாபாத யவதார விசேஷங்கள் –
இந்த பத்ம நாபாதிகள் தான்
விபவா பத்ம நாபாதய த்ரி ம ச ச ச நவசைவ ஹி பத்ம நாபோ தருவோ நந்த சக்த்யாத்மா
மது ஸூ தன வித்யாதிதேவ கபிலோ விச்வரூபோ விஹங்கமே கரோடாதமா
படபாவகதரோ தாமோ வாகீச்வரசததா ஏகாம்போ நிதிசாயீ
ச பகவான் கமலேஸ்வர வராஹோ நரசிம்ஹ ச
பீயூஷா ஹரணச ததா ஸ்ரீ பதிர்பகவான் தே கான தாதமா
அம்ருத தாரக ராஹூ ஜித காலனே மிக்ன
பாரிஜாத ஹர்ச ததா லோக நாதச து சாந்தாத்மா தததாதரயோ
மகா பிரபு நாயகரோ தசாயீ பகவான் ஏக ஸ்ருங்க தநுச ததா
தேவோ வாமன தேஹச து சர்வ வியாபி த்ரிவிக்ரம நரோ நாராயண ச சைவ ஹரி கிருஷ்ணச

ததைவச ஜவலதபரசுதாக ராமோ ராமாச்சா நாய்ச சதுர்க்கதி வேதவித பகவான் கல்கி

பாதாள சயித பிரபி த்ரிம ச ச ச நவசைவைதே பத்ம நாபாதயோ மாதா -என்று
முப்பத்து ஒன்பதாக அஹிர்புதனைய சம்ஹிதாதிகளில்
சொல்லிற்றே ஆகிலும்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே முப்பத்தாறாக சொல்லி இருக்கையாலே
இவர் ஷட் த்ரிமசத பேத பின்னம் என்றதில் குறை இல்லை
இனி அந்த முப்பத்து ஒன்பதிலே மூன்றைக் குறைத்து கொள்ளுகை இ றே உள்ளது
அவையாவன -கபில தத்தாத்ரய பரசுராம ரூபமான ஆவேச அவதாரங்கள்-
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்–ஆவன –
அவதார கந்தம் ஆகையாலே சர்வ அவதாரங்களுக்கும் அநிருத்தரே காரணமாகச் சொல்லிற்றே ஆகிலும்
முன்பு சொன்ன பத்ம நாபாதிகளிலே சஹபடிதங்கள் ஆனவற்றில்
பூர்வ உத்பன்ன விபவத்தில் நின்றும் விபவாந்தரங்களாக உத் பன்னங்கள் ஆனவையும் உண்டு
என்னும் இடத்தை தர்சிப்பிக்கை முதலான சில பிரயோஜனங்களைப் பற்ற –
பூர்வ உத்பன்நாத வைபவீயாத பராதுர்ப்பூத மகேஸ்வரா
பராதுர்ப்பாவா நதரான விததி தான கணேஸ்வர
முக்கயத உபேன தரா ச ச யதா முக்கய த்ரிவிக்ரம தனுர்ஹரி கிருஷ்ணச ததைவச -என்று
பிரித்து எடுத்துச் சொல்லப் பட்ட இந்தரனுக்கு துணையாய் இருந்து ஜகத் ரஷணம் பண்ணுகிற உபேந்திர அவதாரமும்
எல்லை நடப்பாரைப் போலே லோகத்தை அளந்து அவன் இழந்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்த த்ரிவிக்ரம அவதாரமும்
அவனுக்கு அம்ருத பிரதானார்த்த மாகக் கொண்ட ததிபக்தாவதாரமும்
வேத பிரதானார்த்த மாகக் கொண்ட ஹயக்ரீவ அவதாரமும்
சிஷ்யாச்சார்யா ரூபேணநின்று திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளின நர நாராயானா அவதாரங்களும்
அவர்களோடு ஒக்க தர்ம தேவதை பக்கலிலே பிறந்து லோக ரஷணம் பண்ணின ஹரியும்
கிருஷ்ணனுமான அவதாரங்களும்
பிரளய ரஷணம் மந்த்ராதாரத்வம் பூமி யுத்தரணம் ஆகிற இவற்றோடு
வித்யா பரதானங்கள் பண்ணின மத்ஸ்ய கூர்ம வராஹ அவதாரங்களும்
ஆதி சப்தத்தாலே கரோடீ க்ருதங்களுமான நரசிம்ஹ கல்கி அவதாரம் தொடக்க மான வையும் –

அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்கள் -ஆவன
கீழ் சொல்லப் பட்ட பர வ்யூஹ விபவங்கள் ஆகிற -அவற்றின் உடைய
புஜ ஆயுத நாம நியமச தத்ர தத்ர இச்ச்யா மம ஜாக்ரத சமஜ்ஜே சாதுராதமயே தத்த புஜச சதுஷ்டயம்
சாந்தோதி தாச து த்விபுஜா ஸ்வப்நாதயா கண நாயகா
ஆதி தேவோ ஜகந்நாதோ வா ஸூ தேவோ ஜகத்பதி
சதுர்புஜஸ் ச ச்யாமளாங்க பரமே வயோமதி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி ஷட் குண சந்தோதிசச சாந்தவபுர தவி புஜ புருஷாக்ருதி -என்றும்
கேசவா தயா குணாதயஷா மூர்த்யாந்தர சமாஹவையா உபாசக நாம சேநேச
புக்தி முக்தி பல ப்ரதா சர்வே சதுர புஜா ஜ்ஞேயோ பத்ம சங்காதி தாரகா
தத்த ச சாஸ்த்ரேஷூ ஜ்ஞேயோ லாஞ்ச நா பரணாதய
சதுச் சக்ர தாம மாம து சம்ருதவா
ஜாமபூ நத பரபம சதுச சங்கதரம் தேவம் நீல ஜீமுத சந்நிபம் இந்திர நீல நிபசயாமம் சதுர ஹசதைர் கதாதரம்
சதுர்புஜ தனுஷமந்தம் சந்த்ரபா சத்ருசா யுதிம்
சதுர ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ச ஜலக சந்நிபம்
முசலாசதரம் மகா விஷ்ணும்
அரவிந்தாபமேவ ச கடக பாணிம் சதுர ஹஸ்தம் அக்னி சந்நிபதேஜசம சதுர வஜ்ராதரம் தேவம் தருணாதிய சந்நிபம்
பட்டசாயுத ஹச்தஞ்ச புண்டரீகாப மேவ ச சதுர்பிர் முத்கரதரம் புஜைர் வித்யூத சமத்யுதிம் பஞ்சாயுத தரம் மாஞ்ச சஹாஸ்ராம்சு
சம்ப்ரபம் பாச ஹச்ததரம் தேவம் பாலார்ககச
த சந்நிபம் -என்றும்
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
புஜ பேதங்களும்
வர்ண பேதங்களும்
இந்த வ்யூஹ பேத விபவ பேதங்களுக்கு எல்லாம் பிரத்யேகம் உண்டான க்ருத்ய பேதங்களும்
ஆமோதாதிகளும்
அயோத்யா மதுராதி களுமாய்க் கொண்டு

வ்யூஹ விபவங்களுக்கு பிரத்யேகம் உண்டான சதான பேதங்களும்
ஆதி சப்தத்தாலே
கரோடீ க்ருதங்களான பூஷண வஸ்த்ராதி பேதங்களும்

துரவதரங்களுமாய் குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-என்றது
இவை எல்லாம் சொன்னாலும் ஒரு வாக்கு புத்தி பண்ணவும் அரியதாய்
அவதார ரஹச்யங்கள் ஆகையாலே மிகபும் குஹ்யமுமாய் இருக்கையாலே
சொல்லுகிறோம் இல்லை -என்கை-

——————————————————————————————————–
சூர்ணிகை -194-

லோகத்தில் ஜென்மங்களுக்கு ஹேது கர்மமாய் அன்றோ இருப்பது
இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது ஏது-என்ன அருளிச் செய்கிறார் –

அவதாரங்களுக்கு
ஹேது
இச்சை –

அதாவது
பஹூ தா விஜாயதே -என்றும்
பஹூ நி மே வயதீ தாநி ஜன்மானி-என்றும்
பல பிறப்பாய் -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்றும்
மனிசரும் முற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த -என்றும்
பஹூ விதமாக சொல்லப் படுகிற இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது
இப்படி அவதரிப்போம் என்னும் ஸ்வ இச்சை ஒழிய ஹேதவந்தரம் இல்லை -என்கை –
சம்பவாமி ஆத்மமாயயா -என்று தானே அருளிச் செய்தான் இ றே
ஆத்மமாயயா -என்றது ஆத்ம இச்சையா -என்றபடி
மாயா வயு நம ஜ்ஞானம் -என்று மாயா சப்தம் ஜ்ஞான வாசி ஆகையாலே
இச்சா ரூபமான ஜ்ஞானத்தைச் சொல்கிறது
இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -என்னக் கடவது இ றே –
இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சா விருஹதயே
விபூதி நாம மத்யே ஸூ ர நர திரச்சாமா அவதரன
சஜாதீயச தேஷா மிதிது விபவாக்கயா ம்பி பஜன
கரீச தவம்
பூர்ணோ வரகுண கணைச தான சதகயசி -என்றும்
ஏவம் ஸ்திதே தவதுபசம சரயணா பயுபாயோ மாநேன கேனசித அலபசயத
நோபலப்தும் நோசேத அமாதய மநுஜா தி ஷூ யோ நி ஷூ
தவம் இச்சாவிஹார விதி நாசம்வாதரிஷ்ய -என்றும்
அவதார ஹேது இச்சை என்னும் இடத்தை ஆழ்வான் விசதமாக அருளிச் செய்தார் இ றே-

————————————————————————————————-
சூர்ணிகை -195-

பலம்
சாது
பரித்ராணாதி
த்ரயம் –

அதாவது
பரித்ராணாய சாது நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்று
அவன் தானே அருளிச் செய்த படியே தன பக்கல் பிரேம யுக்தராய்
தன்னுடைய அனுபவம் ஒழிய ஷண காலமும் செல்லாதே
தன்னைக் கான வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கும் சாது ஜனங்களைத்
தன்னுடைய ரூப சேஷ்டித அவலோகன ஆலாபன தான முகேன ரஷிக்கையும்
தத் விரோதிகளான துஷ்க்ருதிகளை நசிப்பிக்கையும்
தன்னுடைய ஆராதனா ரூபமாய் ஷீணமாய்க் கிடக்கிற விதிக்க தர்மத்தை
ஆராத்யனான தன ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கையும்
ஆகிற இம் மூன்றுமே பலம் -என்கை –
சாதவ்-உகத லஷண
தர்ம சீலா
வைஷ்ணவ அக்ரேசரா
மத சமாஸ்ரயனே பிரவ்ருத்ததா
மன் நாம கர்ம ஸ்வரூபானாம்
வாங் மனஸா அகோசரதையா
மத தர்ச நேன வினா
ஆத்மதாரண போஷணாதி கம அல்பமானா
ஷண் மாத்ர காலம் கல்ப சஹாச்ரம் மன்வானா ப்ரதி சிதல
சர்வகாதரா பவே யுரிதி
மத ஸ்வரூப சேஷ்டித அவலோகன ஆலப நாதி தானேன தேஷாம் பரித்ராணாய
தத் விபரீதா நாம் விநாசாய ச
ஷீணச்ய வைதிக சயதாமச்ய மத ஆராதனா ரூபச்ய ஆராத்ய ஸ்வரூப தாசநேன ஸ்தாபநாய
ச யுகே யுகே சம்பவாமி -கருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாசதீ தயாதத-என்று இ றே
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
யே பக்தா பவதேக போக மநசோநனயாதம சஞ்சீவன தத் சம்ச்லேஷண
தத் விரோதி நித நாதாய ததம வநாதரீச்வர
யதவாதரச ஸூ ர நராத யாகார திவ்யா கருதிச தேநைவ
தறி தசைர் நரை ச ச ஸூ கர்ம ஸ்வ பராததித்த பராத்த நம -என்று இ றே ஆழ்வானும் அருளிச் செய்தது –

—————————————————————————————

சூர்ணிகை -196-

அவதாரம் இச்சம் என்று அறியாதே கர்ம நிபந்தனமாக நினைத்து மந்த மதிகள்
பண்ணும் பிரசனத்தை அனுவதிக்கிறார் –

பல
பிரமாணங்களிலும்
ப்ருகு சாபாதிகளாலே
பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது
கர்மம் ஆக வேண்டாவோ என்னில்

அதாவது இதிஹாச புராண ரூபமான பல பிரமாணங்களிலும்
பதிவ்ரதா தர்மபரா ஹதா யேன மம ப்ரியா ச து பரியா விரஹித சிரகாலம் பவிஷ்யதி –
என்றால் போலே யுண்டான புருகு சாபம் முதலான வற்றாலே
பிறந்தானாகச் சொல்லுகையாலே அவதார ஹேது இச்சை அன்றியே கர்மம் ஆக வேண்டாவோ -என்னில் என்கை –

——————————————————————————————–

சூர்ணிகை -197-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அவை தன்னிலே
சாபம் வியாஜ்யம்
அவதாரம் இச்சம்
என்று
பரிஹரித்தது-

அதாவது
தபசாராதி தோ தேவோ ஹய பரவீத பகவத தசல லோகா நாம சம்பரியார்த்ததம் து சாபம் தம க்ருஹய முகதவான் -என்று
உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும்
சர்வாவாததே ஷூ வை விஷ்ணோர் ஜன நம ச்வேச்சசயைவ து
ஜரகாச்த்ரா சசலே நைவ ச்வேச்சயா கம நம ஹரே த்விஜ சாப சசலே நைவ அவதீர்ணோபி லீலையா -என்று
லிங்க புராணத்திலும் சொல்லுகையாலே
பிருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கிற இவை தன்னில்
சாபம் வ்யாஜ மாதரம்
அவதாரம் இச்சாக்ருஹீதம்
என்று பரிஹரித்தது -என்கை –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-