தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -102-109-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -102-

இனி மேல்
பூத தந் மாத்ர சர்கோய மஹங்காராத் து தாமசாத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-48 )
(பூதங்கள் மற்றும் தன்மாத்திரைகள் அனைத்தும் தாமஸ அஹங்காரத்தில் இருந்து உண்டாகின்றன ) -என்கிறபடியே
பூதாதி சப்த வாச்யமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
தந் மாத்ர பஞ்சகமும்
தத் விசேஷமான ஆகாசாதி பஞ்ச பூதங்களும்
உத்பன்னங்களாம் க்ரமம் அருளிச் செய்கிறார் –

பூதாதியில் நின்றும்
சப்த தந்மாத்ரை பிறக்கும் –
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜஸ்ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
ஆகாசத்தின் யுடைய ஸூஷ்ம அவஸ்தையான சப்த தந்மாத்ரை பிறக்கும்
இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த சப்த குணகமான ஆகாசமும்
வாயுவினுடைய ஸூஷ்ம அவஸ்தையான ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ஸ்பர்ச குணகமான வாயுவும்
தேஜஸ்சினுடைய ஸூஷ்ம மான ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய ரூப குணகமான தேஜஸ்ஸூம்
அப்பினுடைய ஸூஷ்ம மான ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ரச குணையான அப்பும்
பிருதிவினுடைய ஸூஷ்ம மான கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த கந்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையா கந்த குணையான பிருத்வி பிறக்கும் -என்கை –

ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
என்று உத்பத்தி சொல்லுகிற அளவில் பூதத்தை முற்படச் சொல்லி
தந்மாத்ரையை பிற்படச் சொல்லிக் கொண்டு வந்தது
பூத உத்பத்திக்கு அநந்தரம்
தந்மாத்ர உத்பத்தி என்கிற க்ரமம் தோற்றுகைக்காக-

இந்த தந்மாத்ர அனந்தர உத்பத்தி க்ரமம் நம் ஆச்சார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாகப் போகும்
அதுக்கடி
அஷ்டௌ பிரக்ருதய ஷோடஸ விகாராய (கர்ப உபநிஷத் எட்டு பிரக்ருதிகள் பதினாறு மாற்றங்கள் ) -என்கிற
ஸ்ருதிக்கு ஸ்வ ரஸார்த்தம் சித்திக்கையாலே

ஈச்வராத் பிரகிருதி புருஷௌ பிரக்ருதோ மஹான் மஹதோ அஹங்காரோ அஹங்காராச் சப்த தன்மாத்ரம்
சப்த தன்மாத்ராத் ஆகாசம் ஸ்பர்ச தன்மாத்ராஞ்ச ஸ்பர்ச தன்மாத்ராத் வாயு ரூப தன்மாந்த்ராஞ்ச ரூப தன்மாத்ராத்
தேஜோ ரச தன்மாத்ராஞ்ச ரச தன்மாத்ராத் ஆபோ கந்த தன்மாத்ராஞ்ச கந்த தன்மாதராத் பிருத்வி –

(ஈஸ்வரன் இடம் இருந்து பிரக்ருதியும் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள் –
பிரக்ருதியில் இருந்து மஹத் -மஹத்தில் இருந்து அஹங்காரம் -அஹங்காரத்தில் இருந்து சப்த தன்மாத்திரை –
சப்த தன்மாத்ரையில் இருந்து ஆகாசம் மற்றும் ஸ்பர்ச தன்மாத்திரை –
ஸ்பர்ச தன்மாத்ரையில் இருந்து வாயு மற்றும் ரூப தன்மாத்திரை
ரூப தன்மாத்ரையில் இருந்து அக்னி மற்றும் சுவை தன்மாத்திரை
சுவை தன்மாத்ரையில் இருந்து நீர் மற்றும் மண் தன்மாத்திரை
மண் தன்மாத்ரையில் இருந்து பூமி )என்று
இந்த க்ரமத்தை
யாதவ பிரகாசாதிகளும் ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்-

————————————————————————————–

சூர்ணிகை –103-

இனி பூதாத் தந்மாத்ர உத்பத்தி க்ரமமும்
சாஸ்திர சித்தம் ஆகையாலே அத்தையும் சங்கரஹேண அருளிச் செய்கிறார் –

ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான
நாலு தந்மாத்ரைகளும்
ஆகாசம் தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் காரணமாய்
இருக்கும் என்றும்
சொல்லுவார்கள்

அதாவது-
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் –
சப்த தந்மாத்ரை நின்றும் ஆகாசம் பிறக்கும்
ஆகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
வாயுவில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் பிறக்கும்
தேஜஸ்ஸில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையில் நின்றும் அப்பு பிறக்கும்
அப்புவில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் -என்றபடி-

இந்த க்ரமம் ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம்
பூர்வ க்ரமம் புராணாந்தர சித்தம் -என்று சொல்வார்கள்
அது சொல்ல ஒண்ணாது இறே

அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா (எட்டு பிரக்ருதிகள் பதினாறு மாற்றங்கள் )-என்று
ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும்
இந்திரியங்களோபாதி கேவலம் விக்ருதிகளாக ஸ்ருதி சொல்லுகையாலே

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஆகாசஸ்து விகுர்வாண ஸ்பர்ச மாத்ரம் சசர்ஜா ஹ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-41 )
(ஆகாசம் மாற்றம் அடைந்து ஸ்பர்ச தன்மாத்ரையை உண்டாக்குகிறது )என்று தொடங்கி
ஸ்பர்ச தன்மாத்ராதிகளுக்கு காரணமாகச் சொன்ன ஆகாசாதி பதார்த்தங்களையும்
தந்மாத்ர லஷணமான பூதங்களாக ஸ்ரீ பராசர பகவானுக்கு விவஷிதம் என்று நினைத்து
வியாக்யாதாக்கள் வியாக்யானம் பண்ணி வைக்கையாலே –

ஆகையால்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
பூதாத் தந்மாத்ரா உத்பத்தி சாப்தமாய்த் தோற்றி இருந்ததே யாகிலும்
வியாக்யான பிரகிரியைப் பார்த்தால்
தன்மாத்ராத் தந்மாத்ரா உத்பத்தி என்றே கொள்ள வேணும்

பூதாத் தந்மாத்ரா உத்பத்தி பஷத்திலும்
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா -என்று சொல்லுகிற
ஷோடஸ விகாரங்கள் ஆகிறது
பூதங்களை ஒழிய ஏகாதச இந்திரியங்களும் சப்தாதிகள் ஐந்தும் என்று
தன்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாத்ரம் ஆகையாலே
அஷ்டௌ பரக்ருதய -என்று
பிரகிருதி மஹான் அஹங்காரங்களையும்
ஆகாசாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது என்றும் ஸ்ருதிய விரோதம் நிர்வஹிப்பார்கள்-

இது தான் வேத வியாச பகவானாலே
அஷ்டௌ பிரக்ருதய ப்ரோக்தா விகாராச் சாபி ஷோடஸ அத வ்யக்தானி
சப்தைவ ப்ராஹூரத் யாத்ம சிந்தகா அவ்யக் தஞ்ச மஹாம் ச் சைவ
தத் அஹங்கார ஏவ ச பிருத்வீ வாயுர் ஆகாசம் ஆபோ ஜ்யோதிஸ்ஸ பஞ்சமம்
ஏதா பிரக்ருத யஸ்த் வஷ்டௌ விகாராநபி மே ஸ்ருணு ஸ்ரோதரம்
த்வக் சைவ சஷூச் ச ஜிஹ்வா க்ரணாஞ்ச பஞ்சமம்
வாக் ச ஹஸ்தௌ ச பாதௌச பாயுர் மேட்ரம் ததைவச சப்த ஸ்பர்சௌ ச ரூபஞ்ச ரசோ
கந்தஸ் ததைவச ஏதே விசேஷா ராஜேந்திர மஹா பூதேஷு பஞ்சஸூ
தச இந்த்ரியாண யதைதானி சா விசேஷாணி மைதில மனஷ்
ஷோடச மித்யா ஹூரத் யாத்ம கதி சிந்தகா-

(ப்ரக்ருதிகள் எட்டு எனக் கூறப்படுகின்றன -மாற்றங்கள் பதினாறு என்றும் –
அதன் பின்னர் தெளிவாகக் காணப்படும் மாற்றங்கள் ஏழு என்றும் மோக்ஷ ஸாஸ்த்ரம் கற்றவர்கள் கூறுகிறார்கள்
அவ்யக்தம் மஹத் மற்றும் அஹங்காரம் என்பதுடன்
பிருத்வீ வாயு ஆகாசம் நீர் மற்றும் தேஜஸ் என்பதான ஐந்தும் சேர்ந்து எட்டு ப்ரக்ருதிகள் ஆகும் –
அவை ஒன்றுக்கொன்று காரணங்களாக உள்ளதையும் மாற்றங்களாக உள்ளதையும் நான் கூறக் கேட்ப்பாயாக –
செவி தோல் கண் நாக்கு மூக்கு என ஐந்து
வாக்கு கைகள் கால்கள் மல மூத்ர கருவிகள் மற்றும் மர்மக் குறிகள் என ஐந்து
ஓசை உருவம் சுவை மணம் மற்றும் தொடுதல் என ஐந்து
இப்படியாக பஞ்ச பூதங்களுடைய விசேஷங்கள் உள்ளன
விசேஷங்களுடன் கூடிய இந்த ஐந்து பூதங்கள் பத்து இந்திரியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இறுதியாக
மனதையும் பதினாறாவது விஷயமாக மோக்ஷம் குறித்து எண்ணுபவர்கள் கூறுகிறார்கள் )-என்று
மோஷ தர்மத்திலே யாஞ்ஞ்வல்க ஜனக சம்வாதத்திலே சொல்லப் பட்டது –

அப்படியே
யம ஸ்ருதியிலும்
மநோ புத்திர் அஹங்கார ஹன்கார காநிலாக்நி ஜலானி பூ ஏதா பிரக்ருதயஸ்
த்வஷ்டௌ விகாராஷ் ஷோட சாபரே ஸ்ரோத் ராஷி ரசநா க்ராண த்வக் ச சங்கல்ப
ஏவ ச சப்த ரூப ரச ஸ்பர்ச கந்த த்வக் பாணி பாயவ உபஸ்த பாதாவிதி ச விகாராஷ் ஷோடஸ ஸ்ம்ருதா

(மனம் புத்தி அஹங்காரம் ஆகாசம் வாயு அக்னி நீர் மற்றும் பூமி என்ற எட்டும் பிரக்ருதிகள்
மற்ற அனைத்து பதினாறும் மாற்றங்கள் ஆகும்
செவி கண் வாய் மூக்கு தோல் ஆகியவற்றுடன் எண்ணம் என்பதும் சேர்ந்து
ஒலி உருவம் சுவை தொடு உணர்ச்சி மனம் நாக்கு கைகள் மல மூத்ர கருவிகள் மர்ம உறுப்புக்கள்
மற்றும் கால்கள் என்பதான பதினாறு மாற்றங்கள் கூறப்படுகின்றன ) -என்று சொல்லப் பட்டது –

இந்த ஸ்ம்ருதியில் பிரக்ருதிகளிலே பரிகணிகையாலும்
பிரதமத்தில் எடுக்கையாலும்
மந்த வ்யதையாலே மனஸ் என்று பிரதான தத்வம் சொல்லப் படுகிறது –

சங்கல்ப சப்தத்தாலே தத் காரணமான மனஸ் லஷிக்கப் படுகிறது என்று
ஸூ பால உபநிஷத்தில் வ்யாக்யானத்தில்
ஸ்ருதி பிரகாசராலே வியாக்யானம் ஆயிற்று

இப்படி இதிஹாசாதிகளிலே சொல்லப் படுகையாலே
அஷ்டௌ பிரக்ருதய என்கிற ஸ்ருதிக்கு
பூதாத் தந்மாத்ரா உத்பத்தி பஷத்தில் விரோத அபாவம் ஸூஸ்பஷ்டம் –

த்வசா பீஜமிவா வ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1- 2-37-)
தோலால் மூடப்பட்ட விதை போன்று )-என்கிற திருஷ்டாந்த பலத்தாலே
த்விக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதவோ பாதி
ஆவார கத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்று தோற்றுகையாலும்

காரண குணத்தை ஒழிய உத்தர உத்தர விசேஷங்களிலே
ஆத்யாத் யஸ்ய குணா நேதா நாப்நோதி ச பர பர (மநு ஸ்ம்ருதி -1-20 )
(முன்பு உள்ள தத்வங்களுடைய குணங்கள் பின்னர் வரவுள்ள தத்துவங்களை அடைகின்றன )-என்று
ஸ்வ விசேஷத்துக்கு சொல்லுகிற குணாதிசயம் கூடாமையாலும்

ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் சமாவிசத் ரூபம் ததைவா விசதச் சப்த ஸ்பர்ச குணா யு பௌ
சப்த ஸ்பர்ச ரூபஞ்ச ரச மாதரம் சமாவிசந் தஸ்மாத் சதுர் குணா ஹயாபோ விசேஷாச் சேந்த்ரிய க்ரஹா –
(ஆகாசமானது தனக்கு காரணமாக உள்ள ஸப்த தன்மாத்ரை மற்றும் வாயுவின் காரணமான ஸ்பர்ச தன்மாத்ரை ஆகியவற்றை அடைகிறது –
இதே போன்று இரண்டாக உள்ள ஸப்தம் மற்றும் ஸ்பர்ச தன்மாத்ரைகள் ஆகியவை அக்னியின் காரணமான ரூப தன்மாத்ரையை அடைகின்றன
ஸப்தம் ஸ்பர்சம் மற்றும் ரூப தன்மாத்ரைகள் நீரின் காரணமாக யுள்ள சுவை தன்மாத்ரையை அடைகின்றன –
ஆகவே இந்த்ரியங்களால் அறியத்தக்க சிறப்பு கொண்ட நீரானது நான்கு குணங்கள் கொண்டதாக உள்ளது -)
என்கிற புராண வசனங்களின் யுடைய ஆனு குண்யத்துக்காகவும்

தேப்யஸ் தந் மாத்ரேப்யோ யதா சங்க்யமேக த்வி த்ரி சது பஞ்சப்யோ பூதாந் யாகா
சா நிலா நல சலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே –
(ஓன்று இரண்டு மூன்று நான்கு மற்றும் ஐந்து என்பதான எண்ணிக்கைகளில் அடங்கி உள்ளதான
தன்மாத்திரைகளில் இருந்து ஆகாசம் வாயு அக்னி நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து பூதங்களும் உண்டாகின்றன )-என்று
இதில் அதி க்ருதனான சாங்க்ய வாசஸ்பதி சொல்லுகையாலும்

கார்ய உத்பாதங்களான தத்வங்கள் ஸ்வ ஸ்வ காரண வ்ருத்தங்களாய்க் கொண்டு
உத்பாதிக்கிறது என்று சொல்ல வேணும் என்று
தத்வ த்ரய விவரணத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்

பிரதாந தத்வ உத்போதம் மஹாந்தம் தத் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-32-)
(பிரதானம் என்பதால் உண்டாக்கப்பட்ட மஹத் தத்துவத்தை வியாபித்து நிற்கிறது )-என்றும்

யதா ப்ரதாநேன மஹாந் மஹதா ச ததாவ்ருத (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-36 )
(எப்படி பிரதானத்தால் மஹத் மூடப்பட்டபடி உள்ளதோ
அதே போன்று அஹங்காரமானது மஹத்தால் மூடப்பட்டுள்ளது )-என்றும்

சப்த மாதரம் ததாகாசம் பூதாதிஸ் ச சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-42 )
(தாமஸ அஹங்காரமானது சப்த தன்மாத்திரை மற்றும் ஆகாசத்தை மூடி உள்ளது ) -என்றும்

ஆகாசம் சப்த மாத்ரஸ்து ஸ்பர்ச மாத்ரம் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-42 )
( ஆகாசமானது ஸப்த தன்மாத்திரை மற்றும் ஸ்பர்ச தன்மாத்ரை ஆகியவற்றை மூடி உள்ளது )-என்றும்

ஸ்பர்ச மாத்ரஸ்து வைவாயூ ரூப மாத்ரம் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-42 )
(ஸ்பர்ச தன்மாத்திரை மற்றும் ரூப தன்மாத்ரை ஆகியவற்றை வாயுவானது மூடி உள்ளது ) -என்றும்

ரச மாத்ராணி சாம் பாம் சி ரூப மாதரம் சமா வ்ருணோத் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-45 )
(நீரானது சுவை தன்மாத்திரை மற்றும் ரூப தன்மாத்ரைகளை ஆகியவற்றை மூடி உள்ளது )-என்றும்
ஸ்ரீ பராசர பகவானாலே உக்தம் ஆகையாலும்

முன்புத்தை தன் மாத்ரைகளோடு கூட்டிக் கொண்டு
உத்தர உத்தர தன் மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே-என்று
இவர் தாமே மேலே அருளிச் செய்கையாலும்
ஆவரண க்ரமம் கொள்ள வேணும்

அப்படியே பூர்வ பாவ நியமத்தைப் பற்ற ஸ்பர்சாதி தன் மாத்ரைகளுக்கு ஸ்வ ஸ்வ விசேஷங்களை
உத்பாதிக்கும் அளவில் ஸ்வ ஸ்வ பூர்வ பூர்வ சஹாயத்வமும் கொள்ள வேணும்

அதாவது
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தந்மாத்ரையை பூதாதி ஆவரிக்கும்
இதில் நின்றும் ஆகாசம் பிறக்கும்
அநந்தரம் இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன் மாதரை பிறக்கும்
ஸ்பர்ச தன் மாதரை சப்த தன் மாத்ரையை ஆவரிக்கும்
இப்படி சப்த தன்மாத்ரா வருதையாய் ஆகாசத்தை சகாயமாய் யுடைத்தான
ஸ்பர்ச மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ஸ்பர்ச தன்மாத்ரா வருதையாய் வாயுவை சகாயமாக யுடைத்தான
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ்ஸூ பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையை ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரூப தன்மாத்ரையாய் வருதையாய் தேஜசை சகாயமாக யுடைத்தான ரச தன்மாத்ரையில்நின்றும் அப்பு பிறக்கும்
இந்த ரச தன் மாத்ரையில் நின்றும் கந்த தன் மாதரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையை ரச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரச மாத்ரையாய் வருதையாய் அப்பை சகாயமாய் யுடசித்தான கந்த மாத்ரையில் நின்றும் பிருத்வி பிறக்கும் என்கை

சப்த தந்மாத்ரா வருத்தமாய் ஆகாசத்தை சஹாயமாக யுடைத்தான
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும் என்று தொடங்கிச் சொன்ன விசேஷ உத்பத்தியில் க்ரமம்
பூதாத தன்மாத்ரம் உத்பத்தி பஷத்துக்கும் ஒக்கும்

பூர்வ பூர்வ பூதத்தில் நின்றும் உத்தர உத்தர தந்மாத்ரா உத்பத்தி
ஆகிற இது விசேஷம் -இது தத்வ த்ரய விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த க்ரமம் –

இங்கன் அன்றிக்கே
தத்வ நிரூபணத்தில் ஜீயர் அருளிச் செய்ததும் ஒரு க்ரமம் யுண்டு –
அதாவது
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தன்மாத்ரையில் நின்றும் அதனுடைய ஸ்தூல அவஸ்தையான ஆகாசம் பிறக்கும்
சப்த தன்மாத்ரையும் ஆகாசத்தையும் பூதாதி ஆவரிக்கும்
இப்படி பூதாத்யா வ்ருதமாய் ஸ்தூல ஆகாச சஹ க்ருதமாய்க் கொண்டு
விக்ருதமான சப்த தன்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும் –
அதில் நின்றும் ஸ்பர்ச குணகமான வாயு பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான சப்த தந்மாத்ரை ஆவரிக்கும்
சப்த தன்மாத்ரா வ்ருதமாய் வாயு சஹ க்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தன்மாத்ரத்தில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் தேசச சஹ க்ருதமாய் விகரித்த ரூப தன்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரச குணகமான ஜலம் பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் அம்ப சஹ கிருதமாய்க் கொண்டு விகரித்த ரச தன்மாத்ரையில் நின்றும்
கந்த தன்மாத்ரம் பிறக்கும்
அதில் நின்றும் கந்த குணகமான பிருத்வி பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரச தந்மாத்ரை ஆவரிக்கும் -என்கை

இதில் முற்பட்ட க்ரமத்திலே
ஸ்பர்ச தன்மாத்ராதி சதுஷ்டயத்துக்கு
ஸ்வ ஸ்வ விசேஷ உத்பாதனத்தில்
பூர்வ பூர்வ பூத சஹாயத்வம் சொல்லப் பட்டது

பிற்பட்ட க்ரமத்தில் பூர்வ பூர்வ தன்மாத்ரத்துக்கு உத்தர உத்தர தன்மாத்ரம்
உத்பாதனத்தில் ஸ்வ ஸ்வ விசேஷ சஹாயத்வம் சொல்லப் பட்டது

ஆகையால் அன்யோன்ய விரோதம் இல்லை-

ஓர் ஒன்றிலே இரண்டும் அனுக்தமே யாகிலும் இரண்டும் அபேஷிதம் ஆகையாலே
ஆவரண கதனத்திலும்
பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரதையும் தத் விசேஷத்தையும்
ஆவரிக்கும் என்று ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சப்த மாதரம் ததாகாசம் பூதாதிஸ் ச சமா வ்ருணோத்
(ஸப்த தன்மாத்ரை மற்றும் ஸ்தூல ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடுகிறது ) -என்ற விதுக்கு

சப்த மாதரம் -சப்த தன்மாத்ரம்
ததாகாசம் –ஸ்தூல ஆகாசஞ்ச ச பூதாதிர் ஆவ்ருணோத்
யேதன பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரம் தத் விசேஷஞ்ச வ்ருணோதிதி தர்சிதம்
(தன்மாத்திரை மற்றும் ஸ்தூலமான ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடுகிறது
இவ்வாறு கூறுவதால் முன்பு முன்பு உள்ள தன்மாத்ரைகள் பின்பு பின்பு உள்ள தன்மாத்ரை மற்றும்
அதன் சிறப்பான பூதங்கள் ஆகியவற்றை மூடுகின்றன என்று உணர்த்தப்படுகிறது -)- என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் வியாக்யானம் பண்ணுகையாலும்

தத்வ விவரணத்தில்
தன்மாத்ரத்துக்கு ஆவரணம் சொன்னவோபாதி
தத் விசேஷத்துக்கு ஆவரணம் சொல்லிற்று இல்லை யாகிலும்
அது உப லஷணமாம் இத்தனை

அல்லாத போது
அவ்விடம் தன்னில் பூதாத் தன்மாத்ரா உத்பத்தி சொல்லவும் போகாது

ஆகையால் இரண்டும் கொள்ள வேணும் –

தத்வ நிரூபணத்தில் தன்மாத்ரா தத் விசேஷங்கள் இரண்டுக்கும் ஆவரணம் சொல்லுகிற அளவில்
இரண்டையும் சேர்த்துப் பிடித்துச் சொல்லப் பட்டதே யாகிலும்
விசேஷ உத்பத்திக்கு முன்பே தன்மாத்ரத்துக்கு ஆவரணம் கொள்ள வேணும்

த்வகில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதாப் போலே
ஆவாரகத்தை ஒழிந்த போது
உத்தர கார்ய சக்தி இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது இறே-

இப்படி பூத தன்மாத்ர சிருஷ்டி சொல்லுகிற இடத்தில்
ஆவரண க்ரமம் வக்தவ்யமாய் இருக்கச் செய்தேயும்
அருளிச் செய்யாது ஒழிந்தது அபேஷிதம் அல்லாமை அன்று
சங்கோசேன உத்பத்தி க்ரமத்தை அருளிச் செய்தார் இத்தனை
பெரிய வாச்சான் பிள்ளையும் இப்படி இறே அருளிச் செய்தது –

—————————————————————————

சூர்ணிகை -104-

ஆக
பூத தன்மாத்ர உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தார் கீழ்
அதில்
தன் மாத்ரங்கள் தான் எவை -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

தன் மாத்ரங்கள் ஆவன
பூதங்களின் யுடைய
ஸூஷ்ம அவஸ்தைகள் –

அதாவது –
தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தன்மாத்ரம் தேன தன்மாத்ரதா ஸ்ம்ருதா
தன்மாத் ராண்யா விசேஷாணி அவி சேஷாஸ் ததோஹித
ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாச்ச விசேஷிண 9ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-46/47)

(ஆகாசம் முதலான பூதங்களில் தன்மாத்திரைகள் உள்ளதாக எண்ணப்பட்டது –
தன்மாத்திரைகள் எந்தவிதமான விசேஷமும் அற்றவை எனக் கூறப்பட்டது
எனவே ஓசை முதலான பூதங்களுடைய குணங்கள் அனைத்தும் விசேஷங்கள் அற்றவை யாகின்றன
ஏன் என்றால் இவை சாந்தம் கோபம் மற்றும் மூடம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய விசேஷங்கள் அற்றதாகவே உள்ளன )-என்று

சாந்தத்வ கோரத்வ மூடத்வ லஷணமான விசேஷங்களை யுடைத்து அல்லாத
சப்தாதி மாத்ரத்தை குணமாக யுடைத்தாய் இருக்கிற
ஆகாசாதி பூத ஸூஷ்மங்கள் –

சாந்தத்வம் ஆவது -அனுகூல வேதநீயத்வம்
கோரத்மவாது -பிரதிகூல வேதநீயத்வம்
மூடத்வமாவது -உதாசீன வேதநீயத்வம்

அதில் ஸ்வ பாவமே
சாந்தங்களாய் இருக்கும் -பூமியும் ஜலமும் –
கோரங்களாய் இருக்கும்–தேஜஸ்ஸூம் வாயுவும்
மூடமாய் இருக்கும் -ஆகாசம்

மேளனத்தாலே-எல்லா பூதங்களும் சாந்தவ கோரத்வ மூடத்வங்களை யுடையனவாய் இருக்கும்
தன்மாத்ரைகளுக்கு இந்த சாந்தத்வாதி விசேஷம் இல்லாமையாலே
அவை அவிவிசேஷங்கள் என்று சொல்லப் படுகின்றன
ஆகையால்
தன்மாத்ரைகள் என்றும் அவிவிசேஷங்கள் என்றும் பர்யாயம்

அதில்
அபி யுக்தரான யாதவ பிரகாசாதிகளும்
தன் மாத்ராண்யா விசேஷா இத்ய நர்த்தாந்தரம்
சாந்தத்வ கோரத்வ மூடத்வம் இதி த்ரயோ விசேஷாஸ் த்ரை குண் யாத்மானஸ் தேஷாம் அனுத்பவாத்
ஸூஷ்ம ஆகாசம் விசேஷ லஷணம் பவதி தேன சப்த தன் மாத்ரம் உச்யதே
ஏவம் ஸூஷ்மோ வாயுஸ் ஸூஷ்மம் தேஜஸ் ஸூஷ்மா ஆபஸ் ஸூஷ்மா பிருத்வீ

(தன்மாத்திரைகள் மற்றும் விசேஷம் அற்றவை ஆகிய இரண்டும் ஒரே பொருள் கூறுவதாகும்
சாந்தத் தன்மை கோரத் தன்மை மற்றும் மூடத் தன்மை ஆகிய மூன்று குணங்களையும் ஸ்வரூபமாகக் கொண்ட
மூன்று விசேஷங்கள் இத்தகைய தன்மாத்திரைகளுக்கு இல்லை என்பதால்
ஸூஷ்மமான ஆகாசமானது விசேஷம் அற்றதாகவே உள்ளது -அந்தச் சொல் மூலம் தன்மாத்திரைகள் கூறப்படுகின்றன
இப்படியாகவே ஸூஷ்ம வாயு ஸூஷ்ம தேஜஸ் ஸூஷ்மநீர் ஸூஷ்ம ப்ருத்வீ )-
என்று சொல்லி வைத்தார்கள் இறே

ஆக
த்ரிவித அஹங்காரத்திலும் வைத்துக் கொண்டு
சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்களும்
தாமச அஹங்காரத்தில் நின்றும் பூத தன் மாத்ரைகளும்
உத்பன்னமாம் க்ரமம் சொல்லி நின்றது-

———————————————————————–

சூர்ணிகை -105-

இனி ராஜஸ் அஹன்காரத்தின் கார்யம் சொல்லுகிறது –

மற்றை இரண்டு
அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப் பிறப்பிக்கும்

ராஜச அஹங்காரம்
சஹகாரியாய்
இருக்கும் –

அதாவது
சதவிக தாமச அஹங்காரங்கள் இரண்டும் ஸ்வ கார்யங்களை
உத்பாதிக்கும் போது
பீஜத்தின் யுடைய அங்குரத்துக்கு ஜலம் போலவும்
அக்னியினுடைய ஜ்வலனத்துக்கு வாயு போலவும்
ராஜச அஹங்காரம் சஹ காரியாய் இருக்கும் -என்கை –

இது சஹாகரிக்கை யாவது
ரஜ ப்ரவர்ததகம் தத்ர (அவற்றை ராஜஸம் ஈடுபட வைக்கிறது )-என்கிறபடியே
இவற்றில் இந்த்ரிய ஹேதுவான சத்வ அம்சத்துக்கும்
பூத ஹேதுவான தமோ அம்சத்துக்கும்
சல ஸ்வ பாவமான(அசைவதே இயல்பாகக் கொண்ட ) ராஜஸ்ஸூ ஸூபிரேரகமாய்க் கொண்டு பிரவர்த்திப்பிக்கை –

——————————————————————————————–

சூர்ணிகை -106-

இப்படி சாத்விக தாமச அஹங்காரங்களுக்கு சாதாரண சஹகாரியை அருளிச் செய்தார் கீழ்
அநந்தரம்
சாத்விக அஹங்காரத்துக்கு அசாதாராணாமாய் இருப்பன சில
சஹகாரி விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

சாத்விக அஹங்காரம்
சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹகாரியாய் கொண்டு
ஸ்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்

தத் சஹ க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்

இவற்றை ஒழிய தானே
மனஸ்சை சிருஷ்டிக்கும்
என்றும் சொல்லுவார்கள் –

அதாவது
சாத்விக அஹங்காரம்
இந்த்ரியங்களை சிருஷ்டிக்கும் அளவில் இவற்றின் யுடைய விஷய பிரதி நியமத்துக்காக
சப்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ஸ்ரோத்ரத்தையும்
ஸ்பர்ச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு த்வக் இந்த்ரியத்தையும்
ரூப தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு சஷூஸ்சையும்
ரச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ஜிஹ்வையையும்
கந்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு க்ராண இந்த்ரியத்தையும்
சிருஷ்டிக்கும்

இப்படி சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாகக் கொண்டு
ஸ்ரோத்ராதி ஞான இந்த்ரியங்களையும் சிருஷ்டித்த அநந்தரம்
ஸ்ரோத்ர க்ராஹ்யமான சப்த விஷயமாயும்
தவக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும்
சஷூர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருத்தி ஹேதுவாயும்
ரசனா விஷய ரச ஆஸ்ரயஸ்மான ஜலத்தின் யுடைய நிசசரண ஹேதுவாயும்
க்ராண விஷய கந்த ஆஸ்ரயமான பிருத்வி அம்சமான அந்நாதிகளில்
ருஷீ ஷோத் ஸர்ஜன ஹேதுவாயும்(சாரமாக அல்லாதவற்றை மேலே தள்ளுவதற்கு )
இப்படி ஞான இந்த்ரிய பஞ்சக சேஷமாய்க் கொண்டு
சப்தாதி பஞ்சகத்தையும் ஒட்டி இருக்கும்

கர்ம இந்த்ரிய பஞ்சகத்தை சிருஷ்டிக்கும் அளவில்
ஸ்ரோத்ர சஹ க்ருதமாய்க் கொண்டு வாக்கையும்
த்வக் சஹ க்ருதமாய்க் கொண்டு பாணியையும்
சஷூஸ் சஹ க்ருதமாய்க் கொண்டு பாதத்தை
ஜிஹ்வா சஹ க்ருதமாய்க் கொண்டு உபஸ்தத்தையும்
க்ர்ணா சஹ க்ருதமாய்க் கொண்டு பாயுவையும்
சிருஷ்டித்து

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் கர்ம இந்த்ரியங்களுக்கும் சஹகாரியாய்
உபாயதமகமான மனசை சஹகாரி நிரபேஷமாக தானே
சிருஷ்டிக்கும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை-

இது தன்னை
ஸ்ரீ விஷ்ணு புராண வ்யாக்யானத்தில்
அயமத் ரேந்த்ரிய சிருஷ்டிகரம் வைகாரிக அஹங்காரத் க்ரமேண சப்த தன்மாத்ராதி பஞ்சக சஹாயாத் க்ரமேண
ஸ்ரோத்ராதி ஞான இந்த்ரிய பஞ்சகஸ்ய ஸ்ருஷ்டி தஸ்மா தேவ தத் சஹாயாத்
வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகஸ்ய அசஹாயாத்து தஸ்மான் மனஸஸ் ஸ்ருஷ்டிரிதி

(இது இங்கு இந்திரிய ஸ்ருஷ்ட்டி வரிசைகள் -சாத்விக அஹங்காரத்தில் இருந்து முறையே
ஸப்தம் போன்ற தன்மாத்திரைகள் துணையோடு முறையே காதுகள் போன்ற
ஐந்து ஞான இந்திரியங்களின் ஸ்ருஷ்ட்டி உண்டாகிறது
ஞான இந்திரியங்களின் உதவி கொண்டு காதுகள் போன்ற ஐந்து கர்ம இந்திரியங்களுடைய ஸ்ருஷ்ட்டி ஏற்படுகிறது
மற்ற தத்துவங்களின் துணை ஏதும் இன்றி சாத்விக அஹங்காரத்தில் இருந்து மனம் தோன்றுகிறது )-என்று
பிள்ளை எங்கள் ஆழ்வானும் அருளிச் செய்தார்-

————————————————————-

சூர்ணிகை -107-

அநந்தரம் இப்படி தாம் அருளிச் செய்த இந்த்ரிய உத்பத்தி க்ரமத்துக்கு
விரோதி பஷத்தை
நிரசிக்கைக்காக அத்தை யுத்ஷேபிக்கிறார் –

சிலர்
இந்த்ரியங்களில்
சிலவற்றை
பூத கார்யம்
என்றார்கள் –

அதாவது –
சிலர் –
அவர்கள் ஆகிறார்
க்ரணாதிகளான இந்த்ரியங்களை
பிருதிவ்யாதி பூத கார்யமாகவே கொள்ளும்
நையாயிகாதிகள்

அவர்கள் தாம் ஆனுமாநிகர் ஆகையாலே
அனுமானத்தாலே இறே அர்த்தத்தை சாதிப்பது-

——————————————————-

சூர்ணிகை -108-

அத்தை காலாத்ய யாபதேசத்தாலே தூஷிக்கிறார்

அது
சாஸ்திர
விருத்தம்

அதாவது
இந்த்ரியங்களை பூத கார்யம் என்று சொல்வது
இவற்றை ஆகங்காரிகளாக சொல்லுகிற
இதிஹாச புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-

——————————————————-

சூர்ணிகை -109-

அது என் என்ன
மோஷ தர்மத்திலே –
சப்த ஸ்ரோத்ரம ததா காதி த்ரய ஆகாசம் சம்பவம்
வாயோ ஸ்பர்சம் ததா சேஷ்டா த்வக் சைவ த்ரிதயம் சம்ருதம்
ரூபம் சஷூஸ் ததா வ்யக்திஸ் த்ரிதயம் தைஜ உச்யதே
ரச க்லே தச்ச ஜிஹ்வா ச த்ரயோ ஜல குணா சம்ருதா
க்ராணம் க்ரேயம் சரீரஞ்ச தே து பூமி குணா ஸ்ம்ருதா (மோக்ஷ தர்மத்தில் )

(ஓசை செவி மற்றும் பறவைகளுடைய வழியாக உள்ள ஆகாயம் ஆகியவை ஆகாசத்தில் இருந்து உண்டாயின –
ஸ்பர்சம் அசைவு மற்றும் தோல் ஆகியவை வாயுவிடம் இருந்து உண்டாயின –
சுவை நனைத்தல் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் குணங்களாகக் கூறப்படுகின்றன
மூக்கு மணம் மற்றும் சரீரம் ஆகியவை பூமியின் குணங்களாகக் கூறப்படுகின்றன )–என்று சொல்லுகையாலே
இதிஹாசாதிகள் தன்னிலேயும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்வம் சொல்லப் படுகையாலே
பூதங்கள் இவற்றுக்கு காரணமாக வேணுமே -என்ன –

பூதங்கள்
ஆப்யாயங்கள்
இத்தனை –

அதாவது
இதிஹாசாதிகளில் இந்த்ரியங்களுக்குச் சொன்ன பௌதிகத்வம்
பூதங்களால் யுண்டான ஆபயாய நமாத்ரத்தைப் பற்ற வாகையாலே
இந்த்ரியங்களுக்கு பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை
காரணங்கள் அன்று -என்கை –

ஆப்யாயகத்வம் ஆவது -போஷகத்வம்

இன்னமும்
அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்த காரணமாகவும்
இவற்றை உபாதான காரணமாகவும் சொல்லுகிற
குத்ருஷ்டி மதம் யுண்டு இறே

அஹங்காரஸ் யேந்த்ரியாணி ப்ரதி நிமித்தத்த மேவ
பூதானா மேவ உபாதானத்வம் அந்ந மயம் ஹி சோம்ய மன
ஆபோ மய ப்ராணஸ் தேஜோ மயீ வாக் இதி ஸ்ருதேரித கேசி தாஹூ ததயுக்தம்
அஹங்காரஸ் யைவோ பாதா நத்வேபி பூதானா மாப்யாய கத்வே நாபி ததா நிர்தேசோ பபத்தே(ஸ்ரீ விஷ்ணு புராணம் -21-2-48 )

(அஹங்காரத்துக்கு இந்த்ரியங்களைக் குறித்து நிமித்த காரணமாக உள்ள தன்மை மாத்திரமே உள்ளது
பூதங்களுக்கு மட்டுமே உபாதானக் காரணமாக உள்ள தன்மை உள்ளது
ஸ்வேதகேது -மனமானது -அன்னமயம் பிராணனானது நீர் மயம் -வாக்கானது தேஜோ மயம் -என்று ஸ்ருதி கூறுகிறது
இவ்வாறு வேதம் கூறுவதால் பூதங்களை முதல் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்
ஆனால் அது சரியான கருத்து அல்ல
அஹங்காரத்துக்கு முதல் காரணமாக உள்ள தன்மையும்
பூதங்களுக்கு வளர்க்கின்ற தன்மையும் உள்ளதால் பூதங்கள் முதல் காரணமாக இருக்க முடியாது -) -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் எடுத்துக் கழித்தது அதுவும்

இந்த்ரியங்களில் சிலவற்றை என்று தொடங்கி
இவர் அருளிச் செய்த க்ரமம் தன்னாலே பிரதிஷிபதம்

அப்போதைக்கு -அது சாஸ்திர விருத்தம் -என்றது
ஏகாதசம மனசசாதர தேவா வைகாரி காச சம்ருதா -இத்யாதிகளாலே
இவற்றை சாத்விக அஹங்கார காரயமாகவே சொல்லுகிற புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-

புராணாதிகளைப் பற்ற
அன்ன மயம் ஹி சோம்ய மன (சோம்ய மனமானது பூமி உள்ளது ) -இத்யாதி ஸ்ருதிக்கு
பிராபல்யம் யுண்டே யாகிலும்
இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹயேத் -என்கையாலே
உப ப்ரும்ஹண அனுகூலமாக அதுக்கு அர்த்தம் கொள்ள வேணும் என்று கருத்து –

ஆனால் உப ப்ரும்ஹணங்கள் தன்னிலேயும் பௌதிகத்வம் சொல்லுகையாலே
இவற்றுக்கு பூதங்கள் காரணமாய் அன்றோ தோற்றுகிறது–என்ன –
பூதங்கள் ஆப்யாயங்கள் இத்தனை(இந்திரியங்களை வளர்க்கின்ற தன்மை மட்டுமே உள்ளது ) -என்று நிர்வாஹம் –

க்ரணாதிகளான இந்திரியங்களுக்கு
பிருத்வ்யாதி பூதங்களால் யுண்டான ஆபயாய நம ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே பிரசித்தம்

இது தான் ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே
க்ர்ணா தீநாம் மிந்த்ரியாணாம் ஹி பிருதிவ்யாதி பூதைர் ஆப்யாயநம் ஸ்ருதி ஸ்ம்ருதிஷூ பிரசித்தம்
அன்ன மயம் ஹி சோம்ய மன ஆபோமய பிராணஸ் தேஜோ மயீ வாக் ஸ்ரோதரம் நபோ
க்ராணமுக்தம் பிருதிவ்யா இத் யாரப்ய வாய் வாத் மகம்
ஸ்பர்ச நமாமநந்தி நபே ஸ்ரோதரஞ்ச தன்மயம் இத்யாதிஷூ –

(மூக்கு முதலான இந்திரியங்களுக்கு பூமி முதலான பூதங்களால் வளர்ச்சி ஏற்படுதல் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ளது –
மனமானது அன்னமயம் -பிராணனானது நீர் மாயம் -வாக்கானது தேஜோ மாயம் என்றும் கூறப்பட்டுள்ளது –
ஆகாயத்தில் இருந்து செவி இந்த்ரியமும் பூமியில் இருந்து மூக்கு இந்த்ரியமும் -என்று தொடங்கி
ஸ்பர்சத்தை வாயுவுக்கும் செவியை ஆகாசத்திடமும் கூறுகிறார்கள் )
என்று ஸ்ருதி பிரகாசகராலே அபிஹிதம் ஆயிற்று

இப்படி இந்த்ரியங்களுக்கு பூதங்கள் எப்போதும் ஆப்யாயகங்களாய் இருக்கும் என்னும் இடம்
மோஷ தர்மத்திலே ப்ருகு பரத்வாஜ சம்வாதத்திலே
ஆப்யாயந்தே ச தே நித்யம் தாதவஸ் தைஸ்து பஞ்சபி –
(ஐந்தாக உள்ள பூதங்களால் அனைத்துக் காலத்திலும் வளரும் படிச் செய்து )என்று
ஸூ வ்யக்தமாக சொல்லப் பட்டது –

ஆகையால்
பூதங்கள் இந்த்ரியங்களுக்கு ஆப்யாயகங்கள் (வளர்ச்சிக்கு உதவுபவை மட்டுமே )இத்தனை
காரணங்கள் அன்று என்றது ஆயிற்று-

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading