தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -165-179-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -165-

இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாதரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்

இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –

அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும்-கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –

இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் மருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –

ஏகமேவ அத்விதீயம் -என்றும்
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இ றே –

————————————————————————————–

சூர்ணிகை -166-

இப்படி தான் ஜகத்தாய பரிணமிக்கும் ஆகில்
நிர்க்குணம் நிரஞ்சனம் நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய -என்றும்
இவனை நிர்விகாரனாகச் சொல்லும்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
நிர்விகாரன்
என்னும்படி
என்
என்னில்-

——————————————————————————–

சூர்ணிகை -167-

அத்தை பரிஹரிக்கிறார்

ஸ்வரூபத்துக்கு
விகாரம்
இல்லாமையாலே –

அதாவது
சித் அசித் ரூப விசேஷண விசிஷ்டனான தானே ஜகதாய பரிணமிக்கும் இடத்தில்
விசேஷ்யமான ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே
நிர்விகாரன் என்னக் குறை இல்லை என்கை –

—————————————————————————————

சூர்ணிகை -168-

ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லை யாகில்
இவன் தானே ஜகத்தாய பரிணமிக்கிறான் -என்ற பரிணாமம்
இவனுக்கு உண்டாம்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அதில்
பரிணாமம்
உண்டாம்படி
என்
என்னில் –

————————————————————————————–

சூர்ணிகை -169-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

விசிஷ்ட
விசேஷண
சத்வாரகமாக –

விசிஷ்டஞ்ச தத் விசேஷணம் சேதி விசிஷ்ட விசேஷணம் -என்று
பிரதமம் காம தாரயா சமாசத்தைப் பண்ணி
த்வாரேண சஹ வர்த்தத இதி சத்வார கம் – என்று
அனனதாபதத்தை பஹூ வரீகித்து
விசிஷ்ட விசேஷண -சத்வாரகம்
என்று த்ருதியாதத புருஷனாக சப்தத்துக்கு வ்யுத்புத்தி பண்ணிக் கொள்வது
விசிஷ்டம் ஆவது -விசேஷ யுக்தமானதாய்
விசிஷ்டமான விசேஷணம் என்று தண்ட குண்டலாதிகள் போல் அன்றிக்கே
சரீர பூதம் ஆகையாலே ப்ருதக் சித்த யர்ஹம் அல்லாத விசேஷத்தை உடைத்தான
சித் அசித் ரூப விசேஷணத்தைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
விசிஷ்ட விசேஷணம் என்கிற இதுக்கு
சரீர பூதமாய்க் கொண்டு என்றும் ஒக்கத் தன்னோடு கூடி இருக்கிற விசேஷணம் என்றும் பொருளாம்
அப்போதும் பிருதக் சித்தி அர்ஹமான தண்ட குண்டலாதிகளில் வ்யாவ்ருத்தி சித்திக்கும் இ றே
விசேஷணத்தாலே சத்வாரகமாக என்றது
இப்படி அப்ருதக் சித்த விசேஷணம் ஆகிற ஹேதுவாலே
த்வார சஹிதமாக இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்கை
இத்தால்
அப்ருதக் சித்தமான சித் அசித் ரூப விசேஷண த்வாரா
இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்றது ஆயிற்று –

————————————————————————————————

சூர்ணிகை -170-

இப்படி ஸ்வரூபத்துக்கு விகாரம் இன்றிக்கே இருக்க
ஸ்வ சரீர பூத விசேஷண த்வாரா
கார்ய ஜகத்துக்கு எல்லாம் இவனே உபாதானமாகக் கூடுமோ -என்ன
அருளிச் செய்கிறார்-

ஒரு சிலந்திக்கு
உண்டான
ஸ்வபாவம்
சர்வ சக்திக்கு
கூடாது
ஒழியாது இ றே

அதாவது
அல்ப சக்திகதமான சிலந்திக்கு ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே
ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தாலே தத் அனுஜாதமாக கார்ய ஜாததுக்குத் தான் உபாதானமாம் படியாம் யுண்டான
ஸ்வ பாவம்
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்று ஒதப் படுகிற சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே என்கை-
யாதோரண நாபிஸ் ஸ்ருஜதே கருஹண தே ச -என்றும்
ஊராண நாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத கரசதே-என்னக் கடவது இ றே
கார்யே நந்தே சவத நுமுகதச தவா முபாதா நாமா ஹூ ஸ
சா தே சகதிச ஸூ கர மிதரச சேதி வேலாம விலங்கய
இச்சா யாவத விஹரதி சதா ரெங்கராஜா நபேஷா சைவாச நாததி சயகரீ சோரண நாபௌ விபாவய -என்று
அருளிச் செய்தார் இ றே பட்டர் –

இப்படி நிமித்த உபாதான காரணத்வங்களை சொல்லி
சஹ காரி காரணத்வம் சொல்லாது ஒழிந்தது –
சர்வஞ்ஞத்வாதி குண யோகம் கீழே சொல்லுகையாலும்
நிமித்த உபாதானங்களுக்கு ஐகயம் சொல்லுகையாலும்
தன்னடையே சித்திக்கும் என்னுமத்தாலே –

ஆகை இ றே வேதாந்த சூத்ரத்திலும் இதி விசேஷித்து சொல்லாது ஒழிந்தது –

———————————————————————————————

சூர்ணிகை -171-

ஆக ஈச்வரனே த்ரிவித காரணமும் என்னும் இடம் சாதித்தாராய் நின்றார் கீழ் –
அஜாமேகாம -என்றும்
சௌர் நாதாய நதவே தீ -என்றும்
த்ரி குணம் தஜ ஜகத யோ நிர நரதி பராபவாபயயமா -என்றும்
அஜோஹயகே -என்றும்
ஜ்ஞாஜஜௌ தவா வஜா வீச நீ சௌ -என்றும்
அஜோ நித்யச சாச்வதோயம் புராண -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
நித்தியமாய் இருந்துள்ள அசித்தையும் சித்தியும் ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது தான் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது
அசித்தை பரிணமிப்பிக்கையும்
சேதனனுக்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப்
பண்ணுகையும் –

கீழே ஜகத் காரண பூதனாகச் சொல்லப்பட்ட ஈஸ்வரன்
சேதன அசேதநாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது –
தம பரே தேவே ஏகி பவதி -என்கிறபடியே தன்னோடு அவபிகதமாய்க் கிடந்தது தமஸ் சப்த வாச்யமான அசித்தை
ததஸ ஸ்வயம் பூர பகவா நவயகதோ வயஞ்ஜய நதிதம மகா பூதாதி திவ்ருத தௌஜா பராதுரா ஸீத தமோ நுத -என்கிறபடியே
ஸ்வ பரே ரண விசேஷத்தாலே ஸ்வ சமாத விபகதமாக்கி
அநந்தரம்
அஷர அவஸ்ததம் ஆக்கி
அது தன்னை பின்பு அவ்யவகத அவஸ்த்தம் ஆக்கி
அத்தை வ்யக்த சப்த வாச்யமான சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்கள் ஆம் படி பரிணமிப்பிக்கையும் –
அசித விசேஷிதான பிரளய ஸீமநி சமசாத -என்கிறபடியே
கரண களேபர விதுரனாய் –
போக மோஷ சூன்யனாய்
அசித் விசேஷிதனாய் -கிடந்த சேதனனுக்கு
போக ஸ்தானமான சரீரத்தையும்
போக உபகரணங்களான இந்த்ரியங்களையும்
கொடுத்து
போக மோஷ பாகித்வ அனாஹனாம்படி பண்ணி
முன்பு சங்கு சிதமாய்க் கிடந்த ஜ்ஞானத்தின் யுடைய விகாசத்தை பண்ணுகையும் -என்கை
சேதனனுக்கு என்ற இது ஜாதி ஏக வசனம் –

——————————————————————————————-

சூர்ணிகை -172-

அநந்தரம் ஸ்திதி சம்ஹாரங்களின் யுடைய பிரகாரங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி
பிரதமம் ஸ்திதியினுடைய பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்திதிப்பிக்கை யாவது –
ஸ்ருஷ்டமான வஸ்துக்களில்
பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று
சர்வ ரஷைகளையும்
பண்ணுகை –

ஸ்திதிக்கை யாவது என்னாதே
ஸ்திதிப்பிக்கை யாவது -என்றது -ஸ்திதி யாவது சிருஷ்டி சம்ஹாரங்கள் போலே
கர்த்ருகதம் அன்றிக்கே ரஷணத்துக்கு
கர்மீபவிக்கிற வஸ்துகதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
ஸ்ருஷ்டமான இத்யாதி -அதாவது -தத் த்ருஷ்ட்வா -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே
பயிருக்கு ரஷகமாய்க் கொண்டு அனுகூலமாய் நிற்கும் நீர் நிலை போலே ததேவ அனுபிராவிசத் என்கிறபடியே
தத் ரஷண அனுகூலமாக உள்ளே பிரவேசித்து நின்று
தத் தத் வஸ்து அனுகுணமான
சர்வ ரஷைகளையும் பண்ணுகை -என்கை
அனுபிரவேச சப்தத்துக்கு அனுகூலதயா பிரவேசம் இவர்க்கு இவ்விடத்தில் விவஷிதம் –

இத்தால்
ஸ்திதிப்பிக்கை யாவது
நிலைப்பிக்கையாலே
தத் தத் ரஷணங்களைப் பண்ணுகை
என்றது ஆயிற்று –

—————————————————————————————-

சூர்ணிகை -173-

அநந்தரம் சம்ஹார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

சம்ஹரிக்கை யாவது
அவி நீதனான புத்ரனை
பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற
கரணங்களை
குலைத்திட்டு வைக்கை –

அதாவது
விசித்ரா தேக சம்பத்தீ ரீச்வராய நிவேதிதும் -என்கிறபடியே
ஸ்வ சமாஸ்ரயணீயத்தைப் பண்ணி
உஜ்ஜீவிப்பிகைக்கு உறுப்பாக
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு
தன்னை வழி படுககை அன்றிக்கே
பாஹ்ய விஷய பிரவணனாய் போகப் புக்க வாறே
விதி நிஷேத வச்யனாய் ஒடுங்கி வர்த்தியாமல்
ஸ்வைரசாரியான புத்ரனை ஹித பரனானபிதாவானவன்
ஒரு வியாபார அர்ஹன் அல்லாத படி விலங்கை இட்டுஒடுக்கி வைக்குமா போலே
தன்னை ஒழிந்த விஷயங்களிலே அதி பிரவணனாய் நடக்கிற
கரணங்களைக் குலைத்து ஒடுக்கி இட்டு வைக்கை -என்கை –

———————————————————————-

சூர்ணிகை -174-

இனி இந்த ஸ்ருஷ்டியாதிகள் தான்
பிரத்யேகம் சதுர்விதமாய் இருக்கையாலே
அத்தையும் தர்சிப்பிக்கைக்காக அருளிச் செய்கிறார்

இம் மூன்றும்
தனித் தனியே
நாலு
பிரகாரமாய் இருக்கும் –

சதுர்விபாகச சம்ச்ருஷ்டௌ சதுர்ததா சம ஸ்திதிச ஸ்திதிதௌ பிரளயஞ்ச கரோதயே ந்தே சதுர்பேதா ஜநார்த்தனா-என்னக் கடவது இ றே-

—————————————————————————————
சூர்ணிகை -175-

ஸ்ருஷ்டியில்
ப்ரஹ்மாவுக்கும்
பிரஜாபதிகளுக்கும்
காலத்திற்கும்
சகல ஜந்துக்களுக்கும்
அந்தர்யாமியாய்
ரஜோ குணத்தோடு கூட
சிருஷ்டிக்கும் –

அதாவது
ஸ்ருஷ்டியில் வந்தால் -சதுர்தச புவன ஸ்ருஷ்டாவாய் சமஷ்டி புருஷனான ப்ரஹ்மாவுக்கும் –
அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய சிருஷ்டி கர்த்தாக்களான
தச பிரஜாபதிகளுக்கும்
ஸ்ருஷ்டிக்கு அபேஷிதமான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று உத்பாதங்களான சகல ஜந்துக்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் அடைய தன பக்கலிலே பர்யவசிக்கும் படி
அந்தராத்மாவாய் ப்ரவ்ருத்தி ஹேதுவான ரஜோ குணா விசிஷ்டனாய் கொண்டு ஸ்ருஷ்டிக்கும் -என்கை –
ஏகே நாம சே ந ப்ரஹ்மா சௌ பவதவவய கத மூர்த்தி மான
மரீசி மிஸ்ரா பதயே பிரஜா நாம நய பாகத
இததம சதுர்த்தா சம ச்ருஷ்டௌ வர்தததேசௌ ரஜோ குண -என்னக் கடவது இ றே-

—————————————————————————————-
சூர்ணிகை -176-

ஸ்திதியில்
விஷணவாதி ரூபேணஅவதரித்து
மன் வாதி முகேன சாஸ்த்ரங்களை
பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய்
சத்வ குணத்தோடு கூடி
ஸ்திதிப்பிக்கும்-

அதாவது
ஸ்திதியில் வந்தால்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார -என்கிற விஷ்ணு அவதாரம் தொடக்கமாக
ஸூ ர நர திரசசாமவதாந -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே அநேக அவதாரங்களைப் பண்ணி
யதவை கிஞ்ச மனு ரவதததத பேஷஜம் -என்று ஆபத் தமனாக
ஸ்ருதி பிரசித்தனான மனு முதலான யாஜ்ஞ்ஞாவல்க்ய பராசர வால்மீகி சௌ நகாதிகள் முகேன –
ஸ்ம்ருதி இதிஹாச புராண ரூப சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து
சேதனர் அபேத பிரவ்ருத்தராகாமல் ஈடேறுகைக்கு உறுப்பான நல் வழிகளை தர்சிப்பித்து
ரஷண உபயோகியான காலத்துக்கும்
லோகத்தில் ஓன்று ஓன்று ரஷகமான சர்வ பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
ஜ்ஞான பிரகாசாதி ஹேதுவான சத்வ குண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்திதிப்பிக்கும் -என்கை –
ஏகா மசேந ஸ்திதி தோ விஷ்ணோ கரோதி பரிபாலனம்
மன்வாதி ரூபீ சானயேன கால ரூபோபாரேண ஸ
சர்வ பூதேஷு சானயேன சம்ஸ்தித
சத்வம் குணம் சமா சரிதய ஜகத் புருஷோத்தம -என்னக் கடவது இ றே
புராணத்தில் ஏகா மசேன ஸ்திதோ விஷ்ணு -என்று விஷ்ணு அவதாரம் ஒன்றையும் சொன்னது –
அவதாராந்தரங்களுக்கும் உப லஷணம் என்று கொள்ள வேணும்
விஷ்ணு வாதி ரூபேண அவதரித்து -என்று இவர் அருளிச் செய்கையாலே –

——————————————————————————————-

சூர்ணிகை –177-

சம்ஹாரத்தில்
ருத்ரனுக்கும்
அக்னி அநதகாதிகளுக்கும்
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய்
தமோ குணத்தோடு கூடி
சம்ஹரிக்கும் –

அதாவது சம்ஹாரத்தில் வந்தால்
சம்ஹாரத தாதிகளில் தலைவனான ருத்ரனுக்கும்
அவாந்தர சம்ஹர்த்தாக்களான அக்னி அநதகாதிகளுக்கும்
சம்ஹார உபயோகியான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று நாசகமான சகல பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் எல்லாம் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கண் பாராமல் செய்கைக்கு உறுப்பான தமோ குண விசிஷ்டனாய்க் கொண்டு
சம்ஹரிக்கும் -என்கை
ஆசரிதய தமசோ வருத்தி மந்தகாலே ததா பிரபு ருத்ர ஸ்வரூபோ
பகவானே காம சேன பவத்யஜ அகனய நதகாதி ரூபேண பாகேனா நயேன வர்த்ததே கால ஸ்வரூபோ பாகோ நாய்ச சர்வ பூதானி
சாபர விநாசம குர்வதச தஸ்ய சதுர்ததைவ மகாத்மான -என்னக் கடவது இ றே
ஸ்ருஷ்டியாதிகளில் சதுர்விபாகம் சொல்லுகிற இடத்தில்
அம்ச சப்தத்தாலே ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்று
அவர்கள் அவனுக்கு பிரகார பூதர் ஆகையாலே என்னும் இடத்தை
அநந்தரம்
ப்ரஹ்மா தஷாதய காலச ததைவாகில ஜந்தவ விபூதயோ
ஹரே ரேதோ ஜகத் சிருஷ்டி ஹேதவ விஷ்ணுர் மனவாதய காலச சர்வ பூதானி ஸ தவிஜ ஸ்திதிதோ
நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதய ருத்ர காலா ந்த
காதயாச்ச சமசதாச சைவ ஜந்தவ சதுர்த்தா பிரளயே
ஹயேதா -ஜனார்த்தன விபூதய -என்று
மூன்று ஸ்லோகத்தாலே ஸ்புடமாக பிரதிபாதித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –
இத்தை நினைத்தே இவரும்-அந்தர்யாமியாய் -என்று அருளிச் செய்தது
விஷ்ணு மனவாதய -என்கிற ஸ்லோகத்தில் விஷ்ணுவையும் விபூதியாக சொன்ன இது
அவதார பிரயுக்தமான விக்ரஹ பரமாகக் கடவது –

————————————————————————————-

சூர்ணிகை -178-

இனி விஷம சிருஷ்டி அடி யாக மந்த மதிகளுக்கு உண்டாகக் கடவ சங்கையை பறிஹரிக்கைக்காக
பிரதமம் தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சிலரை ஸூ கிகளாகவும்
சிலரை துக்கிகளாகவும்
ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு
வைஷம்ய
நைர் கருண்யங்கள்
வாராதோ -என்னில்

அதாவது -ஸ்ருஷ்டிக்கிற அளவில் சர்வ ஆத்மாக்களையும் ஏக பிரகாரமாக அன்றிக்கே
தேவ மனுஷ்யாதி விபாகேன சில ஆத்மாக்களை
ஸூ கிகளாயும்-சில ஆத்மாக்களை துக்கிகளாயும் ஸ்ருஷ்டித்தால்
சர்வ சமனாய்- பரம தயாவானாய் இருக்கும் ஈஸ்வரனுக்கு
எல்லார் அளவிலும் ஒத்து இராமையாகிற
வைஷயமும்-துக்கிகளாய் ஸ்ருஷ்டிக்கையால் –
பரத்துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை இல்லாமையும் வாராதோ -என்கிறதாகில் -என்கை –

———————————————————————————————

சூர்ணிகை -179-

அத்தை பரிஹரிக்கிறார் –

கர்மம் அடியாகச்
செய்கையாலும்
மண் தின்ற பிரஜையை
நாக்கிலே குறி இட்டு
அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே
ஹித பரனாய்ச் செய்கையாலும்
வாராது –

அதாவது
சிலரை ஸூ கிகளாயும் சிலரை துக்கிகளாயும் ஸ்ருஷ்டிக்கிற இது
விஷம ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பான சேதனர் உடைய கர்மம் அடியாகச் செய்கையாலும்
துக்கிகளாக ஸ்ருஷ்டிக்கிற இது தனக்கு ரோக கரமான மண்ணை விரும்பித் தின்ற பிரஜையை
மேலே தின்னாதபடி நாக்கிலே குறி இட்டு மண் தின்ன பயப்படும்படி பண்ணும்
ஹித பரதையான மாதாவைப் போலே
இவர்கள் மேல் துக்க ஹேதுவான கர்மங்களைப் பண்ண அஞ்சும்படி
ஹித பரனாய்ச் செய்கையாலும் வைஷம்ய நைர்க்கருணயங்கள் இரண்டும் இவனுக்கு வாராது -என்கை
இத்தால் -வைஷம்ய நைகருண்யே ந சாபேஷதவாத -என்கிற வேதாந்த ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
நிமே நோ ந நதஞ்சகருணஞ்ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேஷய சருஜதச தவ ரெங்க சேஷிந
வைஷம்ய நிர்க்கருண தயோர் ந கலு பிரசகதிச தத் ப்ரஹ்ம
ஸூ த்ரச்சிவா ஸ்ருதயோ கருண நதி -என்று இது தன்னை பட்டரும் அருளிச் செய்தார் இ றே –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading