ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
——————————————————-
இவர்களுக்கு புருஷார்த்தம் -தம் யதா -இத்யாதி -ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்கிறபடியே –
ஸ்வரூப ஆவிர்பாவ பூர்வகமாய்
நித்ய நிர்த்தோஷ நிஸ் ஸீமா நந்தாத்மகமாய் இருக்கிற சவிபூதிக சமஸ்த கல்யாண குணாத்மக
பரமாத்ம யாதாத்ம்ய அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
நனு -கைங்கர்யம் துக்க ரூபமாக லோகத்திலே காணா நின்றோம் –
சேவா ஸ்வ வ்ருத்திர் வ்யாக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத்-என்று நிஷித்தமாய் இருக்க
இதுவே புருஷார்த்தமாம் படி எங்கனே என்னில் –
லோகத்திலே கைங்கர்யம் எல்லாம் அபுருஷார்த்தம் அன்று –
ப்ரிய தம விஷயத்திலே கைங்கர்யம் புருஷார்த்தமாகக் காண்கையாலே-
ஸ்வ வருத்தி என்று நிஷேதித்தது இதர சேவையை –
இது புருஷார்த்தம் என்கிறவிடம் தர்மி க்ராஹக பிரமாணத்தாலே பாதிதம் –
அது அபுருஷார்த்தம் ஆகைக்கு ஹேது பாபாரப்தத்வம் –
புண்யபாபே விதூய -என்கையாலே இது பாப கார்யம் அன்று —
தன் ஸ்வரூபத்தை யாதொருபடி நினைத்தான் அதுக்கு ஈடாய் இருக்கும் –
இது புருஷார்த்தம் என்னும் இடம் ஸூர நர திர்யகாதி களிலே காணா நின்றோம் –
ஆகையாலே முக்தனும் தன்னை சேஷமாக நினைக்கையாலே
கைங்கர்யமே புருஷார்த்தமாம் -அத்தை ஒழிந்தது அபுருஷார்த்தமாய் இருக்கும் –
————————————–
சார்வாக மத நிரசனம் –
தேஹாதி விலஷணன் ஆகையாலே சப்தாத்யனுபவம் புருஷார்த்தம் அன்று
————————————-
யோகாதி மத நிரசனம்
பரதந்த்ரன் ஆகையாலே ஸ்வ அனுபவ மாத்ரம் புருஷார்த்தம் அன்று
—————————————-
பவ்த்தாதி மத நிரசனம்
ஸ்வரூபம் நித்யமாகையாலே ஸ்வரூப உச்சேதனம் புருஷார்த்தம் அன்று
————————————————
நையாயிக மத நிரசனம்
நித்ய ஜ்ஞானாதி குணகன் ஆகையாலே வைசேஷிக ஜ்ஞானாதி குண விநாசம் புருஷார்த்தம் அன்று
நனு -ஸூ கமாகில் துக்க மிஸ்ரமாய் அல்லது இராமையாலே ஸூகம் புருஷார்த்தம் அன்று –
விஷ சம்ப்ரயுக்தமான அன்னம் போலே த்யாஜ்யம் என்ன ஒண்ணாது
மோஷ ஸூகம் -ந ரோகம் நொத துக்க தாம் -என்று துக்க மிஸ்ரம் இல்லாமையாலே
துக்க நிவ்ருத்தி தான் புருஷார்த்தம் ஆக மாட்டாது -ஸூக ரூபம் அல்லாமையாலே –
ஆனால் துக்க நிவ்ருத்தியில் யத்னம் கூடாது என்னில் துக்கமும் பிரதிகூலம் ஆகையாலே கூடும்
ஸூகத்தில் காட்டிலும் துக்க நிவ்ருத்தியே புருஷார்த்தம் என்னில் துக்க மிஸ்ரமான ஸூக சாதனங்களில் இழியக் கூடாது –
———————————————-
சங்கர மத நிரசனம் –
அவித்யா நிவ்ருத்தியே மோஷம் என்கிற பஷமும் அனுபபன்னம் -அது ஸூக ரூபம் அல்லாமையாலே
ஸூக சாதனம் என்ன ஒண்ணாது -ப்ரஹ்மத்துக்கு ஸூகம் கொள்ளாமையால் -ஸூகம் கொள்ளில் ப்ரஹ்மம் சவிசேஷமாம் –
————————————————————–
பாஸ்கர மத நிரசனம்
உபாதி வியோகம் மோஷம் -என்கிற பஷமும் சேராது -ஸூக ரூபம் அல்லாமையால் –
திரோ ஹிதமான ஸூகத்துக்கு பிரகாசகம் என்னில்
ஜீவனுடைய ஸூ கத்துக்கு பிரகாசகமோ -பரனுடைய ஸூ கத்துக்கு பிரகாசகமோ
ஜீவ ஸூ கத்துக்கு பிரகாசகம் என்ன ஒண்ணாது -ஜீவன் நசிக்கையாலே –
பர ஸூக பிரகாசகம் என்ன ஒண்ணாது -அதுக்கு திரோதானம் இல்லாமையாலே
உபாதி பிரதேசத்தில் ஸூகம் திரோஹிதம் என்னில் சர்வஜ்ஞன் இன்றிக்கே ஒழியும்
—————————————-
யாதவ பிரகாச மத நிரஸனம்
ஸ்வாபாவிக பேதாபேத பஷத்திலும் மோஷம் புருஷார்த்தம் அன்று -முக்தனுக்கு பத்தனோடு அபேதம் உண்டாகையால்
பத்தனுடைய துக்கமே முக்தனுக்கு வருமாகையால் -ஈஸ்வரனுக்கு ஜீவனோடு அபேதம் உண்டாகையால்
ஈஸ்வரன் ஜீவனுடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாக நினைத்து சத்ய சங்கல்பன் ஆகையாலே தானே கழிக்கும்
ஆகையால் ஆத்மாவுக்கு மோஷ உபாயத்தில் இழிய வேண்டா -சர்வ முக்தியும் பிரசங்கிக்கும்
————————————————-
ஸ்வ சித்தாந்த சங்க்ரஹம்
ஆகையால் நிர்தோஷ நிரதிசய ஆனந்த ரூபமான பரமாத்ம அனுபவ கைங்கர்யமே மோஷம் –
தம் யதா யதோபாசதே ததைவ பவதி -என்றும் –
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தே நாம் ருதத்வமேதி -என்றும்
ஏதத் சாம காயத நாஸ்தே -என்றும் –
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா -என்றும்
ஆகச்ச வத்ஸ பத்ரம் தே புண்டரீக மஹா மாதே -மதரூப தாரீ நித்யாத்மா மம பாரிஷதாஸ் ரய -என்றும் –
இத்யாதி பிரமாணங்கள் அநந்தம்-
———————————————————
மோஷே ஜீவ பர ஐக்ய வாதி சங்க உபந்யாசம்
நனு -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும் –
யத்ர த்வஸ்ய சர்வாத்மைவா பூத் -என்றும் –
விபேத ஜனகே அஜ்ஞனே நாசமாத்யந்திகம் கதே –ஆத்ம நோ ப்ரஹ்மணோ பேதமசந்தம் க கரிஷ்யதி -என்றும்
பரமாத்மனா பவத்ய பேதீ -என்றும்
இத்யாதிகளாலே மோஷ தசையிலே ஐக்யம் சொல்லா நிற்க கைங்கர்யம் கூடும்படி என் என்னில்
————————————————
தத் கண்ட நம் –
பரமாத் மாத்ம நோர்யோக பரமார்த்த இதீஷ்யதே மித்யைத தன்ய த்ரவ்யம் ஹி நைதி தத் த்ரவ்யதாம் யத -என்கிறபடியே
ஹேய பிரதிப்பட வஸ்துவுக்கும் ஹேய யோக்ய வஸ்துவுக்கும் ஐக்யம் சொல்லுகை வ்யாஹதம் –
ஐக்யம் கொள்ளில்
ஆத்ம பாவம் நயத்யேநம் தத் ப்ரஹ்ம மத்யாயி நம் மு நே -விகார்யா மாதமநஸ் சக்த்யா லோஹமா கர்ஷகோ யதா -என்றும்
நிரஞ்ஜன பரமம் சாம்யமுபைதி -என்றும் –
மம சாதர்ம்யமாகதா -என்றும் –
தத் பாவ பாவமா பன்ன -என்று சொன்ன பரமாத்ம சா தர்மம் கூடாது –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்கிற இடத்தில் சொல்லுகிறது சாதர்ம்யத்தை
விஷ்ணு ரேவ பூத்வா -என்கீற இடத்தில் போலே ஏவ என்றது இவ என்றபடியாய்-ப்ரஹ்மம் போலேயாம் என்றபடி –
அவதாரணம் ஆனாலும் இதுவே அர்த்தம் –
யத்ர த்வஸ்ய -என்கிற இடத்தில் எல்லாம்
பரமாத்மாவுக்கு பிரகாரம் என்று சாஷாத் கரித்த படியைச் சொல்லுகிறது –
விபேதஜ நகே -என்றும் -பரமாத்ம நா பவத்ய பேதீ -என்கிற இடத்தில் தேவாதி ரூப பேதம் இல்லை -என்றபடி
தேவாதி பதே அபத்வஸ்தே -என்று இது தான் கண்டோக்தம்
நனு –
கிங்கரன் ஆகில் -ஸ ஸ்வராட் பவதி -என்கிற ஸ்வா தந்த்ர்யம் சேரும்படி என் என்னில் –
ஸ்வராட்-என்றது கர்ம வச்யன் அன்று என்றபடி –
ஆனால் சாம்யம் தான் கூடும்படி என் என்னில் -சாம்யம் போக மாத்ரத்திலே -சாயுஜ்யம் என்கிறது இத்தையே –
சர்வதா சாதர்ம்யம் இல்லை ஜகத் வ்யாபாராதிகள் இல்லாமையாலே
ஜகன் நியமனாதிகள் இல்லையாகில் போக சாம்யம் தான் கூடும்படி என் என்னில்
அவை இருவருக்கும் ஒக்க அனுகூலமாகக் கொண்டு பிரகாசிக்கையாலே கூடும் –
அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரியே ச்ப்ருசத -என்கிறபடியே -சரீர ஸூந்யனாவனுக்குக் கைங்கர்யம் கூடாது என்னில் –
ச ஏகதா பவதி த்ரிதா பவதி -என்று சரீரனாகச் சொல்லுகையாலே கூடும்
இது தன்னாலே சசரீரத்வம் சித்தம் –
அ சரீரம் என்றது கர்ம க்ருதமான சரீரம் இவனுக்கு இல்லை என்றபடி –
ந ஹைவ சசரீரச்ய சதா ப்ரியாப்ரியயோரபஹதி ரஸ்து -என்கிறபடியே சரீர விசிஷ்டன் ஆகில்
ஸூக துக்கங்கள் உண்டாகாதோ என்னில்
அங்குச் சொல்லுகிறது கர்ம க்ருத சரீரத்தை –
சரீரமாகில் கர்மக்ருதமாய் யன்றோ இருப்பது என்ன ஒண்ணாது -பகவத் விக்ரஹம் கர்ம க்ருதம் அல்லாமையாலே –
அவன் சர்வ சக்தனாகையாலும் சத்ய சங்கல்பன் ஆகையாலும் அவனுக்குக் கூடும் –
இவனுக்குக் கூடாது என்ன ஒண்ணாது -அவனுடைய சங்கல்பத்தாலே இவனுக்கும் கூடுகையாலே –
சங்கல்பாதே வாஸ்ய பிதராஸ் சமுத்திஷ்டந்தி -என்று சத்ய சங்கல்பனாகச் சொல்லுகையாலே
இவன் தன்னுடைய சங்கல்பத்தாலும் சரீரம் கூடும் –
ஈஸ்வரன் சத்ய சங்கல்பன் ஆகையாலே புநரா வ்ருத்தியும் கூடுமே என்னில் –
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோ அத்யர்த்தம் –ச மஹாத்மா ஸூ துர்லப -என்று
இருக்கிற ஈஸ்வரன் இவனை சம்சரிப்பிக்கக் கூடாமையாலும் –
சம்சார ஹேதுவான கர்மம் நிஸ் சேஷமாக நிவ்ருத்தம் ஆகையாலும்
ந ச புநரா வர்த்ததே -என்றும் –
இமாம் மா நவ மாவர்த்தம் நா வர்த்தந்தே -என்றும் –
மாமுபேத்ய புநர் ஜன்ம துக்காலயம சாஸ்வதம் –நாப் நுவந்தி மஹாத்மா நச் சாம் சித்திம் பரமாம் கதா —
ஆ பிரம்மா புவ நால்லோகா புநரா வர்த்தி நோ அர்ஜூன –மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே –
என்கையாலும் புநரா வருத்தி பிரசங்கமே இல்லை –
ஆகையாலே சவிபூதிக சமஸ்த கல்யாண குணாத்மக பரமாத்ம யாதாம்ய அனுபவ ஜனித ப்ரீதி காரித
கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
புருஷார்த்த ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம் –
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply