நாராயணனே ராமன்: பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் கவிஞன்
“ஒரு பகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அரு மறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு வுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” (பால-திருவ 2 – 10 – 3)
பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 – 10 – 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 – 2 – 1] நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள்-
எழுதரிய திருமேனிக் கருங் கடலைச் செங்கனி வாய்க் கவுசலை யென்பாள் பயந்தாள்” [பால – குலமுறை 20]
“கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
‘இராமன்’ எனப்பெயர் ஈந்தனன் அன்றே” [பால – திருவ 119]” [பால – குலமுறை 20
கராம் – முதலை; கைக்கரி – யானை; அராவணை – பாம்புப் படுக்கை]-முதலை வாயில் அகப்பட்ட களிறு ‘ஆதிமூலமே’ எனக்கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது ஈண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறுவதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய்மொழியாகவும்,
“கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்” [ஆரணி, விராதன் வதை 49]
சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,
“கொல்லாழி நீத்தங்கோர் குனி வயிரச் சிலை தடக்கைக் கொண்ட கொண்டல்” [பால – மிதிலை 154]ஆழி – சக்கரப்படை] பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப் படையை நீத்துவிட்டு, கோதண்டத்தைத் திருக் கையில் கொண்ட முகில்வண்ணன்-
“பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளி சேர் அஞ்சன வண்ணனே இராமன்” [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]-என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப்பெற்றுள்ளதை எண்ணி உணர்க
“சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே” [கிட்கிந் – நட்புகொள் 79]-திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,அநுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.
“தோற்றம் என்பதொன்று உனக்கில்லை” [யுத்த – மீட்சி 107]–“மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்” [யுத்த – நாகபாசப் 222]அவதார் இரகசியம். -“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய் 2 – 9 – 5]-கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக.
“மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா” [யுத்தமீட்சி 101]-மறைகளின் தலைகள் – உபநிடதங்கள்–தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.
முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:” [யுத்தமீட்சி 113]-என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன்
“நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்” [யுத்த – நிகும்பலை 141]
“உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்” [யுத்த வருணனை வழி 63]
நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே” [யுத்த வருணனை வழி 67]
மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு” [சுந்தர – உருக்காட்டு 71]-சீதை அநுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதி
மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்” [சுந்தர – பிணிவீட்டு 80]-அநுமன் வாய்மொழி
“மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி” [யுத்த – கும்பகருணன் வதை 150]-கும்பகருணன் வாய்மொழி
“மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே” [ஆரணி – கவந்த 44]ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,இராமன் முதற் பொருள் என்று கூறுவதைக் காண்க
“மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா” [ஆரணி – விராதன் வதை 59]-[மெய் – நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி – பரமசிவன்; ஐயம் – பிச்சை, சந்தேகம்-பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்” [திருவாய் 4 – 10 – 4]
“அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?” [ஆரணி-விராதன் வதை 60]-முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-
இதில் நாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலைபெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயருறுகின்றான். அப்போது வந்த தேவர்கள், “முன்பு பின்பு நடு இல்லாய்!” [யுத்த – பிரமாத்திரப் 227] என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காணலாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசியபோது, மறுமாற்றம் உரைக்கும் வீடணனின் பேச்சில்,-“மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்” [யுத்த நிகும்பலை யாகப் 175]-“மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத் தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்” [அயோத். கைகேசி சூழ்வினை 62][தேவ தேவர் – சிவன்; சேவகர் – இராமன்]
இராமன் கோலம் புனைதலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,-முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை” [பால. கடிமணப் 69]-காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்” [அயோத். கைகேயி சூழ்வினை 91]-முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழி-
“சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ”
[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன்.
“ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் பாதமல்லது பற்றிலர் பற்றிலார்–
—————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply