கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –
தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.
———-
தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார்
வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது
கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை.
————
ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.
பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் இவையிரண்டில் மட்டிலும் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார். இரண்டாம் காண்டம் முதல் ஆறாம் காண்டம் வரை பொதுவிலே தீரம் மிக்க கதாநாயகனாகவும் மனிதனாகவுமே ராமபிரான் காட்டப்படுகிறார். இந்தப் பகுதிகளிலும் சில இடங்களில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார் என்பது வாஸ்தவம் தான்
—————-
மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் ராமகதை சொல்லப்படுகிறது
- ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ராமோபாக்யானம் (ராமகதை)
- ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ஹனுமத் – பீம சம்வாதம் (உரையாடல்)
- த்ரோண பர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம் ( பதினாறு ராஜாக்களைப் பற்றிய கதைகள்)
- சாந்திபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம்
வனவாசத்தில் இருக்கும் தர்மபுத்ரருக்கு ராமகதை சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகவும் கஷ்டதசையில் இருப்பவர்கள் அது போன்று கஷ்டம் அனுபவித்த வேறு மாந்தர்கள் சுகத்தையும் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என நம்பிக்கை தரும்படிக்காக இந்த சூழ்நிலையில் ராமகதை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கு சொல்லப்படும் ராமகதை ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. ஆயினும் விஷ்ணுவின் அவதாரமாக ராமபிரான் தேவர்கள் துயர்நீக்க அவதரிப்பது சித்தரிக்கப்படுவதும் ராக்ஷஸர்களின் பூர்வ சரித்ரம் சொல்லப்படுவதும் ராமாயண காவ்யத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்ட பகுதிகளை உள்வாங்கியமையை துலக்குகிறது. இந்த மஹாபாரதமென்னும் இதிஹாசத்தைப் படைத்தவருக்கு, அந்த இதிஹாசம் படைத்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ராமகதை உள்ளது உள்ள படிக்கு விபரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.
பீம ஹனுமத் சம்வாதத்தில் ஹனுமான் ராமபிரானிடம் ராமகதை புழக்கத்தில் உள்ள வரை ராமபிரான் புவியில் வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக்கொள்வது உத்தரகாண்டத்தில் வரும் நிகழ்வை படம் பிடிக்கிறது.
யாவத்3ராம கதா2வீர ப4வேத் லோகேஷு சத்ருஹன்
தாவஜ்ஜீவேயமித்யேவம் ததாஸ்த்விதி ச ஸோ(s)ப்3ரவீத் (மஹாபாரதம் – III – 147/37)
யாவத்3ராமகதா2ம்வீர ச்ரோஸ்யே(s)ஹம் ப்ருத்வீதலே
தாவச்சரீரே வத்ஸ்யந்து மம ப்ராணா ந சம்சயா: (ராமாயணம் – உத்தரகாண்டம் – 39/16) – (கோரக்பூர் பதிப்பின்படி சர்க்கம் ஒத்துப்போகவில்லை)
சாந்திபர்வத்து ஷோடசராஜோபாக்யானம் ராமபிரான் பதினோராயிரம் வருஷம் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறது.
த3சவர்ஷஸஹஸ்ராணி த3சவர்ஷசதானி ச
ராஜ்யம் காரிதவான் ராமஸ்ததஸ்து த்ரிதிவம் க3த: (ம.பா XII – 29-54)
தசவர்ஷஸஹஸ்ராணி தசவர்ஷசதானி ச
ராமோ ராஜ்யமுபாஸீத்வா ப்3ரம்ஹலோகம் க3மிஷ்யதி ( ராமாயணம் – உ.கா – 1/76)
த்ரோணபர்வத்து ஷோடசராஜோபாக்யானத்தில் ராமபிரான் தனது தேசத்தை எட்டு பாகங்களாக விபாகம் செய்து அதனை தன் மகன்களான குச லவர்களுக்கும் தன் தம்பி மார்களுடைய மகன் களிடையேயும் ஒப்படைக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.
இவையாவும் ராமாயண காவ்யத்தில் உத்தர காண்டத்தில் சொல்லப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
——————
ரங்கநாத ராமாயணம்
ரங்கநாத ராமாயணம் என்பது தெலுங்கு மொழியில் கிபி 1300 முதல் கிபி 1310 வரையிலான காலகட்டத்தில் கோனா புத்தா ரெட்டி என்றும் அழைக்கப்படும் கவிஞர் ரங்கநாதரால் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தின் பிரபலமான தழுவலாகும். தெலுங்கில் உள்ள ராமாயணத்தின் நான்கு பதிப்புகளில் இது ராமாயணத்தின் முழு கருப்பொருளையும் உள்ளடக்கியது. ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட அணிலின் கட்டுக்கதையை பெரும்பாலான மக்கள் கேட்டிருப்பார்கள். ரங்கநாத ராமாயணத்தில் தான் இந்தக் கட்டுக்கதை உருவானது.
ராமரின் வானவர் சேனை இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டும் போது, அவர்களின் முயற்சிக்கு ஒரு அணிலும் தன் பங்களிப்பை அளித்தது. நன்றியின் அடையாளமாக, ராமர் தனது விரல்களால் அதன் முதுகில் மூன்று கோடுகளை வரைந்து அதை ஆசீர்வதித்தார். இந்த பதிப்பு 17,290 வசனங்களைக் கொண்டுள்ளது மற்றும் அறிஞர்கள் மற்றும் பொது மக்களால் போற்றப்படுகிறது.
————-
காகவின் ராமாயணம்
இது அசல் ராமாயணத்தின் பழைய ஜாவானிய கவிதை விளக்கமாகும் மற்றும் ஜாவானிய மக்களால் இந்தோனேசியாவில் கலை வெளிப்பாட்டின் உச்சமாக அறியப்படுகிறது. காகவின் என்பது இந்து சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட மீட்டர்களைக் கொண்ட ‘காவ்யா’வின் ஜாவானிய பதிப்பாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடாங் வம்சத்தின் ஆட்சியின் போது இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மூலம் அதன் பிரபலத்தை அளவிட முடியும். அசல் ராமாயணத்தைப் போலல்லாமல், இந்தோனேசியப் பதிப்பில், ஹனுமான் வானரர்களின் ராஜாவாகப் போற்றப்படுகிறார், பாலி அல்லது சுக்ரீவ் அல்ல.
———————
ரீம்கர்
ரீம்கர் என்பது காவியமான ராமாயணத்தின் கம்போடிய பதிப்பு. ரீம்கர் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் “ராமின் மகிமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரீம்கர் என்பது கம்போடியாவின் தேசிய காவியம் மற்றும் அதன் பழமையான குறிப்பு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜாதகாவின் கதைகளின் அடிப்படையில் பாறைக் கல்வெட்டுகளின் வடிவத்தில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அசல் ராமாயணத்தைப் போலவே, இது அதே கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றின் கம்போடிய பெயர்களுடன்: ஃபிரே ராமா, நியாங் சேடா மற்றும் க்ராங் ரீப், முறையே ராம், சீதா மற்றும் ராவணனைக் குறிக்கிறது. இது வால்மீகியின் ராமாயணம் போன்ற நீதி மற்றும் விசுவாசத்தின் உலகளாவிய கருப்பொருளைக் கையாள்கிறது. இருப்பினும், ரீம்கரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், ஹனுமான் தனது பயணத்தின் போது சந்திக்கும் தேவதையான சோவன்னா மச்சா போன்ற சில புதிய கதாபாத்திரங்களைச் சேர்ப்பதாகும்.
உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றான அங்கோர் வாட்டில் ரீம்கரின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இந்த முக்கிய கம்போடிய காவியம் அதன் உரை வடிவத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் நடனம்-நாடகம், இசை மற்றும் சிற்பங்கள் போன்ற கலையின் பிற பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளது.
———-
ராமாயணத்தின் பிராந்திய பதிப்புகள்
மேற்கூறிய பதிப்புகளைத் தவிர, இந்தியாவில் காவியமான ராமாயணத்தின் சில முக்கிய பிராந்திய பதிப்புகளும் உள்ளன. கிருட்டிவாசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பெங்காலி பதிப்பு 15 ஆம் நூற்றாண்டில் கிருட்டிபாஸ் ஓஜாவால் இயற்றப்பட்டது. இதேபோல், சப்தகண்ட ராமாயணம் எனப்படும் அசாமிய பதிப்பு 14 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலியால் இயற்றப்பட்டது. கேரளாவில், 12 ஆம் நூற்றாண்டில் சீராமனால் ராமசரிதம் என்றழைக்கப்படும் நீடித்த மலையாளக் கவிதைப் பதிப்பு எழுதப்பட்டது.
இந்த பதிப்புகளின் உள்ளார்ந்த கதைக்களம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் அதே வேளையில், எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் ராமரின் புகழ்பெற்ற கதையை தங்கள் மொழியில் மொழிபெயர்ப்பதை விட, அவர்களின் கலாச்சார சுழற்சியைக் கொடுத்து மறுபரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் தனித்துவமான நுண்ணறிவுகளைச் சேர்த்துள்ளனர், இது இந்த காவியப் படைப்பை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவியது
———-
ஜைன ராமாயணங்கள் :-
ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாக டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய நூலின் வாயிலாகத் தெரிகிறது. மூன்று ஆசிரியர்களின் வெவ்வேறு கதைகளை ஒட்டி இவை சமைக்கப்படதாக ஸ்ரீ ஜேக்கபி கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி, ஸ்ரீ குணபத்ரர் என்ற இருவரின் வெவ்வேறான கதைகள் ஆனாலும் அவையல்லாமல் ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனருடைய வேறான மூன்றாவது கதைகள் ஜின ராமாயணக் கதைகள் .
ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனர் இருவருடைய ராமாயணக் கதைகள் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணக் கதைகளை பெரும்பாலும் ஒட்டியவை என்றும் மற்ற இருவருடைய கதைகளும் ஆதிகாவ்யமான ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுவதாகவும் கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி மற்றும் பிந்தையவர்களது ராமாயணம் ப்ராக்ருதத்திலும் குணபத்ரருடைய ராமாயணம் சம்ஸ்க்ருதத்திலும் இயற்றப்பட்டுள்ளது.
ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ர்வர்த்திகள், 9 பலபத்ரர்கள், 9 வாஸுதேவர்கள் மற்றும் 9 ப்ரதிவாஸுதேவர்கள் என்று அறுபத்துமூவர் காலசக்ரத்தில் திரும்பத் திரும்பத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவர் என்பது ஜைனக்கோட்பாடு. வாஸுதேவர்கள் ப்ரதி வாஸுதேவர்களை அழிப்பவர் என்பதும் ஜைனக்கோட்பாடு.
ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். சீதை ராவணனுக்கு மகளாகப் பிறந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு என்பதால் ராவணன் பிறந்ததுமே அவளை அப்புறப்படுத்தி விடுகிறான். பின்னாளில் தன் மகள் தான் அவள் என்று அறியாது சீதையைக் கவர்ந்த ராவணனுடன் யுத்தம் நிகழ்கிறது.
ப்ரதி வாஸுதேவனாகிய ராவணன் லக்ஷ்மணன் மீது சக்ராயுதத்தை வீசுகிறான். ஆனால் லஷ்மணன் வாஸுதேவனானதால் அது அவனைத் தாக்கவில்லையாம். வீசப்பட்ட ஆயுதம் அவனைத் தாக்காது அவன் வசமகிறதாம். வாஸுதேவனாகிய லக்ஷ்மணன் தன்னுடைய ஆயுதத்தால் தாக்குவதன் மூலம் அழிக்கப்படவேண்டிய ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் அழிக்கப்படுகிறான். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ……..ஜைன சமயம் விதந்தோதும் நற்பண்புகளின் இருப்பிடமாகிய……. பலபத்ரனான ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான்.
மற்ற ஜைன புராணங்களைப் போன்று இந்த ஜின ராமாயணமும் ஒரு ப்ரதி புராணம் ( Anti – Counter – Purana) என்று ஸ்ரீ ராமானுஜன் கருத்துப் பகிர்கிறார். வைதிக சமயத்தில் படைக்கப்பட்ட ராமாயணத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவுக்கு முரணான கருத்துக்களை மறுதலித்துச் சமைக்கப்பட்டது ஜின ராமாயணம் என்று வ்யாசமும் பவுமசரிஅ என்ற நூலின் விவரணைகளும் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தையதாகிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாததான பற்பல நிகழ்வுகளையும் விவரணைகளையும் உடையதாகவும் அவற்றையெல்லாம் துலக்கி பகுத்தறிவின் பாற்பட்டு சமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ஜைனராமாயணம்.
லங்காபுரியின் மக்கள் நரமாமிசம் உண்ணும் ராக்ஷசர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அதே போல குரங்கினத்தவர்களாக வானரர்களும் சித்தரிக்கப்படுவதில்லை. இவர்கள் மனிதர்களும் இல்லாது தேவர்களும் இல்லாத வித்யாதரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த ராமாயணத்திலும் கூட விவரிக்கப்படும் சாஹசம் மிகுந்த நிகழ்வுகளின் பாற்பட்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யமான சக்திகளை தம் வசம் உடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். (Courtesy : Dr.Jacobi’s work…….. Chapter 15………Vanaras in reality are a race of Vidyadharas. A class of beings endowed with many supernatural qualities, if not human beings in the correct sense of the term) ஸ்வர்க்கம், நரகம், மறுபிறவி, மோக்ஷம் போன்ற கருத்தாக்கங்கள் இந்த ஜைன ராமாயணத்தில் காணக்கிட்டுகின்றன. பற்பல மொழிகளில் ஆன வைதிக சமய ராமாயணங்களில் விதந்தோதப்படுவதான ஏகபத்னீவ்ரதன் என்ற ராமனுக்கு எதிரான ஒரு கருத்தாக்கமாக ராமனுக்கு 8000 மனைவிகள் இருந்ததாகவும் லக்ஷ்மணனுக்கு 16000 மனைவிகள் இருந்ததாகவும் இவர்களுடையே வம்ச மூத்தவர்களாகிய சகரன் மற்றும் ஹரிஸேனர்களுக்கு தலா 64000 மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
———-
தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய தேசங்களின் ராமாயணங்கள்:
தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் என்று இந்த வ்யாசம் சொல்லுகிறது.
தாய்லாந்து தேசத்திய ராமகதை கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் என்ற கதையிலிருந்து கரந்துரையப்படுவதை ராமானுஜன் வ்யாசம் பகிருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்கள். வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது ஒரு காட்டு. மானுட, ராக்ஷஸ, குரங்கின என்ற படிக்கு ராமகீர்த்தியில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன என்று வ்யாசம் பகிருகிறது. கதைக்களனைப் பார்க்கையில் ராம ஜனனம் துவங்கி, சீதாராம விவாஹம், வனவாஸம், சீதையை ராவணன் அபகரித்து லங்காபுரிக்கு எடுத்துச் செல்லுவது, ராமராவண யுத்தம், ராமபிரான் அயோத்திக்கு திரும்பி அரசாளுவது, உத்தரராமாயண நிகழ்வுகள் என்று தாய்லாந்திய ராமாயணங்களின் நிகழ்வுப் பட்டியல் நீளுகிறது.
வைதிக சமயத்தைச் சார்ந்த ராமாயணங்கள் விஸ்தாரமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லும் நிகழ்வுகளாகிய திவ்ய தம்பதிகளின் பிரிவு அதையொட்டிய சம்பவங்கள் பின்னர் அவர்கள் ஒன்றிணைவது என்ற நிகழ்வுகள் தாய்லாந்திய ராமாயணத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களல்ல. மாறாக தாய்லாந்து ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் அதையடுத்து நிகழும் யுத்தம் போன்றவை மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுவதாக வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள், யுத்தத்தில் கையாளப்படும் யுக்திகள் அதில் கையாளப்பட்ட அதிசயத்தக்க யுத்த தளவாடங்கள் போன்றவை தாய்லாந்திய ராமாயணத்தில் வெகு விஸ்தாரமாகச் சொல்லப்படுவதாக ராமானுஜனுடைய வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள் தாய்லாந்திய ராமாயணத்தில் விஸ்தாராமாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஸ்ரீ சந்தோஷ் தேசாய் அவர்கள் குறிப்பிடுவதை ராமானுஜனின் வ்யாசம் தெரிவிக்கிறது. முற்காலத்திய தாயாலாந்திய சரித்ரம் யுத்தங்களால் வடிக்கப்படும் ஒரு சரித்ரம் என்பது கவனிக்கத் தக்கது. யுத்தங்களுக்கிடையே பிழைத்து வாழ்தல் என்பது அவர்களுடைய அக்கலத்திய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது.
கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ராமரை விட ஹனுமான் என்றும் தாய்லாந்திய ஹனுமான் உறுதியான ப்ரம்மசாரி இல்லையென்றும் பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது. லங்காபுரிவாசிகளின் படுக்கையறைகளுக்குச் சென்று அங்கு துயிலும் தையலார்களைக் கண்ணுறுவதை கம்பநாட்டாழ்வாரோ வால்மீகியோ காட்டும்படிக்கு அல்லாமல் ……… அதார்மிகமாக தாய்லாந்திய ஹனுமான் கருதாதவாறு…….. தாய்லாந்திய ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று வ்யாசம் தெரிவிக்கிறது.
வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது.
அவை என்னென்ன?
1. தாய்லாந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பது ராமனின் கதாபாத்திரம் அல்ல மாறாக ஹனுமனின் கதாபாத்திரம் என்று வ்யாசம் சொல்லுகிறது. தாய்லாந்திய ராமனின் பாத்திரப்படைப்பு வ்யாசத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு வெகுஜன மக்கள் திரளின் தலைவனாக சதாப்தங்களாக தாய்லாந்தினை ஆளும் அரசர்களின் பெயர்களில் ஏன் **ஹனுமன்** என்ற விகுதி காணப்படாது **ராம** என்ற விகுதி காணப்படுகிறது என்று சம்சயம் எழுகிறது.
2. ஒரு புறம் தாய்லாந்திய ராமகீர்த்தி மானுட, ராக்ஷஸ மற்றும் குரங்கின என்ற படிக்கு மூன்று கதாபாத்திரங்கள் தாய்லாந்திய ராமாயணத்தில் காணக்கிட்டுவதைக் கவனமாக வகை தொகை சார்ந்து வ்யாசம் பகிருகையில் ஹனுமனை பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று வ்யாசம் சுட்ட விழைவதை கவனிக்காது போக முடியவில்லை. இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் கற்பிக்கலாம் அல்லது சால்ஜாப்பு சொல்லலாம் தான். பின்னிட்டும் ஒரு குரங்கினத்தவன் ladies man என்று சுட்டப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆயினும் ஒரு முழுமையான சித்திரம் தாய்லாந்திய ராமாயணங்களிலிருந்து காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரப்படுவது முறையாகும்.
3. பெயர்களைக் கையாளுதல் என்ற படிக்கு கம்பராமாயணத்திலிருந்து பெரும்பாலும் கரந்துரையப்பட்டது தாய்லாந்திய ராமாயணம் என்று வ்யாசத்தில் ஒரு புறம் பகிரப்படுகையில்……….. கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை. வ்யாசத்தின் சித்தரிப்பினைச் சார்ந்து தாய்லாந்திய ராமாயணம் பெயர்களைக் கையாள்வதில் கம்பநாட்டாழ்வாரைக் கைக்கொள்வதை ஒரு புறம் அவதானிக்கையிலேயே மறுபுறம் நிகழ்வுப் பட்டியலைப் பார்க்கையில் ஆதிகாவ்யமான மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் அடியொற்றுவது தெளிவாகத் தெரிகிறது. சித்தரிப்பு ஒருவைகயாக இருக்கையில் பகிரப்படும் முடிபுகள் வேறாகக் காணப்படுவது வ்யாசத்தின் சித்தரிப்பு காய்த்தல் உவத்தல் கொண்டதோ என்று சம்சயம் ஒரு புறம் எழுகிறது.
————–
4. கோரக்பூர் கீதாப்ரஸ் என்ற ஸ்தாபனத்தினால் பதிக்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் பதிப்பின் ஏழாவது பதிப்பின் பாற்பட்டு ஒவ்வொரு காண்டமும் அதில் காணப்படும் ஸர்க்கங்களின் (அத்யாயம்) எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-
1. பாலகாண்டம் ………………………77
2. அயோத்யாகாண்டம்…………….119
3.ஆரண்யகாண்டம்…………………75
4.கிஷ்கிந்தாகாண்டம்……………..67
5.ஸுந்தரகாண்டம்………………..68
6.யுத்தகாண்டம்…………………….128
7.உத்தரகாண்டம்……………………111 (பிற்சேர்க்கை என்று 2 அதிகப்படி ஸர்க்கங்கள் தனி)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண யுத்தகாண்டத்து விவரணைகளை முழுதாக வாசிக்கையில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் யுத்த களமும், யுக்திகளும் அதில் உபயோகிக்கப்பட்ட யுத்த தளவாடங்களும் அஸ்த்ர சஸ்த்ரங்களும் வெகு விஸ்தாரமாக ஆதிகவி வால்மீகி முனிவரால் சொல்லப்பட்டிருப்பது துலங்குகிறது. தாய்லாந்திய ராமாயணத்தின் மாறுபாடான கதையம்சமாக வ்யாசம் சுட்டப்படும் கருத்து அப்படி அந்த வாசிப்புக்கேயான ஒரு மாறுபாடான அம்சம் இல்லை என்பது இதன் மூலம் துலங்குகிறது.
இவை மேம்போக்காகத் தோன்றும் சம்சயங்கள் தான். முழுமையான சித்தரிப்பு மற்றும் முழுமையான புரிதல் தாய்லாந்திய ராமாயணத்தை முழுமையாக வாசித்து அறிவதன் மூலம் மட்டிலும் தான் கிட்டும் என்பது திண்ணம்.
தக்ஷிண பாரதத்து நாட்டார் வழக்கியலில் காணப்படும் ராமாயணக் கதைகளில் சில ஆதிகாவ்யத்தை ஒத்தும் சில அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. சில கதைகளில் ஆதிகாவ்யத்துக்கு மாறாக கதாபாத்ரங்கள் தாறுமாறாக சித்தரிக்கப்படுவதும் புலனாகிறது.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply