ஸ்ரீராமர் இராவணனைச் சம்மதி கேட்குதல் அறங்கடந்தவர் செயலிதென்று உலகெலாம் ஆர்ப்ப நிறங்கரிந்திட நிலம்விரல் கிளைத்திட நின்றான் றங்கு கண்ணினன் எல்லழிமுகத்தினன் தலையன் வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆலன்னமெய்யன் நின்றவன்நிலை நோக்கிய நெடுந்தகை இவனைக் கொன்றல் உன்னிலன் வெறுங்கை நின்றான் எனக்கொள்ளா ன்றவிந்தது போலும் உன் தீமை என்றிசையோடு ஒன்றவந்தன வாசகம் இனையன உரைத்தான் சிறையில் வைத்தவள் தன்னை விட்டு உலகினில் தேவர் முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் றையில் வைத்து அவற்கு ஏவல் செய்திருத்தியேல் இன்னும் தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை இன்று போய் போர்க்கு நாளை வா என நல்கினன் நாகிளங் கமுகின் வாளைதாவுறு கோசலை நாடுடைவள்ளல் ( முதற்போர்புரிபடலம் 249,240 , 253 , 255 ] இராவணன் மாலியவானோடு அமர்க்களம் கூறல் வாரணம் பொருதமார்பும் வலியகுன் றெடுத்ததோளும் நாரத முனிவற்கன்று நயம்பட உரைத்தநாவும் தாரணி மவுலிபத்தும் சங்கரன் கொடுத்தவாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையா மீண்டுபோனான் மாதிரம் எவையும் நோக்கான் வளநகர் நோக்கான் வந்த காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ்சேனை நோக்கான் தாதவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்கத்தான் அப் பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப்புக்கான் வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் மணிவயிரத் தோளான் நான் நகு பகைவர் எல்லாம் நகுவர் என்று அதற்குநாணான் வேல் நகு நெடுங்கண் செய்வாய் மெல்லியல் மிதிலைவந்த சானகி நகுவள் என்றே நாணத்தாற் சாம்புகின்றான் ஆங்கவன் தன் மூதாதை ஆகியமூப்பின் யாக்கை வாங்கிய வரிவில்லென்ன மாலிய வானென்றோதும் பூங்கழல் அரக்கன் வந்து பொலங்கழல் இலங்கை வேந்தைத் தாங்கிய அமளிமாட்டு ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான் சங்கம் வந்துற்ற கொற்றத் தாபதர் தம்மோடெம்மோடு அங்கம் வந்துற்றதாக அமரர்வந் துற்றாரன்றே கங்கம் வந்துற்ற செய்யகளத்து நம்குலத்துக் கொவ்வாப் பங்கம் வந்துற்ற தொன்றோபழியும் வந்துற்ற தென்றான் முளையமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வராகக் கிளையமை புவனம்மூன்றும் வந்துடன் கிடைத்தவேனும் வளையமை வரிவில்வாளி மெய்யுற வழங்குமாயின் ளையவன் தனக்கும் ஆற்றாது என்பெருஞ்சேனை நம்ப எறிந்தபோர் அரக்கர் ஆவி எண்ணிலா வெள்ளம் எஞ்சப் பறித்தபோ தென்னை அந்தப் பரிபவம் முதுகில்பற்றப் பொறித்த போது அன்னான் அந்தக் கூனிகூன் போக வுண்டை தெறித்தபோ தொத்ததன்றிச் சினம்உண்மை தெரிந்ததில்லை வரிசிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் தெரிகிலர் அமரரேயும் ஆரவன் செய்கை தேர்வார் பொருசினத் தரக்கர் ஆவிபோக்கிய போகஎன்று கருதவே உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டுமன்றே நல்லியல் கவிஞர் நாவில் பொருள் குறித் தமர்ந்த நாமச் சொல்எனச் செய்யுள் கொண்ட தொடை எனத் தொடையை நீக்கி எல்லையில் சென்று தீரா இசைஎனப் பழுதிலாத பல்லலங் காரப்பண்பே காகுத்தன் பகழிமாதோ வாசவன்மாயன் மற்றை மலருளோன் மழுவாளங்கை ஈசன் என்றி னையதன்மை இனிவரும் இவராலன்றி நாசம் வந்துற்ற போது நல்லதோர் பகையைப் பெற்றேன் பூசல்வண்டுறையும் தாராய் இது இங்குப் புகுந்ததென்றான் ( கும்பகர்ணன் வதைப்படலம் 1 , 3 , 11 , 15 17 , 22 , 31 ] மாலியவான் புத்தியை ராவணன் கேட்காமல் மகோதரன் கலைத்தல் முன்னுரைத்தேனை வாளா முனிந்தனை முனியஉம்பி இன்னுரைப் பொருளும் கேளாய் ஏதுவுண் டெனினும் ஓராய் நின்னுரைக் குரைவேறுண்டோ நெருப்புரைத்தாலும் நீண்ட மின்உரைத்தாலும் ஒவ் வாவிளங்கொளி அலங்கல் வேலோய் ஆயவன் உரைத்தலோடும் அப்புறத்திருந்த ஆன்ற மாயைகள் பலவும்வல்ல மகோதரன் கடிதின்வந்து தீயெழ நோக்கி என் இச் சிறுமை நீ செப்பிற்றென்னா ஓய்வுறு சிந்தையானுக்கு உறாதபேர் உறுதி சொன்னான் திரிபுரம் எரிய ஆங்கோர் தனிச்சரம் துரந்தசெல்வன் ஒருவன் இப்புவனம் மூன்றும் ஓரடிஒடுக்கிக் கொண்டோன் பொருதுனக் குடைந்துபோனார் மானிடர் பொருத போர்க்கு வெருவுதி போலும்மன்ன கயிலையை வெருவல் கண்டாய் தவியை விடுதியாயின் திறலது தீருமன்றே ஆவியை விடுதலன்றி அல்லதொன்றாவதுண்டோ தாவரும் பெருமையம்மா நீயினித்தாழ்த்த தென்னே காவல விடுதி இன்றிக் கையறு கவலைநொய்தின் முன்உனக்கு இறைவராய மூவரும் தோற்றார்தேவர் பின்உனக்கு ஏவல் செய்ய உலகொரு மூன்றும் பெற்றாய் புல் நுனைப் பனிநீர் அன்ன மனிசரைப் பொருளென்றுன்னி என்உனக்கு ளையகும்பகருணனை இகழ்ந்த தெந்தாய் ( கும்பகர்ணன் வதைப்படலம் 32 , 34 , 36 , 38 , 40 ] கிங்கரர் கும்பகருணனை எழுப்பவும் அவன்தூங்குதல் நன் றிது கருமம்என்னா நம்பியை நணுகஓடிச் சென்றிவன் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் தென்றிசைக் கிழவன் தூதர் தேடினர் செல்வர் என்னக் குன்றினும் உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில்புக்கார் ஓதநீர்விரிந்த தென்ன உறங்குவான் நாசிக்காற்றால் கோதிலா மலைகள் கூடி வருவது போவதாக ஈதெலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் போதுவான் அருகு செல்லப் பயந்தனர் பொறிகொள் கண்ணார் என்றலுமே அடியிறைஞ்சி ஈறைஞ்தூற்றி ராக்கதர்கள் வன்றொழிலாற் றுயில்கின்ற மன்னவன் தன் மாடணுகி நின்றிரண்டு கதுப்புமுற நெடுமுசலம் கொண்டடிப்பப் பொன்றினவன் எழுந்தாற்போல் புடைபெயர்ந்தங் கெழுந்திருந்தான் ( கும்பகர்ணன் வதைப்படலம் 43 , 4 கும்பகர்ணன் ராவணனுக்குப் புத்திகூறுதல் உறக்கம் அவ்வழி நீங்கி உணத்தகும் வறைக் கமைந்தன ஊனொடு வாக்கிய நறைக் குடங்கள் பெறான் கடைநக்குவான் இறக்கநீன்ற முகத்தினை எய்துவான் ஆறு நூறு சகடத்து அடிசிலும் நூறு நூறு குடங்களும் நுங்கினான் ஏறுகின்ற பசியை எழுப்பினான் சீறுகின்ற முகத்திரு செங்கணான் எருமை ஏற்றை ஓர்இரு நூற்றையும் அருமை இன்றியே தின்றிறை ஆறினான் பெருமை ஏற்றது கோடும் என்றேபிறங்கு உருமை ஏற்றைப் பிசைந்தெரி ஊதுவான் கூயினன் நும்முன் என்று அவர் கூறலும் போயினன் நகர்பொம் மென்றிரைத்தெழ வாயிலில் வல்லை நுழைந்து மதிதொடும் கோயில் எய்தினன் குன்றன கொள்கையான் வன் துணைப் பெரும் தம்பி வணங்கலும் தன் திரண்டதோள் ஆரத் தழுவினான் நின்ற குன்றொன்று நீள்நெடுங்காலொடும் சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான் வானரப் பெரும் தானையர் மானிடர் கோநகர்ப் புறம் சுற்றினர் கொற்றமும் ஏனைஉற்றனர் நீயவர் இன்னுயிர் போனகத் தொழில் முற்றுதி போய் என்றான் ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவர்ந்த தில்லையோ வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதே புகுந்ததோ பொன்றும் காலமே கிட்டிய தோசெரு , கிளர்பொன் சீதையை சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ இதுவிதியின் வன்மையே கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும் சொல்லலாம் பெருவலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது சீதை மேனியைப் புல்லலாம் என்பது போலுமால் ஐயா புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு குலத்தியல் பழிந்தது கொற்றம் முற்றுமோ வலத்தியல் அழிவதற் கேதுமையறு நிலத்தியல் நீரியல் என்னும் நீரதால் காலினிற் கருங்கடல் கடந்து காற்றது போல்வன குரங்குள , சீதை போகிலள் வாலியை உரங்கிழித் தேகவல்லன கோலுள யாமுளேம். குறைஉண்டாகுமோ என்று கொண்டினைய இயம்பி யானுனக்கு ஒன்றுளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் நன்றது நாயக நயக்கிலாய் எனின் பொன்றினை யாகவேகோடி போக்கிலாய் தையலை விட்டவன் சரணம் தாழ்ந்து நின் ஐயறு தம்பியோ டளவளாவுதல் உய்திறம் அன்றெனின் உளது வேறும் ஓர் செய்திறம் அன்னது தெரியக் கேட்டியால் பந்தியில் பந்தியில் படையை விட்ட வை சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் மந்திரம் அன்று நம் வலியெலாம் உடன் உந்துதல் கருமம் என்றுணரக் கூறினான் ( கும்பகர்ணன் வதைப்படலம் 54 , 55 , 56 , 65 , 67 , 73 77 , 81 84 ] விபீஷணர் ஸ்ரீராமருக்குக் கும்பகர்ணன் வரலாறு கூறுதல் மானிடர் இருவரை வணங்கி மற்றுமக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டுய்தொழில் தானுடை உம்பிக்கும் உனக்குமே கடன் யானது புரிகிறேன் எழுகபோக என்றான் அன்னது கண்டவன் தம்பி யானவன் பொன்னடி வணங்கி நீ பொறுத்தியால் என வன்னெடும் சூலத்தை வலத்து வாங்கினான் இன்னம் ஒன்றுரையுளது என்னக் கூறினான் என்னை வென் றுளர் எனின் இலங்கை காவல உன்னைவென் றுலருதல் உண்மை யாதலால் பின்னைநின் றெண்ணுதல் பிழையப் பெய்வளை தன்னை நன் களிப்பது தவத்தின் பாலதே இற்றைநாள் வரைமுதல் யான்முன் செய்.தன குற்றமும் உளவெனிற் பொறுத்தி கொற்றவ ! அற்றதால் முகத்தினி விழித்தல் ஆரிய பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான் அரக்கன் அவ் உருவொழித் தரியின் சேனையை வெருக்கொளத் தோற்றுவான் கொண்ட வேடமே தெரிக்கிலேன் இவ்வுருத் தெரியும் வண்ணம் நீ பொருக்கென வீடண புகறியால் என்றான் ரியன் அனையகூற அடியிணை இறைஞ்சிஐய பேரியல் லங்கை வேந்தன்பின்னவள் எனக்கு முன்னோன் காரியல் காலன் அன்னகழல் கும்ப கருணன் என்னும் கூரிய சூலத்தான் என் றவன் நிலை கூறலுற்றான் தவனுணங் கியரும்வேதத் தலைவரும் உணரும் தன்மைச் சிவனுணர்ந் தலரின் மேலைத் திசைமுகன் உணரும்தேவன் அவனுணர்ந் தெழுந்த காலத்து அரக்கர்கள் படுவதெல்லாம் வனுணர்ந் தெழுந்த காலத்திமையவர் படுவர் எந்தாய் ஆழி யாயிவன் ஆகுவான் ஏழை வாழ்வுடை எம்முனோன் தாழ்விலா ஒரு தம்பியோன் ஊழிநாளும் உறங்குவான் கழிந்த தீயொடு காலையும் பிழிந்து சாறுகொள் பெற்றியான் அழிந்து மீனுக ஆழிநீர் இழிந்து காலினின் ஏற்றுவான் திறங்கொள் சாரி திரிந்த நாள் கறங்க லாது கணக்கிலான் இறங்கு தாரவன் இன்றுகாறு உறங்க லால்உலகு உய்ந்ததால் சூலம் உண்டது சூருளோர் காலம் உண்டது கைக்கொள்வான் ஆலம் உண்டவன் ஆழிவாய் ஞாலம் உண்டவ ! நல்கினான் தருவ மன்றிது தானிதால் வரும் நமக்குயிர் மாய் வெனா உருமின் வெய்யவ னுக்குரை இருமை மேலும் இயம்பினான் நன்றி தன்று நமக்கெனா ஒன்று நீதி உணர்த்தினான் இன்று காலன் முன் எய்தினான் என்று சொல்லி இறைஞ்சினான் ( கும்பகர்னன் வதைப்படலம் 87 , 89 , 91 , 93 , 108 - 111 , 114 , 116 , 117 , 119 , 121 ] கும்பகர்னன் தன்னையழைத்த விபீஷணனுக்குப் புத்திகூறல் ஏகுதற் குரியார்யாரே என்றலும் இலங்கைவேந்தன் ஆகின்மற் றடியேன் சென்று அறிவினால் அவனைஉள்ளம் சேகறத் தெருட்டி ஈண்டுச் சேருமேல் சேர்ப்பென் என்றான் மேகம் ஒப்பானும் நன்று போகென்று விடையும் ஈந்தான் தந்திரக் கடலை நீந்தித் தன்பெரும் படையைச் சார்ந்தான் வெந்திற லவனுக்கைய ! வீடணன் விரைவில்உன்பால் வந்தனன் என்னச்சொன்னார் வரம்பிலா உவகைகூர்ந்து சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்த்தான் முந்திவந் திறைஞ்சினானை மோந்துயிர் மூழ்கப்புல்லி உய்ந்தனை ஒருவைபோனாய் என மனம் உவக் கின்றேன் தன் சிந்தனை முழுதும் இந்தத் தெளிவிலார் போலமீள வந்ததென் தனியே என்றான் மழையின் நீர் வழங்குகண்ணான் அவயம்நீ பெற்றவாறும் அமரரும் பெறுதலாற்றா உவயலோ கத்தினுள்ள சிறப்பும் கேட்டுவந்தேன் உள்ளம் கவிஞரின் அறிவுமிக்காய் காலன்வாய்க் களிக்கின்றேம்பால் நவையுற வந்ததென்நீ அமுதுண்பாய் நஞ்சுண்பாயோ குலத்தியல் பழிந்ததேனும் குமரமற்றுன்னைக் கொண்டே புலத்தியன் மரபுமாயாப் புண்ணியம் பொருந்திற் றென்ன வலத்தியல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்னவாயை உலத்தினை திரியவந்தாய் உளைக்கின்ற துள்ளம் அந்தோ ஐயநீ அயோத்தி வேந்தற் கடைக்கலம் ஆகி அங்கே உய்கிலை என்னின் மற்றிவ் அறக்கராய் உள்ளோம் எல்லாம் எய்கணை மாரியாலே இறந்துபாழ் முழுதும்பட்டால் கையினால் எள் நீர் நல்கிக் கடன்கழிப்பாரைக் காட்டாய் ( கும்பகருணன் வதைப்படலம் 123 127 , 132 ] கும்பகர்னனுக்கு விபீஷணன் நீதிகூறல் இருளுறு சிந்தையேற்கும் இன்னருள் சுரந்தவீரன் அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி மருளுறு பிறவி நோய்க்கு மருந்துமாம் மாறிச்செல்லும் உருளுறு சகடவாழ்க்கை ஓழித்து வீடளிக்கும் அன்றே எனக்கவன் தந்த செல்வத் திலங்கையும் அரசும் எல்லாம் நினக்குயான் தருவேன் தந்துன் ஏவலின் நெடிது நிற்பேன் உனக்கிதின் உறுதியில்லை உத்தமஉன்பின் வந்தேன் மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்குவாழி தீயவை செய்வராகின் சிறந்தவர் பிறந்தஉற்றார் தாயவை தந்தைமாரென்று உணர்வரோ தருமம்பார்ப்பார் நீயவை அறிதியன்றோ நினக்குயான் உரைப்ப தென்னோ தூயவை துணிந்தபோது பழிவந்து தொடர்வதுண்டோ தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கிலாதோர் வீவினைஉறுதல் ஐயமேன்மையோ கீழ்மைதானோ ஆய்வினை உடையை அன்றே அறத்தினை நோக்கியீன்ற தாய்வினை செய்ய அன்றோகொன்றனன் தவத்தின் மிக்கான் கண்ணுதல் , தீமை செய்ய கமலத்து முளைத்ததாதை அண்ணல் தன் தலையின் ஒன்றை அறுக்க அன்ற மைந்தானன்றே புண்ணுறு புலவுவேலோய் பழியொடும் பொருந்திப்பின்னை எண்ணுறு நரகின்வீழ்வது அறிஞறும் இயற்றுவாரோ உடலிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றிச் சுடலுறச் சுட்டுவேறோர் மருந்தினால் துயரம் தீர்வர் கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமமன்றால் மடலுடை அலங்கல் மார்பமதியுடை யவர்க்கு மன்னோ வேதநாயகனே உன்னைக் கருணையால் வேண்டிவிட்டான் காதலால் என்மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே ஆதலால் அவனைக்காண அறத்தொடும் திறம்பாதைய போதுவாய் நீயே என்னப் பொன்னடி இரண்டும் பூண்டான் ( கும்பகருணன் வதைப்கடலம் 134 , 135 , 137 , 139-141 . 14 விபீஷணன் மீண்டபின் இருபடைகளும் போர்களத்தல் நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப்பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு உபிர்கொடா தங்குப்போகேன் தார்க்கோல மேனிமைந்த என் துயர் தவர்த்தியாகின் கார்க்கோல மேனியானைக் கூடுதிகடிதின் ஏகி எனஇனிதுசைக்கும் வேலைஇராக்கதர் சேனை என்னும் கனைகடல் கவியின் தானைக்கடலினை வளைந்து கட்டி முனை தொழில் முயன்றதாக மூவகை உலகும் முற்றத் தனிநெடுந்தூளி ஆர்க்க ஆர்த்தில பரவை தள்ளி ஓடினபுரவி வேழம் ஓடினஉருளைத் திண்தேர் ஓடின மலைகள் ஓட ஓடின உதிரப்பேர் ஆறு ஆடினகவந்த பந்தம் ஆடின அலகைமேன்மேல் ஆடினபதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா குன்றின்மீ தெறியும் பாரில் புடைக்கும்வெங் குரங்கைப்பற்றி ஒன்றுகொண் டொன்றை எற்றும்உதைக்கும் விட்டுழக்கும் வாரித் தின்றுதின்றுமிழும் பற்றிச்சிரங்களைத் திருகும் தேய்கும் மென்று மென்றுமிழும் விண்ணில் வீசும்மேற் பிசைந்துபூசும் மூலமே மண்ணில்மூழ்கிக் கிடந்ததோர் பொருப்பை முற்றும் காலமேல் எழுந்தகால் போல் கையினாற் கடிதின் வாங்கி நீலன்மேல் நிமிர்ந்த தாங்கோர் நெருப்பெனத் திரித்து விட்டான் சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்றநின்றான் ஆண்டது நோக்கிநின்ற அங்கதன் ஆண்டுச்சால நீண்டதோர் நெடுந்தின் குன்றம் நிலமுதுகாற்ற வாங்கி மாண்ட.னன் அரக்கன் தம்பி என்றுலகேழும் வாழ்த்தத் தூண்டினன் அதனை அன்னான் ஒருதனித்தோளில் ஏற்றான் நின்றவன் தன்னையன்னான் நெருப்பெழ நிமிரநோக்கிப் பொன்ற வந்தடைந்ததானைப் புரவலன் ஒருவன் தானோ அன்றவன் மகனோ எம்மூர் அனல்மடுத் தரக்கர்தம்மை வென்றவன் தானோயாரோ விளம்புதி விரைவினென்றான் நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி மும்முனை நெடுவேலண்ணல் முளரியம் சரணம்தாழ்ந்த வெம்முனை வீரன்மைந்தன் நின்னைஎன் வாலின் வீக்கித் தெம்முனை இராமன்பாதம் வணங்கிடச் செல்வென் என்றா தண்டிறத் தடக்கை ஓச்சித்தழுவியத் தறுகணானைக் கொண்டிறப் புறுவென் என்னா தலையுறக் குனிக்குங்காலைப் புண்திறப் புறவலாளன் கையினால் புகைந்துகுத்த மண்திறப் பெய்தவீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் இலக்குவன் கடிதேவின இறைபெறா திரைப்பச் சிலைக்க டுங்கணை நெடுங்கணம் சிறையுடன் செல்வ உலைக் கொடுங்கனல் வெதும்பிட வாயெரிந்தோடி குலக் கயங்களின் குளித்தன குடித்தன குருதி வேனிலான் அன்ன இலக்குவன் கருங்கணை விலக்க மானவெள் ளெயிற்றரக்கர்தம் படைக்கல வாரி போன போனவன் திசை தொறும் பொறிக்குலம் பொடிப்ப மீனெலாம் உடன்விசும்பினின்று உதிர்ந்தென வீழ்ந்த செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த வரிவில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் திரிபுரம் செற்றதேவனும் இவனுமே செருவின் ஒருவிலாளரென் றாயிரம் காலெடுத் துரைத்தான் ராமன் தம்பி நீ ராவணன் தம்பி நான் இருவேம் பொராநின் றேமிது காணியவந்தனர் புலவோர் பராவு தொல்செருமுறை வலிக்குரியன பகர்ந்து விராவு நல்லமர் விளைக்குதும் யாமெனவிளம்பா ஆறிரண்டு வெங்கடுங்கணை அனுமன்மேல் ஏற்றி ஏறுவெஞ்சரம் இரண்டு இளங்குமரன் மேல் ஏற்றி நூறும் ஐம்பதும் ஒருதொடை தொடுத்து ஒருநொடியில் கூறுதிக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றித் துறைத் தலந்தொறும் தலந்தொறும் நின்று தேர்சுமக்கும் பொறைக் கமைந்த வெங்கரி பரியாளி மாப்பூதம் திறத்திறம் படத்துணித்து அவன் தேரையும் சிதைதான் ஈண்டுவெஞ்செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும் நீண்டவெள் ளெயிற்றரக்கன் மற்றொரு திசைநின்றான் பூண்டவெஞ்சிலை இரவிகால் முனையொடு பொருதன் காண் தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் செல்வெனோ நெடுங்கிரி இன்னும் தேர்ந்தெனா எல்லவன் கான்முளை உணரும் ஏல்வவையின் கொல் என எறிந்தனன் குறைவில் நோன்பினோர் சொல் எனப் பிழைப்பிலாச் சூலம் சோர்விலான் பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர் விட்டுலம் பிடநெடு விசும்பிற் சேறலும் எட்டினன் அதுபிடித்து இறுத்து நீங்கினான் ஓட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர் நாயகர் எமக்கினி யாவர் நாட்டினில் காய்கதிர்ப் புதல்வனனப் பிணித்த கையினான் போயினன் அரக்கன் என்றிசை பூசலார் உடைப்பெருந் துணைவனை உயிரின் கொண்டு போய் கிடைப்பரும் கொடிநகர் அடையின் கேடெனத் தொடைப் பெரும்பகழியின் மாரிதூர்த்திறை அடைப்ப னென்று அடைத்தனன் விசும்பின் ஆறெலாம் ஏதிவெந் திறலினோய் இமைப்பி லார் எதிர் பேதுறு குரங்கையான் பிணித்த கைப்பிணி கோதைவெஞ் சிலையினால் கோடிவீடெனின் சீதையும் பெயர்ந்தனள் சிறைநின்றாம் என்றான் மீட்டவன் சரங்களாம் விலங்கல் ஆரையை மூட்டற நீக்குவான் முயலும் வேளையில் வாட்டலை விடர்த் தலை வயங்கு வாளிகள் சேட்டகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்திழி புன்றலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும் இன் துயில் உணர்ந்தென உணர்ச்சி எய்தினான் வன்றிறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் கண்டனன் நாயகன் தன்னைக் கண்ணுறாத் தண்டலில் மானமும்நாணும் தாங்கினான் விண்டவன் நாசியும் செவியும் வேரொடும் கொண்டனன் எழுந்துபோய்த் தமரைக் கூடினான் ( கும்பகருணன் வதைப்படலம் 150 166 , 168 , 173 , 179 , 182 , 186 , 187 , 191 , 205 , 216 , 223 , 229 , 236 , 237 , 249 , 254 , 255 , 269 , 271 , 280 , 282 , 284,286 ] ஸ்ரீராமருக்கும் கும்பகர்னனுக்கும் யுத்தம் எண்ணுடைத் தன்மையன் இனைய எண்ணிலாப் பெண்ணுடைத் தன்மைய தாய பீடையால் புண்ணுடைச் செவியொடு மூக்கும் போனவால் கண்ணுடைச் சுழிகளும் குருதிகால்வன என் முகம் காண்பதன் முன்னம் யானவன் தன் முகம் காண்பது சரதம் தான் என பொன்முகம் காண்பதோர் தோலும் போரிடை வன் முகம் காண்பதோர் வாளும் வாங்கினான் ஏறுபட்டதும் இடைஎழுந் துளோரெல்லாம் கூறுபட்டதும் கொழுங்குருதி கோத்திழிந்து ஆறுபட்டதும் நிலஅனந்தன் உச்சியும் சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் ஆறினோ ஏழுகோல் அசனி ஏறென ஈறிலா விசையன இராமன் எய்தனன் பாறுகு சிறையென விசும்பில் பாறிட நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் சிறுத்ததோர் முறுவலும் தெரியச் செங்கணான் மறித்தொரு வடிக்கணை தொடுக்க மற்றவன் ஒறுத்தொளிர் வாளெனும் உரவுநாகத்தை அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே அற்றது தடக்கைவாள் அற்ற தில்லென மற்றொரு வைரவாள் கடிதின் வாங்கினான் முற்றினென் முற்றினென் என்று முன்புவந்து உற்றனன் ஊழித்தீ அவிய ஊதுவான் அந்நெடு வாளையும் துணித்த ஆண்டகை பொன்னெடும் கேடகம் புரட்டிப் போர்த்ததோர் நன்னெடுங் கவசத்து நாமவெங்கணை மின்னோடு நிகர்ப்பன பலவும் வீசினான் அலக்க ணுற்றது தீவினை , நல்வினை ஆர்த்தெழுந்தது வேர்த்துக் கலக்க முற்றனர் இராக்கதர் காலவெங் கருங்கடல் திரை போலும் வலக்கை அற்றது வாளொடும் கோளுடை வானமாமதி போலும் இலக்கை யற்றது அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்றெழுந் தோடி மற்றும் வீரர்கள் உளர் எனற் கெளிதரோ மறத்தொழில் இவன்மாடு பெற்று நீங்கினர் ஆமெனினல்லது பேரெழில் தோளோடும் அற்று வீழ்ந்தது அறாத வெங்கையினால் எடுத்தவன் ஆர்த்தோடி எற்ற வீழ்ந்தன எயிறிளித்து ஓடின வானரக்குலம் எல்லாம் பந்திடந்தியின் பகற்குலம் மீன்குலம் பாகுபாடுறப் பாகத்து இந்து வெள்ளெயிறு இமைத்திடக் குருதியாறு ஒழுக்கல் கொண்டெழ செக்கர் அந்தி வந்தென அகல்நெடு வாய்விரித்து அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் நெடுநிலம் குழிபடக் குரைகடல் கோத்தேற கையிரண்டொடு கால்களும் துணிந்தன கருவரை பொருவும்தன் மெய்யிரண்டு நூறாயிரம் பகழியால் வெரிநுறத் தொளைபோன செய்ய கண்பொழி தீச்சிகை இருமடி சிந்தின தெழிப்போடும் பெய்யும் வானிடை இடியினும் பெருத்தது வளர்ந்த பெருஞ்சீற்றம் ( கும்பகருணன் வதைப்படலம் 292 , 294 , 299 , 302 , 304 - 306 , 333 , 334 . 342 , 344 ) கும்பகர்னன் ஸ்ரீராமனரத் துதித்து வரங்கொள்ளுதல் ஐயன் விற்றொழிற் காயிரம் ராவணர் அமைவிலர் அந்தோயான் கையும் கால்களும் இழந்தனென் வேறினி உதவலாம் துணைகாணேன் மையல் நோய் கொடு முடிந்தவாதான் என்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு உய்யுமா றரிதென்றும் தன்உள்ளத்தின் உணர்ந்தொரு துயருற்றான் சிந்துரச் செம்பசுங்குருதி திசைகள் தொறும் திசை ஆறா எந்திரத்தேர் கரிபரி ஆள் ஈர்த்தோடப் பார்த்திருந்த சுந்தரப்பொன் கிரியாண்மைக் களிறணையான் கண்ணின் சுந்தரப்பொற் றோளானை முகம் நோக்கி இவை சொன்னான் புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க மைக்கடங்கார் மதயானை வாள் வேந்தன் வழிவந்தீர் க்கடன்கள் உடையீர்நீர் எம்வினைதீர்த் தும்முடைய கைக்கடைந்தான் உயிர்காக்கக் கடவீர் எங்களைக்கட்டால் நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால் சாதியால் வந்தசிறு நெறியான் என் தம்பி ஆதியாய் உனைபடைந்தான் அரசருருக் கொண்டமைந்த வேதியா இன்னமுனக் கடைக்கலம் யான் வேண்டினேன் தம்பியென நினைந்திரங்கித் தவிரான் அத் தகவில்லான் நம்பியிவன் தனைக்காணின் கொல்லும் இறைநல்கானால் உம்பியைத்தா உன்னைத்தான் அனுமனைத்தான் ஒருபொழுதும் எம்பிபிரியானாக அருளுதி யான் வேண்டினேன் மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும் நோக்குவார் நோக்காமை நுன்கணையால் என்கழுத்னத நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய் இதுநின்னை வேண்டுகின்ற பொருளென்றான் ( கும்பகருணன் வதைப்படலம் 347 - 350 , 352. 353 ) ஸ்ரீராமர் கும்பகர்னன் தலையைக்கடலில் விழுத்தல் பரங்கொண்டான் இனிமறுத்தல் வழக்கன்றென் றொருவாளி உரங்கொண்ட தடஞ்சிலையின் உயர் நெடுநாண் உட்கொளுவா சிரங்கொண்டான் கொண்டதனை திண்காற்றின் கடும்படையால் அரங்கொண்ட கருங்கடலின் அழுவத்துள் அழுத்தினான் ( கும்பகருணன் வதைப்படலம் 354 ] ஸ்ரீதேவியின் பக்கம் வந்து ராவணன் கெஞ்சுதல் உணர்த்துவென் இன்றே நன்றோர் உபாயத்தின் உறுதிமாயை புணர்த்து வென் சீதைதானே புணர்வதோர் வினையம் போற்றிக் கணத்துவன் சனகன் தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் மணத்தொழில் புரியுமன்றே மருத்தனை உருவம் மாற்றி மின்னொளிர் மகுட கோடி இளவெயில் விரித்து வீச துன்னிருள் இருந்துதோற்பச் சுடர்மணித் தோளில்தோன்றும் பொன்னரிமாலை நீள்வரையின்வீழ் அருவி பொற்ப நன்னெடும் களிமால்யானை நாணுற நடந்து வந்தான் விளக்கொரு விளக்கந்தாங்கி மின்னணி அரவின் சுற்றி ளைப்புறும் மருங்குல் நோவ முலைசுமந்தியங்கும் என்ன முளைப்பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும்பின்னும் வளைத்தனர் வந்து சூழ வந்தி கர்வாழ்த்த வந்தான் என்றுதான் அடியேனுக்கு இரங்குவது இந்து என்பான் என்று கறுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவதென்பால் என்றுதான் அணங்க வாளிக்கிலக்கலா திருக்கலாவது என்றுதான் உற்றதெல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான் வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட நஞ்சுதோய் அமுதம் உண்பான் நச்சி -னன் நாளும் தேய்ந்த நெஞ்சுநேரான தும்மைநினைப்பு விட்டாவி நீக்க அஞ்சினேன் அடியேன் நும் அடைக்கலம் அமுதின்வந்தீர் தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் வயிரத்தோளை மெலிவித்தீர் வேனில்வேளை ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் இன்னம் என்னென் செய்வித்துத் தீர்திர் அம்மா ஈசனே முதலாம் மற்ற மானிடர் இறுதியாகக் கூசமூன்றுலகும் காக்கும் கொற்றத்தேன் வீரக்கோட்டி பேசுவார் ஒருவற்காவி தோற்றிலேன் பெண்பால்வைத்த ஆசைநோய் கொன்ற தென்றால் ஆண்மைதான் மாசுணாதோ நோயினை நுகரவேயும் நுணங்கி நின்றுணங்கும் ஆவி நாயுயிர் ஆகும் அன்றே நாள்பல கழிந்தகாலை பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்துப் பகுத்தபத்தி ஆயிரம் அல்லபோன ஐஇரண்டென்பர் பொய்யே ( மாயாசனகப்படலம் 3 , 5 , 6 , 9-11 , 13 , 14 ) சீதாதேவி இராவணனை இடித்தல் வல்லியம் மருங்கு கண்டமான் என மறுக்கமுற்று மெல்லியள் யாக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னாப் புல்லிய கிடந்த ஒன்றை நோக்கினள் புகல்வதானாள் பழியிது பாவம் என்று பார்க்கிலை பகரத்தக்க மொழியிவை அல்லதென்ப துணர்கிலை முறைமை நோக்காய் கிழிகிலை நெஞ்சம் வஞ்சக் கிளையொடும் இன்று காறும் அழிகிலை என்ற போதென் கற்பென்னாம் அறந்தான் என்னாம் வாசவன் மலரின் மேலான் மருவலான் மைந்தன் மற்றைக் கேசவன் சிவனென் றிந்தத்தன்மை யோர்தன்மை கேளாய் பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போதென் ஆசையின் கனியைக் கண்ணிற் கண்டிலை போலும் அஞ்சி ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாதுன்முன் நாணிலா திருந்தேனல்லேன் நவையறு குணங்கள் என்னும் பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலான் இருந்தேன் கண்டாய் எனக்குயிர் பிறிதும் ஒன்றுண்டு என்றிரேல் இரக்கம் அல்லால் தனக்குயிர் வேறின்றாகித் தாமரைக் கண்ணதாகிக் கனக்கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் மனக்கினிதாகி நிற்கும் அஃதன்றி வரம்பிலா தாய் [ மாயா சனகப்படலம் 18 , 19 , 21 , 22 , 24 ] மாயா சனகனைச் சீதை கண்டு தகப்பனென்று புலம்பல் ஆபதோர் காலத் தாங்கண் மருத்தனைச் சனகனாக்கி வாய்திறந் தரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து காயெரி அனையாள் முன்னர்க் காட்டினன் வணங்கக் கண்டாள் தாய் எரி வீழக்கண்ட பார்ப்பெனத் தரிக்கிலாதாள் எந்தையே எந்தையே என் பொருட்டினால் உனக்கும் இக்கோள் வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவா றிதுவோ மண்ணோர் தந்தையே தாயே செய்த தருமமோ தவமே என்னும் வெந்துயிர் வீங்கித் தீவீழ் விறகென வெந்து வீழ்வாள் வன்சிறைப் பறவை ஊரும் வானவன் வரம்பில் மாயப் புன்சிறைப் பொறையைத் தீர்ப்பான் ஊனெனப் புலவர் நின்றார் என்சிறை நீக்குவாரைக் காண்கிலேன் என்னில் வந்த உன்சிறை விடுக்கவல்லார் யாருளர் உலகத்துள்ளார் கொல்லெனக் கணவற் காங்கோர் கொடும்பகை கொடுத்தேன் எந்தை கல்லெனத் திரண்டதோளைப் பாசத்தாற் கட்டக் கண்டேன் இல்லெனச் சிறந்து நின்ற ரண்டுக்கும் இன்னல் ன்னல் சூழ்ந்தேன் அல்லெனோ எளியெனோயான் அளியத்தேன் இறக்கலாதேன் மேருவின் உம்பர்ச் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும் நீருடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்றன்றால் போரிடைக் கொண்டாரேனும் வஞ்சனைப் புணர்த்தாரேனும் ஆருமக் கறையற்பாலார் அனுமனும் உளனோ நும்பால் ( மாயா சனகப்படலம் 31 , 34 , 38 , 45 ] கும்பகர்னன் மரணத்தைக் கேட்டு ராவணன் புலம்பல் பூவின்மேல் இருந்தத் தெய்வத்தையலும் பொதுமை உற்றாள் பாவியான் பயந்த நங்கை நின்பொருட் டாகப்பட்டேன் ஆவிபோய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசனாவான் தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய் என்னைஎன் குலத்தினோடும் இன்னுயிர் தாங்கி ஈண்டு நன்னெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கிநாளும் உன்னைவெஞ் சிறையின் நீக்கி இன்பதுள் உய்ப்பாய் என்னா பொன்னடி மருங்கு வீழ்ந்தான் உயிருகப் பொருமுகின்றான் அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது இல்லையேல் இறந்து தீர்தி இதுவலால் இயம்பலாகாச் சொல்லையே உரைத்தாய் என்றும் பழிகொண்டாய் என்னச் சொன்னாள் புறந்தரு சேனை முந்நீர் அருஞ்சிறை போக்கிப் போதப் பறந்தனர் அனைய தூதர் செவிமருங் கெய்திப் பைய திறந்திற மாகநின்ற கவிப்பெருங் கடலைச் சிந்தி இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன ஒண்பொன் தாரொடும் புனைந்த மௌலீ தரையொடும் பொருந்தத் தள்ளிப் பாரொடும் பொருந்திநின் மராமரம் பணைகளோடும் வேரொடும் பறிந்து மண்மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் தம்பியோ ! வானவர்தம் தாமரையின் காடுழக்கும் தும்பியோ ! நான் முகத்தோன் தொல்மரபின் தோன் நம்பியோ ! இந்திரனை நாமப்பொறி துடைத்த எம்பியோ நான்உன்னை இவ்வுரையும் கேட்டேனோ கல்லன்றோ நீராடும் காலத்துன் கால்தேய்க்கும் மல்லொன்று தோளாய் வட்டமேரு மானுடவன் வில்லொன்று நின்னை விளித்துளது என்னும் சொல்லன்றோ என்னைச் சுடுகின்றது தோன்றால் நோக்கறவும் எம்பியர்கள் மாளவும் இந்நொய் திலங்கை போக்கறவும் மாதுலனார் பொன்றவும் என்பிறந்தாள் மூக்கறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைகிடந்த ஏக்கறவால் இன்னம் இரேனோ உனையிழந்தும் ஏழைமகளிர் அடிவருட ஈர்ந் தென்றல் வாழும் மணியரங்கில் பூம்பள்ளி வைகுவாய் சூழும் அலகை துணங்கை பறை துவைப்பப் பூழி அணைமேல் துயின்ற னையோ போர்க்களத்தே ( மாயா சனகப்படலம் 62 , 63 , 69 , 75 , 76 , 78 , 81 , 83 , 85 ] அதிகாயன் வரலாறு விபீஷணன் கூற ஸ்ரீராமர் தப்பியைப் புகழ்தல் நதிகாய் நெடுமானமும் நாணும் உறா மதிகாய் குடை மன்னனை வைதுரையா விதிகாயினும் வீரம் வெலற்கரியான் அதிகாயன் எனும் பெய ரான் அறைவான் கிட்டிப் பொருதக் கிளைசே னையெலாம் மட்டித்துயர் வானரர் வன் தலையை வெட்டித் தரையிட்டிரு வில்லினரை கட்டித் தருவென் இது காணுதியால் எல்லாம் உடன் எய்திய பின் இவனே வில்லானொடு போர் செய வேண்டுமெனா நல்லாறுடை வீடணன் நாரணன்முன் சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால் மதுகைடவர் என்பவர் வானவர் தம் பதிகைகொடு கட்டவர் பண்டொருநாள் அதிகைதவர் ஆழி அனந்தனையும் விதிகைம்மிக முட்டினர் வெம்மையினார் விதியாலிவ் வுலகந்தனில் மெய்வலியால் மதுவானவன் என்முன் மடிந்தனனால் கதிர்தான் நிகர் கைடவன் இக்கதிர்வேல் அதிகாயன் இதுவாக அறைந்தனெனால் வானென்பது என் வையகம் என்பது என்மால் தானென்பது என்வேறு தனிச்சிலை யோர் யானென்பது என் ஈசன் என் வானவர்தம் கோனென்பது என்எம்பி கொதித்திடுமேல் ஏகாய் உடன் நீயும் எதிர்ந்து ளனாம் மாகாயன் நெடுந்தலை வாளியொடும் ஆகாயம் அளந்து விழுந்த தனைக் காகாதிகள் நுங்குதல் காணுதியால் [ அதிகாயன் வதைப்படலம் 7 , 12,54 , 65,74,77,80 ] இருபடைகளும் கைகலக்க ஆனைப்படையை அனுமார் அடித்தல் அத்துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சலென்று எத்துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் கைத்துணை வில்லிதனக் காலன் வாழ்வினை மொய்த்தெழு நாணொலி முழங்கத் தாக்கினால் அப்படை அனைத்தையும் அறுத்து வீழ்த்தவர் துப்புடைத் தடக்கைகள் துணித்துச் சுற்றிய முப்புடை மதமலைக் குலத்தை முட்டினான் எப்புடை மருங்கினும் எரியும் வாளியான் குன்றன மதகரி கொம்பொடு கரம் அற வன் தலை துமிதர மஞ்சென மறிவன ஒன்றல ஒருபதும் ஒன்பதும் ஒருகணை சென்றரிதர மழைசிந்துவ மதமலை கால்சில துணிவன கரம் அறுவனகதழ் வால்சில துணிவன வயிறுகள் வெளிபட நால்வன குடர்சில நகழ்வன சிலவரு தோல்சில கணைபல சொரிவன மழையென உலகத்துள மலையெத்தனை அவையத்தனை உடனே கொலநிற்பன பொருகிற்பன புடைசுற்றின குழு வாய் அலகற்றன சினம்முற்றிய அனல் ஒப்பன அவையும் தலையற்றன கரமற்றன தனிவிற்றொழில் அதனால் ஒற்றைச் சரம் அதனோடொரு கரிபட்டுக ஒளிர்வாய் வெற்றிக்கணை உருமொப்பன வெயிலொப்பன அயில்போல் வற்றக்கடல் சுடுநிற்பன மழைஒப்பன பொழியும் கொற்றக்கரி பதினா/பிரம் ஒருபத்தியிற் கொல்வான் இவ்வேலையின் அனுமான் முதல் எழுவேலையும் அனையார் வெவ்வேலவர் செலஏவிய கொலையானையின் மிகையைச் செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் தவ்வேலென வந்தான் அவன் தனிவேலெனத் தகையான் மிதியால்பல விசையால்பல மிடலால் பலஇடறும் கதியால்பல தெழியால்பல காலால்பல வாலின் நுதியால்பல நுதலால்பல நொடியால்பல பயிலும் குதியால் பல குமையால்பல கொன்றான் அறம் நின்றான் வாரிக் குரைகடலிற்புக எறியும் நெடுமரத்தால் சாரித்தலைத் துருட்டும் நெடுந்தலத்திற் படுத்தரைக்கும் பாரில் பிடித்தெற்றும் குடர்பறிக்கும் படர்விசும்பின் ஊரில் செல ஏறியும் மிதித்துழக்கும் முகத்துதைக்கும் வாலால்வர வளைக்கும்நெடு மலைப்பாம்பென வளையா மேலாளொடு மிடையும் முழு மலைமேல் செலவீசும் ஆலாலம்உண் டவனே என அகல்வாயினிட் டதுக்கும் தோலாயிரம் இமைப்போதினில் அரியேறெனத் தொலைக்கும் ரிந்தார்திசை திசை எங்கணும் யானைப்பிணம் எற்ற நெரிந்தார்களும் நெரியா துயிர் நிலைத்தார்களும் நெருக்கால் எரிந்தார் நெடும் தடந்தேர் இழிந் தெல்லாரும் முன் செல்லத் திரிந்தான் ஒரு தனியே நெடுந்தேவாந்தகன் சினந்தான் சூலப்படை தொடுவான் தனை மையாதமுன் தொடர்ந்தான் ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந் தடர்த்தான் காலத்திற்கிரு கண்ணான் தன கையாலவன் கதுப்பின் மூலத்திடை புடைத்தான் உயிர்முடித்தான் சிரம்மடித்தான் தேர்மேல் செலக்குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால் கார்மேல் துயில்மலை போலியைக் கரத்தால் பிடித் தெடுத்தான் பார்மேல் படுத்தரைத்தான் அவன்பழி மேற்படப் படுத்தான் போர்மேல் திசைநெடுவாயிலின் உளதாம் எனப் போனான் ( அதிகாயன் வதைப்படலம் 100 , 127 , 128 , 134 , 135 , 148. 151 , 154 , 157 , 158 160 162 169. 1761 676 அதிகாயனுக்கும் லட்கமணனுக்கும் யுத்தம் பூணிப்பொன் றுடையானாகிப் புகுந்த நான் புறத்துநின்று பாணித்தல் வீரமன்றால் பருவலிபடைத் தோர்க்கெல்லாம் ஆணிப்பொன் அனையான் தன்னைப்பின்னுங் கண்டறிவென் என்னா தூணிப்பொன் புறத்தான் திண்தேர் இளவல்மேல் தூண்டச்சொன்னான் ஆமென அமலன் தம்பி அங்கதன் அலங்கள் தோள் மேல் தாமரைச்சரணம் வைத்தான் கலுழனின் தாங்கிநின்ற கோமகன் ஆற்றல் நோக்கிக் குளிர்கின்ற மனத்தராகிப் பூமழை பொலியவாழ்த்திப் புகழ்ந்தனர் புலவர் எல்லாம் மன்னவன் தம்பி மற்றவ் இராவணன் மகனைநோக்கி என்னுனக் கிச்சை நின்ற எறிபடைச் சேனை எல்லாம் சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே நன் னெடுஞ் செருச்செய்வாயோ சொல்லுதி நயந்ததென்றான் அன்னது கேட்டமைந்தன் அரும்பியல் முறுவல் தோன்றச் சொன்னவர் வாரார்யானே தோற்கினும் தோற்கத் தக்கேன் என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா மின்னினும் மிளிர்வதாங்கோர் வெஞ்சரம் கோத்துவிட்டான் விட்டவெம் பகழிதன்னை வெற்பினை வெதுப்பும் தோளான் சுட்டதோர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி எட்டினோ டெட்டுவாளி இலக்குவ நீக்காய் என்னா திட்டியின் விடத்துநாகம் அனையனசிந்தி ஆர்த்தான் அங்கதன் நெற்றிமேலும் தோளினும் ஆகத்துள்ளும் புங்கமும் தோன்றாவண்ணம் பொருசர் பலவும்போக்கி வெங்கணை ரண்டு ர் ஒன்றும் வீரன்மேல் ஏவிமேகச் சங்கமும் ஊதிவிண்ணோர் தலைபொ திர்எறிய ஆர்த்தான் வாலிசேய் மேனிமேலும் மழைபொரு குருதிவாரி காலுயர் வரையின் செங்கேழ் அருவிபோல் ஒழுகக்கண்டான் கோலொரு பத்து நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து மேலவன் சிரத்தைச்சிந்தி வில்லையும் துணித்தான்வீரன் கோல்முகத் தள்ளி அள்ளிக் கொடுஞ்சிலை நாணிற்கோத்து கால்முகம் குழையவாங்கிச் சொரிகின்ற காளை வீரன் பால் முகம் தோன்றநின்று காற்றினுக் கரசன் பண்டை நான்முகன் படையாலன்றிச் சாகிலன் நம்ப என்றான் நன்றென உவந்து வீரன் நான்முகன் படையை வாங்கி மின் தனி திரண்ட தென்னச் சரத்தொடும் கூட்டிவிட்டான் ன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டவ்வாளி சென்றது விசும்பினூடு தேவரும் தெரியக்கண்டார் தேரிடை நின்று கண்கள் தீயுகச் சீற்றம் பொங்கப் பாரிடைக் கிழியப் பாய்ந்து பகலிடைப் பரிதி என்பான் ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒருகை தோன்ற நீருடை முகிலின் மின்போல் வாளொடு நிமிரவந்தான் மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய்மடித் துருத்து வள்ளல் சரம் ஒன்றிற் கடிது சென்று தாக்கினான் தாக்கினான் தன் கரம் ஒன்றின் திரிவதாரும் காண்கிலா ததனைத் தன்கை அரம் ஒன்று வைரவாளால் ஆயிரம் கண்டம் கண்டான் கூர்மத்தின் வெரிநின்வைத்து வானவர் அமுதங் கொண்ட நீர்மத்தின் நிமிர்ந்த தோளான் நிறைமத்த மதுவைத் தேக்கி ஊர்மத்தம் உண்டாலன்ன மயக்கத்தால் உருமைத் தின்பான் போர்மத்தன் என்பான் வந்தான் புகர்மத்தப் பூட்கை வேலான் தன்கரி தானே கொன்று தடக்கையால் படுத்து வீழ்த்தும் மின்கரி தென்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கிப் பொன்கரி தென்னும் கண்கள் பொரியுக நீலன் புக்கான் வன்கரம் முறுக்கி மார்பில் குத்தினள் மத்தன் மாண்டான் உன்மத்தன் வயிரமார்பின் உருமொத்த தாம்சென்றுற்ற வன்மத்தைக் கண்டும் மாண்ட மதமத்த மலையைப் பார்த்தும் சன்மத்தின் தன்மை யானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக் கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் அல்லினைத் தழுவிநின்ற பகலென அரக்கன் தன்னை கல்லினும் வலியதோளால் கட்டியிட்டிறுக்கும் காலை பல்லுடைப் பிலவாயூடு பசும்பெருங் குருதிபாய வில்லுடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல குரங்கினுக் காசும் வென்றிக் கும்பனும் குறித்த வெம்போர் அரங்கினுக் கழகுசெய்ய ஆயிரம் சாரி போந்தார் மாங்கொழுந் தண்டுகொண்டும் மலைஎன மலையா நின்றார் சிரங்களும் கரமுமெல்லாம் குலைந்தனர் கண்டதேவர் நிலையில் சுடரோன் மகன்வன் கைநெருங்கக் கலையில் படுகம்மியர் கூடம் அலைப்ப உலையிற்படு இரும்பென வன்மை ஒடுங்க மலையிற் பிளவுற்றது தீயவன் மார்பம் அக்காலை நிகும்பன் அனல்சொரி கண்ணன் புக்கான் இனிஎங்கு அடப்போவது என்னா மிக்கா னெதிர் அங்கதன் உற்று வெகுண்டான் எக்காலமும் இல்லதோர் பூசல் இழைத்தார் எறிவான் உயர்சூலம் எடுத்தலின் இன்னே முறிவான் இகலங்கதன் என்பதன் முன்னே அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் பொறிவான் உகுதீயென வந்து புகுந்தான் தடையேதுமில் சூலம் முனிந்து சலத்தால் விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை இடையே தடைகொண்டு தன்ஏடவிழ் அங்கை புடையே கொடுகொன்று அடல்மாருதி போனான் [ அதிகாயன் வதைப்படலம் 178. 181 , 186 , 189 , 190 , 19 , 199 , 203 , 204 , 207,210 , 213 , 225. 226 , 234 , 235 , 244 , 246 , 248 , 249 , ] அதிகாயனுக்காகப் புலம்பின ராவணன் முன்னே தானிய மாலை புலம்புதல் நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்மின் என்றான் போக்கிய சேனை தன்னில் புகுந்துள இறையும் போதா ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வராய கோக்குலக் குமரரெல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றிப் பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை நடையிடைக் கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் வெருவரும் தகையராகி விம்மினர் இருந்த வேலை தருவனம் அனைய தோளான் தன் எதிர் தானிமாலி இரியலிட்டு அலறி ஓயாப் பூசலிட்டு ஏங்கி வந்தாள் வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல் மென்மைத்தோள் நிலத்தை மேவப் போழ்ந்தனள் பெரும்பாம் பென்னப் புரண்டனள் பொருமிப் பொங்கிச் சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்தருந் துயர வெள்ளத்து ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழக்கண்டும் அறிந்திலாதாள் ந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாளென்று அந்தரத்துள் வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் மந்தரத்தோள் என்மகனை மாட்டா மனிதன்தன் உந்துசிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தாயே அக்கன் உலந்தான் அதிகாயன் தான்பட்டான் மிக்கதிறத் துள்ளார்கள் எல்லாரும் வீடினார் மக்களினி நின்று நான் மண்டோ தரிமகனே திக்கு விசயம் இனியொருகால் செய்யாயோ ஏதையா சிந்தித் திருக்கின்றாய் எண்ணிறந்த கோதையார் வேலரக்கர் பட்டாரைக் கூவாயோ பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ சீதையால் இன்னம் வருவ சிலவேயோ உம்பி உணர்வுடையான் சொன்ன உரைகேளாய் நம்பி குலக்கிழவன் கூறும் நலம் ஓராய் கும்ப கருணனையும் கொல்வித்தென் கோமகனை அம்புக் கிரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா [ அதிகாயன் வதைப்படலம் 260 , 262 , 264 , 256 , 268--272 ] இந்திரசித்து சண்டைக்கு வந்து அனுமாரை இகழ அவர் அவனை இகழ்தல் குழுமிக் கொலைவாட்கண் அரக்கியர் கூந்தல் தாழ தழுவித் தலைப்பெய்து தன்கைகொடு மார்பில் ஏற்றி அழுமித் தொழில்யாது கொல் என்றோர் அயிர்ப்புமுற்றான் எழிலித் தனியேறென இந்திரசத்து எழுந்தான் கேட்டான் இடை உற்றதென் என்று கிளத்தல் யாரும் மட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் ஓட்டா நெடுந்தேர் கடிதோட்டி இமைப்பின் உற்றான் காட்டாதன காட்டிய தந்தையைச் சென்று கண்டான் கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி உண்டாயதென் இவ்வுழி என்றலும் உம்பிமாரைக் கொண்டான் உயிர்காலனும் கும்ப நிகும்பரோடும் விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான் மகுந்தே நிகர் எம்பியின் ஆருயிர் வவ்வினானை விருந்தேஎன அந்தகற் கீகிலன் வில்லும் ஏந்திப் பொருந் தேவர்குழாம் நகைத்திடப் போந்து பாரின் இருந்தேன் எனின்யான் அவ்இராவணி அல்லென் என்றான் பல்லாயிர கோடி படைக்கலம் பண்டு தேவர் எல்லாரும் முனைத்தன்ல யாவரும் ஈந்தமேரு வில்லாளன் கெடுத்த, விரஞ்சன் அளித்த வெம்மை அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் தேராயிரம் கோடி தன்மாடு செல்லப் போரானை புறத்தின் அவற்றின் இரட்டி போதத் தாரார் புரவிக்கடல் பின்செலத் தானைவீரப் பேராழி முகம் செலச் சென்றனன் பேர்ச்சியில்லான் நில்லடா சிறிது நில்லடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் வில்லெடாது நின தாண்மைபேசி உயி ரோடு நின்றுவிளை யாடினாய். கல்லடா நெடு மரங்களோவரு கருத்தினேன் வலிகடப்பவோ சொல்லடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் வில்லெடுக்க உரியார்கள் வெய்யசில வீரர் இங்குமுளர் மெல்லியோய் கல்லெடுக்க உரியானும் நின்றனன் அதின்று நாளையிடை காணலாம் எல்லெடுத்தபடை இந்திராதியர் உனக்கு இடைந் துயிர்கொடு ஏகுவார் புல்லெடுத்தவர்கள் அல்லம் வேறுசில போர் எடுத்தெதிர் புகுந்துளோம் யாரும் என்படைஞர் எய்தலின் றி அயல் ஏகயானும் இகல் வில்லுமோர் தேரின் நின்றுமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணாமால் வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வரச்சொலும் போரும் இன்றொரு பகற்கணே பொருது வெல்வென் வென்றலது போகலேன் என்று வெம்பகழி ஏழுநூறு மிகு நூறும் வெஞ்சிலை கொடு ஏவினான் குன்று நின்றனைய வீரமா ருதிதன் மேனிமேலவை குழுக்களாய்ச் சென்று சென்றுருவலோடும் வாளெயிறு தின்று சீறிஒரு சேமவன் கு.மறு நின்றது பறித்தெடுத் தவனை எய்தி நொய்தின் இது கூறினான் தும்பி என்றுலகின் உள்ள யாவை அவை ஆயிரத் தொகுதியாயினும் வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின்வலி தன்னைநின் றெளிதின் வெல்லுமோ நம்பிதம்பி எனதெம்பி ரான்வரு துணைத் தரிக்கிலை நலித்தியேல் அம்பின் முந்திஉன தாவி உண்ணுமிது கா அடா சிலைவல் லாண்மையால் செருப்பயிற்றிய தடக்கை ஆளிசெல விட்டகுன்று திசையானையின் மருப்பை உற்றதிரள் தோள் இராவணன் மகன் தன் மார்பில் நெடுவச்சிரப் பொருப்பை உற்றதோர் பொருப்பெனக் கடிது ஒடிந்திடிந்து திசைபோனதால் நெருப்பை உற்றதோர் இரும்பு கூடமுற நீறுபட்டது நிகர்த்ததால் [ நாகபாசப்படலம் 1 , 3 , 4 , 13 , 18. 26,73 , 74 , 77-80 வானவீரர்களை மாட்டின இந்திரசித்துக்கும் இளையவருக்கும் யுத்தம் விலங்கல் மேல்வரு விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேளையில் சலங்கை மேல்நிமிர வெஞ்சினந்திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் வலங்கொள் பேருலகம் மேருவோடுடன் மறிக்கும் மாருதிதன் வாசம் நூறு அலங்கள் மார்பும் உயர்தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் மற்றை வீரர்கள் தம் மார்பின் மேலும் உயர் தோளின் மேலும் மழை மாரிபோல் கொற்ற வெங்கணை உலக்க எய்தவை குளிப்ப நின்றுடல் குலுங்கினார் இற்றவிந்தன பெரும்பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்ததுப் பெற்றிகண்டு இளையவள் ளல்ஒள் எரி பிறந்த கண்ணனிவை பேசினான் என்பது சொல்லக்கேட்ட இந்திர வில்லினோடும் பொன்புரை மேகம் ஒன்று வருவதுபோல் கின்றானை முன்பனை முன்புநோக்கி இவன்கொலாம் பரதன் முன்னோன் தன்பெருந் தம்பி என்றான் ஆம்எனச் சாரன் சொன்னான் கோடி நூறமைந்த கூட்டத்திரரக்கதர் கொடித்திண் தேரும் ஆடல்மாக்களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை சூடினான் இராமன்பாதம் சூடிய தோன்றல் தம்பி வற்றிய சடலுள் நின்ற மலையென மருங்கின்யாரும் சுற்றினர் இன்றித்தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளித் தெற்றின புருவத்தோன் தன் மனம் எனச் செல்லும்தேரான் உற்றனன் இளையகோவை அனுமனும் உடன் வந்துற்றான் தோளின் மேல் ஆதிஐய என்றடி தொழுது நின்றான் ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினான் அமரர் ஆர்த்தார் காளியே அனையகாலன் கொலையனக் கனலின்வெய்ய வாளிமேல் வாளிதூர்த்தார் மழையின் மேன் மழைவந்தன்னார் அம்பினோடம் பொன்றொன்றை அறுக்கமற் றறுக்கிலாத வெம்பொறி கதுவவிண்ணில் வெந்தனகரிந்து வீழ்ந்த உம்பரும் உணர்வுசிந்தி ஒடுங்கினார் உலகம்யாவும் கம்பமுற்றுலந்த வேலைக்கலமெனக் கலங்கிற்றண்டம் கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன் கோத்தான் கோரையின் தலையகோடி தொடுத்தவை இளவல் கொய்தான் பாரையின் தலையகோடி பரப்பினான் இளவல் பல்கால் பாரையின தலையகோடி அரக்கனும் பதைக்க எய்தான் வச்சிரப் பகழிகோடி வளை எயிற்றரக்கன் எய்தான் வச்சிரப் பகழிகோடி துரந்தமை அனகன் மாய்த்தான் முச்சிரப் பகழிகோடி இலக்குவன் முடுகவிட்டான் முச்சிரப் பகழிகோடி தொடுத்தவை தடுத்தான் முன்பன் சீறும் நூல் தெரிந்தசிந்தை இலக்குவன் சிலைக்கைவாளி நூறு நூறேவி வெய்தின் நுடங்குளை மடங்கள் யாவும் உழைத்துயிர் விடுவதல்லால் இனிச்செயல் ஒன்றோ என்னா வேறுவேறியற்றி வீரக்கொடியையும் அறுத்து வீழ்த்தி ஆறுநூறம்பு செம்போன் கவசம்புக்கழுந்த எய்தான் வாயிடை நெருப்புக்கால உடல்நெடுங் குருதிவாரத் தீயிடை நெய்வார்த் தன்னவெகுளியான் உயிர்தீர்ந்தாலும் ஓய்விடம் இல்லான்வல்லை ஓரிமை ஒடுங்கா முன்னம் ஆயிரம் புரவிபூண்ட ஆழியந் தேரினானான் புதையும் நன்மணிப் பொன்னுருள் அச்சொடும் சிதைய ஆயிரம் பாய்பரி சிந்திட வதையின் மற்றொரு கூற்றென மாருதி உதையினால் அவன் தேரைஉருட்டினான் வந்தணைந்ததோர் வாளரி வாவுதேர் ந்திரன் தனை வென்றவன் ஏறினான் சிந்தினன் சரமாரி திசைதிசை அந்தி வண்ணனும் அம்பின் அகற்றினான் வாலிமைந்தன் ஓர்மால்வரை வாங்கினான் காலின் வந்த அரக்கனைக் கா போலும் உன்னுயிர் உண்பது புக்கெனா மேல் நிமிர்ந்து நெருப்புக வீசினான் நொய்தினின் சென்றுகூடி இராவணி உளைவைநோக்கி வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பதோர் வெகுளிவீங்கிப் பெய்துழில் பெய்யும்மாரி அனையவன் பிணங்கு கூற்றின் கையினின் பெரிய அம்பால் கவசத்தைக் கழித்து வீழ்த்தான் அத்தனை வீரர் மேலும் ஆண்தனக அனுமன்மேலும் எத்தனை கோடிவாளி மழைஎன எய்யா நின்ற வித்தசு வில்லினானைக் கொல்வது விரும்பிவீரன் சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான் அழித்ததேர் அழுந்தா முன்னம் அம்பொடுகிடந்து வெம்பி பிழைத்திவர் போகாவண்ணம் பாசத்தால் பிணிப் பெனென்னா விழித்திமை யா தமுன்னம் வில்லொடும் விசும்பிற் சென்றான் வாங்கினான் மலரின்மேல ன் வானகமணி நீர்க்கங்கை தாங்கினான் உலகந்தாங்கும் சக்கரத்தவன் என்றாலும் வீங்குவான் தோளை வீக்கி வீழ்த்தலால் மீள்கிலாத ஓங்குவாள ரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி விட்டனன் அரக்கன் வெய்யபடையினை விடுத்தலோடும் எட்டினோ டிரண்டு திக்கும் இருள் திரிந் திரிய ஓடிக் கட்டின தென்பமன்னோ காகுத்தற் கிளையகாளை வட்டவான் வயிரத்திண்டோள் மலைகளை உளையவாங்கி இருகுறப் பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும் மருகுறக் கடவானல்லன் மாயமென்றுணர் வானல்லன் உறுகுறைத் துன்பமில்லான் ஒடுங்கினான் செய்வதோரான் அறுகுறைக் களத்தை நோக்கும் அந்தரமதனை நோக்கும் காலுடைச்சிறுவன் மாயக்கள்வினைக் கணத்தின் காலை மேல்விசைத் தெழுந்துநாடிப் பிடிப்பெனென்று றுறுக்கும்வேலை ஏற்புடைப் பாசம் மேல்நாள் இராவணன் புயத்தைவாலி வால்பிணித் தென்னச்சுற்றிப் பிணைத்தது வயரத்தோளை வீடணன் மூகத்தைநோக்கி வினைஉண்டோ இதனுக்கென்பார் மூடிய கங்குல்மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் எடுறத் தக்கபோலாம் நம்மெதிர் என்னா ஏந்தல் ஆடகத் தோளை நோக்கி நொந்து நொந் தமுங்கிநைவார் ஆரிது தீர்க்கவல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் மாருதி பிழைத்தான் கொல்லோ என்றனர் மறுகி நோக்கி வீரனைக் கண்டுபட்டது இது கொலாம் என்றுவிம்மி வார்கழல் தம்பிதன்மை காணுமோ வள்ளல் என்பார் நாகபாசப்படலம் 81 , 87 , 90 , 92 , 100 , 101 , 103 , 110. 112 , 117 , 121 , 127 , 135 , 147 , 170. 181 , 182 , 186 , 189 , 190 , 192 , 194 , 195 ] தாகபாசத்தால் லட்சுமணர் கட்டுண்டதற்காக விபீஷணர் புலம்பல் இத்தலை இன்னலுற்ற வீடணன் இழைப்ப தோரான் மத்துறு தயிரின்உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் அத்தலைக் கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் செத்திலேன் வலியென் நின்றேன் என்று போய் வையம்சேர்ந்தான் பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியைக்கண்டு நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் நானொரு தமியென்நின்றேன் தேசத்தார் என்னைஎன்னே சிந்திப்பார் என்றுநையும் வாசத்தார் மாலைமார்பன் வாய்திறந் தரற்றலுற்றான் கொல்வித்தான் உடனே நின்றங்கு என்பரோ கொண்டு போனான் வெல்வித்தான் மகனைஎன்று பகர்வரோ விளைவிற்கெல்லாம் நல்வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தம் தம் கல்வித்தாம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரைக்கண்போல் போரவன் புரிந்தபோதே பொருவறு வயிரத்தண்டால் தேரொடும் புரண்டு வீழச் சிந்தி என்சிந்தை செப்பும் வீரமும் தெரித்தென் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று ஆருறவாகத்தேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் ஒத்தலைத் தொக்க ஓடி உய்யினும் உய்ந்தென் உள்ளம் கைத்தலை நெல்லியன்னக் காட்டிலேன் கழிந்துமில்லேன் அத்தலைக் கல்லேன்யான் ஈண்டு அபயமென்ற டைந்து நின்ற இத்தலைக் கல்லேன் அல்லேன் இருதலைச் சூலம்போல்வேன் ( நாகபாசப்படலம் 208 - 212 ] இளையவர் நாகபாசத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் நீயிவண் இருத்தியான் போய் நெடியவற்குரைப் போன் என்னா போயினன் அனலன்போய் அப்புண்ணியன் போலன் கொள்பாதம் மேயினன் வணங்கிஉற்ற வினையெலாம் விளங்கச்சொன்னான் ஆயிரம் பெயரினானும் அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான் விம்மினன் வெதும்பிவெய்துற்று ஏங்கினன் இருந்தவீரன் இம்முறை இருந்து செய்வது யாவதுமில் என் றெண்ணிப் பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின்போனான் தெம்முறை துறந்து வென்ற செங்கள மருங்கிற் சேர்ந்தான் ஐயன்தான் அவன் மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பிற்புல்வி உய்யலன் என்ன ஆவி உயிர்த் துயிர்த்து உருகுகின்றான் பெய்யீரு தாரைக்கண்ணீர்ப் பெருந்துளி பிறங்கவானின் வெய்யவன் தன்னைச்சேர்ந்த நீல் நிறமேகம் ஒத்தான் வீரரை எல்லாம் நோக்கும் விதியினைப் பார்க்கும் வீரப் பாரவெஞ்சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் யாரிதுபட்டார் என்போல் எளிவந்தவண்ணம் என்னும் நேரிது பெரிதென்றோதும் அளவையின் நிமிரநின்றான் எம்பியே இறக்கும் என்னில் எனக்கினிஇலங்கை வேந்தன் தம்பியே புகழ்தான் என்னை ? பழி என்னை அறந்தான் என்னை நம்பியே என்னைச்சேர்ந்த நண்பரின் நல்லவாமே உம்பரும் உலகத்துள்ள உயிர்களும் உதவிபார்த்தால் மீட்டு வந் திளையவீரன் வெற்பன்ன விசயத்தோளைப் பூட்டுறு பாசந்தன்னைப் பலமுறை புரிந்து நோக்கி வீட்டியதென்னின் பின்னைவீரவன் என்றெண்ணும் வேதத் தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானையன்னான் ( நாகபாசப்படலம் 214,216,221 , 225 , 140 , 242 ] கெருடபகவான் வருதலும் நாகபாசமறுதலும் இத்தன்மை எய்தும் அளவின் கண்நின்ற இமையோர்கள் அஞ்சி இதுபோய் எத்தன்மை எய்திமுடியுங்கொல் என்று குலைகின்ற எல்லை இதன் வாய் அத்தன்மை கண்டு புடைநின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் சித்தம் கலங்கும் இது தீரமெள்ள இருளூடுவந்து தெரிவான் அசையாத சிந்தை அரவால் அனுங்க ழியாத உள்ளம் அழிவான் சையா இலங்கை அரசோடும் அண்ணல் ருளின்மை கண்டு நயவான் விசையால் அனுங்க வடமேருவையம் ஒளியால் விளங்க இமையாத் திசையானை கண்கள் முகிழா ஒடுங்க நிறைசால் வழங்கு சிறையான் அல்லைச்சுருட்டி வெயிலைப்பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா வில்லைச்செலுத்தி நிலவைத்திரட்டி விரிகின்ற சோதிமிளிர எல்லைக்குயிற்றி எரிகின்ற போலி டைநின்றமேரு எனும் அத் தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மைசுடர நன்பால் விளங்கு மணி கோடியோடு நளிர்போது செம்பொன் முதலாத் தன்பால் இயைந்த நிழல் கொண்டமைந்த தழுவாது வந்து தழுவ மின்பாலியன்றது ஒருகுன்றம் வானின் மிளிர்கின்ற தென்ன வெயிலோன் தென்பால் எழுந்து வடபால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய பன்னாகர் செல்னி மணிகோடி கோடி பலகொண்டு செய்தவகையால் மின்னாலியன்ற தெனலாய் விளங்கு மிளிர்பூண் வயங்க வெயில் கால் பொன்னாலியன்ற நகைஓடை பொங்க : வனமாலை மார்புபுரளத் தொன்னாள் பிரிந்ததுயர் தீர அண்ணல் திருமேனி கண்டுதொழுவான் முடிமேல் நிமிர்ந்த முகிழேறுகையன் முகில்மேல் நிமிர்ந்த ஒளியான் அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலைஉன்னி உன்னி அழிவான் கொடிமேல் இருந்திவ் வுலகேழொடேழு தொழநின்ற கோளும் இலனாய்ப் படிமேல் எழுந்து வருவான் விரைந்து பலகால் நினைந்து பணிவான் [ நாகபாசப்படலம் 243 , 244 , 246--249 ] வாசங்கலந்த மரைநாள நூலின் வகை என்ப தென்னை மழைஎன்று ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் ரராமன் வெண்ணெய் அணுகும் தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர் பாசங்கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம் பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்துபடர்கால் செல்லா நிலத்தின் இருளாதல் செல்ல உடல்நின்ற வாளிசிதறுற்று எல்லாவிதத்தும் உணர்வோடு நண்ணி இவனே பிழைக்கும் எனவோர் வல்லான் ஒருவன் இடையேபடுத்த வடுவான மேனிவடுவும் தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால் உரும்ஒத்த வெங்கண் வினை தீய வஞ்சர் உடலுய்ந்த தில்லை உலகின் கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர் மேல் அவ்வள்ளல் கடைநாள் நிருமித்த என்ன உயிரோ டெழுந்து நிலை நின்ற தெய்வநெறியால் [ நாகபாசப்படலம் 263-2651 கெருடபகவான் ஸ்ரீராமரைத் துதித்தல் வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்மேல் அயன் தன் முதலோர் தந்தாதை தாதைஇறைவா பிறந்து விளையாடு கின்ற தனியோய் சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்னசெயலோ எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் எனஇன்ன பன்னி மொழிவான் எழுவாய் எவர்க்கும் முதலாகி ஈறொடு டையாகி எங்கும் உளையாய் வழுவா தெவர்க்கும் வரம் ஈயவல்லை அவரால் வரங்கள் பெறுவாய் தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் அழுவாய் ஒருத்தன் உளைபோலும் ஆர்இவ் அதிரேக மாயை அறிவார் தானந்தம் இல்லை பலஎன்னும் ஒன்று தனிஎன்னும் ஒன்று தவிரா ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனந் தொடர்ந்த ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் மீளா.தவேதம் முடிவின்கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் கேளாத என்று பிறவென்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவால் மாளாதநீதி இகவாமை நின்கண் அபிமானம் இல்லை வறியோர் ஆளாயும் வாழ்த்தி அரசாள்தி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் ரோயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்தோறும் நிற்றி பிரியாய் தீராய் பிரிந்து திரிவாய் திறம்தொறு அவை தேறும் என்று தெளியாய் கூராழி அங்கை உடையாய் திரண்டொர் உருவாதி கோடல் உரிபோல் ஆராயின் ஏதும் இலையாதி ஆரிவ் அதிரேக மாயை அறிவார் ஐயநீ யாரை எங்கள் அருந்தவப் பயத்தின் வந்திங்கு எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் கையுறை கோடற்கொத்த காட்சியை அல்லைமீட்சி செய்திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்கொணாதான் [ நாகபாசப்படலம் 250, 252 , 255 , 256, 261 , 267 ] இராத்திரியில் மகாராட்சத வீரர்கள்வதை பறவை பின் குலங்கள் காக்கும் பாவகன் பழையநின்னோடு உறவுள்தன்மை யெல்லாம் உணர்த்துவென் அரக்கனோடம் மறவினை முடித்தபின்னர் வளவன் என்று ணர்த்திமாயப் பிறவியின் பகைஞ! நல்குவிடையெனப் பெயர்ந்து போனான் சிங்கஏறு அசனி ஏறு கேட்டலும் சீற்றச்சேனை பொங்கிய தென்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா அங்கையோடங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் என்பது சொல்லிப் பள்ளிச்சேக்கை நின்றிழிந்து வேந்தன் ஒன்பது கோடி வாட்கை அரக்கர் வந்துழைபின்சுற்றப் பொன்பொதி விளக்கங்கோடிப் பூங்குழை மகளிர் ஏந்தத் தன் பெருங்சோயில் நின்றும்மசன் தனிக்கோயில் புக்கான் எழுந்தடிவணங்க லாற்றான்இருகையும் அரிதின் ஏற்றித் தொழும் தொழிலானை நோக்கித்துணுக்குற்ற மனத்தன் தோன்றல் ! அழுங்கினை வந்ததென்னை அடுத்தது என்றெடுத்துக் கேட்டான் புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் ஐயவெம் பாசந்தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்னப் பெய்யும் வெஞ்சரத்தால்மேனி பிளப்புண்டார் உணர்வுபோந்தார் உய்யுநர் என்றுரைத்தது உண்மையோ ஒழிக்கொன்றோ ? செய்வம் எண்றெண்ணின் தெய்வச்செயல் ஒன்றாம் தெரியினென்றா ன் ஈண்டிது கிடக்கமேன்மேல் இயைந்த வாறியைகஎஞ்சி மீண்டவர் தம்மைக்கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே ஆண்டகை நீயே இன்னும் ஆற்றுதி அருமைப்போர்கள் காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தைச் சொன்னான் இன்றொரு பொழுது தாழ்த்து என் இகல்பெருஞ் சிரமம் நீக்கிச் சென்றொரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ வென்றிவெம் படையினால்உன் மனத்துயர் மீட்பென் என்றான் நன்றென அரக்கன் போய் தன் நளிர்மணிக் கோயில் புக்கான் [ நாகபாசப்படலம் 270 , 276 , 279 , 286 , 292 , 299 , 300 ஆர்த்தெழும் ஓசைகேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்பப் போர்த்தொழில் வேட்கைபூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் தார்த்தட மார்பன் தன்னைத் தாராடை என்னச்சார்ந்தார் பார்த்தனன் அரக்கர்கோனும் போம் எனப்ப கருங்காலை பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான் முச்சிரத் தயிலினான் மூரித்தேரினான் இச்சிரம் உம்மதே எனவந்தெய்தினான் வச்சிரத் தெயிற்றவன் மலையின் மேனியான் காலையும் மனத்தையும் பிறகு காண்பதோர் வாலுளைப் புரவியின் மடித்த வாயினான் வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் லம் ஒன்றுடையவன் பிசாசன் தோன்றுவான் சூரியன் பகைஞன் அச்சுடர் பொன்தேரினன் நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான் ஆரிய வேள்வியின் பகைஞனாம் அரோ சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் சாலிவண் கதிர்நிகர் புரவித்தானையான் மூலவெங் கொடுமையின் தவத்தின் முற்றினான் சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான் மாலி என்றடிமுறை வணங்கிக் கூறினான் ஆர்த்தெதிர் நடந்த தவ் அரியின் ஆர்கலி தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் போர்த்தொழில் புரிந்தன புலவர் போக்கிலார் வேர்த்துயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே ரியன் பெரும்பகைஞனும் சூரியன் மகனும் நேர் எதிர்ந்தனர் நெருப்புடைவேள் வியின்பகையும் ஆரியன் தனித்தம்பியும் எதிர் எதிர் அடர்ந்தார் வீரவச்சிரத் தெயிற்றனும் இடபனும் மிடைந்தார் தூமக்கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார் தாமத்தங்கதன் மாபெரும் பக்கனைத் தடுத்தான் சேமத்திண்சிலை மாலியும் நீலனும் செறுத்தார் வாமப்போர் வயப்பிசாசனும் பனசனும் மலைந்தார் வகைநின்ற உயர்தோள் நெடுமாருதியும் புகைவெங் கண்ணனும் பொருவார் பொரவே மிகை சென்றிலர் பின்றிலர் வென்றிலரால் சிகை சென்று நிரம்பிய தீஉமிழ்வார் மலையிற் பெரியான் உடல் மண்ணிடையிட்டு உலையக் கடல் தாவி கால்கொடு உதைத்து அலையத் திருகிப் பகுவாய் அனல்கால் தலைகைக்கொடு வறிந்து தணிந்தனனால் மாபக்கனும் அங்கதனும் மலைவார் தீபத்தின் எரிந்தெழு செங்கணினார் கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார் தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால் உளந்தான் நினையாதமுன் உய்த்து உகவாக் கிளர்ந்தானை இரண்டு கிழித்துணையாய்ப் பிளந்தான் உலகேழினோ சேழுபெயர்ந்து அளந்தான் வலிநன்றென அங்கதனே வேள்விப் பகையொடு வெகுண்டு அடரும் தோள்வித்தகன் அங்கோர் சுடர்க்கணையால் வாழ்வித்தனை என்று அவன் மார்பகலம் போழ்வித்தனன் ஆருயிர் போயினனால் தன் தாதையை முன்பு தடுத்தொருநாள் வென்றானை விலங்கலின் மேனியனைப் பின்றாத வலத்துயர் பெற்றியனைக் கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் தோற்றும் உருவொன் றெனவே துணியா கூற்றின் கொலையால் உழல்கொள்கையனை ஏற்றும் சிலையாண்மை இலக்குவன் வெங் காற்றின் படைகொண்டு கடந்தனனால் [ படைத்தலைவர் வதைப்படலம் 1 , 32-36 , 49 , 50, 68 , 72, 73 , 78 , 79 , 85 , 87,99 ) வண்டுலாம் அலங்கல்மார்பன் மகராக்கன் மனழ ஏறென்னத் திண்டிறல் அரக்கன் கொற்றப் பொற்றடஞ்சில்லித் தேரைத் தண்டலை மருதவைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக் கொண்டல்மேல் ஓட்டிச்சென்றான் குரங்கினப் படையைக் கொன்றான் சொரிந்தன பகழியெல்லாம் சுடர்க்கடுங் கணைகள் தூவி அரிந்தனன் அகற்றிமற்றை ஆண்டகை அலங்கல் ஆகத்து எரிந்தொரு பகழிபாய எய்தனன் இராமன் ஏவ நெரிந்தெழு புருவத்தான் தன் நிறத்துற நின்றதன்றே அத்துணை அரக்கன் நோக்கி அந்தரவான மெல்லாம் ஒத்ததன் உருவே ஆக்கித் தான்மறைந் தொளித்துச் சூலப் பத்திகள் கோடி கோடி பரப்பினன் அதனைப்பார்த்த வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்றினைய சொன்னான் அம்பின் வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருளில்யாக்கை உம்பரில் பரப்பித்தான்வேறு ஒளித்தனன் என்னஓர்வான் செம்புனல் சுவடுநோக்கி இதுநெறி என்றுதேவர் தம்பிரான் பகழி தூண்டத் தலையற்றுத் தலத்தன் ஆனான் [ மகரக்கண்ணன் வதைப்படலம் 15 , 20 , 28 , 30 ] லட்சுமணருக்கும் இந்திரசித்துக்கும் இரண்டாம்முறை யுத்தம் கரன்மகன்பட்ட வாறும் குருதியின்கண்ணன் காலின் சிரன் தெரிந்துக்கவாறும் சிங்கனது ஈறும்சேனைப் பரம் இனிஉலகுக் காவாது என்பதும் பகரக்கேட்டான் வரன்முறை தவிர்ந்தான் வல்லைத் தருதிர் என்மகனை என்றான் கூயினன் நுந்தை என்றார் குன்றெனக்குவிந்த தோளான் போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் ஏயினபின்னை மீள்வார் நீயலாது யாவர் என்னா மேயது சொன்னார் தூதர் தாதைபால் விரைவின்வந்தான் நாற்கடல் அனையதானை நடந்திடக் கிடந்தபாரின் மேற்கடுத் தெழுந்த தூளி விசும்பின் மேல் தொடர்ந்து வீச மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர் மானப் பாற்கடல் அனையவாட்கண் பனிக்கடல் படைத்ததன்றே ஆயிரகோடித் திண்தேர் அமரர்கோன் நகரம் என்ன மேயின் சுற்றத்தான்ஓர் கொற்றப்பொன் தேரின் மேலான் தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் நாயகப்பரிதி போன்றான் தேவரை நடுக்கங்கண்டான் சங்கத்தின் முழக்கங்கேட்ட கவிப்பெருந் தானையானை சிங்கத்தின் முழக்கங்கேட்ட தொத்தது விரிந்து சிந்தி எங்குற்ற என்னாவண்ணம் இரிந்தது ஈதன்றி ஏழைப் பங்கத்தின் மலைவில் அன்னசிலை ஒலிபரப்பி ஆர்த்தான் செங்கதிர்ச் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன் தானும் அங்கதப் பெயரினானும் அண்ணலும் இளையகோவும் வெங்கதிர் மௌலிச் செங்கண் வீடணன் முதலாம்வீரர் ங்கிவர் நின்றாரல்லது இரிந்தது சேனை எல்லாம் மாருதி அலங்கல்மாலை மணியணி வயிரத் தோள்மேல் வீரனும் வாலிசேய்தன் விறல் கெழு சிகரத் தோள் மேல் ஆரியற் கிளையகோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி வேரியம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் தேரின்மேல் சிலையில் நின்ற இந்திர சித்தென்றோதும் வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும் பாரின்மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் போரின்மேல் நோக்கிலாத இருவரும் பொருதபூசல் செய்கின்றார் இருவர் வெம்போர் சிதைகின்ற சேனை நோக்கின் ஐயந்தான் இல்லாவெள்ளம் அறுபதும் அவிகஎன்று வைகின்றார் அல்லாக வரிசிலை வளத்தால்மாள எய்கின்றார் அல்லர் ஈதென் இந்திரசாலம் என்றான் ஆயிர கோடித்தேரும் அரக்கரும் ஒழியவல்ல மாயிருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை போயின குரக்குத்தானை புகுந்திலதன்றே பொன் தேர்த் தீயவன் தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கந்தீரா இந்திரன் பகைஎனும் இவனை என்சரம் அந்தரத் தருந்தலை அறுக்க லாதெனின் வெந்தொழிற் செய்கையன் விருந்து மாய்நெடு மைந்தரின் கடையெனப் படுவென் வாழியாய் முறுவல் வாள் முகத்தினன் முளரிக்கண்ணனும் அறிவென் நீ அடுவல் என்று அமைதியாம் எனின் இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் வெறுவியர் வேறினி விளைவது யாதென்றான் அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறென மங்குல் நின்றதிர்ந்தன வயவன்தேர் புனை சிங்கமும் நடுக்குறத் திருவின் நாயகன் சங்கமொன் றொலித்தனன் கடலும் தள்ளுற ஆனகாலையில் இராமனும் அயில் முகப்பழி சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனைத் தூண்டி வானமானங்கள் மறிந்தெனத் தேரெலாத் மடியத் தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் இருவிர் என்னொடு பொருதிரோ அன்றெனின் ஏற்ற ஒருவிர் வந்துயிர் தருதிரோ உம்படையோடும் பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும் தருவென் இன்றுமக் கேற்றது யான் எனச் சலித்தான் வாளின் திண்சிலைத் தொழிலினின் மல்லினின் மற்றை ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் கோளுற்று உன்னொடு குறித்து அமர்செய்து உயிர்கொள்வான் சூளுற்றேன் இதுசரதம் என்று இலக்குவன் சொன்னான் இலக்குவன் எனும்பெயர் உனக்கியைவதே என்ன இலக்கு வன்கணைக்கு ஆக்குவேன் இதுபுகுந்திடையே விலக்குவென் எனவிடையவன் விலக்கினும் வீரம் கலக்குவென் இதுகாணும் உன் தமையனும் கண்ணால் கும்பகர்னன் என்றொருவன் நீர் அம்பிடைக் குறைத்த தம்பியல்லன் யான் இராவணன் மகன் ஒரு தமியேன் எம்பிமாருக்கும் என்சிறு தாதைக்கும் இருவர் செம்புண்ணீர் கொடுகடன் கழிப்பேன் என்று தெரித்தான் அரக்கர் என்பதோர் பெயர்படைத்தவர்க் கெலாம் அடுத்த புரக்கும் தன்கடன் செயவுளன் வீடணன் போந்தான் கரக்கும் நுந்தைக்கு நீ செய்யக் கடவன கடன்கள் இரக்கம் உற்று உனக்கவன் செய்யும் என்றனன் இளையோன் இளையமைந்தன் மேல் இராமன்மேல் இராவணி இகலி விளையும் வன்திறல் வானரவீரர்மேல் மெய்யுற்று உளையும் வெஞ்சரம் சொரிந்தனன் நாழிகைஒன்று வளையும் மண்டலப்பிறை எனநின்றது அவ்வரிவில் படங்கொள் பாம்பணை துறந்தவற்கு இளையவன்பகழி விடங்கொள் வெள்ளத்தின்மேல் - அவன் விடுவன விலக்கி இடங்கர் ஏறன எறுழ்வலியரக்கன் தேர்ஈர்க்கும் மடங்கல் ஐயிருநூற்றையும் கூற்றின் வாய்மடுத்தான் கண்ணிமைப்பதன் முன்புபோய் விசும்பிடைக் கரந்தான் அண்ணல் மற்றவன் ஆக்கைகண்டறிகிலன் ஆகிப் பண்ணவற்கு இவன்பிழைக்குமேல் படுக்கும் நம்படையை எண்ணம் மற்றிலை அயன்படை தொடுப்பென் என்றிசைந்தான் ஆன்றவன் அதுபகர்தலும் அறநிலை வழா தாய் ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கின் இவ்வுலகம் மூன்றையும் சுடும் ஒருவனால் முடிக்கலது என்றான் சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடைத்தம்பி மறைந்து போய்நின்றவஞ்சனும் அவருடை மனத்தை அறிந்து தெய்வவான்படைக்கலம் தொடுப்பதற் கமைந்தான் பிறிந்து போவதேகருமம் இப்பொழுது எனப்பெயர்ந்தான் செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் [ பிரம்மாத்திரப்படலம் 1 , 2 , 3 , 9 , 10 , 13 , 15 , 17 , 22 , 24 , 32 , 39 . 43 , 45 , 57 , 59 , 60 , 62 , 64 , 65 , 68 , 73 , 78 , 79 , 80 ] அனுமாருக்கும் அகப்பனுக்கும் யுத்தம் எற்கொள் நான்முகன் படைக்கலம் இவர் என் மேல் விடாமுன் முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறைமுறை மொழிந்த சொற்கொள் வேள்விபோய்த் தொடங்குவான் அமைந்தவன்துணிவை மற்கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் னுமன் அங்கதன் தோள் நின்று இழிந்தனராகித் தனுவும் வெங்கணைப் புட்டிலும்கவசமும் தடக்கைக்கு இனிய கோதையும் துறந்தனர் இருவரும் மையோர் பனிமலர் பொழிந்தார்த்தனர் வாழ்த்தினர் பல்கால் இரவும் நண்பகலும் பெருநெடுஞ் செருவியற்றி உரவு நம் படைமெலிந்துளது அருந்துதற் குணவு வரவு தாழ்த்தது வீடணவல்லையின் ஏகித் தரவு வேண்டினென் என்றனன் தாமரைக் கண்ணன் தெய்வவான் பெரும்படைகட்கு வரன்முறை திருந்து மெய்கொள் பூசனைஇயற்றினம் விடும் இதுவிதியால் ஐய ! நான் ஆற்றினென் வருவதோர் அளவும் கைகொள் சேனையைக் காவெனப் போர்க்களங்கடந்தான் வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனையைவீர அள்ளிலைப்படை அகம்பனே முதலிய அரக்கர் எள்ளில் எண்ணிலர் தம்மொடு விரைந்தனை ஏகிக் பொள்ளை வெஞ்செரு இயற்றுதி மனிதரைக் குறுகி படைக்கலங்களும் பருமணிப் பூண்களும் பகுவாய் டைக்கலந்த பேரெயிற்று இளம்பிறைகளும் எறிப்பப் புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள விடைக்குலங் கள் போல் இராக்கதப் பதாதியும் மிடைந்த தொடும்படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவி நகம்படையாகக் கொள்ளும் நரசிங்கம் நடந்ததென்ன மிகும்படைக் கடலுள் செல்லும் மாருதி வீரவாழ்க்கை அகம்பனைக் கண்டான் தண்டால் அரக்ரை அரைக்குங் கையான் எற்றின எறிந்த வல்லை ஏயின எய்தப்பெய்த முற்றின படைகள் யாவும் முறைமுறை முறிந்துசிந்தச் சுற்றின வயிரத்தண்டால் துகைத்தனன் அமரர் துள்ளக் கற்றிலன் இன்று கற்றான் கதையினால் வதையின் கல்வி அகம்பனும் காணக்காண ஐயிருகோடிக் கைம்மா முகம்பயில் கலினப்பாய்மா முளையெயிற் றரக்கர்மூரி நுகம்பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான் உகம்பெயர் ஊழிக்காற்றின் உலைவிலாமேரு ஒப்பான் வில்லினால் இவனை வெல்லல் அரிதெனாநிருதன் வெய்ய மல்லினான் இயன்ற தோளான் வலியினால் வானத்தச்சன் கொல்லினால் இயன்ற தாங்கோர் கொடுமுளைத்தண்டு கொண்டான் அல்லினால் வகுத்ததன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும் கிட்டினார் கிடைத்தார் வீசிப்புடைத்தனர் கீழும்மேலும் கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவுகண்ணுற்று ஒட்டினார் மாறிவட்டம் ஓடினார் சாரிபோனார் அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறனைய தண்டு பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்றென்னா மடித்துவாய் இடத்துக்கையால் மார்பிடைக்குத்த வாயால் குடித்து நின்றுமிழ் வான் என்னக் கக்கினன் குருதி வெள்ளம் மீட்டுமக் கையால்வீசிச் செவித்தலத்து எற்ற வீழ்ந்தான் கூட்டினான் உயிரைவிண்ணோர் குழாத்திடை அரக்கர்கூட்டம் காட்டில் வாழ் விலங்குமாக்கள் கோளரி கண்ட என்ன ஈட்டமுற்று எதிர்ந்த வெல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் [ பிரம்மாத்திரப்படலம் 83 , 84 , 86 , 88 , 93 , 97 , 1.0 , 125 , 126 , 131 , 133 , 136 , 137 ] இளையவர் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் ஆர்த்த பேரமலைகேளா அனுகினன் அனுமன் எல்லா வார்த்தையும் கேட்கலாகும் என்றதும் மகிழ்ந்து வள்ளல் பார்த்தனன் பாராமுன்னம் பணிந்தனன் விசயப்பாவை தூர்த்தனை ளையவீரன் தழுவினன் இனைய சொன்னான் தேவர் தம் படையை விட்டான் என்பதுசிந்தை செய்யா மாபெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப்போனான் ஏவரும் இரிந்தார் எல்லாம் இனமழைஎன்ன ஆர்த்துக் கோவிளங் களிற்றைவந்து கூடினார் ஆடல் கொண்டார் காலம் ஈதெனக்கருதிய இராவணன் காதல் ஆலமா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் மூலவேள்விக்கு வேண்டிய கலப்பைகள் முறையால் கூலம் நீங்கிய இராக்கதப்பூசுரர் கொணர்ந்தார் இன்னகாலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான் முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் பொன்னின் மால்வரைக் குரீஇனம் மொய்ப்பதைப்போல பன்னலாம் தரமல்லன சுடர்க்கணை பாய்ந்த கோடி கோடி நூறாயரம் கொடுங்கணைக் குழாங்கள் மூடிமேனியை முற்றுறச் சுற்றின மூழ்க ஊடுசெய் வதொன்றுணர்ந்திலன் உணர்வுழக் கொடுங்க ஆடல்மாக்கரி சேவகம் அமைந்தென அயர்ந்தான் உடலிடைத் தொடர்பகழியின் ஒளிக்கதிர்க்கற்றைச் சுடருடைப் பெருங்குருதியில் பாம்பெனச்சுமந்த மிடலுடைப் பிணமீமிசைத்தான் பண்டைவெள்ளக் கடலிடைத் துயில்வானன்ன தம்பியைக் கண்டான் உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்ந்திலன் ஒன்றும் வியர்த்திலன் உடல்விழித்திலன் கண்ணிணை விண்னோர் அயர்த்தனன் கொல் என்று அஞ்சினர் தங்கையும் தாளும் பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையாற் பிறந்தான் எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகெல்லாம் தந்தனென் என்னும் கொள்கைதவிர்ந்தேன் தனி அல்லேன் உய்ந்தும் இருந்தாய் நீயென நின்றேன் உரைகாணேன் வந்தனென் ஐயாவந்தனென் ஐயா இனிவாழேன் தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே சேயோ நீயே தம்பியும் நீயே திருநீயே போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ்பாராய் நீயோநானே நின்றனென் நெஞ்சம் வலியேனால் ஊறாநின்ற புண்ணுடையாய்ப்பால் உயிர்காணேன் ஆறாநின்றேன் ஆவிசுமந்தேன் அழிகின்றேன் ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இருகூறாக் கீறாநெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே பயிலும் காலம் பத்தொடு நாலும் படர்கானத்து அயில்கின் றேனுக்கு ஆவனறல்கி அயிலாதாய் வெயிலென் றுன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவெய்தித் துயில்கின்றாயோ இன்றிவ்வுறக்கம் துறவாயோ அயிராநெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச்சொல் பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவுண்டோ செயிரே . r இல்லா உன்னையிழந்தும் திரிகின்றேன் உயிரோ நானோயாவர் உனக்கிங் குறவம்மா மாண்டாய் நீயோ யானொருபோதும் உயிர்வாழேன் ஆண்டானல்லன் நானிலம் அந்தோ பரதன்தான் பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார் வேண்டாவோ நான் நல்லறம் அஞ்சி மெலிவுற்றால் அறம் தாய்தந்தை சுற்றமும் மற்றும் எனையல்லால் துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணைவந்து பிறந்தாய் என்னைப் பின்புதொடர்ந்தாய் பிரிவற்றாய் இறந்தாய் என்னைக்கண்டும் இருந்தேன் எளியேனோ கொடுத்தேனன்றே வீடணனுக்குக் குலம் ஆள முடித்தோர் செல்வம்யான் முடியாதே முடிக்கின்றேன் படித்தேனன்றே பொய்ம்மை குடிக்குப் பழிபெற்றேன் ஒடித்தேன் அன்றே என்புகழ் நானே உணர்வற்றேன் [ பிரம்மாத்திரப்படலம் 149 , 155 , 159 , 167 , 168 , 194 , 196 , 202 -206 , 209 , 210 , 216 ஸ்ரீராமரை ஆகாசத்தில் சகலதேவதைகளும் தோத்தரித்தல் கண்டார் விண்ணோர் . கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் கொண்டார் துன்பம் என் முடிவென்னக் குலைகின்றார் அண்டா அய்யா எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் உண்டோ உன்பால்துன்பு என அன்போ டுரைசெய்தார் உன்னைஉள்ள படியறியோம் உலகைஉள்ள திறம் உள்ளோம் பின்னை யறியோம் முன்னறியோம் இடையும் அறியோம் பிறழாமல் நின்னை வணங்கி நீவகுத்தநெறியில் நிற்கும் இதுவல்லால் என்னை அடியோம் செயற்பால இன்பதுன்பம் இல்லோனே அண்டம்பலவும் அனைத்துயிரும் அகத்தும் புறத்தும் உளவாக்கி உண்டும் உமிழ்ந்தும் அளந்திடந்தும் உள்ளும்புறத்தும் உளையாகி கொண்டுசிலம்பி தன்வாயில் கூர் நூல் இயையக் கூடியற்றிப் பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி துன்பவிளையாட்டிது வேயும் நின்னைத் துன்பம் தொடர்பின்மை இன்பவிளையாட்டாம் எனினும் அறியாதோருக் கிடருறுமால் அன்பின்விளைவும் அருள்விளைவும் அறிவின்விளைவு மவையெல்லாம் முன்புபின்பு நடுவில்லாய் முடித்தாலன்றி முடியாவே அம்பரீடற் கருளியதும் அயனார் மகனுக் களித்ததுவும் எம்பிரானே எமக்கின்று பயந்தாய் என்றே ஏமுறுவேம் வெம்புதுயரம் நீயுழக்க வெளிகாணாது மெலிகின்றாய் தம்பிதுணைவா நீயிதனைத் தவிர்த்தெம் உணர்வைத் தாராயோ [ பிரமாத்திரப்படலம் 218 , 219 , 222 , 223 , 225 [ 703 ஸ்ரீராமலட்சுமணருக்குச் சீதாதேவி இரங்கல் என்வந்தது நீரென்றரக்கர்க் கிறைவன் இயம்ப எறி செருவில் நின்மைத்தன் நெடுஞ்சரத்தால் துவணவரெல்லாம் நிலஞ்சேரப் பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால் முன்வந்தவனும் முடிந்தான்உன் பகைபோய் முடிந்ததென மொழிந்தார் [ பிரமாத்திரப்படலம் 227 ] தெய்வமானத் திடையேற்றி மனிதர்க் குற்ற செயலெல்லாம் தையல்காணக் காட்டுமின்கள் கண்டாலன்றித் தனதுளத்து ஐயம் நீங்காள் என்றுரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க்களத்தின் மிசைஉய்தார் கண்டாள் கண்ணால் கணவன் உ அன்றி ஒன்றும் காணாதாள் உண்டாள் விடத்தை என உ ..- லும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் தண்டா மரைப்பூ நெருப்புற்ற தன்மையுற்றாள் தரியாதாள் பெண்தான் உற்ற பெரும்பிழை உலகுக்கெல்லாம் பெரிதன்பேறோ விழுந்தாள் புரண்டாள் உடல் முழுதும் வியர்த்தாள் அயர்த்தாள் வெதும்பினாள் எழுந்தாள் இருந்தாள் தளிர்க்கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் கொழுந்தா என்றாள் , அயோத்தியார்தம் கோவே என்றாள் எவ்வுலகும் தொழுந்தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள் கொடியேன் இவைகாண்கிலேன் என் உயிர் கோள் முடியாய் நமனே முறையோ முறையோ விடியா இருள்வாய் எனை வீசினையே அடியேன் உயிரே அருள் நாயகனே மேவிக் கனல் முன் மிதிலைப் பதி என் பாவிக் கைபிடித்தது பண்ணவநின் ஆவிக் கொரு கோள் வரவோ அலர்வாழ் தேவிக்கமுதே பறையின் தெளிவே உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு ஐயா இளையோர் அவர் வாழ் கிலரால் மெய்யே வினை எண்ணி விடுத்த கொடுங் கைகேசி கருத்திதுவோ களிறே தகைவான் நகர் நீ தவிர்வாய் எனவும் வகையாது தொடர்ந்தொரு மான் முதலாப் புகையாடிய காடுபுகுந்து டனே பகையாடியவா பரிவேதும் இலேன் நெய்யார் பெருவேள்வி நிரப்பி நெடும் செய்யார் புனல் நாடுதிருத்துதியால் மெய்யாகிய வாசகமும் விதியும் பொய்யான என்மேனி பொருந்துதலால் மேதா இளையோய் விதியார் விளைவால் போதா நெறிஎம்மொடு போதுறு நாள் மூதானவன் முன்னம் முடிந்திடுஎனும் மாதா உரையின் வழிநின் றனையோ பூவுந்தளிரும் தொகுபொங் கணைமேல் கோவுந் துயலத் துயிலாய் கொடியார் ஏவுன் தலை வந்தஇருங் கணையால் மேவும் குளிர் மெல்லணை மேவினையோ [சீதைகளங்காண்படலம் 3 , 4 , 9 , 12 , 14 -- 16 , 18--20 ] திரிசடையம்மாள் சீதாதேவியைத் தேற்றுதல் மழுவாள் உறினும் பிளவாமனனோடு அழுவேன் இனியென் இடர் ஆறிட நான் விழுவேன் அவன்மேனியின் மீதில் எனா எழுவாளை விலக்கி இயம் பினளால் ( திரிசடை ) மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் போய நான் நாகபாசம் பிணித்தது போனவாறும் நீயமா நினையாய் , மாள நினைத்தியோ நெறியிலாரால் ஆயமாமாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் கண்ட அக்கனவும் பெற்ற நிமித்தமும் நினதுகற்பும் தண்டவா ளரக்கர் பாவச் செய்கையும் தருமம் தாங்கும் அண்டர் நாயகன் தன் வீரத் தன்மையும் அயர்த்தாய் போலும் புண்டரீகற்கும் உண்டோ இறுதி இப்புலையர்க்கல்லால் ஆழியான் ஆக்கை தன்னில் அம்பொன்றும் உறுகிலாமை ஏழைநீ காண்டியன் றே இளையவன் வதனம் இன்னும் ஊழிநாள் இரவியென்ன ஒளிர்கின்றது உயிருக்கின்னல் வாழியார்க்கில்லை வாளாமயங்கலை மண்ணில் வந்தாய் ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகமோரேழும் ஏழும் தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என்னாம் வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிரெலாம் வெருவல் அன்னை ஆய்ந்தவை உள்ளபோதே அவர்உளர் அறமும் உண்டால் மாருதிக்கில்லையன்றே மங்கைநின் மரத்தினாலே ஆருயிர் நீங்கள் நின்பால் கற்புக்கும் அழிவுண்டாமே ? சீரியதன்று இதொன்றும் திசைமுகன் படையின் செய்கை பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பதுண்டோ தேவரைக் கண்டேன் பைம் பொன் செங்கரம் சிரத்தில் ஏத்தி மூவரைக் கண்டாலென்ன இருவரை முறையின் நோக்கி ஆவலிப் பெய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை கூவலில் புக்குவேலை கோட்படும் என்று கொள்ளேல் மங்கலம் நீங்கினாரை ஆருயிர் வாங்கினாரை நங்கை இக்கடவுள் மானம் தாங்குறும் நவையிற்றன்றால் இங்கிவை அளவையாக இடர்க்கடல் கடத்தி என் சங்கையள் ஆயதையல் சிறிதுயிர் தரிப்பதானாள் [ சீதைகளங்காண்படலம் 21 , 23-27 ] அனுமார் சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வருதல் அந்தணன் படையால் வந்த தென்பதும் ஆற்றல் சான்ற இந்திர சித்தே எய்தான் என்பதும் இளவற்காக நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கிச் சிந்தையின் உணர எண்ணித் தீர்வதோர் உபாயம் தேர்வான் ( வீடணன் ) வாய்மடித் திரண்டுகையும் முறுக்கித்தன் வயிரச்செங்கண் தீயுகக் கனகக்குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட ஆயிர கோடியானைப் பெரும்பிணத் தமளிமேலான் காய்சினத் தனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான் ( இருவரும் ) அன்னவன் தன்னைக் கண்டால் ஆணையே அரக்கர்க்கெல்லாம் மன்னவ நம்மையீண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் என்னலும் உய்ந்தேம் அய்ய ஏகுதும் விரைவின் என்றான் மின்எரி ஒளியிற் சென்றார் சாம்பனைவிரைவிற் கண்டார் மேருவினைக் கடந்தப்பால் ஒன்பதினாயிரம் உளஓசனையை விட்டால் நேரணுகும் நீலகிரிதானிரண்டா யிரம்உள ஓசனையின் நிற்கும் மாருதி ! மற்றதற்கப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்துவைகும் கார்வரையைக் காணுதிமற்று அதுகாண இத்துயர்க்குக் கரையும் காண்டி மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும் மெய்வேறு வகிர்களாகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒருமருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பதொன்றும் மீண்டேயும் தம்முருவை அருளுவது ஓர்மெய்ம் மருந்து உள நீவீர ஆண்டேகித் கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின்மிக்கான் ஈங்கிதுவே பணியாகில் இறந்தாரும் பிறந்தாரே எம்கோக்குயாதும் தீங்கிடையூ றெய்தாமல் தெருட்டுதிர்போய் எனச்சொல்லி அவரைத்தீர்ந்தான் ஓங்கினன் வான் நெடுமுகட்டை உற்றனன் பொன் தோள்இரண்டும் திசையோபெடாக்க வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே எனவளர்ந்தான் வேதம் போல்வான் வால்விசைத்துக் கைந்நிமிர்த்து வாயினையும் சிறிதகல வகுத்து மான கால்நிலத்தின் இடைஊன்றி உரம்விரித்துக் கழுத்தினையும் சுரித்துத் தூண்டித் தோல் மயிர்க்குந் தளம் சிலிர்ப்ப விசைத் தெழுந்தான் அவ்விலங்கைத் துலங்கிச் சூழ்ந்த வேலையில்புக் கழுந்தியதோர் மரக்கலம் போல் சுரித்துலைய விசையத் தோளான் இமயமால் வரையை உற்றான் ஆங்குள இமைப்பி லோரும் கமையுடை முனிவர் மற்றும் அறனெறி கலந்தோ ரெல்லாம் அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கப்பால் உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு வகையுற்றான் நாமயோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவுநீங்கி ஏமகூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல் காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டங்கண்டான் நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றியுற்றான் அற்குன்ற அலங்கு சோதி அம்மலை யகலப் போனான் பொற்குன்றம் அனையதோளான் நோக்கினான் புலவன் சொன்ன நற்குன்றம தனைக் கண்டான் உணர்ந்தனன் நரகம் முற்ற எற்குன்ற எரியும் தெய்வ மருந்தடையாளம் என்ன இங்குநின் றின்னை மருந்தென் றெண்ணினால் சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான் ஆயிரம் யோசனை அகன்று மீயுயர்ந்து ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம்மலை ஏ எனும் மாத்திரத்து ஒருகை ஏந்தினான் தாயினன் உலகெலாம் தவழ்ந்த கீர்த்தியான் ( மருத்துமலைப்படலம் 6-10 , 16 , 26 , 27 , 30 , 32 , 43 , 46 , 60 , 63 , 64 ] ஸ்ரீராமர் லட்சுமணருக்காகப் பின்னும் இரங்கல் ஏவியகாரியம் இயற்றி எய்தினை நோவிலை வீடணா என்றுநோக்கிப்பின் தாவரும் பெரும்புகழ்ச் சாம்பன் தன்னையும் ஆவிவந்தனை கொல் என்றருளினானரோ ஐயன்மீர் நம்குலத்து அழிவிதாதலின் செய்வகை பிறிதிலை உயிரின் தீர்த்தவர் உய்கிலர் இனிச்செயற்கு உரியது உண்டெனின் பொய்யீலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் சீதைஎன் றொருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன் சிறுமையால் உற்றபெற்றியை யாதென உனர்த்துகேன் உலகொடு இவ்வுறாக் காதைவன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன் மாயை இம்மான் எம்பிவாய்மையாள் தூயன உறுதிகள் சொன்ன சொல்கொளேன் போயினன் பெண்ணுரை மறாது போனதால் ஆயதிப் பழியுடை மரணம் அன்பினீர் கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால் மண்டமர் புரிந்தனென் வலியின் ஆருயிர் கொண்டிலென் உறவெலாம் கொடுத்து மாள நான் பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால் தேவர் தம் படைக்கலம் தொடுத்துத் தீயவன் சாவது காண்டுமென் றிளவல சாற்றவும் ஆவதை இசைந்திலென் அழிவதென்வயின் மேவுதல் உறுவதோர் விதியின் வென் றியால் எம்பியைத் துணைவரை இழந்தயானினி வெம்புயோ ரக்கரை முருக்கி வேரறுத்து அம்பினின் இராவணன் ஆவிபாழ்படுத்து உம்பருக் குதவி மேல் உறுவது என்னரோ இளையவன் இறந்தபின் எவ்வம் என் எனக்கு அளவறு சீர்த்தியென் அறன் என் ஆண்மை என் கிளையுறு சுற்றமென் அரசுஎன் கேண்மை என் விளைவு தான் என் மறை விதியென் மெய்ம்மை என் தாதையை இழந்தபின் சடாயுஇற்றபின் காதலின் துணைவரும் மடியக் காத்துழல் கோதறு தம்பியும் விளியக் கோள் இலன் சீதையை உவந்து நன் என்பர் சீரியோர் வென்றனென் அரக்கரை வேரும் வியந்து அறக் கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்து இ ன் துணைத் தம்பியை இன்றியான் உளேன் நன்று அரசாளும் அவ்வரசும் நன்றரோ ( மருத்துமலைப்படலம் 68-73 . 76 , 77 , 79 , 80 ] தம்பிக்காக இரங்கின ஸ்ரீராமரை சாம்புவன் தேற்றுதல் படியின் மேற் காதலின் யாதும் பார்க்கிலென் முடிகுவென் உடன் என முடியக்கூறலும் அடியிணை வணங்கிய சாம்பன் ஆழியாய் நொடிகுவது உளதென நுவல்வதாயினான் உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை முன்னமே அறிகுவென் மொழிதல் தீதது என்னெனில் இமையவர் கண்ணுக்கு ஈனமாம் பின்னரே தெரிகுதி தெரிவில் பெற்றியோய் அன்னவன் படைக்கலம் அமரர்தானவர் தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர உன்னை யொன்றிழைத்திலது ஒழித்து நீங்கியது இன்னமும் உவகையொறென்ண்ண வேண்டுமோ பெருந்திறல் அனுமன் ஈண்டுஉணர்வு பெற்றுளான் அருந்துயர் அளவிலாது அரற்றுவானை யான் மருந்திறைப் பொழுதினில் கொணர்குவாய் எனப் பொருந்தினென் வடதிசைக் கடிதுபோயினான் பனிவரை கடந்தனன் பருப்பதங்களின் தனியர சின்புறம் தவிரச் சார்ந்துளன் இனியொரு கணத்தின் வந்தெய்தும் ஈண்டுறும் துனிவரும் துன்பம் நீ துறத்தி தொல்லை யோய் யானலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் தானலால் சிவனலால் நேமி தாங்கிய கோனலால் எனைவரும் உணரும் கோளிலர் வேனிலான் மேனியாய் மருந்தை மெய்யுற தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில ஆன்ற பேரண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் மூன்றென ஒன்றிய உலகம் முன்னை நாள் ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி தருநெறி தருமமே காட்டத் தாழ்க்கிலன் அருமைய தன்று எனா அடி வணங்கினான் இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் [ மருத்துமலைப் படலம் 81 , 82 , 84 , 87 , 89 , 91 } தம்பிமுதலானோர் எழுந்ததற்காக ஸ்ரீராமர் அனுமாரைப் புகழ்தல் தோன்றினன் என்பதோர் சொல்லின் முன்னம் வந்து ஊன்றினன் நிலத்தடி கடவுள் ஓங்கல் தான் வான்தனில் நின்றது வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் கழன்றன நெடுங்கணை கரந்தபுண் , கடுத்து அழன் றில குளிர்ந்தன அங்கம் செங்கண்கள் சுழன்றில உலகெலாம் தொழுத தொங்கலின் குழன்றபூங் குஞ்சியான் உணர்வு கூடினான் யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல் தாழ்வரும் பேரொலி செவியில் சார்தலும் தேவர்கள் வாழ்த்தொலி கேட்ட செங்கணான் யோகம் நீங்கினனென இளவல் ஓங்கினான் ஓங்கிய தம்பியை உயிர்வந்துள்ளுற வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர் நீங்கினன் இராமனும் உலகில் நின்றில தீங்குள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் எழுது குங்குமத் திருவின் ஏந்துகோடு உழுத மார்பினான் உருகி உள்ளுறத் தழுவி நிற்றலும் தாழ்ந்து தாளுறத் தொழுத மாருதிக்கு இனையசொல்லுவான் முன்னின் தோன்றினோர் இறையின் நீங்கலாது என்னின் தோன்றிய துயரின் ஈறுசேர் மன்னின் தோன்றினோம் முன்னம் , மாண்டுளோம் நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் அழியுங்கால் தரும் உதவிக் கையனே மொழியுங்கால் தரும் உயிரும் முற்றுமோ பழியும் காத்து அரும்பகையும் காத்து எமை வழியும் காத்து நம் மரபும் காத்தனை தாழ்வும் ஈங்கிறைப் பொழுது தக்கதே வாழிஎம்பிமேல் அன்பு மாட்டலால் ஏழும் வீயும் என்பகர்வது எல்லைவாய் ஊழி காணும் நீ உதவினாய் அரோ இன்று வீகலாது எவரும் எம்மொடு நின்று வாழுமா நெடிது நல்கினாய் ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ என்றும் வாழ்தியால் இனிதென் ஏவலால் ( மருத்துமலைப்படலம் 99 , 102-104 , 190 --113 ] இலங்கையில் வானரர் நெருப்பிட்டுக் கெர்ச்சனை இடுதல் எண்ணில கோடிப்பல்படை யாவும் மண்ணுறு காவல் திண்மதில் வாயில் வெண்ணிற மேகம் மின்னினம் வீசி நண்ணின போல்வ தொல் நகர் நாண ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி மாசறுதானை மர்க்கட வெள்ளம் நாசமிவ் ஊருக்கு உண்டென நாளின் வீசின வானின் மீன் விழும் என்ன பரல்துறு தொல்பருவத்து எரிபற்ற நிரல்துறு பல்பறவைக்குலம் நீளம் உரற்றின விண்ணின் ஒலித்தெழும் வண்ணம் அரற்றி எழுந்தது அடங்க இலங்கை [ மாயாசீதைப்படலம் 20 , 21 , 24 } இந்திரசித்து மாய சீதையை அனுமார் முன கொண்டு வருதல் இத்தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை கைத்தலை யிற்கொடு காலின் எழுந்தான் உய்த்த பெருங்கிரி மேருவின் உப்பால் வைத்து நெடுந்தகை மாருதி வந்தான் சானகி யாம்வகை கொண்டு சமைத்த மானனை யாளை வடிக்குழல் பற்றா ஊனகு வாளொரு கைக்கொடு உருத்தான் அனவன் இன்னன சொற்கள் அறைந்தான் வந்திவள் காரணமாக மலைந்தீர் எந்தை இகழ்ந்தனன் யானவள் ஆவி சிந்துவென் என்று செறுத்துரை செய்தான் அந்தமில் மாருதி அஞ்சி அயர்ந்தான் யாதும் இனிச்சொல் இல் என எண்ணா நீதி உரைப்பது நேர் என ஓரா கோதில் குலத்தொரு நீகுணம் மிக்காய் மாதை ஒறுத்தல் வசைத்திற மன்றோ போமின் அடாவினை போயது போலாம் ஆமெனில் இன்னும் அயோத்தியை அண்மி காமின் அது இன்று கனல் எரியாக வேமது செய்துஇனி மீள்குவென் என்றான் ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று ஏழை வழங்குறு சொல்லின் ரங்கான் வாளின் எறிந்தனன் மா கடல் போலும் நீளுறு சேனையினோடு நிமிர்ந்தான் ( மாயாசீதைப் படலம் 26 , 29 , 30 , 32 , 37 , 40 ] இந்திரசித்து வெட்டின சீதைக்காக அனுமார் புலம்பல் தென்திசை நின்று வடாது திசைக்கண் பொன் திகழ் புட்பகம் மேற்கொடு போனான் ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் வென்றி நெடுங்கிரி போலவிழுந்தான் அன்னமே என்னும் பெண்ணின் அருங்குலக் கலமே என்னும் என்னமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் சின்னமே செய்யக்கண்டும் தீவினை நெஞ்சம்ஆவி பின்னமே ஆயதில்லை என்னும் போர் ஆற்றல் பேர்ந்தான் கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதனாகிச் சொல்விக்க வந்துபோனேன் நோவுறு துயர்செய்தாரை வெல்விக்க வந்துநின்னை மீட்பிக்க அன்று வெய்தின் கொல்விக்க வந்தேன் உன்னைக் கொடும்பழி கூட்டிக் கொண்டேன் வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன செஞ்சிலை உரவோன் தேடித்திரிகின்றான் உள்ளந்தேற அஞ்சொலாள் இருந்தாள் கண்டேன் என்றயான் அரக்கன் கொல்ல துஞ்சினாள் என்று சொல்லத் தோன்றினேன் தோற்றம் ஈதால் அருங்கடல் கடந்திவ்வூரை அள்ளெரி மடுத்து வெள்ளக் கருங்கடல் கட்டிமேருக் கடந்து ஒருமருந்து காட்டிக் குரங்கினி உன்னோ டொப்பார் இல் எனக்களிப்புக் கொண்டேன் பெருங்கடல் கோட்டம் தேய்ந்ததாயது என் அடிமைப் பெற்றி ( மாயாசீதைப் படலம் 41 , 43 , 48-50 ] சீதைக்காக இரங்குகிற ஸ்ரீராமனர லட்சுமணர் முடுக்குதல் சிங்கஏறனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான் அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடும் புரத்தைப் போரப்பா வெங்கண்ணீர் அருவீசோர மால்வரை என்னவீழ்ந்தான் வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்பு கென்னா தாழ்ந்திரு தடக்கைபற்றி எடுக்கவும் தரிக்கிலா தான் ஆழ்ந்தெழு துன்பத்தாளை அரக்கனின் றயில்கொள் வாளால் போழ்ந்தனன் என்னக்கூறிப் புரண்டனன் பொருமுகின்றான் சித்திரத் தன்மையுற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் மித்திரர் வதனம் நோக்கான் ளையவன் வினவப் பேசான் பித்தரும் இறைபொறாத பேரபிமானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க உயிர் இலன் என்னச் சாய்ந்தான் நாயகன் தன்மை கண்டும் தமக்குற்ற நாணம் பார்த்தும் ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும் வாயொடு மனமும் கண்ணும் யாக்னகயும் உயர்ந்து சாம்பித் தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தனானான் ஊற்றுவார் கண்ணீரோடும் உள்ளழிந்துற்ற தெண்ணி ஆற்றுவா னல்லனாகி அயர்கின் றான் எனினும் ஐயன் மாற்றுவான் அல்லன் பானம் உயிர்உக வருந்தும் என்னா தேற்றுவான் நினைந்து தம்பி இவையிவை செப்பலுற்றான் முடியும்நாள் தா னேவந்து முற்றினால் துன்பமுந்நீர் படியுமாம் சிறியோர் தன்மை நினக்கிது பழியிற்றாமால் குடியும்மா சுண்டதென்னின் அறத்தொடும் உலகைக் கொன்று கடியுமாறன்றிச் சோர்ந்து கழிதியோ கருத்திலார் போல் புக்கிவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிப்படுத்து அரக்கன் போன திக்கெலாம் சுட்டுவானோர் உலகெலாம் தீய்த்துத் தீர்க்கத் தக்கநாம் கண்ணீர் ஆற்றித்தலை சுமந்திருகை நாற்றித் துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றுமன்றே அங்குமிவ் அறமே நோக்கி அரசிழந் தடவி எய்தி மங்கையை வஞ்சன்பற்ற வரம்பழியாது வாழ்தோம் இங்கும் இத்துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கிப் பொங்குவன் தளையிற்பூட்டி ஆட்செய்யப் புகல்வரன்றே மன்றலம் கோதையாளைத் தம்மெதிர் கொணர்ந்து வாளின் கொன்றவர் தம்மைக் கொல்லும் கோளிலர் நாணங்கூரப் பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் அன்றிது கருமம்என்நீ அயர்கின்ற தறிவிலார்போல் ( மாயாசீதைப்படலம் 54 , 55 , 58 , 59. 62 , 63 , 67 , 68 , 69 ] ராமரை அனுமார் முடுக்குதல் [ இப்பகுதி கம்பராமாயணத்தில் சுக்கிரீவன் கூற்றாக அமைந்துள்ளது ] அனையன இளவல் கூற அருக்கன்சேய் அயர்கின்றான் ஓர் கனவுகண்டனனே என்னக்கதுமென எழுந்து காணும் வினையினி உண்டோவல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன மனையுறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்மின் என்றான் இலங்கையை இடந்து வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப் பொலங்குழை மகளிரோடும் பால்நுகர் புதல்வரோடும் குலங்களோ டடங்கக்கொன்று கொடுந்தொழில் குறித்து நம்மேல் விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் அறங்கெடச் செய்துமென்றே அமைந்தனம் ஆகின் ஐய புறங்கிடந் துழைப்பதென் இப்பொழுதிறை புவனம்மூன்றும் கறங்கெனத் திரிந்துதேவர் குலங்களைக் கட்டும் என்னா மறங்கிளர் வயிரத்தோளான் இலங்கைமேல் வாவலுற்றாலை ( மாயாசீதைப்படலம் 70-72 ] சீதையின் இருப்பைக் கண்டுவந்து விபீஷணர் ஸ்ரீராமருக்கு அறிவித்தல் ஏறுதும் என்னாவீரர் எழுதலும் இறைஞ்சிஈண்டுக் கூறுவது உளது துன்பம் கோளுறக் குலுங்கிஉள்ளம் தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் ஆறினென் அதனைஐய மாயம் என்ற யிர்க்கின்றேனால் பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது முத்திறத் துலகும் வெந்து சாம்பராய் முடியுமன்றே அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போனவார்த்தை சித்திரம் இதனையெல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் இமையிடையாக யான் போய் ஏந்திழை இருக்கை எய்தி அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந் தறைந்த பின்னர் சமைவது செய்வதென்று வீடணன் விளம்பத் தக்கது அமைக என்றவனும் சொன்னான் அந்தரத்தவனும் சென்றான் வண்டினது உருவங் கொண்டான் மானவன் மனத்திற் போனான் தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்துதானே கண்டனன் என்பமன்னோ கண்களால் கருத்தில் ஆவி உண்டிலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை வஞ்சனை என்பதுன்னி வானுயர் உவகை வைகும் நெஞ்சினன் ஆகியுள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான் வெஞ்சிலை மைந்தன் போனாள் நிகும்பலை வேள்வியானென்று எஞ்சலில் அரக்கர் சேனை எழுந்தெழுந் தேகக்கண்டான் இருந்தனள் தேவியானே எதிர்ந்தனென் கண்களால்நம் அருந்ததிக் கற்பினாளுக் கழிவுண்டோ அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்குபுக்கான் முருங்கழல் வேள்விமுற்றி முதலற முடிக்கமூண்டான் என்றலும் உலகம் ஏழும் ஏழுமாத்தீவும் எல்லை ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங் கெழுந் தார்க்கும் ஓதை அன்றென ஆகும் என்ன அமரரும் உயிர்க்க ஆர்த்துக் குன்றினம் இதயத்துள்ளி ஆடின குரங்கின் கூட்டம் மாயாசீதைப் படலம் 87-90 , 92 , 94 , 951 ஸ்ரீராமர் லட்சுமணருக்கு யுத்த தந்திரம் கற்பித்தல் வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன் தன்னை மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி ஐய தீர்வது பொருளோ துன்பம் நீஉளை தெய்வம்உண்டு மாருதி உளன் நாம் செய்ததவம் உண்டுவலியும் உண்டால் என்றலும் இறைஞ்சி யாகம்முடியுமேல் யாரும் வெல்லார் வென்றியும் அரக்கர் மேற்றே விடையருள் இளவலோடும் சென்றவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பேன் என்றான் நன்றது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் தம்பியைத் தழுவி ஐயன் தாமரைத் தவிசின் மேலான் வெம்படை தொடுக்குமாயின் விலக்கும் அது வன்றிவீர அம்புநீ துரப்பாயல்லை அனையது துரந்தகாலை உம்பரும் உலகும் எல்லாம்விளியும் அஃது ஒழிதி என்றான் முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் மூனின்ன்று ஒக்கவே விடுமேவிட்டால் அவற்றையும் அவற்றின்ஓயத் தக்கவாறியற்றி மற்றுன்சிலை வலித்தருக்கினாலே புக்கவன் ஆவி கொண்டு போதுதிபுகழின் மிக்கோய் வல்லன மாயவிஞ்சை வகுத்தன அறிந்துமாளக் கல்லுதி தருமம் என்னும் கண்ணகன் கருத்தைக்கண்டு பல்பெரும் போரும் செய்து வருந்தின அற்றம்பார்த்துக் கொல்லுதி அமரர் தங்கள் கூற்றினைக் கூற்றம் ஒப்பாய் இச்சிலை இயற்கைமேனாள் தமிழ்முனி இயம்பிற்றெல்லாம் அச்செனக் கேட்டாய் அன்றே ஆயிரமமௌலி அண்ணல் மெய்ச்சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டுப்பெற்ற கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் ஆணி இவ் வுலகுக்கான ஆழியான் புறத்தில் ஆர்த்த தூணியும் கொடுத்து மற்றும்உறுதிகள் பலவும் சொல்லித் தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன் தழுவலோடும் சேணுயர் விசும்பில் தேவர் தீர்ந்ததெம் சிறுமை என்றார் ( நிகும்பலையாகப்படலம் - 5 , 9 , 10 ] இந்திரசித்தை அனுமார் பழித்தல் சேனாபதியே முதல் சேவகர் தாம் ஆனார் நிமிர்கொள்ளி கொள் அங்கையினார் கானார் நெறியும் மலையும் கழியாப் போனார்கள் நிகும்பலை புக்கனரால் வென்றிச்சிலை வீரனை வீடணன் நீ நின்றிக் கடைதாழுதல் நீதியதோ சென்றிக் கடிவேள்வி சிதைத்திலையேல் என்றிக் கடல்வெல்குதும் யாம் எனலும் வாரணம் அனையவன் துணிப்ப வான்படர் தாரணி முடிப்பெரும் தலைகள் தாக்கலால் ஆரண மந்திரம் அமைய ஓதிய பூரண மணிக்குடம் உடைந்து போயதால் ஓமவெங் கனலவிந்து உழைக்கலப்பையும் காமர்வண் தகுப்பையும் பிறவும் கட்டற வாமமந்திரத் தொழில்மறந்து மற்றவன் தூமவெங் கனலெனப் பொலிந்து தோன்றினன் திரைக்கடல் பெரும்படை இரிந்துசிந்திட மரத்தினின் புடைத்தடர்த்து உகுத்தமாருதி அரக்கனுக் கணித்தென அணுகி அன்னவன் வரக்கதம் சிறப்பன மாற்றங் கூறுவாள் தடந்திரைப் பாவையன்ன சக்கரயூகம் புக்குக் ந்தது கண்டதுண்டோ நாணொலி கேட்டிலோமே தொடர்ந்து போய் அயோத்தி தன்னைக் கிளையொடும் துணிய நூறி நடந்த தெப்பொழுது வேள்விமுடிந்ததே கருமம் நன்றே ஏந்தகல் ஞாலமெல்லாம் இனிதுறைந் தியற்கை தாங்கும் பாந்தளின் பெரியதிண்தோள் பரதனைப் பழியின் தீர்ந்த வேந்தனைக் கண்டு நீரின் வில்வலம் காட்டிமீண்டு போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமையன்றே தீயொத்த வயிரவாளி உடலுறச் சிவந்தசோரி காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் பாயப்போய் இலங்கைபுக்கு வஞ்சனை பரப்பச்செய்யும் மாயப்போ ராற்றலெல்லாம் இன்றொடு மாளு மன்றே வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் பரங்கொள் வானவரின் தெய்வப்படைக்கலம் படைத்தவாறும் உரங்களும் நின்றதன்றே உம்மை நாம் உயிரினோடும் சிரங்களைத் துணித்தும் என்னக்கண்டது திறம்பினோமோ கொல்வென் என்றுன்னைத் தானே குறித்தொரு சூளும் கொண்ட வில்லிவந் தருகுசார்ந்துன் சேனையை முழுதும்வீட்டி வல்லை நீ பொருவாய் என்றுவிளிக்கின்றான் வரிவில்நாணின் ஒல்லொலி ஐயசெய்யும் ஓமத்துக்கு உறுப்பொன்றாமோ நிகும்பலையாகப்படலம் 15 , 27 , 45 , 57 , 69 , 70 , 71 , 73 , 75,77 ] இத்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் மூன்றாம் முறையுத்தம் நின்மின்கள் நின்மின் என்னா நெருப்பெழ விழித்துநீண்ட மின் மின்கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணிவீரப் பொன்மின்கொள் காதைகையில் பூட்டினான் பொறுத்தான் போர்வில் எல்மின்கொள் வயிரத்திண்தேர் ஏறினான் எறிந்தான் நாணி படைப்பெருந் தலைவர் நின்றார் அல்லவர் இறுதிபற்றும் அடைப்பருங்காலக் காற்றால் ஆற்றலது ஆகிக்கீறிப் புடைத்திரிந் தோடும் வேலைப் புனல் என இரியலுற்றார் கிடைத்தபேர் அனுமன் ஆண்டோர் நெடுங்கிரி கிழித்துக்கொண்டான் மனிதருக் கடிமையாய்நீ இராவணன் செல்வம் ஆள்வாய் இனிஉனக்கென்னோ மானம் எங்களோ டடங்கிற்றன்றே சொல்வித்தும் பழித்தும் நுங்கைமூக்கினைத் துணிந்தோராலே எல்வித்தும் படைக்கைஉங்கள் தமையனை எங்களோடும் கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் வெல்வித்தும் வாழும்வாழ்வின் வெறுமையே வீழுமி தன்றோ ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர்வந்தெய்தும் மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே நீயும் அன்னான் தானுடைச் செல்வம் துய்க்கத்தகுதியே சரத்தினோடும் வானிடைப் புகுதியன்றே யான்பழி மறுக்கில் என்றான் [ நிகும்பலையாகப்படலம் 162 , 163 , 165 , 167 , 168 , 170 ] விபீஷணர் இந்திரசித்துக்கு எதிர்மொழிதல் அறந்துணை யாவதல்லால் அருநரகமைய நல்கும் மறந்துணை யாகமாயாப் பழியொடும் வாழமாட்டேன் துறந்திலேன் மெய்ம்மை , பொய்ம்மை உம்மையே துறப்பதல்லால் பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்தபோதே உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் சொண்டிலென் மாயவஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் கண்டிலர் என்பால்உண்டே நீயிரும் காண்டிர் அன்றே பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்றாமோ மூவகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த தேவர் தம் தேவன்தேவி கற்பினிற் சிறந்துளாளை நோவன செய்தல் தீதென்று உரைப்பநின் தாதைசீறிப் போஎன உரைக்கப் போந்தேன் நரகத்தில் பொருந்து வேனோ அறத்தினைப் பாவம்வெல்லாது என்னுமது அறிந்தஞானத் திறத்தினும் உறும் என்றெண்ணித் தேவர்க்கும் தேவைச்சேர்ந்தேன் புறத்தினில் புகழேயாக பழியொடும் புணர்கபோகச் சிறப்பினிப் பெறுகதீர்க என்றனன் சீற்றம் இல்லான் [ நிகும்பலையாகப்படலம் 172 , 173 , 174 , 176 ] இந்திரசித்து தகப்பனுடன் முறைப்படுதல் பெறும்சிறப்பெல்லாம் என்கைப் பிறை முகப்பகழி பெற்றால் இறும் சிறப்பல்லால் அப்பால் எங்கினிப் போவது என்னாத் தெறுஞ்சிறைக்கலுழன் அன்ன ஒருகணை தெரிந்து செம்பொன் உறுஞ்சுடர்க் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின்வெய்யோன் அக்கணை அசனிஎன்ன அனல் என்ன ஆலப் உண்ட முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி இக்கணத்திற்றான் இற்றான் என்கின்ற இமையோர் நாண கைக்கணை ஒன்றால்வள்ளல் அக்கணை கண்டம் கண்டான் கோலொன்று துணிதலோடும் கூற்றுக்குக் கூற்றம் அனைான் வேலொன்று வாங்கியிட்டான் வெயிலொன்று விழுவதென்ன நாலொன்றும் மூன்றுமான புவனங்கள் நீடுங்கலோடும் தூலொன்று வரிவிலானும் அதனையும் நுறுக்கிவீழ்த்தான் வேல்கொடு நம்மேல் எய்தான் என்றொரு வெகுளிபொங்கக் கால்கொடு காலின்கூடிக் கைதொடர் கனகத்தண்டால் கோல்கொளும் ஒருவனோடும் கொடித்தடத் தேரில் பூண்ட பால்கொளும் புரவியெல்லாம் படுத்தினாள் படியின் மேலே ஆர்த்தவன் அனையபோதின் அழிவிலாத் தேர்கொண்டன்றிப் போர்த்தொழில் புரியலாகாது என்பதோர் யொருவின் மன்னிப் பார்த்தவர் இமையாமுன்னம் விசும்பிடைப் படர்ந்தான் என்னும் வார்த்தையை நிறுத்திப் போனான் இராவணன் மருங்கு சென்றாள் [ நிகும்பலையாகப் படலம் 177- 180 , 182 ] விண்ணிடைக் காத்தான் என்ன வஞ்சனை விளைக்கும் என்பார் கண்ணிடைக் கலக்கநோக்கி ஐயுறவு வழக்குங்காலை புண்ணிடை யாக்கைச் செந்நர் இழிதரப் புக்கு நின்ற எண்ணிடை மகனைநோக்கி இராவணின் இனைய சொன்னான் தொடங்கிய வேள்விமுற்றுப் பெற்றிலாத் தொழில் நின்தோள் மேல் அடங்கிய அம்பே என்னை அறிவித்தது கழிவில்யாக்கை நடுங்கினை போலக்சாலத் தளர்ந்தனை கலுழன் நண்ணப் படம் குறை அரவம் ஒத்தாய் உற்றதுபகர்தி என்றான் சூழ்வினை மாயமெல்லாம் . உம்பியே துடைக்கச்சுற்றி வேள்வியைச் சிதைய நூறி வெகுளியாய் எழுந்துவீங்கி ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த்தொழில் தொடங்கி ஆர்க்கும் தாழ்விலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்துவிட்டான் நிலம்செய்து விசும்பும் செய்து நெடியமால் படைநின்றானை வலம் செய்து போயிற்றென்றால் மற்றினி வலியதுண்டோ குலம் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக்கொண்டாய் சலஞ்செயின உலகம்மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்மேம் விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் கிட்டியபோதும் காத்தான் இன்னமும் கிளரவல்லான் சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான் ஆதலால் அஞ்சினேனென்று அருளலை ஆசைதான் அச் சீதைபால் விடுதியா பின் அனையவர் சீற்றம் தீர்வர் போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல் காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கிவென்றான் ( இந்திரசித்துவதைப்படலம் 1-6) இந்திரசித்தை ராவணன் உதாசனித்தல் இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்றிள நிலவு தோன்றப் புயங்களும் குலுங்கநக்குப் போர்க்கினி ஒழிநீபோத மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய சயங்கொடு தருவென் இன்றே மனிதரைத் தனுஒன்றாலே முன்னையோர் இறந்தோரெல்லாம் இப்பகைமுடிப்பர் என்றும் பின்னையோர் நின்றோரெல்லாம் வென்றவர்பெயர் வன்றும் உன்னைநீ அவரைவென்று தருதி என்றுணர்ந்தும் அன்றால் என்னையே நோக்கியான் இந்நெடும்பகை தேடிக்கொண்டேன் பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகெலாம் பெயரப் பேராக் காதை என் புகழினோடுநிவை பெற அமரர்காண மீதெழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவதல்லால் சீதையை விடுவதுண்டோ இருபது திரள் தோள்உண்டால் வென்றிலென் என்றபோதும் வேதம்உள்ளளவும் யானும் நின்றுளென் அன்றோமற்று இவ் இராமன்பேர் நிற்குமாயின் பொன்றுதல் ஒருகாலத்துத் தவிருமோபொது மைத்தன்றோ இன்றுளார் நாளைமாள்வார் புகழுக்கும் இறுதிஉண்டோ விட்டனென் சீதை தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி கட்டுவதல்லால் என்னையானெனக் கருதுவாரோ பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன்யான் எட்டினோ டிரண்டுமான திசைகளை எறிந்து கொண்டேன் சொல்லி என்பலவும் நீநின் இருக்கையைத் தொடர்ந்து தோளில் புல்லிய பகழிவாங்கிப் போர்த்தொழில் சிரமம்போக்கி எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ்வாய் வல்லியம் முனிந்தாலன்னான் வருகதேர் தருக என்றான் [ இந்திர சித்து வதைப் படலம் 7- 12 ] நாலாம் முறை யுத்தத்தில் இந்திரசித்தன் வதை எழுந்தவன் தன்னை நோக்கி இணையடி இறைஞ்சி எந்தாய் ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியைப் பொறுத்தி யான்போய்க் கழிந்தனென் என்றபின்னர் நல்லவாகாண்டி என்னா மொழிந்து தன் தெய்வத்தேர் மேல்ஏறினான் முடியலுற்றான் இலங்கையின் நிருதரெல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி விலங்கலம் தோளாய் நின்னைப் பிரிகலம் விளிதும் என்று வலங்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனைக் காமின்யாதும் கலங்கலிர் இன்றே சென்று மனிதரைக் கடப்பென் என்றான் ஆர்த்தது நிருதர் தம் அனிகமுடன் அமரரும் வெருவினர் கவிகுலமும் வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடுகணை சிதறினன் அடுதொழிலோன் தீர்த்தனும் அவனெதிர் முடுகி நெடும் திசை செவி டெதிர்தர விசைகெழுதிண் போர்த்தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகையனல் பொதுளியதால் வில்லினின் வலிதர அரிதெனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில்விரைவில் செல்என மிடல் கொடு கடவினன் மற்று அதுதிசை முகன்மகன் உதவியதால் எல்லினும் வெளிபட வருவதுகண்டு இளையவன் எழுவகை முனிவர்கள் தம் சொல்லினும் வலியதோர் சுடுகணையால் நடுவிரு துணிபட உரறினனால் தேர்உளதெனின் இவன்வலி தொலையான் எனுமது தெரிவுற உணர்ந்துறுவான் போர்உறு புரவிகள் படுகிலவால் புணைபிணி துணிகில பொருகணையால் சீரிது பெரிதிதன் நிலைமை எனத் தெரிபவன் ஒருசுடு தெறுகணையால் சாரதிமலை புரை தலையை நெடுந் தரையிடை இடுதலும் முறைதிரிய தேரினைக் கடாவிவானில் செல்லினும் செல்லும் செய்யும் போரினைக் கடந்துமாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அக் காரினைக் கடந்துவஞ்சம் கருதினும் கருதும் காண்டி வீரமெய் பகலினல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் பச்சைவெம் புரவிவீயாப் பாலியச் சில்லிபாரில் நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரமிட்ட அச்சினோ டாணிவெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி சிலையறாதெனினும் மற்றத் திண்ணியோன் திரண்டதோளாம் மலையறா தொழியாதென்னா வரிசிலை ஒன்றுவாங்கிக் கலையறாத் திங்கள் அன்ன வாளியால் கையைக்கொய்தான் விலையறா மணிப்பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ காற்றென உருமேறென்னக் கனலெனக் கடைநாள் உற்ற கூற்றம் ஓர்சூலம் கொண்டு குறுகியது என்னக் கொல்வான் தோற்றினான் அதனைக்காணா இனித்தலை துணிக்கும்காலம் ஏற்றதென்றயோத்தி வேந்தற்கிளையவன் இதனைச் செய்தான் நேமியும் குளிசவேலும் நெற்றியும் நெருப்புக்கண்ணான் நாமவேல்தானும் மற்றைநான் முகன்படையும் நாணத் தீமுகம் கதுவ ஓடிச்சென்று அவன் சிரத்தைத் தள்ளிப் பூமழை வானோர் சிந்தப் பொலிந்தது அப்பகழிப்புத்தேன் விண் தலத் திலங்கு திங்கள் இரண்டொடு மின்னும் வீசும் குண்டலத் துணைகளோடும் கொந்தளக்குஞ்சி செங்கேழ்ச் சண்டவெங் கதிரின்கற்றைத் தழையொடும் இரவிதான் அம் மண்டலம் வீழ்ந்ததென்ன வீழ்ந்தது தலையும் மண் மேல் ( இந்திரசித்துவதைப்படலம் 13 , 15 , 20 , 27 , 39 , 37 , 43 , 50 , 52 , 54 ) 4 இந்திரசித்துவதை ராவணன் கேட்ட இடத்திலே புலப் பல் அறந்தலை நின்றார்க்கில்லை அழிவுஎனும் அறிஞர்வார்த்தை சிறந்தது சரங்கள் பாயச்சிந்திய சிரத்தவாகிப் பறந்தலை யதனில் மற்று அப்பாதக அரக்கன் கொல்ல இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் செந்தலையை அங்கை தூக்கினன் உள்ளங்கூர்ந்த வாலிசேய் தூசி செல்ல மேக்குயர்ந் தமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் பூக்கிளர் பந்தர் நீழல் அனுமன்மேல் இளவல்போனான் விழுந்தழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க எழுந்தெதிர் வந்தவீரன் இணையடிமுன்னர் இட்டான் கொழுந்தெழும் செக்கர்க் கற்றைவெயில் விட எயிற்றின் கூட்டம் அழுந்துற மடித்தயேழ் வாய்த்தலை அடியுறை ஒன்றாக ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் சேடனால் அன்று வேறோர் தெய்வத்தின் சிறப்புமன்று வீடணன் தந்தவெற்றியீது என விளம்பி மெய்ம்மை ஏடவிழ் அலங்கல்மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் ( இந்திரசித்துவதைப்படலம் 58 , 59 , 65. 69 ) பல்லும் வாயும் மனமும் தம்பாதமும் நல்லுயிர்ப் பொறையோடு நடுங்குவார் இல்லையாயினன் உன் மகன் இன்று எனச் சொல்லினார் பயம்சுற்ற துளங்குவார் சுடர்க்கொழும்புனக தீவிழி தூண்டிட தடற்று வாளுருவித்தரு தூதரை மிடற்று வீசலுறா விழுந்தானரோ கடற்பெருந் திரைபோல் கரம்சோரவே திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும் பெருகுகாதலும் துன்பும் பிறழ்ந்திட இருபது என்னும் எரிபுரை கண்களும் உருகு செம்பென ஓடியது ஊற்றுநீர் மைந்தவோ எனும் மாமகனே எனும் எந்தையோ எனும் என்னுயிரே எனும் உந்தினேன் உனைநானுளனே எனும் வெந்தபுண்ணிடை வேல்பட்ட வெம்மையான் ஐயனே என்னும் ஓர் தலை யான்இனம் செய்வெனே அரசெனும் அங்குஓர் தலை கையனேன் உனைக்காட்டிக் கொடுத்தநான் உய்வெனே என்றுரைக்கு மங் கோர் தலை எழுவின் கோலம் எழுதிய தோள்களால் கழுவிக் கொள் கலையோ எனும்ஓர் தலை உழுவைப் போத்தை உழைஉயிர் உண்பதே செழுவில் சேவகனே எனும் ஓர் தலை நீலங்காட்டிய கண்டனும் நேமியும் ஏலும் காட்டின் எறிந்த படைக்கெலாம் தோலும் காட்டித் துரந்தனை மீண்டும் நின் ஓலம் காட்டிலையோ எனும்ஓர்தலை துஞ்சும்போது துணைபுரிந்தேன் எனும் வஞ்சமோ எனும் வாரலையோ எனும் நெஞ்சுநோவ நெடுந்தனியே கிடந்து அஞ்சினேன் என்று அங்கரற்றும் ஓர்தலை காகம் ஆடுகளத்திடைக் காண்பெனோ பாகசாதனன் மௌலியொடும் பறித்து ஓகைமாதவர் உச்சியில் வைத்தநின் வாகைநாண் மலர் என்னும் மற்றோர்தலை சேலியற்கண் இயக்கர் தம் தேவிமார் மேலினித் தவிர்நிற்பர் கொல்வீரநின் கோலவிற் குரல் கேட்டுக் குலுங்கித்தம் தாலியைத் தொடல் எனும் மற்றுமோர்தலை கூற்றம் உன்னெதிர்வந்து உயிர்கொள்வதோர் ஊற்றந்தான் உடைத்தன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ்வுல குற்றனை எல்லையில் ஆற்றலாய் என்றுரைக்கும் அங்கோர்தலை ( இராவணன் சோகப்படலம் 3 , 5 , 8 , 10 , 16 - 22 ] இந்திரசித்துக்காக ராவணன் களத்திலே புலம்பல் ன்னவா றழைத்து ஏங்குகின்றான் எழுந்து உன்னும் மாத்திரத்து ஓடினான் ஊழிநாள் பொன்னின் வானன்ன போர்க்களம் புக்கனன் நன்மகன் தனது ஆக்கையை நாடுவான் மெய்கிடந்த விழிவழி நீர் உக நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான் மொய்கிடந்த சிலையொடு மூரிமாக் கைகிடந்தது கண்டனன் கண்களால் கைகண்டான் பின்கருங்கடல் கண்டென மெய்கண்டான் அதன்மேல் விழுந்தானரோ பெய்கண்தாரை அருவிப் பெருந்திரை மொய்கண்டார் திரைவேலையை மூடவே அப்புமாரி அழுந்திய மார்பைத்தன் அப்புமாரி அழுதிழி யாக்கையான் அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால் அப்புமான் உற்றது ஆர்உற்றாரரோ கண்டிலன் தலை காந்தி அம்மானிடன் கொண்டிறந்தனன் என்பது கொண்டவன் புண்திறந்தன நெஞ்சன் பொருமலன் விண்திறந்திட விம்மி அரற்றினான் நிலையின் மாதிரத்து நின்றயானையும் நெற்றிக்கண்ணன் மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறுவில்மைந்தன் தலையும் ஆருயிரும் கொண்டார் அவர் உடலொடுந்தங்கப் புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் சினத்தொடும் கொற்றம்முற்ற இந்திரன் செல்வம்மேவ நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால் எனக்கு நீ செய்யத்தக்க கடனெலாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வதானேன் என்னின்யார் உலகத்துள்ளார் ( இராவணன் சோகப்படலம் 23 , 27 , 30 , 31 , 34 , 35 391 இந்திரசித்துக்காக மண்டோதரி புலம்பல் மாதிரங் கடந்த திண்தோள் மைந்தன் தன் மகுடச்சென்னி போதலைப் புரிந்தயாக்கை பொறுத்தனன் புகுதக்கண்டார் ஓதநீர் வேலையன்ன கண்களால் உகுத்தவெள்ளக் காதல் நீர் ஓடி ஆடல் கருங்கடல் மடுத்ததன்றே சருங்குழல் கற்றைப்பாரம் கால் தொடக் கமலப்பூவால் குரும்பையைப் புடைக்கின்றாள் போல்கைகளால் முலைமேல் கொட்டி அருங்கலச் சும்மைதாங்க அகலல்குல் அன்றிச்சற்றே மருங்குலும் உண்டுண்டென்ன மயன் மகள் மறுகிவந்தாள் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் ? வானமேரு தலையின் மேல் சுமந்தகையள் தழலின் மேல் மிதிக்கின்றாள் போல் நிலையின் மேல் மிதிக்கும் தாளன்ஏக்கத்தால் நிறைந்தநெஞ்சன் கொலையின்மேல் குறித்தவேடன் கூர்ங்கணை உயிரைக்கொள்ள மலையின்மேல் மயில்வீழ்ந்தென்ன மைந்தன் மேல் மறுகிவீழ்ந்தான் உயிர்த்திலள் உணர்வுமில்லள் உயிரிலள் கொல்லோ என்னப் பெயர்திலள் யாக்கைஒன்றும் பேசலள் அல்லதுயாதும் வியர்த்திலள் நெடிதுபோது விம்மலள் மெல்ல மெல்ல அயர்த்தனள் அரிதின்தேறி வாய்திறந்த ரற்றலுற்றாள் கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தேஉன் சிலையினால் அரியைவெல்லக் காண்பதோர் தவம்மூன் செய்தேன் தலையிலா ஆக்கை காண எத்தவம் செய்தேன் அந்தோ நிலையிலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவிலாதேன் ஐயனே அழகனே என் அரும்பெறலமிழ் தே ஆழிக் கையனே மழுவனே என்று இவர்வலி கடந்தகால மொய்யனே முளரியன்ன நின்முகம் கண்டிலாதேன் உய்வெனோ உலகம்மூன்றுக் கொருவனே செருவலோனே தாளரிச் சதங்கைஆர்ப்பத் தவழ்கின்ற பருவந்தன்னில் கோளரி இரண்டுபற்றிக் கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் மூளுறப்பொருத்தி மாடமுன்றிலில் முறையினோடு மீளரு விளையாட்டின்னம் காண்பெனோ விதியிலாதேன் அம்புலி அம்மவா என்று அழைத்தலும் அவிர்வெண்திங்கள் நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண வம்புறும் மறுவைப்பற்றி முயல் என வாங்கும் வண்ணம் எம்பெருங் களிறேகாண ஏசற்றேன் எழிந்திராயோ யக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழைமார்கள் முயல்கறைப் பயிலாத்திங்கள் முகத்தியர் முழுதும் நின்னை மயக்கிய முயக்கந்தன்னால் மலரணை அமளிமீதே அயர்த்தனை உறங்குவாயோ அமர்பொரு தலசினாயோ முக்கணான் முதலினோரை உலகொரு மூன்றினோடும் புக்கபோர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் உக்கிட அணுவொன்றோடி உதைத்தது போலும் அம்மா பஞ்செரி உற்றதென்ன அரக்கர் தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டதில்லை அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்று அமுதாற்செய்த நஞ்சினால் இலங்கைவேத்தன் நாளையித் தகையனன்றோ . ( இராவணன் சோகப்படலம் 42 , 44-5 . ] சீதையை வெட்டநடந்த ராவணனை மகோதரன் தடுத்தல் என்றழைத்திரங்கி ஏங்கஇத்துயர் நமர்கட்கெல்லாம் பொன் தழைத் தனைய அல்குல் சீதையால் புகுந்ததென்ன வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் கொன்றிழைத் திடுவேன் என்னா ஓடினன் அரக்கர்கோமான் ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சிச் சூடுகின்றான் என்றஞ்சி மகோதரன் துணிந்தநெஞ்சன் மாடு சென்றடியில் வீழ்ந்துவணங்கி நின்புகழ்க்கு மன்னா கேடுவந் தடுத்ததென்னா இனையன கிளத்தலுற்றான் நீருளதனைழம் சூழ்ந்த நெருப்புளதனையும் நீண்ட பாருளதனையும் வானப்பரபுளதனையும் காலின் பேருள தனையும் பேராப் பெரும்பழி பிடித்திபோலாம் போருளதனையும் வென்று புகழுளதனையும் உள்ளாய் தெள்ளருங் காலகேயர் சிரத்தொடும் திசைக்கண்யானை வெள்ளிய மருப்புச்சிந்த வீசியவிசயத் தொள்வாள் வள்ளயம் மருங்குற் செவ்வாய் மாதர்மேல் வைத்தபோது கொள்ளுமே ஆவிதானே நாணத்தால் குறைவதல்லால் மங்கையைக் குலத்துளாளை தவத்தியை முனிந்துவாளால் சங்கைஒன் றின்றிக்கொன்றால் குலத்துக்கேதக் கான் என்று கங்கையம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் செங்கையும் கொட்டிஉன்னைச் சிரிப்பரால் சிறியன் என்னா நிலத்தியல் பன்றுவானின் நெறியன்று நீதியன்று தலத்தியல் பன்றுமேலோர் தருமமேல் அதுவுமன்று புலத்தியன் மரபின்வந்து புண்ணியமரபு பூண்டாய் வலத்தியல் பன்றுமாயாப் பழிகொள மறுகுவாயோ இன்று நீ வளைவாளால் எறிந்தனை இராமன் தன்னை வென்று மீண்டிலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ பொன்றினள் சீதைஇன்றே புரவலபுதல்வன் தன்னனக் கொன்றவர் தம்மைக்கொல்லக் கூசினைகொள்க என்றான் [ இராவணன் சோகப்படலம் 54 - 60 ] தூதர் ராவணனுக்கு மூலபலத்தை விவரித்தல் என்னலும் எடுத்தகூர்வாள் இருநிலத் திட்டுமீண்டு மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலர்வலிதின் கொண்ட சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டன்றிச் சேர்கேன் தொன்னெறி தயிலத்தோணி வளர்த்துமின் என்னச்சொன்னான் [இராவணன் சோகப்படலம் 61 ] அத்தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்துத்திக்கும் பொத்திய நிருதர்தானை கொணரிய போய தூதர் ஒத்தனர் அணுகிவந்து வணங்கினர் இலங்கை உன்ஊர்ப் பத்தியின் அடைந்ததானைக் கிடமிலைபணி என் என்றார் அப்பொழு தரக்கர்கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்திப் பொதுவுற நோக்கலுற்றான் ஒருநெறி போகப்போக விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலைஏழும் கதுமென ஒருங்குநோக்கும் பேதையின் காதல் கொண்டான் மாதிரம் ஒன்றின் நின்று மாறொருதிசை மேல்மண்டி ஓதநீர் செல்வதன்ன தானையை உணர்வு கூட்ட வேதவே தாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்போல் தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சொல்வார் சாரத்தீவினின் உறைபவர் தானவர் சமைத்த யாரத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம் மோகத்தில் படமுடித்தவர் மாயையின் முதல்வர் மேகத்தைத் தொடும்மெய்யினர் இவர் என விரித்தார் குசையின் தீவினின்உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் வசையும் வன்மையும் வளர்ப்பவர் வானநாட்டுறைவார் இசையும் செல்வமும் இருக்கையும் இழந்து இங்கிவரால் விசையம் தாம் என நிற்பவர் இவர் நெடுவிறலோய் இலவத்தீவினில் உறைபவர் இவர்கள் பண்டு இமையாப் புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப்பொருதார் நிலவைச்செஞ் சடைவைத்தவன் வரம்தர நிமிர்ந்தார் உலவைக்காடுறு தீயெனவெகுளி பெற்றுடையார் அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வடமேருக் குன்றைக் கொண்டுபோய் குரைகடல்இட அறக்குலைந்தோர் சென்றித் தன்மையைத் தவிரும்என்று இரந்திடத் தீர்ந்தோர் பவளக்குன்றினின் உறைபவர் வெள்ளிபண் பழிந்தோர் குவளைக் கண்ணி அங்கு இராக்கதக் கன்னியைக்கூட அவளின் தோன்றினர் ஐயிரு கோடியர் நொய்தின் திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர் சிலநாள் கந்தமாதானம் என்பது இக்கருங் கடற்கப்பால் மந்தமாருதம் ஊர்வதோர் கிரி அதில் வாழ்வோர் அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர் இந்தவாளெயிற் றரக்கர் எண் அறிந்திலம் இறைவ மலயம் என்பது பொதியமாமலை அதில்மறவோர் நிலயம் அன்னது சாகரத்தீவிடை நிற்கும் குலையுமிவ் உலகெனக்கொண்டு நான்முகன்கூறி உலைவிலீர் இதில்உறையும் என்றிரந்திட உறைந்தார் மூக்கரக்கையர் மூவிலைவேலினர் முசுண்டி சக்கரத்தினர் சாபத்தர் எனநின்ற தலைவர் நக்கரக்கடல் நால்ஒரு மூன்றுக்கும் நாதர் புக்கரப் பெரும் தீவிடை உறைபவர் புகழோய் மறலியைப் பண்டுதம் பெருந்தாய் சொல்வலியால் புறநிலைப் பெரும்சக்கர மால்வரைப் பொருப்பின் விறல் கெடச் சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர் இறலிஅப் பெருந்தீவிடை உறைபவர் இவர்கள் ஒருவரே சென்று அவ்உறுதிறல் குரங்கையும் உரவோர் இருவர் என்றவர் தம்மையும் ஒருகையோடு ஏற்றி வருவர் மற்றினிப் பகர்வதென் வானவர்க்கரிய நிருபர் என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் [ படைக்காட்சிப் படலம் 1 , 8-18 , 29 ] சமர்த்துப் பேசிய வன்னியை மாலியவான் இடித்தல் என்னகை யெறிந்து இடி உரும் ஏறெனநக்கு மின்னும் வாளெயிற் றரக்கரை அங்கையால் விலக்கி வன்னி என்பவன் புட்கரத்தீவிற்கு மன்னன் அன்னதோர் நார்வலியர் என்றே அவர்க் கறைந்தான் மற்ற வாசகம் கேட்டலும் மாலியவான்வந்து உற்றதன்மையும் மனிதரது ஊற்றமும் உடனாம் கொற்ற வானரத்தலைவர் தம் தகைமையும் கூறக் கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் பரியதோளுடை விராதன் மாரீசனும் பட்டார் கரியமால் வரை நிகர் கரதூடணர் கதிர்வேல் திரிசிரா அவர்திரைக் கடல் அன பெருஞ்சேனை ஒருவிலால் ஒருநாழிகைப் பொழுதினில் உலந்தார் ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றேகடல் அனைத்தும் ஊழிக்கால் எனக்கடப்பயன் வாலிஎன் போனை ஏழுகுன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இந்நாள் பாழிமார்பகம் பிய்த்து உயிர்குடித்தது ஓர்பகழி இங்குவந்து நீர்வினாயது என் எறி திரைப் பரவை அங்குவெந்தில தோசிறிது அறிந்ததும் இலிரோ கங்கைசூடிதன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம் உங்கள் வான்செவி புகுந்திலதோ முழங்குாதை ஆயிரம் பெருவெள்ள முண்டு இலங்கையின் அளவில் தீயின் வெய்ய போர் அரக்கர் தம் சேனை அச்சேனை போயது அந்தகன் புரம்புக நிறைந்தது போலாம் ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்தவில் இரண்டால் கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும் நுங்கள் கோமான் பெற்றமைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும் மற்றை வீரரும் இந்திர சித்தொடு மடிந்தார் இற்றை நாள் வரை யானும்மற்றி வருமே இருந்தோம் மூலத்தானை என்றுண்டு அதுமும்மை நூறமைந்த கூலச் சேனையின் வெள்ளம் மற்றதற்கு இன்று குறித்த காலச் செய்கைநீர் வந்துளீர் இனித்தக்க கழலோர் சீலச் செய்கையும் சேனையின் செய்கையும் தெரிக்கில் ஒருகுரங்குவந்து இலங்கையின் மலங்கெரியூட்டித் திருகுவெஞ் சினத்து அரக்கனை நிலத்தொடும் தேய்த்துப் பொருது தூதுரைத் தேகியது அரக்கியர் புலம்பக் கருதுசேனையும் கொன்றுமாக் கடலையும்கடந்து கண்டிலிர் கொலாம் கடலினை மலைகொண்டுகட்டி மண்டுபோர் செயவானவர் இயற்றிய மார்க்கம் உண்டுவெள்ள மோர் எழுபது மருத்தொரு நொடியில் கொண்டுவந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து இது இயற்கை ஓர்சீதை என்றிருந்தவத் தியைந்தான் பொது இயற்கை தீர்கற்புடைப் பத்தினி பொருட்டால் விதிவிளைந்தது அவ்வில்லியர் வெல்க நீர்வெல்க முதுமொழிப் பதம்சொல்லினேன் என்றுரை முடித்தான் ( படைக்காட்சிப் படலம் 38 48 ] மூலபலம் கண்டு ஓடின சாம்புவான் முதலோரை மறித்த அங்கதனுக்கு அவன் கூறுதல் மூதுணர்ந்த இம் முதுமகன் கூறிய முயற்சி சீதை என்பவள் தனைவிட்டு அம்மனிதரைச் சேர்தல் ஆதியின் தலை செய்த்தக்கது இனிச்செயல் அழிவால் காதல் இந்திர சித்தையும் மாய்வித்தல் கண்டும் எனஉரைத்தலும் எழுந்து தம் இரதமேல் ஏறிக் கனைதிரைக் கடல்சேனையைக் கலந்ததுகாணா வினையம் மற்றிலை மூலமாத்தானையை விரைவோடு னையர்முன் செலஏவுக என்று இராவணன் இசைத்தான் நீண்ட தோள்களால் வேலையைப் புறஞ்செல நீக்கி வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கித் தூண்டுவான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி மூண்டவான் மழைஉரித்துடுத்து உலாவரும் மூர்க்கர் உண்ணும் தன்மைய ஊன்முறை தப்பிடின் உடனே மண்ணில் நின்றமால் யானையை வாயிடும் பசியார் தண்ணின் நீர்முறை தப்பிடின் தடக்கையால் தடவி விண்ணின் மேகத்தை வாரிவாய் பிழிந்திடும் விடாயர் புற்றினின்று வல்லரவினம் புறப்படப் பொருமி இற்றதெம் வலி என விரைந்து இரிதரும் எலிபோல் மற்றை வானரப் பெருங்கடல் பயங்கொண்டு மறுகிக் கொற்ற வீரரைப் பார்த்திலது இரிந்தது குலைவால் அடைத்த போணை அளித்தது நமக்குயிர் அடைய உடைத்துப் போதுமால் அவர் தொடராமல் என்றுரைத்த புடைத்துச் செல்குவர் விசும்பினும் என்றன போதோன் படைத்த திக்கெலாம் பரந்தனர் என்றன பயத்தால் கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும்கிளரக் காட்டுகின் றனென்காணுதி ஒருகணத்து என்னா ஓட்டின் மேற் கொண்டதானையை பயந்துடைத்து உரவோய் - மீட்டி கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் மீண்டுவே லையின்வடகரை ஆண்டொரு வெற்பின் ஈண்டினார்களை என் குறித் திரிவுற்றது என்றான் ஆண்டநாயக கண்டிலைபோலும் நீ அவரை மாண்டு செய்வது என் என்றுரை கூறினர் மறுப்பார் என் அப்பா மற்று இவ் எழுபது வெள்ளமும் ஒருவன் தின்னப் போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் முன் இப் பாரெலாம் படைத்தவன் நாளெலாம் முறைநின்று உன்னிப் பார்த்துநின்று உரையிடப் போதுமோயூகம் நாயகன் தலை பத்துளகையும் நாலைந்தென்று ஓயும்உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்திங்குற்றார் ஆயிரந்தலை அதற்கு இரட்டிக் கையர் ஐயா பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் அனுமன் ஆற்றலும் அரசன தாற்றலும் இருவர் தனுவின் ஆற்றலும் தம்முயிர் தாங்கவும் சாலா கனியும் காய்களும் உணவுள முழையுளகாக்க மனிதர் ஆளின் என் இராக்கதர் ஆளின் என் வையம் தாம்உளார் அலரேபுகழ் திருவொடும் தரிப்பார் யாம்உளோம் எனின்எம்கிளை உள்ளது எம்பெரும் போமின் நீர் என்றுவிடைதரத் தக்கனை புரப்போய் சாமின்நீர் என்றல் தருமமன்று என்றனர் தளர்ந்தார் ( மூலபலவதைப் படலம் 2 , 7 , 9 , 27 , 29 , 34 , 36 , 40 , 41 , 43 , 44 ] அங்கதன் சாம்புவனை இடித்தல் சாம்பனை வதனம்நோக்கி வாலிசேய் அறிவுசான்றோய் பாம்பணை அமலனே மற்று இராமன் என்றெ மக்குப்பண்டே ஏம்பல் வந்தெய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ நீ ஆம்பலம் பகைஞன் தன்னோடு அயிந்திரம் அமைந்தோன் அன்னாய் தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இத்தெருளிலோரை ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி போற்றுவாய் என்றபோது புகழென்னாம் புலமை என்னாம் கூற்றின்வாய் உற்றால்வீரம் குறைவரே இறைமை கொண்டார் அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம்புவியாண்டும் ஆவி துஞ்சுமாறன்றி வாழ ஒண்ணுமோ நாள்மேல் தோன்றின் நஞ்சுவாய் இட்டாலன்ன அமுதன்றோ நம்மையம்மா தஞ்சம் என்றணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றோ தானவரோடும் மற்றைச் சக்கரத் தலைவனோடும் வானவர் கடையமாட்டா மறிகடல் கடைந்தவாலி ஆனவன் அம்பொன்றாலே உலந்தமை அயர்த்ததென்நீ மீனலர் வேலைப்பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டில்லை அன்றே அத்தனை அறத்தை வெல்லும்பாவ மென்றறிந்த துண்டோ பித்தரைப் போல நீயும் இவருடன் பெயர்ந்ததன்மை ஒத்திலது என்னச்சொன்னான் அவன் இவை உரைப்பதானான் எடுத்தலும் சாய்தல் தானும் எதிர்த்தாலும் எதிர்த்தோர் தம்மைப் படுத்தலும் வீரவாழ்க்கை பற்றினர்க்குற்ற மேல்நாள் அடுத்ததே அஃதுநிற்க அன்றியும் ஒன்று கூறற்கு எடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துளீர் ஏதுநோக்கின் ஒன்றும்நீர் அஞ்சல்ஐய யாமெலாம் ஒருங்கே சென்று நின்றும் ஒன்றியற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து கொன்று போர் கடக்குமாயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் பொன்றுதும் அவனோடென்றான் போதலே அழகிற்றென்றான் ( மூலபலவதைப் படலம் ( 5 - 49 , 55 , 56 ) மூலபலசண்டை ஈண்டிய தானைநீங்க நிற்பதென் யாமே சென்று பூண்டவெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா மீண்டனர் தலைவரெல்லாம் அங்கதனோடு வீரன் மூண்டவெம் படையை நோக்கித் தம்பிக்கு மொழிவதானான் மாருதியோடு நீயும் வானரக் கோனும்வல்லே பேருதிர் சேனைகாக்க என்னுடைத் தனிமைபேணிச் சோருதிர் என்னின் வெம்போர் தோற்றும் நாம் என்னச்சொன்னான் வீரன் மற்றதனைக்கேட்ட இளையவன் விளம்பலுற்றான் ஐயநிற் கியலாதுண்டோ இராவணன் அயலேவந்துற்று எய்யும்விற் கரத்துவீரன் இலக்குவன் தன்னோடேற்றால் மொய்யமர் களத்தின் உன்னைத் துணைபெறான் என்னின் முன்ப செய்யும்மா வெற்றியுண்டோ சேனையும் சிதையும் அன்றே வீடண நீயும் மற்றும் தம்பியோடேகி வெம்மை கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறிக்கொற்றம் நீடுறுதானை தன்னைத் தாங்கினை நில்லாய் என்னின் கேடுளதாகும் என்றான் அவனது கேட்பதானான் சூரியன் சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் பூரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல காரியம் என்னக் கொண்டார் கடற்படை காத்து நின்றார் வீரியன் பின்னர்ச்செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் ஓசனை நூற்றின்வட்டம் இடைவிடாதுறைந்த சேனைத் தூசிவந்து அண்ணல் தன்னைப் போக்கற வளைத்துச்சுற்றி வீசின படையும் அம்பும்மிடைதலும் விண்ணோர் ஆக்கை கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோ மகூடம் இந்நிமித்தம் இப்படைக்கு இடைந்து வந்தடுத்ததோர் துன்னிமித்தம் - என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் அந்நிமித்தம் உற்றபோது அரக்கர்கண் அரங்கமேல் மின்னிமிர்ந்த தன்னவாளி வேதநாதன் வீசினான் ஆளிமேலும் ஆளின் மேலும் ஆனைமேலும் ஆடல்மா மீனிமேலும் வீரர்மேலும் வீரர் தேரின் மீதினும் வாளிமேலும் வில்லின் மேலும் மண்ணின்மேல் வளர்ந்தமாத் தூளிமேலும் ஏற ஏற வீரன்வாளி தூவினான் விழித்தகண்கள் கைகள் மெய்கள் வேறலைக் கழுத்தினில் தெழித்தவாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினைப் பழித்தவாளி சிந்தநின்று பட்ட அன்றி வட்டகோல் கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்ததில்லை கண்டதே குரந்துணிந்து கண்சிதைந்து பல்லணம் குலைந்து பேர் உரந்துணிந்து வீழ்வதன்றி ஆவி ஓட ஒண்ணுமோ சரந்துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் வரந்துணிந்த வீரர்போரின் முந்தஉந்து வாசியே கொடிக்குலங்கள் தேரின்மேல யானைமேல கோடைநாள் இடிக்குலங்கள் வீழவெந்த காடுபோல் எரிந்தவால் முடிக்குலங்கள் கோடிகோடி சிந்தவேகம் முற்றுறா வடிக்குலங்கள் வாளிஓட வாயினூடு தீயினால் தெய்வ நெடும் படைக்கலங்கள் விடுவர் சிலர் சுடுகணைகள் சிலையிற் கோலி எய்வர் சிலர் எறிவர்சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் யாவும் ஏந்திப் பெய்வர்சிலர் பிடித்தும் எனக்கடுத்துறுவர் படைக் கலங்கள் பெறாதுவாயால் வைவர்சிலர் தெழிப்பர்சிலர் வருவர்சிலர் திரிவர்சிலர் வயவர் மன்னோ மழுவற்றுகும் மலையற்றுகும் வளையற்றுகும் வயிரத்து ஏழுவற்றுகும் எயிறற்றுகும் இலையற்றுகும் எறிவேல் பழுவற்றுகும் மதவெங்கரி பற்றற்றுகும் இரதக் குழுவற்றுகும் ஒரு வெங்கணை தொடைபெற்ற தொர்குறியால் தீஒத்தன உருமொத்தமர் சரம்சிந்திடச் சிரம்போய் மாயத்தவர் மடிகின்றனர் எனவும் மறங்குறையா காயத்திடை உயிர்உண்டிட உடன் மொய்த் தெழுகளியால் ஈயொத்தன நிருதக்குலம் நறவொத்தனன் இறைவன் மொய்தாரையொர் இமைப்பின் தலை முடுகத்தொடு சிலையால் தைத்தானவன் கழல்திண் பசுங்காய் ஒத்தனர் சரத்தால் கைத்தார் கடுங்களிறும் கனத்தேரும் களத்தழுந்தக் குத்தான் அழிகுழம்பாம் வகைவழுவாச் சரக்குழுவால் பிரிந்தார்பலர் இரிந்தார்பலர் பிழைத்தார்பலர் உழைத்தார் புரிந்தார்பலர் நெரிந்தார்பலர் புரண்டார்பலர் உருண்டார் எரிந்தார்பலர் கரிந்தார்பலர் எழுந்தார்பலர் விழுந்தார் சொரிந்தார் குடலர் துமிந்தார் தலைகிடந்தார் எதிர்தொடர்ந்தார் ஒல்வதே இவ் வொருவன் இவ்ஊகத்தைக் கொல்வதே நின்று குன்று அனயாம் எலாம் வெல்வது ஏதும் இலர்மையின் வெண்பலை வெல்வதேயென வன்னி விளம்பினான் ஊன்தரு வடிக்கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவைக் கானகம் நிகர்த்தனர் அரக்கர்மலை ஒத்தன கலித்தமதமா மானவன் வயப்பகழி வீசுவலை ஒத்தன வலைக்குள் உளவாம் மீனகுலம் ஒத்தன கடற்படை விளிந்திறுதலால் மூலமுதலாய் இடையுமாய் இறுதி ஆய்எவையும் முற்றும்முயலும் காலமெனல் ஆயினன் இராமன் அவ் அரக்கர் கடைநாளில் விளியும் கூலமில் சராசரம் அனைத்தினையும் , ஒத்தனர் குரைகடல்ஏழும் ஆலமென லாயினன் இராமன் அவர் மீனமென லாயினர்களால் தேரும்மத மாயும்வரை ஆளியொடு வாசிமிகு சீயம்முதலா ஊருமவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் காரும் உருமேறும் எரிஏறும் நிகர் வெம்படையொடு அம்புகடிதின் தூரும்வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் எய்தகணை எய்துவதன் முன்பு இடை அறுந்திவர்கள் ஏழுலகமும் மொய்கொள் கணைமாமுகில் எனும்படி வளைத்தனர் முனிந்தனர்களால் வைதுகொலின் அல்லது மறப்படை கொடிப்படை கடக்கும் வலிதான் செய்யதிரு மாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் உலகு செவிடுபட மழைகள் உதிரஉயர் அலகில் மலைகுலைய அமரர் தலையதிர இலகு தொடுபடைகள் இடியொ டுருமனைய விலகியது திமிலம் விளையும் வகைவிளைய எய்யும் ஒருபகழி ஏழுகடலும் இடு வெய்ய களிறுபரி யாளொடு இரதம்விழ ஒய்ய ஒருகதியின் ஓடஉணர் அமரர் கைகள் என அவுணர் கால்கள் கதிகுலைவ அண்ணல் விடுபகழி யானை இரதம் அயல் பண்ணு புரவிபடை வீரர் தொகுபகுதி புண்ணினொடு குறிகள் புள்ளி என விரைவின் எண்ணுவன அனைய எல்லையில நுழைவ ஆயிரம் வெள்ளம் உண்டொருவர் ஆழிசூழ் " மாயிரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் மேயின் பெரும்படை இதனை ஓர்விலால் ஏஎனும் மாத்திரத்து எய்து கொன்றனன் கொன்றனன் இனிஒரு கோடிகோடி மேற்று அன்றெனின பதுமமேற்று ஆகில் வெள்ளம் ஆய் நின்றது நின்றதினி நினைவ தென்பெற ஒன்றென உணர்கென வன்னி ஓதினான் விழித்துமோ ராவணன் முகத்து மீண்டும் யாம் பழித்துமோ நம்மை நாம் படுவதஞ்சினால் அழித்தும் ஓர் பிறப்புறா நெறிசென் றண்மயாம் கழித்தும் இவ்வாக்கையைய் புகழைக் கண்ணுற மழுஎழு தண்டுகோல் வலயம் நாஞ்சில்வாள் எழுஅயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் கழுஇகல் கப்பணம் முதலகைப்படை தொழுவினில் புலியனான் உடலில் தூவினார் ஐயிரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் மொய்வலி வீரர்கள் ஒழிய முற்றுற எய் எனும் மாத்திரத்த விந்தது என்பரால் செய்தவத் திராவணன் மூலச்சேனையே எல்லோம் எல்லோம் ஒன்றிவளைந்திந் நெடியோனை வல்லே வல்லயோர் வலிமுற்றி மலையோமேல் வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் தொல்லோன் சொல்லே நன்றென அஃதே துணிவுற்றார் ஊழிக்கனல் போல்பவர் உந்தின போர் ஆழிப்படை அம்பொடும் அற்றகலப் பாழிக் கடைநாள் விடுபல்மழைபோல் வாழிச் சுடர்வாளி வழங்கினனால் ஒருவன் எனஉன்னும் உணர்ச்சியிலார் இரவன் றிதுஓர்பகல் என்பர்களால் தரவன்றிது ராமர் கணக்கிலரால் பரவை மணலின் பலர் என்பர்களால் தேர்மேல் உளர்மாவொடு செந்தறுகண் கார்மேல் உளர்மாகடல் மேல்உளர் இப் பார்மேல் உளர்உம்பர் பரந்துளரால் போர்மேலும் இராமர் புகுந்தடர்வார் என்னும்படி எங்கணும் எங்கணுமாய்த் துன்னும் சுழலும் திரியும் சுடரும் பின்னும் அருகும் உடலும் பிரியான் மன்னன் மகன்வீரர் மயங்கினரால் கோடி ஐயிரண்டு தொக்கபடைக்கல மன்னர்கூவி ஓடி ஓர் பக்கமாக உயிரிழந் துலத்தலோடும் வீடிநின் றழிவதென்னே விண்ணவர் படைகள் வீசி மூடுதும் இவனை என்று யாவரும்மூண்டு மொய்த்தார் விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படையீறாகக் கொண்டொருங் குடனே விட்டார் குலங்கியதமரர் கூட்டம் அண்டமும் கீழ்மேலாக ஆகியத்தனை அண்ணல் கண்டொரு முறுவல்காட்டி அவற்றினை அவற்றாற் காத்தான் ஆயிர வெள்ளத்தோடும் அடுகளத்தவிந்து வீழ்ந்தார் மாயிரு ஞாலத்தாள் தன் வன்பொறைப் பாரம் நீங்கி மீஉயர்ந் தெழுந்தாள் அன்றேவீங்கொலி வேலைநின்றும் போயொருங் கண்டத்தோடும் கோடியோ சனைகள் பொங்கி தீமொய்த்த அனையசெங்கண் அரக்கரை முழுதும்சிந்திப் பூமொய்த்த கரத்தாகி விண்ணவர் போற்றநின்றான் பேய்மொய்த்து நரிகள்ஈண்டிப் பெரும்பிணம் பிறங்கித் தோன்றும் ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற் றிறைவன் ஒத்தான் ( மூலபல வதைப்படலம் 57 , 61 , 64 , 67 , 68 , 70 , 79 , 80 , 83 , 85. 89 , 97 , 105 , 109-111 , 128 , 136 , 140 , 142 , 146 , 150 , 159 , 166 , 167, 172 , 175 , 176 , 179 , 182, 186 , 195 , 210, 212 , 213 , 223 , 224, 226, 229 ] லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் விருத்தம் - 89 தரு - 73 சில்லி ஆபிரம் சில்உளைப் பரியொடும் சேர்ந்த எல்லவ ன்கதிர்மண்டிலம் மாறுகொண் டிமைக்கும் செல்லும் தேர்மிசைச் சென்றனன் தேவரைத் தொலைத்த வில்லும் வெங்கணைப் புட்டிலும் கொற்றமும் விளங்க நூறு கோடிதேர் நொறில்பரி நூற்றிரு கோடி ஆறுபோல் மதமாகரி ஐயிருகோடி ஏறுகோளுறு பதாதியும் இவற்றிவற்றிரட்டி சீறுகோளரி யேறனானுடன் அன்று சென்ற ஏழும் ஏழும் என்றுரைக்கின்ற உலகங்கள் யாவும் ஊழி பேர்வதே ஒப்பதோர் உலைவுற உடற்றும் நூழில் வெஞ்சமம் நோக்கி அவ் இராவணன் நுவன்றான் தாழில் என்படைத் தருக்கறும் என்பதோர் தன்மை இரில் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி அரிகள் அஞ்சன்மின் அஞ்சன்மின் என்றருள்வழங்கித் திரியும்மாருதி தோளெனும் தேர்மிசைச் சென்றான் எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர்புகுந் தேற்றான் ஏற்றுக் கோடலும் இராவணன் எரிமுகப்பகழி நூற்றுக் கோடியின் மேற்செலச் சிலைகொடு நூக்கக் காற்றுக் கோடியபஞ்செனத் திசைதொறும் கரக்க வேற்றுக்கோல் கொடுவிலக்கினன் இலக்குவன் விசையால் காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பனகணைகள் நூக்கினான்கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் ஆக்கும் வெஞ்சமத்து அரிது இவன் தனை வெல்வது அம்மா நீக்கி என் இனிச்செய்வது என்று இராவணன் நினைந்தான் மோகமாப்படை ஒன்றுளது அயன் முதல் வகுத்தது ஆகமற்றது கொற்றமும் சிவன் தனை அழிப்பது ஏகமுற்றிய விஞ்சையை இவன்வயின்ஏவி காகம் உற்றுழல் களத்தினில் கிடத்து வென் கடிதின் என்பதுன்னி அவ்விஞ்சையை மனத்திடை எண்ணி முன்பன்மேல் வரத்துறந்தனன் அதுகண்டு முடுகி அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி என்பதோதினன் இலக்குவன் அது தொடுத் தெய்தான் வீடணன் சொல விண்டுவின் படைக்கலம் விட்டான் மூடுவெஞ்சின மோகத்தை நீக்கலும் மூனிந்தான் மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திடவந்த கேடுநம்தமக் கென்பது மனங்கொண்டு கிளர்ந்தான் மயன் கொடுத்தது மகளொடு வயங்கனல் வேள்வி அயன்படைத்துளது ஆழியுல் குலிசமும் அனையது உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் சயந்தனைப் பொருந்தம்பியை உயிர்கொளச் சமைந்தான் விட்டபோதினில் ஒருவனை வீட்டியே மீளும் பட்டபோதவன் நான் முகனாயினும் படுக்கும் வட்டவேலது வலங்கொடு வாங்கினன் வணங்கி எட்டநிற் கலாத்தம்பிமேல் வல்விசைத் தெறிந்தான் தோற்பென் என்னினும் புகழ்நிற்கும் தருமமும் தொடரும் ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பதென் நெடும்பழிவந்து தொடர்வதன் முன்னம் ஏற்பென் என் தனி மார்பின் என்றிலக்குவன் எதிர்ந்தான் இலக்குவற்குமுன் வீடணன் புகும் இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி கலக்கும் வானரக்காவலன் அனுமன் முன் கடுகும் அஃக்கண் அன்னதை ன்னதென்றுரை செயலாமோ முன்னின் றாரெலாம் பின்னுறக் காலினும்முடுகி நின்மின் யானிது விலக்குவென் என்றுரை நேரா மின்னும் வேலினை விண்ணவர் கண்புடைத் திரங்கப் பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடைப்போக எங்கு நீங்குதி நீயென வீடணன் எழுந்தான் சிங்க ஏறன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் பொங்குபாய்பரி சாரதியொடும் படப்புடைத்தான் சங்கவானவர் தலையெடுத்திட நெடுந்தண்டால் சேய்விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன்சீறி பாய்கடுங்கணை பத்தவன் உடல்புகப் பாய்ச்சி ஆயிரம்சரம் அனுமன் தன் உடலினில் அழுத்திப் போயினன் செருமுடிந்த தென்றிலங்கையூர் புகுந்தான் அரக்கன் ஏகினன் வீடணன் வாய்திறந் தரற்றி இரக்கந் தான் என இலக்குவன் இணையடித் தலத்தில் கரக்கலாகலாக் காதலின் வீழ்ந்தனன் கழலுந்தான் குரக்கு வெள்ளமும் தலைவகும் துயரிடைக் குளித்தார் மருத்தின் காதலன் மார்பிடை அம்பெலாம் வாங்கி இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் கருத்தைஉன்னி அம்மாருதி உலகெலாம் கடந்தான் தந்தனன் மருந்து தன்னைத் தாக்குதல் முன் னேயோகம் வந்தது மாண்டார்க் கெல்லாம் உயிர் தரும் வலத்ததென்றால் நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிதன்றோ நொடித்தல் முன்னே இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளையவீரன் எழுந்துநின் றனுமன் தன்னை இருகையால் தழுவி எந்தாய் விழுந்திலன் அன்றோ மற்றவ்வீடணன் என்றுவிம்மித் தொழுந் துணையவனை நோக்கித் துணுக்கமும் துயரும் நீக்கிக் கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று வகை கொண்டான் உற்றது முழுதும் நோக்கி ஒழிவற உணர்வுள்ளூறச் சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனைத் தொடரப்புல்லி பெற்றனென் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் அற்றிடையூறு செல்லாஆயுளை ஆதி என்றான் ( வேலேற்றபடலம் 2 , 3 , 11 , 18 , 19 , 21 , 23 27 , 30 34 , 37 , 40 , 42 , 43 , 46 | மூலபலப் படுகளக்காட்சி மூண்டெழு சேனை வெள்ளம் உலகொரு மூன்றின் மேலும் நீண்டுள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்னத் தூண்திரண்டனைய திண்டோள் சூரியன்புதல்வன் சொல்லக் காண்டிநீ அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் [ வேலேற்றப்படலம் 52 ) ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கோர் அளவிற்றன்றால் மேயினதுறைகள் தோறும் விம்மினார் நிற்பதல்லால் பாய்திரைப் பரவைஏழும் காண்குறும் பதகர் என்ன நீயிருந் துரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் காகப்பந்தர் செங்களம் எங்கும் செறிகால ஓகத்தம்பின் பொன்றின வேனும் உடல் ஒன்றி மேகச்சங்கம் தொக்கன வீழும்வெளியின்றி நாகக் குன்றின் நின்றன காண்மின் நமரங்காள் ஒழுகிப்பாயும் மும்மதவேழம் உயிரோடும் எழுகிற் கில்லாச் செம்புனல் வெள்ளத் திடையிற்ற பழகிற்றல்லாப் பல்திரை தூங்கும் படர்வேலை முழுகித் தோன்றும் மீனரசொக்கும் முறைநோக்கீர் பூவாய் வாளிச் செல்எறிகாலைப் பரிபொன்றக் கோவார் விண்வாய் வெண்கொடி திண்பாயொடுகூட மாவார் திண்டேர் மண்டுதலால் நீர்மறிவேலை நாவாய் மானச்செல்வன காண்மின் நமரங்காள் கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவிதேரும் துடியின்பாதக் குன்றின்மிசை தோல் விசியின் கட்டு ஒடியும்வெய்யோர் கண்எரிசெல்ல உடன் வெந்த தடியுண்டாடிக் கூளிநடிக் கின்றனகாணீர் விண்ணில் பட்டார் வெற்புறழ் காயம் பலமேன்மேல் மண்ணில் செல்வார் மேனியின் வீழமடிவுற்றார் எண்ணின் தீரா அன்னவை தீரும்மிடல் இல்லாக் கண்ணில் தீயார் விம்மிஉளைக்கும் படிகாணீர் என்று காணினும் காட்டினும் ஈதிறைக் குன்று காணினும் கோளிலது ஆதலால் நின்று காணுதும் நேமியினானுழைச் சென்று காண்டும் என்றேகினர் செவ்வியோர் ( வானரர்களங்காண்படலம் 3 , 4 , 7 , 8 , 15 , 17 , 33 ] ஸ்ரீராமரை மாலியவான் கொண்டாடல் இன்னதன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடுவந்தெய்தி வணங்கினார் அன்ன சேனைகளம்பட்ட வாறெலாம் துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார் என்னினும் வலியரான இராக்கதர்யாண்டும் வீயார் உன்னினும் உலப்பிலாதார் உவரியின் மணலின் மேலார் பின்னொரு பெயருமின்றி மாண்டனர் என்று சொன்ன இந்நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் கேட்டய லிருந்தமாலி ஈதொரு கிழமைத்தாமோ ஓட்டுறு தூதர்பொய்யே உரைப்பரோ உலகம்யாவும் வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கெரி விரித்த எல்லாம் மாட்டுவன் ஒருவனன்றே இறுதியில் மனத்தான் என்றான் அளப்பரும் உலகம்யாவும் அளித்துக்காத் தழிக்கின் தழிக்கின்றான் தன் உளப்பெருந் தகைமைதன்னால் ஒருவனென் றுண்மைவேதம் கிளப்பது கேட்டுமன்றே அரவின்மேல் கிடந்தமேல்நாள் முளைத்தபேர் இராமன் என்ற வீடணன் மொழிபொய்த்தாமோ ஒன்றிடின் அதனைஉண்ணும் உலகத்தின் உயிர்க்கொன்றாத நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் யாண்டும் குன்றொடு மரனும்புல்லும் பல்லுயிர்க் குழுவும் கொல்லும் வன்திறல் காற்றும் காண்டும் வலிக்கொரு வரம்பும் உண்டோ பட்டதும் உண்டேஉன்னை இந்திரன் செல்வம்பற்று விட்டது மெய்ம்மை ஐயமீட்டொரு வினையம் இல்லை கெட்டதுன் பொருட்டினாலே நின்னுடைக்கேளி ரெல்லாம் சிட்டது செய்தி என்றான் அதற்கவன் சீற்றம் செய்தான் இலக்குவன் தன்னைவேலால் எறிந்துயிர் கூற்றுக்கீந்தேன் அலக்கணில் தலைவரெல்லாம் அழுந்தினர் அதனைக் கண்டால் உலக்குமால் இராமன்பின்னர் உயிர்ப்பொறை உகவான் உற்ற மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்ததென்றா ன் ஆண்டது கண்டு நின்ற தூதுவர் ஐயமெய்யே மீண்டதவ் வளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் தீண்டவும் தாழ்த்ததில்லை யாருமச் செங்கணானைப் பூண்டனர் தழுவிப்புக்கார் காணுதி போதிஎன்றார் (ராவணன்களங்காண்படலம் 7 , 12--13 ) மூலபலப் படுகளத்தை இராவணன் கண்டது தேறிலன் ஆதலானே மறுகுறு சிந்தைதேற ஏறினன் கனகத்து ஆரைக் கோபுரத்தும் பர் எய்தி ஊறின சேனை வெள்ளம் உலந்தபே பேருண்மை எல்லாம் காறின உள்ளம் கோவக்கண்களால் தெரியக்கண்டான் கொய்தலைப் பூசல்பட்டோர் குலத்தியர் குவளைதோற்று நெய்தலை வென்றவாட்கண் குமுதத்தின் நீர்மைகாட்டக் கைதலை வைத்தபூசல் கடலொடு நிமிருங்காலைச் செய்தலை உற்றஓசைச் செயலதும் செவியின் கேட்டான் எண்ணும் நீர் சடந்த யானைப்பெரும் பிணம் ஏந்தியாணர் மண்ணின் நீர் அளவும் சல்லிரெடு மலை பறித்து மண்டும் புண்ணின் நீர் ஆறும் பல் பேய்ப் புதுப்புனல் ஆடும் பொம்மல் கண்ணின் நீர் ஆறும் மாறாக்கருங்கடல் மடுப்பக்கண்டான் குமிழிநீரோடும் சோரிக்கனலொடும் கொழிக்கும் கண்ணான் தமிழ்நெறி வழக்கமன்ன தனிச்சிலை வழங்கச் சாய்ந்தார் அமிழ்பெருங் குருதிவெள்ளம் ஆற்றுவாய் முகத்தின்தேக்கி உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம்வந்து உடற்றக்கண்டான் விண்களிற் செறன்வன்தோள் கணவரை அலகை வெய்ய புண்களின் கைகள் நீட்டிப் புதுநிணம் கவர்வநோக்கி மண்களில் தொடர்ந்து வானில் பிடித்தவள் வளுகிரின்மானக் கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் ( இராவணன்களங்கான்படலம் 19-23 ] இராவணன் தேர் ஏறுதல் விண்பிளந் தொல்கஆர்த்த வானரர் வீக்கங்கண்டான் மண்பிளந் தழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கங்கண்டான் கண்பிளந் தகலநோக்கும் வானவர் களிப்பும் கண்டான் புண்பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்திழிந்து போந்தான் ( இராவணன் களங்காண்படலம் 24 ] பூதரம் அனையமேனிப் புகைநிறப் புருவச்செந்தீ மோதரன் என்னும் நாமத் தொருவனை முறையின் நோக்கி ஏதுளது இறந்திலாதது இலங்கையுள் இருந்தசேனை யாதையும் எழுகஎன்றான் மணிமுரசுஎற்றுக என்றான் அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் உருவினோடும் வந்துதித்தனர் ஆம்என ஒளிரக் கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டிச் செருவில் இந்திரன் தந்தபொன் கவசமும் சேர்த்தான் நாலஞ்சுஆகிய கரங்களில் நனந்தலை அனந்தன் ஆலஞ்சார் மிடற்று அருங்கறை கிடந்தென இலங்கும் கோலஞ்சர் நெடுங்கோதையும் புட்டிலும் கட்டித் தாலஞ்சார்ந்த மாசுணம் எனக் கங்கணங்தழுவ நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர்முன பணித்த வாகை மாலையும் மருங்குற வரிவண்டொடு அளவித் தோகையன்னவர் விழிதொடர் தும்பையும் சூட்டி வருகதேர் என வந்தது வையமும் வானும் உரகதேயமும் ஒருங்குடன் ஏறினும் உச்சிச் போரில் செல்வது சொருகு பூவன்ன சுமையது துரகம் இன்றெனினும் நிருதர் கோமகன் நினைத்துழிச் செல்வது ஓர் நினைப்பில் பாரில் செல்வது விசும்பிடைச் செல்வது பரந்த நீரில் செல்வது நெருப்பிடைச் செல்வது நிமிர்ந்த ஊரில் செல்வது எவ்வுலகினும் செல்வதுஓர் இமைப்பின் ஏறினான் தொழுது இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார் வேறுதாம் செயும்வினையிலை மெய்யின் ஐம்புலனும் ஆறினார்களும் அஞ்சினார் உலகெலாம் அனுங்க மன்றலம் குழற்சனகிதன் மலர்க்கையான் வயிறு கொன்று அலந்தலை கொடு நெடுந்துயரிடைக் குளித்தல் அன்றிதென்றிடின் மயன் மகள் அத்தொழில் உறுதல் இன்று இரண்டின் ஒன்றாக்குவென் தலைப்படின் என்றான் ( இராவணன் தேர் ஏறுபடலம் 1 , 4 , 9 , 18 , 20 , 25 , 26 ] இராவணன் அவசகுனம் காணுதல் அடல்வலி அரக்கற்கு அதுபோழ்து அண்டங்கள் அழுந்தமண்டும் கடல்களும் வற்ற வெற்றிக் கால்கிளர்ந்து உடற்றுங்காலை வடவரை முதலவான மலைக்குலம் சலிப்பபோன்று சுடர்மணி வலயம்சிந்தத் துடித்தன இடத்தபொற்றோள் உதிரமாரி சொரிந்தது உலகெலாம் அதிரவானம் இடிந்தது அருவரை பிதிர வீழ்ந்தது அசனி ஒளிபெறாக் கதிரவன் தனை ஊரும் கலந்ததால் வரவும் வாசிகள் தூங்கின வாங்கலில் ஏவும் வெஞ்சிலை நாண் இடை இற்றன நாவும் வாயும் உலர்ந்தன நாள்மலர்ப் பூவின் மாலைபுலால் வெறிபூத்ததால் எழுது வீணைகொடு ஏந்து பதாகைமேல் கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் ஒழுகுகின்றன ஓடுஇகல் அடல்மா தொழுவில் நின்றன போன்றன சூழிமா இன்னவாகி இமையவர்க் கின்பம் செய் துன்னி மித்தங்கள் தோன்றின தோன்றவும் அன்ன தொன்றும் நினைந்திலன் ஆற்றுமோ என்னை வெல்ல மனித்தன் என்றெண்ணுவான் ( இராவணன்வதைப்படலம் 18-22 ] ஸ்ரீராமர் தேர் ஏறுதல் தொழும் கையொடு வாய்குழறி மெய்ம்முறை துளங்கி விழுந்து கவிசேனை யிடுபூசல் மிகவிண்ணோர் அழுந்து பணிமீதமளி அஞ்சல் என அந்நாள் எழுந்தபடி யேகடிது எழுந்தனன் இராமன் மாதலி கொணர்ந்தனன் மகோத்தி வளாவும் பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தோ சீதமதி மண்டலமும் ஏனையுளவும் திண் பாதம் என நின்றது படிந்தது விசும்பில் என்னையிது நம்மையிடை எய்தல் என எண்ணா மன்னவர்தம் மன்னன் மகன் மாதலியை , வந்தாய் பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு ஆர்புகல என்றான் அன்னவனும் அன்னதனை ஆகஉரை செய்தான் முப்புரம் எரித்தவனும் நான்முகனும் முன் நாள் அப்பகல் இயற்றியுளது ஆயிரம் அருக்கர்க்கு ஒப்புடையது ஊழிதிரி நாளும் உலைவில்லா இப்பொருவில் தேர்வருவது இந்திரனது எந்தாய் இல்லையினி ஐயம் என எண்ணிய இராமன் நல்லவனை நீயுனது நாமம் நவில்க என்ன வல் இதனை ஊர்வது ஒருமாதலி எனப்பேர் சொல்லுவர் எனத்தொழுது நெஞ்சினொடு சொன்னான் விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்பத் தொழுந்தகை நல்வினை களிப்பினொடு துள்ள அழுந்து துயரத்தமரர் அந்தணர்கை முந்துற்று எழுந்து தலையேற இனிது ஏறினன் இராமன் [ இராமன் தேரேறுபடலம் 1 , 7 , 18 , 19 , 25 , 27 ] மகோதரன் வதை தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரகத்தேர்மேல் ஏன்றிருவருக்கும் வெம்போர் எய்தியது இடையேயானோர் சான்றென நிற்றல் குற்றம் தருதியால் விடையீண்டென்றான் வான்தொடர் குன்றமன்ன மகோதரன் இலங்கைமன்னை மீண்டவன் இளவல்நின்ற பாணியின் விலங்கா முன்னம் ஆண் தகை தெய்வத்தின் தேர் அணுகியது அணுகாமுன்னம் மூண்டெழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்டத் தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் எண்ணருங்கோடி வெங்கண் இராவணரேயும் இன்று நண்ணிய பொழுதுமீண்டு நடப்பரோ கிடப்பதல்லால் அண்ணல் தம்தோற்றங் கண்டால் ஐயநீ கமலமன்ன கண்ணனை ஒழிய அப்பால் செல்வதே கருமம் என்றான் என்றலும் எயிற்றுப்பேழ் வாய்மடித்து அடடா எடுத்து நின்னைத் தின்றனென் எனினும் உடாம்ண்பழி எனச்சீற்றம் சிந்தும் குன்றன தோற்றத்தான் தன் கொடி நெடுந்தேரின் நேரே சென்றதவ் இராமன் திண்தேர் . விளைந்தது திமிலத் திண்போர் பொன் தடந் தேரும்மாவும் பூட்கையும் புலவுண்வாட்கைக் கற்றடந் திண்தோள் ஆளும்நெருங்கிய கடல்களெல்லாம் வற்றின இராமன்வாளி வடவனல் பருகவன் தாள் ஒற்றைவன் தடந்தேரோடும் மகோதரன் ஒருவன் சென்றான் அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின் மேல் அரவத் தேர்மேல் குசையுறு பாகன் தன்மேல் கொற்றவன் குவவுத் தோள் மேல் விசையுறு பகழிமாரி வித்திணான் விண்ணினோடும் திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல செய்தான் வில்ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடைக்கரம் ஓரொன்றால் கல்லொன்று தோளும் ஒன்றால் கழுத்தொன்றால் கடிதின்வாங்கிச் செல் ஒன்று கணைகள் ஐயன்சிந்தினான் செப்பிவந்த சொல் ஒன்றாய்ச் செய்கைஒன்றாய்த் துணிந்தனன் அரக்கன் அஞ்சி ( இராவணன் வதைப்படலம் 8 , 10-15 ] கடைசி நாளில் இராவண யுத்தம் மோதரன் முடிந்தவண்ணம் மூவகை உலகத்தோடும் மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் சேதனை உண்ணக்கண்டான் செலவிடு செலவிடென்றான் சூதனும் முடுகித் தூண்டச் சென்றது துரகத் திண்தேர் பனிப்படா நின்றதென்னப் பாக்கின்ற சேனைபாறித் தனிப்படானாகின் இன்னம் தாழ்கிலன் என்றும் தன்மை நுனிப்பாடா நின்றவீரன் அவன் ஒன்று நோக்காவண்ணம் குனிப்படா நின்றவில்லால் ஒல்லையின் நூறிக் கொன்றான் கண்ட சங்கரன் நான்முகன் கைத்தலம் விண்டசங்கத் தொல் அண்டம் வெடித்திட அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பெலாம் உண்ட சங்கம் ராவணன் ஊதினான் ஆசையும் விசும்பும் அலையாழியும் தேசமும் மலையும் நெடுந்தேவரும் கூச அண்டங்குலுங்கக் குலங்கொள் தார் வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் உரும்ஒப்பன கனல் ஒப்பன ஊற்றந்தரு கூற்றான் மருமத்தினும் நுழைகிற்பன மழைஒப்பன வானோர் நிருமித்தன படைபற்றற நிமிர்உற்றன அமிழ்தப் பெருமத்தினை முறை சுற்றிய பெரும்பாம்பினும் பெரிய துண்டப்படு நெடுமேருவைத் தொளைத்துள்ளுறை தொங்காது அண்டத்தையும் பொதுத்தேகு மென்றிமையோர்சளும் அயிர்த்தார் சண்டத்தெறு கணைக்காற்றிணைக் கருணைக்கடல் கனகச் சண்டச்சர மழைகொண்டு அவையிடையே அறத்தடுத்தான் உடையான் முயன்றுறுகாரியம் உறுதீவினை உடற்ற இடையூறு சிதைந்தாங்கெனச் சரம்சிந்தின விறலும் தொடையூறிய கணைமாரிகள் தொகைதீர்த்த வைதுரந்தான் கடைஊறுறு கணமாமழை கால் வீழ்ந்தெனக் கடியான் விண்போர்த்தன திசைபோர்த்தன மலைபோர்த்தன விசையோர் கண்போர்த்தன கடல்போர்த்தன படிபோர்த்தன கலையோர் எண்போர்த்தன எரிபோர்த்தன இருள்போர்த்தன என்னே திண்போர்த் தொழில் என்றாணையின் உரிபோர்த்தவன் திகைத்தான் நூறாயிரம் வெடிவெங்கணை நொடிஒன்றினில் விடுவான் ஆறாவிறல் மறவோன் அவைதனிநாகன் அறுப்பான் கூறாயின கனல்சிந்துவ குடிக்கப்புனல் குறுகிச் சேறாயின பொடியாயின திடராயின கடலும் வில்லால் சரம்துரக்கின்ற வற்குடனே மிடல் வெம்போர் வல்லான் எழுமழுதோ மரம் மணித்தண்டிருப் புலக்கை தொல்லார் மிடல்வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து எல்லாம் நெடுங்கரத்தால் எடுத்தெறிந்தான் செரு அறிந்தான் ஒத்துச்செரு விளைக்கின்றதொர் அளவின் தலையுடனே பத்துச்சிலை எடுத்தான் கணைதொடுத்தான் பலமுகில் போல் தொத்துப்படு நெடுந்தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான் குத்துக்கொடு நெடுங்கோல்படு களிறாம் எனக் கொதித்தான் முழவிடு தோளொடு முடியும் பல் தலை விழவிடுவேன் இவிசும்பு சேமமோ மழவிடையனைய நம்படைஞர் மாண்டனர் எழவிடுதேரை என்று இராமன் கூறினான் ஒறுத்துல கனைத்தையும் உழலும் ஓட்டிடை இறுத்தில இராவணன் எறிந்த எய்தன அறுத்ததும் தடுத்ததுமன்றி ஆரியன் செறுத்தொரு தொழிடை செய்ததில்லையால் எய்தன சரமெலாம் இமைப்பின் முந்துறக் கொய்தனன் அகற்றி வெம் கோலின் கோவையால் நொய்தென அரக்கனை நெருங்க நொந்தன செய்தனன் இராகவன் அமரர்தேறினார் ஆயதோர் அமைதியின் அறிவினின் அமைவான் நாயகன் ஒருவனை நலிகிலதுணர் வான் ஏயினன் இருளுறு தாமதம் எனும் அத் தீவீனைதருபடை தெறுதொழில் மறவோன் கண்ணுதல் ஒருவனது அடுபடைகருதி பண்ணவன் விடுதலும் அதுநனிபருக எண்ணுறு கனவினொடு உணர்வென இமையில் ண்ணெனும் நிலையினின்று எறிபடை தொலைய ஆசுரப்பெரும் படைக்கலம் அமரரை அமரின் ஏசுவிப்பதெவ் உலகமும் எவரையும் வென்று வீசுவெற்பிறத் துரந்தவெங்கணையது விசையின் பூசுரர்க் கொருகடவுள் மேல்சென்றது போலாம் நுங்குகின்றதிவ் வுலகைஓர் நொடிவரை என்ன எங்கும் நின்றுநின்றலமரும் அமரர்கண்டிரைப்ப மங்குல்வல் உருமேற்றின் மேல் எரிமடுத்தென்ன அங்கிதன் நெடும்படை தொடுத்து இராகவன் அறுத்தான் அயன்படைத்த பேரண்டத்தில் அருந்தவம் ஆற்றிப் பயன்படைத்தவர் யாரினும் படைத்தவன் பல்போர் வியன்படைக்கலம் தொடுப்பென்யான் இனிஎனவிரைந்தான் மயன்படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன் மேல் பாந்தள் பல் தலைப் பரப்பு அகன்புவியிடைப் பயிலும் மாந்தர்க்கு இல்லையால் வாழ்வென வருகின்ற அதனைக் காந்தர்ப்பம் என்னும் கடுங்கொடும் கணை பினாற் கடிந்தான் ஏந்தல் பல்பணி எறுழ் வலித்திரள்புயத்து இராமன் பண்டு நான்முகன் படைத்தது கனகன் இப்பாரை தொண்டு தொட்டது மது எனும் அவுணன் முன்பு தொட்டது உண்டிங் கென்வயின் அதுதுரந்து உயிர்உண்பென் எனாத் தண்டுகொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடைத்தலையாள் கண்டு தாமரைக்கடவுள் மாப்படை எனக்கழறா அண்டர் நாயகன் ஆயிரத்தளவினும் அடங்காப் புண்டரீகத்தின் மொட்டென்ன புகர்முகக்கணையால் உண்டை நூறுடை நூறுபட்டுளது எனஉதிர்த்தான் வென்றானென்றே உள்ளம் வெயர்த்தான் விடுசூலம் பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் ஒன்றாம் உங்காரத்திடை உக்குஓடுதல் காணா நின்றான் அந்நாள் வீடணனார் சொல்நினைவுற்றான் அவ்வாறுற்ற ஆடரவம் தன் அகல் வாயால் கவ்வாநின்ற மால்வரை முற்றும் அவை கண்டான் எவ்வாய் தோறும் எய்தின என்னா எதிர்எய்தான் தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால் ஒக்கநின்று எதிர் அமர் உடற்றுங் காலையில் முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன மிக்கன இராமற்கு வலியும் வீரமும் வேதியர் வேதத்துமெய்யன் வெய்யவற்கு ஆதியின் அணுகிய அற்றம் நோக்கினான் சாதியின் நிமிர்ந்த தோர் தலையைத் தள்ளினான் பாதியின் மதிமுகம் பகழி ஒன்றினால் மேருவின் கொடுமுடி வீசுகால்எறி போரிடை ஒடிந்து போய் புணரிபுக்கென ஆரியன் சரம்பட அரக்கன் வன் தலை நீடிடை விழுந்தது நொருப்பொடன்று போய் இறந்ததோர் உயிருடன் கருமத்து ஈட்டினால் பிறந்துள தாம் எனல் பெயர்த்தும் அத்தலை மறந்திலது எழுந்தது மடித்தவாயது சிறந்தது தவமலால் செயலுண்டாகுமோ தலையரின் தருவதோர் தவமும் உண்டென நிலையுறு நேமியான் அறிந்து நீசனைக் கலையுறு திங்களின் வடிவுகாட்டிய சிலையுறு கையையும் நிலத்திற்சேர்த்தினான் கொற்ற வெஞ்சரம்படக் குறைந்து போனகை பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற மற்றொர்கை பிடித்தது போலவவ்வியது அற்றகை பிறந்தகை யாரதுஓர்குவார் ஓய்வகன்றது ஒருதலை நூறுறப் போய் அகன்று புரளப்பொருகணை ஆயிரம் தொடுத்தான் அறிவின்தனி நாயகன் கைக்கடுமை நடத்தியே நீர்த்தரங் கங்கள்தோறும் நிலந்தொறும் சீர்த்தமால் வரைதோறும் திசைதொறும் பார்த்த பார்த்த இடந்தொறும் பல் தலை ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்தென கூற்றின் வெங்கணை கோடியின் கோடிகள் தூற்றினான் வலிமும்மடி தோற்றினான் வேற்றொர் வாளரக்கன் எனவெம்மையால் ஆற்றினான் செருகண்டவர் அஞ்சினார் மாறிமாறி வரிசிலை வாங்கினான் நூறு நூறினொடு ஐயிருநூறவை வேறுவேறு திசையுற வெங்கணை நூறி நூறி இராமன் நுறுக்கினான் காலும் வெங்கனலும் கடைகாண்கிலா மாலும் கொண்ட வடிக்கணை மாமுகம் நாலும் கொண்டு நடந்தது நான்முகன் மூலமந்திரம் தன்னொடு மூட்டலால் அக்கணத்தின் அயன்படை ஆண்டகை சக்கரப்படை யொடும் தழீ இச்சென்று புக்கதக் கொடியோன் உரம்பூமியும் திக்கனைத்தும் விசும்பும் திரிந்தவே முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன் நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப்புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி | [ இராவணன் வதைப்படலம் 16, 17 , 24, 28 , 31 , 47 , -50, 53 , 54 , 55 , 60 , 71 , 78 , 89 , 94 , 97 , 98 , 102 , 104 , 105. 108 , 134 , 141 , 147 , 148 , 149 , 151 , 155 , 156 , 161 , 162 , 183 , 187 , 194 , 196 , 197 ] இராமபாணத்தால் இராவணன் இறந்தது கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ எனதிணிதோட் காட்டினின்றும் தார்நின்ற மலைநின்றும் பணிக்குலமும் மணிக்குலமும் தளர்ந்து சிந்தப் போர்நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்கத் தேர் நின்று நெடுநிலத்துச் சிகரமும் கீழ்ப் படவிழுந்தான் சிகரம் போல்வான் வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க மனமடங்க வினையம் வீயத் தெவ்மடங்கப் பொருதடக்கைச் செயலடங்க மயல் அடங்க ஆற்றல்தேயத் தம்மடங்கு முனிவரையும் தலையடங்கா நிலையடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர்துறந்த முகங்களம்மா ( இராவணனவதைப்படலம் 199 , 2001 அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும் பொன்றினான் என்று தோளைப் பொதுவற நோக்கும் பொற்புக் குன்றி ஆசுற்றதன்றே இவன் எதிர்குறித்த போரில் பின்றியான் முதுகிற்பட்ட பிழம்புள தழும்பின் அம்மா கார்த்த வீரியன் என்பனால் கட்டுண்டான் என்னக்கற்கும் வார்த்தை உண்டு அதனைக்கேட்டு நாணுறு மனத்தினேற்குப் போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம் நேர்ந்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க மாண்டொழிந் துலகில் நிற்கும் வயங்கிசை முயங்கமாட்டாது ஊண்தொழி லுகந்து தெவ்வர் முறுவல் என்புகழை உண்ணப் பூண்தொழில் உடைய மார்பா போர்ப்புறம் கொடுத்தோர்ப் போன்ற ஆண்தொழி லோரிற் பெற்ற வெற்றியும் அழகிற்றென்றான் அவ்வுரைக் கிறுதி நோக்கி வீடணன் அருவிக்கண்ணன் வெவ்வுயிர்ப்போடு நீண்டவிம்மலன் வெதும்பும் நெஞ்சன் செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா எவ்வுயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்றினைய சொன்னான் ஆயிரந் தோளினானும் வாலியும் அரிதின் ஐய மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த - மெய்ம்மை தாயினும் தொழத்தக்காள்மேல் தங்கிய காதல் , தன்மை நோயும் நின் முனிவுமல்லால் வெல்வரோ நுவலற் பாலார் நாடுளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல் பீடுள குன்றம் போலும் பெருந்திசை எல்லையானைக் கோடுள தனையும் புக்குக் கொடும்புறத் தெழுந்த புண்கோள் பாடுள தன்றித் தெவ்வர் படைக்கலம் பட்டென் செய்யும் அப்பணை அனைத்தும் மார்பிற் கணியெனக் கிடந்த வீரக் கைப்பணை முழங்க மேல்நாள் அமரிடைக் கிடைத்த காலன் துப்பணை வயிரவாளி விசையினும் காலின் தோன்றல் வெப்பணை குத்தினாலும் வெரிநிடைப் போய அன்றே அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித் தன்னதோள் இளையை நோக்கி வீடணா தக்கதன்றால் என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்டச் சொன்னதோர் விதியினாலே கடன் சொத் துணிதி என்றான் [ இராவணன் வதைப் படலம் 206-213 , 215 ] போழ்ந்தென அரக்கன் செய்த புள் தொழில் பொறையிற்றாமால் வாழ்ந்தநீ இவனுக்கேற்ற வழிக்கடன் வகுத்தி என்னத் தாழ்ந்ததோர் கருணை தன்னால் தலைமகன் அருளத்தள்ளி வீழ்ந்தனன் அவன்மேல் வீழ்ந்த மலை பின்மேல் மலைவீழ்ந்தென்ன உண்ணாதே உயிர்உண்ணாது ஒருநஞ்சு சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் , நீயும் களப்பட்டாயே எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் எண்ணுதியோ எண்ணில் ஆற்றல் அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள் தம் பிரளயமே அமரர் கூற்றே ஓராதே ஒருவன் தன் உயிராசைக் குலமகள் மேல் உற்றகாதல் தீராத வசையென்றேன் எனைமுனிந்த முனிவு ஆறித் தேறினாயோ போராசைப் பட்டெழுந்த குலம் முற்றும் பொன்றவும் தான் பொங்கிநின்ற பேராசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசைக் கரியிரியப் புருவம் பேர்த்தாய்
அன்றெரியில் விழுவேத வதிஇவள்காண் உலகுக்கோர் அன்னையென் குன்றனைய நெடுந்தோளாய் கூறினேன் அதுமனத்துள் பொள்ளாதேபோய் உன்றனது குலமடங்க உருத்தமரில் படக்கண்டும் உறவாகாதே பான்றினையே இராகவனார் புயவலியை இன்றறிந்து போயினாயே மன்எறல்மா மலரோனும் வடிமழுவாள் படையோனும் வரங்கள் ஈந்த ஒன்றலா தனஉடைய முடியோடும் பொடியாகி உதிர்ந்துபோன அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற ன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவனாதல் வீரநா டுற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் பேரன் நாடுற்றாயோ பிறைசூடும் பிஞ்ஞகன் தன்புரம் பெற்றாயோ ஆர் அணா உன்உயிரை அஞ்சாதே கொண்டகன்றார் அதெலாம் நிற்க மாரனார் வலியாட்டம் அவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பழி தீர்த்தாளோ நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் தம்பி தம்மோடு எல்லாரும் பகைஞரே யார்முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் போர்மகளைக் கலைமகளைப் புகழ்மகளைத் தழுவியகை பொறாமை கூரச் சீர்மகளைத் திருமகளை தேவர்க்கும் தம்மோயை தெய்வக்கற்பின் பேர்மகளைத் தழுவுவான் உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா பின்னைப் பார்மகளைத் தழுவினையோ திசையானை மருப்பு இறுத்த பணைத்த மார்பால் ( மண்டோதரி புலம்புறு படலம் 2 , 4-10 ] மண்டோதரி புலம்பல் என்றேங்கி அரற்றுவான் தனையெடுத்துச் சாம்பவனாம் எண்கின் வேந்தன் குன்றோங்கு நெடுந்தோளாய் விதிநிலையை மதியாத கொள்கைத்தாகிச் சென்றோங்கும் உணர்வினர்போல் தேறாது வருந்துதியோ என்னத்தேறி நின்றான் அப்புறத்தரக்கன் நிலை கேட்டாள் மயன்பயந்த நெடுங்கண் பாவை அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார் புனைந்தபூங் குழல்விரித்து அரற்றும் பூசலார் இனந்தொடர்ந் துடன்வர ஏகினாள் என்ப நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் தரங்கநீர் வேலையில் தடித்து வீழ்ந்தென உரங்கிளர் மதுகையான் உரத்தில் வீழ்ந்தனள் மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து இரங்கினள் மயன்மகள் னைய பன்னினாள் அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறரக்கர் வேந்தன் பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்ததுவும் பிடித்திலேனோ முன்னேயோ விழுந்ததுவும் முடித்தலையோ படித்தலைய முகங்கள் தானோ என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்தபரிசு இதுவோ பாவம் வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருத்தோளும் மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவீனவோ ஒருவன்வாளி ஆரம்போர் திருமார்பை அகல் முழைகள் எனத்திறந்திவ் உலகுக்கப்பால் தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று வீரம் போய் உரங்குறைந்து வரங்குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் ஓரம் போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ பேரழகு காந்தையருக் கணியனைய சானகியார் அவர்தம் கற்பும் ஏந்து புயத் திராவணனார் காதலும் அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும் வேந்தர்பிரான் தயரதனார் பணி தன்னால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெருந்தவமாப் போயிற்றம்மா தேவர்க்கும் திசைக்கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செங்கண் மாற்கும் ஏவர்க்கும் வலியானுக்கு என்றுண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் ஆவற்கண் நீயுழந்த அருந்தவத்தின் பெருங்கடற்கும் வரம் என்றான்ற காவற்கும் வலியானோர் மானுடவன் உளன் என்னக் கருதினே னோ அரை கடையிட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு ( ள் ) பேரறிஞர்க் கேயும் உரைகடையிட்டளப்பரிய பேராற்றல் தோளாற்றற்கு உலப்போ ல்லை திரைகடையிட்டளப்பரிய அரியவரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரைகடையிட் டழிப்பதனை அறிந்தேனோ தவப்பயனின் பெருமை பார்ப்பேன் ஆரானார் உலகியற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் வீரனார் உடல் துறந்து விண்புக்கார் கண்புக்க வேழவில்லால் நாரநாள் மலர்க்கணையால் நாளெல்லாம் தோளெல்லாம் நைய எய்யும் மாரனார் தனியிலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே என்றழைத்தனள் ஏங்கி எழுந்தவன் பொன் தழைத்த பொருவரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவித்தனி நின்றழைத் துயிர்த்தாள் உயிர் நீங்கினாள் [ மண்டோதரி புலம்புறு படலம் 11 , 12 , 21-29 ] சீதாதேவிக்கு அனுமார் ஜெய சேதி கூறுதல் பின்னர் வீடணன் பேரெழில் தம்முனை வன்னிகூவி வான் முறையால் மறை சொன்ன ஈமவிதி முறையால் தொகுத்து இன்னல் நெஞ்சினோ டிந்தனத் தேற்றினான் கடன்கள் செய்து முடித்துக் கணவனோடு உடைந்து போன மயன் மகளோடுடன் அடங்க வெங்கனலுக்கு ஆவியாக்கினான் குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான் ( மண்டோதரி புலம்புறு படலம் 31-32 ] சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று ஏதில் வானர வீரரோடு ஏகிநீ ஆதிநாயகன் ஆக்கிய நூல் முறை நீதியானை நெடுமுடி சூட்டுவாய் மெய்கொள் வேத விதிமுறை விண்ணுளோர் தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட ஐயன் ஆணையினால் இளங்கோளரி கையினால் மகுடம் கவித்தானரோ ( வீடணன் முடிசூட்டுப் படலம் 2 , 6 ] இப்புறத்து இனஎய்துறு காலையில் அப்புறத்தை உன்னி அனுமனை துப்புறச் செய்யவாய் மணித் தோகைபால் செப்புறு இப்படிப்போய் எனச் செப்பினான் ஏழை சோபனம் ஏந்திழை சோபனம் வாழி சோபனம் மங்கல சோபனம் ஆழியான அரக்கனை ஆரியச் சூழியானை துகைத்தது சோபனம் பாடினான் திரு நாமங்கள் பலமுறை கூடு சாரியிற் குப்புற்றுக் கூத்து நின்று ஆடி அங்கை இரண்டும் அலங்குறச் சூடி நின்றனன் குன்றன்ன தோளினான் தலை கிடந்தன தாரணி தாங்கிய மலை கிடந்தன போல் மணித் தோள் நிரை அலை கிடந்தென ஆழி கிடந்தன தலைகிடந்த உடல் நிலத்தே என்றான் எனஉரைத்துத் திரிசடையாள் எம்மோய் மனவினில் சுடர்மாமுக மாட்சியாள் தனையொழித்து இவ்வரக்கியர் தங்களை வினையினிற் சுடவேண்டு வென்யானென்றான் [ பிராட்டி திருவடி தொழுத படலம் 1. 3-5 , IT சீதாதேவி அனுமாரை உபசரித்தல் ஒருகலைத்தனி ஒண்மதி நாளொடும் வருகலைக்குள் வளர்வது மானுறப் பொருகலைக் குலம் பூத்தது போன்றனள் பருகலுற்ற அமுது பயந்தநாள் 768 ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திடத் தேம்பும் நுண்ணிடை தேயத்திரள் முலை ஏம்பலாசைக்கு இரட்டி வந்தெய்தினாள் பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் மேக்கு நீங்கிய வெள்ள உவகையால் ஏக்க முற்றொன்று இயம்புவது யாது என நோக்கி நோக்கி அரிதென நொந்துளேன் பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ முன்னை நீக்குவென் மொய்சிறை என்றநீ பின்னை நீக்கி உவகையும் பேசினை என்ன பேற்றினை ஈகுவது என்பதை உன்னி நோக்கி உரைமறந் தோவினேன் உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலையிலாமையும் உன்னினேன் மேலவை நிலையிலாமை நினைந்தனென் நின்னை என் தலையினால் தொழவே தகும் தன்மை யோய் யானிழைத்த வினையினின் இவ்விடர் தானடுத்தது தாயினும் அன்பினோய் கூனியின் கொடியார் அலரே இவர் போன அப்பொருள் போற்றலை புந்தியோய் எனக்கு நீயருள் இவ்வரம் தீவினை தனக்கு வாழ்விடமாகிய சழக்கியர் மனக்கு நோய்செயல் ! என்றனள் மாமதி தனக்கு மாமறுத் தந்த முகத்தினாள் [ பிராட்டி திருவடி தொழுத படலம் 7 , 8 , 13 , 14 , 15 , 22. 2 சீதாதேவி அக்கினியில் குளித்தெழுந்தது என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான் தன் துணைப் பெருந்தேவி தயா எனா நின்றகாலை நெடியவன் வீடண சென்று தா நம தேவியைச் சீரொடும் மானமீது அரம்பையர் சூழ வந்துளாள் போன பேருயிரினைக் கண்ட பொய்உடல் தானது கவர் உறும் தன்மைத் தாம் எனல் ன்னம் காட்டுற அவனி எய்தினாள் பிறப்பினும் துணைவனைப் பிறவிப் பேரிடர் துறப்பினும் துணைவனைத் தொழுது நான் இனி மறப்பினும் நன்று இனிமாறு வேறு வீழ்ந்து இறப்பினும் நன்றென ஏக்கம் நீங்கினாள் கற்பினுக் கரசினைப் பெண்மைக் காப்பினை பொற்பினுக் கழகினைப் புகழின் வாழ்க்கையைத் தற்பிரிந் தருள்புர் தருமம் போலியை அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான் அடைப்பர் ஐம்புலன்களை ஒழுக்கம் ஆணியாச் சடைப்பரம் புணைந்தொளிர் தகையின் மாதவம் படைப்பர் வந்திடையொரு பழிவந்தாலது துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் ஆதலின் புறத்தினி யாருக்காக என் கோதறு தவத்தினைக் கூறிக் சாட்டுகேன் சாதலின் சிறந்ததொன்றில்லை தக்கதே வேத ! நின் பணியது விதியும் என்றனள் இளையவன் தனையழைத்து இடுதி தீஎன வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள் உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் களைகணைத் தொழ அவன் கண்ணிற்கூறினான் ஏங்கிய பொருமலின் இழிகண்ணீரினன் வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் ஆங்கெரி விதிமுறை அமைவித்தான் அதன் பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள் கனத்தினால் கடந்த பூண்முலைய கைவளை மனத்தினான் வாக்கினான் மறுவுற்றேன் எனின் சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா என்றாள் புனத்துழாய் கணவற்கு வணக்கம் போக்கினாள் நீத்தரும் புனலிடை நிவந்த தாமரை ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப் பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்செனத் தீர்ந்தது அவ்எரி அவள் கற்பின் தீயினால் அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான் தொழுங்கரத் துணையினன் சுருதி ஞானத்தின் கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான் [ பிராட்டி திருவடி தொழுத படலம் 24 , 45-47 , 54 , 64-66 , 71-74 ]
அக்கினி பகவான் முறையிடல் கனிந்துயர் கற்பெனும் கடவுள் தீயினால் நினைந்திலை என்வலி நீக்கினாய் என அநிந்தனை அங்கிநீ அயர்வில் என்னையும் முனிந்தனை ஆம்என முறையிட்டானரோ இன்னதோர் காலையில் இராமன் யாரைநீ என்னை நீஇயம்பியது எரியுள் தோன்றி இப் புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய் அன்னது ஆர் சொல்ல ஈதறைதீயால் என்றான் அங்கியான் என்னை இவ் அன்னை கற்பெனும் பொங்கு வெந்தீச்சுடப் பொறுக்கிலாமையால் இங்கணைந்தேன் எனதியற்கை நோக்கியும் சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் வேட்பதும் மங்கையர் விலங்கினார் எனின் கேட்பதும் பல்பொருட்டு ஐயம் கேடற மீட்பதும் என் வயின் என்றும் மெய்ப்பொருள் வாட் பெருந் தோளினாய் மறைகள் சொல்லுமால் சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய்த்துணிவு ஐயறு பொருள்களை ஆசில் மாசொரீ இக் கையுறு நெல்லியங் கனியின் காட்டும் என மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ பொய்யுறா மாருதி உரையும் போற்றலாய் தேவரும் முனிவரும் திரிய நிற்பவும் மூவகை உலகமும் கண்கள் மோதிநின்று ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு ஏவமென்றொரு பொருள் யாண்டுக் கொண்டியோ பெய்யுமே மழை ? புவிபிளப்பதன்றியே செய்யுமே பொறையறம் நெறியிற் செல்லுமே ? உய்யுமே உலகிவள் உணர்வு சீறினால் ? வையுமேல் மலர்மிசை அயனும் மாயுமே பாடுபன்மொழி இனைய பன்னிநின்று ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்தெழச் சூடுறும் மேனிய அலரித் தோகையை மாடுறக் கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் அழிப்பில சான்று நீ உலகுக் காதலால் இழிப்பில சொல்லி நீ இவளை யாதும்ஓர் பழிப்பிலள் என்றனை பழியும் இன்றினிக் கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான் [ பிராட்டி திருவடி தொழுத படலம் 76-84 பிரம்மதேவர் ஸ்ரீராமனரத் தோத்திரம் செய்தல் உணர்த்துவாய் உண்மை ஒழிவின்றுகாலம் வந்துளதால் பணர்த்தும் மாயையில் பொதுவுற நின்றவை உணரா இணர்த்துழாய்த் தொங்கல் இராமற்கு என்றிமையவர் இசைப்பத் தணப்பில் தாமரைச்சதுமுகன் உரைசெயச் சமைந்தான் மன்னர் தொல்குலத் தவதரித்தனை ஒருமனிதன் என்ன உன்னலை உன்னை நீ இராமகேள் இதனைச் நின்னலா தில்லை நின்னின் வேறுளதிலை நெடியோய் பகுதி என்றுளது யாதினும் பழையது பயந்த விகுதியால் வந்த விளைவு மற்று அதற்குமேல் நின்ற புகுதியாவர்க்கும் அரிய அப்புருடனும் நீ இம் மிகுதி உன்பெரு மாயையினால் வந்த வீக்கம் முன்பு பின்பு இருபுடையெனும் குணிப்பரு முறைமைத் தன்பெரும் தன்மைதாம் தெரிமறை களின் தலைகள் மன்பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் அன்புநின் னையல்லால் மற்று இங்கு யாரையும் அறையா ஐயைஞ் சாகியதத்துவம் தெரிந்தறிந் தவற்றின் மெய்எஞ்சா வகைமேல் நின்ற நினக்குமேல் யாதும் பொய்எஞ்சா இலது என்னும் ஈது அருமறை புகலும் வையம் சான்று இனிச் சான்றுக்குச் சான்றிலை வழக்கால் அளவையால் அளந்து ஆம் அன்றென்று அறிவுறும் அமைதி உளவை யாவையும் உனக்கில்லை உபநிடத்துனது களவை ஆய்ந்துறந் தெளிந்திலது ஆயினும் கண்ணால் துளவை ஆய்முடியாய் உளைநீஎனத் துணியும் அரணம் என்றுளது உன்னைவந்து அறிவுகாணாமல் கரணம் அவ்அறிவைக் கடந்து அகல்வரிதாக மரணம் தோற்றம் என்றிவற்றிடை மயங்குப அவர்க்குன் சரணம் அல்லதோர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் தோற்றம் என்பதொன்று னக்கில்லை நின்கணே தோற்றும் ஆற்றல்சால் முதற்பகுதி மற்று அதனுளாம் பண்பால் காற்றை முன்னுடைப் பூதங்கள் அவை சென்று கடைக்கால் வீற்று வீற்றுற்று வீவுறும் நீ என்றும் விளியாய் மின்னைக் காட்டுதல் போல் வந்துவிளியும் இவ்வுலகம் தன்னைக் காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே என்னைக் காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் உன்னைக் காட்டலை ஒளிக்கின்றும்இலை மறை உரையால் ஓங்காரப் பொருள் தேருவோர் தாம் உனை உணர்வோர் ஓங்காரப் பொருள் என்றுணர்ந்து இருவினை உகுப்போர் ஓங்காரம் பொருள்ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் ஓங்காரப் பொருளே பொருள்என்கா உரவோர் வாளா னைய தாகலின் எமையும் மூன்றுலகையும் ஈன்று மனையின் மாட்சியை வளர்த்த எம்மோயினை முனையல் என்றது முடித்தனன் முந்து நீர் முளைத்த சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன் [ பிராட்டிதிருவடி தொழுதபடலம் 85-88 , 91-95 , 97 , 98 ] மக்களையும் மருமகளையும் சக்கரவர்த்தி புகழ்தல் பின்னும் நோக்கினான் பெருந்தகைப் புதல்வனைப் பிரிந்த ன்னலால் உயிர் துறந்து இருந்துறக்கத்துள் இருந்த மன்னவற் சென்றுகண்டு நின்மைந்தனைத் தெருட்டி முன்னை வான் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் ஆதியான் பணியருள் பெற்ற அரசருக் கரசன் காதல் மைந்தனைக் காணிய உவந்ததோர் கருத்தால் பூதலத்திடைப் புக்கனன் புகுதலும் பொருவில் வேதவேந்தனும் அவன் மலர்த்தாள் மிசைவிழுந்தான் வீழ்ந்த மைந்தனை எடுத்துத்தன் விலங்கல் ஆகத்தின் ஆழ்ந்தழுந்திடத் தழுவி கண்ணருவி நீராட்டி வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்றிவை புகன்றான் அன்று கேகயன் மகள் கொண்ட வரம் என்னும் அயில்வேல் இன்றுகாறும் என்இதயத் திடைநின்றது என்னைக் கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றதுன் குலப்பூண் மன்றல் ஆகமாம் காந்தமாமணி இன்று வாங்க மைந்தரைப் பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார் சுந்தரப் பெருந்தோளினாய் என் துணைத் தாளின் பைந்துகளும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய் உய்ந்தவர்க்கு அரும்துறக்கமும் புகழும் பெற்றுயர்ந்தேன் என்று மைந்தனை எடுத்தெடுத் திறுகுறத்தழுவிக் குன்று போன்றுள தோளினான் சீதையைக் குறுகத் தன் துணைக் கழல் வணங்கலும் கருணையால் தழுவி நின்று மற்றிவை நிகழ்த்தினான் நிகழ்த்தரும் புகழோன் நங்கை மற்றுநின் கற்பினை உலகுக்குக் காட்ட அங்கி புக்கிடு என உணர்த்தியது மனத்தடையேல் சங்கை உற்றவர் தேறுவதுண்டு அது சரதம் கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக்கருதேல் பொன்னைத் தீயிடைப்பெய்வது அப்பொன்னுடைத் தூய்மை தன்னைக் காட்டு தற்கென்பது மனக்கொளல் தகுதி உன்னைக் காட்டினன் கற்பினுக்கரசி என்றுலகில் பின்னைக் காட்டுவது அரியது என்றெண்ணி இப்பெரியோன் பெண்பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை பண்பிறந்தவர்க்கு அருங்கலம் ஆகியபாவாய் மண்பிறந்தகம் உனக்கு நீ வானின்றும் வந்தாய் எண்பிறந்த நின்குணங் களுக்கு இனி இழுக்கிலையால் என்று பின்னரும் இராமனை யான் உனக்கீவது ஒன்று கூறுதி உயர் குணத்தோய் எனஉனையான் சென்று வானிடைக் கண்டுஇடர் தீர்வென் என்றிருந்தேன் இன்று காணப்பெற்றேன் இனிப்பெறுவ தென்என்றான் ஆயினும் உனக்கமைந்தது ஒன்றுரை என் அழகன் தீயள் என்று நீ துறந்தஎன் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம் தருக எனத்தாழ்ந்தான் வாய்திறந் தெழுந்தார்த்தன உயிரெலாம் வழுத்தி வரம் இரண்டளித்து அழகனை இளவலை மலர் மேல் விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே உரவுமான மீதேகினன் உம்பரும் உலகும் டரவும் மெய்யினுக்கு உயிரளித்து றுபுகழ்படைத்தோன் ( பிராட்டிதிருவடி தொழுதபடலம் 101-105 , 107- 110 , 114 , 115 , 119 ] அனுமார் வசந்தனைக் கொண்டுவருதல் அனைய புட்பகவிமானம் வந்து அவனியை அணுக இனிய சிந்தனை இராகவன் உவகையொடு இனிநம் னயம் முற்றியதென்று கொண்டு ஏறினன் விண்ணோர் புனைமலர் சொரிந்தார்த்தனர் ஆசிகள் புகன்றே வணங்கு நுண்ணிடைத் திரிசடை வணங்கவான் கற்பிற்கு இணங்கர் இன்மையால் நோக்கி ஓரிடரின்றி இலங்கைக்கு அணங்குதான் என இருத்தி என்று ஐயன் மாட்டணைந்தாள் மணங்கொள் வேல் இளங் கோளரிமானம் மீப்படர்ந்தான் [ மீட்சிப்படலம் 4 , 5 ] [ மிகைப்பாடல்கள் - மீட்சிப்படலம் ] வரிசிலை இராமன் ஓலைமறம்புரி மறலி காண்க எரிகொளும் இலங்கைப் போரில் இன்னுயிர் துறந்து போந்த குரிசிலை வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க அன்றேல் உரியதன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்றெழுதிவிட்டான் அக்கணத் தருகுநின்ற அனுமன் கைத்திரு முகத்தைத் தக்கவன் நீட்டவாங்கித் தன்தலை மிசையில் சூடி இக்கணம் வருவேன் வாழி இராம என் றிருதோள் கொட்டி மிக்கமா மடங்கல் போல விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான் துளங்கி அந்தகன் வந்து அடிதொழுதலும் தோலா வளங்கொல் மாருதி வசந்தனைக் காட்டு என அவனும் உளங்கலங்கி உன்நாயகன் அடியர் இங்குறார்கள் விளங்கு கீர்த்தியாய் தேடுவிண்ணவர் புரத்தென்றான் சொன்ன கூற்றுவன் தன்னைத்தன் வாலிடைத் துவக்கிப் பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப்புகலும் முன்னைவந்து கண்டிந்திரன் முனிவு எனோ என்ன மன்ன ஏகுவென் வயந்தனைக் காட்டுதி என்றான் சிந்தை தூயவன் செல உளந்துளங்கு நான்முகனும் வந்த காரியம் எது வென வயந்தனைப் பார்த்துச் சுந்தரத் தடந்தோள் வில்லிநின்றனன் அவன் தான் உந்தன் நீள்பதத் துளானெனின் காட்டென உணர்த்தும் என்னுடைப் பெரும்பதத்தின் மேலாகிய எந்தை தன்னுடைப் பெருஞ்சோதியின் கீழதாய்த் தழைத்த மின்னும் நீடொளி விண்டுவின் பதத்துளான் வீறலோய் அன்னவன் தனைக்கொணருதி ஆங்கணைந் தென்றான் என்ற நான்முகன் தனையும் இந்திரன் யமனோடு ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒருகுதி கொண்டான் மின் திகழ்ந் தொளிவிளங்கிடும் விண்டுவின் பதத்தில் சென்று கண்டுகொண் டிழிந்தான் திசைமுகன் பதியில் மலரின் மேல் அயன் வசந்தற்கு முன்உரு வழங்க குலவு வாசவன்யமனை விட்டு இருநிலம் குறுகி அலகில் வீரன் தன் அடியிணை அவனொடும் வணங்கிச் சலமும் தீர்ந்தனன் படையையும் ஏற்றினன் தேர்மேல் ஸ்ரீராமர் இலங்கையில் பலர்பட்ட இடங்களைக் காட்டுதல் வரந்தரும் முதல்மழுவலான மூனிவரர் வானோர் புரந்தாரதி மற்றேனை யோர் தனித் தனிப்புகழ்ந்தாங்கு அரந்தை வெம்பிறப்பறுக்கும் நாயக நினதருளால் குரங்கினம் பெறுகஎன்றனர் உள்ளமும் குளிர்ப்பார் முந்தை நாள் முதல் கடை முறையளவையும் முடிந்த அந்தவானரம் அடங்கலும் எழுந்து உடனார்த்துச் சிந்தையோடு கண்களிப்புறச் செருவெலாம் நினையா வந்து தாமரைக் கண்ணனை வணங்கின மகிழ்ந்து [ பிராட்டி திருவடி தொழுதபடலம் 122 , 12 :) அனையவாகிய சேனையோடு அரசன் அனிலன் தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை வளையும் வார்கழல் இலங்கையர்மன்னை வந்திங்கு இனிதின் ஏறுகமின் விமானம் என்று இராகவன் இசைத்தான் ( மீட்சிப்படலம் 15 ] [ மீட்சிப்படலம் மிகைப்பாடல்கள் ) வென்றிவேல் கருங்கண்மானே என்னொடும் இகலிவெய்ய வன்றிறல் அரக்கன் ஏற்ற வடதிசை வாயில் நோக்காய் கன்றிய அரக்கன்சேனை காவலன் தன்னை நீலன் கொன்றுயிர் கூற்றுக் கீந்த குணதிசைவாயில் நோக்காய் மறத்திறல் வாலிமைந்தன் வச்சிரத்தெயிற் றோன் தன்னை செறுத்துயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் அறத்தினுக் கலக்கண்செய்யும் அகம்பன் தன்உடலை ஆவி வெறுத்தெதிர் அனுமன் நின்ற மேற்றிசைவாயில் நோக்காய் கருங்கடல் நிகர்ப்பவான அகழிஓர் மூன்றும் காணாய் மருங்கடர் களபக்கொங்கை மதிநுதல் மிதிலைவல்லி இருங்கட முகத்தயானை இவுளிதேர் காலாள் துஞ்சி பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய் கொடிமதில் இலங்கைவேந்தன் கோபுரத்தும்பர் தோன்ற அடுதிறல் பருதிமைந்தன் அவன்நிலை குலையத் தாக்கிச் சுடர்முடி பறித்த அந்நாள் அன்னவன் தொல்லை வெம் போர்ப் படியினை நோக்கி நின்ற சுவேலமால் வரையைப்பாராய் குடதிசை வாயில்ஏகக் குன்றரிந்தவனை வென்ற விடநிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்த தென்முன் வடதிசை வாயில்மேவ . இராவணன் மவுலிபத்தும் உடலமும் இழந்ததிங்கென் றுணர்த்திவேறு ரைக்கலுற்றான் ஸ்ரீராமர் சீதைக்குச் சேதுவைக்காட்டி அதின் மகிமை கூறல் கங்கையொடு யமுன கோதாவரி நருமதைகாவேரி பொங்குநீர் நதிகள் யாவும் டிந்தலால் புன்மை போகா சங்கெறி தரங்கவேலை நட் - இச் சேது என்னும் இங்கிதின் எதிர்ந்தோர் புன்மையாவையும் நீக்குங்கண்டாய் நெற்றியின் அழலும் செங்கண் நீறணிகடவுள் நீடு கற்றையம் சடைமேல் மேவுகங்கையும் சேதுவாகப் பெற்றிலம் என்று கொண்டே பெருந்தவம் புரிகின்றாளால் மற்றி தன் தூய்மை எவ்வாறுரைப்பது மலர்க்கண் வந்தாய் [ மீட்சிப்படலம் 22 , 23 ] [ மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ] மற்றிதன் தூய்மை எண்ணின் மலரயன் தனக்கும் எட்டா பொன்தொடித் தெரிவையான் என்புகலுகேன் நேட்டி அன்பால் பெற்றதாய் தந்தையோடு தேசிகர்ப் பிழைத்துச் சூழ்ந்த சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்களாவார் ஆவினைக் குாவரோடும் அருமறை முனிவர் தம்மைப் பாவையர் குழுவை இன்சொல் பாலரைப் பயந்து தம்மில் மேவின அவரைச் செற்றோர் விரிகடல் சேதுவந்து தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர்தொழும் சுரர்களாவார் அந்தணர் தம்மைக் கொன்றோர் அருந்தவர்க் கிடுக்கண் செய்தோர் செந்தழல் வேள்விசெற்றோர் தீமனையிடுவோர் தம்பால் வந்திரந்தவர்க் கொன்றீயா வைக்கும் வன்நெஞ்சர் பெற்ற தந்தையைத் தாயைப் பேணாத்தறுகணர் பசுவைச்செற்றோர் 23 - 2 குருநக்களை இகழ்வோர் கொண்டகுலமகள் ஒழியத்தங்கள் செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர் உயிர்கொல் தீம்பர் இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர் ஊன்கள் தின்று பெருக்கிய உடலர்பொய்ம்மை பிதற்றுவோர் பீடைசெய்வோர் வெய்யவன் உச்சிசேர மிகவழி நடந்து போவோர் மையறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள் கையுற முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கொன்று ஈயார் துய் அன சொற்கள் சொல்வோர் சோம்பரைச் சுளித்துக்கொள்வோர் ஊரது முனியவாழ்வோர் உண்ணும்போது உண்ணவந்தோர்க்கு ஆர்வமொடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணேசென்று நீரினில் இழிவோர் பாவநெறிகளில் முயல்வோர் சான்றோர் தாரமது அணைவோர் மூத்தோர்தமை இகழ் அறிவிலா தோர் கண்டிலாது ஒன்றுகண்டோம் என்று கைக்கூலி கொள்வோர் மண்டலாதிபர் முன் சென்று வாழ்குடிக்கு அழிவு செய்வோர் மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை உண்டிருந் தவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் பின்னைவா தருவென் என்று பேசித்தட்டுவிக்கும் பேதை கன்னியைக் கலக்கும்புல்லோர் காதலால் கள்ளும் மாந்தர் துன்னிய கலைவல்லோரைச் சுளிந்துரைத் திகழ்வோர் சுற்றம் ன்னலுற்றிடத் தாம்வாழ்வோர் எளியரை இன்னல் செய்வோர் ஆண்டவன் படவும் தங்கள் ஆருயிர் கொண்டு மீண்டோர் நாண்துறந் துழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர் பூண்டுமேல் வந்த பேதை அடைக்கலம் போக்கிவாழ்வோர் கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர் தங்கள் வயிற்றீடைக் கருவைத்தா மேவதைப்பவர் மாற்றார் தம்மைச் செயிர்க்குவதன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர் மயிர்க்குருள் ஒழியப்பெற்றம் வௌவுவோர் வாய்மை இல்லோர் கொண்டவன் தன்னைப் பேணாக்குல மகள் கோயிலுள்ளே பெண்டிரைச் சேர்வோர் தங்கள் பிதிர்களை இகழும் பேதை உண்டலே தருமம் என்போர் உடைப் பொருள் உலோபர் ஊரைத் தண்டமே இடுவோர் மன்று பறித்துண்ணும் தறுகண்ணாளர் தேவதானங்கள் மாற்றித் தேவர்கள் தனங்கள் வௌவும் பாவகாரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து காஎனா அபயம் என்று கழலடைந்தோரை விட்டோர் பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர் பொய்ச்சான்று போயார் முறையது மயங்கி வாழ்வோர் மூங்கை அந்தகர்க்குத் தீயோர் மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் கறைபடு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும் பறவைகள் மிருகம் பற்றிப் பஞ்சரத்தடைக்கும் பாவர் கார்க்கன வரை சேர்கானில் கடுங்குழி கல்லும் கட்டர் நீர்க்கரை யதனில்ஓட்டி நெடுங்கலை முயல்மான் கொல்வோர் ஊர்க்கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப்பசு எடாது போவோர் வார்க்கெழு தனமின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் வழியடித் துண்போர் கேட்டால் வழிசொல்லாதவர்கள் வைப்பைப் பொழிவிருள் களவு காண்போர் பொய் சொல்லிப் பண்டம் விற்போர் அழிவிலா வாய்ம்மை கொன்றோர் அடைந்தது தெரிசிக்கத் தீர்க என்றான் ஆதியர் மூவர்க்கந்நாள் அருமறை அறைந்த அந்த நீதியாம் புராணந்தன்னை இகழ்பவர் நிறையக் கேளார் பாதியில் விட்டுவைப்போர் படித்தவர்ப் பிரியப்படுத்தார் போதம் இலாதார் மற்றச் சமயம் பொல்லாததென்பார் என்றிவர் முதலாமற்றும் எழுநர கடையும் பாவம் ஒன்றினர் நன்றி தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் துன்றிய வினைகள் எல்லாம் சுடர் கண்ட இருளேபோலத் தென்திசை வந்து சேதுத் தெரிசிக்கத் தீரும் என்றான் ஸ்ரீராமர் சீதைக்கு வந்தவழி அடையாளங்கூறல் போதா விசும்பில் திகழ் புட்பகம் போ த லோடும் சூதார்முலைத் தோகையை நோக்கி முன்தோன்று சூழல் கோதவரி மற்றதன் மாடுயர் குன்று நின்னைப் பேதாய் பிரிவுத்துயர் பிழை பிணித்ததென்றான் சிரத்து வாசவண்டு அலம்பிடு தெரிவை கேள் இதுநீள தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் வரத்துவாசன் வணங்கிடு சித்திரகூடம் பரத்து வாசவன் உறைவிடம் இது எனப்பகர்ந்தான் ( மீட்சிப்படம் 31 , 32 ] [ மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ) கடிகமழ் குழலினாளே கார்காலம் யாங்கள்வைகும் வடிவுடைச் சிகரம்ஓங்கும் மாலியவானை நோக்காய் அடுதிறல் பருதிமைந்தன் நகரதன் அழகுபாராய் எடிவுடை மலை ஏழன்ன மராமரம் ஏழும் நோக்காய் கனிவளர் பவளச் செவ்வாய் கனங்குழை நின்னைக்காணாத் துனிவளர் துன்பம் நீங்கத் தோழமை நாங்கள் கொண்ட பனிவளர் இருளை மாற்றும் பகலவன் சேயும் யாமும் நனிவளர் நட்புக்கொண்ட நலந்தரு நாகம்நோக்காய் மாழை ஒண்கண்ணாய் உன்னைப்பிரிந்து யான்வருந்தும் நாளில் தாழ்விலாத் துயரம் நீங்கத்தாமரை உந்தியான்கை ஆழியாம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும் பாழியான் தன்னைக் கண்டபம்பை யாறதனைப் பாராய் சவரியது இருக்கைதானும் கவந்தனைத் தடிந்தகானும் இவர் செய எழுந்த ஆற்றல் கான்உயிர் இழந்தபாரும் சவையுறு சுகுட்டன்மைந்தன் சரவங்கன் முதலோர்காதல் கவையறு முனிவர் தங்கள் இடங்களும் கருதிநோக்காய் விரைகமழ் ஓதிமாதே விராதன்வந் தெதிர்ந்து போர் செய் நிரை தவழ் அருவி ஓங்கும் நெடுவரை அதனை நோக்காய் சரதன் நான் அரசுவேண்டேன் தடமுடிசூடுக என்று பரதன்வந்தழுது வேண்டும் பருவரை அதனைப்பாராய் ஸ்ரீ ராமர் வரவில்லை என்று பரதர் புலம்பல் கருகும் வார்குழல் சனகியோடு இளவல் கைதொழுதே அருகுசார்தர அருந்தவன் ஆசிகள் வழங்கி உருகு சாதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை பருகு மாரமிழ் தொத்து உளங்களித்தனன் பரிவால் இன்று நாம் பதிபோகலம் மாருதி ஈண்டச் சென்று தீதின்மை செப்பி அத்தீமையும் விலக்கி நின்ற காலையில் வருதும் என்றேயினன் நெடியோன் நன்றெனா அவன் மோதிரம் கைக்கொடு நடந்தான் நந்தியம் பதியின் தலைநாள் தொறும் சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் பந்தி அம்கழல்பாதம் அருச்சியா இந்தியங்களை வென்றிருந்தானரோ அனைய னாய பரதன் அலங்கலின் புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை நினையும் காலை நினைந்தனனாம் அரோ மனையின் வந்தவன் எய்த மதித்த நாள் மீட்டெழுந்து விரிந்த செந்தாமரைக் காட்டை வென்றெழு கண் கலுழிப்புனல் ஓட்டம் உள்ளம் உயிரினை ஊசல்நின்று ஆட்டவும் அவலத் தழிந்தானரோ என க்கியம்பிய நாளும் என் இன்னலும் தனைப்பயந்தவன் துன்பமும் தாங்கி அவ் வனத்து வைகல் செய்யான் வந்தடுத்த தோர் வினைக் கொடும்பகை உண்டு என விம்மினான் அனைத்தில் அங்கொன்றும் ஆயினும் ஆகுக வனத்திருக்க இவ்வையம் புகுதுக நினைத்திருந்து நெடுந்துயர் மூழ்கிலேன் மனத்து மாசென் உயிரொடும் வாங்குவேன் [ மீட்சிப் படலம் 38 , 43 , 46 , 51 , 54. 55 , 58 சத்துருக்கன் அரசாட்சிக்கு உடன்படாமை என்னப் பன்னி இளவலை என்னுழைத் துன்னச் சொல்லுதிர் என்னலும் தூதா போய் உன்னைக் கூயினன் உம்முன் எனாமுனம் முன்னர்ச் சென்றனன் மூவர்க்கும் பின்னுளான் தொழுது நின்றதன் தம்பியை நோய்சணீர் எழுது மார்பத்து இறுகத் தழுவினான் அழுது வேண்டுவதுண்டு ஐய அவ்வரம் பழுதில் வாய்மையினாய் தரற்பாற்று என்றான் என்னவாகும் கொல் அவ்வரம் என்றியேல் சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் மின்னு தீயிடை யானினி வீடுவேன் மன்னன் ஆதி என் சொல்லை மறாதென்றான் கேட்ட தோன்றல் கிளர் தடக்கைகளால் தோட்ட தன்செவி பொத்தித் துணுக்குறா ஊட்டுநஞ்சம் உண்டான் ஒத்துயங்கினான் நாட்டமும் மனமும் தடுங்கா நின்றான் விழுந்து மேக்குயர் விம்மலன் வெய்துயிர்த்து எழுந்து நானுக்கு என்ன பிழைத்துளேன் அழுந்து துன்பத்தினாய் என்றரற்றினான் கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான் கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப்பின்பு போனானும் ஒரு தம்பி போனவன் தான் வருமவதி போயிற்றேன்னா அனாது உயிர்விடவென்ற மைவானும் ஒரு தம்பி அயலேநாணாது யானாமிவ் வரசாள்வென் என்னே இவ்வரசாட்சி இனிதே அம்மா மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் சொல் நிற்கும் என்றஞ்சிப் புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கினாயே என்னின்பின் இவன் உளனாம் என்றே உன் அடிமையுனக்கிருந்ததேனும் உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக் கீழ் இருப்பதுவும் ஒக்குமென்றான் [ மீட்சிப்படலம் 59-65 ) அக்கினியில் விழும் படிதரைக் கௌசலை அம்மன் தடுத்துக் கூறல் முத்துருக் கொண்டமைந்தனைய முழு வெள்ளிக் கொழுநிறத்து முளரச் செங்கண் சத்துருக்கன் அஃதுரைப்ப அவனிங்குத் தாழ்க்கின்ற தன்மை யானிங்கு ஓத்திருக்க லாலன்றே உலந்ததன்பின் இவ்வுலகை உலையொட்டான் அத்திருக்கும் கெடும் உடனே புகுந்தாளும் அரசு எரியோய் அமைக்க என்றான் அப்பொழுதின் அவ்வுரைசென்ற யோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற ஒப்பெழுத ஒண்ணாத கற்புடையாள் வயிறுபுடைத் தலமந்தேங்கி இப்பொழுதே உலகிறக்கும் யாக்கையினை முடித்தொழிந்தால் மகனே என்னா வெப்பெழுதி னாலனைய மெலிவுடையாள் கடிதோடி விலக்க வந்தாள் விரியமைத்த நெடுவேணி புறத்தசைந்து வீழ்ந்தொசிய மேனிதள்ள எரியமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து சொரிவமைப்ப தரிதாய மழைக்கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா பரிவமைத்த திருமனத்தான் அடிதொழுதான் அவள் புகுந்து பற்றிக் கொண்டாள் மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் முன்இழைத்த விதியின் முயற்சியால் பின்இழைத்ததும் எண்ணின் அப்பெற்றியால் என் இழைத்தனை என்மகனே என்றாள் நீயிது எண்ணினையேல் நெடுநாடு எரி பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் தாயர் எம்மளவன்று தனியறம் தீயின் வீழும்உலகும் திரியுமால் தரும் நீதியின் தன்பயன் ஆவதுன் கருமமே யன்றிக் கண்டிலம் கண்களான் அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐயநின் பெருமை ஊழி திரியினும் பேருமோ எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ இன்று வந்தில னேயெனின் நாளையே ஒன்றும் வந்து உனைஉன்னி உரைத்தசொல் பின்றும் என்றுணரேல் பிழைத்தான் எனின் பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் ஒருவன் மாண்டனன் என்று கொண்டூழி வாழ் பெருநிலத்துப் பெறலரும் இன்னுயிர்க் கருவும் மாண்டறக் காணுதி யோகலைத் தருமம் நீயலது இல்எனும் தன்மையோய் இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால் பிறக்கையும் கடன் என்று பின்பாசத்தை மறக்கை காண்மகனே வலியாவதென் துறக்கை தானும் என்றாள் மனந் தூய்மையாள் [ மீட்சிப்படலம் 66 , 67 , 69-76 ) பரதர் கௌசலை அம்மனோடு முறையிட்டு இரங்கல் மைந்தன் என்னை மறுத்துரைத்தான் எனல் எந்தை மெய்ம்மையும் இக்குலச் செய்கையும் தைந்து போக உயிர்நிலை நச்சிலேன் முத்து செய்த சபதம் முடிப்பெனால் யானும் மெய்யினுக்கு இன்னுயிர் ஈந்துபோய் வாத்துள் எய்திய மன்னவன் மைந்தனால் காதுள் எய்திய காகுத்தற்கே கடன் ஏனையோர்க்கும் இது இழுக்கில் வழக்கன்றோ தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் பாசத்து அன்பினைப் பற்றற நீக்கலும் ஈசற்கே கடன் யானஃதிழைக்கிலேன் மாசற்றே னிதுகாட்டுவென் மாண்டென்றான் [ மீட்சிப் படலம் -77.79 ) ஸ்ரீராமர் வரவை அனுமார் பரதருக்குக் கூறல் விருத்தம் - 114 தரு - 92 ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் மெய்யின் மெய்யன்ன நின்உயிர் வீடினால் உய்யுமே அவன் என்றுரைத் துள்புகாக் கையினால் எரியைக் கரியாக்கினான் ஆக்கி மற்றவன் ஆய்மலர்த் தாள்களைத் தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கிக்கை வாக்கின் கூடப்புதைத்து ஒருமாற்றம் நீ தூக்கிக் கொள்ளத்தகும் எனக்கூறினான் இன்னம் நாழிகை எண்ணைந்துள ஐய உன்னை முன்னம் வந்தெய்த உரைத்தநாள் இன்னதில்லை யெனின் அடி நாயினேன் முன்னம் வீழ்ந்திவ் எரியில் முடிவெனால் ஒன்று தான் உளது உன் அடியேன் சொலால் நின்று தாழ்த்தருள் நேமிச்சுடர் நெடும் குன்று தாழ்வளவும் இதுகுன்று மேல் பொன்றும் நீயும் உலகமும் பொய்யிலாய் எங்கள் நாயகற்கு இன்னமு தீகுவான் பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால் அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ இங்கண் நல்ல தொன்றுஇன்ன மூம்கேட்டியால் ( மீட்சிப்படலம் 81-85 } பரதருக்கு அனுமார் சங்கிரகராமாயணம் கூறல் அண்டர் நாயகன் அருளி அளித்துள்ளது உண்டொர் பேரடையாளம் உனக்கது கொண்டு வந்தனென் கோதறு சிந்தையாய் கண்டு கொண்டருள் வாய் எனக் காட்டினான் காட்டிய மோதிரம் கண்ணிற் காண்டலும் மூட்டுதீ வல்விடம் உற்று முற்று வார்க்கு ஊட்டிய நல்மருந்து ஒத்ததா மரோ ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும் தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான் வேதியர் தமைத்தொழும் வேந்தரைத் தொழும் தாதியர் தமைத்தொழும் தன்னைத் தான் தொழும் ஏதும் ஒன்றுணர்குறாது இருக்கும் நிற்குமால் காதல் என்றதுவும் ஓர்கள்ளின் தோன்றிற்றே அத்திறத் தாண் தகை அனுமன் தன்னை நீ எத்திறத்தாய் எமக்கியம்பி ஈதியால் முத்திறத் தவருளே ஒருவன் மூர்த்திவேறு ஓத்திருந் தாய் என உணர்கின்றேன் என்றான் காற்றினுக் கரசன்பால் கவிக்குலத்தினுள் நோற்றனள் வயிற்றின் வந்துதித்து நும் முனோற்கு ஏற்றிலா அடித்தொழில் ஏவலாளனேன் மாற்றினேன் உரு ஒரு குரங்கு மன்னயான் அடித்தொழில் நாயினேன் அருப்பயாக்கையைக் கடித்தடத் தாமரைக் கண்ணின் நோக்கெனா பிடித்த பொய்யுருவினைப் பெயர்த்து நீக்கினான் முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் அன்னதோர் அளவையின் விசும்பின் ஆயிரம் துன்னிருங் கதிரவற்றோன்றி னாரெனப் பொன்னணி புட்பகப் பொருவில் மானமும் மன்னவர்க் கரசனும்வந்து தோன்றினார் [ மீட்சிப்படலம் 86 , 87 , 89 , 94 , 95 , 97 , 98 , 103 ] ஸ்ரீராமர் அனுமாரை உடனுண்ண வேண்டுதல் ( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ] உருப்பவிர் கனலிடை ஒளிக்க லுற்ற அப் பொருப்பவிர் தோளனைப் பொருந்தி நாயினேன் திருப்பொலி மார்பநின் வரவு செப்பினேன் இருப்பன ஆயின உலகம் யாவையும் தீவினையாம் பலசெய்யத் தீர்விலா வீவினை முறைமுறை விளைவ மெய்ம்மையாய் நீயவை துடைத்து நின்று அழிக்கநேர்ந்தனை ஆயினும் அன்பினால் யாம்செய் மாதவம் என்றுரைத் தனுமனை இறுகப் புல்லினான் ஒன்றுரைத் திருப்பதென் உனக்கும் எந்தைக்கும் இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும் என்றனன் குன்றிணைத்தன உயர் குவவுத் தோளினான் இரவி காதலன் இலங்கையர் கோன் இவர் உதவி அரசின் ஆசையது எனலாம் அனுமனே என்பால் விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு தருவதொன்றிலை உடன்உணும் தரமது அல்லால் ஸ்ரீராமர் பரத்துவாசர் செய்த விருந்துண்ணல் ( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ) கொற்றவன் உடன்உண்ணுமோ கோதில் மாதவனே வெற்றிவீரனே என அஞ்சி நின்றனன் விமலன் மற்றப் போனகம் ஒருகைவாய் வைத்தபின் வாராப் பற்றி அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான் அன்னகாலையில் போனகம் அமரர்செய் பொற்கலத்தே முன்னம் போல்படைத்துத் திருமுன்பு வைத்தனரால் உன்னும் பேருலகனைத்தும் உண்டும் பசிதீரா மன்னன் மாமுனி விருந்துண்டு அகம்மகிழ்ந்தனனால் பான நல்ல முதுடன் கருப்பூரமும் பலவும் னைவானவர் மகளிர்கள் ஏந்தி முன் நிற்பத் தான மெய்ப் படைத்தம்முடைப் போகத்துள் தந்த ஆனகற்பக நாட்டமிழ்து என்பதும் அயின்றான் பரத்துவாசர் முதலானோர்க்கு ஸ்ரீராமர் ராட்சதர் மாண்டவகை கூறல் ( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ] பரிகலத் தமுது ஏந்தியே பந்திகள் தோறும் இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு உரிய வீரர்கட்களித்துத் தானவர்களோ பாதி வரிசையால் உண்ணமாமுனி விருந்தும் உண்டனரால் ( சங்கிரகராமாயணம் 102 -33 to 102 - 62 வரை உளது கண்டு கொள்க ) குகன் ஸ்ரீராமர் வரவில்லை என்று வருந்துதல் ( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ) மான்நேர் விழியாளுடனே வனம்முன் போனான் ஒருநாள் வரும் நாள் இலதோ தேனே அமுதே தெளிவே தெளிவின் ஊனே உயிரே உலகாளுடையாய் அம்பவளச் செவ்வாய் அனிகடகச் சேவகன் வம்பவிழும் சோலைக் கோசலை நாடுடைவள்ளல் எம்பெருமான் என்னை , இழிகுலத்து நாயேனைத் தம்பி எனஉரைத்த தரசரதி தோன்றானோ வாழிமலைத் திண்டோள் சனகன் தன் மாமயிலை ஏழுல தம் ஆளும்இறைவன் மருமகளைத் தாழ்வில் பெருங்குணத்தாள் தான்உன் கொழுந்திநீ தோழன் எனஉரைத்த தோன்றலார் தோன்றாரோ துங்க விற்கரத் தோளினார் சொன்ன நாள் இங்கு வந்திலர் யானிறப்பேன் எனா மங்கை மாரும் படையும் வன் சுற்றமும் அங்குநீர்க் கங்கையின் அம்பியில் ஏற்றினான் வேதநாதனும் வில்லியும் விரைமலர்த்திருவும் ஏதுசெய்யினும் என்னுயிர் முடிப்பென் எண்றெண்ணி ஓதநீரிடை ஓடம் உடைத்து உயிர்விடுவான் காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான் கண்ணும் தோளும் வலம்துடிக்கும் கரை வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே எண்ணும் காலையிலே ஏழில்மாருதி அண்ணல் வந்தனன் என்றுரையாடினான் பரதருக்கு ஸ்ரீராமர் காட்சி கொடுத்தல் அண்ணலே காண்டியால் அலர்ந்ததாமரைக் கண்ணனும் வானரக்கடலும் கற்புடைப் பெண்ணருங் கலமும் நின்பின் தோன்றிய வண்ண விற்குமரனும் வருகின்றார்களை ஊனுடை யாக்கைவிட்டு உண்மை வேண்டிய வானுடைத் தந்தையார் வரவு கண்டெனக் கானிடைப் போகிய கமலக் கண்ணனை தானுடை உயிரினைத் தம்பிநோக்கினான் காட்டினன் மாருதிகண்ணிற் கண்ட அத் தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் கூட்டுருக் கண்டன்ன தன்மை கூடினான் ஆனதோர் அளவையின் அமரர் கோனொடும் வானவர் திருநகர் வருவதாம்என மேல்நிறை வானவர் வீசுப் பூவொடும் தானுயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால் தாயருக் கன்று சார்ந்த கன்றெனும் தகையனானான் மாயையின் பிறந்தார்க்கெல்லாம் மனோலயம் வந்ததொத்தான் ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடிடும்பாவை யானான் ஓய்வுறுத் துலர்ந்தயாக்கைக்கு உ பிர்புகுந்தனைய தொத்தான் [ மீட்சிப்படம் 104, 107, 110 - 112 ) (விருத்தத்திற் காணும் குகன் பற்றிய நிகழ்ச்சி மிகைப்பாடல் மீட்சிப்படலத்துள் பின்வருமாறு ) அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுதினிது அளிப்பஐயன் கருந்தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும் விருந்தினிது அருந்தி நின்ற வேலையின் வேலைபோலும் பெருந்தடந் தானையோடும் கிராதர் கோன்பெயர்ந்து வந்தான் தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழஓடி அழுதனன் கமலம் அன்ன அடித்தலம் அதனில் வீழ்ந்தான் தழுவினன் எடுத்து மார்பின் தம்பியைத் தழுவுமாபோல் வழுவிலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் பரதர் ஸ்ரீராமர் திருவடிகளிலே வணங்குதல் சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமிவிம்மி நாவிடை உரைப்பதொன்றும் உணர்ந்திலன் நின்றநம்பி ஆவியும் உடலும் ஒன்றத்தழுவினன் அழுதுசோர்வான் தழுவினன் நின்றகாலை தத்திவீழ் அருவிசாலும் விழுமலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி வழுவுறப் பின்னிமூசி மாசுண்ட சடையின் மாலை கழுவினன் உச்சிமோந்து கன்றுகாண் கறவையன்னான் ( மீட்சிப்படலம் 116 , 117 ] நகரியையும் ஸ்ரீராமரையும் சீரைபையும் அலங்கரித்தல் னையதோர் காலத்தம் பொன் சடைமுடியடிய தாகக் கனைகழல் அமரர் கோ மாற் கட்டவன் படுத்தகாளை துணைபரி கரிதேர் ஊர்தி என்றிவை பிறவும் தோலின் வினையுறு செருப்புக் கீந்தான் விரைமலர்த் தாளில் வீழ்ந்தான் பின்இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கிவீங்கும் தன்இணைத் தோள்களாரத் தழுவி அத்தம்பி மாருக்கு இன்னுயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான் இருவர் தாளும் மன்னுயிர்க் குவமைகூறவந்தவர் வணக்கம் செய்தாா ( மீட்சிப்படலம் 118 , 119 ] நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி வம்பலர் சடையும் மாற்றி மயிர்வினை முற்றிமற்றைத் தம்பியரோடு தானும் தண்புனல் படிந்தபின்னர் உம்பரும் உவகைகூர ஒப்பனை ஒப்பச் செய்தார் ஊழியின் இறுதிகாணும் வலியினது உயர் பொற்றேரின் ஏழுயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்தப் பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் கவரியற்றப் பூழியை அடக்கும் கண்ணீர் பரதன்கோல் கொள்ளப் போனார் தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள்சிந்த ஓவலில் மாரிஏய்ப்ப எங்கணும் உதிர்ந்துவீங்கிக் கேவல மலராய் வேறோர் இடமின்றிக் கிடந்த ஆற்றால் பூஎனும் நாமம் இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்றன்றே ( திருமுடி சூட்டுபடலம் 1-3 ) பட்டாபிஷேக மண்டபம் பரதர் சோடித்தல் நான்முகத் தொருவன் ஏவ நயனறி மயனென்றோதும் நூன்முகத்து ஓங்குகேள்வி நுணங்கியோன் வணங்குநெஞ்சன் கோல் முகத்தளந்து குற்றம் செற்றுல கெல்லாம் கொள்ளும் மான் முகத் தொருவன் நன்னாள் மண்டபம் வயங்கக்கண்டான் ( திருமுடி சூட்டுபடலம் 13 ] ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் இந்திரகுருவும் அன்னார் எனையவர் என்னநின்ற மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்துவிட்டார் சந்திர கவிகை ஓங்கும் தயாதராமன் தாமச் சுந்தர மவுலிசூடும் ஒரையும் நாளும் தூக்கி அடுக்கிய உலகம்மூன்றும் ஆதரத்தூதர் கூற இடுக்கொரு பேருமின்றி அயோத்திவந் திருந்தார் என்றால் தொடுக்குறு கவியால்மற்றைத் தொகையினை முடிவுதோன்ற ஒடுக்குறுத் துரைக்குந்தன்மை நான்முகத் தொருவற்குண்டோ சூழ்கடல் நான்கின் தேரயம் எழுவகையாகச் சொன்ன ஆழ்திரை ஆற்றின் நீரோடு அமைத்திஇன்று என்னாம் என்று ஊழயின் இறுதி செல்லும் தாதையின் உலவி அன்றே ஏழ்திரை நீரும் தந்தான் இடர்கெடமருந்து தந்தான் தெய்வ நீராடற் கொத்த செய்வினை வசிட்டன் செய்ய ஐயமில சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும் நொய்தினின் இயற்ற நோன்பின்மாதவர் நுனித்துக்காட்ட எய்தின இயன்றபல்வேறு இந்திரற்கியன்ற என்ன அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைகவிக்க இருவரும் கவரிபற்ற விரிகடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன்சடையன் வண்மை மரபுளோன் கொடுக்கவாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதிமுறை மெய்யின்கொண்ட ஒள்ளிய நாளின் நல்லஓரையின் உலகம்மூன்றும் துள்ளின் களிப்ப மோலி சூடினான் கடலின்வந்த தெள்ளிய திருவும் தெய்வப்பூமியும் சேரும் தோளான் ( திருமுடி சூட்டுபடலம் 11 , 12 , 14 , 15 , 16 , 17 ] ஸ்ரீராமர் அரசியல் விரத நூல் முனிவன் சொன்ன விதிநெறி வழாமை நோக்கி வரதனும் இளைஞற்கு ஆங்கன் மாமணி மகுடம் சூட்டிப் பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து நாளும் கரை தெளிவிலாத போகக்களிப்பினுள் இருந்தான் மன்னோ உம்பரோ டிம்பர்காறும் உலகம்ஓர் ஏழும் ஏழும் எம் பெருமா னென்றேத்தி இறைஞ்சி நிேைறவல் செய்யத்தம் தம்பிய ரோடும் தானும் தருமமும் தரணிகாத்தான் அம்பரத் தனந்தர் நீங்கி அயோத்தியில் வந்தவள்ளல் ( திருமுடி சூட்டுப்படலம் 20 , 21 ] வாழி வாழிய சீர்இராமன் வாழியசீதை கோமான் வாழிய கௌசலேசை மணிவயிற்றுதித்த வள்ளல் வாழிய வாலிமார்பும் மரா மரம் ஏழும் சாய வாழியகணை ஒன்றேவும் தசரதன் மதலை வாழி -மிகைப்பாடல் 21-3 இராவணன் தன்னை வீட்டிஇராமனாய் வந்து தோன்றித் தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப் பராபரம் ஆகிநின்ற பண்பினைப் பகருவார்கள் தராபதியாகிப்பின் னும் நமனையும் வெல்லுவாரே மிகைப்பாடல் 21. 4 --------------------------------
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply