ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி!
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்…
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்…
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!
ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்…
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்!
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்!
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்…
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்!
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்… ராமன்!
ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன்… எத்தனை ராமனடி?
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராமன்… எத்தனை ராமனடி!
————-
1-ரகு ராமன் -தான பிரபு
2-கோசல ராமன்
3-தசரத ராமன்
4-ஸூர்ய ராமன் -ராம திவாகரன் -உள் இருக்கும் அறியாமை போக்கும் -ஸீதா தேவியே ஒளி-அநந்யா ராகவே அஹம் பாஸ்கர -ஸூர்ய வம்சம்
5-சந்த்ர ராமன் -ராமசந்திரன் -16 கலைகள் -16 கல்யாண குணங்கள்
6-பால ராமன் -வஸிஷ்டர் இடம் கற்றவர்
7-ரஷக ராமன் -யாக ரக்ஷணம்-கண்ணை இமை காப்பது போல் -இருவரும் ரக்ஷணம்-
8-பாவந ராமன் -அகல்யை -பூதராக்கிய -காகுத்தன் கழல் துகள் -பட்டு -பதித பாவந ஸீதா ராமன்
9-ஸீதா ராமன்-மாலை போல் அனாயாசன வில்லை எடுத்து –
வில் தானே முறிந்து திருவடி ஸ்பர்சம்
10-கோதண்ட ராமன்
——
11-அயோத்யா ராமன் -பூமா தேவி திருக்கல்யாணம்-ராமனைப் பெற்ற குற்றம் இச்சா மோஹ-இத்யாதி
12-ஸத்ய ராமன்-அரசன் -ரசம் இல்லா மன்னன் இயம்பினன் -நின் பணி மறுப்பனோ -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதே
13-வன வாஸ ராமன்–ஜடா முடி தரித்து -ஆலம் பால் -ஆலமரத்தில் இருந்து குகன் கொடுக்க – -குகன் ஸஹ்யம் -திருச்சேறையில் ஸேவிக்கிறோம்
14- பாதுகா ராமன்-யோக க்ஷேமம் இரண்டையும் அளிக்க-இதுவே ரக்ஷை பாதுகாப்பூ பாதுகாப் பூ
—–
15- வேத ராமன் -தண்ட காரண்ய ரிஷிகளைக் காத்து அருளி
16-மாதுர்ய ராமன் -பாத்ம புராணம் -ரிஷிகள் மயங்கி -ஆலிங்கனம் அனுக்ரஹம் பிரார்த்திக்க -கிருஷ்ணன் கோபிகள் –
17-வல் வில் ராமன் -கர தூஷண நிரசனம் அஸஹாய சூரன்-தோலாத தனி வீரன்
18- முகுந்த ராமன் -ஜடாயு மோக்ஷம்-ஆயுஷ்மன் -பத்ரம் தே -விந்தம் முஹூர்த்தம் -அப்படியே திரும்பி வருவாள்-கச்ச லோகம் அநுத்தம
19-ஸூலப ராமன் -ஸபரி தேடி வந்து -தந்த கனி உகந்து -மோக்ஷம் செல்வதை ஸாக்ஷி -ராமன் மனதுக்கு இனியான் -அர்த்தம் தேடி வருவான் -நம்மூருக்கும் வருபவன்
———-
20 தர்ம ராமன்-வாலி வதம் –
21-காருண்ய ராமன் -சுக்ரீவன் மழைக் காலம் -தாரை -லஷ்மணன் -நன்றி கெட்டவன் சடலத்தை பருந்தும் தீண்டாதே –
—————–
22-ஆத்மா ராமன் -தத்வம் உணர்த்தி -இந்திரியங்கள் -தச -ஸம்ஸாரம் பிறவி பெரும்கடல் அசோக வனம் சரீரம் -முக் குணங்கள் விபீஷணன் ராவணன் கும்பகர்ணன்-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –
23-ஸூந்தர ராமன் -கண்டேன் ஸீதையை -ஆலிங்கனம் செய்து அருளி -தன்னையே தந்த கற்பகம் –ஸூந்தரன் -அஞ்சனா தேவி சாத்திய திருநாமம் -பந்தர் ஹிந்தியில் குரங்குக்கு
—————-
24- தர்ப்ப சயன ராமன் -கரும் கடல் நோக்கி கருணைக் கடல் பள்ளி கொண்ட திருக் கோலம்
25-சேது ராமன் -நளன் விஸ்வ கர்மா தேவ சிற்பியின் திருமகன் -நள சேது -என்றே திரு நாமம் -திருவடி துகள் களைத் திரட்டி -நம் கடல் போன்ற பாபங்களை போக்கி
26-வீர ராமன் -வீர ராகவப் பெருமாள் –
27-கோல வில்லி ராமன் –திரு வெள்ளியங்குடி –கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன்-விஜய ராமன் ஜய ராமன் -விஜய ராகவப்பெருமாள் திரு புட் குழி
28-பட்டாபி ராமன் -ராமனுக்கு இடப்புறம் இதில் -உத்சவர் கல்யாண ராமன் வலது பக்கம் சீதை கும்பகோணம் இரண்டு திருக் கோலமும் சேவிக்கிறோம்
—————-
29- ராஜா ராமன்-அசித்வத் பாரதந்தர்யம் காட்டவே மூன்றாம் பிரிவு-தபோ வனம் ரிஷிகள் மதியம் வேத மந்த்ரம் கேட்டே கர்ப்பவதியாக இருக்க -ராமன் திரு உள்ளபடி இருக்கவே தானே சொல்லி –லவகுசர் ஸ்ரீ ராமாயணம் பாட கேட்க ஆசை கொண்டார் –
30-ஸீதா ராமன்-அனுப்பி வைத்தது ராஜா ராமன் -அழுது கொண்டு இருந்தவன் ஸீதா ராமன் –ஸ்வர்ண விக்ரஹம் வைத்து அஸ்வமேத யாகம்
31- ஸந்தான ராமன் -தனது சரிதை கேட்டான்
32-வைகுண்ட ராமன் -பத்ராசல ராமனுக்கு இந்தத் திரு நாமம் –
———————
ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?-கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.
சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.
மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.
முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.
மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.
முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.
அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.
முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.
முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.
ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.
இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.
அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கோயில் கட்டுமானப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முதலில் ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டது. ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது
ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ராம் பத் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், ராமர், அனுமரின் உருவப் படங்கள், சிலைகள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்தார், அவருடைய தாத்தா பிரபாகர்ஜி சோம்புரா, அவரது மகன் ஆஷிஷ் சோம்புராவுடன் இணைந்து சோம்நாத் கோயிலை வடிவமைத்துள்ளார். 79 வயதான கட்டிடக் கலைஞர் 1992 இல் நியமிக்கப்பட்டார். வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நாகரா பாணியில் ராமர் கோயில் கட்டப்படுவதாக சோம்புரா குறிப்பிட்டார். கிழக்கில் உள்ள நுழைவாயில் கோபுர பாணியில் கட்டப்படும், இது தெற்கின் கோயில்களைக் குறிக்கும். கோவிலின் சுவர்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைப்படைப்புகளைக் காண்பிக்கும். வடிவம்: மந்திரின் கருவறை எண்கோண வடிவில் இருக்கும், அதே சமயம் கட்டமைப்பு சுற்றளவு வட்டமாக இருக்கும். தளங்கள்: இந்த மந்திரில் 161 அடி உயரம் கொண்ட ஐந்து குவிமாடங்களும் ஒரு கோபுரமும் இருக்கும். 3-தளங்களைக் கொண்ட கோயிலில் ஒரு மையம் – கர்ப் க்ரிஹா – சூரியக் கதிர்கள் ராம் லல்லாவின் சிலை மீது விழும் வகையில் கட்டப்பட்டிருக்கும். இறைவன். கருவறையைப் போலவே, கிரஹ மண்டபமும் முழுமையாக மூடப்பட்டிருக்கும், அதே சமயம் கீர்த்தனையும் இருக்கும் மண்டபம், நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பிரார்த்தனை மண்டபங்கள் திறந்த பகுதிகளாக இருக்கும். சிலை: சிசு ராமர் சிலை 5 அடி உயரம் மற்றும் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. கோவில் மணி: ராமர் கோவிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணி, இந்தியாவில் மணி உற்பத்திக்கு நன்கு அறியப்பட்ட இடமான எட்டாவிலிருந்து கொண்டு வரப்படுகிறது. 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாய்.
அயோத்தி ராமர் கோவில்: காலவரிசை
1528-1529: முகலாயப் பேரரசர் பாபர் பாபர் மசூதியைக் கட்டினார் 1850கள்: நிலத்தில் வகுப்புவாத வன்முறையின் ஆரம்பம் 1949: மசூதிக்குள் ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது, வகுப்புவாத பதற்றத்தை தீவிரப்படுத்துகிறது 1950: பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்ய அனுமதி கோரி சிலையை வழிபட அனுமதி : UP 1961 சிலையை அகற்றக்கோரி மத்திய வக்ஃப் வாரியம் 1986: இந்து வழிபாட்டாளர்களுக்கான இடத்தை மாவட்ட நீதிமன்றம் திறந்தது 1992: பாபர் மசூதி டிசம்பர் 6, 2010ல் இடிக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்று வழிப் பிரிவினை விதித்தது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா இடையே சர்ச்சைக்குரிய பகுதி 2011: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்சி தடை 2016: சுப்ரமணியன் சுவாமி எஸ்சியில் மனு தாக்கல் செய்தார், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோருகிறார் 2019: அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதை எஸ்சி ஏற்றுக்கொண்டு, முழு உரிமையையும் ஒப்படைக்கிறது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு மற்றும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்று இடமாக வழங்க அரசுக்கு உத்தரவு 2020: பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்
———
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்களை, ‘திவ்ய க்ஷேத்ரம்’ என்பர். இவை மொத்தம் 108. இவற்றுள் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூலகில் தரிசிக்க இயலாதன. ஏனைய 106 திவ்ய ஸ்தலங்களில் அயோத்தி முக்கியமானது. பலரும் அயோத்தியில் இருக்கும் ராம ஜன்ம பூமிதான் ஆழ்வார்களால் பாடப்பட்டது என நினைப்பர். ஆனால், உண்மையில் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது அம்மாஜி மந்திர். ‘மதறாஸ் மந்திர்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. அயோத்தியில் வசிப்பவர்கள் பலருக்குமே இந்த ஆலயத்தைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. அயோத்திக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் காணவேண்டிய திருத்தலம் இது.
அம்மாஜி மந்திர், நிர்மோச்சன் செள ரஸ்தா அருகில், கொத்வாலி அயோத்தியா காவல் நிலையத்துக்கு எதிர்ப்புற சாலையில் அமைந்துள்ளது. அச்சு அசலாகத் தமிழ்நாட்டு வைணவ ஆலயம் போலவே இது தோற்றம் தருகிறது. மூலவர் ஸ்ரீராமர், தாயார் சீதா தேவி. புஷ்கல விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில்
ஸ்ரீ ராமபிரானின் ஒருபுறம் சீதாபிராட்டியும், இன்னொரு புறம் லட்சுமணரும் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு பரமபத புஷ்கரிணி மற்றும் சரயு நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.
யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் என்பவரால் நிறுவப்பட்டது இந்தக் கோயில். இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். வேத இதிகாசங்களில் விற்பன்னராகவும் இருந்தவர். இவர்,
‘ஸ்ரீ சரஸ்வதி பண்டார்’ என்ற ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி, தனது சொத்துக்கள் முழுவதையும் அதற்கே தந்துவிட்டார். அதில் கிடைக்கும் வருவாயிலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அம்மாஜி மந்திர் இருக்கும் இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருந்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கான தனி சன்னிதிகளும் இந்தக் கோயிலில் உண்டு. ஸ்ரீ சடகோபர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.
கோயில் அமைந்ததற்கான சுவாரசிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அவர்களின் மனைவி சிங்காரம்மா என்பவரது கனவில் ஸ்ரீராமர் மற்றும் சீதாபிராட்டியாரின் உத்ஸவ விக்ரஹங்கள் தோன்றினவாம். அவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி தலத்தில் அமைந்த ஒரு பாழடைந்த கோயிலில் புதைந்திருப்பதாகக் கனவில் அறியப்பட்டது. அந்தத் தம்பதியினர் உடனே சென்று அங்கே பார்க்க, கனவில் கண்டபடியே கோயிலும் மூர்த்திகளின் திருவுருவங்களும் தென்பட்டிருக்கின்றன.
உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ராமநாதபுரம் மன்னரின் அனுமதியோடு அந்த விக்ரஹங்களை எடுத்து வந்து ஆராதிக்க அயோத்தியில் கோயில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் திருப்பணிகள் முடிவதற்கு முன்னரே பார்த்தசாரதி அய்யங்கார் இறந்து விட, அவரது மனைவியே கோயில் பணிகளை நிறைவு செய்து, நித்ய ஆராதனை சேவைகளையும் உத்ஸவங்களையும் நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது முனைப்பான திருப்பணியால் ஆலயம் உருவானதால், ‘அம்மாஜி மந்திர்’ என்ற பெயரிலேயே இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, இந்த ஆலயத்தை, ‘சேது ராம மந்திர்’ என்று தெரிவிப்பதையும் கவனிக்கலாம்.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கெனவே அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், வேத பாராயண விற்பன்னர்கள் ஆகியோர் திருவல்லிக்கேணியில் இருந்து அயோத்தி செல்கிறார்கள். ஆலயத்தில் தங்கும் வசதிகளும் உண்டு.
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply